சுழலில் சிக்கிய பூந்தளிரே - கதை திரி

sudharavi

Administrator
Staff member
#1
ஹாய் பிரெண்ட்ஸ்,

ரம்யா சந்திரன் அவர்கள் "சுழலில் சிக்கிய பூந்தளிரே" என்கிற தலைப்போடு போட்டியில் இணைகிறார்கள்.
 
Last edited:
#2
சுழலில் சிக்கிய பூந்தளிரே...1
அதிகாலை ஐந்து மணி....
ஆர்ப்பாட்டமில்லாத அந்த அடுக்குமாடி குடியிருப்பில் அதிக அளவு சத்தத்தில் சுப்ரபாதம் ஒலித்துக் கொண்டிருந்தது....


கௌசல்யா சுப்ரஜா ராம
பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட நர ஸார்தூல
கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்

உத்திஷ்டோத்திஷ்ட கோவிந்த
உத்திஷ்ட கருடத்வஜ
உத்திஷ்ட கமலா காந்தா
த்ரைலோக்யம் மங்களம் குரு

மாத சமஸ்த ஜகதாம் மது கைடபாரே
வக்ஷோ விஹாரிணி மனோகர திவ்ய மூர்த்தே
ஸ்ரீ ஸ்வாமினி, ச்ரிதஜன ப்ரிய தான சீலே
ஸ்ரீ வேங்கடேச தயிதே தவ சுப்ரபாதம்

பாடலின் சத்தம் காதினை கிழித்தாலும் ஆழ்ந்த உறக்கத்தில் போர்வைக்குள் சுருண்டு இருந்தால் , அவள்....
சில மணித்துளி நேரங்களுக்குப் பிறகு அவள் மேல் ஏதோ கனமான பொருள் ஒன்று வந்து விழுந்திட பதறி அடித்துக் கொண்டு எழுந்து அமர்ந்தாள்... தன் மீது விழுந்த பொருள் என்னவாக இருக்கும் என்று தேடியவளுக்கு, அவள் அருகில் கிடந்த துடைப்பக்கட்டை
' நான் தான் உன் மேல் விழுந்தேன்' என்பது போல அவளைப் பார்த்து கேலி செய்வது போல் தெரிந்தது ..
அதே நேரம் சற்று பயத்துடன் விழிகளை துடைப்பத்தின் மீது இருந்து திருப்பி கதவின் அருகில் பார்க்க அங்கே உச்சகட்ட கோபத்தில் அவளை முறைத்தவாறு நின்றிருந்தார் , பரிமளா....

அவரது கோபம் முகமே சொல்லியது இன்று அவளுக்கு எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று...
'வெள்ளிக்கிழமை அதுவுமா தொடப்பக்கட்டையிலேயே அடி வாங்கி விட்டோமே 'என்று உள்ளுக்குள் கலங்கியவள் வெளியில் பயந்துடன் அவரது முகத்தை பார்த்து,
'' மன்னிச்சிடுங்க அத்தை.. அசதியில கொஞ்சம் அதிகமாகவே தூங்கிட்டேன் " என்று அவள் வார்த்தையை முழுதாக முடிக்கும் முன்பே,

"ஏண்டி உனக்கு எல்லாம் கொஞ்சம் கூட கூச்ச நாச்சமே இருக்காதா?? ..அதெப்புடி டி இன்னொருத்தவங்க வீட்டில வந்து உக்காந்துகிட்டு தண்டச் சோறு சாப்டுகிட்டு இருக்கோமேன்னு என்று கொஞ்சம் கூட சூடு சொரணையே இல்லாமல் இப்படி சூரியன் வர்ற வரைக்கும் இழுத்து போத்திகிட்டு தூங்கிட்டு இருக்கவ‌... அப்புறம் வீட்டு வேலைகளை எல்லாம் யாரு செய்றது...அங்க முடியாம கொடக்கிறாளே உங்க அம்மா....அவளா வந்து செய்வா??.. சொல்லுடி
ஏதோ போனபோகுதுன்னு என் புருசனோட தங்கச்சி , தங்கச்சியோட புள்ளைன்னு ஓசி சோறு போட்டா.... உனக்கு ரொம்ப ஏத்தமா போச்சா?? " என்று காலையிலேயே வார்த்தைகளால் அவளை நோகடிக்க...
சட்டென்று படுக்கையிலிருந்து எழுந்தவள்,
" மன்னிச்சிடுங்க அத்த....நேத்தெல்லாம் வேலை தேடி அலைஞ்சதுனால கொஞ்சம் டயர்டா இருந்துச்சு.. அதனால தான் ரொம்ப நேரம் தூங்கிட்டேன் போல...
இதோ பத்து நிமிஷத்துல குளிச்சுட்டு வந்துர்றேன்.. நீங்க போய் ஹால்ல உட்காருங்க ...அத்த
நா வந்து டீ போட்டுத் தர்றேன்.." என்று பவ்வியமாக பேசிவிட்டு குளியல் அறைக்குள் நுழைந்தாள், பவதாரணி.....


சொன்னது போல் குளித்து முடித்து அழகான மஞ்சள் நிறத்தில் சிவப்பு வண்ண பூக்கள் பூத்திருந்த சுடிதாரை அணிந்து கொண்டு கீழே வந்தவள்
பூஜை அறையில் நுழைந்து….
சாமி படங்களுக்கு மலர்களை தூவி….ஆரத்தி காட்டியவள்….
மனமுருகிக் கடவுளை வணங்கினாள்……

பின்பு சமையலறைக்குள் நுழைந்து அனைவருக்கும் தேவையானதை செய்து முடித்தாள்...கூடத்தில் அமர்ந்திருந்த தன் அத்தைக்கு
டீயைக் கொடுத்தவள், கையில் வைத்திருந்த டிரேயோடு தன் தாய் இருந்த அறைக்குள் நுழைந்தாள்....
விழிகளில் வழியும் கண்ணீரோடு படுத்த படுக்கையாகக் கிடந்தார், பவதாரணியின் தாய் வைதேகி....
காலையில் தன் மகளுக்கு கிடைத்த வார்த்தைப் பரிசின் விளைவால், அவரது கண்ணில் கண்ணீர்....
பக்கவாதம் வந்ததால் நடக்க இயலாமல் படுத்த படுக்கையாக கிடந்த வைதேகி தனக்குத் தேவைப்படும் எல்லாத்துக்கும் மற்றவரை சார்ந்து வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்....
கையில் இருந்த டிரேயை டேபிளில் வைத்துவிட்டு தாய்க்கு தேவையான காலை கடன்களை செய்து முடித்தவள்....
தாய்க்கு பல் துலக்கி , வாய் கொப்பளிக்க வைத்து.. அவருக்கு மெதுமெதுவாக பாலையும் புகட்டினாள்.... கண்களில் கண்ணீரோடு தன் மகளின் முகத்தை பார்த்த வைதேகிக்கு நெஞ்சம் கனத்துப் போனது... வாழ வேண்டிய வயதில் இந்த வீட்டிற்கு ஓடி உழைத்துக் கொட்டும் தன் மகளுக்கு தன்னால் எந்த உதவியும் செய்ய முடியவில்லையே !!!..என்று நெஞ்சில் எழுந்த வலியோடு மகளின் முகத்தை அவர் பார்த்துக் கொண்டிருக்க ,தாயின் முகத்தை வைத்தே அவரது மனநிலையை அறிந்த பவதாரணி மெதுவாக தாயின் விழிகளில் இருந்த கண்ணீரை துடைத்து விட்டாள்...

" கடவுள்னு ஒருத்தர் இருக்கார்.. ம்மா ..எனக்கு என்ன பிரச்சனை வந்தாலும் என்னால சமாளிக்க முடியும்.‌ நீங்க எதையும் மனசுல போட்டுக் குழப்பிக்காதீங்க.." என்றவள் அந்த அறையிலிருந்து வெளியேறினாள்....
இவ்வளவு நேரம் மனதில் இருந்த தைரியம் ஏனோ இப்போது இருந்த இடம் காணாமல் போனது..‌ படியில் ஏறிய போது....
ஒவ்வொரு படியாக ஏறி தன் அறைக்கு முன்னால் வந்து நின்றவள் அவளது அறைக்கு எதிரில் இருந்த அறையை வெறித்தவாறு நின்று விட்டாள்,
அந்த அறையில் யாரும் இல்லை. ஆனால் அந்த அறைக்குச் சொந்தக்காரன் இந்த வீட்டை விட்டு சென்று ஐந்து வருடங்கள் கடந்து இருந்தது,... காரணம் இவர்கள் இருவரும்..
தன்னால் தானே குடும்பத்தை விட்டு அவன் பிரிந்திருக்கிறான் என்று தோன்றினாலும் ஏதோ தன் தாய் மாமாவின் பேச்சை மீறி இந்த வீட்டை விட்டு செல்ல இருவருக்கும் மனம் வரவில்லை... அதனால் தான் எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் இருவரும் பொறுத்துக் கொள்கிறார்கள்.. அந்த அறைக்கு அருகில் இருந்த அறைக்குள் நுழைந்தவள்,

" சைலு காபி கொண்டு வந்திருக்கேன்" என்றாள் மெல்லிய குரலில்...
உடனே...

" அங்க வச்சிட்டு வெளியே
போடி" என்ற வார்த்தைகள்
தாரணியின்‌ காதில் விழ இது எப்போதும் நடப்பதுதானே என்று நினைத்தவாறு அறையிலிருந்து வெளியேறினாள்...
ஆனால் தன்னை விட இரண்டு வயது சின்ன பெண் தன்னை மரியாதை குறைவாக பேசியதை எண்ணி சற்றே கலங்கிய கண்களை துடைத்துக் கொண்டு தன்னிடமிருந்த ஓடிச்சென்ற தைரியத்தை வரவழைத்துக்கொண்டவள் மீண்டும் சமையலறைக்குள் நுழைந்து அனைவருக்கும் தேவையான சமையலை சமைக்க ஆரம்பித்தாள்.....

அது சற்றே வசதி படைத்த பெரிய வீடு தான்……
கீழே பேரிய ஹால்….வலது பக்கம் பூஜை அறை….இடது பக்கம்
சமையலறை..‌அதை ஒட்டினாற் போல்,ஒரு படுக்கையறை…..
அதை போன்று வலது புறமும் ஒரு படுக்கையறை…..வலது பக்கம், முதல் தளத்திற்கு செல்வதற்கான படிக்கட்டுகள்.‌….
வலது புற அறை….தாரணியின் அத்தை , மாமா அறை….
சமையலறைக்கு அடுத்து இருந்த அறையில் , அவளது தாய்
வைதேகி இருந்தார்…..
முதல் தளத்தில் இடது புறம் இருந்த முதல் அறை தாரணியுடையது….
அதற்கு அடுத்து ஒரு அறை உள்ளது….
அதே போன்று வலது புறமும் இரண்டு அறைகள்….உள்ளன..சமைத்து முடித்தவள் தன் தாய்க்கு தேவையான உணவை ஊட்டி விட்டு அவருக்கு தேவையான மருந்து மாத்திரைகளை எடுத்து கொடுத்தவள்....
அத்தையிடம் சொல்லிக்கொண்டு இன்றும் ஒரு நேர்முகத்தேர்வுக்கு கிளம்பிவிட்டாள்....
இது வரை வாழ்க்கையில் துன்பத்தையே கண்டவளுக்கு மீண்டுமொரு எதிர்பாராத வேதனையைத் தர காத்துக்கொண்டிருந்தது விதி...!!...

ஒரு ஆட்டோ பிடித்து நேர்முகத் தேர்வுக்குத் தான் செல்ல வேண்டிய அலுவலகத்திற்கு முன்னால் வந்து இறங்கினாள்... எட்டுத் தளங்களைக் கொண்டதாக இருக்க வேண்டும் அவ்வளவு பெரிய அலுவலகமாக அது இருந்தது....
பொன்னிறத்தில் பொறிக்கப்பட்டிருந்த அதன் பெயரை இதழ் விரித்து வாசித்தாள், ஏகே குரூப் ஆஃப் கம்பெனிஸ்..

ரிசப்ஷனில் இருந்த பெண்ணிடம் தான் வந்திருக்கும் தகவலை தெரிவித்தவள், அவர்கள் நான்காவது தளத்தில் நேர்முகத்தேர்வு நடைபெறுகிறது என்று சொல்ல..... நான்காவது தளத்திற்கு படிக்கட்டின் வழியாக ஏறிச் சென்றாள்....
அந்த தளத்தின் உள்ளே நுழைந்தபோது கிட்டத்தட்ட 40க்கும் மேற்பட்டவர்கள் நேர்முகத் தேர்வுக்காக காத்திருந்தார்கள்... அவர்களுள் ஒருவராய் இவளும் சென்று அமர்ந்து கொண்டாள்.....
தன்னுடைய இருக்கையில் அமர்ந்தவாறு சிசிடிவி கேமராவை பார்த்து கொண்டிருந்த அவனின் விழிகளில் விழுந்தாள், அவள் சட்டென்று இதழில் தோன்றிய குரூர புன்னகையோடு,
" நான் விரிச்ச வலையில கண்டிப்பா நீ மாட்டுவடி.... என்றான் அவன்.....

சிறிதளவு மகிழ்ச்சியை மட்டும் கண்ணில் காட்டி தீராத சோகத்துக்கு பெண்ணவளை தள்ளிய விதி....
மீண்டுமொரு பாதாளச் சிறைக்குள் அவளைத் தள்ளிவிட தன் ஆட்டத்தை துவங்கியிருந்தது.......பெண்ணவள்
விதியின் சதியில் சிக்குவாளா??
இல்லை மதியால் விதியை வெல்வாளா??..... கேள்விக்கான விடையுடன் அடுத்த பகுதியில்.....
 
#3
சுழலில் சிக்கிய பூந்தளிரே..2

காலை பத்து மணி அளவில் நேர்முகத்தேர்வு துவங்கியது....
தாரணியின் முறை வருவதற்குள் அவளைப் பற்றி சிறு விளக்கம்....
பவதாரணியின் சொந்த ஊர், குளித்தலை தாளுக்காவில் உள்ள லாலாபேட்டை.....
காவிரித்தாயின் கரையோரம் அமைந்துள்ள இவ்வூரானது செழுமையாக காட்சியளிக்கும்....
செல்வம் _ வைதேகி தம்பதிகளுக்குப் பிறந்த ஒற்றைப் பெண் பிள்ளை
தான் பவதாரணி....
தாய் தந்தையற்ற செல்வம் அடிக்கடி வேலை நிமித்தமாக உப்பிடமங்கலத்திற்க்குச் செல்வார்.......
அங்கே சிறிய அளவில் தேங்காய்
மட்டைகளை உரித்து நாராக மாற்றி...‌கயிறாக திரிக்கும் தொழிலை செய்து வந்தார், வைதேகியின் அண்ணன் பரமசிவம்....
இவர்களது தாய் தந்தையர் ஒரு வெடி விபத்தில் இறந்து விட,
பதினெட்டு வயதில் பதிமூன்று வயது தங்கைக்கு தாய், தந்தையாய் மாறினார், பரமசிவம்.....
வேலை நிமித்தமாக சந்தித்துக் கொண்ட செல்வமும், பரமசிவமும் நண்பர்களாக மாறினர்.......
அன்று துவங்கிய இருவரின் நட்பும் பிரிவின்றி வலுப்பெற்று வளர்ந்தது...
இருபத்தியெட்டு வயதில் பரமசிவத்தின் வளர்ச்சியைக் கண்டு, தானே வலிய வந்து தன் மகளைத் திருமணம் செய்து வைத்தார், பரிமளாவின் தந்தை
நாகராஜன்.....
ஊரறிய கோலாகலமாகத் திருமணம் நடந்தது....
இருபத்தி மூன்று வயது பூர்த்தியாகிய தங்கை திருமணம் செய்ய காத்திருக்க ....தமயன் திருமணம் செய்தது, ஊராரின் வாய்க்கு அவல் ஆகிப்போனது....
படித்து முடித்ததும் தமயனது அலுவலகத்திலேயே கணக்கு வழக்கை பார்ப்பது, மேற்பார்வையிடுவதுமான பணிகளை செய்து கொண்டிருந்தாள் , வைதேகி... அவ்வபோது அங்கு வந்து செல்லும் செல்வத்தின் பார்வை பெண்ணவளைத் தீண்டிச் சென்றிடும்.....அவளும் அவனை
ஓரவிழியால் ஒருமுறையேனும் கண்டு விடுவாள்........

காலையிலிருந்து மாலை வரை அண்ணனது அலுவலகத்தில் வேலை செய்பவள் , களைத்துப் போய் மாலை வீட்டிற்குச் சென்றதும், அங்கே அண்ணி என்ற பெயரில் வீட்டிற்கு வந்த மகராசி அனைத்து வேலைகளையும் செய்ய சொல்லி வைதேகியை உண்டு இல்லை என்று ஆக்கி விடுவாள்....
இப்படியே 3 மாதங்கள் கடந்த நிலையில் பரிமளா கருத்தரித்திருந்தாள்....
பரிமளாவின் தந்தை சற்றே செழிப்புடன் இருந்தமையால் மகாராணி போல் வாழ்ந்த பரிமளாவுக்கு இங்கே வீட்டு வேலை செய்வது சற்று முடியாத காரியம் என்பதால் அனைத்து வேலைகளையும் வைதேகியின் தலையில் கட்டிவிடுவார்.....
மசக்கை வேறு பரிமளாவைப் பாடாய் படுத்த ஒரு தாய் ஸ்தானத்திலிருந்து அண்ணியை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொண்டார் வைதேகி.... ஏழாம் மாதம் வளைகாப்பு செய்து தன் மகளை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிட்டார் நாகராஜன்... இதற்கிடையில் இன்னும் வைதேகிக்கு திருமணம் செய்து வைக்கவில்லை என்று அரசல்புரசலாக ஊரார் பரமசிவத்திடம் கேட்க,

" மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கிறேன் " என்பதோடு முடித்துக் கொண்டார் ...
அவருக்கும் தன் தங்கைக்கு திருமணம் செய்து வைக்க ஆசைதான்.. ஆனால் நல்ல மாப்பிள்ளை கிடைத்தால் தானே திருமணம் செய்து வைக்க முடியும்... ஏனோ தன் கூடவே இருக்கும் தன் நண்பனின் நினைவு அவருக்கு வரவில்லை போல.....
பத்தாவது மாதத்தில் அழகிய ஆண் மகவை ஈன்றெடுத்தாள் பரிமளா...மேலும் மூன்று மாதங்கள் தன் மகளை வீட்டில் இருக்க வைத்துவிட்டு சற்று உடல் நலம் தேறியதற்குப்பிறகு உப்பிடமங்கலத்திற்கு அனுப்பிவைத்தார், நாகராஜன்....
வந்து ஒரு வாரம் கடந்த நிலையில்.....
பரிமளாவின் நடவடிக்கைகள் மாறத் துவங்கியது....
வீட்டுக்குள் தன் கணவன் நுழையும் போதே வைதேகியின் மேல் ஏகப்பட்ட புகார்களை தன் கணவனிடம் சொல்லத் துவங்கினாள், பரிமளா ...
" வீட்டில் ஒரு வேலை செய்வதில்லை, குழந்தை பெற்ற பச்சை உடம்புக்காரி என்னையே எல்லா வேலையும் செய்ய வைக்கிறாள்" என்று புகார் மேல் புகார் சொல்ல ...ஒரு கட்டத்தில் வெறுத்துப்போன பரமசிவம் கோபத்தில் வைதேகியை அடிக்க கை ஓங்கி விட்டார் ...
அதேநேரம் உள்ளே நுழைந்த செல்வத்தின் கண்ணில் அந்தக் காட்சி பட்டுவிட சட்டென்று நண்பனின் அருகில் நெருங்கி அவரின் கையை பிடித்து தடுத்து நிறுத்தி,
" சொந்த தங்கச்சியா இருந்தாலும் தோளுக்கு மேல் வளர்ந்த பொண்ண அடிக்கிறது நல்லால்ல சிவம்....எதுவா இருந்தாலும் கொஞ்சம் பொறுமையா பேசு " என்று சொல்ல...
அவர்களுக்கு இடையில் குறுக்கே புகுந்த பரிமளா,
" எங்க வீட்டு பொண்ண நாங்க அடிக்கிறோம், கொல்றோம், என்னமோ பண்றோம்... அத மூணாவது மனுஷனான நீங்க
வந்து தட்டிக் கேட்கணும்னு அவசியமில்லை" என்ற வார்த்தைகளை விட சட்டென்று செல்வத்திற்கு முகம் வாடிவிட்டது... நண்பனுக்காக பேசவும் முடியாமல் , மனைவியை அதட்டி பேசவும் முடியாமல் பரிதவித்த பரமசிவம் ஏதோ பேச வாய் திறக்க... சட்டென்று அந்த வார்த்தைகளை உதிர்த்து இருந்தார் செல்வம்.....

" சிவம் எனக்கு உன் தங்கச்சியை பிடிச்சிருக்கு ..நான் அவள நல்லா பாத்துக்குவேன்னு ஓ மனசுல பட்டா, எனக்கு கல்யாணம் பண்ணி குடு" என்றார்...
' இவ்வளவு நாட்கள் அருகில் இருந்தும் தன் நண்பனுக்கு தன் தங்கையை திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் ஏன் தனக்கு தோன்றவில்லை...
இவனை விடவா ஒரு நல்ல மாப்பிள்ளையை என் தங்கைக்கு நான் பாத்திட முடியும்...' என்று மனதிற்குள் நினைத்துக் கொண்ட பரமசிவம் தயக்கத்தோடு தங்கையின் முகம் பார்க்க அவளது முகத்தில் தெரிந்த மலர்ச்சியே அவளுக்கு விருப்பம் என்று சொல்லாமல் சொல்லிட... அடுத்துவந்த முகூர்த்தத்தில் தன்னால் ஆன நகைகளை அதிக அளவில் தங்கைக்கு போட்டு நல்லபடியாக திருமணம் முடித்து தன் நண்பன் செல்வதோடு தன் தங்கையை லாலாபேட்டை அனுப்பி வைத்தார்....
அதன்பிறகுதான் பரிமளாவுக்கு வேலை பலு அதிகமாகியது.. குழந்தையையும் கவனித்துக்கொண்டு வீட்டு வேலைகளையும் செய்ய ரொம்பவே சிரமப்பட்டு போனார்...
வைதேகி இருக்கும் வரை தெரியவில்லை, இல்லாதபோது அவள் இல்லாமல் போய்விட்டாலே என நொந்து கொண்டார்....
இப்படியே இரண்டு வருடங்கள் கடந்து விட இதோ பரிமளா பரமசிவம் மகனின் இரண்டாவது பிறந்த நாளினைக் கொண்டாடுவதற்காக தன் மனைவியோடு வந்திருந்தார், செல்வம்.....
அவர்களுக்குத் திருமணமாகி இரு ஆண்டுகள் கடந்த நிலையில் இன்னும் வைதேகி கருத்தரிக்கவில்லை... அரசல்புரசலாக ஊரில் உள்ளவர்கள் அதைக் கேட்டாலும், அதற்கு தகுந்த பதில் அளித்த செல்வம் தன் மனைவியின் மேல் அன்பை கொட்டிக் கொட்டி அவளை மகாராணி போல் பார்த்துக்கொண்டார் ....
பிறந்தநாள் விழாவின்போது ஆசையாக தன் அண்ணன் மகனைத் தூக்க வந்த வைதேகியைத் தடுத்து நிறுத்திய பரிமளா ,
" குழந்தை பெற தகுதி இல்லாத
நீயெல்லாம் ஏ பையனை தொடாதே.." என்று வார்த்தைகளால் சாடிட....
உள்ளம் நொந்து போன வைதேகி தன் கணவனோடு அந்த நிமிடமே கிளம்பிவிட்டார்...
வீட்டிற்கு வந்தவள் தன் கணவனின் நெஞ்சில் புதைந்து அழுகையில் கரைந்திட , அவளுக்கு ஆறுதல் சொல்லி தூங்க வைத்தார், செல்வம்... மறுநாள் ஏதோ வேலையாக கிளம்பிக் கொண்டிருந்த செல்வம் தன் மனைவியை தேட சோர்வாக அறையிலிருந்து வெளியே வந்த வைதேகி மயங்கிச் சரிவதைக் கண்ட செல்வம்...ஓடிச் சென்று தாங்கிக்கொண்டார்... பதறியவர், அருகில் இருந்த மருத்துவமனையில் வைதேகியை சேர்த்திட மருத்துவர்கள் அவரைப் பரிசோதித்துவிட்டு வைதேகி கருவுற்று இருப்பதாக சொன்னார்கள்‌...
கணவன் மனைவி இருவரும் அளவுகடந்த மகிழ்ச்சியில் திளைத்தனர்...
உடனே இந்தச் செய்தியை தாய்மாமனான பரமசிவத்துக்கு தெரிவித்திட உடனே கிளம்பிவிட்டார் , பரமசிவம் ...
தான் தாய் மாமனான சந்தோசத்தில் தங்கைக்குத் தேவையானதை வாங்கிக்கொண்டு தங்கையின் இல்லம் வந்தவர் தங்கையை உச்சிமுகர்ந்து தான் வாங்கி வந்ததை கொடுத்து விட்டு பத்திரமாக இருக்கும்படி சொல்லிவிட்டு சென்றார் ...ஏழாம் மாதத்தில் தன் மனைவிக்கு தானே அனைவரையும் அழைத்து முன்நின்று வளைபூட்டு விழாவை வெகு சிறப்பாக நடத்தி முடித்திருந்தார் செல்வம்...
தாய் வீட்டு சீதனத்தை குறைவில்லாமல் செய்தார் ,
பரமசிவம்...

வேண்டாவெறுப்பாக அங்கே வந்திருந்த பரிமளா தனியாக நின்று நடப்பதை கவனித்தாரே ஒழிய தாயில்லா பெண்ணுக்குத் தாய் ஸ்தானத்திலிருந்து தான் தான் அனைத்தையும் செய்ய வேண்டும் என்று தோன்றவில்லை..‌.
அப்போதுதான் அவர்களின் புதல்வனுக்கு மூன்று வயது நிரம்பியிருக்க.. எட்டு வைத்து வைதேகி அருகில் சென்றவனை கைகளில் ஏந்தி கன்னத்தில் இதழ் பதித்த வைதேகி ...அவனை தன் மடியில் அமர வைத்துக் கொள்ள...
அந்த பிஞ்சுக்குழந்தை தன்
பிஞ்சுகா கரங்களால் வைதேகியின் மேடிட்ட வயிற்றினை தடவி விட்டவாறே,

" பாப்பா எப்ப வரும் அத்த‌.." என்று இதழ் பிரித்து மழலைக் குரலில் வினவிட..

" சீக்கிரமே பாப்பா வந்துடுவா டா தங்கம் .." என்று வைதேகி சொன்னார்... அதன் பிறகு தன் வீட்டிற்கு தன் தங்கையை அழைத்துச் செல்கிறேன் என்று பரமசிவம் கேட்டதற்கு தன் மனைவிக்கு தானே தாயாய் இருந்து அனைத்தையும் பார்த்துக் கொள்கிறேன் என்றார், செல்லம் ஏனென்றால் அவருக்கு தெரியும் அங்கே சென்றால் தன் மனைவியை தான் பரிமளா கஷ்டப்படுவார் என்று அதனால்தான் அனுப்பவில்லை...
மனதில் எழுந்த வலியோடு தன் மனைவி, மகனை அழைத்துக் கொண்டு பரமசிவம் கிளம்பி விட்டார்....

நாட்கள் அதன் போக்கில் நகர பத்தாவது மாத இறுதியில் ஒரு அழகிய பெண் மகவை ஈன்றெடுத்தாள், வைதேகி.‌. தனக்கு மகள் பிறந்து விட்ட சந்தோஷத்தில் அனைவருக்கும் இனிப்புகளை வழங்கி கத்தி ஆர்ப்பாட்டம் செய்து விட்டார் செல்வம்... அதன் பிறகு இந்த நல்ல செய்தியை பரமசிவத்துக்கு தெரிவித்துவிட தாய்மாமன் பங்கிற்காக தங்கச் சங்கிலியோடு வந்துவிட்டார் ...
மருத்துவமனையில் குழந்தையின் கழுத்தில் தங்கச் சங்கிலியை போட்டவர் ரோஜாப்பூ கலரில் இருந்த பெண் மகவை தன் கைகளில் ஏந்தி ஆசை தீரக் கொஞ்சி விட்டு கிளம்பினார்...
அவர்கள் தங்கள் மகளுக்கு பவதாரணி என்று பெயரிட்டு ஒரு இளவரசி போன்றே வளர்த்தனர்... பவதாரணி பெயருக்கு ஏற்றார் போல் இந்த தரணியை ஆளக்கூடிய இளவரசியை ஒத்த தோற்றத்தோடு வலம் வந்தாள்... சுற்றியிருக்கும் அனைவரையும் தன் பேச்சால் கவர்ந்து விடுபவள், தன் குறும்பாலும், சுட்டித் தனத்தாலும் எளிதில் அனைவரது மனதிலும் இடம் பிடித்து விடுவாள்....
அதே போன்று பவதாரணி பிறந்து இரு வருடங்களுக்கு பிறகு பரமசிவம் பரிமளா தம்பதிகளுக்கு ஒரு பெண் மகவு பிறந்தது .‌அதற்கு சைலஜா என்று பெயரிட்டு இருந்தனர்...


அனைவரது வாழ்வும் நன்றாக தான் சென்றுகொண்டிருந்தது.... இதோ பவதாரணி 12ஆம் வகுப்பை முடித்து விட்டாள் ...
இனி கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டும் என்ற நிலை வந்தபோது தான் விடுதியில் தங்கி படித்துக் கொள்கிறேன் என்று சொன்னாள்...
ஏனோ பெற்றோர்களுக்கும் அதுவே சரியென்று தோன்றிட நல்ல மதிப்பெண்கள் பெற்று இருந்த பவதாரணிக்கு கரூரில் மிகப்பெரிய பெண்கள் கல்லூரியில் இடம் கிடைத்து இருந்தது ...கல்லூரிக்குச் சென்ற அவளுக்கு தேவையானவற்றை செய்து முடித்துவிட்டு லாலாபேட்டை க்கு வந்தனர்...
இன்னும் ஒரு வார காலத்தில் கல்லூரியில் சென்று சேரவேண்டும் என்ற நிலையில் தான் பிறந்து வளர்ந்த ஊரினை ஒருமுறை சுற்றி வந்த பவதாரணி ஆசைதீர காவிரி ஆற்றில் குளித்து முடித்து வீட்டிற்கு வந்தாள்...
ஏனோ அன்றிரவு அனைவருக்கும் மனம் காரணமின்றி சஞ்சலப்பட்டது.... அனைவரும் உணவு உண்டு விட்டு தூங்கிவிட நடுஇரவில் விழித்த பவதாரணி எதர்ச்சியாக வீட்டிற்கு வெளியே வர அந்த நேரத்தில்தான் காவிரி தாயானவள் கொந்தளித்து கோபத்தோடு தன்னிடம் இருந்த நீரை எல்லாம் வாரி கரையோரம் இருந்த மக்களின் மீது தெளித்து கொண்டிருந்தாள்......
திடீரென்று ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில்
கரையோரம் இருந்த இவர்களது வீடும் வெள்ளத்தில் மூழ்கி ஆற்றோடு அடித்துச் செல்லப்பட்டது.... இரவெல்லாம் வெள்ளம் அதிகமாக இருந்ததால் யார் யார் எங்கே எங்கே இருக்கிறார்கள் என்பதை கூட கண்டுபிடிக்க இயலவில்லை... மறுநாள் நண்பகல் வேளையில் பவதாரணியையும், வைதேகியையுய் மீட்புக்குழுவினர் மீட்டு கரை சேர்த்தனர் ..நல்லவேளையாக இருவருக்கும் ஒன்றும் ஆகவில்லை.....
ஆனால் செல்வத்தை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை...

இயற்கையின் ஆர்ப்பாட்டத்தில்
நிம்மதியோடு மகிழ்ச்சியும் தண்ணீரோடு சென்று விட....
இனி பெண்ணவளின் வாழ்வு???

 
#4
சுழலில் சிக்கிய பூந்தளிரே..3

மேலும் ஒரு நாள் கழிந்து இருந்த நிலையில் செல்வத்தின் உடல் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வர பரமசிவம் சென்று அது செல்வம் தான் என்பதை உறுதிப்படுத்தி விட்டு வந்தார்.. தன் தங்கை மற்றும் தங்கை மகளிடம் எவ்வாறு இந்த உண்மையை சொல்வது என்று தயங்கியவாறு அவர் வீட்டிற்குள் நுழைய ஏற்கனவே அருகிலிருந்த வீட்டில் இருந்து அலைபேசி வாயிலாக அந்த செய்தி இங்கே வந்தடைந்திருந்தது...
தன் கணவன் இறந்த செய்தி கேட்டு அந்த நிமிடத்திலேயே வைதேகிக்கு பக்கவாதம் கண்டுவிட்டது ...
அவர் படுத்த படுக்கையாகி விட்டார்.......
தந்தை இல்லை என்ற உண்மையை உணர்ந்து கொள்ளவே தாரணியால் முடியவில்லை.. மனம் கனத்துப் போனது, எதிலும் கவனத்தைச் செலுத்த முடியாமல் சுயநினைவு அற்றவளாய் எங்கயோ வெறித்த பார்வை பார்த்தவாறு அமர்ந்து விட்டாள் ‌...
பக்கவாதத்தில் படுத்துவிட்ட தங்கையைக் கவனிப்பதா இல்லை துக்கத்தில் துவண்டுபோய் அமர்ந்திருக்கும் தங்கை மகளை கவனிப்பதா என தெரியாமல் பரமசிவம் துவண்டு போனார்....
இப்படி துவண்டுபோய் இருக்கும் பெண்ணை விடுதியில் சேர்த்து கல்லூரியில் படிக்க வைக்க பரமசிவத்திற்கு மனது வரவில்லை...தன்
வீட்டிலிருந்தே தாரணி கல்லூரிக்குச் சென்று வர அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்தார்....
அப்போது பரமசிவத்தின் மகன் கல்லூரியில் இளங்கலை படிப்பை முடித்து விட்டு மேற்படிப்பு படிக்க ஆயத்தமாகிக் கொண்டிருந்தான்.....
அவரது மகள் பதினொன்றாம் வகுப்பில் அடி எடுத்து வைத்திருந்தாள்......

ஏதோ விருந்தாளியாக இரண்டு நாட்கள் இருப்பதுக்கும் காலம் முழுவதும் அங்கேயே இருப்பதற்கும் வித்தியாசம் நிறைய இருக்கிறது என்று தாரணிக்கும் அவளது தாய்க்கும் தெரியும் ..இருந்தாலும் பரமசிவத்தின் பேச்சை தட்ட முடியாது, அவர்கள் அங்கேயே தங்கிக் கொள்ள ஆரம்பித்தனர்....
வயசுப்பெண் இருக்கும் வீட்டில் தன் பையன் இருந்தால் வெளியில் இருப்பவர்கள் தவறாக பேசக் கூடும் என்று நினைத்த பரமசிவம் தன் மகனை விடுதியில் தங்கி படித்துக் கொள்ள சொன்னார்.... பரிமளாவின் வளர்ப்பில் வளர்ந்த அவனுக்கு தன் அத்தையும் அவர் மகளும் இங்கு இருப்பதில் துளிகூட விருப்பம் இல்லை...
என்னால் போக முடியாது என்று அவன் பிரச்சனை செய்ய கோவத்தில் தன் மகனை அடித்து விட்டார்‌, பரமசிவம்.....
பிறந்ததிலிருந்தே தன்னை எவரும் அடிக்காமல் அந்த வீட்டில் இளவரசனாக வளர்ந்தவனை யாரோ ஒருத்திக்காக தன் தந்தை தன்னை அடித்த கோபத்தில்,
"" இனிமே இந்த வீட்டுப் பக்கமே வரமாட்டேன்"" என்று சொல்லி சென்றுவிட்டான்.. இதோ ஐந்து வருடங்கள் கடந்துவிட்டது, இளங்கலை, முதுகலை படிப்பை முடித்துவிட்டு வேலைக்கு செல்ல நினைக்கிறாள் தாரணி ...
இதற்கு இடையில் கல்லூரி செல்லும் ஒவ்வொரு நாளும் வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்து முடித்துவிட்டு தன் தாயையும் கவனித்து விட்டு தான் செல்வாள்....
தன் அத்தை என்னதான் கடுஞ் சொற்கள் சொன்னாலும் மாமாவிற்காக பொறுத்துக் கொள்வாள் தாரணி......

இன்று.....

ஒவ்வொருவராக நேர்முகத்தேர்விற்கு அந்த அக்றையினுள் செல்வதும் பிறகு சிறிது நேரத்திலேயே சோர்ந்துபோன முகத்தோடு வெளியே வருவதுமாக இருந்தனர்....நேரம் பதினொன்றை கடந்ததற்குப் பிறகு தாரணியின் பெயர் அழைக்கப்பட்டது, எழுந்து நின்று தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவள் கையில் இருந்த
கோப்பை கெட்டியாக பிடித்துக்கொண்டு அந்த அறையின் அருகில் சென்றவள்... கதவை இருமுறை தட்டினாள்...

" உள்ளே வாங்க"" என்ற அனுமதிக் குரல் வந்ததுக்கு பின்பு உள்ளே நுழைந்தாள்.....
அந்த அறையின் உள்ளே நுழைந்த அவளின் கண்களில் முதலில் பட்டது, இருக்கையில் ஒய்யாரமாக சாய்ந்து கொண்டு பெண்ணவளை கண்களால் எடை போட்டு அமர்ந்திருந்த அவன் தான்..
மஞ்சள் நிறச் சுடிதாரில் இடுப்பிற்கு கீழ் இருந்த கருங்கூந்தலை பின்னலிட்டு இருந்த பெண்ணவள்....அதை முன்னால் போட்டிருக்க...
மை தீட்டப்படாத அகன்ற பெரிய கண்களில் சற்றே கலக்கத்தோடு அவன் முன் இருந்த இருக்கையில் வந்து அமர்ந்தவள் , தன் கோப்பை அவன் முன்னால் நீட்டினாள்... அவள் நீட்டிய சோப்பை வாங்கி சரி பார்த்து கொண்டவன், சில பல கேள்விகளை கேட்க ஒவ்வொரு கேள்விக்கும் அசராமல் பதில் அளித்தால் பெண்ணவள்......
அவளது பதிலில் இவன்தான் ஆடிப்போய் விட்டான்...
பின்பு ஒரு சில நிமிடங்கள் அவளை வெளியே காத்திருக்கச் சொன்னவன், அவளுக்கு பணியில் சேர்வதற்கான
பணி நியமன ஆணையுடன் இன்னும் சில தகவல்களை சேர்த்து அச்சிட்ட தாளைக் கொண்டு வரச்சொன்ன் ....
அதே போன்று, கொண்டு வந்ததும் அவளை உள்ளே அழைத்தவன் அதைப் படித்துப் பார்த்து கையொப்பம் இடச் சொன்னான்‌...அவளும் படித்து பார்த்து விட்டு கையெழுத்து போட்டாள்.....அங்கேயே நின்றிருந்த ஜிஎம்மை வெளியில் அனுப்பியதற்கு பிறகு நிறுத்தி நிதானமாக தன் முன்னால் அமர்ந்திருந்த அவளை ஒருவித குரூரத்தோடு பார்த்தவன் தன் முன்னால் இருந்த தன்னுடைய நேம் போர்டைத் திருப்பி அவள் பார்க்குமாறு வைத்தான்,
ஆதித்ய குமார்...என்ற பெயர் பலகையை படித்த பவதாரணி அதிர்ச்சியுடன் எதிரில் இருந்தவனின் முகத்தை பார்க்க அவனோ இதழில் ஏளன புன்னகையோடு,
" என்னோட கம்பெனிக்கு உன்ன வெல்கம் பண்றேன் , மிஸ்.பவதாரணி செல்வம்..."

""அத்..தான்.... அத்தான் இது உங்க கம்பெனியா??? "" என்ற பவதாரணி அதிர்ச்சியோடு கேட்க இருக்கையிலிருந்து எழுந்தவனின் முகத்தில் இருந்த புன்னகை நொடியில் காணாமல் போயிருந்தது....
"" இந்த கம்பெனி என்னோடது தான்... அதே மாதிரி இப்ப நீ அப்பாயின்ட் ஆய்ருக்கிற பிஏ போஸ்ட்டிங்‌‌..அதுவும் எனக்குதான்..இந்த நிமிஷத்துல இருந்து நீ என்னுடைய பிஏ....‌......இட்ஸ் கிளியர்...அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் இந்த வேலை பிடிக்கலைன்னா உன்னால உடனே போக முடியாது.. அதை எல்லாத்தையும் தெளிவா நீ படிச்சு பார்த்து தான் கையெழுத்து போட்டு இருக்க... அதனால உன்னால இப்பவே இந்த வேலையை விட்டு போக முடியாது.. அட்லீஸ்ட் ஆறு மாசமாவது நீ இங்க வேலை செஞ்சுதான் ஆகணும்....நாளைக்கு காலைல இருந்து நீ டியூட்டில ஜாயின் பண்ணிக்கலாம் இப்ப நீ போகலாம், மிஸ் பவதாரணி""" என்றான் அழுத்தமாக....

இன்னும் அதிர்ச்சியிலிருந்து வெளிவராமலேயே அவன் அலுவலகத்தில் இருந்து வெளியேறினால் , பவதாரணி....
அவள் சென்றதும் தன் இருக்கையில் கண் மூடி சாய்ந்திருந்தவனின் அருகில் வந்து நின்றான், ஒருவன்...
ஆள் அரவம் உணர்ந்து விழித்திருந்த பார்த்த ஆதித்யா எதிரில் தன்னை முறைத்துக் கொண்டு நின்றவனைப் பார்த்து புன்னகைத்தவன்,
"" வாடா நல்லவரே!!... இவ்வளவு நேரம் நடந்த அத்தனையும் பாத்திட்டு இருந்திருப்ப... இப்ப என்ன என்னை திட்றதுக்கு வந்தியா!!"" என்று கேட்டான்..

"" நீ பன்றது ரொம்ப தப்பு டா...
என்ன தான் இருந்தாலும் அந்த பொண்ணு ஒ அத்தப் பொண்ணு தானே... எதுக்கு தேவையில்லாம அந்த புள்ளை மேல இவ்வளவு வன்மம்... பாவண்டா அந்த பொண்ணு பாக்க ரொம்ப இன்னசென்ட்டா தெரியுது.. நீ ஏதாவது எக்குத்தப்பா பண்ணி அந்த பொண்ணோட வாழ்க்கையே ஸ்பாயில் ஆயிட்டா என்னடா பண்றது.."""


"" ப்ப்ச்ச்...எப்ப பாத்தாலும் அவளுக்கு சப்போர்ட் பண்ணி பேசாத வினோத் ..எனக்கு கோவம் கோவமா வருது ..அவளால தாண்டா நான் எங்க வீட்டை விட்டு வெளியே வந்தேன்...எங்க அப்பா மொத மொதல்லா என்ன அடிச்சாரு.. இன்ன வரைக்கும் எங்க அப்பா அம்மா தங்கச்சிய பிரிஞ்சிருக்கேன்.. அதுக்கெல்லாம் காரணம் இவ தானே!!.. இவளும் இவளோட அம்மாவும் எங்க வீட்டுக்கு வராம இருந்திருந்தா எங்களுக்குள்ள பிரச்சினையே வந்திருக்காது டா....நானும் வீட்ட விட்டு வந்திருக்க மாட்டேன்..""""" ஏண்டா அப்பா அம்மா தங்கச்சி இருக்க நீயே இப்படி நினைக்கிறியே!!.. அப்பா அம்மா மட்டும் தான் அந்த பொண்ணுக்கு இருந்தாங்க... அப்பா இறந்துட்டாரு, தன்னந் தனியா நின்னவங்களை எப்படி உங்க அப்பா தனியா விட முடியும், சொல்லு பாக்கலாம்... என்ன தான் இருந்தாலும் சொந்த தங்கச்சியாச்சே டா...நாளைக்கு ஓ தங்கச்சிக்கு இந்த நெலம வந்தா இப்புடி தான் நடு ரோட்ல விட்டுட்டு வருவியா??..மாட்ட தானே...உனக்கு உன் தங்கச்சி பெருசுனா... உங்க அப்பாவுக்கு அவரோட தங்கச்சி பெருசுடா....
அதனாலதான வீட்டுக்கு கூட்டிட்டு வந்தாரு.. அதே மாதிரி அவர் சொல்றது நியாயம் தானே .ஒரு வயசு பையன் இருக்க வீட்டுல முறைப் பொண்ண கொண்டு வந்து தங்க வைக்க மாட்டாங்க.. ஊர்ல இருக்கிறவங்க நாலுபேரு நாலுவிதமா பேசத்தான் செய்வாங்க..அதை மனசுல வச்சுக்கிட்டு தான் கொஞ்ச நாள் வெளியே தங்கி படிக்க சொன்னாரு, வேற எதுவும் சொல்லலையே ..
அதுக்கு ஏன்டா நீ ரொம்ப ஓவரா ரியாக்ட் பண்ண....""""" ப்ப்ச்ச் ..தெரிஞ்சு பேசுறியா தெரியாமல் பேசுறியான்னு தெரியல வினோத்.. அது என் வீடு என் குடும்பம் மத்தவங்களுக்காக அத விட்டுட்டு நான் வெளியே வரணும்னு அவசியம் கிடையாது.. அவளுக்காக எப்படி அப்ப என்ன போய் வெளியே தங்கி படிக்க சொல்லலாம்.. எதா இருந்தாலும் நான்தான் முடிவு பண்ணுவேன். அதே அவளுக்காக வேற யாரும் ஏ வாழ்க்கையில முடிவெடுக்குறது எனக்கு பிடிக்காது.. அதனால் தான் நானே டிசைட் பண்ணி வீட்டை விட்டு வெளியே வந்தேன்...."""

"" சரிடா உன் வாழ்கைல நீ தான் எல்லாத்தையும் டிசைட் பண்ணுவ ஒத்துக்குறேன்.. இப்ப அந்த பொண்ணுனால தானே நீ வீட்டை விட்டு வெளியே வந்து நல்லா படிச்சு ...ஓன் பிசினஸ் ஆரம்பிச்ச....இப்ப நல்ல நெலமைல இருக்குற ..
அப்புடி பாத்தா அந்த பொண்ணுக்கு தான் நீ தேங்க்ஸ் சொல்லணும்‌. எதுக்கு அந்த பொண்ண பழி வாங்க நினைக்கிற...."""

"" புத்தர் மாதிரி எனக்கு உபதேசம் பண்ணாத வினோத் ..வேறு எந்த விஷயத்துலயும் நீ சொல்றத நா கேட்பேன்...ஆனா இதுல கேக்க முடியாது... நா முடிவெடுத்தது முடிவெடுத்தது தான்.. இதுக்கு மேல அவ படுற கஷ்டத்தைப் பார்த்து கண்டிப்பா நான் சந்தோசப்படத்தான் போறேன்.‌"""என்றவன் தன் கார் சாவியை எடுத்துக்கொண்டு அந்த அறையில் இருந்து வெளியேற... ஒரு பெண்ணின் மீது இந்தளவுக்கு வன்மத்தை வாரி இறைத்து விட்டு செல்பவனை நினைத்து வினோத்திற்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது... அதே நேரம் தாரணியை நினைத்துப் பாவமாகவும் இருந்தது......
 
#5
சுழலில் சிக்கிய பூந்தளிரே...4

நேர்முகத் தேர்வை முடித்தோடு மட்டுமன்று கையில் வேலையோடு வீட்டிற்கு கிளம்பினால் பவதாரணி....
ஐந்து வருடத்திற்கு முன்பு அவள் கண்ட ஆதிக்கும் இப்போது இருக்கும் ஆதிக்கும் மலையளவு வித்தியாசத்தை உணர்ந்தாள்...
இருந்தும் வருடங்கள் கடந்து , அவனைக் கண்களால் கண்டதிலேயே
பெண்ணவளுக்கு உள்ளம் நிறைந்து போனது......
அவனை அறிந்து கொண்டதில் அவள் தன்னிலை மறந்திருக்க,
ஆடவனவன் உதிர்த்த வார்த்தைகளில் இருந்த ஏதோ ஒன்று அவளின் மனதில் பயத்தை விதைத்தது.......
அந்த பயம் எதனால் என்பதை பெண்ணவள் உணர்ந்திருந்தால், எதிர்வரும் வினைகளை தடுத்திருக்கலாம்....


தவறென்று தெரிந்தும்
தயக்கமின்றி
தாரகையவளை
தண்டித்திட துணியும்
ஆண்மகனின்...
பிடியில்....
தவறேதும்
இழைத்திடாத
அன்றில்
மலர்மேனியாள்
தன் வாழ்வை
இழப்பாளா????
இல்லை....
மனதில்
நிறைந்திருப்பவனின்
வாழ்வில் அன்பை
நிறைப்பாளா???..

இனிமேல் மீண்டும் அலுவலகத்திற்கு தினமும் வரவேண்டும் என்ற காரணத்தினால் ஆட்டோவை விடுத்து பஸ்ஸில் செல்வதற்கு முடிவெடுத்து அருகிலிருந்த பேருந்து நிலையத்தில் நின்று இருந்தால், தாரணி...
தன் கையில் கட்டப்பட்டிருந்த கை கடிகாரத்தை பார்க்க அதுவோ மணி மூன்று என்று காட்டியது... இந்த வேளையில் பேருந்து இருக்குமா ?? என்ற யோசனையோடு அவள் நின்றிருக்க, அவளை உரசினார் போல் வந்து நின்றது ஒரு ஆட்டோ...யோசனையில் நின்று இருந்தவளின் முன்பு ஆட்டோ ஒன்று வந்து நிற்கவும் சற்று பயந்தவளாய் நிமிர்ந்து பார்த்த தாரணி...இதழ் விரித்து கேள்வி கேட்கும் முன்பே ஓட்டுநர் இருக்கையில் இருந்து இறங்கி வந்தான்...அவன்

"" அட வேணுங்களா!!!.. எங்க போகனும்னு சொல்லுங்க... கொண்டு போய் விடுறேன் !!""என்று அவன் கேட்க.... தாரணியோ ஆட்டோ வேண்டாம் என்று தலையசைத்து,.

"" நான் போய்க்கிறேன் எனக்கு ஆட்டோ வேணாங்க.."" என்றாள்

"" என்னங்க... வேலை முடிஞ்சு யாரும் வரல போல.. நீங்க மட்டும்தான் ஒண்டியா நின்னுகிட்டு இருக்கீங்க...பஸ் வர்றதுக்கு எப்படியும் அரை மணி நேரமாவது ஆகும் ...நீங்க எங்க போகனும்னு சொன்னா நாங்கொண்டு போய் விடுறேனுங்க"'' என்று பேசிக்கொண்டே செல்ல... தாரணிக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது..

"" அதான் நானே போய்கிறேன்னு சொல்றேன்ல.. எதுக்கு தேவையில்லாம என்கிட்ட பேசிட்டு இருக்கீங்க.. போங்க ஆட்டோ தேவைப்படுறவங்களுக்கு மட்டும் ஹெல்ப் பண்ணுங்க.. தேவையில்லாதவங்ககிட்ட பேசி அவங்க உங்களோட ஆட்டோவுல வரணும்னு வற்புறுத்தாதீங்க..."'" என்று சற்று எரிச்சலுடன் பேசிக்கொண்டிருக்கும்போதே எதிரில் நின்றவனின் பார்வை நாலாபுறமும் சுழல ஆரம்பித்தது.....

மூணு மணி என்பதால் அலுவலகம் முடிந்து எவரும் வெளிவரவில்லை.. அதே போன்று அருகில் இருக்கும் பள்ளியில் இருந்தும் எவரும் வெளிவரவில்லை.. சொல்லப்போனால் சற்று ஆள் அரவமின்றி தான் காணப்பட்டது, அந்த இடம் ..மனதில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அவள் கையை பிடிக்கச் சென்றான் , அவன்... எதைப்பற்றியும் யோசிக்காமல் தன் காலில் கிடந்த காலனியைக் கழட்டி அவனது கன்னத்தில் அடித்து இருந்தால், தாரணி....


""" ச்சீ....பொறுக்கி...கொன்னுடுவேன் ஞாபகம் வச்சுக்கோ.. பேசிட்டு இருக்கும்போதே எதுக்குடா எங்கையோ புடிக்க வர்றே... மத்த பொண்ணுங்க மாதிரி என்னயும் நினைச்சிட்டியா??....தொட்டு பேசற வேள வச்சுக்கிட்ட கொன்னுடுவேன் பாத்துக்க... ஆளயும் மூஞ்சியும் பாரு.. பொறுக்கி""" என்றவள் மீண்டும் அவனது செயலுக்கு கண்ணத்தில் தன் கையாலும் ஒரு பரிசை கொடுத்து விட்டு சற்று தள்ளி நின்றிருக்க அதே நேரம் அவள் வீட்டிற்கு செல்வதற்கான பேருந்து வந்தது....
அவனது முகத்தை திரும்பியும் பாராமல் தாரணி பேருந்தில் ஏறியதும் பேருந்து கிளம்பியது... செல்லும் அவளையே அடிவாங்கிய கன்னத்தில் கைவைத்துக் கொண்டு நின்ற நிலையில் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான், அவன்...
அவனது தோள்பட்டையில் ஒரு சில நிமிடங்களில் ஏதோ கரம் பதிய பின்னால் திரும்பிப் பார்க்க அவனை பார்த்து புன்னகைத்தவாறு , நின்றிருந்தான், மற்றொருவன்....

"" என்ன மாப்பிள இன்னைக்கு மொத மொத ஒரு பொண்ணுகிட்ட செருப்பால அடி வாங்கியிருக்க...என்ன சங்கதி""'


""" ப்ப்ச்ச் இன்னா மச்சான் பண்றது.... பொண்ணு பாக்க அழகா இருந்தா....ஏதோ பேசனும்னு தோனுச்சு அதான் பேசிப் பாத்தேன்... நோ ரெஸ்பான்ஸ்...அவ கைல ஏதோ பூச்சி ஊருச்சு டா...அத தட்டி விடத்தான் அவ கைய புடிக்கப் போனேன்...ஆனா அவ என்ன தப்பா நெனச்சு செருப்பால அடிச்சிட்டா.... பாத்துக்கலாம் விடு டா,இன்னைக்கு தப்பிச்சுட்டா , இன்னொரு நாளு மாட்டாமலா போயிருவா....!!..அன்னைக்கு வட்டியும் முதலுமா திருப்பி தந்தர்றேன்.."" என்று தன் கன்னத்தை தடவியவாறே சொன்னவனை பார்த்து அருகில் நின்றவனுக்கு பயத்தில் உடல் வெடவெடக்க ஆரம்பித்தது....


""டேய் குமாரு ஏதோ அந்த பொண்ணு தெரியாம அடிச்சுடுச்சு... அதுக்காக நீ உன் வேலையை காட்டிடாத...
இப்ப தான் ஜெயிலுக்கு போகாம வெளியே வந்து நிம்மதியா இருக்கோம்...... மறுபடியும் ஏதாவது பண்ணி உள்ள போயிடாத...நீ இல்லாதப்ப இங்க இருக்க பயலுகளுக்கு எல்லாம் துளிர் விட்டுப்போய்டுச்சு... அவங்க பாட்டுக்கு இஷ்டத்துக்கு வசூல் பண்ணிக்கிட்டு அலையறாங்க ..மறுபடியும் நீ உள்ள போய்ட்டா அவங்க கொடிதான் இங்க பறக்கும்.. நான் சொல்றது உனக்கு புரியுதா.!!! இல்லையா....!!'""

""" இங்க பாரு திலீப் நீ சொல்றது எனக்கு நல்லா புரியுது... இதுவரைக்கும் நான் எந்த பொண்ணு கிட்டயாவது பேசி நீ பாத்திருக்கியா??""


'" இல்லையே ....நீ இதுக்கு முன்னாடி ரவுடித்தனம் பண்ணிக்கிட்டு அலஞ்ச போதும் சரி, கட்ட பஞ்சாயத்து பண்ணும் போதும் சரி பொண்ணுங்கள கண்டாவே ரெண்டு அடி தள்ளி நின்னு தான் பேசுவ... அப்படி இருந்தவன் , இன்னைக்கு ஒரு பொண்ணு கிட்ட பேசுறத பாத்ததும் எனக்கே ஆச்சரியமா இருந்துச்சு ..அதான் தள்ளி நின்னு பாத்துக்கிட்டு இருந்தேன்... ஆமா !!!..நீ ஏ அந்த பொண்ணு கிட்ட போயி பேசுன.."""

""" அது வேற ஒன்னும் இல்ல டா.. இந்த பொண்ண இதுக்கு முன்னாடி நான் ஏற்கனவே பாத்துக்குறேன் ....இவள ஏ வாழ்க்கையில மறக்கவே முடியாது...இவள மறுபடியும் நா பாப்பேன்னு நெனச்சு கூட பாத்ததில்ல....."""

"" இதுக்கு முன்னாடி இந்த பொண்ண இந்த ஊருல நா பாத்தது இல்ல மச்சான்....ஒருவேளை இந்த புள்ள ஊருக்கு புதுசோ!! என்னவோ!!.."""

"" ம்ம்ம்....நீ சொல்றதும் சரிதான்....இவ வேற ஊருன்னு நெனைச்சுகிட்டு இருந்தேன்.. ஆனா இப்ப பாத்தா இங்க தா சுத்திக்கிட்டே இருக்குது....இந்த விஷியம் எனக்கு தெரியாம போயிடுச்சு.... நமக்கும் காலாகாலத்துல கல்யாணம் பண்ணனுன், செட்டிலாகனும்னு எண்ணம் வருதுடா......
ம்ம்... வயசு வேற ஏறிக்கிட்டே போகுது.. இப்பவே இருபத்தி அஞ்சு ஆச்சு ...நமக்கு என்ன அப்பன், ஆத்தாவா இருக்காங்க பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணுறதுக்கு... நம்மளே பாத்து கட்டிக்க வேண்டியதுதான்.. இந்த பொண்ண கட்டினா நல்லா இருக்கும்னு தோணுச்சு..‌..
அதனாலதான் பேச்சுக் கொடுத்து எந்த ஏரியான்னு விசாரிக்கலான்னு நெனச்சேன்...‌ம்ஹீம் ஒன்னுத்தையும் கண்டுபிடிக்க முடியல...முன்னபின்ன பொண்ணுங்க கிட்ட பேசி பழகிருந்தா .... அவங்கிட்ட தள்ளி நின்னு பேசணும் ..அவுங்க அனுமதி இல்லாம கைய தொடக்கூடாதுன்னு தெரிஞ்சுருக்கும்....நமக்குத்தான் அந்த பழக்கமே இல்லையே!!!.. கைய புடிக்கப் போனதுக்கே பட்டுனு அடிச்சுட்டா... ம்ம். பரவாயில்லை விடுடா ..விடுடா.. என்ன இருந்தாலும் நாளைக்கு நம்ம வீட்டுக்கு மருமகளாக வரப்போறப் பொண்ணு..அவ தானே அடிச்சுட்டு போறா!!!.. விடு பாத்துக்கலாம்..""" என்று ரசனையோடு பேசிக் கொண்டிருந்தவனை விழிகள் விரித்து ஆச்சரியமாக பார்த்து கொண்டிருந்தான் திலீப்....

""" பார்ரா நீ இப்படி எல்லாம் கூட பேசுவியா!!!.. ஆச்சரியமா
இருக்கே"""


""" அது என்னமோ அந்த பொண்ண பார்த்தா மட்டும் அப்படி தோணுது டா... ..சரி விடு பார்ப்போம் ..இனிமே இந்த ஏரியாவில நானே ஆட்டோ ஓட்டுறேன் ...எனக்கு பதிலா எவனையாவது இந்த ரூட்டுல இருந்து வேற ரூட்டுக்கு மாத்தி விடு..."" என்றவாறு தன் ஆட்டோவில் ஏறி சிட்டாக பறந்து விட்டான் குமார் என்ற அக்ஷய குமார்......

அக்ஷய் குமார் இரண்டு வயது குழந்தையாக இருக்கும் போது அவனது பெற்றோரிடமிருந்து கயவர்களால் கடத்தி வரப்பட்டு சென்னையில் அனாதையாக விடப்பட்ட குழந்தை...
குழந்தையாக இருந்த அவனை திருட்டுத் தொழில் புரிபவர்கள் எடுத்து வளர்த்திட அவர்களின் தொழிலையே தன் தொழிலாக மாற்றிக் கொண்டான்... ஆரம்பத்தில் பிட்பாக்கெட் திருடுதல் மற்றவர்களிடமிருந்து செயினை வழிப்பறி செய்தல் போன்ற சிறு சிறு வேலைகளில் ஈடுபட்டு கொண்டிருந்தவன்...
தன் 15வது வயதில் தன்னை அடிக்க வந்த ஒரு பெரியவரின் கையை உடைத்து விட்டு முதன்முதலாக சிறைவாசம் கண்டான்.... சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அவளை சேர்த்திட அங்கிருந்து கொண்டு படிக்கும் பிள்ளைகளை கண்டு ஏனோ அவனுக்கு படிப்பின் மீது ஆர்வம் திரும்பியது... உள்ளே இருக்கும் வரை தன்னால் முயன்றவரை படிக்க ஆரம்பித்தான்... அதன் பிறகு
வெளியே வந்தவன் எங்கே சென்றான் என்று எவருக்கும் தெரியவில்லை...

-தன்னுடைய 22 வதுவயதில் மீண்டும் சென்னைக்கு நுழைந்திட..... அவனை வளர்த்தவர்கள் மீண்டும் அந்த புதை குழிக்குள் அவனை தள்ள நினைத்தனர்... வேறு வழி இல்லாமல் திருடுவதை மட்டும் விட்டுவிட்டு கட்ட பஞ்சாயத்துக்கு மட்டும் செல்வான்.. அவனது 24வது வயதில் யாரையோக் காப்பாற்ற மீண்டும் அவன் அடித்ததில் ஒருவனுக்கு காயம் ஏற்பட்டது....அதன் பிறகு திடீரென்று ஞானோதயம் ஏற்பட்டது அவனுக்கு... அதன் பிறகு தன் சொந்த உழைப்பால் ஆட்டோ ஒன்றை விலைக்கு வாங்கி இதோ இன்றுவரை ஆட்டோ ஓட்டிக் கொண்டிருக்கிறான்‌.. அவன் அடிதடியை மறந்து நல்ல மனிதனாக வாழ நினைத்தாலும் முன்பு அவன் செய்த தொழிலை நினைத்து அவனை காண்பவர்கள் பயந்து நடுங்கி ஒடுங்கத் துவங்கினர்....

எவ்வளவு பெரிய அயோக்கியனாக இருந்தாலும் அவனது மனதிலும் அன்பு காதல் எனும் உணர்வுகள் முளைப்பது இயல்புதானே !!.. இதோ இன்று அது தாரணியின் தயவால் அக்ஷ்ய் குமாரின் மனதிலும் விதையாய் தூவப்பட்டுவிட்டது... அது வளர்ந்து மரமாகி பூ வைத்து மணம் பரப்பி டுமா???... இல்லை முளையிலேயே கருகிப்போய்விடுமா ???..
காலத்தின் கையில் பதில்....
 
#6
சுழலில் சிக்கிய பூந்தளிரே..5"" தனக்கு வேலை கிடைத்ததை மட்டும் வீட்டில் சொல்லலாமா??.. இல்லை அத்தான் உடைய அலுவலகத்திலேயே வேலை கிடைத்துவிட்டது என்பதையும் மாமாவிடம் சொல்லலாமா?"" என்று யோசனையோடு நடந்து கொண்டிருந்தால், தாரணி.. ஏனோ எவ்வளவு முயன்றும் பேருந்தில் நடந்த நிகழ்வுகளை அவளால் ஒதுக்கித் தள்ள முடியவில்லை.. பேருந்து நிறுத்தத்தில் இருந்து அவளது வீட்டிற்கு செல்ல சிறிது தூரம்‌ நடந்து செல்ல வேண்டும் என்பதால் அவளது கால்கள் இரண்டும் தன்னைப் போல் நடந்து செல்ல ..அவளது நினைவுகள் பேருந்தில் நடந்ததை அசை போட்டது....அந்த ஆட்டோ காரனை திட்டிவிட்டு பேருந்து வந்ததும் பேருந்தில் ஏறினால், தாரணி ..அதிகமாகக் கூட்டம் இருப்பதுபோல் தெரிந்தது.. அதிலும் முக்கால்வாசி ஆண்களே இருக்க சற்றே ஒதுக்கத்துடன் ஒரு சீட்டின் அருகிலிருந்த கம்பியை பிடித்தவாறு நின்றிருந்தாள்....அந்த நேரத்தில் அவளது பின்புறம் யாரோ அவளை உரசியவாறு வந்து நிற்க சட்டென்று பின்னால் திரும்பிப் பார்த்தாள்... ஒரு 45 வயது மதிக்கத்தக்க ஆண் தான் அவ்வாறு நின்று இருந்தார்...

அவரை முறைத்து விட்டு தள்ளி நின்றால், தாரணி.. மீண்டும் அது போலவே ஒட்டிக் கொண்டு நின்றார், அந்த பெரிய மனிதர்... மீண்டும் மீண்டும் தாரணி தள்ளி நின்று கொள்ள மீண்டும் மீண்டும் அவர் செய்த தவறையே செய்தார்... பேருந்தில் இருந்தவர்கள் அனைவரும் அதை கவனித்தாலும் எனக்கென்ன வந்தது என்பது போல் இருந்து கொண்டனர்...இதே நிலை தொடர்ந்து கொண்டே இருக்கவும் ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை இழந்த தாரணி பின்னால் திரும்பி அவரை பார்த்து , """உங்களுக்கு என்னோட அப்பா வயசு இருக்கும்... கொஞ்சம் கூட புரிஞ்சுக்க மாட்டேங்கிறீங்க.. எல்லாரு முன்னாடியும் அசிங்கப் படுத்த கூடாதுன்னு தான் தள்ளி தள்ளி நிக்கிறேன் ..மறுபடியும் அதே தப்பை செஞ்சா எப்படி ..??..ஏன் இப்படி இருக்கீங்க!!.. உங்களுக்கு என்ன மாதிரி ஒரு பொண்ணு இருப்பாங்க தானே!!.. அவங்கள இப்படி யாராவது செஞ்சா உங்களுக்கு எப்படி இருக்கும்..."" என்று கேட்க அந்த மதிப்புமிக்க பெரிய மனிதர் , "" தெரியாம பட்டுருச்சு "" என்றாரே பாக்கலாம்...தாரணிக்கு கோவம் பொங்கிக் கொண்டு வந்தது..

அவரை தீப் பார்வை பார்த்தாள்.. அவளிடம், "" என்னாச்சும்மா"" என்று கேட்க வந்த ஒரு சிலரை தன் கனல் பார்வையாலேயே அமைதிப்படுத்தியவள்,

"" ஏன் !!.. நீங்கல்லாம் இவ்வளவு சுயநலமாக இருக்கீங்க.. ஒரு பொண்ணுக்கு ஹெல்ப் தேவப்படும் போது , ஹெல்ப் பண்றதுக்கு இவ்ளோ யோசிக்கிறீங்க...தப்ப தட்டிக்கேட்டா கொறஞ்சா போய்டுவீங்க...தனி ஒருத்தரா தப்ப தட்டி கேக்க வேணாம்...

எல்லாரும் சேந்து கேட்கலாமே!!.. இத்தனை பேர் இருக்கீங்களே இதுல ஒருத்தருக்கு கூடவா எழுந்து நின்னு கேள்வி கேக்கனும்னு தோணலை... அந்தளவுக்கு தைரியமில்லாத கோழைங்களா?? ‌நீங்க எல்லாரும்.....ச்ச்சேசே... நீங்க என்ன மாதிரி மனுஷங்க""" என்று அவள் பேசிக்கொண்டிருக்கும் போதே அவள் இறங்குவதற்கான இடம் வந்ததும் இறங்கி கொண்டாள்... ஆனால் மனம் தான் அந்த நிகழ்வை நினைத்து வேதனை அடைந்தது........


பெண்களுக்குத்தான் புதிது புதிதாக எவ்வாறெல்லாம் பிரச்சினைகள் முளைக்கின்றன... வீட்டிலிருந்து வெளியில் வந்தால் சுத்தமாக பெண்ணியத்திற்கு பாதுகாப்பே இல்லை...பிறந்த குழந்தையிலிருந்து வயது முதிர்ந்த மூதாட்டி வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர்......எங்கும் பாதுகாப்பான சூழ்நிலை இல்லை.. நடந்து செல்லும்போது பலரது வக்கிரமான பார்வைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர் ..

நண்பன் என பழகி பேசினால் இறுதியில் அவனும் அவனது குரோதமான முகத்தை காட்டி விடுகிறான்....சொந்தம் என்று பேசினாலும் கூட இறுதியில் அவனும் ஒரு எதிர்பார்ப்புதனை முன்வைக்கிறான்.. பேருந்தில் பயணம் செய்தாலும் கூட சில பல கேவலமான ஜந்துக்களின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி சிரமப்பட நேரிடுகிறது....

வேலை செய்யும் அலுவலகத்தில் கூட கண்ணியமான பெண்களை ஏனோ அவர்களுக்கு அடிபணிய வைத்து தங்களது இச்சையை தீர்த்துக் கொள்ள பயன்படுத்தும் நோக்கத்தோடு வார்த்தைகளையும், பார்வைகளையும் தாறுமாறாக வெளிப்படுத்தும் சில ஆண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்....

இதனாலேயே பெண்கள் எவரையும் எளிதில் நம்ப முடியாத சூழ்நிலை உருவாகி விட்டது..


ஏனோ இதை அனைத்தையும் மனதில் அசை போட்டவள் இறுதியாக தன் வேலையைப் பற்றி எப்படி வீட்டில் சொல்வது என தாரணி நினைத்துக் கொண்டிருந்த போதே அவளது வீடு வந்திருந்தது.. வாசலில் செருப்பை கழட்டி வைத்துவிட்டு உள்ளே நுழைந்தாள்........


அவளே எதிர்பாராத விதமாக ஹாலில் கால்மேல் கால் போட்டு அமர்ந்திருந்தான், ஆதி.. அவனை அங்கு கண்டதும் ஏனோ பெண்ணவளின் மனதில் நிம்மதி பரவினாலும், அலுவலகத்தில் அவன் பேசிய வார்த்தைகள் தந்த தாக்கத்தால் எதுவும் பேசாது தனது அறைக்குச் சென்றவள், தன்னை சுத்தப் படுத்திக் கொண்டு கீழே வந்து சமையலறைக்குள் நுழைந்து அனைவருக்கும் மாலை சிற்றுண்டி செய்யத் துவங்கினாள்... சிற்றுண்டியும், டீயும் எடுத்துக்கொண்டு தாரணி சமையலறையிலிருந்து வெளியே வர அவளது அத்தையும் ஆதியும் கூடவே சைலஜாவும் ஹாலில் அமர்ந்திருந்தனர்.. அனைவருக்கும் கொடுத்தவள் , தன் தாய்க்கு பால் கொடுப்பதற்காக தாயின் அறைக்குள் நுழைந்தாள்... அவள் சொல்லும் வரை பொறுமையாக இருந்தவன், அவள் தலை மறைந்ததும்,

'" இன்னும் எத்தனை நாளைக்கு இவள இந்த வீட்டுல வச்சிருக்க போறீங்க ம்மா... சீக்கிரம் அடிச்சு வெரட்டுங்க.. அப்பத்தான் என்னால நம்ம வீட்டுக்கு வரமுடியும் ...அப்பா இல்லாத நேரம் பார்த்து இப்படி யாரோ மாதிரி மறஞ்சு மறஞ்சு கால முழுக்க என்னால வர முடியாது"" என்றான் சற்று கண்டிப்புடன்,"" ப்ப்ச்ச் எங்கப்பா .... நானும் முயற்சி பண்ணினேன்...அவ போகமாட்டேங்குறா!!.. எனக்கு மட்டும் என்ன ஆசையா கண்ணா இவள இந்த வீட்டிலேயே வச்சுக்குறதுக்கு.. ஏதோ சம்பளம் இல்லாத வேலைக்காரி இந்த வீட்ல மாதிரி இருக்குறா... எல்லா வேளையையும் அவ தலையில கட்டிட்டு நானும் உன் தங்கச்சியும் நிம்மதியா இருக்கோம்...

இன்னும் கொஞ்ச நாளைக்கு பொறுத்துக்கோ.. அவளுக்கு கூனோ !! குருடோ?? ‌எவனோ ஒருத்தனை பார்த்து தள்ளி விட்டுட்டா அவ இங்கிருந்து போய்ட போறா!!.. கூடவே அவளோட அம்மாவையும் அனுப்பி வச்சிடலாம்.. அதுக்கப்புறம் நம்ம சந்தோஷமா இருக்கலாம்பா!!"""" நீங்க சொல்றதெல்லாம் நடக்கும்னு கனவுகூட நினைக்காதீங்க ம்மா ..அப்பா இருக்கிற வரைக்கும் அவ்வளவு சீக்கிரம் அவள தனியாக வெளியே போக விடமாட்டாரு...அதே மாதிரி நீங்க நினைக்கிற மாதிரி மட்டமான மாப்பிள்ளைக்கும் கட்டிக் கொடுக்க மாட்டாரு ... எப்படியும் இவளுக்கு நல்ல இடமாக பார்த்து கல்யாணம் பண்ணி வைப்பாரு.. என்ன பொருத்த வரைக்கும் அவ அணுஅணுவாய் சித்திரவதை அனுபவிக்கணும்.. எப்படி நான் என் குடும்பத்தை பிரிந்து தவியாய் தவிச்சேனோ??..அதே மாதிரி இவளும் யாரும் இல்லாத அனாதை மாதிரி தவிக்கனும் அதுக்கு நான் ஏற்கனவே ஆக வேண்டிய வேலை எல்லாம் பார்த்துட்டேன்.. நீங்க எதிலும் தலையிடாம பேசாம இருங்க... எல்லாத்தையும் நா பாத்துக்கிறேன்.. அப்பா எப்ப வருவாரு ம்மா "" என்றான்


"" இன்னைக்கு நைட் வந்திருவேன்னு சொன்னாருப்பா"" என்றதும்


"" சரி அப்ப நான் கெளம்புறேன்"" என்றவாறு கிளம்பிவிட்டான் ஆதி....

வெகு நாட்கள் கழித்து இன்றுதான் தாரணி இருக்கும்போது இந்த வீட்டிற்கு வருகிறான் ஆதி ...எப்போதும் பரமசிவம் வேலை நிமித்தமாக வெளியூர் சென்றுவிட்டால் ஆதி தன் தாயையும் தங்கையையும் பார்க்க வந்து விடுவான்.. ஆனால் முடிந்தவரை தாரணி கண்ணில் படாமலேயே வந்து விட்டுச் செல்வான்.. ஏனோ இன்று தைரியமாக அவள் இருக்கும் போதே வந்துவிட்டான்....

தரணிக்கு தான் ஒன்றும் புரியவில்லை ..அவன் சாதாரணமாக வந்து வீட்டில் அமர்ந்திருக்கிறானே.. அப்படீனா ஏற்கனவே இங்க வந்து போய்க்கிட்டு தான் இருக்கானா??.. நமக்குதான் எதுவும் தெரியலையா??. இது தெரியாம நாம ஏற்கனவே குற்ற உணர்ச்சியில இருக்கிறோம்... நம்மளால தான் அவன் வீட்டை விட்டுப் போயிட்டான்னு...

அப்ப இவுங்க பண்றதெல்லாம் சுத்த ஏமாத்து வேலை"" என மனதிற்குள் நினைத்து கொண்டு தன் தாயிற்கு செய்ய வேண்டிய அனைத்தையும் செய்து முடித்து விட்டு இரவு உணவு தயாரிப்பதற்கு சென்று விட்டாள்.
 
#7
இரவு 10 மணி அளவில் வெளியூரில் இருந்து வந்த பரமசிவம் வந்ததும் வராததுமாக தன் தங்கையை சென்று பார்த்துவிட்டு தங்கள் மகளின் அறை கதவை தட்டினார்....
ஏனோ தூக்கம் வராமல் ஏதேதோ சிந்தனையில் உழன்று கொண்டிருந்த தரணிக்கு ஆதியின் முகத்தை விட அந்த ஆட்டோ ஓட்டுநரான அவனது முகமும் அவனது பேச்சும் நினைவில் வந்து செல்ல திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தாள்...அதேநேரம் அறைக்கதவு தட்டப்பட எழுந்து சென்று கதவை திறக்க வெளியில் கை நிறைய பைகளோடு நின்றிருந்தார் பரமசிவம்....
தன் தாய் மாமன் உள்ளே வருவதற்கு வழி விட்டு நின்றால், தாரணி.... ...

தாரணி நகர்ந்ததும், தன் கையிலிருந்த அனைத்தையும் கட்டிலில் வைத்துவிட்டு தங்கை மகளின் அருகில் வந்தவர்,

"" எப்படிடா இருக்க... மாமா ஊருக்கு போய் ரெண்டு நாள் ஆச்சு ...நேரத்துக்கு சாப்டியா டா தங்கம்... இன்டர்வியூ என்ன ஆச்சு"" என்று பரிவுடன் கேட்டார்.. அவரது அன்பான வார்த்தைகள்
தாரணியின் தந்தையை நினைவு படுத்திட கலங்கிய கண்களோடு,

"" நல்லா இருக்கேன். மாமா...
நேரத்துக்கு சாப்பிட்டு தான் இருக்கேன் மாமா.. எனக்கு ஒரு பிரச்சனையும் இல்ல..
இன்டர்வியூக்கு போனேன் செலக்ட் ஆகிட்டேன்.. நாளைல இருந்து வேலையில ஜாயின் பண்ண சொன்னாங்க...""


"" ம்ம்..வேலைக்கு எல்லாம் போக போற.. ரொம்ப பெரிய பொண்ணாயிட்ட டா.. இனிமே இந்த மாமாவோட துணை உனக்கு தேவை படாது தானடா கண்ணா!!"" என்றதும் சட்டென்று தன் தாய் மாமனின் தோளில் சாய்ந்தவள்,

"" என்னைக்குமே உங்களோட துணை எங்களுக்கு தேவை மாமா... மத்தவங்க வேணா உங்களை எனக்கு மாமாவாகவும், என்ன உங்களுக்கு மருமகளாகவும் நெனைக்கலாம்.. ஆனா என்னை பொறுத்த வரைக்கும் என்னைக்குமே நீங்க எனக்கு அப்பா தான்.. அதை யாராலும் மாற்ற முடியாது ..அப்பா இல்லாம அநாதையான எங்கள இப்ப வரைக்கும் காப்பாத்திட்டு வர்றீங்களே...உங்கள என்னைக்குமே என்னால மறக்கவும் முடியாது.. மத்தவங்ககிட்ட விட்டுக்கொடுக்கவும் முடியாது...
நீங்க எதை பத்தியும் கவலைப்படாதீங்க மாமா """ என்றாள்...

"" சரிடா அந்த பேச்சை விடு... உனக்கு கொஞ்சம் திங்ஸ் வாங்கிட்டு வந்திருக்கேன்..""

"" எனக்கு எதுக்கு மாமா வாங்கிட்டு வந்தீங்க... சைலுவுக்கு வாங்கிட்டு வந்து இருக்கலாம்ல.... காலேஜ் போற பொண்ணு அவளுக்கு யூஸ் ஆகும்...""

"" ஏன்டா ...தங்கம்...நீயும் நாளையிலிருந்து வேலைக்கு போக போற தானே...அப்ப உனக்கும் தேவைப்படும் தானே!!.. அவளுக்கு வாங்கி கொடுக்க அவளோட அண்ணன் இருக்காண்டா... ஆனா ஏ தங்கத்துக்கு வாங்கித்தர நான் மட்டும்தானே இருக்கேன்..."" என்றவரின் விழி நீர் கன்னத்தை தாண்டியது‌...‌அவரது கண்ணீரைத் துடைத்தவள் ,

"" சரி சரி நீங்களும் ஓவரா பீலிங்காகாதீங்க.... என்ன வாங்கிட்டு வந்தீங்க'" என்றாள். அவள் பேச்சை மாற்றுவதை உணர்ந்தவர்…

"" ரொம்ப பெருசா ஒன்னும் இல்ல டா...ஏ தங்கப் பொண்ணுக்கு அஞ்சாறு சுடிதார், சின்னதா ஒரு தங்க கம்மல்... ஒரு சின்ன செயின் , அப்புறம் அவளுக்கு ரொம்ப பிடிச்ச வெள்ளி கொலுசு....கையில கட்டிக்க ஒரு வாட்ச்....நாலஞ்சு செப்பல்ஸ் , ஒரு ஹேண்ட்பேக் ...அவ்வளவு தான்"" என்றார்...அவரது அன்பில் உள்ளம் நெகிழ்ந்திட அதன் வெளிப்பாடாய் உருண்டு திரண்ட கண்ணீரை உள்ளிழுத்து தன் தவிப்பை மறைக்க முனைந்தால்...

"" ப்ச்ச்.. எதுக்கு மாமா இதெல்லாம் வாங்கிட்டு வந்தீங்க.. அத்தைக்கு தெரிஞ்சா உங்கள திட்ட போறாங்க...."""

"" அவளுக்கு தெரிஞ்சா தெரிஞ்சுட்டு போகுது டா ..நா ஒன்னும் அவகாசுல வாங்கிட்டு வரல....நா சம்பாரிச்ச காசுல வாங்கிட்டு வந்திருக்கேன்....
நாளைக்கு காலையில இதெல்லாம் போட்டு ..எங்கிட்ட காட்டிட்டு தான் நீ வேலைக்கு போகனும் .. சரியா!!"" என்று ‌சொன்னார்‌..அவர் கொடுத்ததை அவளால் மறுக்க முடியும் ..ஆனால் அவர் வருந்தக் கூடாது என்பதால் ஏற்றுக் கொண்டாள்...ஆனால் இதுவே அவளை பிரச்சினைக்கு உள்ளாக்கும் என்று அறிந்திருந்தால், எப்பாடுபட்டாவது தவிர்த்திருப்பாள்... என்ன செய்வது எது நடக்க வேண்டும் என்று இருக்கிறதோ!!.. அது நடந்து தானே ஆகும் !!..
 
#8
சுழலில் சிக்கிய பூந்தளிரே..6


மறுநாள் அதிகாலை பொழுது எப்போதும் போல் விடிந்திட‌..
அலாரம் வைத்து நேரமே எழுந்த பவதாரணி குளித்து முடித்து அன்றைய சமையலை செய்து முடித்தாள்... தன் தாய்க்கு தேவையான அனைத்தையும் பார்த்து பார்த்து செய்து முடித்தவள்.., மீண்டும் தனது அறைக்குச் சென்று தன் தாய்மாமன் வாங்கிக்கொடுத்த சுடிதாரில் ஒரு சுடிதாரை அணிந்து கொண்டாள்...காலில் வெள்ளிக் கொலுசினை அணிந்தவள், அவர் கொடுத்த தங்கச்சங்கிலியை கழுத்தில் போட்டுக்கொண்டாள்... அனைத்தையும் அணிந்து கொண்டவள் கண்ணாடியில் தன்னை ஒருமுறை கண்டிட.. ஏனோ என்றும் இருப்பதைவிட இன்று சற்று அதிகப்படியான அலங்காரம் செய்திருப்பது போல் தெரிந்தாலும் தாய்மாமன் ஆசையை நிறைவேற்றாமல் சென்றால் , அவர் மனசு சங்கடப்படும் என்பதாலேயே அனைத்தையும் அணிந்துக்கொண்டு தயக்கத்தோடு கீழே இறங்கி வந்தாள்... அதே நேரம் அலுவலகத்திற்கு செல்வதற்காக பரமசிவம் கிளம்பி ஹாலில் அமர்ந்திருந்தார்... புன்னகை முகத்தோடு பவதாரணி கண்டவர்,
"" அழகா இருக்கடா.."" என்று நெட்டி முறித்தவர்...
"" ஆல் த பெஸ்ட் ...தாரணிமா"" என்று தன்னிடம் இருந்த பணத்தை எடுத்து அவளது கையில் கொடுத்தார்‌..
அதை வாங்கிட தாரணி தயங்கிட..
அவரது முகம் வருத்தம் அடைவதைக் கண்டு வாங்கிக்கொண்டாள்... இதையெல்லாம் தொலைவிலிருந்து பரிமளாவும் பார்த்துக் கொண்டுதான் இருந்தார் ...ஆனால் எங்கே ஏதாவது பேசினால் தன் கணவரது கோபம் தன் மீது திரும்பி விடுமோ??. என்பதால் அமைதியாக இருந்து கொண்டார் ... ஷைலஜாவுக்கு உள்ளுக்குள் பத்திக்கொண்டு வந்தது......
தன் தந்தை தன்னிடம் மட்டும் ஓரிரு வார்த்தைகள் பேசுபவர் அவளிடம் கொஞ்சி கொஞ்சி பேசுகிறாரே!!.. என்று உள்ளுக்குள் குமைந்து கொண்டிருந்தாள்‌.. வீட்டிலிருந்து கிளம்பிய தாரணி பேருந்து நிலையத்தில் நின்றிருக்க...
அவள் செல்ல வேண்டிய பேருந்து வந்ததும் ஏறி அமர்ந்து கொண்டாள்.. தான் இறங்க வேண்டிய இடம் வந்ததும் இறங்கி கொண்டாள்....
பேருந்தில் இருந்து இறங்கி ஆதியின் அலுவலகத்தை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தாள்..
அப்போது எதேச்சையாக அந்தப் பக்கம் ஆட்டோவில் வந்த குமார் அவளை கண்டு விட்டான்... இளம் ஊதா நிற சுடிதாரில் தேவதை போல் தெரிந்தவளை ஓரிரு நிமிடங்கள் வைத்த கண் வாங்காமல் பார்த்தவன் அவளிடம் சென்று பேச வேண்டும் என்று துடித்த மனதை கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டு அவளைத் தாண்டி சென்று விட்டான்‌‌ அவளும் ஏதோ ஒரு நினைவில் அந்த ஆட்டோவை கவனிக்கவில்லை..... தாரணி அந்த அலுவலகத்திற்குள் நுழைந்த போது மணி 8 .45 தான் ஆகி இருந்தது.. பெரும்பாலோனோர் இன்னும் அலுவலகத்திற்கு வரவில்லை...
தாரணி உள்ளே நுழைந்ததும் வாயிலில் அமர்ந்திருந்த ரிசப்ஷனிஸ்ட் பெண் தாரணியை பார்த்து புன்னகைத்தாள்... தாரணியும் பதிலுக்கு புன்னகைத்தாள்.. விழிகளால் அங்கேயும் இங்கேயும் பார்த்தவள், எவரும் வரவில்லை என்பதை உறுதி செய்துகொண்டு அப்பெண்ணின் அருகில் சென்றால் ,
" ஹாய் ஐ அம் பவதாரணி...எம்டியோட பிஏவா அப்பாய்ண்ட் ஆய்ருக்கேன்...."

"" ஹாய்....நா பவித்ரா..ரிசப்ஷனிஸ்ட்...."

"" ஓ சூப்பர் யா... என் பேரு பவதாரணி ..உங்க பேரு பவித்ரா., நல்ல மேட்ச் ஆகுதுல்ல.. அப்ப நான் உங்கள பவின்னு கூப்டுறேன்..... நீங்க என்ன தாரணின்னு கூப்பிடுங்க.."" என்றாள்...
காலையிலேயே புன்னகை முகத்தோடு அன்றலர்ந்த மலர்போல சிநேகமாக பேசிய தாரணியை பவித்ராவிற்கு மிகவும் பிடித்துவிட்டது.. மேலும் சில வினாடிகள் இருவரும் அளவளாவிக் கொண்டிருந்தனர்.. அந்த குறுகிய நேரத்திலேயே இருவரும் தோழிகளாக மாறி விட்டனர்..
" மதிய இடைவேளையில் சந்திக்கலாம் "என்று சொன்ன தாரணி எம்டியின் அறை எங்கே இருக்கிறது என்பதை கேட்டு தெரிந்து கொண்டவள், படிக்கட்டில் ஏறி மூலம் நான்காவது தளத்திற்கு சென்றாள்....

அவனது அறைக்கு வெளியே 'ஆதித்ய குமார் எம்டி..'என்று எழுதப்பட்டிருந்தது ...
தயக்கத்தோடு அவள் அறைக் கதவை திறந்து பார்க்க அங்கு எவரும் இல்லை... கீழே பவித்ராவிடம் விசாரித்த வரையில் அவனது அறையிலேயே‌ பிஏவிற்கான டேபிளும் அமைக்கப்பட்டிருக்கும் என்று சொன்னதால்தான் அவனது அறைக்கு வந்தாள்... அறையின் உள்ளே நுழைந்தவள் அதிர்ந்தே விட்டாள்... மொத்தமாக அறையே தலைகீழாகக் கிடந்தது.. பின்பு தன் மணிக்கட்டை திருப்பி நேரத்தை பார்த்தவள் இன்னும் அவன் வருவதற்கு கால தாமதம் ஆனாலும் ஆகும் என்ற எண்ணத்தில் அவசர அவசரமாக அந்த அறையை சுத்தம் செய்ய ஆரம்பித்தாள் ..அனைத்தையும் சுத்தம் செய்து முடித்தவள் அவனது டேபிளில் இருந்த முக்கியமான பேப்பரை கவனிக்காமல் அனைத்தையும் அங்கிருந்த குப்பைத்தொட்டியில் அள்ளி போட்டு வைத்துவிட்டாள்... சரியாக மணி 9 .15 என்ற நிலையில் அவனது அறைக்குள் நுழைந்தான் ஆதி.. அறை சுத்தமாக இருப்பதை கண்டு புருவம் முடிச்சிட யோசித்தவன், அறையின் ஒரு மூலையில் இருந்த பிஏவுக்கான இருப்பிடத்தில் அவள் ஒய்யாரமாக அமர்ந்து இருப்பதை கண்டான்....

ஏனோ காலையில் பூத்த பனி துளிகளை போல் மென்மையாக இருந்தவளை ஓரிரு நிமிடங்கள் கண்கள் ரசித்தாலும் நொடியில் அவளிடம் தான் கொண்ட வன்மம் நினைவு வந்திட முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு, அவனது இருக்கையில் அமர்ந்தான்..அவ்வளவு நேரம் அவன் வந்ததை கவனியாமல் ஏதோ ஒரு ஃபைலை புரட்டிக் கொண்டிருந்தவள் , சேர் அசைந்திடும் சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்தாள்...
அவன் வந்ததை உணர்ந்தவள் சட்டென்று தன்னுடைய இருக்கையிலிருந்து எழுந்து அவன் அருகில் சென்று காலை வணக்கம் சொன்னாள்.. அவனும் பதிலுக்கு தலையசைத்துவிட்டு அந்த பேப்பரை தேட ஆரம்பித்தான்....
எவ்வளவு தேடியும் அந்த பேப்பர் கிடைக்கவில்லை... 10 மணி அளவில் மீட்டிங் ஆரம்பித்துவிடும் அதற்குள் அந்த பேப்பரில் உள்ளவற்றை அவனுடைய டீம் மொம்பர்சிடம் சொல்லியாக வேண்டும்‌‌ என்ன செய்வது என தெரியாமல் அவசர அவசரமாக அதை அவன் தேடிக்கொண்டிருக்க... அவளோ கைகளை பிசைந்தவாறு நின்றிருந்தாள்...ஏனெனில் அறையை சுத்தம் செய்தது அவள்தானே!!. அவன் எதையோ தேடுகிறான் என்றால் …அது கிடைக்கவில்லையெனில் அவனது கோபம் தன்மீது தானே திரும்பும் என்று பயந்தவளாய் நின்றிருக்க.. அவள் நினைத்தது சரிதான் என்பதுபோல் தேடி முடித்துக் களைத்தவன் அவளை நிமிர்ந்து பார்த்து முறைத்தான்...
"" உன்ன யாரு என்னோட ரூம்ம கிளீன் பண்ண சொன்னது ..நான் கிளீன் பண்ண சொன்னனா.??...ச்ச்சே...
என்னதான் எவ்வளவு படிச்சு... நல்ல வேலைக்கு வந்தாலும் அந்த வேலைக்காரி புத்தி போகுதா பாரு... அதனாலதான் வந்ததும் வேலைய பாக்க ஆரம்பிச்சுட்ட‌. கொஞ்சம் கூட அறிவே இல்லையா ??என்னென்ன பேப்பர்ஸ் இருக்குன்னு கூடவா தெரியாம அப்படியே எல்லாத்தையும் குப்பைத்தொட்டியில அள்ளி போடுவ.."" என்று அவன் சொன்னதற்குப் பிறகு தான் தாரணிக்கு சட்டென்று அந்த யோசனை வந்தது.. வேகவேகமாக குப்பைகளை அள்ளி போட்டு வைத்திருந்த குப்பைத் தொட்டியை எடுத்து கீழே கொட்டி அவன் கேட்டதை தேடி எடுத்து அவன் முன்னால் வைத்தாள்... அதை உற்று கவனித்தவன் தனக்கு தேவையான பேப்பர் அதுதான் என்பதை அறிந்து கொண்டதும் ..அவனுக்கு மனம் நிம்மதி அடைந்தது.. ஏனெனில் இந்த மீட்டிங் அவனுக்கு ரொம்ப முக்கியமான ஒன்று.. இதன் மூலம் அவனது கம்பெனியை அடுத்த நிலைக்கு அவனால் முன்னேற்றிக் கொண்டு செல்ல இயலும்.. அவளிடம் … ' சுத்தமா தொடைச்சு குடு ' என்றதும் அங்கிருந்த ஒரு துணியை எடுத்து அதை நன்றாக துடைத்து கொடுத்தாள்.. அதன் பிறகு தான் அதை கையில் வாங்கி அதில் இருந்த தகவல்களை உள்வாங்கி கொண்டவன்,
" ஆமா.‌.இதென்ன இவ்வளவு மேக்கப்...வேலைக்குத் தான வந்திருக்க..ஏதோ பிக்னிக் வர்ற மாதிரி கெளம்பி வந்திருக்க...."

"" இல்ல..அது வந்து மாமா தான் வாங்கித் தந்தாங்க..."

"" அதானே...அவருக்கு பெத்த புள்ளைங்கள விட நீ தான் முக்கியமா போய்ட்ட...அவரு சம்பாரிச்ச சொத்தையெல்லாம் இப்புடி ஏமாத்தியே புடிங்கிரு என்ன!!..வேலைக்கு போறதுக்கே இவ்வளவு வாங்கி குடுத்துருக்காருன்னா...,
இன்னும் என்னென்ன கூத்து பண்ணி வச்சிருக்காரோ??... யாரு கண்டா சொத்து எல்லாத்தையும் கூட உங்க பேருல மாத்தி எழுதி வாங்கிருந்தாலும் வாங்கிருப்பீங்க...ச்சே.‌நீங்கல்லாம் என்ன ஜென்மங்களோ??.....
என் பின்னாடி வந்து தொல.." என்று வார்த்தைகளால் அவளை அடித்து விட்டு அறையிலிருந்து வெளியேறினான்....
கண்ணில் தேங்கியிருந்த கண்ணீர் கன்னத்தை தாண்டி வழிந்தோடியது....
"" ம்ம்ம்...நா சொத்த எழுதி வாங்கி என்ன பண்ண போறேன்....
ஏ இப்புடியெல்லாம் பேசுறாரு.... ரொம்ப கஷ்டமா இருக்கு...வந்த மொத நாளே நல்லா வாங்கி கட்டியாச்சு.... இன்னும் என்னவெல்லாம் அனுபவிக்க வேண்டி வருமோ?? தெரியல!!.."" என்று புலம்பியவாறு அவனைப் பின்தொடர்ந்து சென்றால் ,தாரணி....

வெளியில் வந்து தன்னுடைய டீமை மட்டும் கான்பிரன்ஸ் ஹாலுக்கு அழைத்துச் சென்றவன் ...‌அவர்களுக்கு சில பல முக்கியமான இன்ஸ்ட்ரெக்ஷன்களை கொடுத்திட அதை அனைத்தையும் ஒரு குறிப்பேட்டில் குறித்து வைத்துக் கொண்டால், தாரணி....
தாரணி கல்லூரியில் படிக்கும் போது வீட்டு வேலைகளையும் செய்து கொண்டு படிப்பிலும் கவனத்தை செலுத்துவதால் முடிந்தவரை தன்னுடைய எழுத்து சம்பந்தமான வேலைகளை வேகமாக முடித்து விடுவாள்..‌ அவளது அந்த பழக்கத்தாலோ!! என்னவோ!! அவன் சொல்வதை ஈஸியாக அவளால் குறிப்பெடுத்துக் கொள்ள முடிந்தது...

அனைவருக்கும் சொல்ல வேண்டிய தகவல்களை சொல்லி முடித்தவன்,
"" 10 மணிக்கு மீட்டிங் ஸ்டார்ட் ஆயிடும்... சார்ப்பா எல்லாரும் வந்துருங்க.. இப்ப போங்க "என்று சொல்லிவிட்டு மணியை பார்த்திட மணி 9. 45 என்றிருந்தது.. காலை உணவு உண்ணாதது வேறு பசியைக் கிளறிட தன்னுடைய போனை எடுத்து வினோத்திற்கு அழைத்தான்... முழுதாக அழைப்பு சென்று முடியும் தருவாயில் அழைப்பை ஏற்றான்...

"" எனக்கு சாப்பாடு வாங்கிட்டு வந்துரு ""என்றவாறு அழைப்பை துண்டித்தவன் ..தாரணி தன்னை பார்த்துக்கொண்ட நின்றிருப்பதைக் கண்டு ,

"" நான் சொன்னதெல்லாம் நோட் பண்ணிகிட்டியா !!""என்றான் கடுமையான குரலில்... மற்றவர்களிடம் பேசும்போது இருக்கும் இலகுத் தன்மை, தன் நண்பனிடம் பேசும்போது இருக்கும் கனிவு‌. தன்னிடம் பேசும்போது மட்டும் கடுமையாக மாறுவதை பெண்ணவளும் குறித்துக் கொண்டாள்....

""ம்ம்ம்... டீடைல்டா நோட் பண்ணிக்கிட்டே சார்.."" என்றாள்..

" சரி ஓகே ...ஒ கேபினுக்கு போ""என்றதும் மறுப்பேதும் சொல்லாது விலகிச் சென்று விட்டாள்... ஏனோ அன்று அவள் தன்னை அத்தான் என்று அழைத்தவள்... இன்று சார் என்று அழைத்தது மனதில் ஏதோ ஒரு நெருடலை ஏற்படுத்தினாலும் அதை புறம் தள்ளியது அவள் மேல் இருந்த கோபம்....
வினோத்தும் ஆதிக்கு உணவை வாங்கிக் கொண்டு வந்து தந்தான்.. அங்கேயே அமர்ந்து உணவு உண்டு முடித்து இடத்தைத் தூய்மை செய்தான்,ஆதி...

பத்து மணி அளவில் அந்த வெளிநாட்டு ஒப்பந்தகாரர்கள் வந்ததும் மீட்டிங் நல்லபடியாக ஆரம்பித்தது....ஆதிக்கு அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்த தாரணி அங்கு நிகழும் ஒவ்வொரு நிகழ்வையும் குறிப்பெடுத்துக் கொண்டாள்... அவளுடைய வேலை அதுதான் என்பதால் அனைத்தையும் குறிப்பெடுத்துக் கொண்டால், ஒன்றைக் கூட தவற விடவில்லை... தவற விட்டு விட்டால் அதனால் அவனிடம் திட்டு வாங்க முடியாது என்ற காரணத்தினால் தன்னுடைய வேலையில் கண்ணும் கருத்துமாக கவனமாக இருக்க துவங்கினாள்... மீட்டிங் நல்லபடியாக முடிந்து அவர்கள் ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டதற்கு பிறகுதான் ஆதிக்கு நிம்மதியாக இருந்தது....
வாழ்வில் எதையாவது சாதித்து முன்னிலை பெற வேண்டும் என்ற வெறித்தனமான எண்ணம் அவன் மனதில் ஆழ வேரூன்றியிருந்தது....
அதன்பிறகும் தாரணிக்கு தன்னால் முடிந்த அளவு வேலைப்பளுவை அதிகமாகவே கொடுத்தான், ஆதி....
அவள் அதை அனைத்தையும் அசால்டாக ஊதித் தள்ளுவது போல் நேர்த்தியாக செய்து முடித்தாள்.. மணி ஆறை நெருங்கிய நிலையில் அலுவலகம் முடிந்து அனைவரும் வீட்டிற்கு கிளம்பினர் ...
பவித்ராவும் , தாரணியும் ஒன்றாக வெளியேற,
 
#9
பவித்ராவிடம், '" நீ எந்த ஊர்" என்று கேட்டால் தாரணி...
தாரணி செல்வதற்கு எதிர்ப்புறத்தில் அவளது ஊர் என்பதால் சற்று வருத்தத்துடன்,
" பவி பார்த்து பத்திரமா போ" என்று சொல்லிவிட்டு எப்போதும் போல் அந்த பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்து இருந்தாள்...
மறுபடியும் பயணிகளை ஏற்றுக் கொண்ட அவ்வழியே சென்ற குமாரின் கண்ணில் விழுந்து விட்டால் பவதாரணி... இப்போதும் பெண்ணவளை கண்களால் நிறைத்துக் கொண்டு சென்றான் ஆடவனவன்‌...

பத்து நிமிடத்தில் பேருந்து வந்ததும் பேருந்தில் ஏறி தன் வீட்டிற்கு கிளம்பி விட்டாள்‌.. வீட்டிற்குள் சென்றதும் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு இரவு உணவை தயாரிக்க சென்றுவிட்டாள்.. அலுவலகத்தில் வேலை பார்த்தது உடல்நிலையை சோர்வாக்கினாலும் தன் அன்றாட பணியை மட்டும் தாரணி ஒருபோதும் தட்டிக் கழிப்பது இல்லை... அனைத்து பொறுப்புகளையும் தன் தலையில் போட்டுக்கொண்டு வீட்டு வேலைகளை முடித்து விட்டு சற்று களைப்புடன் தனது அறைக்கு வந்து மெத்தையில் விழுந்தவளுக்கு அழையா விருந்தாளியாக கண்ணீர் கண்களில் நிறைந்தது......
தன் தந்தை மட்டும் உயிரோடு இருந்திருந்தால் இங்கே வந்து இவ்வளவு சிரமப்பட விட்டு இருப்பாரா??.. இல்லை தன் தாய் தான் இப்படி படுத்த படுக்கையாகக் கிடந்து இருப்பாரா??.. எங்களுக்கு மட்டும் ஏன் இவ்வளவு கஷ்டம்....
விதி எங்களை ஏன் இப்படி வதைக்கிறது....
சுழலில் சிக்கிய பூந்தளிர் போல் என் வாழ்வில் மட்டும் ஏன் இவ்வளவு மீள முடியாத கஷ்டங்கள்....
சொல்லி அழக்கூட ஆதரவற்ற நிலையில் ஏன் என்னை நிறுத்தினாய் கடவுளே!!
கடலில் தோன்றும் சுழலில் விழுந்தால்,மீள முடியாது, உயிர் பிழைத்திட இயலாது என்று சொல்வர்....
இன்று என் நிலையும் அதுதானே....என் தாய்மாமாவிடம் கொண்ட அன்பெனும் சுழலில் சிக்கி மீள முடியாமல் தவிக்கிறேன்.....
அதனால் தானே, இந்த கொடுமையான சூழ்நிலை எனக்கு...
இப்படிப்பட்ட மீளாத சுழலை உருவாக்கிக் கொடுத்து விட்டாயே கடவுளே!!.....மீள வழி இருந்தும்....வெளி வர முடியவில்லை....
இதிலிருந்து எப்படித் தப்பிப் பிழைத்து உயிர் வாழப் போகிறேனோ??" என்ற எண்ணம் முதன் முறையாக அவளது நெஞ்சில் பயத்தை விதைத்து....கண்களில் வழியும் கண்ணீரோடு கிடந்தால் ,தாரணி.... அவளது அறை தட்டப்படும் சத்தத்தில் எழுந்து அமர்ந்து தன் கண்களை அழுந்தத் துடைத்தவள்... எழுந்து சென்று பார்க்க, அவளது மாமா தான் நின்றிருந்தார்...

"" சொல்லுங்க மாமா ""என்றதும்
"" இன்னைக்கு வேலை ரொம்ப கஷ்டமா டா .."" என்றார், கனிவாக....
இல்லை என்று மறுப்பாக தலையைசைத்தவள் .,
" வேலை ரொம்ப புடிச்சிருக்கு மாமா ""என்றாள்....

"" வேலை எந்த ஏரியா‌ டா"" என்று கேட்டதற்கு...
" நுங்கம் பாக்கம் மாமா""என்று சொன்னாலே ஒழிய அலுவலகத்தின் பெயரை சொல்லாமல்,மறைத்து விட்டாள் ‌.. ஒருவேளை சொல்லியிருந்தால் தக்க சமயத்தில் அவளுக்கு அவரது உதவி கிடைத்திருக்கலாம்... ஏனோ ஆதியின் அலுவலகத்தில் வேலை செய்வதை சொல்ல மனம் வரவில்லை அவளுக்கு...


" சரிமா பார்த்து தூங்கு.டா"" என்றவாறு அவர் சென்றுவிட்டார்... மறுநாள் பொழுதும் விடிந்தது... எப்போதும் போல் வீட்டு வேலைகளை செய்து முடித்துவிட்டு அலுவலகத்திற்கு கிளம்பினாள்‌.. அங்கேயும் ஆதி தரும் அதிகமான வேலையை செய்து முடிப்பதற்கு இடையே அவனது பேச்சும் கடுஞ்சொற்களும் தாரணியின் கண்ணில் நீரை வரவழைக்கும்... அவன் முன்னால் அழுது விடாமல் , தன்னை திடப்படுத்திக் கொள்வாள்.‌‌ அவளுக்கு அந்த அலுவலகத்தில் ஒரே ஆறுதல் பவித்திரா மட்டும்தான்.......நாட்கள் அதன் போக்கில் நகர்ந்தது.. காலை எழுந்து வீட்டு வேலை செய்து விட்டு அலுவலகத்திற்கு கிளம்பி விடுவாள், தாரணி ..
அவள் அன்று அலுவலகம் முடிந்து வீட்டிற்கு வருவதற்குள் இருமுறையாவது அவளை கண்டு விடுவான், குமார்.. அதேபோல் தன் மனதில் இத்தனை நாள் தாரணியின் மீது வளர்த்து வைத்திருந்த வன்மத்தை வார்த்தையின் மூலமும், செயலின் மூலமும் காட்டிக்கொண்டிருந்தான் ஆதி... இவ்வாறு ஒரு மாத காலம் முடிந்து இருந்தது...
அன்று தாரணி பவித்ரா இருவரும் தங்களது முதல் மாத சம்பளத்தை கையில் வாங்கினர்...தாரணி வேலைக்கு வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்புதான் பவித்ராவும் அங்கே வேலைக்கு சேர்ந்து இருந்தாள்‌. முதல் மாத சம்பளத்தை கையில் வாங்கிக் கொண்டு வெளியே வந்தனர், இருவரும்...
" முதல் மாத சம்பளத்த வச்சு நீ என்ன செய்யப் போற பலி" என்று பவித்ராவிடம் கேட்டதற்கு...

"" எனக்கு அம்மா மட்டும்தான் தாரணி... அப்பா இறந்து ஒரு வருஷம் ஆகப்போகுது... ஒரு விபத்துல இறந்துட்டாரு... இதெல்லாம் உங்கிட்ட சொன்னதில்ல டா.. ..எங்க நாம பேசுறதே கொஞ்சம் நேரம் தான்....
அதான் சொல்ல முடியல..
"" பரவாயில்லை பவி‌.."

"" அப்பா இறந்ததுக்கு கொஞ்சம் பணம் வந்துச்சு.. அதை வச்சு ஒரு சின்ன வீடு வாங்கி இருக்கோம்... அம்மா வீட்டில் இருந்துட்டே டெய்லரிங் பண்றாங்க.."" என்றாள்

"" சின்ன வீடுன்னா ஒரு பெட் ரூம் வச்சதா.‌‌"" என்று தாரணி கேட்டதும்...
"" இல்ல டா.. இரண்டு பெட் ரூம், ஒரு கிச்சன் , பூஜை அறை‌ அவ்வளவுதான்... ஏதோ அந்த கடவுள் புண்ணியத்துல எங்களுக்கு கம்மி விலைக்கு வந்தது... நான் வாங்கிட்டேன்"" என்றாள்.. ஏதோ கேட்க வாய் திறந்த தாரணி பின்பு அதை விட்டுவிட்டாள்.. ஆனால் அவள் ஏதோ சொல்ல வருவதை புரிந்து கொண்ட பவித்ரா,
"" என்னமோ கேக்க நெனைக்கிற ..ஆனா தயங்குற..
எதுவா இருந்தாலும் ... பரவாயில்லை சொல்லு தரு..."" என்றதும் தான் எடுத்த முடிவை தாரணி சொன்னதும்...

"" இதுல எனக்கு எந்த பிரச்சினையும் கெடையாது‌.தரு...
நீ என்ன நினைக்கிறியோ??.. அதேபோல செய்டா..‌‌உனக்கு நா சப்போட்டா இருப்பேன்"" என்றதும்.. தாரணி முகத்தில் புன்னகை படர்ந்தது....

"" சரி பவித்ரா நீ பார்த்து போ"" என்றவாறு தன்னுடைய பேருந்துக்காக காத்திருந்தால், தாரணி...
பேருந்து வருவதற்கு முன்பே அவளை கடந்து சென்றான் ,
குமார்.. ஏனோ இன்று அவள் முகத்தில் இருந்த நிம்மதி அவனது முகத்திலும் புன்னகையை வரவழைத்தது... தினமும் அவளை பார்த்து விட்டு செல்பவனுக்கு அன்று ஏனோ!! .அவளை முதன் முதலில் சந்தித்து எத்தனை நாட்கள் ஆகின்றது என்பதனை மனம் கணக்கிடத் துவங்கியது... பேருந்து வந்ததும் ஏறிக்கொண்டாள்...

கையில் வாங்கிய சம்பளக்கவரோடு வீட்டிற்குள் நுழைந்தால் , தாரணி...
அன்று அதிசயமாக ஹாலில் அமர்ந்து இருந்தார், பரமசிவம்.. தன் மாமாவின் அருகில் சென்றவள் அவரது காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியவள், எழுந்து நின்று அவரது கையில் பணக்கவரைக் கொடுத்தாள்‌...

"" என்ன டா ..இது "" என்று அவர் கேட்டதற்கு ...

""இந்த மாச சம்பளம்... இத உங்ககிட்ட தான் மொதல்ல கொடுக்குறேன்... இந்தாங்க மாமா"" என்றாள்...

"" இல்லமா இது ஒரு மாசம் நீ உழைத்து சம்பாதித்த காசு...
இத நீயே வச்சுக்க"" என்றார், பரமசிவம் ....

"" இது எனக்குத்தானா!! மாமா"" என்றாள்‌‌

"" இது உனக்கே ‌ ‌...உனக்கே.. உனக்கு மட்டும்தான்.. இதை யாரும் உன்கிட்ட இருந்து வாங்க மாட்டாங்க ..""

"" அப்ப நான் இத வச்சு என்ன வேணா பண்ணிக்கலாமா!!.. மாமா""

"" இதென்னடா கேள்வி....இது உங்காசு என்ன வேணாலும் பண்ணிக்க டா.‌‌ என்ன வேணுமோ வாங்கிக்க....
ஆமா உனக்கு என்ன வாங்க போற சொல்லு ..மாமா வாங்கி தரேன்.. இதை பத்திரமா சேவிங்ஸ் ல போட்டு வச்ச பின்னால உன் கல்யாணத்துக்கு யூஸ் ஆகும்ல """" மாமா இவ்வளவு நாள் உங்க கிட்ட நான் எதுவும் சொன்னது கிடையாது.. எனக்கு ஆசையா இருக்குது அத வாங்கி கொடுங்க.. இது வாங்கி கொடுங்கன்னு நா
எதுவுமே கேட்டது கெடையாது‌. எனக்கு ஒரு அப்பா ஸ்தானத்துல இருந்து எல்லாமே நீங்க வாங்கி தந்து இருக்கீங்க... அந்தளவுக்கு என்ன பார்த்து பார்த்து கவனிச்சிக்குறீங்க...
ஏ ஷாலுகிட்ட கூட நீங்க இவ்வளவு பாசமா இருந்து நான் பார்த்தது கெடையாது....
அந்த அளவுக்கு என் மேலே நீங்க பாசமா இருக்கீங்க ... ஆனால் நானும் அம்மாவும் ரொம்ப நாளா உங்களுக்கு பாரமாக இருக்கிற மாதிரி எனக்கு தோணுது மாமா... நீங்க சொல்லனா கூட எனக்கு தெரியும்‌.., பிசினஸ்ல உங்களுக்கு எதுவோ பிரச்சனை ...அதை நீங்க எங்க கிட்ட சொல்ல மாட்டேங்கறீங்க ‌.அப்படித்தானே!!""" என்று சரியாகத் தான் மாமனின் மனநிலையை கணித்துச் சொன்னால், அந்த அன்பு மருமகள்....


அதைக்கேட்ட பரமசிவம் அதிர்ந்தாலும் அதை முகத்தில் வெளிக்காட்டாது,
" பிசினஸ்ல பிரச்சனை, ஏற்றத்தாழ்வு வர்றது சகஜம்தான்..டா... அதை பத்தி நீ கவலைப்படாத...
இது எதையும் மனசுல வச்சுக்காத..‌
உனக்கு என்ன வேணும்னு சொல்லு அதை நான் வாங்கி தரேன்.."" என்றார்.

"" இல்ல மாமா நீங்க எனக்கு எதுவும் வாங்கி தர வேணாம்..‌
நான் ஒரு முடிவு எடுத்து இருக்கேன்.. அதுக்கு நீங்க கண்டிப்பா சம்மதம் சொல்லணும்‌‌ மறுத்து பேச கூடாது"" என்றாள்..

"' முதல்ல என்ன முடிவுன்னு சொல்லுமா.. அதுக்கு அப்புறம் பார்க்கலாம் ""என்றார் ஏனோ தாரணி முகத்தில் இருந்த தீவிரம் அவள் எதையோ தனக்கு விருப்பமில்லாததைத் தான் சொல்லப் போகிறாள் என யூகித்து வைத்திருந்தார், அந்த பெரிய மனிதர் ...ஆழ்ந்த பெருமூச்சு ஒன்றை வெளியிட்ட
தாரணி தன் மாமனின் அருகில் அமர்ந்திருந்த அத்தையையும், கல்லூரி முடிந்து வந்து செல்லில் மூழ்கியபடி சோபாவில் அமர்ந்திருந்த ஷைலுவையும் ஒரு பார்வை பார்த்தவள்...
தன் தாய் மாமனிடம்,
"" நானும் அம்மாவும் இந்த வீட்டை விட்டுப் போலாம்னு முடிவு பண்ணி இருக்கோம் மாமா." என்றாள்....
அவள் சொன்னதைக் கேட்டு பரமசிவம் அதிர்ந்தவராய் சட்டென்று இருக்கையில் இருந்து எழுந்து நின்றிருக்க , பரிமளாவும் சைலஜாவும் ஆனந்தத்தின் உச்சியில் நின்றிருந்தனர் ‌‌.
அதே நேரம் தன் தாயின் அலைபேசியின் வாயிலாக இதை கேட்டுக்கொண்டு இருந்த ஆதிக்கும் உள்ளுக்குள் திக்கென்றது....
தாரணி எடுக்கும் முடிவால் அவளது வாழ்வு நல்ல முறையில் செல்லுமா ??...இல்லை ஏற்கனவே இருக்கும் மீள முடியா சுழலை போன்றதொரு சுழலில் மீண்டும் மாட்டிக்கொண்டு தவிப்பாளா???......
 
#10
சுழலில் சிக்கிய பூந்தளிரே ...7

தாரணி சொன்னதைக் கேட்டு அதிர்ந்து அமர்ந்திருந்தார்...பரமசிவம்...
" ஏ தாரணி மா இந்த மாமா வீட்டுல இருக்குறது உனக்கு அவ்வளவு கஷ்டமா இருக்குதா??..டா..!! இல்ல உன்ன யாராவது ஏதாவது சொன்னாங்களா??? " என்ற அவரின் பார்வை ஊசி போல் தன் மனைவியை துளைத்தது ..அவரது பார்வையை உணர்ந்த பரிமளா சட்டென்று எழுந்து நின்றவர் ,
"" நான் எதுவும் சொல்லலங்க" என்றார், பதறியவாறு ...
அடுத்ததாக பரமசிவத்தின் பார்வை தன் மகளை நோக்கி திரும்ப ,
"" நான் உங்க செல்ல மருமகள எதுவும் சொல்லலப்பா""
என்றாள், சைலு...

"" அவங்க யாரும் எதுவும் சொல்லலங்கிறாங்க.. அப்ப எதுக்கு டா நீ வீட்டை விட்டு போகணும்னு முடிவு பண்ணி இருக்க ""என்று சற்றே கமரிய குரலில் பரமசிவம் கேட்டதும்...

"" இங்க யாரும் என்னை எதுவும் சொன்னதில்லை மாமா...
ஆனா எவ்வளவு நாள் தான் நானும் அம்மாவும் இந்த வீட்டில உங்களுக்கு பாரமா இருக்குறது... நீங்க எவ்வளவு தான் எனக்கு பார்த்து பார்த்து செஞ்சாலும், எனக்கு அப்புறம் ஷைலு இருக்கா.. உங்க பையன் வேற இருக்காருல்ல....என்னாலதான் அவரு இந்த வீட்டை விட்டு போயிட்டாருன்னு எனக்கு குற்ற உணர்ச்சியா இருக்கு.. இதுக்கு மேல நான் இங்க இருக்குறது நல்லது இல்ல ...மாமா..
என்ன படிக்க வச்சீங்க ...இதோ இப்ப வேலை வாங்கிட்டேன்...
இதுக்கு மேல அம்மாவையும்,ஏ எதிர்காலத்தையும் நா பார்த்துக்குறேன் மாமா ...
வீடு கூட ஏற்பாடு பண்ணிட்டேன்"" என்றாள்..


"" ஓ எல்லாத்தையும் ஏற்பாடு பண்ணிட்டு, அதுக்கு அப்புறம் தான் ...இந்த மாமா கிட்ட சொல்லனும்னு தோணுச்சாடா உனக்கு"

"" அப்படி எல்லாம் இல்ல மாமா.. எனக்கே மொத இந்த ஐடியா இல்ல ...ஆனா உங்க பையனுக்கும் கல்யாணம் பண்ற வயசாகுது தானே!!..
நாளைக்கு கல்யாணம் பண்ணும் போது நான் அந்த வீட்டில் இருந்தால் , அது நல்லதுக்கு இல்ல.. யாராவது ஏதாவது பேசுவாங்க.. உங்க மனசு கஷ்டப்படுற மாதிரி யாராவது ஏதாவது சொல்லிட்டா அதை என்னால தாங்கிக்க முடியாது, மாமா.. மத்தவங்க சொல்லி வெளியே போவதற்கு பதிலாக நானே போலாம்னு முடிவு பண்ணிட்டேன் ..இதுக்கு நீங்க கண்டிப்பா சம்மதிக்கனும்... இது நாள் வரைக்கும் நீங்க எனக்கு பார்த்து பார்த்து செஞ்சது போதும்.... மாமா..
இதுக்கு மேல நான் உங்களுக்கு கஷ்டத்தை தர விரும்பல..
தயவு செஞ்சு நான் இப்படி ஒரு முடிவை எடுத்ததுக்கு என்ன மன்னிச்சிடுங்க மாமா !! ‌ஆனா சம்மதம் சொல்லிடுங்க"" என்றாள் இரு கைகூப்பி... அதில் பதறியவராய் தாரணியின் அருகில் வந்து,
"" நீ இவ்வளவு தூரம் சொல்றேனா இதுல ஏதோ ஒரு விஷயம் இருக்குது...ஆனா அத நீ மறைக்கிற.. பரவால்லடா இருந்துட்டு போகட்டும்...
சரி நீங்க ரெண்டு பேரும் போலாம், அத நான் தடுக்க மாட்டேன் ..ஆனா நீங்க எங்க தங்க போறீங்கன்னு எங்கிட்ட காட்டு... நான் வந்து அந்த இடம் பாதுகாப்பா இருக்கான்னு பார்த்துட்டு , அதுக்கப்புறம் தான் உங்களை அனுப்புவேன்"" என்றதும் சரி என தலை அசைத்தால் , தாரணி...

" என்னைக்கு கிளம்புறீங்க" என்றதும்..

"" காலைல நேரமே கெளம்புறோம்...
அம்மாவ அந்த வீட்ல விட்டுட்டு அப்படியே நானும் வேலைக்கு கிளம்பிடுவேன்'"


"" அம்மாவ பார்த்துக்குறதுத்துக்கு ஆள் ஏற்பாடு பண்ணி இருக்கியாடா ??" என்றதற்கு

"ம்ம்ம் ‌. ஆள் இருக்காங்க மாமா"" என்றவள் ,
' எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு மாமா 'என்றவாறே ஆந்த இடத்தை விட்டு கிளம்பி விட்டாள்...
இவை அனைத்தையும் தன் தாயின் அலைபேசி வாயிலாக கேட்டுக் கொண்டிருந்த ஆதிக்கு தான் எப்படி உணர்கிறோம் என்றே புரியவில்லை ..அவளால் தான் தான் தன் வீட்டை விட்டு வெளியே வந்தோம்..
தன் சொந்தத்தைப் பிரிஞ்சு இருந்தோம்.. என்று தான் அவள் மீது இவ்வளவு நாளாக கோபத்தை வளர்த்து வைத்துக்கொண்டிருந்தான்... ஆனால் இன்று அவளே வீட்டை விட்டுச் செல்கிறேன் என்ற போது ஏனோ ஒரு மாதிரியான உணர்வு அவனை தாக்கியது.. அலைபேசியை துண்டித்து விட்டு படுக்கையில் விழுந்து விட்டான்.. அவனது சிறுவயதில் அவளுடன் விளையாடிய சிறுசிறு நினைவுகள் அவனை ஆக்கிரமித்தது...
அதேநேரம் கதவை தட்டிவிட்டு உள்ளே வந்தான் , வினோத் ...

"" ஆதி உன்கிட்ட கொஞ்சம் பேசணும்'"

"" என்ன பேசணும் வினோத்""


"" ஹோம்கு கொஞ்சம் அமௌன்ட் கேக்குறாங்க..
நான் ஒரு பத்தாயிரம் எடுத்து கொடுத்திடவா!!" என்றதும் சட்டென்று படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்த ஆதி,

"" என்னடா புதுசா என் கிட்ட பர்மிஷன் எல்லாம் கேட்டுக்கிட்டு இருக்குற ..
இந்த கம்பெனி நம்ப ரெண்டு பேரோட உழைப்பு...
நாம ரெண்டு பேரும் பார்ட்னர்னு உனக்கு ஞாபகம் இருக்கா!! இல்லையா!!""

"" பணம் போட்டது நீ மட்டும் தானேடா!!.. முழுக்க முழுக்க இதுல உன்னோட பணம் மட்டும் தான் இருக்கு டா""

"" ஆனா இதுல முக்கால்வாசி உன்னோட உழைப்பு தாண்டா இருக்கு ..அதனால இனிமே என்கிட்ட பர்மிஷன் கேட்கிற வேலை வச்சுக்காத ..
ஆமா ஹோம்ல என்ன திடீர்னு..""

"" தெரியல டா "" என்ற மழுப்பினான்...

"" இப்போ உண்மையை சொல்லப் போறியா ??இல்லையா?? என்று கேட்டதற்கு,

"" நா முதன்முதலா அந்த ஹோம்க்கு வந்து 25 வருஷம் ஆகப் போகுதுன்னு மதர் சொன்னாங்க.. அதனாலதான் ஏதோ அங்கிருக்க குழந்தைகளுக்கு என்னால ஆன சின்ன ஹெல்ப் பண்ணலாம்னு தோணுச்சு அதனாலதான்....""


"" வேண்டா டா..அந்த விஷயத்தை நினைக்காத ன்னு சொன்னா.. திரும்பத் திரும்ப அதையே நெனச்சிகிட்டு இருக்குற..'"

"" எப்படிடா மறக்க முடியும்.. என்னதான் இருந்தாலும் என்ன பெத்தவங்க நான் வேணாம்னு குப்பைத்தொட்டியில போட்டுட்டு போய்ட்டாங்க தானே‌.. அவங்க மட்டும் அப்படி பண்ணாம இருந்திருந்தா அந்த ஹோம்ல யாரும் இல்லாம அனாதையா??..ஒரு வேளை சாப்பாட்டுக்கு கூட கஷ்டப்பட்டுட்டு இருந்திருக்க மாட்டேனே...
ஒரு உண்மை சொல்லட்டுமா!!.. ஸ்கூல் படிக்கும்போது எப்போ உன்ன மொத மொதல்ல பாத்தனோ அன்னைல இருந்து தான் நா வயிறார சாப்டேன் தெரியுமா!!.. இன்ன வரைக்குமே நீ மட்டும் தான் எனக்கு உயிர் நண்பனாக இருக்க ..
அதே மாதிரி எனக்கு ஏதாவது ஒன்னுனா துடிக்கிறது நீ தான்....
நீ இல்லனா நா இந்த நெலமைக்கு வந்திருக்க மாட்டேன்டா...
ஆனால் எல்லா விஷயத்திலும் ஏ பேச்சக் கேக்குற நீ ..இந்த ஒரு விஷயத்தை மட்டும் கேட்கவே மாட்டேங்குறியேடா.... தாரணி பாவம் டா.. அந்த பொண்ண விட்டுடு..""
 
#11
"" ஏண்டா எந்த பேச்சு பேசுனாலும் அங்க சுத்தி இங்க சுத்தி கடைசியா அவளோட பேச்சுலயே வந்து நிற்கிற...ச்சே.. என்னன்னு தெரியல டா..
அவளால அடிவாங்கி அவமானப்பட்டு வீட்டை விட்டு வெளியே வரும்போது அவளை பழி வாங்கனும்னு நினைச்சேன்... அதுக்கு ஒரு சந்தர்ப்பம் கெடச்சுது அதை பயன் படுடுத்திக்கிறேன்..
நீ நினைக்கிற மாதிரி அவ உயிருக்கு ஒன்னும் ஆபத்து இருக்காது.. நான் அனுபவிச்ச கஷ்டத்தை அவ அனுபவிக்கனும் அவ்வளவுதான்..
அப்புறம் ஒரு குட் நியூஸ் உன் தங்கச்சி வீட்டை விட்டு போகப் போறாளாம்... இப்பதான் இன்பர்மேஷன் வந்துச்சு""

"" ஏண்டா இப்படி இருக்க ..அந்த பொண்ணு உடம்பு சரியில்லாத அவங்க அம்மா வச்சுகிட்டு எங்கடா போகும்.."

"" நீ அவ்வளவு சீக்கிரம் அவ சாதாரணமா எடை போடாதடா வீடு எல்லாம் அரேஞ்ச் பண்ணிட்டு தான் அப்பா மறுக்கவே முடியாத அளவுக்கு விஷயத்தை போட்டு உடச்சிருக்கா!!.. ஏதோ நாளைக்கு போறாளாம்..பாப்போம் எங்க போய் எப்படி வாழ்றானு...""

"" அவ உங்க வீட்டுல இருக்குறது உனக்கு பிரச்சனை சொன்ன.. அதான் வெளியே போகப் போறாளேடா... இதுக்கு மேல உனக்கு என்ன பிரச்சனை..‌தாரணிய டீஸ் பண்ணாத விட்டுடு...""

"" இங்க பாரு வினோத் எல்லா விஷயத்துலயும் நீ சொல்றதை நான் கேட்கிறேன்...ஆனா இந்த ஒரு விசயத்தில நீ தலையிடாத... என்னால அவ்வளவு சீக்கிரம் அத மறக்க முடியாது.. ஒரு உண்மையை சொல்லட்டுமா!!.. நீ அப்பா அம்மா இல்லாம எப்படி ஆசிரமத்திலிருந்தியோ??.. அதே மாதிரி தான் நானும் வீட்டை விட்டு வெளியே வரும்போது இருந்தேன்...
அவளால அப்பா அம்மாவை எவ்வளவு மிஸ் பண்ணி இருப்பேன்... அம்மாவோட சமையல , தங்கச்சி கூட வம்பு இழுத்து விளையாறத எவ்வளவு மிஸ் பண்ணியிருக்கேன்...தெரியுமா!!..
இன்னும் ரெண்டு வருஷத்துல தங்கச்சிக்கு கல்யாணம் ஆகிடும்...
அதுக்கப்புறம் புருஷன் வீட்டுக்கு போயிருவா...
அவளால அப்பாவுக்கும் எனக்கும் இடையில் பெரிய கேப் விழுந்துடுச்சு.. நானும் அவர் கிட்ட பேசுறதில்ல ..அவரும் என்கிட்ட பேசறது இல்ல....
அவளால நா மிஸ் பண்ண அந்த நாட்களெல்லாம் எனக்கு திரும்ப கெடைக்குமா??.. இதுக்கெல்லாம் அவ தானே காரணம்...
அதுக்கு தான் சின்னதா ஒரு தண்டனை அவ்வளவுதான்... மத்தபடி அவள ரொம்ப ஹர்ட் பண்ண மாட்டேன்...""


"" ஒருத்தர அடிச்சுட்டா கூட ஈசியா மறந்துடுவாங்க...
ஆனால் சொல்ற சொல்லும், அவங்க கிட்ட நம்ம நடந்துக்கிற முறையையும் என்னைக்குமே
மறக்க மாட்டாங்கங்கிறத எனக்கு ஞாபகத்தில வச்சுக்கிட்டு எதுவா இருந்தாலும், பண்ணு ...ஆனா என்னைக்குமே நான் தாரணிக்கு தான் சப்போட்டா இருப்பேன்... ஏன்னா இதுல அந்த பொண்ணோட தப்பு எதுவுமே கெடையாது......"" என்றவாறு வினோத் வெளியேறிவிட்டான்...
ஏனோ மீண்டும் நான் செய்வது சரியா ??இல்லையா ??என்ற சுய அரசியலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான், ஆதி....


அதிகாலை 4 மணிக்கு எழுந்த தாரணி எப்போதும் போல் காலை உணவை தயாரித்து வைத்தவள் தன் உடைமைகள் தன் தாயின் உடைமைகள் அனைத்தையும் பேக் செய்தவள்.. ஏற்கனவே ஒரு ஆட்டோவை வரச் சொல்லியிருந்ததால், ஆட்டோ வருவதுக்காக காத்திருந்தாள்... அந்த ஆட்டோகாரருக்கு திடீரென்று உடம்பு முடியாமல் போக ...
தாரணியின் வீட்டு அட்ரஸ் சொல்லி குமாரை அனுப்பி வைத்திருந்தார்...
குமாரும் தாரணி வீட்டு வாயிலில் நின்று ஹாரன் அடிக்க வெளியே வந்தால், தாரணி...
அக்ஷய குமாரை கண்டதும் சற்று தயங்கியவள் பின்பு,
"" நான் உங்களை வரச் சொல்லலையே!!.."

"" ஆமாங்க ... ஆனா
அந்த அண்ணனுக்கு உடம்பு சரியில்ல.. அதனால தா என்ன போக சொன்னாங்க...
எங்க போகணும் " என்றான்

ஏனோ அவன் அவளைப் பார்த்து பேசாதது , தாரணிக்கு சற்று நிம்மதியாக இருந்தது ..உள்ளே சென்று தன் தாயை எப்படி தூக்கிக் கொண்டு வருவது என்று தயக்கத்தோடு அவள் நின்று இருக்க,
" ஏதாவது ஹெல்ப் வேணுமாங்க !!"" என்று கேட்டான்....ஆமாம் என்று தலையசைத்தவள்,
"" என்னோட அம்மாவை தூக்கிட்டு வர கொஞ்ச ஹெல்ப் பண்றீங்களா??"" என்றதும்..
சரி என்று வீட்டிற்கு உள்ளே சென்றான்...தாரணி வைதேகியின் அறைக்குள் நுழைந்திட..அவனும் பின்தொடர்ந்து சென்றான்... வைதேகியை தன் கைகளில் தூக்கி கொண்டவன்,
'" அவங்க பொருட்களை மட்டும் எடுத்துட்டு வந்துருங்க""என்றவாறு வெளியே வந்து ஆட்டோவில் வைதேகியை அமரவைத்தான்...
பின் தாரணியும் வெளியே வர, கூடவே பரமசிவமும் எழுந்து வந்து விட்டார்...

"" நீங்க எதுக்கு மாமா எந்திரிச்சு வரீங்க.. அதான் நைட்டே அந்த பொண்ணு வீட்டுக்கு போயிட்டு வந்துட்டோமே...நீங்க தான் எல்லாம் ஓகேன்னு சொன்னீங்க.."".
"" எனக்கு எல்லாம் ஓகே தான்..டா.. ஆனா நானும் உங்க கூட வரனும்னு
நெனைக்கிறேன்..... ரெண்டு பேரும் தனியா போறீங்களே...ஏதாவது பிரச்சனையினா?? ""


"" அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல மாமா..
நான் பாத்துக்குறேன்.. அத்த எந்திரிச்சாங்கன்னா ஏதாவது நெனைச்சுக்க போறாங்க‌..
நீங்க போங்க... நாங்க போய்க்கிறோம்'" என்றால் தாரணி..

ஆனால் ஏனோ பரமசிவம் அந்த அதிகாலை வேளையில் இவர்களை தனியே அனுப்ப மனமில்லாமல் அந்த ஆட்டோ டிரைவரை சந்தேகமாக பார்த்தார்.. அதை புரிந்துகொண்ட குமாரும்,
தன்னுடைய போன் எண்ணை அவரிடம் சொல்லியவன்,
"" நாங்க போனதுக்கு அப்புறம் அவங்க பத்திரமாக இறங்கிட்டாங்களா?? இல்லையான்னு போன் பண்ணி விசாரிச்சுக்கங்க சார்...
அப்புடி சந்தேகம்னா எனக்கு போன் அடிங்க சரியா!.. நானும் நல்ல ஆட்டோ டிரைவர் தான்..
நீங்க பயப்பட தேவையில்லை சார்... அப்படியும் நம்பிக்கை இல்லையின்னா ஆட்டோ பின்னாடி நீங்களே ஃபாலோ பண்ணுங்க..."" என்றான்..
அவனது பேச்சில் பொய் இல்லை... அவன் விழிகளில் நேர்மை தான் தெரிந்தது... கள்ளம் தெரியவில்லை..

""இல்லப்பா உன் மேல நம்பிக்கை இருக்கு... நீ கூட்டிட்டு போ"" என்று பரமசிவம் சொன்னதும் ஆட்டோ பவித்ராவின் வீட்டை நோக்கி கிளம்பியது.‌‌ கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேர பயணத்திற்கு பிறகு பவித்ராவின் வீட்டை அடைந்தது., ஆட்டோ ...
ஆட்டோ சத்தத்தை கேட்டு உள்ளே இருந்து பவித்ராவும் அவளது தாய் பூர்ணியும் வெளியே வந்தனர்.. "" ரூம் ரெடி பண்ணிட்டியா பவி"" என்று தாரணி கேட்டதற்கு ..

"" ரெடி பண்ணிட்டேன் தரு..‌வா அம்மாவ ஆட்டோவுல இருந்து வெளியே தூக்கலாம்'" என்று பவி சொல்ல‌...அதற்கு முன்பே குமார், வைதேகியை முதலில் தூக்கியது போல் அலுங்காமல் தூக்கி சென்று படுக்கையில் படுக்க வைத்தான்...
பின்பு வெளியே வந்தவன் தாரணியை பார்த்து ,
"" உங்க அம்மாவுக்கு பக்கவாதமா!!"" என்று கேட்டான்..‌
' ஆமா 'என்று ஒற்றை வரியில் பதில் சொல்ல ....அவனும் அவளிடம் பேசாமல் பவித்ராவின் புறம் திரும்பியவன்,
" இங்க பாருங்க தங்கச்சி..
திடீர்னு அதிர்ச்சியில் வந்த பக்கவாதமா இருந்தா சரி பண்றதுக்கு எனக்கு ஒரு ஹாஸ்பிடல் தெரியும்..
பீஸ் எல்லாம் ரொம்ப வாங்க மாட்டாங்க.. சித்தமருத்துவம் மாதிரி தான்.. உங்க ஃபிரண்டுக்கு விருப்பம் இருந்தா இந்த
அட்ரஸ்ல போய் பாக்கச் சொல்லுங்க..."" என்றவன் ஒரு விசிட்டிங் கார்டை பவித்ராவின் கையில் கொடுத்து விட்டு ஆட்டோவிற்கான பணத்தை பெற்றுக்கொண்டு அங்கிருந்து கிளம்பினான்....
ஏனோ வைதேகியை பார்த்தபோது தாரணி முகத்தில் தெரிந்த வலியும் வேதனையும் அவனது நெஞ்சைப் பிசைந்தது..‌ அவர் ஒருவேளை சரியாகி குணமடைந்து விட்டால், இவள் முகத்திலும் புன்னகை துளிர்க்குமே!!. என்ற எண்ணத்தில் தான் தனக்கு தெரிந்த ஒரு மருத்துவமனையை பற்றி சொன்னான்....
அவளை கண்ட நாளே..‌
அவளைப் பற்றிய முழு விவரங்களையும் சேகரித்து விட்டான்.‌‌ தந்தை இல்லை தாய் மட்டும் தான்.. தாய்மாமன் வீட்டில் இருக்கிறார்கள் என்பது வரை அறிந்து கொண்ட அவனுக்கு ஏனோ அவளது தாய்மாமனுக்கு ஒரு மகன் இருக்கிறான் ..
அவனால் அவளுக்கு பேராபத்து காத்திருக்கிறது என்பதை அறிய தவறிவிட்டான்...
ஒருவேளை அறிந்திருந்தால் தக்க சமயத்தில் அவளை காத்திருக்கலாம்....
 
#12
சுழலில் சிக்கிய பூந்தளிரே..8

அதன் பிறகு வைதேகியை பூரணியிடம் விட்டுட்டு பவித்ராவும் தாரணியும் அலுவலகத்திற்கு கிளம்பினர்... அங்கிருந்து கிளம்பிய குமார் ,சொன்னது போலவே பரமசிவத்தை அழைத்து அவர்களை பத்திரமாக சேர்த்து விட்டதை தெரிவித்தான்..... அலுவலகத்திற்கு வந்த தாரணியை ஒரு கேலி பார்வை பார்த்தான், ஆதி.. ஏனோ அவளால் அவள் தாயை பத்திரமாக பார்த்துக் கொள்ள முடியாது.. எப்படியும் அங்க சுத்தி இங்க சுத்தி தன்னுடைய வீட்டிற்கு தான் வரவேண்டும் என ஆதி நினைத்திருக்க... அவன் நினைத்தது எப்போதும் நடக்காது என தனது ஒவ்வொரு செயலின் மூலம் அவனுக்கு உறுதிப் படுத்திக் கொண்டிருந்தால், தாரணி...
அவளது நடவடிக்கையில் ஆதியின் கோபம் அதிகமாகியது... அதைக்கண்ட வினோத் இதற்கு மேலும் தான் பார்த்துக் கொண்டு சும்மா இருந்தால் தாரணிக்கு ஏதாவது பெரிய அளவில் பாதிப்பு வரக்கூடும் என நினைத்தவன் தாரணியை தனக்கு பிஏவாக்கினான்‌..வேறு ஒரு பெண்ணை ஆதிக்கு பிஏவாக்கினான்...
ஏன் இவ்வாறு செய்தாய் என்று ஆதி வினோத்திடம் கேட்டதற்கு, " நானும் இந்த கம்பெனியின் பார்ட்னர் தானே எனக்கு இதற்கு கூட உரிமை இல்லையா??" என ஆதியின் வாயை அடைத்து விட்டான்...
நாட்கள் அதன் போக்கில் நகர இதோ ஒரு வருடம் எவருக்கும் நில்லாமல் ஓடி விட்டது... இந்த ஒரு வருட காலத்தில் தாரணியை வார்த்தைகளால் கூட நெருங்க‌ முடியாத அளவு அவளை பாதுகாத்தான், வினோத்.. அதனால் முடிந்த அளவு ஆதியால் தாரணியை காயப் படுத்த முடியவில்லை ...அதற்கு காரணமான தன் நண்பனையும் குற்றம் சொல்ல முடியவில்லை ..
இதை எதையும் அறியாமலே,
ஏனோ அவளும் தனக்கு ஏன் வேலையை மாற்றிக் கொடுத்தார்கள் என்று கேள்வி எழுப்பவில்லை.....
தாரணி பவி, இருவரும் எங்காவது வெளியில் செல்ல வேண்டும் என்றால் முதலில் அழைப்பது குமாரை தான் ..அந்த நிகழ்வுக்குப் பிறகு ஓரிரு முறை குமாரை சந்திக்க நேரிட தாரணி தானாகவே அவனின் நல்ல மனதை புரிந்து கொண்டாள்..
அன்றும் தான் தான் ஏதாவது தவறாக புரிந்து கொண்டிருப்போம் என நினைத்தாள்...
அவன் சொன்ன மருத்துவமனைக்கு தன் தாயை அழைத்துச் சென்று பரிசோதனை செய்தாள், தாரணி.. ..அந்த சித்த மருத்துவ சிகிச்சைக்கு பிறகு, தற்போது ஓரளவிற்கு தன் கைகளால் தானே உணவை உண்ணும் அளவுக்கு தேறியிருந்தார், வைதேகி... அதேபோல் இங்கே நடக்கும் எல்லாவற்றையும் தன் தாய் மாமனுக்கு சொல்லிடுவாள், தாரணி‌.... எதேச்சையாக ஒருமுறை வெளியில் குமாரை சந்திக்க நேரிடும்போது பரமசிவம் குமாரிடம் நல்லவிதமாகவே பழகினார் .‌ஆகமொத்தம் அனைவருக்கும் குமாரை பிடிக்க ஆரம்பித்திருந்தது........

இவ்வாறு ஒரு வருட காலம் நொடிப்பொழுதில் கடந்திருந்தது.. அப்போதுதான் ஆதியின் கம்பெனிக்கு தொடர்புடைய ஒரு முக்கியமான வேலைக்காக ஆதி, வினோத் இருவரில் ஒருவர் வெளிநாடு செல்ல வேண்டுமென்ற நிலை வந்தது... தானே முன்வந்து வெளிநாடு செல்ல சம்மதித்தான், வினோத்... இதோ தனக்கு தேவையான அனைத்தையும் எடுத்துக் கொண்டு வெளிநாடு புறப்படுகிறான், வினோத்.... செல்லும்முன் ரிசப்ஷன் வந்தவன் சுற்றிலும் யாராவது இருக்கிறார்களா ??.என்று நோட்டமிட யாரும் இல்லை என்றதும் சட்டென்று தன் சட்டைப் பையிலிருந்து ஒரு கடிதத்தையும் கூடவே ஒரு பரிசு பொதியையும் பவித்ராவின் முன்பு வைத்தவன்..., அவள் என்னவென்று கேள்வியோடு அவன் முகத்தைப் பார்த்ததும்.."" இங்க பாருங்க பவித்ரா ..உங்ககிட்ட ரொம்ப நேரம் பேச எனக்கு டைமில்ல.. யாராவது வந்துருவாங்க ..எனக்கு அப்பா அம்மா கிடையாது.. அனாதை ஆசிரமத்தில் வளர்ந்தவன்.. எனக்கு இப்ப வரைக்கும் எல்லாமே ஆதிதான்... இங்கே வந்ததுல இருந்து உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருச்சு ..நீங்க என்னோட மனைவியா வந்தா!!. என்னோட வாழ்க்கை நல்லா இருக்கும்னு… தோணுச்சு.. எப்படியும் இந்த டிரிப் முடிய ஒன்றரை மாசம் கூட ஆகலாம்.. அது வரைக்கும் என்னால சொல்லாம இருக்க முடியாது ‌‌ ஏன்னா உங்களுக்கு வீட்டில் அலையன்ஸ் பாக்குறாங்க போல.‌.. அதான் சொல்லிட்டு போறேன்.. நான் போயிட்டு வரும்போது கண்டிப்பா உங்க பதில சொல்லுங்க‌......எஸ் ஆர் நோ...எதுன்னாலும் ஓகே ... அது வரைக்கும் இது உங்ககிட்டேயே இருக்கட்டும் ""என்றவன் அவள் பதிலைக்கூட எதிர்பாராமல் அங்கிருந்து சென்று விட்டான்... பவி அறைந்தது போல் நின்றிருந்தாள்‌...
பவியை பார்க்க வந்த தாரணியும் அவர்கள் பேசியதை கேட்டுக் கொண்டுதான் இருந்தாள்...
அவன் போனதும்,பவித்ராவின் அருகில் வந்தவள், "" செம பிரபோஸல்ல.....இதுவரை இந்த மாதிரி யாரும் ப்ரொபோஸ் பண்ணி நான் பார்த்ததே இல்ல.. ஓகே சொல்லிடு‌.. இந்த மாதிரி ஒரு வாய்ப்பு கிடைக்கவே கிடைக்காது"" ....

"" என்னோட வாழ்க்கைய பத்தி முடிவெடுக்க அம்மாவுக்கு மட்டும் தான் உரிமை இருக்குது......அதுமட்டுமில்லாம இந்த மாதிரி பணக்காரங்கள நா நம்ப மாட்டேன்..."என்று சொல்லிவிட ...
அதற்கு தாரணி எதுவும் பதில் பேசவில்லை... பின்பு அந்த பேச்சை விடுத்து பெண்கள் இருவரும் வீட்டிற்கு செல்ல வெளியில் வர ...
அவர்களை தடுத்தது ஆதியின் குரல்...
பெண்கள் இருவரும் அவனை கேள்வியோடு பார்க்க ,
"" தாரணி நாளைக்கு அனுப்பவேண்டிய கொட்டேஷன நீங்க டைப் பண்ணல போல...டைம் பண்ணி கொடுத்துட்டு போங்க... ""

"" ஒன்னும் பிரச்சனை இல்ல..தரு‌..நீ முடிச்சுக்கு குடுத்துட்டு வா...நா வெயிட் பண்றேன்..""

" நீ போ பவி..அம்மாவ பாத்துக்க..நா வந்துருவேன்..." என்க பவி கிளம்பினாள்....
இரவு 8 மணி வரை அவளுக்கு வேலை கொடுத்தான், ஆதி அனைத்து வேலையும் முடித்து விட்டு அவள் அலுவலகத்தை விட்டு வெளியே வரும் போது மணி 8.15....
பவித்ராவுக்கு அழைத்து தான் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்ததை தாரணி...
தெரிவித்திட.
பவித்ரா அதை குமாருக்கு தெரிவித்து, அவளை அழைத்து வரச் சொன்னாள்....
தாரணி மாமாவிற்கு அழைத்து அங்கே வரச்சொன்னாள்... ஆனால் அலுவலத்தின் பெயரை சொல்லவில்லை....
அலுவலகத்தில் இருந்து சற்றே அருகில் இருந்த பேருந்து நிலையத்தை நோக்கி நடக்கத் தொடங்கினால், தாரணி... முன்னால் பேருந்து வந்தால், 'பேருந்தில் போலாம்., இல்லையேல் மாமா வந்தால், மாமாவோடு போயிடலாம்' என்ற எண்ணத்தில் அவள் காத்திருக்க.. தொலைவில் இருந்து அவளைக் கவனித்த ஆதிக்கு , 'அவளை ஏதாவது செய்ய வேண்டும் ..இந்த சந்தர்ப்பத்தை நழுவ
விடக்கூடாது ' என நினைத்தவன் தனக்கு தெரிந்த ஒரு லோக்கல் ரவுடிகளை ஐந்தாறு பேரை அந்த இடத்துக்கு வரவழைத்து ஏதேதோ கட்டளைகளை பிறப்பித்தான்.....
அவர்களும் தாரணியை அருகில் நெருங்க நெருங்க அந்த நேரத்தில் தேவதைப் போல் நின்ற பெண்ணைக் கண்டதும், சற்று வேறு கோணத்திலும் பார்க்க தூண்டியது அவர்களது கொடூரமான எண்ணம்... பெண்ணவளை நெருங்கியவர்கள் அவளிடம் வம்பு செய்திட... அவர்களது பேச்சும் நடவடிக்கையும் தாரணியின் மனதில் பயத்தை விதைத்திட அங்கிருந்து ஓடத் தொடங்கினாள்...
அவள் ஓடுவதைக் கண்டு இவர்களும் பின்னே ஓடினர்...
அவர்களை தன் காரில் பின் தொடர ஆரம்பித்தான், ஆதி..
ஒரு கட்டத்தில் மெயின் ரோட்டை விட்டு சந்தில் புகுந்து கொண்டு ஓட ஆரம்பித்தால் ,தாரணி.. மற்றவர்களும் அவளை விடாது துரத்தி சென்றனர்.. காரை ஓரமாக நிறுத்திவிட்டு ஆதியும் அவர்களை பின் தொடர்ந்தான்....
அந்த குறுக்கு சந்தில் இருந்து மற்றொரு சாலையின் ஆரம்பத்தில் தாரணி மூச்சிரைக்க ஓடி வரும்போது, எதிரில் ஏதோ வெளிச்சம் வருவதை கண்டவள் வேகமாக அதை நோக்கி ஓடியவாறு , பயத்தில்..
' காப்பாத்துங்க காப்பாத்துங்க.' கத்தினாள்...
நின்ற அந்த வாகனத்தில் இருந்து இறங்கியவனைக் கண்டதும் வேகமாக ஓடிச்சென்று அணைத்துக்கொண்டாள்....
அவள் எவ்வளவு பயந்து இருக்கிறாள் என்று அவளது உடல் நடுக்கத்திலேயே உணர்ந்துகொண்டவன் விழிகளில் மொத்த கனலையும், தேக்கி... எதிரில் நின்றவர்களைப் பார்த்து , '" யாருடா நீங்க எதுக்கு இந்த பொண்ண துரத்துறீங்க" என்று கர்ஜனை போல் கேட்டிட.. அவனை கண்ட அந்த ரவுடிகள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர்.. அவர்களோட முயல்வதை கண்ட குமார் தன்னிடமிருந்து அவளைப் பிரித்து நிறுத்தி, "" ஆட்டோவுல ஏறு மா... இதோ வந்தர்றேன்"" என்றவாறு தன் முன்னால் ஓடுபவர்களை துரத்த ஆரம்பித்தான்....அதில் ஒருவனை பிடித்து வாயிலேயே குத்த... அவன் வாயிலிருந்து ரத்தம் கொட்ட ஆரம்பித்தது.‌ மேலும் தன்னால் முடிந்த மட்டும் அடித்து, " உங்கள அனுப்புனது யாரு??"என்றிட...
அந்த சந்தின் மற்றொரு முடிவில் நின்றிருந்த காரை கைகாட்டியவன்,' அந்த கார்ல இருந்தவன் தான்' என்றவன்...
நசைசாக குமார் கையிலிருந்து நழுவி ஓடிச் சென்று விட்டான்...‌.

குமார் திரும்பி வந்த போதும் பதற்றத்தோடும்,கண்ணீரோடும் அமர்ந்திருந்தவளைக் கண்டு உள்ளம் கொதித்தது ...அவளருகே அமர்ந்தவன்,
"" இங்க பாருமா...ஒன்னும் பயப்படாத... எல்லாம் சரியாய்டுச்சு..'" என்றதும் ஆறுதலாக அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்...ஆதரவாக அவள் தலையை வருடிக் கொடுத்து‍, வண்டியை திருப்பி கொண்டு தான் வந்த வழியே வந்தவன்.. ஒரு சந்தில் நுழைந்து அந்த கார் இருந்த சாலையில் வாகனத்தை செலுத்த துவங்கினான்....ஆதியும் அதே சந்தில் நுழைந்து அவர்களை தேடியவன் ,அவர்கள் கிடைக்கவில்லை என்றதும் திரும்பித் தான் வந்த வழியே நடக்க ஆரம்பித்தான்.. தொலைவிலிருந்த லைட் வெளிச்சத்தில் அந்த காரின் எண்ணை தன் மனதில் நன்றாகப் பதிய வைத்துக்கொண்ட குமார் பின்பு அவளை பத்திரமாக வீட்டில் இறக்கி விட்டவன்,
" இத நா பாத்துக்கிறேன்.. வீட்ல எதையும் அம்மாகிட்ட சொல்லாத.. வந்துருவாங்க சரியா !!"என்றவாறு அவளுக்கு ஆறுதலாக பேசி அனுப்பி வைத்தான்....
ஏனோ இதுவரை மரியாதையுடன் பார்த்திருந்த அவன் மீது சிறிதாக நேசம் துளிர்விட துவங்கி இருந்தது.....தாரணிக்கு


ஆட்டோவில் செல்லும்போது யாருக்கோ அழைத்து காரின் எணாணை தெரிவித்த குமார்,
"" இது யாரோட கார்னு எனக்கு இப்பவே தெரிஞ்சாகணும் "என்று கட்டளை போல் பேசிட அடுத்த ஐந்தாவது நிமிடம் ஆதியின் முழு ஜாதகமும் குமாரின் கைகளுக்கு வந்தது... மேலும் அவன் தாரணியின் தாய்மாமன் மகன் என்ற கூடுதல் தகவலும் கிடைத்திட, யோசனையோடு வாகத்தை செலுத்தினான்....
அவர்களை எவரையும் காணாது தான் அனுப்பிய ரவுடிகளுக்கு அழைத்து விஷயத்தை அறிந்திட்டவனுக்கு கண்டிப்பாக இதனால் தனக்கு ஏதாவது பிரச்சனை வரக்கூடும் என யோசித்தவன், ஒரு முடிவோடு அன்றைய அன்று இரவு மட்டும் தன் வீட்டில் தூங்கி எழுந்தவன், காலையில் விடிந்தும் விடியாமல் தன் வீட்டு வாசலில் நின்றிருந்தான்...
 
#13
அவனை கண்டதும் பரமசிவம்,
' உள்ளே வா' என்று அழைக்க, தயக்கத்துடன் உள்ளே வந்தவன்...அதே வேகத்தோடு சட்டென்று தன் தந்தை காலில் விழுந்து , தாரணியை தான் காதலிப்பதாகவும் ..அவளை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றிட..
அவனை நம்பாத பார்வை பார்த்தார், பரமசிவம்...
தாரணி தன் அலுவலகத்தில் தான் வேலை செய்கிறாள் என்றும் அவளும் தன்னை காதலிப்பதால், தான் கம்பெனியில் வேலைக்கு வந்து சேர்ந்தாள்... அதை தங்களிடம் கூட மறைத்து விட்டாள் என்று வாய்க்கு வந்த பொய்யை அள்ளி விட்டான்...அவள் தன்னுடைய அலுவலகத்தில் தான் வேலை செய்கிறாள் என்பதை பரமசிவத்திடம் தெரிவிக்கவில்லை என்பதை தன் தாயின் மூலம் அறிந்திருந்தான்.. அதனால் தான் தைரியமாக இதைச் சொன்னான்...
அவன் சொன்னதை ஒரு நிமிடம் நம்பிய பரமசிவம் , "அப்படீன்னா தாரணி எங்கிட்ட சொல்லிருக்குமே!!" என்க..
" நம்பலனா வாங்க எல்லாரும்.. அவங்க வீட்டுக்கு போய் பொண்ணு கேப்போம்.. கண்டிப்பா தாரணி வேணாம்னு சொல்லாது " என்று சொல்ல யோசனையோடு தன் மனைவி மகள் ,மகனோடு பவித்ரா வீட்டுக்கு கிளம்பினார்... பழத்தட்டோடு உள்ளே நுழைந்த பரமசிவத்தை பூரணி கேள்வியோடு பார்க்க.. ஹாலில் அமர்ந்து படம் பார்த்துக்கொண்டிருந்த வைதேகிக்கும் சற்று அதிர்ச்சியாகத்தான் இருந்தது... அனைவரையும் …'வாங்க' என்று அழைத்தவர்கள், 'என்ன விஷயம்' என்று கேட்க...
பரமசிவம் தாரணியை ஆதிக்கு பெண் கேட்டு வந்து இருப்பதாக சொன்னார்.......
அதைக்கேட்டு தாரணி உள்ளுக்குள்ளே அதிர்ந்தாலும் வெளியே முகத்தை சாதாரணமாகத்தான் வைத்துக்கொண்டிருந்தாள்.. ஏனெனில் அவளது பார்வை முழுவதும் வைதேகியின் முகத்திலேயே தான் இருந்தது... அவரது முகத்தில் தெரிந்த மலர்ச்சி தாய்க்கு இதில் சம்மதம் என்பதை சொல்லாமல் சொல்லியது.. தன் தாய்க்காக தானே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.. அப்படி இருக்கும்போது அவரை மறுத்து பேச முடியுமா ??என்ன!!..
எதுவும் பேசாமல் அமைதியாக நின்று இருந்தாள் ..
ஆனால் குமாரை பார்க்கும் பார்வை சற்றே மாறுபட்டு இருப்பதாக நேற்று இரவுதான் பவித்ராவிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.. அதனால் இவர்களது திருமண பேச்சு சற்று பவித்ராவிற்கு அதிர்ச்சியாக இருந்தது ... ஏதோ பேச வந்த பவித்ராவை செய்கையால் அடக்கினால், தாரணி..
" ரொம்ப சந்தோசம் ணா.. உன் வீட்டுக்கு தாரணி மருமகளா வர்றத நெனச்சா எனக்கு சந்தோஷமா இருக்கு" என்றார்... வைதேகி .. தங்கையின் மகிழ்ச்சி கண்டு தானும் மகிழ்ந்த பரமசிவம், தாரணியின் விருப்பம் கேட்டிட, "தன் தாய் விருப்பம்தான். என் விருப்பம்" என்று சொல்லியவள் அங்கு ஒரு நிமிடம் கூட நிற்காமல் தனது அறைக்குள் நுழைந்து கொண்டாள்...
அவள் சம்மதிப்பாள் என்று ஆதியே எதிர்பார்க்கவில்லை.. அவுனுடைய மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.. இனிமேல் தினமும் அவளுக்கு நரகத்தை காட்ட வேண்டுமென நினைக்க ஆரம்பித்தான்.....
அப்போதே காலண்டரை பார்த்து இன்னும் பதினைந்து நாளில் ஒரு நல்ல முஹூர்த்தம் இருப்பதாகவும், அதில் திருமணத்தை வைத்துக் கொள்வோம் என்றும் சொல்லிவிட ..தாரணி,பவியைத் தவிர அனைவருக்கும் மகிழ்ச்சியே... இதில் பெரிதும் மகிழ்ந்தது , பரிமளா தான்..‌இனி தான் வீட்டு வேலை செய்து கஷ்டப்படத் தேவையில்லை என அவர் மனது குத்தாட்டம் போட்டது....
சந்தோசத்தோடு விடைபெற்று பரமசிவத்துடைய குடும்பம் கிளம்பிவிட்டது......
ஆதியையே திருமணம் செய்ய இருப்பதால் அவனது அலுவலகத்திற்கு வேலைக்கு போக வேண்டாம் என்று வைதேகி சொல்லிட வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே முடங்கி விட்டால், தாரணி...
பவி மட்டும் வேலைக்கு சென்றுவிட்டு வந்தாள்.... திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து கொண்டிருந்தது.. பெண்ணுக்கு தாய்மாமன் என்ற முறையில் அனைத்து செய்முறைகளையையும் தானே பார்த்து பார்த்து செய்தார், பரமசிவம்‌.. மேலும் தாரணியின் சேமிப்பில் இருந்து பணத்தை எடுத்து பூர்ணி கையில் கொடுத்து தாரணியை அழைத்துச் சென்று அவளுக்குத் தேவையான திருமண நகைகளை பார்த்து பார்த்து வாங்க சொன்னார்... அதற்காக குமாரை அழைத்திருந்தனர்..
அனைவரும் செல்லும் போது பவி தாரணியின் திருமண விஷியத்தை சொல்ல ,.. கண்ணாடி வழியாக அவளைப் பார்த்துக் கொண்டே வந்த குமார்,
" ரொம்ப சந்தோஷம் "என்றதும் சட்டென்று அவனை முறைத்துப் பார்த்தால் தாரணி .... அவளது முறைப்பு அவனுக்கு சிரிப்பை வரவழைக்க சட்டென்று சிரித்து விட்டான்... அவர்களை இறக்கி விட்டவன் அவர்கள் நகை எடுத்துக் கொண்டு திரும்பி வரும் வரை காத்திருந்து மீண்டும் அழைத்துச் சென்று வீட்டில் விட்டுட்டு தான் வந்தான்...

ஆதி முடிந்தவரை இந்த திருமண செய்தி வினோத்தின் காதை எட்டாதவாறு பார்த்துக் கொண்டான்.. எவ்வளவுதான் தொலைபேசியில் உரையாடி கொண்டாலும் இதை மட்டும் கவனமாகத் தவிர்த்து விட்டான்‌.. அதே போல் தன் வீட்டாரிடம், அவன் ஒரு முக்கியமான வேலைக்கு சென்று இருப்பதால் அவனிடம் தெரிவிக்க வேண்டாம்... என்று சொன்னதால் மற்றவர்களும் அதை கவனத்தில் கொள்ளாது விட்டு விட்டனர்... நாட்களும் ரெக்கை கட்டிப் பறக்க விடிந்தால் திருமணம் என்ற நிலை வந்துவிட்டது.‌‌ மனம் நிறைய குமாரின் நினைவுகளை சுமந்த வண்ணம் இருந்த பெண்ணவளுக்கு மற்றொருவன் கரத்தினால் தாலி வாங்கிக்
கொள்ள நெஞ்சம் உறுத்தியது... இருந்தும் தாயின் முகத்தில் இருந்த புன்னகைக்காக அதை ஏற்றுக் கொண்டாள்...
இந்த பவதாரிணி போல் இந்த உலகத்தில் ஏகப்பட்ட பல க
தாரணிகள் இருக்கின்றனர்.. பெற்றோர்களின் மகிழ்ச்சிக்காக திருமணத்தை செய்து கொண்டு நரகத்தில் வாழ்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்...


திருமண நாளும் அழகாக விடிந்தது.. அரக்கு நிற பட்டுடுத்தி தன் உழைப்பில் சம்பாதித்து வாங்கிய பொன்நகைகள் பெண்ணவளை அலங்கரிக்க, இடைத்தாண்டி நீண்டிருந்த கருங்கூந்தலில் அழகாக வீற்றிருந்த மல்லிகை பூவினது நறுமணத்தோடு குனிந்த தலை நிமிராது முகத்தில் பெயரளவிற்கு கூட புன்னகை இன்றி ,உள்ளம் முழுவதும் வேறொருவனை சுமந்தவாறு...வேறு ஒருவனின் கரத்தால் தாலியை வாங்கிக் கொள்ள தயாராகி மணமேடையில் வந்தமர்ந்தாள் தாரணி... அவளருகில் மாப்பிள்ளையானவன், கம்பீரம் குறையாது அமர்ந்திருந்தான்... ஆதியின் பெற்றோர்கள் முகத்திலும், தாரணியை பெற்றவர் முகத்திலும், பூரணி என அனைவர் முகத்திலும் சந்தோஷம் நிறைந்திருக்க இதோ அனைவரிடமும் ஆசி வாங்கி வாங்கி வரப்பட்ட மஞ்சள் சரடில் கோர்க்கப்பட்ட பொன் தாலியானது மணமகன் கையில் கொடுக்கப்பட்டாயிற்று..
' கெட்டி மேளம் கெட்டி மேளம்' என்று ஐயர் சொன்ன சொல்லைக் கேட்டு மங்கள வாத்தியங்கள் இசைக்க,... கம்பீரமாக வீற்றிருந்த ஆண்மகனவன் சற்றே பெண்ணின் அருகில் குனிந்து,
" ஓய் பொண்டாட்டி" என்றிட அக்குரலைக் கேட்டதும் சட்டென்று நிமிர்ந்தாள்... விருப்பம் இல்லாத திருமணத்தின் விளைவால் பெண்ணவளின் கண்ணில் கண்ணீரானது குளமாகியது...
தன் அருகில் அமர்ந்து இருந்தவனின் குரலைக் கேட்டதும் அதிர்ச்சியில் பெண்ணவள் நிமிர்ந்திட,
அதில் தேங்கியிருந்த கண்ணீரானது இமையைக் கடந்து அவள் கன்னத்தில் வழிந்தது...அதுவரை கலங்கித் தெரிந்த அவனின் உருவம் தெளிவாய் தெரிந்தது... அதிர்ச்சியில் பெண்ணவள் விழிகளை சாசரைப் போல் விரித்தாள்,
எப்போதும் போல் , பெண்ணவளின் விழிகளில் மீண்டும் தன்னைத் தொலைத்தவன், இதழ் விரித்த புன்னகையோடு அவள் கழுத்தில் மூன்று முடிச்சுட்டு அவளை தன் மனைவியாக ஏற்றுக் கொண்டான், அவன்...
 
#14
சுழலில் சிக்கிய பூந்தளிரே..9

தன் கழுத்தில் தொங்கிய தாலியை வெறித்துக் கொண்டிருந்த தாரணியின் நினைவுகளில் சற்று முன்பு வினோத் அனைவரிடமும் சொன்ன செய்தி ஓடியது...

அதாவது ஆதி அவள் மேல் உள்ள தான் கோவத்தில் அவளை திருமணம் செய்ய நினைத்தது,

தாமதமாக அதை அறிந்து வினோத் திருமணத்தை தடுத்து நிறுத்தியது, அதோடு தன் மாமாவிடம் குமார் சென்று பெண் கேட்ட செய்தியும் அதற்கு அவர் சம்மதித்ததால் தான் இந்த திருமணம் நடந்த செய்தியையும் அறிந்து அவளுக்கு தலை வலித்தது.....

பின்பு மணமக்கள் இருவரையும் குமாரின் வீட்டில் விட்டு விட்டு ஆதியின் மேலுள்ள கடும் கோபத்தோடு தன் வீட்டிற்கு சென்றுவிட்டார், பரமசிவம்...

வீட்டை விட்டு சென்ற ஆதி இனிமேல் வீட்டிற்குள் நுழையவே கூடாது ..

என சொல்லிவிட்டார் .....யாரும் அவரை எதிர்த்துப் பேசவில்லை... அதேபோல் ஆதியை வினோத் வெறுக்கவில்லை...

பூரணியிடம் வினோத் தன் விருப்பத்தை

சொல்ல.... இன்னும் ஒரு மாதத்தில் திருமணம் என சொல்லிவிட்டார், பூரணி...


தாரணி , வைதேகி இருவரோடும் தன்னுடைய வீட்டுக்கு‌வந்தான்,அவன்

தன்னுடைய அறையை காட்டி அவளை ஓய்வெடுக்க சொன்னவன், மற்றொரு அறையில் அத்தையை படுக்க வைத்தான்...

தன் மனம் நிறைந்தவனின் கரத்தால் மங்கலநாண் பெற்றுக்கொண்ட சந்தோஷ மிகுதியில் விரைவாக உறங்கிப் போய் விட்டாள் ,தாரணி... மற்றவர்கள் அவரவர் வீட்டிற்கு சென்று விட்டனர் ..

மறுநாள்கண் விழித்தவள் அவனைக் காணாது தேடி கொண்டு வெளியில் வர ஊரே கலவரப்பட்டு கொண்டிருந்தது ..என்னவென்று அறிந்துகொள்ள செய்தி சேனலை ஒளிபரப்ப அதில் ,

அவ்வூரின் மிகப்பெரிய ரவுடியா கனல் ரவியை பொறிவைத்து பிடித்த நமது சிட்டியின் ஏசிபி அக்ஷய் குமார் அவர்களை எண்ணி காவல்துறை பெருமை கொள்கிறது' என்று அக்ஷய் குமாரை பெருமையாக புகழ்ந்து கொண்டிருந்தனர். ‌ கம்பீரமாக அனைவருக்கும் பேட்டி அளித்து விட்டு வீட்டிற்கு வந்தவனை வெளியிலேயே நிற்க வைத்து ஆரத்தி எடுத்து உள்ளே வரவேற்றவள்... 'உண்மையை ஏன் மறச்சீங்க ' என்று கேட்டதற்கு ..

'சொல்ல வேண்டிய சூழ்நிலை வரல... சொல்லலை' என்று முடித்துக் கொண்டான்....
அவன் மீது கோபம் கொண்டு பெண்ணவள் விலகிச்செல்ல சட்டென்று தன் கைக்குட்டையை எடுத்து தன் கண்கள் மட்டும் தெரியுமாறு கட்டிக் கொண்டவன், அவளை நெருங்கி அவளது கைகளிரண்டையும் பின்னால் வளைத்து சுவரோடு சாய்த்து நிறுத்திட... அவனது கண்களை ஓரிரு வினாடிகள் கூர்மையாக கண்டவள் அவன் யார் என்பதை புரிந்து கொண்டாள்.....

மூன்று வருடங்களுக்கு முன்பு தன்னை இடித்துவிட்டு சென்றவனை ' பொறுக்கி ' என்று இவள் அழைத்திட‌... இப்போது இருக்கும் அதே கோலத்தில் கண்கள் மட்டும் தெரியுமாறு பெண்ணவளை நெருங்கி நின்றவன் அவளைப் பார்த்தவாறே தன்னிடம் இருந்து தப்பிச் செல்லும் குற்றவாளியை என்கவுண்டர் செய்தான், குமார்.. அதில் பெண்ணவள் விழிகளை சாசரைப் போல்விரித்திட...அன்று அவ்விழிகளில் விழுந்தவன் இன்றுவரை எழவில்லை....


அவனைக் கண்டு தயக்கத்தோடு,

" அன்னைக்குதப்பா நினைச்சிட்டேன் சாரி"


" பரவாயில்ல.. அன்னைக்கு நீ மட்டும் என்ன திட்டாம இருந்திருந்தா

உன்ன பாத்திருக்கவும் மாட்டேன்....உன்ன உயிரா நெனச்சிருக்கவும் மாட்டேன்" என்று அவன் வார்த்தையில் தன் காதலை தெரிவிக்க.. தன் கணவனின் தோளில் சாய்ந்து தனக்குள் புதைத்து வைத்திருந்த காதலையும் வார்த்தைகளில் சொன்னால் பெண்ணவள்....

அதேநேரம் வினோத்தும் பவித்ராவும் அவர்கள் வீட்டிற்குள் நுழைந்தனர்...

முதலில் குமாருக்கு வாழ்த்தை தெரிவித்தவர்கள் கூடவே தங்களது திருமண செய்தியையும் சொல்லிட மகிழ்ச்சியோடு அவர்கள் இருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தனர் புதுமண தம்பதிகள்....

நால்வரும் மனம் நிறைந்த புன்னகையோடு அமர்ந்து பேசிக் கொண்டிருக்க ,

அதே நேரம் உள்ளே நுழைந்தார், சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்து அவனை மீட்டு , படிக்க வைத்து இன்று நல்ல நிலைமையில் வாழ வழிவகை செய்த ஜெயில் சூப்பிரண்டு எழிலரசன்….

அவரைக் கண்டதும் மகிழ்ச்சியோடு எழுந்து நின்ற குமார் அவரை மற்றவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தான்…..

வந்தவர் இருவருக்கும் வாழ்த்தை தெரிவித்துவிட்டு வைதேகியிடம் சிறிது நேரம் உரையாடிவிட்டு சென்று விட்டார்…….


தான் இவ்வளவு நாள் பட்ட கஷ்டத்திற்கு எல்லாம் விடிவு காலம் வந்தது போல் இனிவரும் நாட்கள் எல்லாம் சந்தோசம் மட்டுமே நிலைத்திருக்கும் என்ற நம்பிக்கையோடு தன் கணவனின் அருகில் புன்னகை முகத்தோடு அமர்ந்திருந்தால் தாரணி….

மீள முடியாத சுழலில் சிக்கித் தவிக்கும் பூந்தளிரினைப்போல் மாட்டிக்கொண்டு தவித்த தன் மகளின் வாழ்வில் இதற்கு மேலும் மகிழ்ச்சி மட்டுமே நிறைந்திருக்கும்‌ என நினைத்து தானும் மனமகிழ்வோடு அமர்ந்திருந்தார் வைதேகி...

இன்று போல் என்றும் அவர்களது வாழ்வு மகிழ்ச்சியாக அமையும் என்ற நம்பிக்கையோடு நாமும் வாழ்த்தி விடை பெறுவோம்.....