தன்னம்பிக்கை

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,547
1,114
113
??? *தன்னம்பிக்கை* ???
*அரசன் ஒருவர் அதிகாலையில் எழுந்தவுடன் சூரிய உதயத்தைப் பார்ப்பது அவரது வழக்கம்.*
*வழக்கம் போல் அன்றும் சாளரத்தைத் திறந்த அரசருக்கு ஏமாற்றம்! சூரிய உதயத்துக்குப் பதில் அவர் கண்களில் ஒரு பிச்சைக்காரன் தான் தோன்றினான்.*

*"போயும் போயும் இவன் முகத்தில் தான் விழிப்பதா.." என்று கடும் வெறுப்புடன் திரும்பினார் அரசர். திரும்பிய வேகத்தில் சுவற்றில் அவரது தலை அடிபட்டு இரத்தம் கொட்டியது.*
*பிச்சைக்காரனை இழுத்து வருமாறு கட்டளையிட்டார்.*
*அரச சபை கூடியது. தனது காயத்துக்கு காரணமாக இருந்த அந்த பிச்சைக்காரனை தூக்கிலிடுமாறு தண்டனையும் கொடுத்தார்.*
*பிச்சைக்காரன் கலங்கவில்லை.... கலகலவெனச் சிரிக்கத் தொடங்கினான். சபையில் இருந்தவர்கள் திகைப்புடன் விழித்தனர்.*
*அரசனுக்கோ, கோபம் கட்டுக்கடங்காமல் போய் விட்டது… "பைத்தியக்காரனே! எதற்குச் சிரிக்கிறாய்.." என்று ஆத்திரத்துடன் கேட்டார்.*
*அரசே! "என் முகத்தில் விழித்ததால் உங்கள் தலையில் சிறு காயம் மட்டும் தான் ஏற்பட்டது. ஆனால், உங்கள் முகத்தில் நான் விழித்ததால், என் தலையே போகப் போகிறதே… அதை நினைத்தேன் சிரித்தேன்" என்றான்.*
*மன்னன் தலை தானாகவே கவிழ்ந்து விட்டது. தவறை உணர்ந்தவன் தண்டனையை ரத்து செய்து பிச்சைக் காரனை விடுவித்தான்.*
*? "பிச்சைக்காரன் தன் தலை போகும் நிலையிலும் தன் தவறு இதில் ஒன்றுமில்லை..." என்று*
*தன்னம்பிக்கையுடன் இருந்ததால் தான் உயிர் பிழைக்க முடிந்தது.*
*?கருத்து: வாழ்வில் எந்த சூழ்நிலையிலும் தன்னம்பிக்கையுடனும் தைரியத்துடனும் இருக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.*
??? படித்ததில் பிடித்தது