திரை விமர்சனம்

#6
அக்கா அழகா சொல்லி இருக்கீங்க....ஆனா நீங்க சொல்றதை பார்க்கும் போது தனியா உட்கார்ந்து தான் பார்க்கணும் போல......
ஹா..ஹா...உங்க விருப்பம் சுதா!
 
#7
Mr . local
டிவி சீரியலில் நடிக்கும் ஒரு கதாநாயகியுடன் ஒரு போட்டோ எடுக்க ஆசைப்படும் சிவகார்த்திகேயனின் அம்மா ராதிகா..அம்மா ஆசையை நிறைவேத்த போகும் போது வழியில் ஒரு சின்ன accident (நயன்தாரா கார் ஹீரோ பைக்கை இடிச்சு ராதிகாவுக்கு லேசா அடிபட்டுடுது)...
அப்புறம் தான் தெரியுது அந்த சீரியல் ஓட producer நயன்தாரான்னு ...

ஷிவா நயனை மன்னிப்பு கேக்க சொல்ல அவங்க மாட்டேன்னு சொல்ல அங்கிருந்து ஆரம்பிக்குது ஈகோ சண்டை..
இந்த கடுப்புல நயன்தாரா அந்த சீரியல் ஹீரோயினை சீரியலில் இருந்து தூக்கிடுறாங்க..

அதுக்கு இவர் முறைக்க, அந்தம்மா பதிலுக்கு முறைக்க.....எப்பா சாமி நாங்க யாரை முறைக்குறதுனு தோணுச்சு...

டேய் படமாடா இது...

நயன் இந்த கதையை தூக்கத்திலே கேட்டு ஓகே சொல்லிருப்பாங்களோனு ஒரு டவுட்...
படம் full ஆ ஒரே மாதிரி லுக் ...முடியல...சில நேரம் நான் யாரு தெரியுமா என் ஸ்டேட்டஸ் என்ன தெரியுமான்னு டயலாக் சொல்லும் போது நீ வாயை மூடிக்கிட்டு இருந்தாலே நல்லா இருக்கும், அது தெரியுமா உனக்குன்னு கேக்க தோணுது...

எரிச்சல் வர வைக்கிற டயலாக்ஸ், பாட்டு-தேவையே இல்லை...ஹிப்-ஹாப் தமிழாவுக்கு குடுத்த காசு வேஸ்ட்...

அவ்ளோ பெரிய அவார்ட் function ல ஷிவா போய் நயனை கலாய்க்கிற மாதிரி பேசுறது, அவங்க ஆபீஸ்ல போய் ஈசியா நயனை பார்த்துட்டு சவால் விடுறது,
ஷிவா ஒரு நாலு டயலாக் சொன்னவுடனே அந்த ரீட்டா ஆயுதபூஜைக்கு ஓகே சொல்றதெல்லாம் --டேய் காதுல பூ சுத்துறதுக்கு ஒரு அளவில்லையா டா???????

படத்தில் வரும் காமெடி: வந்தா தான சொல்ல முடியும்..
ஏற்கனவே சீமராஜானு ஒரு மொக்கை படத்துல நடிச்சும் திரும்பவும் இப்படி ஒரு படத்துல நடிச்ச சிவகார்திகேயனோட தைரியத்தை பாராட்டியே ஆகணும்...
 
sudharavi

Administrator
Staff member
#8

ஹாஹா நான் சீமராஜாவில் வாங்கின அடியில் அந்தப் பக்கமே போகல....சிவா இப்படி தேர்ந்தெடுத்து நடிச்சா கூடிய சீக்கிரம் விஜய் டிவிக்கே திரும்பி போக வேண்டியது தான்.................சூப்பர் விமர்சனம் லாவண்யா..............
 
kohila

Well-known member
#9
ஆடை வித்தியாசமான முயற்சி. அமலா பால் மீடியாவில் டிரஸ் இல்லாமல் நடிச்சிருக்கேன் சொல்லும் போது, எனக்குள்ளும் விமர்சனம் செய்யும் எண்ணம் தான். ஆனால் படத்தின் கதையே அது தான் எனும் போது ஆபாசமாக தெரியவில்லை. கருத்து சொல்வதில் முன்னுக்கு பின் முரணாக காட்சிகள் வருவதையும், இடைவேளைக்கு பின் நீளத்தை் சற்று குறைத்திருக்கலாம் என்பதையும் தவிர திரைக்கதையும் வேகமாக நகர்கிறது. யாரும் யோசித்திராத கற்பனை காட்சியை துணிச்சலாக வெளிபடுத்திய இயக்குநருக்காகவும், அமலா பாலின் நடிப்பிற்காகவும் நிச்சயமா பார்க்கலாம்.
 
#10
ஆதித்ய வர்மா.
துருவ் விக்ரம் நடிப்பில் படம் வெளி வந்திருக்கிறது .பாலாவால் டைரக்ட் செய்யப்பட்டு கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் கை விடப்பட்ட படம்!ஒரு அப்பாவாய் விக்ரமின் முழு முயற்சியில் படம் வந்துவிட்டது.கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கான படம்.அர்ஜுன் ரெட்டி பார்த்தவகளுக்கு படம் பெரிய ஆர்வத்தை கொடுக்காது.ஒரு காதல்,ஜாதியின் காரணமாக பெற்றவர்களின் எதிர்ப்பு
என வழக்கமான கதைதான்!இளமையான துருவ் நம்மை கவர்கிறார்.கிட்டத்தட விக்ரமின் ஆரம்ப கால தோற்றமும் குரலும்!
படம் முழுக்க முத்தக்காட்சிகளும் உடலுறவுக்காட்சிகளும்!தெலுங்கை விட கொஞ்சம் அடக்கி வாசித்துருக்கிறார்கள்.காதல் படங்களின் கால மாற்றங்கள் நம்மை வியக்க வைக்குது!முன்பெல்லாம் ஓரிரண்டு படங்களில் தான் கல்யாணத்துக்கு முன் உறவு கொள்வதை போல் வரும்!இப்ப எல்லாம் இது ஒரு பெரிய விஷயமே இல்லை பொலிருக்கு!ஐன்னூறுக்கு மேல் என எண்ணிக்கை சொல்லும் அளவுக்கு உறவு காட்ச்சிகள்!ஒரு மருத்துவரை இப்படி காட்டலாமா என விமர்சனங்கள் எழுகின்ற்றன!ஆனால் மருத்துவ கல்லூரி மாணவர்களை பற்றி வரும் விஷயங்களை நாமும் கேள்விப்பட்டு இருக்கிறோம்.இப்படி பகிரங்கமாக போட்டு உடைத்து விட்டார்கள் படத்தில்!அமெரிக்க மாப்பிள்ளை ராஜா அப்பாவா வருகிறார்.இறுதி சீன் நம் கதைகளை நினைவு படுத்துகிறது!இன்ற்றைய இளைஞர்களை கவரும் படம்!