நீரலையில் தளும்பும் நினைவலைகள் - கதை திரி

sudharavi

Administrator
Staff member
#1
ஹாய் பிரெண்ட்ஸ்,

நர்மதா செந்தில்குமார் அவர்கள் "நீரலையில் தளும்பும் நினைவலைகள்" என்கிற தலைப்போடு போட்டியில் இணைகிறார்.
 
#2
வணக்கம் நண்பர்களே ..!! இதுவரை நான் சைலண்ட் ரீடராக இருந்தேன்.. ஒரு‌ கதை வாட்பேட் என்ற தளத்தில் எழுதி இருக்கிறேன் ... போட்டியில் பங்கேற்பது இதுவே முதல் முறை.. புது முயற்சியாய் குறுந்தொடர் போட்டியில் பங்கேற்கிறேன்.. குறைகள் நிறைகளை சுட்டிக்காட்டி என் கதையை சிறப்பிக்கவும்
 
#3
நினைவலைகள் 1

செங்கதிர்கள் தன் கூட்டிற்குள் செல்ல தயாராக சந்திரனோ தன் ஒளிக்கற்றைகளால் அக்கடற்கறையை இன்னும் அழகாக்க விண்மீன்களோடு புலப்பட‌ ஆரம்பித்த மாலை நேரத்தில் கடலைகளை ரசிப்பதாய் நினைத்து கொண்டு தங்கள் நினைவலைகளில் மூழ்கி இருந்தனர் ரதிதாவும் நிலவனும் ...

மொளனமே அவர்களுக்குள் ஆட்சிக் செய்ய.. சுண்டல் விற்கும் சிறுவனின் "அம்மா சுண்டல் வேணுமாமா ..‌ 10 ரூபா தான் மா" என்ற குரலில் ரதிதா ஒரு நிமிடம் கலங்கிய கண்களோடு பார்க்க தன்னவளின் மனநிலையை புரிந்துக்கொண்டவனாய் "வேணாம் தம்பி "என்றவன் தன்னவளை அணைத்து ஆறுதல் அளிக்க இயலா தன் நிலையை எண்ணி நொந்துக் கொண்டிருந்தார்..

அப்போது அருகில் இளம் தம்பதி சண்டையிட்டு கொண்டிருந்த சத்தத்தில் இவ்விருவரும் அவ்விடம் நோக்கினர்.. அதில் கணவர் ஆவேசமாக " ஏண்டி உனக்கு அறிவே இல்லை என் உசிர வாங்குற" என்க

" நான் ஒன்னும் உங்களை பண்ணலை.. நீங்க தான் என்னை இப்போலாம் திட்டிட்டே இருக்கிங்க" என்று குற்றப்பத்திரிக்கை மனைவி வாசிக்க இருவரும் காரசாரமாய் பொது இடத்தையும் மறந்து கத்திக்கொண்டிருக்க ...

தீடிரென கணவன் மனைவியை கட்டியணைக்க சிறிது திமிரியவள் பின் சன்னமான குரலில் " ஏங்க இது பீச்" என்றாள்..

"உம்ம்ம் .. இது இவ்வளவு நேரம் சண்டை போட்டுட்டு இருந்தப்ப தெரியலையா" என்றவனுக்கு


" ரொம்ப சண்டைப் போட்டுட்டேனோ பா.." என்ற மனைவி கொஞ்சும் குரலில் கேட்க

" இல்லை நான் பண்ணது தான் தப்பு சாரி மா" என்று இருவரும் சமாதானம் ஆகி சென்ற காட்சியை கண்டதும் இவ்விருவரின் நினைவும் பின்னோக்கி சென்றது

"அத்தான்‌ நீங்க ஏன் அவனை சும்மா விட்டிங்க.. அந்த நாயி எப்படி‌ அது பஸ் என்று கூட பார்க்காமல் திட்டுவான்.. அவனுக்கு உங்களை பிடிக்கவில்லை என்றால் அமைதியா கண்டுக்காம போக வேண்டி தானே" என்று தன்னவனை ஒருவன் இழிவுபடுத்திவிட்டான் என்று ரதிதா கத்திக்கொண்டிருக்க

நிலவனோ "சரி விடு அதை பற்றி பேச வேண்டாம்"‌என்க அதில் வெகுண்டெழுந்தவள்

" அத்தான் அதை எப்படி விட முடியும் ..அவன் எப்படி உங்களோடு பழைய வாழ்க்கையை பற்றி பேசலாம்.. நான் அவனை திட்டலாம் என்று‌ நினைத்தால் அதையும் விடாமல் இழுத்துட்டு வந்துவிட்டீர்கள்" என்று மூச்சு விடாமல் பேச

அவளை நோக்கி சென்ற நிலவன் எதுவும் பேசாமல் அவளை தன்னுடன் கட்டியணைத்து அவள் நெற்றியில் இதழ் பதிக்க .. அதில் வெட்கத்தில் நின்றவளை

" ரதிமா.. நான் அவனிடம் சண்டைக்கு நின்றிருந்தா எதாவது பேசி உன்னையும்‌ சங்கடப்படுத்திருப்பான்.. அதும் இல்லாமல் அவன் ஏதாவது உன்னை சொல்லிருந்தால் கைதான் பேசும் .. அப்பறம் நான் போலீஸ் ஸ்டேஷன் போக வேண்டி வந்திருக்கும் .. அப்பறம் எப்படி இப்படி என் பொண்டாட்டியை கொஞ்சிட்டு இருக்கிறது.. "
என்றவனின் காதலில் கண்டுண்டு கிடந்த காலமெல்லாம் ரதிதாவின் நினைவுகளில் ஊஞ்சலாட இப்போதும் தாங்கள் இருக்கும் நிலையெண்ணி ஒரு பெருமூச்சுவிட்டாள்..

நிலவனும் அதே நினைவில் உலன்று கொண்டிருந்தான்.. அழகாய் கடந்த வாழ்வில் நடக்க கூடாது நிகழ்வுகளெல்லாம் நடந்து இப்போதும் காதல் இருந்தும் தன்னவளிடம் காட்டயியலாமல் தவிக்கிறேனே என்று நினைத்துக்கொண்டிருக்கையில்...

"மாமா ... அத்தை ..". என்று கத்திக்கொண்டே பரத் வருவதை கண்டவர்கள் ( பரத் நிலவனின் அக்கா மகன்.. இவர்களை சகஜ நிலைக்கு திருப்ப முயற்சி செய்துக்கொண்டிருக்கும் நல்லவன்)

தங்கள் நினைவுகளில் இருந்து கலைந்தவராய் அவனை நோக்க " அத்தை இவள் தொல்லை தாங்க முடியவில்லை .. எப்படி அத்தை இவளை சமாளிக்கிறிங்க" என்று காவியாவை வசைப்பாட ( காவியா 22 வயது நவநாகரீக யுவதி நிலவன் ரதிதாவின் ஒரே மகள்)

"அம்மா இவன் சரியான கஞ்சமா இருக்கான் மா ... பிரியாணி கேட்டா நீங்களும் வந்தா தான் சாப்பாடு என்று ஏமாத்தி கூட்டிட்டு வந்துட்டான் மா.. சரி ஐஸ்கிரீம் கேட்டா ஒன்று தான் வாங்கி தந்தான் .. இதில் வேற இப்படி தின்னிப்பண்டாரமா இருக்க என்று கிண்டல் பண்ணுறான் மா" என்று பேசியவாறே தன் அப்பாவின் தோளில் சாய்ந்து கொண்டவளை
"சாப்பாட்டு ராமி" என்று மீண்டும் பரத் கிண்டல் செய்ய

"..பாருங்க அப்பா இவனை... போடா ..எனக்கு என் அப்பா வாங்கி‌ கொடுப்பாங்க ஏன் பா " என்ற தன்‌ மகளை கண்டு மெலிதாய் சிரித்துக் கொண்டே

" என் பாப்பாக்கு இல்லாததா..எதுனாலும் என் பாப்பாக்கு‌ வாங்கித் தருவேன்' என்று‌ தன்னோடு அணைத்துக் கொண்டான் நிலவன்.. அந்த அணைப்பில் மகளும் தன்னை விட்டு சென்று விடுவாளோ என்ற பயத்தை உணர முடிந்தது ரதிதாவாள்..

அதை கண்ட பரத் " காவி.. மாமாவே சொல்லிட்டாங்க .. அதுனால அடுத்து எந்த கடையில் என்ன சாப்பிடலாம் என்று சீக்கிரம் ப்ளான் பண்ணு .. பூசணி..."என்று சொல்லிமுடிப்பதற்குள் காவியா அவனை அடிக்க ஆரம்பித்து இருந்தாள்

அதை கண்டதும் " காவியா .. என்ன பழக்கம் இது .. பேசிட்டு இருக்கும் போது கைநீட்டுறது.‌ அதும் உன்னோட பெரியவங்க மேல" என அம்மாவாய் ரதிதா அதட்ட

அதில் கோபம் கொண்டவள் " அப்பா பாருங்கப்பா.. அம்மாவை" என்றதும் ..

"சரி அம்மாவை பார்க்கிறது இருக்கட்டும்.. ஆனால் எனக்கும் இப்படி என் பாப்பு பண்றது தப்புன்னு தோனுதே.. யாரா இருந்தாலும் அதும் இப்படி கைநீட்டுறது தப்பு தானே பாப்பு" என்று தன் மகளை கண்டிக்க

"போங்க எல்லாரும் அவனுக்கே சப்போர்ட் பண்றிங்க "என கோபித்துக் கொண்டு போக..

அது வரை இந்த கலவரத்துக்கு காரணமான பரத் " ஏன் மாமா சும்மா அவள் விளையாட்டா பண்ணதுக்கு இப்படி திட்டிட்டிங்க" என்றவனை நிலவன் முறைக்க ..

அதற்குள் தன் மாமன் மகளை சமாதானம் செய்ய அவள் பின்னாலே ஓடியிருந்தான் பரத்

இவர்களின் சம்பாஷனைகளை கண்டு ரதிதா மெலிதாய் சிரிக்க .. நீண்ட நாட்களுக்கு பிறகான தன்னவளின் சிரிப்பை கண்டு நிலவனின் முகமும் சிரிப்பில் மலர்ந்தது..

அப்போது " ஹாய் ரதிதா .. எப்படி இருக்க" என்று குரல் கேட்க ..

அதற்கு அவள் பதில் அளிக்கும் முன்பே


" அய்யோ உன்னிடம் போய் இந்த கேள்வியை கேட்கிறேன் பாரு.. நீ வேற சோகத்துல இருப்ப.. ஆனால் நீங்க பண்ணது ரொம்பவே நல்ல விசயம்" என்று பேசிக் கொண்டே போன அந்த பெண்மணியை பார்க்க நிலவனுக்கு கோபமே வந்தது..

எந்த நிகழ்வை மறக்க இயலா விட்டாலும் மனதில் புதைத்துக் கொண்டு நடமாட முயற்சி செய்து கொண்டிருக்கிறார்களோ ..


இவர்கள் ஆறுதல் அளிப்பதாய் நினைத்து கொண்டு மீண்டும் மீண்டும் அதையே பேசி ரணப்படுத்துகிறார்களே என்று...

ஒரு கட்டத்தில் அந்த பெண்மணியின் பேச்சினால் தன்னவள் அழுதுக் கொண்டிருப்பதை பொறுக்க முடியாமல் போக

" ஹலோ .. நீங்க பேசி முடிச்சிட்டிங்க என்றால் எங்களுக்கு வேலை இருக்கு . சோ" என்றவன் அவர் பதிலுக்கு காத்திராமல் தன்னவளின் கைப்பிடித்து இழுத்துச் சென்றான்
 
#4

நினைவலைகள் 2
ரதிதாவின் கலங்கிய கண்களை கண்டவுடன் நிலவனின் கண்களும் கலங்கியது .. தன்னவளின் கைகளை ஆறுதலாய் பற்றியவன் அவளை காரை நோக்கி அழைத்துச்‌ சென்றான்‌.. ரதிதாவிற்கும்‌ தன் கணவனின் அன்பும் ஆறுதலும் தற்போது தேவையான ஒன்றாக இருந்ததால் மறுப்பு ஏதும் காட்டவில்லை..‌

அப்போது காவியாவை சமாதான படுத்த பரத் " பானிப்பூரி வேணுமா காவிமா.. இந்த கடையில் செமயா இருக்கும் வா போலாம்" என்று இழுத்துக் கொண்டு சென்றவனை முறைத்தவள்

" அதெல்லாம் ஒன்னும் வேணாம் .. யாரும் என்னை சமாதான படுத்த தேவையில்லை.. பானிபூரி கொடுத்து என் கோபத்தை பஸ்பமாக்க பார்க்குறியா .. நெவர்.. " என்று வசனம் பேசிவிட்டு நிமிர்ந்து பார்த்தால் பரத் பானிபூரியை கருமமே கண்ணாக சாப்பிட்டு கொண்டிருந்தான்..

இதை கண்டவள் இன்னும் முறைக்க பரத் " காவிமா செம டேஸ்ட் .. ப்பா சான்ஸே இல்லை .. அட அட .. நீயும் டேஸ்ட் பண்ணு.. " என்று அவள் வாய்க்கு அருகில் நீட்ட

அதை வாங்காமல் இருப்பதை கண்டவன் " காவி .. சீக்கிரம் .. வாங்கு..கை வலிக்குது .. ஆஆ" என்று கத்த

"ஏய் எல்லாரும் நம்மளையே பார்க்குறாங்க பரத் .. ஸ்ஸ்ஸ்ஸ்" என்று பேசியவளை சிறிதும் கண்டுக்கொள்ளாமல் கைநீட்டிக் கொண்டிருந்தவனின் பிடிவாததிற்கு முன் காவியாவின்‌ கோபம் காணாமல் போக இருவரும் சாப்பிட்டு சிரித்தப்படி‌யே காரை நோக்கி வந்தனர்..

"காவிமா‌.. எனக்கு கைவலிக்குறதா சொன்னதும் உடனே வாங்கிட்டியே.. என்மேல அம்புட்டு பாசமா‌ உனக்கு " என்று‌ எதிர்பார்ப்போடு கேட்ட பரத்திற்கு

"ஹி‌ ஹி.. பாசம் தான் .. பானிப்பூரி மேல.. கோவப்பட்டு பானிப்பூரிய விடுவதற்கு நான் என்ன ஏமாந்தவளா..‌ஃபுட்டி ஆக்கும்" என் இல்லாத காலரை தூக்கி விட்டு கொண்டாள்

"அடிப்பாவி இவளிடம் போய் கேட்டேன்‌ பாரு என்னை அடிக்கனும் ..‌ ஃபுட்டியாமா .. நாமலும் இதை தானே தமிழில் சொன்னோம் என மனதுக்குள் வசைப்பாடியவன்( வெளியில் சொல்லி திரும்பவும் யாரு வாங்கி கட்டிக்கிறது)‌ வெளியில் சிரித்துக் கொண்டிருக்க

காவியாவோ காரை நோக்கி ஆச்சரியமாய் விழிவிரித்து பார்த்தவள் " பரத் அங்கு பாரு டா.. அம்மா அப்பாவை " என்றதும்

"ஆமா .. அத்தை மாமா .. அவுங்களை தான் பொறந்துல இருந்து பார்க்கிறேனே .. இப்போ எதுக்குடி புதுசா பார்க்க சொல்லுற" என கிண்டல் செய்தான்

"டேய் பைத்தியம் .. அவுங்க கையை பாருடா" என்ற காவியை

என்ன இவள் பொசுக்குனு இப்படி திட்டிட்டா என்று யோசித்தவாறே அவர்களை உற்று பார்த்தவனுக்கு அப்போது தான் புரிந்தது .. இருவரும் கைப்பிடித்தப்படி நிற்க. . என்ன பாகிஸ்தான் இந்தியா பிரச்சினை முடிவுக்கு வந்துட்டோ என்று நினைத்தவன் அவர்களை இப்படி பார்த்ததில் சிறிது மகிழ்ந்தவன் ஏதோ தோன்ற அவர்களின் முகத்தை பார்த்தான்..

அதில் இருவரின் கண்களும் கலங்கி நிற்க .. அப்போது தான் புரிந்தது .. ஏதோ ஒரு பக்கி ஆறுதலா பேசுவதாய் நினைச்சு அமைதியா இருந்தவங்களை அழுக்காச்சியா ஆக்கி விட்டு போயிருக்குனு.. முகம் தெரியா அப்பெண்மனியை கரித்துக் கொட்டியவன் காவியாவை பார்த்தான் .. அவள் முகத்தில் மகிழ்ச்சி தெரிய .. அவர்கள் வருந்துவது தெரிந்தால் இவளும் கவலை கொள்வாளே என்று யோசித்தவன் .. சரி எதாவது பேசி அவுங்க மனநிலையை மாற்றுவோம் என்றவன்..

"அகிலா ஏன்டா இப்படி பண்ண .. உன்னால எல்லாருமே எப்படி‌ கஷ்டப்பட்டுட்டு இருக்கோம் பாரு டா .‌ ஏன்டா உனக்கு இவ்வளவு அவசரம்" என்று தன் நண்பனை நினைத்து புலம்பியவாறே காவியாவை பார்க்க

அவள் ஆஆஆஆ என்று‌ வாயை பிளந்தவாறு பெற்றோரை பார்த்துக் கொண்டிருந்தாள்

"இவ ஒருத்தி .. ஏதோ ரொமேன்ஸ் பார்க்குற மாதிரி பார்த்ததுட்டு இருக்கா..இவளை வச்சுட்டு உன் நிலைமை ரொம்பவே கஷ்டம் டா பரத் " என்று மனதுக்குள் திட்டியவன் அவளை இழுத்துக் கொண்டு காரை நோக்கி சென்றான்

"அத்தை .. "என்று கத்தியதும் ரதிதா நிமிர்ந்து பார்க்க " உங்க பொண்ணு கோபமெல்லாம் காணாம போய்டுச்சு பார்த்திங்கலா .. எப்படினு கேளுங்க" என்றதும்

"எதாவது சாப்பிட வாங்கி கொடுத்திருப்ப" என்று சிரித்தவாறே ரதிதா விடையளிக்க அனைவரும் அதற்கு சிரித்தவுடன் நம்ம காவியா திரும்ப கடுப்பாகி அடிக்க போக ..
" அய்யய்யோ அடிச்சா இதுங்க காதுல இரத்தம் வர அளவுக்கு அட்வைஸ் பண்ணுங்களே" என்று மண்டைக்குள் ஞானோதயம் பிறக்க அப்படியே கையை இறக்கி விட்டாள்..

அதை கண்டு அனைவரின் முகத்திலும் சிறு சிரிப்பு மலர காவியாவும் சிரித்தவாறு அவ்விடம் விட்டு காரில் கிளம்பினர்..

காவியாவின் மனதில்" அகிலன் அண்ணா ..ஏன்டா எங்களை விட்டு ரொம்ப தூரம் போன.. மிஸ் யூ டா " என்று நினைத்தவள்‌ கண்கள் கலங்கியது .. அனைவரின்‌ மனதிலும் அகிலன் நினைவே ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தது...

யார் அந்த அகிலன் ..??


 
#5
நினைவலைகள் 3


அகிலனின் நினைவில் அனைவரும் அவர்கள் வீட்டை அடைய அங்கு இவர்களை சந்திப்பதற்காக ஒரு பத்திரிக்கை நிருபர் காத்திருந்தார்..

ஏற்கனவே பல பத்திரிக்கை um நிருபர்கள் தங்கள் விளம்பரத்திற்காக கேட்ட கேள்விகளால் நொந்து‌ போயிருந்த ரதிதாவிற்கு இவர்களை பார்த்ததும் அய்யோ என்றானவளின் மனதில் துக்கம்‌ அடைக்க அதை உணர்ந்து கொண்ட நிலவன் பரத்திடம் கண்ஜாடை காட்ட அவனும் அவர்களை இன்னொரு‌‌ நாள்‌ பேட்டி தருவதாய் கூறி அனுப்பிவிட்டான்

உள்ளே நுழைந்தவர்களை பரத்தின் தாய் நிலவனின் தங்கை வாசுகி பிடித்துக்கொண்டார்.. "வாங்க வாங்க .." என்ற அவள்‌ அழைத்த பாங்கிலே ஏதோ பெரிய வெடிகுண்டு வெடிக்க இருப்பதை உணர்ந்துக் கொண்டான் பரத்.. ஜாடையால் அவன் தங்கை கவிமுகிலிடம் கேட்க அவளோ சிரித்துக் கொண்டே கல்யாணம் என்பது போல் சைகை செய்ய

"அய்யோ இந்த தாய்கிழவி தொல்லை தாங்கலையே.. என் காவி குட்டியோட சேர்த்து வைக்கிறேனு சொல்லி இவங்களே பிரிச்சு வச்சுவருவாங்க போலயே" என்று மனதுக்குள் வசைப்பாடி கொண்டிருந்தான்

அதற்குள் வாசுகி "அண்ணா ஒரு கெட்டது நடந்த வீட்டில் ஒரு நல்லது நடந்தா நல்லா இருக்கும் என்று நினைக்கிறேன்.. அதுனால நம்ம " என்று பேசிக்கொண்டிருக்கும் போதே அப்பேச்சு செல்லும் பாதையை உணர்ந்தவர்

"காவியா‌ நீ உள்ளே போமா " என்றார் நிலவன்.. ஏனைனில் மகள் கண்டிப்பாக இப்போதைக்கு திருமணத்திற்கு ஒத்துக் கொள்ள மாட்டாள்.. மேலும் இந்த நேரத்தில் கல்யாணம் பற்றி பேசுகிறார்களே என்று‌ தன்‌ தங்கையையும் தவறாக நினைக்க வாய்ப்பு இருக்கிறது என்றே அவர்‌ காவியாவை அனுப்பியது..

ஆனால் பேச்சை சுவாரசியமாக கேட்டுக் கொண்டிருந்தவளுக்கு ஏதோ அதில் தன்னை பற்றி இருப்பதாய்‌ தோன்ற

"அப்பா.. அத்தை எதோ பேசிட்டு இருக்காங்க .. என்னை மட்டும் போக சொல்றிங்க .‌ எதோ என்னை விட்டுட்டு சீக்ரெட் பேச போறிங்க .. நோ... நெவர் .. நான் இங்க தான் இருப்பேன்" என்றவளை என்ன செய்வது என்பது போல் முறைக்க அதை எதையும்‌ கண்டுக் கொள்ளாதவள் போல் நின்றாள்..

கணவனின் மனநிலையை புரிந்துக்கொண்ட ரதிதா " காவியா‌ அப்பா சொன்னா கேளு ..எதிர்த்து பேசுறது தப்புன்னு தெரியாதா.. பெரியவங்க பேசுற இடத்துல உனக்கு என்ன வேலை .. உள்ள போ காவியா" என்று திட்டியதற்கும் வீம்பாய் நின்றுக்கொண்டிருந்தாள்..

காவியா எதற்கும் இப்படி வீம்பு பிடிக்கமாட்டாள் .. ஆனால் இப்போது இருப்பது புதிதாய் இருக்க

பரத் தான் .." காவிமா ... இந்த பேச்சு உனக்கு அவசியம் இல்லை என்று தானே உன்னை போக சொல்றாங்க ..அப்பறம் ஏன் வீம்பு பண்ணிட்டு இருக்குற .. நீ போய் ரெஸ்ட் எடு" என்று மென்மையாய் கூறினாலும் அந்த குரலில் ஒரு அழுத்தத்தை உணர்ந்தவள் அவனை திட்டியப்படி முனகிக்கொண்டே உள்ளே சென்றாள்.. கவிமுகிலும் தன் அண்ணனின் கண்ணசைவில் காவியாவுடன் சென்றாள்

"அம்மா.. இப்போ எதுக்கு மா கல்யாணம் உடனே பண்ணனும் என்று சொல்லி உசிர வாங்குறிங்க .. இப்போதைக்கு யாரும் அந்த மனநிலையில் இல்லைமா .. " என்று பரத் எரிச்சலாய் கூற

"வாசுகி.. எங்களுக்கு கொஞ்சம் டைம் கொடுமா .. காவியாவை எப்படியாவது சமாதானப்படுத்தி சம்மதிக்க வைக்கிறேன் .. " என்று வருத்தமாய் குரல் கம்ம பேசியவரை கண்டு அனைவருக்கும் கண்கலங்கி விட்டது..

"அண்ணா.. நான் கல்யாண இப்போவே பண்ணனும் சொல்றதே காவியாக்காக தான்.. இப்படியே நீ அண்ணி காவியா எல்லாம் அகிலனே நினைச்சு உங்களையே வருத்திட்டு இருந்தா என்ன அண்ணா ஆகுறது.. நடக்கவே கூடாது நடந்துட்டு.. அதில் இருந்த எப்படியாவது வெளிய வரணும் தானே.. உங்களை விட காவியா தான் அதிகமா பாதிக்கப்பட்டு இருக்கா .. அவளை சரியாக்க வேண்டியது நம்ம பொறுப்பு .. ஆனால் நீங்க என்னனா உங்களை வருத்திட்டு அழுதுட்டே இருந்தா அவ எப்படி சரியாவா... " என்று கேட்டவள் பரத் புறம் திரும்பி

"இந்த லூசு பயலும் இவனோடு லவ்னால அவ மனச பஞ்சாக்கி லவ்வாக்கி கல்யாணம் பண்றேனு வசனமா பேசுனான்.. இப்போ பார்த்தா இவன் மேல காவியாக்கு இருக்குற கொஞ்ச லவ்வையும் பஞ்சராக்கிடுவான் போல இருக்கு" என தன் மகனை கிண்டல் செய்தவளை பார்த்து

பரத் என்னது இப்படி நம்ம மானத்த வாங்குறாங்க என்று யோசித்தவன் எதோ பேச வாய் எடுக்க " அம்மா ஒரு ஃபார்ம்ல இருக்குடா .. கரெக்ட்டா தானே பேசுறாங்க ..பேசாம மூடிட்டு நின்னு அதான் உனக்கு நல்லது " என அவன் மனசாட்சியே இலவச அட்வைஸ் வழக்க அதன் உண்மையை உணர்ந்தவன் வாயை மூடிக்கொண்டான்

ஆனால் வாசுகியோ பரத்திடம் முடித்தவள் ரதிதாவிடம் சென்றவள் அவள் கையை பற்றி " அண்ணி .. என் மருமவ சரியாகுறது உங்களிடம் தான் இருக்கு.. நாங்க எம்புட்டு பாசம் வச்சாலும் தாய்பாசத்திற்கு ஈடாகுமா .. கொஞ்சம் யோசிங்க அண்ணி" என்று பேசி முடித்தவள் அவர்கள் யோசிக்க இடமளித்து சமைக்க சொல்வதாய் கூறி அவ்விடம் வின்று அகன்றாள்

ரதிதா யோசித்தப்படியே அவள் ரூம்மினுள் செல்ல தன்னவளோடு பேச வேண்டும் என்று யோசித்தப்படியே நிலவனும் பின்தொடர்ந்தான்

"அம்மா ..எப்படிம்மா அத்தைட்ட இப்படி பேசுன .. செம மா நீ .. ஆனால் என்னை ரொம்பவே டேமேஜ் பண்ணிட்ட" என்று வாசுகியை கட்டிக்கொண்ட பரத்தை

"உங்க அத்தை என்ன புலியா கரடியா .. அவ‌ மனசு நோக கூடாதுன்னு தான் டா பேச யோசிச்சோம் ஆனால் அத பார்த்தா அவ அதையே யோசிச்சா உடம்ப கெடுத்த மனச கெடுத்துக்குவா போல் இருந்திச்சு அதான் லைட்டா வேப்பிலை அடிச்சேன் இதுக்கு அப்பறம் அண்ணே பார்த்துக்கும்"

"அப்பறம் .. உன்னை பத்தி சொன்னதும் அம்புட்டும் ரொம்பவே சரினு இப்பவும் நிருபிச்சுட்டு இருக்கியே" என்று சிரிக்க

"ஏன்மா" என்று முறைத்த பரத்தை

"காவியாவை திட்டுனியே .. கோபமா போனாளே அவளை போய் சமாதானம் படுத்துவோனு இல்லாம என்னிடம் கொஞ்சிட்டு இருக்கியே" என்றாள்

"அய்யய்யோ ஆமா.. நல்ல வேளை நியாபகப்படுத்துன ம்மா " என்றவன் காவியாவை சமாதானப்படுத்த சென்றான்

 
#6
நினைவலைகள் 4


பரத்தை பார்த்ததும் காவியா முகத்தை திருப்பிக்கொண்டவள் " முகில் யாரும் என்னை சமாதானப்படுத்தலாம் தேவையில்லைனு சொல்லிடு" என்று சொல்ல

"ஹா ஹா .. யாரு இங்க சமாதான படுத்த வந்ததாம்" என்றவன் தன் தங்கையின் தோளில் கையிட்டு "குட்டி இங்க ஒருத்தவங்க செம கற்பனையில் இருக்காங்க போல.. யாருனு கேளேன் " என்க

"அதான் எனக்கு தெரியுமே டா .. நம்ம காவியாவை தானே சொன்ன " என்றதும் இருவரையும் காவியா முறைத்தாள்

அய்யய்யோ இந்தப் படுபாவி என்னையும் கோர்த்து விட்டுட்டானே .. இவள் வேற முறைக்கிறாளே என்று யோசித்த முகில் " டேய் அண்ணா .. நீ எங்க இரண்டு பேருக்கும் சண்டை மூட்ட பார்க்குற.. காவியா பாவம் அவளை திட்டிட்டு இப்போ கிண்டல் வேற பண்ணுறியா " என்று கோர்த்துவிட

"குட்டிச்சாத்தான் .. பழிவாங்குறாளே அவ மறந்தாலும் இவளே நியாபகப்படுத்தி கொஞ்சமா இருக்க சண்டையை பெரிசாக்கிருவா" என்று மனதில் திட்டியவாரே பார்த்தவன் வெளியில் நமட்டு சிரிப்பு சிரித்தான்...

"முகில் .. யாரும் எந்த கற்பனையிலும் இல்லை .. முதலில் அவனை வெளியே போக சொல்லு " என்று கண்கலங்க கூறிய காவியாவை கண்டதும் பரத்தின் விளையாட்டுதனமெல்லாம் காணாமல் போனது.. அவள் அருகில் செல்ல.. முகிலோ அவ்விடம் விட்டு நகர்ந்தாள்

"ஏய் காவிமா .. சும்மா விளையாண்டா அதுக்கு போய் இப்படி கண் கலங்கலாமா" என அவள் கண்ணை துடைக்க செல்ல

அவன் கையை தட்டிவிட்டவள் "இல்லை .. என்னிடம் எதுமே சொல்ல மாட்டிறிங்க .. நான் இன்னும் சின்ன பிள்ளைலாம் இல்லை .. எல்லாம் என்னை அவாய்ட் பண்ணுறிங்க .. எனக்கு யாருமே இல்லை " என அழுதவளை பார்க்க சின்னபிள்ளையாகவே தெரிந்தாள் ..

"அய்யோ .. டாக்டர் அவ்வளவு சொல்லியும் தப்பா ஹேண்டில் பண்ணிட்டேனே .. இவளை திரும்பவும் இப்படி பீல் பண்ண வச்சுட்டேனே .. அவள் இப்போ தான் கொஞ்சம் மனச விட்டு பேச ஆரம்பிச்சா .. திரும்பவும் அவ டிப்ரஷன் ஆகிட கூடாது" என வருந்தியவன்

"காவிமா.. அப்படிலாம் இல்லை டா .. உண்மையாவே அது உனக்கும் முகிலுக்கும் சம்பந்தம் இல்லாதது அதான் இரண்டு பேரையும் போக சொன்னேன் .. உன்னை மட்டும் அவாய்ட் பண்ணனும் என்று நினைச்சுருந்தா முகிலை ஏன் போக சொல்லனும் .. " என்று ஆறுதலாய் அவள் கைப்பற்ற அதில் ஒரு சமாதானத்தோடு பாதுகாப்பை உணர்ந்தவள் இறுகப்பற்றிக் கொண்டாள்

"பரத்.. சாரி .. நான் தான் அடிக்கடி இப்படி எமோஷன் ஆகிறேன்.. " என்று சொன்னவளை பார்த்ததும்

" தெளிவான மனதைரியத்தோடும் குழந்தைதனத்தோடும் எந்த பிரச்சனையும் எளிதாக கையாளும் பெண்ணாய் இருந்தவள் தன் அண்ணனின் இழப்பால் இப்படி ஆகிவிட்டாளே .. அதும் மனோதத்துவ சிகிச்சைக்கு பிறகு தான் இப்படியாவது பேசுகிறாள் ‌‌.. " என்று மனதிற்குள் நினைத்தவன்

"இந்த முன்னேற்றமே போதும் ..அவளை பழைய காவியாவாய் மாற்ற" என்று நினைத்து பெருமூச்சுவிட்டான்

அதை கண்டவள் " சாரி பரத்.. என்னால நீ ரொம்ப கஷ்டப்படுற " என்று மீண்டும் கண்கலங்க

"ஏய்.. காவிமா அதெல்லாம் ஒன்னும் இல்லை" என்று அணைக்க " அவன் மடிசாய்ந்து " ஏன்டா அகிலன் என்னை விட்டுட்டு போனான் " என்று புலம்பியவாறே அழுக ஆரம்பித்தவளை பார்த்து தன் நண்பனின் நினைவுகள் நிழலாடியது..

அகிலன் ரதிதா நிலவன் தம்பதியரின் செல்ல மகன் ... அகிலன் காவியா அக்மார்க் அண்ணன் தங்கை.. எப்போதும் டாம் அண்ட் ஜெர்ரியாய் வலம் வரும் பாசப் பறவைகள்..

நிலவன் அரசுப்பள்ளியின் தலைமையாசிரியர் .. ரதிதாவும் அரசுப்பள்ளியின் இடைநிலை ஆசிரியரே..

இருவரும் அந்தக்காலத்திலே காதலித்து திருமண செய்து காதலில் திகட்ட திகட்ட வாழ்ந்துக் கொண்டிருப்பவர்கள்.. அத்தம்பதியரின்‌ மனமொத்த வாழ்கையை கண்டு பிரமிக்காதவர் எவரும் இல்லை..

அக்காதல் வாழ்க்கையால் கிடைத்த பரிசே அகிலனும் காவியாவும்.. இருவரும் தங்கள் பிள்ளைகளுக்கு சுதந்திரத்தையும் அன்பையும் கொடுத்தே வளர்த்தனர்.. கண்டிக்க வேண்டிய இடத்தில் கண்டிக்கவும் தவறவில்லை..அதனால் அப்பிள்ளைகளும் தனக்கு கொடுக்கப்பட்ட சுதந்திரத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டனர்

படிப்பிலும் அவர்கள் விருப்பமே‌... அகிலன் மருத்துவத்தை தேர்ந்தெடுத்தான்.. அரசு மருத்துவ கல்லூரியிலே இடம் கிடைத்ததில் பெற்றவர்கள் பெருமைக் கொண்டனர்

காவியா தான் ஃபேஷன் டிசைனிங் படிக்க ஆசைப்பட்டு அதில் சேர்ந்தாள்..

பரத்தும் அகிலனும் ஒத்த வயதுடைய வர்கள் என்பதால் சொந்தத்தையும் தாண்டி நண்பர்களாய் இருந்தனர் .. பள்ளிப்பருவத்தை ஒன்றாக முடித்ததும் பரத் பொறியியல் படிப்பை தேர்ந்தெடுக்க இருவரும் தங்கள் பாதையில் சென்றுக் கொண்டிருந்தனர்.. தினமும் அன்றைய நாளின் நிகழ்வுகளை பேசிக் கொள்வது அவர்கள் வழக்கமானது.. இருவரின் அன்றைய காலைபொழுதில் ஆரம்பித்து பேராசிரியரை வசைப்பாடி பெண்களை சைட் அடிப்பதில் தொடர்ந்து பேச்சு முடியும்.. ஒரு நாள் பரத் " நான் இன்னைக்கு பீர் டேஸ்ட் பண்ணேன் டா" என்று தயங்கியப்படியே சொல்ல அதனால் வரும் தீமைகளையும் அடிமையாகும் தன்மையும் விளக்கியவன் இனி அடிக்ககூடாது என்ற அறிவுரைக்கு பிறகே போனை வைத்தான்... அதில் இருந்து பரத்தும் அதை தொடவே இல்லை

தெளிந்த நீரோடையாய் போய்க் கொண்டிருந்த இவர்கள் வாழ்கையில் எதிர்பாரா துயர சம்பவம் நடக்க அந்த நாளும் வந்தது..
 
#7

நினைவலைகள் 5


அகிலன் அன்றுதான் தன் நான்கரை ஆண்டு படிப்பை முடித்து தேர்வு எழுதிவிட்டு வீட்டிற்கு வந்திருந்தான்..
இனி ரிசல்ட்டிற்கு பிறகே பயிற்சி தொடங்கும்..

மாலையில் அவன் அறையில் தூங்கிக் கொண்டிருக்க ரதிதா அவனை தொந்தரவு செய்யாமல் பல நாட்களுக்கு பிறகு வந்த பிள்ளைக்கு பிடித்த பால்கொலுக்கட்டை செய்துக் கொண்டிருந்தாள்‌‌..

நிலவனோ தன் மனைவியோடு பேசியவாறு தேங்காய் துருவி கொண்டிருந்தார்.. மனைவியும் வேலைக்கு செல்வதால் தன்னவளுக்கு அவ்வப்போது சமையலில் உதவி செய்வார்.. சிலர் அதை கேலி செய்தாலும்
" என் மனைவிக்கு நான் உதவி செய்கிறேன் இதில் உங்களுக்கு என்ன வந்தது.. பெண்கள் மட்டும் தான் இந்த வேலையை செய்யனும் என்று எதாவது சட்டம் இருக்கா" ( ஆம் நல்ல ஆரோக்கியமான உறவில் இது போலான சின்ன சின்ன உதவிகள் தான் கணவன் மனைவி உறவை பலப்படுத்தும்.. ஆனால் சில ஜென்மங்கள் இதை உணராது அதை இழிவாய் நினைத்து மூடர்களாய் இருக்கிறார்கள்) என்று கேட்பவரின் வாயை அடைத்து விடுவார்..‌

அப்போது உள்ளே நுழைந்த காவியா "அம்மா பசிக்குது" என்று கத்திக்கொண்டே உள்நுழைய
"ஹாய் பிரின்சஸ்" என்ற தன் அப்பாவின் அருகில் அமர்ந்து தோளில் சாய்ந்துக் கொண்டாள்

"அம்மா பசிக்குது மா .. மதியம் அந்த கேரட் ரைஸ் உவ்வே நல்லாவே இல்லை .. அதுனால அப்படியே வச்சுட்டேன்" என்றவளை முறைத்தவள்

"ஏண்டி .. எந்த காய்கறியும் சாப்பிடுறது இல்லை .. இப்படியே போனா உடம்பு என்னதுக்கு ஆகுறது.. சரி போய் ட்ரஸ் மாத்திட்டு வா .. அதுக்குள்ள பால்கொழுக்கட்டை ரெடி ஆகிடும் .. வந்து சாப்பிடு " என்க

"அய்யே.. அது வேணாம்..எனக்கு ஙாடுல்ஸ் செஞ்சு தாங்க.. இல்லாட்டி பானிப்பூரி வாங்கி தாங்க" என்றவுடன்

" காவியா.. பாஸ்ட் புட் சாப்பிட கூடாதுனு எத்தனை தடவை சொல்றது... பால் கொழுக்கட்டை வேணாணா தோசை செஞ்சு தரேன் . " என்று கண்டிப்பாய் கூறினாள்

"மா.. ஏன்மா .. இன்னும் பழங்காலத்துல சாப்பிட்டதெல்லாம் சாப்பிட சொல்ற.. என் ஃப்ரெண்ட் அனி வீட்டிலெல்லாம் தினமும் பாஸ்ட் புட் தான் அவுங்க பேமிலியே சாப்பிட்டுவாங்க தெரியுமா .. நீயும் தான் இருக்கியே.. " என்று தன் அம்மாவிடம் கத்தியவள் "அப்பா..நீங்களாது இந்த அம்மாக்கு சொல்லுங்க பா" என்று செல்லம் கொஞ்சினாள்... கண்டிப்பாக தன் நிலவன் இந்த விசயத்தில் சப்போர்ட் செய்ய மாட்டார் என்று ரதிதாவிற்கு தெரியும்‌.

சரியாக அந்த நேரத்தில் வந்த அகிலன் இவள் செய்யும் அளப்பரையை பார்த்துவிட்டு " ஏய் ஏண்டி இப்படி கத்திட்டு இருக்க.. காலேஜ் பசங்களாம் இப்போ இது ஒரு ட்ரெண்ட்டா வச்சுட்டு இருக்கிங்களா.. இட்லி தோசைலாம் சாப்பிட பிடிக்கலைனு சீன் போட்டுட்டு இப்படி பாஸ்ட் ஃபுட்டா தின்னு தான் இப்படி பெருத்து போறிங்க.. இதுல இரத்த சோகை வேற வந்துடுது .. பழம் சாப்பிட சொன்னா 'ஐ டோண்ட் லைக் ப்ரூட்ஸ்' என்று பீட்டர் வேற விடுறது.. " என்று பேசி முடித்தவனை ஆஆஆ என்று வாயை பிளந்தவாறு பார்த்தாள்

அதை பார்த்தவன் அவன் தலையில் கொட்டி " வாயை மூடு .. இல்லாட்டி அம்மா பாவைக்காய் ஜுஸை ஊத்தி விட்டுறுவாங்க " என்கவும்

உடனே வாயை மூடியவள் " அம்மா.. இவன் உண்மையாவே டாக்டர்க்கு தான் படிச்சானா .. இல்லை பட்டிமன்ற பேச்சாளரா ஆகிட்டானா .. இன்னா பேச்சு.. ப்பா.. நானே அப்படியே சாக் ஆகிட்டேன்"

"இருந்தாலும் நீ தவுட்டுக்கு வாங்குன பிள்ளைனு அடிக்கடி நிரூப்பிக்கிறிங்க அகிலா.. " என்று வேணும் என்றே வெறுப்பேத்த

"ஏய்.. பரங்கிக்காய் .. உன்னை தான்டி ஹாஸ்பிடலில் மாத்தி தூக்கிட்டு வந்துருப்பாங்க.. ஏன்னா உன்னை தவுட்டுக்கு கூட வாங்கிருக்க மாட்டாங்க"

" ஏய் .. தடியா .. நான் தான்டா அம்மா அப்பா மாதிரி அமைதியா அறிவாளியா அழகா இருக்கேன்‌‌.. உன்னை மாதிரி மண்டு வாயாடுற பிள்ளைலாம் இல்லை" என்றதும் சத்தமாக சிரிக்க ஆரம்பித்துவிட்டான்..

அதை கண்டு பெற்றவர்களுக்கு சிரிப்பு வந்தாலும் ...சிரித்தால் இவள் வேற திட்டுவாளே என்று கஷ்டப்பட்டு அடக்கி கொண்டிருக்க அதில் கோபம் அடைந்தவள் அகிலனை அடிக்க துரத்தினாள்.. அவனும் அவள் கைக்கு அகப்படாமல் ஓடினான்

இதை கண்ட ரதிதா "சின்ன பிள்ளை மாதிரி எப்ப பார்த்தாலும் சண்டை தான் .. இவுங்களை வச்சுட்டு " என்று வசைப்பாட

தன்னவளை பின்னால் இருந்த அணைத்தவனிடம் இருந்து திமிறிய ரதிதா " ஏன்க.. இன்னும் வாலிபம் ஊசலாடுதோ .. நகருங்க மாம்ஸ்.. வளர்ந்த பிள்ளைங்களை வச்சுட்டு இது தேவையா .. வந்துர போறாங்க பசங்க" என்று அவனிடமிருந்து விலக

அவள்‌ கையைப்பற்றியவன் " ரதிமா .. என் பொண்டாட்டியோட ரொமேன்ஸ் பண்ணா யாரு கேப்பா .. என் பசங்க பார்த்தாலும் அவுங்க இணையோடும் இப்படி இருக்கனும் என்று தான் நினைப்பாங்க.. முடி நரைத்து வெள்ளை ஆகி குடுகுடு தாத்தா ஆனாலும் உன்னோட இப்படி தான் டி இருப்பேன்" என்றவனின் காதலில் எப்போதும் போல் மயங்கினாள்

அப்போது " அம்மா... இவன் என்னை அடிக்கிறான்.. ஆஆஆ" என்று காவியா கத்துவது கேட்டதும் ரதிதா அவர்கள் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் அறைக்குள் செல்ல போக நிலவனோ அவளை தன் அறைக்குள் இழுத்து வந்து விட்டான்

"மாம்ஸ் .. விடுங்க .. இரண்டும்‌ சண்டை போட்டுட்டு இருக்குங்க .. போய் பார்க்குறேன்"

"ரதிமா... அண்ணன் தங்கச்சி சண்டைக்குள்ள நம்ம போக கூடாது.. எவ்வளவு சண்டை போட்டாலும் அவுங்க பாசம் அதிகம் .. சோ விட்டுக்கொடுத்துக்க மாட்டாங்க .. நான்லாம் ஒத்த பிள்ளையா பிறந்ததலா இது எல்லாத்தையும் மிஸ் பண்ணிட்டேனேனு நிறைய பீல் பண்ணிருக்கேன்.. இப்போ அவுங்க சண்டைக்குள்ள நீ போனாலும் அவுங்க இரண்டு பேரும் ஒன்னாகிட்டு உனக்கு தான் பல்ப் கொடுக்குங்க ." என்றதும்

"ஆமா மாம்ஸ்.. அதும் உங்க பிள்ளைகளுக்கு உங்களை போல் கொஞ்சம் கொழுப்பு வேற அதிகம்" என்று கிண்டல் செய்தவள்
தன்னவனின் தோளில் சாய்ந்து ஆறுதலாய் அணைத்துக் கொண்டாள்

அங்கோ இருவரும் தீவிரமான சண்டையில் இருக்க அகிலன் போன் ஒலித்துக் கொண்டே இருந்தது.. அதில் யார் என்று பார்க்க பரத் பெயரை பார்த்ததும் அவன் மொபைலை கைப்பற்றியவள்
" பரத் மாமா எப்படி இருக்கிங்க.." என்று கேட்க
ஒரு நிமிடம் சந்தேகத்தோடு மொபைலில் பெயரை பார்த்த பரத் அகிலனுக்கு தான் கால் செய்திருக்கிறோம் என்று உறுதிப்படுத்திய பின்
" ஹலோ .. அகிலன் இருக்கானா"

"ஏன் பரத் மாமா என்னிடம் பேச மாட்டிங்களா" என்று சிரிப்பை அடக்கியவாறு கேட்க

யாரோ நம்மளை கலாய்க்குறாங்களோ .. குரல் காவியா மாதிரி இருக்கு .. ஆனா இவ இப்படி பேச மாட்டாளே என்று பரத் ஆழ்ந்த சிந்தனையில் இருக்க

அகிலனின் குரலும் மெலிதாய் கேட்க அடப்பாவிகளா ரெண்டு பேரும் சேர்ந்து கலாய்க்கிறிங்களா இருடா உனக்கு என்று நினைத்தவன்..

"ஹலோ .. என் டார்லிங் தானே. செல்லோ...உன்னிடம் பேசாமல் இருப்பேனா .. உம்மாமா" என்க

"அய்யோ .. டேய் பரத் .. போதும் .. கருமம் .. கருமம்.. இவனெல்லாம்" என்று புலம்பியவள் சிறிது வெட்கம் வந்தாலும் அதை காட்டிக் கொள்ளாமல் அவ்விடம் விட்டு அகன்றாள்

சிரித்துக் கொண்டே .." டேய் மச்சான் .. என்னடா .. என் தங்கச்சியை கலாய்கிற மாதிரி உன் ஆசையை நிறைவேத்துக்கிறியா"

"ஹி ஹி" என்று அசடு வழிந்தவனை

"டேய்.. பரத்.. இன்னும் காவியா ஓகே சொல்லல .. சோ கொஞ்சம் அடக்கி வாசிக்கவும்" என்றான்

அதற்கு மனதினுள் என் செல்ல குட்டி சொல்லனா என்ன .. அவ பேச்சுலே எனக்கு கிரீன் சிக்னல் கொடுத்துட்டாலே என்று நினைத்தவன்

"அவள் சொல்லனா என்ன நான்‌ தான் என் மச்சானை கைக்குள்ள போட்டேனே .. சோ நீ அவளை சம்மதிக்க வச்சுடுவ"

"டேய் இந்த கனவெல்லாம் காணாத .. இதில் நீயாச்சு அவளாச்சு .. ரெண்டு பேருக்கும் சம்மதம் என்றால் மட்டுமே கல்யாணம்" என்று வசனம் பேசிய அகிலனை

"டேய் தெய்வமே தெரியாம கேட்டுட்டேன் நானே உன் தொங்கச்சிய கரெக்ட் பண்ணிக்கிறேன்.. மீ பாவம்.. உன் வசனத்தை நிப்பாட்டு" என்று வாரினான் பரத்
. அதை கேட்டு அகிலன் சிரித்தான்

"சரி நாளைக்கு எத்தனை மணிக்கு ஹாஸ்பிடல் போனும் " என்று பரத் கேட்க

"ஒரு 10 மணிக்கு வரேன் டா.. வீட்டில் சொல்ல வேணாம் .. எப்படி ரியாக்ட் பண்ணுவாங்கனு தெரியலை" என்ற அகிலனிடம்

"ஆமா டா நானும் சொல்ல வேணாம் தான் நினைச்சேன்" என்று போனை வைத்தான்

நாளை இவர்களுக்கு காலம் வைத்திருக்கும் கண்டம் தெரியாமல் சந்தோசமாய் அந்த நாளை கழித்தனர் 
#8

நினைவலைகள் 6

"காவியா சீக்கிரம் ‌எழுந்திரிடி .. காலேஜ்க்கு லேட் ஆச்சு " என்ற அம்மாவின் குரலே அகிலனின் தூக்கத்தை கலைத்தது

சிரித்துக்கொண்டே எழுந்தவன்

"குட் மார்னிங் மா .. நீங்க போய் கிளம்புங்க.. நான் எழுப்புறேன் இவளை"

"குட் மார்னிங் கண்ணா.. இவள் வர வர அநியாயம் பண்றா டா..என் தொண்ட தண்ணிய வாங்குறா " என்று திட்டிக்கொண்டே ரதிதா சமையல் வேலையை தொடர்ந்தாள்..

"ஏய் எழுந்திரிடி" என்ற அவள் போர்வையை விலக்க

"போடா தடியா " என்று மீண்டும் அவனிடம் இருந்து பிடிங்கி போர்த்திக்கொண்டு தூங்க அவன் மொபைலில் இருந்து கால் செய்தான் ..போன் என்றால் எழுவாள் என்ற நம்பிக்கையில் .. ஆனால் ரிங் டோன் கேட்டதும்
" டேய் அகிலா .. நீ தான் கால் பண்றனு தெரியும்.. உனக்கு நேத்தே தனியா ரிங் டோன் வச்சுட்டேன்" என்றவள் மீண்டும் தூக்கத்தை தொடர்ந்தாள் ( என்ன ஒரு கேடித்தனம்)

அப்போது நிலவன் வர " அப்பா .. இந்த கும்பகர்ணிய எப்படிப்பா எழுப்புரிங்க .."

"என் பிரின்சஸ் நான் சொன்னா உடனே எழுந்துருவா.. பாரு " என்றவர்

"காவிமா.. காலேஜ்க்கு லேட் ஆச்சு ..எழுந்திரிடா"

ஆனால் அவளிடம் சிறு அசைவு கூட இல்லை .. அதை கண்டு அம்மாவும் பிள்ளையும் சிரிக்க..

"பாவம் .. அவ டையர்டா இருக்கா போல.. இன்னைக்கு லீவ் போட்டுட்டு தூங்கட்டுமே" என்றவரை ரதிதா முறைக்க அடுத்த அவளிடம் எப்படி வாங்கிகட்ட போகிறோம் என்பதை உணர்ந்தவர்

"அகில் எனக்கு லேட் ஆச்சு நான் போய் கிளம்புறேன் பா.. நீயாச்சு உன் தங்கச்சியாச்சு" என்று நல்லபிள்ளையாய் கூறினார்

அதை கண்டு அகிலன் சிரித்தப்படியே "அப்பா எதோ டையலாக்லாம் விட்டுட்டு இப்போ அம்மா முறைச்சதும் ஜகா வாங்குறிங்களே .. அம்மாட்ட அம்புட்டு பயமா "

" ஹி ஹி .. பயமெல்லாம் இல்லை பாசம் டா.. நீயும் இதெல்லாம் கத்துக்க .. அப்போ தான் உனக்குனு பொண்டாட்டி வரும்போது அடிவாங்காம எஸ்கேப் ஆகலாம்.. " என்று அகிலன் சொல்ல

"மாம்ஸ்.. சின்ன பிள்ளையிடம் பேசுற பேச்சா இது" என்றாள் ரதிதா

"ரதிமா உன் பிள்ளை சின்ன பிள்ளையா.. அவன் பின்னாடி எத்தனை பொண்ணுங்க சுத்துது தெரியுமா " என்றவுடன்

காவியா அடித்து பிடித்து எழுந்தவள்
" டேய் அண்ணா .. உன் பின்னாடி பொண்ணுங்க சுத்துதா .. சான்ஸே இல்லையேடா .. நீயெல்லாம் அதுக்கு சரிப்பட்டு வர மாட்டியே" என்று கிண்டல் செய்தாள்

அதில் கடுப்புற்றவன் " ஏய்.. பரங்கிக்கா.. " என்று அவளை அடிக்க வர அதை தடுத்த நிலவன்

" எனக்கும் இவன் அந்த காதல் கத்தரிக்கலாம் சரிபட்டு வரமாட்டானு தான் தோனுது " என்க

"அப்பா .. " என்று அகிலன் கத்த

"அப்பாவும் பொண்ணும் சேர்ந்து என் பிள்ளையை கிண்டல் பண்றிங்களா.. பிச்சுடுவேன் பிச்சு.. என் பையனுக்கு என்ன குறைச்சல் .. பொண்ணுங்க வரிசையில் நிப்பாங்க என் பையனை கட்டிக்க" என்றாள் ரதிதா .. கேட்டுக்கோ என்பதாய் பார்த்த அகிலனை கண்டுக்கொள்ளாது

" ஆமா .. எந்த வரிசையில.. ரேஷன் கடை வரிசையிலா" என்று கிண்டல் செய்த காவியா அவன் அடிப்பதற்குள் அவ்விடம் விட்டு ஓட அவளை விரட்டிக்கொண்டு அகிலன் ஓடினான்

ஒருவழியாய் அடிபிடி சண்டைக்கு மத்தியில் அனைவரும் கிளம்ப.. அகிலனை தேடி வந்த காவியா
" அகில் ..‌" என்று கூப்பிட
" என்னடி .. ஏதாவது வேலை ஆகனுமா " என்று கேட்டான்

கண்டுபிடிச்சுட்டானே கடப்பாமண்டையன் என்று மனதினுள் நினைத்தவள் வெளியில் சிரித்துக் கொண்டே ..
" அது வந்து .. என்னை காலேஜில் ட்ராப் பண்றியா .. லேட் ஆகிட்டு .. ப்ளீஸ்" என்றாள்

மணியை பார்த்தவன்.." யேய்.. என்னாலலாம் முடியாது.. உன் ப்ரண்ட்ஸ்லாம் என்னை சைட் வேற அடிப்பாங்க.. நான் வரமாட்டேன் பா" என்று வசனம் பேசியவனை முறைத்தவள்

"என் ப்ரண்ட்ஸ்கலாம் நல்ல டேஸ்ட் இருக்கு" என்று பழிப்பு காட்ட

"என்னடி என்னை கலாய்க்கிறியா ... நான் விடமாட்டேன் போடி" என்று அவளிடம் வம்பு பண்ணிக் கொண்டிருந்தாலும் அவளை விடுவதற்கு தயாராகி கொண்டிருந்தான்

"ப்ளீஸ் டா .. என் செல்ல அண்ணால.." என்றவளை "சரி சரி வாவா ஓவரா ஐஸ் வைக்காத" என்றவன் வண்டி எடுத்து தங்கையோடு கிளம்பினான்

சிறிது தூரம் இருவரும் அமைதியாக வர " சரி சொல்லுடி .. என்ன விசயம்" என்ற அகிலனை ஆச்சரியமாய் பார்த்தவள்

" எப்படிடா அகில்.. கண்டுப்பிடிச்ச"என்றாள்

"ஆமா இதுக்கு டாக்டரேட் பட்டமா வேணும்.. மொச புடிக்கிற நாய மூஞ்ச பார்த்தா தெரியாது .. " என்று கிண்டல் செய்ய

"அது வந்து அகில்.. என்னனா" தயங்கியவளை

"அதான் வந்துட்டியே.. சீக்கிரம் சொல்லு .." என்றான்

"எனக்கு ஒருத்தரை பிடிச்சுருக்கு" என்றதும் சடன்ப்ரேக் போட்டு நிறுத்தியவன்

"கம் அகைன்" என்றவன் மனதில் தன் நண்பனின் காதல் தோல்வி அடைந்து விடுமோ என்ற கேள்வி எழ அது ஆற்றாமையாய் அவன் குரலில் தெரிந்தது..


அந்த குரலில் சிறிது கலங்கமுற்றவளாய் காவியா பார்க்க .. தன் தங்கையின் மனவோட்டத்தை உணர்ந்தவன் இப்போது அவளின் மனதே முதன்மையாய் இருக்க

"இல்லைடா .. காவிமா .. சொல்லு .. யாரா இருந்தாலும் நல்லவனாய் உனக்கு சரியானவனாய் இருந்தால் நானே அம்மா அப்பாவிடம் பேசுறேன் " என்றான்

"ஐய்.. அண்ணாணா அண்ணாதான்" என்று அவனை கட்டிக்கொண்டவள்
"உனக்கு அவுங்களை‌ ரொம்ப பிடிக்கும் .. அம்மா அப்பாக்கு கூட தெரியும் .." என்று பீடிகை போட்டவளை

" எங்களுக்கு தெரியுமா .. யாருடி அது.. சீக்கிரம் சொல்லேன்" என்றான்

"ஹி ஹி.. உன் நண்பன் என் அத்த மகன் பரத் தான் " என்றவள் வெட்கத்தில் சிரித்தாள்

இதை கேட்டதும் சந்தோசத்தில் மகிழ்ந்தவன் " ஹே .. சூப்பர் டி காவி.. நல்ல பையன் தான் .. ஆனா என் நண்பனை நினைக்கும் போது கொஞ்சம் கஷ்டமாக தான் இருக்கு .. உன்னிடம் மாட்டிட்டு " என்க

"டேய் அண்ணா" என்று சினுங்க தோளோடு அணைத்தவன் "சும்மா சொன்னேன் டி .. என்னோடு தங்கச்சி மாதிரி ஒருத்தி கிடைக்கனுமே" உண்மையான பெருமையோடு கூறியவன் " ஆமா‌ இது பரத்க்கு தெரியுமா" என்றான்

"இல்லை அகில்.. உன்னிடம் சொல்லிட்டு அப்பறம் சொல்லலாம்னு " என்றவளை பாசத்தோடு பார்த்தவன்

"சரிடா .. நீ அவனிடமும் நல்லா யோசிட்டு சொல்லு .. அவனுக்கும் ஓகே என்றால் இருவரும் மனமார விரும்புறிங்கனா நான் அம்மா அப்பாட்ட பேசுறேன்" என்றவனை சந்தோசத்த மிகுதியால் கண்ணத்தை கிள்ளி முத்தமிட்டாள்

பின்பு காவியாவை கல்லூரியில் ட்ராப் செய்தவன் பரத்திற்கு கால் செய்து தான் கிளம்பு விட்டேன் என்றும் மருத்துவமனை வருமாறும் கூறினான்

உள்ளுக்குள் சந்தோசமாக இருந்தாலும் தன் நண்பனிடம் இப்போது எதும் சொல்ல கூடாது என்றும் காவியாவே காதலை சொல்லி இருவரும் தங்கள் மனதை பரிமாறிக் கொள்ள வேண்டும் என்று நினைத்தான்

இவ்வாறு யோசித்தவாறே மருத்துவமனையை அடைந்தவன் பரத்தை பார்த்ததும் அவனுடன் இணைந்து தங்கள் வேலையை முடித்து கையெழுத்திட்டு அந்த கோப்பையை அங்குள்ள மருத்துவரிடம் ஒப்படைக்க

அவரோ " ரொம்ப சந்தோசம் .‌ இது மாதிரி இளைஞர்கள் முன்வந்து இது மாதிரி விசயங்கள் பண்ணும் போது சந்தோசமா இருக்கு பா.. மற்றவர்களுக்கும் இது ஒரு ஊக்கமாய் இருக்கும் " என்று அவர்களை பாராட்ட அதில் மனநிறைவாய் உணர்ந்தவர்கள் அவர்களிடம் விடைப்பெற்று கிளம்பினர்

வெளியே வந்தவர்கள் " மச்சான் நான் ஆபிஸ் போனும் டா .. கிளம்புறேன்" என்று பரத் கூற

"சரிடா .. சாய்ந்திரம் வீட்டிற்கு வா .. சில பல விசயங்கள் இருக்கு.. " என்று மர்மமாய் சிரித்தான்

"டேய் உன் சிரிப்பே சரி இல்லை .. ஈவ்னிங் வந்து உன்னை பார்த்துக்கிறேன்.. இன்னைக்கும் ஹெல்மெட் எடுத்துட்டு வரலையா .. ஏன்டா இப்படி பண்ற..பார்த்து போடா " என்றவன் கிளம்பினான்

சந்தோசத்தில் தலைகவசம் இன்றி பைக்கில் பயணம் செய்த அகிலன்.. ஒரு சந்தில் இருந்து வேகமாக வந்த கார் மோத.. நிலைத்தடுமாறி கீழே விழுந்தான்..


 
#9
நினைவலைகள் 7


அகிலன் நிலைத்தடுமாறி கீழே விழுந்தவன் இரத்தவெள்ளத்தில் மிதத்தான்.. அவனை சுற்றி கூட்டம் கூட அதில் சிலர் இவனை கண்டு பரிதாப்பட்டுக் கொண்டிருக்க சிலர் தப்பிக்க இருந்த அந்த காரின் உரியவர்களோடு சண்டையிட்டு கொண்டிருந்தனர்

108 ஆம்புலன்ஸ் வர அதில் ஏற்றினால் அரசுமருத்துவமனைக்கு தான் அழைத்து செல்வர் .. என்பதை யோசித்து சிலர் நிற்க
( 108 ஆம்புலன்ஸில் செல்பவர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அனுமதி இல்லை..அதும் இல்லாமல் அடிப்பட்டவரின் நிலையை கருத்தில் கொள்ளாமல் அருகில் உள்ள சிறு அரசு மருத்துவமனையில் முதலுதவி செய்து அவர்கள் அம்மாவட்டத்தில் உள்ள பெரிய அரசு மருத்துவமனைக்கு ரெஃபரல் ( referal) எழுதிக் கொடுத்தால் மட்டுமே அவர்கள் ஏற்றுக்கொள்வர்.. இதனால் கால விரயம் ஏற்படுவது மட்டும் அல்லாமல் அச்சிறு அரசு மருத்துவமனையில் மருத்துவர்களும் இல்லாததால் முதலுதவியும் சரியானப்படி கிடைப்பதில்லை)

அக்கூட்டத்தில் ஒருவர் இவனை அடியாளம் கண்டுக்கொண்டார்.. அவர் நிலவனோடு வேலை செய்தவர்

உடனை அவனை அருகில் உள்ள பெரிய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.. நிலவனுக்கு தெரிவிக்கப்பட்டது..

அவனை‌ அவசரசிகிச்சை பிரிவில் அனுமதித்ததும் அங்கிருந்த மருத்துவர் பரிசோதித்தவர் நாடித்துடிப்பு குறைவாக இருப்பதை கண்டரிந்தவர் உடனடியாக செவிலியர்களை துரிதப்படித்தினார்.. ஆக்ஸிஜன் அளிக்கப்பட்டது .. அதிலும் அகிலனின் ஆக்ஸிஜன் அளவு கூடாததால் வாய் வழியே குழாய் பொருத்தி செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டது.. அப்போது அங்கிருந்த ஒருவர் " சார்‌ சாலை‌விபத்து ஏஆர் எண்ட்ரி‌ போடாமல் ட்ரீட்மென்ட் பார்த்தா போலீஸ் பிரச்சினை ஆகிடும் ஹாஸ்பிடலுக்கு" என்க அதில் வெகுண்டெழுந்தவர்‌ "என்ன பிரச்சினை வந்தாலும்‌ நான்‌ பார்த்துக்கிறேன் ..இப்போ இந்த பையனை காப்பத்தனும் .. இதுனால என் வேலையே போனாலும் பிரச்சினை இல்லை .. சரியா இப்போ தொந்தரவு பண்ணாம நீங்க போங்க " என்றவர் ஒருவழியாய் அவன் நாடித்துடிப்பை சீராக்கினார்

அடித்துப்பிடித்து நிலவனும் ரதிதாவும் வர பின்பு பரத் காவியா அனைவரும் மருத்துவமனையை அடைந்தனர்

அவர்கள் சிறு விபத்தாய் இருக்கும் என்றெண்ணி வர.. அகிலனை பரிசோதித்த மருத்துவர்கள் ... அவனுக்கு தலையில் அடிப்பட்டத்தில் மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்டிருப்பதால் கோமா நிலையில் இருப்பதாகவும்.. செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டிருப்பதாகவும் இன்னும் 24 மணி நேரம் கழித்தே எதுவும் சொல்ல முடியும் என்றும் மருத்துவர் கூறினார்

இதை கேட்டதும் நிலவன் நிலைக்குலைத்து அமர .. ரதிதா கதறி அழ ஆரம்பித்துவிட்டாள்

பரத்தும் கண்கலங்கி நிற்க.. காவியா‌ இறுகி போய் அமர்ந்திருந்தாள்..

இப்படியே பலமணி நேரங்கள் அவரவர் நிலையில் அமர்ந்திருக்க விசயம் தெரிந்து சொந்தங்கள் நட்புகள் என வர ஆரம்பித்தனர்.. ஆனால் எதையும் கண்டுக் கொள்ளும் நிலையில் யாரும் இல்லை

அப்போது மருத்தவர் உடனடியே பணம் கட்ட வேண்டும் எனவும் அவருக்கு இரத்த அழுத்தத்தின் அளவு குறைந்துள்ளது எனவும் அதற்கு மருந்துகள் அளிக்கப்பட்டளது எனவும் தெரிவித்தார்

இப்படியாய் நிமிடத்திற்கு நிமிடம் பரப்பரப்பும் தவிப்பும் கூட கொண்டே இருந்தது..

அகிலனை பார்க்க அனுமதிக்க உள்ளே சென்ற ரதிதாவும் நிலவனும் தன் மகன் இருக்கும் நிலையை கண்டு கலங்கினர்..

காலையில் எவ்வளவு சந்தோசத்துடனும் துள்ளளுடனும் இருந்தவன் இப்போது நினைவு‌ இல்லாமல் எந்த வித உணர்ச்சியுமின்றி ட்யூப்கள் .. மானிட்டர் என்று அங்கு அங்கு உடலில் இருக்க செயற்கை சுவாசத்தில் அவன் சுவாசம்‌ இருக்க பார்க்கவே பயங்கரமாய்‌ இருந்த தன் பையனின் நிலையை‌ பார்த்ததும் கதறினார் ரதிதா.. நிலவனும் தான் ஒரு ஆண் என்பதையும் மறந்து அழுதார்..

இப்படியாய் பல பிராத்தனைகள் தவிப்பு அழுகைக்கு மத்தியில்
இரண்டு நாள் கடந்த நிலையில் மருத்துவர்கள் கைவிரித்தனர்

அகிலனின் நிலை மிகவும் மோசமாகி விட்டதாகவும் அவனுக்கு மூளைச்சாவு ஏற்பட்டு விட்டதாகவும் இனி உயிர் பிழைப்பது கடினம் என்று மருத்துவர்கள் கூற அதிர்ச்சியில் ரதிதா மயங்கி‌ விழுந்தாள்

நிலவனும் கதர அவர்கள் அழுவதை பார்த்த அனைவருக்குமே கண்கலங்கியது ...

மேலும் மருத்துவர்கள் நீங்கள் விரும்பினால் உறுப்பு தானம் செய்யலாம் என்று கூறினர் ..

பரத்தும் விபத்து நடந்த தினத்தன்று காலை வேளையில் தான் தானும் அகிலனும் சென்று உறுப்பு தானத்திற்கு எழுதி வைத்தி விட்டு வந்ததை தெரிவித்தான்

சிறிது யோசித்த நிலவன் ரதிதாவை தேடிச் சென்றார்

ரதிதா அப்போது தான் மயக்கம் தெளிந்து அழுதுக் கொண்டிருந்தாள் .. தான் எடுத்திருக்கும் முடிவை கேட்டாள் கண்டிப்பாக ஒத்துக்கொள்ள மாட்டாள் என்று தெரிந்தாலும் அவளின் சம்மதமும் தாய் என்ற முறையில் வேண்டுமே...

பரத்தும் அந்த இடம் வந்து சேர்ந்தான்.. காவியா இன்னும் இறுகி போய் அமர்ந்திருந்தாள்

மெதுவாக தான் அகிலனின் உடல் உறுப்புகளை தானம் செய்யலாம் என்று இருப்பதை கூறவும் ரதிதா அழுதவள் " முடியாது .. என் பையனை உயிரோடு இருக்கும் போதே கூறுப்போட்டு கொல்ல பார்க்கிறிங்க.. நான் இதுக்கு சம்மதிக்க மாட்டேன்" என்று கத்த

நிலவனோ கண்கலங்க " ரதிமா எனக்கும் அவன் பையன் தான்.. எனக்கும் இதை பண்ணுவதற்கு கஷ்டமா தான் இருக்கு .. இருந்தாலும் நம்‌ பையன் இல்லாட்டியும் அவனோட உறுப்புகளாது வாழட்டுமே என்று தான் நினைக்கிறேன்"

"போன வாரம் சண்டிகர்ல 68 மணி நேரமே ஆன குழந்தை இறக்கும் தருவாயில அதோட சிறுநீரகத்தை 21 வயது பொண்ணுக்கு‌ பொறுத்தி அந்த குழந்தை அந்த பொண்ணுக்கு ஒரு வாழ்வு‌ கொடுத்திருக்கு"

"அது மாதிரி நம்‌ அகிலனும் பல பேருக்கு‌ வாழ்வு கொடுக்க முடியும் .. தயவுசெய்து இதுக்கு ஒத்துக்கோ ரதிமா .. ப்ளீஸ்.. நம்‌ பையன் உடல் மண்ணோட மண்ணாகி யாருக்குமே உபயோகம்‌ இல்லாமல் போக கூடாதுனு நினைக்கிறேன் ரதிமா " என்றவர் அழுதுக்கொண்டே அவ்விடம் விட்டு அகன்றார்

ஆனால் பத்து‌ மாதம் சுமந்து பெற்ற தன் மகன் மூளைச்சாவு அடைந்திருந்தாலும் இனி உயிர் பிழைக்கவே மாட்டான் என்று தெரிந்தாலும் இப்போது மூளை மட்டுமே இயக்கத்தை நிறுத்தியிருக்கிறது .. ஆனால் உடல் உறுப்புகளை எடுக்கும் போது நானே அனுமதி தந்து என் மகனை அனுஅனுவாய் உயிர் எடுப்பது போல் ஆகுமே.. என்ன செய்வது .. ஒரு விதத்தில் பல பேருக்கு உயிர்ப்பிச்சை தருவது போல் இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள மனது முரண்டுபிடித்தது

பின்பு‌ எப்படியோ பேசி ரதிதாவை சம்மதிக்க வைக்க உடல் தானம் செய்வதற்கான வழிமுறைகள் தொடங்கியது..

பல மருத்துவர்கள் அவனை பரிசோதித்து அவனுக்கு மூளைச்சாவு ஏற்பட்டதை உறுதி செய்தனர்.. பின்பு எந்த எந்த மருத்துவமனைக்கு உறுப்புகள் தேவைப்படுகிறது.. உறுப்புகள் தேவைப்படும் நோயாளிகளின் இரத்தம் சோதனைக்குள்ளாக்கப்பட்டு அகிலனோடு இரத்ததோடு ஒப்பிடப்பட்டது..

பின்பு அதன்படி அகிலனின் உடல் உறுப்புகள் அறுவைசிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டது.. கண்கள், இருதய வால்வுகள்,சிறுநீரகம் , நுரையீரல், கல்லீரல் அகற்றப்பட்டு உரிய மருத்துவமனைக்கு அனுப்பட்டு உரிய நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டது .. எல்லாம் ஒரு மூன்று மணி நேரத்தில் முடிந்தது..

அகிலனின் உடல் பெற்றவர்களின் ஒப்படைக்க கதறி அழுத ரதிதாவை ஆதரவாய் நிலவன் அணைக்க கட்டிக்கொண்டு அழுதாள்..

பரத் காவியா வெறித்தப்படி பார்த்துக் கொண்டிருக்க அதில் பயந்தவன்
" காவிமா " என்க அதற்கும் எந்த வித உணர்ச்சியுமின்றி இருந்தவளை கண்டு பயந்து விட்டான்..

"காவிமா ப்ளீஸ் அழுதுருடி .. காவி " என்று கெஞ்சி பார்த்தான்.. அவளை‌‌ அடித்து கூட‌ பார்த்தான் .. எதற்கும் அசைந்தாள் இல்லை.‌ அப்போது தான் அகிலனை மருத்துவமனையில் அனுமதிததில் இருந்து அவள் இப்படியே தான் இருந்தாள் என்று நியாபகம் வந்தது.. எப்படி கவனியாமல் விட்டோம் என்று தன்னையே நொந்துக் கொண்டவன் செய்வதறியாது திணறினான்

 
#10
நினைவலைகள் 8

அகிலனின் இறுதி சடங்குகள் முடிந்து அவர்கள் வீட்டில் இருந்தால் அகிலனின் நினைவில் இன்னும் வருந்துவர் என்பதால் தங்கள் வீட்டிற்கு அழைத்து வந்தான் பரத்

காவியா தனக்குள் இறுகி போயிருந்தாள்.. யாருடனும் பேசுவது இல்லை .. சாப்பிடுவது இல்லை.. தன் அண்ணனின் இழப்பு அவளை ரொம்பவே பாதித்து இருந்தது..

பரத் எவ்வளவோ பேசி பார்த்தாலும் பயன் என்னவோ பூஜ்ஜியமே..

ரதிதாவும் அதே மனநிலையில் இருக்க ஏதோ நிலவனிம் இருந்து விலகி சென்றாள் .. அவளிடம் நெருங்கினால் இன்னும் கோபப்பட ஆரம்பித்தாள்

இவர்களின் நிலைக்கண்டு இருவரையும் மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர்

மனநல மருத்தவரின் ஆலோசனையாலும் நிலவனின் ஆறுதலாலும் ரதிதாவின் வயது முதிர்ச்சியால் அவள் சிறிது சிறிதாக வெளியே வந்தாள்.. ஆனால் நிலவன் தான் தன் மகனை உடல் தானம் செய்கிறேன் என்று கொன்று விட்டதாய் ரதிதாவின் மனதில் சஞ்சலம் இருக்க அது அவளுக்கு தவறாய் தெரிந்தாலும் அதை மறுக்க மனது முரண்டுபிடித்தது..

காவியாவை பரிசோதித்த மருத்துவர் அவளிடம் பேசியதில் அண்ணனின் இறப்பால் மனதளவில் பாதிக்கப் பட்டிருப்பதாகவும் அவர் இறந்ததை இன்னும் ஏற்றுக்கொள்ள முடியாமல் மனதளவில் போராடிக் கொண்டிருக்கிறாள் எனவும் கவனமாக பார்த்துக் கொள்ளுமாறும் கூறினார்..

காவியாவை பரத் ஒரு குழந்தை போல பார்த்துக் கொண்டான்.. ..

திடீரென தூக்கத்தில் எழுபவள் "அகில்
நான் உன்னோட சண்டையே போட மாட்டேன் டா.. ப்ளீஸ் வந்துடுடா" என்று அழுவாள்

பரத்தை பிடித்துக்கொண்டு
" அகில் அண்ணா செத்து போகலை உயிரோடு தான் இருக்கான் .. அப்படிதானே"

"ஆமா.. அவன் நம்மோடு தான் இருக்கான் " என்று பரத் கூறினால்

"இல்லை நீ பொய் சொல்ற" என்று அவனை அடித்துக்கொண்டே அவன் மேலே சாய்ந்து ஆறுதல் தேடிவாள்

அவளின் கோபம் மகிழ்ச்சி துக்கம் எல்லாம் அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும்

அதை எல்லாம் பரத்தினால் மட்டுமே சமாளிக்க முடியும் என்று சொல்லும் வகையில் கவனித்து கொண்டான்.. அவள் என் காதலி அவளை சரிப்படுத்த வேண்டியது என் கடமை அதுவே அவனின் பிரதானமாய் இருந்தது..

அவளை வேறு எவரும் இகழ்வாய் பேசிடா வண்ணம் பார்த்துக் கொண்டான் .. நிலவனும் காவியாவை பார்த்துக் கொள்ள பரத் இருப்பதால் தன்னவளையும் பார்த்துக் கொண்டிருந்தான்.. உள்ளுக்குள் நிலவனும் உடைந்து போயிருந்தார் .. ஆண்கள் வெளியில் காட்டிக்கொள்ள மாட்டார்களே .. அதனால் மனதினுள் புதைத்துக் கொண்டிருந்தார்

காவியா இப்போது மனநல சிகிச்சையால் எல்லாருடனும் எப்போதும் போல் பேசிக் கொண்டிருக்கிறாள் ஆனால் முன்பு இருந்தது போல் துடிக்குதனமான பேச்சும் செயலும் காணாமல் போயிருக்கிறது .. அவளை முன்பு போல் மாற்றும் முயற்சியில் பரத் இப்போதும் போராடிக் கொண்டிருக்கிறான்

இதை எல்லாம் யோசித்து முடித்த பரத் தன் மடிமீது தலை வைத்து அழுதுக்கொண்டே உறங்கி போன காவியாவை கண்டு சிரித்தவன்
அவள் தலையை வாஞ்சையாய் தடவியவன் அவள் தூக்கம் கலையா வண்ணம் அவளை தலையணையில் படுக்க வைத்து திரும்பியவன் கண்ணில் காவியாவின் டைரி பட்டது

மற்றவரின் டைரியை படிப்பது தவறு என்று தெரிந்தாலும் உற்றவளின் டைரியை படிப்பதில் தவறில்லை .. என்று அவன் மனது சொல்ல அதை எடுத்தவன் படிக்க ஆரம்பித்தது அகிலனின் இறந்த நாளின் குறிப்பேட்டை

அதைப் படித்ததும் மனதுக்குள் செம சந்தோசம் ஆம் அன்றுதானே தன் அண்ணனிடம் காவியா தன் காதலை பகிர்ந்துக் கொண்டாள்

அவள் அருகில் சென்றவன் அவள் கைப்பற்றி அவள் தூக்கத்தை கெடுக்காவண்ணம் " காவிமா .. செல்லக்குட்டி.. செம ஹேப்பிடி பரத் .. இது வர உன்னை நான் மட்டும் தான் லவ் பண்றேன் .. எப்படி உன்னை லவ் பண்ண வைக்கிறதுனு நினைச்சுட்டு இருந்தேன்.. இப்போ பார்த்தா நீ முன்னவே என் மேல லவ்ஸா இருந்துருக்கா.. அய்யோ .. டார்லிங் .. எனக்கு அப்படியே செம பீலிங்கா இருக்கே.. இனி பாரு என் பெர்பாமென்ஸ .. உன் லவ்வ வெளியே கொண்டு வந்து உன்னை கண்ணாலம் பண்றேன் அதும் சீக்கிரமே" என்று சபதம் போட்டவன் அவன் நெற்றியில் இதழ் பதித்தவன் திரும்பி செல்ல எத்தனிக்க நிலவன் நின்றுக்கொண்டிருந்தார்

பார்த்ததும் அதிர்ந்தவன்
" அய்யய்யோ .. போச்சு.. மாமா பார்த்துட்டார் .. மாட்டினியா" என்று கூக்குரல் போட்ட மனதை அடக்கியவன் வெளியில் முழிக்க

முறைத்துக் கொண்டே "உன்னோட பேசனும் வெளியில் வா "என்க பயந்துக்கொண்டே சென்றான்

இருவரும் அமைதியாய் நிற்க பரத்தே
" மாமா ..சாரி .. அது வந்து.. காவிமா .. நெற்றியில்" என்று தடுமாற

சிரித்த நிலவன் " என்ன டா.. பேச்சு தந்தியடிக்குது.. என் அக்கா மகன் பரத்தா நீ " என்று கிண்டல் செய்தார்

அதை கண்டு சிரிக்கலாமா வேணாமா என்று நம்பாமல் முழிக்க அதை புரிந்து கொண்டவர் " பரத் இப்படி முழிக்காத காமெடியா இருக்கு .. " என்றவரை

" மாமா" என்று ஏதோ கேட்க வந்தான்

அதை புரிந்து கொண்டவர் " நீ காவியாவை லவ் பண்றியா.. நீ அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டா நான் சந்தோசம் தான் படுவேன் ஆனால் என் மகள் இதுக்கு ஒத்துக்கொள்வாளா என்று தான் தெரியலை" என்று கவலையோடு பேசி முடித்தார்

தன் மாமானாரிடமே சம்மதம் வந்ததில் மகிழ்ந்தவன் தனக்கு இருந்த காதலில் தொடங்கி இப்போது டைரியில் படித்தது வரை சொல்ல நிலவனின் முகத்தில் சந்தோச கோடுகள் தென்பட்டதை பரத்தால் காணமுடிந்தது

மேலும் " மாமா .. இனி அவளோட காதலை எப்படியாவது வெளியே கொண்டு வரனும் .. அது அவ்வளவு சுலபம் இல்லை என்று எனக்கும் தெரியும்.. அவள் ஒரு பயத்தில் இருக்கிறாள் .. காதலிக்கிறதா சொன்னா என்னையும் இழந்துருவாளோ என்று.. அதை மாற்றி அவளை கல்யாணம் பண்ணனும் அதுக்கு உங்கள் உதவியும் வேணும்" என்க

"கண்டிப்பா .. என் மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவேன்" என்று பேசிக்கொண்டிருக்கும் போதே பரத்திற்கு கால் வந்தது

அதை எடுத்து பேசியவன் நிலவனிடம் வந்தவன் " மாமா .. என் அத்தை மகள் அனு பேசினா .. அவள் உடல்உறுப்பு தானம் ( organ donation)செய்யும் அமைப்பில் வேலை செய்கிறாள்" என்று நிறுத்த

கேள்வியாய் பார்த்த நிலவனிடம் " அது வந்து மாமா .. நம்ம அகில் இதயத்தை 15 வயதுள்ள ஒரு பொண்ணுக்கு பொருத்தினாங்க.. அந்த பொண்ணு நம்மளை பார்க்கனும் என்று சொல்றாளாம்.. அதான் நம்மளால் வந்து பார்க்க முடியாமானு கேக்குறாங்க " என்றதும்

கண்கலங்க நின்றவர் அழ ஆரம்பித்துவிட்டார்

உடனை பரத் அவருக்கும் சிறு வடிகால் வேண்டும் என்றெண்ணி அவரை‌ சிறிது நேரம் அழவிட்டவன் " மாமா .. ப்ளீஸ் .. அழாதிங்க" என்று அவரை சமாதானம் செய்தான்

"உங்களுக்கு விருப்பம் இல்லைனா வேணாம் மாமா"

"இல்லை பரத்.. இது இப்போ இருக்க நம் வாழ்கைக்கும் மனநிலைக்கும் தேவையான் ஒன்று என்று நினைக்கிறேன்.‌ ரதிதாவிடம் பேசுகிறேன் அவளையும் காவியாவையும் அழைத்துக்கொண்டு போகலாம்" என்று சொன்னவர் தன்னவளிடம் பேச சென்றார் 
#11
நினைவலைகள் 9


ரதிதாவிடம் பேச சென்ற நிலவன் அவள் அருகில் சென்று கைப்பற்றி அமர்ந்தான் .. அவள் தன்னிடம் இருந்து விலகுவாள் என்று எதிர்பார்த்து இருக்க அவள் அமைதியாய் அவன் தோள் சாயவும் சந்தேகத்தோடு
" ரதிமா " என்றார்

உடைந்து அழ ஆரம்பித்தவள் ஒரு கட்டத்தில் அவளே அழுகையை நிறுத்தினாள்

"மாம்ஸ்.. சாரி .. இப்போ அண்ணி பேசுனதும் தான்‌ நான் எவ்வளவு சுயநலமாய் இருந்திருக்கேன் என்று தெரியுது.. அகிலனின் இழப்பு என்னால தாங்கிக் கொள்ள முடியாதது என்றாலும் அதுக்காக உங்களையும் கஷ்டப்படுத்திட்டு காவிமாவிற்கும் ஆறுதலாய் இல்லாமல் .. சே.. " என்று வருந்தியவளை அணைத்துக் கொண்டான்

தன் மனைவி மனதளவில் பலமடைந்து விட்டாள் என்பதை நிலவனால் உணர முடிந்தது.. இது தான் தக்க தருணம் என்றெண்ணியவன்

" ரதிமா.. " என்க

"சொல்லுங்க மாம்ஸ்" என்றவளை தன் கையணைப்பில் வைத்தவன்

பரத்தின் காதலையும் தன் மகளின் கல்யாணத்தையும் பற்றி பேச அதில் மகிழ்ந்தவள்‌

"பரத் நம்ம பொண்ணை நல்லா பார்த்துக்குவான் .. நான் வேணா பேசவா காவியாவிடம்" என்றவளை

"இல்லை மா.. அவனே அவளிடம் பேசிக்கொள்வான் .. இது அவர்கள் எடுக்கவேண்டிய முடிவு" என்றவர்

ரதிதாவிடம் அந்த பொண்ணை பார்க்கும் விசயத்தை கூற சிறிது தயங்கியவள்

"இல்லை மாம்ஸ் ... நான் வரவில்லை .. என்னால் சந்திக்க முடியாது" என்று மீண்டும் கண்கலங்க

ரதிமா " ப்ளீஸ் .. எனக்காக இதுக்கு ஒத்துக் கொள்ளேன் .. நம் அகில் இல்லையென்றாலும் அவன் இதயம் வாழ்ந்து கொண்டிருக்கு .. அந்த பொண்ணை பார்க்கும் போது நமக்கு ஆறுதலாய் இருக்கும் என்று எனக்கு தோனுது.. யோசித்து பாரேன் " என்று பலவாறு பேசி ரதிதாவை சம்மதிக்க வைத்தார்

காவியாவிடம் உண்மையை சொன்னால் மறுத்து கூறுவாள்‌ என்றெண்ணிய பரத் ... நிலவனின் நண்பரை‌ பார்க்க செல்வதாய் பொய் கூறி அழைத்துச் சென்றான்

மதுரையில் தான் அந்த பெண் இருக்கிறாள்.. அங்கு சென்றதும் அவர்கள் வீட்டிற்கு அழைத்து செல்ல அனு வந்திருந்தாள் .. அனுவிற்கு பரத் என்றால் பிடிக்கும் .. அவளுக்கு அவனின் மேல் க்ரஸ் உண்டு..

இவர்களை கண்டதும் " ஹாய் பரத் மாமா .. எப்படி இருக்கிங்க .. அத்தை எப்படி இருக்காங்க .. " என்று அவனிடம் கொஞ்சிக் கொண்டு பேசியவளை கண்டு காவியாவிற்கு பொறாமை தலைத்தூக்கியது

"யாரு இவள்.. " என்று உள்ளுக்குள் திட்டிக் கொண்டிருக்க

அனைவருக்கும் அனுவை தன் அத்தை மகளாய் அறிமுகம் செய்து வைத்தான் ..

பின்பு அனைவரும் அந்த பெண்ணை பார்க்க செல்ல அருகில் சென்றதும் காவியாவிடம் அகிலனின் இதயத்தை பொருத்திய பெண்ணை பார்க்க வந்திருப்பதை கூற அவள் தான் வர மாட்டேன் என்று கண்கலங்க மறுத்தாள்

அப்போது அப்பெண்ணின் பெற்றோர் வந்து இவர்களை வரவேற்றனர்.. காவியும் வேறு வழியின்றி அவர்களோடு சென்றாள்

அதில் தாங்கள் பரம்பரை பணக்காரர்கள் எனவும் குழந்தை இல்லாததால் 10 வருடத்திற்கு பிறகு பிறந்த குழந்தை தான் இந்த பெண் எனவும் அவளுக்கு 13 வயதில் தான் இருதய நோய் இருப்பது தெரிய வந்தது எனவும் மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த நேரத்தில் தான் அகிலனின் இருதய மாற்றால் உயிர் பிழைத்து இன்று எங்கள் வாழ்விற்கே அர்த்தம் ஏற்பட்டுள்ளது எனவும் அவர்கள் கண்கலங்க கைகூப்பி நன்றி சொன்னதை பார்த்ததும் அங்கிருந்த அனைவருக்கும் கண்கலங்கியது

அந்த பெண்ணை பார்க்க சென்றனர் .. இவர்களை பெற்றவர்கள் அறிமுகம் செய்ததும் காவியா அவள் அருகில் சென்று இதயம் இருக்கும் பகுதியில் கண்கலங்கியப்படி கைவைக்க
" அக்கா நீங்க தான் அகிலன் அண்ணாவோட தங்கச்சியா"
என்க ஆம் என்று தலையாட்டினாள்

"அக்கா எனக்கு அக்கா அண்ணா யாருமே இல்லை .. நான் மட்டும் தான் தனியா இருப்பேன் எப்போதும் .. அதுனால எனக்கு நிறைய ஃப்ரெண்ட்ஸ் இருப்பாங்க .. . எனக்கு பேசுறதுனா ரொம்ப பிடிக்கும்.. ஆனால் எனக்கு உடம்பு முடியாமல் போனதும் பேசுனால மூச்சு வாங்கும் .. சாப்பிட முடியாது .. தூங்க முடியாது.. நடக்க முடியாது .. அம்மா என்னை பார்த்து அழுதுட்டே இருப்பாங்க .. அப்பறம் நான் செத்து போயிருவேனு டாக்டர் சொன்னதும் எனக்கும் டெய்லி பயமா இருக்கும் .. அது வேற எப்படினே தெரியாதா.. ஃப்ரெண்ட்ஸ்ட்டலாம் பேச முடியாதேனு.. நான் சாகப்போறேனு நினைச்சப்ப தான் அகில் அண்ணா ஹார்ட் கொடுத்தாங்க .. ஆனால் அண்ணா பாவம் .. அவங்களும் என்னை மாதிரியே பயந்து இருப்பாங்கல்ல.. நீங்களாம் அவுங்களை மிஸ் பண்ணுவிங்க தானே " என்று அந்த சிறு பெண் பேச பேச அழ ஆரம்பித்து விட்டனர்

பின்பு ரதிதா அவள்‌ அருகில் சென்றவள் அவள் கைப்பற்றி " நான் ஒரு தடவை உன்னோட இதயம் துடிக்கிறது கேட்டுக்கவா " என்று கேட்க

"அம்மா .. இதுக்கு கேட்கலாம் தேவையில்லை .. வாங்க" என்றாள் அந்த பெண்

அவள் நெஞ்சத்தில் காதை வைத்து இதய ஒலியை கேட்க உண்மையில் உடல் சிலிர்த்ததை உணர முடிந்தது ரதிதாவால்

பின்பு அவர்களிடம் விடைப்பெற்று கிளம்பினர் நிலவன் குடும்பத்தினர்.. அனைவருக்கும் ஒரு மனதிருப்தி இருந்தது

ரதிதாவிற்கும் தன்னவனின் மீதான கோபம் காணாமல் போனது..

தன் தவறை உணர்ந்தவள் " சாரி மாம்ஸ் " என்க அது தேவையில்லை என்பதை போல் கைப்பற்றி ஆறுதல் தந்தார்

காவியாவும் தன் அண்ணனின் இருதயத்தால் ஒரு பெண் வாழ்ந்துக் கொண்டிருக்கிறாள்.. இது போல் அவனின் இன்ன பிற உறுப்புகளும் சிலருக்கு வாழ்க்கை கொடுத்திருக்கும் என்றெண்ணியவள் மனதில் பாரம் இறங்கியது போல் ஒரு உணர்வு ஏற்பட்டது

இப்படியாய் அவர்கள் வெளியில் வர காவியாவிற்கு

" மாமா.. நீங்க ரொம்ப ஹேண்ட்ஸம் ஆகிட்டிங்க " என்ற குரலில் சுற்றுப்புறம் உணர்ந்து திரும்பிபார்த்தாள்..

அனுதான் பரத்திடம் கூறிகிறாள் என்பதை பார்த்ததும் கடுப்பில் முறைக்க அதை கண்டுக் கொள்ளாதவன் போல்

"அப்படியா அனு.. என்னை விட நீயும் தான் அழகாகிட்ட.. சின்ன வயசுல பார்த்ததை விட‌ இப்போ ரொம்பவே மாறிட்ட" என்றதும் அனு வெட்கப்பட்டாள்

" கருமம் கருமம்.. இதுங்க வெடகப்படுவதை எல்லாம் பார்க்க வேண்டி இருக்கு " என மனதில் திட்ட

" ஹி ஹி .. இதுதான் பொறாமையா .. போற போக்க பார்த்தா அனு பரத்தை கரெக்ட் பண்ணிருவா போலையே" என்று அவள் மனசாட்சியே கிண்டல் செய்ய

" அதெல்லாம் நடக்காது .. பரத் என்னை தான் லவ் பண்றான் .. என்னோட காதலும் பரத்திற்கு தெரியும்" என்று மனசாட்சியை அடக்கினாள்

ஆனால் அவளுக்கும் சிறு பயம் எட்டி பார்த்தது.. சீக்கிரமே பரத்திடம் தன் காதலை பகிர்ந்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தாள்

அப்போது நிலவன் " சரி நாம் கிளம்புவோமா.. தேங்க்ஸ் மா அனு‌ .‌ நீ இல்லைனா இது மாதிரி ஒரு நிகழ்வோ இவர்களை சந்திக்க வாய்ப்போ அமைந்திருக்காது" என்றதும்

"அதெல்லாம் ஒன்னும் இல்லை அங்கிள்.. எதோ என்னால் முடிந்தது.. " என்றவள்

"ஏன் அங்கிள் கிளம்புறிங்க .. மதுரையை சுற்றி பார்த்துட்டு போலாம்" என்றாள்

உடனே காவியா " இல்லை நாங்க இன்னொரு நாள் வரோம் அனு.. இப்போ சூழ்நிலை சரி இல்லை " என்றவள் பரத்தை முறைக்க தவறவில்லை

பின்பு அவளிடம் விடைப்பெற்று கிளம்ப வழியெங்கும்‌ பரத்தை முறைத்துக் கொண்டே குழப்பமான முகத்தோடு வந்தவளை பார்த்ததும் பரத்திற்கு இப்போவே தன்னவளை அணைத்து " ஏய் லூசு .. உன்னை தவிர வேறு எவளும் என் பொண்டாட்டியா வர முடியாது "என்று சொல்ல துடித்த வாயை அடக்கியவன் அவளே சொல்ல வேண்டும் அது வரை காத்திருப்போம் என்று நினைத்தான்
 
#12

நினைவலைகள் 10

வீட்டிற்கு வந்ததும் வாசுகியை அணைத்துக் கொண்டாள் ரதிதா ..
" தேங்க்ஸ் வாசுகி .. நீங்க அன்னைக்கு அப்படி பேசவில்லையென்றால் நான் செய்யும் தப்பு‌ தெரிஞ்சுருக்காது " என்று கண்கலங்க கூற

" ரதி அண்ணி .. உங்களோட மனநிலை எங்களுக்கு தெரியும் .." என்று பேசிக்கொண்டிருந்தனர்

காவியா யோசனையோடே உள்ளே நுழைந்தவள் உடை மாற்றிவிட்டு கவிநிலாவிடம் செல்ல அவள் படித்துக் கொண்டிருந்தாள்.. அவளை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று யோசித்தவள்‌ தூக்கமும் வராததால் பரத்தை தேடி சென்றாள்

அங்கு பரத்தோ மொபைலில் சிரித்தப்படி பேசிக் கொண்டிருந்தான் .. இவள் உள்ளே நுழைந்ததை கூட கண்டுக் கொள்ளாமல் இருக்க ..

என்ன இவன் யாரிடம் இப்படி பேசுறான் என்று யோசித்தவள் சரி ப்ரண்ட்ஸ் யாராவது இருக்கும் என்றெண்ணி வெளியேற இருந்தவளுக்கு
" பார்த்து போடா அனு.. " என்ற வாக்கியம் காதில் விழுந்ததும் அனு என்ற பெயரை கேட்டதும் அப்படியே நின்று விட்டாள்

அழுகை தொண்டையை அடைக்க வெளியேற இருந்தவள் " காவிமா .. ஏண்டி வந்துட்டு போற .. " என்ற பரத் கேட்டதும் நின்றாள்

அவனிடம் தன் கண்ணீரை மறைப்பதாய் நினைத்துக் கொண்டு திரும்பியப்படியே " இல்லை சும்மா தான் வந்தேன் .. நீ உன்னோட புது ப்ரண்ட் கூட பிஸியா இருந்தியா .. அதான் .." என்றவளின் குரலில் இருந்த பேதத்தை உணர முடியாதவன் அல்லவே பரத்

தன்னவளின் கவலை போக்க " ஏய்.. லவ் யூ டி .. நீ தான் டி இந்த ஜென்மத்துக்கு என் பொண்டாட்டி " என்று சொல்ல தோன்றினாலும் .. மனதை அடக்கியவன்

"ஆமா .. அனு‌ பேசிட்டு இருந்தாள்.. நீ வந்ததை பார்க்கவில்லை.. இல்லாட்டி உன்னையும் பேச சொல்லிருப்பேன்" என்று மேலும் வெறுப்பேத்த

"இப்போ அவளிடம் பேசுறது ஒன்னு தான் குறைச்சல்" என்று முனக அது பரத் காதில் விழுந்தாலும்

அவன் " என்னடி சொன்ன" என்றவன்

ஆனால் மனதுக்குள்
"ஏய்.. காவிக் குட்டி ... நீ கோபப்படும் போது கூட செம க்யூட்" என்று கொஞ்சினான்

" ஒன்னும் இல்லை .. எனக்கு தூக்கம் வருது .. " என்றவள் அவன் அடுத்த கேள்வி கேட்கும் முன் வெளியேறினாள்

அவள் செல்வதை கண்டவன் இன்னைக்கு மட்டும் பொறுத்துக்கோ காவிமா .. நாளைக்கு என் லவ்வை சொல்லிடுறேன் என்றவன் தன் தாயை தேடி சென்றான்

காவியா அவள் பெற்றவர்களின் அறையை கடக்க அவர்கள் பேசுவதில் பரத் என்ற பெயர் அடிப்பட அப்படியே நின்றாள்..
" ரதிமா .. பரத்க்கு கல்யாணம் சீக்கரம் பண்ணனும் என்று வாசுகி சொல்லிட்டு இருக்காள் "

"ஆமாங்க.. என்னிடமும் சொன்னாங்க.. அதனால் என்ன.. பண்ணிடுவோம் என்று சொல்லிட்டேன் " என்றதை கேட்ட காவியாவிற்கு பரத்தை இழந்து விடுவோமோ என்ற பயம் அதிகமானது

உடனே இதற்கு மேல் கேட்க பயந்து அவ்விடம் விட்டு அகன்றால்

ஆனால் அவள் சென்ற பிறகு
" உம்ம்ம்.. ஆனால் காவியா நாளைக்கு என்ன சொல்ல போறாளோ" என்று நிலவன் கவலைப்பட

" மாம்ஸ் .. உங்க பொண்ணு கண்டிப்பா ஓகே தான் சொல்லுவா .." என்றாள்

"எப்படி அவ்வளவு நம்பிக்கையா சொல்ற ரதிமா"

"மாம்ஸ்.. அனுவிடம் பேசியதும் உங்க பொண்ணு முகத்தை பார்க்கனுமே .. பாவம் அந்த அனு புள்ள.. கையில் கிடஞ்சுருந்தா உங்க பொண்ணு வச்சு செஞ்சுருப்பா" என்று சிரிக்க

"ஆமா அம்மா போல தானே பொண்ணு இருப்பா" என்று கிண்டல் செய்தார்

காவியாவோ நாளைக்கு பரத்திடம் பேசிடனும்.. அவன் இல்லாமல் என்னால் இருக்க முடியாது என்றெல்லாம் யோசித்தவள் அதை நினைத்துக் கொண்டே தூங்கவே இல்லை..

காலையில் விடிந்ததும் தான் பேச வேண்டும் வெளியில் செல்லலாமா என்று பரத்திற்கு குறுஞ்செய்தி அனுப்பினாள் ரதிதா

அதை கண்டவன் சிரித்துக் கொண்டே மாலையில் சந்திக்கலாம் என்று திரும்ப அனுப்ப அதை கண்டவள் இன்னும் கடுப்பானாள்

"பெரிய இவன் ... ரொம்ப தான் பண்ணுறான்‌.. " என்று அவனை திட்டி தீர்த்தவள் அன்று முழுவதும் அவனை முறைத்துக் கொண்டே திரிந்தாள்

அவளின் முறைப்பை கண்டு பரத்திற்கு சிரிப்பாகவே வந்தது..

வாசுகி தான் " டேய் பாவம் டா என் மருமவ .. சொல்லிடவா " என்க

"தாய்கிழவி ... ப்ளீஸ்.. மீ பாவம்.. கொஞ்சம் அமைதியா இருமா .. சொல்லிடாத.. சர்ப்ரைஸ்ஸா பண்ணா அவ செம சந்தோச படுவா மா " என்று கெஞ்ச

"சரி சரி .. நீ இவ்வளவு கெஞ்சிரதால் சொல்ல" என்றதும்

"நீயெல்லாம் இப்படி பேசுறத கேட்க வேண்டி இருக்கே.. எல்லாம் என் நேரம்" என்று புலம்பியவனை பார்த்து குடும்பமே சிரித்தது

மாலை ஐந்து மணி அளவில் அனைவரும் அழகாய் உடை அணிந்து கிளம்ப .. அதை கண்ட காவியா "இவுங்களாம் எங்க கிளம்புறாங்க" என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே ஒரு சேலையை கொடுத்து கட்டச்சொன்னாள் ரதிதா

"அம்மா .. நான்லாம் எங்கயும் வரலை‌‌ .. எனக்கு வேலை இருக்கு " என்றவளை

"எப்போ பார்த்தாலும் எதாவது எதிர்த்து பேசிட்டு " என்ற ரதிதா அவளை மேலும் பேசவிடாமல் கிளம்பினாள்

காவியாவும் வேறு வழியின்றி கிளம்பி பரத்தை தேட அவனை காணாமல் யாரிடம் கேட்கலாம் .. என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே கார் ஒரு ஹோட்டலின் பூங்காவினுள் நுழைந்தது .. அது திருமண அழைப்பிற்கு ஏற்றவாறு அழகாய் அலங்கரிக்கப்பட்டு இருந்தது...

ஆனால் காவியாவின் மனதில் பரத் எங்கே என்ற எண்ணமே ஓட அவள் சுற்றுப்புறத்தை கவனிக்கவில்லை

அப்போது அவள் முன்னால் யாரோ வருவது போல் இருக்க அவளை சுற்றி இசைகள் இசைக்க கேமராக்களின் வெளிச்சம் அவள் மீது ஒளிக்க நடப்பது புரியாமல் நின்றவள் ...

தன் முன்னால் நின்றவனை பார்த்து சந்தோச அதிர்ச்சியில் நின்றாள் ..

ஆம் .. அது பரத் தான் .. அழகாய் கோட் சூட் அணிந்து அவள் முன் மண்டியிட்டவன் " காவிமா.. உன்னில் பாதியாய் உன் குருதியில் கலந்தவனாய் உன் சுவாச காற்று என் மூச்சாக உன்னோடு அளவுகடந்த காதலோடு காதல் வாழ்வு வாழ அவா கொண்டு காத்திருக்கும் உன்னவனுக்கு சம்மதம் தெரிவிப்பாயா " என்று மோதிரத்தோடு கேட்க அதிர்ச்சியில் நின்றவள்

சந்தோசத்தில் கண் கலங்க நிற்க

" காவிமா.. சீக்கிரம் சொல்லுடி " என்றதும் தான் அவளின் நிலை உறைக்க

" பரத் .. ஐ லவ் யூ " என்றால் அழுதுக்கொண்டே கைநீட்டியப்படி ..

மோதிரத்தை இருவரும் மாற்றிக் கொள்ள பெற்றவர்கள் சந்தோசத்தோடு பார்த்துக் கொண்டிருந்தனர்

ஆச்சரியத்தின் உச்சியில் சந்தோசத்தோடு நின்ற காவியாவை பார்த்ததும் பரத்திற்கும் அந்த மகிழ்ச்சி தொற்றிக் கொள்ள தன்னவளை ரசித்துக் கொண்டிருந்தான்

ஒரு வழியாய் வரவேற்பு முடிய மறுநாள் திருமணம் என்றனர்

காவியா அதில் இன்னும் அதிர்ந்தவள் ரதிதாவிடம் " அம்மா .. எனக்கு கல்யாணம் எனக்கே சொல்லாம பண்றிங்களே .. என் ப்ரண்ட்ஸ்ஸை இன்வைட் பண்ணனும் .. சேலை எடுக்கனும் " என்று கத்திக்கொண்டிருக்க

அங்கு வந்த பரத் " அத்தை ..நாளைக்கு காலையில் முகூர்த்தத்தை வச்சுட்டு இன்னும் தூங்காம என்ன பண்றிங்க" என்க

" பரத் .. " என்று பேச வந்த காவியாவை

"காவிமா.. இங்க வா என்று அழைத்து சென்றவன்" அவள் மேல் கையிட்டு தன்னோடு அணைத்துக் கொண்டவன்

தான் காதலிக்க தொடங்கியது முதல் அவள்‌ டைரியை படித்தது .. இந்த ஏற்பாடு எல்லாவற்றையும் கூற காவியா தன்னவனின் காதலில் மெய்சிலிர்த்தாள்

அவன் கண்ணத்தில் முத்தமிட்டவள் அவினிடம் அகப்படாமல் "நாளைக்கு கல்யாணத்தில் சந்திப்போம் புரசா" என்று ஓடிவிட்டாள்

பரத் என்னிடம் மாட்டாமலா போக போற என்று சிரித்தவன் மனதில் தன் காதல் கைக்கூடிய மகிழ்ச்சி தென்பட்டது

காலையில் பொழுது விடிய
மணமகன் மணமகளாய் காவியாவும் பரத்தும் அமர்ந்திருக்க கருமமே கண்ணாக ஐயர் கூறும் மந்திரத்தை பரத் சொல்லிக் கொண்டிருக்க காவியா அவனை சைட் அடித்துக் கொண்டிருந்தாள்

நிலவன் ரதிதா வாசுகி தங்கள் மக்களை மகிழ்ச்சியோடு பார்த்துக் கொண்டிருந்தனர்

காவியா தோழிகளை அவளுக்கே தெரியாமல் பரத் அழைத்திருந்தான்

அதை கண்ட காவியா தன்னவனின் காதலில் மையல் கொண்டு அவனிடம் கட்டுண்டு இருந்தாள்

விழாவின் முத்தாப்பாய் பரத்தின் முயற்சியால் அகிலனின் கண்கள் இருதயம் கல்லீரல் யாருக்கு பொறுத்தப்பட்டதோ அவர்களையும் அழைத்திருந்தான்

அதை கண்டு அகிலனே இருப்பதாய் அனைவருக்கும் ஒரு மனதிருப்தி ஏற்பட்டது..

உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வும் மக்களிடம் வருவதற்கு இது ஒரு முன்னுதாரணமாக இருக்கும் என்று கருதினான்

கெட்டிமேளம் முழங்க மங்கள நாணை காவியாவின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு தன்னவள் ஆக்கினான் பரத்

தாலி கழுத்தில் ஏறியதும் பரத்தின் காதில் " ஐ லவ் யூ பரத் மாமா" என்று காவியா சொல்ல அதில் மயங்கியவன் அவள் கண்ணத்தில் இதழ் பதித்து தங்கள்‌ காதல் வாழ்வை தொடங்கினான்