Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript சாம்பிராணியும் பயர் அலாரமும் - சுதா ரவி | SudhaRaviNovels

சாம்பிராணியும் பயர் அலாரமும் - சுதா ரவி

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
சந்திரமதிக்கு வாழ்நாள் லட்சியம் சாம்பிராணி போட்டு சாமி கும்பிட வேண்டும் என்பதே! அதுவும் கடந்த இருபது வருடமாக வெளிநாட்டு வாழ்க்கை வாழ்பவருக்கு மற்ற ஏக்கங்களை விட இதுவே பெரியதாக இருந்தது.

அவர் குடியிருந்த வீடுகளில் எல்லாம் பயர் அலாரம் பொருத்தபட்டதாகவே இருந்த காரணத்தினால் அவரது ஆசை நிராசையாக போனது. கணவர் கணேசனோ இவரது ஆசையைக் கேலி செய்து சிரித்ததோடு அல்லாமல் ‘சரியான பட்டிக்காடு’ என்று பட்ட பெயரும் வைத்தார்.

ஆனால் இவை எல்லாம் சந்த்ரமதியின் ஆசைக்கு அணை போடவில்லை, மாறாக ஒரு வெறியே கொழுந்து விட்டு எரிந்தது. எப்படியும் ஒருநாள் சாம்பிராணி புகை போட்டு எனது வீட்டை மங்களகரமாக வைப்பேன் என்று மனதிற்குள் சபதமிட்டுக் கொண்டார்.

அதற்கான நேரத்தை எதிர்பார்த்து காத்திருந்தவருக்கு ஒரு வெள்ளிக்கிழமை வாகாய் அமைந்தது. கணேசன் முதல்நாள் இரவு ஒரு பார்டிக்கு சென்று விட்டு மிகவும் லேட்டாக வந்த காரணத்தினால் மறுநாள் மெதுவாகவே எழுந்திருப்பார் என்று சந்திரமதிக்கு தெரியும்.

‘இந்த நாளை தான் மிகவும் எதிர்பார்த்தேன். இன்று நிறைவேற்றி விட வேண்டியது தான் என் ஆசையை’ என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டார்.

வெள்ளிகிழமை காலை விடியலின் நேரம் நான்கு மணிக்கு எழுந்து வெந்நீர் போட்டு தலைக்கு குளித்து தலையில் துண்டைக் கட்டிக் கொண்டு, வழக்கத்தை விட பெரிய பொட்டாக வைத்துக் கொண்டு சாமியறைக்குள் நுழைந்தார்.

உள்ளுக்குள் சந்தோஷம் பொங்க ‘கடவுளே என்னுடைய ஆசையை நிறைவேற்றிக் கொடுத்து என்னை சந்தோஷப்பட வச்சுட்டீங்க’ என்று சொல்லிக் கொண்டே விளக்குகளை ஏற்ற ஆரம்பித்தார்.

அவரின் விருப்பபடி எல்லாம் நன்றாக சென்று கொண்டிருந்தது. கணவருக்குத் தெரியாமல் வாங்கி வைத்திருந்த கரித் துண்டை எடுத்துச் சென்று காஸ் பர்நேரின் மீது வைத்து தகதகக்கும் நெருப்பு துண்டாக மாற்றிக் கொண்டு தூப காலில் வைத்து கொண்டார்.

கண்மூடி கடவுளை வணங்கியவர் மறைத்து வைத்திருந்த சாம்பிராணி பவுடரை எடுத்து பயந்து கொண்டே கொஞ்சமாக நெருப்பு துண்டத்தின் மீது போட்டார். லேசாக புகை எழும்ப, அந்த சுகந்தத்தில் மகிழுந்து போனவர், கடவுளுக்கு காண்பித்து விட்டு மெல்ல ஒவ்வொரு அறையாக காண்பித்துக் கொண்டே செல்ல ஆரம்பித்தார்.

வெகு நாள் ஆசை நிறைவேறிய திருப்தி ஒருபுறம், சாம்பிராணியின் மணம் ஒருபுறம் அவருக்கு உற்சாகத்தைக் கொடுக்க, முதலில் பயந்து கொண்டே போட்டவர் இப்போது சற்று அதிகமாகவே பொடியை தூவினார். குபுகுபுவென்று புகை எழத் தொடங்கியது. அதுவரை எந்த பிரச்சனையும் எழாததால், ‘இந்த மனுஷன் பயர் அலாரத்தை பத்தி பயமுறுத்தியே என்னை நிம்மதியா சாமி கும்பிட விடாம பண்ணிட்டார்’ என்று திட்டிக் கொண்டே கணவர் இருந்த அறைக்குள் சென்றார்.

அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த கணவரை ஒரு அலட்சிய பார்வை பார்த்துக் கொண்டே அறை எங்கும் புகையை காண்பிக்க ஆரம்பித்தார். எல்லா இடங்களிலும் காண்பித்திருந்ததால் புகை சற்று அடங்கியிருந்தது. கணவர் தன்னை அதிசயமாக பார்க்க வேண்டும் என்கிற எண்ணத்துடன் சாம்பிராணி பொடியை சற்று அதிகமாகவே தூவினார்.

அதுவரை வந்ததை விட தூபக்காலில் இருந்து புகை வேகமாக எழத் தொடங்கியது. சந்திரமதி நின்றிருந்த இடத்திற்கு நேர் மேலே பயர் அலாரத்தின் டிடெக்டர் கருவி இருந்தது. புகை முழுவதும் சென்றடைய, ஆரம்பித்தது வினை.

‘ஊயிங்..ஊயிங்...’ என்று சங்கூத ஆரம்பித்தது பயர் அலாரம். கட்டிடத்தில் தீ பிடித்துள்ளது அனைவரும் படிகளின் வழியே வெளியேறுங்கள். மின்தூக்கியை உபயோகிக்க வேண்டாம்’ என்று மீண்டும் மீண்டும் அறிவிக்கப்பட்டது.

அலாரத்தின் சத்தத்தில் அலறி அடித்துக் கொண்டு எழுந்த கணேசனுக்கு ஒன்று புரியவில்லை. கை, கால்கள் எல்லாம் நடுக்கமெடுக்க கண்ணை கசக்கி பார்த்தவரின் முன்பு புகை மூட்டத்தின் நடுவே பெரிய பொட்டுடன் விழி விரித்து நின்ற சந்திரமதி தெரிந்தார். அதைக் கண்டதும் பயந்து போனவர் எங்கு ஓடுவது என்று புரியாமல் கட்டிலைச் சுற்றி ஓடத் தொடங்கினார்.

ஏற்கனவே அலாரம் அடித்ததில் பயந்து போயிருந்தவர், கணவர் ஓடுவதைக் கண்டு அவரைத் தொடர்ந்து தானும் ஓடத் தொடங்கினார். கணேசனோ தன்னைத் தொடர்ந்து ஓடி வருபவரைக் கண்டு “ஏய்..என்னை விட்டுடு...என்னை துரத்தாதே” என்று அலற ஆரம்பித்தார்.

அலாரம் சத்தத்தைக் கண்டு தான் பயந்து ஓடுவதாக எண்ணி இருந்த சந்தரமதிக்கு, கணவர் தன்னைக் கண்டு தான் பயந்து ஓடுகிறார் என்று புரிந்தது.

சடாரென்று நின்று “என்னங்க! எதுக்கு இப்போ கட்டிலை சுத்தி சுத்தி ஓடுறீங்க. நில்லுங்க! நான் தான்” என்றார்.

மனைவியின் குரலை கேட்டதும் நின்று நிதானித்துக் கொண்டவர் “ஏண்டி காலங்கார்த்தாலே என்ன கோலம் இது! அப்படியே பிசாசு மாதிரி..சரி! சீக்கிரம் வா!அலாரம் அடிக்குது பார்” என்றார்.

அவர் சொன்னதும் சற்று பயத்துடன் “அதெல்லாம் எங்கேயும் தீப்பிடிக்கல! நான்..நான் சாம்பிராணி போட்டேன். அது தான் அடிக்க ஆரம்பிச்சிடுச்சு” என்றார் தயக்கத்துடன்.

அதைக் கேட்டதும் “என்னது! சாம்பிராணி போட்டியா?” என்று அதிர்ச்சியுடன் கேட்டு பல்லை கடிக்க ஆரம்பித்தார்.

இப்படியாக சந்திரமதியின் சாம்பிராணி ஆசைக்கு அலாரம் அடித்து முடிவுக்கு வந்தது.
 
Bhagi

Moderator
Mar 27, 2018
242
2
63

??Sema
 
  • Like
Reactions: sudharavi