நினைவே நனவாகிடுவாயா - கதை திரி

#6
நினைவே நனவாகிவிடுவாயா

அத்தியாயம் 4

செழியன் கண்இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தது இனியாவை தான்.. தனக்கு உரிமையானவள் என்றதொரு உணர்வு.. தன் வயிற்றிக்குள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறப்பது போன்று குதூகலம்.. அவளை விட்டு கண் அகன்றால் அவள் சென்று விடுவாளோ என்ற பயத்தில் சுற்றுபுறம் மறந்து பார்த்துக் கொண்டிருந்தான்...


இனியாவும் அதே நிலையில்.. ஆனால் அவள் மனமோ சந்தோசப்படுவதா... பயம் கொள்வதா.. வருத்தப்படுவதா என்று தெரியாமல் கண்ணீர் எப்போது வேண்டும் என்றாலும் வரலாம் என்ற நிலையில் இருக்க...


ஏன் இவர்கள் இப்படி நிற்கிறார்கள் என்று புரியாமல் பார்த்துக் கொண்டிருந்த பரிதா ஒருபுறம்...


இனியாவை இங்கு எதிர்பார்க்காததால் உச்சக்கட்ட ஆச்சரியம் மகிழ்ச்சியோடு நின்றிருந்தான் அருண்..


நல்லவேளையாக இவர்களுடைய உறைநிலையை கலைத்தது.. அக்கல்லூரி முதல்வரின் குரல்.. அதில் நடப்புக்கு வந்தனர் செழியனும் அருணும் அவ்விடத்தை விட்டு நகர ...


மீட்டிங்கில் சில அறிவுரைகளை வழங்கினான் செழியன்.. அவ்வப்போது அவன் கண்கள் இனியாவை தீண்டுவதையும் தடுக்க இயலவில்லை...


அவனின் பார்வை தன் மீது இருப்பது தெரிந்து... இனியா நிமிரவே இல்லை ...அவள் மனம் பல்வேறு குழப்பத்தில் இருந்தது...
தன் தலைவிதியின் விளையாட்டை நினைத்து நொந்து போயிருந்தாள்...பரிதா நடப்பது புரியாமல் அவள் தோழியின் நிலை கண்டு கவலைக் கொண்டிருந்தாள்


ஒரு வழியாய் மீட்டிங் முடிய அதற்காகவே காத்திருந்த இனியா அவ்விடத்தை விட்டு ஓடி விட்டாள் ..


அவளை தேடி சென்ற பரிதா மறைவான மரத்தின் பின்னால் தன் தோழி அழுதுக் கொண்டிருப்பதை கண்டு.. அருகில் சென்றவள்..


"இனியா" என்றவுடன் தாய் மடி தேடும் சேயாய் அவள் மடியில் சாய்ந்து அழுதவளை தேற்ற வழி தெரியாது முழித்துக் கொண்டிருந்தாள்...


அவள் காரணம் கேட்டும் அவளிடம் இருந்து பதில் வரவில்லை...


அதற்கு மேல் பொறுக்க முடியாதவள் திட்டி பார்த்தும் பதில் இல்லாமல் போக எழிலனுக்கு கால் செய்தால்...


இவள் நம்பரை பார்த்து உடனே அட்டென்ட செய்தவன் பதறியவாறு


"ஹலோ பரி.. நல்லா இருக்கியா.. இனிக்குட்டி நல்லா இருக்காளா எதும் பிரச்சனை இல்லையே"
என்றவனை நினைத்துப் பூரித்து போனவள்அதுவந்து என்று ஆரம்பித்து.. நடந்ததை விவரித்தாள்


கேட்டுக்கொண்டிருந்தவனுக்கு செழியனாய் இருக்குமோ என்ற சந்தேகம் உதிக்க " அவன் எப்படி இருந்தான்" என்று
கேட்டான்அவர் என்று ஆரம்பித்தவள் பின்பு அவனை சீண்ட எண்ணி "செம ஹேண்ட்ஸம்... அதும் அவர் பேசுறது ".. என அவனை கடுப்பேத்துவது போல் நக்கலாக சொல்ல...


"ஏய் .. பப்ளிமாஸ்... உயிர வாங்காம அவன் எப்படி இருப்பானு சொல்றியா" என்று எரிச்சலாக கேட்டவனிடம்


"அதை பற்றி தான் சொல்றேன்... அவனோடு சிரிப்பு" என திரும்ப கிண்டல் தொனியில் ஆரம்பித்தவளை...


"ஏன்டி லூசு மாதிரி பேசிட்டு இருக்க.. இப்போ நீ பேசுறது கேட்டு பொறாமை படும் நிலையில் நான் இல்லை.. இனிக்குட்டி அழுகை ஏன் என்று தெரியனும்" என சீரியஸாக பேச...


அப்போது தான் தன் தவறை உணர்ந்தவள் செழியனின் அங்கு அடையாளங்களை பரிதா சொன்னாள்.. அதை கேட்டு அவன் யார் என்று ஊகித்தவன்..


"அவன் பெயர் இளஞ்செழியன் தானே" என்றான்


"ஐய் செம எழிலா... எப்படி கண்டுபிடிச்ச..." என பரிதா ஆச்சரியமாய் கேட்டதங


அவளின் பேச்சை கேட்டு தலையில் அடித்துக் கொண்டவன்


" உம்ம்ம்.. வெத்தலையில் மை தடவி கண்டுப்பிடிச்சேன். உண்மையா உனக்கு மண்டையில் மசாலா தான் இருக்கு.. நல்லா உருளைக்கிழங்கு மாதிரி உருண்டையா இருந்துட்டு ஒன்னுமே யோசிக்கிறது இல்லை.. இதில் என்னை கடுப்பேத்துறதா அவனை புகழ்ந்துட்டு இருக்கா" என அவளை எழில் கழுவி ஊத்த


அதில் கோபமானவளை .. தன் மீது தவறு எதோ இருக்கிறது ... இல்லாவிட்டால் இவன் இப்படி திட்டமாட்டான் என அவளின் மானங்கெட்ட மனது அவனுக்கு பரிந்து பேச அதை அடக்கியவள் கெத்தை விடாமல்...


"டேய் பைத்தியம் ஏன்டா இப்படி கத்துற.. யார்டா அவன் சொல்லிட்டு திட்டுடா" என அவனிடமே சரண்டர் ஆனவளை நினைத்து இப்போது சிரிப்பதா அழுவதா என்று புரியாமல் சிரித்தான்...


" லூசு.. அவன் தான் இளா... இளஞ்செழியன்.. " என்றது தான் தாமதம்...


"என்னது அவனா .. சே .. தெரியாம அவனை போய்... அச்சோ அவனை சும்மா விட்டுட்டு வந்துட்டேனே.. அவனை நாக்கு பிடிங்கிற மாதிரி நாலு கேள்வி கேட்கனும்" என புலம்பியவளை பார்த்து


"ஏய்.. ஏன்டி.. அய்யோ.. இவள் தொல்லை தாங்க முடியவில்லையே.. இனியா விடம் போனை கொடு டி"


டேய் என திட்ட ஆரம்பித்தவள் பின்பு இனியா இன்னும் அழுதுக்கொண்டிருப்பதை பார்த்து


அவளிடம் போனை கொடுத்தாள்...


போனை வாங்கிய இனியா விசும்ப...


" இனிக்குட்டி இப்போ எதுக்கு அழுதுட்டு இருக்க.. அவன் வந்தா என்ன.. அவனால் எதும் பிரச்சினை வராது... கவலைப்படாத இனிமா.. எல்லாம் நல்லதே நடக்கும் .." என அவன் பொறுமையாய் பேச அதை கேட்டவள்


"அவனுக்கு என்னை அடையாளம் தெரியவில்லை .. அதை பார்க்கும் போது ரொம்ப கஷ்டமா இருக்கு எழில் " என இன்னும் விசும்ப எழிலும் கலங்கினான்...


தன் மீது அளவு கடந்த அன்பை வைத்திருந்தவன் இப்போது அடையாளம் தெரியாமல் சென்றால் அதன் வலி மிகவும் வேதனையே ..


"இனியாமா .. அவன் வேண்டும் என்றா பண்றான் .. அவன் நிலைமை அப்படி.. உனக்காக நான் இருக்கேன் டா வாழ்க்கை முழுதும் உன்னை பார்த்துக்க.. என் பெட்டர் ஹாப் இப்படி கலங்கமாட்டா.. தைரியமா இருப்பா .. நான் சொல்றத உடனே கேட்டுப்பா.. நீ என் அதே இனிக்குட்டியா இருந்தா.. இப்போ அழுகையை நிறுத்தி விட்டு .. வீட்டுக்கு போடா.. " என்றவனின் பேச்சில் ஒரு வழியாய் சமாதானம் அடைந்தவள்


வீட்டிற்கு கிளம்ப எத்தனித்தவளின் சோர்ந்த முகத்தை கண்டவள்
" இனியா ஏன்டி உனக்கு ஓவரா இல்லை . நான் எவ்வளவு நேரமா கேட்டேன்.. சொல்லல . அந்த பக்கி பயட்ட மட்டும் சொல்லுவா.. உன்னால அவன் எப்படி கழுவி ஊத்துனான் தெரியுமா..."" பரி செல்லம்... அப்படி இல்லை" என்றவளை..


"நீ பேசாத.. என்னா பேச்சு... உண்மையாவே என்னை கலாய்கனும்னா மட்டும் அவனுக்கு மூளை நல்லா செயல்படுதே.. அவன் வெளிநாட்டுல இருக்கேனு பொய் சொல்லிவிட்டு இங்கதான் சுத்திட்டு இருக்கான் என்று நினைக்கிறேன்.. கொஞ்சம் கூட டீசண்ட்டே இல்லை.. என்னா பெட்டர் ஹாப் உனக்கு.. பேசாம அவன கலட்டி விட்டுடி " என்று நக்கலாக சொன்ன பரிதாவின் காதை திருகியதும்


"ஏய்.. கொலை கொலை.. என்னை காப்பாத்துங்க" என்று கத்திய பரிதாவின் வாயை மூடினாள் இனியா..


ஏன்டி இப்படி கத்துற என்று அவளை திட்டியவள் " அப்படி என்ன சொன்னான் எழில் " என்று கேட்க


பரிதா சொல்லி முடிக்க.. இனியா சிரிக்க ஆரம்பித்து விட்டாள்.. பரி.. அவன் சொன்னதுலே மாஸ் எதுனா உருளைக்கிழங்கு மாதிரி உருண்டையா என்று சொல்லி மீண்டும் சிரிக்க.. விளையாட்டாய் முறைத்த பரிதா.. பின்பு தன் தோழியோடு இணைந்து அவளும் சிரிக்க ஆரம்பித்து விட்டாள்... தன் தோழியின் சிரிப்பை பார்க்கவே பரிதா பேசியது என்று இனியாவும் அறிவாள்


பின்பு இருவரும் வீட்டுக்கு கிளம்பினர்...


இங்கு செழியனோ புலம்பிக் கொண்டிருந்தான்..


"மச்சான்.. நான் அப்படி நின்று இருக்க கூடாதுல .. அவள் என்னை பற்றி என்ன நினைச்சுருப்பாள்...அவளை பார்த்தவுடன் அப்படியே வானத்தில பறக்குற மாதிரி இருந்துச்சு டா... அவளை பார்க்கும் போது எனக்காக பிறந்தவ இவதான் அப்படினு பீல் ஆகுதுடா.. ஏன்னே தெரியலை.. எங்கயோ பார்த்த மாதிரி இருக்கு டா.. நம்ம பார்த்து இருக்கோமா அருண்" என்று கேட்டவனை


டேய் .. புதுசா லவ் பண்ற மாதிரி பேசுறானே.. மறந்துட்டு இவன் பண்ற அட்டகாசம் தாங்க முடியலையே என மனதில் அர்சித்தவன் .. அவன் நிலையை பற்றி கவலை கொண்டாலும் .. கடந்த காலத்தை பற்றி கூறினால் எப்படி ஏற்று கொள்வான் என்று தெரியவில்லை என்பதால்


"எனக்கு தெரியவில்லை மச்சான்.. நீயே நல்லா யோசி டா.. உனக்கு கண்டிப்பா நியாபகம் வரும் " என்ற அருணை பார்த்தவன்..


அதை ஆமோதித்தவனாய் சிறிது நேரம் யோசித்துக் கொண்டிருந்தான்...


தீடிரென.. ஏஏஏ.. அருண் .. நியாபகம் வந்துட்டு டா... என்று கத்த அருணும் மகிழ்ச்சியாக சொல்லுடா என்றான்.


ஹாய் செல்லம்ஸ்...சாரி .. லேட் அப்டேட்க்கு.. உங்க வீட்டு பிள்ளையா நினைச்சு என்னை மன்னித்து விடுங்கள்..


மறக்காமல் படித்தவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளுங்கள்.. அப்போது தான் எனக்கு என் தவறுகள் தெரியவரும் மக்காஸ்