திரை விமர்சனம்

sudharavi

Administrator
Staff member
#1
ஹிச்கி ( ஹிந்தி திரைப்படம்)

hichki.jpeg

ஹிச்கி என்பதன் அர்த்தம் விக்கல். தூரட் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரின் வாழ்க்கையையும், அதை அவர் எவ்வாறு தைரியமாக எதிர்கொண்டு ஜெயிக்கிறார் என்பதை மிக அழகாக காண்பித்திருக்கிறார் இயக்குனர் சிதார்த்த் மல்ஹோத்ரா. தூரட் என்பது மரபுவழி சார்ந்து நரம்பியல் மனநல சீர்கேடு. இந்த நோயால் பாதிக்கப்பட்டிருப்பவரின் தசைகள் திடீர் நடுக்கத்தால் உடலின் ஏதேனும் ஒரு பாகம் தன்னை அறியாமல் அசைவைக் காட்டும். அதோடு வார்த்தைகளும் வெளிப்படும். அதை அந்த நோயால் பாதிக்கப்பட்டவரால் கட்டுப்படுத்த முடியாது.இப்படிப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர் தான் ராணி முகர்ஜி. நைனா மாத்துராக இந்த படம் முழுவதும் வந்து நம்மை சிந்திக்க வைக்கிறார், தன்னம்பிக்கையை நம்முள் விதைத்து விட்டு செல்கிறார்.சிறுவயதில் இந்த நோயின் அறிகுறி தெரிய ஆரம்பிக்கும் போது சுற்றி உள்ளவர்களால் அவர் அடையும் அவமானங்கள் ஆரம்பத்தில் தனக்குள் சுருங்கிப் போக செய்கிறது. அவரின் தந்தையே தனது குழந்தையின் நோயின் தன்மையை உணராமல் குடும்பத்தை விட்டு விலகி செல்கிறார். நிஜத்திலும் இது போன்ற நிகழ்வுகள் நிறைய உண்டு. பல தந்தையர் தனக்கு பிறந்த குழந்தைகளின் குறைபாடுகளை அறிந்த பின் விலகிச் செல்வதை கண்டிருக்கிறோம். ஆனால் எந்தவொரு தாயும், தன்னுடைய குழந்தையை இம்மாதிரியான சூழலில் விட்டு விலகிச் செல்வதில்லை.நைனாவின் இந்த நோய்அவர் படிக்கும் பள்ளியில் பல பிரச்சனைகளை உருவாக்குகிறது. கூட படிப்பவர்களும் சரி, வழி நடத்தும் ஆசிரியரும் சரி அவரை புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். முடிவில் அவரை அந்த பள்ளியில் இருந்து வெளியேற்றுகிறார்கள். அவருக்கேற்ற பள்ளி இதுவல்ல, மனநலம் குன்றியவர்களுக்கான பள்ளிக்குத் தான் செல்ல வேண்டும் என்கிற அறிவுரையுடன்.அந்த நிமிடத்தில் இருந்து தாயாரின் உதவியுடன் தனது வாழ்க்கைப் போராட்டத்தை துவங்குகிறார். சாதாரண பள்ளியிலேயே படித்து பட்டங்களும் பெற்று கார்டூனிஸ்ட்டாக வேலை பார்த்தாலும், தான் ஒரு டீச்சர் ஆக வேண்டும் என்றே பிரியப்படுகிறார். அதற்காக பல பள்ளிகளின் படிகளை ஏறி இறங்குகிறார். அவரின் இந்த குறைப்பாட்டைக் கண்டு வேலை கொடுக்க மறுக்கின்றனர்.இதன் நடுவே அவரது தந்தை மீண்டும் குடும்பத்தில் இணைந்து நைனாவின் ஆசைக்கு தடை போட முயல்கிறார். ஆனால் நைனாவின் பல வருடக் கனவு நனவாகிறது. நைனா வெளியேற்றப்பட்ட பள்ளியிலேயே அவருக்கு வேலை கிடைக்கிறது. தற்காலிகமாக மட்டுமே அந்த பள்ளியில் வேலை கிடைக்கிறது.அதுவும் எப்படிப்பட்ட வகுப்பிற்கு என்றால் அந்த பள்ளியிலேயே மிக மோசமான மாணவர்களை கொண்ட வகுப்பிற்கு ஆசிரியராக பொறுப்பேற்கிறார். தனது குறைப்படுகளையும் மீறி அந்த மாணவர்களின் மனதில் இடம் பிடித்து எப்படி வெற்றி பெறுகிறார் என்பதை ரசிக்கும் வகையில் நகர்த்தி செல்கிறார்.அந்த மாணவர்களும் பிறப்பிலேயே மோசமானவர்கள் அல்ல. அவர்கள் வளர்ந்து வரும் சூழலும், அவர்களை மற்றவர்கள் நடத்தும் முறையுமே தவறானவர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரின் சூழ்நிலையை உணர்ந்து அவர்களை அந்த பள்ளியின் முதல் மாணவர்களாக மாற்ற போராடுகிறார்.இந்த படத்திற்கு ஸ்க்ரீன் ப்ளே எழுதியவர்களை பாராட்டியே ஆக வேண்டும். ஒவ்வொரு வசனமும் நிதர்சனத்தை முகத்தில் அறைந்து சொல்லுகிறது. இது போன்று குறைபாடு உடையவர்களை நம் சமூகத்தில் எப்படி நடத்துகிறோம் என்பதை திரையில் பார்க்கும் போது மனம் வலிக்கிறது. எந்தவொரு உயிரும் தான் இப்படித்தான் பிறக்க வேண்டும் என்று விரும்பி பிறப்பதில்லை. அப்படி இருக்கும் போது பிற உயிரின் வேதனையை நாம் கண்டிப்பாக உணர வேண்டும்.படம் முடிந்த பின்பும் நைனா மாத்துரின் ஓசை காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. ராணி முகெர்ஜி அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். மிகையான நடிப்பை காட்டாது இயல்பாக அந்த நைனாவாக நம் முன் வந்து செல்கிறார்.காதல் இல்லாத, காமம் இல்லாத ஒரு படம் நம்மை திரையோடு ஒன்ற வைத்திருக்கிறது. வெகுநாட்களுக்குப் பிறகு ரசித்துப் பார்த்த படம்.
 
Last edited:
#2
நான் இன்று ஒரு விமர்சனத்துடன் வந்திருக்கிறேன்,சமீபத்தில் வெளியான சூப்பர் டீலக்ஸ் திரைப்படம்.நான்கு கதைகள்,அவற்றை அழகாக இணைத்து ஒரு படம்.திரைப்படமாக ரசித்து பார்க்க வேண்டிய படம்தான்.எங்கோ யார் வீட்டிலோ நடப்பது பார்க்க சுவாரஸ்யமா இருக்கு!நம் வீட்டில் நடந்தால் நாம் ஒத்துக் கொள்ளவே மாட்டோம்!நடப்பதை தான் காட்டுகிறோம் என சொல்லலாம்,எதுவுமே குற்றம் இல்லை என படம் சொல்கிறது!ஆரம்பத்திலேயே சமந்தா தன் பழைய காதலனிடம் போனில் பேசுகிறார்,அவனை வீட்டுக்கு அழைக்கிறார்,அவன் ஏதோ பிரச்சினையில் இருப்பதாகவும் அதை மறக்க வைக்க போவதாகவும் சொல்வார்!அவன் வந்ததும் இருவரும் உறவு கொள்வார்கள்,உடனே அவன் இறந்து விடுவான்!கணவனான பகத் பாஸில் வந்ததும் உண்மையை சொல்வாள்!உரையாடல் எல்லாமே அப்பட்டமான வார்த்தைகள்!நமக்கு அதிர்ச்சியாக இருக்கும்!

பிணத்தை மறைக்க இருவரும் அலைவார்கள்.ப்ளஸ் டூ படிக்கும் மாணவர்கள் செக்ஸ் படம் பார்க்க ஒரு நண்பன் வீட்டில் சேர்வார்கள்,படத்தில் நடிக்கும் ரம்யா கிருஷ்ணன் மகனும் இந்த படம் பார்க்க வந்திருப்பான்!அவன் அதிர்ச்சியில் டி வியை உடைத்து கத்தி கதறுவான்!உடைந்த டிவிக்கு பதில் புதிது வாங்க அலைவார்கள்!விஜய் சேதுபதி கல்யாணம் ஆகி ஒரு மகன் பிறந்ததும் வீட்டை விட்டு ஓடி ஒரு அரவாணியாக திரும்பி வருவார்! அவரை குட்டி பையன் பள்ளிக்கு கூட்டி செல்ல ஆசைப்படுவான்!அங்கு அவர் சந்திக்கும் பிரச்சினைகள்,போலிஸிடம் மாட்டி அனுபவிக்கும் செக்ஸ் டார்ச்சர்கள் என அவரின் கதை!மிஷ்கின் ஒரு மத போதகர் போல வருவார்,சுனாமியில் உயிர் பிழைத்து வரும் போது ஒரு சிலையுடன் தப்பித்து வருவார்!அதை வைத்து மக்களிடம் பிரார்த்தனை செய்வது போல வருவார்!அவர் மனைவிதான் ரம்யா கிருஷ்ணன்,அவரும் தான் நடிக்கும் படங்கள் குறித்து ஒரு கருத்து சொல்வார்,தான் நடிக்கும் படத்தை ஏன் லட்சக் கணக்கான மக்கள் பார்க்கிறார்கள் என கேட்பார்!அதுவும் தப்பில்லை!இப்படி படம் முழுக்க அவரவர் கோணங்கள்!அப்பட்டமான கெட்ட வார்த்தைகள் சகஜமான வரம்பு மீறல்கள் என படம் நகர்கிறது.நான்கு கதைகளும் ஒரு புள்ளியில் இணைகிறது.விதியாசமான படம்.தியேட்டர் முழுக்க விசில்களும் கை தட்டல்களும் சிரிப்பும் அள்ளுது!வசனங்கள் அருமை!ஜாதி பத்தி யும் ,இன்ற்றைய சமூக நிலவரங்கள் பற்றியும் நிறைய கருத்துக்கள் போகிற போக்கில் அனாயாசமா பேசப்படுது!லிப்ட்டில் சமந்தாவும் பகத்தும் பேசும் ஒரு இடம்,நீ பெரிய பத்தினி சொன்னதும் கரண்ட் வந்துடும் பாரு என சொன்னதும் கரண்ட் வரும் இடம்,ஒரு பாட்டி விஜய் சேதுபதியிடம் உனக்கு பிடிச்ச மாதிரி நீ வாழலாம் ஆனா நடைமுறைன்னு ஒண்ணு இருக்கில்ல என சொல்லும் இடம்,குட்டி பையன் நீ ஆம்பளையா இரு இல்ல பொம்பளையா இரு ஆனா எங்க கூடவே இருன்னு சொல்லும் இடம் என அங்கு அங்கு அழகான சீன்கள்!
 
Last edited by a moderator:

sudharavi

Administrator
Staff member
#5

அக்கா அழகா சொல்லி இருக்கீங்க....ஆனா நீங்க சொல்றதை பார்க்கும் போது தனியா உட்கார்ந்து தான் பார்க்கணும் போல......
 
#6
அக்கா அழகா சொல்லி இருக்கீங்க....ஆனா நீங்க சொல்றதை பார்க்கும் போது தனியா உட்கார்ந்து தான் பார்க்கணும் போல......
ஹா..ஹா...உங்க விருப்பம் சுதா!
 
#7
Mr . local
டிவி சீரியலில் நடிக்கும் ஒரு கதாநாயகியுடன் ஒரு போட்டோ எடுக்க ஆசைப்படும் சிவகார்த்திகேயனின் அம்மா ராதிகா..அம்மா ஆசையை நிறைவேத்த போகும் போது வழியில் ஒரு சின்ன accident (நயன்தாரா கார் ஹீரோ பைக்கை இடிச்சு ராதிகாவுக்கு லேசா அடிபட்டுடுது)...
அப்புறம் தான் தெரியுது அந்த சீரியல் ஓட producer நயன்தாரான்னு ...

ஷிவா நயனை மன்னிப்பு கேக்க சொல்ல அவங்க மாட்டேன்னு சொல்ல அங்கிருந்து ஆரம்பிக்குது ஈகோ சண்டை..
இந்த கடுப்புல நயன்தாரா அந்த சீரியல் ஹீரோயினை சீரியலில் இருந்து தூக்கிடுறாங்க..

அதுக்கு இவர் முறைக்க, அந்தம்மா பதிலுக்கு முறைக்க.....எப்பா சாமி நாங்க யாரை முறைக்குறதுனு தோணுச்சு...

டேய் படமாடா இது...

நயன் இந்த கதையை தூக்கத்திலே கேட்டு ஓகே சொல்லிருப்பாங்களோனு ஒரு டவுட்...
படம் full ஆ ஒரே மாதிரி லுக் ...முடியல...சில நேரம் நான் யாரு தெரியுமா என் ஸ்டேட்டஸ் என்ன தெரியுமான்னு டயலாக் சொல்லும் போது நீ வாயை மூடிக்கிட்டு இருந்தாலே நல்லா இருக்கும், அது தெரியுமா உனக்குன்னு கேக்க தோணுது...

எரிச்சல் வர வைக்கிற டயலாக்ஸ், பாட்டு-தேவையே இல்லை...ஹிப்-ஹாப் தமிழாவுக்கு குடுத்த காசு வேஸ்ட்...

அவ்ளோ பெரிய அவார்ட் function ல ஷிவா போய் நயனை கலாய்க்கிற மாதிரி பேசுறது, அவங்க ஆபீஸ்ல போய் ஈசியா நயனை பார்த்துட்டு சவால் விடுறது,
ஷிவா ஒரு நாலு டயலாக் சொன்னவுடனே அந்த ரீட்டா ஆயுதபூஜைக்கு ஓகே சொல்றதெல்லாம் --டேய் காதுல பூ சுத்துறதுக்கு ஒரு அளவில்லையா டா???????

படத்தில் வரும் காமெடி: வந்தா தான சொல்ல முடியும்..
ஏற்கனவே சீமராஜானு ஒரு மொக்கை படத்துல நடிச்சும் திரும்பவும் இப்படி ஒரு படத்துல நடிச்ச சிவகார்திகேயனோட தைரியத்தை பாராட்டியே ஆகணும்...
 
sudharavi

Administrator
Staff member
#8

ஹாஹா நான் சீமராஜாவில் வாங்கின அடியில் அந்தப் பக்கமே போகல....சிவா இப்படி தேர்ந்தெடுத்து நடிச்சா கூடிய சீக்கிரம் விஜய் டிவிக்கே திரும்பி போக வேண்டியது தான்.................சூப்பர் விமர்சனம் லாவண்யா..............
 
kohila

Well-known member
#9
ஆடை வித்தியாசமான முயற்சி. அமலா பால் மீடியாவில் டிரஸ் இல்லாமல் நடிச்சிருக்கேன் சொல்லும் போது, எனக்குள்ளும் விமர்சனம் செய்யும் எண்ணம் தான். ஆனால் படத்தின் கதையே அது தான் எனும் போது ஆபாசமாக தெரியவில்லை. கருத்து சொல்வதில் முன்னுக்கு பின் முரணாக காட்சிகள் வருவதையும், இடைவேளைக்கு பின் நீளத்தை் சற்று குறைத்திருக்கலாம் என்பதையும் தவிர திரைக்கதையும் வேகமாக நகர்கிறது. யாரும் யோசித்திராத கற்பனை காட்சியை துணிச்சலாக வெளிபடுத்திய இயக்குநருக்காகவும், அமலா பாலின் நடிப்பிற்காகவும் நிச்சயமா பார்க்கலாம்.
 
#10
ஆதித்ய வர்மா.
துருவ் விக்ரம் நடிப்பில் படம் வெளி வந்திருக்கிறது .பாலாவால் டைரக்ட் செய்யப்பட்டு கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் கை விடப்பட்ட படம்!ஒரு அப்பாவாய் விக்ரமின் முழு முயற்சியில் படம் வந்துவிட்டது.கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கான படம்.அர்ஜுன் ரெட்டி பார்த்தவகளுக்கு படம் பெரிய ஆர்வத்தை கொடுக்காது.ஒரு காதல்,ஜாதியின் காரணமாக பெற்றவர்களின் எதிர்ப்பு
என வழக்கமான கதைதான்!இளமையான துருவ் நம்மை கவர்கிறார்.கிட்டத்தட விக்ரமின் ஆரம்ப கால தோற்றமும் குரலும்!
படம் முழுக்க முத்தக்காட்சிகளும் உடலுறவுக்காட்சிகளும்!தெலுங்கை விட கொஞ்சம் அடக்கி வாசித்துருக்கிறார்கள்.காதல் படங்களின் கால மாற்றங்கள் நம்மை வியக்க வைக்குது!முன்பெல்லாம் ஓரிரண்டு படங்களில் தான் கல்யாணத்துக்கு முன் உறவு கொள்வதை போல் வரும்!இப்ப எல்லாம் இது ஒரு பெரிய விஷயமே இல்லை பொலிருக்கு!ஐன்னூறுக்கு மேல் என எண்ணிக்கை சொல்லும் அளவுக்கு உறவு காட்ச்சிகள்!ஒரு மருத்துவரை இப்படி காட்டலாமா என விமர்சனங்கள் எழுகின்ற்றன!ஆனால் மருத்துவ கல்லூரி மாணவர்களை பற்றி வரும் விஷயங்களை நாமும் கேள்விப்பட்டு இருக்கிறோம்.இப்படி பகிரங்கமாக போட்டு உடைத்து விட்டார்கள் படத்தில்!அமெரிக்க மாப்பிள்ளை ராஜா அப்பாவா வருகிறார்.இறுதி சீன் நம் கதைகளை நினைவு படுத்துகிறது!இன்ற்றைய இளைஞர்களை கவரும் படம்!
 
#11
ஓ பேபி.
இந்த படத்தில் லட்சுமி கலக்கியிருக்கிறார்!தமிழில் இவரை ஒதுக்கி விட்டாலும் மற்ற மொழிகளில் அசத்துகிறார்!மகன் மருமகள் பேரப்பிள்ளைகளுடன் வாழ்கிறார்.பால்ய கால நண்பருடன் ஒரு பேக்கரி நடத்துகிறார்.கணவனை இழந்து மகன் மீது அளவில்லா பாசத்துடன் இருப்பதும் மருமகளை அதிகாரம் பண்ணுவது பேரனுடன் செல்லம் கொஞ்சவதுன்னு படம் ஆரம்பிக்குது.மன அழுத்தத்தில் மருமகளுக்கு உடல் நலமில்லாது போகிறது.இவரை பார்க்கக் கூட மறுக்கிறாள்.மகன் தர்ம சங்கடத்தில்.பேரன் ஒரு ம்யூஸிக் ட் ரூப் ஆரம்பித்து பெரிய ஆளாய் வர முயற்சிக்கிறான்.அவன் ப்ரோக்ராம் பார்க்க செல்லும் போது ஒரு பெரியவர் குட்டி பிள்ளையாரை கையில் கொடுத்து மறைகிறார்.அதை கையில் வைத்து இருந்தால் நீ நினைப்பது நடக்கும் என சொல்கிறார்.இவருக்கு பாடல் பாடுவது ரொம்ப பிடிக்கும்.சிறு வயதில் பாடகியாக வரணும் என நினைத்து இருந்ததை பேரனிடம் அடிக்கடி சொல்வார்.இப்போது அவர் திடீரென இளம் பெண்ணாக மாறிவிடுவார்!பேரனை தேடி போகும் போது அவனுக்கே அடையாளம் தெரியாது.சமந்தா இந்த கேரக்டரில் நடிக்கிறார்.அருமையா நடிச்சுருக்கார்,வயதான பாட்டியின் உடல் மொழியும் பேச்சுமாய்!தான் வீட்டை விட்டு செல்வதாய் கடிதம் எழுதி அனுப்புவார்.மகன் தேடுவார்.இவர் பேரனுடன் சேத்ந்து அவன் ட் ரூப்பில் பாடுவார்!பேரனை கொஞ்சும் போது தன்னை மறந்து பாட்டியாகவும் இளம்பெண்ணாகவும் மாறி மாறி நடிப்பது அழகு!
ஒரு அழகான காதலும் அவருக்கு வருகிறது!அதை விரும்பவும் முடியாமல் உள்ளுக்குள் ரசிப்பதுமாய்!அவன் பின்னாலேயே சுற்றும் போது அவர் பாட்டி மாதிரி அப்போ அப்போ மாட்டுவது சிரிப்பு.பல் நல்லா இருக்கும் போது நினைச்சதை சாப்பிடணும்ன்னு சாப்பிடுவதும் உடல் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதை ரசிப்பதும் ரசனை!பேரனுக்காக ரத்தம் கொடுக்க செல்லும் போது மீண்டும் பாட்டியை விடும் சூழ் நிலை!நன்பர் தடுக்க பிடிவாதமாய் செல்வார்.மீண்டும் பாட்டியானதும் இப்ப அவர் நண்பர் அந்த பெரியவர் மூலம் இளைஞனாகி வருவார்!லட்சுமியும் சமந்தாவும் கலக்கியிருப்பார்கள்.
 
Anuya

Well-known member
#12
வாரணம் ஆயிரம்

View attachment IMG_20191130_104523.jpg

வாரணம் ஆயிரம் .... தந்தை மகள் இடையே இருக்கும் அழகான உறவை எடுத்துக்காட்டும் விதமாக பல படங்கள் உள்ளன. ஆனால் தந்தை மகன் உறவை கூறும் படங்கள் வெகு சிலவே உள்ளன. அதில் ஒன்று தான் இந்த வாரணம் ஆயிரம் திரைப்படமும் .

தந்தையாகவும்(கிருஷ்ணா), மகனாகவும்( சூர்யா) இரண்டு வேடங்களில் வளம்வருகிறார் சூர்யா. இந்த இரண்டு கதாபாத்திரமும் நம் மனதில் அப்படியே பதிந்துவிடுகின்றது.

இராணுவ அதிகாரியாக இருக்கும் சூர்யாவிற்கு தனது தந்தை இறந்துவிட்டதாக தகவல் வருகிறது ஆனால் மீட்பு பணி ஒன்றில் இருக்கும் சூர்யாவினால் இடையில் செல்ல முடியாமல் அந்த மீட்பு பணியை தொடர்ந்து மேற்கொள்கிறார். தன் தந்தையுடன் கழித்த நினைவுகள் காட்சிகளாய் கண் முன் வருகிறது சூர்யாவிற்கு இப்படி ஆரம்பம் ஆகிறது வாரணம் ஆயிரம் திரைப்படம்...

தனது கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வரும் சூர்யா இரயிலில் மேக்னாவை(சமீரா ரெட்டி) கண்டு காதல் வயப்படுகிறார். அதை அவரிடம் தெரிவிக்க தான் இன்னும் சில தினங்களில் மேற்படிப்பிற்காக அமெரிக்கா செல்வதாக கூறி அமெரிக்கா செல்கிறார் மேக்னா. இதனால் என்ன செய்வதென்று புரியாமல் தவிக்கும் சூர்யாவிற்கு , தந்தை சூர்யா இங்க இருக்குட அமெரிக்கா போய் கூட்டிட்டு வாவென்று கூறி அனுப்பி வைக்கிறார். அமெரிக்கா செல்லும் சூர்யா, மேக்னாவை கண்டுபிடித்து அவர் முன் சென்று நிற்கிறார் . தனக்காக இவ்வளவு தூரம் தேடி வந்து இருக்கும் சூர்யாவை மிகவும் பிடிக்கிறது மேக்னாவிற்கு. இருவரும் காதலிக்கின்றனர் இச்சமயம் எதிர்பாரா விதமாக நடக்கும் ஒரு தீவிரவாத தாக்குதலில் இறந்துவிடுகிறார் மேக்னா. அவரை மறக்க முடியாமல் தவிக்கும் சூர்யா போதை பழக்கத்திற்கு அடிமையாகிறார். அதன் பிறகு அதிலிருந்து தாய் தந்தை துணையுடன் மீண்டு வந்து ஆர்மியில் சேர்கிறார். சூர்யா தங்கையின் தோழி பிரியா( திவ்யா) சூர்யாவின் மீது காதல் வயப்பட்டு அவரையும் காதலிக்க வைத்து திருமணம் செய்கிறார்.

அட இவ்வளவு சொல்லியாச்சு ... ஆனா நம்ம கிருஷ்ணா & மாலினி யை(சிம்ரன்) விட்டாச்சே.... ரொம்ப ரொம்ப கியூட் பார்ட் இவங்க லவ் சீன் வருவது.... ரொம்ப அழகா இருக்கும் ... அதுவும் கிருஷ்ணா லவ் ப்ரொபோசல் சீன் செம ....

கிருஷ்ணா & சூர்யா கேரக்டர்ஸ் வாவ்... ஒவ்வொரு பையனும் தன் அப்பா இப்படி வேணும்னு நினைக்கிற கேரக்டர் . "இங்க இருக்குடா அமெரிக்கா போய் கூட்டிட்டு வா" அனுப்பி வைப்பது. போதையில் இருக்கும் மகனை மீட்டு கொண்டு வருவதுனு அப்பா சூர்யா செமையோ செம...
Hi கிருஷ்ணா.... இத சொல்லியே ஆகணும் இங்க யாரும் இவ்ளோ கியூட் அஹ் ஒரு அப்பாவ பார்த்து இருக்க மாட்டாங்க... அவ்வளவு அருமை நீங்க...eee

சிம்ரன், திவ்யா, சமீரா ரெட்டி அனைவரும் தங்களது பங்கை சிறப்பாக செய்துள்ளனர்.... கிட்டேர் வச்சிட்டு பாட்டு பாடுற சூர்யா செம.... ஹாரிஸ் ஜெய்ராஜ் இசையில் அணைத்து பாடல்களும் அருமை... ஆகா மொத்தம் ஒரு complete package இந்த வாரணம் ஆயிரம் திரைப்படம்....

" காலமும் கடல் அலையும் யாருக்காகவும் காத்திருக்காது" என்பது பழமொழி... அதே போலத்தான் வாழ்க்கையும். எதற்காகவும், எப்பொழுதும், எங்கேயும் நிற்காது . அது பாட்டிற்கு போய்ட்டே தான் இருக்கும் .... சோ இதுவும் கடந்து போகும் என்கின்ற மோட்டோ வை சொல்லி நாம் எல்லா சூழல்களையும் கடந்து செல்வோமாக.... இப்படம் கூறும் கருதும் அதுவே.....

Whatever happens in life. Life doesn't stop ,it moves on and people gets change ,they grow, eventually they forget about past and pass on... That's life..:giggle:
 
Last edited:
#13
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்.
துல்கரின் இருபத்து ஐந்தாவது படம்.படம் ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை யாரை நம்புவதுன்னு தெரியல!அவ்வளவு ட்விஸ்ட்டுகள்!சஸ்பென்ஸ் விரும்பிகள் மிஸ் பண்ணிடாதிங்க!ரட்சன்,துல்கர் நண்பர்கள்,இருவரும் திருட்டு வேலைகள் செய்பவர்கள்.ஆன்லைனில் பொருட்கள் வாங்குவது அவற்றை நல்லா இல்லன்னு திருப்பி அனுப்புவது ,அதற்குள் உள்ளிருக்கும் பார்ட்ஸ்களை மாற்றி விற்பது இப்படி!
இருவருக்கும் காதல் முளைக்குது .இரு தோழிகள் ,நித்துவர்மா மற்றவர் பெயர் நினைவில்லை.அனாதை ஆசிரமத்தில் வளர்ந்து நேர்மையாக வீடு வீடாக பார்லர் வேலை செய்பவர்!
இவர்களின் காதலும் நட்பும் சூடு பிடிக்க கதை நாம் எதிர் பாராத வண்ணம் திசை மாறுகிறது!படம் பார்க்காதவர்களுக்காக நான் சஸ்பென்ஸ் உடைக்கவில்லை!படம் பார்த்து தெரிஞ்சுக்கோங்க.படத்தில் சைபர் க்ரைம் குற்றங்கள் பத்தி அவ்ளோ விஷயங்கள் இருக்கு!நாம் இதை பார்த்து எச்சரிக்கையா இருக்கணும்.எத்தனை ஏமாற்று வேலைகள்?!ரட்சனின் டயலாக்குகளும் நடிப்பும் அட்டகாசம்!விஜய் டி வியின் இன்னுமொரு நட்சத்திரம்!துல்கர் இளமை துள்ளலும் ஸ்டைலும் அசத்துறார்!கவுதம் மேனன் எதிர் பாராத பாத்திரம்!அவருக்கும் ஒரு ட்விஸ்ட் இருக்கு!வழக்கமான படங்கள் பார்த்து சலிச்சவங்க இந்த படம் மிஸ் பண்ணாம பாருங்க !
 
#14
கே டி.
கருப்பு துரை என்னும் முதியவரின் கதை.படுக்கையில் இருக்கும் பெரியவரின் சொத்துக்களுக்காக அவரை கருணை கொலை செய்ய பிள்ளைகள் முடிவெடுக்கிறார்கள்.எண்ணெய் தலையில் வைத்து குளிப்பாட்டி இள நீர் கொடுத்தால் இழுத்து கொண்டிருக்கும் முதியவர்கள் இறந்து விடுவார்கள்!இது இன்றும் நடைமுறையில் இருப்பதுதான்!
சட்டென முழித்து எழும் பெரியவர் பிள்ளைகள் பேசுவதை கேட்டு வீட்டை விட்டு வெளியேறுகிறார்!ஒரு கோவிலில் தங்கும் அவரை அங்கு இருக்கும் குட்டி பையன் விரட்டி விடுவான்!பின் அவருடன் சேர்ந்து அவனும் ஊர் ஊராக சுற்றுவான்.இருவரும் நெருங்கி விடுவார்கள்.அந்த குட்டி பையனின் நடிப்பு அட்டகாசம்!பெரியவரின் ஆசைகளை எழுதி வைத்து ஒண்ணு ஒண்ணா நிறைவேற்றுவது அழகு!எம் ஜி ஆர் போல் நடிப்பது,சிறு வயது தோழியை பார்க்க செல்வது,வண்டி ஓட்டுவது என இருவரும் செய்யும் அலப்பறைகள் கவிதை!படம் முழுவதும் ரசிப்புக்குரிய சீன்கள் நிறைய இருக்கு!சிற்வனும் பெரியவரும் போட்டி போட்டு நடித்து இருக்கிறார்கள்!
 
Anuya

Well-known member
#15
ஆயிரத்தில் ஒருவன்....

2009யில் வெளிவந்த திரைப்படம். 10 ஆண்டுகள் கடந்து 2019ல 10 years of aayirathil oruvan என்று re-release செய்யப்பட்ட போது இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பு 10 வருடங்கள் முன்பு கிடைக்காமல் போனது எனோ. எதற்சையாக YouTubeயில் decode of aayirathil oruvan என்று ஒரு வீடியோ பார்த்தேன்அதில் இந்த படத்தில் கூறி இருக்கும் சில indirect messages and scenes ah அழகா சொல்லி இருப்பாங்க. அப்பா.... வேற லேவல் படம்.... அதுவும் ரொம்ப சின்ன சின்ன விசியங்களை கூட ஒன்றுக்கொன்று relate பண்ணி இருப்பது எல்லாம் அருமையோ அருமை. படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை தெரிகிறது படக்குழுவினரின் அயராத உழைப்பு.

சோழ மக்களை நோக்கி செல்லும் கார்த்தி, andrea, reema sen எதிர்நோக்கும் அந்த் மணல் புதைகுழி, பாம்பு, காட்டுவாசி போன்ற சோழர்கள் உருவாக்கிய இடர்கள் ஆகட்டும் அவர்களை கண்டுபிடித்த பின் அங்கு சோழர்களுக்கும் - நவீன பாண்டியர்களுக்கும் நடக்கும் போர் காட்சிகளில் சோழர்களின் போர் முறைகளை காட்சி படுத்திய விதமாகட்டும் எல்லாமே வேற லெவல்.....

உணவு, தண்ணீர் இன்றி வறுமையில் வாடி உடல் ஒட்டி போய் இருக்கும் மக்கள், இவ்வுலகம் நவீனமயமாகி விட்டது மன்னராட்சிகள் ஒழிக்கப்பட்டு விட்டது என்பதை அறியாமல் துதுவன் வருவான் நம்மை நம் தேசத்திற்கு அழைத்து செல்வான் என்று நம்பிக்கொண்டு இருக்கும் அரசனை பார்க்கும் போது அந்த அறியாமையை எண்ணி மனம் கனத்துபோகிறது.

ரீமாசென், கார்த்தி, andrea , பார்த்திபன் என்று அனைவருமே அழகாக அந்த கதாப்பாத்திரத்துடன் பொருந்தி போயினர். பார்த்திபன் தவிர வேறு யாரும் இந்த மன்னர் கதாபாத்திரத்திற்கு இவ்வளவு அழகாக பொருந்தி இருப்பார்களா என்று தெரியவில்லை.

அதே போல படத்தின் நிறைய இடங்களில் யார் அந்த தூதுவன் என்றும் இன்னும் சில விஷியங்களிற்கும் நிறைய hints கொடுத்திருப்பார்கள். படம் பார்க்கும் பொழுது நாம் அவ்வளவாக அவற்றை எல்லாம் கவனித்திருக்க மாட்டோம். நான் அந்த hidden details video பார்த்த பிறகு தான் இத்தனை விசியங்கள் இருக்கா இதற்குள் என்று தெரிந்தது.

அதே போல தான், ரீமாசென் கார்த்தி முதுகில் இருக்கும் அந்த புலி சின்னத்தில் கூட ஒரு hint வைத்திருக்கிறார் செல்வா சார்.

கார்த்தி முதுகில் இருக்கும் அந்த புலி சின்னம் சோழர் கொடிகளில் உள்ளது போல மேல் நோக்கி பாயும் புலி சின்னமாக இருக்கும்.

அதே போல் ரீமாசென் முதுகில் கிழ் நோக்கி பாயும் புலி சின்னம் இருக்கும். இது சோழர்களின் வீழ்ச்சியை குறிப்பதாகும்.

போரில் அந்த நவீன பாண்டியர்கள் தங்களது நவீன கருவிகளை பயன்படுத்தி வென்று அவர்களது குலதெய்வ சிலையை எடுத்துகொண்டு அந்த மக்களை சிறை எடுத்து செல்லும் காட்சி கொடுமை.

G.V prakash இசை மாஸ்... Celebration of life எத்தனை முறை கேட்டாலும் goosebumps வரும் வேற லெவல் feel....

இந்த படம் வந்த போது எனக்குலாம் 10 வயசு தான். அப்போ பார்த்து இருந்தாலும் ஒன்னும் புரிந்து இருக்காது. ஆனா இப்போ part 2 வரணும் என்று ஆசையா இருக்கு....

சோழனின் பயணம் தொடருமா?... தொடரனும் தொடர்ந்தால் நல்லா இருக்கும்😍❤️.

May be படத்தில் சொல்ல வந்ததை தெளிவா சொல்லி இருந்தால் அப்போவே நல்ல ஹிட் குடுத்து இருக்கும். இப்போ இவ்வளவு search panni பார்த்து தான் நமக்கு படம் புரியுது... அப்படி இல்லாம எல்லோராலும் easy ah purinchikura மாதிரி இருந்தா நல்லா இருக்கும். My all time fav movie aayirathil oruvan...😍😍❤️❤️