நெஞ்சுக்குள்ள நீ மின்னல்டிப்ப - கதை திரி

sudharavi

Administrator
Staff member
#1
கதைக்கான கருத்துக்களை இங்கு பதிவிடவும்.........
 

sudharavi

Administrator
Staff member
#2
அத்தியாயம் - 1


சிங்காரச் சென்னை.சூரியன் கிழக்கில் தன் பொன் கதிர்களை வெளியிட்டுக் கொண்டிருந்தான். சென்னை பரபரப்பான விடியலுக்கு தயாராகி கொண்டிருந்தது.


ஜானகி காலையில் குளித்து முடித்து விட்டு காபி கலந்தார்.


"என்னங்க,இந்தாங்க காபி" என்று சிவநேசனிடம் கொடுத்தார்.


"பாப்பா முழிச்சாச்சா?"


"ம்ஹூம்.இனிமேல் தான் எழுப்பணும்.ஷாப்பிங் போகணும்னு சொல்லிட்டிருந்தா" என்று மகளை எழுப்பப் போனார்.


சஞ்சனாவின் அலாரம் அடித்துக் கொண்டிருந்தது.போர்வையில் இருந்து கையை மட்டும் வெளியே நீட்டியவள் செல்போன் அலாரத்தை ஆஃப் செய்து விட்டு திரும்ப தூங்கினாள்.


"சஞ்சனா எந்திரி..." என்று ஜானகி எழுப்பினாள்.


"அம்மா கொஞ்ச நேரம்"


"நீயும்,வைஷ்ணவியும் ஷாப்பிங் போகனும்னு சொல்லிட்டிருந்த.."


"ம்மா,5 மினிட்ஸ்" என்று திரும்ப போர்வையை இழுத்து போர்த்தினாள்.


"ஏய் எந்திரிடி" என்று அவள் அம்மா உலுக்கிய உலுக்கலில் திட்டிக் கொண்டே எழுந்து சென்றாள்.


சஞ்சனா சிவநேசன்-ஜானகி தம்பதியரின் செல்ல மகள்.ஐந்தரை அடி உயரம்.பால் போன்ற வெண்மை நிறம்.அவள் விழிகள் மொழி பேசும்.அவளைக் கடந்து செல்லும் யாரும் ஒரு நொடி தாமதிப்பார்கள்.


பேஷன் டெக்னலாஜி முடித்து விட்டு 'வஸ்தரா' என்ற பொட்டிக் ஷாப் நடத்திக் கொண்டிருக்கிறாள்.வைஷ்ணவி அவள் தோழி.இன்று ஃப்ரீயாக இருப்பதால் அவளும்,வைஷ்ணவியும் ஷாப்பிங் போக பிளான் பண்ணினார்கள்.சஞ்சனா பல் துளக்கி விட்டு வந்தவள் "ம்மா,காப்பி.." என்று கத்திக் கொண்டே வந்தாள்.


சிவநேசன் ஹாலில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தார்.


"ஹாய்பா,குட் மார்னிங்"


"குட் மார்னிங்மா,ஜானகி.. பாப்பா வந்துட்டா.காபி கொண்டா"


"இவ்ளோ தூரம் வந்தவளுக்கு உள்ள வரத் தெரியாதா?.நீங்களே கெடுக்கறீங்க" என்று திட்டிக் கொண்டே காபியை நீட்டினார்.


"ஏம்மா அப்பாவ திட்டற?.உனக்கு அப்பாவ திட்டலேனா தூக்கமே வராதே" என்று பதிலுக்கு திட்டினாள்.


"அதானே அப்பாவும்,மகளும் ஒன்னு சேந்துப்பீங்களே" என்று கோபித்துக் கொண்டே உள்ளே சென்றார்.


"ம்மா.." என்று கத்திக் கொண்டே பின்னே சென்றாள்.


"மை ஸ்வீட் அம்மா இல்லே,மேரி ஜான் இல்லே.." என்று கொஞ்சி சமாதானம் செய்தாள்.


"சரிடி,சீக்கிரம் ரெடியாகு.வைஷூ வந்தர போறா"


"அம்மான்னா அம்மா தான்.மை க்யூட் மாம்" என்றவள் கன்னத்தில் கிள்ளி விட்டு ஓடிவிட்டாள்.


"ஏய்.. போக்கிரி.." என்று புன்னகைத்துக் கொண்டார்.


குளித்து விட்டு வந்தவள் அவசர அவசரமாக சாப்பிட்டாள்.


"இன்னொன்னு வைச்சிக்கோ" என்று தோசையைக் கொண்டு வந்தார்.


"ம்மா நீயே சாப்புடு.வைஷூ வந்திருவா" என்று எழுந்து விட்டாள்.


அவள் அறைக்குள் நுழையும்போது செல்போன் அடித்தது."ஹலோ"


"ரெடியா சஞ்சு"


"5 மினிட்ஸ் மா"


"ஓகேடி,ஐ வில் பி தேர் இன் ஃபைவ் மினிட்ஸ்.நீ வெளியே வைட் பண்ணு"


"சரி.வா.ஐ ஏம் வெயிட்டிங்" என்று கட் பண்ணினாள்.


கைப்பை,செல்போன் ஆகியவற்றை எடுத்தவள் அறையில் இருந்து வெளியே வந்தாள்.


அவள் வெளியே வரும்போது சிவநேசன் வந்தார்.


"என்னமா வெளிய கிளம்பிட்ட?"


"ஆமாப்பா.வைஷூ பர்சேஸ் பண்ணனும்னு சொன்னா.அதான்பா"


இவள் பேசிக் கொண்டிருக்கும்போதே வெளியே ஹார்ன் சவுண்ட் கேட்டது.


"ப்பா அவதான்ப்பா" என்றாள்.


"ஓகேமா.பாத்துப்போ"


"சரிப்பா"


"ம்மா பாய்" என்று சொல்லிக் கொண்டே வீட்டிலிருந்து கிளம்பினாள்.


"ஏய் வாடி,உட்காரு"


"ஓகேடி.கிளம்பு" என்று இருவரும் கிளம்பியவர்கள்,பேசிக் கொண்டே மால்-ஐ சென்றடைந்தார்கள்.


தோழிகள் வண்டியைப் பார்க் செய்யும்போது அருகில் நின்றவன் அவர்களைப் பார்த்து திகைத்து நின்றான்.ஹாய் பிரெண்ட்ஸ்,

நான் வெண்ணிலா.இதுவரையும் நிறைய கதைகள் படிச்சிருக்கேன்.ஆனா இப்போ தான் கதை எழுத ஆரம்பிச்சிருக்கேன். யுடி படிச்சிட்டு கமெண்ட்ஸ் சொல்லுங்க பிரெண்ட்ஸ்.இது என்னோட முதல் நாவல்.
 

Anuya

Well-known member
#3
அத்தியாயம்-2

வி.சி.பில்டர்ஸ்.சென்னையின் பிரபலமான கட்டுமான கம்பெனி.அந்த அலுவலகத்தில் ஃபெராரி கார் ஒன்று வேகமாக உள்ளே நுழைந்தது.
காரிலிருந்து சித்தார்த் இறங்கினான்.வேகமான நடையுடன் அலுவலகத்திற்குள் நுழைந்தான்.ஊழியர்களின் வணக்கத்திற்கு சின்ன தலையசைப்புடன் நடந்தவன் லிப்டினுள் நுழைந்து 5ம் எண் பட்டனைத் தட்டினான்.லிப்ட் நின்றவுடன் தனது அலுவலக அறைக்குள் நுழைந்தான்.
சித்தார்த் விஸ்வநாதன்-மாலதி தம்பதியரின் பெரிய மகன்.பெயருக்கேற்றாற் போல் ராஜ களையுடன் இருப்பவன்.கூர்மையான கண்கள்.அலை அலையான கேசம்.அவனுடைய திண்மையான தோள்களும்,வலிமை நிறைந்த புஜங்களும் போர் வீரனை ஞாபகப்படுத்தும்.
அவனது பி.ஏ சிவேஷ் கதவை தட்டிக் கொண்டு உள்ளே வந்தான்.
"மீட்டிங்க்கு எல்லாம் அரேஞ்ச் பண்ணிட்டியா?"
"எஸ் சார்"
"ரிப்போர்ட்ஸ் ரெடியா?"
"எஸ் சார்"
சித்தார்த் கன்ஸ்ட்ரக்ஷன் பிஸினஸ் செய்து கொண்டிருக்கிறான். அவனுடைய பிஸினஸ் உத்திகளால் அவன் கம்பெனி பிஸினஸ் உலகில் உயரப் பறந்தது.
புகழ் பெற்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று அவனிடம் புரோஜக்ட் செய்யக் கேட்டிருந்தார்கள்.அது சம்பந்தமான மீட்டிங்கை அவன் இன்று அரேன்ஜ் செய்திருந்தான்.
சிறிது நேரம் பைல்களைப் பார்த்தவன் மீட்டிங் அறைக்குள் நுழைந்தான்.அவனது கம்பீரமான குரலில் அவர்களுக்கு விளக்கம் சொல்ல ஆரம்பித்தான்.
அவனது நேர்த்தியான விளக்கத்தால் கவரப்பட்டவர்கள்,புரோஜக்ட் செய்ய ஒத்துக் கொண்டார்கள்.
தனது அறைகாகு வந்தவன் ரிலாக்ஸாக அமர்ந்தான். அவன் செல்போன் இசைத்தது.செல்போன் திரையில் ஹரிஹரன் என்று பெயர் வந்தது.
"ஹலோ"
"சொல்லுடா"
"டேய் மச்சி,என்ன பண்ற?"
"ஆபிஸ் தான்டா"
"டேய் மீட்டிங்னு சொல்லிட்டிருந்தியே?.என்ன ஆச்சுடா?"
"அதெல்லாம் சக்ஸஸ் தான்"
"ஏன்டா அத கூட சந்தோஷமா சொல்ல மாட்டியா?"
"ஏன்டா நம்ம கடமைய நாம பண்றோம்.இதுல என்னடா கொண்டாடறதுக்கு?"
"சரிடா.விடு.நீ சொன்னா ஒத்துக்கவா போற?.ஓகே.நாளைக்கு மீட் பண்ணலாமா?"
"ஓகேடா.நாளைக்கு பாக்கலாம்"
போனை வைத்தவன் அடுத்து செய்ய வேண்டிய வேலைகளை பார்த்தான்.
கடிகாரத்தைப் பார்த்தவன் சாவியை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு கிளம்பினான்.
அரண்மனை போன்ற பிரம்மாண்டமான மாளிகையின் முன் காரை நிறுத்தினான்.காரை நிறுத்தியவன் வாட்ச்மேனிடம் சாவியைகா கொடுத்து விட்டு வீட்டிற்குள் நுழைந்தான்.
மாலதியும்,அஞ்சனாவும் பேசி கொண்டிருந்தார்கள்.
"வாடா கண்ணா"
"ம்மா"
"என்ன டீப் டிஸ்கஸன் பணாணிட்டு இருக்கீங்க?"
"என் அண்ணிய எப்போ கண்ணுல காட்டப் போறேன்னு பேசிட்டு இருக்கோம்டா"
"ஏய் அஞ்சு கம்முனு இருக்கமாட்டா.அண்ணாட்ட இப்டிதான் பேசுவியா?"
"அண்ணா பாருண்ணா இந்த அம்மாவ" என முகத்தை சுருக்கினாள்.
அவளது செயலில் சிரித்தவன் அவளை வாஞ்சையாக பார்த்தான்.
அஞ்சனா சித்தார்த்தின் செல்ல தங்கை.அவளுக்கு ஏதாவது காரியம் ஆக வேண்டுமானால் இவன் மூலமாகத் தான் நடக்கும்.
"ஏய் வாலு அமைதியா இரு" என்று அதட்டியவன் "அப்பா எங்கேம்மா?" என்றான்.
"அவர் ரூம்ல இருக்காரு.நீங்க சாப்பிட வாங்க" என அழைத்தாள்.
சித்துவும்,அஞ்சுவும் சாப்பிட மாலதி உணவு பரிமாறினார்.
"ம்மா,அப்பா சாப்பிட்டாங்களா?"
"சாப்பிட்டாரு"
"நீ சாப்பிட்டாயம்மா?"
"இல்லடா"
"ம்மா,வா உட்காரு" என்று கையைப் பிடித்து உட்கார வைத்தவன் அவருக்கு பரிமாறினான்.
அவனது செயலில் நெகிழ்ந்தவர் அமைதியாக சாப்பிட ஆரம்பித்தார்.
சாப்பிட்டு முடித்தவுடன் தந்தையின் அறைக்கு சென்றவன் அவரிடம் சிறிது அலுவலக சம்பந்தமாக உரையாடிவிட்டு தனது அறைக்கு வந்து படுத்தான்.
அடுத்த நாள் ஹரிஹரனுடன் வெளியே புறப்பட்டான்.காரை நிறுத்தியவன் காரிலிருந்து கீழிறங்கினான்.
அவன் காரிலிருந்து இறங்கும்போது இரண்டு பெண்கள் ஸ்கூட்டியில் வந்தார்கள்.அவர்களைப் பார்த்தவன் திகைத்து நின்றான்.
ஹரி சித்துவிடம் பேச வந்தவன் அவன் முகத்தைப் பார்த்து குழம்பி நின்றான்.
'என்ன ஆச்சு?.இவன் ஏன் இப்டி நிக்கறான்?' என யோசித்தான்.
அவன் பார்க்கும்போது சித்தார்த் சஞ்சனாவை பார்த்துக் கொண்டி ருந்தான்.
'ஹாஹா.இங்க என்ன நடக்குது?.இவன் பார்வையே சரியில்லையே?!'
அவன் யோசித்துக் கொணாடிருக்கும்போது சித்தார்த் அவன் செல்போனை எடுத்து சஞ்சனாவை அவளுக்கு தெரியாமல் புகைப்படம் எடுத்தான்.
"டேய் என்ன பண்ற?"
"அது எனக்கு தெரியும்.நீ வா" என்று அவனை இழுத்துச் சென்றான்.
சஞ்சனா நீல நிற சுடிதாரில் வானத்து தேவதை போல இருந்தாள்.அவள் அழகில் ஈர்க்கப்பட்டவன் காந்தம் போல அவளை பின்தொடர்ந்தான்.
"டேய் யார்ரா அது?.சூப்பர் பிகரா இருக்கு"
அவனை முறைத்தவன் "அவ உன் சிஸ்டர்டா" என்றான்.
"டேய்..."
"ஒழுங்கா வா" என்று அவனை திட்டிக் கொண்டே அவர்களை பின்தொடர்ந்தார்கள்.
தோழிகள் இருவரும் துணிக்கடைக்குள் நுழைந்தார்கள்.அவர்கள் துணிகளைப் பார்க்கும்போது ஒருவன் இவர்களையே பார்த்துக் கொண்டிருந்தான்.
இவர்கள் நகரும்போது ஏதேச்சையாக வருபவன் போல் வந்து அவளை இடித்தான்.
இதனை எதிர்பார்க்காத சஞ்சனா தடுமாறும்போது இரு கைகள் அவளை தாங்கி பிடித்தது.இருவரும் விழி வீச்சில் ஒரு கணம் கட்டுண்டு நின்றார்கள்.
"ஏய் சஞ்சு.." என்று வைஷ்ணவி கூப்பிட்டாள்.
"சாரி" என்று அவனிடம் விடைபெற்றாள்.
"என்னடா?"
"அவன் எங்கேடா?"
"எவன்டா?" என்று கேட்டவனை சித்தார்த் எரித்து விடுவது போல பார்த்தான்.


நேராக இடித்தவனை நோக்கி சென்றவன் "யூ ப்ளடி ஸ்கௌண்ட்ரல்" என்று அவனை அடித்து துவைத்தான்.
ஹரிஹரன் அவனை பார்த்து திகைத்து நின்றான்.பின்பு சுதாரித்தவன் அவனைப் பிடித்து இழுத்து சென்றான்.
காரினுள் ஏறியவன் சிலருக்கு போன் போட்டு பேசினான்.போன் பேசிவிட்டு காரை எடுக்கும்போது அவனை இரு விழிகள் குரோதத்துடன் பார்த்தது.


ஹாய் பிரெண்ட்ஸ்,
ஸ்டோரி கரெக்டா கொண்டு போறேனானு சொல்லுங்கப்பா.ஸ்டோரில எதுவும் நிறை,குறை இருந்தா சொல்லுங்க..
 

Anuya

Well-known member
#4
அத்தியாயம்-3
பிரலபமான கேளிக்கை விடுதி.ஆண்களும்,பெண்களுமாய் ஆடிக் கொண்டிருந்தார்கள்.
கிருஷ்ணா மது கோப்பைகளை வேகமாக சரித்துக் கொண்டிருந்தான்.அவனது கண்கள் கோபத்தில் ரத்த நிறமாக மாறியது.
"டேய் நான் உன்ன விடமாட்டேன்டா.இதுக்கு நீ பதில் சொல்லியே ஆகணும்"
"கிருஷ்ணா கூல்டா" என்று சொன்னவனை அவன் ஆத்திரத்தில் அடித்தான்.அர்விந்த் அதிர்ந்து போய் அவனை பார்த்தான்.
"டேய் மச்சி அவன ஏன்டா அடிக்கற?.அமைதியா இரு.அந்த சித்தார்த்த நாம பாத்துக்கலாம்" என்று மகேஷ் சொன்னான்.
"டேய் அவன பழி வாங்காம விட மாட்டேன்டா,அவ எனக்கு வேணும்டா" என்று சொல்லிக் கொண்டே கிளாஸை உடைத்தான்.
'இதுக்கு மேல இருந்தா ப்ராப்ளம் வந்துடும்' என்று நினைத்தவன் "கிருஷ்,நீ வா,நாம போகலாம்" என்று அவனை அழைத்துச் சென்றார்கள்.
கிருஷ்ணா பரமேஸ்வரனின் மகன்.கன்ஸ்ட்ரக்ஸன் பிஸினஸ் செய்து கொண்டிருக்கிறான்.ஏற்கனவே தொழில் போட்டியில் இருப்பவர்கள்,இன்று சித்தார்த் அவனை அவமானப்படுத்தியதும் சேர்ந்து கிருஷ்ணாவை பழி வாங்கும் நோக்கத்திற்கு உந்தித் தள்ளியது.
*********
அடுத்த வாரத்தில் ஒரு நாள் சித்தார்த் தனது அலுவலகத்தில் பைல்களைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது போன் வந்தது.போனில் பேசியவன் சந்தோஷமாக விசிலடித்தான்.
போனில் பேசியவன் அடுத்து ஹரிக்கு போன் பண்ணினான்.
"ஹரி"
"சொல்லுடா"
"டேய் நான் உன்ன பிக்கப் பண்ணிக்கறேன்.ரெடியா இரு"
"ஏன்டா மச்சான் திடீர்னு இப்டி சொன்ன எப்டிடா?.எனக்கு வேல இருக்கு"
"ஹலோ உன்ட்ட பர்மிஷன் கேட்கலே.இன்ஃபார்ம் பண்றேன்.அவ்ளோ தான்"
"டேய்.." என்று கத்திக் கொண்டு இருக்கும்போதே சித்தார்த் போனை கட் செய்தான்.
ஹரி சித்தார்த்தின் நெருங்கிய நண்பன்.அவன் அப்பாவோடு சேர்ந்து பிஸினஸ் பார்த்து கொண்டிருக்கிறான்.எப்போதும் இருவரும் ஒன்றாக சுற்றுவார்கள்.
'இவன..' என்று பல்லைக் கடித்தவன் அவனுடைய பி.ஏவிடம் செய்ய வேண்டிய வேலைகளை சொல்லிவிட்டு கிளம்பினான்.
ஹரியிடம் பேசிவிட்டு போனை வைத்தவன் அடுத்து சிவேஷை கூப்பிட்டு சில வேலைகளை சொன்னவன் அங்கிருந்து கிளம்பினான்.
சித்தார்த் காரை ஓட்டிக் கொண்டிருந்தான்.
"சித்து எங்க போறோம்?.சொல்லுடா?" என்று கேட்டவனை சித்தார்த் முறைத்தான்.
"டேய் ஏன்டா முறைக்கறே?"
"எங்கடா போறோம்?" என்று அடுத்த கேள்வியைக் கேட்டவன் அவனது பார்வையைப் பார்த்து அமைதியானான்.
கார் வஸ்தராவின் முன் நின்றது.
"டேய் ஷாப்பிங் பண்ண தான் இவ்ளோ அவசரமா கூப்டியாடா?" என்று அவனை திட்டினான்.
"நீ அமைதியா வர்றியா?,இல்லையாடா?"
ஹரி உள்ளே சென்றபோது சஞ்சனாவை பார்த்தவன் திகைத்தான்.
'இந்த பொண்ண எங்கயோ பாத்த மாதிரி இருக்கே?' யோசனையுடன் சித்தார்த்தை பார்த்தான்.
சித்தார்த்தின் பார்வை ரசனையுடன் சஞ்சனாவை வருடியது.
'இவன் என்ன இப்டி பாக்கறான்?!'
அன்று சஞ்சனாவைப் பார்த்தவன் அவளுக்குத் தெரியாமல் போட்டோ எடுத்து தனக்குத் தெரிந்த டிடெக்வ் ஏஜென்சி மூலம் அவளுடைய விவரங்களைச் சேகரிக்க சொன்னான்.
இன்று காலையில் அவர்கள் சஞ்சனாவைப் பற்றிய விவரம் கூறியவுடன் அவளை பார்க்க கிளம்பி விட்டான்.
சஞ்சனா சேலைகளில் போடுவதற்கான டிசைன் வரைந்து கொண்டிருந்தாள்.ஏதோ யோசனையில் இருந்தவள் உள்மனம் உந்த அவனை பார்த்தாள்.அவள் விழிகள் பேசும் மொழியில் சித்தார்த் இமைக்க மறந்தான்.
 

Anuya

Well-known member
#5
ஹாய் பிரண்ட்ஸ்,

3வது எபி போட்ருக்கேன்.படிச்சிட்டு எப்டி இருக்குனு கமெண்ட் சொல்லுங்க.உங்க கமெண்ட்ஸ ஆவலோடு எதிர்பார்க்கிறேன் பேபிஸ்..
 

Anuya

Well-known member
#6
அத்தியாயம் - 4

சஞ்சனா க்ரே கலரில் சின்ன சின்ன டாட்ஸ் உடன் கைகளுக்கு சிகப்பு கலர் பார்டர் வைத்த சுரிதார் அணிந்திருந்தாள்.அவளது அழகு அவனை சுண்டி இழுத்தது.அவளது எளிமையான அழகில் அவன் மயங்கி நின்றான்.
'இவன் என்ன இவங்கள பாத்தாலே ட்ரீம்க்கு போறான்.இது சரியில்லயே?' என்று யோசித்தவன் "டேய்" என்று அழுத்தமாக கூப்பிட்டான்.
"என்னடா?"
"வந்த வேலயப் பாருடா"
"அத தாண்டா பாத்திட்டிருக்கேன்" என்று அசராமல் சித்தார்த் பதிலளித்தான்.
'பயபுள்ள தெளிவா தான் இருக்கு.நம்மள எந்த சிக்கலயும் மாட்டி விடாம இருந்தா சரி' என்ற யோசனையுடன் நடந்தான்.
சஞ்சனா சேலைகளில் போடுவதற்கான ஸ்கெட்ச் வரைந்து கொண்டிருந்தாள்.ஏதோ யோசனையில் இருந்தவள் உள்மனம் உந்த அவனை பார்த்தாள்.அவன் பார்த்த பார்வையில் அவள் திகைத்து போய் அமர்ந்திருந்தாள்.
'இவனா?.இவன் எங்க வந்தான்?' என திகைத்தாள்.
சஞ்சனாவுக்கு அடிக்கடி அவன் ஞாபகம் வந்தது.முதன் முதலாக பட்ட ஆணின் ஸ்பரிசத்தில் அவள் சிலிர்த்தாள்.
அவன் நினைவுகளில் இருந்து அவள் விடுபட முடியாமல் திணறினாள்.திரும்பவும் அவனை திடீரென்று பார்க்கவும் அவள் தடுமாறினாள்.
"வாங்க சார்" என்று அவர்களை வரவேற்றாள்.
அங்கு பணிபுரியும் ஒருத்தியிடம் அவர்களுக்கு வேண்டியதை காட்ட சொல்லி விட்டு சென்றாள்.
தொலைவில் இருந்தே அவர்களைக் கவனித்தவள் அவன் திணறுவதைப் பார்த்து அவர்கள் அருகில் சென்றாள்.
"சார் உங்களுக்கு எந்த மெட்டீரியல வேணும்?"
"சாரி மேடம்.. எனக்கு எந்த ஐடியாவும் இல்ல.இஃப் யூ டோன்ட் மைன்ட் நீங்க செலக்ட் பண்ணி தரீங்களா?"
"ஓகே"
"அவங்க எப்டி இருப்பாங்க சார்?"
"உங்கள மாதிரி இருப்பாங்க"
அங்கிருந்த ஆடைகளில் தேடி ஒரு சேலையை எடுத்தவள் அவனிடம் கொடுத்தாள்.
அவள் கொடுத்ததை வாங்கியவன் அந்த உடையில் அவளை கற்பனையில் ரசித்தான்.அவன் முகத்தில் புன்னகை அரும்பியது.
அவன் புன்னகையில் அவள் இமைக்க மறந்தாள்.
"ஹலோ மேடம்"
"சொல்லுங்க சார்" என்றவளின் முகம் யோசனையைத் தத்தெடுத்தது.
"என்ன மேடம் யோசிக்கிறீங்க?"
"ஒண்ணும் இல்ல சார்" என்று கூறினாள்.
அவள் முக மாறுதல்களைக் கவனித்து கொண்டிருந்தவன் அவளைக் கூப்பிட்டான்.
"மேடம்" என்று இரு முறை கூப்பிட்டவன் அவள் பதில் சொல்லாததால் சஞ்சனா என்று அழுத்தமாக அழைத்தான்.
அதில் திடுக்கிட்டவள் அவனை பார்த்தாள்.
"சா.. சார்" அவள் வார்த்தைகள் வராமல் தடுமாறினாள்.
"என்ன ஆச்சு பேபி?" என்று கனிவுடன் கேட்டான்.அவன் வார்த்தைகளில் அவள் மனம் அமைதி அடைந்தது.
"என்ன கேக்கணுமோ கேளு பேபி" என்று மென்மையாக கூறினான்.
அவன் வார்த்தைகளில் தைரியம் வரப் பெற்றவள் அவனை நோக்கினாள்.
"சொல்லு பேபி"
"உங்களுக்கு மேரேஜ் ஆயிடுச்சா?"
"இல்ல பேபி" அவன் வார்த்தைகளில் அவள் சந்தோஷத்தில் மிதந்தாள்.
"சேரி அம்மாக்கு எடுக்கிறீங்களா?"
ஒரு நிமிடம் தனக்குள் சிரித்தவன் "என் லவ்வர்க்கு" என்று கூறினான்.அவனது வார்த்தைகளில் அவளது இதயம் சுக்கு நூறாக உடைந்தது.
ஹரிஹரன் சித்தார்த்தை திகைப்பாக நோக்கினான்.'இவன் என்ன சொல்றான்?.இத்தன நாள்ல லவ்னு சொன்னதில்லயே' என்று யோசித்தான்.
அவளது முகம் இருண்டது.அவளுக்கு அழுகை வரும் போலிருந்தது.தனக்குள் என்ன நடக்கிறது என்று அவளுக்குப் புரியவில்லை.
அவளை கவனித்தவன் சுற்றுப்புறத்தை நோக்கினான்.தங்களை யாரும் கவனிக்கவில்லை என்று தெரிந்ததும் அவளை தோளோடு லேசாக அணைத்தான்.
"எதையும் தேவையில்லாம யோசிக்காத பேபி.உனக்கு ஏதாவது கேக்கணும்னா என்ன இந்த நம்பர்ல காண்டாக்ட் பண்ணு" என்று சொன்னான்.
அவள் மொழி அறியாதவள் போல் திகைத்து நின்றாள்.இவர்களை ஒருவன் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவர்கள் கடையில் இருந்து கிளம்பும்போது அவனுக்கு போன் வந்தது.போனில் பேசியவன் அதிர்ச்சியில் திகைத்து நின்றான்.
ஹாய் பிரண்ட்ஸ்,
நெஞ்சுக்குள்ள நீ மின்னலடிப்ப 4வது எபி போட்டிருக்கேன்.படிச்சிட்டு கமெண்ட் சொல்லுங்கப்பா..
 

Anuya

Well-known member
#7
அத்தியாயம்-5
வஸ்தராவில் இருந்து அவர்கள் வெளியே வரும்போது சித்தார்த்தின் செல்போன் அடித்தது.போனை எடுத்து பேசியவன் மறு முனையில் சொன்ன தகவலில் அதிர்ந்து நின்றான்.
"டேய் என்ன ஆச்சுடா?" என்று அவனின் முகம் பார்த்து ஹரிஹரன் பதறினான்.
அதில் சுதாரித்தவன் "ஒன்னும் இல்லடா" என்று காரை எடுக்க கிளம்பினான்.
காரை ஓட்டிக் கொண்டிருந்தவன் யோசனையில் ஆழ்ந்தான்.
"சித்து என்னடா யோசிச்சிட்டு இருக்க?"
அவன் பதில் சொல்லுமுன் அவனுடைய செல்லுக்கு போன் வந்தது.யோசித்துக் கொண்டே போனை எடுத்தான்.
"ஹலோ.."
"என்ன லவ் மூட்ல இருக்கியா?"
"ஹுஸ் திஸ்?"
"உன்னோட எதிரி"
"டேய்" என்று சித்தார்த் கத்தினான்.அவனது குரலில் ஹரிஹரன் திடுக்கிட்டான்.
"சஞ்சனா எனக்கு தான்டா.மீறி ஏதாவது பண்ணனும்னு நினைச்ச அவள உருத்தெரியாம அழிச்சிடுவேன்"
அவனது குரலில் முதலில் திடுக்கிட்டவன் பின் அமைதியான குரலில் பேசினான்.
"டேய் அதுக்கு நீ பர்ஸ்ட் உயிரோட இருக்கணும்டா"
"என்னடா மிரட்டறியா?"
"வெயிட் & சீ" என்று காலை கட் செய்தான்.
"சித்து யார்டா போன்ல?"
"தெரிலடா.நம்மள தெரிஞ்சவன் மாதிரி பேசறான். நம்மச் சுத்தி நடக்கறது எதுவும் சரியாப்படல"
"என்னடா சொல்றே?"
"சஞ்சனாவ உருத்தெரியாம அழிச்சிடுவேனு மிரட்டறான்டா"
"சித்தார்த்.."
"ஆமாடா.பட் அவளுக்கு ஏதாவது ஆச்சு அவன சும்மா விட மாட்டேன்டா" என்று கர்ஜித்தான்.
"கூல்டா.விடு பாத்துக்கலாம்"
"ம்ம்" என்று சொல்லியவன் அடுத்து சிலருக்கு கால் பண்ணிப் பேசினான்.யோசனையிலேயே அவன் அந்த நாளை கடந்தான்.
*********
சஞ்சனா தனது தனியறையில் அமர்ந்திருந்தாள்.அவளுக்கு தன்னை சமன் செய்து கொள்ள சிறிது அவகாசம் தேவைப்பட்டது.அவளுக்கு அவள் மேலேயே கோபம் வந்தது.
'யார் இவன்?.இவன பாத்ததில் இருந்து நிம்மதியாவே இருக்க முடில.இவன் யாரையோ லவ் பண்றேனு சொன்னா நான் ஏன் ஃபீல் பண்றேன்?'
கையில் ஏதோ உறுத்திக் கொண்டிருந்தது.என்னவென்று யோசித்த போது அவன் கொடுத்த கார்ட் ஞாபகம் வந்தது.
'இது ஒண்ணு தான் குறைச்சல்.போடா' என்று கிழித்து வீசி எறிந்தாள்.ஹாய் பிரண்ட்ஸ்,
எபி 5 போட்டு விட்டேன்.கதை கரெக்டா போகுதானு சொல்லுங்க பிரண்ட்ஸ்.மீ பாவம்...😂😂😂😂😂
 
#8
அத்தியாயம்-6

அடுத்த இரு நாட்கள் எப்போதும் போல் சென்றது.சித்தார்த் ஒருவித இறுக்கத்துடனே இருந்தான்.
அவன் அலுவலகத்தில் கண்காணிப்பு காமிராவை பார்க்கும்போது சஞ்சனா உட்கார்ந்திருப்பது தெரிந்தது.அவளைப் பார்த்ததும் சூரியனை கண்ட பனி போல தனது இறுக்கங்கள் தளர்வதை உணர்ந்தான்.


'வாவ்.. வாட் எ சர்ப்ரைஸ்?!' என்று நினைத்துக் கொண்டு அவளை சைட் அடித்துக் கொண்டிருந்தான்.அப்போது திவ்யா அங்கு வந்தாள்.

அவளோடு சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தவன் அவளுடன் வெளியே புறப்பட்டான்.
திவ்யா அவனுடன் நெருக்கமாக வந்தாள்.சஞ்சனா ஏதோ யோசனையில் இருந்தவள் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தாள்.அவனைப் பார்த்தவுடன் திடுக்கிட்டு எழுந்து நின்றாள்.


'இவன் எங்கருந்து வந்தான்?.இவன் ஆஃபிஸா இது?.இவன மறக்கணும்னா இவனே கண்ணு முன்னாடி வரானே'

சஞ்சனா அவள் தோழி வைஷ்ணவியுடன் அங்கு வந்திருந்தாள்.வைஷ்ணவி அவளுடைய அண்ணனை பார்க்க சென்று விட்டாள்.அவளுக்காக சஞ்சனா வெயிட் பண்ணிக் கொண்டிருந்தாள்.

"ஹாய் பேபி" என்றான்.

"ஹுஸ் திஸ் டார்லிங்?" என்று அவனிடம் கொஞ்சிக் கொண்டே கேட்டாள் திவ்யா.

"இது சஞ்சனா டியர்" என்றான்.

சித்தார்த் திவ்யாவை தோளோடு அணைத்தபடி வந்தான்.அவனை பார்க்க பார்க்க அவளுக்கு உள்ளுக்குள் கோபம் பொங்கியது.அவள் அவனை பார்வையாலே எரித்து விட்டு கிளம்பினாள்.

'டார்லிங்னு அவள கொஞ்சறான்.அன்னைக்கு ரொம்ப நல்லவன் மாதிரி பேசனான்.கேர்ள்ஸ் யாரையும் விட மாட்டான் போல.விமனைஸர்,ஃபிராடு' என்று அவனை திட்டிக் கொண்டே அலுவலகத்தை விட்டு வெளியில் வந்தாள்.

"பேபி நில்லு.எங்க போற?" என்று அவன் அவளின் பின்னே ஓடினான்.

"ஹலோ நீங்க யார்னே எனக்குத் தெரியாது.திஸ் ஸ் தி லிமிட்" என்று அவள் அவனை திட்டினாள்.அவளது பேச்சில் அவன் உறைந்து நின்றான்.

நிமிடத்தில் சுதாரித்தவன் "பேபி வெய்ட்.நான் டிராப் பண்றேன்" என்று கூறினான்.

அவன் அவள் கைகளை பிடித்தபோது அவள் அவனை அறைந்தாள்.சித்தார்த் திடுக்கிட்டான்.

அவள் அவனை சந்தித்ததில் இருந்து அவள் குழப்பமான மன நிலையிலே இருந்தாள்.அவளுக்கு அவன் ஞாபகம் அடிக்கடி வந்தது.ஏன் இப்படி என்று காரணம் புரியாமல் அவள் தவித்தாள்.

அன்று வஸ்தராவில் அவன் கனிவாக பேசும்போது அவள் மனம் அமைதி அடைந்தது.அதே சமயம் அவன் தன் காதலிக்கு என்று சொல்லும்போது அவள் உள்ளுக்குள் உடைந்தாள். அவளால் எந்த வேலையிலும் ஒழுங்காக ஈடுபட முடியவில்லை.

இந்த இரு நாட்களில் அவள் தனக்குள்ளே போராடிக் கொண்டிருந்தாள்.திவ்யாவிடம் அவன் உரிமையாக பேசவும் அந்த போராட்டம் கோபமாக மாறியது.தன்னை மீறிய அழுத்தத்தில் அவனை அடித்தாள்.

அவனை அடித்தவுடன்தான் தான் என்ன செய்தோம் என்றே புரிந்தது.அவள் பேச்சற்றுப் போய் அவனை பார்த்தாள்.

சித்தார்த் கோபமாக பேச வந்தவன் அவன் முகத்தைப் பார்த்து அமைதியானான்.

"பேபி ஏன் இவ்ளோ கோபப்படறே?"

அவனை அடித்த அதிர்ச்சியில் இருந்தவள் அவனது கேள்வியில் மீண்டாள்.

"யூ ஆர் ஃபிராடு,விமனைஸர்"

அவளது குற்றச்சாட்டில் அவனுக்கு கோபம் வந்தது.

"ஏய் என்னடி விட்டா பேசிட்டே போற?.மைண்ட் யுவர் வேர்ட்ஸ்.என்ன பத்தி உனக்கு என்ன தெரியும்?"

"உங்கள பத்தி எனக்கு ஒண்ணும் தெரியாது.என்ன விட்டுடுங்க" என்றாள்.

"போடி" என்று ஆத்திரத்துடன் அவளை திட்டிவிட்டு சென்றான்.

ஹாய் பிரெண்ட்ஸ்,
6வது எபி போட்டுட்டேன்.படிச்சிட்டு கமெண்ட் சொல்லுங்க. 
#9
அத்தியாயம்-7

சஞ்சனாவின் அநியாய குற்றச்சாட்டில் அவளை திட்டியவன் கோபத்துடன் அலுவலகத்துக்கு வந்தான்.

'ச்சே,என்ன திமிர் அவளுக்கு?.நான் விமனைஸரா?.என்ன பத்தி அவ என்ன நினைச்சிட்டிருக்கா?.முட்டாள்' என்றூ கோபத்துடன் திட்டினான்.

ஏதேதோ யோசனையில் இருந்தவன் திடீரென அவள் தனியாகப் போனது நினைவு வந்ததும் பதறியடித்துக் கொண்டு புறப்பட்டான்.

'ஏன்டா இதான் கோபப்படற நேரமா?.இடியட்' என்று தனக்குள் திட்டிக் கொண்டே புறப்பட்டான்.

அவளைக் காணாமல் அவனின் ஒவ்வொரு அணுவும் பதறியது.அவன் பதட்டமாக போன் செய்து கொண்டே ஓட்டினான்.

சித்தார்த் அவளை இரு பக்கமும் தேடிக் கொண்டே வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தான்.அப்போது யாரோ ஒரு பெண் வேகமாக ஓடி வந்து கொண்டிருப்பது தெரிந்தது.

அதை பார்த்தவன் வண்டியை நிறுத்தி விட்டு இறங்கினான்.அங்கே சஞ்சனா ஓடி வந்து கொண்டிருந்தாள்.அவனைப் பார்த்ததும் தாய்மடி தேடும் குழந்தை போல அவனிடம் ஒண்டினாள்.

சஞ்சனா அவனிடம் சண்டை போட்டு விட்டு கோபத்துடன் வந்தாள்.அவளுக்கு இருந்த குழப்பத்தில் அவள் தனக்கு பின்னால் வந்தவர்களை கவனிக்கத் தவறினாள்.

அவள்அந்த சாலையை கடக்கும் போது மூன்று ரௌடிகள் அவளை பின்தொடர்ந்தனர்.

அவர்களைப் பார்த்ததும் அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக ஓடி வந்தாள்.அப்போது உதவி கேட்கலாம் என்று வரும்போது சித்தார்த்தை சந்தித்தாள்.

"பேபி ரிலாக்ஸ்.ஒண்ணும் இல்ல" என்று அவன் சமாதானப்படுத்திக் கொண்டிருக்கும்போதே இன்னொரு கார் வந்தது.அதில் இருந்து இறங்கியவர்கள் அந்த ரௌடிகளைப் பிடித்து சென்றார்கள்.

அவன் அந்த அதிகாரிகளுடன் பேசிவிட்டு அவளை தனது கெஸ்ட் ஹவுஸிற்கு கூட்டிச் சென்றான்.

ஹாய் பிரெண்ட்ஸ்,
7th epi போட்டுட்டேன்.படிச்சிட்டு கமெண்ட் சொல்லுங்க.
 
#10
அத்தியாயம்-8

சித்தார்த் காரை ஓட்டிக் கொண்டிருந்தான்.சஞ்சனா அவன் அருகில் நடுக்கத்தோடு அமர்ந்திருந்தாள்.
அவளை பார்த்தவன் அவள் கைகளை ஆறுதலாக அழுத்தினான். அவள் அவன் முகத்தைப் பார்த்தாள்.கார் கெஸ்ட் ஹவுஸின் முன் நின்றது.அவன் அவளை வீட்டினுள் கூட்டிச் சென்றான்.


அவளை அறையினுள் உட்கார வைத்தவன் அவளுக்கு குடிக்க ஜூஸ் கொண்டு வந்து கொடுத்தான்.
"ஜூஸ் குடி பேபி" என்றான்.அவள் குடித்தாள்.அவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.அவள் இன்னும் பதட்டத்தில் இருந்தாள்.அவளை அணைத்து ஆறுதலளிக்க அவன் கைகள் பரபரத்தது.அவன் தன்னை அடக்கிக் கொண்டான்.


"என்ன மன்னிச்சிரு பேபி" என்றான்.அவள் அவனைத் திகைத்துப் போய் பார்த்தாள்.

"என்னால தான் உனக்கு பிராப்ளம்?.என்னப் பாக்கலேன்னா நீ தனியா வந்திருக்க மாட்டேல்ல?" என்று சொல்லிக் கொண்டே வந்தவன் அவளை தனது தோழிக்கு போன் பண்ணி தகவல் சொல்ல சொன்னான்.

அவன் சொன்னதும் தான் அவளுக்கு வைஷ்ணவியின் ஞாபகம் வந்தது.அவள் வைஷ்ணவிக்கு போன் பண்ணினாள்.

"ஹலோ"

"எங்கடி போன பக்கி?.எவ்ளோ நேரம் போன் பண்றது?"

"சாரிடி.ஏதோ யோசனையில கிளம்பிட்டேன். நீ வீட்டுக்குப் போடி.நான் வந்தறேன்"

"ஏய் பாத்து வாடி" என்று போனை கட் பண்ணிணாள்.

சித்தார்த் அவள் பேசுவதை கவனித்தவன் அவள் அருகில் உட்கார்ந்தான்.

"சொல்லு பேபி. ஏன் அப்டி சொன்ன?"

அவன் அப்படி சொன்னதும் தான் அவளுக்கு தன்னுடைய காரணங்கள் ஞாபகம் வந்தது.அவன் கூட வந்ததை எண்ணி தன்னையே நொந்து கொண்டாள்.

"ஏன் பேபி அமைதியா இருக்க?.உனக்கு இன்னும் என்மேல கோபம் போகலயா?"

"ஹலோ நீங்க யார்னே எனக்குத் தெரியாது.பாத்த செகண்ட் நாளே பேபினு சொல்றீங்க?.அன்னைக்கே உரிமையா நடந்துக்கறீங்க?.என்ன நெனச்சிட்டு இருக்கீங்க?.அன்னைக்கு ஷாப்பிங்ல அவன் நடந்ததுக்கும்,நீங்க நடந்ததுக்கும் என்ன வித்தியாசம்?"

அவன் அவள் கேள்விகளில் திகைத்து நின்றான்.

"பேபி.. சாரி சஞ்சனா நீ 1 இயர் முன்னாடி கேரளா போயிருந்தயா?"

'நான் என்ன கேக்கறேன்?.இவன் சம்பந்தமே இல்லாம பேசறான்?' என்று யோசித்தாள்.

"சஞ்சனா யோசிச்சது போதும்.பதில் சொல்லு" என்ற அவனது அழுத்தமான குரலில் "ம்ம்" என்று தலையாட்டினாள்.

அவளது தலையாட்டலில் அவன் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான்.

"அங்க வர்கலா பீச்ல உன்ன பாத்தேன்.பௌர்ணமி இரவு,சுத்திலும் இயற்கை காட்சி,அப்போ வானத்தில திடீர்னு மின்னல்... மின்னல் அடிச்சதுன்னு திரும்பினா அந்த மின்னல் ஒளியில் இருந்து வந்த மாதிரி நீ வொயிட் ட்ரெஸ்ல தேவதை மாதிரி வந்த.அப்பயே நீ மின்னல் மாதிரி நெஞ்சுக்குள்ள வந்துட்ட" என்று தன் நெஞ்சை சுட்டி காட்டினான்.அவள் அவன் கூறியதில் அவள் பேச்சற்றுப் போய் அமர்ந்திருந்தாள்.

"அப்ப உன்ன கண்டுபிடிக்க டிரை பண்ணேன்.ஆனா அன்ஃபார்ச்சேனேட்லி உன்ன கண்டுபிடிக்க முடியல.அப்றம் உன்ன ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்ல தான் பாத்தேன்.என்னால அத வார்த்தையால விவரிக்க முடியல.உன்ன பாத்த சந்தோஷத்துல நான் திகைச்சுப் போயிட்டேன்"

"அப்றம் எனக்கு தெரிஞ்ச டிடெக்டிவ் மூலமா உன்ன பத்தி டீடெல்ய்ஸ் கண்டுபிடிச்சேன்.அதனால அன்னைக்கு உன்ன பாக்க என் ப்ரெண்டோட வந்தேன்.உன்ன பேபி பேபின்னு மனசுக்குள்ள கூப்ட்டு அப்டியே வந்திருச்சு.அதனால தான் உன்ன அப்டிக் கூப்ட்டேன்"

அவள் அவன் விவரங்களில் விழி விரித்தாள்.

"அன்னைக்கு அந்த பொறுக்கி உன்ட்ட தப்பா நடந்தப்ப அவன கொல்லணும்னு வெறி வந்தது.நான் அன்னைக்கே அவன வார்ன் பண்ணி அனுப்பினேன்.ஆனால் அந்த பொறுக்கி உன்ன உருத்தெரியாம அழிச்சிடுவேனு என்னயே மிரட்டறான்.ஸ்கௌண்ட்ரல்"

அவனது கோபத்தில் அவள் பயந்தாள்.அவளது பயந்த முகத்தை பார்த்தவன் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டான்.

"கூல் பேபி" என்று அவளை அவன் சமாதானப்படுத்தினான்.

"அவங்க உன்ன பத்தின டீடெல்ய்ஸ் கலெக்ட் பண்றப்ப உன்ன யாரோ ஃபாலோ பண்றதா சொன்னாங்க.கரெக்டா அதே டைம்ல என்ன போன்ல ஒருத்தன் மிரட்டினான்"

"அப்றம் நானும் ஹரியும் டிஸ்கஸ் பண்ணிட்டு என்னோட ஃபிரெண்ட் ஒருத்தன் போலீஸ் ஆபிஸரா இருக்கான்.அவன் மூலமா அவன டிரேஸ் பண்ணி அவன் வெளிய வர முடியாத மாதிரி போலீஸ்லயும் ஹேண்ட் ஓவர் பண்ணிட்டோம்"

தனக்கு தெரியாமல் இவ்வளவு நடந்ததா? என அவள் வியந்தாள்.

"ஆனா நீங்க அன்னைக்கு யாரையோ லவ் பண்றேனு சொன்னீங்க?"

"பேபி இன்னும் என்மேல சந்தேகமா?"

"இன்னைக்கு கூட உங்க கூட ஒரு பொண்ணு க்ளோஸா இருந்தா?!"

அவள் குரலில் பொறாமை எட்டிப் பார்த்தது.

"பேபிக்கு பொறாமையா?" என்று அவன் சிரித்தான்.அவள் முகம் சிவக்க தலை குனிந்தாள்.

"அவ என் கஸின் பேபி.உன்ன சைட் அடிச்சிட்டிருந்த பார்த்து அவ தான் உன் மைண்ட்ல என்ன இருக்குனு தெரிஞ்சிக்க ஐடியா கொடுத்தா.ஐடியா சூப்பரா ஒர்க் அவுட் ஆயிடுச்சு" என்று சிரித்துக் கொண்டே அவன் கன்னம் தடவினான்.

"ஐ ஏம் எக்ஸ்ட்ரீம்லி சாரி" என்று அவன் கன்னத்தை தடவிக் கொடுத்தாள்.

"இட்ஸ் ஓகே பேபி" என்று அவன் அவள் கையில் முத்தமிட்டான்.

அவளை விட்டு விலகியவன் அருகிலிருந்த பீரோவில் இருந்து ஒரு கவரை எடுத்து கொடுத்தான்.
என்ன என்பது போல பார்த்தவள் அதனை பார்த்தாள்.அதைப் பார்த்ததும் அவள் முகம் பூரிப்பில் மலர்ந்தது.


அவன் குறும்பாக "என் லவ்வர்க்கு வாங்கினதுங்க.பிடிச்சிருக்கா?" என்று சிரித்துக் கொண்டே கேட்டான்.அவள் வெட்கப்பட்டுக் கொண்டே தலையாட்டினாள்.

"அப்றம் இன்னொரு டவுட்"

"கடவுளே திரும்பவுமா?!" என்று அவன் அதிர்ச்சியானான்.

"அதெல்லாம் ஒண்ணும் இல்ல"

"வேற என்ன டவுட்?"

"அது..."

"சொல்லு பேபி"

"வந்து.."

"சொல்லு பேபி.என்ட்ட என்ன தயக்கம்?" என்று அவளை ஊக்கினான்.

"உங்க பேர் என்ன?"

"அடிப்பாவி பேர் என்னனு தெரியாம தான் என்கூட சண்ட போட்டியா?.நான் அன்னைக்கு என் கார்ட் கொடுத்தேனே?"

"சாரி.அது அன்னைக்கு உங்க மேலே இருந்த கோபத்துல கிழிச்சு போட்டுட்டேன்" என்று தயங்கிக் கொண்டே சொன்னாள்.

அவன் அவளை கோபமாக பார்த்தான்.

"சாரி.ப்ளீஸ்" என்று கண்ணைச் சுருக்கினாள்.அவளது செய்கை அவனுக்கு சிறு பிள்ளை தவறு செய்து மன்னிப்பு கேட்பது போல் இருந்தது.அதில் அவன் சிரித்தான்.

"நல்ல வேளை இப்பயாவது கேக்கணும்னு தோணுச்சே" என்றவன் "சித்தார்த்" என்றான்.

"பேபி நீ பேபினு நிரூபிக்கற பாத்தியா?" என்று அவள் தலையில் முட்டினான்.அவள் அவன் கைகளில் சரணடைந்தாள்.
முற்றும்
 
#11
ஹாய் ஃபிரெண்ட்ஸ்,
கதைய முழுதாக முடித்து விட்டேன்.படிச்சிட்டு உங்க கமெண்ட்ஸ் சொல்லுங்க.சுதா ரவி சிஸ் உங்களுக்கு ரொம்ப தேங்க்ஸ்.புதுசா எழுதறேனு நான் தயங்கினப்ப வெற்றியோ,தோல்வியோ டிரை பண்ணுங்கனு சொன்னீங்க.நான் நாவல் எழுதுவேன்,வெப்சைட் போடுவேனு கொஞ்சம்கூட எதிர்பார்க்கல.மெயில் பண்ணவுடனே போஸ்ட் பண்ணி விட்ருவாங்க.ரொம்ப தேங்க்ஸ் சுதா சிஸ்.கௌரி முத்துகிருஷ்ணன் சிஸ் உங்களுக்கும் தேங்க்ஸ்.நீங்க சின்ன கதைக்கு சொன்னத வச்சு தான் நான் இந்த நாவல் எழுதிருக்கேன்.உங்களுக்கும் ரொம்ப தேங்க்ஸ்.அருணா பேபி நான் குழம்பிருக்கறப்பலாம் என்கரேஜ் பண்ணீங்க.நான் என்ன மெசேஜ் பண்ணாலும் ரிப்ளை பண்ணீங்க.ரொம்ப தேங்க்ஸ் பேபி.என் சிஸ்டர் கதைய எப்டி கொண்டு போகணும்னு அவங்க கேள்விகளாலேயே எனக்கு இன்ஸ்ட்ரக்ஸன் குடுத்தாங்க.அவங்களுக்கும் ரொம்ப தேங்க்ஸ்.இன்னும் என் டவுட்ஸ் கிளியர் பண்ண எல்லாருக்கும் தேங்க்ஸ்.லாஸ்ட் பட் நாட் லீஸ்ட் ரீடர் உங்களின் ஆதரவுக்கு மிக்க நன்றி.அதே மாதிரியே கதை ஃபுல்லா படிச்சு கமெண்ட் சொல்லுங்க பேபிஸ்.நான் கரெக்டா தான் எழுதறனானு குழப்பமா இருக்கு.மீ பாவம் இல்லையா......