Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript நின்னைச் சரணடைந்தேன் - கதை திரி | SudhaRaviNovels

நின்னைச் சரணடைந்தேன் - கதை திரி

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
115
445
63
அத்தியாயம் - 21


மூன்று நாட்களுக்குப் பிறகு, அன்று தான் சற்று நிதானத்திற்கு வந்திருந்தாள் மதுமிதா.

சித்தார்த்தைச் சந்தித்துவிட்டு வந்த இருவரும், அவன் கூறிய அனைத்தையும் ஒன்றுவிடாமல் கூற, அனைவரும் மௌனமாக கேட்டுக் கொண்டனர். ராஜேஷ் முதன்முதலில் சித்தார்த்திற்குத் தான், மதுவைக் கொடுக்கலாம் என்று கேட்டேன் என்று சொல்ல, விமலா அவனை ஆழ்ந்து பார்த்தார்.

யாருமே எதுவும் சொல்லாமல் அமர்ந்திருக்க, “நான் அந்தப் பையனைப் பார்க்கணும்” என்றார் விமலா.

அனைவரும் ஆச்சரியத்துடன் அவரைப் பார்த்தனர்.

“எனக்கு அந்தச் சித்தார்த்தோட குணம், ரொம்பவே பிடிச்சிருக்கு. அவன் நம்மகிட்ட பழைய விஷயத்தைச் சொல்ல வேண்டிய அவசியமே இல்ல. தான் செய்தது தவறு என்ற உறுத்தல் இருந்ததால் தான், சொல்லியிருக்கான். நாம பொண்ணையும் நல்லபடியா வைத்திருப்பான்” என்றார் நெகிழ்ச்சியுடன்.

“விமலாம்மா! கொஞ்சம் நாள் போகட்டும்...” என ஆரம்பித்தக் கணவரை, “எதுவும் சொல்லாதீங்க. அவள் கொஞ்சம் கொஞ்சமா சாகறதுக்குள்ள, அவளுக்கு ஒரு வாழ்க்கையை அமைச்சிக் கொடுக்கறது தான் நல்லது. சின்னக் கோட்டுக்குப் பக்கத்துல பெரிய கோட்டைப் போட்டாதான், அவளை இதிலேயிருந்து வெளியே கொண்டு வர முடியும்” என்று அவர் சொல்ல, எல்லோரும் அதை ஒப்புக்கொண்டனர்.

“சித்தார்த்தை எப்போ பார்க்கலாம்ன்னு கேட்டேனே!” என்றார்.

“தீபக் கல்யாணத்துக்கு முன்னாலேயே பார்க்கலாம்” என்றான் ராஜேஷ்.

இது எதையும் அறியாத மது, அனைவருக்கும் நடந்த விஷயம் தெரிந்தும் தன்னிடம் கேட்கவில்லை என்று உணர்ந்தே இருந்தாள். இதுவும் நன்மைக்கே என்று ஒரு பக்கம் தோன்றினாலும், கடந்த இரு தினங்களில் சித்தார்த் ஏதும் செய்யாமல் இருப்பதே அவளுக்குப் பயத்தைக் கொடுத்தது.

அன்று காலையில், ரமேஷ் அலுவலகம் வந்து பொறுப்பை ஏற்றுக்கொண்டான். பிற்பகல் வரையில் வேலையில் கவனமாக இருந்த சித்தார்த், மதுவின் வீட்டிற்கு போன் செய்தான்.

போனை எடுத்த வித்யா, சித்தார்த் பேசுகிறான் என்று அறிந்ததும், தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு அவனையும் விசாரித்தாள்.

"தெரியும்மா!” எனச் சிரித்தவன், “மதுகூட பேச முடியுமா?” என்று கேட்டான்.

முன்தினம் தான் சித்தார்த் போன் செய்தாரா என்று மதுமிதா, வித்யாவிடம் விசாரித்தாள். இல்லை என்றதற்கு, அவர் போன் செய்தா என்னைக் கூப்பிடாதே வித்யா! ப்ளீஸ் நீயே ஏதாவது சொல்லி சமாளிச்சிடு” என்று அவள் சொல்வதற்குள் கண்கள் கரித்து, மூக்கு நுனி சிவந்து வெளுத்த முகத்துடன் பேசியவளைப் பார்க்கவே அவளுக்குப் பாவமாக இருந்தது.

இப்போது, அவள் உண்மையாகவே உறங்கிக் கொண்டிருந்தாள். "அவள் இப்போ தான்ண்ணா டேப்லட்ஸ் எடுத்துக்கிட்டுத் தூங்கினா. எழுந்ததும் பேசச் சொல்லட்டுமா!" என்றாள் தன்மையாக.

"வேண்டாம்மா! நானே திரும்பப் பேசறேன்” என்று போனை வைத்தான்.

அவள் எழுந்ததும், சித்தார்த் போன் செய்ததைச் சொல்ல, அவளுக்குப் பயம் குடிகொண்டது.

‘இரண்டு நாள்களாக பேசாமல் இருந்தவன் இப்போது பேசவேண்டும் என்று வந்திருக்கிறான். இனி, சித்தார்த் அமைதியாக இருக்க மாட்டான். அவனுடைய கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வது? எந்த முகத்தோடு அவனைப் பார்ப்பது?’ எனக் கலங்கினாள்.

ஒவ்வொரு நொடியையும் பயத்துடனே கழித்தாள். இரவு எட்டு மணி. இதற்கு மேல் வீட்டிற்குப் போன் செய்யமாட்டான் என்ற எண்ணத்துடன் மதுமிதா, வித்யாவுடன் பேசிக்கொண்டு ஹாலில் அமர்ந்திருக்க, அருகில் தீபக் தனது அலுவலக வேலையில் மூழ்கி இருந்தான்.

அவளது எண்ணத்தைத் தகர்ப்பதைப் போல தொலைபேசி ஒலிக்க, அவளது முகம் வெளுத்தது.

“என்னடி இது? வேற யாராவதா இருக்கும்” என்று வித்யா அவளை ஆசுவாசப்படுத்தினாள்.

போனை எடுத்த தீபக், "ஹலோ சித்தார்த்! எப்படியிருக்கீங்க?" என்றவாறே மதுவின் முகத்தைப் பார்க்க, நடுங்கிய விரல்களுடன் கால்களைக் கட்டிக்கொண்டாள்.

கண்கள் கெஞ்சலுடன் அவனைப் பார்த்துக்கொண்டிருக்க, தீபக்கிற்குப் பாவமாக இருந்தது.

"இல்லை சித்தார்த்! அவள் இப்போதான் தூங்கப் போனா. எழுப்பட்டுமா?" என்றான்.

அவன் பேசும் தொனியை வைத்தே, சித்தார்த் புரிந்துகொண்டான். தன்னுள் எழுந்த கோபத்தை அடக்கிக்கொண்டு. "வேண்டாம் தீபக்! நான் அப்புறம் பேசறேன்" என்று போனை வைத்தான்.

அவனைத் தவிப்பதாக நினைத்து அவள் செய்யும் ஒவ்வொரு செயலும், சித்தார்த்தின் கோபத்தை அதிகப்படுத்துவதை அறியாமல் இருந்தாள்.

அவன் போனை வைத்ததும், நன்றியுடன் பார்த்தவள் எழுந்து மொட்டை மாடிக்குச் சென்றாள்.

வானத்தை வெறித்துக் கொண்டிருந்தவள் தன்னருகில் வந்து அமர்ந்த தீபக்கைக் கண்டுகொள்ளாமல், மீண்டும் ஆகாயத்தை வெறித்தாள். அவன் ஏதேதோ சொல்லி அவளது கவனத்தைத் திசைத்திருப்ப முயன்றான்.

ஆனால், அத்தனையும் விழலுக்கு இறைத்த நீராகப் போனது. அவனுக்கு ஆயாசமாக இருந்தது. அவளைத் திருமணத்திற்குச் சம்மதிக்க வைப்பது அத்தனைச் சுலபமாக இருக்கப் போவதில்லை என்று புரிந்தது.

“மதும்மா!" என்று அவளது தலையைத் தடவிக்கொடுக்க, அந்தப் பரிவில் அவனது தோளிலேயே சாய்ந்து அழத் துவங்கினாள். சற்றுநேரம் அவளை அழவிட்டவன், மெல்ல அவளது கையைத் தட்டிக் கொடுத்து, கண்களைத் துடைத்துவிட்டான்.

"இப்போ சொல்லு உனக்கும், சித்தார்த்துக்கும் என்ன பிரச்சனை? ஏன் இந்த மாதிரி உன் உடம்பைக் கெடுத்துக்கற?" என்று வாஞ்சையுடன் கேட்டான்.

மதுவின் முகமோ நடந்ததை நினைத்து குற்றவுணர்வில் தடுமாற, "எதுவா இருந்தாலும் பேசும்மா? உனக்குள்ளேயே வச்சி இப்படி உருகாதே. நீ தானே சொல்லுவ. நாம என்ன அழவா பிறந்தோம்? இருக்கும் வரைக்கும் சந்தோஷமா, அடுத்தவங்களுக்குப் பிரயோஜனமா இருக்கணும்னு. அப்படித் தெளிவா யோசிக்கும் நீயே, இப்படி அழுதிட்டு இருக்கலாமா?" என்று அவன் கேட்க, நடந்த அனைத்தையும் குன்றலுடன் சொன்னாள்.

அவள் சொன்னதையும், அதன் விளக்கத்தையும் கேட்ட தீபக்கிற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. தான் நினைத்ததைப் போலவே, விஷயம் அந்தர் பல்டி அடித்து நின்றிருப்பதை எண்ணித் தடுமாறினான்.

சற்றுநேரம் பேசாமல் இருந்தவன், "சரி, நடந்தது நடந்து போச்சு. இந்த விஷயத்தால் ஏற்பட்டிருக்கும் பாதிப்பை, நீ பேஸ் பண்ணித்தான் ஆகணும். இதில் நாங்க யாரும் தலையிட முடியாது" என்றான்.

"எப்படி அத்தான் இதைச் சொல்லமுடியும்? சித்தார்த் மனசுல சலனம் வர, நான் காரணமா இருந்திருக்கேன். அது போதாமல், புதுசா ஒரு குழப்பத்தையும் உருவாகிட்டேன். நான் எந்த முகத்தோடு சித்தார்த்திடம் பேசுவேன்?" என்றாள் தழுதழுத்தபடி.

"அதுக்காக, எத்தனை நாளைக்கு அவனைப் பார்த்துப் பயந்து ஓடுவ? இன்னைக்கு நீ செய்திருக்க காரியம், அவனோட கோபத்தை அதிகப்படுத்தி இருக்கும்னு நீ புரிஞ்சிக்கவே இல்ல. சித்தார்த், திரும்பவும் உன்னோடு பேச முயற்சி செய்வான். நீயும் பேசு. அவனோட மனதை அவன் புரிய வைத்ததைப் போல, உன் பக்கக் கருத்தை, அவனுக்குச் சொல்லி புரியவை" என்றான்.

அவள் அவனையே பார்த்தாள்.
‘அவ்வளவு சீக்கிரம் தன்னால், சித்தார்த்திடம் பேசிவிட முடியுமா? பேசினாலும், அதை அவன் புரிந்து கொள்வானா?’ என்ற அச்சம் மனத்தை வண்டாகக் குடைந்தது.

“நீ காலத்தைக் கடத்தக் கடத்த, பிரச்சனை முடிஞ்சிடப் போறதில்ல. தைரியமா பேஸ் பண்ணு. யார் கண்டா? உன்னால, அவன் கன்வின்ஸ் ஆனாலும் ஆகலாமே!” என்று கடைசியாக தனது அஸ்திரத்தை எறிந்து விட்டு நிராயுதபாணியாக நின்றான்.

அவனுக்குமே உள்ளுக்குள் பயம் தான். இவளை விட்டுப் பிடிக்கிறேன் என்று, விட்ட நேரமெல்லாம் போதும்’ என்று எண்ணி ஒரு முடிவுடன் பேசிவிட்டான். இனி, முடிவு அவள் கையில்.

யோசனையுடன் அமர்ந்திருந்தவளைப் பார்த்தவன், ‘யோசிக்கிறா. நல்ல முடிவை எடுத்திடணும்’ என்ற நினைப்புடன், “எழுந்திரு! கீழே போகலாம்" என்று அவளையும் அழைத்துக் கொண்டு கீழே வந்தான்.

‘அத்தான் சொல்வதும் சரி. எவ்வளவு நாளைக்குப் பேசுவதைத் தடுக்க முடியும்? சித்தார்த்திடம் என் நிலையைச் சொல்லி மன்னிப்பு கேட்டால், நிச்சயம் மன்னித்து விடுவான்’ என்று தப்புக் கணக்கு போட்டபடி கட்டிலில் சாய்ந்தாள்.

***********

விமலாவும், சந்திரசேகரும் வீடு வரை சென்று வருவதாகக் கூறிச் சென்றிருக்க, ராஜியும் – ஈஸ்வரனும் கல்யாண வேலையாக வெளியே சென்றிருந்தனர். ராஜேஷ் அவசர வேலை என்று வெளியே சென்றுவிட, நண்பர்களுக்குப் பத்திரிகை கொடுத்துவிட்டு வருகிறேன் என்று தீபக்கும் கிளம்பினான்.

மதுவிற்குத் துணையாக வித்யா மட்டுமே இருந்தாள்.

மாடியில் ஊஞ்சலில் அமர்ந்திருந்தவளிடம், “இந்த மாத்திரையைப் போடு. உனக்குக் கொஞ்சம் ஹார்லிக்ஸ் கொண்டு வரேன்" என்று அவளிடம் மருந்தை கொடுத்தாள்.

"ஹார்லிக்ஸ்லாம் வேண்டாம் வித்யா! ஏற்கெனவே, நாக்கெல்லாம் கசப்பா இருக்கு" என்றாள் சிணுங்களுடன்.
"என்கிட்ட நல்லா உதை வாங்கப் போறே. டாக்டர் என்ன சொன்னார்? ரொம்ப வீக்கா இருக்கே நல்ல சத்துள்ள ஆகாரம் கொடுங்கன்னு சொன்னார். நீ முதலில் மாத்திரையைப் போடு" என்று அதட்டிச் சொல்ல, அவளும் மாத்திரையை விழுங்கினாள்.

"ரெண்டே நிமிஷம் வந்திடுறேன்" என்று அவள் சமையலறைக்குச் செல்ல, மதுமிதாவின் கைப்பேசி அழைத்தது.

கண்களை மூடிய நிலையிலேயே கைப்பேசியை எடுத்து சோர்ந்த குரலில், “ஹலோ!" என்றாள்.

மறுமுனையில் சப்தமே இல்லாதிருக்க, ஹலோ... என்று மீண்டும் சொன்னவளுக்குப் பொறிதட்ட, "சித்..தா..ர்த்!" என்றாள் நடுங்கும் குரலில்.

பதிலுக்குச் சீறலாக ஒரு பெருமூச்சு மட்டுமே வந்தது. அவன் பேச ஆரம்பிக்கும் முன், வேகமாகத் தொடர்பைத் துண்டித்தவளது முகம் வியர்த்தது. முன்தினம் யோசித்து வைத்த எதுவும் நினைவிற்கு வரவில்லை.

"ஹார்லிக்ஸ் ரெடி" என்றபடி வந்த வித்யா, “என்னடி இப்படி வேர்த்திருக்கு? ஓஹ்! ஜுரம் விடுது இல்லையா. அதனால் இருக்கும்" என அவளே சமாதானமும் சொல்லிக் கொண்டாள்.

சற்று நேரம் அமர்ந்திருந்த வித்யா, "நீ கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு. நான் வீட்டைப் பூட்டிட்டு லைப்ரரி போய்ட்டு வரேன். ஒரே போர் அடிக்குது" என்றாள்.

"பூட்ட வேண்டாம். அண்ணன் எப்போ வேண்டுமானாலும் வருவாங்க. நான் கீழே வந்து உட்கார்ந்துக்கறேன்" என்றவள், ஹாலின் மூலையிலிருந்த ஈசிசேரில் கால்களை மடக்கி வைத்து அமர்ந்து கொண்டாள்.

வித்யா கிளம்பும் நேரம் லேண்ட்லைன் ஒலிக்க, மது பயத்துடன் போனையே பார்த்தாள்.

“சொல்லுங்க ரமேஷ் அண்ணா!” என்றவுடன் தான் அவளது மனம் சற்று நிம்மதி அடைந்தது. பேசிக்கொண்டிருக்கும் போதே இணைப்பு துண்டாக, சலிப்புடன் போனை வைத்தாள். "சரி மது! நான் போயிட்டு வந்திடுறேன்" எனக் கிளம்பினாள்.

சிரித்துக்கொண்டே தன் கையிலிருந்து ரிசீவரை வாங்கி, இணைப்பைத் துண்டித்த சித்தார்த்தைப் புரியாமல் பார்த்தான் ரமேஷ்.

"என்னடா! நீ தானே அவங்க வீட்டு லேண்ட் லைனுக்குப் போன் செய்யச் சொன்ன. இப்போ, நீயே பாதில வாங்கி கட் பண்ணிட்டியே" என்றான்.

"எல்லாம் காரணமா தான்" என்றவன், ரமேஷின் கைப்பேசியை வாங்கி அதிலிருந்து மதுவின் மொபைலுக்கு அழைத்தான்.

ரமேஷின் பெயரைப் பார்த்ததும், லைன் கட் ஆனதால் மொபைலில் அழைக்கிறான் என எண்ணி, "ரமேஷ் அண்ணா! எப்படியிருக்கீங்க?" என்றாள் மெல்லிய குரலில்.

“ஏன்? ரமேஷ்கிட்டத் தான் பேசுவியா? என்னிடம் பேசமாட்டியா?" என்று சித்தார்த்தின் குரல் ஒலிக்க, அவள் அதிர்ந்து போனாள்.

இதைச் சற்றும் எதிர்பார்க்காதவள் பதட்டத்துடன், “சித்தார்த் ப்ளீஸ்!" என்றாள் கெஞ்சலாக.

“மது! நான் உன்னிடம் பேசணும். திரும்பப் போனைக் கட் பண்ணாதே..." என்று அவன் சொல்லும் போதே, இணைப்பு துண்டானது. அவன் மீண்டும் முயற்சிக்க, ஸ்விட்ச் ஆஃப் என்று வர, அவனது முகம் கோபத்தில் சிவந்தது.

கோபத்துடன் கார் சாவியை எடுத்தவனை வேகமாகத் தடுத்தான் ரமேஷ். “சித்தார்த்! கொஞ்சம் நிதானமா இரு. எங்கே கிளம்பிட்ட?" என்று நண்பனின் கரத்தைப் பிடித்தான்.

கிண்டலாகச் சிரித்தவன், “வேற எங்கே? உன் அருமை தங்கையைப் பார்க்கத் தான். அவளுக்கு, தான் தான் புத்திசாலின்னு நினைப்பு. அதான், நேர்ல போய் பாராட்டிட்டு வரலாம்னு கிளம்பறேன்" என்றவன் ரமேஷின் கையை எடுத்துவிட்டு விட்டுக் கிளம்பினான்.

ரமேஷ், மதுவிற்குத் தொடர்பு கொள்ள மொபைல் ஸ்விட்ச் ஆஃப் என்றும் லேண்ட் லைன் ரிசீவரும் எடுத்து கீழே வைக்கபட்டிருக்க ரமேஷ் தலையிலே அடித்துக் கொண்டான். உடனே, தீபக்கின் மொபைலுக்கு முயன்றான்.
 

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
115
445
63
அத்தியாயம் - 23


சாலையிலேயே காரை நிறுத்தி விட்டு உள்ளே வந்த சித்தார்த், கதவு திறந்தே இருப்பதைப் பார்த்து கதவைத் தட்டியவன், “ராஜேஷ்” என்று குரல் கொடுத்தான்.

எந்தப் பதிலும் இல்லாமல் போக, தயக்கத்துடன் உள்ளே எட்டிப் பார்த்துக் கண்களைச் சுழல விட்டான். ஹாலின் ஓரத்தில் கழுத்துச் சங்கிலியைப் பிடித்துக் கொண்டு, ஜன்னல் வழியாகத் தோட்டத்தைப் பார்த்தபடி, யோசனையில் மூழ்கி இருந்த மதுவைப் பார்த்தான்.

எவ்வளவு கோபத்தோடு வந்தானோ அவ்வளவும், அவளைப் பார்த்ததும் சூரியனைக் கண்ட பனிபோல நீங்கியது. மூன்றே நாளில் ஆளே உருக்குலைந்து போனது போலிருந்தாள். அருகில் வந்து நின்றவனைக் கூடக் கவனிக்காமல் தோட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“மது!” என்று சற்று உரக்க அழைத்தான்.

திடீரென சித்தார்த்தின் குரல் அவ்வளவு அருகில் கேட்டதும், தூக்கிப் போட மிரண்டு போய் எழுந்தவள், “சித்..தா..ர்த்!” என்றபடி சுவரோடு ஒண்டினாள்.

கதவைப் பூட்டாமல் இருந்த, தனது முட்டாள் தனத்தை எண்ணி அழுகை தான் வந்தது.

அவளது செய்கை கோபத்தை உண்டாக்கினாலும், அவளது மிரண்ட பார்வையும் பயத்தில் நடுங்குவதையும் கண்டவன் நிதானமாக, "எப்படியிருக்க மது?" என்று இழுத்துப் பிடித்தப் பொறுமையுடன் கேட்டான்.

அவள் எதுவும் சொல்லாமல் தவிப்புடன் நிலத்தைப் பார்த்துக்கொண்டிருக்க, " உன்னை தான் மது கேட்கிறேன். எப்படியிருக்க?" என நிதானமாக ஆனால், அழுத்தமான குரலில் கேட்டதும், "ம்ம்... இருக்கேன்" என்றாள் பயம் விலகாமல்.

“ஹும்ம்... அப்போ, நாம ரெண்டு பேரும் கொஞ்சம் மனம் விட்டுப் பேசலாமா? நான் எதுக்கு வந்திருக்கேன்னு உனக்கே தெரியும்?" என்றான்.

அவனது வார்த்தைகள் அவளது அச்சத்தைப் பின்னுக்குத் தள்ள, “மனம் விட்டுப் பேசிக்கிற அளவுக்கும் நமக்குள்ள என்ன இருக்கு?” என்று அவனை நேருக்கு நேராகப் பாராமலே கேட்டாள்.

அவனது பொறுமை பறந்து போக, "ஏன்? உனக்குத் தெரியாதா! அப்படி என் வாயாலேயே கேட்கணும்னு நினைச்சா, சொல்ல நான் தயார்" என்று அவள் முன்னே வந்து நின்றான்.

“நா..நான் தான் என்னோட முடிவை அன்னைக்கே சொல்லிட்டேனே?" என்றவளுக்கு நாக்குக் குழறியது.

இரு கரங்களயும் குறுக்காகக் கட்டிக்கொண்டு, "அப்போ, நம்ம ரெண்டு பேருக்கும் இருக்கும் ரிலேஷன்ஷிப் அவ்வளவு தானா?" என்றான் கிண்டலும், ஆத்திரமுமாக.

மதுவின் மனதிற்குள் பயம் இருந்தாலும், “என்ன என்ன ரிலேஷன்ஷிப்? நீங்க என்னோட எம்.டி. நான் உங்களோட ஸ்டாஃப். இது தான் நம்ம ரெண்டு பேருக்கும் இருக்கும் ரிலேஷன்ஷிப்" என்றாள்.

"அப்படியா!” எங்கே என்னை நேரா பார்த்துச் சொல்லு. நமக்குள்ளே வேற ஏதும் இல்லையா?" எனச் சீறினான்.

கண்களை அழுந்த மூடி தன்னை நிதானப்படுத்திக் கொள்ள முயன்றவள், நிமிர்ந்து அவனை நேருக்கு நேராகப் பார்த்தாள்.

“நம்ம ரெண்டு பேருக்கும், வேற எந்தவிதமான சம்மந்தமும் இல்ல. இருக்கவும் முடியாது” என்று கத்தியவளின் கண்களிலிருந்து கண்ணீர் வரவா எனக் கேட்டுக் காத்திருக்க, அவன் முன்னால் அழுதுவிடக்கூடாது என்று கட்டுப்படுத்திக் கொண்டிருந்தாள்.

"அப்போ... இவ்வளவு நாளா என் கூடப் பழகியது. என்னோட ஸ்டாஃப் என்ற ரிலேஷன்ஷிப் தான் காரணமா?" நிதானமான அவனது குரலில் அடக்கப்பட்ட கோபம் அப்பட்டமாகத் தெரிந்தது.

அந்தக் குரல் உள்ளுக்குள் குளிர் பரப்பினாலும் வீம்புடன், “ஆமாம், நான் உங்க கூட பழகியது ஒரு ப்ரெண்ட்ஷிப்ல தான். நீங்க நினைக்கிற மாதிரி, வேற எதுவும் இல்ல. வீணா மனசை அலையவிட்டுக் கண்டதையும் யோசிக்காதீங்க" என்றவள் அவனது முகத்தை ஏறிடும் துணிவின்றி ஜன்னல் புறமாகத் திரும்பி நின்றுகொண்டாள்.

ஒவ்வொரு வார்த்தையும், அவனைச் சீண்டிவிட்டுக் கொண்டிருப்பதை அவள் அறியவில்லை. வேகமாக அவளருகில் வந்தவன், சீற்றத்துடன் அவள் புஜத்தைப் பற்றித் திருப்பினான்.

“சித்தார்த்! நீங்க உங்களோட லிமிட்டைத் தாண்டறீங்க. நீங்க யார் என்னைத் தொட? உங்களுக்கு யார் அந்த உரிமையைக் கொடுத்தது?” என்று சுட்டெரிக்கும் விழிகளுடன் அவனைப் பார்த்துக் கேட்டாள்.

"மது! வார்த்தையை யோசிச்சிப் பேசு. பேசியதற்குப் பின்னால அதைப் பற்றி வருந்தி எந்தப் பிரயோஜனமும் இல்ல. பதிலுக்கு நானும் பேச ஆரம்பிச்சா, நீ தாங்க மாட்ட" என்றான் கடினமான குரலில்.

"என்ன மிரட்டுறீங்களா? வீட்ல யாரும் இல்லாத நேரமா பார்த்து வந்து, கலாட்டா பண்றீங்களா? முதல்ல வெளியே போங்க" என்று வாசலை நோக்கிக் கையைக் காட்டினாள்.

தன்னைப் புரிய வைத்துவிடும் எண்ணத்துடன் சமாதானமாகப் பேசத்தான் வந்தான். ஆனால், அவளது வார்த்தைகள் அவனது ஈகோவைத் தட்டி எழுப்பியது. நடந்த விஷயங்களின் ஆரம்பப் புள்ளியே அவள் தான். ஆனால், அதில் சற்றும் சம்மந்தம் இல்லாதவள் போன்று அவள் பேசும் வார்த்தைகள் அவனுக்கு ஆத்திரத்தை உண்டாக்கியது.

"அளவுக்கு மீறி பேசற மது! உன்னைத் தொட என்ன உரிமை இருக்குன்னு கேட்ட இல்ல? அன்னைக்கு என் நெஞ்சில் சாய்ந்திருந்தது எந்த உரிமைல? இதுதான் ஒரு எம்.டி, ஸ்டாஃப் ரிலேஷன்ஷிப். இல்ல... இல்ல... ஒரு ப்ரெண்ட்டோட உரிமை. அப்படித்தானே" என்றான் கண்களில் சீற்றத்தையும், குரலில் கிண்டலையும் தேக்கி.

எந்தக் கேள்வியை அவன் கேட்டுவிடக் கூடாது என்றெண்ணி பயந்தாளோ, அந்தக் கேள்வியை கேட்டேவிட்டான். கண்களில் கண்ணீர் வழிய அவனைப் பார்த்தாள்.
"முடியல இல்ல. இப்போ, என்ன சொல்றதுன்னு தெரியல இல்ல. நானும் அதைப் பத்திப் பேசி, உன்னைத் தர்மசங்கடத்தில் ஆழ்த்தக் கூடாதுன்னு தான் நினைச்சேன். ஆனா, நீதான் உரிமை அது இதுன்னு பேசி, என்னைக் கேள்வி கேட்க வச்சிட்ட” என்றவன், கலங்கிய விழிகளுடன் தளர்ந்து போய் நின்றிருந்தவளைப் பரிதாபமாகப் பார்த்தான்.

குரலில் சற்று மென்மையை இழைத்து, “சொல்லு மது! எதுவா இருந்தாலும் மனசை விட்டுப் பேசு. முதலில் நீ நடந்துகொண்ட முறைக்கும், கொஞ்சம் நேரத்திலேயே நீ மறுத்ததுக்கும் என்ன காரணம்?" என்றான்.

கண்களை துடைத்துக்கொண்டே, "அது, என் சொந்த விஷயம். எல்லாத்தையும் உங்ககிட்டச் சொல்லணும்ன்னு அவசியம் இல்ல" என்றாள் வேகமாக.

"சொந்த விஷயமா? உன்னோட சொந்த விஷயத்துல, என்னோட வாழ்க்கையும் அடங்கி இருக்கு. நானா, உன்னிடம் என்னோட காதலைச் சொல்லி, நீ ஏத்துக்காமல் இருந்தால் அது வேறு விஷயம். நீயும் மனசு நிறைய காதலும், ஆசையும் இல்லாமலா அப்படி நடந்துகிட்ட? வார்த்தைக்கு வார்த்தைப் பேசின இல்ல. இப்போ பேசு" என்றான் சீற்றத்துடன்.

அவனது ஒவ்வொரு வார்த்தையும், அவளை உயிரோடு எரித்துக்கொண்டிருந்தது. ஆனாலும், அவனிடன் தான் நடந்து கொண்ட முறைக்கும் காரணத்தைச் சொல்ல மட்டும் மனம் இல்லை. ஆனால், அவன் பேசிய வார்த்தைகளில் இருந்த உண்மை அவளைச் சுட, அது ஆத்திரமாக மாறிச் சித்தார்த்தின் மீதே கோபத்தை ஏற்படுத்தியது,

“ச்சே! இதைப் பேச வெட்கமா இல்ல உங்களுக்கு? என்றாள் ஆவேசத்துடன்.

"நான் எதுக்கு வெட்கப்படணும்? உன் மனசுல இருக்கிற காதலை ஒத்துக்க முடியாம, மனசுல ஒண்ணும்; வெளியே வேற மாதிரி நடிச்சிட்டு இருக்கற நீதான் வெட்கப் படணும்."

தன் தவறை நினைத்து மருகிக்கொண்டிருப்பவளை, அவனது வார்த்தைகள் மேலும் மேலும் ரணமாக்கின.

‘கடவுளே! என்னை ஏன் இப்படி அலைக்கழிக்கிற?’ என்று எண்ணியவள், அழுகையைக் கட்டுப்படுத்த முடியாமல் முகத்தை மூடிக்கொண்டு தரையில் மண்டியிட்டவள் அழுகையோடு, “சித்..தா..ர்த் ப்ளீஸ்! நான் செய்தது ரொம்பப் பெரிய தப்புதான். என்னை வார்த்தையாலே கொல்லாதீங்க. நடந்ததை நினைச்சி நானே உள்ளுக்குள்ள செத்துக்கிட்டு இருக்கேன். தயவுசெய்து என்னை விட்டுடுங்க. இனி, உங்க பார்வையிலேயே படமாட்டேன். நான், உங்களை எந்த விதத்திலாவது பாதித்திருந்தா, அது என்னையும் அறியாமல் நடந்தது தான். உங்களுக்குக் கண்டிப்பா ஒரு நல்ல பொண்ணு கிடைப்பா. என்னை விட்டுடுங்க" என்று குலுங்கிக் குலுங்கி அழுதவளைப் பார்த்தபடியே நின்றிருந்தான்.

கைக்குட்டையால் தன் முகத்தைத் துடைத்துக் கொண்டான். அவளும் தன் அழுகையை மெல்ல நிறுத்த அவளது இரு தோள்களையும் பற்றி எழுப்பினான்.

நிலம் பார்த்திருந்த அவள் முகத்தை ஒற்றை விரலால் நிமிர்த்தி, ஒருகணம் கண்களை மூடி ஆழ மூச்செடுத்தவன், "உன்னோட முடிவை நீ சொல்லிட்ட. இப்போ, என்னோட முடிவை நான் சொல்றேன் கேட்டுக்க. எனக்கு வேற எந்தப் பொண்ணும் தேவை இல்ல. எனக்கு வேண்டியது நீ; நீ மட்டும்தான்" என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னான்.

இனி, தன்னைத் தொல்லை செய்ய மாட்டான். புரிந்து கொள்வான் என்ற நம்பிக்கையில் இருந்தவளின் எண்ணத்தில், மொத்தமாக மண்ணை அள்ளிப் போட்டான். அவளது முகம் ஆத்திரத்திலும், கோபத்திலும் துடித்தது.

"நான் இவ்வளவு தூரம் சொல்றேன்... ஏன் பிடிவாதமா புரிஞ்சிக்க மாட்டேன்னு இருக்கீங்க?"

"என்னை மறுக்க என்ன காரணம்? ஏன் என்னிடம் சொல்லமாட்டேன்னு, பிடிவாதமா இருக்க? எந்த நிலையிலும், உன்னை இழக்க நான் தயாராக இல்ல” என்றவன் நெற்றியைப் பிடித்துக்கொண்டான். “இல்லன்னா, என்கிட்டே ஏதாவது குறை இருக்கா? அப்படி இருந்தா சொல்லு. உனக்குப் பிடிக்காத அந்த விஷயத்தை மாற்றிக்கொள்ள முயற்சி செய்றேன்" என்றான்.

"ஐயோ சித்தார்த்! உங்களுக்கு எப்படிப் புரிய வைக்கிறதுன்னே தெரியலையே? என்னோடது முடிந்து போன அத்தியாயம். அதுல தொடரும்ன்னு போட ஆசைப்படாதீங்க" என்று கத்தியவள் அழுதுகொண்டே தன் அறைக்கு ஓடிச்சென்று கதவை மூடிக்கொண்டாள்.

சித்தார்த் கையாலாகாதனத்துடன் நின்றிருந்தான். இவ்வளவு நேரம் பேசியும் எந்தப் பிரயோஜனமும் இல்லாமல் போனதே. அவளுக்கு என்ன பிரச்சனை? எதுவும் புரியாமல் வாசலை நோக்கி நடந்தவன் எதிரில் வந்து நின்றனர் ராஜேஷும், தீபக்கும்.
“சாரி ராஜேஷ்! நான் எவ்வளவோ முயற்சி செய்தேன். ஆனா... அவளோட மனசுல என்ன இருக்குன்னு என்னால தெரிஞ்சிக்க முடியல” என்றான் ஆயாசத்துடன்.

“என்னோட வா சித்தார்த்!" என்று அவனை அழைத்துக்கொண்டு ஒரு அறைக்குச் சென்றான்.

“சில விஷயங்களை நீ தெரிஞ்சிக்க வேண்டிய நேரம் வந்துடுச்சி. நீங்க ரெண்டு பேருமே பேசி, ஒரு முடிவுக்கு வருவீங்கன்னு பார்த்தோம். ஆனா, இதுக்கு மேலே சொல்லாமல் இருக்கறது நல்லதில்ல. என் தங்கையோட மனம் கடைசி வரைக்கும் மாறாமல் போய்ட்டா, உன் வாழ்க்கையையும் சேர்த்து நாசமாக்கினதா ஆகிடும்” என்றவன் சொல்லச் சொல்ல, சித்தார்த் பேச்சற்று தடுமாறினான்.

‘மது! ஐயம் சோ சாரி! இதை எப்படி நீ என்னிடம் சொல்லுவாய்? ஏற்கெனவே, துடித்துக் கொண்டிருக்கும் உன்னை, நானும் சேர்ந்து இன்னும் துடிக்க வைத்து விட்டேனே!’ என்று அவனது உள்ளம் கதறியது.

கண்களைத் துடைத்துக் கொண்ட ராஜேஷ், சித்தார்த்தின் தோளை ஆதரவாகத் தட்டிக் கொடுத்தான். “சொல்ல வேண்டியதைச் சொல்லிட்டேன். முடிவு, உன் கையில்” என்றான்.

சற்றுநேரத்தில் தன்னைச் சமாளித்து கொண்டவன் ஆழமூச்செடுத்தான்.

“நடந்தது நடந்து போச்சு, இனி, அதை யாரும் இல்லைன்னு மாற்ற முடியாது. ஆனா, இதுக்காக மதுவை நான் வெறுத்திடுவேன்னு நினைச்சீங்களா? என்னோட முடிவில் நான் தெளிவா இருக்கேன். அவளோட கடந்த கால வாழ்க்கையைப் பற்றி எனக்குக் கவலை இல்ல. என் முடிவில் நான் தெளிவா இருக்கேன். அவள் கோழை இல்ல. அப்படியிருந்தா இவ்வளவு பெரிய பாதிப்புல இருந்து அவளால வெளியே வர முடிஞ்சிருக்காது. அவளோட மனசு மாறணும். அதுக்காக என்னால முடிஞ்சதை நான் கட்டாயம் செய்வேன்" என்றவனை ஆரத் தழுவிக்கொண்டான் ராஜேஷ்.

“எங்க வீட்ல நான் பேசிட்டேன். உங்க வீட்ல பேசுங்க. என்னோட மதுவை, பழையபடி திரும்பக் கொண்டு வருவேன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு” என்றவனை இருவரும் கண்ணீர் மல்க நன்றியுடன் பார்த்தனர்.
 

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
115
445
63
அத்தியாயம் - 23


சித்தார்த் தன் முடிவைச் சொல்லிவிட்டுச் சென்றபின், அவளைச் சந்திக்க முற்படவில்லை. ஆனால், தவறாமல் ராஜேஷிடமோ, தீபக்கிடமோ பேசிக்கொண்டிருந்தான். சித்தார்த்தின் சம்மதத்தைத் வீட்டில் உள்ளவர்களிடன் சொல்ல, அனைவரும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

சித்தார்த்தின் இடையூறு இல்லாமல் இருந்த போதும், மதுமிதா சற்று அலைப்புறுதலுடனே இருந்தாள். கீதாவும், சுரேஷும் வீட்டிற்கு வந்து அவளிடம் மன்னிப்பு கேட்க, அவளும் சற்று சமாதானமானாள்.

அதன்பிறகு, அலுவலகத்திற்கு ஏற்கெனவே விடுப்பு எழுதிக் கொடுத்திருந்தபடியால், அவனைச் சந்திக்கும் வாய்ப்பு அவளுக்கு ஏற்படவே இல்லை. அனைவருடனும் இருக்கும் போது அவனை நினைக்காமல் இருந்தவளால், தனிமையான நேரங்களில் அவனது நினைவுகள் துரத்துவதைத் தவிர்க்கவும் முடியவில்லை.

திருமண நாள் நெருங்க நெருங்க, ஏதாவது ஒரு வேலையில் அவளாகவே தன்னை ஈடுபடுத்திக் கொண்டாள். பெரியவர்களுக்கும், தன் கூட்டிலிருந்து வெளியே வந்தவளிடம் இப்போதைக்கு எதையும் பேசவேண்டாம் என்று முடிவெடுத்திருந்தனர்.

சித்தார்த்தைப் பார்க்க வேண்டும் என்று விமலா தொடர்ந்து கூறிக்கொண்டிருக்க, தீபக்கின் திருமண அழைப்பிதழுடன் ராஜேஷும், பெரியவர்கள் நால்வரும் சித்தார்த்தின் வீட்டிற்குச் சென்றனர்.

இரு குடும்பத்து அறிமுகமும் முடிந்த நிலையில், அவர்கள் வருவதை அறிந்திருந்த சித்தார்த் அலுவலகத்திலிருந்து வீட்டிற்குத் திரும்பியிருந்தான்.

“வாங்க! சாரி ட்ராஃபிக் அதிகமா இருந்ததால லேட் ஆகிடுச்சி” என்றவனை வைத்த கண் வாங்காமல் பார்த்த விமலாவிற்கு கண்ணீர் விழித்திரைகளை மறைத்தது.

அவனைப் பார்த்த மற்றவர் முகத்திலும், சிறு சலனம். அதற்குள் ராஜேஷ் அவனுடன் ஏதோ பேச ஆரம்பிக்க, அவர்கள் தங்களைச் சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டனர். சற்று நேரம் பேசிவிட்டு, அனைவரையும் திருமணத்திக்கு வரவேண்டும் என்று அன்புக் கட்டளை இட்டுவிட்டுப் புறப்பட்டனர்.

திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே மேகலா, மற்றும் அவளது குடும்பத்தினர் சென்னைக்கு வந்துவிட, மதுவின் வீட்டில் தங்க வைக்கப்பட்டனர். கீதாவும் வந்துவிட வெகு நாள்களுக்குப் பிறகு, தோழிகள் நால்வரும் ஒன்றாய் சேர்ந்ததில், வீடே சிரிப்பும் கொண்டாட்டமுமாக இருந்தது.

மேகலா வீட்டிற்கு வந்த ஒருமணி நேரத்தில் தீபக்கும் அங்கே வர, மூவரும் சேர்ந்து இருவரையும் உண்டு இல்லையென ஆகிவிட்டனர். இவர்களின் கலாட்டாவில் வந்தவன் அடுத்த பத்தாவது நிமிடம் கிளம்பி விட்டான்.

மறுநாள் காலையில் பெரியவர்கள் அனைவரும் தீபக்கின் வீட்டிற்குச் சென்றுவிட, மேகலா கைகளில் மருதாணி போட்டுவிட்டிருந்ததால் அவளையும் அவளுக்குத் துணையாக கீதாவையும் ஹாலில் விட்டு விட்டு மதுவும், வித்யாவும் மண்டபத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டியவற்றை தயார் செய்து கொண்டிருந்தனர்.

கீதா எதற்காகவோ மாடிக்குச் செல்ல, மேகலா தனியாக அமர்ந்திருந்தாள்.

"நீ வருவாய் என நான் இருந்தேன்" என்று பாடலொன்றை முணுமுணுக்க, உள்ளே நுழைந்த தீபக் வாசற்படியில் சாய்ந்து நின்றபடி, "நீ நினைச்சா மாதிரியே வந்துட்டேனா?” எனக் கேட்க, அவள் விழுந்தடித்துக் கொண்டு எழுந்தாள்.

“எதுக்கு இப்படி? இன்னைக்குத் தான் என்னைப் புதுசா பார்க்கறது மாதிரி பயப்படற” என்றபடி அவளருகில் வந்தவன், “வீடே அமைதியா இருக்கு. அறுந்த வாலு கூட்டமெல்லாம் எங்கே?" என்றான் மோகனச் சிரிப்புடன்.

நாணத்தில் கன்னங்கள் சிவக்க தலையைக் குனிந்தவள், “மண்டபத்துக்குக் கிளம்ப ரெடியாகிட்டு இருக்காங்க” என்றாள் முணுமுணுப்பாக.

“உன் குரலுக்கு என்னச்சு?” என்றான் வேண்டுமென்றே. அவள் மௌனமாக இருக்க, “இந்தக் கன்னம் கூட...” என்று சொல்ல ஆரம்பிக்க, இரண்டடி பின்னால் விலகினாள். “அம்மாவும், அப்பாவும் இப்போ தானே கிளம்பி அங்கே நம்ம வீட்டுக்கு வந்தாங்க" என்றாள் பேச்சை மாற்ற.

“ம்ம், அதனால தானே நான் இங்கே வந்தேன்" என்றபடி ஒவ்வொரு அடியாய் அவளை நோக்கி முன்னேறி வர, அவள் ஒவ்வொரு அடியாய் பின்நோக்கிச் சென்று சுவற்றில் முட்டி நின்றாள்.

இரு கைகளாலும் அவளைச் சிறை பிடித்தவன், நேசத்துடன் பார்த்தான். வெட்கத்திலும், அச்சத்திலும் மெலிதாக நடுங்கிய இதழ்களைக் கடித்தபடி தடுமாறியவளை ரசித்தபடி அவன் நின்றிருந்தான்.

அந்த நேரம் பார்த்து மாடி அறையிலிருந்து வெளியே வந்த கீதா இந்தக் காட்சியைப் பார்த்துவிட்டு, அவசரமாக உள்ளே சென்று, "சத்தம் போடக்கூடாது" என்று சொல்லி தோழிகள் இருவரையும் அழைத்து வந்தாள்.

"ஏய்! எருமை. மானத்தை வாங்காதே” என்று வித்யா சொல்ல, “இப்போ பாரு” என்ற மதுமிதா, “மேகலா உங்க அப்பா வர்றார் பாரு" என்றதுதான் தாமதம்.

அவனைப் பிடித்துத் தள்ளிவிட்டு அங்கிருந்த அறைக்குள் ஓட, மூவரும் அடக்க முடியாமல் சிரித்தனர். தீபக் அசடு வழிந்தான்.

“என்னடா! இவ்வளவு நேரமா நம்ம ஹீரோ சார் வரலையேன்னு நினைச்சேன்... கரெக்டா வந்து அட்டென்டென்ஸ் கொடுத்தாச்சு. என்ஜினியர் சார் ரொம்பவே பங்சுவல் தான்” என்றாள் மதுமிதா கிண்டலாக.

“ஏய்! அதெல்லாம் இல்ல. அம்மா தான்...” என்றவனை இடைமறித்து, “மேகலாவைப் பார்த்துட்டு வரச் சொன்னாங்களா?” என்று சொல்லி கலகலத்தாள்.

“அம்மா தாயே தெரியாம வந்துட்டேன். கிளம்பறேன்” என்றான் வேகமாக.

"இன்னும் ஒரே ஒரு நாள் பொறுத்துக்கோங்க. அப்புறம், நாங்களா நினைச்சாலும் உங்களை மீறி அவளை எங்களால் பார்க்க முடியாது” என்றாள் ஆனந்தத்துடன்.

வேறு வழியில்லாமல் சிரித்தவன், “ஆளை விடு. நான் கிளம்பறேன்” என்றான்.

"எதுக்கு இவ்வளவு வீராப்பு. பேச வந்தாச்சு. போய்ப் பேசுங்க. அதுக்கு முன்னால மருதாணி பட்ட ஷர்ட்டை மாத்திக்கிட்டுப் போங்க. மேகலா இருக்கற ரூம்ல உங்க ட்ரெஸ் இருக்கு” என்று சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டுச் சென்றாள்.

ஐந்து நிமிடம் மேகலாவுடன் பேசிவிட்டு, "அஞ்சு மணிக்குக் கார் வரும். அதுக்குள்ள ரெடியா இருங்க" என்றான்.

“அதுக்கு ஒரு போன் பண்ணிச் சொல்லி இருக்கலாமே. பாவம் அண்ணா நீ!” என்றாள் வித்யா கரிசனத்துடன்.

“வீட்லயே எனக்கு ரெண்டு வில்லிங்க" என்றபடி அவன் கிளம்பிச் செல்ல தோழிகள் சிரித்துக் கொண்டனர்.

முதல் நாள் நிச்சயத்திற்கு நெருங்கிய உறவினர்கள் மட்டுமே அழைக்கபட்டிருந்தனர். சுரேஷ் வீட்டில் ரமேஷை தவிர அனைவரும் வந்திருந்தனர். தீபாவும் வந்திருந்தாள். அபிராமியிடம் கேட்டு அவளையும் தங்களுடன் இருத்திக் கொண்டாள் வித்யா.

அனைவரும் ஒன்று சேர்ந்த பின் கேலிக்குக் கேட்க வேண்டுமா என்ன? ஒவ்வொருவரும் தனித்தனியாக மேகலாவை முகம் சிவக்க வைத்துக்கொண்டிருந்தனர். போதும் போதும் என்ற அளவுக்கு, அவளைக் கிண்டல் செய்துவிட்டு பேச்சு மெல்ல மதுவின் பக்கமாகத் திரும்பியது.

“வீட்ல ரூட் க்ளியர். இனி அடுத்து மதுவோட கல்யாணம் தான்?" என்றாள் தீபா.

அவ்வளவு நேரம் சிரித்துக்கொண்டிருந்த மது சட்டென அமைதியானாள். தீபா விடாமல், “நடந்ததையே நினைச்சிக்கிட்டு உன் வாழ்க்கையைப் பாழாக்கிக்காதே” என்றவளை, “ஏய் சும்மா இருடி!” என்றாள் வித்யா.

“அதுக்கில்ல வித்யா! சித்தார்த் அண்ணா ரொம்ப நல்லவர். அவர் நம்ம மதுவை..." என்றவளை, “தீபா! நீ வந்த வேலையை மட்டும் பார்த்துட்டுக் கிளம்பு. இந்த மீடியேட்டர் வேலையெல்லாம் வேண்டாம்" என்றவள் கோபத்துடன் அறையிலிருந்து வெளியேறினாள்.

அனைவரும் அவளது செய்கையில் திகைத்திருக்க, “என்னடி! இவள் இவ்ளோ பிடிவாதமா இருக்கா? சித்தார்த்துக்கு எல்லா விஷயமும்...” என்று ஆரம்பித்த மேகலாவின் வாயைப் பொத்தினாள் வித்யா.

"மெதுவா பேசுடீ! அவளுக்கு இந்த விஷயம் தெரியாது. தெரிஞ்சா அவ்வளவுதான் என்ன செய்வான்னு அவளுக்கே தெரியாது" என்றாள் பயத்துடன்.

“என்னைக்கு இருந்தாலும், அவகிட்டப் பேசித்தானே ஆகணும்" என்றாள் கீதா.
“எங்களுக்கும் அதே கவலைதான். அண்ணாதான், பேசும் அன்னைக்குப் பார்த்துக்கலாம் அது வரைக்குமாவது அவளைக் கொஞ்சம் ப்ரீயா விடுங்கன்னு சொன்னாங்க" – வித்யா.

வெளியே வந்த தீபா, மாடியின் மறுபுறத்தில் நின்றிருந்த மதுமிதாவின் அருகில் சென்றாள். “சாரி மது! எங்க எல்லோருக்கும் நல்ல வாழ்க்கை அமைந்து சந்தோஷமா இருக்கும் போது, நீயும் நல்லாயிருக்கணும்னு நாங்க நினைக்கமாட்டோமா? உன் மனசை நான் கஷ்டப்பட்டிருந்தா சாரி!" என்றாள் வருத்தத்துடன்.

“நான்தான் சாரி சொல்லணும். கல்யாணத்துக்கு வந்த உன்னை இப்படிப் பேசிட்டேன். மனசுல எதையும் வச்சிக்காதே தீபா! என் மேல இருக்கற கோபத்தை இப்படி அடுத்தவங்க மேலே காட்டிடறேன்" என்று கண் கலங்கினாள்.

“சரி இனி, இந்தப் பேச்சை விடு. வா உள்ளே போகலாம்” என்று அவளை அழைத்துச் சென்றாள்.

வித்யாவின் கல்யாணத்தின் போது நடந்த நிகழ்ச்சிகளைச் சொல்லி மூவரும் பேசிக்கொண்டிருக்க, மெல்ல மதுவும் அவர்களுடன் இணைந்து கொண்டாள்.

தூக்கம் கண்ணைச் சொக்க, “மணி என்னடி?" என்றாள் மேகலா.

“பதினொன்னு” என்ற தீபா, “ஏய்..! நீ எதுக்கு மணி கேக்கறேன்னு எனக்குத் தெரியுமே" என்று கேலியாகச் சொல்ல, “எதுக்குடீ கேட்டேன்? தெரிஞ்சா மாதிரி சொல்ற... சொல்லு பார்க்கலாம்" என்றாள்.

“இது என்ன பெரிய விஷயம்? இதுக்கு ஜேம்ஸ்பாண்ட் வரணுமா?” என்ற கீதாவிற்கு, தீபா ஹைஃபை கொடுத்தாள்.

“என்னடி நாத்தனார் ரெண்டு பேரும் சேர்ந்து கூட்டணி அமைக்கிறீங்களா? நாத்தனார் கூட்டணி நாங்களும் போட்டால் தெரியும் சேதி” என்று தனது வருங்கால அண்ணிக்காக பரிந்து வந்தாள் வித்யா.

“என்ன பெரிய ரகசியம்? நாளைக்கு நைட் இதே நேரம்... அத்தான்! என்னத்தான்! அவர் என்னைத்தான் எப்படிச் சொல்வேனடி” என கீதாவும், தீபாவும் சேர்ந்து அபிநயத்தோடு பாட, வித்யாவும், மதுவும் விழுந்து விழுந்து சிரித்தனர்.

“ஏய்! உதைவாங்க போறீங்க" என்று கோபத்தோடு ஆரம்பித்த மேகலா முடிக்கும் போது வெட்கத்தோடுச் சிரிக்க, “ஹய்யோ! நம்ம மேகலா வெட்கப்படறாளே! எல்லோரும் இந்தக் கண்கொள்ளா காட்சியை இன்னைக்கே பார்த்துக்கோங்க. நாளைலயிருந்து நாம மேகலாவையே பார்க்க முடியுமான்னு தெரியாது" என்று மதுமிதா சொல்ல "ஹேய்ய்....." என ஒரு கூச்சலேழுந்தது.

“நாம இப்படிச் சிரிச்சிகிட்டு இருக்கறதை, எங்க அம்மா பார்க்கணும். அவ்வளவு தான்" என்றாள் வித்யா.

“ஆமாம், எங்க மூணு பேருக்கும் கல்யாணம் ஆகல. தீபா வீட்டுக்காரர் ஊர்ல இல்ல, அதனால ஓகே. ஆனால், நீ ஏன் ரெண்டு நாளா எங்க கூடவே இருக்க? அப்புறம் உங்க அண்ணன் என்னைச் சரியாவே கவனிக்கிறதில்ல. அப்பப்போ விட்டுட்டு வெளியூர் போய்டறார்ன்னு புலம்ப வேண்டியது. நீ இப்படி எங்க அண்ணனைத் தனியா விட்டுட்டு வந்தா ஊருக்குப் போகாம" என்று போலியாக மிரட்டினாள்.

“ஆமாம் உங்க அண்ணன் என் முந்தானையைப் பிடிச்சா விடுறதே இல்ல. நான்தான் அவரை விட்டுட்டு வந்திடுறேன். உங்க அண்ணன் என்கிட்டே காலைல பேசினார். அதுக்கு அப்புறம் கண்டுக்கவே இல்லை. தங்கச்சிக் கல்யாணத்துல பிசியா இருக்காராம்" என்று உதட்டைச் சுழித்துச் சொன்ன அதேநேரம், “வித்யா” என்று குரல் கொடுத்தான் ராஜேஷ்.

“ஏ...ஹே!” என்று அனைவரும் வித்யாவைப் பார்க்க, அசடுவழிய எழுந்து சென்று கதவைத் திறந்தாள்.

ராஜேஷைப் பார்த்ததும் அனைவரும் சிரித்துவிட, “என்னையுமா!” என்றபடி தங்கையைப் பார்த்தான்.

மது, “பிரதர்! ஒருத்தரை ஒருத்தர் கிண்டல் பண்ணும்போது இவங்களை தான் கிண்டல் பண்ணணும். இவங்களைக் கிண்டல் பண்ணக்கூடாதுன்னு ஓரவஞ்சனை பார்க்கக்கூடாது" என்றாள்.
“ம்ம்... நடத்துங்க நடத்துங்க” என்றவன் வித்யாவிடம் சிறிதுநேரம் பேசிவிட்டுச் சென்றான்.

இவர்களின் கச்சேரி தொடர்ந்துகொண்டிருக்க, அங்கே வந்த மேகலாவின் அன்னை, “இன்னுமா நீங்கல்லாம் தூங்கல. மணி பன்னிரண்டு காலைல நாலு மணிக்கெல்லாம் எழுந்துக்கணும். தூங்குங்க" எனச் சொல்லிவிட்டு, விளக்கை அணைத்துவிட்டுச் சென்றார்.

பேசிக்கொண்டே ஒவ்வொருவராக உறங்கிவிட, மது மட்டும் விழித்திருந்தாள்.

‘இரண்டு வருடத்திற்கு முன், அண்ணனின் கல்யாணத்திலும் இப்படித்தானே சிரிப்பும், சந்தோஷமுமாக இருந்தோம்’ என நினைத்தவளுக்குக் கண்களில் நீர் தளும்பியது.
 

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
115
445
63
அத்தியாயம் - 25

அதிகாலையில் எழுந்து அனைவரும் மளமளவெனக் கிளம்பினர். அழகிய லேவெண்டர் நிற புடவையில் அதற்குப் பொருத்தமான நகை அணிந்து தயாராகி வந்தாள் மதுமிதா.

“வாவ்! மது அசத்தறியே...” என்றவள் அவளது கன்னத்தில் முத்தமிட, “என்னடி இது? கொஞ்சங்கூட வெட்கமே இல்லாம..." என்று சிடுசிடுத்தாள் மது.

“பாராட்டை வார்த்தையா சொல்றதுக்குப் பதிலா, இப்படி முத்தம் கொடுத்துச் சொல்கிறோம். அதுக்கு எதுக்கு வெட்கம்?"

“போதும்மா உன்னோட பிரசங்கம். மேகலா வந்துட்டா. அவளுக்கு அலங்காரத்தை ஆரம்பிங்க. நான் அத்தானைப் பார்த்துட்டு வரேன். ரெண்டு தடவை போன் வந்தாச்சு" என்று சொல்லிவிட்டுக் கிளம்பினாள்.

“ஆமாம்... அவரோட டிரெஸ் டிசைனர் போய்ப் பார்த்துச் சரின்னு சொன்னாதான், எங்க அண்ணனுக்கு நிம்மதி" என்று அன்புடன் நொடித்துக்கொண்டாள் வித்யா.

“சரி விடு, நாளைல இருந்து அவளையா கூப்பிடுவார்? அந்தப் போஸ்ட் இன்னும் கொஞ்ச நேரத்துல நம்ம மேகி மேடத்துக்குக் கைமாறிடும்” என்று கீதா கேலி செய்ய, மேகலா சிரித்துக்கொண்டாள்.

முகூர்த்த நேரத்திற்கு மேகலாவை, தீபக்கின் அருகில் அமரவைத்ததும், அவளது மனத்தில் நிம்மதியும், சந்தோஷமும் நிறைந்து ஆனந்தக் கண்ணீரை வரவழைக்க, யாருக்கும் தெரியாமல் சுண்டிவிட்டு புன்னகையை உதட்டில் தேக்கியபடி நின்றிருந்தாள்.

‘என்னவோ தெரியவில்லை. காலையிலிருந்தே உள்ளுக்குள் பரபரப்பாக இருந்தது அவ்ளுக்கு. திருமணம் நடக்கப் போகும் சந்தோஷம்’ என எண்ணிகொண்டே நிமிர்ந்தவள், சித்தார்த்தின் பெற்றோர் வருவதைப் பார்த்தாள்.

இவர்களுக்கு எப்போது அழைப்பிதழ் கொடுத்தனர் எனப் புரியாமல் பார்க்க, இருவரும் மேடையருகே வந்தனர். சந்துருவும், விமலாவும் வரவேற்று முன்னால் அமர வைக்க, தேவகியின் மதுவைக் கண்டதும் புன்னகைத்தார்.

அவளும், மணவரையிலிருந்து இறங்கிச் சென்று வணங்கியவள், “வாங்க ஆன்ட்டி! வாங்க அங்கிள்” என்றவள், “வீட்லயிருந்து யாரும் வரலையா?" எனப் பொதுவாக விசாரித்தாள்.

“ரிசப்ஷனுக்கு வருவாங்க. உன் ஹெல்த் எப்படியிருக்கு?" என்று விசாரித்தார் தேவகி.

“நல்லாயிருக்கேன் ஆன்ட்டி!” என்று சிரித்துக்கொண்டே நிமிர்ந்தவள், ராஜேஷுடன் பேசிக்கொண்டே வந்த சித்தார்த்தைப் பார்த்ததும் மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டாள்.

ராஜேஷுடன் பேசியபடியே வந்தாலும், உச்சி முதல் பாதம் வரை அவளை ரசனையுடன் அளவிட்டபடி வந்து கொண்டிருந்தான். இருவரது விழிகளும் ஒரே நேர்க்கோட்டில் சந்தித்துக்கொள்ள, அவசரமாக இமைகளைத் தாழ்த்திக்கொண்டாள்.

அவள் அங்கிருந்து நகர முயல, “மது! உன்னோட பாஸ்” என்று ராஜேஷ் அவளைத் தடுத்து நிறுத்தினான்.

மனத்திற்குள் தமையனை கடிந்து கொண்டவள், வலிய வரவழைத்த புன்னகையுடன், "வாங்க!" என்றவள்து பார்வை அவனது தோள் வளைவிற்கு மேல் உயரவில்லை. அவனது அருகாமையில் இதயம் படபடவென அடித்துக்கொள்ள, தவிப்புடன் நின்றிருந்தாள்.

புன்முறுவலுடன், "எப்படியிருக்க மது?" என்று மென்மையாகக் கேட்டான்.

“ம்ம்... நல்லயிருக்கேன்" என்று சொல்லிவிட்டு, விறுவிறுவென மேடைக்குச் சென்றவள், அவனது கண்ணில் படாதபடி, மறைந்து நின்றாள்.

அங்கே வந்த ராஜீ, “நீ என்ன இங்கே நிக்கிற? மேகலா பின்னால வந்து நில்லு. எங்கேயும் போகக்கூடாது" என்று மேகலாவிற்குப் பின்னால் நிறுத்த, அவளுக்கு ஆயாசமாக இருந்தது.

தீபக், மேகலாவின் கழுத்தில் மங்கல்யத்தைச் சூட்ட, மகிழ்ச்சியில் அவளது கண்கள் கலங்கின. ‘கடவுளே! இவங்க வாழ்க்கை முழுதும் சந்தோஷமா, நிறைவோட இருக்கணும்’ என்று வேண்டிக்கொண்டே புன்னகையுடன் நிமிர்ந்தவள், குறுகுறுவெனத் தன்னையே பார்த்துக் கொண்டிருந்தவனைக் கண்டதும், தலையைக் குனிந்து கொண்டாள்.

ஒவ்வொருவராக வந்து மணமக்களை வாழ்த்திப் பரிசுகளைக் கொடுக்க, மதுவின் கண்கள் அவளையும் அறியாமல், சித்தார்த் அமர்ந்திருந்த இடத்தைப் பார்த்தன. அங்கே அவன் இல்லாமல் போக, அவளது விழிகள் அலைபாய்ந்தன.

அவளுக்குப் பின்னாலிருந்து, "க்கும்" என்று சப்தம் கேட்டுத் திரும்பியவள், குறும்புப் புன்னகையுடன், ‘என்னைத் தானே தேடினாய்!’ என்று பார்வையாலேயே அவன் கேட்பதைப் போலிருந்தது.

அவனது விழிவழித் தீண்டல் மனத்தை ஊடுருவிச் சிலிர்க்க வைக்க, அதைத் தாள இயலாதவளாக அங்கிருந்து வேகமாக நகர்ந்தாள். மணமகளின் அறைக்குச் சென்று அமர்ந்த பின்னும், மனம் முழுவதும் தகித்தது.

சித்தார்த்தின் மனமோ, ‘இவளை எப்படி மனம் மாறச் செய்வது?’ என்று பெரும் தவிப்பில்! அவளைப் பின்தொடர்ந்தது.

அரை மணி நேரத்திற்குப் பிறகு, தேவகியுடன் மணமகளின் அறைக்கு வந்தாள் வித்யா.

தலையைப் பிடித்தபடி சுருண்டு படுத்திருக்க, "மதும்மா!” என்ற பாசமான அழைப்பில் எழுந்தவள், "வாங்க ஆன்ட்டி!" என்றாள்.

“உடம்பு இன்னும் சரியாகலயா? நானும் வந்ததுலயிருந்து பார்க்கிறேன், உன் முகமே சரி இல்லையே?" என்றான் அக்கறையுடன்.

“தூக்கம் சரியில்லாததால, லேசா தலைவலி” என்றவள், “சாப்டீங்களா ஆன்ட்டி!" என்றாள்.

“ஆச்சும்மா. நீ ரெஸ்ட் எடுத்துக்கோ. நாங்க கிளம்பறோம்” என்றவர், அவள் கன்னத்தை வருடிக் கொடுத்து விட்டுக் கிளம்பினார்.

அவர்களை வழியனுப்பச் சென்றவளது விழிகள், சித்தார்த்தை எதிர்பார்த்துச் சுழன்றன.

அவள் பக்கத்தில் வந்த கீதா, “சித்தார்த் கிஃப்ட் கொடுத்துட்டு, அப்போவே கிளம்பிட்டார்” என்றாள்.

சடாரெனத் திரும்பி, தோழியைப் பார்த்தாள். அவளோ மர்மப் புன்னகையுடன் அங்கிருந்து செல்ல, இப்போது உண்மையாகவே தலை வலித்தது அவளுக்கு.

அன்று மாலை வரவேற்பிற்கு தீபக்கின் நண்பர்களும், உடன் வேலை செய்பவர்களும் வந்திருக்க மண்டபம் முழுதும் இளமைக் கொண்டாட்டமாக இருந்தது. பெரியவர்கள் அனைவரும் ஒருபுறமாக ஒதுங்கிவிட, இளையவர்களின் சப்தம் மண்டபத்தையே அதிர வைத்துக் கொண்டிருந்தது.

ஒருவருக்கொருவர் அறிமுகம் என்பதால் தீபக்கின் நண்பர்கள், தோழியர் ஐவரையும் சரமாரியாகக் கிண்டலடிக்க, மதுவும், கீதாவும் அதற்குப் பதில் கொடுக்க என்று கலகலப்பாக இருந்தது.

எதற்கோ சிரித்துக்கொண்டே வந்த மதுமிதா, சித்தார்த்தின் அண்ணனும், அண்ணியும் வருவதைக் கண்டதும் அவர்களை வரவேற்றவள், "ஹே ஆர்த்தி குட்டி!" என்று குழந்தையைத் தூக்கிக் கொண்டாள்.

“ஹாய் மது! எப்படி இருக்க?" – மீரா.

“நல்லாயிருக்கேன் அக்கா! நேத்ரா, அஷ்வந்தைக் கூட்டிட்டு வந்திருக்கலாமே!” என்றாள்.

“அத்தை, மாமாவோட இன்னொரு ஃபங்க்‌ஷனுக்கு போயிருக்காங்க. சித்தார்த் வெளியூர் போய்ட்டு வந்ததால் வேலை அதிகம்" என்று அவள் சொல்லும்போதே, மதுவின் முகத்தில் சிறு நிம்மதி பரவுவதைக் கவனித்ததும் சொல்ல வந்த வார்த்தைகளைச் சொல்லாமல் நிறுத்திக் கொண்டாள்.

மீராவிற்கு ஆச்சரியமாக இருந்தது. இரண்டு பேருக்கும் நடுவில், ஏதோ நடந்திருக்கிறது என்று யூகித்தவள் மதுவை ஆழ்ந்து பார்த்தாள். அதை உணர்ந்த மதுமிதா, அவர்களை அமரவைத்து உபசரித்துவிட்டு மேடைக்குச் சென்றாள்.

தீபக்கின் நண்பர்கள், “மது ஒரு பாட்டுப் பாடு” என்றனர்.

“அதான் மியூஸிக் ட்ரூப் இருக்கே...” என்று நாசூக்காக மறுக்க, அவர்கள் மீண்டும் மீண்டும் கேட்டனர்.

தீபக், “மது! பாடு ப்ளீஸ்!” என்று சொல்ல மேகலாவும், “எங்களுக்காக...” என்றாள்.

“கல்யாண ஜோடியே கேட்கறாங்க. மறுக்காதே” என்று நண்பர்கள் சொல்ல, வேறுவழி இல்லாமல், "ஒரு தேவதை வந்துவிட்டாள்; உன்னைத் தேடியே" என்று பாட மண்டபமே அவள் பாடலை ரசித்துக்கொண்டிருந்தது.

பாடல் முடிந்தவுடன் கைதட்டலும், “மது அசத்திட்ட!” என்ற குரல்களுக்குப் புன்னகையை பதிலாகத் தந்தபடி வந்தவள், ஒரு தூணின் அருகில் வந்ததும் சட்டென நின்றாள்.

கைகளைக் கட்டிக்கொண்டு தூணில் சார்ந்து நின்றிருந்த சித்தார்த் ஆழ்ந்த பார்வையை அவள் மீது வீசிக்கொண்டிருக்க, அவளது உள்ளம் இனம்புரியா உணர்வில் தத்தளித்தது. அங்கிருந்து விலக எண்ணினாலும், அவளது கால்கள் நகர மறுத்தன. அவனது இதயம், அவளது சிறு புன்னகைக்காக ஏங்கியது.

வரவேற்பு முடிந்தபின் அனைவரும் உணவருந்தி விட்டு ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். மதுமிதா, சித்தார்த்தின் கண்களில் படக்கூடாது என ஒளிந்து ஒளிந்து செல்வதும், அவனது விழிகளோ அவளைத் தேடுவதையுமே கடமையாக செய்து கொண்டிருக்க, மற்றவர்கள் அதைப் பார்த்தும் பார்க்காதது போலிருந்தனர்.

மதுமிதா அந்தப் பக்கமாகச் செல்வதைக் கவனித்த அபிராமி, “மது இங்கே வா!” என்று அழைக்க, தயங்கிய நடையுடன் அங்கே வந்தாள். “ரெண்டு நாளா கல்யாண வேலைல அலைஞ்சிட்டே இருக்க. கொஞ்ச நேரம் இப்படி உட்கார்” என்று அவளது கையைப் பிடித்துத் தன்னருகில் அமர வைத்தார்.

“இல்லை ஆன்ட்டி! எல்லாத்தையும் பேக் பண்ணணும்” என்று மறுத்துவிட்டுச் செல்ல எண்ணியவளை, “அதெல்லாம் எடுத்து வச்சிட்டு இருக்காங்க. உட்கார் கொஞ்ச நேரம்" என்று விமலாவும் சொன்னார்.

அவர்களது வாத்தையை மீற முடியாமல் அமர்ந்தவளுக்கு, மொழி புரியாத ஊரில் தனியாக மாட்டிக்கொண்டதைப் போலிருந்தது.

விமலாவிற்குப் பின்னால் முகத்தை மறைத்துக்கொண்டு அமர்ந்திருந்த மதுமிதாவின் அருகில் வந்த ஆர்த்தி குனிந்து அவளது முகத்தைப் பார்த்துச் சிரிக்க, முறுவலுடன் குழந்தையைத் தூக்கி முத்தமிட்டாள்.

பதிலுக்குக் குழந்தையும் அவளது கன்னத்தில் முத்தமிட, மூக்குடன் மூக்கை உரசி விளையாடிக் கொண்டே சிரித்தபடி நிமிர்ந்தவள், நேசத்தில் தத்தளித்த விழிகளுடன் தன்னைப் பார்த்துக்கொண்டிருந்த சித்தார்த்தைக் கண்டதும், விதிர்த்துப் போனாள். சட்டென குழந்தையை இறக்கி விட்டவள், யாரிடமும் எதுவும் சொல்லாமல் எழுந்து சென்றாள்.

அவளது ஒதுக்கத்தைக் கண்டவன், ‘நத்தையைப் போல அவள் தனக்குள்ளே சுருண்டு கொள்ள தானும் ஒரு காரணம் என்று எண்ணியபோது, தன் மீதே அவனுக்குக் கோபம் தோன்றியது.

மதுவின் ஒதுக்கத்தையும், சித்தார்த்தின் காதல் பார்வையையும் ஆரம்பத்திலிருந்து கவனித்துக் கொண்டிருந்த மீராவிற்கு, ‘இனியும் தாமதிக்கக் கூடாது. இந்த மது, நம்ம சித்தார்த்தை ரொம்பவே ஏங்க விடறா. வீட்டில் சொல்லிச் சீக்கிரமே கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்யவேண்டும்’ என்ற முடிவுடன், அனைவரிடமும் விடைபெற்று புறப்பட்டாள்.
 

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
115
445
63
அத்தியாயம் — 26


அன்று காலையிலிருந்தே சித்தார்த்திற்கு, மதுவின் நினைவாகவே இருந்தது. தீபக்கின் திருமணம் முடிந்து இரண்டு நாட்கள் ஆகியிருந்தன. மது சித்தார்த்தைப் பார்ப்பதைத் தவிர்க்க அவளது பாராமுகம் மேலும், அவனது காதல் தீயைக் கொழுந்து விட்டு எரிய வைத்தது.

அவனது மூத்தச் சகோதரி சுபாஷிணி டெல்லியிலிருந்து தனது குடும்பத்துடன் வந்திருந்தாள். அவளருகில் அமர்ந்திருந்தவன், அவளது குழந்தையைக் கையில் ஏந்திக் கொஞ்சியும், விளையாடிக் கொண்டும் இருந்தான்.

குழந்தையின் நெற்றியில் முட்ட, அந்த மழலை கலகலவென நகைத்தது. மீண்டும் மீண்டும் அவன் அதையே செய்துகொண்டிருக்க, குறும்புப் புன்னகையுடன் மீரா அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

“அண்ணி! என்ன சிரிப்பு? எங்களுக்கும் சொல்லலாமே!” என்றாள் சுபாஷிணி.

“அதுவா... உங்க தம்பி இன்னும் நேத்து நினைப்புல இருந்து வெளியே வரலை போல...” என்று கிண்டலாகச் சொல்ல, சித்தார்த் அவளைப் பார்த்தான்.

“ஹே! என்ன விஷயம்? மதுவா?” என்று ஆர்வத்துடன் கேட்டாள் சுபா.

அவள் பதில் சொல்லும் முன், “அண்ணி காஃபி கிடைக்குமா...” என்றான் அவளை அங்கிருந்து கிளப்பும் நினைப்புடன்.

“கிடைக்குமே. ஒரு அஞ்சு நிமிஷம் வெயிட் பண்ணுங்க. சுபாகிட்ட ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்லிட்டு வந்திடுறேன்” என்றாள் சிரிப்பை அடக்கியபடி.

அதற்கு மேல் அவளை எப்படிக் கிளப்புவது எனத் தெரியாமல், “அண்ணி ப்ளீஸ்!” என்றான்.

“சும்மா இருடா! அண்ணி நீங்க சொல்லுங்க…” என்று தனது முழு ஈடுபாட்டையும் கதையைக் கேட்பதில் காண்பித்தாள்.

மீரா சிரிப்புடன் சொல்ல ஆரம்பிக்க ‘இனி, என்ன சொன்னாலும், நடப்பது தான் நடக்கும்’ என்று எண்ணிக்கொண்டவன், குழந்தையுடன் எழுந்தான்.
“எங்கே போற? உட்காரு இங்கே” என்றாள்.

“அவசர வேலை இருக்கு. மறந்துட்டேன்” என்றவனை, “சும்மா அளக்காதே. உன்கிட்ட நிறைய கேட்கவேண்டியிருக்கு” என்று அவனை இழுத்து அமர வைத்தாள்.

மதுவிடம் பேசியதிலிருந்து, வீட்டிற்கு வரும் வரை நடந்த அனைத்தையும் ஒன்றுவிடாமல், நிதானமாகச் சொல்லி முடித்தாள் மீரா. அவன் தலைவிதியே என்று அமர்ந்திருந்தான்.

தம்பியைப் பார்த்தவள், “என்னடா! உங்க ரெண்டு பேருக்கும் லடாயா?” என்றாள்.

“அதெல்லாம் ஒண்ணுமில்ல” என்றான் சுரத்தே இல்லாமல்.

தம்பியை ஆழ்ந்து பார்த்தாள். அவன் தமக்கையின் கண்களைச் சந்திக்கும் துணிவில்லாமல் வேறெங்கோ பார்த்துக்கொண்டிருந்தான். சுபாஷிணிக்கு தனது சகோதரர்களில் சித்தார்த்திடம் தான் மிகவும் பாசமாக இருப்பாள். அவனுமே தனது சகோதரியிடம் அளவு கடந்த பிரியத்தை வைத்திருந்தான்.

முதன்முதலில் மதுவைக் காதலிக்கும் விஷயத்தைக் கூட அவளிடம் தான் பகிர்ந்து கொண்டான். அதேபோல் அவளைக் காதலித்தது எவ்வளவு பெரிய தவறு என்றும் அவளிடம் தான் புலம்பினான்.

மீரா கூறியதிலிருந்து, இப்போதும் இவன்தான், அவள்மீது மையலுடன் இருக்கிறானோ!’ என்று எண்ணிக்கொண்டு, “எப்போ உன் ஹீரோயினை எங்க கண்ணுல காட்டப் போற?” என்றாள்.

“நேரம் வரட்டும்” என்றான்.

“என்னடா ஆச்சு உனக்கு? திடீர்னு சீரியஸ் ஆகிட்ட?" என்றவளுக்கு அவனது மனத்தை அரித்துக்கொண்டிருக்கும், விஷயத்தை அறிந்து அதைத் தீர்த்து வைத்துவிட வேண்டும் என்ற வேகம் எழுந்தது.

ஆனால், அவன் அதற்கு வழிகொடுக்காமல், “நீ வெளியே போகணும்னு சொன்னியே எங்கே போகணும்?” என்றான்.

“நாளைக்குக் கூடப் போய்க்கலாம். நீ சொல்லு... மதுவை எப்போ இண்ட்ரடியூஸ் பண்ற?” என்றாள் விடாமல்.

“நீ ஊருக்குக் கிளம்பறதுக்குள்ள...” என்றவன், “இப்போ நீ கிளம்பி வந்தா, உன்னை அங்கே விட்டுட்டு, என் வேலையை முடிச்சிக்கிட்டு வந்து உன்னைப் பிக்அப் பண்ணிக்குவேன்” என்றான்.

“சரிடா வரேன்” என்றதும், அவன் எழுந்து தன் அறைக்குச் சென்றான்.

“சுபா! பத்து நாளா சித்தார்த் கொஞ்சம் டல்லாதான் இருக்கார். எனக்கு என்னவோ ரெண்டு பேருக்கும் நடுவில் ஏதோ பிரச்சனைன்னு நினைக்கிறேன்" என்றாள்.

“பார்ப்போம் அண்ணி. அறுபதான் கல்யாணத்துக்கு அவங்களை அழைக்கப் போகும் போது நானும் வரேன்" என்றாள்.

தன் அறைக்குச் சென்ற சித்தார்த்திற்கு எரிச்சலாக வந்தது. தமக்கையும், அண்ணியும் சேர்ந்து அவனைச் சீண்டி விட்டதைப் போல ஆனது. விட்டுப் பிடி விட்டுப் பிடி என்று நாட்களை கடத்தியாயிற்று. இனியும், காலம் கனியும் என்று காத்திருந்தால், காவியோடு தான் அலைய வேண்டும் என்று நினைத்துக் கொண்டு ராஜேஷுக்குப் போன் செய்தான்.

“சொல்லுடா மாப்பிள்ளை! எப்படியிருக்க?" உற்சாகத்துடன் கேட்டான்.

“நான் நல்லாயிருக்கேன். செகண்ட் ஹனிமூன் எப்படி இருக்கு?"

அவன் சிரிப்புடன், “அட நீ வேறப்பா! எல்லாம் மதுவோட ப்ளான். அவங்க அண்ணியை, நான் கண்டுக்கறதே இல்லயாம். இங்கே இருக்கும் போதாவது ரெண்டு பேரும் தனியா வெளியே போய்ட்டு வாங்கன்னு அனுப்பி வச்சிட்டா!” என்றான்.

“உன் தங்கைக்கு என்னைத் தவிர எல்லார் மேலயும் அக்கறையை அள்ளிக் கொட்டுவாளே!” என்றான் போலியான ஏக்கத்துடன்.

சிரித்தவன், “நீயே அவகிட்ட கேளேன். ஏன்டி என்னை இப்படிப் பாடாய் படுத்தறேன்னு” என்றான் அவன்.

“கேட்டுடுவோமா?” என்று சித்தார்த் குறும்புடன் கேட்டான்.

“தீபக் கல்யாணத்தில் இருந்தே அவள் கொஞ்சம் மூட் அவுட்டில் இருக்கா. நீ வேற ஏதாவது பேசி அவளை இன்னும்..." என்று தடுமாறினான்.

“ஹலோ ஹலோ! கொஞ்சம் நிறுத்துப்பா. என்னோட லவ்வுக்கு ஹெல்ப் பண்ணுவீங்கன்னு பார்த்தா, நீங்க ரெண்டு பேரும் அவங்க அவங்க பொண்டாட்டியைக் கூட்டிக்கிட்டு ஹனிமூன் கிளம்பிட்டீங்க. அப்போ எனக்காக நான் தானே பேசணும்" என்றான் போலியான கோபத்துடன்.

“அதான் சொன்னேனேப்பா! ஆனால், நாங்க இங்கேயும் உங்க ரெண்டு பேரைப் பத்தித் தான் பேசிக்கிட்டு இருக்கோம்."

“சரிப்பா! உங்களை நம்பறேன். நான் மதுகிட்டப் பேசணும். உனக்கு இன்ஃபர்மேஷன் சொல்லத்தான் போன் செய்தேன்" என்றான்.

“பேசு… ஆனா, கொஞ்சம் நிதானமா பேசு. அவசரப்பட்டு ஏதும் பேசிடாதேடா. அவ தாங்கமாட்டா" என்றான் கவலையுடன்.

“பாசமலரே! உன்கிட்டச் சொல்லாமலேயே, பேசியிருக்கணும். நீ ரொம்பப் ஃபீல் பண்ணாம, உன் ஹனிமூனை முடிச்சிக்கிட்டு வந்து சேருங்க" என்றவன், சிரிப்புடனே போனை வைத்தான்.

வெளியே சிரித்தாலும், உள்ளுக்குள் சற்றுக் கவலையாகவே இருந்தது. ‘எப்படி அவளிடம் பேசி சம்மதம் வாங்குவது என்று?’ தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு மதுவின் வீட்டிற்குப் போன் செய்தான்.

போனை எடுத்த சந்திர சேகரிடம் நலம் விசாரித்துவிட்டு, சற்று நேரம் பொதுவான விஷயங்களைப் பேசிக்கொண்டிருந்தவன், மதுவிடம் பேசவேண்டும் என்றான்.

“இருங்க மதுவைக் கூப்பிடறேன்” என்றவர், “மதும்மா! உனக்குப் போன்” என்று அவளிடம் ரிசீவரைக் கொடுத்துவிட்டு தனது அறைக்குச் சென்றார்.

மது, “ஹலோ யாரு?"

சித்தார்த், “என்ன மேடம்? வெற்றிகரமா ஒரு கல்யாணத்தை முடிச்சி, அவங்களை ஹனிமூனுக்கும் அனுப்பி வச்சிட்டீங்க. இனி, நீங்க ப்ரீ தானே" என்றான் கிண்டலாக.

‘போன் என்றதுமே, இவன்தான்னு புரிஞ்சிருக்கணும். போனை வைத்துவிடலாமா’ என்று எண்ணும்போதே, அவன் நேராக வந்து நின்றதைப் போல வந்துவிட்டால்... என்ற பயத்தில் ரிசீவரை இறுகப் பற்றியபடி பேசாமல் இருந்தாள்.

“என்ன மது? என் குரலைக் கேட்டச் சந்தோஷத்தில், சிலையாகிட்டியா? ஆனா, நீ இதுக்கெல்லாம் அசரமாட்டியே! ஒருவேளை, போனைக் கட் பண்ணலாம்னு நினைக்கிறியா? சேச்ச! நீ அப்படியெல்லாம் நினைக்கமாட்ட. நீ போனைக் கட் பண்ணா; நான் நேரா வந்து உன் முன்னால நிற்பேன்னு உனக்குத் தெரியுமே. இவன் மூஞ்சியை நேரா பார்க்கறதுக்கு, பல்லைக் கடிச்சிக்கிட்டுப் போன்லயே பேசிடலாம்ன்னு தானே நினைக்கிற" என்றான் அவளது மனத்தைப் படித்ததைப் போல.

“உங்களுக்கு என்ன வேண்டும்? ஏன் என்னை இப்படித் தொல்லை செய்றீங்க?" என்றாள் ஆயாசத்துடன்.

“உன்கிட்டப் பேசணும். நீயே இடம் சொல்லு... மீட் பண்ணலாம்.”

“என்னால் எங்கேயும் வர முடியாது" என்றாள் எரிச்சலை மறைத்தபடி.

“சரி நீ வர வேண்டாம். நானே வரேன்” என்றான் விடாமல்.

“இல்ல... நான் வெளியே கிளம்பிட்டிருக்கேன்” என்று அவள் அவசரமாகச் சொல்ல, “ரொம்ப வசதியா போச்சு. நீ எங்கே போறேன்னு சொல்லு. நானே வந்து உன்னை மீட் பண்றேன்” என்றான்.

வேறு வினையே வேண்டாம் என்று நினைத்தவள், “இன்னைக்கு வேண்டாம். ஒரு நாலைந்து நாள் ஆகட்டும்" என்றாள்.

ஒரு நீண்ட பெருமூச்சுடன், “ஹும்... என்னை அவாய்ட் பண்ணணும்னே நாலைந்து நாள் கேக்கறே. ஓகே. ஆனால், அதுக்கு மேலயும் நீ என்னைத் தவிர்க்க நினைத்தால் நான் என்ன செய்வேன்னு உனக்கே தெரியும். நீ இன்னும் மறந்திருக்க மாட்டேன்னு நினைக்கிறேன்” என்றவனுக்கு மௌனமே பதிலாக வந்தது.

“ஆஹ்! அப்புறம், என்னையே நினைச்சிட்டுச் சாப்பிடாம உடம்பைக் கெடுத்துக்காதே. தீபக் கல்யாணத்திலேயே, கொஞ்சம் இளைச்சி தெரிஞ்ச. சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கட்டும். பை!" என்று போனை வைத்தான்.

புயல் அடித்து ஓய்ந்தது போலயிருந்தது அவளுக்கு. ஆனால், அந்தப் புயல் இப்போது மதுவின் மனத்தில் மையம் கொண்டு, அவளைத் தவிக்க வைத்துக் கொண்டிருந்தது.

‘என்ன கொழுப்பு இவனுக்கு? நான் என்னவோ இவன் நினைப்பிலேயே சாப்பிடாமல் இருக்கா மாதிரி. இவனை எப்படிச் சமாளிப்பது?’ என்றபடி தனது அறைக்குச் சென்றவள், தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்தாள்.

காரை சிட்டிசென்டரில் நிறுத்தியவன், "சுபா நீ பாப்பாவை என்னிடம் கொடு" என்று குழந்தையை வாங்கிக்கொண்டு முன்னால் நடக்க, சுபா தன் மூத்த மகன் வருணுடன் தம்பியைப் பின்தொடர்ந்தாள்.

லாண்ட்மார்க்கின் அருகில் வந்தபோது, சித்தார்த்தின் மொபைல் ஒலிக்க பேசியவன், “ஜீவா பேசினான். அவனும் பர்சேஸுக்கு இங்கே தான் வந்துட்டு இருக்கானாம். ஒண்ணு பண்ணு... உன் பர்சேஸ் முடிஞ்சிட்டா, ஜீவாவோடவே வீட்டுக்குப் போய்டு. நான் போய் அவனைக் கூட்டிட்டு வரேன்" என்றவன் வருணையும் அழைத்துக்கொண்டு, பார்கிங்கிற்குச் சென்றான்.

சுபா, சிடிக்களைப் பார்த்துக்கொண்டிருக்க, குழந்தை அருந்ததி அங்கிருந்த ஷெல்பைச் சுற்றிச் சுற்றி ஓடி விளையாடிக்கொண்டிருக்க, சுபா குழந்தையிடம் ஒரு கண்ணும், சிடிக்களைப் பார்ப்பதுமாக இருந்தாள். ஒரு திருப்பத்தில் கை நிறைய சிடியை வைத்துக்கொண்டு நின்றிருந்த மதுவின் மீது குழந்தை மோத, அவள் கையிலிருந்த சிடிக்கள் கீழே விழுந்தன.

சத்தம் கேட்டு ஓடிவந்த சுபா, உதட்டைப் பிதுக்கியபடி அழத் தயாராகிக்கொண்டிருந்த குழந்தையைச் சமாதானம் செய்து கொண்டிருந்தவளைப் பார்த்ததும், "மதுமிதா... நீயா!” என்றாள் ஆச்சரியமும், அதிர்ச்சியுமாக.

குரல் கேட்டு நிமிர்ந்தவள், “சுபா அண்ணி! நீங்களா? வாட் எ சர்ப்ரைஸ்?" என்றவள் கேட்டுக்கொண்டே வந்து சுபாவின் கையைப் பிடித்துக்கொண்டாள்.

சுபா குழந்தையைத் தூக்கியபடி, “அம்மா இப்போ சென்னைக்கு வந்து செட்டில் ஆகிட்டாங்க. நேத்துத் தான் ஊரிலயிருந்து வந்தோம்” என்றாள்.

“உங்க குழந்தையா?” என்று கேட்டுக்கொண்டே குழந்தையின் கன்னத்தைத் தட்டிக் கொடுத்தபடி, “உங்க பேர் என்ன?” என்றாள் கொஞ்சலாக.

“இன்னும் பேச்சு வரல. அருந்ததி!"

“ஓஹ்... நீங்க அருகுட்டியா ஆன்ட்டிகிட்ட வரீங்களா?" என்று கை நீட்டி அழைக்க, சிரித்துக்கொண்டே குழந்தை அவளிடம் தாவ, “ஸ்வீட் குட்டி!” என்றபடி தூக்கிக் கொண்டாள். “அண்ணா கூட வந்தீங்களா?"

“இல்லை மதுமிதா! என் தம்பிகூட வந்தேன். அவன் ஃப்ரெண்டைப் பார்க்கப் போயிருக்கான். என்னோட பர்சேர் முடிஞ்சிடுச்சி. நீயும் முடிச்சிட்டா வாயேன்... கீழே போய் ஒரு காஃபி சாப்டுட்டுப் போகலாம்" என்று அவளுடன் காஃபி ஷாப்பிற்கு வந்தாள்.

சித்தார்த்திற்குப் போன் செய்து காஃபி ஷாப்பிற்கு வரச்சொல்லிவிட்டு, “நீ எப்படியிருக்க? உன் வீட்ல எல்லோரும் எப்படியிருக்காங்க?" என்று விசாரித்தாள்.

“இருக்காங்க அண்ணி! எனக்காக எல்லாத்தையும் மனசுக்குள்ள போட்டுப் புதைச்சிக்கிட்டு..." என்றவளின் கண்கள் கலங்கின.

சுபாஷிணியின் கண்களும் கலங்கின. ஆயினும், தன்னைச் ஸ்திரப்படுத்திக் கொண்டு ஆதரவாஅக அவளது தோளைத் தட்டிக்கொடுத்தாள். "அழாதேம்மா! வாழ்க்கைல ஈடு செய்ய முடியாத இழப்புதான். ஆனாலும், உனக்காகத் தான் அவங்க வாழ்ந்துட்டு இருக்காங்க. அவங்களுக்காக நீ உன் மனசை மாத்திக்கக் கூடாதா?" என்றாள்.

“முடியலையே அண்ணி! ஒவ்வொரு நிமிஷமும் நான் இழந்த சந்தோஷம் தானே என் கண்முன்னால நிக்குது. மனசார சிரிக்கவும் முடியல. சிரிப்பது போல நடிக்கவும் முடியல. உள்ளுக்குள்ள செத்துக்கிட்டு இருக்கேன்" என்றவளால், அதற்கு மேல் பேச முடியாமல் அழுதபடி தலைகுனிந்தாள்.

சுபாஷிணிக்கு அவளது கண்ணீரைத் துடைக்கும் திராணியின்றி மௌனமாக அமர்ந்திருக்க, "ஷாப்பிங் முடிக்கறதுக்குள்ள, டயர்ட் ஆகி இங்கே வந்து உட்கார்ந்தாச்சா?" என்றவனின் குரலைக் கேட்டு, திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தாள் மது.

சித்தார்த்தைக் கண்டதும் அதிர்ச்சியுடன் இமைக்க மறந்து அவள் அமர்ந்திருக்க, அவளை அங்கே எதிர்பார்க்காதவனுக்கோ இன்ப அதிர்ச்சி. அவனது உதடுகள், “ஹனி!” என முணுமுணுக்க, உதட்டைக் கடித்துக்கொண்டு முகத்தைத் திருப்பிக் கொண்டாள் அவள்.

“வா ஜீவா! உட்கார்” என்றதும் சித்தார்த்தும், ஜீவாவும் எதிரிலிருந்த இருக்கையில் அமர்ந்தனர்.

அவளது அதிர்ச்சி புரியாமல், "சித்தார்த்! இது மதுமிதா. மதுமிதா, இவன் என் தம்பி சித்தார்த். இது அவனோட ஃப்ரெண்ட் ஜீவா" என்று அறிமுகப்படுத்த ஒரு ஹாய் சொல்லக்கூடத் தெம்பில்லாமல் அமர்ந்திருந்தாள்.

அவளது அருகாமையால் அந்த மௌனம் கூட இனிய சங்கீதமாய் அவனது மனதை நிறைத்துக் கொண்டிருந்தது.

அவளோ, அனல் மேலிட்ட புழுவாய் துடித்துக் கொண்டிருந்தாள். சித்தார்த்தின் புன்னகையைக் கண்டவளுக்கு, உள்ளுக்குள் எரிச்சலாக இருந்தது.

“அண்ணி! நான் கிளம்பறேன்" என்றாள் மெதுவாக.

“அவசரம் ஒண்ணும் இல்லயே. கொஞ்சம் வெயிட் பண்ணு, போற வழிதானே நாங்களே உன்னை ட்ராப் பண்ணிடுறோம்” என்றாள்.
“இல்ல அண்ணி! கொஞ்சம் வேலையிருக்கு. நான் ஆட்டோல போய்டுறேன்" என்றவள், கவனமாகச் சித்தார்த்தைப் பார்ப்பதைத் தவிர்த்தாள்.

“அப்போ, சித்தார்த் நீ போகும்போது அப்படியே மதுமிதாவை பெசென்ட் நகர்ல விட்டுடு. நான் ஜீவா கூட வந்திடுறே” என்றாள்.

அவன் எதுவும் பேசாமல் இருவரது பேச்சையும் மெளனமாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.அ

“எதுக்கு வீண் சிரமம்?. நான் கிளம்பறேன்" என்று எழுந்தவள் கையைப் பிடித்து, "ஒண்ணும் சிரமம் இல்ல. என் தம்பி உன்னைப் பத்திரமா கூட்டிட்டுப் போவான் வா" என்று அவள் சொல்லச் சொல்லக் கேட்காமல், அவளைக் காரில் உட்கார வைத்தாள்.

“வீட்டுக்குப் போய்ச் சேர்ந்ததும் எனக்குக் கால் பண்ணு” என்று சொல்லிவிட்டு நகர, கார் திருவான்மியூரை நோக்கிப் பறந்தது.