கொஞ்சும் வண்ண காதல் - கதை திரி

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,391
895
113
ஹாய் பிரெண்ட்ஸ்,

நேத்ரா அவர்கள் நமது தளத்தின் புதிய வரவு. அவர்கள் தனது முதல் கதையுடன் நம்மை சந்திக்க வருகிறார்....
 
Last edited:
  • Like
Reactions: Shobana

Shobana

Member
Jun 15, 2020
43
57
18
ஹாய் பிரெண்ட்ஸ்,

நேத்ரா அவர்கள் நமது தளத்ஹ்டின் புதிய வரவு. அவர்கள் தனது முதல் கதையுடன் நம்மை சந்திக்க வருகிறார்....



























வண்ணம்-(01)








" கல்யாண தேதி வந்து கண்ணோடு ஒட்டிக்கிச்சு
பெண் நெஞ்சில் ஆனந்த
கூத்தாச்சு
பாருங்கடி பொண்ண பாருங்கடி
வெக்கத்தில் அவ கன்னம் செவந்திடுச்சு" என பாடல் அதிர வாழை தோரணங்கள் கட்டி வண்ண விளக்குகள் ஒளிர பளபளத்தது அந்த பிரமாண்ட கல்யாண மண்டபம். அதன் நுழைவுவாயிலில்
"இந்துமதி
weds
ரித்விக்"
என்ற பெயர் பலகை அனைவரையும் வரவேற்றது. பெருசுகள் கதையளந்து கொண்டிருக்க யுவன் யுவதிகள் தங்கள் இணைகளை சைட் அடித்துக் கொண்டிருக்க சிறுவர்களின் ஆட்டம் பாட்டம் என களைகட்டி இருந்தது அந்த மண்டபம். மண்டபத்தின் பின் புறத்தில் அந்த இருட்டில் நின்றிருந்த அவள் தனது போனையும் வாயிலையும் பார்த்துக்கொண்டு பதட்டத்துடன் தனது கை விரல் நகத்தை கடித்துக்கொண்டு இருந்தாள்.



"வா வா பெண்னே
என் பாடலின் இசையே" என்ற ஒலியுடன் அவளது செல்பேசி அலறியது அதை எடுத்து, "எருமை எருமை எங்க இருக்க எவ்வளவு நேரம் வெயிட் பண்றது சீக்கிரம் வா " என்றாள் இந்து. அதற்கு அவன், " இருடி உனக்கு பொறுமைனா என்னன்னு தெரியாதா? ஏன் இப்படி கத்துற?" என்றான். அதற்கு அவள்,
" நானா கத்துறேன் என்னை பார்த்தா உனக்கு நாய் மாதிரி இருக்கா? " என்று பொருமினாள்...

அவன்," சரி சரி விடு இப்ப நீ எங்க இருக்க சொல்லு நான் வரேன்" என்றான். "நான் மண்டபத்துக்கு பின்னாடி நிற்கிறேன் நீ சீக்கிரமா வா என்றாள்" இந்து. அவளிடம் பேசிய அடுத்த ஐந்து நிமிடத்தில் அவன் அவளை நோக்கி வந்தான். வந்தவன் "ஏன்டி இங்க நிக்கிற? நான் உன்ன அந்த ரூம்ல தானே வெயிட் பண்ண சொன்னேன்" என்றான். அதற்கு அவள்," எல்லாம் என் தலைவிதி" என்ன பண்ண என்றாள். சரி விடு இப்ப எதுக்கு அவசரமா இங்க வர சொன்ன என்றான் ரித்விக். இந்து , "என்ன மறுபடியும் முதல்ல இருந்தா?" என்றாள். ரித்விக், "என்னால் எதுவும் பண்ண முடியாது. உன்னால முடிந்தால் கல்யாணத்தை நிறுத்து. எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனா என்னால் எந்த உதவியும் பண்ண முடியாது " என்று கூறி மண்டபத்தை நோக்கி நடந்தான். டேய் , "வேண்டாண்டா என்ன கல்யாணம் பண்ண உனக்கு நரகம்னா என்னனு காட்டுவேன்" என்று உரக்க கத்தினாள் இந்து.


அவன் திரும்பி, "எனக்கு மட்டும் என்ன ஆசையா உன்ன கல்யாணம் பண்ணனும்னு போடி"என்று கூறி நடந்தான். அவள், 'டேய் டேய்' என கத்த அந்த கத்தலை காதில் வாங்காமல் ரித்விக் மண்டபத்துக்குள் நுழைந்தான். அவனைப் பார்த்த அஸ்வின், "டேய் எங்கடா போன? மாப்பிள்ளையை காணோம்னு தேடிட்டு இருக்காங்க" என்றான். ரித்விக், "இல்லடா போன் வந்துச்சு. அதான் பின்னாடி போய் நின்னு பேசினேன்" என்றான். "சரி வா போகலாம் அம்மா உன்ன கூப்பிட்டாங்க" என்று கூறி அவனை அழைத்துச் சென்றான் அஸ்வின்.....

ரித்விக்கை கண்ட மீனாட்சி," எங்கப்பா போன இவ்வளவு நேரம்? நீ தான் கல்யாண மாப்பிள்ளை. அது உனக்கு ஞாபகம் இருக்கா? எப்ப பார்த்தாலும் வேலை வேலை என்று சுத்திகிட்டே இருக்க " என குறைபட்டாள். இல்லம்மா ," போன் பேச தான் போனேன் " என்றான். சரி விடு," போய் சீக்கிரம் தூங்கு நேரமாச்சு காலையில சீக்கிரம் எந்திரிக்கனும்"என்றாள். சரி மா என்று கூறி மணமகன் அறைக்குள் நுழைந்தான் ரித்விக்.

அவனை பார்த்து தீபக் டேய் மச்சான், "நாளையிலிருந்து இந்து கூட தான் இருக்கப் போற? அப்புறம் ஏன்டா இப்ப தனியா போய் ரொமான்ஸ் பண்ணிட்டு வர" என்றான். ரித்விக் , " ஏன்டா நீ வேற அவ கல்யாணத்தை நிறுத்த சொல்லி ஒத்தக்கால்ல நிக்கிற டா" என்றான். "என்னடா சொல்ற?" என்றான் தீபக். ரித்விக்," ஆமான்டா முதல்ல இருந்தே அவ அதை தான் சொல்றா. என்னை கல்யாணத்தை நிப்பாட்ட சொல்றா. நான் என்ன பண்ண முடியும்? என்றான்.....

. தீபக், "ஏன்டா உங்க விளையாட்டுக்கு அளவே இல்லையாடா? கல்யாணத்துல விளையாடிட்டு இருக்கீங்க. நீங்க ரெண்டு பேரும் திருந்தவே மாட்டீங்களா? " என்றான். "நான் என்னடா பண்றது? அவதான எல்லாம் பண்றா " என்றான். "உன்னைக் கேட்டா அவளை சொல்லு. அவளைக் கேட்டா உன்னை சொல்லட்டும். எல்.கே.ஜி பிள்ளையை விட கேவலமாக சண்டை போடுறீங்க நீங்க இரண்டு பேரும்" என்றான். "என்ன என்னடா பண்ண சொல்ற என்றான்" ரித்திக். சரி விடு எல்லாம் சரியாயிடும் இப்ப நீ நிம்மதியா தூங்கு என்றான் தீபக்..

அவசர அவசரமாக மணமகள் அறைக்குள் நுழைந்த இந்து, சுஷ்மி மீது மோதி விட அவள் எதிர்பாராமல் கீழே விழுந்தாள். விழுந்தவள் எழுந்து," ஏன்டி எருமை உனக்கு கண்ணு தெரியலையா? உனக்கு நாளைக்கு கல்யாணம் இப்ப நீ யார் கூட ஓடிப்பிடித்து விளையாடிட்டு இருக்க" என்றாள் . "ஏய் லூசு நானே அந்த கிழவி கண்ணுல படாம தப்பி ஓடி வந்தேன். நீ ஓடிப்பிடித்து விளையாடுறேனு சொல்லி கிண்டல் பண்ற? என் நிலைமையை பார்த்தா உங்களுக்கு எல்லாம் காமெடியா இருக்கா?" என்றாள் இந்து. ஐயோ," பேபி நீ ஏன் இவ்வளவு டென்சனாக இருக்க" என்றாள் சுஷ்மி..

இந்து, "நான் ரித்துவ பார்க்கப் போனேன். அவன் கல்யாணத்தை நிறுத்த முடியாதுன்னு சொல்லிவிட்டான். நானே கடுப்புல இருக்கேன்"என்றாள். சுஷ்மி, "பேபி இன்னைக்கு நீ ரிஷப்சனில் எவ்வளவு அழகா இருந்த தெரியுமா? நான் மட்டும் ஆம்பளையா இருந்தா உன்னை தூக்கிட்டு போய் தாலி கட்டிடுவேன்" என்றவள் ஏன்டி, "நீ இவ்வளவு அழகா இருந்தா எப்படிடி அவன் கல்யாணத்தை நிறுத்துவான்" என்றாள். இந்து, "போடி உன்கிட்ட போய் சொன்னேன் பாரு என் புத்தியை செருப்பால அடிக்கணும்" என்றாள். இவர்களுக்குள் குறுக்கிட்ட திவ்யா, "இந்து அவ அப்படித்தான் தெரியும்ல நீ ஏன் இவ்ளோ டென்சன் ஆகுற நீ வந்து பர்ஸ்ட் ரெஸ்ட் எடு" என்றாள். ம் என்று தலையை ஆட்டி கட்டிலில் தலையில் கை வைத்து அமர்ந்து இருந்தாள்.

அந்த அறையில் நுழைந்த சாரதா, "என்னம்மா இந்து உடம்பு சரியில்லையா? தலையில் கை வைத்து தலை வலிக்குதா?" என அக்கறையாக வினவினார். தலையை நிமிர்த்தி அவரைப் பார்த்து , 'இல்லம்மா நான் நல்லாதான் இருக்கேன்' என்றாள். "சரி சீக்கிரம் தூங்கு அப்பதான் முகம் காலையில பளிச்சுனு இருக்கும்" என்று கூறி வெளியேறினார். எல்லோரும் தூங்கி விட நிலையில்லாமல் தவித்துக் கொண்டிருந்த இந்து சிறிது நேரத்தில் கண்ணயர்ந்தாள்.


அதிகாலை 4 மணிக்கு இந்து இந்து என்று என மணமகள் அறையை தட்டினார் பார்வதம். கதவு திறந்த இந்து, "பாட்டி வீட்டில்தான் தூங்க விடமாட்ட இங்கையும் ஏன் சீக்கிரம் எழுப்புற?" என்றாள். அவளை பார்த்த பார்வதம், " இன்னைக்கு ஒரு நாளாவது சீக்கிரம் எழுந்திரு. இன்னைக்கு உனக்கு கல்யாணம் ஞாபகம் இருக்கா?" என்றார். பொம்பள புள்ளை அஞ்சு மணிக்கு மேலே தூங்கினா வீடு உருப்படாது. நாங்கல்லாம் அந்த காலத்துல என ஆரம்பித்தார். இந்து , " அவரைக் கையெடுத்துக் கும்பிட்டு வேண்டாம் நீ இப்ப ஆரம்பிச்ச கல்யாணம் முடியுற வரைக்கும் விடமாட்ட. இப்ப என்ன நான் குளிச்சு கிளம்பனும் அவ்வளவு தான? நீ கிளம்பு நான் குளிக்க போறேன்" என்று கூறி பாத்ரூம்க்குள் நுழைந்தாள். இந்தக் காலத்துப் பிள்ளைகளுக்கு வரவர நல்லது சொன்னா கூட பிடிக்க மாட்டேங்குது. நாம கொலை பண்ண மாதிரி பாக்குதுங்க என புலம்பிக்கொண்டே எல்லோரையும் எழுப்பி விட்டுக் கொண்டிருந்தார்......

. இந்து குளித்துவிட்டு வந்து எல்லோரையும் எழுப்பினாள். எல்லோருமே எழுந்துவிட சுஷ்மி மட்டும் தூங்கிக்கொண்டிருந்தாள். அருகில் இருந்த தண்ணீரை எடுத்து அவள் மேல் ஊற்றினாள். "ஆ மழை! மழை! என்று கத்திக் கொண்டே எழுந்து" சுஷ்மி திருதிருவென முழித்தாள். அவளை பார்த்து அனைவரும் சிரிக்க அவள் இந்துவை கொலை செய்வது போல் பார்த்தாள். இந்து சிரித்தக் கொண்டே, "ஏன்டி பக்கி உனக்கு மட்டும் ரூம்க்குள்ள மழை பெய்யுதா?" என்றாள். சுஷ்மி, "உனக்கு கொழுப்பு கூடிருச்சு தூங்குற பச்சபுள்ள மேல தண்ணீ ஊத்தியா விளையாடுற" என்று கூறிக்கொண்டே இந்துவை அடிக்கத் துரத்தினாள்.......


ஓடி வந்த இந்து ரூம் கதவை திறந்து உள்ளே வந்த பார்வதத்தின் மீது மோதினாள். அவளை பார்த்த பார்வதம், "காலையில் எழுப்பும்போது அவ்வளவு வாய் பேசின? இப்ப ரெண்டு பேரும் ஓடிப் பிடிச்சு விளையாடிட்டு இருக்கீங்க" என வசை பாடிக்கொண்டிருந்தார். சுஷ்மி மைண்ட் வாய்சில், " ஏன் மேலையா தண்ணீ ஊத்துன அனுபவி " என்று கூறி சிரித்தாள். சாரதா, " அத்தை நீங்க இங்க என்ன பண்றீங்க? அங்க ஐயர் உங்களை கூப்பிட்டு இருக்காரு போய் பாருங்கள்" என்று அனுப்பி வைத்தார்.


சுஷ்மி, "அம்மா என்னமா கொஞ்ச நேரம் கழிச்சு வந்திருக்கலாம்ல. இங்க ஒரு தரமான சம்பவம் நடந்திருக்கும். சே ஜஸ்ட் மிஸ்" என்றாள். இந்து சுஷ்மியை அடிக்க துவங்கி விட்டாள். இருவரும் சாரதாவை சுற்றி ஓடிக் கொண்டிருந்தனர். சாரதா சிரித்து விட்டு நீங்க இரண்டு பேரும் மாறவே இல்லை எனக் கூறி இந்து இவங்க தான் பியூட்டிசன். அவர்களையும் ரூமுக்குள்ள கூட்டிட்டு போ என அனுப்பி வைத்தார். எல்லோரும் குளித்து தயாராகி கிளம்பிவிட இந்துவை தயார் செய்துவிட்டு பியூட்டிசன் கிளம்பி சென்று விட இந்து தனித்து விடப்பட்டாள். ரூமில் யாரும் இல்லை என உறுதி செய்துக் கொண்டு கதவை லாக் செய்துவிட்டு வந்து தனது மொபைலை கையில் எடுத்தாள்.


"வா வா பெண்னே என்
பாடலின் இசையே"........
என மொபைல் அலறியது. அதை எடுத்து காதில் வைத்தவள் , " டேய் உன்னை நம்பி தான் நான் ரெடியாகி மணமேடைக்கு போறேன் பிளான் படி நீ சரியா வரல நீ செத்திடுவ" என்றாள்.
எதிர்திசையிலிருந்து ," பேபி நீ பயப்படாத
எல்லாம் நா பார்த்துகிறேன்" என்றான். திரும்பவும் சொல்றே, " என் கேரக்டர் பத்தி உனக்கு நல்லா தெரியும். நான் எதிரிய கூட மன்னிசுருவேன் ஆன துரோகிய மன்னிக்கவே மாட்டேன்" என்றாள். இந்து இந்து கதவை திற என கதவு தட்டும் ஒலி கேட்டது. சரி என்ன கூப்டுறாங்க. நான் சொன்னத மறந்துறாத என கூறி கால் கட் செய்து விட்டு கதவை திறந்தாள்.....





வண்ணங்கள் மிளிரும்.........
 

Shobana

Member
Jun 15, 2020
43
57
18
ஹாய் பிரெண்ட்ஸ்,

நேத்ரா அவர்கள் நமது தளத்தின் புதிய வரவு. அவர்கள் தனது முதல் கதையுடன் நம்மை சந்திக்க வருகிறார்....
வண்ணம்-(02)




இந்து கதவை திறந்தவுடன் சாரதா ஒரு நிமிடம் அசந்து விட்டார். " என் கண்ணே பட்டுடும் போலயே, என் பொண்ணு இவ்வளவு அழகா! என கூறி வீட்டுக்கு போனவுடன் சுத்தி போடணும் " என்றார். இந்து ஒரு வெற்று புன்னகையை உதிர்த்தாள்.....

சாரதா," சரி ரெடியாகி இரு. இன்னும் ஐந்து நிமிடத்தில் பொண்ணு கூப்பிட்டு வர சொல்லுவாங்க அப்போ வந்தா போதும்" எனக் கூறி வெளியேறினார்....




ரம்பா ஊர்வசி மேனகை மூவரை ஒருங்கே சேர்த்த பேரழகி இந்து. வில் போன்று வளைந்த புருவம், பார்ப்பவரை சுண்டி இழுக்கும் காந்த கண்கள், கத்தி போன்ற கூர்மையான நாசி, செர்ரி பழத்தை பிளந்து வைத்தது போன்று இயற்கையாக சிவந்த உதடுகள், பிறைபோன்ற நெற்றியில் புரளும் சுருண்ட கூந்தல் உயரத்திற்கேற்ற எடை மொத்தத்தில்......


"உன்னை செய்த பிரம்மனே
உன்னை பார்த்து ஏங்குவான்
காதல் பிச்சை வாங்கும்
இன்னும் என்ன சொல்ல"......
என்ற பாடலை இவளைப் பார்த்து தான் பாடி இருப்பார்களோ என என்னும் அளவிற்கு அழகான ராட்சசி அவள்.......

கதவை திறந்து உள்ளே வந்த சுஷ்மி பெட்டில் மயங்கி விழுவது போல நடித்தாள். அவள் அருகில் சென்ற இந்து, 'சுஷ்மி சுஷ்மி என கன்னத்தை தட்டி எழுப்பினாள் . என்ன ஆச்சு உடம்பு சரியில்லையா? " என கேட்டாள்.....


எழுந்து தலையணையில் வசதியாக சாய்ந்து அமர்ந்த சுஷ்மி, "பேபி எவ்வளவு அழகா இருக்க? நான் இப்பதான் உண்மையாவே பொண்ணா பிறந்ததற்கு ரொம்ப ஃபீல் பண்றேன் என்றாள். பேசாம நான் கூட ரித்விக்கா பிறந்து இருந்திருக்கலாம்" என்றாள். அவன் பெயரைக் கேட்டவுடன் தலையணையை எடுத்து சுஷ்மி மீது எறிந்த இந்து, "நீ எதுக்கு விழுந்த என்று கேட்டால் அதற்கு பதில் சொல்லாமல் ஏன்டி உளறிட்டு இருக்க" என்றாள். சுஷ்மி, "அதுவா பேபி அழகுல மயங்குறதுனு சொல்லுவாங்களே அது தான் இது என்று கூறி சிரித்தாள். நானே இப்படி என்றால் ரித்விக் நிலைமை" என்று கூறி மீண்டும் சிரித்தாள்.......




"ஏன்டி நீ வேற கடுப்பு ஏத்துற. நானே கல்யாணத்தை எப்படி நிறுத்துவது என்று யோசித்துக்கொண்டு இருக்கிறேன். நீ முதலில் வெளியே போ என்னை கடுப்பு ஏற்றாமல் எனக் கூறி அவளை வெளியே தள்ளி விட்டாள் "........


இவள் ரூமை விட்டு வெளியேறிய சுஷ்மி மணமகன் அறை கதவை தட்டினாள். கதவை திறந்த தீபக், " ஏய் இங்கே என்ன பண்ற போய் அடக்க ஒடுக்கமா பொண்ணா லட்சணமா மணமகள் அறைக்குப் போய் இருடி இன்னிக்கு ஒரு நாளாவது" என்றான். அதற்கு சுஷ்மி, "தன் வாயை சுளித்து அடக்கமான பொண்ணு சுடுகாட்டில் தான் இருக்கு அங்க போய் பாரு"... என்றாள். அவன் தன் தலையில் அடித்துக்கொண்டு, "உன் கிட்ட போய் பேசினேன் பாரு என்ன சொல்லணும்" என்றான்.......



தீபக்கை தள்ளிவிட்டு," ரித்விக் ரித்விக்" எனக் கூறிக் கொண்டு மணமகன் அறைக்குள் நுழைந்தாள் சுஷ்மி.....




ஆறடிக்கு சற்றுக் குறைவான உயரம். கம்பீரமான தோற்றம், சிறிய கண்கள், கைக்கு அடங்காத கேசம், கூர்மையான நாசி, தினமும் உடற்பயிற்சி செய்வதால் நல்ல முறுக்கேறிய தேகம், சிகரெட் போன்ற எந்த பழக்கும் இல்லை என்பதை சுட்டிக்காட்டும் இயற்கையாகவே சிவந்த உதடுகள், பால் போன்று பளிச்சென்ற முகம், மொத்தத்தில் பெண்கள் மனதை கொள்ளைகொள்ளும் ரோமியோ ரித்விக்......



சுஷ்மியை பார்த்த ரித்விக்," ஏய் வாலு நீ எங்க இங்க?. இந்துவுக்கு வால் மாதிரி பின்னாடி சுத்துவியே! அதிசயமா இந்த பக்கம் வந்து இருக்க?" என்றான்.....


சுஷ்மி," நான் எங்க வந்தேன்?. உன் ஆளு தான் என்னை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிவிட்டா" என்றாள்... தீபக், "நீ வாயை வச்சுக்கிட்டு சும்மா இல்லாம ஏதாவது வம்பு இழுத்து இருப்ப" என்றான். சுஷ்மி," ஆமா ஆமா எனக்கு மட்டும்தான் வாய் இருக்கு. உன் தங்கச்சி அப்படியே ஊமை பாரு" என்றாள்........



அதற்குள் அங்கு வந்த அஸ்வின் ரித்விக்கிடம்," அண்ணா மாப்பிள்ளை அழைச்சிட்டு வரச் சொன்னாங்க வா" என்றான்.... பட்டு வேட்டி சட்டையில் மன்மதன் போன்ற கம்பீரமான நடையுடன் தன் நண்பர்கள் புடைசூழ மணமேடையை நோக்கி சென்றான். ஐயர் கொடுத்த மாலையை வாங்கி அணிந்து கொண்டு மணமேடையில் அமர்ந்து ஐயர் கூறிய மந்திரங்களை கூறிக்கொண்டு இருந்தான்.....



சில நிமிடங்களில் ஐயர், "பொண்ணை அழைச்சிட்டு வாங்கோ" என கூறினார்.... சாரதா," சுஷ்மி இந்துவை அழைச்சிட்டு வா" என்றார்......


சுஷ்மி மணமகள் அறைக்குச் சென்று, "இந்து இந்து " என்று கத்திக் கொண்டு உள்ளே நுழைந்தாள். பாத்ரூமில் இருந்து தனது மொபைலை வெறித்துக் கொண்டிருந்தாள் இந்து. எதிர்திசையில் அழைப்பு முழுமையாக சென்று கட் ஆகியது......


சுஷ்மி," அம்மா இந்துவை காணோம் எனக்கு கூற வாய் எடுக்க......இந்து, "இவன் வேற போன் எடுக்க மாட்றான். பொண்ண கூப்பிடுறாங்க. வருவானா? வரமாட்டானா? தெரியலையே. இவ வேற தேடி வந்துட்டா. இப்ப நாம வெளியே போகலைனா கத்தியே ஊரை கூட்டி விடுவாள்" என நினைத்து வேகமாக கதவை திறந்து வெளியேறினாள்.........



வண்ணங்கள் மிளிரும்.......


வண்ணம்-(02)




இந்து கதவை திறந்தவுடன் சாரதா ஒரு நிமிடம் அசந்து விட்டார். " என் கண்ணே பட்டுடும் போலயே, என் பொண்ணு இவ்வளவு அழகா! என கூறி வீட்டுக்கு போனவுடன் சுத்தி போடணும் " என்றார். இந்து ஒரு வெற்று புன்னகையை உதிர்த்தாள்.....

சாரதா," சரி ரெடியாகி இரு. இன்னும் ஐந்து நிமிடத்தில் பொண்ணு கூப்பிட்டு வர சொல்லுவாங்க அப்போ வந்தா போதும்" எனக் கூறி வெளியேறினார்....




ரம்பா ஊர்வசி மேனகை மூவரை ஒருங்கே சேர்த்த பேரழகி இந்து. வில் போன்று வளைந்த புருவம், பார்ப்பவரை சுண்டி இழுக்கும் காந்த கண்கள், கத்தி போன்ற கூர்மையான நாசி, செர்ரி பழத்தை பிளந்து வைத்தது போன்று இயற்கையாக சிவந்த உதடுகள், பிறைபோன்ற நெற்றியில் புரளும் சுருண்ட கூந்தல் உயரத்திற்கேற்ற எடை மொத்தத்தில்......


"உன்னை செய்த பிரம்மனே
உன்னை பார்த்து ஏங்குவான்
காதல் பிச்சை வாங்கும்
இன்னும் என்ன சொல்ல"......
என்ற பாடலை இவளைப் பார்த்து தான் பாடி இருப்பார்களோ என என்னும் அளவிற்கு அழகான ராட்சசி அவள்.......

கதவை திறந்து உள்ளே வந்த சுஷ்மி பெட்டில் மயங்கி விழுவது போல நடித்தாள். அவள் அருகில் சென்ற இந்து, 'சுஷ்மி சுஷ்மி என கன்னத்தை தட்டி எழுப்பினாள் . என்ன ஆச்சு உடம்பு சரியில்லையா? " என கேட்டாள்.....


எழுந்து தலையணையில் வசதியாக சாய்ந்து அமர்ந்த சுஷ்மி, "பேபி எவ்வளவு அழகா இருக்க? நான் இப்பதான் உண்மையாவே பொண்ணா பிறந்ததற்கு ரொம்ப ஃபீல் பண்றேன் என்றாள். பேசாம நான் கூட ரித்விக்கா பிறந்து இருந்திருக்கலாம்" என்றாள். அவன் பெயரைக் கேட்டவுடன் தலையணையை எடுத்து சுஷ்மி மீது எறிந்த இந்து, "நீ எதுக்கு விழுந்த என்று கேட்டால் அதற்கு பதில் சொல்லாமல் ஏன்டி உளறிட்டு இருக்க" என்றாள். சுஷ்மி, "அதுவா பேபி அழகுல மயங்குறதுனு சொல்லுவாங்களே அது தான் இது என்று கூறி சிரித்தாள். நானே இப்படி என்றால் ரித்விக் நிலைமை" என்று கூறி மீண்டும் சிரித்தாள்.......




"ஏன்டி நீ வேற கடுப்பு ஏத்துற. நானே கல்யாணத்தை எப்படி நிறுத்துவது என்று யோசித்துக்கொண்டு இருக்கிறேன். நீ முதலில் வெளியே போ என்னை கடுப்பு ஏற்றாமல் எனக் கூறி அவளை வெளியே தள்ளி விட்டாள் "........


இவள் ரூமை விட்டு வெளியேறிய சுஷ்மி மணமகன் அறை கதவை தட்டினாள். கதவை திறந்த தீபக், " ஏய் இங்கே என்ன பண்ற போய் அடக்க ஒடுக்கமா பொண்ணா லட்சணமா மணமகள் அறைக்குப் போய் இருடி இன்னிக்கு ஒரு நாளாவது" என்றான். அதற்கு சுஷ்மி, "தன் வாயை சுளித்து அடக்கமான பொண்ணு சுடுகாட்டில் தான் இருக்கு அங்க போய் பாரு"... என்றாள். அவன் தன் தலையில் அடித்துக்கொண்டு, "உன் கிட்ட போய் பேசினேன் பாரு என்ன சொல்லணும்" என்றான்.......



தீபக்கை தள்ளிவிட்டு," ரித்விக் ரித்விக்" எனக் கூறிக் கொண்டு மணமகன் அறைக்குள் நுழைந்தாள் சுஷ்மி.....




ஆறடிக்கு சற்றுக் குறைவான உயரம். கம்பீரமான தோற்றம், சிறிய கண்கள், கைக்கு அடங்காத கேசம், கூர்மையான நாசி, தினமும் உடற்பயிற்சி செய்வதால் நல்ல முறுக்கேறிய தேகம், சிகரெட் போன்ற எந்த பழக்கும் இல்லை என்பதை சுட்டிக்காட்டும் இயற்கையாகவே சிவந்த உதடுகள், பால் போன்று பளிச்சென்ற முகம், மொத்தத்தில் பெண்கள் மனதை கொள்ளைகொள்ளும் ரோமியோ ரித்விக்......



சுஷ்மியை பார்த்த ரித்விக்," ஏய் வாலு நீ எங்க இங்க?. இந்துவுக்கு வால் மாதிரி பின்னாடி சுத்துவியே! அதிசயமா இந்த பக்கம் வந்து இருக்க?" என்றான்.....


சுஷ்மி," நான் எங்க வந்தேன்?. உன் ஆளு தான் என்னை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிவிட்டா" என்றாள்... தீபக், "நீ வாயை வச்சுக்கிட்டு சும்மா இல்லாம ஏதாவது வம்பு இழுத்து இருப்ப" என்றான். சுஷ்மி," ஆமா ஆமா எனக்கு மட்டும்தான் வாய் இருக்கு. உன் தங்கச்சி அப்படியே ஊமை பாரு" என்றாள்........



அதற்குள் அங்கு வந்த அஸ்வின் ரித்விக்கிடம்," அண்ணா மாப்பிள்ளை அழைச்சிட்டு வரச் சொன்னாங்க வா" என்றான்.... பட்டு வேட்டி சட்டையில் மன்மதன் போன்ற கம்பீரமான நடையுடன் தன் நண்பர்கள் புடைசூழ மணமேடையை நோக்கி சென்றான். ஐயர் கொடுத்த மாலையை வாங்கி அணிந்து கொண்டு மணமேடையில் அமர்ந்து ஐயர் கூறிய மந்திரங்களை கூறிக்கொண்டு இருந்தான்.....



சில நிமிடங்களில் ஐயர், "பொண்ணை அழைச்சிட்டு வாங்கோ" என கூறினார்.... சாரதா," சுஷ்மி இந்துவை அழைச்சிட்டு வா" என்றார்......


சுஷ்மி மணமகள் அறைக்குச் சென்று, "இந்து இந்து " என்று கத்திக் கொண்டு உள்ளே நுழைந்தாள். பாத்ரூமில் இருந்து தனது மொபைலை வெறித்துக் கொண்டிருந்தாள் இந்து. எதிர்திசையில் அழைப்பு முழுமையாக சென்று கட் ஆகியது......


சுஷ்மி," அம்மா இந்துவை காணோம் எனக்கு கூற வாய் எடுக்க......இந்து, "இவன் வேற போன் எடுக்க மாட்றான். பொண்ண கூப்பிடுறாங்க. வருவானா? வரமாட்டானா? தெரியலையே. இவ வேற தேடி வந்துட்டா. இப்ப நாம வெளியே போகலைனா கத்தியே ஊரை கூட்டி விடுவாள்" என நினைத்து வேகமாக கதவை திறந்து வெளியேறினாள்.........



வண்ணங்கள் மிளிரும்.......
 
  • Like
Reactions: lakshmi

Shobana

Member
Jun 15, 2020
43
57
18
ஹாய் பிரெண்ட்ஸ்,

நேத்ரா அவர்கள் நமது தளத்தின் புதிய வரவு. அவர்கள் தனது முதல் கதையுடன் நம்மை சந்திக்க வருகிறார்....





வண்ணம்-(03)




அவளைப் பார்த்த சுஷ்மி வாயை மூடிக் கொண்டாள். சுஷ்மி, "நல்ல வேளை நீ வெளியே வந்த இல்லைனா நீ ஓடிப் போயிட்ட என்று சொல்லலாம்னு நினைத்தேன்" எனக் கூறி சிரித்தாள். "என் மானத்தை வாங்க வெளியிலிருந்து எல்லாம் ஆளு வேணாம் எல்லாம் என் கூடவே இருக்குதுங்க" என கூறினாள் இந்து. சுஷ்மி, "இல்ல பேபி நீ வேற கல்யாணம் வேண்டாம் வேண்டாம்னு சொல்லி புலம்பீட்டு இருந்தியே அதான்" கூறி ஹிஹிஹி...என இளித்தாள்




இந்து, "நான் ஓடி போக முடிஞ்சா ஏன்டி இவ்வளவு தூரம் வரப் போறேன் நிச்சயதார்த்தம் அன்னைக்கே ஓடிப்போய் இருக்க மாட்டேன் என் அறிவுக்கொழுந்தே" எனக்கூறி சுஷ்மி மண்டையில் ஓங்கி கொட்டினாள். அறைக்குள் நுழைந்த சாரதா இவர்களை பார்த்து விட்டு, "உங்க விளையாட்டுக்கு அளவே இல்லாம போச்சு அங்க எல்லாரும் வெயிட் பண்றாங்க நீங்க கொட்டி விளையாடிட்டு இருக்கீங்க" என்றவர் வா என இந்துவை அழைத்துச் சென்றார்.




அரக்கு நிறத்தில் கோல்டன் கலர் ஜரிகை வேலைப்பாடு அமைந்த பட்டு உடுத்தி வானுல தேவதை போல் தன் தோழியர்கள் புடைசூழ மணமேடை நோக்கி நடந்து வந்தவளை நிமிர்ந்து பார்த்தான் ரித்விக்.


ரித்விக், 'இந்து இவ்வளவு அழகா நீ ! இத்தனை நாள் எங்க டி மறைத்து வைத்திருந்த ஐயோ கண்ணை எடுக்கவே முடியலையே நான் பார்க்கிறது தெரிஞ்சாலே கொன்றுவாளே என நினைத்து ஐயோ கொல்றீயேடி என் செல்ல ராட்சசி' என்று மனதிற்குள் கொஞ்சினான். அதற்குள் ஐயர், "தம்பி இங்க பார்த்து வாங்குங்க" என்றார். தினேஷ் ,
"டேய் மச்சான் ரொம்ப வழியாத தாலி கட்டுதனுக்கு அப்புறம் அவ உன் கூடதான் இருப்பா இப்போ நீ ஐயர பார்த்து மந்திரம் சொல்லு " என்றான். அதற்குள் மணமேடைக்கு அருகில் வந்தவள் மாலை போட்டுக் கொண்டு அவனை முறைத்தவாறு சிறிது தள்ளி அமர்ந்தாள்.



அவளை ஒட்டி கொஞ்சம் நகர்ந்து அமர்ந்த ரித்விக் அவள் காதில், "நேற்று நீ பேசிய பேச்சுக்கு காலையில மண்டபத்தை விட்டு ஓடிப் போய் விடுவனு நினைத்தேன்" என நக்கலாக கூறி நகைத்தான். இந்து மனதிற்குள், 'சிரிடா சிரி இந்த சிரிப்பு இன்னும் கொஞ்ச நேரம் தான் நான் எதுக்கு ஓடனும் என்னை பார்த்து தான் எல்லாரும் ஓடனும்' என நினைத்தவள் அவனை பார்த்து நக்கல் புன்னகையை மட்டும் புரிந்தாள்.


தமிழ் பாரம்பரிய முறைப்படி மணமகன் மணமகள் தாய்மாமன் இருவரை ஐயர் அழைத்து மாலைமாற்றும் படி கூறினார். மாலை மாற்றியவுடன் ரித்விக் பெற்றோர் மீனாட்சி-சுந்தரராஜன் தம்பதிகளுக்கு மணமக்கள் இருவரும் பாதபூஜை செய்தனர். அடுத்ததாக இந்துவின் பெற்றோர் சாரதா-வேதாச்சலம் தம்பதிகளுக்கு பாத பூஜை செய்யப்பட்டது. இந்துவின் உடல் மட்டுமே இங்கிருந்தது. மனது அனலாக கொதித்துக் கொண்டிருந்தது........



அவளது கண்கள் நொடிக்கொருதரம் வாயிலை நோக்கி கொண்டிருந்தது. ஐயோ இவன் வருவானா? என்று தெரியலையே என மனதிற்குள் புலம்பிக் கொண்டிருந்தாள்......


பாத பூஜை முடிந்தவுடன் சம்பந்திகள் வெற்றிலை பாக்கு மாற்றினர். ஐயர் தாலியை எடுத்துக் கொடுத்து அனைவரிடமும் ஆசீர்வாதம் வாங்கி வருமாறு சாரதாவிடம் கொடுத்து அனுப்பினார்.....


மண்டபத்தின் அனைவரது முகத்திலும் மனதிலும் மகிழ்ச்சி பொங்கி வழிந்தது ஒருத்தியைத் தவிர. இந்துவிற்கு இப்போது முன்பைவிட பயம் அதிகரித்தது. அட்ரினலின் ஹார்மோன் அதிகமாக சுரந்ததன் காரணமாகவோ என்னவோ வியர்வை அதிக அளவு முகத்தில் வழிந்தது. அதை பார்த்த மீனாட்சி, " என்னம்மா ரொம்ப வேர்க்குதா? இன்னும் கொஞ்ச நேரம்தான்" எனக்கூறி தன் கைக்குட்டையால் அவளது வியர்வையை துடைத்து விட்டார்.........



எல்லோரிடமும் ஆசீர்வாதம் வாங்கிய பின் சாரதா மாங்கல்யத்தை ஐயரிடம் கொடுத்தார். இந்துவிற்கு பதட்டத்தில் மயக்கம் வருவது போல் இருந்தது......




" மாங்கல்யம்
தந்துனானே மம ஜீவன
ஏதுனானே கண்டே பத்னாபி
சுபகே த்வாம் ஜீவ சரடாடட்
சத்தம் "....
என ஐயர் மந்திரம் கூறி மாங்கள்யத்தை எடுத்துக் கொடுக்க அதை வாங்கி வெண்சங்கு போன்ற இந்துவின் கழுத்தில் கட்டி 3 முடிச்சு இட்டு அவளை தன்னவள் ஆக்கிக் கொண்டான் ரித்விக் ........


முதல் முடிச்சு - கணவனுக்கு கட்டுப்பட்டவள்
இரண்டாம் முடிச்சு - புகுந்தவீடு அல்லது பிறந்த வீட்டிற்கு கட்டுப்பட்டவள்.
மூன்றாம் முடிச்சு - கடவுளுக்கு கட்டுப்பட்டவள்....


ரித்விக் இந்துவின் நெற்றி வகிட்டில் குங்குமத்தால் திலகமிட்டான். இந்த நிகழ்வு மணமகள் மணமகனுக்கு உரியவள் என்பதை எடுத்துக்காட்டுகிறது. மேலும் அந்த இடத்தில் தான் மகாலட்சுமி வாசம் செய்கிறாள்......


ரித்விக் கை தன் நெற்றியில் பட்டவுடன் தான் இந்து சுயநினைவை அடைந்தாள். அவளது கண்ணீர் துளிகள் வழிந்து அவளது மாங்கல்யத்தின் மீது விழுந்தது. எது தன் கனவிலும் நடக்க கூடாது என நினைத்தாளோ அது நடந்து விட்டது . தன் வாழ்நாளில் மீண்டும் யாருக்காக கண்ணீர் சிந்த கூடாது என நினைத்தாளோ அவனுக்காகவே மீண்டும் கண்ணீர் சிந்தினாள்.....



மணமக்கள் இருவரும் அக்னி குண்டத்தை வலம் வந்தனர். வீட்டிற்கு பெரியவரான பார்வதத்தின் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார்கள். அவர்," பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க . சீக்கிரம் ஒரு பேரனோ பேத்தியோ பெத்து கொடுங்க" என கூறினார். பிறகு தங்கள் பெற்றோர்கள் உறவினர் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார்கள். நண்பர்கள் அனைவரும் தங்கள் வாழ்த்துக்களை கூறினார்கள்.....


இந்துவிற்கு நடந்தது அனைத்தும் கனவாகவே இருந்து விட கூடாதா? நிறுத்துங்க போதும் எனக் கூறி ஓவென கதறி அழ வேண்டும் என்பது போல் இருந்தது.....


திருமணத்திற்கு பிறகு நடைபெற வேண்டிய அனைத்து சடங்குகளும் விளையாட்டுகளும் நடைபெற அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தனர். ஆனால் உண்மையிலே மகிழ்ச்சியாக இருக்க வேண்டியவள் உயிர் பிரிந்த உடல் போல் இருந்தாள்.....


எல்லா விளையாட்டுகளும் முடிய மணமக்கள் உணவருந்த அழைத்துச் செல்லப்பட்டனர் . நண்பர்கள் அனைவரும் ரித்விக்கை இந்துவிற்கு உணவு ஊட்டுமாறு குரல் இட்டனர். அவனும் உணவை எடுத்து அவள் வாய் அருகே கொண்டு சென்றான். இந்து நிமிர்ந்து அவனை எரித்து விடுவது போல் பார்த்தாள்....


ரித்விக்,' ஐயோ! இவ கண்ணுக்கு மட்டும் எரிக்கிற சக்தி இருந்தா நான் இப்பவே பொசுங்கி சாம்பலாய் இருப்பேன்' என நினைத்தான். மெதுவாக அவளது காதில் ரித்விக்," இந்து சாப்பிட்டை வாங்கு. எல்லாரும் பாக்குறாங்க பாரு. நம்ம சண்டைய வீட்டில் போய் வைத்துக் கொள்ளலாம்" என்றான்......



இந்து,' ஐயோ! கடவுளே ஒரு நாளைக்கு இப்படி படுத்துறாங்க. இனி என் வாழ்க்கை முழுவதும் என்ன பண்ணப் போறனோ? நீ தான் என்னை காப்பாத்தனும்' என மனதில் வேண்டினாள்......




வண்ணங்கள் மிளிரும்....
 
  • Like
Reactions: lakshmi

Shobana

Member
Jun 15, 2020
43
57
18
ஹாய் பிரெண்ட்ஸ்,

நேத்ரா அவர்கள் நமது தளத்தின் புதிய வரவு. அவர்கள் தனது முதல் கதையுடன் நம்மை சந்திக்க வருகிறார்....
வண்ணம்-(04)




இந்துவை ரித்விக்கு ஊட்ட சொல்ல வேண்டா வெறுப்பாக ஊட்டினாள். இந்துவிற்கு நெருப்பில் நிற்பது போல் இருந்தது. எப்படா வீட்டிற்கு செல்லலாம் என நினைத்தாள்......



மணமக்களுக்கு என பிரத்யோகமாக அலங்கரிக்கப்பட்ட காரில் ஏறி புறப்பட்டனர் இருவரும். மற்றவர்கள் பின் வேறு காரில் கிளம்பினார்கள். காரில் டிரைவர் சற்று எதிர்பாராத விதமாக சடன் பிரேக் போட ரித்விக் தெரியாமல் இந்து மீது மோதி விட்டான். அவள் தனது விழிகளை உருட்டி அவனை முறைத்தாள். ரித்விக் அவளைப் பார்த்து சிரித்து," மெதுவாகக் உருட்டுடி கண்ணை. கீழே விழப் போகுது. என்ன முறைப்புடா சாமி" என்றான். இந்து," மேல இடிச்சுட்டு ஒரு ஸாரி கேக்குறானா பாரு. கொழுப்பெடுத்தவன் சிரிக்க வேற செய்றான்" என சற்று சத்தமாகவே கூறினாள்......




ரித்விக் ," ஏன் டார்லிங் தெரியாம தான இடிச்சேன். அதுக்கு ஏன் இவ்வளவு கோபப்படுகிற?" என்றான். இந்து பல்லை கடித்துக்கொண்டு," இன்னொரு தடவை டார்லிங்ன்னு கூப்பிட்ட உன் பல்லை தட்டி கைல கொடுத்து விடுவேன்" என்றாள். "அப்போ இனிமே நான் உன்னை டார்லிங் தான் கூப்பிடுவேன்"......." நீ என் கிட்ட அடி வாங்கினால்தான் சும்மா இருப்ப போல"........ரித்விக்,"ஐயோ இந்து ரொம்ப பயமா இருக்கு" என்று கூறி பயப்படுபவன் போல நடித்தான்.....



இந்து, "இப்பவே நல்லா சிரிச்சு சந்தோஷமா இருந்துக்கோ. நான் சொல்ல சொல்ல கேட்காம என் கழுத்துல தாலி கட்டுன இல்ல? உனக்கு இருக்கு டா. நான் பண்ற டார்ச்சர்ல நீயே என்ன விட்டுட்டு ஓடனும். இனிமேதான் இந்துவோட ஆட்டத்தை நீ பார்க்க போற. கல்யாண விஷயத்தில் வேணா நான் தோற்றுப் போய் விட்டேன். ஆனால் இனி எதிலும் தோற்க்க மாட்டேன்" என கூறி தனது முகத்தை திருப்பி ஜன்னல் வழியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள். பந்தல் போட்டு வாழைத் தோரணங்கள் கட்டப்பட்டு அலங்கரிக்கபட்ட அந்த வீட்டிற்குள் நுழைந்தது கார்...



"மணமகளே மருமகளே
வா வா உன் வலது
காலை எடுத்து வைத்து வா வா".......



என்ற பாடல் ஒலிக்க ஆரத்தி சுற்றி வரவேற்க தனது வலது காலை எடுத்து வைத்து ரித்விக் வீட்டுக்குள் நுழைந்தாள். மீனாட்சி இந்துவை அழைத்து சென்று விளக்கு ஏற்றுமாறு கூறினார். பூஜை அறையில் மணமக்கள் இருவரும் விளக்கு ஏற்றி தெய்வத்தை வழிபட்டனர். இந்துவிற்கு ரித்விக் வீடு முன்பே பழக்க பட்டிருந்தாலும் இன்று ஏனோ புது இடத்தில் இருப்பது போன்ற உணர்வுடன் இருந்தாள் ஏதோ ஒரு அசௌகரியத்தை உணர்ந்தாள். அவளது மனமும் உடலும் மிகவும் சோர்வுடன் காணப்பட்டது......



அவளது வாடிய முகத்தை கண்ட மீனாட்சி அவளது தலையை தடவி,"ஏம்மா டல்லா இருக்க? கால் ரொம்ப வலிக்குதா?" என அக்கறையுடன் வினவினார். இந்து, "இல்லத்தை உடம்பு கொஞ்சம் அசதியா இருக்கு. லைட்டா தலை வலிக்குது" என்றாள்......" சரிடா இன்னும் கொஞ்ச நேரம் தான். எல்லாரும் கிளம்பி விடுவார்கள். "அப்புறம் நீ போய் ரெஸ்ட் எடு" என்றார்...... சரிங்க அத்தை என்று கூறி புன்முறுவல் பூத்தாள்".....


அதை கண்ட ரித்விக் மனதுக்குள், 'ராட்சசி என்ன தவிர எல்லார்கிட்டயும் நல்லா பேசுறா. சிரிச்சு சிரிச்சுப் பேசுறா. ஆனால் என்னை பார்த்தா மட்டும் முறைக்கிறா' என நினைத்தான்......


பார்வதம் பாலும் பழமும் மணமக்களுக்கு கொண்டு வந்து கொடுத்தார். ரித்விக் வாங்கி குடித்தவன் அதை இந்துவிடம் தர அவள் வேண்டுமென்றே கீழே தவற விட்டாள். அதை பார்த்த பார்வதம்," ஏன்டி பார்த்து கவனமா வாங்கக்கூடாது. இப்படி அபசகுணமா கீழே போட்டுட்ட?" என்றார். இந்து," நான் கரெக்டா தான் வாங்கினேன். ரித்விக் தான் கீழே போட்டு விட்டான்" என்றாள்.....



பார்வதம்," ஏய் புருஷன் பேர் சொல்லி கூப்பிடக்கூடாது. " பாட்டி பேரு எதுக்கு வச்சிருக்காங்க? கூப்டுவதற்காக தானே" என்றாள்......" இந்த காலத்து பிள்ளைங்க எதுவுமே சொல்வதைக் கேட்பதே இல்லை" என தன் புலம்பலை ஆரம்பித்தார்......அதற்குள் மீனாட்சி," சரி விடுங்கம்மா. சின்ன பொண்ணுதானே போகப்போக மாறிவிடுவா. அவளை நான் பார்த்துக்குறேன். நீங்க கவலைப்படாதீங்க, இனிமே அவ எங்க வீட்டு பொண்ணு. சாரதாவை விட நான் நல்ல பார்த்துக்கிறேன்" எனக் கூறி அவரை சமாதானப்படுத்தி அனுப்பினார்....



ரித்விகிடம் திரும்பி," நீ மேல போய் ரெஸ்ட் எடு" என கூறி அனுப்பினார். இந்துவை ஒரு அறைக்கு கூட்டிச் சென்று சிறிது நேரம் ரெஸ்ட் எடுக்கச் சொல்லி விட்டு சென்றுவிட்டார்.........



அவர் சென்றவுடன் கதவை தாழிட்டவள் இவ்வளவு நேரம் சேர்த்துப் பிடித்து வைத்திருந்த மொத்த அழுகையும் அழுது தீர்த்தாள். அப்படியே சிறிது நேரத்தில் உறங்கி விட்டாள். அவளது மொபைல் அழைக்க மெதுவாக கண் விழித்து பார்த்தவள் ஒரு நிமிடம் தான் எங்கே இருக்கிறோம் என கண்களை மெதுவாக சுழல விட்டாள்.....


மீண்டும் அவளது மொபைல் அலறியது, சுயநினைவு பெற்று அந்த மொபைல் ஸ்க்ரீனில் தோன்றிய பெயரை கண்டவுடன் அவளது முகம் சிவந்துவிட்டது. காலை கட் செய்து விட்டாள். மீண்டும் மீண்டும் ஒலிக்க அதை அட்டென்ட் செய்தவள்,"உனக்கு என்னடா நான் துரோகம் செய்தேன்? கடைசி வரைக்கும் வரேன் வரேன் என்று சொல்லி என்னை ஏமாத்திட்ட . இனிமே என் மூஞ்சில முழிக்காத! முதல்லே நீ முடியாதுன்னு சொல்லி இருந்தா நான் வேற ஏற்பாடு செய்து இருப்பேன். நீ துரோகி முதுகுல குத்திட்ட" என்று கத்தினாள்........ எதிர் திசையில்," இந்து நான் சொல்றத" எனக் கூறும் முன் மொபைலை கட் பண்ணி சுவிட்ச் ஆப் செய்து தூக்கி எறிந்தாள்....



" இந்து இந்து" என கதவை தட்டினார் மீனாட்சி. தன் கண்களை துடைத்து விட்டு கதவை திறந்தாள். அவளைப் பார்த்த மீனாட்சி," என்னம்மா தலைவலி பரவாயில்லையா? ஏதாவது மாத்திரை வாங்கி தர சொல்லவா?" என வினவினார். அவள்," இல்ல அத்தை பரவால்ல தலைவலி குறைந்து விட்டது" என்றாள்......"சரி இந்தா இந்த காப்பியக் குடி" என கொடுத்துவிட்டு ஒரு பார்சலை கொடுத்து," காபி குடித்துவிட்டு இந்த புடவை கட்டிக்கோ" எனக்கூறி வெளியேறினார்........



அந்த பார்சலை முறைத்துக் கொண்டே காப்பியை குடித்து முடித்தவள் தனது மொபைலை எடுத்து ஆன் செய்தாள். ஆன் செய்தவுடன் அவள் மொபைல் அலறியது. ஆன் செய்து காதில் வைத்தவள் "சொல்லுமா "என்றாள்.... சாரதா," என்னம்மா பண்ற?...." லைட்டா தலைவலி. இப்பதான் தூங்கி எழுந்து இருக்கேன்".... "சரிமா இப்ப பரவால்லையா?"..... "சரியாயிடுச்சுமா" என்றாள்....


சாரதா," இந்து இங்க நம்ம வீட்டுல பேசுற மாதிரி திமிரா எல்லாம் பேசக்கூடாது. பொறுமையா நடந்துக்கணும் .யாராவது ஏதாவது சொன்னால் எதிர்த்து பேசக்கூடாது. பெரியவர்களை மதிக்கனும்" என அறிவுரை கூற ஆரம்பித்தார்.... இந்து "அம்மா இத சொல்ல தான் போன் பண்ணீங்களா? இப்பதான் எனக்கு தலைவலி போச்சு. திரும்ப வர வைத்து விடாதீங்க. எனக்கு வேலை இருக்கு உங்களை அப்புறம் கூப்பிடுகிறேன்" என கூறி காலை கட் செய்தாள்.......


குளித்து முடித்து மீனாட்சி அளித்த இளஞ்சிவப்பு நிற புடவையை கட்டிக் கொண்டவளை அதற்கேற்றார் போல் நகைகளை அணிவித்து அலங்கரித்தார் மீனாட்சி. ரித்விக் தனது அறையில் குளித்து ரெடி ஆகி இருந்தான்....' மனதில் ஐயோ! இவ எல்லாரும் இருக்கும்போதே என்னை அந்த முறை முறைச்சு சாகடிப்பா. இவகிட்ட இன்னைக்கு நாம தனியா மட்டுனோம். நம்மளை கொலை கூட பண்ணாலும் பண்ணிடுவா' என புலம்பிக் கொண்டிருந்தான்.......


மீனாட்சி சுந்தரராஜன் தம்பதியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார்கள். மீனாட்சி, " ரித்விக் நீ மேல உன் ரூம்க்கு போப்பா" எனக் கூறி அனுப்பி வைத்தார். இந்துவை டைனிங் டேபிள் மீது அமர வைத்தவர் அடுப்பறைக்குள் நுழைந்தார். சிறிது நேரத்தில் கையில் பால் டம்ளருடன் வெளி வந்தவர் , "இந்து நீ படிச்ச பெண்ணு உனக்கு நா எதுவும் சொல்ல தேவையில்லைனு நினைக்கிறேன். திருமணம் என்பது ஒவ்வொரு பொண்னோட வாழ்க்கையிலும் ஒரு முக்கியமான நிகழ்வு. மாற்றம் என்பது நம்ம வாழ்க்கையில எப்பவுமே வந்துகிட்டேதான் இருக்கும் . அதுக்கு ஏற்ற மாதிரி நம்மளும் மாறி கிட்டே இருக்கனும். உன்ன நா என் பொண்ணு மாதிரி தான் நினைக்கிறேன்.
நீயும் ரித்விக்கும் எப்பொழுதும் சந்தோசமா ஒற்றுமையா இருக்கனும். எந்த பிரச்சனை வந்தாலும் ஒருத்தர ஒருத்தர் விட்டு கொடுக்க கூடாது. சீக்கிரம் ஒரு பேரனையோ பேத்தியோ பெத்து கொடுக்கனும்" என மேலும் பல அறிவுரைகளை கூறியவர் சரி நீ மேல போ எனக் கூறி பால் டம்ளர் கொடுத்து அனுப்பினார்.




இந்து மனதிற்குள், 'என்ன மன்னித்து விடுங்க அத்தை. உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் . ஆனால் உங்க ஆசைய கண்டிப்பா என்னால நிறைவேற்ற முடியாது' என எண்ணிக்கொண்டே படிகளில் ஏறி ரித்விக் ரூம்குள் நுழைந்தவள் தன் கையில் உள்ள பாலை டேபிள் மேல் வைத்துவிட்டு தன் பார்வையைச் சுழல விட்டாள் . அவன் பால்கனியில் நின்று நிலவை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்....



அவளது கொலுசு சத்தத்தில் அவள் வருகையை உணர்ந்தவன் திரும்பாது அங்கே நின்று கொண்டிருந்தான். அவள் தனது இரவு உடையை மாற்றிவிட்டு கட்டிலின் ஒரு ஓரத்தில் படுத்து உறங்கி விட்டாள்.....



சிறிது நேரம் கழித்து உள்ளே எட்டிப் பார்த்தவன் அவள் உறங்கி விட்டதைப் பார்த்து மெதுவாக உள்ளே வந்தான். அவள் உறங்கும் அழகை சிறிது நேரம் நின்று ரசித்தவன்," நல்ல வேலை தூங்கிட்டா. நீ சண்டை போடுவ என்று எதிர்பார்த்தேன். அதற்கு பிரிப்பேர் எல்லாம் பண்ணி வச்சிருந்தேன். அழகு ராட்சசி என்ன பேச்சு பேசுற? எப்பவுமே நான் எதிர்பார்க்கிறத பொய்யாக்கி ஏமாற்றுவதே வேலையா வைத்திருக்க. உன்னை என்னால புரிஞ்சுக்கவே முடியலையே! இப்பவே என்ன ரொம்ப பாடா படுத்துற. பாவம்டா ரித்திக் உன் நிலைமை. காலம் முழுக்க உனக்கு சன்னியாசம் தான் போலவே' என்று தனக்குத்தானே புலம்பிக் கொண்டிருந்தான்.....




இந்து மெதுவாக அசைந்தாள். அவன் தன் வாயை மூடிக்கொண்டான். இந்து, டேய் ரித்விக் நான் சொல்றதை கேட்கவே மாட்டியா?" என புலம்பினாள்...... அதைக் கூர்ந்து கவனித்தவன் தூக்கத்தில் கூட என்னை ஏன்டி திட்டுற என கூறி சிரித்தவன் போர்வை எடுத்து அவளுக்கு போர்த்திவிட்டு அருகில் படுத்துக்கொண்டான். சிறிது நேரத்தில் உறங்கி விட்டான்......



அதிகாலையில் மீனாட்சி வந்து," ரித்விக் ரித்விக்" என கதவை தட்டினார். அந்த சத்தத்தில் இந்துவிற்கு முழிப்பு வந்துவிட்டது. அவள் எழ முயற்சி செய்ய அவளால் முடியவில்லை. அவள் மேல் ஏதோ அழுத்துவது போல் உணர்ந்தவள் கீழே பார்த்தாள். ரித்விக் கை அவளை அணைத்து இருந்தது. அவள் நறுக்கென்று அவன் கைகளில் கிள்ளி விட்டாள். அவன் வலி தாங்காமல் ஆ என கத்திக்கொண்டே எழுந்தவன் ராட்சசி என்றான். ராட்சசியா? என அருகில் இருந்த தலையணையை எடுத்து அவன் மீது வீசி, "என் பெட்டிலேயே நீ என்னடா பண்ற?" என்றாள். அவன்," நல்லா கண்ணத் தொறந்து பாருடி. இது என் பெட்" என்றான்........" உன் பெட் என்றால் என்மேல கைபோடுவியா?" என்றாள். அவன் திருதிருவென முழித்தான்.......



மீண்டும் கதவு தட்டும் ஒலி கேட்க இந்து, "இதோ வரேன் அத்தை என்று கூறி எழுந்தவள் , அவன் அருகில் சென்று இரு உன்ன வந்து பார்த்துக்கிறேன்" என கூறி சென்று கதவை திறந்தாள்.....



மீனாட்சி இரண்டு கப் காப்பியை அவள் கையில் கொடுத்து," சீக்கிரமா குளித்து கிளம்பி வாங்க ரெண்டு பேரும் இன்னைக்கு மறு வீட்டுக்கு போகணும்" என்று கூறி கீழே சென்றார். அவள் வருவதற்குள் ரித்விக் பாத்ரூமுக்குள் சென்றுவிட்டான். திரும்பி வந்தவள் காப்பியை டேபிளில் வைத்துவிட்டு அவனை தேடியவள் பாத்ரூமுக்குள் சென்று விட்டதை கண்டு இன்னைக்கு ,"நீ தப்புசிட்ட இன்னொரு நாள் கண்டிப்பா மாட்டுவடா" என்று கூறினாள்...



சிறிது நேரத்தில் இருவரும் கிளம்பி கீழே இறங்கி வர அவன் சென்று டைனிங் டேபிளில் அமர்ந்து கொண்டான். அவள் கிச்சனுக்குள் நுழைந்தவள் மீனாட்சியிடம்," அத்தை ஏதாவது உதவி செய்யவா?" எனக் கேட்டாள்......அவர் சிரித்து," அதெல்லாம் வேண்டாமா. எல்லாம் முடிந்துவிட்டது, நீ போ நான் சாப்பாடு எடுத்துட்டு வரேன்" என கூறி அனுப்பி வைத்தார்......




வண்ணங்கள் மிளிரும்....