நினைவே நனவாகிடுவாயா - கதை திரி

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,392
896
113
ஹாய் பிரெண்ட்ஸ்,

நர்மதா செந்தில்குமார் அவர்கள் "நினைவே நன்வாகிடுவாயா" என்கிற கதையோடு நம்மோடு இணைகிறார்......
 

Narmatha

New member
Apr 2, 2018
16
0
3
ஹாய் தோழமைகளே!! உங்களை என் கதையின் மூலம் சந்திப்பதில் மகிழ்ச்சி.. இந்த தளத்தில் எழுத வாய்ப்பளித்த சுதா மேம் க்கு நன்றி..
"நினைவே நனவாகிவிடுவாயா" இது என்னுடைய இரண்டாவது கதை .. படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்
 

Narmatha

New member
Apr 2, 2018
16
0
3
...

நினைவே நனவாகிவிடுவாயா

N.S கல்வி குழுமம்.. திருச்சி நகரத்திற்கு அப்பால் சில கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் கல்லூரி....

பொறியியல் படிப்புகளுக்கான கல்லூரி ... ஆர்ட்ஸ் & சயன்ஸ் பிரிவு என்று பிரமாண்டமான கட்டிடங்களே கல்லூரியின் பழமையையும் பெருமையையும் பறைச்சாற்றியது...

இப்போது பணம் இருந்தால் படிக்காதவனை கூட சேர்த்துக் கொள்ளும் கல்லூரிகளில் இருந்து மாறுப்பட்ட ஒன்று.... படிப்பும் வேண்டும் பணமும்‌ வேண்டும் அப்போது தான் இங்கு‌ படிக்க இடம் கிடைக்கும் ... இந்த கல்லூரியில் இடம் கிடைத்தால் பெற்றவர்கள் சாதனையை நடத்தியதாய் பெருமைப்பட்டு கொள்வார்கள்...

அத்தகைய பெருமை வாய்ந்த அக்கல்லூரி

காலை வேளையில்..... பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது...

வண்ணமயமாக மாணவ மாணவிகள் இளமைக்கே உள்ள துள்ளலோடு வலம்வர அதற்கு தாங்களும் சலைத்தவர்கள் அல்ல என்பது போல் பேராசிரியர்களும் நேர்த்தியான உடை அணிந்து அவர்களுக்கே உள்ள கம்பீரத்தோடு அலுவலக அறையை நோக்கி சென்றுக் கொண்டிருக்க

பார்ப்பதற்கு மாணவியை போன்ற தோற்றத்துடனும் உடையில் பேராசிரியர் போன்றும் துள்ளலான நடையுடனும் அவளுடைய அக்மார்க் புன்னகையுடன்
அங்குள்ளவர்களின் வணக்கங்களுக்கு பதில் அளித்தவாறே அலுவலக அறையினுள் உள்நுழைந்தாள் நம் கதாநாயகி யாழ்இனியா


மாநிறத்தில் லட்சணமான வட்ட முகத்தில் சிறிய பொட்டிட்டு குங்குமமிட்டு காட்டன் சேலையில் பெண்மைக்கே உரிய மிடுக்கோடு கையொப்பமிட்டு வெளியே வந்தவளை அவள் ஆருயிர் தோழி பரிதா முறைத்துக் கொண்டிருந்தாள்...

அவளை சற்றும் கண்டுக் கொள்ளாமல் நக்கல் சிரிப்போடு சென்றவளை கண்டு இன்னும் கோபம் கொண்டு அவளை நோக்கி சென்றவள்

"ஏய் இனியா எரும.. நான் கோவமா நின்னுட்டு இருக்குறத பார்த்தும் கண்டுக்காம போற.. உனக்கு எவ்வளவு கொழுப்பு " என கோபமாய் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு பேசியவளை பார்த்து இனியாக்கு சிரிப்பு தான் வந்தது...

ஆனால் சிரித்தால் அதற்கும் தன் தோழி பொங்குவாள் என்பதால் கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கியவள் " ஏன் என் பரி செல்லம் கோவமா இருக்கு" என கொஞ்சலாய் கேட்க

"ஏன்டி... உனக்கு தெரியாதா.. இன்னைக்கு உன்னை பிங் சேரி தானே கட்டிட்டு வரச்சொன்னேன்"

(உங்க மைண்ட் வாய்ஸ் கரெக்ட் தான் .. ஏன்மா பரிதா பிங் சேலைக்கு தான் இந்த அலப்பறையா... ) என குழந்தை போல் முகம் சுளித்தவளை கண்டு இனியாவிற்கு மகிழ்ச்சியாக தான் இருந்தது...

ஏனெனில் தன்னிடம் மட்டும் தான் பரிதா இப்படி பேசுவாள் ..அதுவும் தனக்காக தான் என்பது அவள் அறிந்ததே ..

பரிதா இனியாவின் உயிர் தோழி பள்ளி பருவத்திலிருந்தே அவளோடு பயணிப்பவள்...பரிதா கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் முதுநிலை படிப்பு முடித்து பேராசிரியராய் இனியாவோடு இக்கல்லூரியிலே வேலை செய்கிறாள் .. இனியா கணக்கு பாடப்பிரிவில் முதுநிலை முடித்தவள்... பரிதாவிற்கு அவள் அம்மா மட்டுமே ... ஏற்கனவே கல்யாணம் வேண்டாம் என்று இருந்தவள் இப்போது தன் தோழியின் நிலையை கண்டு அந்த முடிவில் தீர்க்கமாக இருக்கிறாள்

இன்னும் முறைத்துக் கொண்டு இருக்கும் பரிதாவை கண்ட இனியா

"முறைச்சு பார்க்க நான் என்ன உன்‌ முறைப்பையனா.. பரி செல்லோ.. ஒரு பிங் கலருக்கு உன் மூஞ்சி பிங் ஆகலாமா .. விடு‌ பேபி‌.."

"ம்ம்ச்ச்ச்.. யாரும் என்னை கொஞ்சி‌ சமாதானப் படுத்த வேண்டாம்.." என்று முகத்தை தூக்கிவைத்துக் கொண்டவளை பார்த்து இனியா பாவமாய்‌ பார்க்க

"ஏன் இனியா .. உனக்கு பிடித்ததை யாருக்காவோ அதுவும் உன்னை கஷ்டப்படித்தி சென்றவனுக்காக வெறுக்குற.... இப்படி என் இனியா இருக்கிறத என்னால் பார்க்க முடியவில்லை டி.. " என கோபமாய் ஆரம்பித்து ஏக்கமாய் முடித்தவளை கண்டு ஒரு விரக்தி புன்னகையோடு அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள்..

ஒரு காலத்தில் பிங் நிறத்தின் மீது பைத்தியமாய் திரிந்தவள் .. கலகல பேச்சினால் அனைவரையும் தன் வசப்படுத்தியவள் .. தைரியமாய் பிரச்சினைகளை கையாள்பவள்.. இன்று அமைதியின் உருவாய் .. வெளியில் செயற்கையாய் சிரித்து ... மனதிற்குள் மருகும் தன் தோழியின் நிலை கண்டு அவனின் மேல் கோபமாய் வந்தது பரிக்கு .. இருந்தும் ஒன்றும் செய்ய இயலாத தன் கையாலகாத தனத்தை நொந்தவளாய் வகுப்பறையை நோக்கிச் சென்றாள்

இனியாவோ தன் வாழ்க்கையை பற்றிய யோசனையில் இருந்தால்

வகுப்பில் நுழைந்த பின் அவள் எல்லாவற்றையும் மறந்தவளாய் தன் வேலையான பாடம் நடத்துவதை கவனிக்க ஆரம்பித்தாள் ...

அவள் தன் வாழ்க்கையை பற்றிய கவலையை முற்றிலும் மறப்பதும் புத்துணர்ச்சியாய் உணர்வதும் வகுப்பறையில் தான்

இவளுக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளமே உண்டு மாணவர்களிடையே .. இவள் நட்பாக பழகுவதாலும் சந்தேகங்களை பொறுமையாக தீர்த்து வைப்பத்தாலும் பிடித்தமான ஆசிரியராய் வலம் வந்தால்

தன் வகுப்பு நேரத்தை முடித்தவள் மதிய இடைவெளியில் சாப்பிட ஆசிரியர்களுக்கான அறையினுள் சென்றால் .. பரித்தாவும் இணைந்து கொண்டாள் .. எப்பொழுதும் எல்லா பெண் ஆசிரியர்களும் ஒன்றாக உணவு உண்பது அவர்களுக்கு வழக்கமான ஒன்று.. அதே போல் உணவை பகிர்ந்து கொள்வதும்..

இனியாவின் சாம்பார் சாதத்தை பரிதா பகிர்ந்து கொள்ள அவளின் உணவை இவள் ருசி பார்க்க என இவர்கள் பேசி சிரித்துக் கொண்டே சாப்பிட்டு கொண்டிருக்கும் போதே பியூன் வந்து மீட்டிங் 2 மணி அளவில் நடக்க இருப்பதாகவும் அனைவரும் கண்டிப்பாக வருமாறு கூறினார்

அதை கேட்டதும் ஏன் இந்த தீடீர் மீட்டிங் என தங்களுக்குள் சல சலக்க ஆரம்பித்தனர்...

ரிசல்ட் ஒழுங்கா வரலைன்னு சம்பளத்தை பிடிக்க போறோம் என்று சொல்வதற்காக இருக்குமோ என ஒரு சிலர் யோசிக்க

இல்ல அடுத்த வருஷம் மாணாக்களை அதிகமா சேர்க்க வேண்டும் என்று இப்போவே சொல்றதுக்கா இருக்குமோ என ஒரு ஆசிரியர் சொல்ல

ஏன் இப்படி நம்ம யோசிச்சுட்டு இருக்கணும் .. மீட்டிங்கில் பாத்துக்கலாம் என்று பரித்தாவும் இனியாவும் தங்கள் சாப்பிடும் வேலையை தொடர்ந்தனர்..( நமக்கு சாப்பாடு தானே முக்கியம்)

2 மணி அளவில் மீட்டிங் ஹால்லில் n.s. ஆர்ட்ஸ் அண்ட சயின்ஸ் கல்லூரியின் பேராசிரியர்கள் நிரம்ப தங்களுக்குள் பேசிக்கொண்டிருக்கும் போதே அக்கல்லூரியின் தாளாளர் மற்றும் நிறுவனரான கிருஷ்ணசாமி புன்சிரிப்புடன் வர அக்கல்லூரியின் முதல்வர் துணை முதல்வர் ஆகியோர் இறுகிய முகத்தோடும் உள்ஙுழைந்தனர்

இதை பார்த்து கொண்டிருந்தவர்கள் கேள்வியோடு நோக்க அவர்களை இன்னும் குழப்பாமல் நாளை மறுநாளில் இருந்து புதிய தாளாளர் பொறுப்பு ஏற்க இருப்பதாகவும் தனக்கு வயதாகிய காரணத்தால் தான் இதில் இருந்து விடைப் பெற இருப்பதாகவும் தனக்கு அளித்த ஆதரவை அவருக்கும் அளிக்குமாறும் கூறிய கிருஷ்ணசாமி விடைப்பெற்றார்

மீண்டும் தங்களுக்குள் பேசியவாரே வகுப்புகளுக்கு செல்ல " என்னடி அவரா முடிவு எடுத்துச் சொல்லிட்டு போறாரு " என யோசனையோ பரிதா கேட்க

"அவரு கல்லூரி அவர் தான் முடிவு எடுக்கனும் .. அதுக்கு ஏன் நீ பீல் பண்ற மச்சி " என இனியா நக்கலாய் கேட்க

"இல்ல டி .. ஏற்கனவே நம்ம காலேஜ்ல் எவனும் சைட் அடக்கிற மாதிரி இல்லை.. இப்ப வரவனும் எப்படியும் அங்கிளா தான் இருக்க போறாரு.. அதுவும் புதுசா வந்து என்னலாம் நம்ம கொடுமை படுத்த போறாரு .. இப்போ இருக்குறவரு தாத்தாவா இருந்தாலும் தங்கமான மனுஷன்" என சீரியஸாக புலம்ப

"அடிப்பாவி ..உனக்கு இருந்தாலும் ஓவர் வாய்கொழுப்பு தான்.. இருடி சைட்டா அடிக்குற.. உன்னவனிடம் போட்டு கொடுக்கிறேன்" என மிரட்டும் தோனியில் சொன்னாள்..

அதை கேட்டு அரண்டவாளாய் "ஏய் இனியா .. இப்படிலாம் தப்பா பேசப்படாது... பாவம் இந்த ரீடர்ஸ் .. ஸ்டோரி ஆரம்பிக்கும் போதே இப்படி சொன்னா என்னை பற்றி என்ன நினைப்பார்கள்... நான் முரட்டு சிங்கிள் மக்களே... " என மூச்சி விடாமல் பேசியவளை பார்த்து

தலையில் அடித்துக் கொண்டவள் "கடவுளே ..!! இவளெல்லாம்... முரண்டு சிங்களாம்..." என திட்ட ஆரம்பித்த இனியாவை

"மச்சி வேணாம் .. போதும் .. பாவம் கடவுள் அவர தொந்தரவு பண்ணிட்டு ..வா மச்சி நம்ம வேலையை பார்ப்போம்" என இழுத்துச் சென்றவளை பார்த்து இனியாவும் சிரித்துக் கொண்டே பின் சென்றாள்..

ஆனால் ஏனோ இனியா மனதில் ஒரு இனம்புரியாத கலக்கம் இருந்தது.. ஏதோ ஒரு சோதனை தனக்கு வர இருப்பதாய் ஒரு உணர்வு..

ஹாய் செல்லம்ஸ்.!!! என்னுடைய முதல் அத்தியாயம் போட்டாச்சு ... நீங்க என்ன பண்ணுவிங்களாம் சமத்தா படிச்சுட்டு உங்கள் கமென்ட்ஸ் மூலமா என் கதையின் நிறை குறைகளை சொல்லிங்களாம்.. ரொம்ப கழுவி ஊத்தனும் என்று தோனுனா தனியா திட்டுங்க .. மனசு தாங்காது .
 

Narmatha

New member
Apr 2, 2018
16
0
3
ஹாய் செல்லம்ஸ்.. அடுத்த அத்தியாயத்தோடு உங்களை சந்திக்க வந்துவிட்டேன் .. முதல் எபிக்கு நீங்க கொடுத்த வோட்ஸ் கமெண்ட்ஸ் நன்றி மக்களே.. இந்த எபியும் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் செல்லம்ஸ்.. நெகட்டிவ் கமென்ட்ஸ் வரவேற்கப்படுகிறது

நினைவே நனவாகிவிடுவாயா

அத்தியாயம் 2

கல்லூரி முடித்து பரிதாவிடம் விடைப்பெற்றவள் தன் ஸ்கூட்டியில் பலவிதமான எண்ணங்கள் மனதை குழப்ப கடந்த காலத்தை பற்றிய எண்ணத்துடனே வீட்டை அடைந்தாள்...


சோர்வோடே உள்ளே ஙழைந்தவளை " அம்மா வந்தாச்சு " என்ற அவள் மழலை செல்வங்களின் குறலே வரவேற்றது...


ஆம் .. சங்கமித்ரா அகில்மித்ரன்.. இரட்டையராய் பிறந்த நான்கு வயது வாண்டுகள்... அம்மாவின் மனக்கவலைக்கு ஆறுதலாய் இருக்கும் அழகு செல்லங்கள்...


அதில் புத்துணர்ச்சியாய் உணர்ந்தவள்...
" ஐய்...என்னோடு குட்டிமாவும் பப்புகுட்டியும் இவ்வளவு சந்தோசமா இருக்கிங்களே .. " என ஆசையாய் அணைத்து முத்துமிட்டவளை குழந்தைகளும் அவள் கண்ணங்களில் மாறி மாறி தன் இதழ் பதிக்க .. அதில் ஒரு நிமிடம் சந்தோசத்தோடு சேர்ந்து இவர்களுக்காக தானே வாழ்கிறோம் என்ற வலியில் கண் கலங்கியவள் அதை அவர்கள் காணா வண்ணம் மறைத்த இனியா...


"எங்கடா அம்மம்மா காணோம்" என்றதை


கேட்டு வெளியே வந்த அவள் அம்மா சுந்தரி " வாடா இனிக்குட்டி .. போய் ப்ரஸ் ஆகிட்டு வா . வந்தோனே இந்த வாண்டுகளோட விளையாட ஆரம்பித்து விடாதே" என அறிவுரை வழங்க...


"மா.. நான் என்ன சின்ன பிள்ளையாமா" என சிரித்து கொண்டே கேட்டாள்


"எல்லாம் அம்மாக்களுக்கும் எவ்வளவு வயசானாலும் தன் பிள்ளைகள் சின்ன பிள்ளைகள் தான் அது உனக்கே போக போக தெரியும்" என்றவளை ஆமோதிப்பதாய்


"அதும் கரெக்ட் தான் ... நான் போய் ப்ரஸ் ஆகிட்டு வரேன் மா" என்று சென்ற இனியாவை பார்த்தவள்

என் பிள்ளைக்கு மட்டும் எவ்வளவு கஷ்டம் என்று நினைத்து பெருமூச்சுவிட்டவாறு அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள்....


ப்ரஸ் ஆகி வந்தவள் தன் மழலைகள் இரண்டும் அமைதியாக உட்கார்ந்து இருப்பதை கண்டவள் சிரித்துக் கொண்டே ..


"என்ன என் பட்டூஸ் இரண்டு பேரும் இவ்வளவு சமத்தா இருக்கிங்களே .. என்ன வேணும் உங்களுக்கு " என தன் பிள்ளைகள் மனதை உணர்ந்தவளாய் கேள்வி எழுப்ப ...


தங்களுக்குள் பார்த்துக் கொண்ட குழந்தைகள் நீ சொல்லு என இருவரும் போட்டியிட ..


"அகில் நீ தானே பிக் பாய் சொல்லுவ . நீ தான் சொல்லனும்" என சங்கி சொல்ல


"உன்ன தான் அம்மாக்கு ரொம்ப பிடிக்கும் சொல்லுவ .. நீ சொல்லு " என சண்டையிட


இதை பார்த்த இனியா அருகில் வந்து அணைத்துக் கொண்டவள்.
" பட்டூஸ் ..அம்மா கண்டிப்பா திட்ட மாட்டேன் சொல்லுங்க டா" என சமாதானமாய் பேச"ப்ராமிச்" என இருவரும் கேட்க


"பிங்கி ப்ராமிஸ்" என்று குழந்தைக்கு ஈடாய் பதில் அளிக்க அதில் நம்பிக்கை வந்தவனாய்


பிக் பாய் அகில் " அம்மா .. நாணா .. பாவம் தானே .. நீங்க டூ விட்டிங்களாம் மா. தப்பு பண்ணா திட்டிட்டு சே விடுங்க மா.. நாணா சாப்பிடவே இல்லையாமா " என பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு கூற


கோபமாக இனியா முறைக்க "அம்மா ப்ராமிச் பண்ணிருக்கிங்க திட்டகூடாது" என அகில் குட்டிக்கு ஆதரவாய் சங்கி அம்மாவை மிரட்டினாள்


நாணாக்கு தூது வரும் தன் பிள்ளைகளை பார்த்து மனதுக்குள் சிரித்து கொண்டவள் அவர்கள் தன் மனமும் நோகாமல் சொன்ன விதத்தை கண்டு பெருமை கொண்டாள்..


அவர்களுடன் விளையாட எண்ணி வெளியில் முகத்தை பாவமாய் வைத்துக் கொண்டு .

" அம்மா மட்டும் பாவம் இல்லையா .. நாணா தான் என்னோட சண்டை போட்டான்.." என்று சொன்னவுடன்


"ஆமா அம்மா பாவம் .. நாணா தான் பேட் பாய் .. நீங்க பேச வேணாம் மா" என ஆறுதல் சொன்ன சங்கி குட்டியை


அடிப்பாவி என்பதை போல பார்த்தவள் .. வாலு... என
கொஞ்சினாள்"சரி என் பட்டூஸ் சொல்லி நான் பேசாம இருப்பேனா .. நான் பேசுறேன் "என்றதும்


"ஐய்ய்ய் நீங்க தான் என் செல்ல அம்மா" என கட்டிக்கொள்ள


"ஆனால் என் பட்டூஸ் ஒன்னு பண்ணனுமே அதுக்கு " என்று இனியா புருவம் உயர்த்தி கேட்டதும்


"என்னமா " என்று அகில் கேட்க


"சீக்கிரமா ஹோம் ஒர்க் முடிச்சுட்டு சமத்தா சாப்பிட்டனுமே " என்று கேள்வியாய் பார்க்க


"இதோ பண்றேன் மா " என அகில் குட்டி ஓட .. சங்கியோ திருதிருவென முழித்துக் கொண்டிருந்தாள்..


அவளுக்கு பிடிக்காதது இது இரண்டும் தான் ... ஆனால் படிப்பில் கவனமில்லாமல் இல்லை அவளால் ஒரு இடத்தில் படிக்க இயலாது... துறுதுறுவென இருப்பாள்.. அவளை பார்த்துக் கொள்வதே அகில் குட்டியின் பெரிய வேலையாக இருக்கும்...


அவளை பார்த்து சிரித்த இனியா ஒரு வழியாய் அவர்களை வீட்டு பாடம் செய்ய வைத்து ( எப்பா இப்போலாம் எவ்வளவு கொடுக்குறாங்க பாவி பயல்க) இரவு உணவு உண்ண வைத்து அவர்களை கதை சொல்லி தூங்க வைக்க அவர்களோ நாணாவோடு கண்டிப்பாக பேச வேண்டும் என்ற கட்டளைக்கு பிறகே தூங்கினர்...


அவள் அம்மாவிற்கு மாத்திரை கொடுத்தவள் "சரி மா .. தூங்கு" என்று செல்ல எத்தனிக்க...


இனிக்குட்டி "எழில் தம்பிட்ட சண்டை போடாம பேசு மா சீக்கிரம் தூங்கு " என்ற தன் அன்னையை முறைத்தவள்


"நான் எதோ வேண்டும் என்றே சண்டை போடுவது போல் சொல்ற.. ஓவர் மா இது .. அவனுக்கு மட்டும் எல்லாம் சப்போர்ட் பண்றிங்க" என சிறுப்பிள்ளை போல் சண்டையிட்டவளை..


"ஏய்.. இனிக்குட்டி .. உனக்காக தான் சொல்றேன்" என்ற தன் அம்மாவை சந்தேகமாய் பார்த்தவுடன்


"ஆமா இனி .. அவனிடம் சண்டை போட்டுட்டு நீ தான் கஷ்டப்படுவ .. அதான்" என்று வருத்தமாக சொன்னாள்


அது உண்மை தான் என்றாலும் அவள் அம்மா வருந்தவதை விரும்பாமல் ..."சரி சரி.. ஓவரா ஐஸ் வைக்காத மா .." என்று விளையாட்டாய் சொல்லி சிரித்தவளை


"வாலு .. சரி நான் தூங்க போறேன்" என்று அவள் அம்மா செல்ல


இவளும் எழில் என்கிற எழிலனுக்கு வீடியோகால் செய்தால் ... அவன் இப்போது பிலிப்பைன்ஸில் இருக்கிறான்..


அதை எதிர்பார்த்து இருந்தவன் உடனே அட்டென்ட் செய்தவன்..


"ஹாய் பெட்டர் ஹாப் (better half) என்னடி என் செல்லம்ஸ் தூங்கிட்டாங்களா... நீ சாப்பிட்டியா" என்று கேள்வி கணைகளை தொடர


அதற்கு " உம்ம்ம்ம்" என்ற பதில் மட்டுமே எதிர் பக்கதிலிருந்து வந்து கொண்டிருக்க...


"அய்யோ.. செம காண்டுல இருக்கா போலவே" என்று மனதுக்குள் நினைத்தவன்...


"ஏய் இனிக்குட்டி.. சாரி டி .. தெரியாம பேசிட்டேன் .. இனிமே அப்படி பேசமாட்டேன் டா... நீ பேசாமல் எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா... சாப்பிட கூட இல்லை" என அவன் சீரியஸாக பேச


இனியாவிற்கே குற்ற உணர்வாய் ஆகிவிட்டது... உண்மையில் கோபம் எல்லாம் அவனிடம் இல்லை.. சிறுபிள்ளை கோபித்துக் கொள்வது போல் தான் அவனிடம்.. அதற்கு ஆறுதலும் அவனிடமே தேடுவாள்... இருந்தாலும் அவள் சந்தேகமாய்


" நீ சாப்பிட்டலயா.. நம்ம முடியவில்லையே...உலகமே அழிந்தாலும் நீ அது மாறிலாம் சாப்பிடாமா இருக்கமாட்டியே எழி" என நக்கலாக கேட்க..


"உண்மையா தான் டி பிஎச்" ( better half short form) .. என பேசிக் கொண்டிருக்கும் போதே ..


அவன் நண்பன் வருண் .. "மச்சான்.. சப்வேல ( subway ) நம்ம ஆர்டர் பண்ணது வந்துட்டு டா.. வா சாப்பிட்டலாம்.. " என்று கத்திக்கொண்டே இவன் அருகில் வந்தவன்


இனியாவை கண்டவன் " சாரி தங்கச்சி .. நீங்க பேசிட்டு இருந்ததை பார்க்கவில்லை" என்றவன் அவளிடம் நலம் விசாரிக்க அதற்கு பதில் அளித்தவள் கண்கள் அவன் கையில் இருந்ததை கேள்வியாய் எழிலிடம் நோக்க..


அதற்கும் வருணே
" சிஸ்டர் .. இது எப்படி எங்களுக்கு போதுமானதா இருக்கும் என்று தானே பார்க்குறிங்க . நாங்க ஏற்கனவே பிரியாணி சாப்பிட்டோம் .. இப்போ லைட்டா இது சாப்பிட்டு தூங்கலாம் என்று" என்று சிரித்துக் கொண்டே பேசினான் ..


அப்போது தான் எழில் " இப்போ அவள் உன்னை கேட்டாளா லூசு பய.. ஏன்டா என்னை மாட்டி விடுறதுலே குறியா இருக்கானுங்களோ " என்று மனதுக்குள் திட்டியவன் முறைப்பது கண்டு தான் ஏதோ உளரிவிட்டோம் என்றுணர்ந்த வருண் பாய் சிஸ்டர் என்றவன் அஙகிருந்து ஓடிவிட்டான்...


அடப்பாவி திரும்பவும் முதலில் இருந்தா.. (எதுக்குனா இனியா திட்டுவாளே ..) என்று திருட்டுமுழி முழித்துக் கொண்டு பாவமாய் பார்க்க


அதில் இனியா சிரிக்க அதை பார்த்து நிம்மதி பெருமூச்சு விட்டவன்...


ஒரு நிமிடம் அவள் சிரிப்பதை ரசிக்கவும் செய்தான்..


"போதும் டி சிரிச்சது.. நான் பல்ப் வாங்குனா சந்தோசப்படுவியே " என்று சொன்னவனிடம்..


"ஆமா செல்லம் .. அசிங்கப்பட்டான் ஆட்டோகாரன்" என்று அவனிடம் வம்பு செய்தவள் பின்பு கல்லூரியில் நடந்தது.. தாளாளர் மாற இருப்பது.. அவள் பட்டூஸ் செய்த சேட்டைகள் .. என அனைத்தையும் ஒப்பித்து முடித்தவள் .. அவனுக்கு இரவு நேரம் ஆகியதால் விடைப்பெற்றாள்..


எழில் தான் இப்போது இவளுக்கு இருக்கும் முதுகெழும்பு அவன் ஒருவனால் மட்டுமே தான் இப்போது கொஞ்சமாவது தைரியமாய் உயிரோட்டத்தோடு வலம் வருகிறாள்.. ஆனால் தன்னால் அவன் வாழ்க்கையும் பாழாகிவிட்டதே என்ற மனக்கவலையும் உண்டு...


பார்ப்போம் காலம் தான் அனைத்திற்கும் பதில் சொல்ல வேண்டும்...

 

Narmatha

New member
Apr 2, 2018
16
0
3
நினைவே நனவாகிவிடுவாயா

அத்தியாயம் 3

காலையில் எழுந்த இனியாவிற்கு எதோ ஒன்று நடக்க இருப்பதாய் மனது உணர்த்தியது .. அது நல்ல நிகழ்வா கெட்ட நிகழ்வா என்பதை அவளால் அறிய இயலவில்லை..

இந்த மனக்குழப்பத்துடனே இருந்தவள் குழந்தைகளை பள்ளிக்கு ஆயத்தப்படுத்த...


அவளின் சோர்ந்த முகத்தை பார்த்த சங்கி அகிலிடம் தன் கண்ணை காட்டி ஏன் என்று கேட்டாள் .. அதற்கு அகில் உதட்டை பிதுக்கி தெரியவில்லை என்று விடையளிக்க .. இவர்களது சம்பாஷனைகளை கண்ட இனியா சிரித்துக்கொண்டே


"என்ன தெரியனும் என் பட்டூஸ்க்கு" என புருவம் உயர்த்தி புன்சிரிப்போடு கேட்டவுடன்...


"அம்மா .. இப்படி நீங்க சிரிச்சுட்டே இருந்தா தான் அழகா இருக்கிங்க மா" என்றவாறு அகில் அம்மாவை கட்டிக்கொண்டான்..


"ஆமா மா.. இதுக்கு முன்னாடி இருந்த அழுகாச்சி மூஞ்சி பார்க்க சகிக்கல மா...உவ்வே" சங்கி சொல்லிக் கொண்டே நாக்கை துருத்தி ஓட...


"ஏய் கொழுப்பா.. நில்லுடி" இனியா விரட்ட அகிலும் அம்மாவிற்கு ஆதரவாய் அவளை பிடிக்க முற்பட்டான்... ஆனால் சங்கி குட்டியோ அவள் அம்மம்மாவிடம் தஞ்சம் புகுந்தாள்...


அவளிடம் சிறுபிள்ளையாய் இனியா சண்டையிட பின்பு கெஞ்சி கொஞ்சி அவர்களை பள்ளியில் விட்டவள் தன் கல்லூரிக்குள் நுழைந்தாள்...


அங்கு அவளுக்காகவே காத்துக் கொண்டிருந்த பரிதாவும் இணைந்துக் கொண்டாள்..


"என்னடி பரி இன்னைக்கு பரப்பரப்பா இருக்காங்க எல்லாம் .. என்னவாம் இன்னைக்கு" கேள்வியாய் நோக்க ..


பரிதா அவளை ஆச்சரியமாய் பார்க்க


"ஏன்டி இப்படி பாத்துட்டு இருக்க... கேட்டா பதில் சொல்லனும் இப்படி பார்க்கப்பிடாது " என்றதும் ..


" இன்னைக்கு புதுசா தாளாளர் வரப்போகிறார் .. அதான் இந்த பரப்பரப்பு .. உனக்கு இதெல்லாம் நியாபகம் இருக்காதே" என்று நக்கலாய்‌ சிரித்தவள்‌ தொடர்ந்து


" ஆமா இன்னைக்கு அழகா வந்துருக்கியே இனியா .. ஓஓ.. சேர்மேன் வராங்க என்று தானே " சிரித்துக் கொண்டே கேட்டாள்


"ஏன்டி அவர் வந்தா எனக்கென்ன.. எனக்கு எதோ இன்னைக்கு ஒரு மாதிரி இருந்துச்சு டி .. அதான் இந்த சேரி.." ( இனியா கவலையாக இருந்தாலோ இல்லை மனம் சஞ்சலம் அடைந்திருந்தாலோ அன்றைக்கு தன்னை கொஞ்சம் அழகுப் படுத்திக் கொள்வாள்..அது அவளை கொஞ்சம் புத்துணர்ச்சியாய் உணரச் செய்வதால் அன்று தனக்கு பிடித்த உடை அணிவது சிறிது முக அலங்காரம் செய்து கொள்வது அவள் வாடிக்கையான ஒன்று)


இனியா சொன்னதை கேட்டு சிரித்தவள் "ஓஓஓ... வரப்போறவங்க செமயா இருப்பாராம் .. ரொம்ப நல்லவராம்.. அதும் இல்லாமல் நம்ம காலேஜ் சேர்மேன் பொண்ண தான் கல்யாணம் பண்ண போறாராம்.. அதான் இந்த பொறுப்ப அவரிடம் கொடுத்திருக்கிறார்கள் போல" என்று அவன் புகழ் பாடியவளை கொலைவெறியோடு பார்த்துக் கொண்டிருந்தாள் இனியா ...


அப்போது தான் அவளை பார்த்த பரிதா.." ஏன்டி செல்லம் இவ்வளவு பாசமா பார்க்கிற " என்க ...


'" ஆமாடி ... கண்டவன் பத்திலாம் பெருமை பேசு.. ஆனால் யாரை பற்றி பேசனுமோ அவன பத்தி ஒரு வார்த்தை கேட்டுவிடாத" என்றவள் குரலில் கோபத்தோடு சேர்ந்து ஆற்றாமை வருத்தம் ஒருங்கே இருந்தது... (பாவம் பரிதா வரப்போகிறவன் யார் என்று தெரிந்திருந்தால் அவள் இப்படியா பேசி இருப்பாள்.. )


அதை கேட்டு பரிதாவிற்கும் கண்ணில் வேதனை வந்துச் செல்ல.. அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் பேச்சை மாற்ற எண்ணி "வாடி க்ளாஸ் போவோம் ... இல்லாட்டி அந்த சொட்ட மண்டையன் திட்டுவான்" என்ற பரிதாவை


அவள் வேதைனையையும் அதை அவள் மறைக்க முயல்வதையும் உணர்ந்த இனியா " ஆமா யார் டி அந்த சொட்ட மண்டையன் நம்ம காலேஜ்ல" என யோசனையாய் கேட்க..


"ஹி ஹி .. யாரும் இல்லை தான்.. இருந்தாலும் நம்ம ரீடர்ஸ் கெத்துக் காலேஜ்னா ஒரு டெரர் சொட்ட மண்ட பிரின்சிய எதிர்பார்ப்பாங்கலே அதான்" என்று அசடு வழிந்தவளை இனியா திட்டிய திட்டில் (ஜாலியா)
வகுப்பிற்கு ஓடி விட்டாள்பாடலை ரசித்தப்படி மிதமான வேகத்தில் காரை இயக்கிக் கொண்டிருந்தான் அருண்... அருகில் ஒருவன் இவனை முறைப்பதை சிறிதும் கண்டுக் கொள்ளாமல்..


இன்னும் அவனை கடுப்பேத்துவது போல் பாடலை முனுமுனுக்க .. பக்கத்தில் இருந்தவன் அனல் வீச்சை தாங்க முடியாமல்


"என்ன மச்சான்..நான் அழகுனு தெரியும் மச்சான்.. அதுக்குனு இப்படியா சைட் அடிக்கிற.. எனக்கு வெக்கமா இருக்குல.. " என அருண் வெட்கப்பட


"டேய்.. வெட்கபடாத டா..கேவலமா இருக்குடா.. இப்படிலாம் மூஞ்சியை வைக்காத ...பார்க்க முடியல.. சீக்கிரம் காலேஜ் போடா .. கடுப்பேத்தாமல்" என அவன் எரிமலையாய் பொங்கினான் ..


அதனை சிறிதும் கண்டுக்கொள்ளாமல் "நம்ம காலேஜ் மச்சான்.. எப்ப போனால் என்ன "என்று அருண் கூலாக பதில் அளிக்க


"அருண்.. இப்படி பொறுப்பில்லாமல் இருந்தால் அவ்வளவு தான்.. நான் போய்ட்டே இருப்பேன்.. அப்பறம் நீ தான் இந்த காலேஜ்ஜை பார்த்துக்கனும்.. வாழ்க்கையில் டைமிங் தான் முக்கியம் .. அதும். மட்டும் இல்லைனா" என்று பாடம் எடுக்க ஆரம்பிக்க


காரை நிறுத்திய அருண்.. "தெய்வமே .. காலேஜ் வந்துட்டு இறங்கு டா" என்று கும்பிட்டவனை பார்த்து சிரித்துக் கொண்டே இறங்கினான் .. நம் நாயகன் இளஞ்செழியன்


ஆறடி உயரத்தில் ஆண்மைக்கே உரிய கம்பீரத்தோடு மாநிறத்தில் பார்ப்பவரை திரும்பி பார்க்கும் மிடுக்கோடு வந்தவனை அக்கல்லூரியின் முதல்வர் ஒவ்வொரு பிரிவின் தலைவர்களும் வரவேற்க தன் நண்பன் அருணுடன் சேர்ந்தே வரவேற்பை ஏற்றான்...


அருண்.. ஜாலியான குறும்பான பேச்சால் .. தான் இருக்கும் இடத்தை கலகலப்பாய் மாற்றிவிடும் வல்லமை படைத்தவன் இளஞ்செழியனின் ஆருயிர் நண்பன் .. அவனுடைய மகிழ்ச்சிக்காக எதையும் செய்பவன் செழியனும் அப்படியே...


இருவரும் கல்லூரியினுள் நுழைய .. சுற்றி பார்வையிட்டவாறே அவர்கள் அறையை அடைந்தனர்..


கல்லூரி முதல்வரிடமும் அனைத்து பிரிவின் ஹச்.ஓ.டி விடமும் கல்லூரியை பற்றி பேசியவன் .. அனைத்து பேராசிரியர்களையும் தான் சந்திக்க வேண்டும் ... உடனே மீட்டிங் அரேஞ்ச் செய்யுமாறு கூறியவன் கல்லூரியை பார்வையிட அருணும் இவனும் மட்டும் சென்றனர்...


வகுப்புக்களை பார்வையிட இருந்தவனை விளையாட்டு மைதானத்திற்கு இழுத்து சென்ற அருணிடம்


"நமக்கு நிறைய வேலை இருக்கு .இப்போ எதுக்கு இங்க கூட்டிட்டு வந்த..." செழியன் கேள்வியாய் கேக்க


"விளையாட்டும் நம் வாழ்வில் ஒரு பங்கு மச்சான்.. அதும் காலேஜ் வாழ்க்கையில் நம்ம விளையாடும் நாட்களாம் வாழ்வின் பொக்கிஷம்.. ஆனால் இப்போ நிறைய கல்லூரிகள் நல்ல பெயர் வாங்கனும் நிறைய பேருக்கு ப்ளேஸ்மென்ட் கிடைக்கனும் என்று நினைத்து விளையாட்டை ஊக்குவிக்கிறது இல்லை டா.. அதான் இங்க எப்படி என்று பார்க்கலாம் என்று வந்தேன்" சீரியஸாக அருண் பேசி முடித்தான் ...


" ஆமா மச்சான்... நீ சொல்றதும் சரிதான்... " என்று ஆமோதித்தவன் எதோ ஒரு உந்துதல் தோன்ற சுற்றி பார்வையை சுழல செய்தவன் ஒரு இடத்தில் நிலை நிறுத்தி உற்று நோக்கினான்...


அருணும் அவன் பார்வை சென்ற திசையை உணர்ந்து அங்கே பார்த்தவன்.. அங்கு ஒரு பெண் அழுதுக் கொண்டிருக்க .. அவள் கையை பற்றியவாறு ஆண் ஒருவன் ஆறுதல் படுத்திக் கொண்டிருந்தான்... "என்னடா லவ்வர்ஸ் ப்ராப்ளம் போலவே'" என்றவனை


"இல்லை டா அருண் ... அப்படி தெரியவில்லை... அங்க சேலையில் இருக்க பொண்ண பார்க்க நம்ம காலேஜ் பேராசிரியர் போல இருக்கே... அவுங்க ஐடி போட்டு இருக்காங்க" என்க


அருண் பார்க்கும் போது அவள் திரும்பியதால் பின்புறம் மட்டுமே தெரிந்தது..


இருவரும் அவர்கள் அருகில் செல்ல அதற்குள் அவர்கள் அவ்விடத்தை விட்டு சென்றனர்..


அருண் செழியனிடன் "சே.. அதுக்குள்ள சென்று விட்டார்களே என்று வருத்தப்பட...


ஆனால் செழியனோ எதோ மனக்குழப்பத்தில் இருந்தான்.. என்னவென்றால் அவன் அவர்கள் அருகில் செல்ல செல்ல ஒரு வித படப்படப்பாய்.. எதோ பிசைவது போலும்.. தனக்கு நெருக்காமானவர் அருகில் இருப்பது போலவும் உணர்ந்தான்...


அதை சொன்னால் தன் நண்பன் இப்போது கலாய்ப்பான்... பின்பு சொல்லிக் கொள்ளலாம் என்று யோசித்தவன்... அருணை இழுத்துக் கொண்டு மீட்டிங் நடக்க இருக்கும் அறையினுள் நுழைந்தான்...


ஒவ்வொரு ஆசிரியராய் முதல்வர் அறிமுகப்படுத்த அவர்களுக்கு கைக்குலுக்கி தன் மரியாதையை செலுத்திக் கொண்டிருந்தவன்...


ஒரு ஆசிரியரை பார்த்தவுடன் இமைக்க மறந்து பார்த்துக் கொண்டிருந்தான்... அவளோ அதிர்ச்சியில் பார்த்துக் கொண்டிருந்தாள்....


வணக்கம் மக்காஸ்.. ஒரு நாள் லேட் ஆகிட்டு.. மன்னிச்சு.. முந்தைய எப்பியின் ஆதரவிற்கு நன்றி செல்லம்ஸ்.. இந்த எபியையும் படித்துவிட்டு உங்கள் கருத்துகளை வழங்குமாறு கேட்டு கொள்கிறேன்