சித்திரை போட்டி திரை விமர்சனம் !

Shenba

Administrator
Staff member
#2
எனது பார்வையில் பாகுபலி

பிரம்மாண்டம்! பாகுபலி 1 பார்த்த போது, எனக்குத் தோன்றிய கருத்து அது மட்டுமே.

ஆனால், அதன்பிறகு முதல் பாகத்தை எத்தனை முறை பார்த்திருப்பேன் என்று எனக்கே நினைவில்லை.
பிரம்மாண்ட நீர்வீழ்ச்சி, பிரம்மாண்ட அரண்மனை, பிரம்மாண்ட சண்டைக் காட்சிகள். படத்தின் ஒவ்வொரு இணுக்கிலும் பிரம்மாண்டத்தைக் கையாண்டிருந்தனர்.


தெலுங்குப் படமென்றாலே எல்லாமே லாஜிக் மீறிய காட்சிகளாக இருக்கும் என்பதை நன்கு அறிந்தவள்தான். ஆனால், அந்த லாஜிக் மீறல்களையும் இரசிக்கும்படி எடுக்கப்பட்டிருந்ததே இயக்குனர் எஸ்.எஸ் இராஜ மௌலியின் திறமை.

ஹீரோவிற்குக் கொடுத்திருந்த அதே அளவிற்கு வலுவான ஒவ்வொரு பாத்திரப் படைப்பும் அருமை.
ரம்யாகிருஷ்ணன். இராஜ மாதாவாகவே நம் கண்முன்னே நடமாடினார். பெற்ற மகனுக்கு நிகராக வளர்ப்பு மகனுக்கும் பாலூட்டி, சீராட்டி வளர்த்தவர்.


இரண்டாம் பாகத்தில் ஒரு தாய்க்கே உண்டான குண இயல்புடன் தான் நடந்துகொண்டதாகப் பட்டது. இருந்தாலும், மனத்தில் சிறு குறுகுறுப்பு இருக்கத்தான் செய்கிறது. பாகுபலியை, அவர் நினைத்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம். ஆனால், இதே பாகுபலியின் அன்னையாக அவர் இருந்து பல்வாள்தேவனைக் கொல்ல நினைத்திருந்தால் என் மனம் ஆறியிருக்குமோ என்னவோ!

பிங்களத் தேவராக நாசர் அருமையான நடிப்பைக் கொடுத்திருந்தார். என்றாவது உன் அன்னையைக் கொல்ல நினைத்திருக்கிறாயா! என்று கேட்கும் இடத்தில் நம்மையும் சற்று மிரள வைத்திருக்கிறார். ஆனால், கடைசியில் அவரை மட்டும் உயிருடன் விட்டுவைத்திருக்க காரணம் என்ன?

கட்டப்பா! சத்யராஜின் நடிப்பிற்கு மற்றுமொரு சான்று. முதல் பாதியில் அடிமைக் காவலனாக வருபவர், இரண்டாம் பாகத்தில் கதாநாயகனின் தோழனைப் போல உடனே இருந்து பல இடங்களில் சிரிக்கவும், இரசிக்கவும் வைத்திருக்கிறார்.

பல்வாள்தேவன்! ராணாவின் அற்புதமான நடிப்பால், உயிர் பெற்ற பாத்திரம். காளையை அடக்கும் காட்சியிலேயே மனதில் நின்றுவிட்டார்.

அவந்திகா! தமன்னாவை அந்தக் கதாபாத்திரத்தில் பார்க்கச் சற்றுச் சிரிப்பாகக் கூட இருந்தது. அவ்வளவு துணிச்சலும், வீரமும் கொண்ட பெண். சிறு அசைவையும் உணர்ந்துகொண்டு சாமர்த்தியத்தைக் கையாளுபவள் தான் தேடிக்கொண்டிருப்பவன் மரத்தின் மீது வருவது கூட தெரியாமல் காத்திருப்பதெல்லாம் சற்று லாஜிக் மீறிய காட்சிகள் தான்.

தேவசேனா! அறிமுகக் காட்சியில் ஹய்யோ! அழகு அனுஷ்காவை, இப்படிக் காட்டிவிட்டார்களே என்று முதல் பாகத்தில் பெரும் ஏமாற்றம் தான். ஆனால், இரண்டாம் பாகத்தில் அதை நிவர்த்தி செய்துவிட்டார் இயக்குனர்.

‘அழகிகளே பொறாமை கொள்ளும் பேரழகி!’ என்று சிவகாமி சொல்வதைப் போல அவ்வளவு அழகு. இரண்டாம் பாகத்தின் முதல் பாதிப் படம் செல்வதே தெரியாமல் மெல்லிய காதல் இழையோட அருமையாக இருந்தது.

பாகுபலியின் வீரத்திற்கு ஏற்றார் போல, வீரமும், துணிச்சலும் கொண்ட பெண்ணாக பிரமாதப்படுத்தியிருந்தார். எப்போதுமே அனுஷ்காவின் நடிப்பு எனக்குப் பிடிக்கும். இதிலும் அவர் சற்றும் நம்மை ஏமாற்றவில்லை.

கடைசிக் காட்சியில் அனுஷ்காவிற்கு இரண்டு வரியிலாவது டயலாக் வைத்திருக்கலாம். எனக்கு அது ஒரு குறையாகவே இருந்தது. முன்பாதியில் வீரமும், விவேகமும் நிறைந்த பெண்ணாக வந்தவரது கதாபாத்திரம் கடைசியில் அரைகுறையாக முடித்தது போல இருந்தது.

பாகுபலி! பெறாத அன்னையின் அன்பிற்குப் பாத்திரமாக இருந்து, அவராலேயே இறந்து போகும் பரிதாபத்திற்குரியவன். அவன் நம்பியவர்களாலேயே முதுகில் குத்தப்படுகிறான். காதலிக்குக் கொடுத்த வாக்கிற்காக வளர்த்த அன்னையின் பாசத்தையும், நம்பிக்கையையும் இழக்கிறான்.

அரச பதவியைத் துறக்கிறான். அன்னையின் பாசத்திற்காக காத்திருக்கிறான். தங்களது சந்தோஷமான தாம்பத்தியத்திற்கு அத்தாட்சியாக பிறக்கும் மகனைக் காணாமலேயே இறக்கிறான். மொத்தத்தில் அடுத்தவர்களது உணர்வுகளுக்கும், ஆசைகளுக்கும் இடையில் அல்லாடி உயிர் துறக்கிறான்.

பிரபாஸின் திரை வாழ்க்கையில் ஒரு மைல் கல். எல்லோருக்கும் ஏதாவது ஒரு இடத்தில் தங்களுடைய திறமையை வெளிப்படுத்த, நிலைநாட்ட வாய்ப்பு கிடைக்கும். கிடைத்த வாய்ப்பை நன்றாகவே பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் பிரபாஸ்.

இதையே அடுத்ததடுத்த படங்களுக்கு ஒரு அளவுகோலாக மற்றவர்கள் எடுத்துக்கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதே என் எண்ணம்.

இயக்குனர் இராஜ மௌலி மற்றும் அவரது குழுவினரது ஐந்தாண்டு கால உழைப்பிற்குக் கிடைத்த வெற்றி.

ஐந்து வருடமாக தூக்கத்திலும், அவர் இந்தப் படத்தைப் பற்றியே நினைத்திருந்திருப்பார். அவரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தால் இந்தக் கேள்வியை அவரைக் கேட்கவேண்டும் என்று நினைத்திருக்கிறேன்.
:)


கீரவாணியின் இசை, படத்தின் பிரம்மாண்டத்திற்கு கூடுதல் பலம்.

மதன் கார்க்கியின் வசனங்கள் ஒவ்வொன்றும் நச்சென்று இருந்தன.

ரோகிணி, சுதீப், போன்ற முன்னணி நடிகர் நடிகைகள் சிறிது நேரமே வந்தாலும், நம் மனத்தைக் கொள்ளைக் கொண்டுவிட்டனர்.

குறிப்பாக, பட்டாபிஷேக சீன், மாஸ்!

பாகுபலி என்றும் நம் மனத்தில்!
 
Last edited by a moderator:
#3
எனது வழியில் பிங்க்

பிங்க்


நாட்டின் இன்றைய நிலைக்கு அனைவரும் கண்டிட வேண்டிய ஒரு அருமையான திரைப்படம் இது...

3 பெண்களை மையமாக வைத்து, அவர்கள் சந்திக்கும் பிரச்சனையினால் ஏற்படும் விளைவுகளை வைத்து,அதிலிருந்து அவர்கள் வெளிவரும் விதத்தைக் குறித்த ஒரு சித்திரம் இது.

படத்தின் ஆரம்பத்தில் மூன்று இளைஞர்கள் மருத்துவமனையை நோக்கி ஓடும் பொழுது ஐயோ என்னவாயிற்று என்று எண்ணத் தோன்றுகிறது. அதில் ராஜீவ் என்பவனுக்கு ஏற்படும் இரத்த இழப்பின் காரணமாக காவல்துறையில் வழக்கு பதிவு செய்கிறார்கள்.


அதே நேரத்தில் இம்மூன்று இளம்பெண்களும் தாங்கள் தனித்து வாழும் அபார்ட்மெண்டுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள்.இப்பதட்டத்திலும் ஃபரிதாபாத்தை காட்சியமைத்த விதம் மிகவும் அருமையாக உள்ளது. இப்பெண்களில் மினால் ஓட்டத்திற்கு செல்லும் நேரங்களில் தீபக் என்னும் முதிய வழக்கறிஞர் அவளிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் பொழுது தோன்றும் உணர்வு எழுத்தில் வடிக்க முடியாதது...

ராஜ்வீர் மற்றும் அவனது நண்பர்கள் மினார், ஆண்ட்ரியா ,ஃபாலக் இவர்களை பழிவாங்கும் படலத்தை ஆரம்பித்ததன் விளைவாக ஆண்ட்ரியா தன்னுடைய வேலையை இழந்து விடுவாள். இதற்குப் பின் வடிவமைக்கப்பட்ட காட்சிகள் தான் கதையின் முக்கிய அமைப்பை நம் கண்முன்னே நிறுத்துகிறது .

ராஜ்வீர் பெண்டிரை வேசி இனப்பெண்கள் என்று குற்றம் சு மதம் தி பின்னர் தீபக் மூலமாக வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு காட்சிகள் மனநிறைவைத் தருகின்றன. இப்படத்தில் எனக்கு மிகவும் பிடித்த வசனம் "பெண்கள் நோ என்றால் நோ என்பதுதான் அர்த்தம்", அதனையும் மீறி அவர்களை உறவுகொள்ள வற்புறுத்துவது குற்றமாகும்.

வழக்கு காட்சிகளை கண்டிட தீபக் ஆக அமிதாப்பச்சன் வாதிடும் வார்த்தைகளைக் கேட்டிட இப்படத்தை கண்டு மகிழுங்கள்.

"no means no"
 
#4
Taare Zameen Par

மாதாவின் மணி வயிற்றில் உதித்திடும் மழலை ஒவ்வொன்றும் மறைத்து வைக்கப்பட்ட திறமைகளுடன் இப்பூமியில் அவதரிக்கிறது...

அத்திறமையை கண்டறிந்து வெளிக்கொணரும் முன்னர் அக்குழந்தை எதிர்கொள்ளும் அவமானங்கள், பேச்சுக்கள் இவை அனைத்தையும் சித்திரமாக தீட்டிய இப்படத்தின் இயக்குனர் மிகவும் ஆழமான கருத்தை பெற்றோர்க்கு போதித்துள்ளார்.

இஷான் கற்றலில் பின்தங்கியுள்ள ஒரு 8 வயது சிறுவன்.அவன் பள்ளியில் ஏற்படும் குறை கூறும் படலத்தின் காரணமாக உறைவிடப் பள்ளியில் பெற்றோரால் சேர்க்கப்படுகின்றான். அங்கு டீச்சராக வரும் ராம்னால் இஷான் டிஸ்லெக்ஸியா உள்ளவன் என அறியப்படுகிறது.

அவனைக் குறித்து அவனது பெற்றோரிடம் பேச வரும் ராம் இஷான் வரைந்த ஓவியங்களையும், அதிலிருக்கும் நுணுக்கங்களையும் பார்த்து வியந்து பள்ளிக்கு திரும்பிய பின்னர் அவனது வகுப்பறையின் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார். தானும் டிஸ்லெக்சியாவால் பாதிக்கப்பட்டவன் என்று உரைத்து இஷானுக்கும் உனக்கு டிஸ்லெக்ஸியா உள்ளது என்று கூறி அவனுடைய திறமையை மெருகு ஏற்றுகிறார்...

இறுதியில் நடைபெறும் ஓவியப் போட்டியில் இஷானை வரைந்த ராம் இரண்டாம் இடத்தையும், குருவை மிஞ்சிய சிஷ்யனாக இஷான் முதல் இடத்தையும் பெறுகின்றனர். பள்ளி இறுதி தேர்வுகள் முடிவில் இஷானை அழைத்துச் செல்ல வரும் பெற்றோருக்கு இனிய அதிர்ச்சி அவனது ஆசிரியர்கள் தருகின்றார்கள். கற்றல் குறைபாடு உள்ளவன் என்று கூறப்பட்டவன் கற்றலில் சிறந்து விளங்குகின்றான் என்ற ஒரு சான்றிதழை ஆசிரியர் வாய்மொழியாக கேட்டவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

இறுதியாக பெற்றோருடன் காரில் ஏறும் முன்பாக இஷான் ஓடிவந்து ராமை அணைத்துக் கொள்ளும் காட்சி இன்றளவும் கண்முன்னே நிழலாடுகின்றது.
 

Anuya

Well-known member
#5
எனது பார்வையில் 24

டைம் மிஷின் - சினிமா உலகின் எவர் க்ரீன் களம் இது .நாம் பார்க்கும் கார்டூன்களில் ஜாக்கி ஜான்னின் சாகசங்கள் , டோரிமோன் போன்ற கார்டூன்களில் இந்த டைம் மிஷன் பற்றிய காட்சிகளை காட்சி படுத்தி இருக்கிறார்கள் ... ஹாலிவுட் படங்களில் இந்த டைம் மிஷின் கதை களம் அடிக்கடி பார்க்க முடிந்த ஒன்று அனால் நம் தமிழ் சினிமாவில் இந்த கதை களம் படமாக்க படுவது அரிது .....24 படம் டைம் மிஷின் சார்ந்த கதை களத்தை கொண்டுள்ளது......

சேதுராமன்( அப்பா) , ஆத்ரேயா(வில்லன்), மணி( மகன்) போன்ற 3 கதாப்பாத்திரத்தில் கலக்கி இருக்கிறார் நடிகர் சூர்யா. சேதுராமன் & ஆத்ரேயா சகோதரர்கள், தம்பி சேதுராமன் ஒரு scientist அவர் பல வருடம் ஆராய்ச்சி செய்து காலம் கடந்து பயணிக்கும் ஒரு அற்புத மிசினை கண்டுபிடிக்கிறார். 24 மணி நேரங்கள் முன்நோக்கியும், பின்நோக்கியும் அதை கட்டி இருப்பவரை அழைத்து சென்று சம்பந்தப்பட்டவர் விரும்பிய நிகழ்வுகளை மாற்றி அமைத்து கொள்ள வழிவகை செய்யும் அந்த மிஷினை அடைய துடிக்கிறார் அண்ணன் சூர்யா. இதற்காக தம்பி சூர்யாவை கொள்ள துறதுகிறார். தம்பி சூர்யா இந்த மிசினை ஒரு பெட்டியில் வைத்து பூட்டி குழந்தையையும் அந்த பெட்டியையும் இரயிலில் சரண்யாவிடம் ஒப்படைத்து விட்டு இறந்து விடுகிறார் . இரயில் வெடிக்க போகுது என்று நினைத்து குதிக்கும் அண்ணன் சூர்யா கோமாவிற்கு செல்கிறார் .

சுமார் 26 வருடம் சென்று அந்த பெட்டியை திறக்கும் சாவி பையன் சூர்யாவிற்கு கிடைக்கிறது. அதனுள் இருக்கும் டைம் வாட்ச் ஒரு வாட்ச் மெக்கானிக் ஆன மகன் சூர்யாவிடம் கிடைக்கிறது . இந்த டைம் மிஷின் வாட்சை வைத்து மகன் சூர்யா செய்யும் அட்டகாசம் அளவேயில்லை. " மாயமில்லை மந்திரமில்லை" பாடலில் விழும் மழைத்துளியை பிரீஸ்(freeze) செய்வது , கிரிக்கெட் ஸ்டேடியம் சென்று ஆட்டத்தின் இறுதியை மாற்றுவது போன்ற காட்சிகளில் இயக்குனர் விக்ரம் குமார் ஸ்கோர் பண்ணியிருக்கிறார். " Basically I'm a watch mechanic" இந்த டயலாக் கேட்கும் போது எல்லாம் theatreகளில் சிரிப்பு சத்தமும், விசில் சத்தமும் காதைப்பிளக்கிறது. ' imago romanceso phobia' வியாதி காதல் களத்தில் ரசிக்க வைக்கும் காட்சி.
இந்த சமயத்தில் தான் அண்ணன் சூர்யாவிற்கு சுயநினைவு திரும்ப வருகிறது ....அந்த மிசினை அடைய அண்ணன் சூர்யா போடும் திட்டங்கள் வெற்றி பெற்றதா ? அந்த மிசினை வைத்து அப்பாவை கொன்றவரை மகன் சூர்யா பழிவாங்கினாரா என்பது மீத கதை.

எ.ஆர். ரஹ்மான் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம் . நித்யா மேனன் தம்பி சூர்யாவின் மனைவி கதாபாத்திரத்தில் சிறிது நேரம் வந்தாலும் மனதில் நிலைக்குறார் . இயக்குனர் விக்ரம் குமார் கதையை கொண்டு செல்லும் விதம் அருமை.

இந்த மாதிரியான காலம் கடக்கும் கருவிகள் நம்மை பொறுத்தவரையில் கற்பனைகளில் மட்டுமே சாத்தியமாக உள்ளது...அனால் உண்மையாக இப்படி ஒரு கருவியை கண்டு பிடித்தால் எந்த மாதிரியான பின்விளைவுகளை அது கொடுக்கும் என்பது இந்த கதையில் தெரிந்து கொண்டது . இயற்கையை மீறி கண்டு பிடிக்கப்படும் ஒவ்வொரு டெக்னாலஜியும் நமக்கு பயன் படுவது போல் தெரிந்தாலும் நமக்கு என்றேனும் ஒருநாள் ஆபத்தை விளைவிக்க குடியவையே .....?:giggle:

24 ஒரு பெஸ்ட் என்டேர்டைண்ட்மெண்ட் மூவி பார்க்காதவர்கள் இனி பார்த்து எண்ஜோய் பண்ணுங்க ..??:love:
 

Anuya

Well-known member
#6
காக்கா முட்டை

பெரிய பட்ஜெட், பிரபலமான முகங்கள், அதிகமான ப்ரோமோஷன்ஸ் இது எல்லாம் இருந்தால் தான் ஒரு படம் மக்களிடம் அதிகம் ரீச் ஆகும் என்று நினைத்த போது இல்லை அப்படி எல்லாம் இல்லை தரமான கதைகள் படைப்புகள் எப்படி இருந்தாலும் மக்கள் ஆதரிப்பார்கள் என்பதை மீண்டும் நிரூபித்து இருக்கிறது "காக்கா முட்டை" திரைப்படம் .

சென்னை கூவம் கரையோரம் வாழும் இரண்டு சிறுவர்களின் பிஸ்சா(pizza) சாப்பிடும் ஆசையும் அதற்காக அவர்கள் பணம் சேர்ப்பதும் தான் கதைக்களம். எதோ ஒரு சிறு தவறு செய்துவிட்டு ஜெயிலில் இருக்கும் தந்தை அவரை மீட்க வேலை செய்து பணம் சேர்க்கும் அம்மா இவர்களின் பிள்ளைகள் தான் சின்ன காக்கமுட்டையும், பெரிய காக்கமுட்டையும். ஏழ்மையின் காரணத்தினால் பள்ளிப்படிப்பை நிறுத்தி விட்டு இரயிலில் இருந்து விழும் நிலக்கரியை பொறுக்கி விக்கிறார்கள் காக்க முட்டை சகோதரர்கள்.

பிரபல பிஸ்சா கடை ஒன்றின் திறப்பு விழாவிற்கு சிம்பு சிறப்பு விருந்தினராக வந்து திறந்து வைக்கின்றார். சிம்பு சாப்பிடும் பிஸ்சா, கண்கவர் விளம்பரங்களைக் கண்டு பிஸ்சா சாப்பிட ஆசை கொள்கிறார்கள் சின்ன மற்றும் பெரிய காக்கமுட்டை . அனால் கிலோ கரி 3ரூபாய்க்கு விற்கும் சிறுவர்களுக்கு 300 ரூ பிஸ்சா பெரிய தொகை . அதனால் இரயில் ட்ராக்கில் வேலை செய்யும் பழரசத்தின் உதவியுடன் கரி விற்று 300ரூ சேர்க்கின்றனர் சிறுவர்கள்.சேர்த்த பணத்தை எடுத்துக்கொண்டு சென்றால் அழுக்கு நிறைந்த இவர்களின் ஆடைகளை பார்த்து உள்ளேவிட மறுக்கிறார் காவலாளி.நல்ல துணிகளை வாங்கி அணிந்து சென்ற பின்னும் உள்ளேவிடவில்லை போனுசாக அடி வேறு.

படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் நம்மை காக்கமுட்டை சகோதரர்கள் உடன் ஒன்றிபோக வைக்கிறார் இயக்குனர் மணிகண்டன். இரண்டு குழந்தைகளின் அம்மாவாக கலக்கியிருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ் .

காகிதத்தில் பிஸ்சா பார்த்து தோசையை பிஸ்சா போல் செய்துக்கொடுக்கும் பாட்டி, " எங்களுக்கு அப்பா வேண்டாம்.... பிஸ்சா தான் வேண்டும் ..." என்று கூறும் சிறுவர்கள். தெரு நாயை 25,000 ரூபாய்க்கு விலைபேசும் சிறுவர்களின் அறியாமை, பிஸ்சா சாப்பிட ஆசை இருந்தும் பணக்கார பையன் கொடுக்கும் எச்சில் பிஸ்சாவை வாங்க மறுக்கும் சுயகவுரவம் போன்ற ஏராளமான காட்சிகள் மனதில் பசக் கென்று பதிந்துவிடுகிறது.
இயல்பான வசனங்கள், அழகான காட்சிகள் என சென்னை கூவம் மக்களின் வாழ்க்கை கண்முன்னே கொண்டு வருகிறார் இயக்குனர் மணிகண்டன். ஜி. வி. பிரகாஷின் இசை கூடுதல் பலம்.

முதல் முறை பிஸ்சாவை ருசித்தபிறகு காக்முட்டை சகோதரர்கள் " ஆயா சுட்ட தோசையே நல்லாருந்திச்சுல...." எனும்போது theatre அதிர்கிறது இன்றளவும் பிஸ்சா உண்ணும் போது நினைவில் வந்து சிரிக்க வைக்கிறது .என்றும் நம் மனதில் காக்கமுட்டை.:love::love:
 

sudharavi

Administrator
Staff member
#7
காக்கா முட்டை

பெரிய பட்ஜெட், பிரபலமான முகங்கள், அதிகமான ப்ரோமோஷன்ஸ் இது எல்லாம் இருந்தால் தான் ஒரு படம் மக்களிடம் அதிகம் ரீச் ஆகும் என்று நினைத்த போது இல்லை அப்படி எல்லாம் இல்லை தரமான கதைகள் படைப்புகள் எப்படி இருந்தாலும் மக்கள் ஆதரிப்பார்கள் என்பதை மீண்டும் நிரூபித்து இருக்கிறது "காக்கா முட்டை" திரைப்படம் .

சென்னை கூவம் கரையோரம் வாழும் இரண்டு சிறுவர்களின் பிஸ்சா(pizza) சாப்பிடும் ஆசையும் அதற்காக அவர்கள் பணம் சேர்ப்பதும் தான் கதைக்களம். எதோ ஒரு சிறு தவறு செய்துவிட்டு ஜெயிலில் இருக்கும் தந்தை அவரை மீட்க வேலை செய்து பணம் சேர்க்கும் அம்மா இவர்களின் பிள்ளைகள் தான் சின்ன காக்கமுட்டையும், பெரிய காக்கமுட்டையும். ஏழ்மையின் காரணத்தினால் பள்ளிப்படிப்பை நிறுத்தி விட்டு இரயிலில் இருந்து விழும் நிலக்கரியை பொறுக்கி விக்கிறார்கள் காக்க முட்டை சகோதரர்கள்.

பிரபல பிஸ்சா கடை ஒன்றின் திறப்பு விழாவிற்கு சிம்பு சிறப்பு விருந்தினராக வந்து திறந்து வைக்கின்றார். சிம்பு சாப்பிடும் பிஸ்சா, கண்கவர் விளம்பரங்களைக் கண்டு பிஸ்சா சாப்பிட ஆசை கொள்கிறார்கள் சின்ன மற்றும் பெரிய காக்கமுட்டை . அனால் கிலோ கரி 3ரூபாய்க்கு விற்கும் சிறுவர்களுக்கு 300 ரூ பிஸ்சா பெரிய தொகை . அதனால் இரயில் ட்ராக்கில் வேலை செய்யும் பழரசத்தின் உதவியுடன் கரி விற்று 300ரூ சேர்க்கின்றனர் சிறுவர்கள்.சேர்த்த பணத்தை எடுத்துக்கொண்டு சென்றால் அழுக்கு நிறைந்த இவர்களின் ஆடைகளை பார்த்து உள்ளேவிட மறுக்கிறார் காவலாளி.நல்ல துணிகளை வாங்கி அணிந்து சென்ற பின்னும் உள்ளேவிடவில்லை போனுசாக அடி வேறு.

படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் நம்மை காக்கமுட்டை சகோதரர்கள் உடன் ஒன்றிபோக வைக்கிறார் இயக்குனர் மணிகண்டன். இரண்டு குழந்தைகளின் அம்மாவாக கலக்கியிருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ் .

காகிதத்தில் பிஸ்சா பார்த்து தோசையை பிஸ்சா போல் செய்துக்கொடுக்கும் பாட்டி, " எங்களுக்கு அப்பா வேண்டாம்.... பிஸ்சா தான் வேண்டும் ..." என்று கூறும் சிறுவர்கள். தெரு நாயை 25,000 ரூபாய்க்கு விலைபேசும் சிறுவர்களின் அறியாமை, பிஸ்சா சாப்பிட ஆசை இருந்தும் பணக்கார பையன் கொடுக்கும் எச்சில் பிஸ்சாவை வாங்க மறுக்கும் சுயகவுரவம் போன்ற ஏராளமான காட்சிகள் மனதில் பசக் கென்று பதிந்துவிடுகிறது.
இயல்பான வசனங்கள், அழகான காட்சிகள் என சென்னை கூவம் மக்களின் வாழ்க்கை கண்முன்னே கொண்டு வருகிறார் இயக்குனர் மணிகண்டன். ஜி. வி. பிரகாஷின் இசை கூடுதல் பலம்.

முதல் முறை பிஸ்சாவை ருசித்தபிறகு காக்முட்டை சகோதரர்கள் " ஆயா சுட்ட தோசையே நல்லாருந்திச்சுல...." எனும்போது theatre அதிர்கிறது இன்றளவும் பிஸ்சா உண்ணும் போது நினைவில் வந்து சிரிக்க வைக்கிறது .என்றும் நம் மனதில் காக்கமுட்டை.:love::love:
அனு உங்களோட இரெண்டு விமர்சனங்களும் அருமை...தொடர்ந்து நல்ல படங்களுக்கு போடுங்க...நாங்களும் அறிந்து கொள்கிறோம்..
 

Anuya

Well-known member
#8
7ஆம் அறிவு

காஞ்சிபுரத்தை சேர்ந்த இளவரசர் போதிதர்மர் 6ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். தற்காப்பு கலை, மருத்துவம், கலைகள் என அனைத்திலும் நிபுணத்துவம் மிக்கவரான போதிதர்மர் தனது ராஜமாதா சொன்னதற்கினங்க சீனா நோக்கி பயணம் மேற்கொள்ளக்கிறார் போதிதர்மர். அச்சமயம் சீனமக்களை கொள்ளை நோய் ஒன்று தாகின்றது. மக்கள் முழுவதும் அந்த கொள்ளை நோயில் விழ போதிதர்மர் தன் மறுத்துவத்திறமையினால் மக்களை நோயிலிருந்து மீட்கிறார், மேலும் அந்த நோய்க்கான சிகிச்சை முறைகளையும், தற்காப்பு கலைகளையும் கற்று தருகிறார். தன் பயணத்தை முடித்துக்கொண்டு தாய்நாடு செல்ல முடிவு செய்யும் போதி அந்த சீனர்களின் மூடநம்பிக்கையால் விஷம் கலந்த உணவை அது விஷம் என்று தெரிந்தும் அந்த மக்களுக்காக உண்டு இறக்கிறார் போதி. அவரது உடல் சீனாவிலேயே புதைக்கப்படுகிறது. படம் ஆரம்பித்து முதல் 20 நிமிடங்கள் போதிதர்மரின் வாழ்க்கை வரலாற்றை கூறியிருக்கிறார் இயக்குனர் எ.ஆர். முருகதாஸ் .

சென்னையில் ஜெனிடிக் இன்ஜினீரிங் படிக்கும் மாணவி சுபா( சுருதி) போதிதார்மரை மீண்டும் கொண்டு வர முயல்கிறார். அதற்காக போதிதர்மரின் வம்சாவழி மக்களை காஞ்சிபுரம் சென்று DNA டெஸ்ட் செய்து பார்க்கிறார் சுபா. அவர்களுள் ஒருவரான சர்க்கஸ் கலைஞரான அரவிந்த் (சூர்யா)வின் DNAவும் போதிதர்மரின் DNAவும் 88% ஒத்துபோகிறது.

இந்நிலையில் போதியால் அளிக்கப்பட்ட கொள்ளை நோயின் வைரஸ்சை மீண்டும் எடுத்து இந்தியா மீது பயோ வார் (bio war ) தொடுக்க முடிவெடுகிறது சீனா. இந்த bio war முடிவில் இந்தியா முழுவதும் நோய் கிடங்காக மாறிவிடும் அப்பொழுது இந்த நோய்கான போதிதர்மர் கண்டுபிடித்த மருந்து சீனாவில் மட்டுமே கிடைக்கும். எனவே சீனாவிடம் பொருளத்தார ரீதியில் இந்தியா மண்டியிட வேண்டும் .இதுவே சீனா இந்தியா மீது bio war தொடுக்க கரணம். அதற்காக சர்வ வல்லமை படைத்த ஒரு சீன உளவாளி டாங்லீ (ஜானி ட்ரி நுயென்)ஐ இந்தியாவில் அந்த நோயை பரப்பவும், போதியை மீண்டும் கொண்டு வர முயலும் சுபாவை கொல்லவும் இந்தியா அனுப்புகிறது சீன அரசாங்கம் . டாங்லீ அந்த வைரஸ்சை தெரு நாய் ஒன்றுக்கு செலுத்தி மெல்ல பரவிடுகிறார். இந்நிலையில், ஒரு கட்டத்தில் சுபா தன்னை காதலிக்கவில்லை சோதனைக்காக மட்டுமே பயன்பத்தினார் என்பது தெரியவர மனமுடிந்துபோகிறார் அரவிந்த். சுபா அரவிந்திடம் போதிதர்மரின் மேன்மையையும், அவர் மீண்டும் வருவதற்கான முக்கியத்துவத்தையும் விளக்குகிறார். அரவிந்த் போதிதர்மராக மாறினாரா? நோய்காண மருந்து கண்டுபிடிக்கப்பட்டதா?? என்பது மீதி கதை.

போதிதர்மர், அரவிந்த் ஆகா இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார் நடிகர் சூர்யா. நம்முடைய கலைகளை, மகத்துவத்தை நாம் மறந்தத்தினால் ஏற்பட்ட ஏற்பட போகும் விளைவுகளை இப்படத்தின் மூலம் காணமுடிகிறது.

சீனா மற்றும் வியட்நாமில் இப்போதும் யோகியாக கொண்டாடும் போதிதர்மனை நம்மில் பலருக்கும் தெரியாமல் போனதுதான் வருத்தம். குங்பூ களையில் அதிரடி ஆக்ஷன் சேர்த்திருக்கிறார் பீட்டர் ஹெயின். தன் பார்வையாலையே ஒருவரை நோக்கு வர்மத்தில் கட்டுப்படுத்தும் டாங்லீ பல காட்சிகளில் மிரளவைக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் "முன் அந்தி சாரல் நீ", " யம்மா யம்மா காதல் பொன்னம்மா", " இன்னும் என்ன தோழா" போன்ற பாடல்கள் மிகவும் அருமை. தமிழர்களே மறந்துபோன ஒரு தமிழனின் வீரத்தையும், வரலாற்றையும் நம்மிடம் கொண்டுசேர்த்த பெருமை எ.ஆர். முருகதாஸையே சேரும்.:love::love:
 
#9
எனது பார்வையில் அஞ்சலி

இது பழைய படம் தான். ஆனா எனக்கு ரொம்ப பிடித்த படம். இந்த படம் பற்றிய எனது கண்ணோட்டத்தை இரண்டு விதமா சொல்லலாம். கல்லூரி படிப்பிற்கு முன் பின்.

பொதுவா குட்டீஸ் உள்ள படங்களை ரொம்ப ரசித்து பார்ப்பேன். அம்மாதிரியான படங்கள் நம் குழந்தை பருவத்தை ஞாபகப்படுத்தும் என்பதால்.

இந்த படம் இன்னமும் மனசுக்கு பிடிச்சது. சின்ன வயசுல இந்த படம் பார்த்துட்டு வந்தப்போ என் அக்காக்கள் என் தொல்லை தாங்காம இவ ஏன் எங்களுக்கு தங்கையா பொறந்தானு எங்க அம்மா கிட்ட கேட்ட காலமும் உண்டு. ஆனா அதே அக்காக்கள் தாயா பார்த்துகிறது வேற விஷயம். இப்படி பல இளம் வயது நினைவுகள் இந்த படத்தோடு உண்டு.

கல்லூரியில் எங்களுக்கு படவாரம் உண்டு. அதாவது ஒரு வாரம் மாற்றுதிறனாளிகள் பற்றி வந்த படங்கள் திரையிடப்பட்டு விவாதம் நடக்கும். அப்போ தான் அட இந்த படத்துல மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் பெற்றோர்கள் படும் துன்பங்கள் சொல்லப்பட்டதை உணர முடிந்தது. ( அப்பார்ட்மெண்ட் மீட்டிங் சீன், மற்ற குழந்தைகள் பெற்றோர் வந்து திட்டும் சீன்) . இந்த படத்துல நிறைய சின்ன சின்ன கவிதையா காட்சிகள் உண்டு. பெற்றோர் குழந்தைகள் முன்னாடி அன்பை பரிமாறுவது தப்புனு இருந்த காலகட்டத்துல இயல்பா கணவன் மனைவி அன்பை பரிமாறும் சீன். அஞ்சலி உடன் பிறந்தோர் ஏற்றுக் கொள்ளும் சீன். டே அண்ணானு கூப்பிடும் அழகு. அதே மாதிரி குட்டீஸ் வரும் காட்சிகள் ரொம்ப ரசனையா இருக்கும். முதல் அப்பார்ட்மெண்ட் மீட்டிங் சீன். இப்படி நிறைய. பொதுவா மணிரத்தினம் இயக்கத்துல இளையராஜா இசையில் வந்த நாயகன் அஞ்சலி அக்னி நட்சத்திரம் மெளனராகம் என்னோட எப்போதும் ரசிக்கும் படங்கள். இந்த படங்களில் பிண்ணனி இசை மனதை தாலாட்டும். முடிவு எப்போதும் நான் பார்க்க மாட்டேன் ஆனாலும் பிடித்த படம்
 
Last edited:

Ramya Mani

Well-known member
#10
அலைபாயுதே
என் பதின்பருவத்தில் வந்த படம்.. பார்த்ததும் காதல் கொண்ட மனது ... அப்படித் தான் ஆனேன் நானும்..
கார்த்திக்-சக்தி எனும் காதலர்களின் திருமண வாழ்வினை மிகவும் எதார்த்தமாக, நடுத்தர மக்களின் காதல் திருமணம் மீதான மனோபாவத்தை அழகுடன் இயல்பாக எடுத்தியம்பிய படம்..
மாதவன் டூவீலரில் ஹெட்போன் போட்டுக் கொண்டு, என்றென்றும் புன்னகை என்ற பாடலைக் கேட்டுக் (பாடி) கொண்டு க்ளோசப்பில் கேமராவுடன் ஆரம்பிக்கும் படம் அதே க்ளோசப்பில் மருத்துவமனையில் ஷாலினியுடன் கன்னம் வைத்து உராயும் போது முடியும்... (Starting லே end cardஆ.... ) .. வீட்டிற்குச் சென்றதும் மனைவியைத் தேடி காணாமல், ஒவ்வோர் இடமாய் தேடியலையும் போது ஃப்ளாஷ்பேக்கில் காதல் கதை..
திருமணத்தில் நாயகியை சந்திக்கும் நாயகன்,அவரை கிராமத்து பெண் என்றெண்ணி விடுகிறார். பின்னர் சென்னையில்
மின்சார ரயிலில் கண்டறிந்து.. காதலுடன் ஜொள்ளி, பின் பெண் கேட்டு அவர்கள் வழக்கம் போல மறுத்து விடுகிறார்கள்.. இப்ப ட்விஸ்ட்.. இருவரும் பதிவுத் திருமணம் செய்து அவரவர் வீட்டில் தங்கி விடுகிறார்கள்.. நாயகியின் சகோதரியை பெண் கேட்டு வரும் போது நாயகியையும் அவர்களின் இரண்டாவது பையனுக்கு கேட்க, உண்மை தெரிய வருகிறது. பின்னர் இருவரும் வீட்டிலிருந்து வெளியேறி வாழும் போது விபத்து நேர்கிறது.. நாயகியை கண்டறிந்து குடும்பத்தினருடன் சேர்ந்தனரா என்பது மீதிக்கதை.. காதல் ரசம் ததும்பும் சிநேகிதனே சிநேகிதனை , காதல் சடுகுடு பாடல்கள் செம.. அலைபாயுதே கண்ணா, மாங்கல்யம் பாடல்கள் க்ளாசிக்.. யவனோ ஒருவன் வாசிக்கிறான் பாடல் பிரிவின் துயரம் கூறும்.. செப்டம்பர் மாதம் பாடல் ஜாலி.. பச்சை நிறமே பாடல் உவமை அணி என ரஹ்மானின் இசை தூள்.. காதலர்களின் ஃபேவரிட்.. படம்
 
#11
Munnariyippu

Staring: Mammootty, Aparna Gopinath
Music: Bijibal
Director: Venu.

40634e6d21a3d806135477cfabc009da.jpg
என்னைப் பொறுத்தவரை மம்முட்டியின் மிகச் சிறந்த திரைப்படங்களில் இதுவொன்றென்பேன்.

தனது மனைவியையும் தன் எஜமானியையும் கொன்ற ஒரு கொலைக் குற்றவாளிக் கைதியைச் சிறையில் சந்திக்கிறார் ஒரு பெண் ஊடகவியலாளர். ராகவன் எனும் அந்தக் கைதி தான் அந்தக் கொலைகளைச் செய்யவில்லை என்கிறான்.

ராகவன் மலையாளத்தில் எழுதியிருக்கும் அவனது எழுத்துக்களிலும் அவன் பேச்சிலும் அவன் சிந்தனையைக் கண்டு ஈர்க்கப்பட்டு அவனைப் பற்றி ஆங்கிலத்தில் பிரபல மகசினுக்கு எழுதிப் புகழடைகிறார் அந்த ஊடகவியலாளர்.

தண்டனைக்காலம் முடிவடைந்தும் சிறைச்சாலையை விட்டு வெளியேற விரும்பாமல் இருக்கும் ராகவனை இந்த ஊடகவியலாளர் தனது பொறுப்பில் வெளியே எடுத்துத் தங்க வைத்து அவனுக்கும் அந்தக் கொலைச் சம்பவங்களுக்குமான தொடர்பைப் பற்றி எழுதித் தருமாறு கேட்கிறார்.

ஊடகவியலாளர் கதையை அனுப்ப வேண்டிய இறுதி நாள் நெருங்க நெருங்க, அவருக்கும் ராகவனுக்குமான உணர்வுப் போராட்டம் அருமை. “அடேய் ராகவா! என்ன நடந்துச்சுன்னு சொல்லித் தொலை…!” என்று எங்களையும் கொலைவெறி கொள்ள வைக்கிறான் இந்த ராகவன்.

தான் கொன்றவர்களின் படத்தைத் தலைமாட்டில் வைத்துப் பார்த்துக் கொண்டிருப்பவன், ஏன் அந்தக் கொலைகளைச் செய்தான் என்று ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை எங்களை முடியைப் பிய்த்துக் கொண்டு யோசிக்க வைத்து இறுதியில் அதற்கொரு விடை தந்தார்கள் பாருங்கள்! அதற்காகவே இந்தப் படத்தை பார்க்கலாம்.

மம்முட்டியை விட வேறு யாராலும் இவ்வளவு தத்ரூபமாக நடித்திருக்க முடியுமா தெரியாது. மனிதர் அந்தக் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருந்தார்.

மலையாள சினிமா விரும்பிகள் தவறவிடாது பார்க்க வேண்டிய திரைப்படம் இது.
 
#12
Majili

Staring: Nagachaithanya, Samantha

90507165ca629a4688a91ac0280b3ca5.jpg

சிறு வயதிலிருந்து கிரிக்கெட் கனவோடு இருக்கும் இளைஞன் ஒருவன் அந்தக் கனவை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் காதல் வயப்படுகிறான். அந்தக் காதலுக்காகப் போராடும் நேரத்தில் காதலையும் கனவையும் ஒருங்கே தவறவிட்டு குடிக்கு அடிமையாகிறான்.

அந்த சந்தர்ப்பத்தில் சிறுவயதிலிருந்து அவன் மேல் காதல் கொள்ளும் பெண் அவனை மணக்கிறாள். அவனை அவள் எவ்வாறு குடியிலிருந்து மீட்டெடுத்து நல்வழிப்படுத்தினாள்? முன்னாள் காதலியையே எண்ணி வாடும் அவனோடு எவ்வாறு இணைந்தாள் என்பதை அழகாக ரசனையாகச் சொல்லியிருக்கிறார்கள்.

நாகசைதன்யாவும் சமந்தாவும் உண்மையில் கணவன், மனைவி என்பதாலோ என்னவோ அவர்களுக்கான கெமிஸ்ட்ரி, பிசிக்ஸ் எல்லாம் நன்றாகவே இந்தத் திரைப்படத்தில் வேலை செய்திருக்கிறது.

கிரிக்கெட் கனவு கொண்டவனுக்கு அதன் சார்பாகவே வரும் வாய்ப்பு, மனைவியின் உணர்வுகளையும் புரிந்து கொள்ள ஏதுவாகின்றது.

அழகான காதல் திரைப்படம். தெலுங்கு பட விரும்பிகள் தவற விடாமல் பார்க்க வேண்டிய ஒன்று.
 
#13
High way

Staring: Alia Bhat, Randeep Hooda
Music: A.R.Rahman
Director: Imtiaz Ali

b6b859dcb42aa42eeac10618ed2d0c0e.jpg

பொதுவாக எனக்கு இந்த எதிர்மறை ஹீரோக்களைப் பிடிப்பதில்லை. நடைமுறையில் இதெல்லாம் சாத்தியமா? எதற்காக இவ்வாறு படம் எடுக்கிறார்கள்? என்று திட்டும் ரகம்.

ஆனால் முதன்முறையாக ஒரு கடத்தல்காரனின் மீது அன்பு கொண்டது இந்தத் திரைப்படத்தில் தான். படம் பார்த்து முடித்தும் கூட இதன் தாக்கத்திலிருந்து வெளிவரப் பல நாட்கள் எடுத்தன.

நல்ல வசதியான வீட்டுக் கதாநாயகி, திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கும் வேளையில் சந்தர்ப்பவசத்தால்ர கடத்தப் படுகிறாள். காவல்துறைக்குப் பயந்து நாயகியோடு ஓடிக் கொண்டிருக்கும் நாயகன் ஒரு கட்டத்தில் அவளை ஒரு காவல் நிலையத்தில் விட்டுப் பெற்றோரிடம் போகுமாறு பணிக்கிறான். ஆனால் அவளோ அவனிடமே திரும்பிச் செல்கிறாள்.

இது சாத்தியமான ஒன்றா? பெரும் வீதிகளில் ஒளித்து ஒளித்துப் பயணித்த அந்த சில நாட்கள் அவளுக்கு அவனைப் புரிந்து கொள்ளப் போதுமானதா?

பெண்களுக்கு வீட்டினராலேயே ஏற்படும் பாதுகாப்பின்மை எவ்வாறு வெளிமனிதனிடம் அதைத் தேடி ஓக வைக்கிறது என்பதை நெத்தியிலடித்தாற் போல் சொல்லிச் சென்றிருக்கிறது இந்தத் திரைப்படம்.

நடித்தவர்கள் அனைவருமே யார் யார் நடிகர்கள் என்றதை மறக்கச் செய்து அந்த அந்தப் பாத்திரங்களாகவே மாறி எங்களைக் கதையை விட்டு நகர விடாமல் செய்திருக்கிறார்கள்.

இறுதி முடிவு இதுதான் யதார்த்தம் என்றாலும் கூட வேறு மாதிரி இருந்திருக்கக் கூடாதா என்று ஏங்க வைக்கிறது. இருந்தாலும் கூட ஒரு திருப்தி பட நிறைவில்.

தவறவிடாமல் பார்க்க வேண்டிய ஓர் அருமையான திரைப்படம்.
 
#14
Raazi

Staring: Alia Bhatt, Vicky Kaushal
Music: Shankar Ehsaan Loy
Director: Meghna Gulzar


41e863d986665cd4d22562dee80c8115.jpg
1971 ஆம் ஆண்டு காலப் பகுதியில் நடைபெறும் கதை. சுட்டித்தனமாகத் திரியும் இளம் பெண்ணொருத்தி தனது நாட்டிற்காகத் தந்தையின் ஒற்றுப் பணியைத் தொடர்கிறாள்.

குறுகிய காலத்தில் பயிற்சி எடுத்து எதிரி நாட்டுக்குச் சென்று கரணம் தப்பினால் மரணம் என்று உயிரைப் பணயம் வைத்து வேலை செய்கிறாள்.

எந்தவிதச் சந்தேகமுமின்றி அவள் எப்படி எதிரி நாட்டுக்குச் சென்றாள்? எவ்வாறு எதிரி வீட்டினுள்ளேயே இருந்து அவர்கள் ரகசியங்களைத் தனது நாட்டிற்குத் தெரிவித்தாள்?

இறுதியில் இவள் யாரெனத் தெரியவருமிடத்து எவ்வாறு தப்பிச் சென்றாள்? எதிரி நாட்டில் அவளுக்கு உதிக்கும் காதல்… அது நிறைவேறியதா? என்பவற்றை மிகுந்த சுவாரசியத்துடன் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

Alia Bhatt ரசிகர்கள் தவற விடாமல் பார்க்க வேண்டிய திரைப்படம்.
 
Last edited:
#15
Joshep

Staring: Joju George, Dileesh Pothan, Malavika Menon
Music: Anil Johnson
Director: M.Padmakumar
.

86012ce8ad73fcceba3a5e4d92dd904d.jpg

விருது ஒன்றுடன் காரில் பயணிக்கும் ஒருவரோடு ஆரம்பிக்கிறது படம். அந்த விருதுக்குரிய நபருக்கும் காரில் பயணிப்பவருக்குமான உறவுமுறையே முதலில் வியக்க வைக்கிறது.

வயதான ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஒருவர் தனது முன்னாள் மனைவியின் மரணத்தைப் பற்றிச் சந்தேகம் கொண்டு துப்புத் துலக்குவதுதான் கதை.

அவர் மனைவியை ஏன் பிரிந்தார்? மகள் என்னவானாள்? மனைவி ஏன் இறந்தார்? என்று எழும் கேள்விகளுக்கு கிடைக்கும் விடை மனதைப் பதற வைக்கிறது. முடிவும் மனதை நெகிழச் செய்கிறது.

பெரும்பாலான மலையாளத் திரைப்படங்கள் போன்று மெதுவாகத்தான் கதை நகர்ந்து செல்கிறது. ஆனாலும் அதையெல்லாம் தாண்டி திரைப்படம் பார்த்து முடித்தும் ஒரு நல்ல படம் பார்த்த உணர்வு.

துப்பறியும் படங்களில் ஆர்வமுள்ளவர்கள் பார்க்கலாம்.
 
#16
Lucifer

Stars: Mohanlal, Prithviraj, Manju Wariyar, vivek Oberai
Director: Prithviraj Sukumaran


7eba6a94e2522dbce86a054ee79fc140.jpg

சம காலத்தில் வந்த நல்லதொரு அரசியல் மலையாளப் படம். தமிழ் டப்பிங்கும் வெளிவந்துள்ளது. பிருத்விராஜ் இயக்கத்தில் என்பது சிறப்பு.

முதலமைச்சராக இருக்கும் அரசியல் பெருந் தலைவர் திடீரென்று இறந்து விடுகிறார். அடுத்த முதலமைச்சர் என்பதில் ஆரம்பிக்கும் போட்டி, பொறாமை, பூசல்கள் என்ற வழக்கமான பிரச்சினைகள் தான். அதை நகர்த்திச் சென்ற விதம் அருமை.

பல வருடங்களாக நல்லாட்சி நடைபெறும் இடத்தில் தலைவரின் மகளின் இரண்டாவது கணவனாக நுழையும் ஒருவன் ஆட்சியையே தனது பண பலத்தின் மூலம் ஆட்டி வைக்கிறான். தலைவர் இறந்ததும் அதைப் பயன்படுத்தி அடுத்த கட்ட அரசியல் இலாபங்களை அவன் ஈட்ட முனைவதும் தலைவரின் மகனா? வளர்ப்பு மகனா? என்று தெரியாத லூசிபர் எனப்படும் ஸ்டீவன் அவன் முயற்சிகளை களையெடுப்பதும் தான் கதை. யார் இந்த லூசிபர் என்பதற்கான விடை கடைசியில்.

அரசியல் இலாபங்களுக்காக அதாவது தமது சொந்த நோக்கிற்காக எம் மக்களை எத்தகைய அழிவுகளுக்கெல்லாம் இட்டுச் செல்கிறார்கள் என்பதைப் பார்க்க மனம் பதறுகிறது.

இந்தத் திரைப்படத்தைப் பார்க்கும் போது மனதிலே பல கேள்விகள். மிஞ்சி மிஞ்சிப் போனால் நூறு வருடங்கள் உயிரோடிருப்போமா? எதற்காக இந்தப் பேராசை மக்களிடம்? பணம் பணம் என்று அதை ஈட்டுவதில் அடுத்தவனைப் பற்றி யோசிக்காது பாதகங்களில் ஈடுபடுவது ஏன்? இப்படிக் கோடிக்கணக்கான பணத்தைச் சேர்த்து அனுபவிப்பதுதான் என்ன?

எத்தனை படங்கள் எத்தனை விதமாக எடுத்தாலும் இவற்றுக்கெல்லாம் விடை கிடைக்குமோ என்னவோ? நம் நாடுகளில் உண்மையான நிம்மதியும் சுதந்திரமும் பிறக்கப் பிரார்த்திப்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை.
 
#17
Awe
Staring: Kajal Agarwal, Nithya Menon, Regina Cassandra
Music: Mark K.Robin
Director: Prashanth Varma


cf4dcb3a0889fd1b612bb5ed97379e0b.jpg
இந்தப் படத்தின் முடிவைப் பார்த்ததும் “வாவ்…!” போடாமல் இருக்க முடியவில்லை. ஒரு உணவகம் மட்டுமே ஒற்றுமையாக இருக்க, அந்த உணவகத்தில் நடைபெறும் அனைத்து சம்பவங்களும் இறுதியில் ஒரு புள்ளியில் இணைகின்றன. அந்த முடிவு எங்களைச் சபாஷ் போட வைத்துத் தலை சுற்ற வைத்து விடுகிறது.

என்னைப் போன்ற அறிவாளிகளால் சற்றும் ஊகிக்க முடியாத ஒரு விடயம். நித்யா மேனன் அறிமுகம் ஆச்சரியத்தின் உச்சம். காஜல், ரெஜினா, நித்யா, தேவதர்ஷினி அனைவருமே நன்றாக நடித்திருக்கிறார்கள்.

திரைப்படத்தில் நானியின் பகுதி சிரிப்பு. ஒரு பெண்ணின் சிறு வயதில் ஏற்படும் பாதிப்பு எதிர்காலத்தில் எந்த நிலைமைக்கு இட்டுச் செல்கிறது என்பதற்கு மனதை ரணமாக்கும் உதாரணமாய் நிற்கிறது இந்தத் திரைப்படம்.

வித்தியாசமான கதைகளை விரும்புபவர்களுக்கு இந்தத் திரைப்படம் நிச்சயமாகப் பிடிக்கும்.
 
#18
Sammohanam

Staring: Sudheer Babu, Aditi Rao
Music: Vivek Sagar
Director: Mohanakrishna Indraganthi


ef7de70b3a5722f982d0b97ee186a90b.jpg
‘நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்’ என தாய், தந்தை, அண்ணன், தங்கை என்ற ஒரு அழகிய குடும்பம். திரைப்படத்தில் நாட்டமில்லாத சிறுவர்களுக்கான காட்டூன் கதை வரையும் நாயகன். நடிகனாக வேண்டும் என்று கனவுடன் இருக்கும் சினிமாப் பைத்தியமான நாயகனின் தந்தை.

இவர்கள் வீட்டை வாடகைக்கு ஒரு படப்பிடிப்புக்காகக் கேட்கவும் தன்னையும் படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்ற ஒப்பந்தத்தோடு வீட்டை வாடகைக்குக் கொடுக்கிறார் தந்தை.

அந்தப் படத்தில் நடிக்கும் புகழ் பெற்ற திரைப்படக் கதாநாயகி தெலுங்கு பேசக் கஷ்டப்பட நாயகன் அவளுக்கு உதவி செய்கிறார். அப்போது இருவரிடையேயும் பரஸ்பரம் உதயமாகும் நட்பு பின்னர் நாயகன் மனதில் காதலாய் பரிணமிக்கிறது.

நாயகி காதலை ஏற்றாரா? திரைத்துறையில் நுழையும் ஒரு பெண்ணின் பிரச்சினைகளின் இன்னோர் வடிவத்தைக் காட்டியிருக்கிறார்கள்.

அழகான காட்சிகளோடு மனதுக்கு இதம் தரும் ஒரு feel good love story.

மென்மையான காதல் கதைகளை விரும்புபவர்கள் தாராளமாக இந்தப் படத்தைப் பார்க்கலாம்.
 

Anuya

Well-known member
#19
எனது பார்வையில் இனிது இனிது


கல்லூரி கால நட்பு ,காதல், சண்டை, துரோகம், வலி , வெற்றி , பிரிவு இப்படி பலத்தரப்பான கலவையான உணர்வுகளை வெளிப்படுத்தும் படம்....

பள்ளி படிப்பை முடித்து விட்டு கல்லூரி வாழ்க்கைக்குள் அடி எடுத்து வைக்கும் 8 மாணவர்கள் ( மது , சித்து , tyson, விமல் , சரவணன், அப்பு , சங்கீதா) சீனியர் மாணவர்களால் ராக்கிங் செய்யப்பட்டு நண்பர்களாகின்றனர் . சீனியர் ஜூனியர் இடையில் நடக்கும் சண்டை , ஜூனியர்ஸ் கேன்டீன் போக கூடாதுனு சீனியர்ஸ் போடுற ரூல்ஸ் , சித்து & மது இடையில் வர காதல் அப்றம் misunderstanding ஆல வர சண்டை , அப்பு & விமல் வரும் போது எப்போவுமே காமெடி தான் , விமல் ஸ்ரேயா mam பின்னால சுத்துறது அவங்கள இம்ப்ரெஸ் பண்ண இங்கிலிஷ் ல poem மனப்பாடம் செய்றது .... tyson சரவணன்காக computer science seat விட்டு குடுக்குறது இப்படி எல்லாமே நம்மல நம்மளோட கல்லூரி காலத்துக்கே கூட்டிட்டு போகுது .....பால் பாண்டி என்னும் கேரக்டர் தான் என்னை மிகவும் கவர்ந்தது. கிராமத்துல தமிழ் mediumல பள்ளி படிப்பை முடித்த பையன் சிட்டில இன்ஜினியரிங் அதுவும் இங்கிலிஷ் mediumல படிக்கும் போது எதிர்கொள்ளுற சூழல்களை பால் பாண்டி கதாபாத்திரத்தின் மூலம் சொல்லுகிறார் இயக்குனர் ...ஸ்ரேயா mamவோட உதவியுடன் படித்து job interviewல இங்கிலிஷ்ல போல்ட்டா பேசுறது அருமை ...

படம் பாக்குற 2.30 மணிநேரமும் நம்மள அவங்களோட சேர்ந்து அந்த கல்லூரி வாழ்க்கையை வாழ்ந்த மாற்றி இருக்குது.... தெலுங்குல வந்த "ஹாப்பி டேஸ்"( happy days ) படத்தின் ரீமேக் தான் இனிது இனிது ....ஆனாலும் ஒரிஜினல் படத்தை விட இனிது இனிது நன்றாக உள்ளது ... படம் முடியும் போது farewell song " கல்லூரி தாயே " பாடல் பார்க்கும் போது இன்னும் 1 இயர் தான் இருக்கு farewellகுனு ரொம்ப பீல் ஆகுது .....நம்ம கல்லூரி வாழ்க்கையை திரும்பி ஒரு முறை பார்த்த மாதிரி ஒரு பீல் கண்டிப்பா கிடைக்கும் இனிது இனிது படம் பார்த்து முடிக்கும் போது .....:love::love:
 
#20
Badla
Staring : Amithap Batchan, Tapsi Pannu

53c127146f4a1e49961dc644fabc5e25.jpg
விருது வாங்கிய ஒரு தொழிலதிபர் இளம் பெண் டாப்ஸி. திருமணமாகி சிறு பெண் குழந்தையும் உண்டு. அவ்வாறிருக்க ஒரு நாள் ஹோட்டல் அறையொன்றில் இறந்து கிடக்கும் வேறொரு ஆண் மகன் அருகில் கைது செய்யப்படுகிறார்.

இந்த வழக்கிலிருந்து இவரைக் காப்பாற்ற வரும் வழக்கறிஞராக அமிதாப் பச்சன் அவர்கள் தான் ஒரு மகா நடிகன் என்பதை இந்தத் திரைப்படத்திலும் நிரூபிக்கிறார்.

படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் எல்லாம் இல்லை. டாப்ஸியை வழக்கிலிருந்து வெளிக் கொணர உண்மையை தனது பாணியில் அறிய முயன்று அதற்குத் தீர்வு காண முயல்கிறார் அமிதாப். தனது தொழில் திறமையை அவரிடமும் காட்டி அவரையே சோதிக்கும் டாப்ஸி நடிப்பில் வெளுத்து வாங்குகிறார்.

கொலையுண்டவருக்கும் டாப்ஸிக்குமான தொடர்பு, அவர்கள் ஏன் அந்த ஹோட்டலுக்குச் சென்றார்கள்? யார் அந்த நபரைக் கொன்றிருக்கக் கூடும்? கொலை செய்ததற்கான முன்பகை என்ன? அனைத்து விபரங்களையும் அறியத் திரைப்படத்தைப் பாருங்கள்.

கதையின் இறுதித் திருப்பம் அருமை. துப்பறியும் கதை விரும்பிகள் நம்பிப் பார்க்கலாம்