சந்திரபவனம் - கதை திரி

Malli

New member
May 2, 2019
13
2
3
என்னமோ நடக்குது மர்மமா இருக்குது சுதா நன்றாக கொண்டு போகிறீர்கள் கதையை இன்னும் கொஞ்சம் படித்தால் ஓரளவு புரிந்து விடும் யோசித்து தலைமுடியை பிய்த்துக் கொள்ளும் உத்தேசம் இல்லை ;)
 
  • Like
Reactions: sudharavi

Anuya

Well-known member
Apr 30, 2019
262
128
63
அத்தியாயம் – 3

பழைய நினைவுகளுடன் வீட்டிற்கு வந்திறங்கிய உமாவை எதிர்கொண்ட பாஸ்கர் “என்ன உமா இவ்வளவு சீக்கிரம் கோவிலுக்கு போயிட்டு வர? என்ன விசேஷம் என்கிட்டே கூட சொல்லாம போயிருக்க?” என்றார்.


அவரின் முன்பு விபூதியை நீட்டியவள் நிமிர்ந்து பார்க்காது “அக்காவுக்கு கல்யாண நாள்” என்றாள் மெல்லிய குரலில்.


அதைக் கேட்டதும் “ஒ...நான் மறந்து போயிட்டேன்” என்றார் சுருதி இறங்கிய குரலில்.


அயர்ச்சியுடன் சோபாவில் சென்றமர்ந்தவள் “அவளுக்கு ஏன் இப்படிப்பட்ட வாழ்க்கை? இதுல யாரை குற்றம் சொல்றது?” என்றாள் கண்களை மூடி.


அவளருகே அமர்ந்தவர் “இன்னும் எத்தனை வருஷத்துக்கு இதையே நினைச்சிட்டு இருப்ப உமா. இப்போ தான் எல்லோரும் மறந்து அவங்க அவங்க வாழ்க்கையை பார்க்க ஆரம்பிச்சிருக்காங்க. மறுபடியும் அதை பேசி வேதனையை உண்டாக்காதே”.


கண்கள் கலங்க “எத்தனை வருடம் ஆனாலும் மறக்க கூடிய சம்பவங்களா அவை? எல்லாவற்றிலும் நானும் சம்மந்தப்பட்டிருக்கேனே. ஒருவிதத்தில் நானும் குற்றவாளி தான்” என்றாள்.


அவளது கைகளைத் தட்டிக் கொடுத்தவர் “உமா! அவங்க அவங்களுக்கு விதிக்கப்பட்டது நடந்திருக்கு. நடந்த சம்பவங்களில் யாரும் யாரையும் குற்றம் சாட்டும் நிலையில் இல்லை. எல்லாவற்றிற்கும் விதி ஒன்றே காரணம்” என்றார்.


“ஒவ்வொரு நாள் இரவு படுத்தா உறக்கம் வர மாட்டேங்குதுங்க. எப்படியோ போயிருக்க வேண்டிய வாழ்க்கையை திசைதிருப்ப நானும் ஒரு காரணமாகிட்டேனே” என்றாள் கண்ணீருடன்.


அப்போது ‘அம்மா’ என்றழைத்துக் கொண்டு ஆதி கீழே இறங்கி வருவது தெரிய “ஷ்! உமா...ஆதி வரான்” என்று ஆமடக்கினார்.


அவசரமாக கண்களைத் துடைத்துக் கொண்டு விபூதியை எடுத்துச் சென்று அவன் நெற்றியில் வைத்தார்.
அன்னையை கூர்ந்து பார்த்தவன் “என்கிட்ட சொல்லாம கோவிலுக்கு போயிட்டீங்கம்மா...எனக்கும் ஞாபகம் இருக்கு பெரியம்மா நினைவு நாள்” என்றான் இறுகிய குரலில்.


அவனை பார்க்காது “நேத்து நைட் நீ லேட்டா தூங்கினதுனால நான் மட்டும் போயிட்டு வந்துட்டேன்” என்று கூறி விட்டு சமயலறைக்கு சென்றார்.


அப்போது ஆர்ப்பாட்டமான உறுமலுடன் வாயிலில் வந்து நின்றது சிங்க முகம் பதித்த ரோல்ஸ் ராய்ஸ் கார்.


நீண்ட நாட்களுக்குப் பின் அந்த காரின் உறுமலைக் கேட்ட உமா சமையலறையை விட்டு வேகமாக வெளியே வந்து வாயிலை பார்த்தாள். பாஸ்கரும் அவசரமாக எழுந்து வந்து உமாவின் அருகில் வந்து நின்றார். ஆதி மட்டும் நிதானமாக வாயிலை நோக்கிச் சென்றான்.


பின் பக்க கதவு திறந்து பட்டுபுடவை பளபளக்க அதிகாரமும், ஆளுமையுடனும் வைரத்தோடும், வைர அட்டிகையுடனும் ஒரு ராணி போல இறங்கினார் பத்மாவதி. இந்த வயதிலும் அவரின் தோரணையைக் கண்டு ரசித்தவன் “பாட்டி!” என்றழைத்து வேக நடையுடன் சென்று அணைத்துக் கொண்டான்.


மறுபக்க கதவை திறந்து கொண்டு இறங்கிய சங்கரமூர்த்தி பேரனைக் கண்டு “பாட்டி மட்டும் தான் கண்ணுக்குத் தெரிவாளாடா?” என்றார் கிண்டலாக.


அவசரமாக அவரருகில் சென்றவன் “முதல்ல பாட்டி அப்புறம் தான் நீங்க” என்று சொல்லி அவரையும் அணைத்துக் கொண்டான்.


இந்த நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த உமாவின் முகத்தில் பீதி. எதற்காக இவர்கள் வந்திருக்கிறார்கள்? பெரிய மகள் இறந்த பிறகு தங்கள் இருப்பிடத்தை விட்டு நகராதவர்கள் இப்போது இங்கு வர காரணம்? என்று மனம் அடுக்கடுக்காக கேள்விகளை அடுக்கியது.


பாஸ்கரும் அதையே தான் சிந்தித்துக் கொண்டிருந்தார். இவர்களின் வருகை நிச்சயம் பல அனர்த்தங்களை கொண்டு வரும் என்பது புரிந்தது.


தங்களைப் பார்த்து ஸ்தம்பித்து நின்ற மகளையும், மருமகனையும் பார்த்து “என்ன உமா எங்களை எதிர்பார்க்கலையா?” என்றார் அதட்டலாக பத்மா.


அவசரமாக சுதாரித்துக் கொண்ட உமா வேகமாக அன்னையின் அருகில் சென்று “என்னம்மா இப்படி கேட்டுடீங்க? எத்தனை வருஷம் ஆச்சு நீங்க இங்க வந்து...ரொம்ப சந்தோஷம்மா...உள்ள வாங்கம்மா, வாங்கப்பா” என்றழைத்தாள்.


பாஸ்கரும் “வாங்க மாமா, வாங்க அத்தை” என்றார்.


தனது கோல்ட் பிரேம் கண்ணாடியை சரி செய்து கொண்டு கணவருடன் உள்ளே நுழைந்தார்.


சோபாவில் சென்றமர்ந்தவர் உமாவிடம் “நீங்கல்லாம் கூப்பிட்டப்ப எனக்கு இங்கே வர மனசில்ல உமா. ஆனா நேத்து ஆதி ஒரு விஷயம் சொன்னான். அதை கேட்ட பிறகு நான் வர வேண்டிய நேரம் வந்துடுச்சுன்னு புரிஞ்சுகிட்டேன்” என்றார் பத்மா.


பாட்டியின் அருகில் அமர்ந்திருந்த ஆதி “நீங்க இங்கே வரணும்னு தான் அந்த விஷயத்தை சொன்னேன் பாட்டி “ என்றான் இறுகிய குரலில்.


உமாவும், பாஸ்கரும் ஒன்றும் புரியாமல் அவரை பார்த்தார்கள்.


“அரண்மனை பொறுப்புகள் யாரோ ஒருத்தி கிட்ட போக போகுதுன்னு ஆதி சொன்னான் மாப்பிள்ளை” என்றார் தயக்கத்துடன் சங்கரமூர்த்தி.


அதைக் கேட்ட உமா “அதுக்கு” என்றாள் சற்றே கடுப்போடு.


அவளை முறைத்த பத்மா “நான் இங்கே வர வேண்டிய நேரம் வந்தாச்சுன்னு புரிஞ்சுது” என்றார் அலட்சியமாக.


அதுவரை பொறுமையை இழுத்துப் பிடித்துக் கொண்டிருந்தவர் “ஏன்மா? உன் பொண்ணுக்கு பண்ண வேண்டிய சடங்குகளை பற்றி நினைக்கல. அவ உயிரோட இருந்தப்ப தான் எதுவும் சரியா நடக்கல. ஆனா, அவ இறந்தபின்னும் அவளுக்கு கிடைக்க வேண்டிய எதுவும் சரியா கிடைக்கலையே. நீங்க அக்காவுக்கு செய்ய வேண்டிய சடங்குகளுக்காக இங்கே வந்திருந்தா சந்தோஷப்பட்டிருப்பேன்” என்றாள் எரிச்சலுடன்.


பேரனை பார்த்து சிரித்த பத்மா “உங்கம்மா இன்னும் மாறவே இல்லடா...என் பொண்ணு வாழ்ந்த வீட்டில் எவளோ ஒருத்தி வந்து ஆதிக்கம் பண்றது எனக்கு பிடிக்கல” என்றார்.


சோபாவிலிருந்து வேகமாக எழுந்து கொண்ட உமா “உங்க பொண்ணே போயாச்சு...உங்களுக்கு அங்கே என்ன உரிமை இருக்கு? பேரனோ, பேத்தியோ இருந்திருந்தா நீங்க கேட்பதில் ஞாயம் இருக்கு” என்றாள் எரிச்சலாக.


அவளது கோபத்தை அலட்சியம் செய்து மாப்பிள்ளையிடம் “என்ன மாப்பிள்ளை உங்க பிசினெஸ் எப்படி போகுது” என்றார்.


அதற்குள் அன்னையிடம் சென்ற ஆதி அவரின் தோள்களைப் பற்றி அணைத்து “அம்மா! டென்ஷன் ஆகாதீங்க. பாட்டி எல்லாவற்றையும் பார்த்துப்பாங்க” என்றான்.


அவனது கைகளைத் தட்டி விட்டு “என்ன பார்த்துப்பாங்க? உரிமை இல்லாத இடத்தில் எதுக்கு நுழையணும்?” என்றார்.


“மா! நீங்க இதெல்லாம் விடுங்க...பாட்டி வந்திருக்காங்க ரொம்ப வருஷங்கள் கழித்து அதை என்ஜாய் பண்ணுங்க” என்று சமாதானப்படுத்தினான்.

அவனை முறைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.


மகளையும், பேரனையும் பார்த்து சிரித்துக் கொண்டே எழுந்தவர் “என்ன சொல்றா என் பொண்ணு? அப்படியே இருக்கா கொஞ்சமும் மாறாமல்” என்றார்.


அவரின் கைகளைப் பற்றிக் கொண்டு “வாங்க பாட்டி உங்க ரூமுக்குப் போகலாம். உங்க கிட்டேயும் தாத்தா கிட்டேயும் நிறைய பேசணும்” என்றான்.


மூவரும் சிரித்துப் பேசிக் கொண்டே அவர்களுக்கான அறைக்குள் சென்றனர்.


அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த பாஸ்கர் பெருமூச்சுடன் மனைவியைக் காண சமயலறைக்குச் சென்றார்.


அவர்களுக்கான உணவைத் தயாரிக்கும் வேலையில் இருந்தாலும் முகம் சோர்ந்திருந்தது.


“உமா!” என்றழைத்தவரை நிமிர்ந்து பார்த்து விட்டு “டிபன் ரெடி பண்ணிட்டு வரேன் போங்க” என்றார் சோர்வான குரலில்.


சற்று நேரம் நின்றவர் “ம்ம்..” என்று கூறிவிட்டு தன்னறைக்குச் சென்றார்.


அறைக்குள் சென்றவர்கள் சங்கரமூர்த்தி குளிக்க சென்றுவிட, பாட்டியும் பேரனும் பேச ஆரம்பித்தனர்.
“இன்னைக்கு பெரியம்மாவோட நினைவுநாள் பாட்டி” என்றான் ஆதி.


தன்னுடைய வலியை குரலில் காண்பிக்காது “மறக்குமா எனக்கு? இளவரசி மாதிரி இருந்தவளை சடலமா பார்த்த நாள் ஆச்சே” என்றார் கண்களை மூடி.


“அரணமனையில் யாருமே பெரியம்மாவோட நினைவுநாளை நினைப்பதில்லை. இருபது வருஷங்கள் அந்த வீட்டில் ராணியா வாழ்ந்த ஒருத்தரின் இறப்பை பற்றி நினைக்கலேன்னா அதுக்கு பின்னாடி ஏதோ ஒன்று இருக்குன்னு தானே அர்த்தம்” என்றான் யோசனையுடன்.


“அதை கண்டுபிடிக்க பல வழிகளில் முயற்சி செய்தேன் ஆதி. அந்த கிழவன் எல்லாத்தையும் மூடி மறைச்சு வச்சிருக்கான். அவன் இறப்பிற்கு முன்னாடி நாம ஆனந்தியின் வாழ்க்கையில் நடந்தவைகளை கண்டு பிடிக்கணும். இத்தனை வருடங்கள் எங்களை அவளோட இழப்பு ரொம்பவே பாதிச்சிடுச்சு. எப்போ அந்த வீட்டிற்கு கிழவனோட ஒருத்தி வந்திருக்கிறாள் என்று சொன்னியோ இனியும் தாமத்திக்க கூடாது என்று தான் வந்துட்டோம்” என்றார்.


“அம்மா கிட்ட இதெல்லாம் பேச வேண்டாம் பாட்டி. அவங்க தாங்க மாட்டாங்க. பெரியம்மா போனதை மறக்கவே ரொம்ப கஷ்டப்பட்டாங்க. இப்போ நாம அவங்க இறப்புக்கு பின்னாடி இருக்கிற காரணங்களைத் தேடப் போகிறோம் என்று தெரிந்தால் பயந்து போயிடுவாங்க” என்றான்.


யோசனையுடன் நெற்றியை நீவியவர் “நானும் அதைத் தான் நினைச்சேன் ஆதி” என்றார்.


அப்போது குளியலறையில் இருந்து வெளியே வந்த சங்கரமூர்த்தி “பேரனும், பாட்டியும் என் பொண்ணுக்கு தெரியாம சதியாலோசனை பண்ணியாச்சா?” என்றார்.


“சதியாலோசனை இல்ல தாத்தா சதியை முறிக்க கூடிய ஆலோசனை” என்றான்.


“என்னவோ பண்ணுங்க...நானும் என் பொண்ணும் மிச்சமிருக்கிற வாழ்க்கையை நிம்மதியா வாழப் பார்க்கிறோம்” என்று கூறி விட்டு உமாவைத் தேடி போனார்.


இருக்கையிலிருந்து எழுந்து கொண்ட பத்மா “குளிச்சிட்டு வரேன்...அந்த கிழவனை பார்த்தாகனும் இன்னைக்கு. அரணமனைக்கு போகலாம்” என்றார்.

“நான் வரணுமா?” என்றான் யோசனையுடன்.

“நீ இப்போ இதில் வராதே. முதலில் நான் நுழைகிறேன்” என்றார்.

“சரி பாட்டி” என்று கூறி விட்டு அறையை விட்டு வெளியேறினான்.

தந்தையும், மகளும் பல வருடக் கதைகளை பேசியதில் உமா சற்று இயல்பிற்கு திரும்பினார். அன்னையும், மகனும் வரவும் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்தினார்கள். மற்றவற்றை மறந்து பேசியதில் மனம் லேசாகிப் போனது. பாஸ்கர் கம்பனிக்கு கிளம்பி செல்ல, ஆதியும் அவரின் பின்னே கிளம்பினான்.


அவர்களை வழியனுப்பி வந்தவள் அன்னை வெளியே கிளம்ப தயாராக இருப்பதைக் கண்டதும் “என்னம்மா எங்கே கிளம்பிட்டீங்க?” என்றாள் ஆச்சர்யமாக.


அவளிடம் தான் செல்லுமிடத்தை சொல்ல வேண்டாம் என்றெண்ணியவர் “கொஞ்சம் வேலைகள் இருக்கு உமா. நம்ம டீ- எஸ்டேட் விஷயமா ஒருத்தர் மீட் பண்ணனும்னு சொல்லி இருக்கார். அதுக்காக தான் போறேன்” என்றார்.


தந்தையை திரும்பி பார்த்தவள் “அப்பா நீங்க அம்மா கூட போகலையா” என்றாள் யோசனையாக.


“நான் போகலம்மா” என்று நிறுத்திக் கொண்டார்.


அதற்கு மேலும் நின்றாள் மகள் தன்னை கேள்விகளால் ஆராய்வாள் என்றுணர்ந்து வேகமாக காரி ஏறி அமர்ந்தார். சிங்கமுகம் கொண்ட கார் பெண் சிங்கமொன்றை சுமந்து கொண்டு அரண்மனை நோக்கி சென்றது.


அரண்மனை வாயில் உறுமலுடன் நின்ற காரைக் கண்டதும் வாயில் காப்போன் அலறி அடித்துக் கொண்டு அவசரமாக எவரிடமும் அனுமதி கேட்காது கதவை திறந்து விட்டான்.


ஆபிசிற்கு கிளம்பிக் கொண்டிருந்த சிதம்பரம் காரின் உறுமல் சத்தத்தைக் கேட்டு யோசனையாக மீனாட்சியைப் பார்த்தார்.


அவரோ “என்னங்க இந்த சத்தம்?” என்று இழுத்தாள்.


வரவேற்ப்பரையில் அமர்ந்திருந்த நளினாவோ நடுக்கத்துடன் ‘இந்த சத்தம் அந்தம்மாவோட கார் சத்தமாச்சே’ என்றெண்ணி அவசரமாக வாயிலுக்கு வந்தார்.


சந்திராவும் தனதறையின் ஜன்னலில் இருந்து அந்தக் காரைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.


அந்நேரம் காரிலிருந்து கீழே இறங்கிய பத்மாவதியின் பார்வை அலட்சியமாக அரண்மனையின் வெளித் தோற்றத்தை ஆராய்ந்து முடிவில் சந்திராவின் அறை ஜன்னலில் வந்து நின்றது.


இருவரின் பார்வைகளும் ஒரு நிமிடம் உரசிச் சென்றது. இருவரின் பார்வையிலும் ஒருவரை ஒருவர் ஆராயும் தன்மை இருந்தது. நேருக்கு நேர் உரசிக் கொண்ட இருவரின் விழிகளும் அடுத்தவரை எடை போட்டது. சந்திராவின் முகம் மிகவும் பரிச்சயமான முகமாகத் தோன்றியது பத்மாவதிக்கு.


எனதுயிராக மாறியவன்

அவனுயிரை தந்து விட்டு

இணையாக வாழ்ந்தவளின் பின்னே

சென்ற மாயம் ஏனோ?