கடமையான காவலன் - கதை திரி

sudharavi

Administrator
Staff member
#1
அத்தியாயம்-1

காலை சூரியன் தன் பணியை துவங்க ஆரம்பிக்கும் அந்த அதி காலை வேலையில்,பெரும் பணக்காரர்கள் வசிக்கும் அந்த தெருவில் உள்ள பிரமாண்டமான பெரிய வீட்டில் அனைவரும் பரபரப்புடன் வேலை செய்து கொண்டு இருந்தனர்.

காலையிலேயே தன் வெங்கல குரலால் அனைவரையும் அதட்டி உருட்டி வேலை வாங்கி கொண்டு இருந்தார் இராஜாத்தி அம்மாள்.வயதானாலும் காலையில் எப்போதும் போல் குளித்துவிட்டு தான் அறையைவிட்டே வெளியில் வருவார் அவர்,அடுத்து அவர் செல்லும் இடம் பூஜை அறை.பூஜையை முடித்துவிட்டுதான் அந்த நாளை துவங்குவார்.

வெண்மை நிறத்தில் மெல்லிய சரிகை வைத்து,நெற்றி நிறைய திருநீரை அள்ளி பூசி கொண்டு,முகம் முழுவதும் சுருக்கங்களுடன் இருந்தாலும் அவரை பார்த்தால் யாரும் அவருக்கு அறுவது வயது என்று சொல்லமாட்டார்கள் ஐம்பது என்றுதான் சொல்வார்கள் அந்த அளவுக்கு அவரின் தோற்றம் இருக்கும்.

சும்மாவே வரிஞ்சிகட்டி கொண்டு வேலை செய்யும் இராஜாத்தி பாட்டி இன்று அதிக சுறுசுறுப்பாக இருப்பது போல் தோன்றியது அனைவருக்கும்.காரணம் இன்று,தன் செல்ல பேத்திக்கு பிறந்த நாள் சாதாரணமாக விட்டுவிடுவாரா என்ன.அதனாலேயே சமையலுக்கு தனக்கு உதவ வரும் பெண்ணிடம் பேத்திக்கு பிடித்த அனைத்து உணவுகளையும் செய்ய சொல்லி கொண்டு இருந்தார்.

அந்த வீட்டில் கீழ் தளத்தில் பாட்டி அனைவரையும் வேலை வாங்கி பரபரப்புபடுத்த,அந்த பரபரப்புக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல் மேல் தளத்தில் தன் அறையில் இழுத்து போர்த்தி தூங்கி கொண்டு இருந்தாள் நம் நாயகி மித்ரவருணா.

மித்ர வருணா இவளைபற்றி சொல்ல வேண்டும் என்றால் மாநிறம்தான் ஆனால் கலையான முகம் பார்பவரை மற்றொரு முறை திரும்பி பார்க்க வைக்கும் அழகு.குத்து விளக்கின் ஒழி போல் அதிக ஆடம்பரம் இல்லாத அமைதியான அதே சமயம் வசீகரிக்கும் தோற்றம் உடையவள் படிப்பு கலை அவள் முகத்தில் அப்படியே தெரியும்.ஆம் நம்ம மித்து மேடம் டாக்டர்.

மித்ரா பத்து வயது இருக்கும் போதே தாயை இழந்தாள். அன்றிலிருந்து பாட்டியின் அன்பில் வளர்பவள். தந்தை இருந்தும் இல்லை என்பது போல்தான்.அவருக்கு அவருடைய பிஸ்னஸ்தான் முக்கியம்.பணம் பணம் என்று அதன்பின் ஓடும் ரகம்.சுருக்கமாக சொல்ல் வேண்டுமானால் நம் நாயகியின் தோட்டத்தில் இரண்டே அழகிய ரோஜா.ஒன்று அவள் மற்றொன்று பாட்டி.அவள் உயிராக நினைப்பதும் பாட்டியையே.
 

sudharavi

Administrator
Staff member
#2
பாட்டிக்கு உடம்பு முடியாமல் போகும் சமயம் தானே அவரை பார்த்து கொள்ள வேண்டும் என்பதாலேயே அவள் மருத்துவம் பயின்றாள்.ரொம்ப பொறுமை அதே போல் அதிக பிவாதமும் இருக்கும்.இதுதான் நம் நாயகி.
பாட்டி அனைவரையும் துரிதமாக வேலையை முடிக்க சொல்லிவிட்டு தன் பேத்தியை எழுப்ப சென்றார்.
பேத்தியின் அறையை திறந்து உள்ளே சென்று மித்துமா.... மித்துமா... எழுந்துக்கோடா என்று எழுப்ப,பாட்டியின் சத்தத்தில் புரண்டு படுத்தவள் மெதுவாக கண்களை கசக்கி கொண்டு ஒற்றை கண்ணை திறந்து பார்த்தாள்.பாட்டியை பார்த்து மென்மையாக சிரித்து குட் மார்னிங் பாட்டி என்றாள்.
குட் மார்னிங் மித்துமா.இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்டா என்று மென்மையாக அவள் தலையை வருடி கொடுத்து நெற்றியில் முத்தம் கொடுத்து,போ மா போய் சீக்கிரம் குளிச்சிட்டு வா.கோவிலுக்கு போய்விட்டு வரலாம் என்றார்.
இதோ ஒரு நிமிஷம் பாட்டி என்றவள் வேகமாக குளியலறையை நோக்கி ஓடினாள்.பேத்தி போவதை பார்த்தவர்.எப்போதும் அமைதிதான் என்று தனக்குள் சிரித்து கொண்டு அவளது போர்வையை எடுத்து வைக்க ஆரம்பித்தார்.
குளித்துவிட்டு வந்தவள் பாட்டியை தேட கீழே சென்றிருந்தார். வேகமாக இவளும் தயாராகி கொண்டு இருக்கும் போதே அவள் போன் மென்மையாக இசைத்து அவளை அழைத்தது.அதை அட்டென் செய்து பேசியவள் வேகமாக கீழே சென்றாள்.பாட்டி சமையல் அறையில் பேசும் சத்தம் கேட்டது.
பாட்டி கோபப்படாதீங்க.டெலிவரிக்கு ஒரு பொண்ண அழைச்சுட்டு வந்துருக்காங்கலாம் நான் போகணும்.ஈவ்னிங் சீக்கிரம் வறேன் அப்போ கோவிலுக்கு போகலாம் என்றவள் பாட்டியை இழுத்து சென்று சாமியறையில் நிற்க வைத்து திருநீரை பூசி விட சொல்லி அவர் காலில் விழுந்து எழுந்தாள்.
வேக வேகமாக இரண்டு இட்லியை பிய்த்து வாயில் போட்டு கொண்டு இருந்த பேத்தியை பார்த்தவர்.மெதுவா சாப்பிடு மித்து உனக்கு பிடிக்குமேனு கேசரி,குலாப்ஜாமூன் எல்லாம் செய்ய சொல்லி இருக்கேன்.அது எல்லாம் அப்புடியே இருக்கு என்று சொல்லி கொண்டே அவளது தட்டில் எடுத்து வைத்தார்.
போதும் பாட்டி நான் வந்து சாப்பிட்டு கொள்கிறேன் என்றவளை பார்த்து முறைத்தவர்.என்ன நினைச்சுட்டு இருக்க மித்துமா.யாருக்காக இப்புடி ஓடி ஓடி சம்பாதிக்கணும்னு நினைக்கற.நமக்கு இருக்கறதே போதும்.இதுல உன்னோட அப்பன் வேற காசு காசுனு அது பின்னாடியே ஓடறான் நீயும் இப்புடி வயித்துக்கு கூட சாப்பிடாம ஓடற என்னத்தான் நினைச்சுட்டு இருக்க.நான் அப்பவே சொன்னேன் வேலைக்கு எல்லாம் வேண்டாம்னு படிச்சுட்டு சும்மா இருக்கறதானு கேட்டதால சரினு சொன்னேன்.இப்ப இதெல்லாம் யாரு சாப்பிடுவா என்று கோபத்தில் ஆரம்பித்து ஆற்றாமையில் முடித்தார்.
 

sudharavi

Administrator
Staff member
#3
பாட்டி அங்க ஒரு பொண்ணு பிரசவ வலில துடிச்சுட்டு இருக்கா நீங்க என்ன பொறுமையா சாப்பிட சொல்றீங்க.நாளைக்கு நான் அப்படி துடிக்கும் போது டாக்டர் வரலனா நீங்க அந்த ஹாஸ்பிட்டலையே ரெண்டாக்கிறமாட்டிங்க அது மாதிரிதான். பேசாம போய் இதெல்லாம் பேக்பண்ணி குடுங்க நான் முடிஞ்ச வரைக்கும் சாப்பிட்டு அங்க இருக்க குழந்தைகளுக்கு குடுக்கறேன் என்றவள் கிளம்ப ஆயத்தமானாள்.

பேத்தி சொன்ன வார்த்தையை கற்பனையில் நினைத்து பார்த்து கொண்டே நின்றுவிட்டார் இராஜாத்தி பாட்டி.மித்ரா கிளம்பி பாட்டியிடம் சொல்லி கொள்ள வர,அவர் அப்படியே நின்று கொண்டு இருக்கவும் அவரை பிடித்து உளுக்கி கண்ணத்தில் முத்தமிட்டு பாய் பாட்டி தாத்துகூட இப்ப போய் டூயட் பாடுங்க என்று சொல்லிவிட்டு,வேலைக்கார அம்மா கொடுத்த டிபனை மறக்காமல் எடுத்து கொண்டு சென்றுவிட்டாள்.

பேத்தி உளுக்கியதும் தன்னிலை வந்த பாட்டி.ஹீம்..என்று பெரு மூச்சை விட்டார்.நீ சொல்ற மாதிரி எப்ப நடக்கும் மித்துமா. உன் அப்பனுக்கு பொண்ணு இருக்கானு அடிக்கடி போன்செய்து, நியாபகபடுத்தினாதான் வீட்டுக்கே வருவான். என் காலம் முடியறத்துக்குள்ள உன்ன ஒரு நல்லவன் கைல புடிச்சு கொடுக்கணும் அப்பதான் எனக்கு நிம்மதி என்று நினைத்து கொண்டார்.

மகனின் செயலை நினைத்தால் கசந்தது அவருக்கு.அழகான வாழ்க்கை,அழகான குடும்பம் இதையெல்லாம் விட்டுவிட்டு பணம்,பணம் என்று செல்லும் மகனின் குணம் பிடிக்காமல் சொல்லி பார்த்தும் கேட்கால் இருப்பவனை என்ன செய்வது, இன்று மகளுக்கு பிறந்த நாள் என்றாவது அவனுக்கு தெரியுமா என்று யோசித்தவர்.பேத்தி இன்று எப்படியும் தந்தையின் அழைப்பை எதிர்பார்ப்பாள் இவனுக்கு நினைவுபடுத்தினாள் ஒழிய அவன் பேத்திக்கு வாழ்த்து கூறமாட்டான் என்பதை உணர்ந்து மகனுக்கு அழைக்க அது தொடர்பு கொள்ள முடியவில்லை என்ற பதிலை தந்தது.

ஒரு ஆத்திர,அவசரத்துக்குக்கூட அவனிடம் அழைத்து பேச முடியவில்லை,என்ன பணம் இருந்து என்ன பலன் என்று அவரால் வருந்த மட்டுமே முடிந்தது.

அப்போது மணி பத்து என்று கடிகாரம் பத்து முறை ஒலி எழுப்பியது.பேத்தியின் பெயரில் பூஜைக்கு சொன்னது நினைவில் வர நாமாவது சென்று வருவோம் என்ற முடிவுக்கு வந்த பாட்டி தனியாக கிளம்பினார்.

கோவிலில் வந்து இறங்கிய பாட்டியை இரண்டு ஜோடி கண்கள் கவனித்து கொண்டு இருந்தது.

டேய் படுபாவி இந்த பாட்டியை பார்க்கவா என்ன இவ்ளோ அவசரமா எழுப்பி கூட்டி வந்த.நான் கூட நல்ல பொண்ணா பாத்து செட்பண்ணிட்டியோனு நினைச்சேன்.

ஏன்டா உன் டேஸ்ட் இவ்ளோ கேவலமா இருக்கு என்று புலம்பியவனை பார்த்து முறைத்து கொண்டு இருந்தான் நம் நாயகன் ஆயுஷ் அபிமன்யு.ReplyForward
 

sudharavi

Administrator
Staff member
#4
டேய் வாய மூடு என்ன பேசற.அவங்க யாரு தெரியுமா, தேவையில்லாம பேசி என்னை கடுப்பேத்தாத. பேசாம என் கூட வா என்று தன் நண்பன் நரேஷிடம் வார்த்தைகளை கடித்து துப்பி கொண்டே ராஜாத்தி பாட்டியை தொடர்ந்து கோவிலுக்குள் சென்றான்.

நண்பனின் முறைப்பை பார்த்த நரேஷோ இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல.எப்ப பாரு இந்த அப்பாவி புள்ளைய முறைக்கறதே வேலையா வச்சிக்கிட்டு திறியறது என்று புலம்பினாளும் நண்பனின் பின்னால் சென்றான்.

ராஜாத்தி பாட்டி மனமுருக கடவுளை வேண்டியவர்,தன் காலம் முடிவதற்குள் தன் பேத்திக்கு நல்ல வாழ்க்கையை அமைத்து கொடு கடவுளே என்று வேண்டி கொள்ள கோவில் மணி அடித்து அவரின் தியான நிலையை கலைத்தது.

கண் திறந்து பார்த்தவரின் எதிரில் கம்பீரமாக நின்றிருந்தான் ஆயுஷ் அபிமன்யு. ஆறடி உயரத்தில்,உயரத்திற்கேற்றார் போல் உடலுடன் மாநிறத்தில் நின்றிருந்தவனை கண்டவருக்கு கண்கள் பணித்தது.இவன் போல் ஒருவன் தன் பேத்திக்கு கிடைத்தாள் கைக்குள் வைத்து பார்த்து கொள்வான் என்று அவரையும் அறியாமல் அவர் மனதில் ஒரு எண்ணம் வந்து போனது.

அதே நேரம் சரியாக விபூதி கொடுக்க வந்த ஐயர்,நீங்க நினைத்தது ,ஷேமமா நடக்கும் பிரசாதம் வாங்கிக்கோங்கோ என்று சொல்ல,பாட்டிக்கு மனம் நிறைந்து போனது.

தனக்கு எதிரில் நின்றவனை ஒரு நொடி பார்த்தவர் சிறு சிரிப்புடன் பிரசாதம் வாங்கி கொண்டு நகர்ந்தார்.

ஆயுஷீம்,நரேஷும் பாட்டியை தொடர்ந்து வந்தனர்.வெயில் நேரத்தில் பிரகாரத்தை சுற்றிய பாட்டிக்கு தலை சுற்ற தள்ளாட ஆரம்பித்தார்.இராஜாத்தி பாட்டியிடம் பேசி எவ்வாறு நெருங்குவது என்று ஆயுஷ் யோசித்து கொண்டு வர அதற்கு ஏற்றார் போல் பாட்டி மயங்கி விழ ஆரம்பித்தார்.அவரை ஓடி சென்று தாங்கினான்.

பாட்டி,பாட்டி என்று அவர் கண்ணத்தை தட்ட அதற்குள் நரேஷ் வேகமாக சென்று அருகிலிருக்கும் குழாயில் நீர் எடுத்து வந்திருந்தான்.பாட்டியின் முகத்தில் நீர் தெளித்து மயக்கத்தில் இருந்து தெளிய வைத்த ஆயுஷ் அவரிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தான்.

என்ன பாட்டி வெயில் நேரத்தில் தனியாகவா வருவது. துணைக்கு யாரையாவது அழைத்து வரலாம் இல்லையா என்று கடிந்து கொண்டான் உண்மையான அக்கறையில்.இப்போது பரவாயில்லையா,உங்கள் வீடு எங்கிருக்கிறது என்று சொல்லுங்கள் நான் அழைத்து செல்கிறேன் என்றான்.

மயக்கத்தில் இருந்து தெளிந்த இராஜாத்தி பாட்டி எனக்கு ஒண்ணும் இல்லப்பா,வெயில் சேரல,பிரஷர் டேப்லட் வேற போட மறந்துட்டேன் அதான் லேசா தலை சுத்த ஆரம்பிச்சுருச்சு. இப்ப பரவாலப்பா நான் கார்லதான் வந்தேன்.டிரைவர் வெளியில் நிப்பாரு நான் பார்த்து கொள்கிறேன். ரொம்ப நன்றிப்பா என்று கூறினார்.

இராஜாத்தி பாட்டி நன்றாக இருப்பதாக கூறினாளும் அவர் முகத்தில் இருந்த கவலை ரேகையை பார்த்த ஆயுஷ்.பாட்டி உங்க முகமே சரியில்லை.தேவையில்லாம கண்டத யோசிச்சு வயசான காலத்துல கஷ்டத்த இழுத்துக்காதீங்க.அதான் இங்க வந்து உங்க குறைய அந்த சிவ பெருமான்கிட்ட சொல்லிட்டீங்கல்ல அவரு எப்பாடுபட்டாவது அத சரி பண்ணிடுவாரு கவலைபடாதீங்க.

எங்க பாட்டி சொல்வாங்க சிவன் உண்மையான பக்தியோட யாரு என்ன கேட்டாலும் குடுத்துடுவாராம்.அப்பறம்தான் இந்த வரம் குடுக்காம இருந்திருக்கலாமோனே யோசிப்பாராம்.சோ ப்ரி....யா இருங்க என்று கூறி மென்மையாக சிரித்தான்.

ஆயுஷின் சிரிப்பும் பேச்சும் அந்த சிவ பெருமானே வந்து பேசியது போல் இருக்க ராஜாத்தி பாட்டிக்கு கோவிலுக்கு வரும் போது இருந்த கவலை இல்லாமல் போனது.சரி தம்பி என்றவர் ஒரு நாள் கண்டிப்பா எங்க வீட்டுக்கு வாப்பா என்று சொல்லி தன்னுடைய முகவரி அட்டையை அவனிடம் கொடுத்துவிட்டு கிளம்பினார்.

இராஜாத்தி பாட்டி கிளம்பும் வரை வாயை திறந்து தன் நண்பனை பார்த்து கொண்டு இருந்தான் நரேஷ்.

நண்பன் தன்னையே பார்ப்பதை உணர்ந்தவன்.என்னடா எதுக்கு இப்புடி பாக்குற.

டேய் நண்பா உண்மைய சொல்லு இந்த பாட்டியோட பேத்திக்கு ஏதும் ரூட் விடுறியா இந்த பின்னு பின்னுற பர்பாமன்ஷ்ல.சிடு சிடுனு எப்ப பார்த்தாலும் கஞ்சிய குடிச்சவனாட்டம் வெராப்ப சுத்துறவனாடா நீ.அந்த பாட்டிக்கிட்ட அப்புடி பேசுற என்ற நண்பனை பார்த்து முறைத்த ஆயுஷ்.

டேய் என்ன பேசுற வயசானவங்க கீழ விழ போனாங்க ஹெல்ப் பண்ணுனோம்.அவங்கள பார்க்க ஏதோ கவலைல இருக்க மாதிரி இருந்துச்சு அதான் அவங்க திருப்திக்கு அப்புடி சொன்னேன்.நீ கண்டத யோசிக்காம வா போலாம் வந்த வேலை முடிஞ்சுது.

ஏதோ நீயும் சொல்ற நானும் கேட்குறேன்.எதுக்கு கூட்டி வந்த என்ன வேலை முடிஞ்சுது ஒண்ணும் புரியல என்று புலம்பியவனை பிடித்து இழுத்து சென்றான்.

வீட்டிற்கு வந்த ராஜாத்தி பாட்டி மீண்டும் மகனுக்கு அழைப்பு எடுக்க முதலில் சொன்ன பதிலையேதான் சொன்னது.அடுத்து மகனின் பி,ஏவை அழைத்தார்.போன் ரிங் செல்ல இரண்டாவது ரிங்கில் அழைப்பை ஏற்றார் சபரி.

ஹலோ சொல்லுங்க மேடம் என்ற பணிவான குரலுக்கு பதில் சொல்லாமல் பட படவென பொறிய ஆரம்பித்தார் பாட்டி.

ஏன்டா என்னடா பிஸ்னஸ் பண்ணுறீங்க ஊரு உலகத்துல வேற யாரும் பிஸ்னஸ் பண்றது இல்லையா.உங்க முதலாளி மட்டும்தான் பிஸ்னஸ்பண்றானா.இன்னைக்கு அவன் பொண்ணுக்கு பிறந்த நாள் அத கூட அவனாள நியாபகம் வச்சிக்க முடியல,இருக்கற ஒரு பொண்ணுக்கிட்ட பேச முடியல.யாருக்காக இப்புடி ஓடி ஓடி உழைக்கறான்.உன்ன சொல்லி என்ன பிரயோஜனம் ஒரு போன்பண்ணி அம்மா,மகள்னு பேச முடியல பணத்தையே அவன கட்டிக்கிட்டு அழ சொல்லு என்று மகனிடம் பேச முடியவில்லை என்ற கோபத்தையும் அவரிடம் காண்பித்துவிட்டு போனை வைத்தார்.

போனை வைத்த இராஜாத்தி அம்மாளுக்கு மனது பராமாகவே இருந்தது.இன்று கோவிலில் நடந்தது போல் தனக்கு எதுவும் ஆனால் தன் பேத்தி தனி மரம் ஆகிவிடுவாள் அவளை பாதுகாப்பான ஒருவனிடம் சேர்க்க வேண்டும் என்று முடிவெடுத்தவர் உடனடியாக தனக்கு தெரிந்த கல்யாண புரோக்கரை வரவழைத்து விசாரிக்க ஆரம்பித்தார்.

மாலை வீட்டிற்கு வந்த பேத்தியின் முகத்தில் இருக்கும் சிரிப்பை பார்த்தவர் பேத்தியை கேள்வியாக பார்க்க பாட்டி இன்று அப்பா பேசினார்.பிறந்த நாள் வாழ்த்து சொன்னார்.அப்புறம் என்னுடைய பிறந்த நாள் அன்று பிறந்த அந்த குழந்தைக்கு ஒரு செயின் பரிசாக கொடுக்க சொல்லி அனுப்பினார்.என்று சிரிப்புடன் சொல்லி கொண்டு இருந்த பேத்தியை பார்த்தவருக்கு பாவமாக இருந்தது.
 

Anuya

Well-known member
#5
அத்தியாயம்-2

தந்தையுடன் பேசியதையே பெரிய விஷயமாக நினைக்கும் பேத்தியை பார்த்தவர்க்கு கண்ணில் நீர் சுரந்தது.தந்தையே நண்பனாக இருக்கும் இந்த காலத்தில் தன் மகன் அவன் மகளுக்கு நியாயம் செய்யவில்லை என்பதை உணர்ந்ததால் வந்த கண்ணீர் அது.

பேத்தி பேசுவதை எல்லாம் பொறுமையாக கேட்ட பாட்டி. மித்துமா பாட்டி என்ன சொன்னாலும் கேட்பியா என்று கேட்க கண்டிப்பா கேட்பேன் பாட்டி என்றாள்.அவளது அந்த பதிலே அவள் வாழ்க்கையை போராட்டமாக மாற்ற போவதை அறியாமல்.

சரி மித்துமா நான் கேட்கற கேள்விக்கு உண்மைய மட்டும்தான் சொல்லணும் சரியா.நீ யாரையாவது விரும்புகிறாயா அப்படி இருந்தாள் சொல். பாட்டி அவனையே உனக்கு மணமுடிக்கிறேன் என்ற பாட்டியை பார்த்த பேத்தி அதிர்ந்து போனாள்.

பாட்டி என்னாச்சு உங்களுக்கு ஏன் திடீர்னு மேரேஜ் அது இதுனு பேசுறீங்க.என்னோட மேரேஜ்க்கு இப்ப என்ன அவசரம் அதையும் தவிர்த்து என் மனதில் யாரும் இல்லை நீங்கள் யாரை மணக்க சொல்கிறீர்களோ அவரை மணக்கிறேன்.ஆனால் இப்போது அல்ல இன்னும் இரண்டு வருடம் போகட்டும் என்று கூறினாள்.

பேத்தியின் பேச்சை கேட்டு கொண்டிருந்த பாட்டிய இல்ல மித்து மா உன்னோட மேரேஜ்ஜ கண் குளிர பார்த்துட்டனா என்னோட கட்டை நிம்மதியா போய் சேரும். முன்ன மாதிரி என் உடம்பு இல்லம்மா.சொன்னா புரிஞ்சுக்கோ.

பாட்டி என்னாச்சு உங்க உடம்புக்கு.வாங்க உடனே ஹாஸ்பிட்டல் போலாம் உங்கள நானே புல்லா செக்அப்பண்றேன் என்ற பேத்தியை,சும்மா இரு மித்துமா. வயசானா இதெல்லாம் சாதாரணம்தான் இதுக்கு போய் பயப்படுவாங்களா எனக்கு உன்னோட கல்யாணத்தை பார்க்கணும் போல இருக்கு ஓகே வா.நான் மாப்பிள்ளை பார்ப்பதற்கான வேலையை ஆரம்பித்துவிட்டேன்.நீ திருமணத்துக்கு தயார் ஆகு என்று கூறிவிட்டு எழுந்து சென்று விட்டார்.

சரி எப்படி இருந்தாலும் ஒரு நாள் திருமணம் செய்யத்தான் போறோம் அது பாட்டி விருப்பப்படி நடக்கட்டும் என்று நினைத்தவளின் மனதில் தன் கணவன் தன்னிடம் அம்மாவாகவும்,அப்பாவாகவும் பாசம் காட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மட்டும் நிறைந்து இருந்தது.

ராஜாத்தி பாட்டி பேத்திக்கு வரன் பார்க்கும் விஷயத்தை எப்போதும் போல் மகனின் பிஏ காதில் போட்டு மகனுடன் பேச முடியாத ஆற்றாமையை கோபமாக காட்டிவிட்டு வைத்துவிட்டார்.இதற்கிடையில் அவர் செல்லும் இடங்களில் எல்லாம் ஆயுஷ் சென்று அவரிடம் நல்ல பெயர் பெற்று அவரிடம் நெருங்கிவிட்டான்.பாட்டியுடன் நெருங்கினாலும் அவர் எவ்வளவு வ்ற்புறுத்தி அழைத்தும் அவர் வீட்டிற்க்கு செல்ல மறுத்துவிடுவான்.

வயது பெண் இருக்கும் வீட்டிற்கு தான் தனித்து வந்தாள் நன்றாக இருக்காது என்று சொல்லியே அவன் போக மறுத்துவிடுவான். அவன் போகாமல் இருக்க காரணம் வேறாக இருந்தாலும் இதுவே பாட்டியின் மனதில் அவனுக்கு நல்ல எண்ணத்தை அதிகபடுத்தியது.

முத்து சாமி தனது பிஏ மூலம் தாய் தன் மகளுக்கு வரன் பார்ப்பது அறிந்து அவருக்கு அழைத்தார்.அந்த பக்கம் ராஜாத்தி பாஜ்ஜி போன் எடுத்த உடன் பொறிய ஆரம்பித்துவிட்டார்.

அம்மா...என்ன நினைச்சுட்டு இருக்கீங்க.யார கேட்டு என் பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சிங்க.நான் ஏற்கனவே என்னோட பிஸ்னஸ் பார்ட்னரோட பையன மித்ராக்கு பேசி முடிச்சுட்டேன்.அவனும் எங்களோட பிஸ்னஸ்லதான் இருக்கான்.இப்ப அவன் பாரின்ல இருக்கான் இன்னும் ஒரு வருஷத்துல வந்தவுடனே மேரேஜ் முடிச்சுட்டு அடுத்து பிஸ்னஸ் ட்ரிப்பா துபாய் போக வேண்டி இருக்கு.நான் எல்லாம் பிளான்பண்ணி வச்சுட்டேன்.நீங்க தேவையில்லாம எதுவும்பண்ணாதீங்க என்று அவர் பேச இடம் தராமல் போனை வைத்துவிட்டார்.

முத்துசாமியின் பேச்சில் விக்கித்து போனார் இராஜாத்தி பாட்டி.மகனை போன்ற மாப்பிள்ளை பார்க்கிறானா.இவனை போலவே அவனும் பணம்,பணம் என்று அழைபவனாக இருந்தால் ஒழிய மகன் இந்த வரனை ஒத்து கொண்டிருக்கமாட்டான்.அவனுடன் திருமணம் முடித்தாள் என் பேத்தியின் வாழ்க்கை மருமகளின் வாழ்க்கையை போல் வீணாகி போய்விடுமே.கூடாது ஏதாவது செய்ய வேண்டும் என்று யோசித்து கொண்டு இருந்தவருக்கு நெஞ்சில் சுருக்கென்ற வலி எழுந்தது.

மாலை ஹாஸ்பிட்டலில் இருந்து வந்த மித்ராவிடம் மித்துமா நாம நாளைக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு போய்விட்டு வரலாமா என்று பாவமாக கேட்டார்.பேத்தி இனியாவது சந்தோஷமான வாழ்க்கை வாழ வேண்டும் என்று நினைத்தாள் மகன் அதற்கும் முற்று புள்ளி வைப்பது போல் அல்லவா வரன் பார்த்திருக்கிறான் என்ற கவலையிலேயே உழன்று கொண்டு.

பாட்டி திடீரென்று இப்படி பேசவும் மித்ராவின் மனதுக்கு எதுவோ சரியில்லை என்று தோன்றியது.அதை உடனே தன் பாட்டியிடம் கேட்கவும் செய்தாள்.

என்னாச்சு பாட்டி.ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க.உங்க முகமே சரியில்ல.உடம்பு எதுவும் பண்ணுதா.எனக்கு பயமா இருக்கு பாட்டி.எதா இருந்தாலும் என்கிட்ட சொல்லுங்க மனசுலயே வச்சுக்கிடு கவலைபடாதீங்க. இருங்க நான் போய் என்னோட மெடிக்கல் பாக்ஸ்ஸ எடுத்துட்டு வறேன் என்று எழுந்த பேத்தியின் கரத்தைபற்றி அமர வைத்தார் பாட்டி.

என்ன மித்துமா கோவிலுக்குதானே கூப்பிட்டேன் அதற்கு எதற்கு நீ இப்படி பயப்படுகிறாய்.உன் திருமண விஷயமாகத்தான் போக வேண்டும் என்றேன்,மற்றபடி நீ பயப்படுவது போல் ஒன்றும் இல்லை என்று சமாளித்து அடுத்த நாளே கோவிலுக்கு செல்ல வேண்டிய ஏற்பாடுகளை செய்து முடித்தார்.

இரவு உணவை முடித்துவிட்டு பேத்தி படுக்க சென்ற உடன் வெகு நேரம் அமர்ந்து யோசித்து கொண்டு இருந்தவர்.ஒரு முடிவெடுத்தவராக ஆயுஷ்க்கு அழைத்தார்.

இராஜாத்தி பாட்டியின் அழைப்பை பார்த்தவுடன் புருவங்கள் முடிச்சிட யோசித்து கொண்டே போனில் அவரின் எண்ணை வெறித்து பார்த்து கொண்டு இருந்தான் ஆயுஷ்.

நண்பன் போனை அட்டென் செய்யாமல் அதையே வெறித்து பார்த்து கொண்டு இருப்பதை பார்த்தவன்.எட்டி யார் அழைப்பது என்று பார்த்தான்.பாட்டி என்று இருப்பதை பார்த்து,என்னடா இவங்க இந்த நேரத்துக்கு கூப்பிடறாங்க எதுவும் அவசரமா இருக்க போகுது போன அட்டென்பண்ணுடா என்ற நரேஷை பார்த்த ஆயுஷ் பெரு மூச்சை வெளியேற்றி போனை அட்டென் செய்து காதிற்கு கொடுத்தான்.

ஹலோ செல்லுங்க பாட்டி.என்ன இந்த நேரத்துல கூப்பிட்டு இருக்கீங்க.எதுவும் அவசரமா.

ஹலோ என்ற பாட்டியின் ஓய்ந்த குரலில் ஏதோ பிரச்சனை என்று உணர்ந்தவன் அவரே சொல்லட்டும் என்று அமைதியானான். லேட்டாகிடுச்சு டிஸ்டர்ப் பண்ணிட்டனாப்பா சாரி.ஆனா எனக்கு வேற வழி தெரியல.நாளைக்கு நானும் மித்துவும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு போறோம்.நீயும் அங்க வரணும். அது மட்டும் இல்லாம அங்க உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம்.தயவு செஞ்சு தப்பா நினைக்காதப்பா.என்னோட சூழ்நிலை அப்படி.

உன்னுடன் பேசும் போதே தெரிகிறது நீ நல்லவன் என்று அந்த நம்பிக்கையில்தான் என் பேத்தியை உனக்கு மணக்க கேட்கிறேன்.உன் முடிவு என்ன என்பதை எனக்கு நீ சீக்கிரம் சொல் அப்போதுதான் மித்துவிடம் நான் பேச முடியும்.

உன் சம்மதம் தெரிந்த பிறகுதான் அவளிடம் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்.உனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்று மறுத்தாலும் சொல்லிவிடு அப்போதுதான் நான் வேறு ஏதாவது செய்ய வேண்டும்.என் பேத்தியின் வாழ்க்கை எனக்கு பிறகு சந்தோஷமாக இருக்க நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் பொறுமையாக யோசித்து காலைக்குள் எனக்கு தெரிவித்துவிடு கண்ணா.வேறு யாருக்கும் இந்த விஷயம் தெரிய வேண்டாம் என்று கூறி மகனின் மேல் தனக்கு இருக்கும் சந்தேகத்தை கூறி போனை வைத்துவிட்டார்.

மகன் அவ்வளவு சொல்லியும் தான் வேறு ஒருவனுக்கு பேத்தியை திருமணம் செய்ய முடிவெடுத்தது தெரிந்தால் நிச்சயம் அதன் விளைவு விபரீதமாக இருக்கும் என்பதை அறிந்தவர் யாரும் அறியாமல் பேத்தியின் திருமணத்தை நடத்த முடிவெடுத்தார்.மகன் தங்களுடன் இல்லையென்றாலும் தன் வீட்டை கண்காணிக்க ஆட்களை நியமித்து அவர்களின் ஒவ்வொரு அசைவையும் தெரிந்து வைத்து கொண்டுதான் இருக்கிறான் என்பதையே மிகவும் தாமதமாக தெரிந்து கொண்டார்.

அதனாலேயே மகன் செய்யும் பிஸ்னஸின் மேல் சந்தேகம் வந்தது.அவனும் அழைத்து பேசாமல்,தான் அழைத்தாலும் பேச முடியாமல் எங்கு இருக்கிறான் என்பதை தாய்க்குகூட தெரிவிக்காமல் இருப்பதில் அடுத்தடுத்த சந்தேகங்கள் எழுந்த போதும் அதை ஒதுக்கியவரால் பேத்தியின் வாழ்க்கை என்று வரும்போது அப்படி ஒதுக்க முடியவில்லை.

என்ன ஆனாலும் மகன் ஏதோ தவறான பாதையில் செல்கிறான் என்பதை தெரிந்து கொண்ட தாய் உள்ளம்.அந்த சந்தேகம் தனக்கு வந்ததுகூட மகனுக்கு தெரிய கூடாது என்பதில் கவனமாக இருக்க எப்போதும் போல் அவரிடம் பேச முயற்சியும்,அவரின் பிஏவிடம் கோபத்தையும் காட்டி கொண்டே காலத்தை ஓட்டி கொண்டு இருக்கிறார்.

ஆயுஷிடம் இருந்து என்ன பதில் வரும் என்று யோசித்தே அன்றைய இரவை தூங்காமல் நெட்டி தள்ளினார் பாட்டி. அதிகாலையிலேயே பாட்டியை அழைத்த ஆயுஷ் பாட்டி எனக்கு திருமணத்துக்கு சம்மதம்.திருமணத்திற்கு தேவையான பொருட்களை நானே வாங்கி வருகிறேன்.நீங்கள் எப்போதும் போல் சாதாரணமாக கோவிலுக்கு செல்வது போல் கிளம்பி வாருங்கள் மற்றதை நான் பார்த்து கொள்கிறேன் என்று கூறி இணைப்பை துண்டித்தான்.
 

Anuya

Well-known member
#6
அத்தியாயம்-4
மித்ராவையும்,ஆயுஷையும் ஷோபாவில் அமர சொன்னவர் போனை எடுத்து காதுக்கு கொடுக்க அந்த பக்கம் சிங்கமாக உறுமினான் அவரது சீமந்த புத்திரன்.
என்ன செய்து வைத்திருக்கிறீர்கள்.என் மகளுக்கு நான் மாப்பிள்ளை பார்த்து வைத்துவிட்டேன் என்று சொல்லியும் யார் என்றே தெரியாத ஒரு அனாதை அன்னாடங்காச்சியை என் மகளுக்கு மணமுடித்து வைத்திருக்கிறீர்கள்.அவள் ஒன்றும் இல்லாத அன்னக்காவடி என்று நினைத்தீர்களா, தி கிரேட் பிஸ்னஸ் மேன் முத்துசாமியின் மகள்.அவள் திருமணத்தை வைத்து நான் எவ்வளவு பிளான் போட்டு வைத்திருந்தேன். எல்லாத்தையும் ஒரு நொடியில் அளித்துவிட்டீர்கள்.
உங்களை யார் இதையெல்லாம் செய்ய சொன்னது.இதனால் எனக்கு எவ்வளவு கோடி நஷ்டம் என்று தெரியுமா?
திருமணத்தை நடத்திவிட்டதாக பெருமை கொள்ளாதீர்கள் அவனை கொன்றாவது என் மகளுக்கு மறுமணம் செய்து வைப்பேன். என்ன ஆனாலும் சரி இந்த பிஸ்னஸ் டீல் என் கைவிட்டு போக நான் விட மாட்டேன் என்று தாய் பேசுவதற்கு இடம் தராமல் கத்திவிட்டு போனை வைத்தது அந்த மிருகம்.
மகனின் பேச்சில் அதிர்ந்து நின்றிருந்தார் பாட்டி.இனி மகன் தன் பேத்தி வாழ்வில் எதுவும் செய்ய மாட்டான் என்று நினைத்தாள் இவன் மகளின் வாழ்க்கை என்றும் பார்க்காமல் அளிக்க நினைக்கிறானே.மகன் சொன்னால் செய்யக்கூடியவனாயிற்றே, தானே பேத்திக்கு நல்லது செய்யவேண்டும் என்று நினைத்து அழித்துவிட்டோமோ என்று கண்கலங்கியவர் நெஞ்சை பிடித்து கொண்டு சரிந்தார்.
பாட்டி என்று பதறி மூவரும் அவர் அருகில் வர மித்ரா துடித்து போனாள்.பாட்டி.....பாட்டி உங்களுக்கு என்னாச்சு என்று அலறி துடித்தாள்.நரேஷும்,ஆயுஷும் ஒரு நிமிடம் ஸ்தம்பித்து நின்றவர்கள் மித்துவின் அலறலில் சுய உணர்வு பெற்று அவரை உடனடியாக மருத்துவமனை அழைத்து சென்றனர்.
பாட்டியை அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர்,உள்ளே மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து கொண்டு இருந்தனர். உடனடியாக முத்து சாமிக்கு தகவல் கொடுக்க நினைக்க அவர்களால் அவரை கண்டுபிடிக்கமுடியவில்லை.இதை பிறகு பார்த்து கொள்ளலாம் எப்படியும் அவருக்கு அவர்கள் ஆட்கள் மூலம் தகவல் சென்றிருக்கும் என்ற முடிவுக்கு வந்தனர் நரேஷீம்,ஆயுஷீம்.
மூவரும் மருத்துவமனையிலேயே தங்க ஏற்பாடு செய்து வந்தான் நரேஷ்.திருமணம் ஆகி இவ்வளவு நேரத்தில் இரவு உணவை சாப்பிட சொல்லி மட்டுமே முதன் முதலாக மித்ராவிடம் பேசினான் ஆயுஷ்.அவள் மறுப்பாக தலையசைக்க அவனுக்கு ஆயாசமாக இருந்தது.தான் ஒன்று நினைத்து செய்ய அது வேறு ஒன்று நடக்கிறதே என்று,பாட்டி கண் விழித்தவுடன் முதலில் அவரிடம் உண்மையை சொல்ல வேண்டும் அவர் இறுதி நேரத்திலாவது உண்மையை அவரிடம் சொல்ல வேண்டும்.அவர் நல்லபடியாக சரியானாலும் அதன் பிறகு என்ன சொல்கிறாரோ அதன்படி செய்யலாம் என்ற முடிவுக்கு வந்தான்.
மருத்துவமனையில் அனைவரையும் பயபடுத்தி அடுத்த நாள்தான் கண் விழித்தார் பாட்டி.இனி அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று மருத்தவர்கள் தெரிவிக்க மாலை அவரை சாதாரண அறைக்கு மாற்றி விடலாம் என்று சொல்லி சென்றனர்.ஒன்றுக்கு இரண்டு முறை பாட்டியின் உடல் நலத்தை கேட்டு தெரிந்து கொண்ட ஆயுஷ் அவரிடம் எவ்வாறு உண்மையை சொல்வது என்று யோசிக்க ஆரம்பித்தான்.
இதற்கு இடையில் முந்திய நாள் இரவு உண்ட உணவுடனும் மதியம் தந்தை இந்த திருமணத்தைபற்றி என்ன சொல்வார் என்ற குழப்பத்துடன் சரியாக ஹோட்டலில் சாப்பிடாமல் இருந்த மித்ரா,பாட்டியின் நிலையை எண்ணி அழுது சோர்ந்து மயக்க நிலைக்கு சென்றுவிட்டாள்.ஆயுஷ் அவளையும் ஒரு அறையில் சேர்த்து அவளுக்கான சிகிச்சையை செய்ய சொன்னான்.
மாலை சாதாரண அறைக்கு பாட்டியை மாற்றிய பிறகு கண் விழித்தவுடன் முதலில் அவர் பார்க்க விரும்பியது ஆயுஷைதான். மித்ராவும் மயக்க நிலையில் இருப்பதால் இப்போதே பாட்டியுடன் பேசிட நினைத்தான் ஆயுஷ்.
ஆயுஷ் வேகமாக அவர் இருக்கும் அறைக்குள் நுழைய கைகளிலும்,வாயிலும் ஏதேதோ வயர்கள் சொருகப்பட்டிருக்க படுத்திருந்தார் இராஜாத்தி பாட்டி.தம்பி என்று ஈன ஸ்வரத்தில் அழைத்தவர் அவனிடம் தன் மகன் சொன்ன அனைத்தையும் தெரிவித்து தயவு செய்து இந்த ஊரைவிட்டு என் பேத்தியை அழைத்து கொண்டு வேறு எங்காவது சென்று விடுங்கள் இல்லையென்றால் அந்த இராட்சசன் பணத்துக்காக மகளின் வாழ்க்கையை அளிக்கவும் தயங்கமாட்டான் என்று மூச்சுவாங்க பேசினார்.
பாட்டி பேசுவதையே பொறுமையாக கேட்டு கொண்டு இருந்த ஆயுஷ் பாட்டி தேவையில்லாம நீங்க பயப்படுறீங்க எனக்கோ, என் மனைவிக்கோ எதுவும் ஆகாது அதற்கு நான் பொறுப்பு. நான் உங்களிடம் என்னைபற்றி சில உண்மைகள் சொல்ல வேண்டும் என்றவன் தன்னைபற்றி சொல்ல ஆரம்பித்தான்.
இராஜாத்தி பாட்டி எந்த அசைவும் இல்லாமல் அவனையே வெறித்து பார்த்து கொண்டு இருந்தார். தயவு செய்து என்னை தவறாக நினைக்காமல் ஓவர் எமோஷனல் ஆகாமல் நான் சொல்வதை கேளுங்கள்.உங்கள் பேத்தி வாழ்க்கை கண்டிப்பாக அழிந்து போகாது என்ன ஆனாலும் அவள்தான் என் மனைவி அதில் எந்த மாற்றமும் இல்லை என்று அவன் சொன்ன பிறகே பாட்டியின் முகத்தில் நிம்மதியும் தெளிவும் வந்தது.
பாட்டியின் முகத்தில் இருக்கும் நிம்மதியை பார்த்தவன், என்னுடைய வேலையையும் நான் வந்ததற்கான காரணமும் சொல்லிவிடுகிறேன்,இந்த காரணங்கள் எங்கள் வாழ்க்கையை பாதிக்க நான் விட மாட்டேன் என்னை நீங்கள் நம்பலாம் என்றவன் சொல்ல ஆரம்பித்தான்.
ஆயுஷ் சொல்வதை கேட்ட பாட்டிக்கு மகனை நினைத்து வெறுத்து போனது.சரிப்பா உனக்கு தேவையான உதவியை நான் செய்கிறேன் என்று வாக்குறுது அளித்தார்.இந்த வாக்கால் தன் பேத்தி இனி வரும் காலங்களில் உயிருள்ள நடைபிணமாக வாழ போகிறாள் என்பதை அறியாமல்.
பாட்டியின் பேச்சை கேட்டு மென்மையாக சிரித்த ஆயுஷ் பாட்டி இப்போதைக்கு எதுவும் மீராக்கு தெரிய வேண்டாம் என்றவனை பாட்டி ஆயாசமாக பார்த்து அவள் பெயர் மித்ர வருணா.மீரா இல்லை என்றார்.இவன் தன் பேத்தியின் பெயர் கூட தெரியாமல் இருக்கிறானே என்ற கவலையோடு.
பாட்டியின் கவலையை அறிந்து கொண்டவன் போல் சிரித்தவன் உங்களுக்கு மித்ர வருணா எனக்கு மீரா ஓகேவா என்றான். பாட்டி ஆயுஷை பார்த்து தலையாட்டி சிரித்தார்.
பாட்டி உங்கள் மகன் எங்கிருக்கிறார் என்று எங்கள் யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.அது மட்டும் இல்லாமல் இன்னும் இரண்டு நாட்களில் ஒரு பெண்ணை புதிய மருத்துவ ஆராய்ச்சி செய்ய கடத்த உள்ளதாக தகவல் வந்தது.அதற்குள் நாம் அவரை பிடித்தாக வேண்டும்.
நீங்கள் சொல்வதை பார்த்தாள் நிச்சயம் மகள் திருமணம் அவர் விருப்பம் இன்றி நடந்ததால்,மகளை பார்க்க வருவார்என்று நினைக்கிறேன். அந்த நேரத்தை நாங்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.இதை எதற்கு உங்களிடம் சொல்கிறேன் என்று உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.என்னை நம்பிய உங்களை ஏமாற்றியதாக ஒரு உணர்வு அதை சரி செய்யதான்.
பாட்டியிடம் அனைத்தையும் சொன்னதால் மனம் லேசாக, நீங்கள் ரெஸ்ட் எடுங்க என்றவன் வெளியேற போக,பாட்டி மித்ரா என்று கேட்டார்.உங்கள் பேத்தி உங்களைபற்றி கவலைபட்டே அடுத்த பெட்டில் படுத்திருக்கிறாள்.மயக்கம் தெளிந்தவுடன் அழைத்து வருகிறேன் என்று வெளியேறினான்.
இவர்கள் இங்கு ஒரு பிளான் போட இவர்களின் பிளனை முடக்க வேறு ஒரு பிளான் செய்து கொண்டு இருந்தார் முத்து சாமி.
டேய் அவனைப்பற்றி விசாரிக்க சொன்னனே என்ன ஆச்சு.
நம்ம குரு போயிருக்கிறான் பாஸ் சீக்கிரம் அவனைப்பற்றிய தகவலோடு வந்துவிடுவான் என்றான் ஒரு அல்லக்கை.
ம்........அவனை போட்டுட்டு என்னோட பொண்ணையும், அம்மாவையும் தூக்கிட்டு வாங்க.யாருக்கும் எந்த சந்தேகமும் வரக்கூடாது.அவர்களை அழைத்து வரும்போதும் மயக்கத்திலேயே அழைத்து வாருங்கள்.யாரும் பின் தொடர்கிறார்களா என்பதையும் பார்த்து கொள்ளுங்கள் எந்த பிசகலும் இதில் இருக்ககூடாது.கொஞ்சம் மிஸ் ஆனாலும் நாம் அனைவரும் மாட்டி கொள்வோம் என்று தன் அடி ஆட்களிடம் தன் மகளின் வாழ்வை அழிக்க சொல்லி கொண்டு இருந்தான் அந்த மிருகம்.
 

Anuya

Well-known member
#7
அத்தியாயம்-5
மருத்துவமனையில் மித்ரா கண் விழிக்க அவள் அருகில் இருந்த சேரில் அமர்ந்து போனை நோண்டி கொண்டு இருந்தான் ஆயுஷ்.மித்ரா கண் விழித்தவுடன் எழ முயற்சிக்க,அவளின் அசைவில் அவளை நிமிர்ந்து பார்த்தவன் என்ன மீரா.ஆர் யு ஆல் ரைட் என்று கேட்டான்.இவனுக்கு என் பெயர் கூட தெரியாதா மீரானு சொல்றான் இவன்கூட கல்யாணம் வேற ஆச்சே என்று யோசித்தவளுக்கு அப்போதுதான் தன் பாட்டியின் நினைவு வர பய பார்வை ஆயுஷை பார்த்து பாட்டி என்று கேட்டாள்.
மித்ராவின் கண்கள் காட்டும் வித்தையில் மயங்கி இருந்தவன் அவள் அருகில் வந்து கண்கள் மறைக்கும் முடியை காதோரம் இழுத்துவிட்டான்.முதல் முறை ஒரு ஆடவனின் கரம் காதோரம் வருடுவது ஒருவித உணர்வை ஏற்படுத்த காது மடலில் இருந்து உடல் முழுவதும் ஒருவித சூடு பரவுவதை அவளால் உணர முடிந்தது.அது எதனால் என்பதை அறிந்தவளுக்கு வெக்கத்தில் முகம் சிவந்து போனது.
தன்னவன் தன்னை தனிமை என்னும் சிறையில் இருந்து காக்க வந்த காவலன் இவன் என்ற உணர்வு தானாகவே அவளுக்கு வந்தது அவனது ஒற்றை வருடலில்.
மித்ராவிற்கு திடீர் திருமணம் என்பதில் பயம் இருந்தாலும் பாட்டியின் பேச்சால் ஒத்து கொண்டாள்.ஆயுஷ் அவள் கழுத்தில் மூன்று முடிச்சிட அவள் மனதார வேண்டியது இதைதான். இவனே என் வாழ்வின் சரி பாதி,இவனே என் வாழ்க்கை, இவனே இனி வரும் காலம் முழுவதும் என்னை கைகளுக்குள் வைத்து பாதுகாக்கும் காவலன் இவனுடனான என் வாழ்க்கை நல்லபடியாக அமைய ஆசிர்வதியுங்கள் அம்மா என்று அந்த மீனாட்சியிடம் வேண்டி கொண்டாள்.
பெண்களுக்கே உண்டான குணம்.தன் வாழ்வில் எது நடந்தாலும் அதற்கு ஏற்றார் போல் தன்னை மாற்றி கொள்வது.அப்படிதான் மித்ரா இந்த திருமணத்தை மனதார ஏற்று கொண்டாள்.
மோன நிலையில் இருந்த மித்ராவிடம் பாட்டிக்கு ஒன்றும் இல்லை நலமாக இருக்கிறார்கள்.ரூமிற்கு மாற்றிவிட்டார்கள்.நீ நடக்க முடியும் என்றால் நாம் சென்று அவரை பார்த்து வரலாம் என்றான்.
மித்ரா உடனே வேகமாக எனக்கு ஒன்றும் இல்லை நான் நலமாக இருக்கிறேன்.இப்போதே நாம் போகலாம் என்று வேகமாக கீழே இறங்க லேசாக தள்ளாடினாள்.
பொறுமை மீரா என்ன அவசரம் என்றவனை கேள்வியாக பார்த்தாள் மித்ரா.மற்றவர்களுக்கு நீ மித்ராவாக இரு.எனக்கு மீராதான்.உன் பெயர் எனக்கு நன்றாகவே தெரியும் பெயர்கூட தெரியாமல் திருமணம் செய்து கொண்டார் என்று நீ என்ன வேண்டாம்,என்றவனை பார்த்தவள் நாம மனசில நினைச்சது இவருக்கு எப்படி தெரிஞ்சது என்று யோசிக்க ஆரம்பித்தாள்.
பெரிய யோசனை வேண்டாம் உன் கண்களே நீ என்ன யோசிக்கிறாய் என்று சொல்லிவிடும்.வா, போய் பாட்டியை பார்த்து வரலாம் என்று அழைத்து சென்றான்.
பாட்டியை பார்த்துவிட்டு வந்தவளை நீ படுத்து ரெஸ்ட் எடு.பாட்டியை நினைத்து வருத்தப்பட்டு கொண்டு இருக்காதே அவர்கள் இப்போது நலமாக இருக்கிறார்கள் என்று கூறி அவர்கள் எப்போது வீட்டிற்கு செல்லலாம் என்று மருத்துவரிடம் விசாரித்து வருவதாக சென்றுவிட்டான்.
கட்டிலில் அமர்ந்த மித்ராவுக்கு சொல்ல முடியாத ஒரு மகிழ்ச்சி மனதில் பரவியது போல் இருந்தது.இவ்வளவு நாட்களும் இவர்களை பார்த்து கொள்ள வேலையாட்கள் மட்டுமே இருப்பார்கள்.அதுவும் இவள் சொல்வதை செய்துவிட்டு போய்விடுவார்கள்.அவள் நலனைபற்றி சொல்ல ஆள் இல்லாமல் இருந்தார்கள் இப்போது அந்த கவலை இல்லை என்று எண்ணிக்கொண்டு இருந்தவள் நிம்மதியாக கண் அயர்ந்தாள்.
முத்து சாமி தன் அடி ஆட்களிடம் கத்தி கொண்டு இருந்தான். அவன் யார் என்ற தகவல் கிடைத்தவுடன் என்னிடம் நீ சொல்லி இருக்க வேண்டும்,இல்லை அவன் என் அம்மாவிடம் நெருங்குபோதாவது நீ சொல்லி இருக்க வேண்டும் இப்போது வந்து சொல்கிறாய் என்று ஆயுஷைபற்றி விசாரிக்க அனுப்பியவனிடமும் தன் வீட்டில் வைத்திருக்கும் வேலையாளிடமும் காய்ந்து கொண்டு இருந்தார்.அவர்கள் இருவரும் தன் முதலாளி என்ன செய்ய போகிறாரோ என்று பயந்து கொண்டு நின்றிருந்தனர்.அவர்களின் பயம் சரியே என்பது போல் இந்த மாதிரி அஜாக்ரதையான ஆட்கள் எனக்கு தேவையில்லை என்று தன் பாக்கெட்டில் வைத்திருக்கும் துப்பாக்கியை எடுத்து இருவரையும் சுட்டுவிட்டார்.
தன் முதலாளியின் செயலில் விக்கித்து நின்று கொண்டு இருந்த மற்ற அடியாட்களிடம் இவர்களை அப்புற படுத்துங்கள்.நாம் ஏற்கனவே பிளான் செய்தது போல் அந்த ஆராய்ச்சி செய்ய பெண்ணை கடத்த வேண்டும் அதை பாருங்கள் இப்போதைக்கு அதுதான் முக்கியம்.
மித்ராவையும் அம்மாவையும் இப்போதைக்கு நெருங்க முடியாது ஆந்த ஆயுஷ் அவர்களுக்கான பாதுகாப்பை போட்டிருப்பான். அவனை தூக்கிவிட்டு பிறகுதான் அவர்களை தூக்க வேண்டும். நாம் கொஞ்சம் காத்திருக்கத்தான் வேண்டும் என்று கூறி மற்றவர்களை அனுப்பினார்.
ஆயுஷ் என் வீட்டுக்குள்ள நுழைஞ்சா என்னை பிடிச்சிடலாம்னு பாக்குறியா,நான் உன்ன போல எத்தனை பேர பார்த்திருப்பேன். உன் வயசு என் அனுபவம் பார்க்கலாம் இதில் யார் ஜெய்கிறார்கள் என்று தன் கண்கள் சிவக்க பேசி கொண்டு இருந்தார் முத்துசாமி.
ஆயுஷ் பாட்டி மித்ரா இருவரையும் வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டான்.அவர்கள் தங்கள் சாதாரண வாழ்க்கை வாழ ஆரம்பித்தனர்.மித்ரா எப்போதும் போல் வேலைக்கு செல்ல.ஆயுஷ் மகளை பார்க்கவும் வெளியில் வராமல் இருந்த முத்துசாமியை நினைத்து பல்லை கடித்தான்.ஏதாவது ஒரு வழி இருக்கும் அவனை வெளியே கொண்டு வர அது என்ன அது என்ன என்று யோசித்து மண்டையை உடைத்து கொண்டு அவனும் அவன் வேலையில் பிஸியாக இருந்தான்.
நரேஷ் இல்லை என்றால் ஆயுஷ் சாப்பிடுவதுகூட அவனுக்கு மறந்து இருக்கும்.இதற்கிடையில் மித்ரா,ஆயுஷ் இருவரும் ஒருவருக்கு ஒருவர் நன்றாக புரிந்து கொண்ட பிறகு திருமண வாழ்வை ஆரம்பிக்கலாம் என்று முடிவெடுத்திருந்தனர்.
முத்து சாமியின் திட்டதின் படி மீண்டும் ஒரு பெண் கடத்தபட ஆயுஷிடம் பெண் காணவில்லை என்ற கம்ப்ளைண்ட் வந்திருந்தது.இதற்கு ஒரு முடிவே இல்லையா அவனை எப்படி நெருங்குவது என்று யோசித்து கொண்டே வண்டியை ஓட்டி கொண்டிருந்தவன் எதிரே வந்த லாரியை சரியாக கவனிக்காமல் ஓட்ட கடைசி விநாடியில் வண்டியை ஒடித்து திருப்பி மயிறிழையில் உயிர் தப்பினான்.அந்த நொடி அவனுக்குள் உதயமானது முத்து சாமி என்னும் நரியை பிடிக்க தந்திர வழியை பின்பற்ற வேண்டும் என்று.
நரேஷை உடனே அழைத்தவன் தன் அலுவலகத்துக்கு வர சொல்லி வேகமாக இவனும் அலுவலகத்தை அடைந்தான். நரேஷ் வந்தவுடன் அவனிடம் தன் பிளானைபற்றி சொல்ல நரேஷ் அதிர்ச்சியானான்.
சில பல வாக்கு வாதத்திற்கு பிறகு அரைமனதுடன் அந்த பிளானிற்கு ஒத்து கொண்டான் நரேஷ்.இப்படியே நாட்கள் கடக்க மித்ரா ஆயுஷ் திருமணம் முடிந்த அறுபதாவது நாள் நடந்தது அந்த கோர சம்பவம்.வேலை முடிந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்த ஆயுஷின் வண்டி எதிரே வந்த டேங்கர் லாரி மீது மோதி அந்த இடத்திலேயே கார் வெடித்து சிதறியது.
 

Anuya

Well-known member
#8
அத்தியாயம்-6
ஆயுஷ் இறந்து முழுதாக ஒரு மாதம் முடிந்து இருந்தது.இடையில் எந்த மாற்றமும் யாருக்கும் ஏற்படவில்லை அந்த குடும்பதில்.மித்ரா சுய நினைவு இல்லாமல் எங்கேயோ வெறித்து கொண்டு இருந்தாள்.என்று ஆயுஷைபற்றி அவள் தெரிந்து கொண்டாளோ அன்றிலிருந்தே அப்படிதான் இருக்கிறாள்.
ஆயுஷின் கார் வெடித்துவிட்டது என்று தெரிந்ததில் அதிர்ந்து போய் இருந்தவளின் காதுகளில் அடுத்தடுத்து வந்து விழுந்த செய்திகள் அவளை இன்னும் நிலைகுலைய செய்தது.ஆயுஷின் தந்தை,அம்மா,தங்கைஎன்று ஒரு குடும்பமே அவர்கள் வீட்டுக்கு அவனது ஈம சடங்குக்கு வந்திருந்தனர்.கணவனுக்கு இத்தனை உறவுகள் இருக்கிறதா என்று ஆச்சரியப்பட்டவள்,தன் பாட்டியை பார்க்க அவர் அவளை தனியாக அழைத்து சென்று ஆயுஷைப்பற்றிய அனைத்து தகவல்களையும் தெரிவித்துவிட்டார்.
பாட்டி சொன்ன தகவல்கள் புதிதாக வந்த சொந்தங்கள் இவை அனைத்தையும் பார்த்த மித்ராவிற்கு தெளிவாக ஒரு முடிவுக்கு மட்டுமே வர முடிந்தது.அறுபது நாட்கள் முழுதாக இரண்டு மாதம் தன்னுடன் ஒரு அறையில் தங்கியவன்.கணவனாக இல்லை என்றாலும் நல்ல நண்பனாக இருப்போம் என்று சொன்னவன் அவனைபற்றியும் வேலையைப்பற்றியும் தன்னிடம் கூறவில்லை என்றால் அதற்கு காரணம் என்னவாக இருக்கும்.
மித்ராவின் கேள்விக்கு அவளது மனசாட்சி தவறாக சத்தமாக கூறியது காரணத்தை.அவனுக்கு நீ ஒரு கருவி உன் தந்தையை பிடிக்க அவன் விரித்த வலையில் மாட்டி இருக்கிறாய் அதனால் அவனைப்பற்றி எந்த தகவலும் உன்னிடம் தெரிவிக்க தேவையில்லை என்று நினைத்துதான் சொல்லவில்லை. இறுதியில் அவனுக்கு நீ தோழியாகவும் இல்லை, மனைவியாகவும் இல்லை.அவன் தேவைக்கு உன்னை பயன்படுத்தி இருக்கிறான் என்று உறைத்தது.அந்த இரண்டு மாதங்களில் அவளிடம் அவன் காட்டிய பாசம்,காட்டிய அக்கறை, அவனிடம் அவளுக்கு ஏற்பட்ட பாதுகாப்பு உணர்வு அனைத்தையும் அவனைப்பற்றிய உண்மை தெரிந்த பிறகு அவள் மறந்து போனது விதியின் சதியே.
தன்னை பாதுகாப்பான் இனி தனிமை தனக்கு இல்லை என்று மகிழ்ந்து இருந்தவள்,பணம் இருந்தும் பாசத்திற்கு ஏங்கிய ஏழை. கணவன் தோழன் என்ற பெயரில் காட்டிய அன்பு பொய் என்று தோன்ற மனதில் விரக்தியே மிஞ்சியது.
ஏழைகளுக்கு ஒரு கவலையே இருக்கும் அது பணம்.அன்பு என்ற ஒரு ஆயுதம் அவர்களுக்கு அந்த கவலை தெரியாமல் பார்த்து கொள்ளும்.அம்மாவின் அன்பான கவனிப்பும்,அப்பாவின் அக்கறையும்,அக்கா,அண்ணன்,தம்பி,தங்கை என்று அவர்களின் அன்பும் பெற்று மனதளவில் பணக்காரர்களாக இருப்பார்கள். ஆனால் பணகாரர்கள் பணம் மட்டுமே வைத்திருப்பர்.பாசம் காட்ட விலை கேட்பர் அது போல்தான்.மித்ராவின் நிலைமையும்.
அம்மாவின் பாசம் அதிக நாள் கிடைக்கவில்லை. அப்பா.... அவரைப்பற்றி நினைக்கும் போதே அவளுக்கு துக்கத்தில் தொண்டையை அடைத்தது.அவள் அவரின் முகம் பார்த்தே பல வருடங்கள் ஆகிவிட்டது.பாட்டியின் பாசம் மட்டும்தான். இப்போது கணவன் கானாலாகி போனான் என்று நினைத்தவள் தன் பாட்டியிடம் எதுவும் பேசாமல் தன் அறைக்கு சென்றாள்.
தன் அறைக்குள் வந்து கதவை அடைத்த மித்ராவிற்கு என்ன முயன்றும் முடியாமல் கடவுளிடம் சண்டை போடதான் முடிந்தது.நான் என்ன பாவம் செய்தேன் எனக்கு ஏன் இந்த பாலைவன வாழ்க்கை.தயவு செய்து எனக்கு அடுத்த ஜென்மத்திலாவது ஏழை கும்பத்தில் பிறக்கவும் அன்பான சூழ்நிலையில் வாழவும் செய்.
பணம்,பணம்,பணம் இதை எனக்கு அளவோடு தா போதும் அதிகம் கொடுத்து என்னை மூச்சு திணற வைக்காதே எனக்கு இது வேண்டாம் எனக்கு இது வேண்டாம் என்று மனதில் அரற்றியவள் ஏதோ தோன்ற வேகமாக சென்று தன் போனை எடுத்தாள்.
ஏதோ டைப் செய்தவள் பேய்க்கு பயப்படுவதுபோல் ஒரு பட்டன் அருகே கையை கொண்டு போவதும் பின் நிற்பதுமாக இருந்தவள் நீண்ட நேர யோசனைக்கு பிறகு அழுத்த அதில் ஆயுஷ்பற்றிய அனைத்து தகவல்களும் வந்தது.அவனைப்பற்றி படிக்க படிக்க மித்ராவிற்கு ஆச்சரியமாக இருந்தது.
தன் கணவன் இந்த சின்ன வயதில் எவ்வளவு தைரியமாக இருந்திருக்கிறான் என்று.பெண்களை கடத்தும் கும்பலை கண்டுபிடித்து அதன் நூலாக அவன் பிடித்து வந்ததுதான் தன்னிடம் என்று அதில் இருந்த தகவல் மூலம் அறிந்து கொண்டாள்.தன் மேல் அவனுக்கு எந்தவித அக்கறையும் இல்லை.நடிப்பு அனைத்தும் நடிப்பு எல்லோரும் சேர்ந்து என்னை முட்டாளாக்கி இருக்கிறார்கள்.
பாட்டியும் என்னை ஏமாற்றிவிட்டார்கள்.எனக்கு யாரும் உண்மையாக இல்லை.யாரும் என்னைப்பற்றி யோசிக்கவில்லை என்று யோசித்து கொண்டு இருந்தவள் விரக்தியின் உச்சத்திற்கு சென்றிருந்தாள்.
மித்ரா இதையே யோசிக்க அங்கிருந்த மற்ற பெண்கள் வந்து அவளை அழைத்து சென்று கணவன் இறந்ததற்கான அனைத்து சடங்குகளையும் செய்தனர்.அனைத்தையும் ஒரு பொம்மை போல் செய்து கொண்டு இருந்தவளின் காதில் விழுந்தது அந்த வார்த்தை.
என்ன பணம் இருந்து என்ன புண்ணியம் கொஞ்சமும் ராசி இல்லை.அம்மாவை கொஞ்ச வருடத்தில் முழுங்கினாள் இப்போது புருஷனை கட்டிய இரண்டு மாதத்தில் முழுங்கிவிட்டாள் என்று சொல்ல அதை கேட்டவள் தன் வாழ்வை நினைத்து நொந்து போனாள்.
மித்ரா யாரையும் குறை சொல்லாமல் தன்னையே நிந்தித்து கொண்டாள். தன்னுடைய அறியாமையை எண்ணி நொந்து போனாள்.தான் மட்டும் பாட்டி சொன்னவுடன் திருமணத்திற்கு சம்மதிக்காமல் யோசித்திருக்க வேண்டுமோ என்று எண்ணியவள் பொம்மைபோல் அமர்ந்து இருந்தாள்.அப்போதிருந்தே அவள் கண்களில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் வெளியேறவில்லை. தான் மோசமாக ஏமாற்றப்பட்டோம் அதுவும் தான் சொந்தம் என்று நினைத்தவர்களாலேயே ஏமாற்றப்பட்டோம் என்று அதையே யோசித்து கொண்டு இருந்தவளுக்கு வேறு எதுவும் நினைவில் இல்லை.
பாட்டியிடமும் அவள் பேசுவது இல்லை.அறையில் சுவரை வெறித்து கொண்டு அமர்ந்து இருந்தாள்.நரேஷ் அப்பப்போ வந்து அவர்கள் இருவரையும் பார்த்து சென்றான்.
முத்து சாமிக்கு ஏக குஷியாக இருந்தது தன் மருமகன் இறந்தது.அவன் போலீஸ்னு தெரிஞ்சுதான் இவ்வளவு நாள் அந்த பக்கம் போகம இருந்தோம் இனி எந்த கவலையும் இல்லை. நேராக வீட்டிற்கு சென்று மித்ராவையும்,அம்மாவையும் தூக்கி வாருங்கள் அடுத்த வாரத்தில் என் பிஸ்னஸ் பார்ட்னருடைய மகன் பாரினில் இருந்து வருகிறான் அவனுடன் உடனே மித்ராவிற்கு திருமணம் செய்ய வேண்டும். இல்லையென்றால் இந்த பிஸ்னஸ் டீல் என் கையை விட்டு போய்விடும் என்று தன்னைப்பற்றியே எண்ணி கொண்டு இருந்தான்.
மித்ராவிடம் பாட்டி எவ்வளவோ கெஞ்சியும் அவர் முகம் பார்க்க கூட முடியாது என்றுவிட்டாள்.தன்னிடம் உண்மை சொல்லாமல் எல்லோரும் ஏமாற்றிவிட்டார்கள் என்பதையே பிடிவாதமாக வைத்து கொண்டு யாரிடமும் பேசுவதில்லை.பாட்டிக்கு மித்ராவை நினைத்து கவலை அதிகரித்தது.மித்து எவ்வளவு பொறுமையோ அவ்வளவு பிடிவாதம் முடிந்த வரை பொறுமையாக போக கூடியவள் பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்தாள் அவளை லேசில் யாராலும் மலையிறக்க முடியாது.
பேத்தி தன்னுடன் பேசாமலேயே இருந்து விடுவாளோ. இப்போது அவள் இருக்கும் நிலையில் அவள் யாருடனவது மனசுவிட்டு பேசினால்தான் சரியாவாள்.கணவன் இறப்புக்கு அழக்கூட இல்லை இதே நிலை நீடித்தாள் அவள் மன நலம் பாதிக்குமே என்று துடித்தார்.
நரேஷ் வந்து அழைத்தும் அவள் எந்த பதிலும் அளிக்கவில்லை. அவள் மனதில் தான் அனைவரிடமும் உண்மையாக இருக்க தன்னிடம் ஏன் அனைவரும் உண்மையை மறைத்தார்கள் ஒரு வேலை இது பொம்மை திருமணம் சீக்கிரம் இந்த பந்தம் பிரிந்துவிடும் என்பதால் சொல்லவில்லையோ என்று எதைஎதையோ யோசித்து குழப்பி கொண்டவளின் கைகள் தன் கழுத்தில் கணவன் முதன்முதலில் வாங்கி கொடுத்த செயினை வருடியது.இந்த செயினும் நடகதனமாக இருக்குமோ என்று அதை கழட்ட எண்ணியவள் என்ன நினைத்தாலோ பின் அதையே சிறிது நேரம் பார்த்துவிட்டு அப்படியே விட்டுவிட்டாள்.
நாட்கள் அதன் போக்கில் நகர மித்ரா இப்போது மருத்துவமனை செல்ல ஆரம்பித்திருந்தாள்.ஆனால் முகத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் ரோபோ போல் அவள் நடந்து கொள்வது அனைவருக்கும் வருத்ததை அளித்தது.பசிக்கும் வேலையில் ஒரு நாளைக்கு ஒரு நேரம் உண்பவள் மற்ற நேரங்களில் உணவை தவிர்த்துவிடுவாள்.அவள் மனதில் விரக்தியின் உச்சநிலையில் இருந்ததால் யாருக்காக வாழ வேண்டும்.போதும் இந்த வாழ்க்கையும் போதும் என் தனிமையும் போதும் சீக்கிரம் இந்த வாழ்வை முடித்து கொள்ள வேண்டும் என்றே நினைத்தாள்.
தனிமை.அதன் கொடுமை வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு தெரியாது.அனுபவிப்பவர்களுக்கு மட்டுமே தெரியும்.தன் எண்ணங்களை பகிர்ந்து கொள்ள தன் மகிழ்ச்சியை அவர்கள் மகிழ்சியாக எண்ணி பூரிப்படைய ஒரு உண்மையான உறவு தேவை.அவளுக்கு என்ன பணக்காரி என்று நினைக்கும் சொந்தமும் பணத்துக்காக ஆறுதல் தரும் சொந்தமும் இல்லாமல் உண்மையான சொந்தத்தால் மட்டுமே தனிமை விரட்டப்படும்.
 

Anuya

Well-known member
#9
அத்தியாயம்-7

மித்ரா அப்படிப்பட்ட ஒரு உறவை,தன் சிறு வயதில் இருந்து தேடி கொண்டு இருக்கிறாள். தன் எல்லாமுமான உறவாக தனக்கான நேரத்தை ஒதுக்குபவனாக,தன்னுடைய மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் தோழனாக ஒருவன் வருவான் என்று காத்திருந்தவளுக்கு அப்படி உறவாக வந்தவன் தந்த ஏமாற்றத்தை அவளால் தாங்கி கொள்ள இயலாமல் போனது.

நாட்கள் அதன் போக்கில் நகர ஒரு நாள் மருத்துவமனை சென்ற மித்ரா இரவு வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.பாட்டி பயந்து போய் மகனுக்கு அழைக்க அது எப்போதும் சொல்லும் தொடர்பு கொள்ள முடியாது என்ற பதிலை தர மனம் வெறுத்து போனார். யாருக்கு அழைப்பது,என்ன செய்வது,பேத்தியை இப்போது எங்கு தேடுவது என்று தெரியாமல் துடித்து கொண்டிருந்த அதே நேரம் நரேஷ் வந்து சேர்ந்தான் அவர்கள் வீட்டிற்கு.இந்த நேரத்திற்க்கு இவன் எப்படி வந்தான் என்று பாட்டி யோசிக்க முடியாத நிலையில் இருந்தார்.

இராஜாத்தி பாட்டி எதுவும் சொல்வதற்கு முன்பே அவரிடம் பதட்டமாக வந்தவன் பாட்டி கவலைபடாதீங்க மித்ராவிற்கு ஒன்றும் ஆகாது.சீக்கிரம் கண்டுபிடித்துவிடலாம் நீங்கள் தவறாக யோசிக்காதீர்கள் உங்கள் உடம்பு முடியாமல் போக போகிறது. நான் என் தங்கைக்கு எதுவும் ஆக விடமாட்டேன் கவலைப்படாதீர்கள் என்று அவருக்கு தேறுதல் வார்த்தைகள் கூறினான்.

மித்ராவை கடத்தி கொண்டு வந்த முத்து சாமியின் ஆட்கள் அவருக்கு அழைத்தனர்.

பாஸ் நீங்க சொன்ன மாதிரி உங்க பொண்ண நம்ம கெஸ்ட் ஹவுஸ்கு தூக்கிட்டு வந்தாச்சு.உங்க அம்மாவையும் தூக்க பிளான் போட்டோம் நீங்கள் கடைசி நேரத்தில் வேண்டாம் என்று சொல்லவும் விட்டாச்சு.இப்ப என்ன செய்ய வேண்டும் பாஸ்.

ம்.......வெரி குட்.மித்ரா மேல் எந்த அடியும்பட்டிருக்க கூடாது அவளுக்கு நாளை திருமணம்.புது பெண் அதனால் அடிபடாமல் வைத்திருங்கள் நாளை காலை பெங்களூரில் இருக்கும் நமது இரகசிய இடத்தில் அவள் இருக்க வேண்டும்.அதற்கு ஏற்றார் போல் அங்கிருந்து கிளம்புங்கள் கவனம்.அம்மா அவர்கள் எதற்கு நமக்கு அவள் மட்டும் போதும்.

ஓகே பாஸ் அடி எதுவும் படாது.அது மட்டும் இல்லாமல் மயக்கத்தில்தான் மேடம் இருக்கிறார்கள்.நாங்கள் உடனே கிளம்புகிறோம் என்றவர்கள் உடனடியாக பெங்களூர் செல்ல அனைத்தையும் தயார் செய்து வண்டியில் கிளம்பினர்.

மித்ரா மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வரும் வழியில் ஒரு பெண் லிப்ட் கேட்க,அவளை வண்டியில் ஏற்றி சிறிது தூரம் வந்த பிறகு ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் கார் செல்லும் போது அந்த பெண் மித்ரா முகத்தில் எதையோ......எதையோ என்ன எதையோ மயக்க மருந்து அடித்து வைத்திருந்த அவளது கர்ச்சீப்பை வைத்து அழுத்த இன்னும் இந்த வாழ்க்கை தனக்கு எத்தனை ஏமாற்றங்கள் தர போகிறது என்ற எண்ணத்துடன் தான் உதவ நினைத்த பெண்ணையே விரக்தியாக பார்த்தவள் அப்படியே மயங்கி சரிந்தாள்.

நரேஷ் இங்கு பாட்டிக்கு ஆதரவாக அவருடன் இருக்க,அங்கு மித்ராவிற்கு தன் பிஸ்னஸ் பார்ட்னருடைய மகன் ரகுவை மண முடிக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்தார் முத்து சாமி.

அடுத்த நாள் பெங்களூரில் தன் விடியலை பார்த்தாள் மித்ரா.அவளுக்கு சிறிது நேரம் எதுவும் பிடிபடவில்லை.தன் எதிரில் தன்னையே பார்த்து கொண்டு இருந்த பெண்ணை பார்த்த பிறகுதான் நினைவு வந்தது.தான் உதவ நினைத்த பெண் இவள் என்று.ஆனால் இவள் எதற்கு தன்னை கடத்தினாள் என்று புரியால் மித்ரா முழித்து கொண்டிருக்கும் போதே மேடம் இந்த சேலையை கட்டி ரெடியாகுங்கள் இன்னும் கொஞ்ச நேரத்தில் உங்கள் அப்பா வந்துவிடுவார் என்று சொல்லி ஒரு கவரை அவள் கையில் திணித்தாள்.
 

Anuya

Well-known member
#10
அப்பா என்ற வார்த்தையில் ஒரு நிமிடம் மகிழ்ந்த அவள் மனம்.தன் கணவனின் இறுதி காரியத்திற்க்குகூட வராதவர். பாட்டியை பார்க்க வராதவர்.தீடீரென தன்னை இப்படி யாருக்கும் தெரியாமல் கடத்தி வந்து பார்க்கும் அளவிற்கு என்ன அவசியம் வந்தது என்று யோசித்து கொண்டு இருக்கும் போதே அவள் முன் வந்து நின்றார் முத்து சாமி.
தன் முன்னால் நிற்பது யார் என்று நிமிர்ந்து பார்த்த மித்ரா பணக்கார ஆடம்பரத்துடன் கோட்சூட்டில் நின்ற தன் தந்தையை பார்த்து ஆச்சரியம் அடைந்தாள்.அப்பா என்று அவள் சொல்லி முடிக்கும் முன் அவரின் கோபமான வார்த்தையே அவளை தாக்கியது.
என்ன கோலம் மித்ரா இது ஏன் இப்படி இருக்கிறாய்.
அப்பா....அப்பா...... என்று அழுதவள் அவர்.............
ஷட் அப் மித்ரா.என்ன அவர்.என்ன அவர்.ஜஸ்ட் ஸ்டாப் இட் உனக்கு நடந்தது திருமணமே இல்லை.உனக்கு மாப்பிள்ளை பார்க்கிறேன் என்று என் அம்மா சொன்ன போதே சொன்னேன் உனக்கு மாப்பிள்ளை என் பிஸ்னஸ் பார்ட்னருடைய மகன்தான் வேறு மாப்பிள்ளை பார்க்காதீர்கள் என்று.நான் சொல்வதை கேட்காமல் வேறு மாப்பிள்ளை பார்த்தது மட்டும் இல்லாமல் திருமணமே செய்து வைத்து இப்போது இந்த நிலையில் நிறுத்தி இருக்கிறார்கள்.
முதலில் போய் இந்த கோலத்தை மாற்று இன்னும் ஒரு மணி நேரத்தில் உனக்கும் ரகுவுக்கும் திருமணம்.
அப்பா என்ன பேசுகிறீர்கள் நான் இன்னொருவரின் மனைவி.எனக்கு திருமணம் முடிந்துவிட்டது.
ஸ்டாப் இட் மித்ரா என்ற முத்து சாமியின் கர்ஜனையில் மித்ரா நடுங்கி போனாள்.நான் இப்போது என்ன சொல்லி கொண்டு இருக்கிறேன் என்று உனக்கு புரியவில்லையா.அப்படியே உனக்கு திருமணம் ஆகியிருந்தாலும் அவன் உயிருடன் இல்லை. அதனால் இப்போது உன் திருமணம் நடக்க வேண்டும்.மீறி நீ அடம்பிடித்தாள் வீட்டில் இருக்கும் உன் பாட்டியை நீ இழக்க வேண்டி இருக்கும்.
உனக்கே தெரியும் என் வேலை ஆக வேண்டும் என்றால் நான் என்ன வேண்டும் என்றாலும் செய்வேன் என்று,நான் என்ன சொல்கிறேனோ அதை செய் என்றுவிட்டு அவள் இருந்த அறையிலிருந்து வெளியேறினார்.
தந்தையின் பேச்சில் விக்கித்து நின்றாள் மித்ரா.சோ இதுதான் என் வாழ்க்கை.என் கையில் என்னுடைய வாழ்க்கையை கடவுள் தரவில்லை.முதலில் பாசம் என்னும் விலங்கு கொண்டு பாட்டியின் கையில்.இப்போது மிரட்டல் என்னும் விலங்கு கொண்டு இவரின் கையில்.பெரு மூச்சூடன் அவள் நிமிரும் போது அவள் கண்ணில் பட்டது அந்த மருந்து.எலிகளை கொல்ல வைத்திருப்பது.
தன்னிறக்கத்தில் இருப்பவர்களுக்கு சாதாரணமாக நடக்கும் விஷயங்கள்கூட எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்று பூதாகரமாகதான் எண்ணத்தோன்றும் அது போல்தான் மித்ராவும் இருந்தாள்.விரும்பி பாட்டியின் பாசத்துக்கு அடிமையானவளுக்கு இப்போது அது விலங்காக தெரிந்தது.
யாரும் என்னமும் செய்யுங்கள் என் வாழ்க்கை முடிவை நான் எடுத்துவிட்டேன் என்ற முடிவுடன் சற்று நேரத்திற்கு முன்பு தன்னிடம் கொடுத்த கவரை எடுத்து கொண்டு மறக்காமல் அந்த மருந்தையும் எடுத்து கொண்டு பாத்ரூமிற்குள் புகுந்திருந்தாள் மித்ரா.
ஐயர் மந்திரங்கள் ஓத குனிந்த தலை நிமிறாமல் அமர்ந்து இருந்தவளின் மணி கழுத்தில் மங்கலநாண் ஏறியது.கண்ணீர் மறைத்திருக்கும் விழிகளுடன் தன் முகத்திற்கு அருகே இருக்கும் கையை பார்த்தவள் அதிர்ந்தாள்.வேகமாக நிமிர்ந்து தன் அருகில் அமர்ந்து இருந்தவனின் முகத்தை பார்த்தவளுக்கு உலகமே தட்டாமாலை சுற்ற ஆரம்பித்தது.கண்கள் இருட்டி கொண்டு வர அவன் மீதே மயங்கி சரிந்தாள் பேதையவள்.
மித்ரா மயங்கும் போதே தன் மார்பில் அவளை தாங்கி கொண்டான் அவளது கணவன் ஆயுஷ் அபிமன்யு.
அத்தியாயம்-8
மித்ரா மயங்கி சரிந்ததும் ஆயுஷ்,முத்து சாமி இருவருமே அதிர்ந்தனர்.மீரா என்று ஆயுஷ் அவள் கண்ணத்தை தட்டி எழுப்ப முயல அவள் மயக்க நிலையிலேயே இருந்தாள்.
மாப்பிள்ளை என் மகளுக்கு என்ன ஆனது என்று பாசம் இருப்பது போல் பேசிய முத்து சாமியின் பேச்சை கேட்டவனுக்கு கோபம்தான் வந்தது.வேகமாக தனது போனில் இருந்து ஒரு சிக்னல் கொடுக்க அவர்கள் இருந்த இடத்தை சுற்றி வலைத்தது போலீஸ்.
முத்து சாமி ஒரு நிமிடம் அதிர்ந்தவர் கோபமாக திரும்பி தனது பிஸ்னஸ் பார்ட்னர் சென்னப்பனின் முகத்தை பார்க்க அவனின் முகமும் வெளுத்துதான் இருந்தது.இங்கு என்ன நடக்கிறது என்று புரியாமல் முழித்து கொண்டு நின்றிருந்தார்.
ஆயுஷ் அருகே வேகமாக வந்த நரேஷ் அங்கிருந்த கேனில் இருந்து நீரை எடுத்து மித்ரா முகத்தில் அடிக்க மயக்கம் தெளிந்து லேசாக கண்ணை இறுக்கி மூடி திறந்தவள் எதிரில் நின்றிருந்தான் நரேஷ்.
அண்ணா......அண்ணா...எ....என....எனக்கு...என்னமோ ஆகிவிட்டது.யாரை பார்த்தாலும் அவரை பார்ப்பது போலவே இருக்கிறது.இ...இதோ இந்த...ரகு இல்லை இவனை பார்த்தாலும் அவரை போலவே இருக்கிறது என்று கூறி அவனின் அருகே வந்தவள் கண்களை இறுக மூடி ப்ளீஸ் அண்ணா என்னை இங்கிருந்து கூட்டி போங்கள் என்று கதறி அழ ஆரம்பித்தாள்.
நரேஷ் எவ்வளவோ சமாதானபடுத்தியும் அவள் அதை கேட்காமல் சொன்னதையே சொல்லி கொண்டு கண்ணையும் திறக்காமல் புலம்பி கொண்டு இருந்தாள்.
பொறுத்து பொறுத்து பார்த்த ஆயுஷ் அவளை தன் அருகே இழுத்து அவள் கண்ணத்தில் ஓங்கி அறைய படக்கென கண் திறந்தவள் அதிர்ச்சியில் சிலையாகி அவனையே பார்த்து கொண்டு இருந்தாள்.
மீரா நன்றாக பார் நான் உன் ஆயுஷ்தான் எனக்கு ஒன்றும் இல்லை.நாம் வீட்டிற்கு போய் பொறுமையாக பேசி கொள்ளலாம் இப்போது இன்னோரு வேலை இருக்கிறது என்றவன் முத்துசாமியை பார்த்து திரும்பினான்.
ஆயுஷ் மித்ராவிடம் பேசியதை அதிர்ச்சியாக பார்த்து கொண்டு இருந்த முத்துசாமி கத்த ஆரம்பித்தார்.
ஹேய்நீயா?ரகு எங்கே?நீ எப்படி இங்கு வந்தாய்? என்று அடுக்கடுக்காக கேள்வி கணைகளை தொடுத்தார்.
முத்துசாமியை நக்கலாக பார்த்த ஆயுஷ் என்ன என்னை தெரியலையா.பரவால நானே என்ன அறிமுகபடுத்திக்கிறேன். நான் ஆயுஷ் அபிமன்யு அசிஸ்டண்ட் கமிஷனர் ஆப் போலீஸ்.உங்கள பிடிக்க ஸ்பெசலா அப்பாய்ண்ட் பண்ணப்பட்டவன்.அந்த வேலையை இப்போது இந்த நிமிஷம் முடிச்ச கூலகும்பிடு போடாத நேர்மையான போலீஸ்.இன்னும் நெருக்கமான சொந்தமா சொல்லட்டுமா மாமனாரே உங்களுக்கு பிடிக்காத உங்களின் மருமகன்.பிடிக்காத மருமகனா இருந்தாலும், என்னோட ஒரு போட்டோவ கூடவ நீங்க பாக்கல.
அட எங்க கல்யாண போட்டோவ உங்க ஆளுங்க உங்ககிட்ட காட்டி இருப்பாங்களே,ச்சோ.....ச்சோ...ச்சோ....நீங்க அதை பார்க்கலையா என்று ஆயுஷ் பேச பேச முத்து சாமிக்கு கோபம் ஏற ஆரம்பித்தது.
ஹேய் என் பையன் எங்கடா என்று சென்னப்பன் எகிற அவன் வாயை பார்த்து குத்தி உன்ன மாதிரி போர்ஜெரிஸ் எல்லாம் எங்கள மரியாதையாதான் கூப்பிடனும் என்று கர்ஜித்தான் நரேஷ்.
ஆயுஷ் நண்பனை பார்த்து சிரித்து,விடுடா பாத்துக்கலாம்.சார் என்ன கேட்டீங்க உங்க பையனையா.என்ன தைரியம் இருந்து இருந்தா என்னோட பொண்டாட்டிய கல்யாணம்பண்ண நினைப்பான் அவன சிறப்பா கவனிக்க வேணாம் எங்க இடத்துல பத்திரமா இருக்கான் என்று பேசி கொண்டு இருக்க,நரேஷ் அலறினான்.
என்னாச்சு என்று ஆயுஷ் திரும்பி பார்க்க மித்ரா வாயிலும்,மூக்கிலும் இரத்தம் வர மயங்கி கீழே விழ போனாள்.
மீரா என்று வேகமாக அவள் அருகில் சென்ற ஆயுஷ் அவளை கைகளில் அள்ளி வேகமாக வண்டியை நோக்கி ஓடினான்.
ஒரு மாதத்திற்கு பிறகு...........
உங்ககூட கொஞ்சம் பேசணும் என்று ஆயுஷிடம் கேட்டாள் மித்ரா.
ஆயுஷ் அவளையே ஆராய்ச்சியாக பார்த்தவன் சம்மதமாக தலையை ஆட்டினான்.அவனின் முன்பு ஒரு பேப்பரை வைத்தவள் இதில் கையெழுத்து போடுங்கள் என்று இறுகிய குரலில் கூறினாள்.
என்ன பேப்பர் என்று எடுத்து பார்த்த ஆயஷிற்கு கோபம் சுறுசுறுவென ஏறியது.அப்போதுதான் யோசித்தான் மருத்துவமனையில் நடந்த விஷயங்களை.
மித்ராவை மருத்துவமனையில் அனுமதித்து ஆயுஷ் காத்திருக்க,மருத்துவர்கள் சொன்ன தகவலில் தலையில் இடிவிழுந்தவன் போல் ஆனான்.
மித்ரா எலி மருந்து சாப்பிட்டதாகவும் வெகு நேரம் ஆனதால் எதுவும் சொல்ல முடியாது என்றவர்கள் 24 மணி நேரம் கழித்துதான் எதுவும் சொல்ல முடியும் என்றுவிட்டனர். மருத்துவரின் பேச்சில் இடிந்து போனவன் அங்கிருந்த இருக்கையில் தொப்பென்று அமர்ந்தான்.
நான் உன்னை கஷ்டப்படுத்தினேன் என்று என்னை கஷ்படுத்த நினைக்காதே மீராமா,ப்ளிஸ் எனக்கு நீ வேணும்.நாம ரெண்டு பேரும் ரொம்ப வருஷம் சந்தோஷமா வாழணும் என்று மனதுக்குள் அரற்றிக்கொண்டு இருந்தவனுக்கு அப்போதுதான் மீரா மேல் அவன் கொண்டுள்ள காதலை பரிபூரணமாக உணர முடிந்தது.
நரேஷ் முத்துசாமி மற்றும் சென்னப்பனை அரெஸ்ட் செய்து அவர்கள் ஆபிஸ் சென்று தகவலை தெரிவித்துவிட்டு வேகமாக நண்பனை காண மருத்துவமனை நோக்கி சென்றான்.
மருத்துவமனை சென்ற நரேஷை வரவேற்றது நண்பனின் இடிந்து போன தோற்றமே.வேகமாக அவன் அருகில் சென்றவன் டேய் என்ன ஆச்சு ஏன் இப்படி உட்கார்ந்து இருக்க.மித்ரா எப்புடி இருக்காங்க என்று படபடவென கேட்டான்.அவ்வளவு நேரம் உலகமே சூனியம் ஆனது போல் அமர்ந்து இருந்த ஆயுஷ் தனக்கு ஒரு பிடிப்பு கிடைத்த நிம்மதியில் அவனை கட்டி கொண்டு அழ ஆரம்பித்தான்.
ஆயுஷின் அழுகையை பார்த்த நரேஷ் அதிர்ந்து போனான். எவ்வளவு கம்பீரமானவன்,குற்றவாளிகளை சூரையாடுவதில் புலி,மட்டமான அரசியல்வாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த நண்பன் அழுவதை பார்த்தவனுக்கு காதல் மோசமான உணர்வு என்றுதான் எண்ண தோன்றியது.
டேய் என்ன ஆச்சு மித்ரா என்று நடுங்கிய குரலில் கேட்டவனை வேகமாக தடுத்தான் ஆயுஷ்.
நோ....நோ...அவளுக்கு ஒன்றும் இல்லை.ஒன்றும் ஆக்கூடாது அவள் எனக்கு வேண்டும்,என் வாழ்க்கை முழுமைக்கும் வேண்டும் என்றவன் மருத்துவர் கூறிய அனைத்தையும் கூற நரேஷும் அதிர்ந்துதான் போனான்.
நண்பனின் நிலையை உணர்ந்தவன்.இப்போது அவன் சுய நினைவு இல்லாமல் இருக்கிறான் என்று உணர்ந்து அந்த சூழலை தன் கையில் எடுத்து கொண்டான்.வேகமாக இராஜாத்திபாட்டிக்கு அழைத்து மேலோட்டமாக விஷயத்தை சொன்னவன் உடனே மருத்துவமனைக்கு வர சொன்னான். அதன் பிறகு பாட்டியை மட்டும் இல்லாது தன் நண்பனையும் தேற்றும் வேலையை செய்து கொண்டு இருந்தான்.
பாட்டியோ தன் பேத்தி இன்னும் எத்தனை இன்னல்களை சந்திக்க வேண்டியுள்ளதோ என்று மனம் குமைந்து,ஊரில் உள்ள அனைத்து கடவுள்களுக்கும் வேண்டுதல் வைத்தார் பேத்திக்காக.
ஒரு வழியாக அனைவரையும் கதறடித்துவிட்டு உடல்நிலை தேறினாள் மித்ரா.ஆனால் அனைவரிடமும் பேசுவதை தவிர்த்தாள்.முக்கியமாக ஆயுஷ் அவளை பார்க்க வரும்போது எல்லாம் கண்களை இறுக மூடி தூங்குவது போல் படுத்து கொண்டாள்.இராஜாத்தி பாட்டியிடம் மட்டும் அவர் கேட்கும் கேள்விகளுக்கு ஓரிரு வார்த்தைகளில் பதில் அளித்தாள்.அவளின் நடவடிக்கைகள் ஆயுஷுக்கு சந்தேகத்தை கொடுத்தாலும் எப்படியும் ஒரு நாள் பூனை வெளிவரும் அப்போது பார்த்து கொள்ளலாம் என்று விட்டுவிட்டான்.அது இப்படி ஒரு பூதமாக இருக்கும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை.
 

Anuya

Well-known member
#11
அத்தியாயம்-9

தன் எதிரில் மனைவி வைத்த பேப்பரை எடுத்து அது என்ன என்று படித்து பார்த்தவன் அதிர்ந்தான்.ஏனென்றால் அது டிவோர்ஸ் பத்திரம்.கோபமாக மித்ராவை பார்த்த ஆயுஷ் பின் நிதானமாக அந்த டிவோர்ஸ் பத்திரத்தை கையில் எடுத்து சுக்கல் சுக்கலாக கிளித்து எறிந்துவிட்டு, என்னடி இது என்று சீறினான்.

மித்ராவோ இறுகிய முகத்துடன் உங்கள் கடமையை முடிக்க நடந்த திரு....என்றவள் அதை முழுதாக சொல்ல மனம் வராமல் நிகழ்வு என்று மாற்றிகூறினாள்.பின்பு உங்கள் வேலை முடிந்தவுடன் இந்த நிகழ்வை தகர்த்துவதில் என்ன தவறு என்று கேட்டாள்.

தங்களது உறவை கொச்சைப்படுத்தும் மனைவியை புலியின் சீற்றத்துடன் பார்த்தவன் தங்கள் திருமணத்தைக்கூட நிகழ்வு என்று மாற்றி கூறிய மனைவியை அனல்கக்கும் விழிகளுடன் பார்த்தான்.

லூசு மாதிரி உலராம போடி.இப்பதான் ஹாஸ்பிட்டலில் இருந்து வந்துருக்கணு நான் பொறுமையா இருக்கேன்.என் பொறுமைக்கும் ஒரு அளவு இருக்கு.போ என்று கத்தினான். அவனையே தீர்க்கமாக பார்த்த மித்ரா,முடியாது என்றாள் அழுத்தம் திருத்தமாக.

மித்ராவை அனல் தெறிக்க பார்த்தான் ஆயுஷ்.

என்ன பாக்குறீங்க.உங்க கடமை செய்ய என்ன யூஸ் பண்ணிக்கிட்டீங்க,நான் எதாவது சொன்னனா.உங்க கடமையை நீங்கள் முடிச்சுட்டீங்கணு நான் நினைக்கிறேன்.இனி இந்த உறவுக்கு எந்த அர்த்தமும் இல்லை என்றாள்.

அவளையே தீர்க்கமாக பார்த்த ஆயுஷ் நான் ஏற்றுகொண்ட எந்த ஒரு கடமையையும் பாதியில் விடமாட்டேன்.அது போல்தான் நம் திருமணமும் என்று கூறினான்.

கோபமாக அவனை பார்த்த மித்ரா கடமைக்காக என்னால் வாழ முடியாது என்று கூறினாள் பட்டென்று.

தன் காதலை புரிந்து கொள்ளாமல் கடமைக்காக வாழ நினைக்கிறேன் என்று சொல்லும் மித்ராவை பார்த்தவனுக்கு ஈகோ தலை தூக்கியது.உன் இஷ்டத்துக்கு என்னால் ஆட முடியாது உன்னை பாவம் என்று விட்டதுதான் தப்பாக போய்விட்டது.

ஒரு கடமையை சரியாக செய்யவில்லை என்றால் அதன் விளைவு எப்படி இருக்கும் என்று நீ இப்போது காட்டிவிட்டாய். உன் கணவன் என்ற கடமையை நான் செய்யாமல் இருப்பதால்தான் இப்படி தேவை இல்லாமல் யோசித்து கொண்டு இருக்கிறாய்.இன்று அதற்கு ஒரு முடிவுகட்டுகிறேன். இன்று அந்த கடமையை நிறைவேற்றுகிறேன் அதன் பிறகு என்ன செய்கிறாய் என்று பார்க்கிறேன் என்றவனை பார்த்தவளுக்கு எங்கிருந்துதான் அவ்வளவு கோபம் வந்ததோ அவன் அருகில் வேகமாக சென்றவள் அவன் போட்டிருக்கும் டீசர்ட் காலரை பிடித்து ஆட்டி அவனிடம் பொறிய துவங்கினாள்.

என்னடா சொன்னாய் கடமையை நிறைவேற்றுவாயா!எவ்வளவு தைரியம் இருந்தால் என்னிடமே இப்படி சொல்வாய்.உன் கடமைதான் உனக்கு முக்கியமா? நான் என்னுடைய உணர்வுகள் முக்கியம் இல்லையா? நானும் மனுசிதானே எனக்கும் உணர்வுகள் ஆசைகள் இதெல்லாம் இருக்காதா? என்றவள் அவனை கீழே தள்ளினாள்.

மீராவின் திடீர் தாக்குதலில் அதிர்ந்து இருந்தவன்,அவள் தள்ளியதும் ஒரு நொடி தடுமாறி பிறகு தன் கால்களை ஊன்றி தன்னை நிலைபடுத்தி கொண்டான்.

கடமையாம் கடமை தாலி கட்டியவளை கண்கலங்காமல் காப்பதும் அவளை தனிமையை உணராமல் இருக்க செய்வதும் கூட கணவனின் கடமைதான் அதை செய்தாயா?கடமையை காட்டுவானாம் கடமையை என்று மரியாதையை காற்றில் பறக்கவிட்டவள் அவனை சரமாறியாக கேள்வி கேட்க ஆரம்பித்தாள்.

திருமணத்தில் எனக்கு எவ்வளவு கனவுகள் என்று தெரியுமா?என்று அவள் கேட்க ஆயுஷ் ஆடி போனான்.அவள் வேறு யாரையும் விரும்பி இருப்பாளோ பாட்டியின் வற்புருத்தலால் தான் தன்னை மணம் முடித்திருப்பாளோ என்று அதிர்ந்து அவளையே அவன் பார்த்து கொண்டு இருக்க அவனைப்பற்றியே என்னாதவள் தன் ஆசைகளை கொட்ட ஆரம்பித்தாள்.

எனக்காக என்னையே மையமாக வைத்து யோசிக்கும் கணவனை மட்டுமே நான் கனவு கண்டேன்.பள்ளியில் ஒவ்வொரவரும் தன் பெரியப்பா வீட்டிற்கு போனேன்,சித்தப்பா வீட்டிற்கு போனேன் என்று சொல்லும் போது உணர்ந்தேன் தனிமையை.

பணம் இந்த மூன்று எழுத்து என் வாழ்க்கையில் அனைத்து சொந்தங்களையும் என்னிடம் போலியாகதான் அறிமுகபடுத்தியது.எனக்கானவன் எனக்காக வருவான் என்னை மட்டுமே நேசிப்பான்.என்னில் தனிமையை போக்கி வாழ்வின் முழுமைக்கும் என்னுடன் இருப்பான் என்னிடம் உண்மையாக இருப்பான் என்று பேசி கொண்டே போனவள் ஆயுஷை தீர்கமாக பார்த்தாள்.அந்த பார்வை ஆயுஷிற்கு நன்கு புரிந்தது.நீ என்னிடம் உண்மையாக இருந்தாயா என்று கேள்வியை தொக்கி நிற்கும் பார்வை.ஆயுஷ் அவள் பேச்சிலும்,பார்வையிலும் ஆடி போய் நிற்க அவனை கண்டு கொள்ளாமல் மேலும் பேசினாள் மித்ரா.

நீ என்ன செய்தாய்? கடமை.உன் கடமைக்காக என்னை மணந்து.அதற்காக என்னை அறுபது நாட்களில் விதவையாக்கி நடை பிணமாக என்னை இந்த உலகில் உலவவிட்டு,இராசி இல்லாதவள் என்ற ஊராரின் பேச்சிற்கு ஆளாக்கி என்றவளுக்கு துக்கத்தில் தொண்டை அடைத்தது,குரலை செருமி சரி செய்தவள் கடைசியில் எவனுக்கோ மறுபடியும் திருமணம் செய்து வைத்துவிடுவார்களோ என்ற பயத்தை என்னுள் வர வைத்து சாவின் விழும்பு வரை இழுத்து சென்றுள்ளாய்.

உன்னை நான் மணக்காமல் இருந்து இருந்தாலாவது தனிமை என்ற ஒரு அரக்கனுடன்தான் நான் போராடி இருப்பேன்.ஆனால் உன்னை மணந்து ஏமாற்றம்,ஏச்சுக்கல்,பேச்சுக்கல் தற்கொலை என அனைத்து அரக்கனையும் சந்திக்க வைத்துவிட்டாய் எனக்கு நீ வேண்டாம் எனக்கு நீ வேண்டாம்.

உன் அம்மா அப்பா என்னை பாவமாக பார்த்தார்கள், மற்றவர்கள் என்னை பார்த்து பரிதாபப்படும் நிலையை எனக்கு கொடுத்த நீ எனக்கு வேண்டாம்.
நீ நல்ல மகனாக அவர்களுக்கு இருந்து இருக்கலாம்,நல்ல நண்பனாக உன் நண்பனுக்கு இருந்து இருக்கலாம்,நல்ல காவலனாக உன்னுடைய டிபார்ட்மண்ட்டிற்கு இருந்து இருக்கலாம் என்றவள் அவள் கை கொண்டு அவன் மார்பில் கை வைத்தவள் நீ மோசமான் கணவன்.கேவலமாக தோற்று போன கணவன் என்று கூறியவள் அதற்கு மேல் முடியாமல் முகத்தை மூடி அழுதாள்.
மித்ராவின் ஒவ்வொரு குற்ற சாட்டிலும் ஆயுஷ் அதிர்ந்துதான் போனான்.தான் செய்த காரியங்கள்,பூ போன்ற மனம் படைத்த மித்ராவை எந்த அளவு பாதித்து இருக்கிறது என்று நினைத்தவன் அவளை எப்படி சமாளிப்பது என்று திணறி போனான்.
தன்பாட்டிற்கு பேசி கொண்டு இருந்த மித்ரா அழுது ஓய்ந்து ஒரு வாராக கண்களை துடைத்து கொண்டவள்,அவனை பார்க்காமல் எதுக்கு இந்த பேச்சு.இதை கிளித்துவிட்டீர்கள் நாளை வேறு பத்திரம் வாங்கி வருகிறேன் அதையும் வீணாக்காமல் கையெழுத்து போடுங்கள் என்றவள் அறையைவிட்டு வெளியே செல்ல திரும்பினாள்.
மித்ராவின் பேச்சு ஆயுஷிற்கு கவலையை கொடுத்தாலும் அவளை இழக்க விரும்பாதவன் முடியாது என்று கூறி வீட்டைவிட்டு வெளியேறினான்.
ஆயுஷ் செல்வதையே வெறித்து பார்த்து கொண்டு இருந்த மித்ராவிற்கு விரக்தி புன்னகைதான் தோன்றியது.
வீட்டில் இருந்து கிளம்பிய ஆயுஷ் நேராக சென்றது நரேஷின் வீட்டிற்குதான்.முகம் கலை இழந்து சோர்ந்து போய் வந்த நண்பனை பார்த்த நரேஷிற்கு எதுவோ சரியில்லை என்றுபட, அவனை அமர சொன்னவன்,இருவருக்குமாக தேனீர் தயாரித்து வந்து கொடுத்தான்
.
நண்பனின் முன் தேனீர் கோப்பையை நீட்டியவன். நண்பனின் கவனம் இங்கு இல்லாததை உணர்ந்து, ஆயுஷ் என்று அழைக்க அப்போதுதான் சுய நினைவுக்கு வந்தவன் அவன் நீட்டிய தேனீர் கோப்பையை மறுத்துவிட்டு தண்ணியடிக்கலாமா என்று கேட்டான்.

நண்பன் கேட்டதை அதிர்ச்சியாக பார்த்த நரேஷ் தன் காதுகளில் கைவிட்டு தேய்த்து,என்னடா சொன்ன என் காதுல தப்பா விழுந்துச்சு .

தப்பால்லாம் விழல கரெக்ட்டாதான் விழுந்துச்சு நீ வீட்ட பூட்டிட்டு வா நான் கீழ வெயிட்பண்றேன் என்று விறுவிறுவென வெளியேறினான்.

தான் தண்ணியாடித்தாலே நான்கு நாட்களுக்கு வைத்து செய்யும் தன் நண்பன் இப்படி கூறவும்,பிரச்சனை பெருசு போலவே என்று யோசனையில் சுழித்த புருவங்களுடன் வீட்டை பூட்டிவிட்டு வந்தான்.

இரவு கலர் கலர் லைட்டுகள் மின்னி மின்னி மறைய,காதை கிளிக்கும் அளவுக்கு சத்தத்தை வைத்து பாடல்களை அலறவிட்டு இருந்தனர் அந்த பப்பில்.நண்பன் அளவில்லாமல் குடிப்பதை யோசனையாகவே பார்த்த நரேஷ் என்ன பிரச்சனை என்று கேட்டான்.நண்பனின் இந்த கேள்விக்காகவே காத்திருந்தது போல் மித்ராவுடனான தன் வாக்குவாதத்தை கூறியவன் எனக்கு கஷ்டமா இருக்குடா.அவ அப்புடி பேசுனது.

எனக்கு அவள ரொம்ப பிடிக்கும் அவளுடைய பொறுமை, அமைதி எப்புடி இவ்ளோ அமைதியா இருக்கானுகூட யோசிச்சிருக்கேன்டா,ஆனா எல்லாத்துக்கும் சேர்த்து வச்சி இன்னைக்கு பேசுனா பாரு நான் நொருங்கி போய்ட்டேன்டா.

கடமைக்காக அவளை கல்யாணம் பண்ணினேனாம் உனக்கு நியாபகம் இருக்கா நம்ம மீனாட்சி அம்மன் கோவிலுக்கு போனதும் அந்த பிங்க் கலர் டிசைனர் புடவைல கைல பொறிய அள்ளி மீன்களுக்கு போட்டுட்டு இருந்தாளே அப்பவே அவ இங்க வந்துட்டாடா என்று தன் நெஞ்சை தொட்டு காட்டினான்.அந்த கண்ணுல மீன்கள் பொறிய சாப்பிடற அழக ரசிக்கற தன்மை சிரிப்பு,மச்சி கண்ணு சிரிச்சு பாத்திருக்கியாடா நான் பாத்தேன்டா என்னோட மீராக்கிட்ட பாத்தேன்டா.

உனக்கு தெரியும்தானே நான் என்னோட வேலைய எவ்ளோ லவ்பண்றேனு இருந்தாலும் காலைல அவள ஹாஸ்பிடல்ல விட்டுட்டு ஈவினிங் அவள கூட்டிட்டு வந்துட்டு அவளுக்கு டிரைவர் வேலை பார்த்தேண்டா அதுலகூடவ என் காதல் அவளுக்கு தெரில.அவள விட்டு பிரியணும்னு நான் முடிவு எடுக்கறப்பா எவ்ளோ வலிச்சது தெரியுமா.இருந்தாலும் அவளுக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாதுங்கறதுக்காக டிரேக்கர் டிவைஸ் அட்வான்ஸ் லெவல்ல இருக்கறத செயின்ல செட்பண்ணி அவளுக்கு அத கிப்ட்டா குடுத்துட்டு,அதுக்கும் மேல உன்னைய அவளுக்கு பாதுகாப்பா வச்சிட்டுதானே எல்லாம் செஞ்சேன்.அவளபத்தி மட்டுமே யோசிச்சதாலதான் அவங்க அப்பா முன்னாடி நம்ம மேரேஜ் நடக்கலனு அவ சொன்னத நியாபகம் வச்சி,அவ கடத்தப்பட்டது தெரிஞ்தம் பொறுமையா எல்லாம் செஞ்சு அவங்க அப்பா முன்னாடி இன்னொரு டைம் அவகழுத்துல தாலி கட்டுனேன்.

என்னைபார்த்து எனக்கு நீ வேணாம்னு சொல்லிட்டாடா. ஹாஸ்பிட்டல்ல அவள சேர்க்கற வரைக்கும் என் உயிர் என்கிட்ட இல்ல அவளுக்கு ஏதாவது ஆகி இருந்தா நிச்சயம் நானும் எதாவது செஞ்சுக்கிட்டு அவக்கிட்ட போய் இருப்பேன்.கண்ணே மணியேனு கொஞ்சுனாதான் லவ்வா இந்த மாதிரி அக்கறையான விஷயங்கள் எல்லாம் லவ் இல்லையா. நான் புருஷனா தோத்துட்டேனு சொல்றாடா.

ஆமாடா என்னோட காதல பொண்டாட்டிக்கு புரிய வைக்க முடியாத தோத்து போன புருஷன்தான்டா நான் என்று புலம்பி கொண்டு இருந்தான்.

நரேஷோ நண்பனின் புலம்பலை கேட்டு அவனின் மன காயத்தை அறிந்து கொண்டான்.அதே நேரம் மித்ரா வீட்டில் தங்களது திருமண புகைபடத்தையே வெறித்து பார்த்து கொண்டு இருந்தாள்.அப்போது பார்த்து அவள் போன் சத்தம் எழுப்பி தன் இருப்பை உணர்தியது.யார் இந்த நேரத்தில் என்ற யோசனையுடன் எடுத்து பார்க்க நரேஷிடம் இருந்து வந்திருந்தது.இந்த நேரத்தில் என்ன என்ற யோசனையுடன் போனை ஆன் செய்து காதில் வைக்க அந்த பக்கம் ஆயுஷ் நரேஷிடம் புலம்புவது தெளிவாக கேட்டது.
ஆயுஷ் பேசுவது முழுவதையும் கண்ணீர் வடியும் கண்களுடன் கேட்டவள் தேவையில்லாமல் யோசித்து கணவனை நோகடித்துவிட்டோம் என்பது மட்டும் புரிந்து கொண்டவள் போனை கட் செய்து,நரேஷிற்குசிரிப்பு ஸ்மைலியை தட்டிவிட்டு நன்றி என்ற வார்த்தையையும் சேர்த்து இருந்தாள்.
 
Last edited:

Anuya

Well-known member
#12
அத்தியாயம்-10
மித்ராவிடம் இருந்து வந்த மெசேஜை பார்த்தவனுக்கு தன் நண்பனின் வாழ்வு இனி சீராகும் என்ற நம்பிக்கை வந்திருந்தது. தன் நண்பனின் தோளில் கை வைத்தவன் சரிடா பீல்பண்ணாத எல்லாம் சரியாகும் என்று தைரியம் கூறினான்.
இல்லடா.அவ சொன்னதுலயும் ஒரு உண்மை இருக்கு சின்ன வயசுல இருந்தே அவளுக்கு போலியான உறவுகள் கிடைச்சதால கணவனாவது உண்மையா இருக்கனும்னு எதிர்பார்த்திருப்பா ஆனா நானும் அவளை ஏமாத்திட்டேன்டா.அவங்க பாட்டி அவளபத்தி சொல்லும் போதுகூட கணவன்கிற ஒரு உறவுக்கிட்ட அவ இவ்ளோ எதிர்பார்த்திருப்பானு எனக்கு தெரியலடா இன்னைக்கு பேசும் போது அவ கண்ணுல இருந்த விரக்தி,ஏமாற்றம் இது எல்லாம் ஒரு கணவனா என்னை ரொம்ப பாதிச்சிருச்சுடா நான் இனி அவள நல்லா பாத்துப்பேன்டா எனக்கு இன்னொரு சான்ஸ் உன் தங்கச்சிய தர சொல்லுடா என்று புலம்பி கொண்டே நரேஷின் மீது மயங்கி சரிந்தான்.
நரேஷ் மித்ராவிற்கு ஆயுஷை தன் வீட்டிற்கு அழைத்து செல்வதாக மெசெஜ் தட்டிவிட்டுவிட்டு அவனை தூக்கி கொண்டு தங்கள் வீட்டிற்கு சென்றுவிட்டான்.
காலை கண் விழித்த ஆயுஷிற்கு மண்டை இரண்டாக பிளப்பது போல் வலி எடுத்தது.தலையை இரு கை கொண்டு பிடித்து கொண்டவன் அப்படியே கட்டிலில் அமர்ந்திருந்தான்.அவன் கண்முன் ஒரு கிளாஸ் நீட்டப்பட நிமிர்ந்து பார்த்தான் நரேஷ்தான் நின்று கொண்டு இருந்தான்.இந்த லெமன் ஜீஸ்தான் குடி ஹேங்கோவர் சரியாகும் என்று கூற அதை வாங்கி மடமடவென குடித்தான் ஆயுஷ்.
டேய் டெய்லி குடிக்கறவன்கூட போய் சரக்கடிக்கலாம் எப்பவாவது குடிக்கறவன்கூட போகவே கூடாதுனு நேத்துதான்டா தெரிஞ்சிக்கிட்டேன். ஒரு டம்ளர் சரக்காவது எனக்கு குடுத்தியாடா படுபாவி.நீயே மொத்தத்தையும் காலிப்பண்ணிட்டு பிளாட் வேற ஆகிட்ட என்று முறைத்தான்.
நண்பனின் வார்த்தாயில் அதிர்ந்து போனவன்,பின் அசடுவழிய சிரித்து ஜாரிடா...........என்க.பல்லை கடித்த நரேஷ் டேய் அது சாரி.......... இன்னும் தெளியலையா என்றான்.
போடா எனக்கு நேரமாகிறது பாட்டி தேடுவாங்க நான் போறேன் என்றவன் வேகமாக அந்த அறையில் இருந்து வெளியேறி இருந்தான்.நண்பன் போவதை பார்த்தவன் டேய் பாட்டி வெயிட்பண்ணுவாங்களா உன் வைப் வெயிட்பண்ணுவாங்களா என்ற அவனின் கேள்வி காற்றில் மறைந்திருந்தது.
வீட்டிற்கு வந்த ஆயுஷ் தங்கள் அறைக்கு செல்லலாமா வேண்டாமா என்று பட்டிமன்றம் நடத்தி கொண்டு இருந்தான். மனதில்.அய்யோ போனா மறுபடியும் டிவோர்ஸ்,கிவோர்ஸ்னு ஆரம்பிப்பாளே என்று பயந்து கொண்டு ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்து மேலே அறையை பார்ப்பதும் யோசிப்பதுமாக இருந்தான்.அந்த நேரம் பார்த்து கரெக்ட்டாக ஆஜர் ஆனது அவன் மனசாட்சி.
ஹோய்........ இங்க பார்ரா பெரிய போலீ...........ஸ் ஆபிஸர் பொண்டாட்டிக்கு பயந்துக்கிட்டு இருக்கறத.இவன பாத்த ரவுடிங்க எல்லாம் அலறி அடிச்சுக்கிட்டு ஓடுறாங்க இவன் என்னனா பொண்டாட்டிக்கு பயந்துக்கிட்டு ரூமுக்கு போகாம இருக்கான் என்று கிண்டல் செய்தது.
தன் மன சாட்சியின் கேள்விக்கு ஊருக்கே மந்திரினாலும் வீட்ல தொடப்பக்கட்டத்தான் என்று பதில் சொன்னான் ஆயுஷ்.
என்ன எடுத்துக்காட்டு சொல்றான் பாரு என்று அவன் மனசாட்சியே அவனை காறிதுப்பிவிட்டு சென்றது.பரவால்ல போ இதுக்கெல்லாம் அசையமாட்டான் இந்த ஆயுஷ் என்று கெத்தாக சொல்ல,ஆங்.........அங்க பாரு உன் பொண்டாட்டி வரா என்று சத்தமிட்டது அவன் மனசாட்சி எங்க எங்க என்று பயந்து எழுந்து நின்றவனை பார்த்து கேலியாக சிரித்து சும்மா.............என்று சொல்லி ஓடிவிட்டது
அட கொடுமையே என் மனசாட்சியே என்ன கிண்டல்பண்ணுதே என்று நினைத்தவன் மெதுவாக அவர்கள் அறைக்குள் சென்றான்.ஆயுஷை அப்போதுதான் பார்த்த மித்ரா எதுவும் பேசாமல் திரும்பி கொண்டாள்.
மீரா..............என்று ஆயுஷ் அழைக்க,கையை நீட்டி தடுத்தவள் பாத் ரூமை நோக்கி கையை காட்டினாள்.வேகமாக சென்று பாத்ரூமிற்குள் நுழைந்து கொண்டவனை பார்த்தவளுக்கு மெல்லிய சிரிப்பு எட்டி பார்த்தது.நரேஷ் மூலம் இரவு கணவனின் பேச்சை கேட்ட மித்ரா,கணவன் தன்னை கடமைக்கு மணமுடிக்கவில்லை காதலுடன்தான் மணமுடித்தான் மேலும் தன்னைப்பற்றி யோசித்திருக்கிறான் என்று தெரிந்து கொண்டவளுக்கு கோபம் மட்டுப்பட்டாலும்,அவன் நடத்திய நடகம் ஆறாத வடுவாய் இருக்க அவனை கொஞ்ச நாட்கள் சுத்தலில் வைக்க நினைத்தாள்.
மித்ராவின் எண்ணப்படி ஆயுஷை அவள் ஆட்டிபடைத்தாள். அவன் முக்கியமான வேலை என்று கிளம்பும் நாட்களில்தான் அவளுக்கு படத்திற்கு போக வேண்டும்,ஷப்பிங் செல்ல வேண்டும் என்ற எண்ணம் வரும் அவனை லீவ் போட சொல்வாள்.அவன் மறுத்தால் காதல் அது இது என்று வசனம் பேச வேண்டியது என்று புலம்பிவிட்டு அவள் தனியாக செல்ல ஆயத்தமாக இவன்தான் இறங்கிவர வேண்டி இருந்தது.
ஒரு நாள் ஏன் கணவனின் குடும்பத்தைப்பற்றி சொல்லவில்லை என்று சண்டை பிடிக்க அவளிடம் மல்லுக்கட்ட முடியாத ஆயுஷ் உடனடியாக ஒரு வாரம் லீவ் எடுத்து அவர்களின் சொந்த ஊருக்கு அழைத்து சென்றான்.ஆயுஷின் அம்மா,அப்பா தங்கை என்று அனைவரும் அவளிடம் நன்றாக பேச அவளும் அனைவரிடமும் நன்றாக பேசி பழகினாள்.ஆயுஷிடம் மட்டும் முகம் கொடுத்து பேசவில்லை.இதனால் கடுப்பானான் ஆயுஷ்.
அழகான மனைவி தன்வீட்டில் தான் கட்டிய தாலியுடன் வகிட்டில் வைத்திருக்கும் குங்குமம் மின்ன வலைய வர அவனுக்குதான் தாபம் கரைபுரண்டு ஓட ஆரம்பித்தது.
ஹய்யோ சோதிக்கறாளே இவ எப்ப சமாதானம் ஆகறது எப்ப.........ஹம் என்று பெரு மூச்சு விட்டவன்,டேய் ஆயுஷ் வாழ்க்கை புல்லா நீ பிரம்மச்சாரிதான் என்று மனதுக்குள் புலம்பி கொண்டான்.
ஆயுஷின் வீட்டிற்கு வந்ததில் இருந்து கணவனின் பார்வையை கவனித்து கொண்டுதான் இருந்தாள் மித்ரா.அத்தோடு இப்போது அவன்விடும் பெருமூச்சிற்கான காரணத்தை அறிந்தவளுக்கு சிரிப்புதான் வந்தது.அத்தோடு இப்போதெல்லாம் கணவன் ஒரு நொடிக்கூட தன்னை தனிமையில் விடாது ஒட்டி கொண்டே அழைவதும் வேலை முடிந்து அவள் வருவதற்கு முன்பு அவன் ஹாஸ்பிட்டல் வந்து அவளுக்காக காத்திருந்து வீட்டிற்கு அழைத்து வருவதும்,வீட்டிற்கு வந்ததும் வால் பிடித்து கொண்டு அவள் பின்னே அழைவதுமாக அவன் செய்த பிழைகளை இருமடங்காக சரிசெய்ய முயற்சித்து கொண்டு இருந்தான்.
ஏற்கனவே கணவனின் பேச்சில் கோபம் குறைந்து இருந்தவளுக்கு அவனின் ஒவ்வொரு அக்கறையான செயல்களும் அப்போதுதான் நினைவு வந்து கணவனை காதலுடன் பார்க்க ஆரம்பித்திருந்தாள்.கணவனின் இந்த அக்கறையும்,அன்பும் அவள் மனதிற்கு இதமாகதான் இருந்தது.ஆனாலும் தன் மனதை நினைக்காமல் தன்னை நினைக்காமல் ஒரு நாடகத்தை போட்டுவிட்டானே என்று மருகினாள்.
கணவனின் உறவுகளுடன் பழக வேண்டும் என்று எண்ணியவள், அவர்களது வீட்டிற்கு அழைத்து செல்ல சொன்னாள்.அங்கு அவர்கள் குடும்பத்துடன் அமர்ந்து நேரத்தை செலவழித்து கொண்டும், நண்பர்கள் போல் கேலியும் கிண்டலும் செய்து கொண்டு இருந்தாலும் கண்டிக்க வேண்டிய இடத்தில் கண்டித்து பேசுவதை பார்த்தவளுக்கு பெரு மூச்சுதான் வந்தது.
மித்ராவும்,ஆயுஷிம் அவர்கள் வீட்டிற்கு வந்து இரண்டு நாட்கள் ஆன நிலையில் ஊரை சுற்றி பார்க்க எண்ணிய மித்ரா ஆயுஷிடம் கோவிலுக்கு சென்று வர கேட்கலாம் என்று நினைத்து அவனை அழைக்க அவனோ முகத்தை அஷ்ட கோணலாக மாற்றி கோவிலுக்கா என்றான்.
மித்ராவின் பேச்சை கேட்டு கொண்டே வந்த ஆயுஷின் தங்கை பிருந்தா ஹா...ஹா...ஹா...அண்ணி அண்ணன் எங்கு வேணாலும் வருவான் கோவிலுக்கு மட்டும் வரமாட்டான் என்று சொல்லி சிரித்தாள்.
மித்ராவோ வர மாட்டீங்க என்பது போல் அவனை நேர்பார்வை பார்த்தாள்,அவனோ வருகிறேன் என்று வேகமாக தலையாட்டி இருந்தான்.
பிருந்தாவின் சிரிப்பு சத்தத்தை கேட்டு அங்கு வந்த ஆயுஷின் அம்மா,அப்பாவிற்கு கூட மகனின் இந்த மாற்றம் ஆச்சரியமாக இருந்தது.
ஆயுஷின் அப்பா ஒருபடி மேலே போய்,டேய் மகனே!இப்புடி கவுந்துகிடக்கிறியேடா என்று கிண்டல் செய்தார்.அவனோ அவருக்கு சளைத்தவன் தான் இல்லை என்பது போல் உங்க இரத்தம் ஆச்சே அப்படிதான் இருப்பேன் என்றுவிட்டு மனைவியை அழைத்து கொண்டு சென்றுவிட்டான்.
ஆயுஷின் அம்மா ரகுபதியோ கருமம்,கருமம் புள்ளைக்கிட்ட பேசற மாதிரியா பேசுறீங்க என்று திட்ட,அவர் கணவன் கோவிந்த சாமியோ விடுமா விடுமா இல்லாததையா சொன்னான் என்று சொல்லி கண்ணடித்து சிரிக்க விவஸ்தை கெட்ட மனுசன் என்று சொல்லி கிச்சனிற்குள் புகுந்து கொண்டார் ரகுபதி.
கோவிலுக்கு சென்று வீட்டிற்கு வரும் போது ஆயுஷிற்கு நரேஷிடம் இருந்து போன் வர அதை அட்டன் செய்து பேசியவனின் முகம் ஒரு நிமிடம் அதிர்ந்தாலும்,பின் யோசனையை தத்தெடுத்தது.கணவனின் யோசனையான முகத்தை பார்த்தும் பார்க்காதது போல் வந்து கொண்டிருந்தாள் மித்ரா.
இருவரும் வீட்டை அடைந்தவுடன் தங்கள் அறைக்குள் நுழைந்து கொண்ட ஆயுஷ் வெகு நேரம் கழித்தே வெளியில் வந்தான். அப்போதிலிருந்து அவன் மித்ராவுடனே இருந்தான்.அவளை எதிலிருந்தோ காப்பது போல் அவன் கண்கள் நாலாபுரமும் எப்போதும் சுற்றி கொண்டே இருந்தது.அவள் பிருந்தாவுடன் வெளியில் சென்றாலும் அவன் கூடவே வர மித்ராதான் கடுப்பானாள்.
என்னாச்சு எதுக்கு இப்புடி என்னோடவே வர்றீங்க. .மித்ரா
என் பொண்டாட்டிகூட நான் இருக்கேன்.உனக்கு என்னமா?என்று அவன் விளையாட்டு போல் பேசி அவளை திசை திருப்பி விடுவான்.அவனின் செயல்கள் வித்தியாசமாக இருந்தாலும் எது பேசினாலும் அதற்கு ஒரு பதிலை ரெடியாக வைத்திருப்பவனிடம் என்ன பேச என்ற எண்ணம் எழ அவளும் பேசாமல் விட்டுவிட்டாள்.
இதோ அதோ என்று நாட்கள் செல்ல அவர்கள் சென்னை செல்லும் நாளும் வந்தது.டிரெயினில் போகலாம் என்றவளின் பேச்சை காதில் வாங்காமல் அவர்கள் வீட்டில் அவன் பயன்பாட்டிற்கு வைத்திருந்த காரை எடுத்து அவனே டிரைவ் செய்வதாக கூறி இரவு எட்டு மணி போல் அவர்களின் சென்னை நோக்கிய பயணம் ஆரம்பம் ஆனது.அவர்கள் சென்னை வந்த நேரம் விடியற்காலை பொழுதாக இருக்க சற்று நேரம் படுப்போம் என்று இருவரும் படுத்தவர்கள் மதிய பொழுதுதான் எழுந்தனர்.பின் அவர்களின் பொழுது பாட்டியிடம் சிறிது நேரம் பேசி கொண்டும்,தூங்கி கொண்டும் முடிந்தது.
அடுத்த நாள் ஆயுஷ் தூக்கத்தில் இருந்து எழும் போதே மித்ரா படுக்கும் இடம் காலியாக இருந்தது.ஹோ..எழுந்துவிட்டளா என்று நினைத்தவன் மணியை பார்க்க அது காலை ஏழு என்று காட்டியது.பாத்ரூம் சென்று ரெப்ரஸ் ஆகி டீ குடிக்க கீழே வந்தான்.
மித்ராவை எல்லா இடங்களிலும் தேடி கிடைக்கவில்லை மனதில் அதிர்ந்தாலும் இங்குதான் இருப்பாள் என்று மனதுக்குள் உருபோட்டவன் தோட்டத்தில் இருப்பாள் என்று அங்கு சென்று பார்க்க அங்கும் அவள் இல்லை.ஆயுஷிற்கு மித்ராவை காணவில்லை என்றவுடன் பதட்டம் அதிகமானது.எங்க போனா என்ற புலம்பலுடன் வீட்டிற்குள் நுழைய அப்போதுதான் இராஜாத்தி பாட்டி பூஜையறையில் இருந்து வெளி வந்தார்.
 

Anuya

Well-known member
#13
அத்தியாயம்-11

பாட்டி மித்ரா எங்க.ஆளையே காணோம்.நானும் எல்லா இடத்திலும் தேடிவிட்டேன் என்று சற்று பதட்டமாக கேட்டான்.

பாட்டியோ அவனின் நெற்றியில் திருநீரை பூசிவிட்டு கொண்டே காலைலயே ஹாஸ்பிட்டல்ல இருந்து போன் வந்துச்சு டெலிவரி கேஸ் வந்துருக்குனு அதனால சீக்கிரமே கிளம்பிட்டா என்று அவர் சொல்லி வாய் மூடும் முன் ஷிட்........என்று தன் தலையில் அடித்து கொண்டவன் வேக வேகமாக இரண்டு இரண்டுபடிகளாக தங்கள் அறைக்கு தாவி ஏறினான்.

ஆயுஷின் பதட்டத்தை பார்த்த இராஜாத்தி பாட்டிக்கு பயம் பிடித்து கொண்டது.கையில் அகப்பட்ட ஒரு சட்டையும்,நீல நிற ஜீன்ஸ் அணிந்து ஆயுஷ் கிளம்பி வேகமாக வர அவன் வழியை மறித்தார் பாட்டி.

என்னாச்சு ஆயுஷ் எதுக்கு இந்த பதட்டம்.

பாட்டி ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க இப்ப உங்களுக்கு விளக்கம் சொல்ல எனக்கு நேரம் இல்ல.நான் கேட்கும் ஒரு கேள்விக்கு மட்டும் என்னிடம் பதில் சொல்லுங்கள் என்று பாட்டியை கூர்மையாக பார்த்தபடி சொன்னான்.

என்ன என்பதுபோல் பார்த்த இராஜாத்தி பாட்டியின் கைகளை பிடித்தவன்.பாட்டி என் மேல உங்களுக்கு நம்பிக்கை இருக்குல உங்க பேத்தியை பத்திரமா பார்த்து கொள்வேன் என்ற நம்பிக்கை இருக்குல்ல என்று கண்ணில் அலைபுறுதலுடனும் தவிப்புடனும் கேட்டான் ஆயுஷ்.

ஆயுஷின் முகத்தை பார்த்த பாட்டி ஆம் என்று தலையாட்டி அவன் மீதான் அவரது நம்பிக்கையை சொன்னவர்.அவளது காவலன் கண்ணா நீ அவளுக்கு எந்த ஆபத்தும் வராது வந்தாலும் உன்னை தாண்டிதான் செல்லும் என்று கூறினார்.

பாட்டியின் இந்த வார்த்தையே அவனுக்கு அசுர பலத்தை கொடுக்க கண்ணில் கோபத்துடன் மித்ரா ஹாஸ்பிட்டலை நோக்கி வேகமாக சென்றான்.வண்டியில் செல்லும் போது அவனுக்குள் ஒரு பயம் வியாபிக்க ஆரம்பித்து இருந்தது.தன் கண்களை இறுக மூடி திறந்தவன்,தவறாக எதுவும் நடக்காது. நான் நடக்க விடமாட்டேன் என்று தனக்குள் கூறி கொண்டு வேகமாக சென்றான்.

ஒரு மணி நேரம் செல்ல வேண்டிய ஹாஸ்பிட்டலுக்கு இருபது நிமிடத்தில் வந்து சேர்ந்திருந்தான் ஆயுஷ்.ரிஷப்சனில் அவளைப்பற்றி விசாரிக்க கேஸ் பார்த்து கொண்டு இருப்பதாக கூறியதை கேட்ட பின்புதான் அவனுக்கு உயிரே வந்தது போல் ஆனது.உடனே அங்கிருக்கும் சேரில் தளர்வாக தொப்பென்று அமர்ந்தான்.

குழந்தை பிறந்தவுடன் அதை நர்ஸிடம் கொடுத்து சுத்தம் செய்ய சொன்னவள் வெளியில் வர கண்ணில் கண்ணீருடன் நின்றிருந்தான் அந்த பெண்ணின் கணவன் அவனை பார்த்து மென்மையாக சிரித்தவள் இருவரும் நலம் பயப்படாம போய் பாருங்க என்று சொல்லி அவளது அறைக்கு செல்ல அப்போது ஒரு நர்ஸ் வந்து அவளிடம் ஆயஷ் வந்த தகவலை தெரிவித்தார்.இப்ப எதுக்கு இவரு இங்க வந்திருக்காரு ஊருலதான் ஒரு இடம் தனியா விடல.குட்டி போட்ட பூனை மாதிரி என்னையே சுத்தி சுத்தி வந்துட்டு இருந்தார் இப்ப இங்க.

எதை ப்ரூவ்பண்ண இப்புடி பண்றாரு இப்புடி எல்லாம் பண்ணுனா இவரு முதல்லபண்ணது இல்லைனு ஆகிடுமா என்று கடுப்பானவள் அவனை பார்க்க சென்றாள்.

மித்ரா செல்லும் போதும் ஆயுஷ் அங்கிருந்த வரவேற்பு அறையில் இருந்த சேரிலேயே அமர்ந்து இருந்தான்.வேகமாக அவனிடம் வந்தவள் பேச ஆரம்பித்தாள்.ச்ச...ச்ச....திட்ட ஆரம்பித்தாள்.

என்ன.எதுக்கு இப்ப இங்க வந்து இருக்கீங்க என்று கோபத்தை அடக்கி அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் சீறினாள்.அவள் குரல் கேட்டு கண் விழித்தவன் கண்களில் பெரும் நிம்மதி குடி கொண்டது.அடுத்து அவள் பேசிய வார்த்தையில் முகம் கூம்பினாலும் எதுவும் பேசாமல் அவளையே கண் இமைக்காமல் பார்த்து கொண்டு இருந்தான்.

ஆயுஷின் பார்வை மித்ராவிற்கு கோபத்தை ஏற்ற அவன் கையை பிடித்து வெளியே இழுத்து வந்தவள் அங்கிருந்த பூங்காவில்தான் நின்றாள்.அவனை கூர்மையாக பார்த்து கொண்டே வார்த்தைகளைவிட தயாரானாள்.

அப்பறம் சார்க்கு ஆபிஸ இங்க ஹாஸ்பிட்டல்ல மாத்திட்டாங்கனு சொல்லவே இல்ல என்று நக்கலாக கேட்டவளின் முகம் பின் இறுகியது எதுக்கு இப்புடிபண்ணிட்டு இருக்கீங்க.எத ப்ருவ்பண்ண நினைக்கிறீங்க. இப்படியெல்லாம் பண்ணுனா நீங்க முதல்ல பண்ணுனது இல்லைனு ஆகிடுமா, இல்ல நான்பட்ட மனரீதியான துன்பங்கள் இல்லை என்று ஆகிவிடுமா,என்றவள் பொறுமையாக அதே சமயம் அழுத்தமாக கேட்டு கொண்டு இருந்தவள் வாய் மூடும் முன் அவளை கைப்பற்றி இழுத்திருந்தான் அவள் கணவன்.

மித்ரா என்ன என்று யோசிக்கும் முன்பே ரகு அவளை நோக்கி கத்தியை மீண்டும் கொண்டு வர அதை தடுத்து அவளை காத்து அவளுக்கு விழ வேண்டிய கத்தி குத்தை அவன் வாங்கி கொண்டான்.மித்ரா கத்த ஆரம்பிக்கும் போதே அங்கு நடை பழகி கொண்டு இருந்தவர்கள் நோயாளியை பார்க்க வந்தவர்கள் என நிறைய பேர் இருக்க ரகுவை சுற்றி வளைத்து பிடித்தனர்.

மித்ராவை தாக்க முடியாமல் போன கோபத்தில் ரகு கத்த ஆரம்பித்தான்.டேய் இவளுக்காகதானே என்னை அந்த அடி அடிச்ச.இவ கழுத்தில் தாலி கட்ட தயார் ஆனதாலதானே என் கையை உடைச்ச இவள கொல்லாம விடமாட்டேன் என்று கத்தி கொண்டு இருந்தான்.

மித்ராவோ ஆயுஷ் மேல் கத்திகுத்து விழுந்ததில் அதிர்ந்து போய் இருந்தவள்,ரகு பேசுவதை கேட்டு அதிர்ச்சியுடன் ஆச்சரியமுமாக ஆயுஷை பார்க்க அவனும் அவளைதான் வலி நிறைந்த பார்வை பார்த்து கொண்டு இருந்தான்.அவனின் பார்வையில் இருந்த வலியை உணர்ந்தவள் பாவா என்று கத்தி கொண்டே அவனை பிடித்தாள்.

கண்ணில் சிறு மின்னல் வெட்ட மித்ராவை பார்த்த ஆயுஷிற்கு அப்போது நினைவு வந்தது மித்ரா திருமணம் ஆன அந்த அறுபது நாளில் அழைத்த அழைப்பு என்று.சிறு சிரிப்புடன் அவளை பார்த்து ஐ லவ் யூ என்றவன் மயக்க நிலைக்கு சென்றான்.

பாவா...............என்று மித்ரா கத்திய கத்தலில் அந்த மருத்துவமனையே அதிர்ந்தது.அதன் பின் வேலைகள் வேகமாக நடக்க ஆயுஷை மருத்துவமனையில் சேர்த்தனர்.கத்தி ஆழமாக இறங்காததால் பெரிய ஆபத்து எதுவும் இல்லாமல் போக மாலையே ஓரளவு தேறியிருந்தான் ஆயுஷ்.

நரேஷ் ஆயுஷை பார்க்க வந்தவன்.டேய் உன் பொண்டாட்டிய காப்பத்த சொன்னா எதுக்குடா இப்புடி நீ அடிவாங்கிட்டு வந்து படுத்து இருக்க.ஆனாலும் உன்னோட கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லாம போச்சு என்று கிண்டல் அடித்தான்.

மித்ராவோ என்ன அண்ணா நீங்க.பாவம் அவரே எனக்காக அடி வாங்கிட்டு வந்து இருக்காரு.அவர போய் கிண்டல்பண்றீங்க என்று வருத்தப்பட்டாள்.

அட நீ வேறமா அந்த ரகுவ இவன்பண்ணுன டார்ச்சருக்கு அவன் இவன இதோட விட்டதே பெரிய விஷயம்.

என்ன அண்ணா சொல்றீங்க என்று மித்ரா அதிர்ந்து போய் கேட்டாள்.

 

Anuya

Well-known member
#14
அத்தியாயம்-12

அட நீ வேறமா அவன் அப்பாவும் உன் அப்பாவும்தான் தப்பான பிஸ்னஸ் பண்றாங்க.அவன் அது பிடிக்காமதான் வெளிநாடு போய் தனியா வேற பிஸ்னஸ்பண்ணான்.உங்க மேரேஜ்பத்தி சொன்னவுடன் அவன் நிறைய டைம் உனக்கு பேச ட்ரைபண்ணுனான்.இவன்தான் பர்ஸ்ட்டு டைம் அவன் உனக்கு கால் பண்ணுனப்ப அட்டன்பண்ணுனான்.

அப்புறம்............. என்று இழுத்து ஆயுஷை பார்த்தான்.ஆயுஷ் சொல்லாதே என்று தலையை ஆட்ட அதை கண்டு கொள்ளாதவன்.அவன் நம்பர்ல இருந்து போன் வந்தா இவனுக்கு டைவர்ட் ஆகற மதிரி உன்னோட போன்ல செட்பண்ணிட்டான்.அவன் போன்பண்ணும்போதெல்லாம் இவன் முகம் போகும் போக்க நீ பாக்கணுமே. ஹா....ஹா.....ஹா.........அங்க கூட்ற பொண்ண கூப்டு திட்ட சொல்லி போன ஆன்பண்ணி கொடுப்பான்.ரெண்டு மூணு டைம் போன்பண்ணுனவன் அந்த பொண்ணு திட்டுன திட்டுல அதுக்கப்புறம் போன்பண்றதே இல்ல.

உங்க அப்பா மேரேஜ் பிக்ஸ்பண்ணுன உடனே உன்னோட ஆசைக்காக அமைதியா இருந்தவன் அவன் ஏர்போர்ட் வந்து இறங்குன உடனே தூக்கிட்டான்.நாங்க எப்பவும் கிரிமினல்ஸ வைக்கற இடத்துக்கு கூட்டி போய் டிசைன் டிசைனா டார்ச்சர்பண்ணுனான் பாரு நானே அலண்டுட்டேன்.

என்ன அண்ணாபண்ணுனாரு என்று நரேஷ் சொல்வதை மனதில் இனம்புரியா உணர்வுடன் கேட்டு கொண்டு இருந்தவள் ஆயுஷை பார்த்தாள் கண்ணில் வழிந்த காதலுடன்.

அந்த கொடுமைய ஏன் கேக்குற ஒரு டைம் பேசும் போது எனக்கு பிரியாணி பிடிக்கும் சமைக்க கத்துக்கோ டார்லிங்னு சொல்லிட்டான் அதனால அவனுக்கு ரெண்டு மணி நேரத்துக்கு ஒருவாட்டி பிரியாணி,பவர் ஸ்டார்படம்னு போட்டு டார்ச்சர்பண்ணுனவன் அவன் தப்பிக்க ட்ரைபண்ணவும் அடி வச்சி வெளுத்துட்டான்.

என் பொண்டாட்டியவா டார்லிங்னு சொல்றனு அவன் அடிச்ச அடில இனி அவன் அவனோட பொண்டாட்டிய கூட டார்லிங்னு கூப்பிட மாட்டான் அந்த அடி.

கல்யாணம்பண்ணியும் என் கூட கல்யாணத்துக்கு சம்மதிச்சுருக்காளே அப்புடினு மேல ஏதோ சொல்ல போனவன் வாயில் குத்தி,என் பொண்டாட்டியபத்தி பேசுன கொண்ணுடுவேன்னு சொல்லி இந்த கைதானே என் பொண்டாட்டி கழுத்துல தாலிகட்ட நினச்சதுனு கைய ஒடச்சுட்டான்.

முதல்ல அடிக்காம இருந்தவன் அப்புறம் ரொம்ப அடிச்சுட்டான் அதான் அந்த ரகுக்கு உன் மேல இவ்ளோ கோபம் இவனோட ஒவ்வொரு அடியும் உனக்காகனு அவன் அடிச்சதுல தெரிஞ்சுக்கிட்டவன் உன்ன தாக்கி அவன கஷ்டப்பட வைக்க ட்ரைப்பண்ணி இருக்கான்.அவன கண்காணிக்க நாங்க போட்ட ஆளு நீங்க ஆயுஷோட ஊருக்கு போனப்ப அவனும் அங்க வந்ததா தகவல் கொடுத்தான்.அதுல இருந்து உனக்கு காவலனா வேலை பார்க்க ஆரம்பிச்சிட்டான்.இவன்பண்ணுன அலப்பரைல நான்கூட இவன வச்சி பாடிகார்ட் பார்ட் 2 படம் எடுக்கலாமானு யோசிச்சு வச்சுட்டன்னா பாத்துக்கோ என்று சொல்லி முடித்தான்.

மித்ராவோ நரேஷ் கூறியதை கேட்டு வாயடைத்து நின்றாள்.தன் கணவனை பார்த்தவள் மனதில் இருந்த காயங்கள் இல்லாமல் போனது போல் இருந்தது.

தன் கணவன்,தன்னைப்பற்றி மட்டுமே யோசிப்பவன்,தனக்காக ஒவ்வொரு அடியையும் யோசித்து யோசித்து எடுத்து வைப்பவன்.கர்வமாக நினைத்தாள் என்னை காக்கும் காவலன் இவன் என்று.

பெண் மனம் எப்போதும் பெரிய விஷயங்களை தனக்கு உரிமையானவரிடம் எதிர் பார்ப்பது இல்லை.சின்ன சின்ன விஷயங்களில் கணவன் தனக்காக காட்டு அக்கறையையும், அன்பையும் மட்டுமே எதிர்பார்ப்பர்.அது போல் அவர்கள் செய்யும் சிறு செயலில் அவர்களின் பெரிய தவறைகூட மறந்து ஏற்று கொள்வர்.அது போல்தான் மித்ரா தன் கணவனின் தவறை மறந்து அவனின் காதலை உணர்ந்து,அவனின் கடமையை செய்ய உதவ வேண்டும் என்ற முடிவுக்கு வந்தாள்.

நரேஷ் சென்றபின் ஆயுஷை பார்த்தவள் அவனை நெருங்கி நெற்றியில் இதழ்பதித்து ஐ லவ் யூ பாவா....லவ் யூ சோ மச்.... என்றாள்.ஆயுஷ் அவளை ஆச்சரியமாக பார்த்து கொண்டு இருக்க.இனி தைரியமா கடமையை செய்யலாம் காவலனாகவும் என் கணவனாகவும் என்று கூறியவள் வெக்கத்தில் அவன் மார்பில் முகத்தை புதைத்து கொண்டாள்.நான்கு வருடங்களுக்கு பிறகு..............

டேய் கண்ணா ப்ளீஸ் வாங்கடா ஒரு வாய் வாங்கிக்கோங்கடா, அம்மாக்கு ஹாஸ்பிட்டல் வேற நேரமாச்சு வாங்கடா என்று மித்ரவருணா கெஞ்சி கொண்டு இருந்தாள் தன் மூன்று வயது இரட்டைகள் ஆதிரன்,மித்ரனிடம்.அவர்களோ அவளுக்கு ஆட்டம்காட்டி கொண்டு சாப்பிட அடம் பிடித்து கொண்டு இருந்தனர்.இவர்களின் சேட்டையை இராஜாத்தி பாட்டி இரசித்து பார்த்து கொண்டு இருந்தார்.

ஆயுஷோ எனக்கும் அவர்களுக்கும் சம்மந்தம் இல்லை என்பது போல் பேப்பர் படித்து கொண்டு இருந்தான்.கணவனை பார்த்த மித்ராவிற்கு கோபம் சுறு சுறுவென ஏறியது வேகமாக அவன் அருகில் சென்றவள்.இங்க இருக்கவங்களுக்கும் உங்களுக்கும் சம்மந்தமே இல்ல அப்படிதானே என்று கோபமாக கேட்டாள்.

ஏன் மீராமா அப்புடி கேக்கற............ ஆயுஷ்.

பின்ன நான் வேற என்ன கேக்கறது.எவ்ளோ நேரம் இவங்களோட போராறேன் ஏதாவது நீங்க கண்டுக்கறீங்களா, நீங்கபாட்டுக்கு பேப்பர் பாத்துட்டு இருக்கீங்க.நான் ஹாஸ்பிட்டல் போகலனு சொன்னாலும் படிச்ச படிப்பு வீணாக கூடாது மருத்துவம் பல பேர் உயிர காப்பத்தற வேலைனு விடவும் விட மாட்டிக்கிறீங்க.இவங்கள சமாளிக்கவும் உதவ மாட்டிக்கிறீங்க நான் என்னதான் செய்யட்டும்.

மித்ரா பேசி கொண்டே அவர்களது அறைக்கு ஆயுஷ் பின்னாடியே வந்திருந்தாள்.தங்கள் அறைக்கு வந்த ஆயுஷ் நீதானேடி தனிமை,தனிமைனு புலம்பன இப்ப பாரு நீயே கேட்டாளும் தனிமை கிடைக்கல.

ஹோ...........இப்ப சார் என்ன சொல்ல வர்றாரு என்னோட தனிமைய போக்கதான் அந்த கடவுள் ஒரே பிரசவத்தில் இரட்டை குழந்தைகள கொடுத்திருக்காருனு சொல்ல வர்றீங்களா.

பரவால பேபி என்ன கடவுள்னு சொல்லி பெரியாளாக்காதா என்ற ஆயுஷை மித்ரா புரியாமல் பார்த்தாள்.இல்லமா கடவுள் இரட்டை பிள்ளை குடுத்தாருனு சொன்னீயே நான்தானே.......... என்று கூற வந்தவனின் வாயை அவசரமாக மூடியவள்.ச்சீ பேச்ச பாரு வாய ஒடச்சுருவேன் போடா.

ஹேய் நில்லு நான் என்னோட கடமைய செய்யணும் என்றவனை பார்த்தவளுக்கு அது என்ன கடமை என்பது தெளிவாக தெரிய பாவா.... வேணா ஏற்கனவே இது ரெண்ட வச்சு சமாளிக்க முடியல இதுல இன்னொன்னுக்கு அடி போட்றிங்களா போய் கிளம்பற வழிய பாருங்க நேரம் ஆச்சு என்றவள் தன் மகன்களை நோக்கி சென்றாள் சிரித்து கொண்டே.

மீரா என்று அழைத்து ஆயுஷ் அவளையே கூர்மையாக பார்த்து கொண்டு நீ இன்னும் அந்த ரிசல்ட் சொல்லவில்லை என்றான். ஆயுஷையே பெருமையும்,காதலும் பொங்க பார்த்தவள் நீங்க கடமையான காவலன்தான்.வீட்டில் எங்களுக்கு வெளியில் மக்களுக்கு.சோ கணவனாக ஜெயித்துவிட்டீர்கள் என் மனதை என்றவள் சிட்டாக பறந்துவிட்டாள் அடுத்து கணவனின் செய்கை என்னவாக இருக்கும் என்பதை ஊகித்தபடி.

ஹேய்..எங்க ஓடற எப்புடியா இருந்தாலும் நைட் இங்கதான் வரணும் அப்போ பாத்துக்கறேன் என்றவனின் முன் தான் இந்த கேள்வி கேட்ட சந்தர்ப்பம் நியாபகம் வந்தது.

மீரா,ஆயுஷ் இருவருக்குள் இருக்கும் பிரச்சனை சரியாகி மீராவின் வளைகாப்பு முடிந்த போது இருவருக்கும் ஏற்பட்ட தனிமையில் ஆயுஷ் தன் மனதில் உருத்தி கொண்டு இருந்த கேள்வியை கேட்டான்.

மீராகுட்டி கணவனா நான் தோத்துட்டேன்.நல்ல கணவன் இல்லைனு சொன்னியே இப்பவும் உன்னுடைய மனதில் நான் தோற்று போனவனாகதான் இருக்கிறேனா என்று வலி நிறைந்த குரலில் கேட்டான்.

ஆயுஷை ஒரு நிமிடம் தீர்கமாக பார்த்த மித்ரா மலுப்பலாகவே பதில் சொல்லி காலத்தை ஓட்டிவிட்டாள்.ஆயுஷும் நினைவு இருக்கும் போது கேட்பவன் சில சமயம் அவளை கஷ்டப்படுத்தும் கேள்வியோ இது என்று யோசித்து கேட்காமல் விட்டுவிடுவான்.ஆனால் இன்று ஆயுஷிற்கு கேட்கும் எண்ணம் இல்லை என்றாலும் அவள் பதிலை எதிர்பார்க்காதவனாக கேட்க அவளோ மன நிறைவுடன் இன்று அவனுக்கான பதிலை தெரிவித்து இருந்தாள்.ஆயுஷ் கடமையான காவலனாக இருக்க,அவனுக்கு தேவையான நேரத்தில் தோள் கொடுக்கும் நண்பனாக நரேஷ் இருக்க,அவன் வாழ்வின் ஆதாரமாக தனிமையில் தவித்து துடித்து போய் இப்போது தனிமை என்ற இராட்சசனை அருகில் கூட நெருங்கவிடாத மித்ர வருணா இருந்தாள்.

இனி இவர்கள் வாழ்வு மகிழ்வும்,செல்ல சண்டைகளுமாக செல்ல அனைவரும் வாழ்த்தி விடை பெறுவோம்.

.....நன்றி......