தீயினில் வளர் ஜோதியே

Anuya

Well-known member
Apr 30, 2019
268
291
63
அத்தியாயம் - 33

காலையில் எழுந்ததிலிருந்தே புதிய வேலைக்குச் செல்கிறோம் என சிறு குறுகுறுப்பு இருந்தாலும், அதையும் மீறி ஏதோ ஒரு கனம் மனத்தை அழுத்திக்கொண்டே இருந்தது. குளித்துவிட்டு வந்தவள் பெற்றோரின் புகைப்படத்தைப் பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தாள்.

‘புது வேலைல ஜாயின் பண்ணப் போறேன்ப்பா! இதே நாலு மாசத்துக்கு முன்னால நான் வேலைக்குப் போகும் போது நீங்க என்கூட இருந்தீங்க. இப்போ உங்க நினைப்போட நான் மட்டும் தனியா இருக்கேன்ப்பா!’ என்றவளுக்குக் கண்கள் பனிக்க, போட்டோவை நெஞ்சோடு அணைத்துக்கொண்டாள்.

முயன்று தன்னைச் சமாளித்துக்கொண்டவள் முகத்தைக் கழுவிக்கொண்டு உடையணிந்து தயாரானாள். காலை உணவை முடித்துக்கொண்டு அறைக்கு வந்தவள் ஆதித்யாவின் போனுக்காகக் காத்திருந்தாள்.

ஜன்னலருகில் வந்து நின்று வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தாள். எதிர் சாரியில் தலையில் குல்லாயும், ஸ்வெட்டருமாக பள்ளிச் சீருடையுடன் நின்றிருந்த சின்னஞ்சிறு குழந்தைகளைக் கண்டதும் மனம் இலகுவாக மெல்ல முறுவலித்தாள்.

பெற்றோர்கள் ஒருவருடன் ஒருவர் பேசிக்கொண்டு நின்றிருக்க, ஓரிடத்தில் நில்லாமல் இங்கும் அங்குமாக ஓடியோடி தனது நண்பர்களுடன் பேசி விளையாடிக் கொண்டிருந்த மழலைகளைப் பார்க்கப் பார்க்க அவளுக்கு ஆசையாக இருந்தது.

விழிகளில் ஏக்கம் மிளிர, மௌனமாக நின்றிருந்தவளது மொபைல், குறுஞ்செய்தி வந்திருப்பதற்கான அறிகுறியாக ஒலியெழுப்பியது.

‘ஹாய் மித்ரா, பத்திரமாக ஊருக்குப் போய்ச் சேர்ந்திருப்பேன்னு நம்பறேன். புது வேலைக்குக் கிளம்பியிருப்ப. புது இடம், புது மக்கள்… புது சூழல் நிச்சயம் உனக்கு நல்ல மாற்றமாக இருக்கும். தைரியமாக இரு; சந்தோஷமா வேலையில் ஜாயின் பண்ணு. ஆல் த பெஸ்ட்!
அன்புடன் ,
உன் விஜய்.’

குறுஞ்செய்தியைப் பதித்தவளது இதழ்கள் புன்னகையால் மலர்ந்தன.

காலையில் எழுந்ததுமே சங்கீதாவும், நீத்துவும் கான்ஃப்ரென்ஸ் காலில் அவளுக்கு வாழ்த்துச் சொல்லியிருந்தனர். மகிழ்ச்சியாகவே இருந்தது. ஆனாலும், ஒரு வெறுமை மனத்தை நிறைத்திருந்ததே உண்மை.

ஆனால், அப்போது விஜய்யின் குறுஞ்செய்தியே அவளுக்குப் பெரும் சந்தோஷத்தைக் கொடுத்தது.

“உன் விஜய்யாம்! இதுல ஒண்ணும் குறைச்சல் இல்ல” என முனகியவள் சிரிப்புடன் மொபைலைக் கைகளுக்குள் பொத்திக்கொண்டாள்.

திடீரென ஒலித்த காரின் ஹாரன் சப்தத்தில் தனது மாய நினைவுகளிலிருந்து விடுபட்ட சுமித்ரா, காரிலிருந்து இறங்கிய ஆதித்யாவைப் பார்த்தாள்.

அவள் கதவைப் பூட்டிக்கொண்டிருந்தவள் அவனிடமிருந்து வந்த போனைத் துண்டித்துவிட்டுக் கீழே சென்றாள்.

அவளைக் கண்டதும், “குட்மார்னிங் மேடம்!” என்றவனுக்குப் புன்னகையுடன் பதிலளித்தாள்.
“சாரி! உங்களைப் பார்த்துட்டேன்… அதான் போனை அட்டெண்ட் பண்ணல” என விளக்கமும் சொன்னாள்.

“இட்ஸ் ஓகே மேடம்!” என அவளுடன் காரை நோக்கி நடந்தான்.

சற்று தொலைவு வந்தபின், “மேடம் இதான் மெட்ரோ ஸ்டேஷன். இங்கே ஏறினா சரியா ஆறாவது ஸ்டாப்பிங் நம்ம ஆஃபிஸ்” என்றபடி அவளை உள்ளே அழைத்துச் சென்று எந்தப் பிளாட்பாரம் செல்லவேண்டும், இறங்க வேண்டும் என்பதையெல்லாம் சொல்லிவிட்டு மீண்டும் அவளைக் காருக்கு அழைத்து வந்தான்.

”ஈவ்னிங் நீங்க வீட்டுக்குப் போறதுக்குள்ள, உங்களுக்குப் பாஸ் வாங்கிக் கொடுத்திடுறேன்” என்றான்.

“பரவாயில்ல, மிஸ்டர்.ஆதித்யா! நாளைக்கு நானே வாங்கிக்கிறேன்” என்றாள் மறுப்பாக.

“ஆஃபிஸ்ல எனக்குக் கொடுத்த வேலையை நான் சரியா முடிச்சிடுறேன் மேடம்! நெக்ஸ்ட் மந்த்லயிருந்து நீங்க பார்த்துக்கோங்க” என்றான்.

சரியென கேட்டுக்கொண்டாள்.

செல்லும் வழியெல்லாம் அந்தந்த இடங்களைப் பற்றிக் கூறிக்கொண்டே வந்தான்.

‘இளஞ்சிவப்பு நகரம்’ என்பதற்கேற்ப பெரும்பாலான கட்டிடங்கள் இளஞ்சிவப்பு நிறத்திலேயே அமைந்திருந்தன. ‘பழமையும் புதுமையும் இணைந்த வாஸ்து சாஸ்திரப்படி கட்டப்பட்ட முதல் நகரம்’ என்று படித்ததெல்லாம் நினைவிற்கு வந்தது அவளுக்கு.

இருபது நிமிடப் பயணத்திற்குப் பிறகு, “இதுதான் நம்ம ஆஃபிஸ்” என்றவன் மூன்று மாடிக் கட்டிடம் ஒன்றின் முன்பாகக் காரை நிறுத்தினான்.

“இது ஆபிஸ் மேடம்! இங்கேயிருந்து ஒரு அஞ்சு கிலோமீட்டர் போனா நம்ம ஃபேக்டரி இருக்கு” என்று கூடுதலாக ஒரு தகவலையும் சொன்னான்.

பணியில் சேருவதற்கான செயல்முறைகள் அனைத்தையும் முடித்துக்கொண்டு வந்தவளை அவளது கேபினுக்கு அழைத்துச் சென்றான் ஆதி.

“மேடம்! இதுதான் உங்க கேபின்” என்றவன், அங்கிருந்த மற்ற டிசைனர்களை, அவளுக்கு அறிமுகப்படுத்தி வைத்தான்.

“இன்னும் ஒன் ஹவர்ல உங்களோட ஆக்ஸஸ், அண்ட் ஐடி கார்ட் உங்களுக்குக் கொடுத்திடுவாங்க. உங்களுக்கு எந்த உதவின்னாலும் மேடமைக் கேளுங்க” என அங்கிருந்த மூத்த பெண்மணி ஒருவரைச் சுட்டிக் காட்டியவன், அவளுக்கு வாழ்த்துச் சொல்லிக் கை குலுக்கிவிட்டு அகன்றான்.

தனது இருக்கையில் அமர்ந்த சுமித்ரா, கைப்பையிலிருந்த பெற்றோரின் சிறிய புகைப்படத்தை டேபிளின் மூலையில் ஒரு பக்கத்தில் வைத்தாள். மானசீகமாக பெற்றோரை வணங்கிவிட்டு, தனது கம்ப்யூட்டரை ஆன் செய்தாள். அந்தப் பெண்மணி கொடுத்த ஃபைலை வாங்கி தனது வேலையைத் துவக்கினாள்..

எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டே அதே ஹாலின் மற்றொரு பக்கத்திலிருந்த அறைக்கதவைத் தட்டிவிட்டு, உள்ளே சென்றான் ஆதித்யா.

“வாடா!” என்ற விஜயேந்திரன் இருக்கையில் சாய்ந்து அமர்ந்தான்.

“மச்சான்! அண்ணா சொன்னபடி, அண்ணிகிட்ட ரெண்டு வருஷத்துக்கு வேலை செய்யணும்னு காண்ட்ராக்ட்ல கையெழுத்து வாங்கியாச்சு. அந்தப் ஃபைலை அண்ணன் உன்கிட்டக் கொடுக்கச் சொன்னார். இந்தா” என நண்பனிடம் கொடுத்தான் ஆதித்யா.

“ஃபைலைப் புரட்டிப் பார்த்தவன் அதைத் தனது ப்ரீஃப்கேஸில் வைத்துக்கொண்டான்.

“அப்புறம், அண்ணிகிட்ட எல்லாம் சொல்லியாச்சா?”

“அண்ணனைப் பத்தியா!” தீவிர பாவத்துடன் கேட்டான் ஆதி.

கண்களை இடுக்கிக்கொண்டு, “அண்ணன்கிட்ட வாங்கிக்கட்டிக்க தயாராயிருந்தா, போய்ச் சொல்லேன்” என்றான் கிண்டலாக.

”ஹய்யோ! ஆளை விடு சாமி!” என்றபடி இருக்கையில் அமர்ந்தான் ஆதி.

“இவ்ளோ பயமிருக்கு. ஆனா, நக்கல்ல குறைச்சல் இல்ல உனக்கு…” என்றவன் நண்பனுடன் பொதுவாகப் பேச ஆரம்பித்தான்.

சற்றுநேரத்திற்குப் பிறகு, “சரி இந்தர் நான் கிளம்பறேன். வாங்கற சம்பளத்துக்கு கொஞ்சம் வேலையும் பார்க்கலாம்” என்றபடி எழுந்தான்.

“அடேங்கப்பா! இப்போதான் வேலை செய்யணும்ங்கற அறிவே உனக்கு வந்திருக்குப் போல…” என்ற நண்பனைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே அறையிலிருந்து வெளியேறினான்.
இருவரும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள். ஆதித்யாவும் நல்ல வளமான குடும்பத்திலிருந்து வந்தவன்.

‘எப்படியும் வேலைக்குப் போகப்போற. பேசாம, எங்க கம்பெனிக்கே வந்துவிடு’ என தங்களது அலுவலகத்திலேயே வேலைக்கு அழைத்துக்கொண்டான் இந்தர். ஆதித்யாவின் பழகும் முறையும், சமயோசிதமான பேச்சையும் கண்ட விஜய்மித்ரன் அவனை மனிதவள மேம்பாட்டுத் துறையில் வேலைக்கு அமர்த்திக்கொண்டான்.

சுமித்ராவின் கவனம் முழுவதும் வேலையிலேயே இருந்தது. தனக்குப் புரியாத விஷயங்களை இடையிடையில் ஏற்பட்ட சந்தேகங்களை, கேட்டுத் தெளிவுப்படுத்திக் கொண்டாள். இடையில் தேநீர் அவரவர் இடத்திற்கே வந்துவிட, சுறுசுறுப்பாகத தனது வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தாள். வேலை மும்முரத்தில் நேரம் சென்றதே தெரியவில்லை சுமித்ராவிற்கு.

ஒரு மணிக்கு, “சாப்பிட போகலாமா?” எனச் சக அலுவலர் கேட்ட பின்பே சுதாரித்து எழுந்தாள்.

“கீழேயே காஃப்டேரியா இருக்கு. டோக்கன் சிஸ்டமும் இருக்கு. இல்லன்னா, நமக்கு வேண்டியதை நம்ம ஸ்டாஃப் நம்பர் சொல்லிட்டு சாப்பிட்டுக்கலாம். டைரக்டா நம்ம சம்பளத்துலயிருந்து பிடிச்சிக்குவாங்க” என அவளுக்கு விவரம் சொன்னார்கள்.

சாப்பிட்டு முடித்து தனது இடத்திற்கு வந்து அமர்ந்தாள். இன்னமும் வேலை நேரம் ஆரம்பிக்க சில நிமிடங்கள் இருந்தன. அவளிருந்தது மூன்றாவது மாடி என்பதால் ஜெய்பூரின் அழகை இரசிக்க ஏதுவாக இருக்க, ஜன்னலருகில் நின்று வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

டேபிள் மீதிருந்த அவளது மொபைல் ஒலித்தது. ‘யார் இந்த நேரத்திற்கு?’ என நினைத்துக்கொண்டே மொபைலைப் பார்த்தவள் விஜய்யின் பெயரைக் கண்டதும் இதயத்தில் மெல்லிய சாரல் வீசியது. படபடவென அடித்துக்கொண்ட இதயத்துடன் போனைக் கையிலெடுத்தாள். வேண்டாம், வேண்டாம் என எச்சரித்த எண்ணத்தை அடக்கி வெற்றிகொண்டது மனம்.

‘எதற்கு இந்தப் பதட்டம்?’ என தன்னையே கேட்டுக்கொண்டவள், போனை ஆன் செய்து, “ஹலோ!” என்றாள்.

“ஹாய்! பரவாயில்லையே போனை எடுத்துட்ட…” என்றபடி சிரித்தான் விஜய்மித்ரன்.

இதழ்கள் முறுவலில் மலரத் துடித்தாலும் கட்டுப்படுத்திக்கொண்டு, “என்ன வேணும் உங்களுக்கு?” எனச் சிடுசிடுத்தாள்.
“நீதான் வேணும்னு சொன்னவுடனே, சரின்னு சொல்லிடப்போறியா?” எனக் கிண்டலாகக் கேட்டான்.

“விஜய்!” என்றாள் சற்றுச் சப்தமாக.

“எஸ் மேடம்! நான்தான்” என்றான் அவனும்.

“கிண்டலா…!” எனச் சீறினாள்.

“நீ கேட்டதுக்குப் பதில் சொன்னேன். இதுல கிண்டல் எங்கேயிருந்து வந்தது?” எனக் கேட்டான்.

“இப்போ எதுக்காக போன் பண்ணீங்க?”

“நீ எதுக்காக, போனை அட்டெண்ட் பண்ண?”

“போன் வந்தா, அட்டெண்ட் பண்ணமாட்டாங்களா?”

“ஓ! போன் வந்தா அட்டெண்ட் பண்ணணுமா? இது தெரிஞ்சிருந்தா நான் காலைல மெசேஜ் அனுப்பாம போனே செய்திருப்பேனே…” என்றான்.

போலியான வருத்தத்துடன் அவன் சொன்னதைக் கேட்டவளுக்குச் சிரிப்புதான் வந்தது.

“நீங்க போன் பண்ணுவீங்கன்னு யாரும் எதிர்பார்த்துட்டு இல்ல” என்றாள் அதிகாரமாக.

“நீ போனை லேட்டா எடுக்கும் போதே தெரிஞ்சிதே. வேலையா இருந்திருந்தா கண்ணு கம்ப்யூட்டர்ல இருந்திருக்கும். கை, போனை எடுத்து அவசரத்தோட ஹலோன்னு குரல் வந்திருக்கும். அதெல்லாம் இல்லாம பொறுமையா போனை எடுத்து மிடுக்கா ஹலோன்னு சொல்லும்போதே, நீ என்னை எதிர்பார்க்கலன்னு தெரியுதே…” என்றான் சிரிப்புடன்.

அவன் சொல்லச் சொல்ல, சுமித்ராவின் முகம் அஷ்டகோணலாக மாறியது.

அவளது முகம் போகும் போக்கைக் கற்பனைச் செய்தபடி, “சரி விடு. வேலை பிடிச்சிருக்கா? ஊர் பிடிச்சிருக்கா?” எனக் கேட்டான்.

“ம், ரொம்பப் பிடிச்சிருக்கு” என்றாள்.

“என்னைத் தவிர மத்த எல்லாத்துக்கும் நீ இந்தப் பதிலைத்தானே சொல்வ” எனப் பெருமூச்சு விட்டான்.

சிரிப்பை அடக்கிக்கொண்டு, “ஆரம்பிச்சிட்டீங்களா உங்க வேலைய…” என்றாள்.

“வேலையா… எந்த வேலை? ஆஃபிஸ் வேலை அது நல்லபடியா போய்ட்டிருக்கு. நம்ம லைஃப் பத்தின ஒரு வேலைதான் இழுத்துகிட்டிருக்கு” என்றான்.

“ரொம்ப முக்கியம்” என்றாள்.

“முக்கியம்னு நினைச்சிருந்தா, நீ இந்த நேரத்துக்கு ஒரு முடிவுக்கு வந்திருப்ப இல்ல” என்றான்.

“விஜய்! எனக்கு நேரமாகுது. போனை வைக்கிறேன்” என்றாள்.

“இரு இரு. ஒரு விஷயம் கேட்கணும்” என்றவன், “ஃபர்ஸ்ட் டே ஆஃபிஸுக்கு நான் வாங்கிக் கொடுத்த டிரெஸ்சைத் தானே போட்டுட்டுப் போயிருக்க” எனக் கேட்டான்.

“ரொம்பத்தான் ஆசை. நீங்க கொடுத்துட்டுப் போன பார்சலை நான் பிரிக்கவேயில்ல” என்றாள்.

“அச்சச்சோ! பிரிக்கவே இல்லையா… அதுல உனக்குப் பிடிச்ச ஹல்திராம்ஸ் ரசமலாய் பாக்கெட் ஒண்ணும் இருந்ததே. நீ முதல்ல வீட்டுக்குப் போனதும் அந்தப் பார்சல்லயிருந்து அதை எடுத்துத் தூக்கிப் போடு. உனக்காக வாங்கினது வீணா போச்சு” என்றான் சலிப்புடன்.

“இஷ்டத்துக்குப் புழுகாதீங்க. அதுல ரெண்டு உல்லன் சூட்டும். பாட்டியாலாவும் தான் இருந்தது” என்றாள் வேகமாக.

“ஓ! அப்படியா?” என இழுத்துச் சொல்ல, அவள், “ஸ்ஸ்…” என்றபடி தலையில் தட்டிக்கொண்டாள்.

வாய்விட்டுச் சிரித்தவன், “சரி இன்னைக்கு உனக்குக் கொடுத்த ட்ரீட்மெண்ட் போதும். மீதியை நாளைக்கு மதியம் லஞ்ச் டைம்ல பேசறேன்” என்றான்.

“ஒண்ணும் தேவையில்ல. நீங்க போன் பண்ணாலும், நான் எடுக்கமாட்டேன். போன் பண்ணி அவமானப்படாம, பேசாம இருந்துகோங்க. அதான் நமக்கு நல்லது” என்றாள்.

“அப்படியா சொல்ற!” என்றவன், “சரி, அதை நாளைக்குப் போன் பண்ணி செக் பண்ணிக்கிறேன். இப்போதைக்கு போனை வைக்கிறேன்” என்றான்.

அவள் போனை வைக்காமல் அமைதியாக இருக்க, “போனை வைக்கல…” எனக் கேட்டான்.

“ச்சே! நீங்க மட்டும் நேர்ல இருந்திருந்தா…” எனப் பற்களைக் கடித்தாள்.

“அப்போ, என்னை நேர்ல வரச்சொல்றியா?” என இரகசியக் குரலில் கேட்டான்.

“கடவுளே! நான் போனை வைக்கிறேன்…” என்றாள்.

“எப்படி? நான் இப்போ போனை வச்சேனே அதுமாதிரியா…” எனக் கேட்டுச் சிரித்தான்.

“என்னால முடியல. குட் பை” என்றாள்.

“இந்தக் குட் பை என்ன உன்னோட ட்ரேட் மார்க் வார்த்தையா?” என்றவனுக்குப் பதில் சொல்ல முடியாமல் இணைப்பைத் துடித்தாள்.

வாய்விட்டு நகைத்தவன், “சாரி மித்ரா!” எனச் சொல்லிக்கொண்டே சிரிப்புடன் போனை அணைத்தான்
 
  • Like
Reactions: saru

Anuya

Well-known member
Apr 30, 2019
268
291
63
அத்தியாயம் - 34

காலையில் விழித்தெழுந்த சுமித்ரா, மளமளவென அலுவகத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்த போதும் அவளது கருத்து முழுவதும் தனது கைப்பேசியின் மீதே இருந்தது. ‘தனது எண்ணம் முட்டாள்தனமானது’ என தோன்றினாலும், மனம் விஜய்யின் அழைப்பிற்காக ஏங்குவது புரிந்தது.

‘தன்னைப் பற்றி எல்லாம் தெரிந்தும், தனது நேசத்தை வெளிப்படுத்தியவனிடம், ‘விலகிச் சென்றுவிடு. உன் உறவே வேண்டாம்’ என அவனை ஒதுக்கியதென்ன, இப்போது இப்படி வெட்கமே இல்லாமல் அவனது அழைப்பிற்காகத் தவம் கிடப்பதென்ன!’ தனது நிலையை எண்ணி குழப்பம்தான் மிஞ்சியது அவளுக்கு.

நேரமாவதை உணர்ந்து வேகமாகக் கிளம்பியவள், போனை மட்டும் கையிலேயே வைத்துக்கொண்டாள். எவ்வளவோ வேகமாக வந்தும் இரயில் வரவேண்டிய நேரத்திற்குத் தான் அவள் ஸ்டேஷனுக்கு வந்து சேர்ந்தாள். முன்தினம் சொன்னதைப் போலவே, ஆதித்யா அவளுக்கு ட்ரெயின் பாஸை வாங்கிக் கொடுத்திருந்ததால் வேகமாக ஓடிவந்து இரயிலில் ஏறினாள்.

அலுவலகத்திற்கு அவள் வந்து சேரும்வரை விஜய்யிடமிருந்து அவளுக்கு எந்த அழைப்பும், குறுஞ்செய்தியும் வரவேயில்லை. சற்று ஏமாற்றமாக இருந்தாலும், உணவு இடைவேளையின் போது போன் செய்வான் என நினைத்துக்கொண்டே தனது வேலையைத் துவக்கினாள்.

ஆனால், அவளது நினைப்பைப் பொய்யாக்குவதைப் போல அவனிடமிருந்து எந்த அழைப்பும் அன்று மட்டுமல்ல, அடுத்து வந்த நான்கு நாள்களாக வரவில்லை. மனதளவில் சோர்ந்து போனாலும், ‘அவன் பேசாததும், நல்லதற்கே’ என நினைத்துக்கொண்டாள்.

ஆனாலும், மனத்தின் ஆசையைக் கட்டுப்படுத்தத்தான் முடியவில்லை. அன்று அலுவலகத்திலிருந்து திரும்பி வந்தவள், ஹாஸ்டல் தோழிகளுடன் பூங்காவில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தாள். அலுவலகக் கதைகள், அலுவலகத்தில் நடக்கும் கலாட்டாக்களைச் சொல்லிச் சிரித்துக் கொண்டிருக்க, பேச்சு புத்தாண்டை நோக்கிச் சென்றது.

“சுமி! நியூ இயர்க்கு என்ன ப்ளான்?” எனக் கேட்டாள் ஒருத்தி.

“அப்படியெல்லாம் எதுவும் இல்ல. என்னைக்கும் போல அன்னைக்கும் ஒரு நாள் மார்னிங் எழுந்து அப்பாவோட கோவிலுக்குப் போய்ட்டு வருவேன். இந்த வருஷம் நான் மட்டும் தனியா…” என்றவளுக்குக் கண்கள் பனிக்க, வேகமாக அதை அடக்கிக்கொண்டு புன்னகைக்க முயன்றாள்.

சற்றுநேரம் அங்கே, கனத்த அமைதி நிலவியது.

”ஹேய்! சாரிப்பா… என்னால உங்க மூடெல்லாம் ஸ்பாயில் ஆகிடுச்சி. சரி, உங்க எல்லோரும் எனக்குப் புதுவேலை கிடைச்சதுக்கு ட்ரீட் கொடுக்கறேன்னு சொல்லியிருந்தேன் இல்ல. இந்த சண்டே லஞ்ச் என்னோட ட்ரீட்” என்றாள்.

“வாவ்! சுமி! சொன்ன வார்த்தையை நீ ஒருத்தித்தான் காப்பாத்தப் போற. இதுவரைக்கும் ஒருத்திக்கூட சொன்னதைச் செய்ததில்ல” என்றாள் ஒருத்தி.

“அந்த லிஸ்ட்ல நீயும் தானே இருக்க…” என மற்றொருத்தி அவளது காலைவார, அங்கே சிரிப்பொலி இசையாகப் பரவியது.

ஞாயிற்றுக்கிழமை மதியம் பெண்களில் சிரிப்பொலியால் அந்த ரெஸ்டரண்டே கலகலத்தது.
சுற்றிலும் இருப்பவர்கள் பார்க்கிறார்களே என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல், அவர்கள் அனைவரும் வளவளத்துக்கொண்டிருந்தனர்.

திருப்தியாக உண்டு முடித்துவிட்டு ஆளுக்கொரு ஐஸ்கிரீமுடன் அந்த மால்-ஐ சுற்றி வந்தனர்.
ஷாப்பிங் என்றாலே காததூரம் ஓடும் சுமித்ராவிற்கு சற்றுநேரத்தில், “நீங்க சுத்திட்டு வாங்க. நான் அங்கே உட்கார்ந்திருக்கேன்” என்று அவர்களிடமிருந்து நழுவி வந்து அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தாள்.

அவள் ஒரு மூலையில் அமர்ந்ததால் அந்த முழு மால் மற்றும் வெளியிலிருந்த கார் பார்க்கிங்கையும் அவளால் தெளிவாகப் பார்க்க முடிந்தது. மொபைலைச் சற்றுநேரம் பார்த்துக்கொண்டிருந்தவள் அதைக் கைப்பையில் வைத்துவிட்டு வெளியே வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தாள். திடீரென அங்கிருந்த பச்சைநிற வோல்க்ஸ் வேகன் காரைப் பார்த்ததும் சடாரென நிமிர்ந்தாள்.

‘இந்தக் கார்தானே அன்று ஹாஸ்டலுக்கு அருகில் நின்றிருந்தது. பின்னும் என்னைப் பின் தொடர்ந்தது’ என்று எண்ணினாள். ‘இது யாருடைய கார் என்று அறிந்துகொண்டே ஆகவேண்டும்’ என்ற எண்ணம் உண்டாக, பார்க்கிங்கை நோக்கி நடந்தாள்.

சுற்றும் முற்றும் பார்த்தாள். யாரும் அங்கில்லை என்பதை உறுதி செய்துகொண்டு காரின் எண்ணைக் குறித்துக்கொண்டாள்.

‘ஜெய்பூர் ரிஜிஸ்ட்ரேஷன் தான்… ஒருவேளை உண்மையாகவே ஆதித்யாவிற்குத் தெரிந்தவர் தானோ… நான்தான் வீணாகச் சந்தேகப்படுகிறேனோ…’ என எண்ணிக்கொண்டே டிரைவர் சீட்டின் மூடியிருந்த கண்ணாடி வழியாக, உள்ளே உற்றுப் பார்த்தாள்.

***************

“தேங்க்யூ!” என்றபடி அவர்கள் கொடுத்த பையை வாங்கிக்கொண்டு கடையிலிருந்து வெளியில் வந்தான் இந்தர்.

“ஏன்டா! எத்தனைச் சட்டைடா எடுப்ப? உன் டெரெஸ்சை வைக்கவே ஒரு ரூம் வேணும் போல…” என அலுப்புடன் சொன்னான் ஆதித்யா.

“உனக்கு ஏன் பொறாமை? வேணும்னா, நான் ஒருமுறை போட்டுட்டுக் கொடுக்கறேன்… அந்தத் துணியை ஏலம் விட்டு வர்ற பணத்தை நீ வழக்கமா கொடுக்கற முதியோர் இல்லத்துக்கு நன்கொடையா கொடுத்திடு” என்றான் இந்தர்.

“ஆமாம், இவர் பெரிய செலிபிரிட்டி! இவரோட துணியை ஏலம் விட்டதும் அப்படியே கோடிக்கணக்குல பணத்தைக் கொண்டு வந்து குவிக்கப் போறாங்க” என்றான் கிண்டலாக.

“போடா போடா… ஒருநாள் இல்லன்னா ஒரு நாள் பார்த்துட்டே இரு. நான் எங்கேயோ இருக்கப் போறேன்” என்றான் பெருமிதத்துடன்.

“ம், அதுவரை நாங்க உட்கார்ந்து உன் முகத்தையே பார்த்துட்டிருப்போம். ஆளைப் பாரு” என்றவன் அப்போதுதான் நினைவு வந்தவனாக, “ஆமாம், இந்த வாரம் அண்ணம் ஏன் வரல? எப்படியும் அண்ணியைப் பார்க்க வந்திருக்கணுமே…” எனச் சந்தேகத்துடன் கேட்டான்.

“எங்க அண்ணன் தானே…ஒண்ணு நான் சொன்னதுக்காகவே வீம்பா வராம இருப்பார். ரெண்டாவது, பெரிசா ஏதாவது ப்ளான் வச்சிருப்பார். எங்க அண்ணனைப் பத்தித் தெரியாதா?” என்றான்.

“ம், உன் அண்ணன்தானேடா! அவரு மட்டும் எப்படியிருப்பாரு?” என்றான்.

“ஹா ஹா இன்னும் எங்களைப் பத்தி நீ புரிஞ்சிக்கவே இல்ல மேன் நீ!” என்றான்.

“ஒரு வாரமா அண்ணியோட கண்ணுல படாம, காலத்தை ஓட்டிட்ட. நீங்க ரெண்டு பேரும் அவங்க கண்ணுல பட்டு வாங்கிக்கட்டிக்கறதை என் கண் குளிரப் பார்க்கணும்” என்றான் சிரிப்புடன்.

“நல்ல எண்ணம்டா உனக்கு” என அலுத்துக்கொண்டே கார் பார்க்கிங்கை நோக்கி நடந்தவன், “என்ன வாய்டா உனக்கு?” என்றான் கடுப்புடன்.

“வொய்டா?” என்றான் ஆதி.

“அங்கே பாரு?” என இந்தர் சுட்டிக்காட்டிய திசையில், அவர்களது காரின் அருகில் சுமித்ரா நின்றிருந்தாள்.

“இப்போ என்னடா பண்றது? அவங்க அங்கயிருந்து நகர்றது மாதிரி தெரியவே இல்லையே…” எனக் கேட்டான்.

“என்னைக்கா இருந்தாலும் தெரிஞ்சிதானே ஆகணும். அது இன்னைக்காவே இருக்கட்டுமே” என்றான் இந்தர்.

“என்னடா பண்ணப்போற?” எனத் திடுக்கிடலுடன் கேட்டான் ஆதி.

“ம், போய் எதிரில நிக்கப் போறோம்” என்றான்.

“ஐயோ நண்பா! ஏற்கெனவே, வக்கீல் மாதிரி குறுக்கு விசாரணயெல்லாம் பண்ணுவாங்க. இதுல உன்கூட சேர்த்துப் பார்த்துட்டா… வேற வினையே வேணாம். இந்த விளையாட்டுக்கு நான் வரலை என்னை விட்டுடு” என்றான் மிரட்சியுடன்.

“நீதானேப்பா சொன்ன… நாங்க மாட்டிட்டு முழிக்கறதைப் பார்க்கணும்னு. லைவா இப்போ நடக்கப் போகுது. வந்து பாரு” என்றான் கிண்டலாக.

“நீங்க மாட்டிக்கிட்டு முழிக்கறதைப் பார்க்கணும்னு தான் சொன்னேனே தவிர, நான் மாட்டிக்கிட்டு முழிக்கணும்னு சொல்லையே…” என்றான் கெஞ்சும் குரலில்.

“அப்போ, நீ வரல…”

“எப்பவுமே நான் வரல” என்றான்.

“சரி, அப்போ நீ தள்ளி நின்னு வேடிக்கைப் பாரு…” என்றவன் ஆதியின் கைகளிலிருந்த பைகளை வாங்கிக் கொண்டான்.

இரண்டடி நடந்தவனிடம், “ஆல் த பெஸ்ட் மச்சான்!” என்றான்.

“கடுப்பைக் கிளப்பாம போடா” என்றவன், சுமித்ராவை நோக்கி நடந்தான்.

முன்பக்க ஜன்னல் கண்ணாடி வழியாக உள்ளே பார்த்தவளுக்குப் பின்னால் சென்று நின்றவன், “எக்ஸ்க்யூஸ் மீ!” என்றான்.

தனக்குப் பின்னால் குரல் கேட்டதும் சட்டென விறைத்து நிமிர்ந்து திரும்பிப் பார்த்தவள், மின்சாரம் தாக்கியதைப் போலச் சடாரெனப் பின்னால் நகர்ந்தாள்.

விஜய்மித்ரனுக்கு ஆறேழு வயது குறைவாக இருந்தால் எப்படியிருப்பானோ அப்படி ஒருவன் அங்கே நின்றிருப்பதைக் கண்டவளுக்குத் தான் காண்பது கனவா, நினைவா! எனப் புரியவில்லை.
அவளது மனம் வேகமாகக் கணக்குப் போட்டது.

‘இது எப்படிச் சாத்தியம்? ஒருவேளை இவன் விஜய்யின் சகோதரனோ!’ என்ற சந்தேகம் எழ, அவனை மேலிருந்து கீழ்வரை ஆராய்ந்தாள்.

சற்றே ஒல்லியானா, அதேநேரம் உடற்பயிற்சியால் முருக்கேறியிருந்த உடல்வாகும், காற்றில் பறந்துகொண்டிருந்த கேசமும், குறும்பு கூத்தாடும் கண்களுமாக நின்றிருந்தவனை அவளது பார்வை அளவெடுத்தது.

அரை நிமிடத்திற்குள் இத்தனையும் நடந்திருக்க, “ஹலோ மேடம்!” என அவளது முகத்துக்கு நேராகச் சொடக்கிட்டு அழைத்தான்.

சுதாரித்து அவனது கண்களைப் பார்த்தவள், “நீ… நீங்..க” எனத் திணறினாள்.

“நான் நான்தான். நீங்க யாரு? என் காரை ஏன் இப்படி குனிஞ்சி பார்த்துட்டிருக்கீங்க? என்ன வேணும் உங்களுக்கு?” என அவள் பேச வாய்ப்பே கொடுக்காமல் கேள்வியாக அடுக்கினான்.

“அது… எனக்குத் தெரிஞ்சவங்க கார் மாதிரியிருந்தது” என வாயில் வந்ததைச் சொன்னாள்.
“இது என்னோட கார். கொஞ்சம் நகர்ந்துக்கறீங்களா… வண்டியை எடுக்கணும்” என்றான்.

அவளுக்கிருந்த பதட்டத்தில், “ஓஹ் சாரி!” என்றபடி சற்று தள்ளி நின்றாள்.

“ரொம்பத் தேங்க்ஸ்!” என்றவன் காரில் அமர்ந்தபடி, “எல்லோரும் என்னை மாதிரி நல்லவங்களாவே இருக்கமாட்டாங்க. சோ, இனி யாரோட காரையும் இப்படி எட்டிப் பார்க்காதீங்க” எனச் சிரித்துக்கொண்டே அவளைக் கடுப்படித்துவிட்டு காரை ரிவர்ஸ் எடுத்துக் கிளம்பினான்.

சுமித்ராவிற்கு அவமானமாகப் போயிற்று. தன்னைச் சுற்றி ஏதோ வலை பின்னப்பட்டிருப்பதாக உணர்ந்தவளுக்கு அங்கே நிற்கவே முடியவில்லை.

அவன் பேசிச் சென்றதே நினைவிற்கு வர, ‘கடவுளே! என்னைக் கார் திருடி என்றல்லவா நினைத்திருப்பான்! அவன் அப்படித்தானே பேசிச் சென்றான்’ என நினைக்க நினைக்க மனத்திற்குள் கோபம் கொப்பளித்தது.

அதிலும், அச்சில் வார்த்ததைப் போல அவனது உருவம் விஜய்யைக் கொண்டிருக்க அவளுக்குக் குழப்பமாக இருந்தது.

“ஹேய்! சுமி… நீ இங்கே இருக்கியா? நாங்க பத்து நிமிஷமா உன்னைத் தேடுறோம். உன் மொபைலுக்குக் காண்டாக்ட் பண்ணா நீ ரீச் ஆக முடியாத இடத்துல இருக்கேன்னு சொல்லுது” என்ற தோழிகளது ஆரவாரத்தில் அப்போதைக்கு தனது யோசனையை சற்று ஒதுக்கிவிட்டு அவர்களுடன் நடந்தாள்.

மனம் எதிலும் ஒன்றாத போதும் தோழிகளுடன் ஊரைச் சுற்றிவிட்டு இரவு உணவையும் முடித்துக்கொண்டே அனைவரும் ஹாஸ்டலுக்கு வந்து சேர்ந்தனர்.

சனி, ஞாயிறுகளில் இரவு பத்து மணிவரை ஹாஸ்டலுக்கு வரலாம் என்றிருந்ததால் அவர்களுக்குச் சிரமம் இல்லாமல் போயிற்று. இரவு வணக்கத்துடன் அனைவரும் தங்களது அறைக்குச் செல்ல, சுமித்ரா யோசனையுடனேயே அறைக்கு வந்தாள்.

*****************

“நான் உன்கிட்ட படிச்சிப் படிச்சிச் சொன்னேன். அவளோட கண்ணுல படாதேன்னு. இப்போ, உன் ப்ரொஃபசரோட பொண்ணைப் பார்த்துப் பேசினேன்னு என்கிட்டயே சொல்ற. அப்பவே சொன்னியா… அவள் போன் பண்ணி, நான் ஏதாவது உளறியிருந்தா…” என எரிச்சலுடன் தம்பியைக் கடிந்துகொண்டான் மித்ரன்.

“நான் மதியமே போன் பண்ணேன். நீங்கதான் எடுக்கல. சரி, உதய்பூர் வந்து சேர்ந்ததும் உங்ககிட்ட பேசிக்கலாம்னு விட்டுட்டேன்” என்றவன், “ப்ரோ! சொல்றேன்னு தப்பா நினைச்சிக்காதீங்க. என்னைக்காவது இது நம்ம ஆஃபிஸ்ன்னு தெரியப்போகுது. அதுக்கு இது பிள்ளையார் சுழியா இருந்துட்டுப் போகட்டுமே” என்றான் கூலாக.

அவன் சொல்வதும் சரி என்றபோதும், மித்ரனுக்குக் கடுப்பாகத்தான் இருந்தது.

“நான் சொல்லிட்டா… நீங்க எதுக்கும் பிரிப்பேர் ஆகிக்குவீங்கன்னுதான் சொன்னேன்” என்றான் இறங்கிய குரலில்.

அவன் சொல்லி முடிக்கவும், சுமியின் அழைப்பு அவனுக்கு வரவும் சரியாக இருந்தது.

‘ஸ்ஸ்..” என மூச்சுவிட்டவன், “சரி, நீ கட் பண்ணு. மித்ரா லைன்ல வர்றா” என்றான்.

“பார்த்துப் ப்ரோ! அவசரப்பட்டு எதுவும் பேசி மாட்டிக்காதீங்க. இன்னும் கொஞ்ச நாள் நாம இரகசியம் காக்கணும்” என்றான்.

“வாயை மூடிகிட்டு, போனை வைடா!” என்றவன், “தாத்தாவை விசாரிச்சேன்னு சொல்லு” என்றபடி இணைப்பைத் துண்டித்தான்.

அதற்குள் அவளிடமிருந்து மூன்று மிஸ்ட் கால்கள் வந்திருந்தன.

மேலும், பத்து நிமிடங்கள் கழிந்ததும், அவளுக்குப் போன் செய்தான் மித்ரன்.

பட்டென போனை எடுத்தவள், “போன் பண்ண இவ்வளவு நேரமா உங்களுக்கு?” எனச் சிடுசிடுத்தாள் சுமித்ரா.

“பரவாயில்லையே… நாலு நாள் நான் போன் பண்ணலன்னதும் இப்படி விழுந்தடிச்சிகிட்டு போன் பண்ணியிருக்க” எனச் சிரிப்புடன் கேட்டான்.

“அலையாதீங்க… உங்க குரலைக் கேட்கணும்னு, இங்க ஒண்ணும் ஏங்கிட்டு இல்ல” என்றாள் கோபத்துடன்.

”குப்புற விழுந்தாலும், மீசைல மண்ணு ஒட்டலன்னு தானே சொல்வ” என்றான் கிண்டலாக.

“நீங்க மட்டும் என்னவாம்? பிடிச்ச முயலுக்கு மூணு கால்ன்னு தானே நிக்கறீங்க” என்றாள் வேகமாக.

“அடேங்கப்பா! என்ன பேச்சுல இன்னைக்குச் சூடு பறக்குது? ஜெய்ப்பூர்ல இப்போ குளிர்காலம் தானே” என்றான்.

“போதும். நான் எதுக்குப் போன் பண்ணேன்னு கேட்கறீங்களா?”

“அதைத்தான் நானே சொன்னேன். நீதான் ஒத்துக்கமாட்டேன்ற” என்று பெருமூச்சை வெளியிட்டான்.

“ஹய்யோ! என்னால தாங்க முடியல. இன்னும் என்னவெல்லாம் சொல்லி என்னை ஏமாத்தலாம்னு இருக்கீங்க விஜய்!” எனக் கோபத்துடன் கேட்டாள்.

“ஏமாத்தலாம்னு இருக்கேனா? இப்போ உன்னை என்ன ஏமாத்திட்டேன்னு இப்படிப் பேசிட்டிருக்க? அன்னைக்கு நீ சொன்னதுக்காகத்தானே போன் பண்ணாம இருந்தேன். நீ இவ்ளோ பீல் பண்ணுவேன்னு தெரிஞ்சிருந்தா நேராவே வந்திருப்பேனே” என்றான்.

”விஜய்! என்னை டார்ச்சர் பண்ணணும்னே இருக்கீங்களா?” என்றாள் ஆத்திரத்துடன்.

அவளது கோபத்தை உணர்ந்தவனாக, “சரி, என்ன சொல்லணுமோ சொல்லு” என்றான்.

“நான் என் சந்தேகத்தைக் கேட்க வந்திருக்கேன். அதுக்கு மறைக்காம உண்மையைச் சொல்லணும்” என்றாள்.

“ஓகே. ஷூட்” என்றான்.

“உங்க பேரண்ட்ஸ் எங்கே இருக்காங்க?” எனக் கேட்டவள், “ஏடாகூடமா பதில் சொல்லாம உண்மையைச் சொல்லுங்க” என்றாள் ஜாக்கிரதையாக.

அவளது முன்னெச்சரிக்கையை நினைத்துப் புன்னகைத்துக்கொண்டவன், “உதய்பூர்ல” என்றான்.

“உங்க பேரண்ட்ஸ் ஜெய்பூர்ல தானே இருந்தாங்க…”

“ஆமா, இருந்தாங்க. இப்போ உதய்பூர்ல இருக்காங்க” என்றான்.

“உங்களுக்கு ஒரு பிரதர் இருக்காரில்ல…”

“ம், இருக்கானே…”

“அவர் எங்கே இருக்கார்?”

“ஹேய்! எதுக்கு இப்போ இந்த இன்ஃபர்மேஷனெல்லாம் கேட்டுட்டிருக்க?”

“காரணமாத்தான் கேட்கறேன். நீங்க பதிலை மட்டும் சொல்லுங்க. உங்க ஃபேமலி எங்கே இருக்காங்க?” என்றாள்.

“என் பேரண்ட்ஸ், என்னோட பிரதர், சிஸ்டர், என்னோட தாத்தா எல்லோரும் உதய்பூர்ல இருக்காங்க. நான் குடுகாவுன்ல இருக்கேன். நீ ஜெய்பூர்ல இருக்க…” என்றான்.

அவனது பதிலைக் கேட்டவளுக்குத் தன்னையும் தனது குடும்பத்தில் ஒருத்தியாக இணைத்துச் சொல்பவனை மேற்கொண்டு கேட்க தயக்கமாக இருந்தாலும், தன்னுடைய சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ளவேண்டிய அவசியத்தால் அடுத்த கேள்வியைக் கேட்டாள்.

சற்று யோசனையுடன், “அவசியம் இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லணுமா மித்ரா!” எனக் கேட்டான்.

“ஆமாம்” என அழுத்தமாகச் சொன்னாள்.
“இதுவரைக்கும் நான் சொன்னது எல்லாமே உண்மை. உன்மேல சத்தியம்” என்றான்.

“நான் உங்க மேல சத்தியம் பண்ணச் சொன்னேன்.” என்றாள் வீம்பாக.

“என்னைவிட, நீ எனக்கு ப்ரீஷியஸ்! உன் மேலயே நான் சத்தியம் பண்ணியிருக்கேன்” என்றான் ஆழ்ந்த குரலில்.

அவனது பதிலைக் கேட்ட சுமித்ரா நெஞ்சம் நெகிழ, “தேங்க்யூ!” என்றாள்.

“நீ தேங்க்ஸ் சொல்லணும்னு அவசியம் இல்ல மித்ரா! ஏன்னா, நான் கடைசியா சொன்னது உண்மை உண்மை நிதர்சனமான உண்மை” என்றான்.

சிலநொடிகள் மௌனமாக இருந்தவள், “நான் போனை வைக்கிறேன்” என்றாள்.

சிறுமுறுவலுடன், “ஓகே…” என்றான்.

“குட் நைட்…” என்றாள்.

“குட் நைட்!” என ஆழ்ந்த குரலில் சொன்னவன், “பட், நோ டிரீம்ஸ்” என்றான் சிரிப்புடன்.

“இங்க யாரும் கனவு கண்டுட்டு இல்ல…” என்றாள் வேண்டுமென்றே.

“அதான், எனக்குத் தெரியுமே. தூங்கினா தானே கனவு வரும்” என்றான் சிரிப்புடன்.

“ஓவர் கான்ஃபிடென்ஸ் உடம்புக்கு ஆகாது” என்றாள்.

“இது ஓவர் கான்ஃபிடென்ஸ் இல்ல மேடம்! ட்ரஸ்ட்… நம்பிக்கை” என்றான்.

“நம்புங்க! நம்புங்க! எல்லாம் நடந்திடும்” என்று உதட்டைச் சுழித்தாள்.

“தட்ஸ் இட்! பார்த்தியா… உனக்கே நடந்திடும்னு கான்ஃபிடென்ஸ் வந்துடுச்சி” என்று அவன் சிரிக்க, “ஸ்…” என்றபடி நாக்கைக் கடித்துக் கொண்டவள், போனை அணைத்தாள்.

அவளது செயலைக் கண்முன்னே கண்டதைப் போல, நினைத்துச் சிரித்துக்கொண்டான்.
 
  • Like
Reactions: saru

saru

Active member
Mar 24, 2018
287
25
28