கொஞ்சும் வண்ண காதல் - கதை திரி

Shobana

Member
Jun 15, 2020
43
57
18
வண்ணம் - (27)கல்யாணம் என்று சொன்னவுடனே எனக்கு ரித்விக் நியாபகம் வந்துச்சு. ஆனா இப்ப அதை பத்தி சொல்லி என் அப்பா மனச கஷ்டப்படுத்த விரும்பலை. என் மனச கல்லாக்கிட்டு "நீங்க எது செஞ்சாலும் சரிதான்" என்று என் முடிவ மறைமுகமா சொல்லிட்டேன்.

அவர் "ரொம்ப சந்தோஷம்மா, நான் கூட நீ யாரையாவது லவ் பண்றேனு சொல்லிடுவேனு பயந்தேன்" என்று சொல்லி சந்தோஷப்பட்டார்.

நம்ம சொசைட்டி எவ்வளவோ வளர்ந்து இருந்தாலும் பொண்ணுங்க லவ் பண்றது தப்பா தான் நினைக்கிறாங்கனு தோனுச்சு. நல்லவேளை நான் ரித்விக் பத்தி சொல்லி எங்க அப்பாவ கஷ்டப்படுத்தலைனு நினைச்சேன்."எனக்கு ஒன்னும் இல்ல. உன் கல்யாணத்தில் நான் எப்படி வேலை பார்க்கிறேன் பாரு" என்றார். எனக்கு என் சந்தோசத்தை விட அவரோடு சந்தோஷம் தான் பெருசா தெரிஞ்சுது. நான் ரெண்டு நாளைக்கு அப்புறம் ஊருக்கு கிளம்பிட்டேன்.


ஒரு வாரம் கழித்து அப்பா போன் பண்ணார். ரொம்ப சந்தோஷமா பேசினார். மாப்பிள்ளை பார்த்துட்டேன். எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு, "மாப்பிள்ளை யார்னு தெரியுமா" என்று சொல்லும் போதே அதை கேட்க எனக்கு விருப்பமில்லை.


"அப்பா வேலை இருக்கு அப்புறமா கூப்பிடுறேன். உங்களுக்கு பிடிச்சருந்தா எனக்கு ஓகே தான்" என்று சொன்னேன். "இருந்தாலும் நீ ஒரு தடவை போட்டோ பாரும்மா. போட்டோ அனுப்புறேன்" என்று சொன்னார்.


"நான் மேலும் எதுவும் பேச விரும்பாமல் சரின்னு சொல்லி போனை வைத்து விட்டேன். அந்த போட்டோவை பார்க்கவே இல்லை"


என படித்துக் கொண்டிருக்கும் போது இடையே பக்கத்தை திருப்பி ரித்விக் ஆராய்ச்சி செய்ய அஸ்வின் "என்னடா ஆச்சு. எதுக்கு திருப்பற. மீதியப்படி" என்றான்.


ரித்விக், "இல்லடா இடையில ரெண்டு பக்கம் இல்ல பாரு. கிழிச்சு இருக்கு" என்று காட்ட அதை வாங்கிப் பார்த்தவன் "அட ஆமால்ல இங்கே பாரு. கிழிச்ச பிசிறு கூட இருக்கு. சரி மீதிய படி கடைசில பார்ப்போம்" என்று கூற "சரி" என கூறி விட்டு மீண்டும் படிக்க ஆரம்பித்தான்.அந்த நிகழ்வுக்கு அப்புறம் எனக்கு சரியா தூக்கமில்லை. ரொம்ப பயமா இருந்துச்சு. 'கடவுளே எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது' என்று நினைச்சு அழுதேன்.


அப்ப தான் அம்மா கால் பண்ணாங்க. நான் அழுதுட்டு பேசினதால் "என்ன ஆச்சு. ஒரு மாதிரியா பேசுற" என்று கேட்டாங்க. நான் உடம்பு சரியில்லைன்னு சொல்லி சமாளிச்சேன். இரண்டு நாள்ல நிச்சயம். அப்புறம் ஒரு வாரத்துல கல்யாணம். அதனால லீவ் போட்டுட்டு வீட்டுக்கு வர சொன்னாங்க.


எனக்கு அதுல விருப்பம் இல்லை. ஆனா அப்பாவுக்காக கிளம்பீட்டேன். அம்மா தான் மேக்கப் எல்லாம் போட்டு விட்டாங்க. எல்லோரும் சந்தோஷமா இருந்தாங்க. எனக்கு மட்டும் கஷ்டமா இருந்துச்சு.


என்னால அந்த பையனோட லைஃப் வேஸ்ட் ஆகக் கூடாதுன்னு நினைச்சு கல்யாணத்தை நிறுத்தலாம் என்று யோசித்தேன். ஆனால் அப்பா முகம் தான் ஞாபகம் வந்துச்சு. அதுக்கு அப்புறம் நான் வேற எதுவும் யோசிக்கிற நிலையில நான் இல்லை. மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்துட்டாங்க. நிச்சயத்துக்கு பொண்ண கூட்டிட்டு வாங்க என்னு சொன்னப்ப அம்மா என்ன கூட்டிட்டு போனாங்க. நான் யாரையும் நிமிர்ந்து பார்க்கலை. குனிஞ்சு கிட்டே இருந்தேன். பொண்ணு மாப்பிள்ளைய மோதிரம் மாத்திக்க சொன்னாப்ப தான் நிமிர்ந்து பார்துதேன்.அங்க ரித்விக் நின்று அழகா சிரிச்சான். அந்த ஒரு நிமிஷம் என்னோட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஆளு கொஞ்சம் மாறி இருந்தான். ஆனால் முகம் மட்டும் சின்ன வயசுல இருந்த மாதிரி அப்படியே இருந்துச்சு. எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை. அவன் என் கையில் மோதிரம் போட்டப்ப தான் நான் சுயநினைவு பெற்றேன். நானும் அவன் கையில் மோதிரம் போட்டேன். போட்டோ எல்லாம் எடுத்தாங்க. மீனாட்சி அத்தை அஸ்வின் எல்லார்மே வந்து பேசினாங்க. ரொம்ப சந்தோசமா இருந்துச்சு. அப்புறம் எல்லார்மே கிளம்பிட்டாங்க. அம்மாவும் அப்பாவும் ரொம்ப சந்தோஷமா இருந்தாங்க.


திரும்பவும் ரூம்க்கு போனதுக்கு அப்புறம் எனக்கு அந்த ஞாபகம் வந்துருச்சு. என்ன பண்ணலாம்னு யோசிச்சேன். என்னால கண்டிப்பா கல்யாணத்தை நிறுத்த முடியாது. அதனால ரித்விக்கிட்ட உதவி கேட்கலாம்னு அவனுக்கு போன் பண்ணி தனியா பேசணும்" என்று கூப்பிட்டேன்.அவனும் வந்தான். எனக்கு கல்யாணம் பிடிக்கலை நிறுத்திடு என்று சொன்னனேன். அவன் ஆழமா என்ன பார்த்து "நான் ஒன்னு கேக்குறேன். பதில் சொல்லு. அப்புறம் நீ சொன்னத பத்தி நான் யோசிக்கிறேன்" என்றான்.

நான் சரின்னு தலையாட்டினேன். அவன் "யாரையாவது லவ் பண்றியா" என கேட்டான். நான் வேகமாக நிமிர்ந்து பார்த்து இல்லை என்று தலையை ஆட்டினேன். அப்புறம் ஏன் கல்யாணத்தை நிறுத்த சொல்றேன்னு கேட்டான். நான் எதுவுமே சொல்லாமல் தலையை குனிஞ்சுகிட்டேன்.

என் கண்னை பார்த்து என்ன பிடிக்கலை என்று சொல்லு நான் போறேன்னு சொன்னான். நான் பாவமாக முகத்தை வச்சிகிட்டு அவனை பார்த்தேன். அவனுக்கு நான் சொல்ல மாட்டேன்னு தெரியும் போல, அவன் சிரிச்சான்.

அப்புறம் நாங்க ஆடர் பண்ண காபியை குடித்தோம். அவன் எழுந்து இன்னும் ஒரு வாரத்தில் கல்யாணம். வெயில்ல சுத்தி கருத்து போயிடாதனு நக்கல் பண்ணீட்டு கிளம்ப ரெடியானான்.

ரித்விக் "நான் சொன்னது" என்று கேட்டேன். அவன் "நீ போய் உங்க அப்பாகிட்ட சொல்லி கல்யாணத்தை நிறுத்து" என்று சொன்னான். நான் அவனை முறைச்சேன்.

அவன் எதுவுமே சொல்லாமல் கண்ணாடியை ஸ்டைலா மாட்டிகிட்டு போயிட்டு வரேன் பேபி அப்படின்னு சொல்லிட்டு என் கன்னத்தை தட்டிட்டு கிளம்பீட்டான்.

அதுக்கு அப்புறம் கல்யாணம் நடந்துச்சு எனக் கூறி அனைத்தையும் கூறியிருந்தாள்.

அதை படித்தவன் கண்களில் கண்ணீர் வழிந்தது. அதை துடைத்த அஸ்வின், "கவலைப்படாதடா, கண்டிப்பா சீக்கிரமே இந்து உன்கிட்ட வந்து விடுவா" என்றிட
"ம்ம்..." என தலையாட்டியவன் வீட்டைப் பூட்டி விட்டு டைரியை தன்னுடன் எடுத்துக் கொண்டு கிளம்பினான்.


அஸ்வின், "அந்த நேரத்துல என்ன நடந்துச்சுன்னு இந்துவா சொன்னால் தான் தெரியும். இல்லைனா வேற வழியே இல்லை" என்று கூற ரித்விக், "அவளைப் பார்க்க முடியுமானு தெரியலை. முயற்சி பண்ணி பார்ப்போம்" என்றவன் வண்டியை வீட்டை நோக்கி செலுத்தினான்.

வீட்டிற்கு வந்தவன் மனம் நிலையில்லாமல் தவித்தது. ரூம்க்குள் நுழைந்தவன் கட்டிலில் படுத்து கண்களை மூட இந்துவின் முகமே கண்முன் தோன்றியது. 'என்னை எவ்ளோ லவ் பண்ணி இருக்க. அப்புறம் ஏன்டி என்ன விட்டுட்டு போன. நீ என்கூட இருக்கும்போது தெரியாத வலி இப்ப தெரியுது டி. ஆனா கண்டிப்பா என்னைய விட்டு போக விடமாட்டேன்' என்று ஒரு மனது கூற மற்றொரு மனது 'அது எப்படி காப்பாற்ற முடியும்' எனக் கூறி அவனை தவிக்க செய்தது.


இப்படியே இரண்டு நாட்கள் நகர்ந்து. ரித்விக் மொபைல் ஒலித்து. அழைப்பை ஏற்றவன் "ஹலோ" என்றிட எதிர் திசையில் "ரித்விக் நான் ரோஹித் பேசுறேன்."

"சொல்லுங்க ரோஹித்."

"நானும் சுஷ்மியும் ஆஸ்பிட்டல் விஷயமா வெளிநாடு போயிட்டோம். இன்னைக்கு தான் வந்தேன். இப்ப தான் நியூஸ் கிடைச்சது. இந்துவ எதுக்கு அரெஸ்ட் பண்ணாங்க. அவளுக்கு அந்த பையனுக்கும் எந்த சம்பந்தம்."

"தெரியலை ரோஹித். என்ன நடக்குதுனு எனக்கே புரியலை."

"ரித்விக் நீங்க கவலைபடாதீங்க. எங்க லாயர் இருக்கார். எந்த கேஸ் எடுத்தாலும் கண்டிப்பா வெற்றி தான். நாளைக்கு வாங்க
நம்ம போய் அவரை பார்ப்போம்."

"சரி ரோஹித் கண்டிப்பா நாம போகலாம்."

"அப்புறம் ரித்விக் இந்துவ ஒரு தடவை பார்க்கலாமா? விஷயம் தெரிச்சதிலிருந்து சுஷ்மி ரொம்ப அழுகுறா."

"சரி அவகிட்ட போனை கொடு. நான் பேசுறேன்" என்றிட ரோஹித் மொபைலை சுஷ்மியிடம் கொடுத்தான்.

ரித்விக், "ஹலோ சுஷ்மி."

"சொல்லு ரித்விக், நீ இருந்தும் எப்படி அவளை அரெஸ்ட் பண்ண விட்ட."

"இந்த விஷயத்தில என்னால எதுவுமே பண்ண முடியலை. இந்துகிட்டே மிரட்டி பார்த்துட்டேன். கெஞ்சி கூட பார்த்துட்டேன். வாயவே தொறக்க மாட்றா. அவளா என்ன நடந்தது என்று சொன்னா தான் நம்ம எதுவும் பண்ண முடியும்."

"நான் அவ கிட்ட பேசி பார்க்கவா."

"பார்க்க விடுவாங்கலானு தெரியலை. முயற்சி பண்ணி பார்ப்போம்."

"சரி ரித்விக்" எனக் கூறி அழைப்பை துண்டித்தாள்.


மீனாட்சி, சுந்தரராஜன், சாரதா மூவரும் கோவிலுக்கு சென்று விட்டனர். அஸ்வினும், ரித்விக்கும் வீட்டில் இருந்தனர்.


கதவு தட்டும் சத்தம் கேட்டு அஸ்வின் கதவை திறக்க அங்கு நின்றிருந்த வித்யா வேகமாக உள்ளே வந்து அவனை அணைத்துக் கொண்டாள்.

அவள் ஏங்கி அழுக "என்னடி கோலம் இது. ஏன் இப்படி இருக்க தலை கூட வாராம. என்னாச்சு" என அஸ்வின் கேட்க அந்த சத்தத்தைக் கேட்டு விட்டு ரித்விக் வெளியே வந்தான்.

அவள் அழுவதை கண்டவன் தண்ணீர் பாட்டிலை அவளிடம் நீட்டினான். அதை வாங்கி குடித்தவள் சிறிது நேரம் அமர்ந்து ஆசுவாசப்படுத்தினாள்.

அவள் அழுகையை நிறுத்தியவுடன் ரித்விக், "இப்போ ஓகே வா" என்றிட அவள் "ம்ம்...ஓகே" என தலையாட்டினாள்.

"இப்ப சொல்லு என்ன ஆச்சு" என்று கேட்க "எங்க அம்மா தான் என்ன அடைச்சு வைச்சிட்டாங்க" என்றாள்.

அஸ்வின், "அவங்க எதுக்கு உன்ன அடைச்சு வைச்சாங்க."

"இந்து அக்கா கேஸ்க்காக தான்" என்றுக் கூற ரித்விக் அதிர்ச்சியாகி, "வாட், உனக்கும் இந்த கேஸ்க்கும் என்ன சம்பந்தம்" என்றான்.வண்ணங்கள் மிளிரும்...
 

Shobana

Member
Jun 15, 2020
43
57
18
வண்ணம் - (28)
பெருமூச்சு விட்ட வித்யா அன்று நடந்தவற்றை சொல்லத் தொடங்கினாள்.

"அன்னைக்கு என்னோட க்ளோஸ் ஃப்ரண்ட், ஸ்கூல்ல ஒன்னா படிச்சவளுக்கு கல்யாணம். அம்மா போக வேணாம்னு தான் சொன்னாங்க. நான் தான் அடம்பிடித்து போனேன்.

பழைய ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் பார்த்ததாலே பேசிக்கிட்டே இருந்தோம். டைம் போனதே தெரியலை. இருட்டிடுச்சு, அதனால தனியா போக வேண்டாம். இருந்து மறுநாள் கிளம்ப சொன்னா. ஆனால் அம்மா திட்டுவாங்க என்று பயந்து நான் கிளம்பிட்டேன். நைட் என் போன்ல சார்ஜ் வேற இல்ல.

அப்ப நான் பஸ் ஸ்டாப்பில் தனியா நின்னு கிட்டு இருந்தேன். கொஞ்சம் பயமா இருந்துச்சு. அப்ப அங்க அந்த மினிஸ்டர் பையன் கார் அந்த வழியா போச்சு.


அவன் கொஞ்சம் போதையில வேற இருந்தான். வண்டி போயிட்டு ரிவர்ஸ் வந்து என் முன்னாடி நிறுத்தி கார் கண்ணாடியை இறக்கி என்ன ஒரு மாதிரியா பார்த்தான். எனக்கு பயமாயிடுச்சு, நான் வேகமா நடக்க ஆரம்பிச்சேன்.


என் பின்னாடியே வண்டியை மெதுவாக ஓட்டிட்டு வந்தான். கொஞ்சம் அசிங்கமா பேசினான். "செருப்பு பிஞ்சிரும்னு" சொல்லி அவனை திட்டி விட்டு வேகமாக நடந்தேன்.

அவன் டக்குனு கார் கதவை ஓபன் பண்ணி என்னை உள்ளே இழுத்து போட்டு லாக் பண்ணிட்டான்.

நான் கதவை நான் தட்டினேன். என்னாலும் திறக்க முடியவில்லை அவன் டிரைவர் சீட்டில் இருந்து வண்டி ஓட்டிட்டு இருந்தான். நான் அவனை அடிச்சு தலை முடியை பிடிச்சு இழுத்தேன். கடுப்பானாவன் என்ன இரண்டு அடி அடிச்சான். நான் மயங்கிட்டேன்.


அப்புறம் வண்டிய ஒரு இடத்துல நிறுத்தி என்ன தூக்குனான். அப்போவே எனக்கு மயக்கம் தெளிஞ்சிடுச்சு. எழுந்து தூக்கி கீழே படுக்க வைத்தான். அப்புறம் அசைவே இல்ல. நான் லைட்டா கண்ண முழிச்சு பார்த்தேன். அது காடு மாதிரி இருந்துச்சு அவனுக்கும் எனக்கும் கொஞ்சம் டிஸ்டன்ஸ் இருந்தது.


அவன் வண்டி மேலே உட்கார்ந்து தண்ணி அடிச்சிட்டு இருந்தான். நான் மெதுவா எழுந்து ஓட ஆரம்பிச்சேன். எதார்த்தமான திரும்பும் போது அவன் என்னை பார்த்துட்டான்.


வேகமா ஓட ஆரம்பிச்சேன். அவனும் என் பின்னாடியே வேகமா ஓடி வந்தான்.
கொஞ்ச தூரத்துல ரோடு வந்துருச்சு. அது கிட்ட போகும் போது அவன் என்ன பிடிச்சுட்டான்.


அவன் இழுத்ததுல என் ட்ரெஸ் கிழிச்சுடுச்சு. அங்கேயே வைத்து அவன் என்ன ரேப் பண்ண ட்ரை பண்ணான். நான் கத்துனேன்.

அப்பதான் ஒரு ஸ்கூட்டி எங்களை நோக்கி வந்துச்சு. அவன் என் வாயை மூடிட்டான். அது எங்கள தாண்டி போயிடுச்சு. நான் வேகமா அவன் கைய கடிச்சுட்டேன். வலி தாங்காம அவன் கையை எடுத்தான்.


"ஹெல்ப் பண்ணுங்க" என்று மறுபடியும் கத்துனேன். அந்த ஸ்கூட்டி திரும்பி வந்துச்சு. அதுல இருந்து இந்து அக்கா இறங்குனாங்க. அவங்க எங்களை பாத்துட்டாங்க.

"அவ மேல இருந்து கையை எடுடா" என்று சொன்னாங்க.
"முடியாது என்னடி பண்ணுவனு" அவன் சொல்ல அவங்க ஓங்கி அவனை அடிச்சாங்க.

என்ன விட்டுட்டு அவங்க தலை முடியை பிடித்து இழுத்தான். அவள விட்டுறேன். நீ எனக்கு வேணும்னு சொன்னா. அவங்க கோபம் வந்து திருப்பி அவனை அடிச்சாங்க.

அவன் அவங்க சேலைய பிடிச்சு இழுத்தான். நானும் அவனை அடிச்சேன். அவன் என்னை பிடித்து கீழே தள்ளி விட்டுட்டான். நான் கீழ விழுந்துட்டேன்.


இந்து அக்காவுக்கு கோபம் அதிகமாகி அவனை பிடிச்சு வேகமா தள்ளீட்டாங்க. அவன் பக்கத்துல இருந்த கல்லு மேல போய் விழுந்துட்டான். நான் வேகமாக ஓடிப் போய் அவங்களை அணைச்சுகிட்டேன்.

அவங்க அழாதனு சொல்லி ஆறுதல் சொன்னாங்க. அவன் எழுந்திருக்கவே இல்லை. கிட்ட போய் கையை வைத்து பார்த்தா அவனுக்கு மூச்சு இல்லை. நான் ரொம்ப பயந்துட்டேன். அவங்களும் பயந்துட்டாங்க.

"இந்த கையால எத்தனை உயிரை காப்பாற்றி இருப்பேன். இதே கையால இப்போ ஒரு உயிரை கொன்னுட்டேனு"
சொல்லி அழுதாங்க. "நான் கொலை பண்ணேன்" என்று சொல்லி சரண்டர் ஆகுறேன் சொன்னேன்.

அவங்க நான் பண்ண தப்புக்கு நீ எதுக்கு தண்டனை அனுபவிக்கனும்னு சொன்னாங்க. எனக்காக தான பண்ணுனீங்கனு சொன்னேன்.
சரி இப்போதைக்கு இதை வெளியே சொல்ல வேண்டாம்னு முடிவு எடுத்தோம்.உடனே கிளம்பி வந்துட்டோம். இந்து அக்கா என்னைய அவங்க வீட்டுக்கு கூட்டிட்டு போனாங்க. அவங்க தான் எனக்கு வேற டிரஸ் கொடுத்தாங்க.

நான் ரொம்ப பயந்து அழுதேன். அவங்க தான் ஆறுதல் சொன்னாங்க. அப்புறம் அம்மாக்கு போன் பண்ணி "நான் என் ஃப்ரெண்ட் வீட்டுல இருக்கேன். ரொம்ப டைம் ஆச்சு" என்று சொன்னேன்.

அவங்க "இதை சொல்ல உனக்கு இவ்வளவு நேரமா. உன் போனுக்கு எத்தனை தடவை கூப்பிடுறது" என்று சொல்லி திட்டுனாங்க.

இந்து அக்கா தான இந்த விஷயத்தை யார்கிட்டேயும் சொல்லாதனு சொன்னாங்க. அப்புறம் நான் வீட்டுக்கு வந்துட்டேன்.

மறுநாள் மினிஸ்டர் பையன் கொலைனு நியூஸ்ல வந்தது. அதை பார்த்து பயந்து ரெண்டு நாளா நான் எழுந்திருக்கவே இல்லை. ரொம்ப காய்ச்சல் வந்துருச்சு. ஒரு மாசம் ஹாஸ்பிடல்ல தான் இருந்தேன்.

அப்புறம் ஹாஸ்டல் போயிட்டேன். கொஞ்சம் கொஞ்சமாய் இதை மறந்துட்டேன். அதுக்கப்புறம் நான் அவங்களை பார்க்கவே இல்லை.


கோவில் திருவிழா அன்னைக்கு தான் பார்த்தேன். அவங்க கிட்ட பேசலாம் தோள் மேல கையை வச்சேன். அவங்க மயங்கி விழுந்தால் அங்க கூட்டம் கூடிருச்சு. அதனால் நான் விலகி போயிட்டேன்.


அப்புறம் இந்து அக்காவ அரெஸ்ட் பண்ணப்ப நான் ரொம்ப அழுதேன். என் அம்மாகிட்ட விஷயத்தை சொல்லி "சரண்டர் ஆக போறேன்" என்று சொன்னேன். அவங்க என்னை தடுத்துட்டாங்க. அவங்க பொண்ணு வாழ்க்கை வீணாகிடும்னு பயந்தாங்க.

நான் அவங்கள மீறி அஸ்வின்க்கு போன் பண்ணேன். அவங்க என் போன் புடுங்கி உடைச்சு போட்டுட்டு ரூம்ல அடைச்சு வச்சுட்டாங்க" எனக் கூறி அழுதாள்.


ரித்விக் மாமா, வாங்க
போலீஸ் ஸ்டேஷன் போவோம். நான் தான் கொலை பண்றேனு சொல்லி சரணடைகிறேன்.

ரித்விக், "ஒரு லூசு மாதிரி பேசாத இரு கொஞ்சம் யோசிப்போம்."

வித்யா, "எனக்கு ரொம்ப குற்ற உணர்ச்சியா இருக்கு. எனக்காக இப்ப அவங்க தண்டனை அனுபவிக்கிறாங்க."

ரித்விக், "நீங்க ரெண்டு பேருமே தப்பு பண்ணல. தப்பு பண்ணது அந்த நாய் தான். நீங்க தடுக்க தான் செஞ்சிங்க. நீங்க பயப்படாதீங்க. நான் கண்டிப்பா இந்துவ வெளியில் கொண்டு வருவேன்.
முகம் எப்படி இருக்குன்னு பாரு. முதல்ல அழுகைய நிறுத்து. நான் லாயர் கிட்ட இதை பத்தி பேசறேன். அஸ்வின் வித்யாவை உள்ள கூட்டிட்டு போ" என்றான்.

அஸ்வின் அவளை உள்ளே கூட்டிச் சென்ற சமாதானப்படுத்தி சாப்பிட வைத்து விட்டு வெளியே வந்தான்.

அஸ்வின், "ரித்விக் இப்ப என்ன பண்ணலாம்."

ரித்விக், "ரோஹித் நாளைக்கு லாயர் கிட்ட போகலாம்னு சொல்லி இருக்கான். நம்ம நாளைக்கு போய் அவரை பார்த்து பேசுவோம்."


கோவிலுக்கு சென்றவர்கள் வீட்டிற்கு வந்தவுடன் அஸ்வின் நடந்தவற்றைக் கூறினான். அதைக் கேட்ட
சுந்தரராஜன், "ரித்விக் அடுத்து என்ன பண்ணலாம்."

ரித்விக், "அப்பா நாளைக்கு ரோஹித் சொன்ன லாயரைப் போய் பார்க்க போறோம். அப்ப வித்யாவை கூட்டிட்டு போறோம். அவர் கிட்ட நடந்ததை சொல்லுவோம்."


சாரதா, "நான் சொன்னேன்ல என் பொண்ணு தப்பு பண்ணி இருக்க மாட்டானு. எனக்கு நம்பிக்கை இருக்கு. கண்டிப்பாக அவ வெளியில வருவா."


வித்யா, "என்னை மன்னிச்சிடுங்கம்மா. என்னால தான் இந்து அக்காவுக்கு இந்த நிலைமை" எனக் கூறி அழுக அவளது கண்ணீரை துடைத்து விட்ட சாரதா "நீயும் என் பொண்ணு மாதிரி தான் வித்யா. அந்த இடத்தில் யார் இருந்தாலும் இந்து கண்டிப்பா உதவி பண்ணி இருப்பா. இதான் நடக்கும்னு விதி இருந்திருக்கு. அதை யாராலும் மாற்ற முடியாது. இனிமே இதை பத்தி பேசாம, அவளை எப்படி வெளியே கொண்டு வருவது என பார்ப்போம்."


மீனாட்சி, "வித்யா நீ எதுக்கு அழுகுற. கண்டிப்பா உங்க ரெண்டு பேரையும் கடவுள் காப்பாத்துவார். நீங்க ரெண்டு பேருமே தப்பு பண்ணலை பயப்படாதீங்க. நாளைக்கு லாயரை போய் பாருங்க. என்ன சொல்றான்னு பார்ப்போம்" எனக் கூறி அவளை சமாதானப்படுத்தினார்.


கஜேந்திரன் சதாசிவத்திற்கு அழைப்பு விடுக்க

சதாசிவம், "சொல்லு கஜா, என்ன விஷயம்."

"ஐயா ஏன் திடீர்னு அந்த பொண்ணை கொல்ல வேண்டாம்னு சொல்லிட்டீங்க."

"இல்ல கஜா, என் பையன் கொன்னவளை என் கையால தான் கொல்லனும். அப்பத்தான் என் ஆத்திரம் அடங்கும். இன்னும் ரெண்டு நாள்ல கோர்ட்டுக்கு கூட்டிட்டு வருவாங்க. ஆதாரம் எல்லா அவளுக்கு எதிரா தான் இருக்கு. கண்டிப்பா தண்டனை கிடைக்கும். ஆனால் எனக்கு அது பத்தாது. நானே கொல்லனும். சரி சூட் பண்றதுக்கு எல்லாம் ரெடி பண்ணி வச்சுடு."


"சரிங்கய்யா. நீங்க வாங்க நான் பார்த்துக்குறேன்."


"அப்புறம் நாளைக்கு முக்கியமான சரக்குகளை கை மாத்தணும். நம்ம இடத்துக்கு வந்துடு. எனக்கு யாருமே நம்பிக்கை இல்ல. அதான் உன் கிட்ட சொல்றேன். நீ தான் இது செய்யணும். முக்கியமான விஷயம் யாருக்கும் தெரிய கூடாது. என் பதவியை எப்படி காலி பண்ணுறதுனு நிறைய பேர் எதிர்பார்த்து காத்துட்டு இருக்கானுங்க. ரொம்ப கவனமா நம்ம குடோனுக்கு வந்துடு."

"சரிங்கய்யா, நான் வரேன்" எனக் கூறி அழைப்பை துண்டித்தான்.


மறுநாள் ரித்திக் மொபைலுக்கு அழைத்த ரோஹித், "ஹலோ ரித்விக் கிளம்பியாச்சா. கரெக்டா பத்து மணிக்கு அங்க வந்துடுங்க" என்றிட ரித்விக், "கிளம்பிட்டோம். அட்ரெஸ் மட்டும் அனுப்பு வந்துடுறோம்" எனக் கூறி அழைப்பை துண்டித்தான்.


அஸ்வினை அழைத்து விஷயத்தை கூறி வித்யாவை அழைத்துக் கொண்டு மூவரும் புறப்பட்டனர்.


ரித்விக் வண்டியை ஓட்ட அஸ்வின் அவன் அருகிலும் வித்யா பின்னாலும் அமர்ந்து இருந்தனர். செல்லும் போது ரித்விக் மொபைலுக்கு அழைப்பு வரவே வண்டியை நிறுத்தி இறங்கி பேசிவிட்டு வந்த அவனது முகத்தில் முகம் கலவரமாக இருந்தது.


அஸ்வின், "ஏன் ரித்விக் முகம் ஒரு மாதிரியா. இருக்கு போன்ல யாரு."

ரித்விக், "எனக்கு முக்கியமான வேலை வந்துருச்சு. ரொம்ப அவசரம் நான் போகனும்."

"ஏண்டா லாயரை பார்க்கிறத விட உனக்கு என்ன முக்கியமான வேலை."

"அதை இப்ப என்னால சொல்ல முடியாது. ஆனால் நான் போயே ஆகணும் நீ வித்யாவும் போய் லாயர் கிட்ட எல்லா விஷயத்தையும் சொல்லுங்க. ரோஹித் உங்க கூட வருவான்" எனக் கூறியவன் வண்டி சாவியை அவனிடம் கொடுத்து விட்டு புறப்பட்டான்.


வண்ணங்கள் மிளிரும்....
 

Shobana

Member
Jun 15, 2020
43
57
18
வண்ணம் - (29)
அஸ்வின், "இந்துவை விட இவனுக்கு என்ன முக்கியமான வேலை இருக்கு. அறிவு கெட்டவன்" என புலம்ப
வித்யா, "பொறுமையா இரு அஸ்வின். அவங்க இவ்வளவு அவசரமா போனா கண்டிப்பா முக்கியமான விஷயமாக தான் இருக்கும்" என்றுக் கூற "என்னவோ போங்க" என்றவன் வண்டியை லாயர் வீட்டை நோக்கி செலுத்தினான்.


ஏற்கனவே ரோகித் அங்கு வந்து இருக்க மூவரும் உள்ளே சென்றனர்.

விஜயராகவன் அவர்களை பார்த்தவுடன் "ரோஹித் வாப்பா, எப்படி இருக்க? அப்பா எப்படி இருக்காங்க?" என்றார்.

ரோஹித், "நல்லா இருக்கேன் அங்கிள். அப்பாவும் நல்லா இருக்காங்க. நீங்க எப்படி இருக்கீங்க?"

விஜயராகவன், "ம்ம்... நல்லா இருக்கேன்ப்பா. ஆமா என்ன விஷயமா வந்திருக்க ரோஹித்."

"அங்கிள் நான் நேத்தே சொன்னேன்ல. மினிஸ்டர் பையன் கொலை கேஸ்."

விஜயராகவன், "ஆமாம்ப்பா."

"அந்த கேஸ்ல உள்ள இருக்குற பொண்ணு என்னோட க்ளோஸ் ஃப்ரண்டு. நீங்க தான் அவளை வெளியே கொண்டு வரணும். எனக்காக பண்ணுங்க" என்றிட
"சரிப்பா, கேஸை பத்தி விவரம் சொல்லுங்க" என்றார்.

அஸ்வின் நடந்தவற்றையும் வித்யாவை பற்றியும் கூறினான். அதை கேட்டு சிறிது நேரம் யோசித்தவர் "அப்ப நீங்க சொல்றதைப் பார்த்தா அந்த பொண்ணு தான் ஆர்யாவை கொலை பண்ணி இருக்காங்க. ஐ அம் ரைட்" என்றிட
வித்யா, "ஆமாம் சார் அவங்க தள்ளி விட்டதுல அவன் கல் மேல மோதிட்டான். அவன் பின் மண்டையில் அடிச்சிருச்சு. நாங்க தொட்டு பார்த்தப்ப அவனுக்கு மூச்சு இல்ல. நாங்க உடனே அந்த இடத்தை விட்டு கிளம்பிட்டோம்" என்றாள்.


அஸ்வின், "சார் இந்துவே கொலை பண்ணி இருந்தாலும் அது எதார்த்தமா தான் நடந்தது. அதுமில்லாம அவன் தான் இந்துகிட்டேயும் வித்யாகிட்டேயும் தப்பா நடந்துக்க முயற்சி பண்ணி இருக்கான்."


விஜயராகவன், "நீங்க சொல்றது கரெக்ட் தான். தற்காப்புக்காக பண்ணது தான். ஆனால் குறைந்தபட்சம் ஆறு மாதமாவது தண்டனை கிடைக்க வாய்ப்பு இருக்கு. பார்ப்போம் வேற எதாவது வழி இருக்கானு நான் யோசிக்கிறேன்..." என்றவர் வித்யாவிடம் சில பல கேள்விகளை கேட்டு குறித்துக் கொண்டார்.

"சரி, ரோஹித் கேஸ் இன்னும் ரெண்டு நாள்ல கோர்ட்டுக்கு வருதுல்ல, அங்க பார்ப்போம். ஆமா மினிஸ்டர் பக்கத்தில இருந்து எந்த எதிர்ப்பும் சொல்லலையா?"


ரோஹித், "அதான் அங்கிள் எனக்கும் பயமா இருக்கு. அவர் ரொம்ப சைலைண்டா இருக்கார். என்ன பண்ண போறான்னு தெரியலை."

விஜயராகவன், "நானும் கேள்விப் பட்டிருக்கிறேன். அவர் கொஞ்சம் டேஞ்சர் பர்சன். எனிவே கோர்ட்ல பார்ப்போம்."

ரோஹித், "சரி அங்கிள், நீங்க கண்டிப்பா அவளை வெளியே கொண்டு வருவீங்கன்னு நான் நம்புறேன்."

விஜயராகவன், "என் கையில என்ன இருக்கு. என்னால முடிஞ்ச அளவுக்கு நான் முயற்சி பண்றேன். நல்லதே நடக்கும்னு நம்புவோம்" என்றிட "சரி அங்கிள் நாங்க கிளம்புறோம்" எனக் கூறி மூவரும் விடைபெற்று வெளியே வந்தனர்.


ரோஹித், "அஸ்வின் ரித்விக் எங்க."

"ஏதோ முக்கியமான வேலைக்கு போய் இருக்காண்ணா."

"சரி பார்த்து போங்க. இவர் கண்டிப்பா இந்துவ வெளியில் கொண்டு வந்துடுவார்னு நான் நம்புறேன்."

அஸ்வின், "எனக்கு நம்பிக்கை இருக்கு. ஆனால் ஆறு மாசம் தண்டனை கிடைக்கும்னு சொன்னாங்க. அதான் கொஞ்சம் நெருடலாக இருக்கு."

ரோஹித், "அதை எல்லாம் நீ நினைக்காதே. நல்லது நடக்கும்னு நினை கண்டிப்பா நடக்கும். வித்யாவை பத்திரமா கூட்டிட்டு போ" என்றிட "சரிண்ணா நாங்க கிளம்புறோம்" எனக் கூறி வீட்டிற்குப் புறப்பட்டான்.


அவர்கள் இருவரும் வீட்டிற்குள் நுழைய மீனாட்சி, "என்ன நீங்க மட்டும் வந்து இருக்கீங்க. ரித்விக்கை காணோம்."

"அவனுக்கு வேலை இருக்குனு போயிட்டான் அம்மா" என்றிட
சுந்தர்ராஜன், "என்னடா லாயரை பார்த்தீங்களா? என்ன சொன்னாங்க?" என பேசிக் கொண்டிருக்கும் காலிங் பெல் ஒலித்தது.

மீனாட்சி சென்று கதவை திறக்க அங்கு ராஜேந்திரனும் அம்புஜமும் முன் நின்று கொண்டிருந்தனர். அவர்களை பார்த்தவுடன் ஒரு நிமிடம் அதிர்ந்த மீனாட்சி, "வாங்கண்ணா, வாங்க அண்ணி" என்று உள்ளே அழைக்க அவர்களைப் பார்த்த வித்யா, "இங்க எதுக்கு வந்தீங்க. வெளியில போங்க" எனக் கத்தினாள்.


அஸ்வின், "வித்யா அமைதியா இரு" என அடக்கினான். ராஜேந்திரன் சுந்தரராஜனின் கையை பிடித்துக் கொண்டு "என்னை மன்னிச்சுடு சுந்தர். விஷயம் தெரிஞ்ச உடனே எங்க என் பொண்ணு வாழ்க்கை வீணாப் போய்டும்னு பயந்து தான் நாங்க அவளை அடைச்சு வைச்சுட்டோம். அந்த நேரத்துல ஒரு பயத்தில் பண்ணிட்டோம். அந்த விஷயத்தை சொல்லி சரண்டர் ஆக போறேன்னு அவ சொன்னப்பா என்ன பண்றதுன்னு தெரியலை. என் பொண்ணு பேரு வெளில வர கூடாது அப்படினு நினைச்சு பண்ணிட்டோம். இப்ப அவளே எங்களை வேணாம்னு சொல்லிட்டு வந்துட்டா. நாங்க வைச்சிருக்கிறது ஒரே பொண்ணு அவள விட எங்களுக்கு எதுவுமே முக்கியமல்ல" எனக் கூறினார்.

அம்புஜம், "வித்யா உன் மேல இருக்கிற பாசத்துல தான்டி அப்படி பண்ணிட்டோம்" எனக் கூறி அழுதார்.

சுந்தரராஜன், "சரி விடுடா, நீயும் ஒரு சராசரி தகப்பனார் யோசிச்சிருக்க. இதுல உன் தப்பு இல்லை" என்றிட ராஜேந்திரன் சாரதாவிடம் வந்து "நீங்க தான் எங்களை மன்னிக்கனும். உங்க பொண்ணு மட்டும் இல்லைன்னா இன்னைக்கு வித்யா இருந்திருக்கவே மாட்டா. அது இப்பதான் எங்களுக்குப் புரிஞ்சது. என்ன மன்னிப்பியாம்மா" எனக் கேட்க

சாரதா, "ஐயோ! என்ன நீங்க இப்படி பேசுறீங்க? நீங்க வித்யா மேல இருக்கிற பாசத்துல தான பண்ணீங்க. விடுங்க, மன்னிப்புனு பெரிய வார்த்தை எல்லாம் பேசுறீங்க."


ராஜேந்திரன், "நீங்க எல்லாரும் பேசுறதை பார்த்தா எனக்கு ரொம்ப அவமானமா இருக்கு. நான் ரொம்ப சுயநலமா யோசிச்சு தப்பு பண்ணிட்டேன்."


மீனாட்சி, "விடுங்கண்ணா, நடந்ததே பேசிப் என்ன ஆகப்போகுது. அதான் உங்க தப்ப புரிஞ்சுகிட்டீங்கல்ல. இனிமே அதைப் பத்தி பேசாதீங்க."

அம்புஜம், "எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குண்ணே. நீங்க எல்லோரும் எப்படி பெருந்தன்மையா நடந்துக்கிறீங்க. உங்க குடும்பத்துல என் பொண்ணு வாழப் போறதுக்கு நாங்க கொடுத்து வச்சிருக்கனும்."

சுந்தரராஜன், "ஏம்மா இப்படி பெரிய வார்த்தையெல்லாம் பேசற...."

அம்புஜம், "இல்லண்ணா... நான் உண்மைய தான் பேசுறேன். சரிங்கண்ணா நாங்க வித்யாவை கூட்டிட்டு போகவா? கல்யாணத்து முன்னாடி இங்க இருக்கிறது முறையில்ல. கல்யாணத்துக்கு அப்புறம் இங்கு தானே வரப்போறா..."

வித்யா சுந்தரராஜனை பார்த்து "இல்ல மாமா, நான் இவங்க கூட போக மாட்டேன் திருப்பி என்ன அடைச்சு வெச்சிருவாங்க..."

மீனாட்சி, "அப்படியெல்லாம் சொல்லக் கூடாது வித்யா. அவங்க உன்னோட அப்பா அம்மா இல்லையா? இத்தனை வருஷமா பார்த்து பார்த்து வளர்த்தவங்கள இப்படியா பேசுவ... ஏதோ ஒரு தடவ தெரியாம பண்ணிட்டாங்க. இனி அப்படி நடக்காது. முதல்ல அவங்க கிட்ட மன்னிப்பு கேளு" எனக் கடிந்து கொள்ள வித்யா அம்புஜத்தைக் கட்டிக் கொண்டாள்.

அம்புஜம், "இனிமே அம்மா அப்படி பண்ண மாட்டேன்ம்மா. ஏதோ ஒரு தடவை பாசம் என் கண்ணை மறச்சுடுச்சு. அது கூட உனக்காக தான்."

வித்யா,"சாரிம்மா, நான் அப்படி பேசி இருக்க கூடாது. அப்பா நீங்களும் என்னை மன்னிச்சிடுங்க."

ராஜேந்திரன், "சரி விடும்மா, வா வீட்டுக்கு போகலாம்."

வித்யா, "அப்பா இன்னும் ரெண்டு நாள்ல கோர்ட்ல கேஸ் வருது. அதுக்கு சாட்சி சொல்லீட்டு வரேன்ப்பா."

அஸ்வின், "ஆமா மாமா, நானே அவளை வீட்டில் கொண்டு வந்து விடுறேன்."

ராஜேந்திரன், "சரிங்க மாப்பிளை. சுந்தர் நாங்க போயிட்டு வரோம்டா."

மீனாட்சி, "என்னண்ணா, அதுக்குள்ள கிளம்பிட்டீங்க? சாப்பிட்டு போங்க..."

ராஜேந்திரன், "இல்லம்மா இருக்கட்டும். நாங்க கிளம்புறோம்" எனக் கூறி கிளம்பினார்கள்.


மீனாட்சி, "அஸ்வின், இந்த ரித்விக் பையனுக்கு ஒரு போன் பண்ணுடா. இவ்வளவு நேரம் ஆச்சு. எங்க போறேனு சொல்லீட்டாவது போறானா. வரவர இந்த பையனுக்கு பொறுப்பே இல்லை."

அஸ்வின், "அம்மா நான் இப்பதான் ரெண்டு தடவை போன் பண்ணினேன். சுவிட்ச் ஆப்னு வருது. இன்னும் கொஞ்ச நேரம் பார்ப்போம்" என்றான்.

சிறிது நேரம் பொறுத்து பார்த்தவர் இரவு நேரமாகி விட சுந்தரராஜனிடம்
"ஏங்க, ரித்விக்கை இன்னும் காணோம்" என புலம்ப "கொஞ்சம் பொறுமையாக இரு மீனாட்சி. அவன் இந்து கேஸ் விஷயமா தான் போய் இருப்பான். நீ கவலைப்படாத, அவன் என்ன சின்ன பையனா. வந்திடுவான்" என்றார்.மீனாட்சி மீண்டும் அமர்ந்து வாசலை பார்க்க ஆரம்பித்தார். எல்லோரும் உறங்கச் செல்ல சுந்தரராஜன், "மீனாட்சி வந்து படு. அவன் வந்துடுவான்" என்றிட "நீங்க போங்க. நான் கொஞ்ச நேரம் கழிச்சு வாறேன்" எனக் கூறி அமர்ந்து கொண்டார்.

மணி பணிரென்டை நெருக்க தண்ணீர் குடிப்பதற்காக வெளியே வந்த அஸ்வின் மீனாட்சி ஹாலில் சோபாவில் அமர்ந்திருப்பதை கண்டவன் "என்னமா இன்னும் தூங்கலையா?"

"எப்படிடா தூங்க சொல்ற? இன்னும் ரித்விக் வரலை. அவன் வேற வர வர சரியாக சாப்பிறது கூட இல்ல. இப்ப எங்க போயிருக்கான் கூட தெரியலை" எனக் கூறி அழுக அவள் அருகில் அமர்ந்தவன் "அழுகாதீங்கம்மா, நான் அவன் பிரெண்ட்ஸ் கிட்ட எல்லாம் போன் பண்ணி கேட்கிறேன்" என்றவன் எல்லோருக்கும் போன் பண்ணினான்.

எல்லோரும் வரவில்லை என்ற ஒரே பதிலை தந்தனர். அதைக் கேட்ட மீனாட்சி, "ஐயோ! என் பிள்ளை எங்க போனான்னு தெரியலையே" எனக் கூறி அழுக அந்த சத்தத்தில் எல்லோரும் எழுந்து வெளியே வந்தனர்.

சுந்தரராஜன், "என்னாச்சு மீனாட்சி, எதுக்கு அழுகுற."

"என்புள்ள இன்னும் வரலை. அதை பத்தி கவலைப்பாடமா நீங்க தூங்குறீங்க" என பொரிய சுந்தரராஜன், "அஸ்வின் வாடா நம்ம போய் தேடுவோம்" என்று கிளம்பினார்.

அஸ்வின், "அப்பா இந்த நேரத்துல எங்க போய் தேடுவீங்க. அவன் எங்க போனானே தெரியலையே! நானும் அவன் ஃப்ரெண்ட் கிட்ட எல்லாம் போன் பண்ணி கேட்டுடேன். எல்லாருமே வரலைன்னு சொல்லிட்டாங்க."


சுந்தரராஜன், "சரிடா காலைல வரைக்கும் வெயிட் பண்ணி பாப்போம். அப்புறம் வரலைன்னா அபிஷேக்கு போன் பண்ணி விஷயத்தை சொல்லுவோம்" என்று கூற அஸ்வின், "சரிப்பா... நீங்க சொல்றது கரெக்ட் தான்" என்றான்.


சுந்தரராஜன், "மீனாட்சி போய் படு. கண்டிப்பா ரித்விக் காலையில வந்துடுவான்" என்றவர் "வித்யா அத்தைய உள்ள கூட்டிட்டு போம்மா" என்றார்.

வித்யா, "வாங்க அத்தை, ரித்விக் மாமா காலையில கண்டிப்பா வந்திடுவார்" எனக் கூறி அவரை உள்ளே அழைத்துச் சென்றாள்.

காலையில் வேகமாக எழுந்த சுந்தரராஜன் ரித்விக் வராதைக் கண்டு அபிஷேக் மொபைலுக்கு அழைப்பு விடுத்தார். அழைப்பு ஏற்கப்பட்டவுடன் அபிஷேகிடம் விஷயத்தைக் கூற "அப்பா நீங்க அஸ்வினை வந்து ஒரு காம்ப்ளைன்ட் மட்டும் எழுதிக் கொடுக்கச் சொல்லுங்க. நான் பார்த்துக்குறேன்" என்றான்.

அவர் அஸ்வினிடம் செய்தியைக் கூற அவன் ரூமில் கிளம்பிக் கொண்டிருந்தான். ஹாலில் அமர்ந்திருந்த வித்யா "அஸ்வின் அஸ்வின்" என கத்த மொத்த குடும்பமும் ஹாலில் கூடிவிட்டது.

அஸ்வின், "என்னடி ஆச்சு. எதுக்கு இப்படி கத்துற" என்றிட அவள் டி.வி யை கை காட்டினாள். அதை கண்டவுடன் மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் உறைந்தது.


வண்ணங்கள் மிளிரும்...