Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript தினம் ஒரு தகவல் | SudhaRaviNovels

தினம் ஒரு தகவல்

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
மிகவும் அருமையான பகிர்வுகள் அக்கா..................
 
  • Like
Reactions: selvipandiyan

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
இந்தோனேசிய விமான விபத்தில் பலியான காதலனின் ஆசையை நிறைவேற்றிய காதலி





திருமண உடையில் இன்டன் (இடது), காதலர் ரியோவுடன் இன்டன் (வலது)

''கடைசியாக என்னிடம் ரியோ தொலைபேசியில் பேசும்போது நான் திருமணத்துக்குத் தாமதமாக வந்தால் திருமண ஆடையை அணிந்துகொண்டு அந்தப் புகைப்படத்தை எனக்கு அனுப்பு'' என்று தனது இறந்த காதலனை நினைவுகூர்கிறார் இன்டன் சியாரி .
இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தா நகரில் இருந்து பங்கல் பினாங் நகருக்கு லயன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஜேடி610 என்ற விமானம் கடந்த மாதம் விபத்துக்குள்ளானது. இந்த விமானம் போயிங் 737 மேக்ஸ் 8 வகையைச் சேர்ந்தது. விமானத்தில் பயணிகள், ஊழியர்கள் என மொத்தம் 188 பேர் பலியாகினர். இவர்களின் உடல் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்த விமான விபத்தில் பலியானவர்தான் ரியோ நந்தா பிரதாமா.
இன்டனுக்கும், ரியோவுக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடக்கவிருந்த நிலையில் ரியோ விமான விபத்தில் மரணமடைந்தார்.
இந்த நிலையில் தனது காதலன் தன்னிடம் கூறிய வார்த்தைக்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமண ஆடை அணிந்து தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
இதுகுறித்து இன்டன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறும்போது, ''ரியோ எனது முதல் காதலர். நாங்கள் சுமார் 13 வருடங்களாகக் காதலித்து வந்தோம். அவர் என்னிடம் ஒருமுறை தான் திருமணத்துக்கு தாமதமாக வந்தால் திருமண ஆடை அணிந்து கையில் பூச்செண்டுடன் அதனைப் புகைப்படம் எடுத்து அவருக்கு அனுப்பும்படி கூறியிருந்தார். அவர் விளையாட்டாகத்தான் கூறினார். என்னால் தற்போது உள்ள உணர்வை விவரிக்க முடியவில்லை.
நான் உனக்காகச் சிரிக்கிறேன் ரியோ. நான் சோகமாக இருக்க மாட்டேன். நீ எப்போதும் என்னைத் தைரியமாக இருக்குமாறு கூறுவாய். நான் உன்னைக் காதலிக்கிறேன்'' என்று பதிவிட்டுள்ளார்.
 
  • Like
Reactions: sudharavi

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
வெறுக்கப்பட்ட ராணியும் அவரின் முத்து மாலையும் - ஏலத்தின் கதை




கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம்.
வெறுக்கப்பட்ட ராணியின் முத்து மாலை

பிரான்ஸ் மக்களால் அதிகம் வெறுக்கப்பட்ட ராணியான மேரி ஆன்டொவ்னெட்டின் முத்து மாலை 36 மில்லியன் டாலர்களுக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது. உலகளவில் இதற்கு முன்பாக ஒரு முத்துமாலை இந்த அளவு தொகைக்கு எடுக்கப்பட்டதில்லை.
ஆஸ்திரேய இளவரசியான மேரி ஆன்டொவ்னெட் பிரான்ஸ் அரசர் பதினாறாம் லூயிஸை மணந்தார். மக்கள் ஒரு வேளை உணவுக்காக சிரமப்பட்டு கொண்டிருந்த போது, இவர் மிகவும் ஆடம்பரமாக வாழ்ந்தார் என பிரான்ஸ் மக்களால் தூற்றப்பட்டார். பிரஞ்ச் புரட்சிக்கு மக்களின் இந்த கோபங்களும் ஒரு காரணம். பிரஞ்ச் புரட்சியின் போது 1793ஆம் ஆண்டு கில்லட்டின் கொண்டு இவர் கொல்லப்பட்டார் .
ஐந்து ட்வீட்டுகள்
ஐந்து கேலி ட்வீட்டுகளை பகிர்ந்ததற்காக 41 வயது நபர் கடந்த ஒரு மாதாமாக சிறையில் இருக்கிறார். கடந்த செப்டம்பர் மாதம் டெல்லியை சேர்ந்த பாதுகாப்பு வல்லுநர் அபிஜித் ஐயர் மித்ரா ஒடிசாவில் உள்ள 13ஆவது நூற்றாண்டு காலக்கட்டத்தை சேர்ந்த கோனார்க் கோயில் சிற்பங்கள் குறித்து ஆபாசமாக ட்வீட் செய்தார்.
இந்த ட்வீட்டுகள் ஒடிசாவில் உள்ள 4 கோடி மக்களின் புண்படுத்துவதாக கூறி, இருவர் வழக்கு பதிந்தனர். இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்டவருக்கு பிணையும் மறுக்கப்பட்டுள்ளது. இது கருத்து சுதந்திரத்திற்கு எதிரான தாக்குதல் என்று இவருக்கு ஆதரவாக செயற்பாட்டாளர்கள் பலர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

காசுகளின் சுல்தான்
'சுல்தான் ஆஃப் காயின்ஸ்' என்றழைக்கப்பட்ட இரான் நாணய வர்த்தகர் ஒருவர் அதிக அளவு தங்க நாணயங்கள் பதுக்கி வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்டுள்ளார்.வாஹித் மஸ்லாமியன் என்ற அந்த வணிகருக்கும், மற்றொரு நாணய வர்த்தகருக்கும் 'உலகில் ஊழலை வேகமாக பரவச் செய்தனர்' என்ற குற்றச்சாட்டின் பேரில் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

தீர்க்கமான நடவடிக்கைகள்

ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பாக பிரக்ஸிட் தொடர்பான பேச்சுவார்த்தையில் தலைமை வகிக்கும் மிக்கேல் பார்னியர் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான இறுதி ஒப்பந்தம் தீர்க்கமான முன்னேற்றம் கண்டுள்ளதாக கூறுகிறார். புதன்கிழமை வெளியிடப்பட்ட இந்த 585 பக்க வரைவு அறிக்கை, "இந்த (பிரெக்ஸிட்) பேச்சுவார்த்தையை கொண்டுவருவதற்கான முக்கிய படி" என் று கூறி உள்ளார்.
மெலனியா டிரம்புடன் மோதல்
அமெரிக்காவின் முதல் பெண்மணியான மெலனியா டிரம்புடன் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான மிரா ரிகார்டெல் பதவி விலகியுள்ளார். வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறும் மிரா ரிகார்டெல் நிர்வாகத்தில் வேறு ஒரு புதிய பொறுப்பில் அமரவிருப்பதாக வெள்ளை மாளிகையின் பெண் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இது குறித்து மேலும் எந்த தகவலையும் அவர் தெரிவிக்கவில்லை.
வெள்ளை மாளிகையில் பணியாற்றும் தகுதி இனி மிரா ரிகார்டெலுக்கு இல்லை என்று மெலனியா டிரம்ப் இந்த வாரத்தில் கூறியது குறிப்பிடத்தக்கது. கடந்த அக்டோபர் மாதத்தில் ஆப்ரிக்கா சுற்றுப்பயணத்தின் போது இவ்விருவருக்கும் மோதல் இருந்ததாக கூறப்படுகிறது.
'பல ஆண்டுகள் ஆகும்'

காட்டுத்தீயினால் சூறையாடப்பட்ட கலிபோர்னியா நகரை மீண்டும் முழுவதுமாக நிர்மாணிக்க பல ஆண்டுகள் ஆகும் என்று அமெரிக்காவின் அவசரகால சேவை முகமையின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
தான் பார்த்த பேரிடர்களிலேயே இதுதான் மிகவும் மிக மோசமான பேரிடர் என்று மத்திய அவசர மேலாண்மை நிறுவனத்தின் (ஃபெமா) நிர்வாக அதிகாரியான புரோக் லாங் இது குறித்து வர்ணித்துள்ளார். தற்போது கலிபோர்னியா மாநிலம் முழுவதும் தீயை அணைக்க ஏறக்குறைய 9000 தீயணைப்பு படையினர் போராடி வருகின்றனர்.
 

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
சோகத்தில் முடிந்த செல்ஃபி: பாம்பாட்டியிடம் பாம்பை வாங்கி கழுத்தில் போட்ட இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம்
ஆந்திர மாநிலம், நெல்லூர் அருகே சூளூர்பேட்டையில் செல்ஃபி எடுக்க முயன்று பாம்பை வாங்கும்போது அது இளைஞரின் கழுத்தில் கடித்ததால், அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சூளூர்பேட்டையைச் சேர்ந்தவர் ஜெகதீஸ்(24). இவர் படித்து முடித்துவிட்டு, போட்டித் தேர்வுக்குத் தயாராகி வந்தார். இந்நிலையில் திங்கள்கிழமை சூளூர்பேட்டையில் பாம்பாட்டி ஒருவர் கொடிய விஷம் கொண்ட பாம்பை சாலையில் வைத்து வேடிக்கை காண்பித்துக் கொண்டிருந்தார். அதை ஏராளமான மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது தனது நண்பர்களுடன் அங்கு சென்ற ஜெகதீஷ் வேடிக்கை பார்த்தார். அப்போது, அவருக்குப் பாம்பை தனது கழுத்தில் போட்டு செல்ஃபி எடுக்க ஆசைப்பட்டுள்ளார். இதையடுத்து, தனது நண்பர்களிடம் கூறி தான் பாம்பை கழுத்தில் போட்டுக்கொள்கிறேன் தனது செல்போனில், வீடியோ, புகைப்படம் எடுக்குமாறு கூறியுள்ளார்.
பாம்பாட்டியிடம் பணம் கொடுத்து பாம்பை வாங்கி தனது கழுத்தில் போடஜெகதீஷ் முயன்றார். அப்போது பாம்பாட்டியிடம் பாம்பில் பல் பிடுங்கப்பட்டதா, கடித்தால் ஏதேனும் ஆபத்து நேருமா என்று அந்தப் பாம்பாட்டியிடம் பலமுறை கேட்ட பின்பு அந்தப் பாம்பை வாங்கியுள்ளார்.
ஜெகதீஷ் அந்தப் பாம்பை தனது கழுத்தில் போட்டுக்கொண்டு நண்பர்களிடம் புகைப்படம் எடுக்கவும், வீடியோ எடுக்கவும் கூறியுள்ளார். அப்போது, சரியாக பாம்பைப் பிடிக்காததால், குழுத்தில் போடப்பட்ட கொடிய விஷம் கொண்ட பாம்பு, திடீரென்று ஜெகதீஷின் கழுத்தில் கடித்தது.
பாம்பு கடித்தவுடன் பதற்றமடைந்த ஜெகதீஷ், பாம்பைக் கீழே வீசி எறிந்தார். அதன்பின் சிறிது நேரத்தில் ஜெகதீஷ் மயங்கி கீழே விழுந்தார். ஆனால், அந்தப் பாம்பாட்டி, பாம்புடன் சிறிதுநேரத்தில் அங்கிருந்து மாயமானார். ஜெகதீஷை அவரின் நண்பர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அந்தப் பாம்பாட்டி, சூளூர்பேட்டை அருகே மங்களம்பாடு கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும், பாம்பின் விஷப்பல்லை பிடுங்காமல் வித்தைக் காட்ட கொண்டு வந்தார் என்றும் கூறப்படுகிறது.
 
  • Like
Reactions: kayal vizhi