Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript தெரிந்து கொள்வோம் | SudhaRaviNovels

தெரிந்து கொள்வோம்

lakshmi

Active member
May 9, 2018
397
54
43
நோய் தீர்க்கும் பூக்கள்

முருங்கைப் பூ : பித்தம் நீக்கும், வாந்தி குணமாகும். கண்கள் குளிர்ச்சி அடையும்.

மாதுளம் பூ : ரத்த மூலம், பித்தம், ஏப்பம், வாந்தி குணமாகும். உடலுக்கு ஊட்டும் தரும்.

வேப்பம் பூ : நாக்கில் சுவையின்மை, ஜன்னி,மலப்புழுக்கள் தீரும்.

செம்பருத்திப் பூ : உடல் உஷ்ணம் தீரும். இதயம் வலுப்படும்.வெட்டைச்சூடு நீக்கும்.

அகத்திப் பூ : மலச்சிக்கலை விரட்டும், எலும்,பற்களை வளரச் செய்யும்.

குங்குமப்பூ : தலைவலி, கண்நோய்,காதுநோய்,ஜுரம் ஆகியவற்றை குணப்படுத்தும்.

மல்லிகைப்பூ : கபம், மயக்கம், உடல் சூடு குறையும்.
 
  • Like
Reactions: sudharavi

lakshmi

Active member
May 9, 2018
397
54
43
பாயும் சிலந்தி


தாவர இனங்களை மட்டும் உணவாக எடுத்துக் கொள்ளும் சிலந்தி வகை ஒன்றை ஐக்கிய அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். பகீரா கிப்லிங்கி எனப்படும் இவ்வகை சிலந்திகள் நடு அமெரிக்காவிலும், மெக்சிகோவிலும் வாழ்ந்து வருகின்றன.

இதுவரை கண்டறியப்பட்ட கிட்டத்தட்ட 40,000 சிலந்தி வகைகள் அனைத்தும் ஊனுண்ணி வகைகளாகும். இந்த வகை சிலந்தி தேள் வகையைச் சேர்ந்தவை. இவை 5-6 மில்லி மீட்டர் நீளமானவை.


புரதங்கள் நிறைந்த அக்காசியா வகை தாவரத்தின் குருத்துக்களையே இவை பெரும்பாலும் உண்கின்றன. தாவரங்களை மட்டுமே தேடிச் செல்லும் சிலந்தி உலகில் இதுவொன்றேயாகும்.
 
  • Like
Reactions: sudharavi

lakshmi

Active member
May 9, 2018
397
54
43
உலகின் மிகப்பெரிய முதல் விமானம்

உலகின் மிகப்பெரிய விமானம் சில மாதங்களில் தனது சேவையைத் தொடங்க உள்ளது. ஸ்டிராட் டோலாஞ்ச் என்ற பெயர் கொண்ட இந்த பிரமாண்ட விமானத்தை வடிவமைத்தவர் பால் ஆலன். இவர் பிரபல கணினி மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்டை, பில்கேட்சுடன் இணைந்து நிறுவியவர்.

பால் ஆலன் வடிவமைத்திருக்கும் இந்த விமானத்தின் இறக்கைகள் கால்பந்தாட்ட மைதானத்தை விடப் பெரியவை. அவற்றின் நீளம் 385 அடி. இரண்டு விமானி அறைகளை கொண்ட இவ்விமானம் 28 சக்ரங்கள், 6 என்ஜின்கள் உடையது.

ஒவ்வொரு என்ஜினின் எடையும் 4 ஆயிரம் கிலோ ஒவ்வொரு என்ஜினும் 6 போயிங் 747 விமானத்தின் என்ஜின் திறனுக்கு சமமாக உள்ளது. இது பெரிய விமானம் என்பதால் 2 விமான உடற்பகுதிகள் உள்ளன. இந்த விமானத்தின் மொத்த எடை 2 லட்சத்து 26 ஆயிரம் கிலோ, 6 லட்சம் கிலோ எடையை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டது
 
  • Like
Reactions: sudharavi

lakshmi

Active member
May 9, 2018
397
54
43
சித்ரா பௌர்ணமி

மனிதர்களின் பாவ புண்ணியங்களை எழுதி வைத்து அதற்கேற்றார்ப் போல், அவர்களின் இறப்பையும் அதன் பின் அவர்கள் வசிக்கப் போகும் சொர்க்கம் - நரகம் ஆகியவற்றை நிர்ணயிக்கும் பெரிய பொறுப்பில் உள்ள எமதர்மனின் உதவியாளரான சித்திரகுப்தனை வழிபடும் நாள் தான் இந்நாள்.

சித் என்றால் மனம் என்றும் குப்த என்றால் மறைவு என்றும் பொருள். மனிதர்களின் மனதில் மறைந்திருக்கும் பாவ எண்ணங்களையும், மனதார செய்யும் நல்ல செயல்களின் புண்ணியத்தையும் கவனித்து எழுதி வைக்கிறார் என்பது நம்பிக்கை.


மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு தரிசனம் தருவது சித்ரா பௌர்ணமி அன்று தான். கன்யாகுமரியில் அன்று மட்டும் ஒரே நேரத்தில் சூரியன் மறைவதையும் சந்திரன் தோன்றுவதையும் கண்டு மகிழலாம்.
 

lakshmi

Active member
May 9, 2018
397
54
43
புனித வெள்ளி

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த இயேசுவின் சிலுவைச் சாவினைக் கிறிஸ்துவர்கள் ஒவ்வொரு ஆண்டும் பெரிய வெள்ளியன்று சிறப்பாக நினைவு கூறுகின்றார்கள். இத்தினமானது தூயவெள்ளி,நீண்ட வெள்ளி, சோகவெள்ளி,பெரிய வெள்ளி புனித வெள்ளி என இடத்துக்கு இடம் வேறு பெயர்களை கொண்டுள்ளது.


ஆண்டவருடைய திருப்பாடுகளின் வெள்ளி என்பது கிறிஸ்துவர்கள் இயேசு கிறிஸ்து அனுபவித்த துன்பங்களையும் சிலுவைச் சாவையும் நினைவு கூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுகின்ற விழா ஆகும். கத்தோலிக்கர் இந்நாளில் நோன்பிருந்து வெள்ளாடை அணிந்து சிலுவைப்பாதையில் பங்கெடுப்பது வழக்கமாகும்.
 
  • Like
Reactions: sudharavi