Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript தினம் ஒரு தகவல் | SudhaRaviNovels

தினம் ஒரு தகவல்

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
திடீர் மாற்றம்; வட தமிழகத்தை நோக்கி வேகமாக நகரும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வாளர் செல்வகுமார் தகவல்
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி, புயலாக வலுப்பெற வாய்ப்பில்லை, மாறாக வேகமாக நகர்ந்து நாளை காலை நாகை மாவட்ட தென் கடலோரப்பகுதியில் கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர் ஆசிரியர் ந.செல்வகுமார் தெரிவித்துள்ளார்.

செல்வகுமார்

இதுகுறித்து ந.செல்வகுமார் தனது கூறியுள்ளதாவது:
வங்ககடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை, பாக் ஜலசந்திக்கு மேல் கிழக்கே சுமார் 400 கிலோ மீட்டர் தொலைவில் அதிகாலை 4:00 மணி நிலவரப்படி நிலை கொண்டு இருந்தது. இது வேகமாக தீவிரமடைந்து வடமேற்காக நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி பின்னர் புயல் என்ற அளவில் உருவாக வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டது.
இந்தநிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் போக்கில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இது வேகமாக நகர்ந்து, நாகை மாவட்டத்தின் தென் கடலோரா பகுதியில் நாளை காலையே கரையை கடக்க வாய்ப்புள்ளது.
கரையை கடந்ததும் வலுவிழந்து வட தமிழகப்பகுதி முழுவதும் பரவி மழையை கொடுக்கும். இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வட தமிழகத்தில் கனமழை பெய்யும். தெற்கு ஆந்திரா, தெற்கு கர்நாடக பகுதிகளிலும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், விழுப்புரம் மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது.
விழுப்புரம் கடலோரப்பகுதி, நாகை வடக்கு கடலோரம், கடலூர் தெற்கு கடலோரம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. எனினும் அச்சப்படும் அளவுக்கு மிகமோசமான மழையோ, காற்றோ இருக்காது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
350 கிலோ எடையுள்ள நாணயங்கள்: குளியல் தொட்டியில் நிரப்பிக் கொடுத்து ஐபோன் வாங்கிய இளைஞர்

ரஷ்யாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், ரொக்கமாகவோ கார்டு மூலமோ பணத்தைச் செலுத்தாமல் குளியல் தொட்டியில் நாணயங்களை நிரப்பி ஐபோன் எக்ஸ்எஸ் மாடலை வாங்கியுள்ளார்.
இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரஷ்ய வலைப்பதிவாளர் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் வீடியோவில், 350 கிலோ எடையுள்ள குளியல் தொட்டி, ஆப்பிள் விற்பனையகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. காவலாளிகளுடன் சண்டை போட்ட பிறகு, மிகுந்த சிரமத்துக்கு இடையில் குளியல் தொட்டியை ஒரு குழு தூக்கிச் சென்றது.
இதுகுறித்து ஆப்பிள் செய்தித்தொடர்பாளர் லுட்மிலா செமாஷினா கூறும்போது, ''சில்லறைகளை எங்களின் பணியாளர் மிகவும் பொறுமையாக எண்ணினார். நாணயங்களை எண்ணி முடிக்க இரண்டு மணி நேரம் ஆனது.
குளியல் தொட்டியில் 1,00,000 ரூபிள்கள் (1,538 டாலர்கள்) இருந்தன. அத்தொகை புது ஐபோன் எக்ஸ்எஸ் வாங்குவதற்குப் போதுமானதாக இருந்தது. ரஷ்யாவில் ஐபோன் எக்ஸ்எஸ் 1,050 முதல் 1,500 டாலர்கள் வரை விற்கப்படுகிறது.
நாங்கள் வாடிக்கையாளரின் வசதியே முக்கியம் என்று நினைக்கிறோம். வாடிக்கையாளர் ஒருவர் பரபரப்பை ஏற்படுத்தி, குளியல் தொட்டி முழுக்க நாணயங்களை நிரப்பிக்கொண்டு வருகிறார். அதைக் கொண்டு ஐபோனை வாங்குகிறார். அதை எங்களின் விற்பனையாளர் பொறுமையாக எதிர்கொள்கிறார்'' என்றார்.
 

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
பொம்மை என நினைத்து நிஜ துப்பாக்கியுடன் விளையாடிய 2 வயது குழந்தை: துப்பாக்கி வெடித்து பலியான பரிதாபம்
பொம்மை என நினைத்து நிஜ துப்பாக்கியுடன் விளையாடிய 2 வயது சிறுவன், துப்பாக்கி வெடித்ததால் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் ஜார்ஜியா மாகாணத்தில் நிகழ்ந்துள்ளது
கடந்த வியாழக்கிழமை அன்று க்ளேடன் கவுண்டி பகுதியைச் சேர்ந்த 2 வயது சிறுவன், தனது தந்தையின் அறைக்குள் நுழைந்து விளையாடினார். அப்போது அவரின் தந்தை உறங்கிக் கொண்டிருந்தார். தனது தந்தையின் முகத்தை மூடி விளையாடிய சிறுவன், அவரின் தலையணைக்கு அடியில் இருந்து துப்பாக்கியை எடுத்தார்.
பொம்மை துப்பாக்கி என்று நினைத்த சிறுவன் அதைக் கொண்டு விளையாட ஆரம்பித்தார். துப்பாக்கி லோட் செய்யப்பட்டிருந்ததால் திடீரென வெடித்தது. உடனடியாக தந்தை எழுந்து பார்க்க, சிறுவன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.
மற்றோர் அறையில் இருந்த சிறுவனின் தாய் ஓடி வந்தார். இருவரும் அருகில் இருந்த மருத்துவமனைக்கு சிறுவனை அழைத்துச் சென்றனர். ஆனால் வழியிலேயே சிறுவன் உயிரிழந்தார்.
இதுதொடர்பாக க்ளேடவுன் கவுண்டி காவல் துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. இதில் யார் மீது குற்றம் சுமத்தப்படும் என்று தெரியவில்லை.
 

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
தலை உடைந்து தொங்கும் எதிர்காலம்...

கறம்பக்குடியில் ஒரு விவசாயியின் தோட்டத்தில் முறிந்து கிடக்கும் தென்னை மரங்கள்.
வீழ்ந்து கிடக்கும் தென்னந்தோப்புகள் அனைத்தும் வெறும் மரங்கள் அல்ல... அது இப்பகுதி இளைஞர்களின் 20 ஆண்டுகால உழைப்பு.
ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, வேதாரண்யம் உள்ளிட்ட இந்தப் பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வளைகுடா நாடுகளிலும் சிங்கப்பூரிலும் பணிபுரிகின்றனர். கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியிலிருந்து வெளிநாட்டுக்குச் செல்வது ஒரு வாழ்க்கை முறையாகவே மாறியிருக்கிறது. பெரும்பாலும் உடலுழைப்புத் தொழிலாளர்கள்தான்.
வெளிநாடுகளில் பத்துப் பதினைந்து ஆண்டுகள் தொடர்ந்து உழைப்பது, அந்தப் பணத்தைக்கொண்டு உள்ளூரில் தென்னந்தோப்புகளை உருவாக்குவது என்று அவர்களின் வாழ்க்கை இருக்கிறது. ஒரு ஏக்கர் தென்னந்தோப்பிலிருந்து ஒரு ஆண்டுக்குத் தோராயமாக ஒரு லட்சம் ரூபாய். அந்தத் தோப்பை உருவாக்குவதற்குக் குறைந்தது பத்தாண்டு காலம் தேவைப்படுகிறது. பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதியில் இருக்கக்கூடிய தென்னை மரங்கள் பாளை விடுவதற்கே ஏழெட்டு ஆண்டுகளாகிவிடும். மரம் முதிர்ந்து நல்ல காய்ப்பு காண வேண்டும் என்றால், பதினைந்து ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.
இந்த தென்னந்தோப்புகளை உருவாக்குவதற்காக ஒரு தலைமுறை தங்கள் வாழ்க்கையையே செலவிட்டிருக்கிறது. அவர்களின் மொத்த முதலீடும் இப்போது நிர்மூலமாகி விட்டது. வெட்டுக்குத் தயாராக இருந்த தென்னை மரங்கள் எல்லாம் இப்போது தலை உடைந்து தொங்கி நிற்கின்றன.
 

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
சென்னையில் நாளை வரை மழை தொடரும்: தமிழ்நாடுவெதர்மேன் தகவல்
சென்னை



படம். | எல்.சீனிவாசன்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இன்று பெய்தது போன்று மழை நாளை வரை தொடரும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவி்த்துள்ளார்.
தமிழ்நாடு வெதர்மேன் என்ற பெயரில் எழுதிவரும் பிரதீப்ஜான் தனது பேஸ்புக் பக்கத்தில் இன்று பதிவிட்டுள்ளதாவது:
கடந்த 12 மணிநேரமாக மழை மேகங்கள் சென்னையை விட்டு வெளியேதான் நகராமல் இருக்கின்றன. கடந்த 12 மணிநேரமாக அனைத்து மழைநீரும் கடலில் கொட்டி வீணாகி வருகிறது. இப்போதுதான் கடற்கரைப்பகுதியில் இருந்து மழை மேகங்கள் சென்னைக்குள் நகரத் தொடங்கி இருக்கிறது. இதனால், கிழக்கு கடற்கரைச்சாலை, சிறுசேரி பகுதிகளில் காற்றுபலமாக வீசி மழை பெய்துவருகிறது. சென்னையின் இதர பகுதிகளில் இரவு நேரங்களில் நிதானமாக மழை பெய்யக்கூடும்.
இன்று நிலவிய இதே நிதானமான மழைதான் நாளை நண்பகல் வரை தொடரும். என்னதான் நாம் மழையைப்பெற்றாலும், சென்னைக்கு போதுமான அளவு மழை நீர் கிடைக்கவில்லை. பற்றாக்குறை மழையாகத்தான் இருக்கிறது.
டிசம்பர் மாதம், 2-வது வாரத்தில் நம்முடைய கடற்பகுதிக்கு “எம்ஜேஓ” வரும் என எதிர்பார்க்கிறேன், அதுவரை பொறுத்திருப்போம். அதேசமயம் பற்றாக்குறை பருவமழையை சென்னை தாண்டிவருவது கடினம்தான்.
ேமலும் நாளையும், நாளைமறுநாள்(23-ம்தேதி) “புல் எபெக்ட்” மூலம் நமக்கு மழை கிடைக்கும். அதன் பின் 24-ம் தேதியில் இருந்து தமிழகம் முழுவதிலும் வறண்ட வானிலையே காணப்படும்.
கடந்த 12 மணிநேரமாக மேகக்கூட்டங்கள் நகராமல் கடற்பகுதியிலேயே இருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. நம்முடைய கடற்பகுதிக்கு “எம்ஜேஓ” வரும்வரை என்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவுகள் ஏதும் இருக்காது. அதாவது டிசம்பர் -2-வது வாரம் வரை.
2007-ம் ஆண்டில் இதுபோலத்தான் சூழல் நிலவியது. ஆனால், அந்த ஆண்டில் டிசம்பர் மாதத்தில் பெய்த மழை நம்மை காப்பாற்றியது. அதுபோல் இந்த ஆண்டும் நடக்கும் என நம்பலாம்.
இவ்வாறு பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.