தொடரும் உன் நினைவுகள் - கதை திரி

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,552
1,107
113
அத்தியாயம் -20

பத்த்ரனின் முயற்சிகள் ஒவ்வொன்றும் தோல்வியடைய, நவபாஷான லிங்கத்தை எடுக்கவில்லை என்றாலும் அவர்களை அழித்து விட வேண்டும் என்றெண்ணி தனது மொத்த சக்திகளையும் உபயோகிக்க ஆரம்பித்தான்.

விக்கிரம்னுக்கோ விடிவெள்ளி வரும் நேரம் நெருங்குகிறது, அதற்கு முன்னே அருவியின் அருகே செல்ல வேண்டும் என்கிற எண்ணம் உதயமாக, ரத்னாவிடம் திரும்பியவன் “ரத்னா! நான் இவனை கவனித்துக் கொள்கிறேன். நீ அருவியிடம் சென்று லிங்கத்தை எடுப்பதற்கு வன பத்ரகாளியிடம் அனுமதி கேள்” என்றான்.

சிந்தனையுடன் அவனைப் பார்த்தவள் “தங்களால் அவனை சமாளிக்க முடியுமா பிரபோ?” என்றாள்.

தனது கரத்துடன் இணைத்திருந்த அவளது கரத்தை அழுந்தப் பிடித்தவன் குறுநகையுடன் “பயம் வேண்டாம் ரத்னா...நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று கூறி அவளை அங்கிருந்து போகச் செய்தான்.

மேகக் குடையைத் தாண்டி பத்ரனின் முன்பு சென்று நின்ற விக்கிரமன் தனது முழு உயரத்திற்கும் நிமிர்ந்து நின்று “பத்ரா! இப்பொழுதாவது விழித்துக் கொள்! செய்த தவறுகளை எண்ணி மனம் திருந்தி மன்னிப்புக் கேள்! உன்னை விட்டு விடுகிறேன்” என்றான்.

தன் முன்னே நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நிற்பவனை பார்த்த பத்ரன் காடே அதிர சிரித்து “சிறுவனே! எனக்கு நீ மன்னிப்பு அளிக்கிறாயா? ரத்னாவை என்னிடம் அளித்து விட்டு ஓடிப் போய் விடு” என்று மிரட்டினான்.

“என்னை மீறி அவள் மீது உன் சுண்டு விரல் கூட பட முடியாது பத்ரா” என்றவனை பலமாக வீசிய காற்று தூக்கி அந்தரத்தில் நிற்க வைத்தது.

அதக் கண்டு பலமாக சிரித்தவன் “சிறுவனே! என்னிடமே உனது வித்தையை காட்டுகிறாயா? ரத்னாவை என்னிடம் வரச் சொல்” என்றான்.

தான் நின்ற இடத்திலிருந்தே பத்ரனின் மீது தனது மந்திரத்தை பிரயோகிக்க, அடுத்த நிமிடம் அவன் கீழே உருண்டு கொண்டிருந்தான். அதைக் கண்டு சிரித்தபடி கீழே இறங்கி வந்த விக்கிரமன் “ஏழு ஜென்மங்களுக்கு முன்பு பார்த்த விக்கிரமன் அல்ல இவன்! எனது எண்ணங்கள் என்னை வழி நடத்தி வெற்றிக்கு அடிபோடுகிறது. உன்னை நீ மாற்றிக் கொள்” என்றான்.

இவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ள, ரத்னா மெல்ல அருவியை நோக்கி முன்னேறினாள். விண்ணிலிருந்து வெள்ளியை உருக்கி ஊற்றியது போன்று, நிலவின் ஒளியில் ஊற்றிக் கொண்டிருந்த அருவியின் அருகே சென்று நின்றவள் இரு கை கூப்பி “தாயே! வன தேவதை! இங்கிருக்கும் பாஷான லிங்கத்தை எடுப்பதற்கு வழி காட்டுங்கள்” என்று கண் மூடி வேண்டினாள்.

சற்று நேரம் அருவியின் சப்தத்தை தவிர அங்கு எதுவுமில்லை. திடீரென்று பாறைகள் நகரும் ஓசை காடே அதிரும்படி கேட்டது. எதிரே ஊற்றிக் கொண்டிருந்த அருவியின் நடுவே பாறைகள் நகர்ந்து வழி விட்டிருந்தது.

அதைக் கண்டு வன பத்ரகாளிக்கு நன்றியைக் கூறிக் கொண்டு அருவியை நோக்கி நகர ஆரம்பித்தாள். விக்கிரமனும், பத்ரனும் சண்டையிட்டுக் கொண்டிருக்க, அருவியின் நடுவே பாறை அசைந்து இடம் கொடுத்ததை அறிந்து கொண்டவன், விக்கிரமனை விடுத்து ரத்னா இருந்த பக்கம் பாய்ந்தான்.

அருவியின் பக்கம் சென்று கொண்டிருந்தவளின் அருகே சென்று அவளது கரங்களைப் பற்றிக் கொண்டு வேகமாக அருவியினுள் பாய முயற்சித்தான். அவனது கரம் தனது மேனியில் பட்டதுமே உடல் இறுகி போனவள், அடுத்த நிமிடம் அவனை தூக்கி வீசி இருந்தாள்.

விழிகளை பெரிதாக்கி உருத்து விழித்தவள் விக்கிரமன் “விக்கிரமரே! அவனது உடலின் பாகங்கள் ஒவ்வொன்றையையும் கிழித்து திசைக்கொன்றாக வீசுங்கள். அவனது தலையைக் கிள்ளி அனலில் இடுங்கள். இதை எல்லாம் முடித்து விட்டு வாருங்கள். நான் தங்களுக்காக அங்கே காத்திருக்கிறேன்” என்று கூறி விட்டு விறுவிறுவென்று அருவியின் உள்ளே நுழைந்தாள்.

அவள் கூறிச் சென்றதும் அடுத்த நிமிடம் விக்கிரமனின் உருவம் கிடுகிடுவென்று உயர ஆரம்பித்தது. காட்டையே அடைத்துக் கொண்டவன் போல் நின்றிருந்தவன் பத்ரனை பிடித்து தனது இரு விரல்கால் தூக்கினான்.

அவனிடமிருந்து விடுபட்ட பத்ரன் துள்ளி குதித்து தனது உருவத்தையும் பெரிதாக்கி விக்ரமனின் எதிரே நின்றவன் அவனிடம் கடுமையாக சண்டயிட ஆரம்பித்தான். தன் பெற்ற சித்திகளை எல்லாம் அவனுக்கு எதிராக உபயோக்கிக்க, அதை எல்லாம் தூசி போல தட்டினான் விக்கிரமன்.

ஒரு கட்டத்திற்கு மேல் பத்ரனின் கரங்களைப் பிடித்து உடலிலிருந்து பியித்து எறிந்தான். அடுத்து கால்கள், உடலை இரு கூறுகளாக்கி திசைக்கொன்றாக வீசி எறிந்தவன், மீதமிருந்த தலையை எடுத்துக் கொண்டு பத்ரன் வளர்த்த ஹோம குண்டத்திற்கு சென்றான்.

அப்போதும் பத்ரனின் தலையானது “விக்கிரமா! நான் அழிவே இல்லாதவன்! எனது உயிர் இவ்வாறெல்லாம் போகாது” என்றுரைத்தான்.

இவை எல்லாம் நடந்து கொண்டிருக்க, அங்கே மரத்தின் பின்னே நடந்து கொண்டிருந்தவைகளை பார்த்துக் கொண்டிருந்த சுரேஷிற்கு மயக்கம் வரும் போலிருந்தது. தன்னைச் சுற்றி என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. ஏதோ மேஜிக் ஷோவிற்குள் நுழைந்ததை போன்ற உணர்வை கொடுத்தது.

ஹோம குண்டத்தின் முன் அவனது தலையை நீட்டியவன் “உனது உயிரின் ரகசியத்தை நானறிவேன் பத்ரா” என்றவன் கண்களை மூடி “நந்திவர்மா! நான் இங்கே இந்த தலையை போடும் நேரம், அவனது உயிர் பறவை அங்கே அந்த சிலையை விட்டு பிரிந்திருக்க வேண்டும்” என்றான்.

அதைக் கேட்டதும் பதறி போன பத்ரனின் தலை “வேண்டாம் விக்கிரமா! என்னை விட்டு விடு” என்று கெஞ்சியது.

அதே நேரம் விக்கிரமனின் உடலில் இருந்து பிரிந்த நந்திவர்மனின் ஆன்மாவானது ஒளியின் வேகத்தை விட, பல மடங்கு வேகத்துடன் கல் மண்டப சிவன் கோவிலுக்குச் சென்று அங்கிருந்த கிளியினுள் புகுந்தது. அடுத்து அங்கிருந்து கிளியானது பத்ரனின் குகை நோக்கி பறந்து சென்றது. அங்கு வைக்கப்பட்டிருந்த காளியின் சிலை அருகே சென்ற கிளி, காளியின் நெஞ்சில் பதிக்கப்பட்டிருந்த ரத்தினத்தை தனது அலகால் ஓங்கி உடைத்து. அந்த ரத்தினம் உடைந்து அதிலிருந்து புகை மண்டலம் எழுந்து காற்றோடு கலந்தது.

அங்கே விக்கிரமனும் பத்ரனின் தலையை ஹோம குண்டத்தில் போட்டிருந்தான். குகையில் எழுந்த புகையும், ஹோமத்திலி எழுந்த புகையும் ஒன்றோடு ஒன்றாக கலந்து காற்றில் மறைந்தது.

பத்ரனின் குரல் மட்டும் அசிரீரியாக விக்கிரமனை அடைந்தது.

“இப்போது நீ ஜெயித்திருக்கலாம் விக்கிரமா! நீ எங்கிருந்தாலும் உன்னைத் தேடி நான் வருவேன்” என்றது இடி போல.

பெரும் நிம்மதியுடன் காதிலிருந்த குண்டலங்கள் ஆட, இதழில் சிறு புன்னகையுடன் தனது கம்பீரமான நடையுடன் அருவியை நோக்கிச் சென்றான்.

மரத்தின் பின்னே நின்றிருந்த சுரேஷ் அவனது கம்பீரத்தையும், தேஜஸையும் ரசித்தான். எதிரே சென்று கொண்டிருப்பவன் தான் ரிஷிவர்மன் என்பதையும் அறிந்து கொண்டான். இதைத் தான் சொன்னாரா அந்த சித்தர்? என்று சிந்தித்தபடி மேலும் சற்று முன்னேறி அருவியை பார்க்க ஆரம்பித்தான்.

அருவியின் அருகே சென்ற விக்கிரமன் ஒரே பாய்ச்சலில் அருவியினுள் நுழைந்து உள்ளே சென்றான். அங்கிருந்த குகையினுள் சற்று தூரம் நடந்தவன், ஓரிடத்தில் ரத்னா இரு கைகளையும் கூப்பி எதிரே இருந்த லிங்கத்தை தொழுது கொண்டிருப்பதை கண்டான்.

அவளருகே சென்றவனின் விழிகள் லிங்கத்தை ஆராய்ந்தது. லிங்கத்தின் மீது ஆறடி நீளமிருக்கும் கருநாகமொன்று படமெடுத்து கொண்டு இவர்களை பார்த்தது சீறிக் கொண்டிருந்தான். சின்னஞ்சிறிய லிங்கம் அந்த குகைக்கே வெளிச்சத்தை அளித்துக் கொண்டிருந்தது.

அருவியின் நடுவே இருந்த அந்த லிங்கத்திற்கு தினமும் யாரோ பூஜை செய்திருப்பதைப் போல, மலர்கள் கொட்டிக் கிடந்தது. தெய்வீகமாக இருந்த அந்த சூழ்நிலையில் ரத்னாவின் குரல் கலைத்தது.

“ஐயா சிவனே! ஜென்ம ஜென்மங்களாக உங்களை அடைவதற்காக பல போராட்டங்களை மேற்கொண்டோம். இதோ இன்று அனைத்தையும் வென்று உங்கள் முன்னே நிற்கின்றோம். தயை கூர்ந்து தங்களின் இருப்பிடம் செல்ல, எங்களிடம் வாருங்கள்” என்றாள்.

விக்கிரமனும் அவளுடன் இணைந்து நின்று “ஆம்! பிரபோ! தாங்கள் எங்களுடன் வர வேண்டும்” என்று கண்களை மூடி பிரார்த்தித்தான்.

அடுத்த நிமிடம் அந்த கருநாகம் அங்கிருந்து சரசரவென்று இறங்கி வந்து ரத்னாவிடம் வந்து மலர் ஒன்றை அவள் கையில் வைத்துவிட்டு நகர்ந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துவிட்டு எதிரே இருந்த லிங்கத்தைப் பார்க்க, லிங்கத்தின் நெற்றியிலிருந்து ஒளி ஒன்று குகை எங்கும் பரவ ஆரம்பித்தது. விக்கிரமன் தன்னிடமிருந்த கமடலத்திலி இருந்த நீரை லிங்கத்தின் மீது தெளித்து வணங்கினான்.

அந்நேரம் அசிரீரி “விக்கிரமா! எனை எடுத்து ரத்னாவின் கரங்களில் வை! இருவரும் ஒன்றாக சென்று கல் மண்டபத்தில் எனை பிரதிஷட்டை செய்யுங்கள்” என்றது.

இருவரும் முன்னே சென்று நிற்க, விக்கிரமன் லிங்கத்தை எடுத்து ரத்னாவின் கரங்களில் வைக்க, அவளது மேனியில் ஒரு தேஜஸ் வந்தது. விக்கிரமன் உடலிலும் ஒருவித புதிய உணர்வொன்றை உணர்ந்தான். இருவரும் லிங்கத்துடன் நடந்து அருவியை விட்டு வெளியேறி வனத்தினுள் நடக்க ஆரம்பித்தனர்.

அவர்களை வழிமறிக்க நினைத்த சுரேஷை தடுத்த முனியன் “இளவரசரும், இளவரசியும் கல் மண்பம் செல்லும் வரை யாரும் இடைமறித்தால் அந்த நிமிடமே மண்ணாகப் போவது உறுதி!” என்றான்.

அவனை முறைத்த சுரேஷ் “என்ன மிரட்டுறியா?” என்று கூறி முன்னே நடந்தவனின் கால்கள் இழுத்துக் கொண்டது.

அதைக் கண்டு சிரித்த முனியன் “அவர்களை தடுக்க நினத்ததற்க்கே இந்த கதி” என்றான்.

எதுவும் பேசாமல் அவர்களின் பின்னே நடக்க ஆரம்பித்தனர்.

பல காத தூரம் நடந்து கல் மண்டபம் அருகே செல்லும் போது நன்றாக விடியத் தொடங்கி இருந்தது. விடியலின் நேரம் நடந்து சென்ற இருவரையும் பார்க்கும் போது சிவனும், பார்வதியும் மண்ணில் இறங்கி வந்தது போலிருந்தது.

அவர்கள் கல் மண்டபத்தின் அருகே செல்லும் போது இருளர்கள் முழுவதும் அங்கு குழுமி இருந்தனர். அடுத்து ரத்னாவதியின் வம்சாவழியினரும் கூடி இருந்தனர். அவர்களின் நடுவே கருணாகரனும், உதயணனும் நின்றிருந்தனர்.

கையில் நவபாஷான லிங்கத்துடன் வந்து கொண்டிருந்தவர்களைப் பார்த்ததும் அனைவரும் மண்ணில் விழுந்து நமஸ்கரித்து “ஓம் நமசிவாய!” என்று சொல்ல ஆரம்பித்தனர்.

அவர்கள் கூறியது வனமெங்கும் ஒலிக்க ஆரம்பித்தது. ஆலயத்தின் மணிகள் தானாக ஒலிக்க ஆரம்பித்தது. அங்கு குடமுழுக்கு நடப்பது போன்ற உணர்வினை அளித்தது. இருவரும் ஒன்று போல பாதங்களை வைத்து உள்ளே நுழைய, இருவரின் கழுத்திலும் எங்கிருந்தோ மாலைகள் வந்து விழுந்தது. மேல தாளங்கள் இசைக்க, கணவன், மனைவியாக கருவறைக்குள் நுழைந்து கையிலிருந்த லிங்கத்தை வைக்க, அது அப்படியே பொருந்திக் கொண்டது.

லிங்கம் வைக்கப்பட்ட அந்த நொடி விண்ணில் பல ஜாலங்கள் நிகழ்ந்தது. கருவறையில் நின்றவர்களின் மீது பூமாரி பொழிய, இறைவனை வழிப்பட்டு தம்பதி சமேதராக கருவறையை விட்டு வெளியே வந்தனர்.

வெளியில் காத்திருந்த மக்கள் “விக்ரம ராஜா வாழ்க! ரத்னாவதி தேவியார் வாழ்க!” என்று முழக்கமிட்டனர்.

அவர்களின் முழக்கத்தில் தனதருகே நின்றவளைப் பார்த்தவனின் விழிகளில் அத்தனை காதல். ரத்னாவதியின் முகத்திலும் கம்பீரத்தை மீறி, சிறு துளி நாணம் வந்தமர்ந்து கொண்டது.

சூரிய ஒளி காட்டின் அடர்த்தியை மீறி கிழித்துக் கொண்டு உள்ளே வர, விக்கிரமன் மீதும், ரத்னாவதியின் மீது அந்த ஒளி விழ, இருவரும் ஒன்று போல மயக்கத்தில் வீழ்ந்தார்கள். அவர்கள் அப்படி விழுவார்கள் என்று காத்திருந்ததைப் போல மக்கள் உடனடியாக ஓடிச் சென்று அவர்களைத் தாங்கிக் கொண்டார்கள்.

அவர்களை தங்கள் குடிலுக்கு எடுத்துச் சென்று படுக்க வைத்துவிட்டு, அவர்களின் மயக்கத்தை தெளிவிக்க முயற்ச்சிக்கும் நேரம், அவர்களின் ஆடை அணிகலன்கள் அனைத்தும் மாறி, அங்கு ரிஷியும், சிந்துவும் படுத்திருந்தார்கள்.
 
  • Love
Reactions: Abirami Mahi

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,552
1,107
113
அத்தியாயம் – 21

இருளர்களின் உதவியோடு சுரேஷ் இருவரையும் அங்கிருந்து ரிஷிவர்மனின் அரண்மனைக்கு அன்று மாலையே கொண்டு வந்திருந்தனர். இருவரும் மயக்க நிலையிலேயே தான் இருந்தனர். பல ஜென்ம கடமைகளை நிறைவேற்றிய நிம்மதியால் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்.

சுரேஷும், கருணாகரனும் நடந்த அனைத்தையும் மகேந்திரனிடம் தெரிவிக்க, அவர் அதிர்ந்து போய் அமர்ந்திருந்தார். இந்திராவோ கண்கள் கலங்க “அப்போ எல்லாவற்றிற்கும் என் மாமியாரும் ஒரு காரணமா?” என்றார்.

கருணாகரன் அவரை திரும்பிப் பார்த்து “ஆம் தாயே! அவர் பத்ரனின் தமக்கை. தங்கள் புதல்வனை தடுப்பதற்காகவே இங்கு வந்திருக்கிறார்” என்றார்.

நடந்தவைகளை கேட்டு தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டார் மகேந்திரன். சிந்துவின் பெற்றவர்களுக்கு தகவல் கொடுத்திருக்க, அவர்களும் வந்து சேர்ந்திருந்தனர்.

அவர்களிடமும் அனைத்தையும் கூற, நம்ப முடியாமல் இருவரையும் சந்தேகமாக பார்த்த சிந்துவின் அன்னை “என்னங்க! நாம சிந்துவை இங்கிருந்து கூட்டிட்டு கிளம்புவோம்” என்றவர் சுரேஷை பார்த்து “எங்களுக்கு ஒரு ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து கொடுங்க. நாங்க அவளை கூட்டிட்டு போயிடுறோம்” என்றார்.

அவரின் கூற்றில் பயந்து போன கருணாகரன் அவசரமாக எழுந்து நின்று “தாயே தவறு செய்யாதீர்கள்! அவர்கள் இருவரும் பல ஜென்மங்களுக்குப் பிறகு இணைந்துள்ளார்கள். இனி, எவராலும் அவர்களை பிரிப்பது சாத்தியமற்றது” என்றார்.

அதைக் கேட்டு முகத்தை சுளித்தவர் கணவரிடம் திரும்பி “நான் சொன்னதை செய்ங்க. உடனே நாம இங்கிருந்து கிளம்பியாகனும்” என்றார்.

சுரேஷோ வேறுவழியின்றி தனக்கு தெரிந்த மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்சிறகு ஏற்பாடு செய்து தர, சிந்துவை அதில் ஏற்றி அனைவரிடமும் சொல்லிக் கொண்டு அங்கிருந்து சென்னையை நோக்கி பயணப்பட ஆரம்பித்தனர்.

சிந்துவின் உடலில் எவ்வித அசைவும் இல்லை. கோமாவில் இருப்பதை போல இருந்தாள். ரிஷியும் அவனது அறையில் அப்படியே தான் இருந்தான். சிந்து செல்லும் வண்டி கேரளா எல்லையைத் தாண்டும் நேரம் ரிஷியின் உடலில் மெல்லிய அசைவு தெரிந்தது.

அவனது பாட்டியைப் போன்றே பட்டென்று எழுந்தமர்ந்தான். அவன் எதிரே அமர்ந்து அவனையே பார்த்துக் கொண்டிருந்த இந்திரா அவன் எழுந்தமரவும் வேகமாக அருகில் சென்று “மோனே!” என்றார்.

அன்னையை நிமிர்ந்து பார்த்தவனின் விழிகளில் அத்தனை அன்பு. பிறந்ததிலிருந்து தனது அன்பை வெளிப்படுத்தாதவன் “அம்மே!” என்று அவரின் கரங்களை இறுகப் பற்றிக் கொண்டான்.

அவ்வளவு தான் அடக்கி வைக்கப்பட்டிருந்த கண்ணீர் அவரது கன்னங்களை நனைக்க “இந்த நாளுக்காக எத்தனை ஏங்கி இருந்தேன் தெரியுமா ரிஷி. உன் பார்வையில், செயலில் என்னிடம் ஒரு அந்நியத்தன்மை தெரியும். அதைக் கண்டு பல நாட்கள் உறக்கமின்றி தவித்திருக்கிறேன்” என்றார்.

மெல்ல படுக்கையிலிருந்து எழுந்தவன் அன்னையை அணைத்துக் கொண்டு “எண்ட அம்மே அழக் கூடாது” என்று கண்ணீரைத் துடைத்து விட்டான்.

அப்போது அவனது விழிகள் அந்த அறையை நோட்டமிட, அங்கு சிந்து இல்லாததை உணர்ந்தவன் “அந்த பொண்ணு?” என்றான் சற்றே தயங்கிய குரலில்.

அதைக் கேட்ட இந்திரா “அவங்க அப்பா அம்மா கூட்டிட்டு போயிட்டாங்க ரிஷி” என்றார் சாதரணமாக.

அதுவரை இருந்த இயல்பு மாறி அவனது முகத்தின் தசைகள் இறுக ஆரம்பித்தது. கண்களை அழுந்த மூடித் திறந்தவனின் வதனம் கோபத்தின் சாயலை பூசிக் கொண்டது.

“என் மனைவியை அவர்கள் யார் அழைத்துச் செல்ல?” என்றான்.

இந்திராவிற்கு அவனது பேச்சு புரியாமல் “என்ன சொல்ற ரிஷி? அவங்க பெண்ணை அவங்க கூட்டிட்டு போறாங்க” என்றார்.

அவனது மூச்சுகள் கோபத்தோடு சர்பத்தின் மூச்சாக சீறலோடு வர, வேகமாக அறையை விட்டு வெளியேறியவன் கார் சாவியை எடுத்துக் கொண்டு ஒரே பாய்ச்சலாக காரில் அமர்ந்து பறக்க விட்டான். அரண்மனை வாயிலை தாண்டி சீறிப் பாய்ந்தது அவனது கார்.

வெளியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தவர்கள் திகைத்து நிற்க, கருணாகரன் இதழில் மலர்ந்த புன்னகையுடன் “அரசர் அரசியைத் தேடிச் சென்று விட்டார்” என்றார்.

“என்ன சொல்றீங்க?” என்றார் மகேந்திரன் பதட்டமாக.

“கவலைப்படாதீர்கள்! விரைவில் அரசியை அழைத்துக் கொண்டு தான் திரும்புவார். நீங்கள் உலகறிய அவர்களுக்கு திருமண ஏற்பாடுகளை கவனியுங்கள். ரத்னாவதி தேவி இல்லாமல் அவர் இல்லை” என்றார்.

ரிஷிவர்மனின் வேகம் எதிரே சென்ற கார்களை எல்லாம் திகைக்க வைத்தது. சிந்து சென்ற ஆம்புலன்ஸ் சென்னையின் எல்லையை நெருங்கிக் கொண்டிருந்தது. இவனோ கேரள எல்லையில் இருந்தான். ஆம்புலன்சில் இருந்த சிந்துவின் உடலில் மாற்றங்கள் ஏற்படலாயிற்று. மெல்ல அசைந்து எழுந்தவள் தான் பயணம் செய்து கொண்டிருக்கிறோம் என்பதை அறிந்து அன்னையைப் பார்த்து “எங்கம்மா போறோம்?” என்றாள்.

மகள் எழுந்ததில் உற்சாகமானவர் “நம்ம வீட்டுக்குத் தான் போறோம் சிந்து” என்றார்.

தான் மட்டுமே ஆம்புலன்சில் இருப்பதை கண்டவள் “ரிஷி எங்கே?” என்றாள்.

“அது யார்?”

சட்டென்று எதையும் யோசிக்காது “என் கணவர்” என்று விட்டாள்.

அதைக் கேட்டு அதிர்ந்து போன சிந்துவின் அன்னை “வாயிலையே போட்டேன்னா..பேசாம படு. உன்னை வேலைக்கு அனுப்பினதே தப்பு” என்று பாய்ந்தார்.

ஆனால் சிந்துவோ பட்டென்று இருக்கையிலிருந்து எழுந்தவள் தனது படுக்கையின் கீழே வைக்கப்பட்டிருந்த ஒரு இரும்பு கம்பியை எடுத்து டிரைவரின் தலையருகே வைத்து “மரியாதையா வண்டியை திருப்பு. நாம அந்த அரண்மனைக்கு திரும்பி போகணும்” என்றாள்.

அதில் அதிர்ந்த அவளது அன்னையும், தந்தையும் “என்ன பண்ற சிந்து?” என்று அலறினார்கள்.

அவளோ “நான் உங்களின் மகள் தான். ஆனால் ஏழு ஜென்மங்களாக எனது நாயகனை கைப்பிடிக்க காத்திருந்து இந்த ஜென்மத்தில் அவரின் கரங்களால் பொன் தாலியை பூட்டிக் கொண்டிருக்கிறேன். எங்களின் திருமணம் லிங்கேஸ்வரனின் தலைமையில் நடை பெற்றது. இந்த ஜென்மத்து தாய் தந்தையாக இருந்தாலும் அதை மறுக்க தங்களுக்கு அதிகாரம் கிடையாது” என்றாள் கம்பீரமாக.

அவளின் மிரட்டலின் பேரில் டிரைவர் வண்டியை திருப்பி இருக்க, வந்த பாதையிலேயே பயணிக்க ஆரம்பித்திருந்தது. சிந்துவின் தாயும், தந்தையும் அவளது கம்பீரமான பேச்சிலும், நடவடிக்கையிலும் அதிர்ந்து போய் அமர்ந்திருந்தனர்.

சரியாக பாதி வழியில் இரு வாகனங்களும் ஒன்றை ஒன்று சந்தித்துக் கொண்டன.

அவர்களின் ஆம்புலன்சை கண்டதும் சரேலென்று அவனது கார் ப்ரேக் அடித்து நின்றது.

காரின் கதவைத் திறந்து கொண்டு இறங்கிய ரிஷிவர்மன் ராஜ நடையுடன் ஆம்புலன்சை நோக்கி நடக்க ஆரம்பித்தான். அவனது காரை கண்ட சிந்துவும் ஆம்புலன்ஸ் கதவைத் திறந்து கொண்டு கம்பீரமும், நாணமும் சேர ஒயிலாக நடந்து அவன் முன்னே சென்று நின்றாள்.

இருவரின் பார்வைகளும் ஒன்றை ஒன்று உரசிக் கொண்டன.

அவனது நீலநிற விழிகள் அவளை மையலுடன் பார்த்து “என்னை விட்டு சென்று விடுவாயா ரத்னா?” என்றான் குழைவான குரலில்.

அவனை நிமிர்ந்து பார்த்த சிந்துவின் இதழ்கள் குறுநகையை பூசிக் கொள்ள “என் நினைவுகளும், நானும் உங்களை தொடர்ந்து கொண்டே இருப்போம் பிரபோ” என்றாள்.

தங்கள் பின்னே நின்று கவனித்துக் கொண்டிருக்கும் தாய், தந்தையைக் கூட கவனிக்காது அவனது கரம் பற்றிக் கொண்டு இருவருமாக அவனது காருக்கு சென்றார்கள். தோளோடு தோள் உரச, இருவரின் மனதிலும் காலம் காலமாக காத்திருந்து கிடைத்த அன்பை வெளிப்படுத்தும் நேரத்திற்காக காத்துக் கொண்டிருந்தார்கள்.

அப்போது சிந்துவின் தாய் தந்தை அருகே வந்து நின்ற அந்த கிழ சித்தர் “அவனுக்காக அவள், அவளுக்காக அவன் என்று படைக்கப்பட்டவங்க. அவர்கள் தெய்வீக குழந்தைகள். போ! அவர்களின் பின்னே போ! “ என்று கத்திவிட்டு அங்கிருந்து சென்றார்.

பல ஜென்மங்களாக காத்திருந்த அவர்கள் தங்களின் வாழ்வு சிறக்க தங்கள் பயணத்தை தொடர்ந்தார்கள்...

உயிர் தீண்டிய உறவை

மெய் தீண்டாது போனாலும்

காலங்கள் பல கடந்து

காத்திருப்பேன் உனக்காக!
 

bselva

Active member
Sep 19, 2018
131
28
28
இந்த மாதிரி மாயம், தந்திரம்,முற்பிறவி இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை, இருந்தாலும் கதை விறுவிறுப்பாக சென்றது.இந்த பிறவியில கதாநாயகன்,நாயகி ஒண்ணுமே செய்யலியேன்னு கொஞ்சம் வருத்தம்.சிந்துவும், ரிஷியும் பொம்மைகள் மாதிரி தான் கதையில் பயணித்த உணர்வு.அதுவும் இன்றி நிறைய கதாபாத்திரங்கள் கதையில் உலவியது போல் தோன்றியது.
மற்றபடி கதை சொன்ன பாங்கு,மொழி நடை, தொய்வின்றி கொண்டு சென்ற விதம் அழகு.
வாழ்த்துக்கள். இன்னும் நிறைய அழகான கதைகளம் மற்றும் கதாபாத்திரங்ககளுடன் எங்களை எல்லாம் மகிழ்விக்க வேண்டும்.நன்றி.
 
  • Love
Reactions: sudharavi

Anuya

Well-known member
Apr 30, 2019
288
327
63
ஜென்மம் ஜென்மாய் தங்கள் காதலை அடைய போராடி வெல்லும் ஜோடியின் காதல் கதை.


7 ஜென்மாக அந்த பத்ரனை என்னும் அரக்கனை(பேட் பாய்) அழித்து தங்கள் காதலை அடைய வேண்டும் என்று போராடி அதுல 6 ஜென்மம் தன் இணையுடன் சேர முடியாமல் ... அந்த பத்ரனின் சூழ்ச்சியான மந்திர சக்திகள் செய்த சதியால் இறந்து... இறுதியாக இந்த கடைசி பிரவியான 7வது ஜென்மத்தில் பல போராட்டங்களை சந்தித்து இணைந்துவிட்டனர் நம்ம ரத்தினாவும் விக்ரமனும்...


தன்னோட மக்கள் தான் முக்கியம் என்றும் நீ என்னை கொன்றாலும் பரவாயில்லை எனக்கு என் நாட்டு மக்களும், என் காதலும் தான் முக்கியம் என்று இறுதி வரை போராடிய ரத்னாவின் காதல் செம... பாவம் விக்ரமன் அவன் காதலையே மறக்க வச்சி சதி பண்ணி வச்சி அவனை ரத்தினாவையே மறக்க இருந்தாங்க அவங்க... சே...


அப்புறம் ... இந்த பத்ரன் ரொம்ப ரொம்ப மோசம் ... அதுவும் அந்த ரேணுகா தேவி பாட்டி கோமாவில் இருந்து வந்ததும் அந்த நர்ஸ் பொண்ண கொல்லுமே ... ப்பா.... நானு ரொம்பவே பயந்துட்டேன் அந்த சீன்... இந்த ரெண்டும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் திருந்தமா கேட்ட ஆளவே வராங்க ... ரொம்ப பேட் பெல்லோஸ்..

அப்புறம் அந்த சிவன் குரல் கேட்கும் இடம்... அப்படியே சிலிர்த்துடுச்சி... அதுவும் அந்த 6 சக்திகளை திரட்டி வர இடம்
செம இன்டெரெஸ்டிங் ஆஹ் இருந்துச்சி சுதா மா.. அந்த தீ யாகம் பண்ணுறது... அதை தடுக்க பத்ரன் பன்ற காத்து... அவங்களை காக்க வர சாமி.. எல்லாமே really செம😍😍❤❤


அப்புறம் .. அந்த ஒவ்வொரு முன் ஜென்மதிலும் நடந்தது எல்லாம் சொல்லுறது ஷார்ட் அண்ட் ஸ்வீட்❤❤

சிந்தி, ரிஷி ஆஹ் தெரியவே இல்லை எனக்கு விக்ரமன் ரத்னா தான் புல் ஆஹ் தெரிஞ்சாங்க ரெண்டு பேரும்.. அழகு😍😍சூப்பர் சுதா மா.. second time reading😍😍❤

சிந்து(ரத்னா) ❤ ரிஷி (விக்ரமன்)
 
  • Love
Reactions: sudharavi