நானே உன் சாிபாதி

#1
நானே உன் சரிபாதி

எவ்விதமான ஆர்ப்பாட்டமோ, அலட்டலோ இன்றி அழகிய எழுத்து நடையில் இனிய கதை அமைத்த ஆசிரியருக்கு பாராட்டுக்கள்...

சதாவின் அறிமுகமும், அவனது கல்யாணமும் அவனை பற்றி பரிதாபமாகவே எண்ண வைத்தது. கன்யா உடனான திருமணத்தில் சதாவின் தவறு இருப்பதாக எனக்கு சிறிதும் படவில்லை..

வீட்டினரிடம் இருந்து ஒதுங்கி இருந்தாலும் அவர்களின் பேச்சை காது கொடுத்து கேட்க கேட்பவனாக இருக்கும் சதாவிடம் தந்தை தாய் பொய் கூறாமல் அப்படிப்பட்ட சூழ்நிலையில் உனக்கு திருமணம் என்று கூறி வரவழைத்து இருந்தாலும் கண்டிப்பாக வந்து இருப்பான்....

சதாவின் திருமணத்திற்காக இவர்கள் கூறிய பொய்யால் பாதிக்கப்பட்டது கன்யாவும், சதாவும் தான்...

செய்த தவறினை இல்லை இல்லை அது தவறு என்று கூட கூற முடியாது... தங்கள் வாழ்வில் ஏற்பட்ட கடந்த கசடுகளை சரிப்படுத்த முயற்சி செய்யும்பொழுது இருவரிடையே ஏற்படும் பிணக்குகள் ஒரு அழகிய பிணைப்பாக தான் நம் கண் முன்னே காட்டுகின்றது.

கன்யாவின் கோபங்களும்,ஆத்திரங்களும் சதாவினை ஆறுதல் படுத்துவதாகவே தோன்றியது... இருவரின் பிாிதல் கடந்த புரிதல் அழகிய வண்ணமாக அமைத்திருப்பது அருமை...

மொத்தத்தில் சதாவின் நினைவுகள் சதாவும் அவனின் சரிபாதியே! படிப்பில் மூழ்கிவிடும் பிள்ளைகளை அவரது படிப்பு ஆர்வத்தை காட்டி பெருமைப்படும் பெற்றோர்கள் மனதின் நுண்ணிய உணர்வுகளை உணராமல் போவது ஏனோ என்ற கேள்வி என்னுள் எழுந்தது...

அதற்கும் கன்யா ஈடு கட்டி விட்டாள் என்றே இறுதியில் தோன்றியது...

மொத்தத்தில் நானே உன் சரிபாதி என்பதைவிட சதாவின் சகலமும் அவனது சரிபாதியே!