என்னை சாய்த்தானே(ளே)- கதை திரி

#11
எனை சாய்த்தானே(ளே) - 10​மாரியப்பனை கேட்ட கேள்விக்கு பிரியா பதில் கூற, அவள் புறம் திரும்பினான் அகரன்.
மாரியப்பனோ திருமணம் நெருங்கும் சமயத்தில் ஏதாவது பிரச்சனை ஆகி விடுமோ என்று கலக்கத்துடன் அவளை பார்க்க, சித்து நீ ஏன் பயப்படுற என்று எனக்கு புரியுது.

எனக்கு எதுவும் ஆகாது என்னை கட்டக்க போறவரு அப்படி எல்லாம் விட்டுற மாட்டாரு நீனு கவலை படாத சித்து என்று அவருக்கு ஆறுதல் கூறி அகரனிடம் திரும்பினாள்.

இந்த பொண்ணு யாரு என்னனு எல்லாம் தெரியாது, இங்கன ரெண்டு மூனு தடவை பார்த்திருக்கேன். பேரு கூட மலர் .. ஹான் மலர்விழி இப்போ தான் காலேஜ் போக போது. இவ்வளவு தான் எனக்கு தெரியும் இந்த பொண்ணு ஒரு பையனோட பேசுறதை பார்த்திருக்கேன் , கிட்ட வருவதற்குள் கெளம்பிட்டான். அவ்வளவு தான் தெரியும் என்று முடிக்க .

எப்போ கடைசியா பார்த்த நேத்து காலையில் தோட்டத்துக்கு வரும் போது பார்த்தேன் என்றாள்.
மிதுன்யாவை அழைத்து , பிரியாகிட்ட ஸ்டேட்மெண்ட் வாங்கு என்று கூறி மிரட்சியுடன் நின்ற மாரியப்பனை பார்த்தான் அகரன்.

மாமா நான் தான் பிரியாக்கு பார்த்திருக்கும் பையன், நீங்க பயப்பட வேணாம் என்றதும் தான் அவர் இயல்புக்கு வந்தவர் தோட்டத்திற்கு தண்ணி பாய்ச்ச சென்றார்.

பிரியாவிடம் எழுதி வாங்கியதும் அவளை அழைத்து கொண்டு அகரனிடம் வந்தாள் மிதுன்யா , அவளை தொடர்ந்து ராஜேஷும் வந்தான்.

ஹாய் நீ இங்க என்ன பண்ற என்று ராஜேஷை கேட்டாள் பிரியா.
அதுவா இங்க பார்க் இருக்குனு சொன்னாங்க அதான் எப்படி இருக்குனு பார்க்க வந்தேன் என்றான் ராஜேஷ்.
பார்த்துட்டியா என்றவளை குறும்புடன் பார்த்தான் அகரன்.

டேய் அவகிட்ட வாய் பேசி ஜெயிக்க முடியுமா? சரியான வாயாடி என்று அவள் தலையில் தட்டினான். ராஜேஷ் பிரியாவுடன் சகஜமாக பேசுவதை கண்ட மிதுன்யா இருக்கும் இடம் மறந்து பிரியாவை முறைக்க ஆரம்பித்தாள்.

அதை கண்டுக்கொண்ட பிரியா, ராஜேஷ் கையை சுரண்டி அது யாரு எரிக்கிற மாறி பார்க்கிறாங்க என்று மிதுன்யாவை காமித்தாள். அவள் காதுப்படவே நான் சந்தோஷமா இருந்தா சில பேருக்கு காண்டாகும் என்ன செய்ய தர்ஷூ என்று சளித்துக் கொண்டான் ராஜேஷ்.

அதற்குமேல் இவர்கள் பேச்சை வளர்த்த விடாது , பிரியாவின் அருகில் வந்தவன் யாரும் பார்கிறார்களா என்று பார்த்துவிட்டு அவன் இடையோடு தன் பக்கம் திருப்ப அவ்வளவு நேரம் வாயளந்தவள் பேசா மடந்தை ஆனாள். நமட்டு சிரிப்புடன் ராஜேஷ் நிற்க, மிது இவத்தான் நான் காதலிக்கும் பொண்ணு என் முயலு என்று அவன் கூற இல்ல இவருக்கு நிச்சயம் பண்ணிருக்க பொண்ணு என் பேரு பிரியதர்ஷினி என்றாள் அவனை முறைத்து.

டேய் பொறுக்கி கையை எடுடா என்று அவனுக்கு கேட்கும் குரலில் பேசினாள்.
முடியாது என்று அவன் விரல்கள் வெற்றிடை தீண்ட, நாங்களும் இங்க தான் இருக்கோம் என்று கோரசாக பேசினர் மிதுவும் ராஜேஷும்.

பிரியா அவனை கிள்ள அதில் அவளை விட்டு அரையடி நகர்ந்தான் அகரன். மிதுவை காமித்து, இது யாரு வந்ததில் இருந்து ரொம்ப விறைப்பா இருக்காங்க. இவங்களுக்கும் இந்த தேவாங்குக்கும் ஏதோ ஒரு லிங்கிக் இருக்க மாறி தெரியுதே? என்று அதைப்பற்றி அறிய ஆவலாக அகரனை பார்த்தாள்.

ஏய் மரியாதையா பேசுடி, அவன் ஒரு இன்ஸ்பெக்டர் அவள் ஒரு டி.எஸ்.பி கொஞ்சம் மரியாதை இல்லாமல் பேசிட்டு இருக்க என்றவனை ஒரு தினுசாய் பார்த்து ஏ.சி.பி.கே மரியாதை இல்லையாம் என்றாள் அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில்.
வர வர உனக்கு வாய் அதிகம் ஆகி போய்டுச்சு டி குட்டச்சி.

குட்டச்சினு சொன்ன கொன்றுவேன் என்று இதழ் சுளித்தவள் என்னை வீட்டில் விட்டுட்டு போ என்றாள் கட்டளையாக .
இரு டி வரேன் என்றவன் ராஜேஷிடமும் மிதுன்யாவிடமும் கூற, அவனை கலாய்த்தனர். அகரா நான் உன் ஆளு கூட கொஞ்ச நேரம் ஃபன் பண்ணட்டா என்று மீது ஆர்வமாக கேட்க உன்னை யாராலையும் காப்பத்த முடியாது என்று நினைத்து சரி என்றான்.

ராஜேஷ் தான் அவளை பாவமாக பார்த்து வைத்தான். அதை புரிந்து கொள்ளாத மிது அகரனை அழைத்து கொண்டு பிரியவிடம் சென்றாள் மிதுன்யா.

இங்க பாருங்க எங்களுக்கு வொர்க் இருக்கு உங்களை கொண்டு போய் இப்போ விட முடியாது நீங்க வைட் பண்ணுங்க என்று அதிகாரமாய் பேசியவளை நமட்டு சிரிப்புடன் பார்த்தவள்.

மிஸ்டர் அகரன் உங்க வண்டி சாவி வண்டியில் தானே இருக்கு ? என்று பிரியா கேட்க, ஆமாம் என்று அவன் தலையசைத்தது தான் தாமதம், அகரா உன் வண்டி எடுத்துட்டு நான் போறேன் . நீ வேலையை முடிச்சுட்டு உங்க மேடம் கூட விட்டுக்கு வந்து வண்டியை எடுத்துக்கோ என்று அவன் சட்டையில் சொருகி இருந்த கண்ணாடியை உருவி முந்தியை இருப்பில் சொருகி பாந்தமாய் அந்த வண்டியில் ஏறி கர்வமாக அவர்களுக்கு கைக்காட்டி அவ்வண்டியில் பறந்தாள் அகரனின் முயலு.

முயலு, முயலு அவள் உன்னை வம்பு பண்ண தான் டி அப்படி சொன்னா என்று அவன் பேசியதெல்லாம் காற்றில் பறந்தது.
மிது நீ என்ன நினைச்ச அவள் பட்டிக்காட்டு மாறி அழுகுவானு நினைச்சியா? அவளே யாருக்கிட்ட ஒரண்டை இழுக்கிறதுன்னு தெரியாமல் சுத்திட்டு இருக்கா நீ வேற அவளுக்கு பாய்ண்ட் எடுத்து கொடுத்திருக்க என்று அவள் சென்ற வழியை பார்த்தான்.

புழுதி பறக்க வண்டியை அவன் முன் நிறுத்தியவள் , ஸ்டைலாக கண்ணாடியை தலை மேல் ஏற்றி, இறங்கி வண்டியில் சாய்ந்தவள் என்ன அண்ணி வந்ததும் போஸ்டிங்கான அதிகாரத்தை ஆரம்பிச்சுட்டிங்க போல, உங்க ஏ.சி.பி சார் என்னை சொல்லவில்லை போல.

அட்லிஸ்ட் உங்க இன்ஸ்பெக்டர் சார்கிட்டயாச்சும் என்ன பத்தி கேட்டிருக்கலாம்ல , சரி விடுங்க இப்போ தான டீசர் பார்த்திங்க இனி அடிக்கடி மெயின் பிக்ச்சர் பார்க்கலாம்.

உங்களுக்கும் அண்ணுக்கும் வாய்க்கால் தகராறு போல உங்களை பார்த்தா மட்டும் மூஞ்சை மூணாறு வரை தூக்கி வைச்சிருக்கார் என்று அவள் அசத்தல் பேச்சால் அசர வைத்தாள் பிரியதர்ஷினி.


தொடரும். . . .

இப்படிக்கு ,
உங்கள் ,
சுபாஷினி.
 
#12
எனை சாய்த்தானே(ளே) - 11

என்ன டி.சிபி மேடம் வாயடிச்சு நிற்கிறிங்க என்ற பிரியாவை அணைத்து, பிரியா நீ தான் இவனுக்கு சரியான ஆளு என்று அகரனை பார்த்தாள் .

அதுவா அண்ணி உங்க ஏ.சி.பி மாறி ஆளை இப்படி தான் சமாளிக்க முடியும் கேஸ் வொர்க் முடிச்சுட்டு வீட்டுக்கு வாங்க அங்க பேசலாம் என்று ராஜேஷிடம் கூறி அகரனை பார்த்தவாறு கிளம்பினாள்.

போகும் அவளையே பார்த்திருந்தவன் , அழுத்தி தலைக்கோதி சரியான ராங்கி எப்ப பாரு என்ன உசுப்பி விட்டுகிட்டே இருக்க இரு டி மொத்தமா ஒரு நாள் வைச்சு செய்கிறேன் என்று மனதில கறுவிக் கொண்டு விட்ட விசாரணை தொடர எந்த ஆதாரம் எதுவும் கிடைக்காமல் போக, கிடைத்ததை சேகரித்து கிளம்பினர்.

வண்டியிடம் வந்த அகரனுக்கு பிரியாவின் ஞாபகமே வந்தது, ராஜேஷிடம் பிரியாவின் வீட்டிற்கு வர சொல்லி அவன் முன்னே போக ஜீப்பில் அவனை தொடர்ந்து சென்றான் ராஜேஷ்.
இப்போது இவனை சமாதானம் செய்யவில்லை என்றால் எப்போதும் அவனை செய்ய முடியாது என்று புரிய ராஜேஷிடம் பேச ஆரம்பித்தாள்.

ஜி.ஜூ என்னை பாரு என்றவளின் பேச்சில் நிமிர்ந்து அவளை பார்க்க, டேய் தப்புதான் இந்த மூணு வருஷம் உன்னை பார்க்காமல் பேசாமல் திடீர்னு உன் முன்னாடி வந்தது தப்பு தான்.

என் அப்பா கிட்ட போட்ட சபத்தில் நீ இன்ஸ்பெக்டர் ஆகிட்ட, என்னுடைய கனவை நினைவாக்க அப்போ தடையா இருந்தது நம்ம காதல் அதனால் உன்கிட்ட கூட சொல்லாமல் இப்படி மறைந்து இருந்தேன். என் பிடிவாதத்தில் தான் நீ இருக்க ஸ்டேஷனுக்கே வந்தேன்.

எப்படியும் உன்னை சமாதானம் செய்திருவேன் என்ற நம்பிக்கையில் தான் இப்படி பண்னேன். உன் ஞாபகம் வரும் போது நீ என்ன பண்றனு ஒழிந்து நின்னு பார்த்துட்டு போயிடுவேன். இன்னிக்கு என் கனவு நிறைவேறிடுச்சு அடுத்த நிமிஷம் இதோ உன் முன்னாடி வந்துட்டேன் என்றாள் மிதுன்யா.

இங்க பாரு மிதுன்யா , உனக்கும் எனக்கும் நடுவில் எந்த காதலும் இல்லை மூணு வருஷத்துக்கு முன்னாடி நீ விட்டு போன அதே இடத்தில் நீ இருக்கலாம் ஆனால் நான் அங்கேயே நிற்காமல் , அந்த இடத்தை தாண்டி வந்துட்டேன் சோ இதை பத்தி இனி பேச வேண்டாம்.

எனக்கு நீ ஒரு சுப்பிரியர் ஆபிஸர் அது மட்டும் தான் இப்போ என் மனசில் இருக்கு நீயும் அதை மட்டும் மனசில் பதிய வைத்துக் கொள் என்றவன் எதுவும் பேசாது வண்டியை ஓட்ட , மிஸ்டர் ராஜேஷ் வண்டியை நிறுத்துங்க என்றதை காதில் கேட்காது அவன் ஓட்டினான்.

அடுத்த நொடி வண்டியில் இருந்து எதோ விழுக திரும்பி பார்த்தவனுக்கு அதிர்ச்சி, காரணம் ஓடும் வண்டியில் இருந்து குதித்திருந்தாள் மிதுன்யா. அவளது செய்கையில் பதற்றம் ஆகி இறங்கியவன் கண்டது மண் பாதையில் உருண்டதால் அவள் கைகளில் சில சிராய்ப்புகள் ஏற்பட அதை பார்த்தவாறு அமர்ந்திருந்தாள்.

அப்போது தான் அவளை கூர்ந்து கவனித்தான். வெள்ளை நிற முழுக்கை சட்டையை முழங்கை அளவு மடித்து, அதற்கு ஏற்றார் போல் நீல வண்ண ஜீன்ஸ், அள்ளி போட்ட கொண்டை மூக்கில் சிறு வளையம் என்று பக்கா போலீஸ்காரியாக இருந்தாள், மூன்று வருடத்திற்கு முன் இருந்தவளுக்கும் இப்போ இருப்பவளுக்கும் எத்தனை வித்தியாசம் என கண்களால் அளந்து அவளிடம் சென்றான் ராஜேஷ்.

மித்து எழுந்திரி என்று அவன் கூற , சுற்றும் முற்றும் பார்த்து யாரை சார் கூப்பிடுறீங்க என்றாள். அவர்களை யாராவது கவனிக்கிறர்களா பார்த்தவன் அவளை கையில் அள்ளி வண்டியில் அமர வைத்து, காயங்களை கண்டவன்.

லூசு மாறி எதுக்குடி குதிச்ச, அப்படியே அறைந்தேனு வை காது கேக்காமல் போயிடும் ஏன் டி இப்படி இம்சை பண்ணுற என்று அவளை திட்டியவாறு பிரியா வீட்டிற்கு வண்டியை விட்டான் ராஜேஷ்.

அவர்கள் தேடி செல்லும் நபர்கள் அப்படி என்ன தான் செய்றாங்கனு காணலாம் வாங்க.
அங்கிருந்து கிளம்பி சென்ற அகரனின் கண்களில் ஒரு சில்வண்டு சண்டையிட்டு கொண்டிருந்த அவனது முயலு கண்ணில், அதை ரசித்தவாறு அவளிடம் சென்றான்.

டேய் காலையில் என் மாங்காய் எல்லாம் எதுக்கு டா சாப்பிட்ட உன்னால் சித்து தோட்டத்தில் மாங்காய் திருட போய் செளந் என் தோலை உறிக்க போறாங்க. ஏன் டா இப்படி பண்ண என்று ஒரு சிறுவனுடன் கை நீட்டி அவளுக்கு உரியதான கோபத்துடன் பேசு அவளை முத்தமிட தோன்றிய எண்ணத்தை கைவிட்டு அவள் முன் நின்றான்.

அந்த சிறுவன் மாமா தர்ஷூ அக்காட்ட இருந்து என்ன காப்பாத்துங்க என்று கண்ணை சுருக்கி கேட்ட அழகில் சொக்கி தான் போயிருந்தனர் இருவரும் . சிரிப்புடன் அவனை அனுப்பியவன் பிரியாவிடம் பேசும் முன், இங்க பாருங்க என்னை உங்க கூட கூட்டிட்டு போறிங்களா உங்க வீட்டுக்கு என்றவளை அதிர்ச்சியுடன் பார்த்தான்.

பின்ன இதுவரை பொறுக்கு தடிமாடுனு கழுவி ஊத்துனவ, இப்போ மரியாதையா பேசுனா ஷாக் ஆகாமல் என்ன பண்ணுவான்.
முயலு இது நீ தானா எனக்கு சந்தேகமா இருக்கு டி என்றான் அகரன்.

ஆமாம் நானே தான், இவ்வளவு நேரம் நான் உன் கூடத்தான் இருந்தேன்னு என் அம்மா கிட்ட சொல்லு ஒ.கே வா என்றாள்.
அகரன், "அதானே பார்த்தேன் என்னடா குட்டச்சி மரியாதையா பேசுறாளேனு இதுதான் காரணமா? சரி சரி என் மாமியார் கிட்ட சொல்லிடுறேன். எனக்கு இப்போ ஒகே சொல்லு" என்றான்.

பிரியா, "போடா அதெல்லாம் முடியாது".
அகரன், " சரி சரி வேணாம் வண்டியில் ஏறு" என்று அவளை ஏற்றி கொண்டு வீட்டிற்கு முன் இறங்கவும் ஜீப்பில் அவர்கள் வந்து இறங்கவும் சரியாக இருந்தது.

சத்தம் கேட்டு சௌந்தரநாயகி வர, பின் வந்தவர்களை வரவேற்கும் போது தான் மிதுன்யாவின் காயங்களை கண்டார் நாயகி.

அவளது காயங்களுக்கு மருந்திட்டவரை கண்ணீருடன் பார்த்தாள் மிதுன்யாவின் கைகளை ராஜேஷ் பிடிக்க, அம்மா இருந்தா இப்படி தானே பாசமா பார்த்து கொள்வாங்க என்று பேசியவள் தலையை ஆறுதலாய் வருடி நானும் உனக்கு அம்மா மாறி தான் எல்லாரும் முகம் கை கால் கழுவிட்டு வாங்க சாப்பிடலாம் என்றதும் வேண்டாம் என்று அகரன் கூறவும் அவனை முறைத்து அம்மா சாப்பாடு எடுத்து வைங்க நான் கூட்டிட்டு வரேன் என்று அவரை அனுப்பி வைத்து அவன் கையை கிள்ளி ஒழுக்கமா சாப்பிடு இல்லை என் மாமியார் கிட்ட சொல்லிடுவேன் என்று விரல் நீட்டி எச்சரித்தவள் நெற்றியில் முட்டி, நீ சரியான மாயக்காரி தான் எல்லாரையும் உன் பக்கம் இழுத்துக்கிற என்று கை கழுவி அவள் முந்தியில் துடைத்து சாப்பிட சென்றான்.

மிதுவின் கைகளில் அடிப்பட்டு இருப்பதால் ராஜேஷ் அவளுக்கு ஊட்ட, அகரனுக்கு பொரையேறியது.

தலையை தட்டி பிரியா தண்ணீர் கொடுக்க, அதை குடித்தவன் டேய் நீ எப்போ டா மிதுக்குட்டியோட எப்போ சமாதானம் ஆன ஆச்சிரியத்தில் கண்ணை விரித்து கேட்டான் அகரன்.


தொடரும்....


- சுபாஷினி💞
 
#13
எனை சாய்த்தானே(ளே)- 12​நாங்க எப்போ டா சண்டை போட்டோம் என்ற ராஜேஷ் கேட்கவும் நெஞ்சை பிடித்தப்படி அமர்ந்தான் அகரன்.
எனக்கு ஜி.ஜு ஊட்டுறதை பார்த்து உனக்கு பொறாமை டா என்று மிது கேட்டதும் பிரியா சிரித்துவிட்டாள்.

நீயா பேசியது..
என் அன்பே நீயா பேசியது
தீயை வீசியது
என் அன்பே தீயை வீசியது

என்று வராத கண்ணீரை துடைத்து அகரன் பாட, அவன் வாயில் அப்பளத்தை வைத்து சாப்பிடறதுக்கு தான் வாயை தொறக்கனும் மூச்ச விட கூடாது என்று அவள் மிரட்ட பயந்தது போல் முகத்தை வைத்து சாப்பிட்டான் .

நல்ல வேலை அப்பாவை கூப்பிட செளந் போயிருச்சு , இல்லை இவனை அடக்கிருக்க முடியாது சரியான வாலு என்று தன்னை மறந்து அவளுக்குள் பேசினாள் பிரியா.

மிதுவிற்கு ஊட்டிவிட்டு ராஜேஷ் சாப்பிட அவனுடன் மிது பேசிக் கொண்டிருந்தாள். நாகரிகம் கருதி சமையலறை சென்றவளை பின் தொடர்ந்தான் அந்த திருட்டு பூனை.

பிரியா, "டேய் இங்க எதுக்கு வந்த, ஒழுங்க ஹாலில் இரு யாராவது வந்தா தப்பா நினைப்பாங்க ".
அகரன், " முயலு உங்கிட்ட பேசனும் டி நாளைக்கு வெளிய போகலாமா?".
அப்பா விட மாட்டார் , எதுவா இருந்தாலும் கால் பண்ணு பேசலாம் என்றாள் பிரியா
மாமா கிட்ட பேசட்டா நான் வேணும்னா? என்ற அகரனை தடுத்து நிறுத்தினாள்.

பிரியா, "இங்க பாரு எனக்கு உன்னை கொஞ்சம் பிடிச்சிருக்கு, உன்னை இன்னும் முழுசா என் மனசு ஏத்துக்கலை. பார்த்ததும் காதல் சொல்லி அப்பவே பரிசம் போட்ட பெரிய அப்பாடக்கரா வேணா நீ இருக்கலாம் ஆனா இந்த பிரியாவை ஏத்துக்க வைக்க இது எல்லாம் செல்லாது. அதுக்கு நான் தான் மனசு வைக்கனும்" என்றாள்.

அடியேய் குட்டச்சி பார்க்க ஆலாக்கு சைஸில் இருந்துட்டு என்னலாம் பேசுற. என்னை நீ முழுசா ஏத்துக்கணும் என்றால் என்ன பத்தி தெரிந்து கொள்ள வேண்டும்.
அதுக்கு என் கூட கொஞ்சம் இடம் ஸ்பெண்ட் பண்ணனும் , சோ நம்ம நாளைக்கு ஒரு டேட் போலாம் என்றவனை சரமாரியாக அடிக்க ஆரம்பித்தாள் பிரியா.

வலிக்குதுடி போதும் டி முயலு என்று அவன் கத்த , அகரா உன்னை பிடிச்சிருக்கு ஆனால் அதுக்கு மேலை நம்ம கல்யாணம் வரை பொறுமையா இரு. உன் மேல் இருக்க பிடித்தம் விருப்பமா மாற கொஞ்சம் டைம் கொடு. உன்னை மாறி பார்த்ததும் காதல் இல்ல நீ ரோமியோ தான் ஆனா நான் ஜுலியட் ஆகுற வரை நீ காத்திருந்து தான ஆகனும் என்று வாய் மொழியால் கூறாது மனதில் நினைத்து வெளியே சென்றாள்.
அவள் இதழ் பேசாத காதல் கண் பேச அமைதியாக அவள் பின்னோடு சென்றான் அகரன்.

சிறிது நேரத்தில் செளந்தரநாயகி இராஜலிங்கத்தை வந்தார். அகரன் மிதுன்யாவை , கமிஸனர் பெண் என்றும் தன் உடன்பிறவா தங்கை என்றும் அவருக்கு அறிமுகம் படுத்தினான்.

ராஜலிங்கத்திடம் கதையளந்து கொண்டு இருக்கும் போது விகாஷ் (அவர்கள் கேஸ்காக மதுரை சென்ற டீம்மில் இருக்கும் எஸ்.ஐ) இடம் இருந்து அகரனுக்கு அழைப்பு வர எழுந்து வெளியே சென்றான்.

போன் பேசி வந்தவன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. அவனை அப்படி பார்த்த பிரியாவிற்கு சற்று பயமாக தான் இருந்தது. முக்கியமான வேலை இருக்கிறது என்று அவசரகதியில் கிளம்ப ஆயத்தம் ஆனவனை தலையசைப்பில் விடைக் கொடுத்தனர் பிரியாவின் குடும்பம்.

எதுவும் தெரியவில்லை என்றாலும் அவன் முகமே சொல்லியது பிரச்சனை அவ்வளவு சின்னது இல்லை என்று.
அவனே சொல்லட்டும் என்று பின்னால் செல்ல, அவனோ தன் கோபம் முழுவதையும் வண்டியின் வேகத்தில் காட்டி ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் நிறுத்த ராஜேஷும் மிதுவும் வண்டியில் இருந்து அவனிடம் வந்தனர்.

அவன் தோளில் கை வைத்த ராஜேஷ்க்கு புரிந்தது அவனது கட்டுக்கடங்கா, முறுக்கு ஏறி இந்த தோளை தொடும் போது.
அகரா என்னாச்சு என்று கேட்டவர்களிடம் போனை நீட்ட அதிர்ந்தனர்.

என்னா டா இது என்று ஆத்திரம் அடைந்தான் ராஜேஷ். மதுரையில் விசாரிக்க சென்ற குழு கூறிய விவரம் , அந்த பெண்ணின் வயது தற்போது தான் பதினாறை பூர்த்தி அடைந்தாகவும், ப்ரித்தாவின் உடலில் இருந்த மாறி எந்த காயம் தழும்பும் இல்லை , அவள் உடல் இருந்த அதே அமைப்பில் இருந்ததாகவும் சொன்னான் விகாஷ்.

மேலும் அந்த பெண்ணின் குடும்பமும் ப்ரித்தாவின் குடும்பம் போல் நல்ல வசதி படைத்ததாக இருந்தது. இது எதாவது சங்கிலி மாறி இருக்கே என்று மிதுன்யா கேட்க. அதை ராஜேஷும் ஆமோதித்தான்.
நான் இப்பவே அங்க கிளம்புறேன், இங்க நடந்த மர்டர் பத்தி நீங்க இன்வஸ்டிகேட் பண்ணுங்க நாளைக்கு வந்துறேன் அதுவரைக்கும் ராஜேஷ் நீ பார்த்துக்கோ.

நான் பிலைட் பிடித்து போய்ட்டு வந்தறேன்.
இதுக்கு யாரு காரணம்? ஒரு கொலைக்கும் இன்னொரு கொலைக்கும் எதாவது சம்மதம் இருக்கா? என்ன மாதிரி ஆயுதத்தை பயன்படுத்தி கொலை செய்றாங்க? இது ஒருத்தனா? இல்லை பல பேரான்னு தெரியலை ஆனா ? ஒன்னும் புரியலை கண்ணை கட்டி காட்டிலை விட்ட மாறி இருக்கு என்று புலம்பியவன் அழைபேசியில் மெசேஜ் வர எடுத்து பார்த்தவனின் இதழ்கள் தானாக விரிந்தது அகரனுக்கு.

என்னனு தெரியவில்லைனாலும் எப்படி டி உன்னால் இப்படி பேச முடியுது என்று மீண்டும் ஒரு முறை தன்னவள் அனுப்பிய செய்தியை வாசித்தான்.

" ஆள் வளர்ந்த அளவுக்கு அறிவு வளர்ந்திருக்கா? உன்னை கல்யாணம் பண்ணி எப்படி குப்பை கொட்ட போறேனா?
இஞ்சி தின்ன குரங்கு மாறி போற பாக்க சகிக்கலை. ஊருக்குள்ள உன்னை அப்படி இப்படினு சொல்லுறாங்க. நீ என்னனா சின்ன விசயத்துக்கே மூஞ்சிய தூக்கி வைச்சுகிட்டு போற. என்ன எப்படி சமாளிப்ப பேசாமல் ஒரு வருஷம் கிரிமினல் கிட்ட நல்லா டிரைனிங் எடுத்துட்டு வா அப்பறம் கல்யாணம் பண்ணிக்கலாம் "

- குரங்கின் முயலு

கண்ணை மூடி தன்னை நிதானித்து கொண்டு , இருவரிடமும் கூறி வீட்டிற்கு சென்றான்.
வீட்டிற்கு வந்தவன் கேஸ்க்கு தேவையானதை எடுத்து வைத்து விமான டிக்கெட்டை பதிவு செய்து கமிஸ்னரிடம் தகவல் கூறி பறந்தான் அகரன்.

இவனது நடவடிக்கையை வேவு பார்த்த அந்த மர்ம மனிதன் ஏளன சிரிப்புடன் அவனை பின் தொடர்ந்தான்.
 
#14
எனை சாய்த்தானே(ளே)- 13​மதுரைக்கு பறந்தவன் விகாஷ் டீமுடன் சேர்ந்து துப்பு துலக்க, எங்கே சுத்தி எங்கே வந்தாலும் ஆரம்பித்த இடத்திற்கே வந்து எந்த ஆதாரமும் கிடைக்காது தவித்தான். மர்மமாக விழுந்த அந்த முடிச்சை விசாரனையில் விலக்க முடியாது குழம்பினான் அகரன்.

என்ன செய்வது என்று குழப்பிய போது பிரியா அகரனுக்கு அழைத்தாள். வேலை பழு, ஆதாரம் கிடைக்காத கோபம் என்று கடுப்பில் இருந்தவன் அதை ஏற்காது போக, அடுத்த அழைப்பு ராஜேஷ் நம்பரில் இருந்து வந்தது.

என்னவாக இருக்கும் என்று அழைப்பை ஏற்தவனுக்கு சில அர்ச்சனைகளை வாரி வழங்கினாள் பிரியா.

பிரியா, " நீயெல்லாம் எதுக்கு டா போன் வைச்சிருக்க, உன் மனசில் என்ன பெரிய இவனு நினைப்பா? உன்னை வேலை நேரத்தில் கூப்பிட்டு இம்சை செய்ய நான் என்ன பைத்தியமா? அத்தனை தடவை கூப்பிட்டேனே எதுக்குனு ஒரு டைம் அட்டன் பண்ணியா? உன்கிட்ட இனி எனக்கு எந்த பேச்சும் இல்லை. முயலு லவ் கிவ்வுனு மவனே எதாவது பேசு , அடுத்த முறை பேச வாயில்லா பண்ணிருவேன்" என்று வாயில் வந்தது எல்லாம் பேசி கடுப்பில் கட் செய்தாள்.

எதாவது முக்கியமான விசயமா இருக்குமோ என்று அவளுக்கு அழைக்க , அதை அவள் எடுத்தப்பாடில்லை. இவளை
எப்படி சமாதானம் செய்ய போறோமோ தெரியலையே என்று ராஜேஷ்க்கு அழைக்க, அதை ஏற்றவன் சொன்ன தகவலை கேட்டவன்.

மச்சி நீ அங்கையே இரு இன்னும் மூணு மணி நேரத்தில் அங்கு வந்திருவேன் என்று ராஜேஷிடம் பேசியவன். விகாஷிடம் கூறி விமான நிலையத்திற்கு விரைந்தான்.

அடுத்த முன்று மணி நேரத்தில் ராஜேஷ் சொன்ன இடத்தில் நின்றான். நிமிர்ந்து பார்த்தவனுக்கு மனச் சஞ்சலம் சற்று அதிகமாவே இருந்தது.

ராஜேஷிடம் அறையை கேட்டு மேல சென்றவன் கண்டது கழுத்து மட்டும் தலையில் கட்டுடன் படுத்திருந்த மாரியப்பனை தான்.

ராஜலிங்கம், அவர் அருகே கவலையாக அமர்ந்திருக்க .
ராஜேஷிடம் செளந்திரநாயகி பேசி கொண்டிருக்க , ஜன்னல் வெளியே பார்வை பதித்து அமர்ந்து இருந்தாள் பிரியா.

அவளை எப்படி எதிர்கொள்வது என்ற பயம் இருந்தாலும். சரி எதுவா இருந்தாலும் பார்த்து கொள்ளலாம் என்று முதலில் ராஜலிங்கத்திடம் சென்றான்.

வாங்க மாப்பிள்ளை, நேத்து யாரோ நம்ம தோட்டத்துக்கு பதுங்கி பதுங்கி போறாங்க ஆளுங்களை கூட்டிட்டு வெரசா வானு போனு போட்டான் நானும் ஆளுங்களை கூட்டிட்டு போனேன் நம்ம பிரியா மரத்தில் மாங்காய் பொறிச்சிட்டு இருந்துக்கா, அந்த களவாணி பையன் திடீர்ன்னு கத்தியை தூக்கி அவள் மேலே போட, இந்த முட்டா பையன் எம்மவ மேல இருக்க பாசத்துல எதையும் யோசிக்காம அவனை தாக்கிருக்கான்.

திடுதிப்புனு எதோ பறந்து வர, இந்த புள்ள பிடிமானம் இல்லாம கீழ விழுந்துருச்சு. நானு அளுங்களை கூட்டிட்டு வர சத்தம் கேட்டு அந்த களவாணி பையன் ஒட.

வயசு பையங்கீற நினைப்பு இவனுக்கு அவனை தொறத்திட்டு போய் இப்படி குத்து வாங்கிட்டு வந்திருக்கான் என்று ஆற்றாமையுடன் பொரிந்து தள்ளினார் ராஜலிங்கம்.

அப்பா எதுக்கு இப்போ சித்துவை திட்டுறீங்க, எனக்கு மட்டும் கால் உடையாம இருந்து இருந்தா இன்னேரம் சித்துக்கு பக்கத்து பெட்டில் அவன் படுத்திருப்பான் எப்படியோ தப்பிச்சுட்டான் என்று உச்சு கொட்டினாள்.

மாப்பிள்ளை எனக்கு விரோதினு யாரும் இல்லை. இதுவரை எங்க ஊருல இப்படி ஒரு சம்பவமும் நடந்தது இல்லை. நேத்து ஒரு பொண்ணு சாவு இன்னிக்கு கொலை முயற்சினு கொஞ்சம் பயமா தான் இருக்கு. என்ன தான் தகரியமா இருந்தாலும் எம்மவ விஷயத்திலும் இங்க வந்து படுத்து கிடக்கிறானே இவன் விஷயத்திலும் கொஞ்சம் பயம் தான். இவனை முப்பத்தி அஞ்சு வருசமா பாக்குறேன் இன்னிக்கு இவன் பயந்த மாறி நானு பார்த்தது இல்லை.

பார்க்க தான் இப்படி இருக்கான், ஆனா லேசு பட்டவன் இல்லை வர்ம கலை தெரிந்தவன், ஆனா இவனையே சாச்சுப்புட்டான் அந்த களவாணி பையன் .

கேஸு கொடுத்துருக்கேன் கொஞ்சம் வெரசா என்ன ஏதுனு பாருங்க.
அப்பறம் இவன் எதுக்கும் பதில் பேசாம பாறையை முழுங்கன மாறி இருக்கான் என்னானு பாருங்க நானும் நாயகியும் வீடு வரைக்கும் போய் கஞ்சி காய்ச்சி எடுத்துட்டு வரோம்.
தர்ஷினிமா பார்த்து சூதானமா இரு என்று பல பத்திரம் கூறி இருவரும் சென்றனர்.

எதுவும் பேசாது அவன் இருக்க அவன் அழைப்பேசி ஒரு குறுஞ்செய்தி வந்தது.

அதை படித்தவன் சற்று ஆடி தான் போனான். அடுத்து என்ன செய்ய என்று யோசித்தான் அகரன்.
தொடரும். . . . . .
 
#15
எனை சாய்த்தானே(ளே)- 14​மீண்டும் ஒருமுறை வந்த குறுஞ்செய்தி படித்தான் அகரன்.
நீ நினைக்கிற மாறி களவாணி இல்லை கொலைகாரன் அதுவும் எல்லா தெரிந்த சண்டக்காரன் .

முக்கியமா இங்க வந்ததில் இருந்து அவன் எல்லாரையும் கண்காணித்து கொண்டே இருக்கான் என்று பிரியா அனுப்பிய செய்தியை படித்தவன் அவளை காண, அவளோ அவனை காணாது இறுகி போயிருந்தாள்.

யாரவன் அடையாளம் தெரியுமா? என்று பதில் அனுப்பினான் அகரன்.
முகம் தெரியலை அவனோட உடலமைப்பு தெரியும் அவன் டார்கெர் நானும் சித்தும் தான். யாருனு தெரியலை? டாக்டர் டிரஸ் மாஸ்க் போட்டிருந்தான். கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இங்க வந்து சித்து கிட்ட எதோ பேசிருக்கான். அவன் வெளிய வரும் போது சரியா நாங்க எக்ஸ்ரே எடுத்துட்டு வந்தோம். நீ என்ன பண்ணுவியோ எனக்கு தெரியாது இன்னும் அரைமணி நேரத்தில் நம்ம வீட்டில் இருக்கணும் என்று முடித்திருந்தாள் அந்த குறுஞ்செய்தியை .

ராஜேஷ் நீ கூட இரு எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு என்று கிளம்பியவனை கடைக்கண் பார்வையால் வருடியவள், அடியே பிரியா நீ அவன் மேலை கோபமா இருக்க என்று பொய் கோபத்தை முகத்தில் பூசிக்கொண்டாள்.

இதை எல்லாம் கண்டாலும் எதுவும் கேட்காது அமைதியாக இருந்த மாரியப்பனை கவனித்த ராஜேஷ்க்கு வித்தியாசமாக இருந்தது.

அகரன் சென்றதை உறுதி செய்து கொண்டவள் ராஜேஷின் காதில் ஏதோ கூற அடுத்த நொடி வெளியே சென்றான்.

நான் என்ன கேட்டாலும் நீ பதில் சொல்ல மாட்டேன்னு எனக்கும் தெரியும் சித்து, அதனால் நான் எதுவும் கேட்க போறது இல்லை. உனக்கு தெரிந்த எல்லா வர்ம கலையும் எனக்கும் தெரியுங்கிறதை நீனு மறந்துட்ட.

உன்னை அடிச்சவனும் நமக்கு சளைச்சவன் இல்லை, அவன் எப்படி சரியா உனக்கு பேச்சு வர கூடாது என்று கழுத்து நரம்பில் அடிச்சிருக்கான் அப்போ அவனுக்கு உன்னை கொல்லுற எண்ணம் இல்ல அப்படி தானே. அவன் டார்கெட் நீ இல்ல நான் தான்.

என்ன காரணம் எதுவும் தெரியலை மூஞ்சியை மூடி இருந்தாலும் அவன் கண்ணுல ஒரு கொலை வெறி தெரிந்தது. இப்போ கூட உன்னை அவன் செக் பண்ண வந்திருக்கான்.
அப்பா அம்மா ஏன் அந்த களவாணி பயலுக்கு கூட தெரியாத ஒன்னு எனக்கு மட்டும் தான் தெரியும். ஊரு உலகத்தை பொறுத்தவரை விவசாயி, யாரும் இல்லாத ஒண்டிக்கட்டை. ஆனால் உண்மை அது தானா? இல்லையே நீ ஒரு எக்ஸ் மிலிட்டரி ஆபிஸர்.

பத்து வருஷம் நம்ம நாட்டுக்காக போராடி, ஒரு விபத்துல இந்த இடது கையை இழந்ததால் செயற்கையா பொருத்திருக்க. இதனால் சர்விஸை தொடர முடியாம திரும்பி நம்ம ஊருக்கு வந்தப்போ ஆச்சி தாத்தா செத்து போய்டாங்க .

அப்போ எனக்கு ஏழு வயசு, இன்னும் ஞாபகம் இருக்கு அந்த நாள். என்னை பார்த்து ஆசையா தூக்கி கடைக்கு கூட்டிட்டு போய் எனக்கு பிடிச்சது எல்லாம் வாங்கி கொடுத்து என் முகத்தில் தெரிந்த சந்தோஷத்தை மட்டுமே பெருசா நினைச்ச.

கமலா சித்தியையும் அம்மு குட்டியையும் சாமி கூட்டிட்டு போனதால சாமிக்கிட்ட கோசிட்டு இன்னும் பேசமா இருக்கேன் தெரியுமா என்று வழிந்த கண்ணீரை துடைத்து பேசினாள் பிரியா.
நீ மிலிட்ரியில் வேலை பார்த்ததை யாருக்கும் சொல்லாம என் கிட்ட மட்டும் எதுக்கு சொன்ன சித்து.

என்னை உன் பொண்ணா நினைக்கிறதால் தானே. எதுக்கு இப்போ இதெல்லாம் சொல்லுறேன்னு தானே யோசிக்கிற? இனி நீனு ராஜேஷ் அண்ணா வீட்டில் தான் இருக்க போற. ஏன் எதுக்கு என்று நீ கேட்காதே , கேட்டாலும் நான் சொல்ல மாட்டேன்.

ஒழுக்கமா ராஜேஷ் அண்ணா கூட போ சித்து, கொஞ்ச நாள் அங்க இரு சரியா என்றவளிடம் . மாட்டேன் என்று இடம் வளமாக தலையாட்டி தன் எதிர்ப்பை
காட்ட அதையெல்லாம் கண்டு கொண்டால் தானே. என்னை பார்த்துக்கும் அளவு தைரியம் இருக்கு சித்து. இன்னும் பத்து நாளில் மாங்காய் பறிக்க மரத்தில் ஏற போறதை நீயே பார்க்க போற.

என்னை பத்தின கவலையை விட்ட அங்க போ. உன்னையோ என்னையோ தேடி அவன் வருவான் அப்போ காட்டு உன் அக்கறையை .
இப்போ நல்ல பையனா அங்க போ அப்பாகிட்ட நான் பேசிக்கிறேன் என்று அவள் முடிக்கவும் ராஜேஷ் உள்ளே வரவும் சரியாக இருந்தது.

எல்லாம் ஒகே வா என்று கேட்க, கட்டை விரலை உயர்த்தி ஓ.கே என்றான் ராஜேஷ். அண்ணா நீங்க சித்துவை கூட்டிட்டு போங்க, அவன் வந்ததும் நான் வீட்டுக்கு வரேன்.
அப்பா வாங்க போகலாம் என்று ராஜேஷ் கூறியதும் எதுவும் பேசாது கவனமா இரு என்று சைகையில் கூறி அவனுடன் சென்றார் மாரியப்பன்.

கிளம்பும் முன் மருத்துவரை அணுகி ஒரு முறை அவரிடம் காட்டிச் சென்றான் ராஜேஷ்.
பிரியாவிற்கு தெரியும் ஏதோ ஒன்றை அவர் மறைப்பது அதுவும் அவரை தாக்கியவன் யார்? எதற்காக தன்னை கொல்ல வந்தான் என்று யோசித்தவளுக்கு தெரியாத ஒரு விசயம். அவனுக்கு தேவையான விசயம் ஒன்று அவள் அறியாது அவளிடம் வந்தது.

மேலும் அகரனுக்கு அது சென்று விட கூடாது என்ற தற்காப்பிற்காக இதை செய்தான் என்று.
அவனை பற்றி தெரியாத அகரன் வேறு கோணத்தில் யோசித்தானே தவிர, நடந்த மர்ம கொலைகளின் கொலைகாரனை நினைக்க மறந்தது அவன் கவன குறைவோ? அதை நினைவில் கொள்ளும் போது நிலைமை கைமீறி சென்றிருக்கும் என்றும் நினைத்திருக்க மாட்டான்.

யோசனையில் இருந்தவளுக்கு அகரன் வந்தது தெரியாது போக, அவளது முடிச்சு விழுந்த புருவத்தை கண்டு, ஹோ மேடம் யோசனையில் இருக்காங்களா? என்னவா இருக்கும் என்று அவளருகே சென்றான்.
" முயலு போகலாமா ? " , என்றவனின் குரலில் நிகழ்வுக்கு வந்தவள் போகலாம், அப்பா அம்மா வரட்டும் என்றாள் பிரியா.

இல்ல டா மாமாக்கு போன் பண்ணி டிஸ்சார்ஜ் பண்ணி கூட்டிட்டு வரேன்னு சொல்லிட்டேன் என்றான் அகரன்.
சரி போய் நர்ஸை வர சொல்லு என்றாள் பிரியா.
எதுக்கு முயலு? என்றவனை வெட்டவா? குத்தவா? என்று பார்த்தாள்.

டேய் நீயெல்லாம் எப்படி டா ஏ.சி.பி ஆன? காலு உடஞ்சிருக்கு எப்படி நடப்பேன், நான் என்ன ஸ்பைடர் மேனா வெப் விட்டு பறக்க என்று சிடுசிடுத்தாள் பிரியா.

நான் தூக்கிட்டு போக கூட ரெடி தான் உனக்கு தான் பிடிக்காது, நான் தாங்கி பிடிச்சிக்கிறேன் வா என்றதும்.
சரி என்று வாக்குவாதம் செய்யாமல் வந்தவளை விசித்ரமாக பார்த்தான்.

ஏன் முயலு காலுல மட்டும் தான் அடியா தலையில் எதுவும் இல்லையில்ல? என்றான் அகரன். இல்லப்பா காலுல மட்டும் தான் என்றாள் பாவமாக.
நிஜமா நீ முயலு தான என்றான் கேள்வியாக. டேய் நானும் நல்ல பொண்ணா இருக்கலாம் என்று பார்க்கிறேன் என்று வேகமாக காலை ஊன்றி வலியாள் துடித்தாள் பிரியா.

பார்த்துடி என்று அவளை தூக்கி சென்றவனிடம், சும்மா லுலூலாயக்கு என்று அழகு காட்டி அவன் கழுத்தில் கையை மாலையாக போட்டவள் கண்ட அகரனுக்கு புதிதாகவே தெரிந்தாள்.கையில் மிதக்கும்
கனவா நீ
கைகால் முளைத்த
காற்றா நீ
கையில் ஏந்தியும்
கணக்கவில்லையே
நுரையால் செய்த
சிலையா நீதொடரும். . . . . .