காத்திருந்தேனடி உன் காதலுக்காக!!- கதை திரி

sudharavi

Administrator
Staff member
#1
ஹாய் பிரெண்ட்ஸ்,

நமது தளத்தின் புது வரவு மிலானி அவர்கள் தனது புதிய கதையுடன் உங்களை சந்திக்க வந்து விட்டார்கள்...
 
#2
காத்திருந்தேனடி உனது காதலுக்காக!!-1


அதிகாலை பொழுது வீடு முழுவதும் சாம்பிராணி புகை மணமணக்க அந்த வீட்டில் சுப்ரபாதம் பாடிக்கொண்டிருந்தது..

அந்த வீட்டின் குடும்பத் தலைவி அருணா நம் நாயகிக்கு சுப்ரபாதம் பாடிக்கொண்டிருந்தார் "ஏய் தனு எழுந்திருடி மணி 7 ஆவுது அப்புறம் மணி ஆயிடுச்சு என்று சரியாக சாப்பிடாம அவசரஅவசரமாக கிளம்புவ"..
தனியா நான் மட்டும் வேலை செஞ்சிட்டு இருக்கேன் கொஞ்சம் கூடமாட ஒத்தாசை செய்வோம்னு இருக்காளா பாரு சாப்பிடும்போது அது குறை இது குறைனு ஆயிரம் குறை சொல்ல வேண்டியது இவ்வளவு தூரம் சொல்லிட்டுருக்கேன் எப்படி இழுத்து போத்திகிட்டு தூங்குறா பாரு..


ஏய் தனு எழுந்திருடி சந்தோஷ் வர லேட் ஆகும் அதனால இன்னைக்கு நீ சீக்கிரம் போகணும்னு சொன்னியேடி..
இந்த ஆயுதம் உடனே வேலை செய்தது தலை உயர்த்தி மணியை பார்த்து அடக்கடவுளே மணி 7.30 ஆகுதா அம்மா நான் நேத்தே சொன்னேன்ல இன்னைக்கு சீக்கிரம் போகணும்னு ஏன்மா என்ன காலையிலேயே எழுப்பல..

சொல்வேடி ஏன்டி சொல்ல மாட்ட காலையிலிருந்து கரடியாக் கத்துறேன் திரும்பித் திரும்பிப் படுத்துக்கிட்டு இப்ப என்ன கொற சொல்றியா இனிமே என்னை எழுப்பிவிடுன்னு நீ சொல்லு அப்புறம் நான் பேசுக்கிறேன் அவர் திட்டி கொண்டிருக்க கரடி மாதிரி கத்தினா எனக்கு எப்படி காதுல விழும் என முனு முனுத்துவிட்டு நைஸாக குளியலறைக்கு நழுவினாள்..


குளித்து முடித்து ஆடை அணிந்துகொண்டு அம்மா டிபன் சீக்கிரம் எடுத்துவை லேட் ஆகுது என கத்திக்கொண்டே டைனிங்டேபிள் வந்தாள்..
இருடி எடுத்து வைக்கிறேன் டெய்லி உனக்கு இதே வேலையா போகுது சீக்கிரம் எழுந்து கிளம்பாம அந்த நேரத்திக்கு கிடந்து ஆடுறது உன்ன நம்பி எப்படித்தான் பொட்டிக்கை நடத்துறானோ சந்தோஷ்..


அருணா கதிரேசன் தம்பதிக்கு ஒரே செல்ல பெண் சைதன்யா..
சந்தோஷும் சைதன்யாவும் சிறுவயது முதலே நண்பர்கள் உடன்பிறந்தவர்கள் யாருமின்றி வளர்ந்ததால் இருவருக்கும் ஒரு சகோதர பாசமும் உண்டு.. அவனும் இவளை எப்போதும் எதற்காகவும் விட்டு கொடுக்க மாட்டான் ஆடை வடிவமைப்பு தொடர்பான படிப்பை முடித்துவிட்டு பெரிய கம்பெனியில் வந்த வாய்ப்பை வேண்டாம் என தட்டிக் கழித்துவிட்டு இந்த பொட்டிக்கை கொஞ்சம் பணம் முதலாக போட்டு கொஞ்சம் லோன் போட்டு எனத் துவங்கினார்கள்..


காலேஜ் படிக்கும்போதே சந்தோஷ் ஈவன்ட் ஆர்கனைஸ் செய்யும் ஒரு கம்பெனியில் பார்ட் டைமாக வேலை செய்தான் அது அவனுக்கு பிடித்துப்போகவே பொட்டிக் வேலையோடு சேர்த்து அதனையும் செய்தார்கள்..

வந்த வருமானத்தை நாலு பங்காக பிரித்துக் கொண்டார்கள்.. ஒரு பங்கு அவளுக்கு ஒரு பங்கு அவனுக்கு ஒரு பங்கு தொழில் முன்னேற்றத்திற்கு ஒரு பங்கு புதிய கிளை துவங்குவதற்கு என முடிவு செய்து கொண்டார்கள்..
இவர்களது ஆர்டர் பிடித்துப்போக மேலும் ஆர்டர்கள் குவிந்தது முதலில் தேடி ஆர்டர் பிடித்தது போல இல்லாமல் தானாகவே வர ஆரம்பித்தது..

சந்தோஷுடன் கூடவே அவன் எடுத்து செய்யும் விழா நிகழ்ச்சிகளில் சைதன்யாவும் கலந்து கொள்வாள்.. அப்படி கலந்து கொள்ளும் போது அவளுக்கு தோன்றும் புது முயற்சிகள் ஒன்றிரண்டை சொல்வாள் அதற்கு நல்ல வரவேற்பும் இருந்தது..

இப்போது இருவரும் இன்னும் சில ஆட்களை வைத்துக்கொண்டு கொஞ்சம் பெரியஅளவில் செய்ய தொடங்கியிருந்தார்கள்..


இரண்டு மாதம் முன்பு DIG வீட்டு கல்யாணத்தில் குடும்பத்தினர் அனைவருக்கும் சைதன்யா ஆடைகளை ரெடி செய்து கொடுக்க சந்தோஷ் அந்த கல்யாண வேலைகளை எடுத்து திறம்பட செய்தான்..

அந்தத் திருமணத்தில் எல்லாம் நல்லபடியாக அமைய இவர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது அதனால் அதற்குப் பிறகு நிறைய ஆர்டர்கள் வரத் துவங்கியது.. இடம் தான் கொஞ்சம் சிரமமாக இருந்த போதும் சமாளித்துக்கொண்டு செய்தார்கள்..

இப்போதும் கூட சந்தோஷ் ஆர்டர் விஷயமாக கொஞ்சம் பெரிய கம்பெனியில் இருந்து அழைப்பு வந்திருப்பதாக சொல்லி மீட்டிங்கிற்கு போயிருக்கிறான்.. அதனால்தான் இன்று அவள் சென்று சீக்கிரமாக ஷாப்பை ஓப்பன் செய்ய வேண்டுமென்று கிளம்பிக் கொண்டிருக்கிறாள்..
 
Last edited:
#3
காத்திருந்தேனடி உனது காதலுக்காக!!-2


என்னமா என் திறமை மேல உனக்கு அவ்வளவு சந்தேகமா என் திறமையை குறைச்சி எடைபோடாத என இல்லாத காலரை தூக்கி விட்டுக்கொள்ள அதைபார்த்து சிரித்தார் அருணா..

சைதன்யாவிற்கு சிறுவயது முதலே இதுபோல வேலைகளில் ஆர்வம் அதிகம் படித்து முடித்து கேம்பஸ் இன்டர்வியூவில் வேலை கிடைத்தபோது மும்பையில் என்பதால் வேண்டாம் என சொல்லிவிட்டாள்..

அருணா அதுபற்றி கேட்டதற்கு உன்னையும் அப்பாவையும் விட்டு எங்கும் செல்ல மாட்டேன் நான் இங்கேயே ஏதாவது வேலைக்கு செல்கிறேன் என மறுத்து விட்டாள்..
கதிரேசனுடன் வேலை செய்யும் நண்பர் கூட,, "மும்பையில் இது மிக அருமையான கம்பெனி அதில் வேலை பார்த்தவர்கள் மிகப்பெரிய நிலையை அடைந்திருக்கிறார்கள் அதைப்போய் வேணாம் என சொல்லி இருக்கிறாளேடா இப்படியே உங்கள் கூடவே கடைசிவரை இருக்க முடியுமா அவளிடம் நீ சொல்லி புரியவைடா" என ஆதங்கப்பட்டாராம்..

ஆனால் சைதன்யா பிடிவாதமாக மறுத்துவிட்டாள் கல்யாணம் ஆகும்வரை உங்கள் கூடவே சந்தோஷமாக இருக்கணும் அதுற்குமுன் மற்றதெல்லாம் ஒன்றுமேயில்லை என்று விட்டாள்..

கதிரேசனுக்கு மகளை நினைத்து பெருமிதம் அவருக்கும் அவளை பிரியமனம் இல்லை அதனால் உடனே சரியென்று விட்டார்..
சின்ன வயதிலிருந்தே அவள் அப்பா செல்லம் அதிலேயே அவளுக்கு நினைத்ததை செய்யும் பிடிவாதமும் உண்டு..

ஹூம் என பெருமூச்சு விட்டார் அருணா..

என்னம்மா பெருமூச்சு பலமாக இருக்கிறது..

ஒன்னும் இல்லைடி சும்மா தான்.. அப்பா எங்கேம்மா..

அவர் காலையிலேயே வேலை இருக்கிறது என்று கிளம்பிவிட்டார் நீ எழுந்ததும் சொல்ல சொன்னார்..

அப்படியா ஓகேமா நான் மாலை வந்ததும் பார்த்துக்கொள்கிறேன்..

சரி கிளம்புறேன்மா என லஞ்ச்பாக்ஸை எடுத்துக்கொண்டு வேகமாக கிளம்பினாள்..

பார்க்கிங் ஏரியாவில் வண்டியை நிப்பாட்டிவிட்டு லிப்டில் ஏறி இரண்டாவது தளத்தை தேர்வு செய்தாள்..
அந்த அடுக்குமாடி கட்டிடம் ஐந்து தளங்களைக் கொண்டது இவர்களுடைய பொட்டிக் இரண்டாவது தளத்தில் இயங்குகிறது..


அவளுக்கு முன்னாலேயே கடைப்பையன் வந்து அமர்ந்திருந்தான்..
அவன் அந்த 5 தளங்களுக்கும் டீ, காப்பி எடுத்து செல்பவன் அவனை அவ்வப்பொழுது சிறுசிறு வேலைகளுக்கு அழைத்துக்கொள்வார்கள்..
இருவரும் ஷாப்பை திறந்து எல்லாவற்றையும் பார்வைக்கு அடுக்கிவைத்து ஒவ்வொரு வேலையாக ஒன்றன்பின் ஒன்றாக செய்து கொண்டிருக்கும்போதே மற்ற வேலையாட்கள் வரத்துவங்கினார்கள்..


சுந்தரி, செல்வி இருவரும் இவளுக்கு உதவியாக வேலைசெய்ய எம்ராய்டரி, ஜமிக்கி வேலைசெய்ய ஒரு தடுப்பு ஏற்படுத்தி அதையொரு பகுதியாக்கி இருந்தனர் அங்கு இரு ஆண்கள் வேலை செய்தனர்..

பெண்கள் இருவரும் வரும்போதே ஆச்சரியமாக அவளை பார்த்து என்ன அக்கா இன்று சீக்கிரம் வந்துவிட்டாய் மழை வரப்போகுது என கிண்டல் செய்ய," ஏன்டி நான் சீக்கிரம் வந்ததே இல்லையா" என சைதன்யா முறைக்க.. வந்திருக்கிறாயே ஆடிக்கும் அமாவாசைக்கும் என சொல்லி சிரிக்க அவர்களை முறைக்க முயன்று தோற்று அவர்களுடன் சேர்ந்து தானும் சிரித்தாள்..


சுந்தரி செல்வி இருவரும் கலகலப்பானவர்கள் அதிலும் சுந்தரி ரொம்பவும் குறும்புத்தனம் செய்வாள் சைதன்யாவும் அவர்களோடு வேலையாட்களுடன் பழகுவது போல் பழகியதே இல்லை என்பதால் அவர்களும்

அவளிடம் உரிமையோடு பழகுவார்கள்..
ஆனால் வேலை என்று வரும்போது மட்டும் சைதன்யா கொஞ்சம் கண்டிப்பு காட்டுவாள் அவர்களும் வேலையை திறம்பட செய்பவர்கள் என்பதால் இதுவரை எந்த பிரச்சினையும் வந்ததில்லை..

இன்றைக்கு சந்தோஷ் கொஞ்சம் லேட்டாக வருவேன் என்று சொன்னான் அதனால் தான் எனச்சொல்ல,

அதானே பார்த்தேன் என்றனர் இருவரும் கோரசாக..


அதற்குள் கஸ்டமர் வர அவர்கள் ஆர்டரை சரிபார்த்து கொடுத்து புது ஆர்டர் வாங்குவது என வேலை சிறிது நேரம் சரியாக இருந்தது..

அவர்கள் சென்றதும் அக்கா உனக்கு விஷயம் தெரியுமா மாடியில் மூன்றாவது தளத்தில் சிலநாட்களாக வேலை நடந்துகொண்டிருந்தது இல்லையா அங்கே அந்த தளம் முழுவதுமாக ஒரு கம்பெனி வர போகிறதாம் என பேச்சை ஆரம்பித்தாள் செல்வி..


யார் வருகிறார்கள் என்ன கம்பெனி ஏதாவது தெரிந்ததா டி என சுந்தரி கேட்க.,
அதைத்தானே சொல்ல வந்தேன் நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்களே சக்கரவர்த்தி குரூப் ஆஃப் கம்பெனிஸ் அவர்கள் புதிதாக இந்த தொழிலை தொடங்கி இருக்கிறார்கள்..
ஏற்கனவே வேலை நடந்து கொண்டிருக்கிறது ஏதோ கம்பெனி வரப்போகிறது என்பது வரை இருவருக்கும் தெரிந்தாலும் இந்த செய்தி அவர்களுக்கு புதிது..


சக்கரவர்த்தி குரூப் ஆஃப் கம்பெனிஸ் கால் பதிக்காத துறைகளே இல்லை என்று சொல்லலாம் ஏற்கனவே கட்டிடக்கலை, ஏற்றுமதி-இறக்குமதி, வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பது என நிறைய தொழில்களை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருந்தார்கள்..

அவரது மகன் லண்டனில் படித்துவிட்டு அங்கே ஏற்கனவே ஐடிகம்பெனி வைத்திருந்தாராம் அதை அவரது நண்பர் பொறுப்பில் விட்டுவிட்டு அதேபோல இங்கே துவங்கப்போகிறாராம் ஆனால் அதோடு சேர்த்து புதிய தொழிலாக கார்மெண்ட்ஸ் அண்ட் டெக்ஸ்டைல்ஸ் ஷாப் துவங்கபோகிறார்களாம்..

ஒரு பகுதியில் ஐடிகம்பெனியும் ஒரு பகுதியில் டெக்ஸ்டைல்ஸ் ஷாப்பின் டிசைனிங் பிரிவும் துவங்க போகிறார்களாம் நகரின் மையப்பகுதியில் இவர்கள் சொந்தமாக ஒரு 5 மாடிகள் கொண்ட கட்டிடம் கட்டிக் கொண்டிருக்கிறார்களாம்..

அந்த வேலை முடிந்தவுடன் அங்கே கார்மெண்ட்ஸ் அண்ட் டெக்ஸ்டைல் ஷாப்பை ஆரம்பித்துவிடுவார்களாம் அதுவரை இங்கே டிசைனிங் வேலைகள் மட்டும் நடக்குமாம் இது அவருக்கு கொஞ்சமும் அறிமுகமில்லாத தொழிலாம் புது முயற்சியாக இதை துவங்குகிறாராம்..
 
#4

காத்திருந்தேனடி உனது காதலுக்காக !!-3

சரி செல்வி உனக்கு இதெல்லாம் யார் சொன்னது என சுந்தரி கேட்க கடைப்பையன் மேனேஜரிடம் பேச்சு கொடுத்தானாம் அவர் சொன்னதுதான் அதுமட்டுமில்லாமல் அங்கு வேலை செய்பவர்களுக்கும் இவன்தானே டீ கொடுக்கிறான் அப்படியே விசாரித்து தெரிந்து கொண்டானாம்..
சைதன்யா மனதிற்குள் பரவாயில்லையே தந்தையின் தொழிலில் காலாட்டிக்கொண்டு இல்லாமல் தானாக ஒரு தொழிலைத் தொடங்கி நடத்த முன்வந்திருக்கிறானே அதுவும் அவனுக்கு கொஞ்சமும் முன்அனுபவமில்லாத தொழிலில் அவனை பார்ப்பதற்கு முன்பாகவே அவன் மீது ஒரு நன்மதிப்பை கூட்டியது..
அது சரி அவன் பெயர் என்னடி என சுந்தரி கேட்க "மிதுர்வன் சக்ரவர்த்தி" என்றவள் அவருக்கு ஏற்றதுபோல பொருத்தமான நல்லபெயர் தான் என ரசனையுடன் சொல்ல மற்ற இருபெண்களும் ஒருவரையொருவர் பார்த்துகொண்டு அவளை திரும்பிபார்க்கவும் ஒரு அசட்டுசிரிப்புடன் 1வாரம் முன்பு வேலை எப்படி நடக்கிறது எனபார்க்க இங்கு வந்திருந்தார் நான் கீதா எல்லாரும் போய்பார்த்தோம் செம்ம ஹண்ட்ஸம்மாய் இருந்தாரடி..
அப்போது நாங்கள் எங்கே போயிருந்தோம் என சுந்தரி சீரியஸாக யோசித்தபோது எம்பிராய்டரி வேலைசெய்ய பொருட்கள் வாங்க போயிருந்தீர்கள் என செல்வி நியாபகபடுத்தினாள்.. என்னவோ சைதன்யாவுக்கும் அவனை பார்க்காதது ஏமாற்றமாக இருந்தது.. எப்படியும் இங்கே வந்துதானே ஆக வேண்டும் அப்போது பார்த்துகொள்ளலாம் என சுந்தரியை சமாதானப்படுத்தினாள்..
மதியம் சாப்பாடு முடிந்து நேரமான பிறகே சந்தோஷ் பொட்டிக் வந்தான்.. சோர்வாக இருந்தபோதும் அவனது முகத்தில் ஒரு மகிழ்ச்சி தெரிந்தது என்னவாக இருக்கும் என மூவரும் யோசித்துக் கொண்டிருக்கும்போதே சந்தோஷ் அவர்கள் இருவருக்கும் ஓய்வுக்கு என ஒதுக்கப்பட்டிருந்த அறைக்கு கூப்பிட்டான் உள்ளே சென்றபோது வா தன்யா உட்கார் நான் மிகவும் சந்தோசமாக இருக்கிறேன் நமக்கு ஒரு மிகப்பெரிய ஆர்டர் கிடைத்திருக்கிறது..
சக்கரவர்த்தி குரூப் ஆஃப் கம்பெனிஸ் இருக்கிறது இல்லையா அவர்களின் புதிய கம்பெனி நம்முடைய கட்டிடத்தின் மேல் தளத்தில் இயங்கபோகிறது..
அவர்கள் அதனை விளம்பரப்படுத்த ஒரு அறிமுகவிழா நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்களாம் பெரியபெரிய ஆட்களை அழைத்து சிறப்பாக செய்ய ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.. அந்த விழாவை எடுத்து நடத்தும் பொறுப்பை நமக்கு கொடுத்திருக்கிறார்கள் அதுமட்டுமில்லாமல் அந்த விழாவில் கலந்துகொள்ளும் அவர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் நம்முடைய பொட்டிக்கில் டிரஸ்சை டிசைன் செய்து தைத்துத்தர சொல்லியிருக்கிறார்கள் ..
ஆனால் சந்தோஷ் நாம் எப்படி இதனை என தயக்கமாக ஆரம்பித்த சைதன்யாவை பார்த்து வருத்தத்துடன் ஏன் தனு நம்மால் இதை செய்ய முடியாது என நினைக்கிறாயா என கேட்டான்.. அப்படியில்லை சந்தோஷ் இது பெரியபொறுப்பு இதுவரை நாம் இப்படி செய்ததில்லை அவர்கள் மிகப்பெரிய கம்பெனி அவர்களுக்கு நம்மால் செய்ய இயலுமா நம்மிடம் ஆட்களும் குறைவாக இருக்கிறார்கள் இடவசதியும் இல்லையே என கவலையாக கேட்டாள்..
ஆனால் அதற்கு எதிராக அவன் முகம் பிரகாசித்தது அதுதான் தனு எனக்கும் கவலையாக இருந்தது ஆனால் அவர்களின் தளத்திலேயே டிசைனிங் செக்ஸனில் நமக்கு தனியாக ஒரு அறையில் இடவசதி செய்து தருவதாக சொல்கிறார்கள்.. ஆடை வடிவமைப்பில் உதவிசெய்ய ஆட்களும் அவர்கள் ஆட்களே இருக்கிறார்களாம்..
சைதன்யா சந்தேகத்துடன் எவ்வளவோ பெரிய கம்பெனிகள் இருந்தும் நமக்கு இவ்வளவு சலுகைகளுடன் எதற்கு வாய்ப்பு தருகிறார்கள் என கேட்க எனக்கும் இதே சந்தேகம்தான் தனு அதை அவர்களிடமே கேட்டேன் நாம் இரண்டு மாதத்திற்கு முன்பு DIG வீட்டுக் கல்யாணத்திற்கு அவர்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினருக்கு வடிவமைத்த ஆடைகள் மிகவும் பிடித்ததாம் அதோடு அந்த கல்யாண வேலைகளையும் நாம்தானே பொறுப்பெடுத்து செய்தோம்..
அந்த கல்யாண பெண்ணுடைய தோழி மிஸ்டர் மிதுர்வனுடைய தங்கையாம் அவள்தான் நமக்காக பேசி இந்த ஆர்டர் கொடுக்க ஏற்பாடு செய்திருக்கிறாள்.. டிஐஜி வீட்டிலும் நமக்காக சிபாரிசு செய்தார்களாம்..எல்லாவற்றையும் கேட்க சைதன்யா வுக்கு மலைப்பாக இருந்தது..
டிஐஜி வீட்டு கல்யாணத்தில் பெண்ணின் தோழி என ஒருவரை அறிமுகப்படுத்திய ஞாபகம் வந்தது அவளாகதான் இருக்கும் முதலில் அவளின் பார்வை கூர்மையாக தன்னை அளவிடுவதாக இருந்தது பிறகு சினேகமாக சிரித்து எல்லாம் சிறப்பாக இருந்ததாக பாராட்டினாள்.. சிறிதுநேரம் பேசிவிட்டு பிறகு விடைபெற்றுச் சென்றுவிட்டாள..
அவளைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தபோது சந்தோஷ் தன் பதிலுக்காக காத்திருப்பது தெரிந்தது.. ஒரு புன்னகையுடன் ஓகே சந்தோஷ் எப்பொழுது வேலை தொடங்க வேண்டுமென சொல்லு எனவும் அவன் பாராட்டுதலாக முறுவலித்தான்.. எனக்கு தெரியும் தனு நீ இப்படித்தான் சொல்வாயென அதனால்தான் நான் இதை ஒத்துக் கொண்டு வந்ததே அதோடு அவர்களது அருகிலேயே இருப்பது தான் நமக்கான கூடுதல் தகுதி என அவன் சொல்ல ஆமாமென தானும் முறுவலித்தாள்..
பிறகு வேகமாக திட்டமிடத் தொடங்கினாள் நானும் சுந்தரியும் அங்கிருந்து டிசைன் செய்வது தொடர்பான வேலைகளை செய்கிறோம் இங்கே செல்வி பார்க்கட்டும் அப்போதுதான் இங்கு உள்ள கஷ்டமர்களையும் தக்கவைத்துக் கொள்ளலாம்.. ஆமாம் தன்யா நானும் அதுதான் நினைத்தேன் அவர்களுக்கு டிசைன் செய்வது தொடர்பான வேலைகளை அங்கு முடித்துவிட்டு அதில் துணியைதைத்து ஆரிஒர்க், ஜமிக்கி, எம்ப்ராய்டரி வேளைகளை நமது இடத்திலேயே முடித்துவிடலாம்.. சந்தோஷ் விழாதொடர்பான வேலைகளை நீ பார்த்துக்கொள் வெளிவேலைகளை சரவணனிடம் கொடுத்துவிடு..
எல்லாவற்றையும் பேசிமுடித்து வெளியில் வந்தபோது சுந்தரியும் செல்வியும் என்ன என்னவென ஆர்வமாக விசாரித்தார்கள் அவர்களிடமும் எல்லாம் சொல்ல அவர்களுக்கும் முதலில் பிரமிப்பு தான்.. அக்கா இது உனது தகுதிக்கும் திறமைக்கும் தகுந்த வேலை தான் இதை வெற்றிகரமாக செய்து முடித்தால் நல்லவாய்ப்புகள் நம்மைத்தேடி வரும்.. ஆமென தலையசைத்த சைதன்யா முதலில் யார் யாருக்கு என்ன மாதிரியான உடை விழாவில் நமது பங்களிப்பு எந்தளவு என தெரிந்து கொள்ள வேண்டும்.. நாளை காலை அவர்கள் மேனேஜரை சென்று பார்ப்போம் அதன் பிறகு என்ன செய்வது எவ்வாறு செய்வது என முடிவு எடுப்போம்..
6 மணி ஆனதும் எல்லோரும் வீட்டிற்கு புறப்பட்டார்கள் அதன்பிறகு பொட்டிக்கை சந்தோஷ் தான் கவனித்துக் கொள்வான்.. செல்வி வேறு வேலை காரணமாக வெளியே செல்வதால் பஸ்சில் சென்று விட்டாள்.. எனவே சுந்தரி சைதன்யாவுடன் ஸ்கூட்டியில் வருகிறேன் எனசொல்ல சுந்தரியை அவள் வீடு செல்லும் பாதையில் இறக்கிவிட்டு அவள் வீட்டிற்கு சென்றாள்..
இவளுக்கு முன்னமே இவள் தந்தை கதிரேசன் வேலை முடித்து வந்திருந்தார்.. அவர் வண்டியை வெளியில் பார்த்தவுடன் வெளியிலிருந்து வரும்போதே அப்பா அப்பா என கத்திக்கொண்டே உள்ளே நுழைந்தாள்.. அடியேய் ஏன்டி இப்படி கத்துற எல்லோரும் வீட்டிற்குள் வரும்போது அம்மாவை தான் தேடுவார்கள் நீ என்னன்னா அப்பாவை தேடுற எனவும் அம்மா கோச்சுக்காத மா காலையிலேயே நான் எந்திரிக்கும் முன்னால அப்பா வேலைக்கு போயிட்டாங்க இன்னைக்கு பாக்கலயே அதோட ஒரு சந்தோஷமான விஷயம் சொல்லத்தான் கூப்பிட்டேன்..
அவர்கள் உரையாடலை காதில் வாங்கியவாறே வந்த கதிரேசன் என்னமா சந்தோஷமான விஷயம் உன் கல்யாணத்திற்கு சம்மதம் சொல்ல போகிறாயா என கேட்க என்னப்பா நீங்கள் நான் எவ்வளவு சந்தோசமாக வந்திருக்கிறேன் கல்யாணம் அது இதென மூடை மாற்றுகிறீர்கள்.. நான்தான் சொல்லிவிட்டேனே இன்னும் கொஞ்சநாட்களுக்கு நம் மூவருக்கும் இடையில் யாரும் கிடையாது இன்னும் கொஞ்சநாள் உங்களுடன் ஜாலியாக இருந்துவிட்டு தான் திருமணம் செய்வேன் ஏன் அப்பா நான் உங்களுக்கு பாரமாக இருக்கிறேனா என முகம் வாடினாள்..
அதனை பொறுக்காது என்னம்மா இது பேச்சு பிள்ளைகள் எப்போதும் பெற்றவர்களுக்கு பாரமில்லை அதுவும் நீ எங்கள் உயிர் உன் விருப்பத்தை மீறி எதுவும் செய்வோமா சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் என சொன்னவர் அவள் முகம் கொஞ்சம் தெளிந்ததும் என்னம்மா விஷயம் எனக்கேட்க மகிழ்ச்சியுடன் இன்று நடந்ததை பகிர்ந்து கொண்டாள்.. எல்லாவற்றையும் கேட்டுவிட்டு கதிரேசன் இது மிகப்பெரிய பொறுப்பு அம்மா உன்தகுதிக்கு தகுந்த வேலைதான் அதை நீயும் திறம்பட செய்வாய் நீ எங்களால் எல்லா வாய்ப்புகளையும் தட்டி கழித்தபோது நான் மிகவும் வருத்தமடைந்தேன்.. இப்பொழுது எங்கள் கூடவே இருந்துகொண்டு உன் திறமைக்கு தகுந்த வேலைசெய்வது மகிழ்ச்சியாக இருக்கிறது மா என சொல்லவும் அவள் புன்னகையுடன் அவர் மடியில் படுத்துக்கொண்டாள் அவர் அவள் தலையை தடவிக் கொடுத்துக் கொண்டே அவர் ஆபீஸில் நடந்ததை சொல்ல தொடங்கினார்.. இதுவும் அவர்கள் வீட்டில் எப்போதும் நடப்பது தான் காலையிலிருந்து தங்கள் வேலையிடங்களில் நடந்ததை அப்படியே பரிமாறிக்கொள்வார்கள்..​
 
#5
காத்திருந்தேனடி உனது காதலுக்காக !!-4

மறுநாள் காலையில் வழக்கம்போல் தாமதமாக எழுந்து அம்மாவிடம் திட்டு வாங்கிக் கொண்டு வேலைக்கு கிளம்பினாள் சைதன்யா..
அவசர அவசரமாக ஸ்கூட்டியை கிளப்பிக்கொண்டு அந்த வணிக வளாகத்திற்கு வந்து சேர்ந்தபோது சிறிது தாமதமாக விட்டிருந்தது.. லிப்ட்டை ஓபன் பண்ணி அவளுடைய பொட்டிக் இருந்த இரண்டாவது தளத்திற்குள் நுழைந்தபோது சுந்தரி அவளைப் பார்த்து என்னக்கா இப்படி லேட்டாக வந்திருக்கிறாய் இன்று அவர்களிடம் பேசச்செல்ல வேண்டுமல்லவா அவர்கள் மணிக்கணக்கை சரியாக பின்பற்றுபவர்கள் முதல் நாளே லேட்டாக சென்றாள் நம்மை பற்றி என்ன நினைப்பார்கள்..
அவளை சமாதானப்படுத்தி அழைத்துக்கொண்டு மூன்றாவது தளத்திற்கு சென்றபோது ரிசப்ஷனிஸ்ட் ரஞ்சனி ஸ்நேகமாக புன்னகைத்து அவர்களைப் பற்றி விவரம் கேட்டாள்.. விவரம் சொன்னவுடன் அவர்களை உட்காரச் சொல்லிவிட்டு மேனேஜரை அழைத்து விவரம் சொன்னாள்..
ஆனால் மேனேஜருக்கு பதிலாக மிதுர்வனுடைய பிஏ வந்து அவர்களை சந்தித்தான் தன் பெயர் கருணாகரன் என அறிமுகப்படுத்திக் கொண்டு அவளைப்பற்றி கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டு அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறை வசதியாக இருக்கிறதா என பார்க்கச் சொன்னான்..அவனுடன் கூடவே அவர்களும் சென்றார்கள்..

அப்போது கருணாகரன் மேடம் நீங்கள் இனி இங்கு வரும்போது தாமதம் ஆகாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள் எங்கள் எம்டிக்கு தாமதமாக வருவது பிடிக்காது என சொன்னான்..
சுந்தரியை பார்த்துக்கொண்டே " ம் " தலையாட்டினாள்..
அவர்களுக்கான இடத்தை பார்வையிட்டபோது மிகவும் விஸ்தாரமாக கட்டிங் டேபிள் ஒருபுறமும் மிஷின்கள் ஒருபுறம் எனபார்க்க நன்றாகவே இருந்தது..
மேடம் உங்களுக்கு இந்த இடம் வசதியாக இருக்கிறதா ஏதாவது மாற்றம் செய்ய வேண்டுமானாலும் சொல்லுங்கள் செய்துவிடலாம்..

இல்லை சார் இதுவே நன்றாக இருக்கிறது ஏதும் தேவையானால் சொல்கிறேன் என ஒன்றிரண்டு பொருட்களை இடம் மாற்றிவைக்க மட்டும் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டாள்..
கிளம்பும்முன் யார் யாருக்கு உடைதைக்க வேண்டும் என்ற லிஸ்டை பெற்றுக்கொண்டாள் அவர்களுக்கு தேவையான ஆடைகள் குறித்த விளக்கங்களை கேட்டபோது அவர்கள் பிறகு அதைப்பற்றி உங்களுக்கு தெரிவிப்பார்கள் என கூறினான்..
இப்போது சிறுவர் சிறுமிகளின் ஆடைகளுக்கு டிசைனிங் மட்டும் உடனடியாக கொடுக்குமாறு கேட்டான்..

சரி சார் என விடைபெற்றுக் கிளம்பினாள்.. பொட்டிக் வந்து மற்ற வேலைகளை கவனிக்க ஆரம்பித்தாள் இடையிடையே சிறுவர் சிறுமியரின் ஆடைகளைப் பற்றிய புது வடிவமைப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என சிந்தனை ஓடியது புதிதாக தோன்றும் எண்ணங்களை வரைந்து வைத்தாள் ஏற்கனவே உள்ள டிசைன்களில் சிறந்ததை தேர்ந்தெடுத்து வைத்தாள்..
அந்த டிசைன்களுக்கு ஏற்ப துணிகளை எடுத்துவைத்தாள் சிறியவர்களுக்கு என்பதால் இரண்டு மூன்று துணி வகைகளை தேர்ந்தெடுத்தாள்..

பருத்தி ஆடைகளையே முன்னிறுத்தி இருந்தாள் எல்லா வேலையும் முடித்து நிமிர்ந்தபோது களைப்பாக இருந்தது..
மறுநாள் அந்த டிசைன்கள் அடங்கிய பைலை எடுத்துக்கொண்டு பிஏ கருணாகரனை சந்தித்து அவரிடம் கொடுத்தாள்..

இன்னொரு பைலில் அவள் தேர்ந்தெடுத்த ஆடையின் வகைகளை "பின்" செய்து கொடுத்திருந்தாள்..
அவன் அந்தப் பைலில் உள்ள எல்லாவற்றையும் ஆச்சரியமாக பார்த்துவிட்டு மிகவும் நன்றாக இருக்கிறது மேடம் நான் அவர்களிடம் காட்டிவிட்டு உங்களுக்கு தகவல் தெரிவிக்கிறேன் என்றான்..
சந்தோஷுக்கு பதற்றமாகவே இருந்தது ஒரு பெரிய வேலையை முதல்முறையாக செய்யப்போகிறான் அதனால் அவ்வப்பொழுது அவளிடம் வந்து யோசனை கேட்டுவிட்டு செல்வான்.. அவன் பயமும் நியாயம்தானே சிறுசிறு கம்பெனி நிகழ்ச்சிகள் கல்யாண நிகழ்ச்சிகளை செய்திருக்கிறார்கள் அதில் ஒரு சிலர் மட்டுமே முக்கிய விருந்தாளியாக இருப்பார்கள் ஆனால் இங்கு வருபவர்கள் எல்லாருமே முக்கிய விருந்தாளிகள் அவர்களை வரவேற்பது முதல் திருப்பி அனுப்பிவைப்பது எல்லாம் இவர்களது பொறுப்புதான் அதனால் அவனுக்கு பயமாக இருந்தது அவனிடம் தைரியம் சொல்லி அனுப்பி வைத்தாலும் அவளுக்கும் மலைப்பாக தான் இருந்தது..
அதைப்பற்றி மேலும் யோசிக்க நேரமில்லாமல் அடுத்தடுத்த வேலைகள் அவளுக்கு சரியாக இருந்தது..

மறுநாள் வேலையில் இருந்து கிளம்பும்போது சந்தியாவிடம் இருந்து கால்வந்தது அதனை புன்னகையுடன் பார்த்தவாறு அட்டென்ட் செய்தாள்.. சந்தியாவும் இவர்களின் சின்ன வயது தோழி தான் ஆனால் அவள் வேலை கிடைத்து பெங்களூரு சென்று விட்டாள் மூவரும் ஒரே துறையில்தான் பயின்றார்கள் ஆனால் சந்தோஷும் சைதன்யாவும் சென்னையை விட்டு வர மறுத்துவிட அவள் மட்டும் பெங்களூர் போய் வேலை செய்வது என முடிவானது.. அவளையும் தங்களுடனே பொட்டிக்கில் சேர்ந்துகொள்ள சொல்ல அவள் ஏனோ வேண்டாம் என மறுத்துவிட்டாள்.. இவர்களும் அவளது விருப்பம் என விட்டுவிட்டார்கள்..
பெங்களூரிலிருந்து சென்னைக்கு வரும்போதெல்லாம் அவள் கால் செய்வாள் வேலை அதிகமாக இருந்ததால் சைதன்யாவால் அவளை சென்று பார்க்க முடியவில்லை அவளாக பொட்டிக்கிற்கு இரண்டுமுறை வந்து பார்த்தாள்..
இந்த முறை அவள் வரும்போது கண்டிப்பாக சைதன்யாவை வீட்டிற்கு வருமாறு அழைத்திருந்தாள்..
எப்படி டி இருக்கிறாய் என சைதன்யா கேட்க அவள் பொரிய தொடங்கினாள் பெங்களூர் போனதிலிருந்து மாதத்திற்கு ஒரு தடவை கால் செய்வதே உனக்கு பெரியதாக இருக்கிறது நானே கால்செய்து பேசினாலும் வேலையாக இருக்கிறேன் கடைக்கு பொருட்கள் வாங்கி கொண்டிருக்கிறேன் என ஏதாவது சொல்லி கட் செய்து விடுகிறாய்..
உன்னை வெளியே வேலை பார்க்க அனுப்பி விட்டு அந்த தடிமாடு என்ன செய்கிறது என சந்தோஷை திட்ட அவனை விட்டுக் கொடுக்க மனமில்லாமல் அவனுக்கும் வேலை சரியாக இருக்கிறது டி சரி இப்பொழுது நீ எங்கே இருக்கிறாய் பேச்சை மாற்றினாள்..
அதானே அவனை ஒன்றும் சொல்லிவிட கூடாதே, நான் சென்னையில்தான் இருக்கிறேன் நாளையே ஊருக்கு கிளம்புகிறேன் நீ வீட்டுக்கு வாயேன் டி உன்னைப் பார்த்து எவ்வளவு நாட்கள் ஆகிறது என வருத்தத்துடன் கேட்கவும் சைதன்யாவுக்கும் அவளைப் பார்க்க வேண்டும் போல இருந்தது..
மணி ஆறு ஆக போகிறது அவள் வீட்டிற்கு சென்றுவிட்டு எட்டு மணிக்கு கிளம்பி விடலாம் என நினைத்து சரி வருகிறேன் என்று சொல்லவும் அவள் ஆர்ப்பரித்து விட்டு போனை வைத்தாள்..

சைதன்யாவும் சிரித்துக்கொண்டே அவள் வீடு நோக்கி ஸ்கூட்டியை ஓட்டி சென்றாள்... அவளை வரவேற்று உபசரித்தவள் அவளுடைய அறைக்கு அழைத்துச் சென்றாள்.. இருவரும் வெகுநாள் கதைகளை பேசஆரம்பித்தனர் நேரம் போவது தெரியாமல் பேசிக் கொண்டிருந்துவிட்டு எதார்த்தமாக மணியை பார்க்க அது ஒன்பது மணியை காட்டியது..
தியா மணி ஆகிவிட்டது டி நான் பாட்டுக்கு கவனிக்காமலேயே பேசிக்கொண்டு இருந்துவிட்டேன் என் சாலையில் ஆள் நடமாட்டமே இருக்காது கிளம்புகிறேன் அடுத்த முறை வரும் போது சந்திப்போம் என விடைப்பெற்று கிளம்பினாள் வேகமாக வந்த பொழுதும் ஒருமுறை வண்டி மக்கர் செய்ய புறப்பட நேரமாகிவிட்டது..
வண்டியை சரிசெய்து ஸ்டார்ட் செய்தபோது இன்னொரு பைக்கில் வந்த இரு வாலிபர்கள் அவளை கலாட்டா செய்தனர்.. இவளை முன்னாலேயும் போகவிடாமல் அவர்களும் போகாமல் முன்னும் பின்னுமாக போய்க்கொண்டிருந்தனர் ஒரு கட்டத்தில் ஒரு கார் அவர்களை இடிப்பது போல் வர பயத்தில் அவர்கள் அவள் போய்க்கொண்டிருந்த திசையில் பைக்கை திருப்ப ஸ்கூட்டியில் லைட்டாக இடித்துவிட்டனர் அவள் பிரேக்போட்டு சுதாரிப்பதற்குள் வண்டியிலிருந்து கீழே விழுந்துவிட்டாள் அடி ஒன்றும் இல்லையெனினும் விழுந்த அதிர்ச்சியில் மயங்கி விட்டாள்..
அவள் மயங்கியதை பார்த்த அந்த இளைஞர்கள் பைக்கை எடுத்துக்கொண்டு பறந்துவிட்டனர்.. காரிலிருந்து இறங்கிய அவன் அவளை தூக்கி மடியில் சாய்த்து "சது" என அழைத்து கன்னத்தை தட்டுவது அரை மயக்கத்தில் தெரிந்தது.. குரல் யாரென தெரியாவிட்டாலும் அவனது பதற்றமான அழைப்பிலும் அக்கறையிலும் அதிக அன்பு தெரிந்தது..
அவளை அணைத்தவாறு தூக்கி கார்சீட்டில் கிடத்தினான் யாரென அவள் யோசிக்கும்பொழுதே முழுதாக மயங்கி விட்டாள்..

அவளை ஹாஸ்பிடலில் சேர்த்து அவள் கடைசியாக அழைத்த நம்பருக்கு அழைத்து தகவல் சொல்லி சந்தியாவை வரவழைத்து அவளிடம் விபரம் சொல்லி அவளுக்கு ஒன்றும் இல்லை அதிர்ச்சியால் வந்த மயக்கம் தான் என தெரிந்துகொண்டு விடைபெற்றுக் கிளம்பினான்..
கிளம்பும் போது அவன் சைதன்யாவை பார்த்த பார்வையில் அப்பட்டமான காதல் தெரிந்தது.. அவன் யார் என யோசிக்கும் முன்னே விடைபெற்று கிளம்பி விட்டான்.. பெருமூச்சுடன் சைதன்யாவின் வீட்டுக்கு சொல்லிவிட்டு அவர்கள் வருவதற்காகக் காத்திருந்தாள்..
மறுநாள் காலையில் அவள் கண்விழித்த போது அருணாவிடமிருந்து சரியான மண்டகப்படி கிடைத்தது சைதன்யாவுக்கு ஸ்கூட்டியிலிருந்து விழுந்தது வரை தான் ஞாபகம் இருந்தது சந்தியாவும் யாரோ ஒருவன் கொண்டுவந்து சேர்த்துவிட்டு தகவல் தெரிவித்ததாக மட்டும்தான் சொன்னாள் அவன் பார்வையை பற்றி சொல்லலாமா என யோசித்துவிட்டு வேண்டாமென விட்டுவிட்டாள் .. அவனுக்கு ஒரு நன்றி கூட தெரிவிக்க முடியவில்லையே என்று வருத்தம் அடைந்தாள் சைதன்யா..