Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript நின்னைச் சரணடைந்தேன் - கதை திரி | SudhaRaviNovels

நின்னைச் சரணடைந்தேன் - கதை திரி

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
115
445
63
அத்தியாயம் - 27


சுபாஷிணியின் வார்த்தைக்கு மறுவார்த்தை பேசாமல், மௌனமாக இருந்தவன் மீது கடும் கோபம் பொங்கியது அவளுக்கு.

‘எப்படியாவது தன்னுடைய பிடிவாதத்தால் சாதித்து விட வேண்டும் என்று இப்படி வெறிகொண்டு அலைகிறானே! இதற்கு மேல் என்னால் பொறுமையாக இருக்க முடியாது. இன்று என் முடிவைத் தெளிவாகச் சொல்லிவிட வேண்டும்’ என்று ஆழமூச்செடுத்துத் தன்னைத் தயார் செய்துகொண்டு அவனைப் பார்த்தாள்.

அவள் நிமிர்ந்து அமர்ந்ததிலிருந்தே, ஏதோ முடிவுடன் இருக்கிறாள் எனப் புரிந்து கொண்டவன், “என்ன அப்படிப் பார்க்கற?” என்று கேட்டான்.

"என்னை ஏன் இப்படித் தொல்லை செய்றீங்க?" என்றாள் கடுமையாக.

அவளைப் பார்த்தவன், “நான் என்ன செஞ்சேன்? நீயும், சுபாவுமே பேசி, முடிவும் எடுத்துட்டு, எல்லாத்துக்கும் நான்தான் காரணம்ன்னு என் மேலேயே போட்டாச்சு. நான் எந்தத் தப்பும் செய்யலனாலும், அடுத்தவங்க செய்றதுக்கும் சேர்த்து நானே தண்டனை அனுபவிக்கிறதா இருக்கு. எல்லாம் நான் வாங்கிட்டு வந்த வரம்" என்று தலையில் அடித்துக் கொள்ளாத குறையாகச் சொன்னான்.

அவன் சொன்ன வார்த்தைக்கான அர்த்தத்தை உணர்ந்து, அந்த உண்மை அவளைத் தாக்க, “நான் என்ன சின்னக் குழந்தையா... ஆட்டோல போனா காணாமல் போக. நான் போற இடத்துக்கெல்லாம் உங்களால் வர முடியுமா?"

“நீ எங்க போனாலும், உனக்கு துணையா வர நான் தயார். அது எங்கேயாக இருந்தாலும். வாழ்க்கை முழுசுக்கும். ஆனா, நீதான் ஒரு நல்ல பதிலா சொல்ல மாட்டேன்னு பிடிவாதமா இருக்கியே" என்றான் போலியான சலிப்புடன்.

அவன் பதிலைக் கேட்டு விதிர்த்துப் போன மனத்துடன், “எல்லாம் என் தலையெழுத்து. இப்படி வந்து மாட்டிக்கிட்டு முழிக்கணும்னு இருக்கு” என்று முணுமுணுத்தாள்.

நிலைமையைச் சற்றுக் குளிர்விக்க, ரேடியோவை ஆன் செய்தான். இருவரையும் சோதிப்பது போல அதிலும், ‘உன்னிடம் மயங்குகிறேன்; உள்ளத்தால் நெருங்குகிறேன்' என்ற பாடல் ஒலிக்க, அவளது முகம் எரிச்சலின் உச்சத்தில் இருக்க, கைகளைப் பிசைந்தபடி ஆத்திரத்துடன் அமர்ந்திருந்தாள்.

அவளைப் பார்க்கப் பாவமாக இருந்தாலும், இப்படி நெருக்கடி கொடுக்கா விட்டால், தன் மனத்தைத் திறக்க மாட்டாள்’ என எண்ணிக்கொண்டே, அவனும் உடன் சேர்ந்து பாட, அவள் ரேடியோவை அணைத்தாள்.

“ஹும்... காதலிக்கிற பொண்ணுகிட்ட இப்படி நேரடியா பாடத்தான் முடியல. அட்லீஸ்ட், பாட்டாவது கேட்டுச் சந்தோஷப்பட்டுக்கலாம்னு நினைச்சா அதுக்கும் முடியல. எல்லாத்துக்கும் ஒரு கொடுப்பினை வேணும்னு சும்மாவா சொன்னாங்க" என்று மிகவும் கவலையுடன் சொன்னான்.

“தயவுசெய்து கொஞ்சம் வாயை மூடிக்கிட்டு வரீங்களா?" என்று சினத்துடன் சொல்ல, சற்று தூரம் சென்றவுடன் யாரும் இல்லாத ஒதுக்குப்புறமான ஒரு இடத்தில் காரை நிறுத்தினான்.

அவள், ‘என்ன?’ என்பதைப் போல அவனைப் பார்க்க, நிதானமாக இருகைகளையும் உயர்த்திச் சோம்பல் முறித்துவிட்டு புஷ்பாக் சீட்டைப் பின்னால் தள்ளிச் சாய்ந்து அமர்ந்தான் சித்தார்த்.

அவனது செய்கைகள் படபடப்பைக் கொடுக்க, "எதுக்காக காரை இங்கே நிறுத்தனீங்க? நான் வீட்டுக்குப் போகணும்" எனச் சொல்ல, அவன் கைகளிரண்டையும் தலைக்கு அடியில் வைத்துக்கொண்டு கண்களை மூடினான்.

அவளுக்கு ஆத்திரமாக வந்தது. ‘இவன் வேண்டுமென்றே என்னை எரிச்சல்படுத்த இப்படிச் செய்கிறான்’ என்று நினைத்தவள், “இப்போ நீங்க காரை எடுக்கப் போறீங்களா… இல்லையா?” என்று கேட்க, அவன் மூடிய கண்களைத் திறக்கவே இல்லை.

“நீங்க எடுக்கலைன்னா என்ன? நான் ஆட்டோல போறேன்” என்றவள், கதவைத் திறக்க முடியாமல் தடுமாறினாள்.

சீட்டைச் சரிசெய்து அமர்ந்தபடி, “என்னை மீறி உன்னால கதவைத் திறக்க முடியாது மது! சென்ட்ரல் லாக் போட்டிருக்கேன். கண்ட்ரோல் சுவிட்ச் என்கிட்டேயிருக்கு" என்றான்.

மனதளவில் ஓய்ந்து போனவளாக, "உங்களுக்கு என்னதான் வேணும்? ஏன் என்னை இப்படி ஆட்டிப் படைக்கறீங்க?" என்று வேதனையுடன் கேட்டாள்.

“எனக்கு என்ன வேணும்னு, உனக்கே தெரியும். என்னால் இனியும் பொறுமையாய் இருக்க முடியாது. எனக்கு உன்னோட பதில் வேண்டும். இன்னைக்கே சொன்னாலும் சந்தோஷம். இல்லை யோசித்து நாலைந்து நாள் கழித்துச் சொன்னால்கூடப் பரவாயில்லை. ஆனால், உன்னோட பதில் சம்மதம்ன்னு இருக்கணும்."

“என்னோட பதிலை ஏற்கெனவே ரெண்டு முறை சொல்லிட்டேன். இன்னும் என்னை ஏன் தொல்லை செய்றீங்க?"

சில நொடிகள் கண்களை இறுக மூடி ஸ்டியரிங் வீலில் மெல்ல தாளமிட்டவன், சலனமற்ற விழிகளுடன் அவளைப் பார்த்தான். அந்தப் பார்வையில் அவளுக்கு பயத்தை உண்டாக்க, "ப்ளீஸ்! என்னைக் கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க சித்தார்த்" எனக் கெஞ்சலாகச் சொன்னாள்.

"அதையே தான் நானும் சொல்றேன். ஏன் என்னைப் புரிஞ்சிக்க மாட்டேன்னு பிடிவாதமா இருக்க? நீ எதுக்கு இப்படி உன்னோட வாழ்க்கையை விளையாட்டா நினைத்து வாழ்ந்துட்டிருக்க. அடுத்தவங்க சந்தோஷமா இருக்கணும்னு சொல்லுவியே... எத்தனைப் பேரோட சந்தோஷத்துக்குத் தடையா நீ இருக்கன்னு ஏன் உனக்குப் புரியல?” என்றான் கோபத்துடன்.

"நான், யாரோட சந்தோஷத்தையும் கெடுக்கல. அப்படி உங்களுக்குக் கல்யாண ஆசை வந்தா, உங்க வீட்ல சொல்லி ஒரு பொண்ணைப் பார்த்துக் கல்யாணம் செய்துகோங்க இஷ்டம் இல்லாத என்னைக் கஷ்டப்படுத்த உங்களுக்கு எந்த ரைட்ஸும் இல்ல.”

எரிச்சலை அடக்கிக்கொண்டு, "மது! நான் உன்னை மனதார காதலிக்கிறேன். நீ இல்லாத ஒரு வாழ்க்கையை, என்னால் நினைச்சிக்கூடப் பார்க்க முடியாது" என்றான்.

அவனது இறங்கிய பிடிவாதமான குரல் அவளுக்குக் கோபத்தை உண்டாக்க, " உங்களை வேண்டாம்னு சொல்ற பொண்ணுகிட்ட, என்னைக் கல்யாணம் செய்துக்கோன்னு கெஞ்சறீங்களே அசிங்கமா இல்ல உங்களுக்கு" என்றாள் ஆத்திரத்துடன்.

தன்னுடைய கோபத்தை இழுத்துப் பிடித்தபடி, "நீயே உன்னை ஏமாத்திக்கிற மது! உன்னோட ஆழ் மனசைக் கேளு. உனக்குள்ளே நான் இருக்கேனா இல்லையான்னு..."

“இல்லை இல்லை இல்லை நீங்க என்னோட மனசுக்குள்ளே ஒரு நாளும் வர முடியாது” என்று கண்ணை மூடிக்கொண்டு சத்தமாகச் சொல்ல, "ஏன் வர முடியாது?" என்று அவனும் அதே அளவிற்குக் குரலை உயர்த்தினான்.

“வர முடியாதுன்னா... வர முடியாது. என்னை இப்படி அலைக்கழிக்காதீங்க சித்தார்த்! தினம் தினம் என்னால போராட முடியல. ஏற்கெனவே, எல்லாத்தையும் தொலைச்சிட்டு நிக்கிறேன். இதுக்கு மேல எதையும் தாங்கிக்கிற சக்தி எனக்கு இல்ல... ப்ளீஸ்!" என்றவள் கண்ணீருடன் கெஞ்சினாள்.

அவளது பிடிவாதமான பேச்சுக்கு எதிர் பேச்சு பேசியவன், அவளது கண்ணீருக்குப் பதிலாக ஆறுதலாகச் சாய்ந்து கொள்ள தனது நெஞ்சைக் கொடுக்கத் தயாராக இருந்தான். ஆனால், அவள் ஏற்கத் தயாராக இல்லையே…

சில நொடிகள் அமைதியாக இருந்தவன், "நீ ஏன் வேண்டாம்னு சொல்றங்கற காரணத்தை நான் சொல்லவா?" என்று கேட்க, அவள் மிரட்சியுடன் அவனைப் பார்த்தாள்.

அவன் சொன்னதைக் கேட்டவளுக்கி உள்ளுக்குள் ஏதோ ஒன்று உடைந்தது போலிருக்க, கண்கள் கலங்க அமர்ந்திருந்தாள்.

“நீ, வருதப்படணும்னு சொல்லலை மது! நல்லா யோசி... நடந்து முடிந்து போனதை இன்னும் எத்தனை நாளைக்கு நினைச்சிட்டு இருப்ப? உன் வாழ்க்கையை நீயே ஏன் ஒண்ணுமில்லாம அழிச்சிக்கிற. இன்னும் உன்னோட வாழ்க்கையை நீ ஆரம்பிக்கவே இல்ல. எவ்வளவோ பிரச்சனையோட இருக்கும் எத்தனையோ பேர், தங்களோட கடந்த காலத்தை ஒதுக்கிட்டுச் சந்தோஷமா வாழறபோது நீ ஏன் தயங்கற?

நான் உன்னை என்ன கேட்கிறேன்? நடந்ததை ஒரு கனவா நினைச்சி ஒதுக்கிட்டு, உன் மனசுல எனக்கு ஒரு இடம் கொடுன்னு தானே கேட்கிறேன். உனக்காக எவ்வளவு காலம் வேணும்னாலும் காத்திருக்க தயாராக இருக்கேன். என்னைப் புரிஞ்சிக்கிட்டு, என் வாழ்க்கைத் துணையா வந்தா ரொம்பவே சந்தோஷப்படுவேன்" என உணர்ச்சி ததும்ப சொன்னவன், அவள் பதிலை எதிர்பாராமல் காரைக் கிளப்பினான்.

வீட்டின் முன்பாக காரை நிறுத்திவிட்டு அவளைத் திரும்பிப் பார்த்தான். தன் நிலையறியா சிலை போல் அமர்ந்திருக்க, "மது! வீடு வந்தாச்சு" என்று அவள் கையைத் தட்டிச் சொன்னான்.

கனவிலிருந்து எழுபவளைப் போல விழித்தவள் இறங்க முற்பட, அவளது வலது கரத்தைப் பிடித்தான்.

அவள் கோபத்துடன் கையை இழுக்க, அவன் விடாமல், “காலம் பூராவும் உன் கையைப் பிடிச்சிக்கிட்டு உன் துணையா வரணும்னு ஆசைப்படுகிறேன். உன்கிட்டயிருந்து நல்ல பதிலை எதிர்பார்க்கறேன்" என்றான்.

"என்னால, உங்களைக் கல்யாணம் செய்துக்க முடியாது. நீங்க எதிர்பார்க்கற நல்ல மனைவியா, என்னால உங்களோட வாழமுடியாது. வாழ்க்கைல உங்களுக்கு எந்தவித சந்தோஷத்தையும் கொடுக்க முடியாது. தயவுசெஞ்சி இனி, என்னை வற்புறுத்தாதீங்க” என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னவள், தன் கையை இழுத்து விடுவித்துக்கொண்டு இறங்கினாள்.

சித்தார்த் கோபத்தோடு இறங்கி அவளுக்கு எதிரில் வந்து நின்றான். இருவரும் நேருக்கு நேராகப் பார்த்துக்கொள்ள, “நீ நிச்சயம் மனசு மாறுவ. என்னைக் கல்யாணம் செய்துக்க சம்மதம்ன்னு சொல்லுவ. என் மனைவியா என் கூட வாழத்தான் போற. என்னோட காதல் உண்மைன்னா, அது கூடிய சீக்கிரம் நடக்கத்தான் போகுது” என்று உறுதியோடு சொல்லிவிட்டுச் சென்றவனையே பார்த்துக் கொண்டு நின்றாள்.

சித்தார்த்தின் வீட்டில் குடும்பமே ஹாலில் கூடி இருந்தது. அனைவரும் காஃபி அருந்தியபடி பேசிக்கொண்டிருந்தனர். ராமமூர்த்தி, தனது மாப்பிள்ளையிடம் எல்லாவற்றையும் விளக்கமாகச் சொன்னார்.

“நல்ல விஷயம் மாமா! சுபா எல்லா விஷயமும் சொன்னா. நம்ம சித்தார்த்துக்குப் பிடிச்சிருந்தா முடிச்சிடலாம். அவங்க குடும்பம் எங்கே இருக்கு?"

"பொண்ணு பேரு மதுமிதா. திருவான்மியூர்ல இருக்காங்க. அவங்க அப்பா பேரு சந்திரசேகர். " என்றார் சித்தார்த்தின் தந்தை ராமமூர்த்தி.

அவர் சொன்ன பெயர்களைக் கேட்ட ஹரி பிரசாத் ஏதோ தோன்ற, “சந்திர சேகர்? அவர் ரிடையர்ட் மிலிட்டரி ஆஃபிஸரா? அவங்க மனைவி பேரு விமலா தானே? அவங்களுக்கு ஒரு பையன் கூட இருந்தானே…" என்று இடைமறித்து அவசரமாகக் கேட்டவனை அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

“சரியா சொல்றீங்களே! உங்களுக்கு அவங்களைத் தெரியுமா? ஆனா, அவள் ஒரே பொண்ணு தானே… பையன்" என்று இழுத்தான் ஆதி.

“அது இருக்கட்டும். மதுமிதாவுக்கு இந்தக் கல்யாணத்தில் சம்மதமான்னு தெரியுமா?" என்றான்.

“நம்ம சித்தார்த் கூட நல்லா தானே பழகறா. நம்ம வீட்டுக்குக்கூட வந்திருக்காளே. அவளுக்கும் சம்மதம்னு தான் நினைக்கிறோம்" என்று சந்தேகத்துடனே பதில் சொன்னார் தேவகி.

“எனக்கு என்னவோ நம்பிக்கை இல்லை. மாமா! முதல்ல, சித்தார்த்கிட்ட நல்லா விசாரிங்க” என்று ஹரி பிரசாத் சொல்லிக்கொண்டிருக்கும் போதே, உள்ளே நுழைந்த சுபா, “என்ன வட்ட மேஜை மாநாடா?” என்று கேட்டுக்கொண்டே கணவனின் அருகில் அமர்ந்தவள், “என்னங்க இன்னைக்கு ஒரு சர்ப்ரைஸ்! லேண்ட்மார்க்ல நம்ம மதுமிதாவைப் பார்த்தேன்" என்றாள்.

“அண்ணியைப் பார்த்தீங்களா அக்கா! அண்ணாவோட செலெக்ஷன் எப்படி?" என்று கேட்டாள் நேத்ரா.

“நான் எங்கே மதுவைப் பார்த்தேன்? நான் சொல்ற மதுமிதா, எங்களுக்குத் தெரிஞ்ச பொண்ணு" என்றவளிடம், “இல்லை சுபா. மதுமிதான்னு ஒரே பொண்ணுதான். நம்ம சித்தார்த், அவளைத்த் தான் விரும்பறான்" என்றார் ஹரி பிரசாத்.

அதிர்ச்சியுடன் கணவரைப் பார்த்தவள், “அதெப்படிங்க முடியும்? இப்போகூட அவளோட தான் பேசிட்டு வரேன். இன்னமும் மனசளவுல அவள் கொஞ்சங்கூட மாறாம தான் இருக்கா” என்றவள் புரியாமல் ஜீவாவைப் பார்த்தாள்.

அவன் என்ன சொல்வதெனத் தெரியாமல் நின்றிருக்க, “நீ சித்தார்த் கூடத் தானே போன. இப்போ, ஜீவா கூட வந்திருக்க. சித்தார்த் எங்கே?" என்று விசாரித்தான் ஆதி.

“நான்தான் மதுமிதாவை, அவங்க வீட்ல விட்டுட்டு வான்னு சொன்னேன்" என்றாள்.

இப்போது அனைவரின் பார்வையும் ஜீவாவிடம் திரும்ப, அவன் தவிப்புடன் நின்றிருந்தான்.

“ஜீவா! சித்தார்த் எல்லாத்தையும் உன்கிட்டச் சொல்வானே... நீ சொல்லு. ரெண்டு பேரும் காதலிக்கறது உண்மைதானே?" என்று தவிப்புடன் கேட்டார் தேவகி.

தலையைக் கோதிக்கொண்டவன், “இல்லம்மா, சித்தார்த் மட்டும்தான்...” என்றதைக் கேட்ட அனைவரும் அதிர்ந்து போயிருக்க, சித்தார்த்தின் கார் போர்டிக்கோவில் வந்து நின்றது.

உள்ளே வந்தவனை அனைவரும் பார்க்க, அவர்களது பார்வையே எதோ பிரச்சனை என அவனுக்குப் புரிய வைத்தது.

அன்னையின் அருகில் சென்றவன், “என்ன எல்லோரும் ஒரு மாதிரி இருக்கீங்க?" என்று கேட்டான்.

“சித்தார்த்! என்னடா இது... புதுசா ஒரு பிரச்சனை?" என்ற தேவகியின் உள்ளம் மகனுக்காகத் துடித்தது.

"என்னன்னு சொன்னா தானே, எனக்குத் தெரியும்" என்றவன் அருகில் வந்த ஹரி, “சித்தார்த் உன்னைக் கல்யாணம் செய்துக்க மதுமிதாவுக்குச் சம்மதமா?" என்று கேட்டார்.

அவனது பார்வை நண்பனைத் தொடர்ந்தது. அவன், தலையை அசைக்க, அழுந்த தலையைக் கோதிக்கொண்டே, “மதுவைப் பத்தி உங்களுக்குத் தெரிஞ்சி போச்சா? நம்ம வீட்டு விசேஷம் முடிஞ்சதும் நானே சொல்லலாம்னு இருந்தேன்" என்றவன் முதன் முதலில் அவளைச் சந்தித்தது முதல், அவளது வாழ்க்கையில் நடந்த துயர சம்பவம் வரை அனைத்தையும் சொல்லி முடித்து அங்கிருந்த இருக்கையில் தளர்ந்து போய் அமர்ந்தான்.

மொத்தக் குடும்பமும் திகைத்துப் போய் கண்களில் கண்ணீருடன் அமர்ந்திருந்தனர்.

“இந்தச் சின்ன வயசுல எவ்வளவு கஷ்டத்தை அனுபவிச்சிட்டா. அந்தக் கடவுள் அவளுக்கு ஒரு நிம்மதியான வாழ்க்கையைக் கொடுத்திருக்கக் கூடாதா?” என்றபடி முந்தானையால் தனது கண்ணீரைத் துடைத்துக்கொண்டார்.

தம்பியின் முதுகில் தட்டிக் கொடுத்த ஆதி, "இவ்வளவு நடந்தும் நீ அவளைக் காதலிக்கிற பாரு... உன்னை நினைச்சா எனக்குப் பெருமையா இருக்குடா. ஆனா, அவளுக்கு இந்தக் கல்யாணத்தில் விருப்பம் இல்லைன்னா, நீ ஏன் அவளைக் கட்டாயப்படுத்துற?" என்று கேட்டான்.

“தெரிந்தோ தெரியாமலோ, அவளோட வாழ்க்கை இப்படி ஆனதுக்கு, நானும் ஒரு காரணமோன்னு என்னோட மனசு உறுத்திக்கிட்டே இருக்கு. நான் மட்டும் ஆரம்பத்திலேயே அவளிடம் சொல்லியிருந்தா, அவள் இந்த மாதிரிக் கஷ்டத்தை அனுபவிக்காம இருந்திருப்பா இல்லையா?" என்றான் தழுதழுத்தக் குரலில்.

“நான் உன்னை இன்னும் அதே விளையாட்டுப் பையனாவே நினைசிட்டேன்டா. பெருமையா இருக்குடா. நீ எதுக்குமே பொறுப்பாக முடியாதுன்னு இருக்கும் போதே, அவளுடைய கஷ்டத்தைத் தன்னால் தீர்க்க முடியாமல் போச்சேன்னு... உன் காதலை அவளிடம் சொல்லாதது ஒரு காரணமாக இருக்குமோன்னு நினைச்சி கவலைப்படறியே இந்த மனசு எத்தனைப் பேருக்கு வரும்? ஹேட்ஸ் ஆஃப் யூ சித்தார்த்” என்று சல்யூட் அடித்தான்.

“ஹய்யோ! மாமா… நான் உங்களை விடச் சின்னவன்” என்றவன் தன் பெற்றோரைப் பார்த்தான். தான் வந்தது முதல் ஏதும் பேசாமல் இருக்கும் தன் தந்தையின் அருகில் சென்று மண்டியிட்டு, “அப்பா!" என்றவனை ஆரத்தழுவிக் கொண்டார்.

“நான் இன்னைக்கு ரொம்பச் சந்தோஷமா இருக்கேன் கண்ணா! ஒண்ணு மட்டும் மறந்துடாதே. இன்னைக்கு இருக்கும் இதே மனஉறுதி; உன் வாழ்க்கை முழுசுக்கும் உன் கூடவே இருக்கணும். எந்த நிலையிலும் அவளைக் காயப்படுத்திடாதே" என்றவரிடம் சிரிப்புடன் ஒப்புதலாகத் தலையசைத்தான்.

தேவகி மகனின் நெற்றியில் முத்தமிட, அவ்வளவு நேரமும் தன் மனத்தில் அழுதிக் கொண்டிருந்த சுமையை இறக்கி வைத்ததில் ஏற்பட்ட ஒரு விடுதலை உணர்வில் கண்ணீர் சிந்தினான்.

“நீ அழக்கூடாதுடா ராஜா! உன்னோட நல்ல மனசுக்கு, எல்லாமே நல்லபடியா நடக்கும். மதுவை நாம எல்லோரும் சேர்ந்து நம்ம கண்ணுக்குள்ளே வச்சி பார்த்துக்கலாம். உன்னோட தைரியமும், வார்த்தையும் தான் அவளுக்கு வாழ்க்கையில் பற்றை ஏற்படுத்தணும். உன்னோட ஓவ்வொரு அசைவும், அவளுக்காகத் தான்னு, புரிய வைக்கணும். மது இந்த வீட்டுக்கு வந்து, உன்னோட சந்தோஷமா மன நிறைவோட வாழணும். சீக்கிரமே நாங்க போய்ப் பேசறோம். மதுவை கல்யாணத்துக்குச் சம்மதிக்க வைப்பது எங்களோட பொறுப்பு" என்று மகனைத் தட்டிக் கொடுத்தார்.

நண்பனை இறுக அணைத்துத் தன் வாழ்த்தையும் தெரிவித்தான் ஜீவா.

இரண்டு மணி நேரமாக கால்களைக் கட்டிக்கொண்டு சுவற்றில் சாய்ந்து அமர்ந்திருந்தாள் மதுமிதா. அவள் சித்தார்த்தின் காரில் வந்து இறங்கியதையும், இருவரும் முறைத்துக்கொண்டு நின்றிருந்ததையும் பார்த்த விமலாவும், சந்துருவும் அவளை எதுவும் கேட்கவில்லை.

மீண்டும் மீண்டும் அவன் கடைசியாகச் சொல்லிவிட்டுச் சென்ற வாக்கியமே அவளைச் சுற்றி சுற்றி வந்தது. ‘உன்னோட மறுப்புக்குக் காரணம், அர்ஜுன் தானே!’ என்றது முதல், அவளது மனம் நிலை கொள்ளாமல் தவித்தது.

‘அர்ஜுன், அர்ஜுன்’ என்று அவளது மனம் அரற்ற, பழைய நினைவுகள் கொடுத்த அழுத்தத்தை ஒரு நிலைக்கு மேல் தாங்க முடியாமல், "அர்ஜுன்! ஏன் அர்ஜுன் என்னை இப்படித் தவிக்க விட்டுட்டுப் போய்ட்டீங்க?" என்று வாய் விட்டுக் கதறினாள்.

ஹாலில் அமர்ந்திருந்த விமலாவும் அழ, கண்களில் கண்ணீருடன் தன் அறையில் ஷெல்பிலிருந்த புகைப்படத்தைப் பார்த்தவண்ணம் நின்றிருந்தார் சந்துரு.

கண்கள் நிறைய கனவுடனும், முகம் நிறைய பூரிப்பும், வெட்கமும் போட்டியிட மதுமிதா மணக்கோலத்தில் நின்றிருக்க, ஆழ்ந்த நீலநிற கோட் சூட்டில் முகம் நிறைய பரவசத்துடன் அவளை அணைத்தபடி நின்றிருந்தான் அர்ஜுன்.
 

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
115
445
63
ஹாய் நட்புகளே! வணக்கம். நலமா?
லேப்டாப் சர்வீஸ் கொடுத்திருந்தேன். இன்னைக்குத் தான் வந்தது.
உடனே வந்து அப்டேட் கொடுத்துட்டேன். புக் பேர்க்குள்ள கதையை முடிச்சிடலாம்.
யாரெல்லாம் புக்பேர் வரீங்க?
நான் மார்ச் முதல் வாரத்தில் வருவேன்.
முடிந்தால் சந்திப்போம்.
 

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
115
445
63
அத்தியாயம் – 28


சில ஆண்டுகளுக்கு முன்னால்...

“கௌசல்யா சுப்ரஜா ராமா பூர்வா சந்தியா ப்ரவர்த்ததே” கொட்டிவாக்கம் கடற்கரை அருகில் இருந்த அந்த அழகான பங்களாவில், வெங்கடேச சுப்ரபாதம் ஒலித்துக் கொண்டிருந்தது.

காலைப் பொழுதின் ஆதவனின் எழுச்சியால், தங்கநிறம் பெற்ற நீலக்கடலின் ஆர்ப்பரிப்பு தாலாட்டாக இருந்ததோ என்னவோ! அந்த வீட்டின் ஒரு அறை மட்டும் இன்னும் திறக்கப்படாமலே இருந்தது.

“தீபக்! எழுந்திரு. இன்னும் எவ்வளவு நேரம் தூங்குவ? மணி ஆறாகுதுடா! அப்புறம் காலேஜுக்கு லேட் ஆச்சுன்னு டிஃபனைக் கூடச் சாப்பிடாம ஓடுவ. எழுந்திரு…” என்று குரல் கொடுத்தபடியே சமையலறைக்கும், ஹாலுக்குமாக நடந்துகொண்டிருந்தார் ராஜேஸ்வரி.

அரைக் கண்ணால் பார்த்தபடி, “அம்மா! காஃபீ…” என்று கொட்டாவிக்கு இடையில் கேட்டுக் கொண்டே ஹாலுக்கு வந்தான் தீபக்.

“நடுராத்திரி வரைக்கும் சினிமா, ப்ளே ஸ்டேஷன்னு இருக்க வேண்டியது. காலைல ஏழு மணிக்குக் கூட கண்ணைத் திறக்க முடியாம தூங்க வேண்டியது. இந்தக் காலத்துப் பசங்களுக்கு…” என்று பேசிக்கொண்டிருந்த தந்தையைக் கண்டுகொள்ளாமல் சமையலறைக்குச் சென்றான்.

“ம்மா…!” என்றவனை முறைத்த ராஜி, “போய் முதல்ல முகத்தைக் கழுவுடா! அடுத்த வருஷம் வேலைக்குப் போகணும் இன்னும் இப்படியே சுத்திட்டு இருக்க” என்றவர் காஃபி டம்ளரை அவனிடம் கொடுத்தார்.

“ஆடு, மாடெல்லாம் முகத்தைக் கழுவுதா?” என்றபடி காஃபியை உறிஞ்ச, “ஆமாம் ஆடு, மாடெல்லாம் ப்ளே ஸ்டேஷன்ல கேம் ஆடுதா?” என்றபடி அங்கே வந்தாள் மதுமிதா.

“என்னடா இன்னும் வீட்ல சத்தத்தைக் காணோமேன்னு பார்த்தேன். வா ஆத்தா!” என்றான் அவன் கிண்டலாக.

“காலைல எனக்கு டான்ஸ் க்ளாஸ் இருக்கு. நீதான் கூட்டிட்டுப் போகணுன்னு சொன்னேன்ல. இவ்ளோ நேரம் கழிச்சி எழுந்து வர்ற…” என்று கண்களை உருட்டினாள்.

“வீட்ல ஆடுறது போதாதுன்னு, ஸ்டேஜ்ல வேற ஆடப்போறியா? விளங்கும்” என்றான்.

“உனக்கு எதுக்கும் கையாலாகலன்னாலும், கிண்டல்ல குறைச்சல் இல்ல” என்று முறைப்புடன் சொன்னவள், “உங்களைச் சொல்லணும் அத்தை! கழுதை வயசாகுது. இன்னும் செல்லம் கொடுத்துக் கொஞ்சிட்டு இருக்கீங்க. வரவர மாமாவும் எதுவும் கண்டுக்கறதே இல்ல” என்று அத்தையிடம் ஒரு பாய்ச்சல் பாய்ந்துவிட்டு லஞ்ச் பாக்ஸை எடுத்தாள்.

“அல்லி ராணியே எனக்குக் கப்பம் கட்டு நீ; ஜென்ம ஜென்மமாய் எனக்குக் கட்டுப்பட்டு நீ!” என்று அவன் வேண்டுமென்றே பாட, கதவு வரை சென்றவள், “வேண்டாம் அத்தான்! என் கடுப்பைக் கிளப்பாதே” என்றாள் அழுது விடுபவளைப் போல.

“எந்த ஊரு ராணி என்று உன்னை நினைத்தாய்; தட்டிக் கேட்க ஆளில்லாமல் துள்ளி குதித்தாய்… சண்டியே ஓ சண்டியே வா வா” என்று சப்தமாகப் பாடிவிட்டு, நாக்கைத் துருத்தி அழகு காட்ட, அருகிலிருந்த டம்ளரை எடுத்து அவன் மேல் எறிந்தாள்.

அதை இலாவகமாகப் பிடித்தவன், “அவுட்” என்று கத்த, அவள் கால்களை உதறிக்கொண்டு வெளியே செல்லவும், அவன் சிரித்துக் கொண்டான்.

இது எதையும் பார்க்காததைப் போல, மனத்திற்குள் சிரித்துக்கொண்டு அமைதியாக வேலை செய்துகொண்டிருந்தார் ராஜி.

அன்று மாலை கல்லூரியிலிருந்து திரும்பி வந்தவள், வாசலில் நின்றிருந்த காரைப் பார்த்ததும், “அத்தையோட அண்ணா ஃபேமலி வந்திருக்காங்க போல’ என எண்ணிக்கொண்டே வாயிலருகில் வந்தவள் தனது பெயர் அவர்களது பேச்சில் அடிபடுவதைக் கேட்டதும், சற்று மறைந்து நின்று கேட்டாள்.

“அண்ணா! நீங்க சொல்றது புரியுது. ஆனா, கொஞ்சம் யோசிச்சிப் பாருங்க. நானும், இவரும் காதலிக்கறோம்ன்னு தெரிஞ்சதும் அப்பா என்னை வீட்டை விட்டே அனுப்பிட்டாங்க. இவரும், அவரோட அக்காவும் தான் எனக்கு எல்லாமுமா இருந்தாங்க. பிறந்த வீட்டு ஆதரவு இல்லாமலே இருபத்தி நாலு வருஷமா வாழ்ந்துட்டோம்.

ஒரு ஆக்ஸிடெண்ட்ல மதுவோட அப்பாவும், அம்மாவும் இறந்த பின்ன, அந்தக் குழந்தைகளும், எங்க குழந்தைகளோட வளர ஆரம்பிச்சாங்க. எனக்கு ரெண்டு பிள்ளைங்கன்னு நான் என்னைக்கும் நினைச்சது கிடையாது. அதோட, இவருக்கு அவங்க ரெண்டு பேரையும் பொண்ணு கொடுத்துப் பொண்ணு எடுத்துக்கணும்னு தான் விரும்பறார். அவரோட வார்த்தைக்கு நான் மதிப்பு கொடுத்தே ஆகணும்” என்று அழுத்தமாகச் சொன்ன அத்தையின் மீது மதுவுக்கு அன்பு பெருக்கெடுத்தது.

“ஏம்மா! பெரியவங்க இருந்த வரை என்னால உனக்கு உதவ முடியல. ஆனா, இப்போ அந்தச் சொந்தம் வேணும்ன்னு வந்திருக்கேன். அது என் பொண்ணு மூலமா வந்தா, இன்னும் சந்தோஷமா விருத்தியோட இருக்கும்ன்னு நினைச்சித்தான் சொன்னேன். உன் வீட்டுக்காரரை கொஞ்சம் கன்வின்ஸ் பண்ணப் பாரேன்” என்றார் அவர்.

“வாய்ப்பே இல்லண்ணா! தீபக்குக்கு, மதுமிதாவைத் தான் முடிக்கணும்ன்னு சின்னதுல இருந்தே பேச்சு. அது தான் அவளோட அம்மாவுக்கு நான் செய்யற நன்றிக் கடன்” என்றார் ராஜி.

“சரிம்மா! இதுக்கு மேல பேச எதுவும் இல்ல. ஆனாலும், நான் உன் கூடப்பிறந்தவன்னு நினைவு வச்சிக்க” என்று அவர் எழ, “அண்ணா! மேகலா நம்ம வீட்ல இருந்தே காலேஜ் போகட்டுமே. அவளும், நம்ம காலேஜ்ல தானே படிக்கிறா. என் பசங்களோட சேர்ந்து போய் வரட்டும். அத்தைன்னு நான் இருக்கும் போது அவளை ஏன் ஹாஸ்டல்ல சேர்க்கணும்” என்றார்.

“வாழப்போற வீட்ல என் பொண்ணு இருக்க வேணாம்ன்னு முதல்ல நினைச்சி ஹாஸ்டல்ல சேர்த்தேன். இப்போ, வயசு பசங்க இருக்கற வீட்ல விட வேண்டாம்ன்னு தோணுது. நான் யாரையும் தப்பு சொல்லலம்மா. இன்னொரு வீட்டுக்கு வாழப்போற பொண்ணு. ஏதும் பேச்சு வந்திடக்கூடாது…” என்றதும், ராஜியின் முகம் சுருங்கிப் போனது.

இது எதுவும் தெரியாததைப் போல, கண்களைத் துடைத்துக் கொண்டு உள்ளே சென்றாள் மதுமிதா.

அன்று இரவு, அனைவரும் தங்களது அறைக்குச் சென்றுவிட, சமையலறையில் பாத்திரங்களை அடுக்கிக்கொண்டிருந்த ராஜியின் அருகில் சென்று நின்றாள் மதுமிதா.
"என்னடா தூங்கலையா?"

"அத்தை! உங்ககிட்ட ஒண்ணு கேக்கணுமே."

"என்ன விஷயம்? " என்றவர் தன் வேலையே நிறுத்திவிட்டு மதுவைப் பார்த்தபடி நின்றார்.

"அத்தை! ஈவ்னிங் உங்க அண்ணாவும், நீங்களும் பேசிட்டு இருந்ததைக் கேட்டேன்...” என்றவளை விழிகள் விரிய பார்த்தார்.

“மேகலாவை இந்த வீட்டு மருமகளாகிக்கணும்னு உங்களுக்கும் ஆசை இருக்கு. ஆனா, எனக்காக யோசிக்கிறீங்க” என்றவள் அவரது தோளில் சாய்ந்து கொண்டு, “உங்க சந்தோஷம் தான் அத்தை என் சந்தோஷம்” என்றவளை இறுக அணைத்துக் கொண்டார் ராஜி.

“மதும்மா! ஆசை எல்லோருக்கும் இருக்கும். ஆனா...” என்றவரை இடைமறித்து, “நன்றிக்கடனை இப்படிக் காட்டணும்ன்னு இல்லத்தை! நான் என்னைக்குமே உங்களுக்கு மகளாவே இருந்துக்கறேனே” என்று இமைகளைத் தட்டிக் கேட்டவளை உச்சி முகர்ந்து கண்ணீர் வடித்தார் அவர்.

“அத்தை! நான் விட்டுக் கொடுக்கறேன்னுலாம் நினைச்சிக்காதீங்க. இந்த இம்சை அரசனையெல்லாம் என்னால கல்யாண செய்துக்க முடியாது. நானே எப்படிக் கழட்டி விடுறதுன்னு நினைச்சிட்டு இருந்தேன். அது சிரமமே இல்லாம நடக்குதுன்னா சந்தோஷம் தான்” என்று வேகமாகச் சொன்னவளைப் பார்த்துச் சிரித்தார்.

“குட் அத்தை!” என்றவள், “எனக்கு அம்மான்னா உங்க முகம் தான் நினைவுக்கு வரும். அப்பா, அம்மா இல்லாத எனக்காகவும், அண்ணாவுக்காகவும் நீங்க எவ்ளோ செய்திருக்கீங்க. நீங்களும், மாமாவும் இல்லன்னா நாங்க என்ன செய்திருப்போம்” என்றவள், “எனக்கு ராஜேஷ் அண்ணா எப்படியோ, அதே போலதான் அத்தானும்" என்றவளை வாஞ்சயுடன் பார்த்தார்.

“போதும் அத்தை இந்த ஃபீலிங் உங்களுக்கு நல்லாவே இல்ல. எப்பவும் என்னை மிரட்டி, உருட்டி பேசற அத்தை தான் வேணும். அச்சச்சோ நேரமாச்சு நான் போய்ப் படுக்கிறேன். குட் நைட்" எனச் சொல்லிவிட்டுத் துள்ளிச் செல்பவளை பார்த்தவர், ‘ கடவுளே! இவளை ஒரு நல்லவன் கையில் ஒப்படைப்பா’ என்று வேண்டிக்கொண்டார்.
மறுநாள் காலையில், “அம்மா காஃபி” என்றபடியே எழுந்து வந்த தீபக் நாளிதழை எடுத்துப் புரட்டினான்.

“எத்தனை முறை இவனுக்குச் சொன்னாலும் தெரியறதே இல்ல. நாளைலயிருந்து பெட் காஃபி கிடையாது” என்று கூறிக்கொண்டே காஃபியை டீபாய் மீது வைத்தார்.

“நீ சொல்லிட்டுச் சொல்லிட்டு கொடுத்தா, அவன் என்னைக்கு மாறுவது" என்ற தந்தையிடம், "அப்பா! காலைல ஆரம்பிக்காதீங்க. நாளை என்பது வெறும் கனவு. அதை நாம் ஏன் நம்பணும்?" என்று பாடிக்கொண்டே பேப்பரை மடித்து வைத்துவிட்டு காஃபி கப்பை கையில் எடுத்தான்.

அப்போதுதான் அவன் முகத்தைப் பார்த்த ராஜி, “என்னடா கோலம் இது?” என்றார் சிரிப்புடன்.

எல்லோரும் சிரிக்க, மது மெல்ல அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.

“எதுக்கு இப்படிச் சிரிக்கிறீங்க?" என்றவனிடம் வித்யா கண்ணாடியை கொண்டு வந்து காட்டினாள்.

நெற்றியில் பெரிய நாமம், பெரிய மீசை, வாயின் இருபுறமும் நீண்ட பற்கள் என்று வரைந்திருக்க, “எங்கேடி அவ? எஸ்கேப் ஆயிட்டாளா" என்று சுற்றிப் பார்த்தவன், "ஏய் நில்லுடி! இப்போ நீ என்ன ஆகப்போற பாரு" என்று துரத்திக்கொண்டு சென்றான்.

தன்னைப் பிடிக்கும் அளவு அவன் அருகில் வர, சட்டென அவள் படியில் அமர்ந்துவிட ஏறிய வேகத்துக்கு அவனால் நிற்க முடியாமல் போக, மளமளவென அவன் கையில் அகப்படாமல் கீழே இறங்கி ஓடினாள்.

பின்னாலேயே துரத்திக்கொண்டு ஓடிவந்தவன் கீழ் இருந்த கார்பெட்டில் கால் வைத்ததும் அந்த வேகத்தில் கார்பெட் வழுக்கிவிட, பொத்தென கீழே விழுந்தான்.

பெண்கள் இருவரும் சிரிக்க, “ஐயோ! பார்த்துடா...” என்று கத்தினார் ராஜி.

மகனைத் தூக்கிவிட்டுவிட்டு, “விடுவிடு. நீ சொல்றதைக் கேட்டுட்டுத் தான் அவங்க மறுவேலை பார்ப்பாங்க. அவங்களே சமாதானமாகட்டும்” என்றபடி ஈஸ்வரன் தனது அறைக்குச் சென்றார்.

அவன் முடியாமல் சோஃபாவில் அமர்ந்துவிட, பின்னால் வந்து நின்றவள், “அத்தான் என்னைப் பிடிக்கலையா?” என்று பாவமாகக் கேட்க.

“இருடி உனக்கு இருக்கு” என்றான் எரிச்சலுடன்.

“வெவ்வேவ்வவ" என்று அவனுக்கு ஒழுங்கு காட்டிவிட்டுச் சென்றாள்.

அன்று, ஃப்ரெஷர்ஸ் வெல்கம் பார்ட்டி. சீனியர் மாணவர்கள் அனைவரும் சேர்ந்து ஜூனியர்களைக் கலாய்த்துக்கொண்டிருந்தனர். தீபக் எழுந்து சென்று மதுவைப் பாட சொல்லி அழைக்க, எந்தப் பிகுவும் செய்யாமல் சென்று பாடினாள். அவளது பாட்டைக் கேட்டுவிட்டுக் கைதட்டல் அடங்க வெகுநேரம் ஆனது.

மதுவின் பாடலைக் கேட்ட கல்சுரல் ப்ரோக்ரமின் பொறுப்பாளர், டெல்லியில் நடக்கும் ஆல் இந்தியா கல்சுரல் ப்ரோக்ரமில் கலந்துகொள்ள அவளைத் தேர்ந்தெடுத்தார்.

பார்ட்டி முடிந்ததும், மதுமிதா மேகலாவை அழைத்துச் சென்று தீபக்கிற்கு அறிமுகப்படுத்தி வைத்தாள். “ஹாய்" என்றவன் மேகலாவை உச்சி முதல் பாதம் வரை அளவெடுப்பது போலப் பார்த்தான். அவள் சங்கடத்துடன் நெளிய, "ஓகே! நான் வரேன்" எனச் சொல்லிவிட்டு கிளம்பிச் சென்றவனையே அவள் பார்த்துக்கொண்டு நிற்க, மது குறுஞ்சிரிப்புடன் அவர்களைக் கவனித்தாள்.

அவர்கள் டெல்லி செல்லும் நாளும் வந்தது. "தீபக், அங்கே ப்ரோக்ராம் முடிஞ்சதும் என்னோட பிரெண்ட் சந்துரு வீட்ல தங்கி ரெண்டு நாள் இருந்துட்டு வாங்க" என்றார் ஈஸ்வரன்.

"அவங்களை எங்களுக்குத் தெரியாதே மாமா!" என்றாள்.

“நீ சின்னக் குழந்தையா இருந்தபோது, உங்க வீட்டுப் பக்கத்து வீட்லதான் இருந்தாங்க. சந்துருவை, எனக்கு உன் அம்மா மூலமாகத் தான் பழக்கம். நீ எப்போதும் அவங்க வீட்ல தான் விளையாடிட்டு இருப்ப. உன்னைப் பார்த்தா ரொம்பச் சந்தோஷப்படுவாங்க. போய் ரெண்டு நாள் தங்கிட்டு வாங்க. காலேஜும் பத்து நாள் லீவ் தானே" என்று சொல்ல இருவரும் அரை மனதாகத் தலையாட்டினர்.


அத்தியாயம் — 29



டெல்லி வந்து இறங்கிய மதுவும், தீபக்கும் கலை நிகழ்ச்சி நடக்கும் கல்லூரியிலேயே தங்கிக் கொள்ள தீர்மானித்திருந்தனர்.

சந்திரசேகர் தன் வீட்டுக் குழந்தைகள் எதற்காக வெளியே தங்க வேண்டும்” என்று நண்பரிடம் உரிமையாக கோபித்துக் கொண்டார். அவர்களை அழைத்துச் செல்ல ஸ்டேஷனுக்கே வந்துவிட்டார்.

ஸ்டேஷனிலிருந்து இருபது நிமிட பயணத்தில் சவுத் எக்ஸ்டென்ஷனில் இருந்த அவர்களின் அழகான பங்களாவிற்குச் சென்றனர். வீட்டின் முன்புறம் அழகான தோட்டமும், செயற்கை நீருற்றும் பார்க்கவே ரம்யமாக இருந்தது.

கார் சத்தம் கேட்டதும் வாசலுக்கு வந்த விமலா, மதுவைப் பார்த்தும் கன்னத்தை வழித்து திருஷ்டி கழித்தபடியே, "அப்படியே உங்க அம்மாவைப் பார்ப்பது போலவே இருக்கு" என்றார்.

"நான், எங்க அம்மாவைப் பார்த்ததே இல்லை ஆன்ட்டி!" என்று அவள் சொல்லும்போதே குரல் தழுதழுக்க, தீபக் ஆதரவுடன் தோளைத் தட்டிக் கொடுத்தான்.

“என்ன விமலா குழந்தையைக் கண்கலங்க வச்சிட்ட?" என்றார் சந்துரு.

“சாரிடா மது. உள்ளே வாங்க” என்று அழைத்துச் சென்றார். இருவரும் குளித்து விட்டு வந்ததும் காலை உணவை முடித்துவிட்டுப் பேசிக்கொண்டிருந்தனர்.

இருவரையும் சற்றுநேரம் ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டு விமலா மதிய சமையலைக் கவனிக்க சென்றுவிட, சந்துரு வெளியே கிளம்பி சென்றுவிட்டார். மதிய உணவுக்குப் பின் அனைவரும் ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

அங்கிருந்த அலமாரியில் கோப்பைகளும், மெடல்களுமாகக் குவிந்திருந்தன.

“நீங்க வாங்கின பரிசா அங்கிள்!” என்று கேட்டாள்.

“என் பையன் வாங்கினது” என்றார் விமலா பெருமையுடன்.

“ஓஹ்!” என்றவள் வரிசையாக பார்த்துக்கொண்டே வர, அங்கிருந்த சிறு குழந்தை ஒன்றின் புகைப்படம் அவளது மனத்தைக் கவர, “ஹய்யோ! என்ன அழகா இருக்கு இந்தக் குட்டிப் பாப்பா" என்றவள் போடோவை வழித்து முத்தம் கொடுத்தவள், “ஆன்ட்டி! இது யார் குழந்தை?" என்று கேட்டாள்.

விமலா, “இப்போ அவன் குழந்தை இல்ல. இருபத்தி நாலு வயசு பையன். எங்க பையன் அர்ஜுன். ஏர்போர்ஸ்ல இருக்கான்" என்றார் பெருமையாக.

மெல்லப் போட்டோவை வைத்துவிட்டு அசட்டுச் சிரிப்புடன் திரும்பியவள், தன்னையே பார்த்துக் கிண்டலாகச் சிரித்துக்கொண்டிருந்த தீபக்கைப் பார்த்ததும் உள்ளுக்குள் திகிலடித்தது.

‘அடக்கொடுமையே! போயும் போயும் இவன் கண்ணிலா மாட்டணும்?’ என்று நினைக்க, சிரிப்பைக் கட்டுப்படுத்திக் கொண்டு அமர்ந்திருந்தவனை, பார்வையாலேயே எரித்துக் கொண்டிருந்தாள்.

மறுநாள் காலையில் சந்துரு ஐந்து மணிக்கு இருவரையும் எழுப்பி, “வாக்கிங் போகலாமா? என்று கேட்க, மதுவும் கிளம்பிவிட்டாள்.

ஆனால், வீட்டிலேயே ஏழரை மணிக்குக் குறையாமல் தூங்கும் தீபக் அழாத குறையாக, “என்னடி இது பெரிய கொடுமையா இருக்கே. காலைல இந்த மிலிட்டரி எழுப்பிவிட்டு நம்ம உயிரை வாங்குகிறார். பேசாமல் படுத்துத் தூங்காம... வயசானா இவங்களுக்குத் தூக்கம் வராது. நமக்கென்ன? நல்லா, ஸ்லிம்மா அழகா தானே இருக்கோம். இன்னும் ஜாக்கிங், வாக்கிங்ன்னு...

ஏழு மணிக்கு எழுப்பும் எங்க அப்பாவையே நல்லா திட்டுவேன். இந்த மேஜர் என்னடான்னா, நடுராத்திரி ஐந்து மணிக்கு எழுப்பினா எப்படி? நான் ஓடிக்கிட்டே தூங்கப் போறேன். எப்பா அர்ஜுன்! நீ எப்படித் தான் உங்க அப்பாவைச் சமாளிக்கிறியோ? அது மட்டில் ஒரு சந்தோஷம், நல்லவேளை நான் இந்த வீட்டில பிறக்கல" எனச் அலுத்துக்கொண்டே எழுந்து வந்தான்.

வாக்கிங்கை முடித்துக்கொண்டு வீட்டிற்கு வந்தவர்கள் குளித்துவிட்டு வருவதற்குள் பசி வயிற்றைக் கிள்ளியது.

தட்டில் சமைத்த உணவை விட காய்கறிகளும், பழமும் வைத்திருக்க, மது அவனைப் பார்த்தாள். வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு மேலும் தட்டில் ஏதும் வைக்கும் முன் சாப்பிட்டுவிட்டு எழுந்தான்.

அறைக்கு வந்தவன், “ஐயோ... ஐயோ...” என்று தலையில் அடித்துக்கொண்டவன், இதென்னடா கொடுமை! ஆடு, மாடெல்லாம் தின்னுவதை அதுகிட்டயிருந்து புடிங்கிட்டு வந்து நம்மளைத் தின்னு தின்னுன்னு, இந்த ஆள் உயிரை வாங்கறார். இங்கயிருந்து போகும்போது என் வாயெல்லாம் பார்க் மாதிரி புல்லு முளைச்சிடப் போகுது.

இன்னும் மதியானம், நைட்… என்னவெல்லாம் காத்திருக்கோ! கடவுளே எங்களைக் காப்பாத்துப்பா. எனக்குக் கல்சுரல்ல பாடக் கூடத் தெம்பிருக்க போறதில்ல. நான் சென்னைக்குப் போய் இறங்கும் போது, குழந்தை மாதிரி தவழ்ந்து தான் வீட்டுக்குப் போகப் போறேன். நல்லா தெரிஞ்சி போச்சு..." என்று புலம்பியவனை பாவமாகப் பார்த்தாள்.

வீட்டில் வெரைட்டி வெரைட்டியாகச் சாப்பிடுபவன் இப்படிக் காய்கிறான் என நினைத்துக்கொண்டே அமர்ந்திருக்க, தொலைபேசி ஒலித்தது.

"அத்தான் உன் பக்கத்தில தானே போன் இருக்கு எடு. ஆண்ட்டி யாரோடயோ வெளியே பேசிட்டிருக்காங்க" என்றாள்.

“நான் சாப்பிட்டது, உன்கிட்டப் பேசினதுக்கே சரியா போச்சு. நீயே எடுத்துப் பேசு" என்றான்.

அவள் போனை எடுத்து காதில் வைத்த அடுத்த நொடி, “ஐ லவ், யூ லவ் யூ, லவ் யூ சோ மச் டார்லிங்!” என்று குரல் கேட்டதும், ஒரு நொடி அவளுக்குப் பேச்சே எழவில்லை. மறுமுனையில், ஹலோ டார்லிங்...” என்று, அவன் கொஞ்சலாக அழைக்க, "இடியட்..." என்றவள் கோபத்துடன் போனை வைத்தாள்.

அவளால் அங்கே அமர முடியாமல், தனக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குச் சென்றாள். அவளது உடல் இன்னமும் அதிர்ந்து கொண்டிருந்தது.

மீண்டும் போன் ஒலிக்க, விமலாவே எடுத்தார்.

எதிர் முனையிலிருந்து, “அம்மா! அர்ஜுன் பேசறேன்” என்று தயக்கத்துடன் பேச, “என்னடா அர்ஜுன்? எப்போதும் வரும் பாச மழையைக் காணோம்" எனச் சிரித்தார்.

“இதுக்கு முன்னால் யார் போனை எடுத்து?” என்று குழப்பத்துடன் கேட்டான்.

“ஊர்லயிருந்து சுஜா ஆன்ட்டி பொண்ணு வந்திருக்காடா. உனக்கு சுஜாதா ஆன்ட்டியை நினைவிருக்கா? எப்படியிருக்கா தெரியுமா? நெடுநெடுன்னு வஞ்சிக் கொடி மாதிரி...” என்று அவர் ஆரம்பிக்க, அவனுக்கு சலிப்பாக இருந்தது.

“எனக்கு எந்த ஆன்ட்டியையும் ஞாபகம் இல்ல. நான் போன் செய்வேன்னு தெரிஞ்சும் ஏன் வெளியே போனீங்க? இப்போ யாரால ஒரு வம்பு வந்திருக்கு?” என்றான்.

“வம்பா! என்ன வம்பு?” என்றார் புரியாமல்.

“ஆமாம், நீங்கதான்னு போன் எடுத்தீங்கன்னு நினைச்சி, உங்களுக்குக் கொடுக்க வேண்டிய பாசமழையை, அவளுக்குக் கொடுத்துட்டேன்" என்றான்.

திகைத்த விமலா, “நான் எத்தனை முறை சொல்லியிருக்கேன். நீ அடங்கவே போறதில்ல" என்று மகனைக் கடிந்து கொள்ள, “அந்தப் பொண்ணை நினைச்சாதான்...” என்றவன் சட்டென சிரித்துவிட, “வாயை மூடுடா!” என்றார் எரிச்சலுடன்.

“சரி, அந்தப் பொண்ணைக் கூப்பிடுங்க. சாரி சொல்லிடறேன்" என்றான்.

“ஒண்ணும் வேணாம். நீ சொன்னதா, நானே சொல்லிடறேன்” என்றவர் சற்று நேரம் பேசிவிட்டுப் போனை வைத்தான்.

சிறிது நேரத்திற்குப் பிறகு எழுந்து வெளியில் வந்த மதுவிடம், “அர்ஜுன் உன்கிட்ட சாரி சொல்லச் சொன்னான்ம்மா!" என்றார்.

மதுவிற்கு, ‘எல்லாவற்றையும் அவரிடம் சொல்லி இருப்பானோ!’ என்ற எண்ணத்தில், "எதுக்கு ஆன்ட்டி?" என ஒன்றும் நடக்காதது போலக் கேட்டாள்.

"தெரியலையேம்மா" என்றார்.

"நீங்க எதுக்குன்னு கேட்கலையா?" என்றவளைப் பார்த்துச் சிரித்த விமலா, "அவன் ஏதாவது குறும்பா செய்திருப்பான். என்னன்னு உன்னைக் கேட்க வேணாம்ன்னு தான் கேட்கல" என்றதும், அவள் ஏதும் சொல்லாமல் அங்கிருந்து அகன்றாள்.

அடுத்து வந்த நாட்களில் வந்த வேலையை முடித்துக்கொண்டு, ஆறுதல் பரிசுடன் சென்னைக்கு வந்து சேர்ந்தனர். அன்று கல்லூரி விடுமுறை என்பதால், சுரேஷ், கீதா, தீபா மூவரும் கிளம்பி மதுவின் வீட்டிற்கு வந்தனர்.

மதுமிதா, ஈஸ்வரனிடம் அனுமதி கடிதம் வாங்கி சுரேஷிடம் கொடுத்து, ஹாஸ்டல்லயிருந்து மேகலாவை அழைத்து வரச் சொன்னாள். அவனும் அவளை அழைத்து வந்தான்.

மதிய உணவுக்குப் பின் அனைவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க, “சுரேஷ், உனக்கு ஒண்ணு தெரியுமாடா?" என்று மதுவைப் பார்த்துக்கொண்டே கேட்டான் தீபக்.

சுரேஷ், “என்ன பாஸ்?" என்று, விஷயம் அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் கேட்டான்.

மற்றவருடன் பேசிக்கொண்டிருந்தவள் அவன் சொல்லப் போகும் விஷயத்தை யூகித்து, “அத்தான்! வேண்டாம். வீணா ஏதாவது சொல்லி என்னை நக்கல் பண்ணாதே. அப்புறம் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது" என்று சப்தம் போட்டாள்.

இது போல் எத்தனை முறை பார்த்திருக்கேன் என்ற பார்வையுடன், “இவள் என்ன செய்தா தெரியுமா? நாங்க போனோமே சந்துரு அங்கிள் வீட்டுக்கு, அவங்க பையனுக்கு முத்தம் கொடுத்துட்டா" என்று சொல்லிவிட்டு மற்றவர்களைப் பார்க்க, அனைவரும் “மது” என்று கோரசாகச் சொல்லி சிரித்தனர்.

“அடச்சீ! அங்கே ஒரு சின்னக் குழந்தையோட போட்டோ இருந்தது. அதுக்குத்தான் முத்தம் கொடுத்தேன். அதை இவன் எல்லோரிடமும் மாத்திப் போட்டுக் கொடுக்கறான்” என்றவள், “உன்னை அங்க சாப்பிட வச்சாங்க பாரு... அது மாதிரி தினம் இலை, தழைன்னு கொடுத்துத் தின்னச் சொன்னாத் தான் நீ அடங்குவே. உனக்குப் போய் பாவம் பார்த்தேன் பாரு" என்றவள், அங்கிருந்த பிளவர்வாஸைத் தூக்கிக்கொண்டு அவனைத் துரத்தினாள்.

அவள் கைகளுக்கு அகப்படாமல் அவன் போக்குக் காட்ட அனைவரும் அதைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தனர்.

காலமும் வேகமாக ஓட ஆரம்பித்தது. மது இரண்டாம் ஆண்டு படிக்கும் போது, தீபக் மேற்படிப்புக்காக ஆஸ்திரேலியா சென்றான். இரண்டாம் ஆண்டு முடிக்கும் நேரம், தீபாவிற்கும் திருமணம் ஏற்பாடாகிவிட மது, வித்யா இருவரும் திருமணத்திற்குச் சென்று வந்தனர்.

வீட்டிற்கு வந்த மது, "அத்தை! இவள் ஊரெல்லாம் மதுதான் என் அண்ணின்னு சொல்றா. எனக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கு. நான் பேசாமல் எல்லாத்தையும் அவகிட்டச் சொல்லிடப் போறேன்" என்று அத்தையிடம் அழாத குறையாக புலம்ப ஆரம்பித்தாள்.

அனைத்தையும் கேட்டுக்கொண்ட ராஜி, மகளை அழைத்து தன்னுடைய எண்ணத்தையும், மதுவிற்கு இருக்கும் எண்ணத்தையும் சொல்ல, “இங்கே பார் மது, மேகலா எனக்குப் ப்ரெண்டா இருக்கலாம். ஆனா, நீ எனக்கு அதுக்கும் மேல” என்று பிடிவாதமாக ஒரு நாள் முழுக்க இருவரிடமும் பேசாமல் சத்யாகிரகம் செய்தாள்.

தனது எண்ணத்தைச் சொல்லி அவளை தங்கள் வழிக்குக் கொண்டு வருவதற்குள் அவர்களுக்குப் போதும் போதும் என்றாகிவிட்டது.

அனைவரும் பொறியியல் கடைசி வருடம் படித்துக்கொண்டிருந்த நேரம், தீபக் தன் படிப்பை முடித்துக்கொண்டு இந்தியா திரும்பி வருவதை எண்ணி வீடே மகிழ்ச்சியிலிருந்தது.

ராஜியும், ஈஸ்வரனிடம் மெதுவாக விஷயத்தைச் சொல்ல, ஏமாற்றமாக இருந்த போதும், தீபக், ராஜேஷ் இருவரும் வந்தபின் முடிவெடுத்துக் கொள்வோம் என்று அப்போதைக்குப் பேச்சை முடித்து கொண்டார்.

ஈஸ்வரனும், ராஜியும் மட்டும் தீபக்கை அழைக்க விமான நிலையம் செல்ல மது, வித்யா, மேகலா, மூவரும் அவனது வருகையை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருந்தனர்.

மேகலா ஒரு இடத்தில நில்லாமல் உள்ளேயும், வெளியேயும் அலைந்து கொண்டிருந்தாள்.

“வித்யா! இந்த மேகலாவைப் பார்த்தியா... அத்தான் வரார்னு சொன்னதும் உள்ளேயும்; வெளியேயும் போய் வந்து மங்காத்தா ஆடிக்கிட்டு இருக்கா. இப்போ பாரு என்றவள், “ஏன் வித்யா உங்க அண்ணன் தனியா வருவாரா? இல்லை..." என்று வாக்கியத்தை முடிக்காமல் இழுத்தாள்.

அவளை தொடர்ந்த வித்யா, “எனக்கும் அதே சந்தேகம் தான் மது! வரும்போதே லகேஜோட ஒரு வெள்ளைக்காரியையும் சேர்த்துத் தள்ளிக்கிட்டு வந்துட்டா என்ன செய்யறது?" என்று சோகமாகக் கேட்டாள்.

“வேற என்ன செய்றது? நாம மூணு பேரும் சேர்ந்து ஆரத்தி எடுக்க வேண்டியது தான். ஏன் வித்யா அத்தைக்கு இங்கிலீஷ் தெரியுமா? இல்லன்னா, சண்டை கூட ஒழுங்கா போடா முடியாதே" என்றாள் பெரும் கவலையுடன்.

“அதனால் என்ன? அம்மா தமிழ்ல திட்ட, அண்ணி இங்கிலிஷ்ல சண்டைப் போட அப்பாவும், அண்ணனும் ரெஃப்ரி மாதிரி உட்கார்ந்து வேடிக்கை பார்க்க வேண்டியது தான். இதுவும் நல்லா சுவாரஸ்யமா தான் இருக்கும்."

“ஏய்! இதையெல்லாம் நினைச்சிப் பார்க்கவே எவ்வளவு சந்தோஷமா இருக்கு?" என்று இருவரும் சேர்ந்து சிரிக்க, வேகமாக வந்த மேகலா, "உங்க ரெண்டு பேருக்கும் எவ்வளவு கெட்ட எண்ணம்!" என்றாள் கோபத்துடன்.

மேகலாவின் கோபத்தைப் பார்த்து மீண்டும் சிரிக்க ,வெளியே கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. “ஏய் உங்க அண்ணனும், அண்ணியும் வந்தாச்சு போல... அந்த ஆரத்தித் தட்டைக் கொண்டு வா” என்று குரல் கொடுத்தபடியே வாசலுக்கு ஓடினாள் மதுமிதா.

ராஜி ஆரத்தித் தட்டை வாங்கிச் சுற்ற அவன், மதுவையும், வித்யாவையும் பார்த்துச் சிரித்தபடி, “ரெண்டு வாலுங்களும் எப்படியிருக்கீங்க?" என்றான்.

“ரெண்டு பேரும் மூணாவது வாலை இவ்வளவு நேரம் தேடிகிட்டு இருந்தோம். இதோ வந்தாச்சு. என்ன ஒரு குறைன்னா, கூடவே ஒரு ஜோடி வாலு வரும்னு எதிர்பார்த்தோம். ஆனால், அது தான் மிஸ் ஆயிடிச்சு" என்றாள் கிண்டலாக.

“என் ஜோடி வாலைத் தான் வீட்லயே வச்சிருக்கேனே. அப்புறம் எனக்கு எதுக்கு புதுசா ஒரு ஜோடி?” என்றபடி உள்ளே சென்றான்.

மது அவசரமாக, “அத்தான் அப்படியே நில்லுங்க. இங்கேயே நில்லுங்க” என்று அவனை வாசற்படியில் நிற்க வைத்துவிட்டு பெரிய ஊதுவத்தியைக் கொண்டு வந்தாள்.

“நான் வந்திருக்கறதைப் பட்டாசு வெடிச்சிக் கொண்டாடப் போறியா? பரவாயில்லை அதெல்லாம் வேண்டாம்" என்று பவ்யமாகச் சொன்னான்.

“பட்டாசு தான் ஆனால், இது வேற பட்டாசு" என்றவள் சட்டென தீபக்கின் தலைக்கு மேல் கட்டி வைத்திருந்த பெரிய பலூனில் வைக்க, வெடித்து அதிலிருந்த தண்ணீர் அவன் மேல் கொட்டியது.

அனைவரும் சிரிக்க, மதுவும், வித்யாவும் ஹை-ஃபை கொடுத்துக்கொள்ள, முகத்தைத் துடைத்தபடி அவளருகில் வந்தவனிடம், இரு புருவத்தையும் உயர்த்தி, ‘எப்படி?’ என்பது போல கேட்க, “உன்னையும், உன் வாலுதனத்தையும் ரொம்ப மிஸ் பண்ணேன் அல்லிராணி!” என்று சொல்லிவிட்டு, அங்கிருந்த சோஃபாவில் வந்து அமர்ந்தான்.

வித்யா, துடைத்துக்கொள்ள துண்டு ஒன்றைக் கொண்டுவந்து, அண்ணனிடம் கொடுத்தாள். தலையைத் துடைத்தபடி தந்தையுடன் பேசிக்கொண்டிருந்தான். மேகலா அவனைப் பார்த்தபடி நின்றுகொண்டிருந்தாள். வந்தது முதல் அவளைக் கண்டுகொள்ளாது பெருத்த ஏமாற்றமாக இருந்தது அவளுக்கு.

அதைக் கண்ட ராஜி, “தீபக்! இது யாருன்னு தெரியுதா?" என்று மேகலாவைச் சுட்டிக்காட்டி கேட்டார்.

“ம்ம், தெரியும். காலேஜ்ல பார்த்திருக்கேன். மது, வித்யாவோட ஃப்ரெண்ட். ஆனா, பேர் ஞாபகம் இல்ல" என்று தோளைக் குலுக்கினான்.

மேகலாவிற்கோ, ‘தான் இவனையே நினைத்துக்கொண்டிருக்க, அவனுக்குத் தன் பெயர் கூட நினைவில் இல்லை’ என்று நினைக்க நினைக்க, அழுகை வருவது போலிருக்கவும் அந்த இடத்தை விட்டு அகன்றாள்.

ராஜிக்கு தவிப்பாக இருந்தது. "தீபக்! மேகலா, என்னோட அண்ணன் பொண்ணுடா. உனக்குச் சொந்த தாய்மாமா பொண்ணு" என்ற அன்னைக்கு, "ஓஹோ..." என்று அசட்டையாகக் கேட்டான்.

நிதானமாகக் கேட்டுக்கொண்டு தன் தந்தையிடம் திரும்பி அமர்ந்து பேசத் தொடங்கினான்.

அங்கே வந்த மது, “அத்தை! நான் காலேஜ் கிளம்பறேன் என்றவள் தீபக் இருந்த பக்கம் திரும்பவே இல்லை. வித்யா, “என்னடி இன்னிக்குப் போகவேண்டாம்ன்னு தானே பேசிட்டு இருந்தோம்” என்றவளுக்கு பதில் சொல்லாமல் சென்றாள். கல்லூரியிலிருந்து வந்தபின்பும், அறையை விட்டு வெளியே வரவில்லை.

அவளைத் தேடி அவளது அறைக்கு வந்த தீபக், “என்ன ஹைட் அண்ட் சீக் விளையாடிட்டு இருக்க. உனக்காகத் தான் வெய்ட்டிங் கிளம்பு பீச் போகலாம்" என்றான்.

அவள் அமைதியாக இருக்க, “ஹே மது! என்னாச்சு உனக்கு? உன்னை இந்த மாதிரி இதுக்கு முன்ன பார்த்ததே இல்லையே? வாட் இஸ் ஈட்டிங் யூ?" என்றதும், அவள் விசும்ப ஆரம்பிக்க, "என்னம்மா? காலேஜில் ஏதாவது பிரச்சனையா?" என்றான் பரிதவிப்புடன்

இல்லை எனத் தலையை ஆட்டியவள், “நீங்க தானே காலைல சொன்னீங்க?" என்றாள் விசும்பலுக்கிடையே.

“நானா! என்ன சொன்னேன்?" புரியாமல் கேட்டான்.

"உனக்குக் கல்யாணம் பண்ணி, உன் கொழுப்பை அடக்கணும்ன்னு சொன்னீங்க தானே" என்றாள் கோபத்துடன்.

“அட அறிவுக்கொழுந்தே! நான் சொன்னது உண்மை. ஆனா, நான் உன்னைக் கல்யாணம் செய்து அடக்குவேன்னு சொல்லலையே..." என்றதும், கண்களை உருட்டி, “நிஜமா!” என்றாள் நம்பாமல்.

சிரித்தவன், “ஏய் முண்டக்கண்ணி! உன்னை நீ கண்ணாடில பார்த்ததே இல்லையா" என்றான் கிண்டலாக.

“ஹும்ம்...” என்று செல்லமாகச் சிணுங்கியவளிடம், “மேகலா எங்கே?" என்றான்.

"தெரியல நான் பார்க்கல" என்றாள்.

"நானும் காலைலயிருந்து தேடறேன் கண்லயே படமாட்டேன்றா?" என்றான் யோசனையுடன்.

“நீங்க எதுக்கு அவளைத் தேடறீங்க?" என்றவளை, டியூப் லைட்டு உனக்கு எல்லாத்தையும் விளக்கமா சொல்லணுமா? காலைல அவளைக் கொஞ்சம் கடுப்பேத்த தான் உன்கிட்ட அப்படி விளையாடினேன். கடைசில நீ என்னைத் தப்பா நினைச்சிட்ட."

துள்ளிக் குதித்தவள், "ஹேய்! அத்தான் அப்போ, நீங்க மேகலாவை லவ் பண்றீங்களா?" என்றாள் கொண்டாட்டத்துடன்.

“சேச்சே! உனக்காகவும், அம்மாவுக்காகவும்…” என்று பூடகமாகச் சிரித்தான்.

"அடப்பாவி! நானும், அத்தையும் பேசினதை ஒட்டுக்கேட்டிருக்க. சரியான திருடு நீங்க! என்றவள், “எனிவே பிராப்ளம் சால்வ்ட்” என்று சந்தோஷமாகச் சிரித்தாள்.

அவளருகில் அமர்ந்தவன், " வித்யாவும், நீயும் எனக்கு வேற வேற இல்ல. வித்யாகூட என்கிட்ட அவ்ளோ பாசமா இருந்ததில்ல. அதுக்கும் மேல நீ எனக்கு ஒரு நல்ல ப்ரெண்ட்" என்றவனை அன்புடன் பார்த்தாள்.

அந்த விடுமுறையில் அனைவரும் கும்பகோணத்தில் இருக்கும் ராஜியின் பிறந்த வீட்டிற்குச் சென்றிருந்தனர். கோவில், குளம் என்று சுற்ற நிறைய இடங்கள் இருந்தன. அவர்கள் சென்னைக் கிளம்புவதற்கு முதல் நாள், தீபக், மேகலா திருமணத்தைக் குறித்து ராஜியின் சகோதரர் பேச்சை துவக்கினார்.

“என் அக்கா பையன் ராஜேஷ், அடுத்த வாரம் இந்தியா வரான். அவன்கிட்டப் பேசிட்டுத் தான் நான் எந்த முடிவையும் எடுக்க முடியும்” என்று தற்காலிகமாக அந்தப் பேச்சிற்கு முற்றுப் புள்ளி வைத்தார்.
 

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
115
445
63
அத்தியாயம்—30



ராஜேஷ், ஊரிலிருந்து வரும் நாளும் வந்தது. மது, இறக்கை இல்லாமல் பறந்து கொண்டிருந்தாள். அனைவரும் விமான நிலையத்தில் காத்திருக்க, ஈஸ்வரன் தனக்கு வந்த போன் காலை அட்டென்ட் செய்ய சிக்னல் சரி இல்லாததால் வெளியே சென்றுவிட இளையவர்கள் மூவரும் மட்டும் அங்கே இருக்க, மது ஓரிடத்தில் நிலையில்லாமல் தவிப்புடன் காத்திருந்தாள்.

தன் அண்ணன் யாருடனோ கைகுலுக்கி விட்டு வருவதைக் கவனித்த மது, அவனை நோக்கி உற்சாகத்தோடு கை அசைத்தாள்.

தன் தங்கையை நோக்கி வந்தவன், “மதும்மா” என்று அன்புடன் தோளோடு அணைத்துக்கொண்டான். “என்னடா மது! இப்படி இளைச்சிப் போயிருக்க?" என்று பாசத்துடன் கேட்டான்.

"அண்ணா! பொய் சொன்னாலும், பொருந்த சொல்லணும்” என்று சிரித்தவள், “இப்போதாவது அந்த அமெரிக்காவை விட்டு வர மனசு வந்ததே. அப்படியே இங்கே இருந்தே ஒரு டாட்டா சொல்லிடு. இனிமே நீங்க என்னை விட்டுட்டுப் போகக்கூடாது" என்றபடி தமையனின் தோளில் சாய்ந்துகொண்டாள்.

எதிரில் வந்து நின்ற தீபக், “சார்! என் பேரு தீபக். உங்க மாமா பையன். இது, என் தங்கை வித்யா. உங்க வருங்கால மனைவி. இப்போதாவது, எங்களை அடையாளம் தெரியுதா?" என்றான் கிண்டலாக.

“ஹேய் தீபக்! எப்படியிருக்க? அத்தை, மாமா எப்படியிருக்காங்க?" என்று கேட்டுக் கொண்டே வித்யாவைப் பார்க்க, அவள் கவனமாகக் கையிலிருந்த பொக்கேவைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

"அப்பா, ஒரு போன் அட்டென்ட் பண்ணப் போயிருக்காங்க வந்திடுவாங்க” என்று சொல்லிக்கொண்டே திரும்பியவன் மதுவின் கண்ஜாடையைக் கவனித்து, "மது! என்கூடக் கொஞ்சம் வாயேன்" என்று அவளை அழைத்துச் சென்று, சற்று மறைவாக நின்றுகொண்டு இருவரையும் கவனித்தனர்.

பொக்கேவை ராஜேஷிடம் கொடுத்ததோடு சரி, அவன்தான் எதோ பேசினானே தவிர, வித்யா வாயைத் திறக்கவில்லை. அதேநேரம் ஈஸ்வரனும் அங்கே வந்துவிட, மது தலையிலேயே அடித்துக்கொண்டாள்.

"அத்தான்! நீதான் ஒரு பேக்குன்னு நினைச்சா, உன் தங்கச்சி உனக்கு மேல தத்தியா இருக்கா. ஹய்யோ... அண்ணா நீ ரொம்பவே பாவம்” என்றவள் தலையில் மெல்லக் குட்டியவன், “சரி வா நாம எதுக்கு இங்கே தண்டத்துக்கு நிக்கிறோம்" என்று அவர்களுடன் சென்று இணைந்து கொண்டனர்.

மறுநாள் மதியம் அனைவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க, மது ராஜியின் மடியில் படுத்துக் கொண்டிருந்தாள் மது.

அங்கே வந்த தீபக், “ஏய்! எழுந்திரு. நான், எங்க அம்மா மடியில படுக்கணும் "என்றான்.

“உனக்கு அம்மான்னா, எனக்கு அத்தை!" என்றாள் சட்டமாக

ஈஸ்வரன் சிரித்துக்கொண்டே, “இன்னும் எத்தனை நாளைக்கு நீங்க ரெண்டு பெரும் இப்படி சண்டை போட்டுக்கிட்டு இருப்பீங்க?” என்று கேட்டார்.

தனது அத்தையின் முகத்தைப் பார்த்தவள், ‘இதுதான் சரியான சந்தர்ப்பம் தன் மனத்தில் உள்ளவற்றைத் தெளிவாகச் சொல்லிவிட வேண்டும் என்று எண்ணி, “ஹப்பா! நான் கல்யாணம் ஆகிப் போய்ட்டா, இந்தக் குரங்கு மூஞ்சியில இனி விழிக்கவேண்டாம். பாவம்... எந்தப் பொண்ணு உன்னைக் கட்டிக்கிட்டு முழிக்கப் போகுதோ" என்று தீபக்கைப் பார்த்துக் கிண்டலாகச் சொன்னாள்.

தீபக், “திமிருடீ உனக்கு! உன்னையே ஒருத்தன் கட்டி மேய்க்க வரும்போது, என்னைக் கட்டிக்கிட்டு குப்பைக் கொட்ட ஒருத்தி வரமாட்டாளா?" என்றான் பதிலுக்கு.

சிரித்துக்கொண்டே, “நீ தனியா குப்பைக் கொட்டுறது போதாம, உனக்குக் கல்யாணம் ஆனதுக்கு அப்புறமும், பொண்டாட்டி கூடச் சேர்ந்து குப்பை தான் கொட்டுவியா?" என்றாள்.

“உனக்கு ரொம்பக் கொழுப்புடி! எல்லாம் இந்த அம்மா, அப்பா கொடுக்கும் செல்லம். எனக்குக் குப்பைக் கொட்டுறவன் வந்தா, உனக்கு மட்டும் என்ன ப்ளைன் ஓட்றவனா வரப்போறான்?"

“ஏன் எனக்குப் ப்ளைன் ஓட்றவன் மாப்பிள்ளையாக வரக்கூடாதா?” என்று அவனை முறைத்தாள்.

இருவரது பேச்சையும் கவனித்த ராஜேஷ், “போதும் மது! இன்னமும் சின்னக் குழந்தை மாதிரி அவன்கிட்ட மல்லுக்கு நிக்கிற" என்றான்.

“ப்ரதர்! மச்சானுக்குச் சப்போர்ட்டா?" என்றாள் அண்ணனிடம்.

ஈஸ்வரன், “சரி சரி ஆரம்பிச்ச கதையை விட்டுட்டு எங்கேயோ போயாச்சு. மதுவும், வித்யாவும் இன்னும் ஆறு மாசத்துல படிப்பை முடிச்சிடுவாங்க. தீபக்கும் வேலைக ஜாயின் பண்ணிடுவான். அப்புறம், ரெண்டு கல்யாணத்தையும் ஒரே முகூர்த்தத்தில் வச்சிக்கலாம்" எனச் சொல்லிவிட்டு ராஜியை பார்க்க, அவர் மௌனமாக இருந்தார்.

தீபக்கும், மதுமிதாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். நிலைமை திருமண தேதி குறிப்பதுவரை வந்து விட்டது. இதற்கு மேலும் அமைதியாக இருப்பது நல்லதல்ல என்று எண்ணியவள், “மாமா! உங்ககிட்டக் கொஞ்சம் பேசணும்" என்றாள்.

“சொல்லும்மா!" என்றார்.

"முதல்ல அண்ணன், வித்யா கல்யாணம் முடியட்டும். எங்க கல்யாணத்தைப் பத்திப் பிறகு பேசலாம்" என்றவளைக் கூர்ந்து பார்த்த ஈஸ்வரன், " ரெண்டு பேரும் சேர்ந்து பேசி ஏதோ முடிவு பண்ணி வச்சிருக்கீங்க, சொல்லுங்க என்ன விஷயம்?" என்றார் மகனின் முகத்தைப் பார்த்துக் கொண்டே.

தீபக் மெதுவாக, “அது... எனக்கும், மதுவுக்கும்...” என்று தயங்கியவன், “வித்யா மாதிரி தான் மதுவும் எனக்கு. நாங்க எப்படி?” என்றதும் ராஜேஷ் அதிர்ந்து போனான்.

“ரெண்டு பேரும் என்ன பேசறீங்கன்னு புரிஞ்சுதான் பேசறீங்களா?" என்றான் வேகமாக.

“ராஜேஷ், பதட்டப்படாதே. இதை நான் எதிர்பார்த்தேன். நீ படிச்சது பெரும்பாலும் ஹாஸ்டல்லங்கறதால எங்க முடிவுக்கு நீ சம்மதிச்சிட்ட. ஒரே வீட்ல ஒண்ணா வளர்ந்த ரெண்டு பேருக்கும் இது சரியா வரல. தப்பு அவங்க மேல இல்ல” என்றவர், “சரி, வேற ஏதாவது முடிவு செய்திருக்கீங்களா? ஐ மீன் வேற யாராவது..." என்றார்.

மது அவசரமாக, “அப்படியெல்லாம் இல்லை மாமா! நீங்க யாரைச் சொல்றீங்களோ அவங்களை நான் கல்யாணம் செய்துக்கறேன். அத்தானும், நம்ம மேகலா..." என்று முடிக்காமல் நிறுத்தினாள்.

ஆழ்ந்த பெருமூச்சுடன் மனைவியைப் பார்த்தார். அவர் எதுவும் சொல்லாமல் மௌனமாக இருந்தார்.

"சரி இது வாழ்க்கை. கடவுளோட விருப்பமும் அதுதான்னா நடக்கட்டும். அதுக்கு முன்னால மதுவிற்கு ஒரு நல்ல மாப்பிள்ளையைப் பார்த்துட்டுத் தான் மற்ற விஷயம் பேசுவேன்" என்றதும், “ரொம்பத் தேங்க்ஸ் மாமா" என்றவள் ராஜியை அணைத்து ஒரு முத்தம் கொடுத்து தன் சந்தோஷத்தைப் பகிர்ந்து கொண்டு தன் அறைக்கு ஓடினாள்.

ராஜேஷ் ஏதோ யோசனையோடு அமர்ந்திருந்ததைக் கவனித்த ராஜி, "என்ன ராஜேஷ் என்ன யோசிக்கிற?"

"மது இப்படிச் சொல்வான்னு நான் நினைக்கவே இல்ல. இப்போ இவளுக்கு ஏத்த நல்ல மாப்பிள்ளையா...” என்றவனுக்குப் பளிச்சென்று அந்த யோசனை வந்தது. “மாமா! என் கூட சித்தார்த்ன்னு ஒரு பையன் வேலை செய்தான். ரொம்ப டேலண்டட். எங்க ரெண்டு பேர் ப்ராஜெக்டும் முடிஞ்சி ஒண்ணாதான் சென்னைக்கு வந்தோம். நம்ம மதுவுக்கு ரொம்பவே பொருத்தமா இருப்பான். அவனைப் பார்க்கலாமா?" என்றான் ஆவலுடன்.

“உனக்குப் பிடிச்சிருந்தா, கண்டிப்பா பார்க்கலாம்" எனச் சொல்லிக்கொண்டிருக்கும் போதே போன் ஒலிக்க, பேசிவிட்டு வந்தவர், “நம்ம சந்துரு, சென்னை வரானாம். சரி ரெண்டு நாள் ஆகட்டும் ராஜேஷ்! சந்துரு வந்து கிளம்பினதும், மேற்கொண்டு பேசுவோம்” எனச் சொல்லிவிட்டு எழுந்து சென்றார்.

மறுநாள் காலையில் சந்திர சேகரன் வீட்டிற்கு வர, நீண்ட நாட்களுக்குப் பிறகு, சந்தித்த நண்பர்கள் மகிழ்ச்சியுடன் அளவளாவிக் கொண்டிருந்தனர். இளையவர்கள் கல்லூரிக்கும், வேலைக்கும் சென்றிருக்க, ஈஸ்வரனிடம் பொதுவாக பேசிக்கொண்டிருந்தார் சந்திர சேகர்.
பிள்ளைகளின் திருமணத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் போது, ஈஸ்வரன் மதுமிதாவைப் பற்றிச் சற்றுக் கவலையுடன் பேசினார்.

அதைக் கேட்ட சந்திர சேகர், “ரெண்டு பேரும் ரொம்பத் தெளிவா இருக்காங்க. சந்தோஷப்படு” என்றவர், “ஒரு வகைல எனக்குச் சந்தோஷம்” என்றா பூடகமாக.

ஈஸ்வர் புரியாமல் பார்க்க, “உனக்கு ஆட்சேபணை இல்லன்னா, என் பையன் அர்ஜுனுக்கு, மதுமிதாவைக் கல்யாணம் செய்து கொடுக்க உனக்குச் சம்மதமா?” என்று கேட்டார்.

ஈஸ்வர் ஆச்சரியமும், சந்தோஷமுமாகப் பார்க்க "விமலாவுக்கு பார்த்தும் மதுவை ரொம்பப் பிடிச்சிருந்தது. அப்போதே என்னிடம் கேட்டா. ஆனால், நீ உன் பையனுக்கே முடிச்சிக்கிற முடிவுல இருக்கறது தெரிஞ்சதால அந்தப் பேச்சை நிறுத்திட்டோம். இப்போ நீ எப்படியும் வெளியே மாப்பிள்ளைப் பார்க்கப் போற. அது ஏன் அர்ஜுனா இருக்கக் கூடாது?" என்றார்.

“சந்துரு நான் இதை யோசிக்கவே இல்லைடா. நீ வந்ததும் ஒரு நல்லதுக்குத்தான். மது என் மருமகளா இருந்தா என்ன? உன் மருமகளா இருந்தா என்ன? எங்கேயோ தெரியாத இடத்தில் அவளைக் கொடுக்கறதுக்கு, உன் வீட்டுக்கே ஒரு மகளா அனுப்பி வைக்க கசக்குமா?” என்றார் சந்தோஷத்துடன்.

“விமலா கேட்டா, ரொம்பச் சந்தோஷப்படுவா."

“நீ வீட்டுக்குப் போய்ப் பேசிட்டு, அர்ஜுனோட போட்டோவை அனுப்பு. ரெண்டு பேருக்கும் பிடிச்சிருந்தா, மனசு ஒத்துப்போச்சுன்னா கல்யாணத்தை முடிச்சிடுவோம்."

“இன்னும் ரெண்டு நாளில், வேலை விஷயமா அர்ஜுன் சென்னை வரான். உன்னை வந்து பார்க்கச் சொல்றேன். எல்லோரும் பாருங்க. மதுவும், அர்ஜுனும் பேசட்டும். பிடிச்சிருந்தா கல்யாணத்தை முடிச்சிடுவோம். எனக்கும் இந்த ஜாதகம், ஜோசியத்துல நம்பிக்கை இல்ல. காதலிச்சிக் கல்யாணம் செய்துகிட்ட நாம, குடும்பத்தோடு சந்தோஷமா வாழலையா?" என்றதும், ஒத்த மனத்துடன் சந்தோஷமாகக் கை குலுக்கிக் கொண்டனர்.

மது ஹாலில் அமர்ந்து புத்தகம் படித்துக்கொண்டிருக்க, தீபக் விசிலடித்துக்கொண்டே உள்ளே வந்தான்.

“அத்தான்! வாவா உன்னைத்தான் காலைலயிருந்து தேடிக்கிட்டு இருக்கேன்" என்றாள் சந்தோஷத்துடன்.

“நீ இப்படி சிரிச்சிகிட்டே கூப்பிட்றத பார்த்தா, என்னை எதிலேயோ வசம்மா மாட்டி விட்டிருக்க போல?"

“எப்போதும் சந்தேகம் தானா! சரி அதை விடு. உன்னோட தோஸ்த் டெல்லியிலிருந்து வந்திருக்கார்" என்றாள்.

“அது யாரு எனக்குத் தெரியாமல் டெல்லி...?" என்றவன், “ஐயோ! மேஜர் சந்திரகாந்தா... என்று அதிர்ச்சி அடைய, “அவர் சந்திர காந்த் இல்ல சந்திரசேகர்" என்றாள்.

"ரொம்ப முக்கியம். இப்போ பேரைச் சரியா சொல்லலைன்னா என்ன? ஐயோ...! அந்த ஆளு இங்கேயும் வந்து இலை தழை சாப்பிட சொன்னா என்ன செய்யறது? இந்த வம்பே வேண்டாம் நான் இப்போதே எங்கேயாவது ரெண்டு நாளைக்கு எஸ்கேப் ஆயிடறேன். எனச் சொல்லிக்கொண்டே எழுந்தவன் தன் தந்தையும், சந்துருவும் வருவதைப் பார்த்து, பவ்யமாக அவரை நலம் விசாரித்தான்.

அவரது கவனம் தந்தையிடம் செல்ல, விட்டால் போதும் என தன் அறைக்கு ஓடினான். ஈஸ்வரன் மனைவியிடம் அர்ஜுனைப் பற்றிச் சொல்ல, ராஜிக்கும் பெரும் சந்தோஷம். வந்த வேலையும் முடிந்து விட்டதால், அன்று இரவே சந்துரு மீண்டும் டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றார்.

ஊருக்குச் சென்று சேர்ந்ததும் மனைவியிடம் விஷயத்தைச் சொல்லிவிட்டு, மகனின் புகைப்படத்தை ஈஸ்வரனின் மெயிலுக்கு அனுப்பி வைத்தார்.

ஈஸ்வரன் ராஜியை அழைத்துக் காண்பிக்க, “ரொம்ப நல்லாயிருக்காங்க. நம்ம மதுவுக்கு ரொம்பப் பொருத்தமா இருப்பான். இந்த வரனையே முடிச்சிடலாம்" என்று சந்தோஷமாகச் சொன்னார்.

"நாளைக்கு அர்ஜுன் வேலை சம்மந்தமா சென்னை வரானாம். நம்ம வீட்டுக்கும் வருவான். அதுக்குப் பிறகு, எல்லோரிடமும் சொல்லிக்கலாம்" என்றதும், தலையாட்டிவிட்டு, எல்லாம் நல்ல படியாக நடக்கணும் என்று ராஜி வேண்டிக்கொண்டார்.





அத்தியாயம்—31



டெல்லியில் அர்ஜுன் தனது அலுவல் காரணமாகச் சென்னைக்குக் கிளம்பிக் கொண்டிருந்தான்.

சந்துரு, “அர்ஜுன் என் ஃப்ரெண்ட் ஈஸ்வர் உன்னை ரொம்ப விசாரித்தான். நீ போய் அவன் வீட்ல தங்கிக்கோ" என்றார்.

அர்ஜுன், “அப்பா! எனக்கு ஹோட்டல்லையே ரூம் அலாட் பண்ணி இருக்காங்க. என்கூட இன்னும் நாலு பேர் வராங்க. அவங்களைத் தனியா விட்டுட்டு, நான் மட்டும் போய்த் தங்கினா நல்லாயிருக்காது. வேணும்னா ஒரு நாள் போய் பார்த்துட்டு வர்றேன்" என்றான்.

“என்னங்க நீங்க! நேரடியா விஷயத்தைச் சொல்லாம இப்படித் தலையைச் சுத்திச் சொன்னா அவனுக்கு எப்படிப் புரியும்?" என்ற அன்னையைத் திரும்பிப் பார்த்தவன், “என்னைக் கடுப்பேத்தறது போல ஏதோ சொல்லப் போறீங்க. சொல்லுங்க” என்றான்.

“நான் சொல்வதை முழுசா கேட்டுட்டு அப்புறம், உன்னோட முடிவைச் சொல்லு” என்றவர் அனைத்தையும் சொல்லி முடித்தார். "உனக்கு ரொம்பப் பொருத்தமா இருப்பா. நல்ல பொண்ணு. நீ போய்ப் பார்த்துப் பேசு. உனக்குப் பிடிச்சிருந்தா, பேசி கல்யாணத்தை முடிச்சிடுவோம்" என்றவர் மகனின் பதிலுக்காக ஆவலுடன் காத்திருந்தார்.

தன் இடது கையால் தலையை அழுந்த கோதிக்கொண்டு, “அம்மா ரொம்பச் சாரி! இந்த ஒரு விஷயத்தில் மட்டும் என்னைக் கம்பல் பண்ணாதீங்க. எனக்கு இப்போ கல்யாணம் பண்ணிக்கிற எண்ணம் இல்ல. இன்னும் ரெண்டு வருஷம் ஆகட்டும்" என்ற மகனை வேதனையோடு பார்த்தார் விமலா.

"நீ யாரையாவது காதலிக்கிறியா அர்ஜுன்?" எனக் கேட்டதும், “அம்மா, நான் உங்க பையன். அப்படி நான் யாரையாவது காதலிச்சா, கண்டிப்பா உங்ககிட்டச் சொல்லிடுவேன். இது வரைக்கும் என் மனதுக்குப் பிடித்த மாதிரி எந்தப் பொண்ணையும் நான் பார்க்கல" என்றவனை மகிழ்ச்சியோடு பார்த்தார் விமலா.

"அப்போ, நீ மதுமிதாவைப் பாருடா கண்ணா! உனக்குக் கண்டிப்பா பிடிக்கும். புத்திசாலி பொண்ணுடா. உன்னை மாதிரியே அவளுக்கும் பாரதியார் கவிதைகள்ன்னா ரொம்பப் பிடிக்குது. நல்லா பாடறா.

"அம்மா, பாரதியார் பாட்டு பாடறவங்க எல்லோரையும் நான் கல்யாணம் செய்துக்க முடியுமா? பார்த்ததும், இவதான் உன் வாழ்க்கைத் துணைன்னு மனசுல தோணணும். அவளோட நினைவால, மனசு அலையணும். அவளைத் திரும்பப் பார்க்க மாட்டோமான்னு உருகணும். எனக்குன்னு ஒரு ஆசை இருக்குமா. என்னோட கனவு விருப்பம் அதுக்கு தோதா ஒரு பொண்ணை கண்டிப்பா நான் பார்ப்பேன் இதுவரை அப்படி ஒரு பொண்ணு என் கண்ணில் படல. கண்டிப்பா எனக்காக வருவா...” என்றவன் கண்கள் நம்பிக்கையில் ஒளிர்ந்தது.

“இதெல்லாம் ஆசை இல்லடா! பேராசை” என்ற தந்தையின் வார்த்தையை அவன் லட்சியம் செய்யவில்லை.

"நீங்க சும்மா இருங்களேன்!” என்று கணவரை கட்டுப்படுத்தியவர், “இவளைப் பார்க்காம சொல்லாதடா. ஒருவேளை நீ சொல்றா மாதிரி, இவளைப் பார்த்தும் உனக்குத் தோணலாம் இல்லையா?" என்றார்.

அவன் பின்னாலேயே சுற்றி சுற்றி வந்து விமலா பேசிக்கொண்டிருக்க, அவன் பயணத்திற்குத் தேவையானவற்றை எடுத்து வைப்பதில் கவனமாக இருந்தான்.

“விமலா விடு. அவன்தான் இப்போ கல்யாணம் வேணாம்ன்னு சொல்றானே. எதுக்கு அவனைக் கட்டாயப்படுத்தற. என்ன? இந்த விஷயத்தை, ஈஸ்வர்கிட்ட எப்படிச் சொல்றதுன்னு தான் தயக்கமா இருக்கு? அந்தப் பொண்ணு இந்த வீட்டுக்கு மருமகளா வர, நமக்குக் கொடுத்து வைக்கலேன்னு நினைச்சிப்போம்" எனச் சொல்லிவிட்டு அந்த அறையை விட்டு வெளியே செல்ல விமலாவும் ஏதும் சொல்லாமல் வெளியே சென்றார்.

தன் கைகள் இரண்டையும் பாகெட்டில் விட்டுக்கொண்டு தலையை ஒருபக்கமாக சாய்த்து பார்த்தபடியே நின்றிருந்தவன், பெருமூச்சுடன் தன் வேலையைத் தொடர்ந்தான்.

ஹாலுக்கு வந்தவன், “அப்பா, அம்மா நான் கிளம்பறேன். வர பத்து நாள் ஆகும். சென்னைப் போய்ச் சேர்ந்ததும், போன் செய்றேன். நைட்ல சாட் பண்ணுவோம். வரட்டுமா" என்றவன் பெற்றோரின் கால்களைத் தொட்டு வணங்கிவிட்டுக் கிளம்பினான்.

"எல்லாம் நல்ல பிள்ளை தான். இந்தப் பிடிவாதம் மட்டும் இல்லைன்னா, என் பிள்ளை மாதிரி ஒருவனைத் தேடிப் பார்த்தாலும் கிடைக்காது" பெருமையுடன் சொன்னார் விமலா.

"நீதான் மெச்சிக்கணும் உன் பிள்ளையை” கடுப்புடன் சந்துரு சொல்லிகொண்டிருக்க சென்றவன் திரும்பி வந்து, “ஈஸ்வர் அங்கிள் வீட்டு அட்ரஸ் கொடுங்க. நான் முடிஞ்சா போய்ச் சும்மாவாவது பார்த்துட்டு வரேன்" என்றான்.

மறுவார்த்தை பேசாமல் அவர்கள் வீடு முகவரியைக் கொடுக்க, வாங்கிக்கொண்டு கிளம்பினான்.

*************

எழும்பூர் ஆடிட்டோரியத்தில் நடந்த பட்டிமன்றம் முடிய, மதுவும், வித்யாவும் வெளியே வந்தனர். அதற்குள் மதுவின் மொபைல் ஒலிக்க, "நீ வண்டியை எடு நான் வரேன்" என்று சாவியை வித்யாவிடம் கொடுத்துவிட்டு பேசிக்கொண்டிருந்தாள்.

அதேநேரம் அர்ஜுன் தன் நண்பர்களுடன் மியூசியத்தைச் சுற்றிப் பார்த்துவிட்டு வந்து கொண்டிருந்தான்.

கார் வந்ததைக் கவனிக்காமல், வித்யா வண்டியைப் பின்னால் தள்ளிக்கொண்டே வர கார் இடித்த வேகத்தில் வித்யா வண்டியோடு கீழே விழுந்தாள். மது சத்தம் கேட்டுத் திரும்பிய மது வித்யா விழுந்து கிடப்பதைப் பார்த்துவிட்டு ஒடிவருவதற்குள், தன் நண்பர்களுடன் பேசிக்கொண்டே வந்த அர்ஜுன் அவள் கையைப் பிடித்துத் தூக்கி விட்டான்.

ஓடிவந்த மது, “என்ன வித்யா ரொம்ப அடிபட்டுடுச்சா?” என்று அவளை ஆராய்ந்து கொண்டிருக்க, அர்ஜுனின் விழிகள் அவளை ஆராய்ந்து கொண்டிருந்தன.

அடர்த்தியான நீள கூந்தல். ஐந்தரை அடிக்கும் மேல் உயரம். எலுமிச்சை நிறம். துறுதுறுக்கும் கருவிழிகள், வில்லென வளைந்த புருவம் என்று அவளை அங்குலம் அங்குலம்மாக பார்த்துக் கொண்டிருந்தான்.

“ஏன் மிஸ்டர்! உங்களுக்குக் கார்ல ஏறினா, கண்ணு தெரியாதா? இப்படித்தான் வந்து மோதுவீங்களா? இதுக்குத் தான் லைசென்ஸ் வாங்கி வச்சிருக்கீங்களா? இல்லை லைசென்ஸ் கிடையாதா?” என்று நடுவில் பேச வந்த வித்யாவையும் பேசவிடாமல், சரமாரியாகக் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தாள்.

அர்ஜுனின் நண்பர்கள் அருகில் வந்து, “என்ன அர்ஜுன் என்ன ஆச்சு? என்று ஹிந்தியில் விசாரிக்க. " ஒஹ்! ஜீ டிவி யா? நான் கூட என்னடா இப்படிப் பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை முறைச்சிப் பார்க்கறா மாதிரி பார்த்துட்டு இருக்கானேன்னு நினைச்சேன். ஒண்ணும் புரியாமல் சிரிச்சிக்கிட்டு நிக்கிறான்னு இப்போ தானே தெரியுது" என்றாள் கிண்டலாக.

“ஏய்! நான்தான் கூப்பிடுறேனே... என்னன்னு ஒரு வார்த்தை கேக்கறியா? மோதினது அவங்க கார் இல்லை. நான் கீழே விழுந்துட்டேன்னு என்னைத் தூக்கி விடத் தான் அவர் வந்தார்” என்று கூற, செய்வதறியாமல் விழித்தாள் அவள்.

“ஹலோ மேடம்! நாங்களும் சன் டிவி தான். உங்க ஃப்ரெண்டை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டுப் போங்க" என்று பொறுமையாகச் சொல்லிவிட்டு, தன் நண்பர்களுடன் அங்கிருந்து நகர்ந்தான்.

“சார் சாரி! ரொம்பத் தேங்க்ஸ்" என்ற்வளைத் திரும்பிப் பார்த்துப் புன்னகைத்தபடி நடந்தான் அவன்.

அவள் வண்டியை ஸெல்ப் ஸ்டார்ட் செய்ய, அது கிளம்பாமல் வம்பு செய்தது. கிக் ஸ்டார்ட்டும் ஆகாமல் தவித்தாள். “மெக்கானிக் கிட்டத் தான் கொண்டு போகணும் போல” என்று சலிப்புடன் அவள் சொல்லிக்கொண்டிருக்க, இரு உறுதியான கரங்கள் அவள் அனுமதி இல்லாமல் வண்டியை வாங்கின.

நிமிர்ந்து பார்த்தாள். அவனே தான்... அதே புன்னகையுடன் மதுமிதா சட்டென விலகினாள்.

ரெண்டே உதையில் வண்டியை ஸ்டார்ட் செய்து, அவளிடம் கொடுத்தான்.

“ரொம்பத் தேங்க்ஸ்” என்று வித்யா சொன்ன பின்பே... தான், அவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தது புரிய உதட்டைக் கடித்துக்கொண்டு, “தேங்க்ஸ்” என்றாள்.

கேட்டின் அருகில் சென்றதும் வண்டியை நிறுத்திவிட்டுத் திரும்பிப் பார்க்க அர்ஜுன் அந்த இடத்தைவிட்டுச் செல்லாமல், இடது கையால் தலையை அழுந்த கோதியபடி அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். வயிற்றுக்குள் ஏதோ பறப்பது போலிருக்க, தலையை உலுக்கிக்கொண்டு அங்கிருந்து கிளம்பினாள்.

வரும் வழியில் வித்யாவை டாக்டரிடம் அழைத்துச் சென்றுவிட்டு, வீட்டிற்கு வந்தவள் ராஜியிடம் புலம்பித் தள்ளிவிட்டாள்.

“அவங்க என்னை ரெண்டு திட்டுத் திட்டியிருந்தாலும், கொஞ்சம் மனசு நிம்மதியா இருந்திருக்கும் போல. அவர் என்னைப் பார்த்துச் சிரிச்சிட்டுப் போனதும், எனக்கே ஒருமாதிரி ஆயிடுச்சி" என்றாள் சற்று வருத்தத்துடன்.

“நீ தலையும் புரியாமல்; வாலும் புரியாமல் அவங்களைத் திட்டினா கீழ்ப்பாக்கத்திலிருந்து தப்பிச்சி வந்த அரைலூசு போலன்னு உன்னைப் பார்த்துச் சிரிச்சிருப்பாங்க" என்றான் தீபக்.

வேறு நாளாக இருந்தால், அவனுடைய பேச்சுக்குச் சமமாகத் திருப்பிக் கொடுத்திருப்பாள். ஆனால், அன்று அவள் எண்ணம் முழுதும் அவனையே சுற்றிக் கொண்டிருக்க, ஏதும் சொல்லாமல் எழுந்து சென்றாள்.

அதிசயமாக அவளைப் பார்த்தவன், “அம்மா உங்க மருமகளுக்கு உண்மையிலேயே ஏதோ ஆயிடுச்சி போல. வாயே திறக்காம போறா. இது சரி இல்லையே... இவ இப்படியிருந்தா இந்த வீட்ல எனக்கு எப்படிப் பொழுது போகும்? போகாதே..." என்று புலம்பினான்.

"எழுந்து போய் வேலையைப் பாருடா. அவகிட்ட வம்பிழுக்கறதே உனக்கு வேலையா போச்சு. அவள் கல்யாணமாகி போனாதான், உங்களுக்கெல்லாம் தெரியும்" என்றார் ராஜி.

அறைக்குச் சென்றவள் கவிழ்ந்து படுத்துக்கொண்டு, நல்ல உயரம். அடர்ந்த கேசம். கூர்மையான கண்கள், அடர்த்தியான மீசை.... ஒரு முறை பார்த்தால் திரும்பிப் பார்க்க வைக்கும் ஆணழகன் தான்’ என்று தன்னை மறந்து அவனைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தாள்.

தன்னிடமிருந்த வண்டி எண்ணை ஆர்.டி.ஒ ஆபிஸ் ப்யூனிடம் கொடுத்தான். அடுத்த அரைமணி நேரத்தில், அவளது முழு முகவரியும் அவன் கையில் இருந்தது. ‘இது உன் முகவரியோ; உன் தோழியுடையதோ... ஆனால், உன்னைக் கண்டுபிடிப்பேன்’ என்று மனத்தில் நினைத்துக் கொண்டான்.
 

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
115
445
63
அத்தியாயம்—32


“ஹாய் மது! ரெண்டு பேரும் கிளம்பிட்டீங்களா? நானும், கீதாவும் பன்னெண்டரை மணிக்கெல்லாம் வந்திடுவோம்” என்றான் சுரேஷ்.

“காலங்கார்த்தால போன் பண்ணி எங்கேடா வரச் சொல்ற?” என்று தூக்கம் கலைந்த எரிச்சலுடன் கேட்டாள் மது.

“லூசு! மணி ஒன்பது ஆகுது. என்ன ஆச்சு உனக்கு? நேத்து தானே எல்லோரும் மதியம் லஞ்ச் போகலாம்ன்னு ப்ளான் போட்டதைச் சொன்னேன். வரேன் வரேன்னு தலையை ஆட்டிட்டு... இப்போ எங்கேன்னு கேட்கற" என்றான் கடுப்புடன்.

தலையிலேயே தட்டிக்கொண்டவள், “சுத்தமா மறந்துட்டேன். சாரிப்பா, நாங்க வரல. நம்ம வித்யாவுக்கு சின்ன ஆக்ஸிடெண்ட். கால்ல ஸ்ப்ரெயின். நீங்க வரைக்கும் போய்ட்டு வந்திடுங்க" என்றாள்.

“ஆக்ஸிடெண்ட்டா? நான் வீட்டுக்கு வரேன்” என்றவன் அடுத்த அரைமணி நேரத்தில் அவர்கள் வீட்டிற்கு வந்தான்.

என்ன நடந்தது என்று கேட்டுக்கொண்டு, வித்யாவையும் உடம்பைக் கவனமாகப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு, ராஜியிடம் மதுவை மட்டுமாவது பார்ட்டிக்கு அனுப்பும்படி கேட்டான்.

‘வித்யா இல்லாம நான் வரல’ என்றவளை ராஜியும், வித்யாவும் சமாதானம் செய்ய, அரை மனத்துடன் கிளம்பினாள்.

தான் மதுவுடன் ஹோட்டலுக்கு வந்துவிடுவதாகவும், இன்னொரு நண்பனுடன் வந்துவிடும்படி கீதாவிற்குப் போன் செய்துவிட்டு, அவளை அழைத்துக் கொண்டு கிளம்பினான்.

இருவரும் ஹோட்டலுக்குள் நுழையும் போதே அங்கே இரண்டு நாள்களுக்கு முன்பு ஸ்பென்சர் சிக்னலில் பார்த்த அதே நிறக் கார் நின்றுகொண்டிருப்பதைப் பார்த்தவாறே அவனுடன் நடந்தாள்.

வெளிச்சத்திலிருந்து உள்ளே வந்த இருவரும் தங்கள் நண்பர்களைத் தேட, “ஹே… மது, சுரேஷ் இங்கே...” என்று கையசைத்து அழைத்தனர் அவர்களது நண்பர்கள்.

சத்தம் கேட்டு, அருகில் அமர்ந்திருந்தவர்கள் திரும்பிப் பார்த்தனர். மீட்டிங் முடித்துவிட்டுத் தன் நண்பர்களுடன் உணவருந்திக் கொண்டிருந்த அர்ஜுனும் நிமிர்ந்து பார்த்தான்.

ரோஜா வண்ணச் சேலையில், தளரப் பின்னிய கூந்தலில் முல்லைப் பூக்களைச் சூடிக்கொண்டு, காதில் ஜிமிக்கி அசைய நிதானமான நடையுடன் வந்தாள் அவள்.

அவனைக் கடந்து சென்று அவள் அமரும் வரை அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் அர்ஜுன். தன் கனவு தேவதையை, அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. மனம் முழுதும் ஒரு இனிய நாதம் எழும்ப, அவ்வப்போது அவளைக் கவனித்துக் கொண்டிருந்தான்.

வித்யாவைப் பற்றி அனைவரும் விசாரிக்க, முன் தினம் நடந்ததை விலாவரியாகச் சொன்னவள், “அவங்க என்னை நாலு திட்டுத் திட்டி இருக்கலாம். சிரிச்சிட்டுப் போனது எனக்கே கொஞ்சம் உறுத்தலா போச்சு"

“ஹேய்! ஆளு பார்க்க எப்படியிருந்தார்?" என்றாள் கீதா.

“ஒரு நாள் இல்ல, ஒரு நாள் என்கிட்டே நல்லா வாங்கப் போற நீ” என்று கீதாவிடம் கடுப்படித்தவள், “டேய்! இங்க உன் ஆளு உன்னை விட்டுட்டு யாரைப் பத்தியோ விசாரிச்சிட்டு இருக்கா. நீ பாட்டுக்கு சூப் குடிச்சிட்டு இருக்க" என்றாள் சுரேஷிடம்.

“விடு மது! அதையெல்லாம் திருத்த முடியாது. எல்லோரும் உன்னைப் போல இருப்பாங்களா?" என்று அவளுக்கு ஐஸ் வைத்துவிட்டுத் திரும்ப, கீதா அவனை முறைத்துக்கொண்டிருந்தாள்.

ஹி ஹி என்றவன், “சும்மா மதுவுக்காக...” என்று மெல்ல வாயசைக்க, மதுமிதா அதைக் கவனித்துவிட்டாள்.

“நான், உன்னை அண்ணன் மாதிரி நினைச்சிட்டு இருக்கேன். ஆனா, நீ என்னை வச்சிக் காமெடி பண்ணிக்கிட்டு இருக்க. இரு இரு இன்னைக்கே ஆன்ட்டிக்குப் போன் செய்து உன்னைப் போட்டுக் கொடுத்துட்டுத் தான் மறுவேலை” என்று மிரட்டினாள்.

அவன் ஏதேதோ தாஜா செய்ய, அவள் எதற்கும் அசைந்து கொடுக்காமல் அமர்ந்திருக்க, அவன் கெஞ்சிக் கொண்டிருந்தான்.

இரண்டு மூன்று முறை மதுவின் மொபைல் அடித்து அடித்து ஓய்ந்தது. சிக்னல் சரி இல்லாததால் பேசியது சரியாகக் கேட்கவில்லை. நண்பர்களிடம், வெளியே சென்று பேசிவிட்டு வருவதாகக் கூறிவிட்டுச் செல்ல, அர்ஜுனும் தன் நண்பர்களிடம் வந்து விடுவதாகக் கூறிவிட்டு அவளைப் பின்தொடர்ந்தான்.

அவள் காரிடாரில் நின்று பேசிக் கொண்டிருக்க, அவன் இரு கரங்களையும் பாகெட்டில் விட்டுக்கொண்டு சுவரில் சாய்ந்தபடி அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.

பேசிவிட்டுத் போனைப் பார்த்துக்கொண்டே திரும்பியவள்,
"அடடா நீ ஒரு பார்வை பார்த்தாய்,
அழகாய் தான் ஒரு புன்னகை பூத்தாய்,
அடி நெஞ்சில் ஒரு மின்னல் வெட்டியதே" என்று குறுஞ்சிருப்புடன் பாடிக்கொண்டே திரும்பியவள், தன்னையே பார்த்துக்கொண்டிருந்தவனைக் கண்டதும் கண்களில் ஒரு மின்னலுடன், முகம் விகசித்தாள்.

அவளது முகப்பொலிவைக் கண்டவனுக்குச் சந்தோஷமாக இருந்தது. அவனிடம் பேசுவதா வேண்டாமா என்ற குழப்பத்துடன் அவனைப் பார்த்தாள்.

‘ஹப்பா! இந்தக் கண்ணு இருக்கே... என்னை அப்படியே விழுங்கிடும் போல’ என்று எண்ணியவன் அவளது முகத்திலிருந்து பார்வையை விலக்கவில்லை.

‘என்ன இப்படிப் பார்க்கிறான்?’ என்று நினைத்தாலும், அவனை ஒதுக்கித் தள்ள முடியாமல் தயக்கத்துடன், "ஹாய்!" என்றாள்.
"ஹாய் மது! சௌக்கியமா? உன் பிரெண்ட் வித்யா எப்படியிருக்காங்க?" என்றான்.

‘எடுத்தவுடன் என்னவோ உரிமையுள்ளவன் போல் ஒருமையில் பேசுகிறானே’ என்று எண்ணியவள், ‘என் பெயர் இவனுக்கு எப்படித் தெரியும்? என்று யோசித்தாள்.

"உன் பேர் எனக்கு எப்படித் தெரியும்னு நினைக்கிறியா? உன் ஃப்ரெண்ட்ஸ் எல்லோரும் சேர்ந்து, உன்னை வெல்கம் பண்ணாங்களே" என்று சிரித்துக்கொண்டே சொல்ல, அவள் மௌனமாக நின்றாள்.

இங்கும் அங்குமாக சுழலும் அந்த விழிகளின் ஈர்ப்புவிசையில் அவன் காந்தமாகக் கவரப்பட்டு அவன் நிற்க, அவள் தயங்கியபடி, "ஃப்ரெண்ட்ஸ் எனக்காக வெயிட் பண்ணுவாங்க. நான் கிளம்பறேன்" என்று இரண்டடி நடந்தாள்.

"உன்னோட பெயர் எனக்குத் தெரிஞ்சது மாதிரி, என் பெயர் உனக்குத் தெரிய வேண்டாமா?" என்றான் கேள்வியாக.

அவன் பெயரை அறிந்து கொள்ள ஆசையிருந்தாலும் அதை மறைத்துக்கொண்டு, "உங்க பெயரைத் தெரிந்து நான் என்ன செய்யப்போறேன்?" என்று அவனை நேருக்கு நேராகப் பார்த்துக் கேட்டாள்.

"என்ன நீ கொஞ்சங்கூடப் பொறுப்பில்லாம பேசற! யாராவது உன் லவ்வர் பேர் என்னன்னு கேட்டா, திருதிருன்னு முழிப்பியா? கேட்டதும் சொல்லத் தெரிஞ்சிக்க வேண்டாமா" என்று இலகுவாகச் சொல்ல, அவளுக்குத் தூக்கி வாரிப் போட்டது.

"யா..யாரு.. யாருக்கு லவ்வர்? எதாவது உளறாதீங்க" என்று திக்கித் திணறிச் சொல்லி முடிப்பதற்குள் வியர்த்து விறுவிறுத்துப் போனாள்.

"ஹே! நீ என்னை நினைச்சித்தானே இப்போ பாட்டு பாடிக்கிட்டே வந்த. என்னைப் பார்த்தும் இல்லன்னு பொய் சொல்ற" என்றான் உரிமையாக.

கண்களை உருட்டி, "ஹலோ மிஸ்டர்! உங்க மனசுல என்ன நினைச்சிக்கிட்டு இருக்கீங்க? நீங்க ஒருத்தர் தான் ஆணழகன்னு நினைப்பா? உங்க சிரிப்பைப் பார்த்து மயங்கிட்டேன்னு நினைச்சீங்களா? அது எப்படிப் பார்த்த உடனே, உங்களுக்கு லவ் வந்திடுமா" என்று கோபத்துடன் கேட்டாள்.

"ஓஹ்! என்னைப் பாராட்டினதுக்கு ரொம்பவே தேங்க்ஸ்" என்றான் சிரிப்புடன்.

‘தேங்க்ஸா? இவன் என்ன லூசா? நான் திட்டிக்கிட்டு இருக்கேன். என்னவோ பாராட்டினேன்னு சொல்றான்’ என்று அவனை மேலிருந்து கீழ்வரை ஆராய்ந்தாள்.

“என்னை நல்லா பார்த்ததால தான... அப்படியே சொல்ற” என்று சொல்லிக்கொண்டே, அவளருகில் வர, அவள் பின்னாலேயே சென்றாள். “எனக்கு ஒரு பழக்கம். என்னை யாராவது பாராட்டினா அவங்களைக் கட்டிப் பிடிச்சி முத்தம் கொடுத்திடுவேன்" என்று சொன்னதும் அவனது வார்த்தையில் தடுமாறியவளது நடையும் தடுமாற, “ஆஆஆ..." என்றபடி அருகிலிருந்த சோஃபாவில் பொத்தென விழுந்தாள்.

சோஃபாவின் இருபக்கக் கைப்பிடியிலும் கைகளை ஊன்றி அவளை நெருங்க, செய்வதறியாமல் மருண்ட பார்வையுடன் அமர்ந்திருந்தாள்.

“உன் அனுமதி இல்லாமல், உன்னைத் தொடமாட்டேன். ஆனா, இந்தக் கண்கள் என்னை என்னவோ செய்யுதே" என்றான் காதலுடன்.

“இதுபோல வேற யாராவது என்னிடம் அத்து மீறிப் பேசியிருந்தா, இந்த நேரம் அவங்க பல்லை உடைச்சிருப்பேன்" என்றாள் ஆத்திரத்துடன்.

“ஓஹ்! அப்படியா, ஆனா நீ என்னை ஒண்ணுமே சொல்லலையே. இதுலயிருந்தே தெரியல... நீயும், என்னை லவ் பண்றேன்னு" என்றவன் நிமிர்ந்து நின்றான்.

‘கடவுளே! இவன்கிட்டப் பேசிட்டிருந்தா, என் வாயாலேயே லவ் பண்றேன்னு சொல்ல வச்சிடுவான். இல்ல முதல் இந்த இடத்தை விட்டுக் கிளம்பணும்’ என்று வேகமாக எழுந்தவள், விறுவிறுவென அங்கிருந்து அகன்றாள்.

அவன் அங்கேயே நின்றபடி, “மது! பதில் சொல்லிட்டுப் போ” என்று குரல் கொடுக்க, படபடத்த இதயத்துடன் நண்பர்களுடன் வந்து அமர்ந்தாள்.

அவளது படபடப்பு அடங்கவே இல்லை. அர்ஜுன் அவளது செய்கைகளைப் பார்த்துச் சிரித்தபடி அமர்ந்திருந்தான். அவன் தன்னையே பார்ப்பது தெரிந்த போதும் அவளால் ஏதும் செய்ய முடியவில்லை.

“சுரேஷ் என்னை வீட்ல ட்ராப் பண்ணிடறியா?" என்று உள்ளடைந்த குரலில் கேட்க, “இப்பவே கிளம்பணுமா? எல்லோரும் சினிமாவுக்குப் போயிட்டுப் போகலாமே” என்றான்.

“இல்ல, நான் கிளம்பறேன்...” என்று பதற்றம் மாறாமல் சொல்ல, “என்ன மது ஏதாவது ப்ராப்ளமா?" என்று சுற்றும் முற்றும் பார்த்தான்.

“அதெல்லாம் ஒண்ணுமில்ல. ப்ளீஸ் கிளம்பலாம்" என்று எரிச்சலும், கெஞ்சலுமாகச் சொல்ல, அனைவரும் கிளம்பினர்.

அனைவரையும் தியேட்டருக்குப் போகச் சொல்லிவிட்டு காரை எடுத்துவர பார்கிங் சென்றான். வாசலில் காத்திருந்தவள், தன் நண்பர்களுடன் அர்ஜுன் வெளியில் வருவதைப் பார்த்ததும் அந்தப் பக்கம் திரும்பாமல் நின்றிருந்தாள்.

அவனோ, வரவேற்பறையில் தன் நண்பர்களுடன் பேசிக்கொண்டே, அவளை நோட்டம் விட்டான். “கம் ஆன் மது! திரும்புத் திரும்பு...” என்று தனக்குள்ளே உரு போட்டுக்கொண்டிருந்தான்.

சுரேஷ் காருடன் வந்ததும் கதவைத் திறக்கும் வரை தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தவள், காரில் ஏறும் நேரம் நின்று திரும்பி அவனைப் பார்த்தாள். மலர்ந்த முகத்துடன் அவளுக்கு ஒரு சல்யூட் அடித்தான்.

அவளுக்குத் திக்கென்றது. “மது உட்கார்” என்று சுரேஷ் குரல் கொடுக்க, அரக்கப்பரக்க காரில் அமர்ந்தாள்.

வீட்டிற்கு வந்தவள் ஒரு நிலையில் இல்லை. அர்ஜுனின் பேச்சு அவளைத் திகைக்க வைத்திருந்தது. சுரேஷ் , மாமா இடையேயான பேச்சோ, அத்தையின் விசாரிப்போ, தீபக்கின் சீண்டலோ அவளுக்கு ஏதும் புரியவில்லை.

‘யாரவன்? எதற்காக என் மனதில் ஒரு சலனத்தை ஏற்படுத்தணும்? இரண்டு முறைதான் பார்த்திருக்கிறோம். ஆரம்பமே ஒரு சண்டையில் தான். மோதல் வந்தா காதல் வந்துவிடும் என்று சொல்வதெல்லாம் உண்மை தானோ’ என்று நினைத்தவள் மறு நொடியே, ‘சீசீ.... அதெல்லாம் சினிமாவில் தான் சாத்தியம்’ என்று மனத்தை ஒரு நிலைப்படுத்த முயன்றாள்.

‘தனிமை தான் அவனது நினைவை அதிகமாக்குகிறது. அத்தை, மாமா சொல்லும் மாப்பிள்ளையைத் தான் கல்யாணம் செய்ய வேண்டும். இப்படித் திடீரென்று வந்து காதல் மொழி பேசுபவனை எப்படி நம்புவது? போதும் அவனைப் பற்றி நினைக்கவே கூடாது’ என்று மனத்திற்குள் சொல்லிக்கொண்டு, தனது வேலையில் கவனம் செலுத்தத் தொடங்கினாள்.

அவள் கீழே வந்தபோது சுரேஷ் கிளம்பிச் சென்றிருந்தான். ஈஸ்வரனும், தீபக்கும் ஏதோ பேசிக்கொண்டிருக்க, தீபக்கின் பக்கத்தில் வந்து அமர்ந்தாள்.

"சுரேஷ் கிளம்பிப் போயாச்சா? என்கிட்டச் சொல்லவே இல்ல" என்றவளை, வித்தியாசமாகப் பார்த்தனர். ‘நாம ஒரு கேள்வி கேட்டதுக்கு, மூணு பேரும் இப்படி ஒரு பார்வைப் பார்க்கிறார்களே!’ என்று நினைத்துக்கொண்டாள்.

“அம்மா நான் அப்பவே சொல்லல. இவளுக்கு என்னவோ ஆயிடுச்சின்னு. வீட்டுக்கு வந்ததுல இருந்து ஆளே சரி இல்லைன்னு" என்று தாயின் காதில் கிசுகிசுத்த தீபக், "நான் மூணு முறை உன் ரூம் கதவைத் தட்டினேன். நீ குரல் கூடக் கொடுக்கல. இப்போ வந்து சுரேஷ் போயாச்சான்னு கேட்கற. ம்ஹும்... ஒண்ணும் சரியில்ல. ரெண்டு நாளா மந்திரிச்சிவிட்டக் கோழி மாதிரி, வீட்டைச் சுத்தி வர்ற..." என்றான் ஆராய்ச்சியுடன்.

“இல்ல... நான் வெளியே ஊஞ்சலில் உட்கார்ந்திருந்தேன் அதான்..." என்றவளை மேலிருந்து கீழ் வரை பார்த்தவன் உதட்டைச் சுழித்து, “இது சரி இல்ல. மத்தியானம் ரெண்டரை மணிக்கு பௌர்ணமி நிலாவா காயுது” என்றவன், அவள் காதில், “என்னடி? யாரையாவது லவ் பண்றியா?" என்று மென்குரலில் கேட்டான்.

பதறி எழுந்தவள், “ஆஹ்ஹா... அதெல்லாம் ஒண்ணுமில்ல" என்றவள், நான் ரூமுக்குப் போறேன்...” என்று வேகமாக மாடிக்கு ஓடினாள்.

"அம்மா! கண்டிப்பா இவ நம்மகிட்ட எதையோ மறைக்கிறா. இத்தனை நாளா இவ இப்படியிருந்து நான் பார்த்ததில்லை. இன்னைக்கு எல்லாமே புதுசா இருக்கு" என்ற தீபக்கை, இருவரும் எதுவும் சொல்லாமல் பார்த்தனர்.

அன்று இரவு, தனக்கு வந்த மின்னஞ்சல்களைப் பார்த்துக்கொண்டிருந்தான் அர்ஜுன். அவனது தந்தையிடமிருந்து வந்திருந்த அஞ்சலைத் திறந்தவன், மதுமிதாவின் புகைப்படத்தை இத்துடன் இணைத்திருப்பதாகவும், பிடிவாதம் பிடிக்காமல் ஒரு முறை பார்க்கும்படியும் சொல்லியிருக்க, அவனுக்குச் சுறுசுறுவென கோபம் ஏறியது.

தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு, ‘தன் பெற்றோருக்குப் பிடித்திருக்கும் அந்தப் பேரழகி யார்?’ என்று பார்த்துவிடும் எண்ணத்துடன் போட்டோவைத் திறந்தவன், ஆனந்த அதிர்ச்சியில் உறைந்து போனான்.

‘மது! என் மதுவையா எனக்காக அம்மாவும், அப்பாவும் தேர்ந்தெடுத்திருந்தனர். ஆமாம், பெண்ணின் பெயர் மதுமிதா என்று தானே சொன்னார்கள். நான்தான் ஏதோ நினைவில் கவனிக்கவில்லை’ என்று சந்தோஷத்துடன் தந்தைக்குப் போன் செய்தான்.

போனை எடுத்த தந்தையிடம், “டாட்! ஐ லவ் யூ...” என்று உற்சாகமாக கூக்குரலிட்டவனிடம், “அர்ஜுன்! போட்டோ பார்த்தியா?" என்றது தான் தாமதம். அவளைச் சந்தித்தது முதல் அனைத்தையும் சொல்லி முடித்தான்.

“என்னடா கண்டதும் காதலா?" என்றார் சிரிப்புடன்.

“நீங்க எப்படி வேணாலும் நினைச்சிக்கோங்க. நாளைக்கே, நீங்க ரெண்டு பேரும் கிளம்பி வரீங்க. நான் வந்த வேலை முடிந்து ஊருக்குக் கிளம்பும் முன்னால, நிச்சயதார்த்தத்தை முடிச்சிக்கிட்டுத் தான் கிளம்பறோம்" என்றான்.

“எல்லாத்திலும், அவசரம் உனக்கு. முதல்ல நீ ஈஸ்வரோட வீட்டுக்குப் போ. அவனே உன்னை அவளுக்கு அறிமுகப்படுத்துவான். பேசு” என்றார்.

“நோவேப்பா! இது கோல்டன் டைம்ஸ். எந்த நாளிலும் மறக்க முடியாத விஷயங்கள். இதுல ஒரு த்ரில் இருக்குப்பா. நான் யாருன்னு தெரியாமலேயே, மது என்னைக் காதலிக்கணும். அப்புறம், நான் யாருன்னு அவளுக்குச் சொல்வேன். இந்தச் சந்தோஷத்தை நான் மிஸ் பண்ண மாட்டேன்" என்றான் எப்போதும் போல பிடிவாதமாக.

“உனக்கு இதெல்லாம் சரியா இருக்கலாம். ஆனா, அவளை டென்ஷன் ஆக்கி நீ வேணாம்ன்னு சொல்லிட வச்சிடாதே!” என்றவர் அவனிடம் பேசிவிட்டுச் சிரிப்புடன் போனை வைத்தார்.

கணவரின் சந்தோஷமான புன்னகையைக் கண்ட விமலா, "அப்பாவுக்கும் பையனுக்கும் அப்படி என்ன ரகசியம், சிரிப்பு?" என்று கேட்டார்.

“உனக்குக் கூடச் சொல்லாம, இன்னைக்கு ஈஸ்வர் அனுப்பியிருந்த மதுவோட போட்டோவை அவனுக்கு அனுப்பியிருந்தேன்" என்றவரை இடைமறித்து, “அப்போ, போட்டோவைப் பார்த்துட்டுத் தான், போன் செய்தானா?" என்று ஆவலுடன் கேட்டார்.

“அதுக்கு முன்னாலேயே, அவளை எங்கயோ பார்த்துப் பேசியிருக்கான்" என்றவர், அர்ஜுன் சொன்ன அனைத்தையும் சொல்லி முடித்தார்.

"எனக்கென்னவோ இதெல்லாம் சரியா தோணல. எல்லாத்திலேயும் அவனுக்கு விளையாட்டு" என்றார் கவலையுடன்.

அர்ஜுனோ, சந்தோஷத்தின் உச்சியில் இருந்தான்.

தன் வாழ்வில் இப்படி நடக்கும் என யாராவது சொல்லியிருந்தால் சிரித்திருப்பான். இதுவரை, எந்தப் பெண்ணிடமும் இப்படிப் பேசத் தோன்றியதில்லை. அவளைப் பார்க்கும் போதெல்லாம், அவளைச் சீண்ட வேண்டும் எனத் தோன்றியது. ஆனால், அந்தக் கண்ணின் ஈர்ப்பு, சிரிப்பு, குறும்பு என்று ஒவ்வொன்றும் அவனைக் கவர்ந்தது.

முதன்முறை, அம்மா என்று நினைத்து, அவளிடம் போனில் முத்தமிட்டுப் பேசியதும், யாரென்றே தெரியாமல் அவளைச் சந்தித்தது, தனது காதலை அதிரடியாகச் சொன்னது என்று தன்னுடைய மனக்கடலில் முக்குளித்துக் கொண்டிருந்தான். எப்போது விடியும் என்று ஆசையும், கனவுமாக அன்றைய இரவைக் கழித்தான்.


அத்தியாயம் —33



தீபக் பைக்கை கல்லூரிக்கு முன்பாக நிறுத்த, அங்கே நின்றிருந்த காரை பார்த்துக் கொண்டே இறங்கினாள் மதுமிதா.

“ஏய்! உள்ளே போகாம அங்கே என்ன பார்த்துட்டிருக்க?" என்றான்.

“இந்தக் காரை, இதுக்கு முன்னால் இங்கே பார்த்ததில்ல. அதான்..." என்று சொல்ல, காரின் லேசாக காரின் கண்ணாடியை இறக்கி வைத்துவிட்டு பின்சீட்டில் அமர்ந்திருந்த அர்ஜுன் சிரித்துக் கொண்டான்.

தீபக், “மனசுல பெரிய வைஜேந்தி ஐ.பி.எஸ்ன்னு நினைப்பு” என்றான் கிண்டலாக.

“பே! என்றவள், “அத்தான் கொஞ்சம் வெயிட் பண்ணு. மேகலாவை வரச்சொல்றேன்" என்று போனை எடுத்து மேகலாவின் நம்பரை அழுத்த, “நான் என்ன வெட்டியாவா இருக்கேன்? எனக்கு வேலை இருக்கு" என்றவன் பைக்கை உதைத்தான்.

“மூஞ்சியப்பாரு, போனா போகுது, தூது போகலாம்னு பார்த்தா... ரொம்பத் தான் பிகு பண்றியே" என்று ஒழுங்கெடுத்தாள்.

“தூது போறியா? குரங்கு தான் ராமருக்கும், சீதைக்கும் தூது போச்சாம்" என்றான் கேலியாக.

“அன்னம் கூடத் தான் நளனுக்கும், தமயந்திக்கும் தூது போச்சி" என்றாள் கடுப்புடன்.

சிரித்தவன், “நீ அன்னமா?" என்றான்.

“நீ என் மாமா பையன் தானே. நான் குரங்குன்னா, நீயும் குரங்குதானே... அத்தான் குரங்கே" என்று உதட்டைச் சுழித்துக் கேலி செய்தாள்.

‘இவளை விட்டா பேசிக்கிட்டே இருப்பா’ என எண்ணியவன், "சரி, நேத்து ஹோட்டலுக்குப் போயிட்டு வந்து ஏன் ஒரு மாதிரி வீட்டைச் சுத்திச் சுத்தி வந்த" என்றான்.
கதை பாதை மாறுவதை உணர்ந்து, “உங்களுக்கு வேலை இருக்கு. எனக்கு படிப்பு இருக்கு... பை” என்றவள் விட்டால் போதுமென கல்லூரிக்குள் ஓடினாள்.

"எங்கே போனாலும், நீ வீட்டுக்கு வந்து தானே ஆகணும்" என்று சொல்லிகொண்டே கிளம்பினான்.

இருவரின் உரையாடலையும் கேட்டுத் தனக்குள் சிரித்துக்கொண்ட அர்ஜுன், மாலையில் வரும் முடிவுடன் கிளம்பினான்.

கல்லூரி முடிந்ததும் தோழிகளுடன் பேசிக்கொண்டே வந்தவள், அங்கே நின்றிருந்த காரைப் பார்த்தும் பேச்சை நிறுத்திவிட்டு, பேச மறந்தவளாக அதையே பார்த்துக் கொண்டு வந்தவள், யாரிடமோ மொபைலில் பேசியபடி சன்கிளாஸைக் கழற்றிக்கொண்டே இறங்கியவனைப் பார்த்ததும், உள்ளுக்குள் படபடவென அடித்து கொண்டது.

மற்றவர்கள் பேச்சு சுவாரஸ்யத்தில் இருக்க அவன், “ஹாய்!" என்று கையசைத்தான்.

அவள் கண்களை உருட்டிக் காட்ட, என்ன என்பதைப் போலப் புருவத்தை உயர்த்திப் புன்னகையுடன் கேட்டான்.

ஆத்திரம் அதிகரிக்க அவனெதிரில் சென்று நின்றவள், “மிஸ்டர், உன் மனசுல என்ன நினைச்சிட்டு இருக்க?" என்றவளைப் பார்த்து வசீகரமாக ஒரு புன்னகையை வீசியவன், “அதுதான் நீயே சொல்லிட்டியே. உன்னையே நினைச்சிட்டு இருக்கேன்னு" என்று மென்குரலில் சொல்ல, அவள் திருதிருவென விழித்தாள்.

தங்களுடன் வந்தவளைக் காணாமல் திரும்பிப் பார்த்த கீதா, அவள் யாரிடமோ முறைத்துக்கொண்டு நிற்பதைப் பார்த்துவிட்டு அருகில் வந்தாள். "மது, என்னடி ஏதாவது பிரச்சனையா?" என்றவள் பார்வை அர்ஜுனை ஆராய்ந்தது.

இவன்... நேற்று ஹோட்டலில் என்று தனது நினைவுப் படலத்தை அவள் தூசி தட்டிக்கொண்டிருக்க, “நானும் பார்த்துகிட்டே இருக்கேன். ரெண்டு நாளா என்னையே ஃபாலோ பண்ணிக்கிட்டு வரீங்க. அன்னைக்கு ஏதோ ஹெல்ப் பண்ணீங்கலேன்னு இருந்தா, இதையே வேலையா வச்சிக்கிட்டு இருக்கீங்களா?" என்று கோபத்துடன் பேசினாள் மது.

“ஹலோ மேடம்! நான் இங்கே நின்னு போன் பேசிக்கிட்டு இருக்கேன். நீங்களா வந்தீங்க, உங்க இஷ்டத்துக்குப் பேசறீங்க. என்கிட்டப் பேசணும் போலயிருந்தா, நேரா வந்து சாதாரணமா பேசியிருக்கலாம். அதுக்கு இப்படி சீன் கிரியேட் பண்ண வேண்டியில்லயே" என்றதும், “மிஸ்டர்! ஏன் பொய் சொல்றீங்க? நீங்க தானே ஹாய்ன்னு கையசைச்சீங்க" என்றாள் கோபத்துடன்.

“இதென்ன வம்பா போச்சே! நான் எங்கே கையசைச்சேன்... ஹாய் சொன்னேன். இதோ உங்க பிரெண்ட்ஸ் மூணு பேர் இருக்காங்க. நீங்களே கேளுங்க... நான் செய்ததை நீங்க பார்த்திருந்தா, அவங்களும் பார்த்திருப்பாங்க இல்ல" என்றான்.

கீதாவும் மற்ற தோழிகளும் செய்வதறியாமல் நிற்க, “என்ன மேடம் அப்படியே நின்னுட்டீங்க" என்றவனிடம், “சாரி சார்! அவள் ஏதோ தெரியாம பேசிட்டா, நாங்க சாரி கேட்டுக்கறோம். ப்ளீஸ்!" என்றவர்கள் அவளை அங்கிருந்து இழுத்துச் சென்றனர்.

“ஏன் மது இப்படிப் பண்ற? என்ன பிரச்சனை உனக்கு?" என்று கவலையுடன் கேட்டாள் கீதா.

“பிரச்சனையே இவன்தான். ரெண்டு நாளா என்னைப் பாலோ பண்றான்...” என்றாள் கோபமாக.

அதன் பிறகு யாரும் ஏதும் பேசவில்லை. வீட்டிற்கு வந்தவள், விஷயத்தை வீட்டில் சொல்லலாமா? வேண்டாமா? எனக் குழம்பி பிறகு, வேண்டாம் இன்னும் ரெண்டு மூணு நாள் பார்ப்போம் இதே போலிருந்தால் சொல்லிடவேண்டியது தான்’ என்று எண்ணியபடி ஹாலில் உலவிக் கொண்டிருந்தாள்.

ஹாலுக்கு வந்த ராஜி, "என்ன மது இன்னும் தூங்க போகலையா?"

மது, “தூக்கம் வரல அத்தை அத்தான் கொஞ்சநேரம் உலாவிகிட்டு இருந்தேன். இதோ போறேன்" எனச் சொல்லிவிட்டு நிதானமாக படி ஏறிக்கொண்டிருந்தாள்.

எப்போதும் உற்சாகத்துடன் வளைய வருபவள் சோர்ந்து தெரிவதைப் பார்த்து அவளை அழைத்தார், "ஏன் ஒரு மாதிரியிருக்க. என்ன ஆச்சு? ரெண்டு நாளா நானும் கவனிக்கிறேன். கொஞ்சம் டிஸ்டர்ப்டா இருக்கியே” என்று கவலையுடன் கேட்டார்.

“கல்சுரல் ப்ரோக்ராம் வேலையால கொஞ்சம் அசதியா இருக்கு அத்தை!” என்றவள் அதற்கு மேல் அங்கு நிற்காமல் தன் அறையை நோக்கி நடந்தாள்.

‘என்னவோ மறைக்கிறா. அவளே சொல்லட்டும்’ என தனக்குத்தானே சொல்லிக் கொண்டு அறைக்குச் சென்றார்.

மறுநாள் தன்னுடைய கைனடிக் ஹோண்டாவை துடைக்கும் போது, அர்ஜுனின் நினைவு வந்தது. தலையைக் கோதியபடி அவன் நின்று சிரித்ததே, அவள் எண்ணத்தில் ஓடிக்கொண்டிருக்க, அவன் நினைவுடனே கல்லூரிக்குக் கிளம்பினாள்.

செல்லும் வழியில் அவனுடைய கார் எங்கேயாவது தென்படுகிறதா என்று பார்த்தாள். ஆனால், அவன் அவள் கண்ணிலேயே படவில்லை. அதேநேரம், அவள் வீட்டிலேயே தீபக், ராஜேஷுடன் அவன் பேசிக்கொண்டிருந்ததை அவள் அறியவில்லை.

‘நல்லவேளை அவனைக் காணவில்லை’ என நினைத்துக்கொண்டே சென்றவளுக்கு, அன்று முழுதும் வேலையே ஓடவில்லை.

மறுநாள் ப்ரோக்ராமுக்குத் தேவையான எல்லாவற்றையும் செய்துவிட்டுக் கிளம்பும்நேரம் சுரேஷ், மதுவிடம் ஏதோ பேசவேண்டும் என்று சொன்னான். அவளோ, இப்போது என்னால் எதையும் கேட்க முடியாது’ என்று எரிச்சலுடன் சொல்லிவிட்டுக் கிளம்பினாள்.

முதல் நாள் அவன் காருடன் நின்றிருந்த இடத்தில் கண்கள் அவனைத் தேட, அவன் இல்லை என தெரிந்ததும் தன் மனதில் ஏமாற்றம் பரவியதைத் தடுக்க முடியவில்லை.
வீட்டில் சந்திரசேகரும், விமலாவும் இருந்தனர். அவர்களைக் கண்டதும் தன் சலிப்பையும், ஏமாற்றத்தையும் ஒத்திவைத்துவிட்டு அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தாள்.

அன்று இரவு அவளது அறைக்கு வந்த வித்யா, டெல்லியிலிருந்து அவர்கள் வந்திருப்பது தன் மகனுக்கு உன்னைப் பெண் கேட்க என்ற விஷயத்தைச் சொல்ல, திடுக்கிட்டாள் அவள்.

“காலைல வீட்டுக்கு வந்திருந்தார். செம ஸ்மார்ட். ஏர்போர்ஸ்ல இருக்காராம். ரொம்ப ஜோவியலா பேசினார்” என்றவள் அவனை ஏற்கெனவே சந்தித்திருப்பதை மட்டும் அவளிடம் சொல்ல வில்லை.

அவள் எதுவும் சொல்லாமல் அமர்ந்திருக்க, “நான் கிளம்பறேன். அம்மா, அப்பா சொல்லும் போது புதுசா கேட்கறது போலக் கேட்டுக்கோ” என்றவள் அங்கிருந்து சென்றாள்.

அவளுக்கு மனம் நிலைகொள்ளவில்லை. அப்போதுதான், அன்று முழுதும் தன்னுடைய அலைப்புருதலின் காரணத்தை நன்கு உணர்ந்தாள். பார்த்த நிமிடம் முதல், அவன் தனது நெஞ்சில் இடம்பிடித்து விட்டதை அறிந்து அழுதாள்.

‘என் மாமாவின் விருப்பப்படி, அவர் சொல்பவரைத் தான் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்ற எண்ணத்துடன் இருந்த என்னை, இப்படிச் சிக்கலில் மாட்டிவிட்டு விட்டானே!’ என்று அவன் மேல் கோபம் தான் வந்தது. அடுத்த நொடியே, அவன் வந்தால்... உனக்கு எங்கே போனது புத்தி? நீ உறுதியாக இருந்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்குமா?’ என்று தன்னைத்தானே திட்டிக்கொண்டாள்.

இரவு உணவுக்கு முன், ஈஸ்வரன் மெல்ல அவளிடம் சொல்ல, “உங்க இஷ்டம் மாமா” என்று ஒரு வார்த்தையுடன் முடித்துக் கொண்டாள்.

“இன்னும் கொஞ்ச நேரத்தில் மாப்பிள்ளை வருவார். நீ நேர்ல பார்த்துப் பேசு” என்றான் ராஜேஷ்.

சரி என்பதைப் போலத் தலையை ஆட்டினாள். ஆனால், அவள் முகத்தில் இருந்த இறுக்கத்தை தீபக் கவனித்துக் கொண்டே இருந்தான். விமலா, கணவரை முறைக்க, அவர் மனைவியின் முகத்தைப் பார்க்க மறந்தவராக, ஈஸ்வரனுடன் சந்தோஷமாகப் பேசிக்கொண்டிருந்தார்.

இரவு தந்தைக்குப் போன் செய்த அர்ஜுன், “உங்க மருமக என்ன சொல்றா?" என்றான் சிரிப்புடன்.

“அர்ஜுன்! போதும்டா உன்னோட விளையாட்டு. ” என்றார்.

அர்ஜுன், “நோ அப்பா, நாளைக்கு மதுக்குப் பிறந்த நாள் நாளைக்கு அவளுக்குச் சொல்லிக்கலாம்"

“இன்னும் கொஞ்ச நேரத்துல நீ வரப்போற. அப்போ, உன்னைப் பார்க்க மாட்டாளா?”

“நிச்சயம் பார்க்க மாட்டா. நான் வரேன்னு சொல்லுங்க. அந்த இடத்தை விட்டு அவ எழுந்து போறாளா இல்லையான்னு பாருங்க?" என்றான் உறுதியுடன்.

“அவ்ளோ கன்ஃபிடண்டா!”

அவன் சிரித்துக்கொண்டே, “அவளைப் பத்தி எனக்குத் தெரியும்" என்றான்.

கணவரிடமிருந்து போனை வாங்கிய விமலா, "அப்பாவுக்கும், பிள்ளைக்கும் எல்லாமே விளையாட்டா இருக்கா? அந்தப் பொண்ணு முகத்தைப் பார்க்கவே கஷ்டமா இருக்கு. நானே போய் சொல்லிடுவேன். எனக்குக் கொஞ்சம் கூடப் பிடிக்கல அர்ஜுன்" என்றார் மிரட்டலாக.

“அம்மா! ப்ளீஸ்” என்று அவன் ஏதோ ஆரம்பிக்க, கோபத்துடன் போனைத் துண்டித்தார்.

“என்ன விமலா ? கல்யாணம் செய்துக்கப் போற பொண்ணு தானேன்னு ஏதோ விளையாடறான். அதைப் போய்ப் பெருசா எடுத்துக்கற" எனச் சொல்லிவிட்டு விமலாவின் முணுமுணுப்பை பொருட்படுத்தாமல், வெளியே சென்றார்.

மதுமிதா அங்கே அமர்ந்திருப்பதைப் பார்த்தவர், "ஈஸ்வர்! என் பையன் இன்னும் கொஞ்சம் நேரத்துல வந்துடுவானாம்" என்றதும், அவர் எதிர்பார்த்ததைப் போல, “அத்தை! நாளைக்குச் சீக்கிரமா கிளம்பணும். நான் போய்ப் படுக்கிறேன்" என்றவள் அங்கிருந்து செல்ல, சந்துரு சிரித்துக் கொண்டார்.

அறையில் விளக்கை அணைத்துவிட்டுக் கட்டிலில் அமர்ந்திருந்தாள். சிறிது நேரத்தில் கார் வந்து நிற்கும் சத்தமும், யாரையோ வரவேற்கும் சத்தமும் கேட்க, படபடப்புடன் பெட்ஷீட்டை இழுத்துப் போர்த்திக்கொண்டு படுத்தாள். சிறிதுநேரம் பொறுத்து கதவைத் தட்டும் சத்தம் கேட்டும், திறக்காமல் படுத்திருந்தாள். திறந்திருந்த பால்கனி கதவின் வழியாக தென்றல் காற்று அவளைத் தாலாட்ட தன்னை மறந்து உறங்க ஆரம்பித்தாள்.

நல்ல தூக்கத்தில் இருந்தவள் காதருகில் யாரோ, “தேனு! இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்" என்று யாரோ சொல்லிவிட்டு நெற்றியில் முத்தமிடவும், திடுக்கிட்டு வாரிச் சுருட்டிக்கொண்டு, எழுந்தவள் விளக்கைப் போட்டாள்.

கட்டிலின் எதிரில் ஒரு சோபாவை இழுத்துப் போட்டுக்கொண்டு காலை நீட்டியபடி தன்னைப் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தவனைப் பார்த்ததும் பயத்தில் கண்கள் விரிய, “நீ...நீ...” என்றவளுக்குப் பேச்சு வரவில்லை.

“என்னடா தேனு? ரொம்பப் பயந்துட்டியா?" என்று அவன் சிரித்துக்கொண்டே கேட்க, அவளுக்கு உடல் நடுங்க ஆரம்பித்தது.

தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, “நீ எப்படி உள்ளே வந்த? முதலில் வெளியே போ. இல்லனா கத்தி எல்லோரையும் கூப்பிடுவேன்" என்றாள்.

"கூல் டவுன். நான் எந்தக் கெட்ட எண்ணத்தோடயும் வரல. உன் பிறந்தநாளுக்கு நான் தான் முதலில் விஷ் பண்ணணும்னு அரைமணி நேரமா இந்தச் சோஃபாவிலேயே உட்கார்ந்திருக்கேன். உனக்காக எவ்வளவு பெரிய ரிஸ்க்கெல்லாம் எடுத்து வந்திருக்கேன். என்னைத் துரத்துறது நியாயமா!" என்றான்.

“ப்ளீஸ் மிஸ்டர்! ஐயோ... உங்க பேரு கூட எனக்குத் தெரியாது? ஏன் என்னை இப்படிப் படுத்தறீங்க?" என்று கெஞ்சலாகக் கேட்டாள்.

“நான் அன்னைக்கே என் பேரைச் சொல்றேன்னு சொன்னேன். நீதான் கேட்டுக்கவே இல்ல. இப்போ, என்ன... உனக்குப் பேர் தெரியணும். அவ்வளவுதானே...” என்றபடி அவளது கண்களைப் பார்த்தபடி நெருங்கி வர, அவள் சுவரோடு ஒட்டி நின்றாள்.

நெருங்கி வந்தவன், "மதூ..." எனக் குழைந்த குரலில் அழைக்க, சரியாக அறைக்கு வெளியே, “மது” என்று ராஜேஷின் குரலும் கேட்டது.

“ஐயோ அண்ணா! இப்போ என்ன செய்றது?" என்றபடி அவனைப் பார்க்க, “மச்சானா!” என்றவன் கதவை நோக்கி நகர்ந்தான்.

“எங்கே போற?” என்றவள் அவன் கரத்தைப் பிடித்து அழைத்துச் சென்று பீரோவின் பின்னால் நிற்க வைத்தவள், “தயவுசெய்து, வெளியே வந்துடாதே” என்றவள் பதட்டத்துடனேயே கதவைத் திறந்தாள்.

ராஜேஷ், தீபக், வித்யா மூவரும் வந்து மதுவை வாழ்த்திவிட்டுச் சென்றனர். அவர்களை அறைக்குள் விடாமல் ,வெளியிலேயே வைத்துப் பேசி அனுப்பிவிட்டு, கதவை மூடியதும் தான் நிம்மதியாக மூச்சு விட முடிந்தது அவளால்.

‘பக்கத்து அறையில் தன்னைக் கல்யாணம் செய்து கொள்ள வந்திருப்பவன். இங்கே என்னைக் காதலிப்பவன். கடவுளே! இது எங்கே போய் முடியப்போகுதோ!’ என்று நினைத்துக்கொண்டு பீரோ பின்னால் சென்று பார்க்க, அங்கே அவன் இல்லாததைக் கண்டு நிம்மதி அடைந்தாள். ‘வந்த வழியிலேயே போய்விட்டான் போலும்’ என்று நிம்மதியாக மூச்சுவிட்டபடி கட்டிலில் அமர்ந்தாள்.

"தேனு என்னைத் தானே தேடுற" என்ற குரலில் அவள் திடுக்கிட்டு எழ, அவளெதிரில் அமர்ந்தான்.

“நீ இன்னும் போகலையா?" என்றாள் பயம் விலகாமல்.

“உன்னைப் பார்த்துட்டு எப்படிப் போறது? அதான் இங்கேயே உன்கூடவே இன்னைக்கு நைட் தங்கிட்டுப் போகலாம்னு இருக்கேன்" என்று ஒவ்வொரு வார்த்தையையும் அழுத்தம் திருத்தமாகச் சொல்ல,அவளுக்கு பயத்தில் வியர்க்க ஆரம்பித்தது.

"என்னன்னு நினைச்சி பேசிட்டிருக்க? நான் சத்தம் போட்டா, எல்லோரும் வந்திடுவாங்க. வீணா அடிபடுறதுக்கு முன்னால நீயே போய்டு” என்று ஆத்திரத்தோடு ஆரம்பித்தவள், முடிக்கும் போது குரல் வெளியே வரவேயில்லை.

"தேனு! உன்னோட மனசை உன்னால் மறைக்க முடியாது. நீ என்னைக் காட்டி கொடுக்கணும்னு நினைச்சிருந்தா, உங்க அண்ணன் வந்தபோதே காட்டிக் கொடுத்திருக்கலாம். ஏன் காட்டிக் கொடுக்கல? ஏன்னா, நான் எப்பவோ உன் மனசுக்குள்ள வந்துட்டேன்” என்றான் புன்னகையுடன்.

“இல்ல. எங்க மாமா சொல்ற மாப்பிள்ளையைத் தான் கல்யாணம் செய்துக்குவேன். தயவுசெய்து என்னைtஹ் தொல்லை செய்யாம போய்டு. உன் கால்ல வேணும்னாலும் விழறேன்" என்று சொல்லி முடிக்கும் முன், அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.

அவளைப் பார்க்கப் பாவமாக இருக்க, “தேனு... உன் மனசுல நான் இருக்கறது உனக்குத் தெரியும். அந்த இடத்தை யாராலும் பிடிக்க முடியாது. அதை நீ நல்லா புரிஞ்சிக்க. பிறந்த நாளும் அதுவுமா அழாதே! நான் கிளம்பறேன்" என்றவன் வந்த வழியே செல்ல, கதவை மூடிவிட்டு அதன் மீதே சாய்ந்து நின்றாள்.