Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript காற்றில் கலைந்த ரங்கோலிகள் | SudhaRaviNovels

காற்றில் கலைந்த ரங்கோலிகள்

Mukil dinakaran

New member
Aug 4, 2020
12
0
1
“காற்றில் கலைந்த ரங்கோலிகள்”
(நாவல்)
எழுதியவர் : முகில் தினகரன்
அலை பேசி : 95977 08460

அத்தியாயம் - 5

அப்போது வாசலில் டாக்ஸி சத்தம் கேட்க, புகையைக் கையால் தள்ளியபடியே வாசலுக்குப் போய்ப் பார்த்தான் தியாகு. அங்கே, புகைக்கு நடுவில் ஒரு டாக்ஸி மிதந்து கொண்டிருந்தது.

“சார்...பிரசவத்துக்குக் கூட்டிட்டுப் போகணும்!...உடனே வாங்க”ன்னு போன் வந்திச்சு!...கிளம்பலாமா?” என்று தண்ணீரில் நீச்சலடிப்பது போல் இரு கைகளையும் ஆட்டி, புகையில் நீச்சலடித்தவாறே டாக்ஸி டிரைவர் கேட்க,

“என்னது?...நான் கூப்பிடவே இல்லையே?...யார் போன் பண்ணியிருப்பாங்க?...”யோசித்த தியாகு, “சரி...ஆபத்துக்குப் பாவமில்லை!” என்று தனக்குள் சொல்லிக் கொண்டு, செல்வியிடம் மிதந்து போய்,

“டாக்ஸி வந்திடுச்சு...கிளம்பு” என்றான்

அவர்களிருவரையும் ஏற்றிக் கொண்டு, புகை நடுவே அந்த டாக்ஸி மிதந்து செல்ல, பிரசவ வார்டுக்கு வெளியே மிதந்தவாறே காத்திருந்தான் தியாகு.

எங்கும் புகை...எதிலும் புகை.

பிரசவ வார்டின் கதவு திறக்கப்பட, டாக்டர் மிதந்து வந்தார். “இந்தாங்க உங்க மனைவிக்குப் பொறந்த குழந்தை” என்றபடி தன் இரு கைகளையும் தியாகுவின் முகத்துக்கெதிரே நீட்டினார்.

ஆசையுடன் அதை வாங்கக் கையை நீட்டிய தியாகு, அதிர்ந்து போனான்.

டாக்டரின் கைகளில் இருந்தது ஈரத்தில் ஊறிய இரண்டு கரன்ஸிக் கட்டுகள்.

“டாக்டர்...இதென்ன?...இதை எதுக்கு என்கிட்டே குடுக்கறீங்க?” கோபமாய்க் கேட்டான் தியாகு.

“நானா குடுக்கலைப்பா....உன் மனைவி குடுத்ததைத்தான் நான் கொண்டு வந்து குடுக்கறேன்!...”

“என்ன சொல்றீங்க டாக்டர்?...அவ வயித்துல வளர்ந்த என் வாரிசு இதுவா?” நம்ப முடியாமல் கேட்டான் தியாகு.

“ஆமாம்...இதேதான்...வாங்கிக்கங்க”என்று சொல்லியவாறே அவர் நீட்ட,

“அய்யோ...வேண்டாம்!...வேண்டாம்!...நான் தொட மாட்டேன்!...நான் தொட மாட்டேன்!”

கையை உதறிக் கொண்டு கத்தியவன்,

“டிங் டாங்”....“டிங் டாங்” என்று காலிங் பெல் ஒலிக்க, தூக்கத்திலிருந்து திடுக்கிட்டு விழித்தான்.

“அடக்கடவுளே!...எல்லாம் கனவா?”

எழுந்து போய் அறைக் கதவைத் திறந்தான். “தொந்தரவுக்கு மன்னிக்கணும் சார்!...லன்ச் ஆர்டர் பண்றீங்களா?” ரூம் பாய் கேட்டான்.

“ம்ம்ம்...வேண்டாம்ப்பா...நானே வெளிய போறேன்” சொல்லி விட்டு வேகமாய்த் திரும்பிய தியாகு, பக்கத்து அறையிலிருந்து வெள்ளிங்கிரி வெளியேறுவதைப் பார்த்ததும், சட்டென்று தன்னை மறைத்துக் கொண்டான்.

வேக வேகமாய் வராண்டாவில் நடந்து சென்றவர் லிப்டிற்குள் நுழைந்து கீழே இறங்கியதும், தன் மொபைலை எடுத்து அவருக்கு கால் செய்தான் தியாகு, “அப்பா...இன்னுமா கோயிலில் இருக்கறீங்க?”

“ஆமாம்ப்பா!...இன்னும் கொஞ்சம் நேரம் இருந்திட்டு வர்றேனே?”பரிதாபக் குரலில் வெள்ளிங்கிரி கேட்க,

“நிதானமாகவே வாங்க...ஒண்ணும் அவசரமில்லை” என்ற தியாகு, அறையை விட்டு வெளியேறி, வராண்டாவிற்கு வந்து அங்கிருந்த வெண்டிலேட்டர் வழியாக கீழே நோட்டம் விட்டான். வெள்ளிங்கிரி ஹோட்டலின் மெயின் கேட்டைத் தாண்டி நடந்து கொண்டிருந்தார்.

“கரெக்ட்...இதுதான் சரியான சந்தர்ப்பம்!...இப்பவே அந்த ரூமுக்குள்ளார போயி...அவங்க யாரு?...என்ன?ன்னு விசாரிச்சிட வேண்டியதுதான்”

வராண்டாவில் யாரும் இல்லாததை உறுதிப் படுத்திக் கொண்டு, அறை எண் 108-ஐ நோக்கி முதல் அடி வைத்தான்.

“பட...பட”வென அறைக் கதவு தட்டப் பட, அசதிக்காய் படுத்திருந்த அந்த மூத்த பெண்மணி, திடுக்கிட்டு எழுந்தாள்.

சிறுமி அம்மாவைப் பார்த்து, “நான் போய்த் திறக்கட்டுமா?” என்று கேட்க,

“இரு...இரு...அவசரப்படாதே!” என்றபடி நிதானமாய் எழுந்து வந்த அந்தப் பெண்மணி கதவருகே வந்து, “யாரு?” என்று கேட்டாள்.

அவளது குரல் அந்தக் கதவைத் தாண்டி இந்தப் பக்கம் வராது போக, கதவு மீண்டும் தட்டப்பட்டது.

“யாராயிருக்கும்?” என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டு கதவைத் திறந்தாள் அவள்.

வெளியில் நின்றிருந்த தியாகு, “உள்ளே வரலாமா?” என்று சன்னமான குரலில் பவ்யமாய்க் கேட்டான்.

கதவு திறக்கப்பட்டவுடன் “விருட்”டென்று உள்ளே நுழைந்து விடாமல், நாகரீகமாய் வெளியில் நின்று, “உள்ளே வரலாமா?” என்று அனுமதி கேட்ட, தியாகுவின் செய்கை அவன் மீது அந்தப் பெண்மணிக்கு ஒரு நல்ல மதிப்பினைத் தந்து விட,

“யெஸ்...கம் இன்” என்று சொல்லி அவனுக்கு வழி விட்டாள் அந்தப் பெண்மணி.

உள்ளே வந்த தியாகுவை, மேலிருந்து கீழ் வரை நிதானமாய் ஆராய்ந்தவள், அங்கிருந்த சோபாவைக் காட்டி, “உட்காருங்க!” என்றாள்.

தியாகு உட்கார்ந்ததும், எதிர் சோபாவில் தானும் அமர்ந்தாள்.

“சொல்லுங்க மிஸ்டர்....யார் நீங்க?...என்ன விஷயமா இங்க வந்திருக்கீங்க?” என்று அந்தப் பெண்மணி தன் கம்பீரக் குரலில் தியாகுவைப் பார்த்துக் கேட்டாள். அவள் தோரணையில் ஒரு அதிகாரத்துவம் இருந்தது.

“அதே கேள்வியைத் திருப்பி உங்களைப் பார்த்து நான் கேட்கிறேன்... “யார் நீங்க?...எதுக்காக வெள்ளிங்கிரி அய்யாவைப் பார்க்க வந்திருக்கீங்க?” நானும் கம்பீரத்தில் சற்றும் சளைத்தவனல்ல என்று பதிலடி கொடுக்கும் விதமாய் இருந்தது தியாகு கேட்ட தொணி.

ஆனால் அதற்கெல்லாம் துளியும் அசராதவள் போல், அவள் தன் முகத்தைச் சுருக்கிக் கொண்டு அவனைக் கூர்ந்து பார்த்து விட்டு, “நீங்க அவரோட ஃபிரெண்டா?” கேட்டாள்.

“ம்ம்ம்...ஃபிரெண்ட் இல்லை!...ரிலேட்டிவ்!...வெரி வெரி குளோஸ் ரிலேட்டிவ்” என்றான் தியாகு.

“அப்படின்னா.....?” தலையைச் சாய்த்துக் கொண்டு அந்தப் பெண் கேட்டாள்.

“மகன்!...நான் அவருடைய மகன்!...ஒரே மகன்...தியாகு”

சட்டென்று முகம் மாறிய அந்தப் பெண், “ஏய் மிஸ்டர்...என்ன வேணும் உனக்கு?...எதுக்கு இந்தப் பொய்?...கோ அவுட்” கோபத்துடன் கதவைக் கை காட்டினாள்.
“நோ...நோ...!...டென்ஷன் ஆகாதீங்க மேடம்!...உங்க கிட்டப் பொய் சொல்றதுல எனக்கு என்ன லாபம்?” சிரித்தபடி பதில் சொன்னவன், “ஒன் மினிட்” என்று சொல்லி விட்டு தன் பாக்கெட்டிலிருந்த மொபைலை எடுத்து தந்தைக்கு கால் செய்தான்.

அவர் லைனுக்கு வந்ததும் வீடியோ காலையும், ஸ்பீக்கரை ஆன் செய்தான், “அப்பா...கம்பெனிக்கு வந்துட்டீங்களா?” கேட்டான்.

“ம்...வந்திட்டேன் தியாகு...உன் ரூமுக்குப் போய் எட்டிப் பார்த்தேன்...உன்னைக் காணோமே?”

மொபைலின் திரையில் தெரிந்த வெள்ளிங்கிரியின் முகத்தை அந்தப் பெண்மணிக்குக் காட்டினான். அவள் பேயறைந்தது போலானாள்.

“கொஞ்சம் வெளி வேலை இருந்திச்சு டாடி...அதான் கிளம்பி வந்துட்டேன்!...அப்புறம் டாடி...ஏதோ மனசு சரியில்லை!ன்னு சொன்னீங்களே?...ஆர் யூ ஓ.கே.நௌ?” கேட்டான்.

“ஓ.கே....ஓ.கே.” என்றார் வெள்ளிங்கிரி.

“சரிங்க டாடி...இங்க ஒரு சின்ன வேலைதான்...ஒரு அரை மணி நேரத்துல வந்திடறேன்!...” என்று சொல்லி இணைப்பைத் துண்டித்து விட்டு அந்தப் பெண்மணியைப் பார்த்து, “இப்ப நம்பறீங்களா?” கேட்டான்.

இறுகிப் போன முகத்துடன் தரையையே நிலைக் குத்திப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் அந்தப் பெண்.

“என்ன மேடம்...திடீர்னு அமைதியாயிட்டீங்க?...என்னாச்சு?” கேஷுவலாய்க் கேட்ட தியாகு, அந்தப் பெண்ணின் விழியிலிருந்து சொட்டிய கண்ணீரைப் பார்த்ததும் அதிர்ந்து போனான்.

“மே...ட...ம்!....அழறீங்களா?” சன்னக் குரலில் கேட்டான்.

கண்களில் கண்ணீரோடு புன்னகைத்தவள், “ப்ச்....இனி அழுது என்ன பிரயோஜனம்?” என்றாள் விரக்திக் குரலில்.

சில நிமிடங்கள் அமைதியாய் அவள் முகத்தையே பார்த்தபடி அமர்ந்திருந்த தியாகு, “மேடம்...நான் கேட்ட கேள்விக்கு நீங்க இன்னும் பதிலே சொல்லலை” என்று ஞாபகமூட்டினான்.

“சர்ர்ர்ர்ர்”ரென்று ஓசையுடன் மூக்கை உறிஞ்சி, அதே ஓசையுடன் ஒரு பெருமூச்சை வெளியிட்ட அந்தப் பெண், “என்ன கேள்வி?” கேட்டாள்.

“யார் நீங்க?...எதுக்காக வெள்ளிங்கிரி அய்யாவைப் பார்க்க வந்திருக்கீங்க?”

“நீங்க சொல்லிட்டீங்க... “நான் அவரோட ஒரே மகன்” அப்படின்னு தைரியமா!...ஆனா என்னால அப்படிச் சொல்ல முடியலை... “ஏன்னா...நான் அவரோட ஒரே மனைவி இல்லை!...மனைவிகள்ல ஒருத்தி” என்றாள் கரகரத்த குரலில்.

ஒரு கணம் மொத்த உலகமும் “கிர்ர்ர்ர்ர்ர்”ரென்று சுழன்று, பின் நின்றது போலிருந்தது தியாகுவுக்கு.

“என்ன...சொல்றீங்க மேடம்?...நீங்க எங்க அப்பாவோட மனைவியா?” நைந்து போன குரலில் கேட்டான் தியாகு.

“ஏன் நம்ப முடியலையா?” என்றவள் தனது பேக்கைத் திறந்து, அந்தப் புகைப்பட ஆல்பத்தை எடுத்து தியாகுவிடம் கொடுத்தாள்.

அவசரமாய் வாங்கிப் பார்த்தாள்.

முதல் போட்டோவில் அந்தப் பெண்ணும், அவன் தந்தை வெள்ளிங்கிரியும் மணக் கோலத்தில்.

இரண்டாவது போட்டோவில் இருவரும் ஜாலியாக ஒருவர் தோளில் ஒருவர் சாய்ந்தபடி,

மூன்றாவது போட்டோவில் சிறு குழந்தையைக் கையில் வைத்துக் கொண்டு,

அடுத்த போட்டோவில் வளர்ந்த சிறுமியுடன்,

தொடர்ந்து பல போட்டோக்கள், அந்தச் சிறிய குடும்பம் சந்தோஷமாய் இருந்தற்குச் சாட்சியாய்.

மொத்தப் போட்டோக்களையும் பார்த்து முடித்த தியாகு, “பட்”டென்ற ஓசையுடன் அந்த ஆல்பத்தை மூடினான்.

அவன் மனசாட்சி உறுத்தியது. “அப்படியென்றால்....சிங்கப்பூர் சென்ற முதல் வருடம் மட்டும் கடிதம் போட்டு...பணம் அனுப்பிய அப்பா...அதற்குப் பின் தன் தொடர்பை முறித்துக் கொண்டதற்குக் காரணம் இதுதானா?....அங்கேயே தனக்கொரு குடும்பத்தை உண்டு பண்ணிக் கொண்டு, அதிலேயே மூழ்கிப் போன காரணத்தால்தான் எங்களையெல்லாம் “அம்போ”வென்று விட்டு விட்டாரா?...கடவுளே...எங்கம்மாவுக்கு இப்படியொரு மாபெரும் துரோகத்தைச் செய்த மனுஷனுக்கு...பணத்துக்கு ஆசைப்பட்டு நான் அடைக்கலம் குடுத்திட்டேனே?”

தலையைத் தூக்கி அந்தப் பெண்மணியைப் பார்த்த தியாகு கேட்டான், “எப்படி...எப்படி இது நடந்தது?...அவரு சிங்கப்பூர் வந்தப்பவே அவருக்கு வயசு நாற்பத்தி ஐந்துக்கும் மேல் இருக்குமே?...அவரை எப்படி மணந்தீர்கள்?...அந்த வயதுக்காரருக்கு ஒரு குடும்பமும்...குழந்தைகளும் நிச்சயம் இருப்பார்கள்...என்பது உங்களுக்குத் தோணலையா?...அவசரக் காதலில் நடந்த கல்யாணமா?...இல்லை அருவருப்பான உறவில் நடந்த கல்யாணமா?...நீங்க அவரை மயக்கினீர்களா?....இல்லை அவர் உங்களை மயக்கிட்டாரா?” படபடத்தான் மகன்.

“தம்பி...உன் பேர் என்ன?” ஒரு பாசப் பார்வையோடு தியாகுவைப் பார்த்து அவள் தணிந்த குரலில் கேட்க,

“தியாகு”என்றான்.

“நீ என் கணவருடைய மகன்!...அதனால் எனக்கும் மகன்!...உன்கிட்ட நான் கேட்டுக்கறதெல்லாம் ஒண்ணே ஒண்ணுதான்!...தயவு செய்து என்னைத் தவறாய் நினைக்காதே!...நான் உன் தந்தையை மயக்கவும்...இல்லை...மயக்கி மணந்து கொள்ளவும் இல்லை!...எல்லாம் அந்தக் காலகட்டத்தில் விதி நிகழ்த்திய நாடகம்!...”

தியாகு அலட்சியப் புன்னகையுடன் அவளைப் பார்க்க,

அவள், இருபத்தியொரு வருடங்களுக்கு முன் சிங்கப்பூரில் விதி நிகழ்த்திய அந்த பழைய நாடகத்தை விவரிக்க ஆரம்பித்தாள்.

1998.

சிங்கப்பூர் துறைமுகத்தில் கண்டெய்னர்களைப் பராமரிக்கும் காண்ட்ராக்ட்டோடு, அங்கு வரும் கப்பல்களில் கன்டெய்னர்களை ஏற்றி, இறக்கும் பணிக்கான கான்ட்ராக்டையும் தன் கை வசம் கொண்டு, கடந்த இருபது ஆண்டுகளாய் அந்தத் துறைமுகத்திற்குள் ஒரு ராஜா போல் வலம் வந்து கொண்டிருக்கும் “ஒய். ராஜகோபால்” என்னும் பெரிய்ய்ய்ய காண்ட்ராக்டரிடம் சூப்பர்வைஸராக பணியாற்றிக் கொண்டிருந்தார் வெள்ளிங்கிரி.

பணிக்கு வந்து சேர்ந்த நாளிலிருந்து, தனது விகல்பமில்லா விசுவாசத்தாலும், சோம்பலில்லாத சீரிய உழைப்பாலும், முதலாளி ஒய்.ராஜகோபாலின் நன் மதிப்பைப் பெற்று வைத்திருந்தார்.

சில சமயங்களில் பெரிய தொகைகளைக் கூட வெள்ளிங்கிரியிடம் கொடுத்து வங்கியில் கட்டி வரச் சொல்லுவார் ஒய்.ராஜகோபால். அந்த அளவிற்கு தன்னுடைய நம்பகத்தன்மையையும் செறிவு படுத்தி வைத்திருந்தார் வெள்ளிங்கிரி.

ஒரு மாலை நேரம்,

துறைமுகத்திற்குள்ளிருந்த முதலாளியின் அலுவலகத்திற்குள் புதிதாய் வந்திறங்கியிருந்த ஒரு கண்டெய்னர் குறித்த விபரங்களைக் கேட்கச் சென்ற வெள்ளிங்கிரி தன் முதலாளி விழியோரம் ஈரக் கசிவுடன் டென்ஷனாய் உட்கார்ந்திருப்பதைப் பார்த்து ஆடிப் போனார். ஒரு சிங்கம் போல பீடு நடை போடும் அந்த மனிதர் அவ்வாறு கலங்கிப் போய் அமர்ந்திருந்தது வெள்ளிங்கிரியை மிகவும் வேதனையடையச் செய்தது.

“அய்யா...உங்களுக்கு என்னாச்சு?...இதற்கு முன் உங்களை இது போன்ற ஒரு கோலத்தில் நான் பார்த்ததேயில்லையே?” படபடப்புடன் கேட்டார்.

“வெள்ளிங்கிரி!...வெளிய நாலு பேரிடம் சொல்லி ஆறுதல் அடையக் கூட முடியாத கவலையப்பா என்னோட கவலை” என்றார்.

“அய்யா...உங்களோட ஒப்பிடும் போது...நான் மிக மிகச் சாதாரணன்!...இருந்தாலும் சொல்கிறேன்!...உங்க கவலை என்ன?ன்னு என்கிட்ட சொல்லுங்கய்யா!...என்னால் முடிஞ்சதைச் செய்து...உங்களோட கவலையை நான் குறைக்கிறேன்”

அதைக் கேட்டு அகமகிழ்ந்து போன ஒய்.ராஜகோபால், “வெள்ளிங்கிரி...நான் சொல்லப் போற விஷயத்தை தயவு செய்து நீ வேற யார்கிட்டேயும் பகிர்ந்துக்காதே!...ஏன்னா....இது என் மகள் சம்மந்தப்பட்ட ஒரு விஷயம்!...கல்யாணமாகாத பொண்ணு...அவ எதிர்கால இதனால் பாதிக்கப்பட்டு விடக் கூடாது!” என்று சொல்ல,

“அய்யா....இனி உங்களோட பிரச்சினை...என்னோட பிரச்சினை!...அதை எப்படி நாசூக்கா டீல் பண்ண்ணுமோ...அப்படி நான் டீல் பண்ணுவேன்...என்னை நம்புங்க”

“ஓ.கே...வெள்ளிங்கிரி....நான் சொல்றேன்” என்றவர் சில விநாடிகள் கண்களை மூடி எதையோ யோசனை செய்து விட்டு, “என்னுடைய ஒரே மகள்...கனிஷ்கா...போன வருஷம்தான் கல்லூரிப் படிப்பை முடிச்சா!...அவ படிப்பை முடிச்சதும் அவளைக் கொண்டு நம்ம ஆபீஸ்லதான் உட்கார வைக்கணும்!னு நெனச்சிட்டிருந்தேன்!...ஆனா..ஆனா...என்னோட அந்த எண்ணமெல்லாம் ஒரே நிமிஷத்துல மணல் வீடு மாதிரிக் கரைஞ்சு போச்சு” கரகரத்துச் சொன்னார் ஒய்.ராஜகோபால்.

“அய்யா...நான் குறுக்கே கேட்கிறேன்!னு தப்பா நெனைக்காதீங்க அய்யா!...நம்ம பாப்பா ஏதாவது காதல்...கீதல்...ன்னு திசை மாறிப் போயிடுச்சோ?” வெள்ளிங்கிரி மிகவும் பவ்யமாய்க் கேட்டார்.

“அப்படிப் போயிருந்தால் கூடப் பரவாயில்லை!...அவளுக்குப் பிடிச்சவனைத தானே லவ் பண்றா?...பண்ணிட்டுப் போகட்டும்!னு விட்டுடுவேன்!...அந்தஸ்து...வயசு...எதைப் பற்றியும் யோசனையே பண்ணாமல் கல்யாணமும் பண்ணி வெச்சிடுவேன்!...ஆனா இவ போற பாதை வேற மோசமான பாதை”

முதலாளி அப்படிச் சொன்னதும் வெள்ளிங்கிரியின் மூளை வேறு விதமாய்ச் சிந்தித்தது. அவர் சொன்ன வார்த்தைகளை மறுபடியும் ஒரு முறை தன் மனதிற்குள் சொல்லிப் பார்த்தார், “அப்படிப் போயிருந்தால் கூடப் பரவாயில்லை!...அவளுக்குப் பிடிச்சவனைத் தானே லவ் பண்றா?...பண்ணிட்டுப் போகட்டும்!னு விட்டுடுவேன்!...அந்தஸ்து...வயசு...எதைப் பற்றியும் யோசனையே பண்ணாமல் கல்யாணமும் பண்ணி வெச்சிடுவேன்!”.

அதில் தனக்கான ஏதோ ஒரு ஆதாயம் ஒளிந்திருப்பதாய் அவருக்குப் பட, முதலாளியின் அருகில் வந்து அவர் தோளைத் தொட்டு, “அய்யா...எதுவானாலும் என் கிட்டச் சொல்லுங்கய்யா...நான் எதுக்கு இருக்கேன்?...உங்களுக்காக என் உயிரையும் கூடக் குடுப்பேன்” என்றார்.

மிகவும் நெகிழ்ந்து போன ஒய்.ராஜகோபால், “என் மகள் கனிஷ்கா...போதை மாத்திரைகளுக்கும், போதை ஊசிக்கும் அடிமையாயிட்டா வெள்ளிங்கிரி!...நானும் எவ்வளவோ சொல்லிப் பார்த்திட்டேன்...என்னால் அவளைத் திருத்தவே முடியவில்லை!...அம்மா இல்லாத பொண்ணாச்சே?ன்னு ரொம்பச் செல்லம் குடுத்து வளர்த்து நான்தான் அவளைக் கெடுத்திட்டேன்!...ஹும்....சின்னப் பொண்ணா இருந்தா அடித்துத் திருத்தலாம்...இருபத்திரெண்டு வயசுப் பொண்ணைக் கை நீட்டி அடிக்கவா முடியும்?...அப்படி அடிச்சு...அவ பாட்டுக்கு கோபத்துல ஏதாச்சும் செஞ்சுக்கிட்டாள்ன்னா...அது வேற மாதிரிப் பிரச்சினையாயிடும்!...நான் இருதலைக் கொள்ளி எறும்பு மாதிரித் தவிக்கறேன் வெள்ளிங்கிரி” என்று சோகமான குரலில் சொல்லி முடித்தார்.

“அய்யா...பாப்பா கிட்ட நான் பேசிப் பார்க்கட்டுமா?...” வெள்ளிங்கிரி கேட்க.,

உதட்டைப் பிதுக்கினார் ஒய்.ராஜகோபால், “அவ நிலைமை இப்ப அதையெல்லாம் தாண்டி எங்கியோ போயிடுச்சு!...எந்த நேரத்துல என்ன நடக்குமோ?...எங்கிருந்து போன் வருமோ?...“உங்க மகள் அளவுக்கதிகமான போதைல இங்க கிடக்கறா...வந்து அள்ளிட்டுப் போங்க”ன்னு யார் கூப்பிட்டுச் சொல்லுவாங்களோ?...ன்னு ஒவ்வொரு நிமிஷமும் கதி கலங்கிப் போய் உட்கார்ந்திருக்கேன் வெள்ளிங்கிரி.

“அய்யா...நான் என்ன பண்ணணும்?னு மட்டும் சொல்லுங்க!...அதை அப்படியே செய்ய நான் தயாராயிருக்கேன்” நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு சொன்னார் வெள்ளிங்கிரி.

“எனக்காக ஒண்ணு மட்டும் செய் வெள்ளிங்கிரி...நீ...இந்த ஹார்பர்ல சூப்பர்வைஸர் வேலை பார்த்தது போதும்...இனிமேல் என் மகளுக்கு சூப்பர்வைஸரா இரு...”

“புரியலை அய்யா”

“என் மகள் தினமும் ஈவினிங்... “டத்தோ ராஜவேலு தெரு”வில் இருக்கற கிளப்புக்கு தன்னோட பாய் ஃபிரண்ட்ஸோட டான்ஸிங் பண்ணப் போவா!...அவனுக எல்லோருமே போதைப் பொருளுக்கு அடிமையான பொறுக்கிப் பசங்க!...“அவங்க கூடவெல்லாம் போகாதே...போகாதே”னு நானும் கரடியாய்க் கத்திப் பார்த்திட்டேன்!...அவ கேட்கவே மாட்டேங்கறா!...ஹூம்...இப்பக் கூட அவ அங்கதான் போயிருப்பா!...என்னைக்காவது ஒரு நாள்..எவனாவது ஒரு பொறுக்கி...போதைல இருக்கற அவளைக் கெடுத்து வயித்துல புள்ளையைக் குடுத்துவானோ?னு நெனச்சு...நான் என் வயித்துல நெருப்பைக் கட்டிக்கிட்டுத் திரியறேன்!” பெரிய பணக்காரனாய், அந்தச் சிங்கப்பூரில் பெரும் புள்ளியாய், விளங்கிக் கொண்டிருக்கும் அந்தப் பெரிய மனிதரின் சோகப் பின்னணி வெள்ளிங்கிரிக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது.

“டேய் வெள்ளிங்கிரி...நீ மட்டும் இதை சரியான முறைல பயன் படுத்திக்கிட்டேன்னா...இந்த ஒய்.ராஜகோபாலோட சொத்து முழுவதையும் நீ சொந்தமாக்கிக்கலாம்!...”என்று அவர் மனம் அவரை உசுப்பியது.

“அய்யா...நீங்க உங்க கவலையை என்கிட்ட சொல்லிட்டீங்கல்ல...இனி அதை மறந்திடுங்க!....நான் இப்பவே டத்தோ ராஜவேலு தெருவுக்குப் போறேன்...அங்கிருக்கற உங்க மகளைக் கூட்டிட்டுப் போய் உங்க வீட்டுல விட்டுட்டு வர்றேன்!...அதே மாதிரி...இனிமேல் எல்லா நேரமும் அவ கூடவே ஒரு பாடிகார்டு மாதிரி இருக்கேன்!...முடிந்த போதெல்லாம் அவளுக்கு அட்வைஸ் பண்றேன்!...அவ்வளவு சீக்கிரம் அவளை அந்தப் போதைப் பழக்கத்திலிருந்து மீட்க முடியுமோ...அவ்வளவு சீக்கிரத்துல மீட்டுடறேன்!...” வெள்ளிங்கிரி ஆவேசமாய்ச் சொன்னார்.

“ஆஹா....வெள்ளிங்கிரி...நீ சொன்னதைக் கேட்கும் போதே என் மனசு குளிருதுப்பா!...” தன்னுடைய உயர் நிலையை மறந்து, தன்னிடம் சூப்பர்வைஸராக வேலை பார்க்கும் வெள்ளிங்கிரியைக் கையெடுத்துக் கும்பிட்டார் ஒய்.ராஜகோபால்.

வாழ்க்கையில் ஒரு பண வெளிச்சம் கண்ணுக்கெதிரில் தெரிய, சந்தோஷமாய் அங்கிருந்து கிளம்பினார் வெள்ளிங்கிரி.

“ம்ம்ம்...வெள்ளிங்கிரி...எதுல போகப் போறே?”

“அய்யா...டாக்ஸிலதான்”

“வேண்டாம்!...உனக்குத்தான் டிரைவிங் தெரியுமல்ல?...என்னோட காரையே எடுத்திட்டுப் போ!...”என்றபடி அவர் கார் சாவியை நீட்ட,

“அய்யா...அப்ப நீங்க....?”

“எனக்கென்னப்பா...வீட்டுல மூணு கார் நிக்குது!...டிரைவரை வீட்டுக்கு அனுப்பி வேறொரு காரை எடுத்திட்டு வரச் சொல்லிடறேன்...நீ கிளம்பு...உனக்கு கனிஷ்காவை அடையாளம் தெரியுமல்ல?”

“ம்...ஒரு தடவை உங்களோட ஒரு மால்ல பார்த்திருக்கேன் சார்”

“ஓ.கே...பார்த்து ஜாக்கிரதையா டீல் பண்ணு!” என்றார் அந்த பணக்காரத் தந்தை.

“சரிங்க அய்யா” என்று சொல்லி விட்டு நடந்த வெள்ளிங்கிரி, அவர் பார்வையில்...அந்த விநாடியில்...தன் மகளைக் காக்க வந்த ரட்சகன் போலத் தெரிந்தார்.

பாவம், அந்த ரட்சகனுக்குள்ளிருக்கும் ராட்சஸ குணம் அவருக்கு எப்படித் தெரியும்?.

(தொடரும்)
 
அத்தியாயம் - 6

டத்தோ ராஜவேலு தெருவிலிருந்த கிளப்பின் கேட்டில் நின்று கொண்டிருந்த அந்த சைனீஸ் காவலாளியால் தடுத்து நிறுத்தப்பட்டார் வெள்ளிங்கிரி.

வேறு வழியில்லாமல், காரைப் பார்க்கிங்கில் நிறுத்தி விட்டு, அதனுள்ளேயே அமர்ந்திருந்தார் வெள்ளிங்கிரி.

சரியாய் அரை மணி நேரத்திற்குப் பிறகு, யாரோ ஒரு சப்பை மூக்குக்காரனுடன் தோளில் கை போட்டபடி, தள்ளாட்டமாய் நடந்து வெளியில் வந்தாள் கனிஷ்கா.

போதையில் மிதந்து கொண்டு வரும் அவளை நோக்கிச் சென்ற வெள்ளிங்கிரி, “மேடம்!...போகலாமா?” கேட்டார்.

“ஹேய்ய்ய்ய்...ஹூ ஆர் யூ மேன்?...என்னைக் கொண்டு போய் வீட்டுல விட என் பாய் ஃபிரெண்ட் ஜோத்விக் இருக்கான்...நீ யாரு மேன்?” கனிஷ்கா உளறலாய்க் கேட்டாள். ஏதோ ஒரு போதை வஸ்து அவளுக்குள் ஆழமாய் இறங்கி அவள் நிதானத்தை மொத்தமாய் மாற்றியிருந்தது.
அங்கிருந்தபடியே ஒய்.ராஜகோபாலின் காரைக் காட்டி, “உங்க ஃபாதர்தான் உங்களை பிக்அப் பண்ணிட்டுப் போய் வீட்டுல டிராப் பண்ணச் சொல்லி காரைக் குடுத்தனுப்பியிருக்கார்” என்றான்.

கண்களை இடுக்கிக் கொண்டு அந்தக் காரைப் பார்த்த கனிஷ்கா, “ஆமாம்...அது டாடி கார்தான்” என்று சொல்லி விட்டு, அந்த சப்பை மூக்குக்காரன் பக்கம் திரும்பி, “டேய் ஜோத்விக்...நோ பிராப்ளம்...நீ எங்கியோ அர்ஜண்டா போகணும்னு சொன்னியல்ல?...நீ கிளம்பு...நான் டாடியோட காரிலேயே போய்க்கறேன்” என்று சொல்ல,

அந்த சப்பை மூக்குக்காரன் வெள்ளிங்கிரியை முறைப்பாய் பார்த்துக் கொண்டே நகர்ந்தான்.

அவன் சென்றதும், வெள்ளிங்கிரி காரை நோக்கித் திரும்பி நடக்க, “ஹேய்ய்...என்னா மேன் நீ பாட்டுக்குப் போறே?...என்னைத் தாங்கிப் பிடிச்சுக் கூட்டிட்டுப் போ மேன்” என்றாள் கனிஷ்கா.

அவள் அருகில் சென்ற வெள்ளிங்கிரியின் தோளில் அவளாகவே வந்து முரட்டுத்தனமாய் சாய்ந்து கொள்ள,

மனைவியை விட்டுப் பிரிந்து வந்த பின், கடந்த ஒன்றரை ஆண்டுகளாய் அவருக்குள் ஓய்ந்து கிடந்த அந்த உணர்வுகள் சட்டென்று நிமிர்ந்தன.

சிரமப்பட்டு தன்னை அடக்கிக் கொண்டு, அவளைக் காருக்குத் தள்ளிச் சென்று, காரின் பின் கதவைத் திறந்து அவளை உள்ளே தள்ளினார்.

காரை ஓட்டிச் செல்லும் போது அவர் மனம் ஏனோ தடுமாறியது. கண்ணாடி வழியாக பின் இருக்கையில் இருந்த கனிஷ்காவைப் பார்த்தார். தாறுமாறாய்ப் படுத்துக் கிடந்த அவளது கவர்ச்சித் தோற்றம் அவரையும் மீறி ஆக்ஸிலேட்டரை வேகமாய் மிதிக்கச் செய்தது.

அவருக்குள் ஒரு சைத்தான் மெல்ல நுழைந்து, “வெ...ள்...ளி...ங்...கி...ரி” என்று நிதானமாய் அழைத்து, “இது உனக்குக் கிடைத்திருக்கும் பொன்னான வாய்ப்பு...புத்திசாலித்தனமா யோசிச்சு...இதை பயன்படுத்திக்கோ” என்றது.

வெள்ளிங்கிரியின் மனம் திருப்பிக் கேட்டது, “எ...என்ன பண்ணச் சொல்றே?...என்னை?”

“உன் முதலாளி மகள் முழு போதையில் இருக்கா!...அவளை நீ என்ன செய்தாலும் யாருக்கும் தெரியப் போறதில்லை!...காரை எங்காவது ஒரு ஓரமாய் நிறுத்தி...அவளை பலாத்காரம் பண்ணிடு...” சைத்தான் பாவ வேதம் ஓதியது.

“அய்யோ...”என்றார் வெள்ளிங்கிரி.

“என்ன அய்யோ?...த பாரு...இந்தப் பொண்ணு பத்துப் பதினஞ்சு பசங்களோட திரிஞ்சிட்டிருக்கறவ...அதனால நாளைக்கே அவ வயித்துல ஒரு சிசு உண்டாயிட்டாலும்...உன் மேல் யாரும் சந்தேகப்பட மாட்டாங்க!...அந்தச் சமயத்துல...முதலாளிக்காக தியாகம் பண்றதா நடிச்சு..நீயே அவளைக் கல்யாணம் பண்ணிக்க!...அதுக்கப்புறம் அவ அப்பனோட கோடிக்கணக்கான சொத்துக்கு நீதான் மொத்த அதிபதி” சொல்லி விட்டு சைத்தான் “கெக்கே..கெக்கே”என்று சிரிக்க,

“ஹும்...எனக்கு வயசு நாப்பத்தி ஆறு...இந்தப் பொண்ணுக்கு மிஞ்சிப் போனா இருபத்தி ரெண்டோ...மூணோ இருக்கும்...நான் எப்படி....இவளைக் கல்யாணம் பண்ணிக்கறது?”

“உன் முதலாளி மானம் மரியாதைக்கு பயந்தவர்...கெட்டுப் போன தன் மகளை யாருக்காவது கட்டி வைத்து தன்னோட மானம் மரியாதையைக் காப்பாத்திக்கிட்டா போதும்!னு நினைக்கறவர்...நீ அவரோட நம்பிக்கைக்குப் பாத்திரமான நல்லவன்!..அதனால நிச்சயம் உனக்குக் கட்டி வைப்பார்”

“அய்யோ...எனக்குக் கல்யாணமாகி..என் பொண்டாட்டியும்...மூணு குழந்தைகளும் என்னை நம்பி தமிழ் நாட்டுல உட்கார்ந்திட்டிருக்காங்க!...என்னால அவங்களுக்கு துரோகம் செய்ய முடியாது!”

“அடேய் முட்டாள்...கிழவனைக் கைக்குள் போட்டு...மொத்த சொத்தையும் உன் பேரில் மாத்திக்கிட்டு...இவளை இங்கேயே விட்டுட்டு...உன்னோட ஊருக்கு ஓடிடு!..அங்க போய் செல்வச் செழிப்போட வாழு”

சைத்தானின் பேச்சுக்கு கொஞ்சம் கொஞ்சமாய்த் தலை சாய்க்க ஆரம்பித்த வெள்ளிங்கிரி, ஆள் நடமாட்டமில்லாத ஒரு புற நகர்ப் பகுதிக்கு காரை ஓட்டிச் சென்றார்.

ஒரு இருட்டுப் பகுதிக்குள் காரை நிறுத்தியவர், நிதானமாய் இறங்கி சுற்றும் முற்றும் பார்த்தார். மனித நடமாட்டம் என்பது மருந்துக்குக் கூட அங்கில்லை.

காரின் பின் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தார்.

போதையின் முழு ஆக்கிரமிப்பில் கிடந்த கனிஷ்காவைத் தான் ஆக்கிரமித்தார்.

அந்தப் போதை நிலையிலும், தனக்கு என்ன நடக்கின்றது?...என்பதை ஒரு பெண்ணாய் அவளால் உணர முடிந்தது.

ஆனால், போதையின் கட்டுப்பாட்டில் தொய்ந்து போயிருந்த அவள் உடம்பு, எதையும் தடுக்க இயலாமல் துவண்டு போனது.

வெள்ளிங்கிரி பின் இருக்கையிலிருந்து வெளியேறிய போது, லேசாய் மழைத் தூறல் ஆரம்பித்திருந்தது.

முதலாளியின் பங்களாவிற்குள் கார் நுழைய, வேலைக்காரன் ஒருவனும், வேலைக்காரி ஒருத்தியும் தயாராய் போர்ட்டிக்கோவிற்கே வந்தனர். கனிஷ்காவைத் தான் அழைத்து வரப் போவதை முதலாளி அவர்களுக்குப் போன் மூலம் தகவல் சொல்லியிருப்பார், என்பதைப் புரிந்து கொண்ட வெள்ளிங்கிரி கனிஷ்காவை அவர்கள் வசம் ஒப்படைத்து விட்டு, காரையும் போர்ட்டிகோவிலேயே நிறுத்தி விட்டு,

“முதலாளி வந்தா இந்தக் கார் சாவியைக் குடுத்துடுங்க!...நான் நடந்தோ...இல்லை டாக்ஸி பிடித்தோ போய்க்கறேன்” என்று நல்ல பிள்ளை போல் சொல்லி விட்டு அங்கிருந்து நகர்ந்தார் வெள்ளிங்கிரி.

அவரது அந்தச் செயல் அந்த வேலைக்காரன், மற்றும் வேலைக்காரியின் மனத்தில் அவரைப் பற்றிய ஒரு உயர்ந்த அபிப்ராயத்தையே உண்டு பண்ணியது.

எல்லாம் தனக்குச் சாதகமாகவே போய்க் கொண்டிருக்க, சந்தோஷமாய் தெருவில் நடந்தார் வெள்ளிங்கிரி.

தன் முதலாளி ஒய்.ராஜகோபாலின் கட்டளைப்படி, அடுத்த மூன்று மாதங்கள் ஹார்பருக்கே செல்லாமல், அவரது மகள் கனிஷ்காவுக்கு பாதுகாவலனாய் அவளுடனேயே திரிந்தார் வெள்ளிங்கிரி.

அந்தக் காலகட்டத்தில் தன்னுடைய போலித்தனமான பணிவையும், நடிப்புத்தனமான நாகரீகத்தையும் அவளிடம் காட்டி, அவள் மனதிலும் ஒரு உயர்வான மதிப்பைப் பெற்றார்.

தவறுகளின் மொத்த உருவமாய்த் திரியும் அவளை, நல்ல இயல்புகளின் மொத்த உருவமான வெள்ளிங்கிரி நிச்சயம் நல்ல வழிக்குத் திருப்பி விடுவார், என்று ஒய்.ராஜகோபால் நம்பினார்.

அந்த நேரத்தில்தான் வெள்ளிங்கிரி ஆவலாய் எதிர்பார்த்துக் காத்திருந்த அந்த முதல் குண்டு வெடித்தது.

தொடர்ந்து வாந்தியெடுத்து, தலை சுற்றல் காரணமாய் ஓய்ந்து ஓய்ந்து படுத்துக் கொண்டிருந்த மகளைக் கண்டு மனம் நொந்து போன ஒய்.ராஜகோபால், குடும்ப டாக்டர் தர்மலிங்கத்தை வரவழைத்தார்.

அவளைப் பார்த்த மாத்திரத்திலேயே டாக்டர் கண்டுபிடித்து விட்டார், அவள் கருவுற்றிருக்கின்றாள் என்பதை. ஆனாலும் திருமணமாகாத ஒரு பெண் கருவுற்றிருக்கிறாள் என்கிற தர்மசங்கடமான உண்மையை உடனே வெளியிடத் தயங்கினார். நீண்ட நேரப் பரிசோதனைக்குப் பின், இனி வேறு மார்க்கமேயில்லை என முடிவு செய்து, பெண்ணின் தகப்பனாரை உள் அறைக்குத் தனியே அழைத்துச் சென்றார்.

“என்ன டாக்டர்...எதுக்கு என்னைத் தனியா அழைச்சிட்டு வந்து பேசறீங்க?...என் மகளுக்கு ஏதாவது பெரிய வியாதியா?...சீக்கிரம் சொல்லுங்க டாக்டர்...எனக்கு பிளட் பிரஷ்ஷர் ஏறுது!...” படபடத்தார் ஒய்.ராஜகோபால்.

“இதை “வியாதி”ன்னு சொல்ல முடியாது மிஸ்டர் ராஜகோபால்...“விதி”ன்னு வேணா சொல்லலாம்” பீடிகை போட்டார் டாக்டர்.

“என்ன டாக்டர் சொல்றீங்க?....கொஞ்சம் புரியும்படிதான் சொல்லுங்களேன்...” லேசாய்க் கோபமானார் ஒய்.ராஜகோபால்.

“படக்”ன்னு சொல்லி உங்க மனசை “சட்”டுனு அதிர்ச்சியடைய வைக்க வேண்டாம்!னுதான் ரொம்ப இழுக்கறேன் மிஸ்டர் ராஜகோபால்.”

“நீங்க எது சொன்னாலும் நான் அதிர்ச்சியடைய மாட்டேன்....தயங்காமல் சொல்லுங்க டாக்டர்”

“உங்க மகள் கர்ப்பமா இருக்காள்”ன்னு சொன்னா கூட நீங்க அதிர்ச்சியடைய மாட்டீங்களா?”

தன் காலடியில் பூமி கழன்று விழுவதைப் போல் உணர்ந்தார் ஒய்.ராஜகோபால். கைகால்கள் எல்லாம் தளர்ந்து போயின. நா வறண்டது. “அய்யோ இதெல்லாம் கனவாயிருக்கக் கூடாதா...?” என்று அவர் உள் மனம் கூவியது.

லேசாய்த் தள்ளாடிய ஒய்.ராஜகோபாலைத் தாங்கிப் பிடித்த டாக்டர் தர்மலிங்கம், நிறுத்தி நிதானமாய்ச் சொன்னார். “நான் சொன்னது சத்தியமான உண்மை மிஸ்டர் ராஜகோபால்...உங்க மகள் மூணு மாத கர்ப்பத்தைச் சுமந்திட்டிருக்காள்!...”

“டாக்டர்...தாயில்லாப் பொண்ணுனு நெனச்சு...நான்தான் அவளுக்கு ஓவரா செல்லம் குடுத்துக் கெடுத்திட்டேன்!...முதல்ல போதைப் பழக்கத்துக்கு அடிமையானா...அப்புறம் கண்ட நேரத்துல கண்ட இடத்துல பாய் ஃபிரண்ட்ஸ்களோட சுத்தினா...இப்ப கல்யாணத்துக்கு முன்னாடியே வயித்துல ஒண்ணைச் சுமந்துக்கிட்டு வந்து நிக்கறா...நான் என்ன பண்ணுவேன்?...நான் என்ன பண்ணுவேன்?” கண்ணீரோட ஒய்.ராஜகோபால் கேட்க,

“ஒண்ணும் பண்ண வேண்டாம்...உங்க மகள் கிட்ட நிதானமா விசாரிங்க!...அவ கர்ப்பத்துக்கு யார் காரணம்?னு கேளுங்க!...அப்புறம் அவனையே அவளுக்குக் கட்டி வைக்க முயற்சியும் பண்ணுங்க!” டாக்டர் அறிவுரைத்தார்.

“இல்லை டாக்டர்...அதை விட...அதை விட....” ஒய்.ராஜகோபால் எதையோ சொல்லத் தயங்க,

“அதை விட அவ வயித்துல வளர்ற கர்ப்பத்தைக் கலைச்சிடலாம்!”னு சொல்றீங்களா மிஸ்டர் ராஜகோபால்?...ஸாரி...நான் அதைச் செய்ய மாட்டேன்!...அதே மாதிரி வேற யாரும் அதைச் செய்ய விட மாட்டேன்” கொள்கைப் பிடிப்புடன் பேசினார் டாக்டர்.

ஒய்.ராஜகோபால் மேற்கொண்டு எதுவும் பேச முடியாமல் அமைதியாகி விட,

“உங்களுக்கு உங்க மகள் கூடப் பேசத் தயக்கமாயிருந்தா...அவ வேற யார் கூட நல்லாப் பேசிப் பழகுவாளோ?...அவங்களை விட்டுக் கேட்கச் சொல்லுங்க” என்றார் டாகடர்.

அந்த விநாடியில் ஒய்.ராஜகோபாலின் மனதில் சட்டென்று தோன்றியது வெள்ளிங்கிரியின் முகமே. “கரெக்ட்...வெள்ளிங்கிரிதான் சரியான ஆள்!...அவரை விட்டுத்தான் கேட்கச் சொல்லணும்” என்று தனக்குள் முடிவு செய்து கொண்டு, “ஓ.கே...டாக்டர்...நான்...அவ கிட்டப் பேசிட்டு அப்புறமா உங்களை வந்து சந்திக்கறேன்” சொல்லி விட்டு வெளியே வந்த ஒய்.ராஜகோபால் மகளை அழைத்துக் கொண்டு அந்த ஆஸ்பத்திரியை விட்டு வெளியேறினார்.

வீட்டை நோக்கிய கார்ப் பயணத்தின் போது அவர் எண்ணம் முழுவதும் வெள்ளிங்கிரியிடம் அந்த விஷயத்தை எப்படி ஆரம்பிப்பது?...அதைப் பற்றி கனிஷ்காவிடம் விசாரிக்கச் சொல்லி எப்படிக் கேட்பது?...என்பது குறித்தே சிந்தித்துக் கொண்டிருந்தது.

அந்தக் கருவிற்குக் காரணகர்த்தாவாகிய வெள்ளிங்கிரியிடமே அது குறித்து விசாரிக்கச் சொல்லும் பரிதாப ஜீவனான ஒய்.ராஜகோபாலுக்கு உண்மை எப்படித் தெரியும்?

“அய்யா...நீ...நீங்க என்ன சொல்றீங்க?...நம்ம...நம்ம பாப்பா...கர்ப்பமா?...அய்யோ கடவுளே!”என்று தலையில் கையை வைத்துக் கொண்டு தரையில் அமர்ந்தார் வெள்ளிங்கிரி. நடிப்பு அவருக்கு சரளமாய் வந்தது.

“வெள்ளிங்கிரி...இந்த விஷயத்துல நான் உன்னைத்தான் ரொம்ப நம்பியிருக்கேன்...நீதான் அவகிட்ட நாசூக்காய்ப் பேசி...அவளோட கர்ப்பத்துக்கு யார் காரணம்?னு விசாரிக்கணும்!” கெஞ்சலாய்ச் சொன்னார் ஒய்.ராஜகோபால்.

“அதைத் தெரிஞ்சு...அந்தப் பையனுக்கே அவளைக் கல்யாணம் பண்ணி வைக்கப் போறீங்களா அய்யா?”
“வேறென்ன செய்ய முடியும்?...அதைத்தானே செய்ய முடியும்?”

வெள்ளிங்கிரி வேறு விதமாய்ச் சிந்தித்தார். “நான்தான் அந்தக் கர்ப்பத்திற்குக் காரணம்!ன்னு சொல்லிட்டா...கனிஷ்காவை எனக்குக் கட்டி வெச்சிடுவாரா?”

“ம்ஹூம்...வேண்டவே வேண்டாம்!...நாற்பத்து ஆறு வயசுக்காரனான நான் இருபத்திரெண்டே வயசான அந்த இளம் பெண்ணைக் கெடுத்திட்டேன்!ன்னு போலீஸ்ல கம்ப்ளைண்ட் குடுத்து என்னை உள்ளார தள்ளினாலும் தள்ளிடுவார்”

“என்ன வெள்ளிங்கிரி...நான் சொல்லிட்டேயிருக்கேன்...நீ எங்கியோ யோசனை பண்ணிட்டிருக்கியே?” ஒய்.ராஜகோபால் கேட்க,

சட்டென்று அந்த நினைவிலிருந்து மீண்ட வெள்ளிங்கிரி, “அய்யா..நான் அதைப் பத்தித்தான் யோசிச்சிட்டிருந்தேன்!...நீங்க கவலையே படாதீங்க அய்யா!...ரெண்டே நாள்ல உங்களுக்கு நான் நல்ல பதிலைத் தர்றேன்” என்று சொல்ல,

“ரொம்ப நன்றி வெள்ளிங்கிரி” என்று அவரது கையைப் பற்றிக் கொண்டு, ஒய்.ராஜகோபால் தழுதழுத்தார்.

அன்று மாலை, ஏனோ கிளப்பிற்குச் செல்லாமல் வீட்டோடு இருந்த கனிஷ்காவிடம் சென்ற வெள்ளிங்கிரி, “மேடம்...வெளியில் கிளம்பலையா?” வேண்டுமென்றே கேட்டார்.

“இல்லை வெள்ளிங்கிரி...”என்று சலிப்புடன் அவள் சொல்ல,

“என்ன மேடம்...உங்களுக்கு உடம்பு சுகமில்லையா?” தெரியாதது போல் கேட்டார்.

“உடம்புக்கு நல்லாத்தான் இருக்கு வெள்ளிங்கிரி...மனசுதான் சரியில்லை”
“என்ன மேடம்?...என்ன பிரச்சினை உங்களுக்கு...சொல்லுங்கள் நான் தீர்த்து வைக்கிறேன்”

“அது உன்னால் மட்டுமல்ல வெள்ளிங்கிரி...யாராலுமே தீர்த்து வைக்க முடியாத ஒரு மானப் பிரச்சினை!...அந்தப் பிரச்சனை தீரணும்!ன்னா...நான் என் உயிரை விடணும்” சொல்லி விட்டு கனிஷ்கா அழ,

“ஏன்?...எதற்கு அழறீங்க மேடம்?...சொல்லி விட்டு அழுங்கள்” பதறினார் வெள்ளிங்கிரி.

“நேத்திக்கு நானும்...டாடியும் டாக்டர் கிட்டே போயிருந்தோமே?..அங்க...என்னை சோதனை செய்த டாக்டர் என்ன சொன்னார் தெரியுமா வெள்ளிங்கிரி?...”

“என்ன சொன்னார்?”

“நான்...நான் கர்ப்பமாய் இருக்கேன்!னு சொன்னார்!...அதுவும் என் கிட்டே சொல்லலை!...உள் அறைக்குக் கூட்டிட்டுப் போய் டாடி கிட்டச் சொன்னார்!..வெளிய ஜன்னலோரம் உட்கார்ந்திட்டிருந்த எனக்கு அது அப்படியே அட்சரம் பிசகாம காதுல விழுந்திடுச்சு வெள்ளிங்கிரி!...அந்த நிமிஷத்துல இருந்து நான் குற்ற உணர்வுல துடிச்சிட்டிருக்கேன் வெள்ளிங்கிரி!” கண்ணீரோடு சொன்னாள் கனிஷ்கா.

அந்த விஷயத்தை அப்போதுதான் கேள்விப்படுபவர் போல் துல்லியமாய் நடித்த வெள்ளிங்கிரி இறுதியாய் கேட்டார், “மேடம்...உங்களை இந்தக் கதிக்கு ஆளாக்கிய அந்த ஆண்மகன் யார்?ன்னு மட்டும் சொல்லுங்க!...அவன் எங்க இருந்தாலும் அவனைத் தேடிக் கொண்டு வந்து உங்க காலடில போட்டு... “கட்டுடா தாலியை”ன்னு சொல்லிக் கட்ட வைக்கறேன்” ஆவேச நடிப்பில் ஆஸ்காரைத் தொட்டார் வெள்ளிங்கிரி.

“தெரியலையே வெள்ளிங்கிரி...நான் போதை ஊசி மயக்கத்துல இருந்தப்ப அது நடந்திருக்கு!...எப்ப நடந்தது?..யார் அதை நடத்தியது?...எதுவுமே எனக்குத் தெரியலையே வெள்ளிங்கிரி”

“என்ன மேடம் இப்படிச் சொல்றீங்க!...நீங்க இப்படிச் சொன்னா உங்க எதிர்கால என்ன ஆகறது?...யார் உங்களைக் கல்யாணம் பண்ணிக்குவாங்க?” நல்ல பிள்ளை போல் கேட்டார் வெள்ளிங்கிரி.

“அதனாலதான் சொன்னேன்...“இந்த உயிரை மாய்ச்சுக்கறதைத் தவிர வேற வழியே எனக்கு இல்லை”ன்னு” கனிஷ்கா மீண்டும் அதையே சொல்ல,

“ச்சீய்...முட்டாள்தனமாய்ப் பேசாதீங்க மேடம்!...எல்லாப் பூட்டுக்கும் நிச்சயம் சாவி தயாரிக்கப்பட்டிருக்கும்!...அதே மாதிரி எல்லாப் பிரச்சினைக்கும் நிச்சயம் ஒரு தீர்வும் இருக்கவே இருக்கும்!..பொறுமையாய் இருங்க...இந்தப் பிரச்சினைக்கும் ஒரு இருக்கும்” நம்பிக்கையோடு சொல்லி விட்டு அங்கிருந்த நகர்ந்தார் வெள்ளிங்கிரி.

அங்கிருந்து தான் தங்கியிருக்கும் மேன்சன் ஏரியாவிற்கு வந்த வெள்ளிங்கிரியால் அன்று இரவு முழுவதும் உறங்கவே முடியவில்லை. அடுத்த நாள் முதலாளியிடம் என்ன பேசுவது?..எப்படிப் பேசுவது?..எதைப் பேசி அவர் மகளை தானே திருமணம் செய்து கொள்வது?...என்பதைப் பற்றியே பல விதங்களில் யோசித்துக் கொண்டே கிடந்தார்.

மறு நாள்,

“அய்யா நான் நம்ம பாப்பா கிட்டே எவ்வளவு தூரம் பேச முடியுமோ?..அவ்வளவு தூரம் பேசிப் பார்த்திட்டேன்...அவங்களுக்கு தான் கெட்டுப் போனது எப்போது?...எங்கே?...யாரால்?..என்று எதுவுமே தெரியலை!...அதனால.....”என்று வெள்ளிங்கிரி இழுக்க,

“சொல்லு வெள்ளிங்கிரி...அதனால?....”

“அவளுக்கு வேற ஏதோ ஒரு மாப்பிள்ளையை அவசரமாய்ப் பார்த்துக் கல்யாணத்தை முடிச்சிடுங்க அய்யா!..அதுதான் ஒரே வழி” என்றார் உள்ளுக்குள் வேறொரு வஞ்சக எண்ணத்தை வைத்துக் கொண்டு.

“யாரு....யாரு கட்டிக்குவா?....மூணு மாசக் கருவைச் சுமந்துக்கிட்டிருக்கற பெண்ணை யாரு கட்டிக்குவா?...அப்படியே கட்டிக்கிட்டாலும்...அடுத்த ஏழாம் மாசம் அவ குழந்தையைப் பெத்துக் குடுத்தாள்!ன்னா ஊரு என்ன பேசும்?...அந்த மாப்பிள்ளைதான் என்ன நினைப்பார்? எவன் கிட்டேயோ ஏமாந்த பொண்ணைத் தன் தலைல கட்டிட்டாங்க!ன்னு கண்டுபிடிச்சிட மாட்டாரா?” ஒய்.ராஜகோபால் கேட்க,

“அய்யா..நாம உண்மையை மறைக்க வேண்டாம்!...ஒப்பனா சொல்லிடுவோம்!...அதை ஏத்துக்கிட்டு பெருந்தன்மையோட கட்டிக்க ஒருத்தன் இல்லாமலா போயிடுவான்?” வெள்ளிங்கிரி தன்னை அந்த ஒருத்தன் என்கிற வார்த்தைக்குள் ஒளித்து வைத்துக் கொண்டு பேசினார்.

அதைக் கேட்டு அந்தச் சோகத்திலும் மெலிதாய்ச் சிரித்த ஒய்.ராஜகோபால், “ஏன் வெள்ளிங்கிரி...அப்படி ஒருத்தன் இந்த உலகத்துல இருப்பானா?” என்று கேட்டு விட்டு சட்டென தன் பேச்சை நிறுத்திக் கொண்டு, வெள்ளிங்கிரி பக்கம் திரும்பி அவரையே கூர்ந்து பார்த்தார்.

“அய்யா....என்னங்க அய்யா அப்படிப் பார்க்கறீங்க?” தன் முதலாளியின் மன ஓட்டத்தைக் கண்டுபிடித்தும், தெரியாதது போல் கேட்டார் வெள்ளிங்கிரி.

“வெள்ளிங்கிரி...உனக்கு வயசு என்ன?” முதலாளி கேட்க,

“எனக்கு...நாற்பத்தி ஆறு ஆச்சுங்க அய்யா”

“நீ ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக்கலை?”

“அது...வந்து!...நான் வறுமைக்குப் பொறந்த தரித்திரன்ங்க அய்யா!......வாழ்க்கைக்கு முக்கியத் தேவை பணம்!...அது என் கிட்ட இப்பவும் இல்லை...எப்பவும் இல்லை!...போதுமென்கிற அளவுக்கு அதைச் சம்பாதிச்சிட்டு...அப்புறமா கல்யாணத்தைப் பத்தி நினைக்கலாம்!ன்னு விட்டுட்டேன்!...இத்தனை வயசாகியும் என்னால் அந்த போதும் என்கிற அளவுக்கே சம்பாதிக்க முடியலை!” வறுமை வேடமிட்டான் வஞ்சகன்.

“வெள்ளிங்கிரி...நான் உன் கிட்ட ஒரு உதவி கேட்டா செய்வியா?” கண்களில் கெஞ்சல் தொணிக்கக் கேட்டார் ஒய்.ராஜகோபால்.

“அய்யோ...என்ன வார்த்தை கேட்டுட்டீங்க முதலாளி?...நீங்க காலால் இடும் ஆணையைத் தலையால் செஞ்சு முடிக்கற சேவகன் நான்!...என் கிட்டப் போய்...உதவி...அதுஇதுன்னு சொல்றீங்களே அய்யா?” நடிப்பில் சிகரம் தொட்டார் வெள்ளிங்கிரி.

“இல்லை...இது கொஞ்சம் விவகாரமான உதவி!...அதான் யோசிக்கறேன்”

“எதுவானாலும் தயங்காமச் சொல்லுங்க அய்யா!...நீங்க என்ன சொன்னாலும் அதை அப்படியே செய்ய நான் காத்திட்டிருக்கேன்!” தன் எண்ணம் ஈடேறப் போகும் தருணம் நெருங்கி விட்டதை உணர்ந்த வெள்ளிங்கிரி உச்சத்தில் இருந்தான்.

“வந்து...வந்து...என் பொண்ணு கனிஷ்காவை நீ...நீ...கல்யாணம் பண்ணிக்குவியா?” மிகவும் தர்ம சங்கடத்துடன் கேட்டார் ஒய்.ராஜகோபால்.

“ஹா...ஹா...ஹா....இந்த ஒரு வார்த்தைக்காகத்தாண்டா கிழவா இத்தனை நாளா காத்திட்டிருந்தேன்!...”என்று உள்ளுக்குள் சொல்லிக் கொண்ட வெள்ளிங்கிரி, “அய்யா...நீங்க என்னோட முதலாளி...உங்க பொண்ணு என்னோட சின்ன முதலாளியம்மா...நான் எப்படி?..அவளை.?” பிச்சு உதறினார் வெள்ளிங்கிரி.

(தொடரும்)