கொஞ்சும் வண்ண காதல் - கதை திரி

Shobana

Member
Jun 15, 2020
42
57
18
ஹாய் பிரெண்ட்ஸ்,

நேத்ரா அவர்கள் நமது தளத்தின் புதிய வரவு. அவர்கள் தனது முதல் கதையுடன் நம்மை சந்திக்க வருகிறார்....
வண்ணம் - (05)

மீனாட்சி சாப்பாடுகளை எடுத்து டைனிங் டேபிளில் வைத்தவர் வீட்டில் உள்ள அனைவரையும் சாப்பிட அழைத்தார்.....


மீனாட்சி சுந்தரராஜன் தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் மூத்தவன் ரித்விக் இரண்டாவது அஸ்வின்.
ரித்விக் எம்.பி.ஏ முடித்து விட்டு தந்தையின் தொழிலை கவனித்து வருகின்றான். அஸ்வின் இன்ஜினியரிங் கல்லூரி நான்காம் ஆண்டு மாணவன். படிப்பிலும் சரி தொழிலும் சரி கெட்டிகாரன். ஆனால் அஸ்வின் அதற்கு நேர்எதிர் வழக்கம்போல் தந்தையின் சொல் கேட்காமல் வம்பிழுக்கும் ரகம் சுந்தரராஜன் எது சொன்னாலும் அதற்கு எதிராக செய்யும் வீட்டின் செல்லப் பிள்ளை.....


மீனாட்சி, "அஸ்வின் அஸ்வின் சாப்பிட வாடா" என்றார். இரண்டு நிமிஷம்மா எனக் கூறி கீழே இறங்கிவந்தான் அஸ்வின். "ஹாய் அண்ணா, ஹாய் இந்து" எனக்கூறி நாற்காலியில் அமர்ந்தான். மீனாட்சி, "அஸ்வின் இனிமேல் இந்துவை அண்ணி என்று கூப்பிடு. பேர் சொல்லி கூப்பிடக்கூடாது". அஸ்வின், "நான் எப்பவுமே இந்து என்று தான கூப்பிடுவேன்" . மீனாட்சி, " அது எல்லாம் உங்க அண்ணன் கல்யாணத்துக்கு முன்னாடி. இப்ப நீ அண்ணி என்றுதான் கூப்பிட வேண்டும்". இந்து , "அத்தை எனக்கு அஸ்வின் எப்பவும் ப்ரண்ட் தான். அவன் இந்துன்னே கூப்பிடட்டும்". மீனாட்சி,"அப்படி இல்லம்மா". இந்து, " அத்தை நான் எப்பவும் அஸ்வினுக்கு இந்து தான் அண்ணி இல்ல" எனக் கூறி ரித்விக்கை ஒரு ஆழப்பார்வை பார்த்தாள். இவளை கவனித்துக் கொண்டிருந்த ரித்விக் இந்துவின் பார்வைக்கான அர்த்தம் புரியாமல் விழித்தான்.


ரித்விக் மனதிற்குள், " இவ என்ன நினைக்கிறானே கண்டுபிடிக்க முடியவில்லையே. கல்யாணத்த நிறுத்த சொல்லி ஒத்த கால்ல நின்னா. ஆனால் கல்யாணம் முடிஞ்சபிறகு எதுவுமே சொல்ல மாட்றா . இவளுக்கு உண்மையாவே என்ன பிடிக்குமா? பிடிக்கலையா? தெரியலையே. இல்ல வேற யாராவது லவ் பண்றாளோ? சே சே அப்படி எல்லாம் இருக்காது. அவ எப்பவுமே என் இந்து தான். நான் எத்தனை நாள் அவ கண்ணுல எனக்கான காதலை நான் பார்த்துருக்கேன். ஆனா ஏன் கல்யாணத்த நிறுத்த சொன்னா? கொஞ்ச நாளா ஏன் என்கிட்ட இருந்து விலகி போறா. வேற ஏதாவது பிரச்சினையா இருக்குமோ? ஏதாவது கேட்டாலும் சொல்ல மாட்றா . அவ முறைக்குறதைப் பார்த்தாலே பயமாயிருக்கு" என்று பலவாறு சிந்திக்க சுந்தரராஜன் தொண்டையை செருமிக் கொண்டு வந்தவர் அவன் தோளில் கைவைத்து ,"என்னப்பா யோசனை எல்லாம் பலமா இருக்கு. தட்டைப் பார்த்து சாப்பிடு" என கூறி அருகில் அமர்ந்தார்......அஸ்வின் , "வந்துட்டாருடா மேஜர் சுந்தரராஜன்" என முனங்கினான். அவர் "என்னடா சொன்ன?"...... "அது ஒன்னும் இல்லப்பா"..... "ரித்விக் தம்பியா டா நீ ?அவன் தான் காலேஜ் கோல்ட் மெடலிஸ்ட். ஆனா நீ முதல் செமஸ்டர்ல வச்ச அரியரையே இன்னும் கிளியர் பண்ணல". அஸ்வின், "நான் என்ன பண்றது? அண்ணனை மட்டும் அவனுக்கு பிடித்ததை படிக்க வச்சீங்க. ஆனால் என்னை மட்டும் உங்க இஷ்டத்துக்கு காலேஜ் சேர்த்து விட்டால் நான் என்ன பண்றது?"........." அவன் நம்ம பிஸினஸ்கு ஏற்ற மாதிரி படிச்சான். நீ என்னன்னா படம் எடுக்கப்போகிறேன் இயக்குனராக போறேன்னு சொல்லிட்டு திரிஞ்ச. நல்லா படிச்சு ஏதாவது நல்ல வேலைக்கு போக பாருடா" எனக் கூறினார்......


அடுப்பறையில் இருந்து வந்த மீனாட்சி, "அவனை குறை சொல்லாம உங்களுக்கு தூக்கமே வராதே. சாப்பிடும்போது கூட அவனை ஏதாவது சொல்லிட்டே இருக்கீங்க பிள்ளையை நிம்மதியாக சாப்பிட விடுங்க" . சுந்தரராஜன் , "ஆமா அவனை ஒன்னும் சொல்ல கூடாது. அப்படியே வரிஞ்சு கட்டிக்கிட்டு சண்டைக்கு வந்துடுவ. அவன் கெட்டுப் போகிறதே உன்னால தாண்டி டி"......." நீங்க வேணா பாருங்க. ஒரு நாளைக்கு என்னோட புள்ள நீங்க நினைக்கிறதைவிட பெரிய ஆளா வருவான். அன்னைக்கு இருக்கு உங்களுக்கு இருக்கு"...... அஸ்வின் , "விடுமா அவருக்கு பொறாமை நீ இன்னும் ரெண்டு இட்லி வை" என கூறினான். அவன் கூறிய விதத்தைப் பார்த்து இந்து டக்கென சிரித்துவிட்டாள்.....அஸ்வின், "இந்து உனக்கு கூட என் நிலைமையை பார்த்தா சிரிப்பா வருது இல்ல". இந்து, "இல்லடா இவ்வளவு பேசியும் இன்னும் ரெண்டு இட்லி கேட்கிற பாரு அதை பார்த்துதான் சிரிப்பு வருது". அட நீ என்னம்மா இவர் பேசுவதற்கெல்லாம் நான் கோபப்பட்டு சாப்பிடாமல் போனால் நான் மூன்று வேளையும் பட்டினியா தான் இருக்கனும் " எனக் கூறி கருமமே கண்ணாக சாப்பிட்டுக் கொண்டிருந்தான்......


மீனாட்சி, "இந்து என்னமா தட்டில் சாப்பாடு அப்படியே இருக்கு. இப்படி கோழி மாதிரி கொறிச்சிட்டு இருக்க? நல்லா சாப்பிடு. அப்பதான் உடம்பு நல்லா இருக்கும். அஸ்வினை பாரு எப்படி சாப்பிடுறானு" . இப்போது எல்லோருமே சிரிக்க . அஸ்வின் , " அம்மா நீயுமா? வர வர இந்த வீட்டில உன்னை யாருமே மதிக்க மாற்றாங்கடா அஸ்வின்" என கூறி மீண்டும் தன் வேலையை தொடர்ந்தான்......மீனாட்சி, " சரி சரி பேசினது எல்லாம் போதும் . இந்து நீ சீக்கிரம் சாப்பிட்டு கிளம்பு மா. சாரதா மூணு தடவை கால் பண்ணி விட்டா நீங்க எப்ப வருவீங்க என்று கேட்டு"....ஒருவழியாக இருவரும் சாப்பிட்டு கிளம்பிவிட்டனர். ரித்விக், "அப்பா அம்மா" போயிட்டு வரோம் எனக்கூற மீனாட்சி, " சரி பார்த்து பத்திரமா போயிட்டு வாங்க வண்டியை மெதுவாக ஓட்டுப்பா" எனக் கூறி அனுப்பி வைத்தார். காரின் முன் கதவை திறந்து டிரைவர் சீட்டில் அமர்ந்து காரை கிளப்பி விட்டவன் காரின் பின்பக்க கதவை லாக் செய்து விட்டான். அவன் ஊகித்தது போலவே பின் பக்க கதவை திறந்து ஏற முயன்றவள் திறக்க முடியவில்லை என்ற உடன் கார் கண்ணாடியை தட்டினாள்......


ரித்விக் கண்ணாடியை இறக்கி தனது புருவத்தை உயர்த்தி என்ன? என்று வினவினான். இந்து மனதிற்குள் , "பெரிய இவன் வாயை திறக்க மாட்டான் திறந்தா வாயில இருக்க முத்தெல்லாம் உதிர்ந்திடும் பாரு" என நினைத்தவள் பின்னாடி கதவை திற நான் ஏறனும் என்றாள். ரித்விக், "நீ முன்னாடி ஏற மாட்டியா? நான் என்ன உனக்கு டிரைவரா?. , "நான் எங்க உட்காரணும் என்று எனக்கு தெரியும். அத நீ சொல்ல தேவை இல்லை" என்றாள். ரித்விக், " நீ முன்னாடி ஏறுனா ஏறு. இல்லன்னா இப்படியே நீயும் நில்லு நானும் இருக்கேன்" என்றான்......


எதார்த்தமாக வெளியே வந்த மீனாட்சி, " நீங்க இன்னும் கிளம்பலையா? சாரதா திரும்பவும் போன் பண்ணிட்டா வேகமா கிளம்புங்க" என்றார். ரித்விக், "இந்து வண்டியில ஏறு " என்றான். அவனை முறைத்துக் கொண்டே திமிருபுடிச்சவன் என முனகிக்கொண்டு வண்டியில் ஏறினாள். வண்டியை ஸ்டார்ட் செய்தவன் வரேம்மா எனக்கூறி கிளப்பினான்.....


காரில் ஏறி சீட்டில் சாய்ந்து கண்மூடியவள் வீட்டிற்கு போய் இறங்கும் வரை கண்களை திறக்கவில்லை. இடையில் அவன் , "இந்து இந்து" என அழைத்ததற்கும் பதிலில்லை. அவனும் பேசாமல் கார் ஓட்டுவதில் கவனமானான்.

வண்ணங்கள் மிளிரும்...
 
  • Like
Reactions: lakshmi

Shobana

Member
Jun 15, 2020
42
57
18
ஹாய் பிரெண்ட்ஸ்,

நேத்ரா அவர்கள் நமது தளத்தின் புதிய வரவு. அவர்கள் தனது முதல் கதையுடன் நம்மை சந்திக்க வருகிறார்....

வண்ணம் - (06)


வீட்டிற்கு முன் காரை நிறுத்தி அவன் அவளை கூப்பிடாமல் ஹாரனை அடித்தான். டக்கென கண் விழித்தவள் ஒரு நிமிடம் நாம் எங்கே இருக்கிறோம் என விழித்து பார்த்தவள் "வீடு வந்திருச்சா" எனக் கூறி கீழே இறங்கினாள். ஹாரன் சத்தம் கேட்டு ஆரத்தி தட்டுடன் வெளியே வந்த சாரதா இந்து மாப்பிள்ளையோட சேர்ந்து நில்லும்மா எனக்கூறி ஆரத்தி எடுத்து வரவேற்றவர் ," கண்ணம்மா இதை வெளில ஊத்தீட்டு வா " எனக் கூறி விட்டு "வாங்க மாப்பிள்ளை வாம்மா இந்து " உள்ள போங்க என்றார். படி இறங்கி வந்த வேதாச்சலம், "வாங்க வாங்க உட்காருங்க" .
அம்மா இந்துவும் மாப்பிள்ளையும் வந்து இருக்காங்க பாருங்க சீக்கிரம் வாங்க என்றார். பார்வதம், "இதோ வந்துட்டேன்" என்றவர் கையில் காபியுடன் வந்தார். இந்தாப்பா எடுத்துக்கோங்க என ரித்விக் இந்து கைகளில் கொடுத்தார். ரித்விக் எழுந்து என்ன ஆசிர்வாதம் பண்ணுங்க பாட்டி என கால்களில் விழுந்தான். பார்வதம், "நல்லா இருப்பா" என வாழ்த்தினார். இந்து இப்படி காலில் விழுந்தே எல்லாத்தையும் கவுத்துடுறான் .....


வேதாச்சலம், " தம்பி இந்து எங்க வீட்டுக்கு ஒரே பொண்ணு. ரொம்ப செல்லமா வளர்த்துட்டோம். கொஞ்சம் பிடிவாதம் கோபம் எல்லாம் அதிகம் ஆனால் மனசுல எதுவும் வச்சுக்க தெரியாது. எதுனாலும் முகத்துக்கு நேரா பேசி விடுவா ஆனால் அவளுக்கு பிடிச்சவங்களுக்காக உயிரையே கொடுப்பா. அவ ஏதாவது தெரியாம பேசிட்டா கொஞ்சம் பொறுத்துக்கோங்க அவ சின்ன பொண்ணு குழந்தை மாதிரி" .....


ரித்விக், " மாமா இதெல்லாம் நீங்க சொல்லணும் என்று அவசியமில்லை. அவ எங்க வீட்டு பொண்ணு இனிமேல் நான் பார்த்துகிறேன். அவளை பற்றி நீங்கள் கவலைப்படாதீங்க. உங்க உடம்ப நல்லா பார்த்துக்கோங்க. இந்து என் பொறுப்பு எங்க அம்மாவும் அப்பாவும் இந்துவா சொந்த பொண்ணா தான் நினைக்கிறாங்க".....வேதாச்சலம் , "அப்புறம் உங்க பிசினஸ் எல்லாம் எப்படி போகுது திரும்ப எப்ப ஆபீஸ் போக போறீங்க....


ரித்விக், " சூப்பரா போகுது மாமா அப்புறம் சென்னையில் ஒரு புது பிராஞ்ச் ஓபன் பண்ணலாம்னு இருக்கேன். அதுக்கான வேலைதான் நடந்துட்டு இருக்கு இன்னும் ஒரு வாரத்துல நானும் இந்துவும் சென்னைக்கு போகலாம்னு இருக்கோம்". இன்னும் அப்பா அம்மா கிட்ட கூட சொல்லல இனிமே தான் சொல்லணும் மாமா.......
அடுப்பறையில் சாரதா, "இந்து மாப்பிள்ளை உன்னை நல்லா பாத்துக்கிறார ? வீட்டில் எல்லாரும் எப்படி பேசுறாங்க.இந்து, " அம்மா எனக்கு கல்யாணம் ஆகி ஒரு நாள்தான் ஆகுது". பார்வதம் , "இது என்னடா கொடுமையா இருக்குது எல்லா பொண்ணுகிட்டயும் கேட்கிற கேள்வி தானே கேட்கிறா அதுக்கு ஏன்டி நீ இவ்வளவு சலிக்கிற? . இந்து, "பாட்டி என்ன குறை சொல்லனைணா உனக்கு உறக்கமே வராதே" . பார்வதம், "என்னைக்காவது ஒரு வேலை சொன்னா ஒழுங்கா செய்றீயா டி? ... ஏன் எதற்கு எப்படி என்று ஆயிரத்தெட்டு கேள்வி மட்டும் கேட்க தெரியுதுல்ல ஆனா சொல்ற வேலைய செய்யுறதில்ல... இந்து , " பாட்டி எந்த வேலையும் எதுக்கு எப்படி ஆராய்ச்சி பண்ணி தான் செய்யணும் ".. சாரதா , " இந்து சரி சரி வாயடுச்து போதும் போய் உங்க அப்பாவையும் மாப்பிள்ளையும் சாப்பிட கூப்பிடு . நான் போய் சாப்பாடு எடுத்து வைக்கிறேன்.....வெளியே ஹாலுக்கு வந்தவள் தனது தந்தையும் ரித்விக்கும் சுவாரஸ்யமா பேசிக் கொண்டிருப்பதைக் கண்டவள், 'அப்பாவை கூப்பிடுவது ஓகே இவனை எப்படி கூப்பிடுவது' என யோசித்தவாறே அவர்கள் அருகில் சென்றாள். அவள் வாய் திறக்கும் முன் வேதாச்சலம் வாம்மா உட்காரு உன்னை பத்திதான் பேசிட்டு இருக்கோம். இந்து என்னைப் பத்தியா?....ஆமாம் மா நீ இனிமே சின்ன பொண்ணு கிடையாது உனக்கு கல்யாணம் ஆயிருச்சு. நம்ம வீட்டில நீ அடம் பிடிக்கிற மாதிரி எல்லாம் அங்க பண்ணக்கூடாது . இனிமேல் மாப்பிள்ளை தான் உனக்கு எல்லாமே. அவர் சொல்வதை நீ கேக்கணும். அப்பா எப்படி உனக்கு நல்லது மட்டுமே செய்வேனோ அதே மாதிரிதான் மாப்பிள்ளையும் நீங்க ரெண்டு பேரும் சந்தோசமா ஒற்றுமையா வாழ்க்கையை வாழனும்........இந்துவிற்கு காதில் ரத்தம் வராத தான் ஒரே குறை. பாவம் பிள்ளை கல்யாண பேச்சு ஆரம்பத்திலிருந்து இதோ இப்போது கல்யாணம் முடிந்தும் எல்லா பக்கமும் இருந்த அட்வைஸ் மழை பொழியுது....


சாரதா, " இந்து இன்னும் அங்க என்ன பண்ற சாப்பிட கூப்பிட தானா போன இவ்வளவு நேரமா என்ன பண்ற?..
இந்து, "அப்பா உங்க ரெண்டு பேரையும் சாப்பிட கூப்பிட்டாங்க அம்மா வாங்க' என்றாள். வேதாச்சலம் சரி வாங்க மாப்பிள்ளை சாப்பிட போகலாம் என அழைத்து சென்றார்......சாரதா அனைவருக்கும் உணவு பரிமாறினார். அனைவரும் உணவு உண்டு முடித்தப்பின் ஹாலில் அமர்ந்து கதை பேசத் தொடங்கினார்கள். சாரதா, "மாப்பிள்ளை சாப்பாடு எப்படி இருந்துச்சு" . ரித்விக் , "உங்க சமையலுக்கு என்ன குறை அத்தை செம்மையா இருந்துச்சு எப்பவும் போல கலக்கிட்டீங்க".... ஆமா அத்தை இந்துவுக்கு சமைக்க தெரியுமா?......


இந்து மனதிற்குள் ஏன் தெரியலனா நீ சமைக்க போறியா வெளியே சொன்னால் தான் பாட்டி 3 மணி நேரம் அட்வைஸ் மழை பொழிஞ்சுருமே.....


சாரதா, " தெரியும்பா சொல்லிக் கொடுத்து இருக்கேன் நல்லா தான் சமைப்பா". இப்ப அவ சென்னையில் தனியா வீடு எடுத்து தங்கி தான வேலை பாக்குறா. அதனால அவளுக்கு அவளே தான் சமைத்து சாப்பிடுவ. ரித்விக், எப்படி அத்தை தனியா சென்னையில் தங்கி வேலை பாக்க அனுமதிச்சீங்க? .....


சாரதா, "நாங்க சொன்னா அவ எங்க கேட்க்குறா.. எங்களுக்கு ஆசைதான் ஒரே பொண்ணு கூடவே வச்ச அழகு பார்க்கணுமுன்னு. ஒத்தக் காலில் நின்னு அங்க போய் வேலை பாக்குற. அவங்க அப்பா விடமாட்டேன் என்று தான் சொன்னார். நான் தான் பேசி சரி பண்னேன். பொம்பள புள்ளையா இருந்தா வேலைக்கு போகக் கூடாது படிக்கக் கூடாது என்றெல்லாம் எங்க காலத்துல இருந்தது. எனக்கு ரொம்ப படிக்க வேண்டும் என்ற ஆசை. நானும் நல்லா படிப்பேன் எங்க ஊரு கிராமம் அப்ப எல்லாம் பொம்பள பிள்ளைங்க பத்தாவது போறதே கஷ்டம். பொம்பள பிள்ளைங்களுக்கு படிப்பு எதற்கு சமைக்க தெரிஞ்சா போதும்னு நினைப்பாங்க. என்னால தான் நான் ஆசைபட்டதை படிக்க முடியல. அதனால தான் என் பொண்ணு ஆசைப்பட்ட டாக்டர்க்கு படிக்க வச்சோம். அவளும் படிப்பில் ரொம்ப கெட்டிக்காரி மாப்பிள்ளை. மெரிட்லயே சீட்டு வாங்கிட்டா
அவ காலேஜே சென்னையில தான் படிச்சா. அதனால அவங்க அப்பாவும் ஒத்துக்கிட்டாரு அவ ரொம்ப தைரியசாலி கூட அதான் தனியா இருந்துகிட்டா. எங்களுக்கும் ஆசை தான் அவ கூட இருக்கனும்னு. ஆனால் எனக்கு கிராமத்தில் வாழ்ந்துட்டு இந்த ஊரு பழகவே ரொம்ப நாளாச்சு. சென்னை பார்த்தாலே எனக்கு பிடிக்காது ஒரு பயம் என்று கூட சொல்லலாம். அவளை எப்படியும் கட்டிக்கொடுக்க தானே போறோம் எப்படியும் அவளை பிரிந்து தான் இருக்கப் போகிறோம் அது அப்பவே பண்ணிட்டேன். அவன் வாழ்க்கையின் லட்சியமே நல்லா படிச்சு கஷ்டப்படுற ஏழைகளுக்கு இலவசமாக மருத்துவம் பார்க்கணும் என்பதுதான் அதனால் தான் இப்பவும் வாரத்தில் இரண்டு நாள் அவ ஏழை மக்களுக்கு இலவச மருத்துவம் பார்க்கிறா. நம்மாள முடியாததை யாராவது செய்தா நாம அதை பாராட்டனும் அதான் நா அவளுக்கு சப்போர்ட் பண்ணனேன். சரி நீங்க போய் ஓய்வு எடுங்க நா பேசுனா நாள் முழுதும் பேசிட்டே தான் இருப்பேன். இந்து மாப்பிள்ளைய உன் ரூமுக்கு கூட்டிட்டு போ என்றார்.....


வண்ணங்கள்மிளிரும்....
 
  • Like
Reactions: lakshmi