தெரிந்து கொள்வோம்

lakshmi

Active member
Staff member
#41
அக்னி நட்சத்திரம்

மே 4-ம் தேதி ஆரம்பித்த அக்னி நட்சத்திரம் இன்றுடன்,(29.05.19)முடிவடைகிறது. அக்னி நட்சத்திரம் எப்படி வந்தது என்று புராணக் கதை ஒன்று சொல்கிறார்கள்.

யமுனை நதிக்கரையில் இருந்த காண்டவ வனத்தில் சுவேதசி என்ற மன்னருக்காக துர்வாச முனிவர் நூறாண்டுகள் தொடர்ந்து யாகம் ஒன்றை நடத்தினார். அந்த யாகத்தின் விளைவாக அதிகப்படியான நெய்யை உட்கொள்ளும் நிலைக்கு ஆளானார் அக்னி தேவர். அதனால் அவரை மந்த நோய் தாக்கியது. அந்த நோய் நீங்குவதற்கு தகுந்த மூலிகைச் செடிகள் உள்ள காண்டவ வனத்தை எரித்த நாள்களே அக்னி நட்சத்திர நாட்களாக புராணத்தில் கூறப்பட்டுள்ளது. காட்டில் எரிந்த அந்த அக்னி முதல் ஏழு நாட்கள் மெதுவாக எரிந்து அடுத்த ஏழு நாட்கள் வேகமாக எரிந்து கடைசி ஏழு நாட்கள் வேகம் குறைந்து பின் அடங்கியது. என்பது புராணக் கதை, அக்னி நட்சத்திர நாளில் சந்திரனும் பூமியும் சூரியனுக்கு சற்று அருகே இருப்பதால் தான் என்கிறது நம் அறிவியல்.