Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript தினம் ஒரு தகவல் | SudhaRaviNovels

தினம் ஒரு தகவல்

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
திருப்புட்குழி பள்ளி ஆசிரியர் தேசிய தகவல் தொழில்நுட்ப விருதுக்கு தேர்வு: சொந்த செலவில் ஸ்மார்ட் வகுப்பறை நிறுவியவர்
தகவல் தொழில்நுட்பத்தை சிறப்பான முறையில் பயன்படுத்தி மாணவர் களுக்குக் கல்வி கற்பித்து வரும் திருப் புட்குழி பள்ளி ஆசிரியர் செல்வ குமாருக்கு, நவ.21 அன்று புதுதில்லி யில் நடைபெறும் விழாவில், தேசிய அளவிலான மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப விருதினை, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி வழங்க உள்ளார்.
மாணவர்களுக்குப் பாடங்களை நடத்துவதில் தகவல் தொழில்நுட்பத் தைச் சிறப்பாக கையாளும் ஆசிரியர்களுக்கு தேசிய அளவிலான தகவல் தொழில்நுட்ப விருதினை மத்திய அரசு வழங்கி கவுரவிக்கிறது. இந்த விருதுக்காக தமிழ்நாட்டில் இருந்து விண்ணப்பித்த 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களில் இருந்து, ஆசிரியர் செல்வகுமார் உட்பட 3 பேர் இந்த விருதுக்கு தேர்வு செய்யப் பட்டுள்ளனர்.
திருப்புட்குழி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 10 ஆண்டு களாகப் பணியாற்றி வரும் ஆசிரி யர் ஜி.செல்வகுமார், தனது சொந்தச் செலவில் 5-ம் வகுப்பை ஸ்மார்ட் வகுப்பறையாக மாற்றியுள்ளார். ஒரு கணிப்பொறியில் 8 மானிட்டர் களைப் பொருத்தி, தனது வகுப்பு மாணவர்களை 8 குழுவாகப் பிரித்து ஒலி, ஒளி வடிவில் கல்வி பயில வைக்கிறார். பாடங்களையும், பாடங் கள் தொடர்பான வினா-விடைகளை யும் கியூஆர் கோடாக மாற்றி, மாண வர்களது மேஜையில் ஒட்டி வைத் துள்ளார். பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் அடையாள அட்டைகளை வழங்கியுள்ளார். இதில் உள்ள கியூஆர் கோடில் மாணவர்கள் செய்ய வேண்டிய வீட்டுப் பாடங்கள், அவர்களைப் பற்றிய குறிப்புகள், அவர்கள் தேர்வுகளில் எடுக்கும் மதிப்பெண்கள் போன்ற விவரங்கள் உள்ளீடு செய்யப்பட்டுள்ளன. இதனைப் பெற்றோர் வீட்டில் இருந்தே பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
இதுகுறித்து ஆசிரியர் செல்வ குமார், ‘‘மாணவர்களிடம் தகவல் தொழில்நுட்பத்தைச் சிறப்பாகப் பயன்படுத்தியது தொடர்பாக நானும், விழுப்புரம் மாவட்டத்தில் லாசர் ரமேஷ், சிவகாசியில் கருணைதாஸ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறோம். யூடியூப் விடியோ வடிவில் பாடங்களை மாற்றிக் கொடுத்தால், மாணவர்கள் எளிதில் கற்றுக் கொள்வார்கள். அதைத்தான் நான் செய்துள்ளேன். அடுத்து எங்கள் பள்ளியின் பெயரில் ஒரு மொபைல் ஆப் உருவாக்க உள்ளேன்’’ என்றார்.
1542381183367.png
 
  • Like
Reactions: sudharavi

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
சோகத்திலும் நெகிழ்ச்சி: நிவாரணப் பொருட்கள் அனுப்பிய மாணவர்களுக்கு இளநீர் அனுப்பிய டெல்டா விவசாயிகள்

வாகனத்தில் இளநீர் அனுப்பிய விவசாயிகள்
'கஜா' புயலால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா விவசாயிகள் சோகமான நிலையிலும், 'நாங்கள் உணவளிப்பவர்கள்' என்பதை நிரூபித்துள்ளனர்.
'கஜா' புயலால் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய டெல்டா மாவட்டங்கள் பெரும் அழிவைச் சந்தித்துள்ளதாக விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். பல ஆண்டுகளாக செலவிட்டு வளர்த்த தென்னை மரங்கள், வாழை, கரும்பு உள்ளிட்டவை பெரும் சேதமடைந்துள்ளன. அதிலிருந்து விவசாயிகள் மீள பல ஆண்டுகள் ஆகும். ஆடுகள், மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளும் இறந்துள்ளன.
ஒட்டுமொத்த தமிழகத்துக்கே உணவு ஆதாரமாக விளங்கும் டெல்டா இப்படி உருக்குலைந்துள்ள வேளையிலும், டெல்டா விவசாயிகள் தங்களுடைய அன்பையும், ஈகை குணத்தையும் வெளிப்படுத்தி நெகிழ வைத்துள்ளனர்.
'கஜா' புயலில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், விவசாயிகளுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கி திருச்சி நேஷனல் கல்லூரி மாணவ, மாணவிகள் உதவிக்கரம் நீட்டியுள்ளனர். நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்ட

வாகனத்தை வெறும் வண்டியாக அனுப்ப மனமில்லாத டெல்டா விவசாயிகள், அந்த வாகனம் முழுக்க இளநீர் நிரப்பி மீண்டும் அனுப்பி வைத்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தஞ்சை மாவட்டம், பேராவூரணி வட்டம் நாடியம் கிராமத்தில் நடந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நிலையிலும், டெல்டா விவசாயிகள் உணவளிப்பவர்கள் என்று நிரூபிக்கும் இச்சம்பவத்தை நெட்டிசன்கள் பாராட்டி நெகிழ்ந்து வருகின்றனர்.
 
  • Like
Reactions: sudharavi

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
என்னைத் தனியா விடாதம்மா!'- பெற்றோரின் மூடநம்பிக்கையால் பறிப்போன பட்டுக்கோட்டை சிறுமியின் உயிர்
பருவமடைந்த சிறுமியைத் தீட்டு எனக் கூறி, தனியாகக் குடிசையில் தங்கவைத்ததால், கஜா புயலின்போது சிறுமி இருந்த குடிசைமீது மரம் விழுந்து அவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பட்டுக்கோட்டையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கஜா புயல் ஏற்படுத்திய பாதிப்பால் வீடு உள்ளிட்ட உடைமைகள், வாழ்வாதாரம் என அனைத்தையும் இழந்து விட்டு நிற்கதியாய் நிற்கிறார்கள். இதில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். மரங்கள் விழுந்ததில் ஏராளமான கால்நடைகளும் செத்து மடிந்து விட்டன. இதையெல்லாம்விட பெரும் கொடுமை, பருவம் எய்திய சிறுமியை தீட்டு எனத் தனியாக குடிசையில் தங்கவைத்ததால் அவர் இறந்த சம்பவமும் நிகழ்ந்துள்ளது.


பட்டுக்கோட்டை அருகே உள்ளது அணைக்காடு கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி செல்வராஜ். இவர், குடும்பத்தோடு தென்னந்தோப்பில் தங்கி வேலைபார்த்து வந்தார். ஏழாவது படித்துக்கொண்டிருக்கும் அவரது மகள் விஜயா, கடந்த வாரத்தில் பருவம் அடைந்திருக்கிறார். இதனால் தீட்டு எனக் கூறி அவரின் பெற்றோர், தென்னந்தோப்பில் தனியாக உள்ள குடிசையில் அந்தச் சிறுமியை தங்கவைத்துள்ளனர். கடந்த 15-ம் தேதி, கஜா புயல் தாக்கியபோதும் சிறுமி குடிசையில் இருந்துள்ளார். அப்போது, புயலுக்குத் தாக்குப் பிடிக்க முடியாமல் பெரிய வீடுகளே இடிந்து தரைமட்டமாகின. விஜயா இருந்த குடிசையின் மேல் தென்னை மரம் ஒன்று விழுந்தது. இதில் விஜயா படுகாயமடைந்து பலியானார். இது அப்பகுதியில் பெரும் சோகத்ததேற்படுத்தியுள்ளது.
இதுகுறித்துக் கூறிய சிலர், ``செல்வராஜ் கூலித்தொழிலாளி. வயதுக்கு வந்த விஜயாவை தீட்டு எனக் கூறி பெண்ணைத் தனியாக படுக்க வைத்திருக்கிறார் அவர் அம்மா. அவர்கள் பத்து அடி கொண்ட மற்றொரு குடிசை வீட்டில் மகனுடன் இருந்துள்ளனர். அப்போதே விஜயா அம்மாவிடம், ‘எனக்கு பயமாக இருக்கும்மா. நான் உன்னோடயே இருக்கேன். என்னை தனியா விடாத’ எனக் கூறியிருக்கிறார். அதற்கு விஜயாவின் அம்மா, ‘நாங்க உன்னை தொடக்கூடாது. தொட்டா தீட்டு’ எனக் கூறி சமாதானம்செய்து குடியில் தங்கவைத்துள்ளார். இதுபோல இன்னும் பல கிராம மக்கள் அறியாமையில் இருந்து மீளாமல் இருக்கின்றன என்பது பெரும் வேதனை'' என்றனர்.
 
  • Like
Reactions: sudharavi

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
அமெரிக்கா, ஐரோப்பாவில் இருந்து தனுஷ்கோடிக்கு வலசை வரும் பிளமிங்கோ பறவைகள்
தனுஷ்கோடி



அமெரிக்கா, ஐரோப்பா கண்டங்களில் இருந்து பல்லாயிரம் மைல் தூரம் பறந்து ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடிக்கு பிளமிங்கோ பறவைகள் வலசை வரத்தொடங்கியுள்ளன.
அமெரிக்கா, ஐரோப்பா கண்டங்களில் தற்போது கடும் குளிர் காலம் நிலவுகிறது. இதனால் சீரான தட்பவெப்ப நிலை உள்ள பகுதிகளை தேடி தமிழகத்தின் செங்கல்பட்டு, திருநெல்வேலி, நாகை, வேதாரண்யம், கடலூர், தனுஷ்கோடி, ராமேசுவரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அன்டீன் பிளமிங்கோ, அமெரிக்கன் பிள மிங்கோ, சைலியன் பிளமிங்கோ, ஜாம்ஸெஸ் பிளமிங்கோ ஆகிய பறவைகள் வருகை தருகின்றன. இந்த வலசை (பறவைகள் இடம்பெயர்ந்து வந்து செல்லுதல்) ஆண்டுதோறும் நவம்பர் முதல் பிப்ரவரி வரை நடைபெறும்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் காஞ்சிரங்குடி, சித்திரங்குடி, மேலச்செல்வனூர், கீழச் செல் வனூர் ஆகிய பகுதிகளில் பறவை சரணாலயங்கள் உள்ளன. இங்கு ஆண்டுதோறும் நவம்பர் தொடங்கி ஏப்ரல் வரையிலும் ரஷ்ய நீர்வாத்து, மஞ்சள் மூக்கு நாரை, உள்ளான், அரிவாள் மூக்கன், நாரை, பாம்பு தாரா, நீர் காகங்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பற வைகள் வருகின்றன.
இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை, கடந்த நவம்பர் முதல் வாரம் தொடங்கி உள்ள நிலையில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கஜா புயல் தமிழகத்தை கடந்துள்ள நிலையில் ராமேசுவரம் தனுஷ்கோடி கடற் பகுதிகளுக்கு அமெரிக்கா, ஐரோப்பா பகுதிகளில் இருந்து பல்லாயிரம் மைல் தூரம் பறந்து பிளமிங்கோ பறவைகள் தற்போது வரத் தொடங்கியுள்ளன.
தனுஷ்கோடிக்கு வந்துள்ள கிரேட்டர் பிளமிங்கோ வகையைச் சேர்ந்த பறவைகள் மூன்றிலிருந்து இருந்து ஐந்து அடி உயரத்தில், இளம் சிவந்த கால்களுடன், பால் போன்ற வெண்மை நிறத்தில் உள்ளன. தனுஷ்கோடி கடற்கரை பகுதிகளில் சுற்றித்திரியும் பிள மிங்கோ பறவைகளை ராமேசுவரம் வரும் சுற்றுலாப் பயணிகளும், பக்தர்களும் ஆர்வமாகப் பார்த்து மகிழ்கின்றனர்.
 
  • Like
Reactions: sudharavi

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
தற்காலிக பறவைகள் சரணாலயமாக மாறிய காஞ்சி நகர ஏரிகள்: கூட்டம் கூட்டமாக மரக்கிளைகளில் தங்கியுள்ளதால் கிராம மக்கள் மகிழ்ச்சி
காஞ்சிபுரம் அடுத்த களியனூர், வையாவூர் மற்றும் நத்தப் பேட்டை ஏரிகளில் கூட்டம், கூட்டமாக தங்கியுள்ள பறவை களால், மேற்கண்ட ஏரிகள் தற்காலிக சரணாலயமாக மாறியுள்ளதாக கிராம மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் அடுத்த வேடந் தாங்கல் பகுதியில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு, நவம்பர் மாதம் முதலே பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்த பறவைகள் இனப் பெருக்கத்துக்காக வந்து செல் கின்றன. இவ்வாறு வரும் பறவைகள், ஏரியில் உள்ள நீரை ஆதாரமாகக் கொண்டு ஏரியின் நடுவே உள்ள மரங் களில் கூடு கட்டி முட்டையிட்டு குஞ்சு பொரிக்கின்றன. மேலும், குஞ்சுகள் வளர்ந்த வுடன் மீண்டும் தாய்நாடு திரும்பு கின்றன.
இந்நிலையில், மாவட்டம் முழுவதும் போதிய மழை யில்லாததால் சரணாலயத்தில் உள்ள ஏரி நீரின்றி வறண்டு காணப்படுகிறது. மேலும், ‘கஜா' புயலால் கனமழை பெய்து ஏரி நிரம்பும் என எதிர்பார்த்த நிலையில், ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்யவில்லை. இதனால், இனப்பெருக்கத்துக்காக இங்கு வரும் பறவைகள் அருகில் உள்ள நீர் நிலைகளில் தஞ்சமடைந்து வருகின்றன.
காஞ்சிபுரம் நகரத்தின் எல்லைகளாக விளங்கும் வையாவூர், களியனூர் மற்றும் நத்தப்பேட்டை ஏரிகள் நகரப் பகுதியில் பெய்த சிறிது மழை யினால் ஓரளவுக்கு தண்ணீர் உள்ளது.
மேலும், ஏரியின் நடுவே மற்றும் அதைச் சுற்றி ஏராளமான கருவேல மரங்கள் இயற்கை அரணாக அமைந் துள்ளதால், பறவைகள் மேற் கண்ட ஏரிகளில் உள்ள மரக் கிளைகளில் தங்கியுள்ளன. மேலும், இப்பறவைகள் ஏரியில் ஆங்காங்கே நீந்தி இரை தேடுவதால் அது பறவைகள் சரணாலயம் போல் காட்சியளிக் கிறது.
வையாவூர், நத்தப்பேட்டை கிராம மக்கள் இதுகுறித்து கூறும்போவது, “ஏரிகளில் தண்ணீர் நிரம்பியுள்ளதாலும் எளிதில் இரை கிடைக்கும் விவசாய நிலங்கள் அதிகம் உள்ளதால், மேற்கண்ட ஏரி களில் பறவைகள் அதிக அள வில் தங்கியுள்ளன. மேலும், இங்கு அமைதியான சூழல் உள் ளதால் பறவைகள் தொடர்ந்து இங்கு தங்கியிருக்கும் என நம்புகிறோம்.
பறவைகள் தங் களின் இருப்பிடங்களை எளிதில் தேர்வு செய்யாது. இந் நிலையில், மேற்கண்ட ஏரிகளை பாதுகாப்பான பகுதி யாக கருதி பறவைகள் தங்கி யிருப்பதால் இச்சூழலை பாது காக்க வேண்டியது அவசிய மாகிறது. அதனால், வனத் துறை அதிகாரிகள் பறவை களின் பாதுகாப்புக்காக ஏரிக் கரைகளில் தொடர்ந்து ரோந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்” என்றனர்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் வனத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “ஏரிகளில் தங்கி யுள்ள பறவைகளின் பாதுகாப் புக்கான அனைத்து நடவடிக் கைகளும் மேற்கொள்ளப்பட் டுள்ளன. பறவைகளுக்கு இடை யூறு ஏற்படுத்தினால் அவர் களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.
 
  • Like
Reactions: sudharavi