என்னை சாய்த்தானே(ளே)- கதை திரி

#6
எனை சாய்த்தானே(ளே) - 5

இவன் எப்படி இங்க, அய்யோ அப்போ நம்ப கண்டது கனவில்ல இந்த பொறுக்கி தான் ரூம் வரை வந்திருக்கான். எங்க இந்த செளந் என அவரை காண, நான் பார்த்தாள் தானே என்று அவளை தவிர்த்தார் நாயகி.
சிக்காமலயா போவ அப்போ பேசிக்கிறேன் என்று மனதில் கறுவிக் கொண்டாள் பிரியா.

அய்யோ இவன் வேற முழுங்குற மாறி பார்கிறானே.மாமாவாம் மூஞ்சிய பாரு இருடா இன்னிக்கு உன் டெத் என் கையில் தான். ஆடு வாலண்டிரியா தலையை கொடுத்து வெட்ட சொல்லுது கதையை முடிச்சற வேண்டியது தான் என்று மனதில் நினைத்து அவனை பார்த்தாள்.

தன் மகளை ஒரு முறை பார்த்துவிட்டு சரிங்க மாப்பிள்ளை என தலையசைத்தார் ராஜலிங்கம். இந்த ஹிட்லர் நம்ம கிட்ட மட்டும தான் வெறப்பா இருக்கார் இந்த தடிமாட்டுகிட்ட பல்ல கமிக்கிறாரு. இருங்க ஒவ்வொருத்தரா கவனிச்சுக்குறேன் என்று அர்ச்சித்தாள் பிரியா.

தேங்க்ஸ் மாமா என்று அவன் முன் செல்ல அவன் பின் சென்றாள் பிரியா. பிரியா அறைக்குள் சென்று, அவள் நுழைந்ததும் கதவை தாழிட்டான் அகரன். ஒ.ஹோ அடிவாங்கிறது யாருக்கும் தெரிய கூடாது என்று நினைக்கிறான் போல என்று அமைதியாக நின்றாள்.

அவள் படுக்கையில் அமர்ந்தவன் , மரியாதை மனசில் இருந்தா போதும் உட்காரு என்றவனை ஒரு தினுசாக பார்த்தாள் பிரியா. அப்பறம் செல்லக்குட்டி நான் தான் சொன்னேன்ல நீ வரலை என்றால் நான் வருவேன் என்று மாமா ஆக்ஸன் எப்படி என்று கேட்டான் அகரன்.

உன் ஆக்ஸனுக்கு என் ரியாக்ஷன் பார்க்க வேண்டாம் என்று அருகில் இருந்த தலையணையால் அவனை அடிக்க ஆரம்பித்தாள். முறுக்கேறிய உடலிற்கு பஞ்சணை வலிக்கவா போகுது. அவள் கை ஓயும் வரை அடித்தவள். என்னடா உனக்கு வேணும் என்றாள் பிரியா.

சிறு சிரிப்புடன், என் பேர் அகரன் எம்.ஏ கிரிமினாலஜி முடிச்சி, ஐ.பி.ஏஸ் பாஸ் பண்ணி, ஏசியா ஜாய்ன் பண்ணியிருக்கேன் என்று அவளை பார்க்க.
நீ போலீஸ் என்றால் பயந்து விடுவேனா போடா என்று அவனை பார்த்தாள் பிரியா.

அதை ரசித்தவாறு பேசினான் அகரன். எனக்கு லவ் பண்ணி தான் மேரேஜ் செய்யணுங்கிறது லைப் டைம் ஏய்ம். உன்னை பார்கிறதுக்கு முன்னாடி வர அது கனவு மாறி தான் இருந்தது. உன்னை பார்த்ததும் ஒரு ஸ்ஃபார்க் எனக்குள்ள, அந்த செகண்ட்டே முடிவு பண்ணிட்டேன் நீ தான் என் வருங்காலம் என்று. எத்தனையோ பொண்ணுங்களை பார்த்திருக்கேன் ஆனால் இந்த பீல் உன்கிட்ட மாட்டும் தான் கிடைச்சுது . இன்னைக்கு தான் பிரபோஸ் பண்ணேன் ஆறு மாசம் லவ் பண்ணுவோம் அப்பறம் கல்யாணம் பண்ணிக்கிலாமா என்று உருகினான் அகரன்.

அகரனின் செயல்கள் ரசிக்கும் படியாக இருந்தாலும் காதல் என்ற வட்டத்துள் அவனை வைக்க முடியவில்லை. திருமணத்திற்கு பிறகு தான் காதல் கோட்பாட்டை பின்பற்ற நினைக்கிறாள் பிரியா.

அவன் முகத்திற்கு முன் சொடக்கிட்டு, & உன்னை பார்த்ததும் எந்த ஸ்ஃபார்க்கும் வரலை, எனக்கு எந்த வருங்காலமும் தெரியலை, ஆறு மாசம் காதலாம் அப்பறம் கல்யாணமாம். போடா நீயும் உன் பிளானும். எனக்கு உன்னை பிடிக்கலை ஒழுங்கா வெளியில் போய் பொண்ண பிடிக்கலை என்று சொல்லிட்டு திரும்பி பார்க்காமல் ஓடி போயிரு என்றவளை நெருங்கி .

சொல்லவில்லை என்றாள் என்ன செய்வ என்றவனை பார்த்து, நீ ஒரு பொறுக்கின்னு சொல்லுவேன் என்றாள்.
இந்த பேச்சு தான் என்னை இன்னும் உன்னை லவ் பண்ண சொல்லுது என்று அவளை நெருங்கினான்.
தள்ளுடா தடுமாடு என்று அவனிடம் இருந்து விலகினால் பிரியா.
அவள் செய்கை அவனுக்கு சிரிப்பை வரவழைத்தது.

இங்க பாரு செல்லம், நான் ஏற்கனவே உன்னை பிடிச்சிருக்கு என்று சொல்லிட்டேன், உனக்கு பிடிக்கலை என்றால் நீயே சொல்லிக்கோ என்று அவளை நெருங்க அவள் பின்னாடியே நகர்ந்து கடைசியாக சுவற்றில் முட்டினாள்.
அவன் பார்வை அவள் மீது பதிந்திருந்தது, அதை தாங்க முடியாமல் , நான் போகனும் வழி விடு என்றாள் சன்ன குரலில்.

அவன் மூச்சக் காற்று அவள் மேல் உரச, பயத்தில் உடல் நடுங்க ஆரம்பித்தது பிரியாவிற்கு. வெறும் வாய் தான் என்று அவள் உதட்டை தட்டி வெளியே சென்று விட்டான் அகரன். பாவம் பிரியா தான் தன்னிலை அடைய சிறிது அவகாசம் ஏற்ப்பட்டது.

வெளியே வந்தவள் அனைவரையும் பார்க்க, அவர்களோ இவளது பதிலை எதிர்பார்த்து காத்திருந்தனர். அவள் வாய் எடுக்கும் முன், ஒன்னும் அவசரம் இல்லை மாமா அவள் யோசிச்சு சொல்லட்டும் என்றவனை முறைத்து.அடேய் தீவெட்டி தலையா, மாமா மாமானு கூப்பிட்டு எங்க அப்பாவுக்கு ஐஸ் வைக்கிற என்ன மந்திரம் போட்டேன்னு தெரியலை இந்த செளந் நடவடிக்கை சரியில்லை, இதில்லை நான் யோசிக்கிறதுக்கு வேற பெரிய மனசு பண்ணி டைம் கொடுக்கிறையா என்று மனதில் நினைத்தாள்.

தன் மகளை பார்த்தவர் சரிங்க மாப்பிள்ளை ஒரு மணி நேரம் யோசிக்கிட்டும் அதுக்குள்ள நம்ம ராத்திரி சாப்பாட்டு சாப்பிட்டரலாம் என்றார் ராஜலிங்கம்.
அடேய் என்ன டா சொக்கு பொடி போட்ட ஹிட்லரையே இப்படி பேச வைச்சுட்ட என்று வாயடைத்து நின்றாள் பிரியா.
நீ உள்ள போ மா என்றதும் தான் தாமதம் அவளறையில் தஞ்சமடைந்தாள் பிரியா.

வந்தவர்கள் இரவுணவை முடித்தும் விட்டனர் உள்ளே சென்ற பிரியா இன்னும் வரவில்லை, தான் அழைத்து வருவதாக ராஜலிங்கம் உள்ளே செல்ல, அனைவரும் காத்திருந்தனர்.

அவள் என்ன நினைக்கிறாள் என்று அவளுக்கே தெரியவில்லை, இதுவரை கண்ட ஆண்களிலேயே அகரன் கொஞ்சம் வித்தியாசமாக தெரிகிறான். ஆனால் அந்த ஒரு காரணத்திற்காக அவனை கல்யாணம் செய்து கொள்ள முடியுமா என்று தலையை பிய்த்து கொண்டாள்.

அவளிடம் வந்த ராஜலிங்கம், உனக்கு பிடிக்கலைனால் சொல்லிரு டா வேணாம் என்று சொல்லிடலாம் என்றவர் பார்வை வேண்டாம் என்று சொல்லி விடாதே என்ற கெஞ்சல் இருந்தது. மறுமொழி எதும் பேசாது இந்த கல்யாணத்திற்கு ஓ.கே என்றாள். இறக்கை இல்லாது ராஜலிங்கம் பறந்தார் என்று சொன்னால் மிகையாகாது.

அவர் அவளுடன் சந்தோஷமாக வெளியே வந்து சொல்ல அகரனுக்கு மட்டும் அவள் முகத்தில் உயிர்பில்லாதது போல் தோன்றியது. காரணத்தை அவளிடமே கேட்க நினைக்க அதற்கு யாரும் இடமளிக்க இல்லை அன்று முழுவதும் .
 
#7
எனை சாய்த்தானே(ளே)!!! - 6

எவ்வளவு முயற்சி செய்தும் பிரியாவிடம் பேச முடியாது வீட்டிற்கு வந்தான். இன்னும் ஆறு மாதத்தில் திருமணம் என்றும் பத்து நாள் கழித்து நிச்சயம் என்று உறுதி பேசியிருந்தனர் இரு வீட்டாரும். அவள் மனதில் என்ன இருக்கிறது என்று கடைசி வரை அறிய முடியாததை யோசித்துக் கொண்டே உறங்கிவிட்டான் அகரன்.

நான் எதுக்கு அந்த லூச கல்யாணம் பண்ண சம்மதிச்சேன். ஐய்யோ இந்த ஹிட்லரையும் செளந்தையும் வசியம் பண்ண மாதிரி என்னையும் எதாவது செஞ்சிட்டானா? என்ன நடந்தாலும் நம்ம முடிவு பண்ண மாறி தான் இருக்கனும். அவன்கிட்ட முதல் பேசனும், எங்க நமக்கு தான் அவனை பார்த்தாளே சண்டை போட தான் தோணுது.

எப்படி பேசவது, பஸ்ட் அவன் பேரு என்ன ஐய்யோ ஏதோ புதுசா ஒரு பேரை சொன்னானே என்னவா இருக்கும் என்று யோசித்தவள் கண்களில் வித்தியாசமான ஒரு பேப்பர் டேபிளில் மேல் பறப்பது தெரிந்தது.

என்னவாக இருக்கும் என்ற ஆர்வத்துடன் அதை எடுத்து பிரித்தாள்.

ஹாய் முயலு,

கோபத்தில் சிவக்கிற மூக்க பார்க்க முடியாம போச்சே, அடியேய் கிழிச்சிறாத முழுசா படி.
(எப்படி நம்ம கிழிக்க போனது இவனுக்கு தெரிஞ்சுது என்று நினைத்து அந்த பேப்பரில் இருப்பதை படிக்க ஆரம்பித்தாள் பிரியா)
போதும் டி உன் கோலிக்குண்டு கண்ணை அங்கிட்டும் இங்கிட்டும் உருட்டுனது.
( ஒரு வேலை இங்க எங்கையாவது ஒழிஞ்சு இருக்கானோ என்று சுத்தி பார்த்தாள்)
என் மாமே பெத்த ரத்தினமே ரூம்குள்ள இருந்த நேர்லை பேசியிருக்க மாட்டேனா. பேப்பரை எதுக்கு வேஸ்ட் பண்ணுறேன் என்னை தேடுறதை விட்டுட்டு முழுசா படி டி.
(ச்சா ஓவரா போறான் அப்படி என்னத்தை தான் எழுதி வைச்சிருக்கானு தான் பார்போமே என்று படிக்க ஆரம்பித்தாள்)
சாயந்தரம் நான் என்னை பத்தி பேசுனது எதுவும் உன் மனசில் பதிந்திருக்காது அதை ஞாபகப்படுத்த தான் இந்த லெட்டர் .
நான் அகரன் ஐ.பி.எஸ் வீட்டுக்கு ஒரே பையன் . 9876543210 இது தான் என் பர்சனல் நம்பர் உனக்கு எப்போ பேச தோனுதோ பேசு .

இப்படிக்கு ,
அகரன்.

படித்ததும் அதை மடித்து தன் பிரோவில் வைத்து விட்டு போனை எடுத்து மனதில் பதிந்த அவன் எண்ணை பொறுக்கி என்று போனில் பதிந்தாள்.

மணியை பார்க்க பத்து என காட்டியது , தூங்கி இருப்பானோ என்ற யோசனையில் போனை பார்த்தவாறு அமர்ந்திருந்தாள்.
என்னை தூங்க விடாமல் பண்ணிட்டு அவன் மட்டும் எப்படி நிம்மதியா தூங்கலாம் கூடாது. அப்ப போன் பண்ணலாமா?

சேச்ச சாயங்காலம் அப்படி பேசிட்டு அவனுக்கு கால் பண்ணா கேவலமா நினைக்க மாட்டானா?
காலையில் பேசிக்கலாம் என்று மனதுரைப்பதை கேட்காது அவளது விரல்கள் அனிச்சையாக அவன் எண்ணிற்கு அழைப்பு விடுத்தது. முழு ரிங் போயும் அவன் ஏற்கவில்லை.

தடிமாடு நல்லா தின்னுட்டு தூங்கிருச்சு எருமை மாடு என்று வாய்க்கு வந்தபடி திட்டிவிட்டு படுக்கையில் விழுந்தாள் பிரியா தர்ஷினி.

என்ன முயன்றும் தூக்கம் வரவில்லை சரி இன்னொரு முறை முயற்சி செய்து பார்க்கலாம் என்று முயன்றவளுக்கு இம்முறை வெற்றிக்கிட்டியது.

போனை எடுத்தவன் ஹலோ யாரு என்றான் உளறலாய் .
தைரியத்தை வரவழைத்து, நான் தான் என்றவுடன் நித்திராதேவியிடம் பயணித்த மனதை காதல் தேவனிடம் கொடுத்தான் அகரன். அதன் பின் எங்கே தூங்க போகிறான்.

ஏய் முயலு நீயா ? என்றான் அகரன்.
நான் ஒன்னும் முயல் இல்லை பிரியா என்றாள் கடுப்பாக.
ஓ அப்படியா, பிரியதர்ஷினி. இப்ப உங்களுக்கு என்ன வேணும் சொல்லுங்க என்றான் மெத்தனமாக .

டேய் கொஞ்சம் மரியாதை கொடுத்தா ரொம்ப ஒவரா போகிற என்று சீறீனாள் பிரியா.
ஒரு ஏ சி பி னு கூட பயமில்லை உன்னை எல்லாம் என்னடி செய்யுறது என்றான் அகரன்.

கல்யாணத்தை கேன்ஷல் பண்ணிரு சோ சிம்பிள் என்றாள் கூலாக .
நீ நினைக்கிறது எப்பவும் நடக்காது முயலு என்றான் அகரன்.
டேய் பஸ்ட் அப்படி சொல்லுறதை நிறுத்து கடுப்பா இருக்கு என்று கடுகடுத்தாள் பிரியா.
ஹா ஹா என சத்தமாக சிரித்தான் அகரன்.

டேய் வளர்ந்து கெட்டவனே இப்போ எதுக்குடா லூசு மாறி சிரிக்கிற என்றாள் பிரியா.
சரி சரி கோவப்படாதே. சொல்லு எதுக்கு போன் பண்ண என்று காரியத்தில் கண்ணாக இருந்தான் அகரன்.

நான் கல்யாணத்திற்கு இன்னும் பிரிப்பேர் ஆகலை, கொஞ்சம் டைம் வேணும் அப்பறம் எனக்கு சில கண்டிஷன் இருக்கு என்றாள் பிரியா.
சரி முயலு போனில் பேசுவது சரியாக இருக்காது நேரில் வரேன் பேசிக்கலாம் என்றான் அகரன்.

அப்ப வைச்சிடுறேன் என்றவளிடம், முயலு நம்ம கொஞ்ச நாள் லவ்வர்ஸா இருக்கலாமா என்றான் எதிர்ப்பார்புடன்.
இருக்கலாம் என்று சிறிது இடைவேளை விட்டு நம்ம கல்யாணத்திற்கு அப்பறம் என்று போனை கட் செய்தாள் பிரியா.

வைச்சுறாதடி என்று அவன் கத்தியது அவள் காதில் விழவில்லை போல்.
வைச்சுட்டியா, ச்சா தூங்கிட்டு இருந்தவனை , போன் பண்ணி உசுப்பேத்திட்டு போனை வைச்சுட்டா குட்டச்சி, இரு டி உன்னை நாளைக்கு பேசிக்கிறேன் என்று கறுவினான். அப்படியே படுக்கையில் விழுந்து , விட்ட தூக்கத்தை தொடர்ந்தான் அகரன்.

*****

எப்பவும் போல் காலை எழுந்து தந்தைக்கு உதவியாக தோட்டத்திற்கு செல்கிறேன் என்கிற பெயரில் ஊரில் இருக்கும் பொடுசுகளுடன் பக்கத்து தோட்டத்தில் மாங்காய், கொடுக்காய்புள்ளி திருடி தின்ன தான் போவாள்.
அவள் அருகே வந்த நாயகி, நீ ஒன்னும் தோட்டத்துக்கு போக வேண்டாம் நிச்சியம் வரை வெளியே சுத்தாமல் அடக்கம் ஒடுக்கமா வீட்டிலேயே இரு என்பரை ஒரு முறை முறைத்தாள், அவ்வளவு தான் நாயகி கப்சிப் ஆகிவிட்டார்.

ஏன் செளந் என்ன விட நேற்று அந்த தடிமாடு பெருசா போய்ட்டானா என்று கேட்டவளை , அதட்டி மாப்பிள்ளையை மரியாதையா பேசு டி என்றார் நாயகி.
என்கிட்ட பேசாதே என்று சிறுபிள்ளை போல் கோவித்து தோட்டத்திற்கு சென்றாள் பிரியா.

செல்லும் அவளையே கண்டவர் எப்போ தான் பொறுப்பா நடந்துப்பாளோ என்று சமையல் செய்ய சென்றார் நாயகி.

சரியாக பதினொரு மணிக்கு வாயிலில் நின்று அத்தை என்று அகரன் அழைக்க, அவசரமாக வந்தவர் நாயகி. மரியாதை நிமித்தமாக வணக்கம் கூறி உள்ளே அமர வைத்து குடிக்க மோர் கொடுத்தார்.

நாயகியின் பதற்றத்தை பார்த்த அகரன், அத்தை ஏன் இவ்வளவு டென்ஷன் என்றான்.
இல்லை மாப்பிள்ளை உங்களை யூனிப்பார்மில் பார்க்க ஒரு படப்படப்பு வந்திருச்சு என்றார் நாயகி.

அத்தை என்னை பிரியா மாறியே நினைங்கள் , நானும் உங்களை என் அம்மா மாறி பார்க்கிறேன் என்றான் அகரன்.
சரிங்க மாப்பிள்ளை என்னை சாப்பிடுறிங்க என்றார் நாயகி.
எதுவும் வேண்டாம் அத்தை இங்க பக்கத்தில் ஒரு கேஸ் விசயமா வந்தேன் அப்படியே பிரியா பார்த்திட்டு போகலாம் என்று வந்தேன்.

எங்கத்தை பிரியா என்று அவன் கேட்டதற்கு. நம்ம தோட்டம் வரைக்கும் போயிருக்கா நான் போய் கூட்டி வருகிறேன் என்றவரை மறுத்து .
இல்லத்தை நான் அப்படியே மாமாவையும் பிரியாவையும் பார்த்திட்டு கிளப்பிறேன் அத்தை என்றவனை யோசனையாக பார்த்து சரிங்க மாப்பிள்ளை வந்த வழியிலேயே அரை கிலோ மீட்டர் போனிங்கனா, ஒரு வட்ட கிணறு வரும் வண்டியை நிறுத்து வலப்புறம் போனிங்கனா அந்த பக்கம் தான் நம்ம தோட்டம் இருக்கு.

அப்படியே போகாம வீட்டுக்கு வந்துட்டு போங்க என்றார் நாயகி.
சரிங்க அத்தை முடிஞ்சா வந்துட்டு போறேன் என்று தன்னவளை காண விரைந்தான் அகரன்.

நாயகி சொன்னதுபோலவே வெளியே வண்டியை நிறுத்திவிட்டு, ஒத்தையடி பாதையில் நடந்து சென்றான் அகரன்.
பிரியாவை தேடி தோட்டதிற்கு செல்ல, திடீரென்று பக்கத்து வயல் சலசலக்க .
அவ்விடத்திற்கு விரைந்தான் அகரன்.

அவன் கண்டது மரத்தின் மேல் குரங்கு போல் கிளையில் அமர்த்து மாங்காய்களை பறித்து போட்டுக்கொண்டிருந்த பிரியாவை தான். கீழே காவலுக்கு நின்றிருந்த நண்டு நத்தைகளை செய்கையால் அவ்விடத்தை விட்டு போக சொல்லி எதிர்புறம் இருந்த மரத்தின் மீது ஒற்றை காலை ஊன்றி அவளை கவனிக்க ஆரம்பித்தான் அகரன்.

தனக்கு எட்டிய அளவிற்கு அங்கிருந்த மாங்காய்களை பறித்து போட்டவள், எந்த சத்தமும் வராது போக எட்டி பார்த்தாள்.
ஸ்டைலாக மரத்தில் சாய்ந்து தன்னையே பார்க்கும் அகரனை கண்டதும் ஒரு நிமிடம் திக்கென்று இருந்தது பிரியாவிற்கு, எல்லாம் அந்த ஒரு நிமிடம் தான். அதன் பிறகு தன்னிலை அடைந்தவள் கீழே குதித்து கைகளை தட்டி.

என்ன ஏ.சி.பி சார் கேஸ் எதுவும் இல்லையா இந்த பக்கம் வந்திருக்கிங்க என்றாள்.
நைட் என் வருங்கால பொண்டாட்டி பார்க்கணும் ஆசையா கேட்டாலா, அதான் இருக்கிற வேளையெல்லாம் அப்படியே போட்டுட்டு ஓடியாந்துட்டேன் என்றான் அகரன்.

இங்க பாருடா, கதை விடுறதை நான் ஒன்னும் பார்க்கணும் என்று சொல்லவில்லை, பேசனும் தான் சொன்னேன் என்று உதட்டை சுழித்து அழகு காட்டினாள் பிரியா.
அவள் பேசுவதை எங்கு கவனித்தான் அவள் நின்ற தோரணையை அல்லவா அளந்து கொண்டிருந்தான்.

மரத்தில் ஏறுவதற்கு ஏதுவாக தூக்கி சொருகிய பாவாடை, தன் இருப்பை காட்ட விலகிய தாவணி, அங்குமிங்கும் முத்து முத்தாக சொட்டிய வியர்வை என்று அக்மார்க் கிராமத்து பெண்ணாக உருவெடுத்திருந்தாள் பிரியா.

எதாவது இவளுக்கு கொஞ்சமாச்சும் இருக்க , ஒரு பையன் முன்னாடி இப்படி
நிக்கிறோம் எதுவும் இல்லை. அவளுக்கு என்ன நான் தானே என் கண்ணை கட்டுபடுத்த பாடாபடுறேன் என்று எண்ணியவன் அவளை நெருங்கி சொருகி இருந்த பாவாடையை கீழே இழுத்துவிட்டான்.

அவன் கைப்பட்ட இடம் குறுகுறுக்க, . அனுமதியின்றி அவன் தொட்டதால் கோபத்தில் பளார் என்று ஒரு அறை விட்டாள்.
இதை எதர்பாரா அகரன் நிமிர்ந்து அவளை காண, கண்களில் தெரிந்த வெறுப்பு அவனை அடியோடு சாய்த்து விட்டது. நொடி தாமதிக்காது அவ்விடத்தை விட்டு அகன்றான் அகரன்.

அவனது அடிப்பட்ட பார்வை அவளை வதைத்தாலும் எதுவும் பேசாது கல்லை போல் சமைந்து நின்றாள் பிரியா.
 
#8
எனை சாய்த்தானே(ளே)💞

அடித்தது சரி முளை வாதாட தவறு என்று மனம் வாதாட ஒரு வித உணர்வில் தவித்தாள் பிரியா. இதை சரி செய்ய வேண்டுமா இல்லை அப்படியே விட்டு விடலாமா என்று யோசித்து கொண்டே வர ஜீப்பில் கண்ணை மூடி பின் புறம் சாய்ந்திருத்த அகரனை கண்டாள்.
கவனியாது செல் என்று மூளை சொன்ன கூற்றை காதில் வாங்காது அவனிடம் சென்றாள் பிரியா.

அப்பூவின் விரல் பட்டு கன்னம் தகிக்கவில்லை என்றாலும், அவளது ஒற்றை பார்வையில் அடிப்பட்டு தான் போனான் அகரன். அது எல்லாம் இரண்டு நொடி தான், லவ்வில் இதெல்லாம் சகஜம். திடீர் என்று ஒரு பொண்ணை தொட்டா அடிக்க தான் செய்வாள் என்று மனசாட்சி வக்காலத்து வாங்க, தன்னை சமன் செய்ய கண்மூடி அமர்ந்தான்.

கால் கொலுசு சரசரக்க நடந்து வந்தவளின் ஆரவாரத்தில் நிமர்ந்து அவளை பார்க்க, வருந்தும் பார்வையை அவன் மேல் செலுத்தி நின்றவளை மையலாக பார்த்தான்.

என்னடா இது இந்த தடிமாடு பீல் பண்ணும் சும்மா ஒரு சாரி சொல்லலாம்ன்னு வந்தா இதென்ன ரொமண்டிக் லுக் விட்டுக்கிட்டு இருக்க. கன்னத்தில் அடிக்காமல் இந்த கண்ணை நோண்டிருக்கணும் என்று அவனை மனதில் வறுத்தெடுத்தாள் பிரியா.

சுற்றி முற்றி பார்த்தவன் யாரும் இல்லை என்பதை உணர்ந்த பிறகு அவளை நெருங்க, "ஏய் தடிமாடு எதுக்குடா பக்கத்தில்லை வர , இப்போ தான வாங்குன அதுக்குள்ள மறந்துட்டியா?" என்றாள் பிரியா.
இல்லடி குட்டச்சி அதெல்லாம் நான் மறக்கலை இனி நீ அடிச்சா திருப்பி அடிக்கலாம் என்று முடிவு பண்ணிட்டேன் என்றவனை அதிர்ந்து பார்த்தாள்.

பிரியா, " என்ன அடிப்பியா, எங்க அடிச்சு தான் பாரேன்".
அகரன், " அடிச்சிருவேன் அப்பறம் எதுவும் கேட்க கூடாது" .
பிரியா, " அவ்வளவு தைரியமா ? நீயா நானானு பார்த்துக்கலாம்" என்று ஏகத்துக்கு சவால் விட சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்த மறி ஆகிருச்சு.
அவள் எதிர்பாரா நேரத்தில் அவளை அடித்து விட்டான் அவள் கன்னத்தில் .
அவன் அடித்தில் அவளுக்கு ஒரு நிமிடம் மயக்கமே வந்துவிட்டது.

அவள் காதருகே மாமே மேல அவ்வளவு மயக்கமா என்றவுடன், அவன் அடித்த இடத்தை தாவணி முந்தியில் அழுந்த துடைத்து. பொறுக்கி, தடிமாடு, எருமை, என்று வாய் ஓயாது திட்டி , இணைப்பாக நாலைந்து அடிகளையும் பரிசாக கொடுத்து, எவ்வளவு தைரியம் இருந்த என்ன கிஸ் பண்ணுவ என்று விட்ட இடத்தில் இருந்து மீண்டும் அடிக்க ஆரம்பிக்க.

அவள் கையை பிடித்தவன், முயலு நான் தொடுறது உனக்கு அருவருப்பா இருக்கா என்ற கேள்வியில் திடுக்கிட்டாள்.
நீ பொறுக்கி தான் ஆனால் பொம்பள பொறுக்கி இல்லை என்றவள் அவனை திரும்பி பாராது சென்று விட்டாள்.

என் உனக்கு பிடிச்சிருக்கு, அது காதலா மாறுன பிறகு தான் நீ முழுமையா என்கிட்ட வருவ. இவனது சேட்டையை பார்த்து வாயடைத்து அவன் முதுகை சுரண்டியது ஒரு கை.

தன் மாமனாரோ என்ற பயத்தில் அதன் திரும்ப, அங்கு பேயறைந்தார் போல் நின்றிருந்தான் ராஜேஷ்.
மச்சி நீ எப்போ டா வந்த என்று சுதாரித்து அகரன் கேட்க நீ அந்த புள்ளையை அடிக்கும் போதே வந்துவிட்டேன் என்றான் ராஜேஷ்.

ராஜேஷ், "மச்சான் வர வர உன் போக்கு சரியே இல்லை. ஐ.பி.எஸ் முடிச்சிட்டு ரோமியோ வேலை பார்த்திட்டு இருக்கிற என்னமோ போ. நான் பார்த்த மாறி வேற யாராவது பார்த்திருந்த நம்ம வேலையை தான் கேவலமா நினைப்பாங்க, பார்த்து நடந்துக்கோ டா ".
அகரன், "சாரி மச்சி இனி இப்படி நடக்காது , அவளை பார்க்க வரும் போது மஃப்டி வந்தறேன்".
அவன் பதிலில் தலையில் அடித்து, எஸ்.பி ஆபிஸ்க்கு வரச் சொல்லி ஃபேக்ஸ் வந்திருக்கு வா என்று அழைத்து சென்றான் ராஜேஷ்.

அகரன், "என்னவாம் எதாவது பிராப்ளம்மா?".
ராஜேஷ், " ஆமாம் நான் போன மாசம் ஒரு கேஸை இனிசியலா இன்வஸ்டிகேட் பண்ணேல்ல".
அகரன், " ஆமா அந்த ப்ரீத்தா மர்டர் கேஸ். எனி நியூஸ் ".
ராஜேஷ், " ஆமா அதே மாறி மதுரையில் ஒரு கேஸ், சேம் டைப். அதே மாறி தான் இந்த மர்டரும் நடந்திருக்கு. என் பேஜ்மேட் ரவி கால் பண்ணான் நேற்று அப்போ பேசும் போது அந்த கேஸ் பத்தி பேச, நானும் ப்ரீத்தா கேஸ் பத்தி சொல்ல. ரெண்டு கேஸ்க்கும் எதோ கனெக்ஷன் இருக்கு. அவங்க எஸ்.பி மார்னிங் அவங்க டீம் கம இங்க அனுப்பிருக்காரு" .
அகரன், " சூப்பர் . ஆரம்பித்தில் இருந்தே ப்ரீத்தா கேஸை நீ மர்டர்ன்னு தானே சொன்ன, எல்லாரும் சூசைட்ன்னு சொல்லிட்டாங்க . ஈவன் அந்த போஸ்ட்மார்டம் செஞ்ச டாக்டர் உட்பட .சரி இப்போ எஸ்.பி. ஆபிஸ் போவோம்.சார் என்ன சொல்லுறாரு என்று பார்ப்போம்". என்று இருவரும் எஸ்.பி ஆபிஸ் நோக்கி பயணித்தனர்.