வண்ணம் - (31)
வேகமாக அவர்கள் அருகில் வந்த மீனாட்சி, "என்னடா இப்படி தவிக்க விட்டுட்ட... நேத்துல இருந்து எங்கடா போன? கை கால்ல வேற அடிபட்டு இருக்கு..." என புலம்ப ,
ரித்விக், "அதான் திரும்ப வந்துட்டேன்ல்ல. அழுகாதீங்க" என அவளை சமாதானப்படுத்தினான்.
சுந்தரராஜன், "மீனாட்சி இப்பதான் இரண்டு பேரும் பெரிய ஆபத்திலிருந்து தப்பித்து வந்து இருக்காங்க. இங்கேயே நிக்க வச்சு பேச போறீயா? முதல்ல வீட்டுக்கு வாங்க" என்றார்.
வித்யா இந்துவை அணைத்துக் கொண்டு "சாரிக்கா, என்னால தான் உங்களுக்கு இந்த நிலைமை. என்ன மன்னிச்சிடுங்க" எனக் கூறி அழுக,
இந்து, "வித்யா, என்ன சின்ன பிள்ளை மாதிரி அழுதுட்டு இருக்க.... அதான் வெளிய வந்துட்டேன்ல" என்றிட,
ராஜேந்திரன், "ரொம்ப நன்றிம்மா. நீ மட்டும் இல்லைனா, இன்னைக்கு என் பொண்ணு எங்களுக்கில்லை" என்றார்.
இந்து, "ஐயோ! அப்பா எதுக்கு பெரிய வார்த்தை எல்லாம் பேசுறீங்க. வித்யாவும் எனக்கு தங்கச்சி தான். இந்த மாதிரி எல்லாம் பேசாதீங்க" என்றாள்.
சாரதா இந்துவை கட்டிக் கொண்டு அழ அவளது கண்ணீரை துடைத்து விட்டவள் "அழாதீங்கம்மா, அதான் எல்லாம் சரியாயிருச்சு இல்லை" என்றாள்.
அஸ்வின், "என்ன எல்லோரும் இங்கே நின்று அழ போறீங்களா? வாங்க வீட்டுக்கு போகலாம்" எனக் கூறி வண்டியை எடுத்து வர அனைவரும் காரில் ஏறி வீட்டுக்கு புறப்பட்டனர்.
வீட்டுக்கு சென்றவுடன் மீனாட்சி இந்து ரித்விக் இருவரையும் ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்துச் சென்றவர் குளித்து விட்டு வருமாறு ரூம்குள் அனுப்பினார்.
மீனாட்சியும் சாரதாவும் ரொம்ப நாட்களுக்குப்பின் மகிழ்ச்சியான மனநிலையில் இருந்ததால் தடபுடலாக சமையல் செய்து கொண்டிருந்தனர்.
ரித்விக் கையில் அடிபட்டு இருக்க தனது சட்டையை கழட்ட முடியாமல் திணறிக் கொண்டிருந்தான். அதைக் கண்டதும் இந்து அவன் அருகில் வந்து உதவி செய்ய அவளது கையை தட்டிவிட்டான்.
"எதுக்குடா தட்டிவிட்ட.... நான் தொடக்கூடாதா?" என்றிட, அவளை முறைத்தவன் எதுவுமே கூறாது பாத்ரூம்க்குள் நுழைந்தான்.
குளித்துமுடித்து வெளியே வர கட்டிலில் அமர்ந்து இருந்தாள். அவளை கண்டுகொள்ளாமல் வெளியே சென்று விட்டான்.
அவன் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தவள் எழுந்து குளியலறை புகுந்து குளித்து வெளியே வர மீனாட்சி "எல்லோரும் சாப்பிட வாங்க" என்று அழைத்தார்.
எல்லோரும் அமைதியாகவே சாப்பிட்டனர். நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு மன நிறைவுடன் இருந்தனர். சாப்பிட்டு முடித்து எல்லோரும் ஹாலில் அமர அஸ்வின், "ரித்விக் நீ எங்கடா போன. அப்புறம் எப்படிடா அந்த விஷ்வாவை பார்த்த, அதுவும் இல்லாம நீ சி.பி.ஐ னு ஏன் எங்க கிட்ட சொல்லலை."
சுந்தரராஜன், "எனக்கு தெரியும்டா முன்னாடியே. அதான் அன்னைக்கு நான் கொஞ்சம் தூங்கினேன். எப்படியும் வந்துடுவான்னு, ஏதாவது ஒரு கேஸ் விஷயமாக போயிருப்பான் என்று நினைச்சேன்."
மீனாட்சி, "அப்ப அப்பாவும் பையனும் சேர்ந்து தான் மறைச்சு இருக்கீங்க."
ரித்விக், "அம்மா இது ரொம்ப சீக்ரெட் ஆப்பரேஷன். அதுவும் இல்லாம நான் வேலைக்கு சேர்ந்த உடனே ஸ்டார்ட் பண்ணிட்டாங்க. அதனால யார்கிட்டயும் சொல்லக் கூடாதுன்னு ரூல்ஸ் போட்டு சைன் வாங்கிட்டாங்க. அதுகப்புறம் தான் ஜாப் ஜாயின் பண்ணனேன். அதனால அப்பா பிசினஸை சைடுல பார்த்துக்கிட்டேன்."
மீனாட்சி, "என்னமோ போடா."
அஸ்வின், "நான் கேட்டதுக்கு பதில் சொல்லுடா."
ரித்விக், "அன்னைக்கு அந்த மினிஸ்டரை தான் பார்க்கப் போனேன். அவன் போதை பொருளாக கைமாத்துறதா தகவல் வந்துச்சு. அதை மறைஞ்சு இருந்து வீடியோ எடுக்க தான் அவசரமாக போனேன்.
அப்ப தான் நான் அவன்கிட்ட மாட்டிகிட்டேன். மினிஸ்டரும் அவன் கூட ஒரு தடியனும் இருந்தான். பொருள் வேற கையில் வைத்திருந்ததால் போன் பண்ணி அவனோட அடியாளை வரச் சொன்னான்.
அப்புறம் என்னை அடிச்சுக் கட்டிப் போட்டுட்டு அந்த தடியன் போய்ட்டான். மினிஸ்டர் என் கூடவே இருந்தான். அப்ப தான் விஷ்வா வந்து என் கண் முன்னாடியே மினிஸ்டரை கொலை பண்ணான்.
அவன் தான் என்னை காப்பாற்றினான். எனக்கு ரொம்ப அடிபட்டதால் அவன் வீட்டுக்கு கூட்டிட்டு போயி ட்ரீட்மெண்ட் கொடுத்தான். நான் கண் முழிச்சதும் என்கிட்ட உண்மைய சொன்னா. அப்புறம் தான் நாங்கள் கோர்ட்டுக்து வந்தோம்" என்றான்.
அவர் கூறுவதைக் கேட்டு மீனாட்சி, "நல்ல வேளை தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சுன்னு நினைச்சுக்கோங்க. அந்த கடவுள் தான் இந்த பிரச்சனை இருந்து காப்பாற்றினார். சரி ரொம்ப நாளாச்சு இந்த மாதிரி சந்தோஷமா இருந்து, டைம் ஆயிடுச்சு எல்லாரும் போய் தூங்குங்க" என்றார்.
ரித்விக் ரூம்குள் அமர்ந்து ஃபோனை நோண்டிக்கொண்டு இருக்க உள்ளே வந்த இந்து அவன் முன் வந்து நிற்க அவளை நிமிர்ந்து பார்த்தவன் கண்டுகொள்ளாது மீண்டும் போனில் கவனமானான். அவள் தன் தொண்டையை செருமி அவன் கண்டு கொள்ளவே இல்லை திமிருபுடிச்சவன் என மனதிற்குள் திட்டியவள், "ரித்விக்..." என அழைக்க, நிமிர்ந்து பார்த்தவன், "என்ன விவாகரத்து வேணுமா?" என்றான்.
அவள் முறைக்க, "என்ன? பதில் சொல்லு... ஓகேன்னா சொல்லு... நாளைக்கே லாயரைப் பார்த்துடலாம்..."
இந்து, "ஏன்? என்ன கழட்டி விட்டுட்டு அந்த ப்ரீத்தியை கல்யாணம் பண்ண போறீயா?"
ரித்விக், "இது கூட நல்ல ஐடியாவா இருக்கே.... நாளைக்கே ப்ரீத்தி கிட்ட பேசுறேன்" என்றிட, அவள் வேகமாக அவனது தலை முடியைப் பிடித்து ஆட்டினாள்.
ரித்விக், "ஏய் ராட்சசி, வலிக்குது டி.. விடுடி..." என்றிட,
"நீ என்ன விட்டுட்டு அவளை கல்யாணம் பண்ணுவியா?"
"நான் எங்கடி சொன்னேன்? நீ தான் டிவோர்ஸ் வேணும்னு கேட்ட... இப்ப கூட ப்ரீத்தியை கல்யாணம் பண்ற ஐடியா கூட நீதானடி கொடுத்த..." என்றான்.
இந்து, "சாரி ரித்விக்.." என்றிட,
ரித்விக், " நான் உன் மேல கோவமா இருக்கேன். உன் கூட பேச மாட்டேன்" எனக்கூறி தனது முகத்தைத் திருப்பிக் கொண்டான்.
அவனது முகத்தை திருப்பி அவள் மீண்டும் சாரி கூறி கெஞ்ச, "ஏன் இந்து உனக்கு என் மேல நம்பிக்கை இல்லையா? உனக்கு பிரச்சனை வந்தா விட்டுட்டு போய்டுவேன்னு நினைச்சியா? நான் என்ன அவ்வளவு கேவலமானவனா?" எனக் கேட்டான் குரலில் வருத்தத்துடன்.
இந்து, "சாரி ரித்விக்... நான் அப்படி நினைக்கல. உன் வாழ்க்கையாவது நல்லா இருக்கணும் என்று தான் அந்த முடிவை எடுத்தேன். ஒவ்வொரு தடவையும் உன்கிட்ட பேசிட்டு உன்னை விட நான் தான் அதிகமா அழுதேன்" என கூறி அழுக, அவளைத் இழுத்து தன் மார்பின் மீது சாய்த்தவன், "ப்ளீஸ்டி, இதுவரைக்கும் அழுதது எல்லாம் போதும். இனிமே நீ எந்த காரணத்தைக் கொண்டும் அழவே கூடாது... ஆமா எனக்கு ஒரு சந்தேகம். நீ ஒரு டாக்டர் நல்லா படிச்சி இருக்க... அப்புறம் ஏன் இந்த பிரச்சனையை பார்த்து இப்படி பயந்த? உன்னோட கேரக்டர் அது இல்லையே... நீ எவ்வளவு தைரியமான பொண்ணு எவ்வளவு பேருக்கு உதவி பண்ணி இருக்க...."
"அது அப்படி இல்ல ரித்விக், நமக்கு ஒரு பிரச்சனை வரும்போது நமக்கு மத்த எதுவுமே தோணாது. பயம் பதட்டம் மட்டும்தான் இருக்கும். இதுவே இந்த பிரச்சனை என்னை சார்ந்தவங்களுக்கோ இல்லை தெரிஞ்சவங்களுக்கோ வந்திருந்தா நான் நிறைய அட்வைஸ் பண்ணி இருப்பேன். உதவி பண்ணி இருப்பேன். ஆனால் எனக்குன்னு நினைக்கும்போது கொஞ்சம் தடுமாறிட்டேன். அவ்வளவுதான்...."
ரித்விக், "ஆனா இந்து, நீ சரியான கேடி 9th படிக்கும்போது இருந்தே என்ன லவ் பண்ணி இருக்க.." என்றான்.
"யாரு இந்த மூஞ்சிய வா? இல்லையே..." என்றாள்.
ரித்விக் அவள் முன்னால் அவ்வளவு டைரியை எடுத்து போட்டான். கண்ணை மூடி நாக்கை கடித்தவள், "ஆமா! உனக்கு இது எப்படி கிடைச்சது?
"அது எல்லாம் உனக்கு எதுக்கு? நான் கேட்டதுக்கு பதில் சொல்லு எதுக்குடி... என்கிட்ட மறைச்ச.."
"ஏன்டா, நீ மட்டும் சிபிஐனு என்கிட்ட மறைச்ச..."
"ஏய்! நான் அது மறைக்கனும்னு நினைக்கலை. அது ரூல்ஸ்டி... ஆமா நீ என்ன லவ் பண்ணிட்டு வேற பையனை எப்படி கல்யாணம் பண்ண ஒத்துக்கிட்ட..."
"அப்பாவுக்காக தான்டா ஒத்துக்கிட்டேன். அதான் கடவுள்தான் உன்னயவே எனக்கு மாப்பிள்ளையா கொண்டு வந்துட்டாரு...."
ரித்விக், "கடவுள் எங்கடி கொண்டு வந்தாரு.... நான்தான் உன்னை தேடி வந்து உங்க அப்பா கிட்ட பேசினேன்."
ஆச்சரியத்தில் விழி விரித்தவள், "உண்மையாவா? அப்ப நீயும் என்ன லவ் பண்ணியா?"
"அதுவே உன் மரமண்டைக்கு இப்பதான் புரிஞ்சுதா?"
"சொன்னாதானடா தெரியும்..."
"நா மட்டும் நீ சொல்லாமலே புரிஞ்சுகிட்டேன்... சரி எனக்கு ஒரு சத்தியம் பண்ணு"
"என்னடா இது புதுசா சத்தியம்லாம் கேட்கிற..."
"பண்ணு சொல்றேன். செய்வியா? மாட்டியா?" என்று கேட்க, தன் கையை எடுத்து அவன் கை மீது வைத்தவள், "இனிமே நீ எதையுமே என்கிட்ட மறைக்க கூடாது.... என் மேல சத்தியம் பண்ணு" என்றிட,
"இனிமே உனக்கு தெரியாம என் வாழ்க்கையில எதுவுமே இருக்காது..." என்றவள், "அப்புறம் ரித்விக் என ஏதோ கூற வர ரித்விக் போதும்டி தூக்கம் வருது மீதிய நாளைக்கு பேசிக்கலாம் எனக்கூறி படுத்தான் அவனது மார்பின் மீது தலை வைத்து படுத்தவள், "ரித்விக்... ரித்விக்.." என அழைத்தாள்.
"என்னடி வேணும்?"
"எனக்கு தூக்கமே வரல..."
"அதுக்கு நான் என்னடி பண்றது?"
"எனக்கு தூக்கம் வரலைன்னா நீயும் தூங்க கூடாது... நான் பேசுறதை கேட்கணும்... என்க அவளை முறைத்தான்.
இந்து, "நமக்கு கல்யாணம் ஆனதுல இருந்து இன்னைக்கு தான் நான் ரொம்ப நிம்மதியா இருக்கேன்..."
'இவ இப்படி பேசவிட்ட பேசிக்கிட்டே இருப்பா...' என நினைத்தவன், அவள் இதழை தன் வசமாக்கினான்..
வண்ணங்கள் மிளிரும்.....