தோகைக்குத் தூதுவன் யாரோ

#1
"தோகைக்குத் தூதுவன் யாரோ"

தூதுவனன்றி அவன் தேவன் என அறிந்திருந்தாலும் அவனை தோகை பின்னே வரவழைத்த உமாவிற்கு பாராட்டுகள்....

நிழலும், நிஜமும் பிரிந்தால் நிகழ்காலம் நின்றுவிடுமே! அதனை ஏற்றுக் கொள்ளும் நமக்கு நிழலுகமும், நிஜ உலகமுமும் முட்டிக்கொள்ளும் கொம்பேறிகளாக இருப்பதை கண்டிடும் பொழுது ஆர்வம் கரை புரண்டோடுகிறது....

சக்தியின் தெளிவும், தைரியமும் சக பெண்டிரும் கைத்தேர்ந்திட வேண்டிய விசயங்கள். எட்டா உயரத்திலிருந்தாலும்எ
ண்ணமிட்டவளை தன்னுடையவளாக்கிட அஜய் செய்திடும் செயல்களும், அவனது உள்ளத்து உணர்வுகளும் ஒரு நிழலுகத்தை நிஜமாக்கியமை அருமையான விதம் எழுத்தாளரை பாராட்ட செய்கிறது .......

சாந்தாவும் துப்னாவும் துப்பவேண்டியவர்களே ????? மருதாணியின் பெயர் மட்டுமல்ல ,அவளது மனமும் மணம் வீசியதில் மகத்தான தோழியைக் கண்டேன் ........

வாழ்த்துகள் உமா! அருமை பொருந்திய, எளிமையான மனம் நிறைந்த கதையை படைத்தமைக்கு .....