சப்தஸ்வரங்கள் - கதை திரி

#21
சப்தஸ்வரங்கள்

அத்தியாயம் - 1 7


கதவை திறந்த தமிழ்மணி அந்த நேரத்தில் ஸ்வராக்கை அங்கே எதிர்ப் பார்க்கவில்லை தயக்கத்துடன் வாசலிலேயே நின்னு

சேர் நீங்க இங்கே என்று துவங்கினால்

அவனை உள்ளே வர சொல்லு தமிழ் என்று மரகதம்மா உள்ளேயிருந்து குரல் கொடுத்தார்

ஆறு மணிக்கு பிறகு ஒரு பிற நபரை வீட்டுக்குள் மரகதம்மா அழைப்பது ஆச்சரியமென்றால் அந்த நபரை ரொம்ப தெரிந்தவர் போல ஒருமையில் அழைப்பது அதிர்ச்சியாக இருந்தது.

ஒருபுறம் மகள் வேறு சீக்கிரமாக வீட்டுக்கு வந்து சுவாமியறையில் அமர்ந்திருக்கிறாள் என்ன ஏது என்று கேட்கவே பயமாக இருக்கிறது 10 வருடங்களுக்கு முன் இதே போல தான் பள்ளியிலிருந்து சீக்கிரமாக வீட்டுக்கு வந்தாள் அன்று நடந்தவைகளை இன்று நினைத்து பார்க்கக் கூட முடியவில்லை இன்று ஆபிசிலும் யாரையாவது அடித்திருப்பாளோ அதை பற்றி கூற தான் இந்த தம்பி வந்திருப்பாரோ மனம் நிலை கொள்ளாமல் தவிக்க நின்றிருந்தவரை மரகதம்மா அழைத்தார்

இவங்களுக்கு டீ போடும்மா அப்படியே சப்தவியையும் வர சொல்லு

தலையை ஆட்டி விட்டு தமிழ்மணி உள்ளே நகர அவரை பின் தொடர்ந்த பார்வையை திருப்பி பாட்டியை பார்த்த ஸ்வராக் அவரும் தன்னையே பார்த்து கொண்டிருப்பதை கண்டு

நீங்க ஏதோ உண்மைகள் சொல்லுறேனு போன்ல சொன்னீங்க

நேரடியா விஷயத்துக்கு வந்துட்டியே

எனக்கு எதையும் நேர்பட பேசி தான் பழக்கம்

பரவால்ல நல்ல பழக்கம் தான் ஆனால் இதுனால நிறைய சங்கடங்களுக்கு முகம் கொடுக்கனும்

நானும் நிறைய சங்கடங்களை பார்த்து தான் இருக்கேன்

நினைச்சேன் சரி சொல்லு உன் அப்பா அம்மா எப்படி இருக்காங்க

அவங்க இறந்துட்டாங்க பாட்டி

என்னது எப்படி என்ன நடந்துச்சு இவ்வளவு நேரம் இருந்த இயல்பு போய் சட்டென உடைந்து பாட்டி தடுமாற ஸ்வராக்கும் ப்ரதிக்கும் அவரை ஆறுதல் படுத்தினர்.

பாட்டி ப்ளீஸ் அழாதீங்க உங்களுக்கு எதும் வந்துரப்போகுது

எனக்கு என்னப்பா வரப் போகுது என் உறவுகள் எல்லாம் என் கண்முன்னாடி போறதை நானும் பார்த்துட்டு கல்லாட்டம் இன்னும் வாழ்ந்துட்டு தானே இருக்கேன் ஆனால் காதம்பரிக்கு என்ன பிராப்ளம் அவளுக்கு சின்ன வயசுல எந்த சுகக்கேடும் வந்தது இல்லையே

ஸ்வராக்குடைய அம்மா பெயர் உங்களுக்கு எப்படி தெரியும் பாட்டி

அது வந்து நான் இல்லை காதம்பரி என் பொண்ணு தான்

என்னது உங்க பொண்ணா

ஸ்வராக்கின் தலையில் மின்னாமல் முழங்காமல் இடி இறங்கியது போலிருந்தது அவன் பரிதாபமாக பாட்டியைப் பார்க்க அந்த பார்வையின் பொருளை உணர்ந்த ப்ரதிக் சட்டென்றூ

ஓஓஓஓ அவங்க சப்தவியுடைய பெரியம்மாவா என வினவ

அவனின் கேள்வி புரியாமல் திருதிருவென்று முழித்தப் பாட்டி பின் பொருளுணர்நது கனிவாக

இல்லைப்பா அட நான் ஒழுங்கா முதல்ல இருந்து சொல்லாம மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுறேன் இருங்க ஆரம்பத்துல இருந்து சொன்னா தான் எல்லா உண்மையும் புரியும்

சொல்லுங்க பாட்டி

என் சொந்த நாடு இலங்கை இல்லை இந்தியாவில திருநெல்வேலிக்கு பக்கத்துல இருக்க ஒரு சின்ன கிராமம் அம்மா அப்பா நான். ஒரு குட்டி விவசாய குடும்பம் சாதாரணமான வாழ்க்கை இப்படி இயல்பா வாழ வேண்டிய காலத்தில எங்க வாழ்க்கைக்கு வந்த புது உறவு தான் என் தங்கை ராகமாலிகை 7 வருசத்துக்கு அப்புறம் எனக்கு எங்க அம்மா அப்பா தந்த உடன்பிறப்பு அவள் வந்து இரண்டு வருசத்துல எங்க அம்மா என் தங்கையை என் கிட்ட ஒப்படைச்சுட்டு போய் சேர்ந்துட்டாங்க மறுகல்யாணம்னு வந்து நின்ன எங்க அப்பா கிட்டயும் உறவுக்காரங்க கிட்டயும் சண்டை போட்டு என் தங்கச்சிய நானே பார்த்துக்கிட்டேன் படிச்சிக்கிட்டே தஙகச்சிய பார்க்க முடியாதுனு 10 ஆவதோட படிப்பை விட்டுட்டேன் இரண்டு வயசுல அவள் பொறுப்பை ஏத்துக்கிட்டேன் 14 வருசம் அவள் மட்டும தான் என் உலகமா இருந்தாள் அவள் கேட்குறது ஏன் நினைக்கிறது கூட உடனே கிடைக்கனும்னு போராடி உழைச்சு வளர்த்தேன் ஆனால் அவளுக்கு நான் கொடுத்த சுதந்திரமே அவளுக்கு எமனாகிருச்சு ஒரு நாள் சினிமா பார்த்துட்டு வாரேன்னு போனவள் திரும்பி வரவே இல்லை தனியாளா டவுன் முழுக்க தேடுனேன் ஊரே என்னை ஏளனமா பார்த்துச்சு முச்சந்தில வச்சு எங்கப்பா என்னை போட்டு பயங்கரமா அடிச்சாரு
" அதுக்கு தாண்டி அப்பவே சொன்னேன் ஒரு சித்தி இருந்திருந்தா அந்த ஓடுகாலி இப்படி ஓடிருப்பாளா என்னமோ அம்மா மாதிரி வளர்ப்பேன்னு சொன்னியே நீ வளர்த்த லட்சண பார்த்தியா டவுன்ல அடகு கடை வச்சிருந்த சேட்டுக் கூட உன் தங்கச்சி ரயில்ல போனாளாம் ஊர்க்கார பயலுவ நாக்கு மேல பல்லை போட்டு இஸ்டத்துக்கு பேசுரானுவ எல்லாம் எழவும் உன்னால தாண்டி போ அவளை மாதிரியே நீயும் தொலைஞ்சு போ!!! அம்மா மாதிரி பார்த்துப்பாளாம் அக்கா என்னைக்கும் அம்மா ஆக முடியாதுடி அறிவு கெட்டவளே!!"

எங்கப்பா என்னை அடிச்சதை விட அவர் சொன்னது தான் அதிகமா வலிச்சது அன்னையோட ஊரை விட்டு நானும் கிளம்பிட்டேன் காதுல இருந்த இரண்டு தோட்டை வித்து டவுன்ல ஒருஒரு நர்சிங் கோர்ஸ்ல சேர்ந்து படிச்சேன் இரண்டு வருசம் கழிச்சு எங்கப்பா சாவுக்கு தான் ஊருக்குப் போனேன் பொணமா படுத்திருந்த எங்கப்பாவை பார்த்த அதிர்ச்சியை விட எங்க வேலியை பிடிச்சிக்கிட்டு ஒத்த கையில பிள்ளையை வச்சிக்கிட்டு எலும்பும் தோலுமா நின்ன ராகாவை பார்த்து தான் எனக்கு மூச்சு நின்னு போச்சு அவளை நல்லா நாலு வார்த்தை கேட்க நான் போகும் போதே சடார்னு ஏன் கால்ல விழுந்தவ கதறி அழ ஆரம்பிச்சிட்டாள் அவள் கண்ணுக்கு நான் ஒரு தாயா தெரியாம இருக்கலாம் என் கண்ணுக்கு அவள் ஒரு குழந்தை தான் அவள் அழுகை தாங்காம அவளை நான் ஆறுதல் படுத்த முயன்றப்போ அவளை தொட வேணான்னு தடுத்தவள் அடுத்து சொன்ன விஷயங்கள் அவள் வாழ்க்கையில விதி எவ்வளவு கொடூரமா விளையாடிருக்குனு எனக்கு காட்டிச்சு.
16 வயசுல பார்க்குறது எல்லாத்துலயும் நல்லது மட்டும் தான் தெரியும் அதுல இருக்க கெட்டதோ அல்லது அதுனால ஏற்படக் கூடிய மோசமான பின்விளைவையோ கண்கள் பார்க்காது பார்த்தாலும் கருத்துல படாது. அதனுடைய விளைவு மோசமா நம்மல தாக்குன பின்னாடி உட்காரந்து அப்பவே யோசிச்சிருக்கலாம்னு நினைப்போம்
ராகாவும் அப்படி தான் அழகா எம்.ஜி.ஆர் மாதிரி சிவப்பா இருக்கான்னு வயசு வித்தியாசத்தை கூட பெருசா மதிக்காம அந்த சேட் சர்மாவை காதலிச்சிருக்காள் அவரும் தனக்கு ஏற்கனவே திருமணமானதை மறைச்சி இவளை கல்யாணம் பண்ணி இரண்டு வருசம் குடும்பம் நடத்திருக்காரு கையில ஒரு குழந்தையோட இலவசமா உயிர்க்கொல்லி நோயையும் பரிசாக் கொடுத்துட்டு அவர் கைவிட்டுட்டாரு ராகாவும் கடந்த மூனு மாசமா அவரை தேடி அலைஞ்சுட்டு தான் நோய் முத்தின நிலையில சொந்த ஊருக்கு திரும்பி வந்திருக்காள்.

மூச்சிரைக்க என் கையை பிடிச்சிக்கிட்டு நடந்ததை எல்லாம் சொன்னவள் வயித்தவலியில துடிக்க ஆரம்பிச்சிட்டா தூக்கிக் கிட்டு ஆஸ்பத்திரிக்கு ஓடுற வழியில கடைசியாக என்னை கூப்பிட்டாள்

" இவ்வளவு பெரிய துரோகத்தை உனக்கு செஞ்ச என்னையே மன்னிச்ச நீ என் குழந்தையை கைவிடமாட்டனு நான் நம்புறேன் எனக்கு நீ செய்ய கூடிய மிகப் பெரிய உதவி இன்னொன்னும் இருக்கு காதம்பரியை என்னை வளர்த்தது போல சுதந்திரமா வளர்க்காத கண்டிப்புடன் வளர்த்து ஆளாக்கு அவளுக்கு நீ மட்டும் தான் இருக்க என் கதையை அவள் கிட்ட சொல்லாத ஊர் முன்னாடி இழிவு பட்ட நான் என் குழந்தை முன்னாடியும் இழிவு பட விரும்பல அடுத்த ஜென்மத்துல நான் உனக்கு தாயா பிறக்கனும் நீ எனக்கு செஞ்சதுக்கு மேல உனக்கு செய்யனும் அக்கா!!! "
கண்கள் செருக அவள் சொன்ன கடைசி அக்காவோட அவள் உயிர்பறவை பிரிஞ்சது.
 
#22
சப்தஸ்வரங்கள்

அத்தியாயம் - 1 8

பாட்டி!!!..

ப்ரதிக்கின் அழைப்பில் கண்களை திறந்த மரகதம்மா

என்னால இப்ப வரைக்கும் அவளுடைய மரணத்தை ஜீரணிக்க முடியலப்பா அவளுக்கு என்ன சாக வேண்டிய வயசா?? அப்பாவுக்கும் அவளுக்கும் ஒன்னா இறுதி காரியங்கள் நடந்துச்சு எல்லாம் முடிஞ்சதும் யார் கிட்டயும் சொல்லிக்காம காதம்பரியோட இராமேஸ்வரம் போய்ட்டேன் அங்க இருந்த அகதிகள் முகாம்ல தான் எனக்கு பயிற்சி கால வேலை கிடைச்சது இருபது வருசம் அங்கேயே தான் உன் அம்மாவுடைய வளர்ப்பு,படிப்பு எல்லாம் நான் அவளுடைய பெரியம்மானு அவளுக்கு தெரியும் அவளுடைய அம்மா ராகமாலிகையும் அப்பா ஸ்வராக் சர்மாவும் ஒரு விபத்துல தவறிட்டாங்கனு சொல்லியிருந்தேன் காதம்பரிக்கு அவள் அம்மாவை விட அப்பாவை தான் ரொம்ப பிடிச்சிருந்தது நல்லா சிகப்பா அழகாயிருந்த சர்மா தான் அவளுக்கு ஹீரோ ராகாவுடைய உடைமைகள்ல இருந்த அவங்க திருமண படத்தை நான் பெருசாக்கி மாலை போட்டு இருந்தேன் ராகா சொன்ன மாதிரி காதம்பரியை நான் கண்டிப்பா தான் வளர்த்தேன் அந்த கண்டிப்புக்கு என் தங்கையின் வேண்டுகோள் ஒரு காரணம்னா காதம்பரியோட பிடிவாதமும் இன்னோர் காரணம் ஆமா காதம்பரிக்கு நினைச்சவுடனே காரியம் ஆகனும் இல்லைன்னா தற்கொலை பண்ணிக்குவேன் வீட்டை விட்டு ஓடிருவேன் இப்படி கூட மிரட்டுவாள் நான் தயவு தாட்சண்யம் காட்டாம மறுத்துட்டா

என் அம்மா என் கூட இருந்தா இப்படி செய்வாங்களானு ஒரே அழுகை அழுவாள் அப்புறம் இரண்டு நாளைக்கு நான் அநாதை அநாதைனு கத்துவாள்

இப்படியே 20 வருசம் அவள் கூட போராட்டமான வாழ்க்கை

என் வாழ்க்கை எங்கேயோ தொடங்கி எங்கேயோ ஓடுற நதி மாதிரி ஓடிட்டு இருந்துச்சு எனக்கு இருந்த ஒரே ஆறுதல் என் தொழில் தான்
என் தொழிலை நான் ரொம்ப நேசிச்சேன் அங்க எனக்கு பழக்கமானவங்க தான் தமிழ்மணியும் தயாபரனும் என்னோட வாலன்டியர் ஸ்டாப்ஸ்

"அப்போ சப்தவியோட அம்மா ஸ்வராக்குடைய.....!!!" தயங்கி தயங்கி ப்ரதிக் ஒரு புரியாத புதிரை விடுவிக்கும் பாணியில் கேட்க

"அத்தை!!..."
மரகதம்மா பதிலை ஸ்வராக்கை பார்த்தபடி கூற அவன் முகத்தில் பளிச்சென ஒரு புன்னகை தோன்றியது.

இது நான் எதிர்ப்பார்த்தது தான்
ஸ்வராக் பாட்டியிடம் கூற

ப்ரதிக் எப்படிடா என்று வினவினான்.

எங்க அப்பாவும் அத்தையும் இரட்டையர்கள் அவங்க இரண்டு பேருடைய இடது கண் விழி வெண்படலத்திலையும் ஒரே மாதிரி மச்சம் இருக்கு அப்பா என் கிட்ட சொல்லிருக்காரு. நான் ஓட்டல்ல அவங்களை பார்த்தப்பவே அதை நோட் பண்ணேன் அதே மாதிரி அத்தையும் என் கண்களை தான் அதிகமா பார்த்தாங்க ஏன்னா என் கண்ணுலயும் அந்த மச்சம் இருக்கு பாட்டி

அப்படியா உங்க அப்பாவுடைய ஜீன்னால உன் கண்ணுலயும் மசவந்துருக்கும்பாட்டி

அது மட்டும் காரணம் இல்லை பாட்டி நானும் இரட்டை தான் நானும் என் தங்கை சேஷாவும் இரட்டையர்கள் அவள் கண்ணுலயும் அந்த மச்சம் இருக்கு அதே மாதிரி அத்தைக்கு இருக்காப் போல அவளுக்கு வலது கையில ஆறு விரல் இருக்கு

நிஜமாவா??? இப்ப சேஷா எங்கப்பா ???

சேஷாவும் இப்ப உயிரோட இல்லை பாட்டி நீங்க சொன்ன மாதிரி அம்மா ரொம்ப பிடிவாதம் தான் அவங்க பிடிவாதம் எங்க குடும்பத்தையே அழிச்சிருச்சி பாட்டி

"என்னப்பா நடந்தது???"

இந்த தடவை கேள்வி பின்னாடி இருந்து வர மூன்று பேரும் பின்னால் திரும்பி பார்த்தனர் சுவருடன் சாய்ந்து கண்ணீர் மல்க நின்ற தமிழ்மணியை பார்த்து திகைத்த ஸ்வராக் எழுந்து சென்று அவர் கைகளை பிடித்து கொண்டான்

"தயா இப்ப உயிரோட இல்லையா ஸ்வராக் அவனை நான் சாகுற வரைக்கும் பார்க்க கூடாதுனு நினைச்சிருந்தேன் என் நினைப்பே அவனை கொன்னுருச்சு போல எங்க இரண்டு பேர்ல யாரு மூத்தவங்கனு எப்பயும் சண்டை பிடிப்போம் நிஜமா அவன் தான் பெரியவன் ஆனால் குழந்தை மாதிரி நடந்துப்பான் நான் தான் பெரியவ மாதிரி திட்டிட்டே இருப்பேன். பொறுப்பில்லாதவன்!!!...." பேச்சினூடே கண்ணீர் பெருக மருமகனின் கரங்களை பிடித்தவர்

" அவனை என் பொறுப்புல விட்டுட்டு எங்கம்மா போய் சேர்ந்துட்டாங்க பொறுப்பில்லாத குடிகார அப்பா தன்னுடைய தேவைகளுக்கு கூட உழைக்காம குடிச்சிட்டு அங்க அங்க விழுந்து கிடப்பாரு அவரை தேடி பிடிச்சிட்டு வர்றதே பல வருசம் எங்க வேலையா இருக்கும் ஒரு நாள் குடி போதையில பணத்துக்காக என்னை ஒருத்தன் கிட்ட.... அவனை அடிச்சிப் போட்டுட்டு தப்பி வந்துட்டேன் என்னை எங்கனு கேட்ட தயாவை தூண்ல கட்டி வைச்சிருந்தாங்க அவனையும் காப்பாத்தி இராமேஸ்வரத்துக்கு ரயிலேறிட்டேன் அப்புறம் அவனுக்கு நானும் எனக்கு அவனும் மட்டும் தான் உறவு

அங்க தான் மரகதம்மாவை பார்த்து அவங்க அரவணைப்பு கிடைச்சது.
 
#23
சப்தஸ்வரங்கள்

அத்தியாயம் - 1 9

தமிழ்மணியை அழைத்து வந்து சோபாவில் அமர வைத்த ஸ்வராக் ப்ரதிக்கின் அருகில் அமர்ந்தவாறு

"அப்பாவுடைய கடைசி காலங்கள் முழுக்க அவர் உங்களை பத்தி மட்டும் தான் பேசுனாரு நிறைய நிறைய உங்களுடைய பால்ய கால, இளமை கால நிகழ்வுகள் அதை பத்தி பேசும் போது அவர் முகத்தில ஒரு ஒளி தோன்றும் அவர் என் கூட கடைசி வரைக்கும் இருப்பாருனு நினைச்சேன் ஆனால் அணைய போற விளக்கு பிரகாசமாய் எரியுற மாதிரி தான் அந்த கடைசி நாட்கள் இருந்துருக்கு அவர் போனதுக்கு அப்புறம் அம்மா மேல சேஷா மேல எனக்கு எந்த அளவுக்கு கோபம் இருந்துச்சோ அதே அளவு உங்க மேலயும் கோபம் வந்துச்சு நீங்க இரண்டு பேரும் ஒன்னா தானே இருந்தீங்க எப்படி பிரிஞ்சீங்க அன்னைக்கு பார்ம் ஹவுஸ்ல என்ன நடந்துச்சு நீங்க ஏன் அப்பாவையும் அம்மாவையும் பார்க்க போகல பாட்டி மாதிரி நீங்களும் அவங்க கல்யாணத்தை ஏத்துக்கலையா???"

"இல்லை ஸ்வராக் நான் போனேன் ஸ்வராக் அந்த பார்ம்ஹவுஸ் தான் என் வாழ்க்கையையே தலைகீழா மாத்திப் போட்டுருச்சு "

"அன்னைக்கு அப்படி என்ன நடந்துச்சு அத்தை!!!"

"ஸ்வராக் இதை பத்தி நாம அப்புறம் பேசலாம்ப்பா" என மரகதம்மா இடைமறிக்க

"இல்லை பாட்டி எல்லா பிரச்சினைகளூக்கு ஒரு சொல்யூசன் கண்டிப்பா இருக்கு நம்ம வாழ்க்கையில நடந்த பிரச்சினைகளை தீர்க்குறதுக்காக தான் கேட்குறேன்" ஸ்வராக் தன்மையாக விளக்கி விட்டு

"அத்தை மீனம்பாக்கத்துக்கு ஏன் நீங்க போகல அப்பா கடைசி வரைக்கும் உங்க வரவை எதிர்பார்த்துட்டு இருந்தாராம் அப்புறம் அம்மா தான் சொன்ன டைம்க்கு நீங்க வரலன்னதும் வலு கட்டாயமாக அப்பாவை ஊட்டிக்கு கூட்டிட்டு போனாங்களாம்."

"இல்லையேப்பா நான் போனேன் நீ சொல்லுற இடம் பிழையானது ஸ்வராக் பார்ம்ஹவுஸ் இருந்தது நீலாங்கரையில"

"இல்லை அத்தை அப்பா எப்பயும் சொல்லுற இடம் தான் மீனம்பாக்கம் ஏர்போர்ட் கிட்ட இருக்க பார்ம்ஹவுஸ் நான் சென்னையில படிக்கிறப்போ அந்த இடத்தை தேடி போய் பார்த்தேன்"

ஸ்வராக் நம்ம வாழ்க்கையில நடந்த நல்லதை மறந்தாலும் தீமையை அவ்வளவு சுலபமா மனம் மறக்காது அந்த ரணம் வலிக்கும் போதெல்லாம் அது சம்பந்தமான எல்லாத்தையும் நினைவுபபடுத்தும் அப்படி இந்த 23 வருசமா அந்த இடம் என் மனசோட பதிஞ்சுப் போயிருக்கு அந்த இடம் நீலாங்கரை தான்
மடை திறந்த வெள்ளம் போல கண்ணீர் பெருக சோர்ந்த குரலில் கூறி வந்தவர் இறுதியாக உறுதியான குரலில் முடித்தார்

ஏற்கனவே பல பிரச்சினைகள் இதில் இந்த இடப்பிரச்சினை வேறு சதி செய்கிறது அம்மாவும் அப்பாவும் மாலையும் கழுத்துமாக வந்து நின்ற போது பாட்டி எதுவும் பேசாமல் சென்று விட்டாராம் அப்பா குறிப்பிட்ட இடத்துக்கு வர சொல்லி ஒரு துண்டு காகிதத்தை வாசலில் வைத்தாராம் அதை பாட்டி பார்த்தாரா அத்தையிடம் கொடுத்தாரா என கேட்க வேண்டும் என சிந்தித்து கொண்டே மரகதம்மாவை பார்க்க அவர் உள் அறை பக்கமாய் பார்த்துக் கொண்டிருந்தார்

அவரை உற்று நோக்கினால் யாரோடோ சைகை சம்பாஷனையில் ஈடுபடுவது போல தோன்றியது விருட்டென எழுந்து உள் அறைக்குள் நுழைந்தவன் அங்கே நின்றிருந்த சப்தவியை கையை பிடித்து பலவந்தமாக வெளியே இழுத்து வந்தான்

ஏய்ய் விடு விடு கையை விடுடா அம்மா கையை விட சொல்லுங்க என்று அலற இழுத்து வந்தவன்

ஸ்வராக் என்னடா பண்ற விடுடா அவளை என்ற வெங்கட்டின் குரலில் அதிர்ச்சியாக வாசல் பக்கம் பார்த்தான்

வெங்கட் என்று அவன் உதடுகள் உச்சரித்த அதே நேரம்

டேய்ய் வெங்கி சிங்கி நீ எப்படா வந்த?? என்று ஓடிச் சென்று நண்பனை ஆரத் தழுவிய ப்ரதிக் நாங்க ஒன்னை பயங்கரமா மிஸ் பண்ணோம்டா என்று கவலையாக கூற

எதுக்கு சப்தவியை இவன் மல்லுக்கட்டுறதை பார்க்கவா என்னடா நடக்குது இங்க ஆன்ட்டி அவன் உங்க மகள் கையை பிடிச்சு இழுக்குறான் பார்த்துட்டு இருக்கீங்க நாலு அறை விட வேணாம்

ஏய் ஸ்டுப்பிட் சும்மா நிறுத்துடா அவள் என் அத்தை பொண்ணு நான் அவள் கையை பிடிச்சு இழுத்தா உனக்கு என்னடா

என்னாது அத்தை பொண்ணா!! வெங்கட் அதிர

அவன் கரங்களை பிடித்து இழுத்து வந்து அருகில் அமர வைத்த ப்ரதிக்
டேய் ஏற்கனவே ஆள் ஆளுக்கு பிளாஸ்பேக் சொல்லுறாங்க நீ வேற என்னடா நடக்குது இங்கனு கேட்டு இன்னோரு பிளாஸ்பேக் போயிராதடா இது குறுநாவல் ப்ளீஸ்டா என்று கெஞ்சிட

சரிடா நான் ஒன்னும் கேட்கலை என்று வெங்கட் அமைதியாக

ஸ்வராக் கையை விடு என்று சப்தவி அவன் காதுக்குள் கத்த காதலியின் உதடுகள் முதன்முதலில் தன் பெயரை உச்சரிப்பதை ரசித்த ஸ்வராக் முகம் சிவந்து போனான்

அவன் சிவந்த முகத்தை கண்டு பரவசப்பட்ட இதயத்தை தட்டி அடக்கிய சப்தவி பலவந்தமாக கையை பிரித்து கொண்டு தாயிடம் ஓடி

அம்மா இவனை ஏன் வீட்டுக்குள்ள விட்டீங்க வெளிய போக சொல்லுங்க என்று கோபதாண்டவமாட

அவ்வளவு நேரம் இருந்த இதம் கலைந்து கோபம் தாண்டவமாட
எதுக்கு எதுக்கு நான் வெளிய போகனும் அத்தை பாட்டிக்கும் சப்தவிக்கும் அன்னைக்கு நடந்ததை பத்தி ஏதோ தெரிஞ்சிருக்கு சொல்லசொல்லுங்க ஏய் அன்னைக்கு பார்ம்ஹவுஸ்ல என்ன நடந்துச்சு பாட்டி நீங்களாவது சொல்லுங்க அப்பா உங்க வீட்டு வாசல்ல வெச்சிட்டு போன துண்டு காகிதத்தை அத்தை கிட்ட நீங்க கொடுத்தீங்களா

வாசல்ல இருந்த துண்டு காகிதமா இல்லையே என் கூட வேலை பார்த்த பொண்ணுக் கிட்ட காதம்பரி கொடுத்த அட்ரஸ்க்கு தான் நான் போனேன் அம்மா ஸ்வராக் என்ன சொல்லுறான் தயா உங்க கிட்ட எதும் அட்ரஸ் கொடுத்தானா??

அது அது வந்து .... மரகதம்மா தலை குனிந்தவாறு தயங்க

பாட்டி பதில் சொல்லுங்க என்று ஸ்வராக் கத்தினான்

ஸ்வராக் போதும் நிறுத்து என் பாட்டியை நீ எதுக்கு கேள்வி கேட்குற ரொம்ப ஓவரா போயிட்டிருக்க என்று சப்தவி இடைபுகுந்து கோபப்பட

ஏன் ஏன் இவங்க உன் பாட்டின்றதால காப்பாத்துறியா அவங்க எனக்கும் பாட்டி தான் என் அப்பா மேல எந்த தப்பும் கிடையாது நீங்க எல்லோரும் தான் எஏதோ பிழை செஞ்சிருக்கிங்க

ஸ்டாப் இட் பிழை செஞ்சது நாங்க இல்லை உன் அம்மா தான் அவங்க வாழ்க்கையை சொர்க்கத்துல ஆரம்பிக்க என் அம்மாவை நரகத்துல தள்ளிட்டாங்க பாட்டி போதும் பாட்டி இவன் மனசு வருத்தப்பட கூடாதுனு நாம அமைதியா இருந்தா இவன் நம்மையே குற்றவாளி ஆக்குறான் இவன் காது குளிர இவங்க அம்மா செஞ்ச பாவத்தை பத்தி சொல்லுங்க

அவ்வளவு நேரம் சப்தவி கோபப்பட்டதை அதிர்ச்சி விலகாமல் பார்த்தவன் மெதுவாக மரகதத்தின் காலடியில் மண்டியிட்டான்

அவன் தலையை கனிவாக வருடிய பாட்டி
ஸ்வராக் திடுதிப்புனு கல்யாண கோலத்தில உன் அப்பாவும் அம்மாவும் வந்து நின்னப்போ நான் மனசார ரொம்ப உடைஞ்சுப் போயட்டேன் அவங்க பேசுனதையோ உங்க அப்பா வாசல்ல வைச்சிட்டு போன பேப்பரையோ நான் பார்க்கவே இல்லை உங்க அம்மா போகும் போது ராகாவுடைய திருமண படத்தை அதாவது உன் தாத்தா பாட்டியோட திருமண படத்தையும் எடுத்துட்டு போயிருந்தாள் அந்த நிமிசம் எனக்கு யாருமே இல்லைன்ற அந்த வெறுமை என்ன ரொம்ப பலவீனப்படுத்திட்டு கண்மூடி தூண்ல சாஞ்ச நான் மறுபடியும் கண் திறந்தது ஆஸ்பத்திரியில தான் மூனு நாளா சுய நினைவு இல்லாம இருந்ததா சொன்னாங்க நான் வீட்டுக்கு திரும்பும் போது தான் தயா காதம்பரி கல்யாணத்தன்னைக்கு அவங்களை தேடி போன தமிழ் இன்னும் வீடு திரும்பலனு அக்கம் பக்கத்துல சொன்னாங்க நான் என் வீட்டுக்கு வந்தப்போ தான் அந்த பேப்பரை பார்த்தேன் அதுல இருந்த அட்ரஸ்ல போய்த் தேடுனோம் அங்க தமிழ் வந்த அடையாளமே இல்லை போலிஸ் கம்ப்ளைண்ட் கொடுக்கலான்னு போறப்போ தான் தமிழ் கூட வேலை பார்த்த சந்தனமேரி காதம்பரி அட்ரஸ் கொடுத்ததையும் அதுல நீலாங்கரைனு வாசிச்சதா ஞாபகம்னு சொன்னா அதுக்கு அப்புறம் நீலாங்கரை முழுக்க தேடினோம்

அங்க ஒரு பார்ம் ஹவுஸ்ல தமிழ் இருந்த கோலம்... என்று முகம் பொத்தி விம்மியவர்

அப்புறம் ஆறு மாசம் தமிழ் ஒரு ஹிஸ்டீரியா பேசண்ட் மாதிரி நடந்துப்பா ரொம்ப நாள் கழிச்சு தான் அவள் வயித்தில ஒரு குழந்தை இருக்கதையே நாங்க கண்டு பிடிச்சோம் தன்னோட நிலைமைக்கு தன் சகோதரன் தான் காரணம்னு அவள் நினைச்சிக்கிட்டா ஏற்கனவே குடிகார அப்பனால அவளுக்கு ஏற்பட்ட தொல்லைகள், தயா அவளை விட்டுட்டு போனது சில மிருகங்கள் அவள் கிட்ட தப்பா நடந்தது எல்லாம் அவளை ஆண்களை வெறுக்க வச்சது. குழந்தை பிறந்தப்ப தான் அவள் கொஞ்சம் கொஞ்சமா குணமானாள் நானும் கடைசி வரைக்கும் அந்த அட்ரஸ் மாறுன விஷயத்தையும் இதெல்லாம் காதம்பரி தயாவையும் தமிழையும் பிரிக்க பண்ண சதின்னும் சொல்லவே இல்லை. இதுல காதம்பரி என் பொண்ணுன்னு நான் அவளை காப்பாத்த நினைக்கல மறுபடியும் தமிழுக்கு எந்த மன பாதிப்பும் வந்துரக் கூடாதுனு நினைச்சேன்ப்பா.... தமிழ் என்னை மன்னிச்சிரும்மா காதம்பரி நினைச்ச மாதிரி உண்மைய சொல்லாம கடைசி வரைக்கும் மனசளவுல கூட உங்களை பிரிய வெச்சிட்டேன்" ஒரு குழந்தை போல அழுத வரை ஓடி வந்து கட்டிக் கொண்ட தமிழும் சப்தவியும் அவரை ஆசுவாசப்படுத்திட சப்தவி

இப்ப உனக்கு திருப்தியா வெளிய போ ஆண்கள் எல்லாரும் சுயநலவாதிகளா இருப்பாங்கனு நினைச்சிட்டு இருந்தைன் அம்மம்மா உங்க அப்பா பத்தி சொன்னாங்க நீயும் அவர் மாதிரி இருப்பனு நம்புனேன் இல்லைனு காட்டிட்ட இல்லை சந்தோசம் ரொம்ப ரொம்ப சந்தோசம் கிளம்பு போய் அந்த வின்னியவே கட்டிட்டு அழு உனக்கு எல்லாம் அவள் தான் சரி!!! " என்று பயங்கரமாக கத்திட நண்பர்கள் ஸ்வராக்கை இழுத்து கொண்டு வெளியேறினர்.
 
#24
சப்தஸ்வரங்கள்

அத்தியாயம் - 2 0

இலங்கை சர்வதேச ஏர்போர்ட் அவனது விமானத்திற்காக காத்திருப்போர் இருக்கையில் அமர்ந்திருந்த ஸ்வராக் பக்கத்து இருக்கையில் அமர வந்த குடும்பத்துக்காக இடம் விட்டு தனது லக்கேஜ்களை இருக்கையிலிருந்து கீழே இறக்கி விட்டு நிமிர அங்கு நின்ற ஐவரையும் கண்டு திகைத்தான்.

சப்தவி!!!.. வேகமாக இருக்கையை விட்டு எழுந்தவன் அங்கு நின்ற வாணி,பல்லவி,ப்ரதிக்,வெங்கியை பார்த்து இங்கே என்னடா பண்றீங்க எல்லாரும் என வினவினான்

அதை நாங்க கேட்கனும் என்றவாறு அருகில் அமர்ந்த சப்தவி

சேர் எங்க பயணம்?? என்று மிடுக்காக வினவினாள்

அது... என்று ஸ்வராக் திணற

என்ன முழிக்கிற யார் கிட்டயும் சொல்லாம எங்க கிளம்பிட்ட என்னமோ நான் விரட்டி தான் நீ ஊரை விட்டு ஓடுற மாதிரி ஆள் மாத்தி ஆள் என்னை போட்டு காய்ச்சி எடுக்குறாங்க ஒழுங்காப் போறது தான் போற நான் ஊரை விட்டு ஓடுறது என் சொந்த விருப்பத்தின் பேர்ல தான் யாரும் கட்டாயப்படுத்தி இல்லைனு லெட்டர் எழுதி வெச்சிட்டு போக வேண்டியது தானே!!!...."

ஏய் என்னடி கொழுப்பா யாருடி ஊரை விட்டு ஓடுறது

நீ தான்....

நான் எங்கேயும் போகலையே...

அப்ப ஏன் ஏர்போர்ட்க்கு வந்து சச்சின் பட விஜய் மாதிரி உட்கார்ந்துருக்க அந்த வின்னி ஜெனிலியா மாதிரி ஓடி வருவான்னா

ஏய்ய் ஏண்டி சும்மா இருக்கு வின்னிய வம்புக்கு இழுக்குற அவளை நான் டிஸ்மிஸ் பண்ணிட்டேன்

தெரியும் தெரியும்

அடக்கடவுளே நிறுத்துங்க இரண்டு பேரும்!!!
ஏம்மா அவன் மனசை மாத்தி வீட்டுக்கு கூட்டிட்டு வருவனு பார்த்தா இப்படி பேசி பேசி நீயே அவனை நாடு கடத்திருவ போல

ஹலோ எங்களுக்கு எல்லாம் தெரியும் அவங்க அவங்க ஜோடிய கூட்டிட்டு கிளம்புங்க

வாங்க போகலாம் என்று பல்லவி அனைவரையும் இழுத்து சென்றாள்

என்ன ஜோடின்னு சொல்லுற
ஸ்வராக் புரியாமல் வினவ முதல் தடவையாக அவனை பார்த்து பற்கள் தெரிய சிரித்த சப்தவி

ஸ்வராக் முதல்ல நம்மல பத்தி பேசலான்னு நினைச்சேன்

வேண்டாம் அவங்களை பத்தி சொல்லு

ப்ரதிக்கும் பல்லவியும் தான் பிளான் பண்ணி எங்களை s.v.p.ல ஜாய்ன் பண்ண வைச்சிருக்காங்க அவங்களுக்கு வாணி வெங்கட் பிராப்ளத்தை தீர்த்து வைக்க இது தான் சரின்னு தோணிருக்கு வெங்கட் நல்லவர்னு எங்களுக்கு தெரியும் இருந்தாலும் முன்னாடி நான் இருந்த மனநிலையில நிச்சயமா அவங்களை காதலை ஏத்துட்டு இருக்க மாட்டேன் நான் என் குடும்பம் நட்பு என் பிரண்ட்ஸ் குடும்பம் அப்படிங்கிற வட்டத்தை தாண்டி வெளிய வந்தா ஒரு நேரம் ஆண்கள் எல்லாரும் கெட்டவங்க இல்லைன்னு புரிஞ்சுப்பேன்னு பல்லவி நினைச்சிருக்காள் அதே மாதிரி இந்த கொஞ்ச நாள்ல எனக்கு ஏற்பட்ட எல்லா அனுபவங்களும் எனக்குள்ள நானே எனக்கு போட்டிருந்த சங்கிலிகளை அறுத்து எறிஞ்சிருக்கு.

ஸ்வராக் நான் ஒவ்வொரு தடவையும் ஆண்களை துச்சமா நடத்தும் போதெல்லாம் வாணி சொல்லுவாள் நான் என் அம்மாவுடைய கறுப்பு பக்கங்களை மறுபடியும் புரட்டி அவங்களை காயப்படுத்துறேனு அது உண்மை தான் நான் இனி அந்த தப்பை செய்யுறதா இல்லை நடந்த எல்லா பிழைக்கும் காரணம் யாருனு கேட்டா விதின்னு விட்டிரலாம் ஆணோ பெண்ணோ தப்பானவங்களை விட்டு ஒதுங்கி நல்லவங்களோட கூடி வாழலாம் ஒரு ஆண் இல்லைனா பெண் செய்யுற தப்புக்காக அந்த இனத்தையே தண்டிக்கிறது முட்டாள்த்தனம் சீதையும் பெண் தான் சூர்ப்பணகையும் பெண் தான்

சப்தவி பர்ஸ்ட் ஆப் ஆல் ஐயம் வெரி சாரி இருபது வயசுல என் தங்கை சேஷாவை ஒரு பணக்கார குடிகாரனுக்கு கட்டி கொடுத்த என் அம்மா மேல வந்த கோபம்

அதை மறுக்காம ஏத்துக்கிட்டு அடி உதை வாங்கி உயிரை விட்ட என் தங்கை மேல வந்த கோபம்
எங்க அப்பாவும் போய் என் சொத்தெல்லாம் போனதும் என்னை விட்டு ஓடுன என் கேர்ள் பிரண்ட் மேல வந்த கோபம்
எல்லாம் என்னை இறுக்கி போட்டிருச்சு
எனக்காக என்னை ஏத்துக்கிட்ட என் நண்பர்களை கூட நான் தள்ளி தான் வச்சேன் ஆனால் அவங்க இந்த நிமிஷம் வரை என்னை பார்த்துக்கிறாங்க
தேங்க் கோட் நீ சொல்லுற மாதிரி நாம நல்லவங்களை தண்டிச்சிருக்கோம் இனி மேல் அந்த தப்பை செய்ய கூடாது.

சரி செய்ய வேணாம் அப்போ இப்பவாவது வெளிய போகலாமா நமக்காக நிறைய பேர் வெயிட்டிங்

ஆமா நாம தப்பு பண்ணிட்டு அவங்களை தண்டிக்க வேண்டாம் இனி மேல் நிறைய பொறுப்பு இருக்கு நண்பர்கள் திருமணம் நம்ம திருமணம்

நம்ம திருமணமா??, சப்தவி வியக்க

ஆமா ஏன் வேண்டாமா?,

வேணும் தான் ஆனால் முதல்ல பிரண்ட்ஸ்

பிரண்ட்ஸ்!!!

கண்ணாடி வழியே கைகுலுக்கிக் கொண்ட சப்தவியையும் ஸ்வராக்கையும் பார்த்து நண்பர்கள் பட்டாளம் ஆரவாரித்தது.

முற்றும்.

நன்றி.
ஷஜனி அருந்த்ராஜா