"கானலோ நாணலோ காதல்"

Kripnythaa

Moderator
Mar 26, 2018
422
112
63
"கானலோ நாணலோ காதல்"

இதுவும் நான் சில வருடங்களுக்கு முன் படித்து மனதில் பசுமையாக பதிந்த கதை. இன்றைய நிலையில் பல பணியிடங்களில் நடைபெறும் தொல்லைகளை தோலுரித்த கதை.

ஆதித்யாவின் அருமை தெரியாத குந்தவை பசுந்தோல் போர்த்திய குள்ளநரியை நல்லவன் என்று எண்ணுவது போன்றே இன்று நிஜ வாழ்க்கையில் பலரின் நிலை உள்ளது. ஒருவரின் புறத்தோற்றம் அகத்தின் அழுக்கை மறைத்துவிடுகிறது.

விக்ரம்க்கு தேவியின் மேல் உள்ள காதல் தான் அவளுக்கு அநியாயத்தை தட்டி கேட்கும் தைரியத்தை தந்ததோ! வானவனின் வேடிக்கை பேச்சும், புத்தி சாதுர்யமும் அருமை.

"குற்றங்கள் கூறப்பட்டாலொழிய குறைகள் கலையப்படலாகாது" என்பதை அருமையான முறையில் அளித்தமைக்கு பாராட்டுக்கள்.