கண்ணம்மா

#1
கண்ணம்மா

கள்ளமில்லா உள்ளத்தின் மறு பிம்பமாக வாழ்ந்த கண்ணம்மாவை நமக்களித்த ஆர்த்தி அவர்களுக்கு பாராட்டுகள்.

கிராம வாழ்க்கை முறையும் ,சொந்தங்களிடையே இருக்கும் பிணைப்பும் நாமும் இது போன்ற சூழ்நிலையில் வாழ்ந்திட வேண்டும் என்றெண்ண செய்கிறது.

விப்ரனின் நேசம் கண்ணம்மாவின் மனதிலும் மத்தாப்பூக்களை தூவி தென்றலாக அவளது நேசத்தை எதார்த்த நடையில் எவ்வித ஆங்கில கலப்புமின்றி ,தமிழை மட்டும் கையாண்டு எழுதிய விதத்திற்கு மனம் திறந்த வாழ்த்துகள் .
சுலோச்சனா, முத்துவேல் வார்த்தைகளில் இருந்த காரம் மழை வெள்ளமாக வடிந்ததும் வியக்கத்தக்கதே! கூட்டுக்குடும்பத்தில் ஏற்படும் உரிமை பிரச்சினைகளிலும் கண்ணம்மாவின் கற்பாறையான முடிவு கண்டு வியந்தது என்னவோ உண்மை !

மனிதனின் அகத்தோற்றம் அறிந்து, அவர்களின் ஆழ்ந்த பாசத்தை அறியாமல் ,புறத்தோற்றத்தில் புறம் பேசும் புது யுகவாசிகளுக்கு கண்ணம்மா கற்பனைக்கு எட்டாத காவியம் .

ஓவியன் வரைந்த ஓவியம் அவனது பெயரைக் கூறும் .அது போல்தான் மழைக்காலம் மனிதனின் உதவிகளை உரத்துக் கூறியதில் கூறில்லாதவளும் குலம் காத்தவளாகி போனால்.

கண்ணம்மா நிஜத்திலும் அந்த கண்ணனின் அம்மாவாகி போனாளே! ஆணின் பலவீனமாக இருப்பவள் மனதின் உறுதியில் ஆண்மகன்களின் வான் தேவதையான விந்தையை விருந்தாக்கிய எழுத்தாளர்க்கு மனமார்ந்த பாராட்டுகள் !
 
#2
அழகிய வரிகளால் உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்திருக்கீங்க.
மிக்க நன்றி தீபிகா! ❤️??