கல்யாண கலாட்டா - கதை திரி

Janu murugan

Moderator
Staff member
Jun 10, 2020
42
4
8
19
ஹாய் பிரெண்ட்ஸ்,

நமது தளத்திற்கு புது வரவான ஜானு அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..அவர்களின் "கல்யாண கலாட்டா" கதையின் பதிவுகள் இங்கு பதிவிடப்படும்.

மித்ரன் வேகமாக சென்று யாழினியின் காலை தட்டி விட்டதால் அவள் பக்கத்தில் உள்ள துருவ்வின் மேல் விழப்போனாள். துருவ் அவளை தாங்கிப் பிடித்து, மித்ரனை முறைத்தான். மித்ரன் ஹிஹிஹி...சாரி மச்சி என்றான்......
எல்லோரும் உள்ளே சென்று ஏற்கனவே புக் செய்யப்பட்ட ரூம் கீயை வாங்கிக் கொண்டு ரூம்க்கு சென்றனர். திவ்யா, யாழினி, சுபா ஒரு ரூமை பகிர்ந்து கொண்டனர். சிவா, கார்த்தி, ஹரி, ஆகாஷ், துருவ், மித்து என எல்லோரும் ஒரே ரூமையே எடுத்துக்கொண்டனர். மற்றவர்கள் தங்கள் விருப்பப்படி அறையை தேர்வு செய்து கொண்டனர். ரூம்க்கு சென்று கொண்டிருக்கையில், மித்ரன் யாழினியை அழைக்க, திவ்யா இடையில் புகுந்து என்ன பங்கு இப்ப யாழினியை துருவ் ரூம்க்குப் போக சொல்ல போறீயா என்றாள். மித்ரன் அவளை முறைத்து, என்ன பாத்தா எப்படி தெரியுது உனக்கு என்றான். அதற்குள் யாழினி வந்துவிட, திவ்யா, இரு பங்கு யாழினிகிட்டே கேட்கலாம் என்றாள். திவ்யா யாழினியிடம், பங்கு மித்ரன் உனக்கு் யார் என்று கேட்டாள். யாழினி யோசிக்காமல் மாமா என்றாள். திவ்யா மித்ரனை பார்த்து சிரித்தாள். மித்ரன், யாழினியை தலையில் கொட்டி உனக்கு போய் ஹெல்ப் பண்ண வந்த பாரு என்ன சொல்லணும் என்று விறு விறுவென நடக்க ஆரம்பித்தான். திவ்யாவும் அவன் பின்னே ஓடினாள். நம்மள எதுக்கு கூப்பிட்டாங்க எதுக்கு அடி வாங்கினோம் என தெரியாமல் பேந்த பேந்த விழித்தாள் யாழினி....

அனைவரும் அவரவர் ரூம்க்கு சென்று பயண களைப்பில் உறங்கிவிட்டனர். ப்ரொஃபஸர் வந்து அனைத்து ரூமையும் தட்டி சாப்பிட அழைத்தார். திவ்யா எழுந்து வந்து சார் நாங்க சாப்பிட வரல என கூறி ரூமில் சென்று படுத்துவிட்டாள். இங்கு நம்ம மித்ரன் ரூமை திறக்கவே இல்லை. அவர் தட்டி பார்த்து விட்டு கிளம்பிவிட்டார்......

மாலை 4 மணி அளவில் திவ்யாவுக்கு முழிப்பு வந்தது, எழுந்து உட்கார்ந்தாள். வயிற்றுக்குள் எலி ஓடுவது போன்ற உணர்வு. ஐயோ பசிக்குதே என யாழினியையும் சுபாவயும் எழுப்பினாள். அவர்கள் இருவரும் எழுவதாக தெரியவில்லை. தண்ணி எடுத்து அவர்கள் முகத்தில் ஊற்றிவிட்டாள். இருவரும் அலறி அடித்து எழுந்து கொண்டனர். திவ்யா அவர்களிடம் வாங்க காபி சாப்பிட்டு வரலாம் என்றாள். இருவரும் கடுப்பாகி அவளை துவைத்து விட்டனர்
திவ்யா அடி வாங்கிட்டு, முடிச்சிட்டீங்களா சரி வாங்க காபி குடிச்சிட்டு வரலாம் என்றாள் எதுவும் நடக்காததுபோல். இருவரும் காரித்துப்பிவிட்டு, நீ எல்லாம் திருந்தவே மாட்டியா என்றனர். திவ்யா திருந்தி என்ன பண்றது. கிளம்பி வாங்க காபி சாப்பிடலாம் என்றாள்......
இருவரும் கிளம்பி கொண்டிருக்க திவ்யா மித்ரன் ரூமை தட்டி காபி சாப்பிட அழைத்தாள். எல்லோரும் காபி குடிக்க சென்றனர். பாதிபேர் காபியும் மீதி உள்ளவர்கள் டீயும் ஆர்டர் செய்தனர். எல்லோரும் ஆர்டர் செய்தது வர, திவ்யாவும் யாழினியும் பஜ்ஜிக்கு சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். இதை பார்த்த மித்ரன் தலையில் அடித்துக் கொண்டான். இதுங்க வந்த வேலையை விட்டுட்டு இப்படி பஜ்ஜிக்கு சண்டை போட்டுட்டு நம்ம மானத்தை வாங்துங்க என்றான். அந்த கடைசி டேபிளில் அமர்ந்து ராதா மேமுடன் பேசிக்கொண்டிருந்த ப்ரொஃபஸர் அட ப்ரொஃபஸர் ப்ரொஃப ர்னு சொல்றோம் அவர் பேரு என்னன்னு சொல்லலையே அவர் பெயர் ராஜ்......
ராஜ் துருவ்வை அழைத்தார். துருவ் என்னவென்று கேட்க போக, மித்ரன் யாழினி என வாய் திறக்கும் முன், திவ்யா அவர்கள் இருவரது கப்பையும் இடம் மாற்றி, மித்ரனிடம் எப்படி பங்கு என கையை உயர்த்தி காட்டினாள். மித்ரன் அவளை பெருமையாக பார்த்து, நீ என்னோட இனம் என்று அடிக்கடி இப்படி ப்ரூவ் பண்ற பங்கு என்றான்.....
இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது துருவ் வந்துவிட்டான். அவனிடம் என்னவென்று கேட்க நம்ம ராஜ் சார் 6 மணிக்கு மீட்டிங் இருக்கு. எல்லோரையும் அவ ரூம்க்கு வரசொன்னார் என்றான். அவன் கூறி விட்டு கப்பை எடுத்து வாயில் வைத்தவுடன் அதிர்ச்சியாகி அனைவரும் பார்க்க, எல்லோரும் எனக்கு எதுவும் தெரியாது என்பதை போல கப்பை பார்த்து டீ குடித்துக் கொண்டிருந்தனர். துருவ். மச்சான் என அழைக்க அனைவரும் தலை நிமிர்த்து என்னடா என்றனர். துருவ், மச்சி என் கப் மாறிடுச்சுடா, நான் முதல்ல காபி குடித்தேன். இப்ப டீ இருக்குடா என்றான்......


மித்ரன் ஏதோ கூற வாய் எடுக்க, துருவ் அவன் முன் கையை நீட்டி நிறுத்து. நீ என்ன சொல்ல போறன்னு எனக்கு தெரியும். நான் டீ தான் முதல்ல இருந்து குடிச்சிட்டு இருக்கேன். எனக்கு அது காப்பி மாதிரி தெரிஞ்சிருக்கு. இரண்டுமே பாலில் போடுறது. அதனால நான் குழம்பிட்டேனு நீ சொல்லுவ, அதுக்கு இந்த எருமைங்க எல்லாம் ஆமா சாமி போடுங்க. அப்புறம் நான் குழம்பி நான் டீதான் குடிச்சேன்னு நானே நினைச்சுக்குவேன் . அதான என்றான் துருவ். மித்ரன் வாயை பிளந்துவிட்டான். மித்ரன், மைண்ட் வாய்ஸில் பயபுள்ள இவ்வளவு சீக்கிரம் உஷாராகிடுச்சு, சரி சமாளிப்போம் என்று நினைத்து வாயை திறக்க. துருவ் முந்திக்கொண்டு, இப்ப என்ன சொல்ல போற நான் போட்டிருக்கும் சட்டை பச்சை இல்லை மஞ்சள் என்று சொல்ல போறியா? இல்ல நம்ம டூர்க்கே வரல என்று சொல்ல போறீயான்னு பொங்கி எழுந்துவிட்டான்....

யாழினிக்கு புரை ஏற ஆரம்பிச்சுடுச்சு, இரும தொடங்கிவிட்டாள். துருவ் கோபமாக எழுந்து சென்றுவிட்டான். யாழி முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு, பங்கு என்ன பன்றது பங்கு என்றாள். மித்ரன் யாழினி கஸ்டபடுவதைப் பார்த்து, பங்கு நீ பீல் பண்ணாத. இந்த டூர் முடிந்து போகிறதுக்குள்ள அவன் உன் பின்னாடி சுத்துவான். இல்லைனா என் பெயரை மாத்திக்கிறேன் என்றான். திவ்யா யாழினியிடம் , பங்கு நீ மட்டும் எப்ப பாரு எங்கேஜ்டாவே இருக்கிற பங்கு என்றாள்
யாழினி புரியாமல் பார்க்க, திவி அங்க பாரு பிரபு வரான் என்றாள்......

யாழினி பிரபு வருவதை பார்த்து விட்டு வேகமாக மித்ரன் மற்றும் திவியின் கையை பிடித்து, இது உங்க கை இல்லை காலா நினைக்கிறேன். நான் இந்த டேபிளுக்கு அடியில ஒளிஞ்சுக்குறேன். நானே கடுப்புல இருக்கேன். அவன் வந்து டயலாக் பேசினா நான் கோவத்துல கத்திவிடுவேன். தயவு செஞ்சு என்னை காட்டிக் கொடுத்துவிடாதிங்க என்றாள். இருவரும் யோசித்துவிட்டு ட்ரை பண்றோம் என்றனர்........

யாழினி டேபிளுக்கு அடியில் அமர்ந்து கொண்டாள். பிரபு வழக்கம் போல வந்து யாழினியை தேடினான். அவள் அங்கு இல்லை என்றவுடன் சோகமாக அங்கிருந்து செல்ல முயற்சித்தவனை, மித்ரன் சீனியர் நில்லுங்க. ஏன் வந்ததும் எதுவும் பேசாம போறீங்க. வாங்க உட்காருங்க என பிரபுவை இழுத்து உட்கார வைத்தான். மித்ரன், சீனியர் எங்ககிட்ட ஏதோ கேட்க நினைக்குறீங்க. ஆனா கேட்க மாட்டுறீங்க, ஏன் தயங்குறீங்க எதுவா இருந்தாலும் கேளுங்க என்றான். பிரபு யோசித்துவிட்டு, யாழினி எங்க என்றான். மித்ரன் இத கேக்க தான் இவ்வளவு யோசிச்சிங்களா? அவ ரூம்ல இருக்கா சீனியர் என்றவனை, பிரபு சந்தேகமாய் பார்த்தான்.......

மித்ரன், என்ன சீனியர் யாழினி என்னமோ இவ்வளவு நேரம் எங்க கூட உட்கார்ந்து பேசிகிட்டு இருந்த மாதிரியும், நீங்க வர்றத பார்த்து அவ அந்த டேபிளுக்கு அடியில ஒளிஞ்சுகிட்ட மாதிரியும், நான் உங்க கிட்ட பொய் சொல்ற மாதிரியும் இருக்கு நீங்க பார்க்கிற பார்த்தா என்றான்......
மற்றவர்கள் ஆவென வாயைப் பிளந்தனர் நடந்ததை அப்படியே சொல்றான்னு. பிரபு அவன் பேசிய பேச்சை கேட்டு அந்த டேபிளை நெருங்க, யாழினி கண்ணை மூடிக் கொண்டாள். அந்த சமயம் பார்த்து பிரபு போன் அடிக்க, அவன் போனை எடுத்துக் கொண்டு அந்தப் பக்கம் போனான். யாழினி அவன் சென்றதும் எழுந்து வந்து மித்ரன் மற்றும் திவி தலையில் நறுக்கென்று கொட்டி விட்டு ஓடிவிட்டாள். இருவரும் ஆவென்று கத்திவிட்டனர்.....

பிரபு அவர்கள் கத்தலில் அங்கு ஓடி வந்து என்னவென்று கேட்டான். மித்ரன் முழித்துவிட்டு, அது வந்து சீனியர் கட்டெறும்பு கடிச்சுருச்சு சீனியர் என்றான். பிரபு இரண்டு பேருக்குமா என கேட்டான். மித்ரன் அது என்னை கடிச்சுட்டு, அந்த கட்டெறும்பு பறந்து போய் அவளையும் கடிச்சிருச்சு சீனியர் என்றான். பிரபு அப்படியா என்று விட்டு பின், கட்டெறும்பு எப்படி பறக்கும் மித்ரன் என்றான். மித்ரன் மைண்ட் வாய்ஸில் ஐயோ உளறிட்டமோ, கோணமண்டையன் கரெக்டா கேட்கிறானே. என்னைக்கும் இல்லாம இவனுக்கு புத்தி வந்திடுச்சோ என நினைத்து விட்டு, என்ன சீனியர் நீங்க கேள்வி மேல கேள்வி கேக்குறீங்க. பாருங்க நீங்க போன் பேசிட்டு இருந்தீங்க, அந்த பக்கம் யாரோ போன்ல இருக்காங்க என்றவுடன், பிரபு அட ஆமா என்று போனை காதில் வைத்துக் கொண்டு சென்றுவிட்டான். மித்ரன் அப்பாடா கோண மண்டையன பேக் பண்ணி அனுப்பிவிட்டோம் என இருவரும் ஹைபை அடித்துக் கொண்டனர். எல்லாரும் அவர்களைப் பார்த்து துப்பி விட்டு எழுந்து சென்றுவிட்டனர். திவ்யாவும் மித்ரனும் அதை துடைத்து விட்டு, விடு பங்கு நாம பார்க்காததா வா போலாம் என இருவரும் எழுந்து சென்றனர்.....

ஆறு மணிக்கு எல்லோரும் ரூமில் அசெம்பளாகி இருந்தாங்க. அதாங்க நம்ம ப்ரொஃபசர் சார் எல்லோருக்கும் ரூல்ஸ் போட்டுக்கொண்டிருந்தார். யாருமே என்கிட்ட சொல்லாம வெளியே போகக்கூடாது. எங்கு போனாலும் எட்டு மணிக்கு எல்லோரும் ரெசார்ட்டுக்குள்ள வந்துவிடனும் என ஏகப்பட்ட ரூல்ஸ் போட்டுக் கொண்டிருந்தார். ஒரு வழியா மீட்டிங் முடிந்து எல்லோரும் கிளம்பினர்.....

ரூம்க்கு வந்தவுடன் மித்ரன் ஒரு குழுவை ஆரம்பித்து, அதற்கு "துருவ் யாழினி கனெக்ஸன்" என பெயரிட்டு துருவைத் தவிர மற்றவர்களை அதில் சேர்த்தான். குரூப்பில் நைட் 10 மணிக்கு மீட்டிங் என மெசேஜ் அனுப்பினான். எல்லோரும் சாப்பிட்டு வந்து ரூமில் பேசிக்கொண்டிருந்தனர். யாழினி, சுபா, திவ்யா, மாடியில் அமர்ந்து இருந்தனர்.....

திவ்யா, என்ன பத்து மணிக்கு வர சொல்லிட்டு இதுங்களை இன்னும் காணோம் என புலம்பினாள். இங்கே துருவுக்கு தெரியாமல் எப்படி செல்வது என முழித்துக் கொண்டிருந்தனர் அனைவரும்......

மித்ரன் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தான். திடீரென வராத போனை காதில் வைத்து, சொல்லுடா மச்சான் என்னது நீயும் கொடைக்கானல்ல தான் இருக்கியா? நானும் இங்கதான் இருக்கேன். எந்த இடத்தில இருக்க மச்சான். ஓ.... அங்கயா? நான் இருக்குற இடத்துல இருந்து பத்து நிமிஷம் தான், இதோ வந்துவிடுகிறேன் என போனை வைத்துவிட்டு, மச்சான் என் பிரண்ட் இங்கேதான் இருக்கான். நான் போய் பாத்துட்டு வரேன் என மற்றவர்களிடம் வரும்படி கண்ணை காட்டிவிட்டு சென்றுவிட்டான். இங்கே மற்றவர்கள் எப்படி செல்வது என முழித்துக் கொண்டிருந்தனர். ஹரி சிவாவிடம், மச்சான் நீ ரெஸ்ட் ரூம்குள்ள போ. கொஞ்ச நேரத்துல, நான் எவ்வளவு நேரம் ஆகும் என்று கதவு தட்டுவேன் நீ 10 மினிட்ஸ் மேல ஆகும் என்று சொல்லனும் என்றான். சிவா எதுக்கு மச்சி என கேட்க, ஹரி, நான் சொல்றதை பர்ஸ்ட் நீ செய் அப்புறம் உனக்கே புரியும் என்றான். சிவா ஹரி சொன்னபடியே ரெஸ்ட் ரூமுக்குள் போய்விட்டான். ஹரி கொஞ்ச நேரத்தில் அம்மா என கத்தினான். துருவ் என்னவென்று கேட்க, அவசரமா ரெஸ்ட் ரூம் போகவேண்டும். வயிறு வலிக்குதுடா என ரெஸ்ட் ரூம் கதவை தட்டினான். சிவா பத்து நிமிஷம் ஆகும் என்று சொன்னான். ஹரி, பத்து நிமிஷமா? என்னால அதுவரைக்கும் தாக்கு பிடிக்க முடியாது. நான் வெளியே ஹோட்டல்ல ரெஸ்ட்ரூம் இருக்கு. அங்கே போறேன்னு வேகமா ஓடிட்டான். சிவா அட நன்னாரி பயலே என்ன யூஸ் பண்ணி இப்படி எஸ்கேப் ஆயிட்டியே என புலம்பினான்......


வெளியே வந்த சிவா ஹரியை வார்த்தைகளால் அர்ச்சனை செய்து கொண்டிருந்தான். ஆகாஷுக்கு திடீரென்று ஒரு ஐடியா தோன்றியது. சிவாவை தன் நம்பருக்கு கால் செய்யுமாறு சைகையால் கூறினான். சிவா இந்த கோமுட்டிபையன் என்ன செய்ய காத்திருக்கானோ என நினைத்து விட்டு கால் செய்தான். ஆகாஷ் போனை ஆன் செய்து, அப்பா நான் சாப்பிட்டேன் பா. சுபாவும் சாப்பிட்டா அப்பா. அவ நம்பருக்கு கால் பண்ணுனீங்களா பா. அவ நம்பர் நாட் ரீச்சபிள்னு வருதா? இதோ பக்கத்து ரூம் தான். நான் போய் கொடுக்கிறேன் என நைஸாக நழுவிவிட்டான்......

சிவா வாயில் கை வைத்து விட்டு, கார்த்தியிடம் பார்ரா இந்த கோமுட்டிக்கு கூட மூளை இருக்கு என்றான். கார்த்திக் அவனை முறைத்து, தூவென துப்பிவிட்டு உனக்கு வெட்கமா இல்லை. உன்னை யூஸ் பண்ணி தான் எஸ்கேப் ஆகிருக்கானுங்க என்றான். சிவா பொங்கி எழுந்து, யாரை பார்த்து என்ன சொன்ன. இப்போ என் ஐடியாவை மட்டும் பாரு என்று வேகமாக சென்று பெட்டில் படுத்துக் கொண்டான். கார்த்திக் அவனிடம் என்னடா பண்ற என்றான். இருவரும் பெட்ஷிட் போர்த்திக் கொண்டு பேசினர். சிவா. கார்த்தியிடம் நாம இப்ப தூங்குற மாதிரி நடிக்கிறோம். அப்புறம் அவனும் வந்து தூங்குவான். அவன் தூங்கிவிட்ட பிறகு நாம போகலாம் என்று குசுகுசுவென பேசினர். பெட்ஷிட்குள்ள இருந்து ஏதோ ஒரு மாதிரியாக சவுண்ட் வர, துருவ் பெட்ஷீட்டை இழுத்து பார்த்தான். பேசிக் கொண்டிருந்தவர்கள் திருதிருவென முழித்தனர். துருவ் என்னடா பண்றீங்க? என்றான். இருவரும் துருவ்வை பார்த்து ஒன்றும் இல்லை சும்மா பேசிட்டு இருந்தோம் என கூறி விட்டு, இருவரும் பெட்ஷீட்டை இழுத்து போத்தி தூங்குவது போல நடித்து, பின் உண்மையாகவே தூங்கிவிட்டனர். துருவ்க்கு தான் இன்று நடந்த அனைத்தையும் நினைத்து பார்த்ததால் தூக்கமே வரவில்லை.....


அங்கு எல்லோரும் இவர்கள் வருவார்கள் என வெயிட் பண்ணி பார்த்து விட்டு சரி இவனுங்க இப்போதைக்கு வர மாட்டாங்க என நினைத்து ப்ளான் போட ஆரம்பித்தனர். மித்ரன் எல்லோரிடமும் சீக்கிரம் ஏதாவது ஐடியா சொல்லுங்க என்றான் . எல்லோரும் யோசித்துக் கொண்டிருந்தனர். ரொம்ப நேரம் ஆன பிறகும் ஒரு ஐடியாவும் வரவில்லை. திவ்யா மித்ரனிடம் பங்கு, நீதானே எப்பவும் ஐடியா சொல்லுவ. நம்ம கேங்லயே நீ தான் அறிவாளி பங்கு என்றாள். மித்ரனுக்கு உச்சி குளிர்ந்துவிட்டது. காலரை தூக்கிவிட்டுக் கொண்டு, நீ சொல்றது கரெக்ட் தான் பங்கு. நீங்க இவ்வளவு கெஞ்சிக்கேட்குறதனால நானே ஒரு ஐடியாவை யோசிக்கிறேன் என்றான்.....

மித்ரன் சிறிது நேரம் யோசித்து, பின் எனக்கு ஒரு ஐடியா தோணுது என்று சொல்லும்போதே, யாழினி திவ்யாவின் மடியில் தலை வைத்து படுத்துவிட்டாள்.......


மித்ரன் ஐடியாவை தொடங்கினான். அதாவது என்னவென்றால் யாழினி ரூம் வாசலில் எண்ணெயை ஊற்றி வைத்து, பின் துருவ்வை ஏதோ அவசரம் என அழைக்க அவன் வரும்போது யாழினி வெளியே வந்து விழப்போவாள். யாழினியை துருவ் தாங்கி பிடிப்பான். நாம உடனே பேக் ரவுண்ட் சாங் போடனும். யாழினி அப்படியே அவள் மொத்த காதலையும் கண்ணில் தேக்கி அவனை பார்க்கணும். துருவ் அப்படியே யாழினி கிட்டே காதலை சொல்லிடுவான். எப்படி என் ஐடியா என்றான்.....
ஹரி ரொம்ப பழசா இருக்கு என்றான். மித்ரன் பரவாயில்லடா மச்சான். பழசா இருந்தா என்ன? புதுசா இருந்தா என்ன? நமக்கு காரியம் சக்சஸ் ஆனா ஓகே தானா என்றான். எல்லோரும் ஓகே ஜமாய்ச்சுடலாம் என்றனர்......

வாசகர்கள் அனைவருக்கும் இனிய, உலக புத்தக தின நல்வாழ்த்துக்கள்....
கலாட்டாக்கள் தொடரும்....
 

Janu murugan

Moderator
Staff member
Jun 10, 2020
42
4
8
19
ஹாய் பிரெண்ட்ஸ்,

நமது தளத்திற்கு புது வரவான ஜானு அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..அவர்களின் "கல்யாண கலாட்டா" கதையின் பதிவுகள் இங்கு பதிவிடப்படும்.மித்ரன் ஐடியாவை சொன்னவுடன் எல்லோரும் ஜமாய்ச்சுடலாம் என்றனர். மித்ரன் திவ்யாவை பார்க்க, அவள் தூங்கிவிட்டிருந்தாள். அவன், என்ன பங்கு இவ இப்படி தூங்குறா? ஐடியாவை கேட்டாளா? இல்லையா? என்று தெரியலையே என்றான். ஹரி, விட்றா மச்சான். இவ இந்த பிளான்க்கு யூஸ் ஆகமாட்டா என்றான், நாளைக்கு பார்த்துக்கலாம் என்றான். எல்லோரும் அவரவர் ரூமிற்கு சென்றனர்......

யாழினி திவ்யாவை எழுப்பி, ரூம்க்கு கூட்டி சென்றாள். மித்ரன், ஆகாஷ், ஹரியும் ரூம்க்கு வந்தனர். அங்கு சிவாவும் கார்த்தியும் இழுத்துப் போர்த்தி தூங்கிக் கொண்டிருந்தனர். துருவ் இன்னும் தூங்காமல் போனில் எதையே பார்த்துக் கொண்டிருந்தான். மித்ரன் சிவாவையும் கார்த்தியையும் முறைத்துவிட்டு, எருமைங்க எப்படி தூங்குதுங்க பாரு. ஐடியா கொடுக்கவர மூஞ்சிய பாரு, காலையில் இவனுங்களுக்கு இருக்கு நினைத்து விட்டு தூங்கச் சென்றுவிட்டான்.....

துருவ் காலையில் எழுந்து குளித்து விட்டு அமர்ந்திருந்தான். ஹரி குளித்துக் கொண்டிருந்தான். சிவாவும் அப்போதுதான் கண்விழித்து போனில் டைம் பார்த்தான். அய்யோ விடிஞ்சுருச்சா அவன் தூங்குற வரைக்கும் நடிக்கிறேனு சொல்லிட்டு நாம தூங்கிட்டோமே என்று நொந்துவிட்டு, கார்த்திக்கை எழுப்பினான். டேய் மச்சான் எழுந்திருடா, நாம தூங்குற மாதிரி நடிச்சுட்டு உண்மையாவே தூங்கிட்டோம் என்றான்.....
ஹரி பாத்ரூம் கதவு திறக்க, அந்த சத்தம் கேட்டு சிவாவும் கார்த்தியும் தூங்குற மாதிரி நடிச்சாங்க. வெளியில் வந்த ஹரி அவர்களைப் பார்த்து, எருமைகளா என்று அவர்களை அடித்தான். சிவா அப்போதுதான் எழுந்தது போல எதுக்கு டா மச்சான் அடிக்கிற என்றான். ஹரி, கேவலமா நடிக்காதீங்கடா. நீங்க எழுந்தத நான் பார்த்துட்டேன். ஐடியா சொல்ற மூஞ்சிய பாரு. குறட்டை விட்டு தூங்கிட்டு இருக்கீங்க லூசுங்களா என்றான். இருவரும் இளித்து சாரிடா மச்சான் என்றனர். சிவா, என்ன மச்சான் என்ன ஐடியா பண்ணி இருக்கீங்க என்றான். ஹரி, அதெல்லாம் நாங்க பாத்துக்குறோம். அந்த தகர டப்பா தலையன் ஏதோ பிளவர் கார்டனுக்கு கூட்டிட்டு போறேன்னு சொல்லி இருக்கான். நீங்க போய் குளிச்சிட்டு கிளம்பி விடுங்கள் என்றான்.....

யாழினி எழுந்து குளித்து கிளம்பிவிட்டாள். மித்ரன் பிளான் போட்ட படியே எண்ணையை தரையில் ஊற்றினான். சுபா அந்த கார்னரில் நின்று யாரும் வராமல் பார்த்துக் கொண்டாள். திவ்யா அப்போதுதான் கண் விழித்தாள். எழுந்து பெட்டில் உட்கார்ந்து போனை பார்த்துக் கொண்டிருந்தாள்....


ஆகாஷ் போனில் பாட்டை செலக்ட் செய்து கொண்டு, மறைந்து நின்று வெயிட் பண்ணிக் கொண்டிருந்தான். பிளான்படி எல்லாம் நடக்கிறதா என மேற்பார்வை பார்த்துக்கொண்டிருந்தான் மித்ரன். ஹரி
துருவிடம் ஓடிப்போய் ஆகாஷ் வழுக்கி விழுந்துட்டான்டா என கத்தினான். துருவ், அட லூசு பயலே, விழுந்தவன போய் தூக்கிவிடாமல் என்னை கூப்பிடுற எருமை என்று அவனை முன்னாடி தள்ளி விட்டு, பின் தானும் ஓடினான். ரூமில் உட்கார்ந்திருந்த திவ்யா, ஹரி கத்தியது கேட்டு வேகமாக எழுந்து யாழினிக்கு முன்னால் வெளியே வந்து எண்ணெயில் காலை வைத்துவிட்டாள். அவள் வழுக்கி விழப்போக, முன்னாடி வந்து கொண்டிருந்த ஹரி அவளை பிடித்து கொண்டான். யாழினி வாயை பிளந்து கொண்டு நின்றுவிட்டாள். மித்ரன் தலையில் கை வைத்துவிட்டான். ஆனால் ஆகாஷ் தன் வேலையை சிறப்பாக செய்து, ஒரு நல்ல பாட்டை போட்டுவிட்டான்......
" நீ பார்த்த விழிகள்
நீ பார்த்த நொடிகள்
கேட்டாலும் வருமா கேட்காத வரமா
இது போதுமா இதில் அவசரமா இன்னும் வேண்டுமா அதில் நிறைந்துடுமா
நாம் பார்த்த நாள் நம் வசம் வருமா உயிர் தாங்குமா விழிகளில் முதல் வலி நிஜமடி பெண்ணே
தொலைவினில் உன்னை நிலவினில் கண்டேன் நடமாட
வலியடி பெண்ணே வரைமுறை இல்லை
வதைக்கிறாய் என்னை மெதுவாக".....
ஹரியும் திவ்யாவும் வேறு உலகில் சஞ்சரித்துக் கொண்டு இருந்தனர். இருவருடைய கண்களும் நேரே சந்தித்து கொண்டு இருந்தது. துருவ் என்ன நடக்கிறது என தெரியாமல் பார்த்துக் கொண்டிருந்தான். யாழினி ஓடி வந்து திவ்யாவை உலுக்கி, அடிப்பாவி எனக்கு பிளான் பண்ணிட்டு நீ என்ஜாய் பண்ணிட்டு இருக்க. பச்சைத் துரோகி என்று திட்டினாள். இருவரும் அப்போதுதான் சுய நினைவு பெற்றனர்...
மித்ரன் அங்கு வந்துவிட்டான். ஆகாஷ் வந்து, மச்சான் பாட்டு கரெக்டா போட்டனா என்று கையை உயர்த்தி காட்டினான். சூப்பர் டா என்றான் மித்ரன். துருவ் ஆகாஷை பார்த்து, நீ கீழே வழுக்கி விழுந்திட்டேன்னு ஹரி சொன்னான் நீ நல்லா இருக்க என்றான். ஆகாஷ், எனக்கா என்றுவிட்டு, ஆமாமா இந்த காலுதான் என்றான். துருவ் ஆகாஷிடம், உனக்கு எந்த விஷயத்தில் பொய் சொல்றதுன்னு ஒரு விவஸ்தை இல்ல, லூசுங்களா என்று திட்டி விட்டு சென்றுவிட்டான்......

துருவ்சென்றதும் ஹரியையும் திவ்யாவையும், எல்லோரும் கொலைவெறியோடு முறைத்துக் கொண்டிருந்தனர். மித்ரன், ஏன் பங்கு உண்மைய சொல்லு, நீ வேணும்னு தான நடுவுல வந்த என்றான். திவ்யா தலையை வேகமாக ஆட்டி, இல்ல பங்கு எனக்கு இந்த பிளானே தெரியாது என்றாள். மித்ரன், ஹரியை முறைத்து உனக்கு பிளான் தெரியும் தானே. அப்புறம் ஏன் நீ முன்னாடி வந்த என்றான். ஹரி, நான் எங்க வந்தேன். இந்த துருவ் தான் என்னை இழுத்து முன்னாடிவிட்டான் என்றான். மித்ரன், என்னவோ போங்க. பிளான கரெக்டா சொதப்பிட்டிங்க என்றான். திவ்யா, பங்கு இந்த பேக்ரவுண்ட் சாங் யார் போட்டது என்றவுடன், ஆகாஷ் முன்னாடி வந்து நின்றான். திவ்யா அவன் தோளில் தட்டி பங்கு டைமிங் கரெக்டா இருந்துச்சு பங்கு. ஆனால், சாங் இன்னும் பெட்டராக போட்டிருக்கலாம் என்றாள். மித்ரன் இந்த ரணகளத்திலேயும் உனக்கு ஒரு குதூகலம் கேக்குதா என்றான். திவ்யா,ஹிஹிஹி என இழுத்து சமாளித்தாள்....

திவ்யா நீங்க அவளுக்கு பிளான் பண்ணுனிங்க. ஆனால், கடவுள் எனக்கு பிளான் பண்ணிவிட்டான் என்றாள் சூரியின் பாணியில். மித்ரன் அவளை முறைத்து, அங்க பாரு யாழினிய , எவ்ளோ சோகமா இருக்கா என்றான். திவ்யா யாழினியிடம் சென்று, பங்கு சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காத. இது உன் வாழ்க்கை நீ தான் வாழனும். நாங்கள் இடையில வர முடியாது. நீயே போய் அவன்கிட்ட ப்ரொபோஸ் பண்ணி விடு என்றாள். அவள் பேசிக் கொண்டிருக்கையில் மித்ரன் இடையில் புகுந்து, பங்கு உனக்கு சீரியஸாலாம் பேச வருமா என்றான். திவ்யா அவனை முறைத்துவிட்டு, கொஞ்சம் பேசாம இருடா. நான் கொஞ்சம் சீரியஸா பேசினா உனக்கு பிடிக்காது என்று சிரித்துவிட்டு, பங்கு இன்னைக்கு பிளவர் கார்டன் போறோம்ல, அங்க வச்சு அவனுக்கு ப்ரொபோஸ் பண்ணிடு என்றாள்....

யாழினி சிறிது நேரம் யோசித்து விட்டு, நான் ஒரு பொண்ணு. நான் எப்படி ப்ரொபோஸ் பண்றது என்றாள். மித்ரன், நீ பொண்ணுனு இப்ப தான் உனக்கு தெரியுதா? இவ்வளவு நாள் கூத்தடிக்கும் போது தெரியலயா? என்றான். யாழினி
அவனை முறைத்துவிட்டு, சரி நானே சொல்றேன் என்றாள். எல்லோரும் சாப்பிட்டுவிட்டு பிளவர் கார்டனுக்கு செல்ல பஸ்சில் ஏறினர்.....

நம்ம வானரங்கள் வந்த பஸ்ல ராஜ் சார் வந்ததால அமைதியான பிள்ளை மாதிரி நடிச்சுட்டு இருந்தாங்க. சிறிது நேரத்தில் கார்டனுக்கு போயிட்டாங்க எல்லோரும். என் கூடவே எல்லாரும் வர வேண்டும், தனியா போக கூடாது எனக்கூறி ராஜ் சார் திரும்பி பார்க்க ஒருத்தனை கூட காணவில்லை. உங்கள எல்லாம் கூட வச்சிக்கிட்டு என்ன பண்ண போறேனோ என தலையில் அடித்துக்கொண்டார் ராஜ் சார்.....

திவ்யா அங்கிருந்து எல்லா பூக்களிலும் ஒரு பூவை எடுத்து ஒரு கொத்தாக செய்து யாழினியிடம் கொடுத்து, இந்தா பங்கு உன் ஆளுக்கு கிட்ட போய் லவ் ப்ரொபோஸ் பண்ணிவிடு என்றாள்.....
யாழினியும் அதை வாங்கிக்கொண்டு, கையில் வைத்துக்கொண்டு துருவ்வை தேடி கொண்டிருந்தாள். துருவ் பூக்களை ரசித்துக் கொண்டு சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்ததான். திவ்யா துருவ்வை பார்த்துவிட்டு, யாழினியிடம் பங்கு உன் ஆளு அங்க இருக்கான் பாரு, போய் சொல்லு நாங்க இங்க இருந்து பார்க்கிறோம் என்றாள். ஹரியும் மித்ரனும் யாழினியிடம் போய் சொல்லு, ஆல் தி பெஸ்ட் என்றனர்.....

துருவ் பூக்களை வேடிக்கை பார்த்துக்கொண்டே முன்னேறினான். அப்போது முன்னாடி நின்று இருந்த பெண் கால் வழுக்கி விழ, துருவ் ஓடிச்சென்று பிடித்துவிட்டான். யாழினி அதைப் பார்த்து அப்படியே சிலையாக நின்றுவிட்டாள். கையில் இருந்த பூவை கீழே போட்டுவிட்டாள்.
துருவ் அந்த பெண்ணிடம் பார்த்து வர கூடாதா என்றான். அந்த பெண் கவனிக்கவில்லை என்றாள். அவள் ரொம்ப தேங்க்ஸ் மிஸ்டர் என நிறுத்தினாள். துருவ், சிரித்துக்கொண்டே துருவேந்திரன் என்றான். அப்பெண் நைஸ் நேம் அண்ட் தேங்க்ஸ் மிஸ்டர் துருவேந்திரன் என்றாள். துருவ் அவ்விடத்திலிருந்து நகர்ந்துவிட்டான். அப்பெண் துருவ்வையே பார்த்துக் கொண்டிருந்தாள்....

யாழினி, அண்ணா என உதட்டை பிதுக்கிக் கொண்டு ஹரியை பார்க்க, ஹரி இதோ வரேன் மா தங்கச்சி என ஆவேசமாக சென்றான் யாழினியுடன். யாழினி அவளுடன் சண்டையிட ஆரம்பித்தாள். யாழினி உனக்கு கண்ணு தெரியல, ஏண்டி என் ஆளு மேல இடிச்ச. ஒழுங்கா நடக்க மாட்டியா? ஏண்டி என் ஆளை முழுங்குற மாதிரி பாக்குற என சண்டையிட, இருவரைக்கும் வாய் சண்டை நீண்டது. அப்பெண் கையை நீட்டி யாழினியை அடிக்க வர, ஹரி என் தங்கச்சியவே அடிக்கிறியா? என கைபிடித்து தடுக்க, யாழினி அய்யோ அண்ணா விட்ருங்க. இவ என் ப்ரண்ட் தேவி, நாங்க ஸ்கூல்ல இப்படித்தான் சண்டை போடுவோம் என்றாள்....
ஹரி, என்னது என கேட்டு தலையில் வைத்துவிட்டான். தேவியும் யாழினியும்
ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டனர். ஹரி பின்னாடி திரும்பி மற்றவர்களை பார்க்க, அவர்கள் இவனைப் பார்த்து சிரித்தனர். மித்ரன் அவனிடம், நாங்கள் அமைதியாக இருக்கும்போது நீ மட்டும் ஏன் பொங்கி எழுந்து போன அனுபவி என்றான்......

யாழினி, ஹரியிடம் சாரி அண்ணா என்றாள். அப்புறம் அந்த தேவியை எல்லோருக்கும் அறிமுகப்படுத்தினாள். தேவி யாழினியிடம் அது உன் ஆளா என்று கேட்டாள். யாழினி ஆமாடி என்றாள். யாழினி, ரொம்ப நாளா நானும் ட்ரை பண்றேன், லவ்வ சொல்ல முடியலடி என்றாள். தேவி நல்ல வேளை, யாழு சொன்ன என்றாள். யாழினி ஏன் மச்சி என்றாள். தேவி, மச்சி நான் உன் ஆளுகிட்ட ப்ரொபோஸ் பண்ண நினைச்சேன் என்றாள். யாழினி, எப்போதுமே எனக்கு புடிச்சதுதான் உனக்கு பிடிக்குமா? என்றாள். பின் தேவி டைமாயிடுச்சு மச்சி, போன் பண்றேனு சொல்லி கிளம்பிவிட்டாள். யாழினி அறிந்திருக்க மாட்டாள், தேவியை அடுத்து அவள் அந்த மாதிரி ஒரு சந்தர்ப்பத்தில் சந்திக்க நேரிடும் என்று.....

திவ்யா யாழினியை முறைத்தாள். யாழினி என்னவென்று கேட்க, திவ்யா பார்த்த அரை மணி நேரம் கூட ஆகல. அவளே ப்ரொபோஸ் பண்ண போறேன்னு சொல்றாள். நீ ரொம்ப நாளா பார்த்துகிட்டேதான் இருக்க. உனக்கு வெட்கமாய் இல்லையா? என்று திட்டினாள். யாழினி பொங்கி எழுந்து, இப்ப பாரு எப்படி போய் ப்ரொபோஸ் பண்றேன்னு எனக் கிளம்பினாள்.....
கலாட்டாக்கள் தொடரும்....
 

Janu murugan

Moderator
Staff member
Jun 10, 2020
42
4
8
19
ஹாய் பிரெண்ட்ஸ்,

நமது தளத்திற்கு புது வரவான ஜானு அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..அவர்களின் "கல்யாண கலாட்டா" கதையின் பதிவுகள் இங்கு பதிவிடப்படும்.

யாழினி பொங்கி எழுந்து இப்ப பாரு போய் எப்படி ப்ரொபோஸ் பண்றேன் என்றாள். திவ்யா, கிழிச்ச அங்க பாரு அந்த தகர டப்பா தலையன் நம்மள கூப்பிடுறாரு டைம் ஆயிடுச்சு என்றாள். அப்புறம் எல்லாரும் கோவிலுக்கு போனாங்க. யாழினிக்கு துருவ்கிட்ட ப்ரொபோஸ் பண்ண வாய்ப்பே கிடைக்கல. எல்லோரும் சுத்தி பார்த்துட்டு ரெசார்ட்டுக்கு வந்து சாப்பிட்டுவிட்டு ரூம்க்கு போயிடாங்க......

மித்ரன் குரூப்பில், எல்லோரும் வாங்க எட்டு மணிக்கு மீட்டிங் இருக்கு என செய்தி அனுப்பினான். மித்ரன், எல்லோரிடமும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தான். மித்ரன், எல்லோரும் கேளுங்க நாளைக்கு கண்டிப்பா துருவ்கிட்ட யாழினி ப்ரொபோஸ் பண்றதுக்கு ஒரு நல்ல மாடுலேஷன் எல்லோரும் யோசிங்க என்றான். யோசித்துக்கொண்டே இருந்த யாழினி, அப்போதுதான் திவ்யா வரவில்லை என யோசித்தாள். வந்ததிலிருந்து அவளை பார்க்கலை என்றாள். சிவா உடனே, மச்சி ஹரியையும் வரும்போது கூப்பிட்டேன். நீ போ நான் வரேன் என சொல்லி விட்டான் என்றான். மித்ரன், இப்போ நாம ப்ளான் பண்றதை விட அவங்கள தேடுறதுதான் முக்கியம் என்றான்.....


எல்லோரும் ஒவ்வொரு பக்கமாக தேடினர். யாழினி மாடிக்கு சென்றவள் ஒரு காட்சியை பார்த்து அப்படியே சிலையாக நின்றுவிட்டாள். அவள் மற்றவர்களுக்கு கால் பண்ணி அங்கேவர சொன்னாள். வந்தவர்களும் அந்த காட்சியை பார்த்து வாயில் கை வைத்து விட்டனர்......

அவர்கள் பார்த்த காட்சி என்னவென்றால் திவ்யா அமர்ந்து இருக்க, ஹரி அவள் மடியில் தலைவைத்து படுத்திருந்தான். இருவரும் கதை பேசிக் கொண்டிருந்தனர். மித்ரன் அதை பார்த்து பங்கு இதுங்களை என்ன பண்றேன் பாரு என்று கிளம்ப, அவனை யாழினி நில்லு பங்கு ஒரு நிமிஷம் என்று விட்டு, ஹரிக்கு கால் செய்தாள்.....


ஹரி போனை பார்த்து ஐயோ டார்லிங் யாழினி கால் பண்றாள் என்றான். திவ்யா, எடுத்து சமாளி டார்லிங் என்றாள். அவன் போனை எடுத்து சொல்லுங்க சிஸ்டர் என்றான். யாழினி, அண்ணா எங்க இருக்கீங்க என கேட்டாள். ஹரி, திக்கித் திணறி சிஸ்டர், இங்க என் பிரென்ட் வீடு ஒன்னு இருக்கு. அவனைப் பார்க்கத்தான் போய் இருக்கேன், கொஞ்ச நேரத்துல வந்துருவேன் என்றான். யாழினி, சரிங்க அண்ணா பாத்து போயிட்டு வாங்க என்று போனை வைத்துவிட்டாள்.....யாழினி, திவ்யாவுக்கு கால் செய்தாள். திவ்யா போனை பார்த்து விட்டு டார்லிங் உனக்கு சமாளிக்கவே தெரியல. இப்ப பாரு நான் எப்படி சமாளிக்கிறேன் என்று போனை அட்டென்ட் செய்து, சொல்லு பங்கு என்றாள். யாழினி, எங்க இருக்க பங்கு, என்ன பண்ற பங்கு என்றாள். திவ்யா, அதை ஏன் கேக்குற பங்கு. உன் காதலை சேர்த்து வைக்க தான் என்ன பண்ணலாம்னு கொட்ட கொட்ட தனியா உட்காந்து ஐடியாவ யோசிச்சுட்டு, இருக்கேன் என்றாள். ஆனால், நீதான் என்ன புரிஞ்சிக்கவே மாட்டேங்கிற. என் நினைப்பு எல்லாம் உன் மேல தான் இருக்கு என்றாள். எல்லோரும் அடிப்பாவி என்று பார்த்தனர்......


யாழினி, எப்படி பங்கு உனக்கு என் மேல இவ்வளவு அக்கறை, ரூம்க்கு வா உனக்கு நிறைய தரேன் என்றாள். திவ்யா சரிபங்கு எனக்கு ஒரு ஐடியா தோணுது நான் யோசிச்சுட்டு சொல்றேன் என்று போனை கட் பண்ணிவிட்டு, எப்படி நான் சமாளித்தேன் என்று இல்லாத காலரை தூக்கி விட்டுக் கொண்டாள்.....

திவ்யா, பின் அதை விடு டார்லிங், நமக்கு பையன் பிறந்தா என்ன பெயர் வைக்கலாம் என்று ஹரியிடம் கேட்டாள். மித்து வந்து ஆங் கழுவுன காபின்னு வை என்றான். ஹரியும் திவ்யாவும் அவசர அவசரமாக எழுந்து நின்று ஒருவரை ஒருவர் பார்த்து விட்டு திருதிருவென முழித்தனர். திவ்யா ஹரியின் முதுகின் பின் பக்கம் ஒளிந்து கொண்டாள்......

யாழினி திவ்யாவின் காதை பிடித்து திருகி, என் லவ்க்கு ஹெல்ப் பண்றேன் பண்றேன்னு சொல்லிட்டு, நீ உன் காதலை வளர்த்துட்டு இருக்கியா?. எப்படி எப்படி என் லவ்வ சேர்த்து வைக்க, நீ கொட்ட கொட்ட தனியா உக்காந்து யோசிச்சுட்டு இருக்கியா? உன் நினைப்பு எப்போவுமே என்ன பத்தி இருக்குமான்னு தலையில் கொட்டினாள். திவ்யா, வலிக்குது பங்கு விடு பங்கு என கத்தினாள்.. ...

மித்ரன் ஹரியிடம், மச்சி அந்த கழுவுன காபியைக் குடித்துச்சிட்டுமா நீ அவளை செலக்ட் பண்ண என்றான். ஹரி, சிரித்துக்கொண்டே ஆமாம் என்றான். மித்ரன், கழுவுன காப்பியே தான் வேணுமா? என்றான். ஹரி வேகமாக ஆமான்னு தலையாட்டினான். மித்ரன், சரி உன் தலையெழுத்த யாரால மாத்த முடியும் என்று விட்டான்......யாழினி, வராத கண்ணீரை துடைத்து, நேற்று லவ் பண்ண ஆரம்பிச்சதும் எல்லாம் ரொமான்ஸ் பண்ணுதுங்க. நானும் ரொம்ப நாளா பார்த்துகிட்டே தான் இருக்கேன் என்றாள். மித்ரனுக்கு கால் வரவே, செல்போனை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டான். திவ்யா யாழினியிடம், இப்ப என்ன பங்கு உனக்கு ப்ரொபோஸ் தான பண்ணனும், வா என்று துருவ் ரூமிற்குள் சென்று துருவ் முன் நிறுத்தினாள்......


துருவ் அவர்களை பார்த்து என்னவென்று கேட்டான். திவ்யா, துருவ் யாழினி உன்கிட்ட ஏதோ சொல்லனுமா? நீயே கேட்டுகோ என்று விட்டு வெளியே வந்து விட்டாள்.....

யாழினி இப்படிக் கோர்த்துவிட்டுட்டு போயிடுச்சே எருமை என மனதுக்குள் திட்டி தீர்த்தாள். துருவ், மனதிற்குள் ஒரு வேளை ப்ரொபோஸ் பண்ணி விடுவாளோ? அப்படி பண்ணிட்டா என்ன பண்ணுவேன். கடவுளே மித்ரன் பாவம். அவன் உடைந்து போய் விடுவானே, எனக்கு என் ஃப்ரெண்ட் ஷிப் தான் முக்கியம். இல்ல யாழினி லவ்வ அக்செப்ட் பண்ண கூடாது என எண்ணிக்கொண்டு, சொல்லு யாழினி என்ன என்றான்....


யாழினி திக்கி திணறி அது அதுவந்து துருவ் என ஆரம்பித்தவள், மனதிற்குள் கூல் யாழினி. இதை விட்டா வேற சான்ஸ் கிடைக்காது சொல்லிவிடு என தனக்குத்தானே கூறிக் கொண்டாள். யாழினி, அது ஒண்ணும் இல்ல துருவ். உன்னை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு, ஐ லவ் யூ. வில் யூ மேரி மீ ? என்று வேகமாக சொல்லி முடித்தாள். துருவிற்கு மேலே பறப்பது போன்ற உணர்வு. மித்ரன் யாழினியை சின்னவயசுல இருந்தே காதலிக்கிறேன் என்று மித்ரன் சொன்ன வார்த்தை அவன் மூளைக்குள் ஓடியது.
துருவிற்கு தன்னுடைய பிரெண்ட்ஷிப் தான் முக்கியம் என்று தோன்ற மனதை கல்லாக்கிக் கொண்டு, பேச ஆரம்பித்தான்.....

யாழினிக்கு தன் இதயத் துடிப்பு தனக்கே கேட்பது போன்ற உணர்வு. நொடிகள் யுகங்களாக கடந்தன அவன் பதிலை எதிர்பார்த்து, நகத்தை கடித்துக் கொண்டிருந்தாள். துருவ், சாரி எனக்கு உன் மேல அப்படி ஒரு எண்ணம் வந்தது இல்லை. எனக்கு உன் மேல லவ் இல்லை என்று திரும்பிக் கொண்டு கூறினான்....


யாழினிக்கோ உலகமே இருண்டு போன மாதிரி உணர்வு. யாரோ தன்னை சம்மட்டியால் அடித்தது போன்ற உணர்வு. அவளுக்கு கண்கள் குளமாகியது. யாழினி துருவ்வின் முன் சென்று நின்று, இல்ல துருவ் நீ பொய் சொல்ற. உனக்கு என் மேல லவ் இருக்கு. உன் கண்ணில் நான் எனக்கான காதலை பார்த்து இருக்கேன் என்றாள்.....

யாழினியின் கண்ணீரைப் பார்த்து துருவ்வுக்கு யாரோ தன் இதயத்தை கிழிப்பது போன்ற உணர்வு. துருவ் மீண்டும் வேறு பக்கம் திரும்பி, யார் சொன்னது. நான் உன்ன லவ் பண்ணவே இல்லை. எனக்கு யாரு மேலேயும் காதல் வராது. எனக்கு காதல் பிடிக்காது என்றான். யாழினி அவனை தன் புறம் திருப்பி, இல்லை நீ பொய் சொல்ற. அதான் என் கண்ணை பார்த்து பேச மாட்ற என்றாள். என் கண்ணை பார்த்து சொல்லு நீ என்ன லவ் பண்ணலன்னு. நான் போயிடுறேன் என்று சொன்னாள்......

துருவ் மனதைத் திடப்படுத்திக்கொண்டு, அவள் கண்களைப் பார்த்து நான் உன்னை லவ் பண்ணவே இல்லை என்றான்...
யாழினியின் கண்ணீர் தரையை தொட்டது. யாழினி, நானே வந்து லவ்வ சொல்றனாலதான நீ என்ன உதாசீனப்படுத்துற. நீ என் காதலை புரிஞ்சுகிட்டு என்ன தேடி வரும்போது என் காதல் உனக்கு கிடைக்காது என்று விட்டு வேகமாக அழுது கொண்டு சென்றுவிட்டாள்.....

அவள் அழுது கொண்டு வந்ததை பார்த்த திவ்யா, என்னவென்று கேட்க யாழினி அழுது கொண்டே நடந்ததைக் கூறினாள். திவ்யா கோபமாகி, ஹரியிடம் ஏன் உன் பிரண்டு எப்படி இருக்கான் என கண்டபடி திட்டினாள். போன் பேசிக்கொண்டு ரூமிற்குள் நுழைந்த மித்ரன் துருவ்வை கவனிக்கவில்லை. துருவ் உலகமே அழிந்து விட்டது போல உட்கார்ந்து அழுது கொண்டிருந்தான்.......

மித்ரன் அவனைக் கவனிக்காமல், புரிஞ்சுக்கோ செல்லம் மாமா சீக்கிரமே வந்துடுவேன். நானும் தான் உன்னை மிஸ் பண்றேன், ஐ லவ் யு செல்லம், பாய் மாமா அப்புறம் பேசுறேன் என போனை வைத்துவிட்டான். துருவ்விற்கு அவன் சொன்ன லவ் யூ என்ற வார்த்தை மட்டும் நன்றாக விழுந்தது.....

துரு வேகமாக எழுந்து மித்ரனிடம், இப்போ யாரு கிட்ட பேசுற என்றான். மித்ரன் என் ஆளுகிட்ட என்றான். துருவ் ஷாக்காகி யாரு உன் ஆளு என்றான். மித்ரன் நாம லவ் பண்றதுக்கு இவன் ஏன் இவ்வளவு ஷாக்காகுறான் என நினைத்து விட்டு மது என் அத்த பொண்ணு என்றான்.....
துருவ், அப்போ யாழினி என கேட்க, யாழினியோட தங்கச்சி தான் மது என்றான். துருவிற்கு சந்தோஷத்தில் தலைகால் புரியவில்லை. மித்ரனை கட்டிக்கொண்டு அவன் கன்னத்தில் முத்தமிட்டு தேங்க்ஸ்டா மச்சான் என்றான். மித்ரன் மனதில், நாம லவ் பண்றதுக்கு இவன் ஏன் இப்படி சந்தோசபடுறான். பைத்தியம் ஏதும் பிடித்து விட்டதா என்று நினைத்தான். துருவ் ஏதோ நினைத்து மித்ரன் தரையில் கொட்டி, இத்தன நாளா இதை ஏன்டா என்கிட்ட சொல்லல என்றான். மித்ரன், இது என்ன அநியாயம். நான் லவ் பண்றது உன்கிட்ட எதுக்குடா சொல்லணும் என்றான். ஹரி அங்கு வந்துவிட்டான். ஹரி துருவ்விடம், ஏன் டா யாழினிகிட்ட அப்படி பேசின. அவள் எப்படி அழுகுறா தெரியுமா என்றான். துருவ் முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு, இவனால தான் மச்சி என்று மித்ரனை கைகாட்டினான். மித்ரன், டேய் ஏன்டா என்னை கோர்த்துவிட்ற. நான் எதும் பண்ணல மச்சி, எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றான்........
கலாட்டாக்கள் தொடரும்....
 

Janu murugan

Moderator
Staff member
Jun 10, 2020
42
4
8
19
ஹாய் பிரெண்ட்ஸ்,

நமது தளத்திற்கு புது வரவான ஜானு அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..அவர்களின் "கல்யாண கலாட்டா" கதையின் பதிவுகள் இங்கு பதிவிடப்படும்.
துருவ்வும் மித்ரனை ஹரியிடம் கோர்த்து விட்டான். ஹரி துருவ்விடம், ஏன்டா செய்றதெல்லாம் செஞ்சுட்டு இவனை கோர்த்துவிட்ற என்றான். துருவ் ஹரியிடம், நடந்ததையும் தான் தவறாக நினைத்தையும் கூறினான். அவன் கூறியதை கேட்டு, ஹரி விழுந்து விழுந்து சிரித்தான்.......

ஹரி துருவ்விடம், அட லூசு பயலே, நடந்தது முழுசா பார்க்காமல் ஏன்டா இப்படி காமெடி பண்ற. அன்னைக்கு என்ன நடந்துச்சுன்னு தெரியுமா உனக்கு? என்று கூறத் தொடங்கினான். அன்னைக்கு மித்ரன் தன்னிடம் அந்த பெண் தன்னை காதலிப்பதாக கூறியவுடன், அவன் அந்தப்பெண்ணை நிராகரித்ததாகவும் கூறினான்.....
பின் மித்ரன் கிளாஸில் படிக்கும் மணி, அந்தப் பெண்ணுடன் வந்து மித்ரனிடம் ரொம்ப தேங்க்ஸ்டா மச்சான். நான் இவகிட்ட அப்பவே சொன்னேன், உனக்கு எந்த இடமும் தெரியாதுன்னு. இவதான் எல்லாம் நான் பார்த்துப்பேன்னு சொல்லிட்டு இடம் தெரியாம முழிச்சிட்டு இருந்திருக்காள். நல்ல வேலை நீ கூட்டிட்டு வந்து விட்டுட்டடா ரொம்ப தேங்க்ஸ்டா என் தங்கச்சிக்கு ஹெல்ப் பண்ணதுக்கு என்றான். தேங்க்ஸ் சொல்லிவிட்டு அவன் சென்று விட்டான். அவன் சென்றவுடன் மித்ரன், மெனக்கெட்டு வந்து போட்டு குடுத்துட்டு போயிட்டான் என நினைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் திருதிருவென முழித்தான். எல்லோரும் அவனை முறைத்தனர். சிவா, எப்படி எப்படி இந்த மூஞ்சிய பாத்தா உடனே அந்த பொண்ணுக்கு புடிச்சிருக்கு, உடனே வந்து ப்ரொபோஸ் பண்ணாளாம். உடனே சார் ரிஜெக்ட் பண்ணிட்ட. எப்படிடா இப்படி பச்சையா வாய் கூசாம பொய் சொல்ற என்றான். மித்து சிரித்துவிட்டு, சும்மா ஒரு கெத்து டா என்றான். உன் கெத்தில் மண்ணை அள்ளிப் போட என்று எல்லோரும் அவனை அடித்தனர்....

இதுதான் அன்னைக்கு நடந்துச்சு என்றான் ஹரி. நீ கொஞ்ச நேரம் அங்க இருந்து இருந்தா உனக்கு எல்லாம் புரிஞ்சிருக்கும். இத விட்டுட்டு விட்டுக் கொடுக்கிறேன்ற பேர்வழி, இத்தனை நாள் தாடி வைத்து விட்டு சுத்திட்டு இருந்த என்றான். மித்ரன் கண்கள் கலங்கி துருவ்விடம் மச்சான் எனக்காக உன் காதலே விட்டுக்கொடுக்க நினைத்திருக்க. என் மேல அவ்வளவு பாசமா டா என்று அவனை அணைத்துக் கொண்டான். துருவ் அவனை விலக்கி விட்டு, எருமைமாட்டு பயலே உன்னால்தானே யாழினிய அழுகவிட்டேன். உன்னால் தான் என் காதல் பிரிஞ்சிருச்சு. ஒழுங்கு மரியாதையா யாழினியோடு என்னை சேத்து வச்சுடு என்றான். மித்ரன், இவ்வளவு நாள் அந்த வேலையைத்தான் பார்த்தேன். இனிமேலும் அதைத்தான் பார்க்கணுமா? பார்க்குறேன், பார்த்து தொலையுறேன் என்றான்......

இங்கே யாழினி அழுது கொண்டிருந்தாள். திவ்யா அவளை சமாதானப்படுத்த முயற்சி செய்துகொண்டிருந்தாள். அவள் அழுகை அதிகமாக, என்ன செய்வது என்று தெரியாமல் மித்ரனை அழைத்தாள் திவ்யா. மித்ரன் யாழினியிடம் நடந்த மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்கை எடுத்துக் கூறிக் கொண்டிருந்தான். யாழினி ஓ.....லவ்வவிட்டு கொடுக்கிறானோ அவன், அவனுக்கு இருக்கு என எழுந்தவள் தடுமாறினாள், போதையில் இருப்பதை போல உளறினாள். மித்ரன் திவ்யாவிடம், பங்கு யாழினிக்கு என்ன ஆச்சு? இப்படி தடுமாறுரா போதையில் இருக்க மாதிரி என்றான். திவ்யா என்னவென்று தெரியாமல் முழித்தாள்....

திவ்யாவை முறைத்துப்
பங்கு உண்மையை சொல்லு, அவளை என்ன பண்ண என்றான். திவ்யா பங்கு நான் ஒன்னும் பண்ணல, அழுகிறாளேன்னு ஆறுதல் சொன்னேன். அப்புறம் இந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து அவளுக்கு கொடுத்தேன் குடிக்கச் சொல்லி என்றாள்....

மித்ரன் , அடிப்பாவி அது தண்ணி இல்ல சரக்கு டி என்றான். திவ்யா அதிர்ந்து இது எப்படி இங்கே வந்துச்சு. இந்த கருமத்தை எப்ப இருந்து பழகுனிங்க என்றாள். மித்ரன் அதை அப்புறம் ஆராய்ச்சி பண்ணிக்கோ. இப்போ இவ புல்லா குடிச்சுட்டு என்ன ஆர்ப்பாட்டம் பண்ண போறாளோன்னு தெரியலையே என்றான். இருவரும் திரும்பி பார்க்க யாழினியை காணவில்லை.....
துருவ், யாழினியை எப்படி சமாதானப்படுத்துவது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தான். ஹரி, சிவா, கார்த்தி மூவரும் அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தனர். துருவ் அவர்களை முறைத்து, என்ன பார்த்தா உங்களுக்கு சிரிப்பா இருக்கா? இருங்கடா முதல்ல என் பேபியை சமாதானப்படுத்தி விட்டு வந்து உங்கள பார்த்துக்கிறேன் என எழுந்தான்....
மித்ரன் வேகமாக ஓடி வந்து நடந்ததைக் கூறினான். எல்லோரும் யாழினியை தேட தொடங்கினார். இங்கே யாழினி போதையில் தள்ளாடி கொண்டு ரிசப்ஷனுக்கு வந்து, அங்குள்ளவர்களிடம் உங்களுக்கு துருவ் எங்க இருக்கான்னு தெரியுமா? உனக்கு தெரியுமா? என போதையில் உளறி கொண்டிருந்தாள். நம்ப வானரப் படை யாழினியை கண்டு பிடித்து ரிஷப்ஷனுக்கு வந்துவிட்டனர்.....

துருவ்வை பார்த்ததும் யாழினி ஓடிச்சென்று, அவன் கன்னத்தில் பளாரென்று ஒரு அறைவிட்டாள். மித்ரன் அதைப்பார்த்து சிலையாகிவிட்டான். யாழினி போதையில் துருவ்வை பார்த்து நீ என்ன பெரிய இவனா? என்ன கர்ணனுக்கு தம்பியா? நீ உன் லவ்வ விட்டு குடுக்கிறியா? என்னை விட்டு கொடுக்கறதுக்கு உனக்கு யார் உரிமை கொடுத்தது என சரமாரியாக திட்டி கொண்டு இருந்தாள். துருவ் ஏதோ அவார்ட் வாங்குவது போல சிரித்துக் கொண்டு நின்றிருந்தான்.....
யாழினி மித்ரனை வாடா என்றாள். மித்ரன், பக்கத்தில் போனால் நம்மளையே அடுத்து கலாய்ப்பா என நினைத்துக் கொண்டு போகவில்லை. யாழினி வாடா, என்னடா பண்ற என்று அவன் சட்டையை பிடித்து இழுத்து வந்து. துருவ் முன் நிறுத்திவிட்டு, இந்த சொம்பு தலையனுக்காகதான் நீ என்னை விட்டு கொடுத்தியா?. இந்த சொம்பு தலையன் எனக்கு பொருத்தமாய் இருப்பானா என்றாள்....
மித்ரன், தன் தலையைத் தொட்டுப் பார்த்து சொம்பு மாதிரியா இருக்கு என நினைத்தான். யாழினி துருவிடம் நான் சொன்னனா? நான் இவன லவ் பண்றேனு, இல்ல இவன் சொன்னனா? என்று கேட்டாள். துருவ் இல்லை என்று தலையை ஆட்டினான். அப்புறம் நீயே போய் விட்டு கொடுக்கிறியா இந்த சொம்பு தலையனுக்கு. இவனுக்கு என் தங்கச்சியே ஓவர். இதுல இவனை நீ என்னோட கோர்த்துவிட பாக்குறியா? என்றாள். மித்ரன், அடிப்பாவி குடிச்சிட்டு போதைல மனசுல இருக்கு உண்மை எல்லாம் வெளியே வருது பார் என பார்த்தான்.....

ஹரி முன்னாடி சென்று, இப்ப பாரு நான் எப்படி சமாளிக்கிறேனு. என் தங்கச்சி நான் சொன்ன கேட்பாள் என்றான். ஹரி போய் நின்றான். யாழினி அவனை பார்த்து, யார் நீ என்றாள். ஹரி யாழினியிடம், நான் உன் அண்ணன்மா என்றான். யாழினி, பார்க்க செயின் அறுக்கிற மாதிரி இருக்க, நீ ஏன் அண்ணனா? போடா அந்த பக்கம் என்றாள். ஹரி முகத்தை தொங்கப் போட்டுட்டு வந்துவிட்டான்.....

மித்ரன் ஹரியிடம் ஒய் பிளட் சேம் பிளட் என்றான் சோகமாக. திடீரென்று மித்ரனுக்கு ஒரு ஐடியா தோன்றியது. யாழினியிடம் சென்று, பங்கு ராஜ் சார் வரறாரு, ஒழுங்கா போய் விடலாம் என்றான். யாழினி, யாரு அந்த தகர டப்பா மண்டையனா? என்று கேட்டுவிட்டு அங்குமிங்கும் தேடி பூந்தொட்டியை தூக்கி வந்து, அவனை போட்டு தள்ளாமல் விடமாட்டேன் என அவரை தேடினாள்...

மித்ரனுக்கு பக்கென்று ஆகிவிட்டது. நாமொன்று நினைக்க அது ஒன்னும் நடக்குது என்று நினைத்துக்கொண்டு அவளை தடுக்க போனான். திவ்யா ஓடிவந்து, அடி கொலைகார பாதகத்தி, நீ எங்களை எல்லாம் சேர்த்து ஜெயிலில் தள்ளாமல் விடமாட்டியா? என்று பூந்தொட்டியை பிடுங்கி போட்டாள்...
சுபா, ஓடி வந்து பங்கு உன் வாய் வச்ச நேரம் அங்க பாரு ராஜ் சார் வராரு என்றாள். மித்ரன், ஐயோ அடுத்த பிரச்சினையா? கடவுளே காப்பாத்துப்பா என்றுவிட்டு, சாரிடம் ஓடிவந்து மூச்சுவாங்கி நின்று, சார் உங்களை ராதா மேம் அவசரமாக பார்க்கணுமாம். அந்த கார்டன் லாஸ்ட் ல இருக்காங்க, உங்களை வரச் சொன்னாங்க என்று அவரை அனுப்பி வைத்து விட்டு வந்தான்......

மித்ரன் இவளை விட்டால் விடிய விடிய பேசுவா இவளை இங்கிருந்து பேக் பண்ணுங்க என்றான். துருவ் யாழினியிடம் வா யாழினி ரூம்க்கு போகலாம், எல்லாரும் பாக்குறாங்க என்றான். யாழினி போடா நான் வரமாட்டேன். என்னை கூப்பிட நீ யாரு என்றாள்....
துருவ் இவ இப்படி சொன்னா கேக்க மாட்டள் என் நினைத்து விட்டு, அவளை அப்படியே அலேக்காக தூக்கி விட்டான். யாழினி டேய் விடுடா என்னை விடுடா. போலீஸ் போலீஸ் என்னை கடத்துறாங்க காப்பாத்துங்க என கத்தினாள். துருவ், யாழு அமைதியா வரியா? இல்லையா? என கத்தினான். யாழினி அமைதியாகிவிட்டாள். அவள் ரூம்க்குள் அவளை தூக்கிச்சென்று யாரையும் வர வேண்டாம் என சொல்லிவிட்டான்......

இங்கே மித்ரன் அப்பாடா ஒரு வழியா எல்லா பிரச்சினையும் சமாளிச்சாச்சு என நினைத்து சோபாவில் விழுந்தான். ஆகாஷ் வேகமாக வந்து, பங்கு நீ விதைத்த வினை ஒன்று என்று ஆரம்பிக்கும் போது, மித்ரன் போதும் நிறுத்து. எனக்கு புரிஞ்சுருச்சு நான் பார்த்துகிறேன் என எழுந்தான். அங்கே நம்ம ராஜ் சார் வந்து கொண்டிருந்தார். அவர் மித்ரன் அருகே வந்து அவனை முறைத்து, ஏன் டா என்கிட்ட பொய் சொன்ன என்றார். மித்ரன் சார் என் மேல எந்த தப்பும் இல்லை. இவனால தான் சார் என ஆகாஷை கை காட்டினான். ஆகாஷ், அட நன்னாரி பயலே வழக்கம்போல என்னை கேர்த்துவிட்டுடியே என நினைத்து என்ன செய்வதென்று தெரியாமல் முழித்தான்....

ராஜ் சார் மித்ரனிடம், என்னடா உளர்ற? நீ பண்ண தப்புக்கு அவன் என்ன பண்ணுனான் என்றார். மித்ரன் அவன் சொன்னதை கேட்க கூடாது என்று தான் உங்க கிட்ட பொய் சொன்னேன் சார் என்றான். ராஜ் சார் என்னடா சொன்ன என ஆகாஷை பார்த்து கேட்டார். ஆகாஷ் கடவுளே காப்பாற்று என வேண்டிக்கொண்டு அது வந்து அது என திணறிக் கொண்டிருக்க, மித்ரன் அவன் சொல்ல மாட்டான் சார் என்றான். ராஜ் சார் ஏன் என்று கேட்டார். மித்ரன் ஏன்னா அவனுக்கு தெரியாது என்ன சொல்றதுன்னு என்றான்...
ராஜ் சார் என்னது என்றார் அதிர்ச்சியாகி. மித்ரன் உனக்கு உன் வாய் தாண்டா சனி, சரி சமாளிப்போம் என நினைத்து விட்டு, அது ஒன்னும் இல்ல சார் அவனுக்கு எப்படி சொல்றதுன்னு தெரியலை என்று சொன்னேன் சார் என்று விட்டு, ஒரு கதையை உருவாக்க தொடங்கினான்.....

மித்ரன் அவன் இங்க வரும்போது உங்கள பத்தி என்ன பேசிட்டு இருந்தான்னா நீங்களும் ராதா மேமும் பார்க்க பெர்பெக்ட் ஜோடியா தெரியிரிங்களாம். இப்ப கூட நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணி ஹனிமூன் வந்த மாதிரி அவன் கண்ணுக்கு தெரியிறிங்களாம் என்றான்.....
கலாட்டாக்கள் தொடரும்......
 

Janu murugan

Moderator
Staff member
Jun 10, 2020
42
4
8
19
ஹாய் பிரெண்ட்ஸ்,

நமது தளத்திற்கு புது வரவான ஜானு அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..அவர்களின் "கல்யாண கலாட்டா" கதையின் பதிவுகள் இங்கு பதிவிடப்படும்.

நீங்க ராதா மேம்ம ஒரு நல்ல ஃபிரண்டா தான பாக்குறீங்க சார். இது தெரிஞ்சா உங்களுக்கு எவ்வளவு கஷ்டமாய் இருக்கும். அதான் சார் உங்க கிட்ட பொய் சொன்னேன் என்றான். ஆகாஷ் மைண்ட் வாய்ஸில், அட எரும மாட்டு பயலே என்னை இந்தாளுக்கிட்ட இப்படி ஏடாகூடமா மாட்டி விட்டுட்டியே. யாழினி, உன்னை சொம்பு தலையன்னு சொன்னதுல தப்பே இல்லடா என திட்டிக் கொண்டிருந்தான்.......
ராஜ் சார் அப்படியா சொன்ன என்பது போல் அவனை பார்த்தார். ஆகாஷ் எப்படி ரியாக்ட் பண்ணுவது என தெரியாமல் முழித்தான் . ராஜ சார் ஆகாஷை பார்த்து சிரித்துவிட்டு, உன் பெயர் என்ன என்று கேட்டார். அவன் ஆகாஷ் என்றான். ராஜ் சார், நல்ல நேம் நீ நல்லா வருவ என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார். அவர் சென்றதும் ஆகாஷ் மித்ரனை அடித்து, ஏன்டா எருமை மாட்டு பயலே! எப்ப பார்த்தாலும் என்னைய கோர்த்து விடுவதே உனக்கு வேலையா போச்சு என்றான். மித்ரன், பங்கு எப்ப பார்த்தாலும் நீதான் என் கண்ணுல மாட்டுற என்றான். மச்சி எனக்கு என்னமோ நீ தான் இந்த செம்ல ஃபர்ஸ்ட் மார்க் வாங்குவியோனு தோணுது என்றான்.....

இங்கே துருவ் யாழினியை ரூம்க்குள் கூட்டி வந்து பெட்டில் உட்கார வைத்தான். யாழினி போதையில், என்னை காப்பாத்துங்க! என்னை காப்பாத்துங்க! இவன் என்னை ஏதோ பண்ண பார்க்கிறான் என உளறினாள். துருவ் அவள் அருகில் சென்று, இப்போது கத்து பார்ப்போம் என்றான். அவனை இவ்வளவு அருகில் பார்த்ததும் யாழினி அமைதியாகி விட்டாள். துருவ் குட்! இப்படித்தான் இருக்கணும். இல்லை நீ இப்ப சொன்னியே அது மாதிரி உன்னை ஏதாவது பண்ணி விடுவேன் என்றான். யாழினி கண்களை அகல விரித்து பார்த்து, வாய் மேல் விரல் வைத்து பேச மாட்டேன் என்றாள். துருவ் பார்த்து சிரித்துவிட்டு அவள் கன்னத்தில் இதழ் பதித்தான். யாழினி உடனே கன்னத்தை துடைத்து விட்டு, சீ எச்சி என்றாள். பின் சரக்கு ஸ்மெல் வருது, குடிச்சிருக்கியா? என்றாள் யாழினி துருவ்வை பார்த்து. அவன் சிரித்து விட்டு, யாரு நானா என கேட்டான். அவள் பின்னே நானா? எனக் கேட்டு விட்டு பெட்டில் சாய்ந்து விட்டாள் போதை அதிகமாகி. அவள் போதையில் இன்னும் ஏதேதோ உளறிக் கொண்டே இருந்தாள். அவன் அவளுக்கு பெட்ஷீட்டை இழுத்துப் போட்டு விட்டு வெளியே வந்தான்...

அதேநேரம் ராஜ் சாரை சமாளித்து விட்டு மித்ரன் வந்து விட்டான். எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து யோசிச்சுட்டு இருந்தாங்க. வேற எதை பத்தியும் இல்லைங்க, நம்ம யாழினியை எப்படி சமாளிக்கிறதுன்னு தான்.....
மித்ரன், எனக்கு ஒரு ஐடியா தோணுது, அதுக்கு நீங்க எல்லாரும் குவாப்ரேட் பண்ணனும் என்று தன் பிளானை கூறி முடித்தான். திவ்யா இது சரியா வருமா பங்கு? அவளுக்கு தெரிந்துவிட்டால் நம்மள கொன்றுவா என்றாள். மித்ரன் அதெல்லாம் அவளுக்கு தெரியாமல் நான் பார்த்துக்குறேன் என்றான்.....
பின் திவி எங்க ரூம்ல எப்படி சரக்கு பாட்டில் வந்துச்சு என்றாள்.ஆகாஷ் திருட்டு முழி முழித்தான். சுபா ஆகாஷிடம் டேய் நீ தான் அத கொண்டு வந்தியா என்றாள். ஆகாஷ் இந்த மணி தான் ராஜ் சார் செக் பண்ணுவாரு இத ஒளிச்சு வைன்னு குடுத்தான் என்றான்.திவி சந்தேகமாக பார்க்க. ஆகாஷ் சுபா மேல் சத்தியம் செய்தான்.
பின் எல்லோரும் அவரவர் ரூமிற்கு தூங்க சென்றனர். விடிந்துவிட்டது, திவ்யா யாழினி யாழினி எழுந்துரு டைம் ஆயிடுச்சு என்று எழுப்பினாள். யாழினி, என்ன பங்கு எதுக்கு இப்ப என்ன எழுப்புற? எனக்கு தலை எல்லாம் வலிக்குது என்றாள்....
திவ்யா மனதில், ஃபுல் பாட்டில் அடிச்சா தலைவலிக்காமல் என்ன பண்ணும் என நினைத்து விட்டு, மறந்துட்டியா பங்கு இன்னைக்கு எங்களுக்கு ட்ரீட் தரேன்னு சொன்னியே என்றாள். யாழினி, எதுக்கு பங்கு ட்ரீட் என்றாள். திவ்யா, என்ன பங்கு எல்லாத்தையும் மறந்துட்டியா? துருவ் உனக்கு ஓகே சொன்னதுக்கு எனக்கு ட்ரீட் தரேன்னு சொன்னியே என்றாள். யாழினி யோசித்துப் பார்த்தாள். துருவ், தன்னை நிராகரித்த தான் ஞாபகத்தில் இருந்தது. சுபா வந்து யாழினியிடம், என்ன பங்கு கமிட் ஆனதும் முகம் இவ்வளவு பிரைட்டா இருக்கு என்றாள்....
யாழினிக்கு குழப்பமாக இருந்தது, நடந்தது கனவா என்று தோன்றியது. திவ்யாவிடம் யாழினி, பங்கு துருவ் என் லவ்வ ரிஜெக்ட் பண்ணிட்டானே என்றாள். திவ்யா என்னைப் பங்கு, ஏதாவது கனவு கண்டியா? இப்படி உளற என்றாள். யாழினி ஏதோ கூற வாயைத் திறக்குமுன், மித்ரன் வந்து, என்ன பங்கு இன்னும் நீ எந்திரிக்கவே இல்லையா? நீ எப்ப கிளம்பி எங்களுக்கு ட்ரீட் கொடுக்கிறது. நீ எனக்கு பெருசா எதாவது செய்யணும் பங்கு நான் தான் உன் லவ்வ சேர்த்து வைக்க ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கேன் என்றான். எல்லோரும் அவசரப்படுத்த, யாழினி குளித்து விட்டு கிளம்பினாள்....

யாழினி மித்ரன் பங்கு அந்த தகரடப்பா தலையன் பார்த்தால் என்ன பண்றது என்றாள். மித்ரன் நீ ஒன்னும் கவலைப்படாத பங்கு, அவர காலையே ராதா மேம்மோட பேக்கப் பண்ணிட்டேன் என்றான்......
துருவ் கிளம்பி வந்து, என்ன எல்லோரும் கிளம்பிட்டீங்களா? எனக் கேட்டுவிட்டு யாழினியை பார்த்து அப்படியே நின்றுவிட்டான். மித்ரன் எல்லோரிடமும் கண்ணை காட்டி விட்டு வெளியே வந்தான். எல்லோரும் வெளியே வர, ஹரி மட்டும் அங்கு நின்றிருந்தான். திவி, அவன் தலையில் தட்டி அடச்சீ வெளியவா, அறிவே இல்லயா உனக்கு?. உன்னை கட்டிக்கிட்டு நான் என்ன பாடு பட போறேன்னு தெரியலயே என திட்டிவிட்டு அவனை இழுத்துச் சென்றாள்.....
கண்ணாடியில் ஒரு முறை எல்லாம் சரியாக இருக்கிறதா என பார்த்து விட்டு திரும்ப, துருவ் யாழினியை ஆளையே விழுங்கும் பார்வை பார்த்துவிட்டு அப்படியே நின்றுவிட்டான். துருவ் யாழினியை நோக்கி அடியெடுத்து வைக்க, யாழினியின் கால்கள் தன்னிச்சையாக பின்னாடி சென்றது. யாழினி சுவற்றில் மோதி நின்றுவிட்டாள்.....

துருவ் தன் கைகளை சுவற்றில் ஊன்றி அவளுடன் நெருக்கமாக நின்றான். யாழிக்குதான் அவனை இவ்வளவு நெருக்கமாக பார்ப்பது, இதயம் எகிறி கீழே விழுவது போல இருந்தது. துருவ், குனிந்து அவள் காதருகில் சென்று, பேபி நீ இந்த பிங்க் ட்ரெஸ்ல செமையா இருக்க என்றான். இன்னைக்கே நாம கல்யாணம் பண்ணிக்கலாமா என்றான். யாழினிக்கு நடப்பது கனவா என்று தோன்றியது. துருவ் என்ன சொல்ற என்றான். யாழினி பேவென முழித்தாள். துருவ், ஏன்டி எதுக்கு எடுத்தாலும். இப்படி பார்த்தே என்னை கவுக்குற என்றான்....
அவள் இல்லை துருவ் எனக்கு குழப்பமா இருக்குது. இது கனவா இருக்கும்னு டவுட்டா இருக்கு என்றாள். துருவ், ஏதோ கூற வாயெடுக்கும் முன், மித்ரன் மச்சான் டைமாயிடுச்சு போலாமா? என்றான். துருவ், ச்சே கரடி மாதிரி இவன் வேற என நினைத்து விட்டு, வா பேபி போகலாம் என அவள் கையைப் பிடித்து அழைத்துச் சென்றான்.....
எல்லோரும் ஒரு பெரிய ஹோட்டலுக்கு சென்றனர். யாழினி பக்கத்தில் துருவ் அமர்ந்தான். திவ்யாவும் ஹரியும் வேண்டுமென்றே, இடம் பத்தலை தள்ளி உட்காரு மச்சி என துருவ்வை யாழினியின் புறம் தள்ளினர். யாழினிக்குத்தான் என்னவோ போலிருந்தது, நெளிந்து கொண்டிருந்தாள்.....
யாழினி ஏதோ யோசிக்க, மித்ரன் மைண்ட் வாய்ஸில் ஐயோ இவளை யோசிக்க விடக்கூடாது. யோசிக்க விட்டால் கேள்வி கேட்டே கொன்றுடுவா என நினைத்து, யாழினியிடம் பங்கு ஏ.டி.எம் கார்டு எடுத்துட்டு வந்திருக்கல! நீதான் இன்னைக்கு பில் ஃபே பண்ணனும் என்றான். யாழினி கொண்டு வந்திருக்கேன் என்றாள். எல்லோரும் அவரவருக்கு பிடித்ததை ஆர்டர் செய்தனர்.....
மித்ரன், பங்கு சாப்பிட்டு விட்டு எல்லோரும் மூவிக்கு போலாமா? நாம எல்லோரும் ஒன்னா மூவி போய் ரொம்ப நாளாச்சு என்றான். எல்லோருக்கும் ஓகே, என்ஜாய் பண்ணலாம் என்றனர். துருவ். மூவிக்கு நான் ஃபே பண்றேன் என்றான். எல்லோரும் சாப்பிட்டு முடித்து தியேட்டருக்கு சென்றனர்.....
எல்லோரும் தியேட்டருக்குள் நுழையும் போது, செகண்ட் இயர் படிக்கும் பானு வந்து யாழினியிடம், சீனியர் நீங்க இங்க மூவி பார்க்க வந்தீங்களா? எனக் கேட்டாள். மித்ரன் இல்ல சர்க்கஸ் பார்க்க வந்தோம் என்றான். பானு சிரித்துவிட்டு காமெடி பண்ணாதீங்க சீனியர் என்றுவிட்டு, யாழினியிடம் ஏன் சீனியர் நேத்து நைட் அழுதுட்டு இருந்தீங்க? என்றாள். யாழினி அனைவரையும் முறைத்தாள். மித்ரன் பானுவை, ஏம்மா கலகக்கார காத்தாயி! வந்து வேலை முடிஞ்சிது இல்ல கிளம்பு என்றான். பானு இல்ல சீனியர் இருங்க, மீதியையும் கேட்டுறேன். நேத்து நைட் குடிச்சிட்டு ஹோட்டல்ல ஒரே கலாட்டா பண்ணிட்டீங்களே? என்றாள்...
மித்ரன், ஏய் முட்டை போண்டா! இப்போ எடத்தை காலி பண்ணல ஒரே தட்டு தட்டி உன்னை மண்ணுக்குள் புதைத்து விடுவேன் என்றான். பானு அங்கிருந்து நகர்ந்து, ஹேமாவிடம் சக்சஸ் என கையை உயர்த்திக் காட்டினாள்.....
மித்ரன், நான் சொல்றதை கேளு எனக் கூறிக் கொண்டிருக்கும் போது, யாழினி நீ சொல்றத கேட்குற நிலையில் நான் இல்லை. இருக்க கோவத்துல உன்ன கடிச்சு குதறிருவேன்! ஒழுங்கா ஓடிப்போய்விடு என்றாள். எல்லாரையும் பார்த்து நீங்களா ஒரு பிரண்ட்ஸா? எப்படி பச்சையாக பொய் சொல்லி, கொஞ்ச நேரத்துல நானே நம்பிட்டேன் நடந்தது கனவான்னு. நீங்களாம் நேத்து பிரண்டான அவனுக்காக, எல்லோரும் சேர்ந்து என்னை ஏமாத்திட்டிங்களே என்று திட்டினாள். துருவ் பேபி என கையை பிடிக்க, அவுங்ளுக்கே இந்த நிலைமைனா? உனக்கு? ஒழுங்கா கையைவிட்டுறு, கோபத்தில் உன்னை ஏதாவது செஞ்சு விடப் போறேன் சொல்லிட்டு கையை உதறிவிட்டு, வேகமாக நடந்து போய் ஒரு ஆட்டோவை பிடித்து ரெசார்ட்டுக்கு சென்று விட்டாள்....
துருவ் என்ன செய்வதென்று தெரியாமல் கைகளை பிசைந்து கொண்டிருந்தான். துருவ் மித்ரனிடம் மச்சான் அவளை எப்படி கரெக்ட் பண்ணுவது என்றான் முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு. மித்ரன் விட்றா விட்றா இவளுக்கு ஒரு சமோசாவும் ஒரு பஜ்ஜியும் வாங்கி கொடுத்தா சரியாயிடும் என்றான்....
திவ்யா பஜ்ஜி சமோசா ஒர்க் அவுட் ஆகாது என்றாள். மித்ரன், இது ஒர்க் அவுட் ஆகலனா பிரியாணி வாங்கி கொடுத்து சரி பண்ணிடலாம் என்றான். திவ்யா கொஞ்சமாவது சீரியஸா பேசு பங்கு. அவ நம்ம மேல கொலைவெறியில் இருக்கா. எல்லாம் உன் மொக்க ஐடியாவால தான் என்றாள். மித்ரன் அடங்கொய்யால! ஒர்க் அவுட் ஆனா என ஐடியா சூப்பர் ஐடியா, இல்லனா மொக்கையா என அவளை அடித்தான். அவர்கள் இப்படி சண்டை போட்டுக் கொண்டிருக்க, துருவ் கடுப்பாகிவிட்டான். பேசாமல் இருக்கீங்களா. எனக்கு இருக்க கோவத்துல நீங்க வேற வெறுப்பேத்துறீங்க என கத்தினான்.....
மித்ரன் முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டு, சரி வாங்க ஆப்போசிட்ல ஒரு காபி ஷாப் இருக்கு. அங்க போய் உட்கார்ந்து பேசலாம் என்றான். எல்லோரும் காபி ஷாப்பில் காபி குடித்துக்கொண்டு யோசித்துக் கொண்டிருந்தனர். துருவ், எனக்கு ஒரு ஐடியா! நான் கரப்பான் பூச்சியை ரூம்க்குள்ள போட்டுடுறேன். அப்புறமா அவ பயந்து கத்தும்போது கரெக்டா நான் போறேன். அவள் பயந்து என்ன கட்டிப்புடிச்சுடுவா. அவளை ஈஸியா சமாதானம் பண்ணிவிடலாம். அப்புறம் என்ன எங்களுக்குள்ள ஒரே ரொமான்ஸ் தான் என்றான்...
மித்ரன், ஆசை! ஆசை! உன் ஆளு பட்டம் வாங்காத ஜான்சிராணி. பாம்பே வந்தாலும் கைல புடிச்சு தூக்கி போட்டு விடுவாள் என்றான். துருவ் ஆவென.....வாயை பிளக்க எல்லோரும் அவனை பார்த்து சிரித்தனர்....
ஆகாஷ் மட்டும் எதோ சீரியசாக யோசித்துக் கொண்டிருந்தான். துருவ் ஆகாஷிடம், மச்சான் எல்லாரும் என்னை பார்த்து சிரித்து கலாய்க்கிறப்ப நீ மட்டும் இப்படி சீரியஸா எனக்காகத்தான் யோசிக்கிறீயா? உனக்கு என் மேல இம்புட்டு பாசமா என்றான்....
ஆகாஷ், அதெல்லாம் ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. இன்னைக்கு காலையில ராசிபலன்ல எனக்கு இன்னைக்கு ரொம்ப நல்ல நாளு. என் வாழ்க்கையில வசந்தம் வரப்போகுதுன்னு ஒரு சொட்ட சொன்னான். அவனை என்ன பண்றதுன்னு யோசிச்சிட்டு இருக்கேன் என்றான். இரண்டாவது முறையாக துருவ் பல்ப் வாங்கினான். எல்லோரும் அவனை பார்த்து மீண்டும் கேவலமாக சிரித்தனர்.....

துருவ், சரி சரி போதும், எல்லோரும் ஏதாவது ஐடியா யோசிங்க என்றான். மித்ரன் அதெல்லாம் ரூம்க்கு போய் யோசிச்சுகலாம், டைம் ஆயிடுச்சு வாங்க போகலாம் என்றான். துருவ் அவனை முறைத்து, டேய் உண்மைய சொல்லுடா ஓசி காபிக்காகத்தான ஐடியா குடுக்குறேன்னு பொய் சொல்லி இங்க கூட்டிட்டு வந்த என்றான். மித்ரன் பொங்கி எழுந்து, யாரைப் பார்த்து என்ன வார்த்தை சொல்லிட்ட. நானே இதுக்கு ஃபே பண்றேன் என பாக்கெட்டில் கைவிட்டான். மித்ரனுக்கு அப்போது தான் பர்ஸ் எடுத்துட்டு வராததும், யாழ் ட்ரீட் என்பதால், யாரையும் எடுத்துட்டு வர விடாது ஞாபகம் வந்தது. பாக்கெட்டில் கையைவிட்டு திருதிருவென முழித்தான். மற்றவர்கள் அவனை பார்த்துக் கேலியாகச் சிரித்தனர்.......
இங்கே யாழினி ரெசார்ட்டுக்கு வந்து ரிசப்சனை கடந்து செல்லும் போது, எல்லோரும் அவளைப் பார்த்து ஏதோ அவர்களுக்குள் பேசிக் கொண்டனர். யாழினிக்கு அப்போதுதான் புரிந்தது, தான் குடிச்சிட்டு எவ்வளவு பெரிய கலாட்டா பண்ணி இருக்கோம் என்று. யாழினி வேகமாக நடந்து ரூம்க்கு வந்துவிட்டாள். இதை பார்த்து பக்கத்து ரூம் கவிதா யாழினி வந்துவிட்டதாக சுபாவிற்கு மெசேஜ் அனுப்பினாள். சுபா எல்லோரிடமும் யாழினி ரெசார்ட்டுக்கு சென்று விட்டதாக கூறினாள்.
எல்லோரும் அவள் பக்கம் திரும்பினர். மித்ரன் அப்பாடா எல்லோரும் நம்ம பிரச்சனைய மறந்துட்டாங்க. மெசேஜ் அனுப்புனா மகராசி நல்லா இருக்கணும்னு மனதில் வேண்டிக்கொண்டான். எல்லோரும் காபி ஷாப்பில் இருந்து கிளம்பினார்கள். மித்ரன் ஒரு காரை புக் பண்ணினான். எல்லோரும் காருக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தாங்க.....
ஆகாஷ் பின்னாடி திரும்பி வேடிக்கை பார்த்துட்டு இருந்தான். அப்போது யாரோ ஒரு பையன் தரமாட்டேன் போடி என கத்திக் கொண்டு ஓடி வந்தான். அவன் பின்னாலே வெள்ளை டிரஸ் போட்டு ஒரு பொண்ணு ஓடிவந்து கொண்டிருந்தாள். ஆகாஷ் இவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். அந்த பொண்ணு ஓடி வந்து ஆகாஷ் மேல மோதிவிட்டாள். இருவரும் கீழே விழுந்து விட்டனர். அந்தப் பெண் வேகமாக எழுந்து, ஆகாஷ் முகத்தை கூட பார்க்காமல் சாரி என்றுவிட்டு, டேய் குல்பிய குடுடா என கத்திக் கொண்டு ஓடிவிட்டாள்....
மற்றவர்கள் இதனை ஆவென.....பார்த்தனர். ஆகாஷ் இன்னும் அந்த இடத்தை விட்டு எழவே இல்லை. இன்னும் அதே இடத்திலேயே கிடந்தான். சுபா ஆகாஷிடம் எழுந்திரிடா தடியா என எழுப்பினாள். அவன் ஏதோ ரோபோவை போல் எழுந்து நின்று அவள் சென்ற திசையைப் பார்த்துக் கொண்டிருந்தான்....
சுபா அவனை பார்த்து விட்டு, ஐயோ என் அண்ணனுக்கு என்ன ஆச்சுன்னு தெரியலையே! இப்படி பேய் பிடிச்ச மாதிரி நிக்கிறான் என புலம்பினாள். மித்ரன் ஆமா உங்க அண்ணனுக்கு பேய் தான் அடிச்சிருச்சு. அது அந்த வெள்ளை டிரஸ் போட்டுட்டு வந்துச்சே அந்த பேய்தான் அடிச்சிருச்சு என்றான். சுபா புரியாமல் முழித்தாள். திவ்யா அவள் தலையில் கொட்டி, லூசு உங்க அண்ணனுக்கு காதல் பேய் பிடிச்சிருக்கு என்றாள். சுபா அப்படியா? ஐயோ என் அண்ணியை நான் சரியா கூட பார்க்கலையே என்று புலம்பினாள்...
மித்ரன், ஆகாஷ் தலையில் ஒரு தட்டு தட்டினான். அப்போதுதான் ஆகாஷுக்கு சுய நினைவுக்கு வந்தது. ஆகாஷ் மித்ரனிடம், மச்சி எங்கடா அவ என்றான். மித்ரன் அவனை முறைத்து, அவ போய் முக்கால் மணி நேரம் ஆச்சு என்றான். ஆகாஷ் ஐயோ போயிட்டாளே! நம்பர் கூட வாங்கலையே என புலம்பினான். பின் ஆகாஷ் வேகவேகமா பைகெட்டில் கைவிட்டு எதையோ தேடினான். திவ்யா, என்ன பங்கு? எதையோ இவ்ளோ அவசரமா தேடிட்டு இருக்க என்றாள்.....
கலாட்டாக்கள் தொடரும்.....