அனைவருக்குமான தளம்! விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்!

தெரிந்து கொள்வோம்

sudharavi

Administrator
Staff member
#1
ஹாய் பிரெண்ட்ஸ்,

பொது அறிவு கட்டுரைகளை நமக்காக எழுதவிருக்கிறார்கள்.......அவர்களுக்கு வாழ்த்துக்கள்....................
 

lakshmi

Active member
Staff member
#2
அனைவருக்கும் வணக்கம் நான் லக்ஷ்மி, சகோதரி சுதா ரவி அவர்கள் த்ரெட்டில் நான் எங்கோ வாசித்ததை, எனக்கு தெரிந்ததை உங்கள் வாழ்த்துக்களுடன் எழுதப் போகிறேன்.

கிரேக்க ஞானி ஒருவர், தமது சீடர்களிடம் ஓர் அழுகிய ஆரஞ்சு பழத்தைக் காட்டி, இதிலிருந்து சுவையான ஆரஞ்சுப் பழத்தை உருவாக்க முடியுமா? என்று கேட்டார், யாராலும் பதில் சொல்ல முடியவில்லை.

அப்போது அந்தக் கூடத்தை பெருக்கிக் கொண்டிருந்த வேலைக்கார பெண்மணி, முடியுமே என்றார்.

எப்படியம்மா என்று வியந்து கேட்டனர், அந்த அழுகிய ஆரஞ்சுப் பழத்தை உரித்து, அதிலிருந்த விதைகளை கவனுத்துடன் எடுத்தார். இவற்றை விதைத்தால் அவற்றிலிருந்து,புதிய சுவைமிக்க ஆரஞ்சுப் பழங்கள் தோன்றும் என்றார் அந்தப் படிப்பறிவில்லாத பெண்மணி.
 
Last edited:

lakshmi

Active member
Staff member
#3
காதலர் தினம்,மகளிர் தினத்திற்குப் பிறகு புகழ் பெற்ற தினம் சர்வதேச முட்டாள்கள் தினம்.

இந்த முட்டாள்கள் தினம் எப்படி உருவானது,என்பதைப்பற்றி வரலாற்றில் நிறைய கதைகள் சொல்லப் பட்டாலும் எதையும் உறுதியாக சொல்ல முடியவில்லை.

ஆனால் வரலாற்றில் பல நல்ல விஷயங்களின் துவக்க நாளாக இருந்ததும் இந்த ஏப்ரல்-1 தான் என்பதை மறக்கக் கூடாது. காரணம் ஒவ்வொரு நிதியாண்டின் துவக்கமாக ஏப்ரல் 1 அமைந்திருப்பதால் தொழிலும், வணிகத்திலும் ஏப்ரல் 1 முக்கிய நாளாக கருதப்படுகிறது.

1935 ஏப்ரல் 1-ம் தேதி தான் இந்திய ரிசர்வ் வங்கி துவங்கப்பட்டது.2004-ல் கூகுளின் மெயில் சேவை துவங்கப்பட்டது.
 

lakshmi

Active member
Staff member
#4
நாம் நாள் முழுவதும் தண்ணீர் குடித்தாலும் குறிப்பிட்ட சில நேரங்களில் நாம் அருந்தும் தண்ணீர் நமது உடலுக்கு அருமருந்தாக செயல்படுகிறது. எப்படி என்று பார்ப்போமா?

காலையில் தூங்கி எழுந்ததும் குடிக்கும் இரண்டு கிளாஸ் தண்ணீர் உடல் உள்ளுறுப்புகளை சரிவர இயங்கத் தூண்டுகிறது.

சாப்பிடுவதற்கு 30 நிமிடங்கள் முன் குடிக்கும் ஒரு கிளாஸ் தண்ணீர் உணவு ஜீரணமாக உதவுகிறது.

குளிக்கும் முன் குடிக்கும் ஒரு கிளாஸ் தண்ணீர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.

படுக்கும் முன் குடிக்கும் ஒரு கிளாஸ் தண்ணீர் மாரடைப்பு உண்டாவதைத் தடுக்கிறது.
 

lakshmi

Active member
Staff member
#5
அதிசய மணல் மாளிகை

பெல்ஜியத்தில் ஜுபர்கஸ் கடலோரம் கட்டப்பட்ட பிரமாண்டமான மணல் மாளிகை 40 அடிஉயரம் கொண்ட அழகிய மாளிகை. கட்டிய சில நிமிடங்களில் சரிந்து போகும் தன்மை கொண்ட மணல் வீடு இங்கு கம்பீரமாக நிற்கிறது.

இந்த மணல் மாளிகையைக் கட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட பிரத்யோகமான மண் அயல் நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. மண்ணால் கலைப் பொருட்கள் வடிக்கும் பெல்ஜியத்தின் மிகச்சிறந்த கலைஞர்கள் இப்பணியில் இறங்கினார்கள். இந்த மாளிகை சரியான பராமரிப்புடன்இருக்கும் வரை இதற்கு எந்த தீங்கும் ஏற்பட்ட வாய்ப்பில்லை என்கிறார்கள்.
 

lakshmi

Active member
Staff member
#6
ஜெர்மனியின் சர்வாதிகாரியான ஹிட்லர் ஓர் ஜெர்மனியர் அல்லர்.அவர் பிறந்தது ஆஸ்திரியாவில்.

பூமியிலேயே மிகவும் வயதான மரம் தேவதாரு எனப்படும்,பிரிஸல்கோன்பைன் இதன் வயது 3,600ஆண்டுகள்.

எழுத்து சுதந்திரத்திற்காக முதலில் சிறையில் அடைக்கப்பட்ட இந்தியர் அபுல்கலாம் ஆசாத், ஆண்டு 1915.

பெட்ரோலில் ஓடிய முதல் கார் பென்ஸ்.
 

lakshmi

Active member
Staff member
#7
கோடைக்காலத்தில் நீர்ச்சத்து அதிக அளவில் தேவைப்படும். காய்கறிகளில் அதிக நீர்ச்சத்து காணப்படுகிறது. முடிந்த அளவில் காய்கறிகளை பச்சையாகவோ அல்லது லேசாக வேக வைத்தோ உட்கொண்டால் தான் அதிக அளவிலான நீர்ச்சத்தை நாம் பெற முடியும். காய்கறிகளைப் போன்று பழங்களிலும் அதிக அளவு நீர்ச்சத்து உள்ளது. இந்த கோடையில் எவ்வளவுக்கு எவ்வளவு காய்கறிகளையும், பழங்களையும் உட்கொள்கிறோமோ அந்த அளவுக்கு நல்லது.

குளிர்பானங்களால் உடலில் தேவையற்ற கலோரி தான் சேரும். இளநீரை பருகலாம், சுத்தமான நீரில் தயாரிக்கப்பட்ட மோர், எலுமிச்சை சாறு ஆகியவற்றையும் பருகுவது நம் உடலுக்கு ஆரோக்கியமானவை ஆகும்.
 

lakshmi

Active member
Staff member
#8
உறவுகளை வளர்த்து கொள்ள

நானே பெரியவன் எனக்கு எல்லாம் தெரியும் என்ற அகந்தையை விடுங்கள்.

சில நேரங்களில் சில சங்கடங்களை சந்தித்தே ஆக வேண்டும் என்று உணருங்கள்.

நான் சொன்னதே சரி என்று உடும்பு பிடியாய் இல்லாமல் அடுத்தவர் கருத்துக்கும் சிறிது மதிப்பு கொடுங்கள்.

புன்முறுவலை காட்டவும், சில அன்பான சொற்களை பேசவும் நேரமில்லாதை போல் நடந்து கொள்ளாதீர்கள்.

சின்ன சின்ன விஷயங்களில் தாராளமாக விட்டு கொடுத்து போகலாம்.

மற்றவர்களை பேச விட்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
 

lakshmi

Active member
Staff member
#9
ஏப்ரல் 7 இன்று உலக சுகாதார தினம், 1950 முதல் உலக சுகாதார தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இன்றைய நாளில் உலகில் உள்ள அனைவருக்கும் சுகாதாரமான மருத்துவம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டுமென உறுதியேற்று உள்ளது.

இதற்காக health for all என்ற இயக்கத்தையும் முன்னெடுத்து உள்ளது.

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சில டிப்ஸ


உடற்பயிற்சியை அன்றாட வேலைகளில் ஒன்றாக வைத்துக் கொள்ளுங்கள்.

ஆரோக்கியமான ஊட்டச்சத்து மிக்க உணவையே சாப்பிடுங்கள், உடல் எடை குறைக்கிறேன் என்று கலோரி அதிகமுள்ள ஆரோக்கியமான உணவினை சாப்பிடாமல் இருக்காதீர்கள்.

ஒவ்வொரு பருவத்திற்கு என பிரத்யேகமாக வரும் பழங்கள் மற்றும் காய்கறிகளையே அதிகம் சாப்பிடுங்கள்.

உடலில் நீர்ச்சத்து குறையாமல் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். அதிகளவு தண்ணீர் குடிப்பதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்.

மன அழுத்தம் குறைய யோக போன்றவற்றை செய்யத் தொடங்குங்கள்.

உலக சுகாதார தினத்தில் இருந்தாவது நம் உடல் நலத்தை காக்க தொடங்குவோமாக.
 

lakshmi

Active member
Staff member
#10
பனிக்கட்டி தேவாலயம்

இமயமலைப் பகுதியில் பனிக்கட்டியினால் ஆன சிவலிங்கம் இருப்பது போல ரோமானியாவில் புகாரெஸ்ட் நகரின் வடமேற்கில் உள்ள மலையில் பனிக்கட்டியிலான தேவாலயம் அமைந்துள்ளனர்.

இந்த பனிக்கட்டி தேவாலயம் காண்பதற்கென்றே சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இத்தேவாலயம் 20 அடி உயரமும், 40 அடி நீளமும், 23 அடி அகலமும் உடையது.

6,500 அடி உயரத்தில் உள்ள மலையில் உருவான இந்தத் தேவாலயம் ஒவ்வோர் ஆண்டும் பனிக்காலத்தில் மட்டுமே இயங்குகிறது. உலகில் உள்ள ஒரே பனிக்கட்டி தேவாலயம் இதுவே ஆகும்.
 

lakshmi

Active member
Staff member
#11
வாழை இலையில் சாப்பிடுவதால் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்.


அதிகம் பரவி வரும் புற்றுநோய் உட்பட பார்கின்சன் நோய் எனப்படும் நடுக்குவாத நோய் வராமலும் நம்மை காக்கிறது

வாழை இலையில் நேரடியாக உண்பது நம் ஜீரணசக்திக்கு அப்பாற்பட்டது என்பதால் இதன் நன்மைகள் நம் உடலுக்கு சென்றடையும் விதமாக அதில் உணவருந்துவதைப் பழக்கமாக கொண்டிருந்தனர் நம் முன்னோர்கள்.

புற்றுநோயை தடுக்கும் பாலிபினால்ஸ் வாழை இலையில் அதிகளவில் உள்ளதாக சமீபத்திய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

இதிலிருக்கும் ரூட்டின்,குளுக்கோஸ் ஹோமியோஸ்டினை சீர்படுத்தி நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது. ரத்த உறைவு,மாரடைப்பு ஏற்படாமல் தடுப்பதுடன் ரத்த ஓட்டத்தையும் மேம்படுத்துகிறது. ரூட்டின் ஒரு சிறந்த ஆக்ஸிஜனேற்றியாகும்.

வாழை இலை ஒரு இயற்கை கிருமிநாசினி இதில் உணவருந்தும் போது உணவில் உள்ள நச்சுத்தன்மையை போக்குவதுடன் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க செய்கிறது.
 

lakshmi

Active member
Staff member
#12
வாரம் இருமுறை அன்னாசிப்பழம், பேரீச்சம் பழம் சாப்பிட்டால் உடல் அழகு கூடும்.

ஆப்பிள் ஜூஸ் அருந்தினால் உடலில் சேர்ந்த அனாவசியமான கொழுப்புகள் கரைந்து வெளியேற்றப்படும். வெயிலில் அலைபவர்கள் வெள்ளரிக்காய்,தக்காளி இரண்டையும் அரைத்து தேனில் குழைத்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து கழுவினால் முகம் கருத்துப் போகாமல் இருக்கும்.
 

lakshmi

Active member
Staff member
#13
உலகின் முதல் பிளாஸ்டிக் மாளிகை

வீணான பிளாஸ்டிக் பொருட்களை பயனுள்ள பொருட்களாக மாற்றுவதற்கு பெயர் பெற்ற ராபர்ட் என்பவரால் கனடா நாட்டில் முழுக்க முழுக்க பிளாஸ்டிக்கால் ஆன உலகின் முதல் பிளாஸ்டிக் மாளிகை கட்டப்பட்டுள்ளது.

மனிதர்களால் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு குறைந்த செலவில் உறுதியான வீடுகளை கட்ட முடியும் என்பதை இவர் நிரூபித்து இருக்கிறார்.

இதே முறையை பயன்படுத்தி ஒரு சுற்றுச்சூழல் கிராமத்தையே உருவாக்கிக் கொண்டு இருக்கிறார் ராபர்ட், இவரை பிளாஸ்டிக் மன்னர் என்றே அழைக்கின்றனர்.
 

lakshmi

Active member
Staff member
#14
100 ஆண்டுகள் நிறைவு

1919 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 -- இல் பஞ்சாப் மாநிலம் அம்ரித்சத் நகரில் ஜாலியன்வாலா பாக் என்ற இடத்தில் ஜெனரல் டையர் என்ற ராணுவ அதிகாரியின் தலைமையில் பிரிட்டன் ராணுவத்தினரால் பீரங்கி துப்பாக்கி சூடு நிகழ்த்தப் பட்டது. கிட்டத்தட்ட பத்து நிமிடங்கள் நீடித்த இந்த தூப்பாக்கி சூட்டில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப் பட்டனர்.

இந்நிகழ்ச்சி நடந்து 21 ஆண்டுகளுக்கு பின்னர், பஞ்சாப் வீரர் உத்தம் சிங்,லண்டன் கேக்ஸ்டன் மண்டபத்தில் வைத்து டையரை சுட்டுக் கொன்றார்.இப்போதும் ஜாலியன் வாலா பாக்கில் படுகொலை நடந்த இடத்தில், குண்டுகள் துளைக்கப்பட்ட சுவர்களை பார்க்கலாம், ரத்த கரைகளும் தென்படும்.

இச்சம்பவத்துக்கு பிரிட்டிஷ் அரசாங்கம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன. ஆனால் பிரிட்டிஷ் அரசாங்கம் கண்டு கொள்ளவேயில்லை.

இந்நிலையில் 10 ஆம் தேதி ஏப்ரல் அன்று பிரிட்டிஷ் நாடளுமன்றம் கூடிய கூட்டத்தில் ஜாலியன்வாலா பாக் படுகொலைக்காக ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்துக் கொள்வதாக பிரிட்டிஷ் பிரதமர் தெரஸா மே அறிவித்தார். அதேபோல் நாடளுமன்றத்தில் பேசினால் எதிர்க்கட்சித் தலைவர் ஜெர்மி கரியோனும் முழு மனதுடன் வருத்தங்களை தெரிவித்து கூறினார்.

இதுவும் ஒரு தினம் என்று கடந்துவிடாமல் உயிர் நீத்த மக்களுக்கு நினைவுகள் மூலம் உயிர் கொடுப்போம்.
 

lakshmi

Active member
Staff member
#15
தமிழ் புத்தாண்டு


இன்று விகாரி வருடம் பிறந்திருக்கிறது. பிரபவ வில் தொடங்கி அட்சய வில் முடியும் தமிழ் வருடங்கள், மொத்தம் அறுபது. இதில் 33 வது ஆண்டு விகாரி ஆண்டாகும். 60 என்கிற எண் , காலக்கணக்கில் மிகவும் முக்கியமான எண். வருடங்கள்
60 என்பதை தாண்டி, 60 நொடிகள் ஒரு நிமிடம்;60 நிமிடங்கள் ஒரு மணி நேரம்.60 நாழிகை ஒரு நாள் என முக்கியத்துவம் கொள்கிறது.


நம் மரபில் புத்தாண்டை வெறும் கொண்டாட்ட காலமாக மட்டுமே பார்ப்பதில்லை. அதைப் புண்யகாலமாக அனுசரிக்கும் வழக்கங்கள் உள்ளன. ஆண்டின் முதல்நாளைத் தென்புலத்தார் வழிபாட்டோடு தொடங்குவதன் மூலம் அவர்களின் ஆசியினைப் பெற வேண்டுவோம்.
 

lakshmi

Active member
Staff member
#16
நோய் தீர்க்கும் பூக்கள்

முருங்கைப் பூ : பித்தம் நீக்கும், வாந்தி குணமாகும். கண்கள் குளிர்ச்சி அடையும்.

மாதுளம் பூ : ரத்த மூலம், பித்தம், ஏப்பம், வாந்தி குணமாகும். உடலுக்கு ஊட்டும் தரும்.

வேப்பம் பூ : நாக்கில் சுவையின்மை, ஜன்னி,மலப்புழுக்கள் தீரும்.

செம்பருத்திப் பூ : உடல் உஷ்ணம் தீரும். இதயம் வலுப்படும்.வெட்டைச்சூடு நீக்கும்.

அகத்திப் பூ : மலச்சிக்கலை விரட்டும், எலும்,பற்களை வளரச் செய்யும்.

குங்குமப்பூ : தலைவலி, கண்நோய்,காதுநோய்,ஜுரம் ஆகியவற்றை குணப்படுத்தும்.

மல்லிகைப்பூ : கபம், மயக்கம், உடல் சூடு குறையும்.
 

lakshmi

Active member
Staff member
#17
பாயும் சிலந்தி


தாவர இனங்களை மட்டும் உணவாக எடுத்துக் கொள்ளும் சிலந்தி வகை ஒன்றை ஐக்கிய அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். பகீரா கிப்லிங்கி எனப்படும் இவ்வகை சிலந்திகள் நடு அமெரிக்காவிலும், மெக்சிகோவிலும் வாழ்ந்து வருகின்றன.

இதுவரை கண்டறியப்பட்ட கிட்டத்தட்ட 40,000 சிலந்தி வகைகள் அனைத்தும் ஊனுண்ணி வகைகளாகும். இந்த வகை சிலந்தி தேள் வகையைச் சேர்ந்தவை. இவை 5-6 மில்லி மீட்டர் நீளமானவை.


புரதங்கள் நிறைந்த அக்காசியா வகை தாவரத்தின் குருத்துக்களையே இவை பெரும்பாலும் உண்கின்றன. தாவரங்களை மட்டுமே தேடிச் செல்லும் சிலந்தி உலகில் இதுவொன்றேயாகும்.
 

lakshmi

Active member
Staff member
#18
உலகின் மிகப்பெரிய முதல் விமானம்

உலகின் மிகப்பெரிய விமானம் சில மாதங்களில் தனது சேவையைத் தொடங்க உள்ளது. ஸ்டிராட் டோலாஞ்ச் என்ற பெயர் கொண்ட இந்த பிரமாண்ட விமானத்தை வடிவமைத்தவர் பால் ஆலன். இவர் பிரபல கணினி மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்டை, பில்கேட்சுடன் இணைந்து நிறுவியவர்.

பால் ஆலன் வடிவமைத்திருக்கும் இந்த விமானத்தின் இறக்கைகள் கால்பந்தாட்ட மைதானத்தை விடப் பெரியவை. அவற்றின் நீளம் 385 அடி. இரண்டு விமானி அறைகளை கொண்ட இவ்விமானம் 28 சக்ரங்கள், 6 என்ஜின்கள் உடையது.

ஒவ்வொரு என்ஜினின் எடையும் 4 ஆயிரம் கிலோ ஒவ்வொரு என்ஜினும் 6 போயிங் 747 விமானத்தின் என்ஜின் திறனுக்கு சமமாக உள்ளது. இது பெரிய விமானம் என்பதால் 2 விமான உடற்பகுதிகள் உள்ளன. இந்த விமானத்தின் மொத்த எடை 2 லட்சத்து 26 ஆயிரம் கிலோ, 6 லட்சம் கிலோ எடையை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டது
 

lakshmi

Active member
Staff member
#19
சித்ரா பௌர்ணமி

மனிதர்களின் பாவ புண்ணியங்களை எழுதி வைத்து அதற்கேற்றார்ப் போல், அவர்களின் இறப்பையும் அதன் பின் அவர்கள் வசிக்கப் போகும் சொர்க்கம் - நரகம் ஆகியவற்றை நிர்ணயிக்கும் பெரிய பொறுப்பில் உள்ள எமதர்மனின் உதவியாளரான சித்திரகுப்தனை வழிபடும் நாள் தான் இந்நாள்.

சித் என்றால் மனம் என்றும் குப்த என்றால் மறைவு என்றும் பொருள். மனிதர்களின் மனதில் மறைந்திருக்கும் பாவ எண்ணங்களையும், மனதார செய்யும் நல்ல செயல்களின் புண்ணியத்தையும் கவனித்து எழுதி வைக்கிறார் என்பது நம்பிக்கை.


மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு தரிசனம் தருவது சித்ரா பௌர்ணமி அன்று தான். கன்யாகுமரியில் அன்று மட்டும் ஒரே நேரத்தில் சூரியன் மறைவதையும் சந்திரன் தோன்றுவதையும் கண்டு மகிழலாம்.
 

lakshmi

Active member
Staff member
#20
புனித வெள்ளி

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த இயேசுவின் சிலுவைச் சாவினைக் கிறிஸ்துவர்கள் ஒவ்வொரு ஆண்டும் பெரிய வெள்ளியன்று சிறப்பாக நினைவு கூறுகின்றார்கள். இத்தினமானது தூயவெள்ளி,நீண்ட வெள்ளி, சோகவெள்ளி,பெரிய வெள்ளி புனித வெள்ளி என இடத்துக்கு இடம் வேறு பெயர்களை கொண்டுள்ளது.


ஆண்டவருடைய திருப்பாடுகளின் வெள்ளி என்பது கிறிஸ்துவர்கள் இயேசு கிறிஸ்து அனுபவித்த துன்பங்களையும் சிலுவைச் சாவையும் நினைவு கூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுகின்ற விழா ஆகும். கத்தோலிக்கர் இந்நாளில் நோன்பிருந்து வெள்ளாடை அணிந்து சிலுவைப்பாதையில் பங்கெடுப்பது வழக்கமாகும்.