பயணங்கள் தொடரும் - கதை திரி

sudharavi

Administrator
Staff member
#1
ஹாய் பிரெண்ட்ஸ்,

சித்ரா தேவி அவர்கள் "பயணங்கள் தொடரும்" என்கிற தலைப்போடு போட்டியில் இணைகிறார்.
 
#2
வணக்கம் தோழிகளே என்னுடைய கதையின் முதல் அத்தியாயம் பதிந்து விட்டேன். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் தோழிகளே

பயணங்கள் தொடரும்….


கீதாஞ்சலி நெற்றியில் சிறிய கருப்பு பொட்டை ஒட்டியவள், அந்த ஆள் உயர கண்ணாடியில் தன்னை மீண்டும் சரிபார்த்துக் கொண்டாள்.

ஆம் மீண்டும் என்றால், குளித்து தயாராகி வந்த இந்த அரைமணி நேரத்தில் கீதாஞ்சலி பலமுறை, தான் சரியாக தயாராகி இருக்கிறோமோ என சரி பார்த்துக்கொண்டே இருந்தாள்.

இவள் செய்வதையே வாஞ்சையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் மதுரிமா…

மதுரிமா, கீதாஞ்சலியின் செல்லத் தங்கை… கீதாவிற்கு பிறகு ஐந்து வருடங்கள் கழித்து பிறந்தவள்…. அருண், கீதாவிற்கு இரண்டு வயது மூத்த சகோதரன்…

இது நாள் வரை நல்ல தோழனாகவும், தாய், தந்தையுமாகவும் இருந்தவன், இப்போ சில மாதங்களாக கீதாவிடம் சரியாக பேசுவதேக் கிடையாது.

கீதாவிற்கு வருத்தமாக இருந்தாலும், வெளியே காண்பித்துக் கொள்ள மாட்டாள். சின்னவள் தான் குதிப்பாள், எல்லாம் இந்த அண்ணியால் தான் என்று கூறுவாள்.

நந்தினி தான் இவர்களின் அண்ணி. அவளை அண்ணியாக தேர்ந்தெடுத்ததே இவர்கள் இருவரும் தான்….

ஆம் ஆறு வருடங்களுக்கு முன்பு ஒரு விபத்தில் அவர்களின் பெற்றோர் இறந்து விட்டார்கள்….. அவர்களோடு சேர்ந்து கீதாவின் வாழ்க்கையும் முடிந்தது….

கீதாவின் கல்லூரி காலம் முடிந்தவுடன், அவசரமாக திருமணம்…. இவள் ஜாதகத்தில் ஏதோ கிரகம் சரியில்லை… உடனே திருமணம் செய்ய வேண்டும், இல்லையென்றால் சன்னியாச வாழ்க்கை என்று ஜோசியர் கூற, உடனடியாக திருமணம் நடத்தப்பட்டது…. ஆனால் ஆரம்பத்த வேகத்த்திலே இவளது திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது….

திருமணம் முடிந்த ஒரு வாரத்தில் , ஏதோ ஒரு கோவிலுக்கு குடும்பத்தோடு சேர்ந்து செல்லும் போது, எதிரே வந்த இரண்டு சக்கர வாகனத்தில் இவர்களின் டிரைவர் மெதுவாக இடித்து விட்டார்.

எதிரே வந்தவரோ விடாமல் சண்டை போட, டிரைவரால் சமாளிக்க முடியாமல், மாமனும், மருமகனும் சமாதானம் செய்ய முயன்றார்கள்… ஆனால் எதிரே வந்தவரோ விடாமல் பிரச்சனை செய்தார்...
மணி ஆகி விட்டது என்று அவர்களை கூப்பிடுவதற்காக இறங்கிய இவர்களின் தாயும், சேர்ந்து எதிரே வந்த லாரியால் மோதப்பட்டு , அந்த இடத்திலே ஐவரும் இறந்தனர்.

காரில் இருந்ததால் இவர்கள் மூவர் மட்டும் உயிர் தப்பினர்‌.

ஒரு புறம் தன் கணவனையும், மறுபுறம் தன் தாய் தந்தையும் இழந்து பித்துப் பிடித்தாற் போல் இருந்த பெரிய தங்கையையும், கண் முன்னே நடந்த கோர விபத்தைப் பார்த்து மலங்க மலங்க விழித்த சிறிய தங்கையையும், தாயாய் நின்றுத் தாங்கி அவர்களை ஆளாக்கியவன் தான் அவர்களின் அண்ணன்.

முப்பது வயது வரை திருமணம் செய்யாமல், இவர்களுக்காகவே வாழ்ந்தவனை, மல்லுக்கட்டி சம்மதம் வாங்கி, திருமணம் ஏற்பாடுகளைச் செய்தனர். தரகர் மூலம் வந்த வரன் தான் நந்தினி. பார்த்தவுடனே இவர்கள் இருவருக்கும் பிடித்து விட்டது.

மதுமா என அவள் தோளை பிடித்து அசைத்தாள் கீதா….

பழைய நினைவுகளில் மூழ்கி இருந்த மது திடுக்கிட்டு நிமிர கீதா அவளின் அருகில் நின்றிருந்தாள்.

என்ன அக்கா கூப்பிட்டிங்களா என மது வினவ…

அது இல்லை மதுமா, என்னையே பார்த்துக் கொண்டு இருந்தியே புடவை நல்லா இல்லையா?...

அய்யோ அக்கா நான் வேற ஏதோ நினைவில் இருந்துட்டேன். இந்த நீல நிற புடவையில் நீ எப்படி இருக்கிற தெரியுமா? தேவதை மாதிரி இருக்கிற கா …

ஆமாக்கா என்னாச்சு கண்ணாடி முன்னாடி இவ்வளவு நேரமா நின்னுட்டே இருக்க…

அது இன்னைக்கு இன்டர்வியூல, அதான் கொஞ்சம் டென்ஷனா இருக்கு டா, ட்ரஸ்ஸிங் சென்ஸ் எப்படி இருக்கு என்று வேற பார்ப்பாங்க… அது தான் நல்லாயிருக்கா என்று பார்த்தேன் டா.

அக்கா இன்டர்வியூ நீ நல்லா பண்ணுவ, எனக்கு நம்பிக்கை இருக்கு...

சரி நீ போக்கா, நானும் என்னோட ரூம்க்கு போய் ரெடியாகி விட்டு வரேன். இன்னைக்கு ஆஃபிஸ்க்கு சீக்கிரமாக வரச் சொன்னாங்க
என்று கூறிய மது...

ஆமாம் உனக்கு எத்தனை மணிக்கு
இன்டர்வியூ என வினவ ….

பதினொன்று மணிக்கு தான் மது, பொறுமையாக போனால் போதும் என்றாள் கீதா.

அண்ணா வராங்களா என மது வினவ…
தெரியலை கேட்கணும், இல்லை என்றால் ஆட்டோ பிடித்து போகணும் டா, சரி வா என்றவள் கிச்சனுக்குள் சென்றாள்.

நடுத்தர வர்க்கத்திற்கு சற்று மேற்பட்டவர்கள்.
மூன்று பெரிய படுக்கையறை, அட்டாச் பாத்ரூம் வசதிகளுடன் உள்ளது. கிச்சன், டைனிங் ஹால் என சகல வசதிகளுடன் கூடிய வீடுதான் இவர்களுடையது…

பணத்திற்கு என்றுமே பிரச்சனை கிடையாது .
இவர்களின் தந்தை மூவரின் பேரிலும் பேங்கில் கணிசமாக பணம் போட்டு வைத்திருந்தார். அருணுக்கும் நல்ல வேலை, நல்ல சம்பளம்…

சமையல் மட்டும் நந்தினி செய்வாள். மேல் வேலைக்கு ஆள் உண்டு.

அதனால் இவர்கள் இருவருக்கும் பெரியதாக வேலை கிடையாது...

கீதா கிச்சனுக்குள் சென்று அண்ணி செய்து வைத்ததை டேபிளில் அரேஞ்ச் செய்தாள்.

காலை சாப்பாடு அண்ணன் வேலைக்கு போவதற்கு முன்பு அனைவரும் ஒன்றாக அமர்ந்துச் சாப்பிடுவார்கள்.

கீதா மதுவைக் காணோம் என்று எட்டி எட்டி பார்த்துக் கொண்டே இருந்தாள்.

அண்ணன், அண்ணி வந்து விட்டார்கள் என்றால், மது இல்லை என்றால் அதற்கு வேறு ஒரு வாக்குவாதம் வரும்….

ஏன் தான் சின்னக்குட்டி இப்படி பண்ணுதோ
என நினைத்துக் கொண்டு டென்ஷனோடு இருந்தாள் மது.

அருணும், நந்தினியும் ரூமிலிருந்து வெளியே வந்து, நந்து கீதா ரெடியாகி விட்டாளா இன்னைக்கு தான இன்டர்வியூ என வினவ…

அதெல்லாம் கீதா அண்ணி, கரெக்டா கிளம்பியிருப்பாங்க அருண். நீங்க வாங்க சாப்பிட என்றவள் , ஆனால் உங்கள் சின்னக்குட்டி தான் ரெடியாகி இருக்க மாட்டாள் என்று மதுவை பற்றி சரியாக கணித்தாள் நந்தினி .

அருண் வந்து சாப்பிட அமர்ந்தான்.
கீதா, மது எங்க இன்னும் வரவில்லையா என வினவ…

இதோ வந்துட்டேன் அண்ணா என்று கூறிக்கொண்டே அவளும் அமர்ந்துக் கொண்டாள்.

கீதாவும், நந்தினியும் அவர்கள் இருவருக்கும் பரிமாறி விட்டு அவர்களும் அமர்ந்து உணவருந்தத் தொடங்கினர்.
 
#3
கீதா இன்டர்வியூக்கு தயாரா என்று அருண் வினவ….

கிளம்பிட்டேன் அண்ணா, பதினொரு மணிக்கு போனால் போதும். நீங்கள் ட்ராப் பண்ணுறீங்களா அண்ணா எனத் தயங்கிக் கொண்டே கேட்டாள்….

சரி வா என்றவன், "நான் என் ஆபிசுக்கு போன் பண்ணி ஆஃப் டே லீவ் கேட்கிறேன்" என்றான் அருண்.

நந்து நீ எனக்கு லஞ்ச் பேக் பண்ண வேண்டாம் என….

சரி என தலையசைத்தவள், அருண் அண்ணிக்கு வேலை கிடைச்சவுடன், ஸ்கூட்டி வாங்கி கொடுத்துருங்க…. அவங்க யாரையும் எப்போதும் எதிர்பார்க்காமல் தனியாக போக அது தான் வசதி என்றாள்….

நந்தினி கூறியதை கேட்ட கீதாவின் கண் கலங்க , மெல்ல சமாளித்துக் கொண்டாள்.

மது தான், எதுக்கு அண்ணா இன்னொரு வண்டி, நானும் அந்த பக்கம் தான் போகனும்...
இன்னைக்கு நான் சீக்கிரம் போக வேண்டும். இல்லையென்றால் நானே ட்ராப் பண்ணிவிடுவேன் என்றாள்.

மது, நீ சும்மா இரு, பெரியவங்க எது செய்தாலும் அது நல்லதுக்கு தான் புரியுதா என்ற அருண், உனக்கு ஆஃபிஸ்க்கு டைம் ஆகிடுச்சு என்றால் நீ கிளம்பு என்றவன், பிறகு கீதாவைப் பார்த்து நீ போய் ரெடியாகு என்றான் அருண்.

*********************************
காரில் போகும் போது, அருகில் அமர்ந்து இருந்த கீதாவைப் பார்த்து, ஏன் டா ஸ்கூட்டியில் போக பயமா இருக்கா, இல்லை ஸதனியாக போக பயமா இருக்கா என வினவ ….

அதெல்லாம் ஒன்னும் இல்லைணா, என மெல்லிய குரலில் கூறினாள் கீதா.

இங்கிருந்து பதினைந்து நிமிடங்கள் தான் மா…
எந்த பயமும் கிடையாது …. உனக்கு ஆஃபிஸ்ல லேட்டானா எனக்கு ஃபோன் பண்ணு…. அண்ணா வந்து அழைச்சிட்டு போறேன் சரியா, என சின்னக்குழந்தைக்கு சொல்வது போல் அருண் கூற..

கீதாவின் முகத்தில் மெல்லிய புன்னகை மலர்ந்தது, அதை அடக்கிக் கொண்டு முதலில் வேலை கிடைக்கட்டும் அண்ணா, என்றாள்…

உன் திறமைக்கு கட்டாயம் வேலை கிடைக்கும் கீதா… உன் அண்ணி அதனால் தான் உன்னை கட்டாயப்படுத்தி வேலைக்கு போக சொன்னாள் என அருண் கூற, சரி அண்ணா என்றவள், அந்த நிகழ்ச்சியை மீண்டும் நினைவுக்கு கொண்டு வந்தாள்.

அண்ணன் திருமணம் முடிந்து விருந்து, மறுவீடு சடங்கு, உறவினர்கள் வீட்டு விருந்து எல்லாம் முடிந்து, இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியிருந்தனர்.

மறுநாள் காலையில் கீதா வழக்கம் போல் கிச்சனுக்குள் சென்றுப் பார்த்தால், நந்தினி எல்லா வேலைகளையும் முடித்திருந்தாள்.
ஏன் அண்ணி நான் வந்து செய்வேன் இல்லை. நீங்க ஏன் கஷ்டப்படுறீங்க என்றாள் கீதா.

என் வீட்டு வேலை செய்ய எனக்கென்ன கஷ்டம்…. நீங்க போங்க அண்ணி நான் பார்த்துக்கொள்கிறேன் என நந்தினி கூறினாள்.

அப்புறம் உங்களுக்கு வீட்டில் இருக்க போரடிச்சா வேலைக்கு போங்க… படித்த படிப்பை வீணாக்க கூடாது…. உங்களோட சின்னவள் மது வேலைக்கு போகலையா? நானும் கொஞ்சம் நாளில் பொட்டிக் வைக்கலாம் என்று ஐடியா வைத்திருக்கிறேன்…. நீங்களும் சொந்த காலில் நில்லுங்க அண்ணி, எனக் கூற….
அவளின் அம்மாவோ, நீ சும்மா இரு நந்து , அவங்க அண்ணன் இருக்கும் போது, அவளுக்கு என்ன கவலை… நீ எதிலும் தலையிடாதே என்று கூறி மகளை கையோடு அழைத்துச் சென்று விட்டார்.
முதல் முறையாக தன் தாய், தந்தை இறந்த பிறகு அந்த வீட்டில் அன்னியமாக உணர்ந்தாள்.

கீதா என அருண் அழைக்க, பழைய நினைவுகளில் இருந்து மீண்டாள். ஆஃபிஸ் வந்துடுச்சு மா, ஆல் தி பெஸ்ட் என, அவள் முகத்தில் மெல்லிய புன்னகை படற… வரேன் அண்ணா எனக் கூறி உற்சாகத்துடன் அலுவலகத்தில் உள்ளே நுழைந்தாள்….


பயணங்கள் தொடரும்…..
 
#4
அத்தியாயம் -2

கீதாஞ்சலி, அந்த வானுயர்ந்த கட்டிடத்தை நிமிர்ந்துப் பார்த்து, ஒரு நிமிடம் திகைத்து, பின் தன்னை சமாளித்துக் கொண்டு உள்ளே நுழைந்தாள்.


இவள் இன்டர்வியூக்கு வந்த நிறுவனமான ஈஸி சொல்யூஷன் ஐந்தாவது தளத்தில் இயங்கி வருகிறது.

கீதா முன்பே விசாரித்துத் தெரிந்துக் கொண்டதால், நேரே லிப்டில் ஏறி ஐந்தாவது தளத்திற்கு சென்று ரிஷப்ஷனில், இன்டர்வியூக்கு வந்திருப்பதாக தெரிவித்தாள்.

ரிஷப்ஷனில் நின்றிருந்தவள், அழகாக புன்னகைத்து," வெல்கம் மேம், ப்ளீஸ் வெயிட் இன் திஸ் சைட்" என்று கூறினாள்.

கீதா, அவள் கூறிய இடத்தைப் பார்த்து திகைத்து தான் போனாள். இன்டர்வ்யூ நடப்பதோ நான்கு கேண்டிடேட் தேர்வு செய்ய தான், வந்திருப்பதோ முப்பது பேருக்கு மேலாவது இருப்பார்கள்.

கடவுளே! எப்படியாவது இன்டர்வ்யூல செலக்ட் ஆக வேண்டும் என்று அவசர வேண்டுதலை, வைத்து விட்டு அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தாள்.

அங்கே ஒருபுறம் அப்பொழுது தான் கல்லூரி முடித்து விட்டு வந்த இளைஞர், இளைஞிகள் பயமோ, பதட்டமோ இன்றி இலகுவாக அமர்ந்திருந்தனர்.

இன்னொரு புறமோ, அனுபவம் பெற்றவர்கள் தன்னம்பிக்கையோடு அமர்ந்திருந்தனர்.

இவள் ஒருத்தி தான் டென்ஷனோடு இருந்தாள். கீதா மெல்ல தன்னை ரிலாக்ஸ் பண்ணிக் கொண்டு சுற்றிப் பார்த்தாள்.

அவளுக்கு பின்புறம், ஓரமாக அமர்ந்து இருந்த நால்வரையும் பார்த்தவுடன், அவளுக்கு தன்னுடைய, கல்லூரி கால வாழ்க்கை ஞாபகம் வந்து விட்டது.

பெருமூச்சு விட்டுக் கொண்டே, அந்த நினைவுகளில் இருந்து வெளியே வருவதற்காக, கவனத்தை திசை திருப்பினாள்.அங்கிருந்த மேசையின் மேல் இருந்த புக்லெட்டை எடுத்து படிக்க ஆரம்பித்தாள்.

கம்பெனியின் வளர்ச்சி பற்றி எழுதி இருப்பதைப் பார்த்து பிரம்மித்து தான் போனாள் கீதா.

கடந்த நான்கு ஆண்டுகளில் கம்பெனி பிரம்மாண்டமாக வளர்ந்திருக்கிறது.இங்கு நமக்கு வேலை கிடைத்தால், நல்ல எதிர்காலம் உண்டு,என எண்ணிய கீதா, மேலும் படிப்பதற்குள் இன்டர்வியூ ஆரம்பித்து விட்டதாக் கூறி, ஒவ்வொருவராக அழைக்க…. கீதாவோ தனது ஃபைலை எடுத்து வைத்து தயாராக இருந்தாள்.

கீதாவின் பெயரை அழைக்கவும், தைரியமாக எழுந்துச் சென்றாள்.

இன்டர்வ்யூ நடக்கும் அறையின் கதவைத் தட்டி விட்டு, அவர்கள் அனுமதி கிடைத்தவுடன் உள்ளே சென்றாள்.

அங்கிருந்த மூவருக்கும் வணக்கம் தெரிவித்து விட்டு, அவர்கள் அனுமதி அளித்தப் பின்பு நாற்காலியில் அமர்ந்தாள்.

அவர்களில் யார் எம். டி என தெரியாமல், மூவரையும் பொதுவாகப் பார்த்து தன்னைப் பற்றிய விவரங்களை கூறி விட்டு ஃபைலை நீட்டினாள்.

மூவரில் நடுவில் அமர்ந்திருந்தவர், தன்னை ஹெச்ஆர் மேனேஜர் என்று அறிமுகம் செய்துக் கொண்டார்.
மற்ற இருவரும் டீம் லீடர்ஸ் என்று அறிமுகம் செய்தார்.

பிறகு மூவரும் கேள்விக் கனைகளைத் தொடுத்தனர்.
எல்லாக் கேள்விகளுக்கும், தெளிவாக பதில் கூறினாள்.

இதற்கு முன்பு வேலை செய்த அனுபவம் இருக்கா? என மேனேஜர் வினவ…

இல்லை சார், ஆனால் பிராஜெக்ட் செய்த அனுபவம் இருக்கு சார்….

எனக்கு வேலை கிடைத்தால், என் திறமையை நிரூபிப்பேன் சார், என்று தன்னம்பிக்கையோடு கூற….

நாங்கள் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் திருப்தியான பதில் தான் கிடைத்தது,வெரி குட்...
உங்களுடைய மார்க், சர்டிபிகேட் அன்ட் உங்களுடைய பிராஜெக்ட் எல்லாமே திருப்தியா இருக்கு, பட் நீங்கள் ஸ்டடிஸ் கம்ப்ளீட் பண்ணி சிக்ஸ் இயர்ஸ் ஆச்சு, ஆனால் இவ்வளவு நாள் வேலைக்கு செல்லாதது தான் யோசனையாக இருக்கிறது எனறவர் ….

சிறிது நேர யோசனைக்கு பிறகு, கொஞ்சம் நேரம் வெளியே மீட்டிங் ஹாலில் வெயிட் பண்ணுங்க மிஸஸ். கீதாஞ்சலி குமார்.

அடுத்த கட்ட இன்டர்வியூ" எம்‌. டி யுடன் உங்களுடைய கலந்துரையாடல்".ஆல் தி பெஸ்ட் என்றார்.

வெளியே வந்த கீதாவிற்கு,ஏனோ தனக்கு வேண்டியவர் இங்கு இருப்பதாகவே தோன்றியது.

ரிஷப்ஷனில் விசாரித்து, மீட்டிங் ஹாலிற்கு சென்றாள்.

அங்கு இவளோடு சேர்த்து மொத்தம் பத்து பேர் இருந்தனர்.
 
#5
அங்கிருந்த பத்து பேரில், இரண்டு பேர் அனுபவம் வாய்ந்தவர்கள். அவர்கள் அமைதியாக அமர்ந்திருந்தார்கள், அவர்களைப் பார்த்து கீதாவும் அமைதியாக அமர்ந்து இருந்தாள்.

மற்றவர்களோ இவ்வளவு நேரம் ஏன் தான் தாமதம் செய்கிறார்களோ,என்று தங்களுக்குள்ளே சலசலத்துக் கொண்டிருந்தனர்.

பிறகு ஒவ்வொருவராக அழைக்க, உள்ளே சென்றனர். சிலபேர் குழப்பத்துடன் வெளியே சென்று விட்டனர். மூன்று பேர் மட்டும் வெளியே வந்து அமர்ந்திருந்தனர் .பிறகு கீதாவை, அழைக்க உள்ளே சென்றாள.

உள்ளே சென்ற கீதா, அங்கு அமர்ந்திருந்த நிரஞ்சனைப் பார்த்து அதிர்ந்து தான் போனாள்.

நிரஞ்சனோ, அப்பொழுதுதான் புதிதாக பார்ப்பது போல் அவளைப் பார்த்து மெல்லிய புன்னகையை சிந்தி உட்காருங்க மிசஸ். கீதாஞ்சலிகுமார் என்றான். பிறகு " வெல்கம் டு அவர் ஃபேமிலி " என…

கீதாவோ, இன்னமும் அமராமல் திகைத்துப் போய் நின்றுக் கொண்டிருந்தாள். நிரஞ்சனோ எழுந்து போய் அவள் முன்னே கைகளை அசைத்து, ஹலோ மேடம் யு ஆர் அப்பாயிண்டெட்.
உங்களுக்கு வேலை கிடைத்துவிட்டது. அதைத்தான் வெல்கம் அவர் ஃபேமிலி என்று சொன்னேன்.வேறு ஒன்றும் இல்லை,நீங்கள் பயப்படவேண்டாம் மிஸஸ் கீதாஞ்சலிகுமார் என்றான்.

கீதாவோ இன்டர்வியூ, இல்லை ஃபைனல் இன்டர்வியூ என்று உளறிக் கொட்ட…. நிரஞ்சனோ அவள் முகத்தைப் பார்த்து நீங்கள் வெளியே இருக்கும் போதே தேர்வு செய்து விட்டோம்.

இப்போதிலிருந்து நீங்கள் எங்கள் கம்பெனியில் ஒருவர்.இப்பொழுது நீங்கள், வெளியே சென்று அமருங்கள், சிறிது நேரத்தில் உங்கள் அப்பாயிண்ட்மென்ட் ஆர்டர் கையில் வந்து விடும். மற்ற விவரங்களை மேனேஜர் கூறுவார், என்றான்.

அவளோ அசையாமல் அவனைப் பார்த்து, ஏதோ கேட்கத் தவித்துக் கொண்டிருந்தாள்.
அவனோ அவளை அலட்சியம் செய்து இன்டர்காமை எடுத்து யாருக்கோ அழைத்துக்கொண்டே, சைகையால் வெளியே செல்லுமாறு கூறினான்.

கீதாவோ, அவனின் செய்கையால் காயப்பட்ட மனதுடன் வெளியேறினாள்.

ஒரு காலத்தில் அவளின் விழி அசைவுக்கே எல்லாவற்றையும் நிறைவேற்றுபவன்,இன்று விழிகளிலாலே அலட்சியம் செய்கிறான்.

நடத்தட்டும் , நடத்தட்டும் அவன் வெறுக்கவேண்டும் என்றுதானே நினைத்தோம். அது அப்படியே இருக்கட்டும்.மீண்டும் புதுக் கதை எழுத வேண்டாம்,என மனதிற்குள் எண்ணியவள்...

ரம்யாவை பற்றி பிறகு தெரிந்துகொள்வோம். இங்கு தானே வேலை செய்யப் போகிறோம் என நினைத்துக் கொண்டே வெளியேச் சென்று அமர்ந்தாள்.

ரம்யாவை பற்றி நினைத்தவுடன் அவள் முகத்தில் புன்னகை வந்து அமர்ந்தது.

அவள், ரம்யா மற்றும் வானதி மூவரும் சிறு வயதில் இருந்தே நெருங்கிய தோழிகள்.

கீதா மதுரையில் ஆறாம் வகுப்பு படிக்கும் போது வேறு பள்ளிக்கு மாறினாள். இப்பொழுது போலவே அப்பொழுதும் கீதா ரொம்ப அமைதி.

அவள் அருகில் அமர்ந்திருந்த வானதியோ படுசுட்டி... அவளுக்கு கீதாவை வம்பு இழுப்பது ரொம்பவேப் பிடிக்கும்.

கீதாவோ, அழுதுக் கொண்டே இருப்பாள்.
ரம்யா,தான் கீதாவை சமாதானம் செய்து வானதியைக் கண்டிப்பாள்.

இதே ஒரு விளையாட்டாக வானதி, கீதாவை வம்பு இழுத்து விட்டு ஓட…. ரம்யா, அவளைத் துரத்த என விளையாட்டாக இவர்கள் நெருங்கிய தோழிகள் ஆகிவிட்டனர்.

இந்த நட்பு பள்ளியில் இருந்து கல்லூரி முடியும் வரை தொடர்ந்தது …. பிறகு சூழ்நிலையால் பிரிய நேரிட்டது.

தனது தோழி ரம்யாவின், நட்புக்காக நிரஞ்சனோடு ஏற்பட்ட காதலை,கீதா விட்டுக் கொடுத்தாள். ஆம் நிரஞ்சனும், அவளும் இரண்டு வருடங்களாக காதலித்தனர்.
அன்று அவர்களை விதி பிரித்தது…. இன்றோ அவர்களை மீண்டும் இணைக்கக் காத்திருக்கிறது…

தொடரும்…...
 
#6
‌‌‌ அத்தியாயம்-3

கீதாஞ்சலியின் கையில் வேலைக்கான அப்பாயிண்மென்ட் ஆர்டர் படபடத்தது. ஆனால் அதற்குரிய மகிழ்ச்சி இல்லை. ஏனோ மனது ஒரு பக்கம் ரொம்ப சந்தோஷமாகவும், மறுபக்கம் சஞ்சலமாகவும் இருந்ததது ….

அவள் யோசனையில் இருக்கும் போதே, கைப்பையில் இருந்த ஃபோன் அடித்தது….

யாரா இருக்கும் என்று யோசனையுடன் எடுத்து பார்த்தால், அண்ணன்….

தன்னை சரி செய்துக்கொண்டு, வரவழைத்த உற்சாகத்துடன் ஹலோ என…

அருணோ " ஏன் டா வேலைக் கிடைக்கவில்லையா? குரல் டல்லா இருக்கு…. என்று விட்டு, சரி டா நெக்ஸ்ட் டைம் பார்த்துக்கொள்ளலாம்" என..

அதெல்லாம் ஒன்னும் இல்லைணா, வேலை கிடைத்துவிட்டது.
நாளையிலிருந்து ஜாயின் பண்ணிக்க சொல்லியிருக்காங்க, இப்பதான் வந்து சொன்னாங்க…

சரிடா,வீட்டுக்கு கிளம்பிட்டியா? இல்லையென்றால், வெயிட் பண்ணு வேலை முடிஞ்சிருச்சு நான் வந்து, அழைச்சிட்டு போறேன்‌.

ஓகே ணா‌,நான் வெயிட் பண்றேன்‌, என்றவள் ரிசப்ஷனில் காத்திருந்தாள்.

கீதா குழப்பமான மனநிலையில் இருந்தாள். ரம்யாவை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்தாள்.

சற்று நேரத்தில் அருண் வந்து அழைக்க….
கீதா தன்னோடு பேசிக்கொண்டிருந்த ரிசப்ஷனிஸிடம், விடைபெற்றுக் கொண்டு, வேகமாக வெளியே வந்தாள்.
அங்கே புன்னகையுடன் நின்றுக் கொண்டிருந்த அருணைப் பார்த்து அண்ணா என்று அழைக்க‌‌…

அருணோ" வாழ்த்துக்கள் டா என்று அவளை அணைத்து செல்லம் கொஞ்சினான். சூப்பர் டா எனக்கு தெரியும் உனக்கு வேலை கிடைக்கும் என்று…. இனி உனக்கு எல்லாமே நல்லதே நடக்கும் என்றவன்,கையில் உள்ள ஸ்வீட் பாக்ஸ் மற்றும் பழங்களை அவள் கையில் கொடுத்தான்"
எதுக்கு அண்ணா, இவ்வளவு என…

உனக்கு புடிச்சது வாங்கிட்டு வந்தேன் சாப்பிடு மா…..சின்னக் குட்டி வேற வேலை கிடைச்சிருச்சு, ட்ரீட் எங்க என்று உன்னை கேட்கும் அதுக்குதான் என்றவன்…
சரி வா நாம வீட்டுக்கு சென்று அண்ணி, சின்னக் குட்டி,கிட்ட எல்லாம் சொல்லுவோம் எனக் கூறி அழைத்துச் சென்றான். அண்ணனின் உற்சாகத்தை பார்த்து அவளும் மகிழ்வுடன் சென்றாள்.
இதை கடின முகத்துடன் நிரஞ்சன் பார்த்துக் கொண்டு இருந்தான்.

**********************
நந்து, நந்து என அழைத்துக் கொண்டே உள்ளே நுழைந்த அருண் கீதாவுக்கு, வேலை கிடைத்துவிட்டது என்றான். நந்தினி, கீதாவிடம் கங்கிராட்ஸ் அண்ணி.
எனக்கு தெரியும் உங்களுக்கு வேலை கிடைக்குமென்று அதான், ஸ்வீட் செஞ்சிருக்கேன்…
இருங்க எடுத்துட்டு வரேன் என்று உள்ளே சென்றவள் சிறிய கிண்ணத்தில் கேசரி எடுத்துவந்து,அவளுக்கு ஊட்டி விட்டாள்‌.
கீதா தேங்க்ஸ் அண்ணி என்றாள்.

மதுவும் வர வீடு ஒரே கோலாகலமாக இருந்தது…
ரொம்ப நாளைக்கு பிறகு அந்த வீட்டில் சிரிப்பு சத்தம் கேட்டது….

அருண், கீதாவிடம்"நாளைக்கு நீ, மதுவோடு ஆபிசுக்கு போ…. ஈவினிங் நாம எல்லாரும் போய் உனக்கு வண்டி பார்ப்போம்,பிறகு ஹோட்டலுக்குப் போய் என்ஜாய் செய்வோம் என" கீதாவும் சரி என தலையாட்டினாள்

**********************
கீதா, காலையில் பரபரப்பாக ஆஃபீஸ் கிளம்ப…
மதுவோ, இன்னும் எழுந்திருக்கவே இல்லை.

கீதாவோ மது, சீக்கிரம் டா… எனக்கு தாமதமா போனால் பிடிக்காது தெரியுமில்லையாட….

படுக்கையில் இருந்து எழுந்திருக்காமல், கா லாஸ்ட் ஃபைவ் மினிட்ஸ் என்று விட்டு இன்னும் உறங்க….

கீதாவிற்கு கோபம் வர, சரி மது நீ பொறுமையாக கிளம்பு…. நான் ஆட்டோவிலே போறேன் என்று கிளம்ப…

படக்கென்று எழுந்த மது சாரிக்கா.. கோபப்படாதே கா, இதோ ஐந்து நிமிடத்தில் தயாராகி விடுவேன் என்றாள்.

பெருமூச்சு விட்டுக் கொண்டே அண்ணி சொல்வது சரிதான் …. வண்டி வாங்கி தனியே செல்வது தான் சரி என எண்ணிக்கொண்டாள்.

எப்படியாவது நேரத்திற்கு அலுவலகத்துக்குச் சென்று விட்டால் பரவாயில்லை என்று கீதா நினைக்க….. அவளுக்கு அன்று சோதனை காலம் போல ஐந்து நிமிடம் தாமதமாகிவிட்டது.
மது வண்டியை நிறுத்தியவுடன், தாமதமானதால் அவளிடம் கூட, சொல்லாமல் வேகமாக செல்ல‌‌...

அங்கு மேனேஜரிடம் பேசிக்கொண்டிருந்த நிரஞ்சன் இவளைப் பார்த்ததும் குற்றம்சாட்டும் பார்வை பார்த்துவிட்டு, பிறகு கடிகாரத்தையும் பார்த்தான்.
பிறகு உள்ளே சென்றவன், பியூனை விட்டு அவளை அழைத்தான். மேனேஜரிடம் பேசிக் கொண்டிருக்கும் போது பியூன் வந்து எம்.டி அழைப்பதாகக் கூற இவள் பயந்துகொண்டே சென்றாள்.

எம்.டியின் அறைக் கதவைத் தட்டி விட்டு கீதாஞ்சலி உள்ளே நுழைந்தாள். அங்கு நாற்காலியில் நன்றாக சாய்ந்து அமர்ந்துக் கொண்டு,அவளை கூர்மையாகப் பார்த்து நீங்க நியூ ஜாயினியா? என

கீதா எஸ் ஸார் எனக் கூற…

எனக்கு நேரம் தவறினால் பிடிக்காது என்றான்.
இது பர்ஸ்ட் அன்ட் லாஸ்ட் வார்னிங் மிசஸ் கீதாஞ்சலி குமார். நெக்ஸ்ட் டைம் இப்படி தாமதமானால், நீங்கள் வேறு வேலை தேடும் படி இருக்கும்…. இப்பொழுது நீங்கள் போய், உங்கள் வேலையை பாருங்கள் என ….

விட்டால், போதும் என்று வெளியே வந்து தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டாள்.

அவள், வெளியேறியதும் கண்களை மூடி பழைய கீதாஞ்சலியை நினைவுபடுத்தினான்.

அப்பொழுதும் அமைதியாக தான் இருப்பாள். ஆனால்,அவள் முகத்தில் இருக்கும் மலர்ச்சி இப்பொழுது இல்லையே என யோசித்துக் கொண்டிருந்தான். ஒரு வேளை அவளும் மகிழ்ச்சியாக இல்லையோ என அவளுக்காக வருத்தப்பட…. தன் தலையை உலுக்கி கொண்டு, இவர்களையெல்லாம் நம்பவேக்கூடாது என்று எண்ணிக்கொண்டு வேலையை பார்க்கத்
தொடங்கி விட்டான்.

வெளியே வந்த கீதாஞ்சலியை, மேனேஜர் மற்றும் டீம் லீடர் பிடித்துக் கொண்டனர். ஏன் மா,ரொம்ப கோபமாக பேசி விட்டாரா,நீ வருத்தப்படாதே மா என்றார் மேனஜர். அவருக்கு பெண்களைக் கண்டாலே ஆகவே ஆகாது.

காரணமே இல்லாமல் கடித்துக் குதறுவார்... நீ வேறு தாமதமாக வந்து வாங்கிக் கட்டிக் கொண்டாய்… என டீம் லீடர் கிண்டலாகக் கூற…

கீதாவோ, அவர்களிடம் ஒன்றும் கூறாமல், ஐந்து நிமிடம் தாமதமாக வந்த… தன்னையே நொந்துக் கொண்டாள்‌.

இனி தான் என்ன சொன்னாலும் இவர்களுக்கு புரியாது… முதல் கோணல் முற்றும் கோணல்... இனி நேரத்தோடு வந்து என்னுடைய பொறுப்பை, திறமையுடன் செய்து செயலில் தான் காட்ட வேண்டும் என நினைத்துக் கொண்டாள்.

மேனேஜரோ, நான் கம்பெனியில் சேர்ந்ததில் இருந்து இவர் இப்படி தான் இருக்கிறார். குடும்பமாக இருந்தால் பொறுமை வரும்… இவர் தான் தனிக்காட்டு ராஜாவாச்சே என…

கீதாவோ, அதிர்ந்து என்ன சார் சொல்றீங்க! அவருடைய அம்மா, அப்பா எங்கே சார், என…
அவங்க இறந்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது.

அவரோட தங்கை யார் கூடவோ ஓடிப் போயிட்டதா, ஊரிலிருந்து வேலைக்கு வந்த சமையல் செய்யும் அம்மா, சொன்னாங்க…
அவங்க சொல்லி தான் அவருக்கு தங்கை இருக்கும் விஷயமே தெரியும்.
சாரோட அப்பா, அம்மா எப்பயாவது ஊரிலிருந்து வருவாங்க..
அப்படி ஊரில் இருந்து வரும்போது ஒரு முறை ஒரு லாரி மோதி அவங்க வந்த கார் நசுங்கி இறந்துவிட்டனர்.

சென்னைக்கு வரும் போது அவர்கள் தகவல் கூறாமல் கிளம்பி வந்ததால், சாருக்கு உடனே விஷயம் தெரியாமல், சற்றுத் தாமதமாக தான் தெரிய வந்தது.

அதிலிருந்தே அவர் ரொம்ப இறுகி போய் விட்டார்...யாரிடமும் அதிகம் பேசமாட்டார், என்றவர்…. சரி விடு மா, நமக்கு எதுக்கு ஊர் வம்பு…
இவங்க தான் உன்னோட டீம் லீடர் சுபத்ரா. மத்த டீடெயில்ஸ் எல்லாம் அவங்க சொல்லுவாங்க..
சரி நீங்கள் போய் உங்கள் வேலையை பாருங்கள், என்று இருவரையும் அனுப்பினார்.

கீதாவோ, அவர் ரம்யாவை பற்றி சொன்னதிலே அதிர்ந்து நின்றாள்.

ரம்யா நிச்சயமாக ஓடிப் போயிருக்க மாட்டாள்..
ஏதோ தவறு நடந்து இருக்கிறது, என்று உள் மனசுக் கூற அப்படியே திகைத்து நிற்க..

சுபத்ரா தான் அவளை உலுக்கி, வாங்க கீதா என வெளியே அழைத்து வந்தாள்.

பயணங்கள் தொடரும்…...
 
#7
அத்தியாயம்- 4

சுபத்ரா…வாங்க கீதா, இது தான் உங்க ப்ளேஸ்‌. டேக் யுவர் சீட்‌‌ என்றுக் கூறி விட்டு …. கம்ப்யூட்டரை ஆன் செய்து வேலையை பற்றிக் கூறி.. கீதா இதை சால்வ் பண்ணுங்க… ஏதாவது டவுட் இருந்தா எப்ப வேணும்னாலும் கேளுங்க… ஆல் தி பெஸ்ட் என்றுக் கூறி தனது கட்டை விரலை காண்பித்து விட்டு சுபத்திரா தன் கேபினுக்குள் சென்று விட்டாள்‌. .

கீதா எவ்வளவோ சமாளித்தும் ரம்யாவின் நினைவே வந்து வந்து தொந்தரவு செய்தது…
நிரஞ்சனின் பெற்றோர் இறந்ததைக் கூட அவள், பெரிதாக எண்ணவில்லை…

அதற்கு அவர்கள் தகுதியானவர்களும் கிடையாது...
ஆனால் ரம்யா… அவள் வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து இருக்க மாட்டாள்…. அது சர்வ நிச்சயம்..

நிரஞ்சனிடம், கட்டாயம் ரம்யாவைப் பற்றி பேச வேண்டும், என முடிவெடுத்துக் கொண்டு வேலையில் கவனத்தை செலுத்த முயற்சித்தாள்.

நிரஞ்சனிடம் பேச வேண்டும் என்று நினைத்தாலே நடுக்கமாகத் தான் இருக்கிறது….

ஆனால் ரம்யாவிற்காக, பேசித் தான் ஆக வேண்டும் என்று முடிவெடுத்து கொண்ட பிறகு தான் வேலையில் கவனம் செலுத்த முடிந்தது.

அதற்கு பிறகு இவளது கை விரல்கள் மட்டுமே அங்கு ஆட்சி செய்தது.

பிஸ்னஸ் லஞ்ச் மீட்டிங்கிற்கு செல்வதற்காக, வெளியே வந்த நிரஞ்சன்….. கீதாவின் கேபின் வரவும் பார்வையை செலுத்த…. அவளோ சாப்பிட செல்லாமல் கம்ப்யூட்டரிலே கவனமாக இருப்பதைப் பார்த்து நின்றான். அவளது கை விரல்கள் நர்த்தனமாடும் அழகை ரசித்தவன், பிறகு அது தவறு என உணர்ந்து தலையை உலுக்கிக் கொண்டான்.

லஞ்ச் சாப்பிடுவதற்காக புறப்பட்ட சுபத்ரா, அங்கு நின்ற நிரஞ்சனைப் பார்த்து…. " சார் எனி ப்ராப்ளம்" என வினவ….

நத்திங் சீரியஸ்… பட், அந்தப் பொண்ணு நியு எம்பிளாயி தானே எனக் கீதாவைப் பார்த்து கேட்டான்….
ஆமாம் சார் எனக் கூற...
ஓ, என்றவன்… ரொம்ப நேரமா கீ போர்ட தட்டிக் கிட்டே இருக்காங்களே! சாப்பிடக் கூட போகாமல் இருக்காங்க…. அவங்க செய்யுற வொர்க் கரெக்ட் தானா என்று செக் பண்ணிங்களா? என வேகமாக நடந்துக் கொண்டே கேட்க…

சுபத்ராவோ, அவன் வேக நடைக்கு ஈடுக் கொடுத்தப் படியே வந்தவள், அவனின் கேள்வியில் முதலில் அதிர்ந்தவள், பிறகு பயத்தில் வேர்வை சுரக்க… நாக்கு தந்தியடிக்க நோ சார் என்றவள், மேலும் ஏதோ கூற முயற்சிக்க …

அவனோ, அவளைப் பார்த்து கண்டிப்புடன் சுபத்ரா உங்களிடம் இப்படி ஒரு இர்ரெஸ்பான்ஸ்பிலிட்டியை எதிர்பார்க்கவில்லை.

முதலில் அவங்களை சாப்பிட சொல்லுங்க… நீங்களும் லஞ்ச் முடிச்சிட்டு… அவங்க செய்த வொர்க் கரெக்டா எனப் பாருங்கள்… இல்லை என்றால் கைட் பண்ணுங்க… என்றவன், ஒரு தலையசைப்புடன் வெளியேச் சென்றான்.

அவன் சென்ற பிறகு, ஊஃப் என பெருமூச்சு விட்டுக் கொண்டே… நிரஞ்சன் சாரா இது ஒரு பொண்ணை, பற்றி கவனித்து கேட்கிறார்… சம்திங் ஈஸ் ராங்க் என எண்ணிக் கொண்டே கீதாவின் கேபினுக்குள் நுழைந்தாள் சுபத்ரா.

கீதா சாப்பிட போகாமல் என்ன செஞ்சிட்டு இருக்கீங்க…
லஞ்ச் ப்ரேக் விட்டாச்சே … சாப்பிட என்னோட வாங்க என...

கீதாவோ, இதோ வொர்க் இன்னும் ஃப்யூ மினிட்ஸ்ல முடிஞ்சிடும் மேம்…. அதற்குப் பிறகு நான் வந்து ஜாயின் பண்ணிக்கிறேன், யூ கேரி யான் மேம் என்றுக் கூற..

கீதா டோன்ட் கால் மீ மேம். பெயர் சொல்லியேக் கூப்பிடலாம் என்றவள், அருகில் இருந்த சேரை நகர்த்தி உட்கார்ந்தாள் சுபத்ரா, எங்க காட்டுங்க என‌ப் பார்க்க ‌… ஆச்சரியப்பட்டுத்தான் போனாள் சுபத்ரா.
வாவ் ! கிரேட் கீதா…நீங்க பயங்கர டேலன்ட் தான் ... ஆனால் இவ்வளவு நாள் வேலைக்கு போகாமல், உங்கள் திறமையை வீணாக்கி விட்டீர்கள். எனிவே இப்பவாது நல்ல முடிவு எடுத்து இருக்கிறீங்க ஆல் தி பெஸ்ட் கெட் ப்ரோமோஷன்… கீதா.

தேங்க்ஸ் மேம் என சொல்ல வந்தவள்… சுபத்ராவின் பொய்யான கோபப் பார்வையில்,ஒகே, ஒகே தேங்க்ஸ் சுபத்ரா… இப்ப சாப்பிட வாங்க எனக் கூறி தன் லஞ்ச் பாக்ஸை எடுத்துக் கொண்டு சாப்பிட சென்றாள்.

அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்த அவர்களின் டீம்மேட்ஸிடம் இவளை அறிமுகம் செய்தாள் சுபத்ரா.

அப்புறமென்ன அங்கு ஒரே கலாட்டா தான்… எல்லோரும் கீதாவை வம்பு இழுக்க… அவளோ வெகு நாட்களுக்குப் பிறகு முகத்தில் புன்னகையுடன் இருந்தாள்.

சுபத்ரா, கீதாவிடம் " நீ சிரிக்கும் போது ரொம்ப அழகா இருக்க இப்படியே சிரித்துக் கொண்டே இரு" என்றாள்.

கீதாவோ அதற்கும் மெல்லிய புன்னகையை சிந்தினாள்.

ஒகே கைஸ் அப்புறம் பார்க்கலாம் எனக் கூறிக்கொண்டு சுபத்ரா கிளம்ப…. கீதாவும் அவளோடு கிளம்பினாள்.

அதற்கு பிறகு கீதா, தன் வேலைகளையெல்லாம் முடித்து விட்டு…. நிரஞ்சனிடம் பேசுவதற்காக காத்திருந்தாள்.

பிஸ்னஸ் லஞ்சிற்காக வெளியே சென்றவன் இன்னும் வரவில்லை‍, ஆனால் இன்னும் சற்று நேரத்தில் வந்துவிடுவான் என்ற தகவல் அவளுக்கு கிடைத்தது. உபயம் பியூன்,ஆனால் என்ன இவளை ஒரு பார்வை பார்த்துக் கொண்டே சொன்னான்.

ஒவ்வொருவராக கிளம்ப.. கீதாவோ அவனுக்காக காத்திருக்க…. சுபத்ரா வந்து... கீதா இன்னும் கிளம்பவில்லையா என வினவ….

கீதாவோ, அண்ணா வந்ததும் கிளம்பிடுவேன். இன்னைக்கு அவுட்டிங் ப்ளான் பண்ணிருக்கோம் என்றாள்.
என்ஜாய் என்றுக் கூறிவிட்டு சுபத்திராவும் கிளம்பி விட்டாள்.
சற்று நேரத்தில் அலுவலகத்திற்கு வந்த நிரஞ்சன்… கீதா,இன்னும் கிளம்பாமல் இருப்பதைப் பார்த்து புருவச் சுளிப்புடன் உள்ளே சென்றான்.
பியூனை அழைப்பதற்காக இன்டர்காமில் கை வைத்தவன், கதவு தட்டும் சத்தத்தில், யாராக இருக்கும் என்ற யோசனையுடன் யெஸ் கமின் என…

கீதா தயக்கத்துடன் உள்ளே நுழைந்தாள்… நிரஞ்சனோ இறுக்கமான முகத்துடன் என்ன விஷயம் மிசஸ். கீதாஞ்சலி…. உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால், உங்கள் டீம் லீடர்க்கிட்ட கேட்கலாம்.. இல்லையென்றால் மேனேஜரிடம் கேட்கலாம், அல்லது என்னுடைய பி.ஏ விடம் தெரிவிக்கலாம்… என் வரைக்கும் வர வேண்டிய அவசியம் இல்லை புரிகிறதா என…

கீதாவோ, அவனது பேச்சில் மனதுக் காயப்பட.. மெல்ல சமாளித்துக் கொண்டு அச்சத்துடன் ஆஃபிஸ் விஷயம் இல்லை, பர்சனலா கொஞ்சம் பேசணும் ரஞ்சி எனப் பழக்க தோஷத்தில் கூறி விட..
அவனோ, அவளை தீப்பார்வைப் பார்த்துக் கொண்டே நமக்குள் எந்தவொரு பர்சனலும் கிடையாது மிசஸ்.கீதாஞ்சலிக்குமார் என்றவன், நாற்காலியில் சுழற்றிக் கொண்டே அவளை அலட்சியமாகப் பார்த்தான்.

கீதாவிற்கோ, அழுகை வர… கட்டுப் படுத்திக் கொண்டு… ரம்யாவிற்காக மீண்டும் முயற்சி எடுத்தாள்.
சார் ஒரு ஐந்து நிமிடம் தான் என்றுக் கூறி விட்டு… நான் உங்களிடம் ரம்யாவைப் பற்றி பேச வேண்டும் என… அவனோ ருத்ர மூர்த்தியாக மாறி நாற்காலியிலிருந்து வேகமாக எழுந்து, அவள் கழுத்தை நெறித்தான்.

அவள் விழிகளில் தெரிந்த பயத்தில்… அவன் சுதாரித்து அவளிடம் இருந்து துள்ளிக்குதித்து விலகினான்.
அவளோ இருமிக் கொண்டே பயத்துடன் அவனைப் பார்த்தாள்.
நிரஞ்சன் தான் செய்ய இருந்த மடத்தனத்தை நினைத்து தன்னையே நொந்துக் கொண்டிருந்தான்.
பிறகு கீதாவைப் பார்க்க இன்னமும் திணறிக் கொண்டிருக்க..
ஒரு கிளாஸில் தண்ணீர் ஊற்றி அவளிடம் நீட்டினான்.

கீதா பயந்துக் கொண்டே பார்க்க… அவனோ வாங்கிக் குடி என சைகையில் காட்ட‌..

அவள் பயத்துடன் தண்ணிக்குடிக்க …. அவனோ, அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்… பிறகு தலையை உலுக்கிக் கொண்டு..‌ இதுக்குத் தான் ஒதுங்கி போகப் பார்த்தால் விட மாட்டேங்கறா என நினைத்தவன்,
இங்கே பார் எனக்கு யாரும் கிடையாது…. ரம்யா அது இதுவென்று, எந்த பேச்சும் என்னிடம் வரக் கூடாது… நான் ஒரு அநாதை என கண்ணில் வலியுடன் கூறினான்.
அவன் வலியை, அவள் தன் இதயத்தில் உணர்ந்தாள்.பயணங்கள் தொடரும்…..
 
#8
அத்தியாயம் - 5
நிரஞ்சன் கண்களை மூடி அமர்ந்திருக்க…
கீதா தான் மீண்டும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பேச்சை ஆரம்பித்தாள்.

ரஞ்சி என ஆரம்பித்து விட்டு, பிறகு சார் உங்களிடம் கண்டிப்பாக ரம்யாவை பற்றி பேச வேண்டும் ப்ளீஸ்… எனக்கு ஒரு ஐந்து நிமிடம் மட்டும் ஒதுக்குங்கள் என கெஞ்சத் தொடங்கினாள்.

நிரஞ்சனோ, மனதிற்குள்ளே அவளை நினைத்து வருத்தப்பட்டான். காதலிக்கும் போது அவளை எப்படித் தாங்கினான், என்று அவர்கள் இருவருக்கும் தான் தெரியும்… அவள் மனதால் நினைத்தாலே உடனே நிறைவேற்றுவான். இப்பொழுதோ… அவனிடமே கெஞ்சிக் கொண்டிருக்கிறாள்.

ஆனால் இந்த நிலைமைக்கு இவள் தானே காரணம் என எண்ணியவன்… முகம் இறுக, சரி எதுவாக இருந்தாலும் சீக்கிரம் சொல்லு என் எங்கோ பார்த்துக் கொண்டுக் கூற…

கீதா நிரஞ்சனைப் பார்த்துக் கொண்டே ரம்யாவை பற்றி எனக்கு நல்லா தெரியும்… அவ ஓடி எல்லாம் போயிருக்க மாட்டாள் எனக் கூற…

அவனோ, அவளை ஏளனமாகப் பார்த்து ஏன் நீ கேட்கவில்லை… கோவிலில் திருமணம் செய்துக் கொள்ளலாம் என்றுக் கேட்டாய் தானே! உன் தோழியும் உன்னை மாதிரியே தானே இருப்பாள். திருட்டுத்தனமாக ஓடிப் போய் விட்டாள்.

அன்னைக்கு உனக்குரிய மரியாதையை பெற்றுத் தர வேண்டும் என்று, என் பெற்றோரிடம் கூறி சம்மதம் வாங்கி வந்தால், நீ தான் மறுபடியும் குடும்பத்தோடு சேர்ந்து ஓடிப் போய் விட்டாய் எனக் கிண்டலாகக் கூறினான்.

கீதாவோ, நம்ம விஷயம் பற்றி பேச வேண்டாம்… அது முடிந்த கதை, தொடர வேண்டாம் ரம்யாவைப் பற்றி மட்டும் பேசுவோம் என்று அழுகையை அடக்கிக் கொண்டு பேச…

நிரஞ்சனோ, வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தவன், அவளை நோக்கி திரும்பிப் பார்த்து எதுக்கு இப்ப அழுகுற… சரி சொல்லு, இன்னும் என்ன தெரியனும் உன் தோழியைப் பற்றி…

அவள் கிட்ட அனுமதி வாங்கி திருமணத்திற்கு மாப்பிள்ளைப் பார்த்து கல்யாணம் ஏற்பாடு செய்தா… அவள் ஓடிப் போயிட்டா… ஊர் முன்பு என்னோட அம்மாவும், அப்பாவும் தான் அவமானப்பட்டாங்க போதுமா? என நிரஞ்சன் கூற…

கண்களைத் துடைத்துக் கொண்டு, மீண்டும் பேச்சை தொடர்ந்தாள் கீதா, " ரம்யாவிடம், நீங்கள் நேரடியாக பேசி திருமணத்திற்கு சம்மதம் கேட்டீங்களா?" நிரஞ்சன் என வினவ…

நிரஞ்சனோ, அமைதியாக இருக்க… கீதா‌ மீண்டும் ஆரம்பித்தாள்,"அவள் ,காதலித்திருந்தால்,முதலில் உங்களிடம் தான் கூறியிருப்பாள்."

சின்ன வயதில் இருந்து அவ வாழ்க்கையில் நடந்த ஒவ்வொரு சின்ன விஷயத்தையும் கூட உங்களிடம் சொல்லாமல் இருந்தது கிடையாது தானே…

என்னைப் பற்றிக் கூட அவள் சொல்லித் தானே உங்களுக்கு தெரியும் எனக் கூறி விட்டு பின் நாக்கை கடித்துக் கொண்டு பேச்சை மாற்றினாள்.

உங்க கிட்ட அவள் சொல்லவில்லை என்றால் சந்தர்ப்பம் ஏதும் அமையவில்லை, என்றுதான் அர்த்தம் ஒழிய வேறு எதுவும் இருக்காது.

அவள், எப்பொழுதுமே எங்களிடம் சொல்லிக் கொண்டுதான் இருப்பாள் காதலித்தால்,வீட்டில் சொல்லி பெற்றோர் சம்மதத்தோடு தான் திருமணம் செய்யனும், என்று பலமுறை கூறியிருக்கிறாள்‌.

எனக்கு ரம்யாவை பற்றி நல்லா தெரியும் …
ஏதோ தப்பு நடந்திருக்கு, என் மனசுக்கு தோணுது.

"நீங்க நல்லா யோசிச்சு சொல்லுங்க அவ கல்யாண நேரத்துல நீங்க பக்கத்துல இருந்தீங்களா? திருமணம் பொறுமையா திட்டமிட்டு ஏற்பாடு பண்ணதா? இல்ல திடீர்னு பண்ணுதா?" என்று அவள் கேள்வி மேல் கேள்வி கேட்க…

நிரஞ்சன் யோசிக்க ஆரம்பித்தான்... நீ சொல்வதில் ஒரு விஷயம் உண்மை தான் …
நான் அப்பொழுது இங்கே இல்லை வெளிநாட்டிற்கு வேலை விஷயமாக போனேன்.

நான் வருவதற்குள் திருமணம் ஏற்பாடு நடந்தது. ஆனால் நான் எங்க அம்மாவிடம் தெளிவாகக் கேட்டேன் என்ன அவசரம் என்று கேட்டேன்.

அதற்கு அவங்க," பையன் வீட்டிலிருந்து வந்து கேட்கிறாங்க… ரொம்ப நல்ல குடும்பம்… ரம்யாவுக்கும் பையனை ரொம்ப புடிச்சி இருக்கு" என்று சொன்னாங்க...

சரி கல்யாண வேலையெல்லாம் இருக்கும், நான் இந்தியா வந்துட்டு மறுபடியும் வெளிநாட்டுக்கு போறேன் என்று சொன்னேன்.
அப்பாவும், அம்மாவும் "நீ போன வேலைய முடிச்சிட்டு ஒருதா வாப்பா… நீ, திரும்பி வருவதற்கும் கல்யாணம் செய்வதற்கும் சரியா இருக்கும்" என்று சொன்னாங்க.

மத்த ஏற்பாடுகளை நாங்க பார்த்துக் கொள்கிறோம், அங்க தான் எங்கள் சொந்த பந்தம் எல்லாரும் இருப்பதால் வேலை ஒன்றும் பெரிதாக இருக்காது என்று நானும் திருமணத்திற்கு இரண்டு நாட்கள் முன்பு தான் திரும்பி வந்தேன்.

ஆனால் ரம்யாவோட, பேச எனக்கு சந்தர்ப்பமே அமையவில்லை. நான் போன் போடும்போது, அவளோட போன் எங்கேஜ்டுவாகவே இருந்தது‌.

சரி தான் அம்மா, அப்பாவிடம் பேசும் போது ரம்யாவைப் பற்றி கேட்டாலும், அவர்கள் வெளியே சென்றிருக்கிறாள்.‌‌ தூங்கிறாள் என்று தான் சொன்னாங்க என்று அவன் குழப்பமாக கூற…

கீதாவும் மீண்டும் காதலிப்பதை பற்றி அவள், ஒன்றும் கூறவில்லையா? என மீண்டும் கேட்க...

நான் வெளிநாட்டுக்கு செல்லும் போது… அண்ணா," நான் உங்களிடம் நான் பேச வேண்டும், ஆனால் இப்போது அவசரத்தில் பேச முடியாது. நீங்கள் ஊருக்கு போயிட்டு வந்த பிறகு பேசலாம்." என்று சொன்னாள்.

அதுக்கப்புறம் நான் அவளை பார்க்கவே இல்லை… நான் வெளிநாட்டில் இருந்து திரும்பிய அன்றைக்கு தான் அவள் ஓடிப் போய்விட்டாள்,என்று அம்மா தான் சொன்னாங்க.

நான் தேடிப் பார்க்கிறேன் என்று புறப்பட்ட போது… ரெண்டுபேரும் வேணாம் என்று சொல்லிட்டார்கள்.
கீதா கோபத்தோடு ஓடிட்டா என்று சொல்லாதீர்கள். எனக்கென்னவோ, உங்கள் அம்மா,அப்பாக்கு ஏதோ தெரிந்து இருக்கும், என்று தான் தோன்றுகிறது.
சரி, அவள் யாரை காதலித்தால் என்று தெரியுமா? என கீதா,வினவ… நிரஞ்சன் வாட் என்று அதிர்ந்தான்!

உண்மையிலே உனக்கு தெரியாதா? ரம்யா யாரை லவ் பண்ணா என்று சந்தேகமாகவே கேட்டான் நிரஞ்சன்.
இல்லை என கீதா தலையசைக்க… நிரஞ்சனோ, "உங்க கூடயே சுத்துவாளே, இன்னொருத்தி வானதியா, என்று விட்டு அவளோட அண்ணன தான் லவ் பண்ணியிருக்கா… குடும்பத்தோட ஓடி போயிட்டாங்க யாருமே இப்ப மதுரையில் இல்லை.

நான் இங்கு வந்த பிறகு விசாரித்து தெரிந்துக் கொண்டேன்.

ஆமா, உனக்கு என்ன கல்யாணம் தான் ஆச்சு... பிறகென்ன ஃப்ரண்ட்ஸோட, எந்த பேச்சும் கிடையாதா?.
இல்லை உனக்கு என்ன தானே பிடிக்காது. என் தங்கையை பிடிக்கும் தானே, அப்புறம் உன்னோட உயிர் தோழி வானதி அவளுடன் பேசுவது கிடையாதா? என அதிர்ச்சியோடு கேட்க…

கீதாவோ, சிலையென அமர்ந்துவிட்டாள்.அய்யோ! வானதி, அவளுக்கும் எதுவும் பிரச்சனையா என்று தெரியலையே எனக் குழம்பி போய் தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டாள்.

நிரஞ்சன் ஒரு கிளாஸ் தண்ணீர் கொடுத்து குடி என்றான். அவள் நிரஞ்சனை நிமிர்ந்து பார்த்து, நிச்சயமா ரம்யாவை, வானதியை ஒன்னும் செய்யவில்லை தானே என கேட்க…

அவள் கேட்ட கேள்வி புரியாமல் குழம்பிப் போய் நான் என்ன பண்ணப் போறேன் அவங்களை, முதலில் அவர்கள் எங்க இருக்கிறார் என்றுக் கூட எனக்கு தெரியாது.

நான் வெளிநாட்டில் இருந்து வரும் போது அவர்கள் மதுரையில் இல்லை. தேடி போகிறேன் என்றது அம்மாவும் அப்பாவும் தடுத்து விட்டார்கள்.

அதற்குப் பிறகு நான் இங்கு வந்துவிட்டேன். சென்னையில் பிஸினஸ் ஆரம்பித்தேன். எனக்கு ஊருக்கு போகவே பிடிக்காது. ஆனால் அம்மாவும், அப்பாவும் இங்கு வரவில்லை என்று கூறிவிட்டார்கள்.
எப்பவாவது என்னைப் பார்ப்பதற்காக சென்னைக்கு வருவார்கள்‌‌. எனக்கு வேற எந்த தகவலும் தெரியாது‌. நான் வேண்டுமென்றால் விசாரிக்கிறேன் எனக் கூற…
அதற்குள் சுதாரித்துக் கொண்ட கீதா வேண்டாம்… நான் என் ஃப்ரண்ட்ஸ் சர்க்ளிலில் விசாரிக்கிறேன்.

தேங்க்ஸ் பார் த இன்ஃபர்மேஷன் என்று கூறிவிட்டு ரூமை விட்டு வெளியேறினாள். வெளியேறியவள், மீண்டும் திரும்பி வந்து, ஒன் மோர் திங்க்...

ரம்யாவைப் பற்றி எனக்கு நல்லா தெரியும் . ரம்யாவோட எந்த தவறையும் சேர்த்து என்னால் பார்க்க எப்பொழுதுமே முடியாது. அது அவ கூட பழகிய பழக்கத்தில் எனக்கே தெரியும்.
கூட பிறந்த உங்களுக்கு தெரியாதா? அவளைப் பற்றி… இத்தனை வருடங்களாக எங்க எப்படி இருக்கா என்று விசாரிக்காமல்‍, விட்டது தொல்லை என்று இருக்கிறீங்க..
அதான் எப்பவும் உங்களுக்கு பழக்கம் என்று எனக்கே தெரியுமே, என்று அவனை குற்றம்சாட்டி விட்டு வெளியே சென்றுவிட்டாள். நிரஞ்சனோ,அவளது பேச்சில் அதிர்ந்து நின்றான்.

பயணங்கள் தொடரும்….
 
#9
அத்தியாயம் - 6
கதவு தட்டும் சத்தத்தில், அதிர்ச்சியில் இருந்த நிரஞ்சன், சுதாரித்து யெஸ் கமின் எனக் கூற…

பியூன் உள்ளே நுழைந்து சார், என்று கூறி விட்டு அமைதியாக நின்றான். என்ன மாரி அதற்குள் வந்து விட்ட என்று சொல்லிக் கிட்டே மணியை பார்த்த நிரஞ்சன்," நீ, கரெக்டான நேரத்துக்கு தான் வந்திருக்க." என்றான்.

நான்தான் ஏதோ யோசனையில் அப்படியே உட்கார்ந்து விட்டேன். சாரி மாரி எல்லாத்தையும் பூட்டிட்டு சாவியைக் கீழே கொண்டு வா, என்று கூறி விட்டு... நிரஞ்சன்,தன்னுடைய லேப்டாப் பேகை எடுத்துக்கொண்டு வெளியேறினான்.

காரை ஸ்டார்ட் செய்து எடுத்து வரும் போதே, மாரியும் வந்து விட சாவியை, வாங்கிக் கொண்டு புறப்பட்டான். கார் முன்னோக்கி செல்ல… அவன் மனமோ பின்னோக்கி சென்றது.

முதன் முதலாக கீதாஞ்சலியிடம் காதல் சொன்ன தருணத்தை நினைத்துப் பார்த்தான்.

மதுரையில் அந்த இன்ஜினியரிங் காலேஜ் களை கட்டியது. அன்று தான் ஃபர்ஸ்ட் இயர் ஸ்டூடண்ட்ஸ்க்கு காலேஜ் ஆரம்பம்.

பொதுவாக ராக்கிங் எல்லாம் கிடையாது. ஆனால் ஃபைனல் இயர் ஸ்டூடண்ட்ஸ் அங்க அங்க உட்கார்ந்து கொண்டு ஜாலியாக பேசிக்கொண்டு கலாட்டா பண்ணிக் கொண்டு இருப்பார்கள்.

நிரஞ்சன் மற்றும் அவனது நண்பர்கள் உட்கார்ந்து பேசிக் கொண்டு இருக்கும் போது தான்… கீதா மருண்ட விழிகளுடன் உள்ளே நுழைந்தாள்.

அவளைப் பார்த்தவுடன் ஏய் ப்ளூ சுடி… இங்க வா என அசோக் அழைத்தான். பயத்துடன் வந்த கீதா, அருகில் அமர்ந்து இருந்த நிரஞ்சனைப் பார்த்து சற்று ஆசுவாசப் படுத்திக் கொண்டாள்.

அவளின் உயிர் தோழியின் அண்ணண் என்று தெரியும். மனதிற்குள்ளே ' ரம்யாவையும், வானதியையும் திட்டிக்கொண்டே வந்தாள். டைம் சொல்லி ஒரே நேரத்திற்கு காலேஜிக்கு வாங்கடி என்று பிளான் பண்ணா ரெண்டு பேரையும் காணோம்' இருக்கட்டும் இரண்டு பேரோடையும் கொஞ்ச நேரம் பேசக்கூடாது என முடிவெடுத்துக் கொண்டு, அவர்கள் அருகே சென்றாள்.

அசோக் அருகே சென்று,என்னணா,என பயந்துக் கொண்டே கீதா வினவ?
ஓய், கிண்டலா சீனியர் என்றுக் கூப்பிடு எனக் கூற..

சரியென தலையசைத்தாள். அசோக்கின் அருகே அமர்ந்து மற்றொரு நண்பன், கீதாவைப் பார்த்து என்ன சொன்னாலும் சரி என்று சொல்லுற நல்ல பொண்ணா இருக்க… அதனால் உன்னை ரொம்ப பெரிய விஷயம் எல்லாம் செய்ய சொல்லவில்லை. சின்ன விஷயம் தான் உனக்கு… எங்கள்ள ஸ்மார்ட்டா இருக்கிற ஒருவருக்கு ஐ லவ் யூ என்று சொல்லி விட்டு நீ போய்ட்டே இருக்கலாம் எனக் கூற…

ஐயோ! என நெஞ்சில் கைவைத்து சொல்ல மாட்டேன் என கண்கள் கலங்க தலையசைத்தாள்.

டேய் யாரு ஸ்மார்ட் என்று சொல்லமாட்டாங்க போல என்று ஒருத்தன் கிண்டல் செய்ய…
இன்னொருவனோ,சரி உன் ட்ரஸ் கலர்ல வந்திருக்க எங்க தலைக்கு வேணா சொல்லு, என்று அதுவரை அமைதியாக பார்த்துக் கொண்டு இருந்த நிரஞ்சனை நோக்கி கையை நீட்ட…

அவனைப் பார்த்த கீதாவின் பார்வையில் கோபத்தை பார்த்தவன்… டேய் விடுங்கடா… டைம் ஆச்சு கிளாஸ்க்கு போகட்டும் என..‌.

அசோக், நிரஞ்சனைப் பார்த்து இருங்க பாஸ்... என்ன அவசரம்… எவ்வளவு நேரம் ஆனாலும் சொல்லிட்டு கிளாஸ்க்கு போகட்டும் என்றுக் கூற… கீதாவோ, கண்கள் கலங்க அழுகையை அடக்கிக் கொண்டு நின்றிருந்தாள்.

கீதா இங்க பாருங்க சும்மா ஜாலிக்கு தான் சொல்லிவிட்டு போங்க எனக் கூற…

கீதாவோ, அவனை முறைத்துக் கொண்டே என்னால் சொல்ல முடியாது. உண்மையான நேசத்தின் வெளிப்பாடகக் கூறும் வார்த்தையை உங்க விளையாட்டுக்காக எல்லாம் என்னால் கூற முடியாது‌ என...

ஓ என எல்லோரும் கத்தி... நம்ம தலைக்கு, தெரிஞ்சவங்க அப்ப சார் போய் ஐ லவ் யூ என்று சொல்லட்டும்.
எல்லோரும் நிரஞ்சன் சொல்ல மாட்டான் என்று தெரிந்துக்கொண்டே வம்பு வளர்க்க…

நிரஞ்சனோ, எல்லோரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில்… அவள் கண்களை பாத்துக் கொண்டே ஐ லவ் யூ எனக் கூற… கீதாவோ அதிர்ச்சியில் மயங்கி விட்டாள்.

அதே நேரத்தில் காலேஜிற்கு வந்து ரம்யா, அண்ணன் பதற்றத்துடன் இருப்பதை, பார்த்து அவர்களை நோக்கி செல்ல…. அங்கோ கீதா, மயக்கத்தில் இருப்பதைப் பார்த்து தன் மடி தாங்கினாள்.

அண்ணனிடம் என்னாச்சுண்ணா?, என வினவ... நிரஞ்சன தயக்கத்துடன் நடந்ததைக் கூற… ரம்யா அவளது அண்ணனையும், அவனின் நண்பர்களையும் கடிந்து கொண்டாள் .

பிறகும் நிரஞ்சனை சந்தேகமாகவே பார்த்து நீ இப்படி எல்லாம் செய்பவன் இல்லையே சொல்லு... "நீ என்ன இவள் லவ் பண்றியா "என கேட்க...

ஆமாமென தலையசைத்தான் நிரஞ்சன். பிறகு அவனிடம் அதற்கும் ஒரு லெக்சர் அடித்தாள் படிக்கும் வயதில் காதலிப்பது தவறு முதல்ல நீ, ஸ்டெடி ஆயிட்டு வா..
அப்புறமா அவகிட்ட காதலை சொல்லு என்று அவனிடம் கண்டிப்புடன் கூறிவிட்டு... மயக்கத்தில் இருந்த கீதாவிற்கு, தண்ணீர் தெரிவித்து எழுப்பி அழைத்துச் சென்றுவிட்டாள்.

அதை நினைத்துப் பார்த்த நிரஞ்சன் முகத்தில் எப்போதும் போல புன்னகை வந்தது.

அதற்கப்புறம் அவளிடம் நன்கு பழகி.. இரண்டு வருடம் கழித்து காதல் செல்லும் போது மயக்கம் போட்டு விடாதே என்று என்று கிண்டல் செய்து கொண்டே காதலை சொல்ல… அவளோ, நாண புன்னகையுடன் ஏற்றுக்கொண்டாள்.

பெருமூச்சு விட்டுக் கொண்டே அவனுடைய அபார்ட்மெண்ட் பார்க்கிங்கில் காரை நிறுத்தினான். இப்பொழுது யோசித்துப் பார்த்தால் ரம்யா, பொறுப்பில்லாமல் இருக்க மாட்டாள்.

நமக்கே அந்த சின்ன வயதில், அட்வைஸ் செய்து பொறுப்புடன் இருந்தவளா, வீட்டுக்கு தெரியாமல் ஓடிப் போயிருப்பாள் இருக்காது‌‌. ரம்யாவிற்கு நான் அநியாயம் செய்து விட்டேன்… என மனதிற்குள் தங்கைக்காக வருத்தப்பட்டவன், முதலில் ரம்யாவை தேட வேண்டும் என நினைத்துக் கொண்டு காரிலிருந்து இறங்கி தனது அபார்ட்மெண்ட்க்கு சென்றான்.

வீட்டிற்குள் நுழைந்தவன் கண் மூடி சோஃபாவில் அமர்ந்தான். அவனுக்கு யோசிக்க வேண்டி இருந்தது. யாரும் இல்லா தனிமை அவனுக்கு பழக்கமான ஒன்று தான்… ஆனால் இன்றைக்கு அவனுக்கு தேவையாக இருந்தது.

சற்று நேரம் யோசித்தவன்… அவனுடைய நண்பன் அசோக்கின் அண்ணன் சைபர் கிரைமில் வொர்க் செய்கிறார், அவரிடம் உதவி கேட்போம் , என்று முடிவு எடுத்து செயல்படுத்த தொடங்கினான்.

அவனுக்கு தெரிந்த தகவல்கள் அனைத்தையும் அவரிடம் சொல்ல… ஓகே நிரஞ்சன் நான் சீக்கிரம் விசாரித்து சொல்றேன்… நீ கவலைப்படாதே, என்றுக் கூறி விட்டு ஃபோனை வைத்தார் அந்த காவல் அதிகாரி.

நிரஞ்சனுக்கு சாப்பிடும் எண்ணம் இல்லாமல், வேலை செய்யும் அம்மா‌, செய்து வைத்த சாப்பாட்டை ஃபிரிட்ஜில் எடுத்து வைத்து விட்டு படுத்துவிட்டான்.


*****************

கீதா படுக்காமல் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டு இருந்தாள். மது வழக்கம் போல் கதவைத் தட்டாமல் உள்ளே நுழைந்து கீதாவைப் பார்த்து" ஏன் கா, ஒரு மாதிரியாக இருக்கீங்க… நானும் ஷாப்பிங் பண்ணும் போதிலிருந்தே பார்த்துக் கொண்டு தான் இருந்தேன். என்ன கா, பிரச்சினை சொன்னால் தானே தெரியும், இல்லை அண்ணி எதுவும் சொன்னாங்களா?" என வினவ…

அதெல்லாம் ஒன்னும் இல்லை மது மா,என்றவள்… பிறகு ஒரு முடிவுடன் நடந்த அனைத்தையும் கூறியவள்… மதுமா, எனக்கு நிரஞ்சன் அம்மா, அப்பா மேல் நம்பிக்கை இல்லை. ரம்யாக்கு என்னாச்சோ என்று மனசு பதறுது… வானதி, அவங்க குடும்பத்துக்கு என்னாச்சு என்று தெரியவில்லை… நம்ம குடும்பத்தையே எவ்வளவு படுத்துனாங்க… அப்பாவோட வேலையை போக வச்சு… அண்ணன,அடியாள வச்சு அடிச்சு… எதுக்கும் நான் மசியலை என்றவுடன், ரம்யாவை வைத்து ப்ளாக் மெயில் பண்ணாங்க.ரம்யாவுக்கு முன்னாடி பிரியமா பேசுற மாதிரி நடிச்சிட்டு, அவளுக்கு ஜுஸ்ல விஷத்தை கலந்து வச்சிட்டு … நான் இந்த ஊர விட்டு போகவில்லை என்றால் அவளிடம் குடுத்து விடுவேன் என்று எப்படி மிரட்டினார் தெரியுமா?

பெத்த பொண்ணு என்றுக் கூட பார்க்கவில்லை… ஐயோ! இன்னைக்கு நினைச்சாலும் நரக வேதனை… அவங்க எல்லாம் ஜாதிவெறி பிடித்த மிருகங்கள்… நிரஞ்சனிடம் சம்மதம் சொல்லி விட்டு என்னை என்ன பாடு படுத்தினார்கள்.

நான் வந்து கூறிய கதறலில் அப்பாவும், அண்ணாவும் சென்னைக்கு ஷிப்ட் ஆகலாம் என முடிவெடுத்து உடனே கிளம்பினோமே உனக்கும் ஞாபகம் இருக்கு தானே மது என புலம்ப…

அக்கா ரிலாக்ஸ்… இந்தாங்க தண்ணீர் குடிங்க…
பழைய விஷயத்தை விடுங்க… இப்போ என்ன பண்றது என்று யோசிப்போம்…

முதல்ல வானதி கா, எங்க என்று கண்டுபிடிப்போம். ஃபேஸ்புக்ல உங்க ஐடி டிடெயில்ல நீங்க படிச்ச ஸ்கூல், காலேஜ் பத்தி சொல்லுவோம்… எப்படியும் உங்க மத்த ஃபிரண்ட்ஸ் டீடையில் கிடைக்கும் கா… அவங்க கிட்ட விசாரிப்போம், என்றாள் மது.

மது பேசியதைக் கேட்டு கொஞ்சம் நம்பிக்கை வர… நாளைய விடியல் நல்லதாகவே இருக்கட்டும் இறைவா! என வேண்டிக் கொண்டு உறங்க முயற்சித்தாள் கீதாஞ்சலி.


பயணங்கள் தொடரும்…..
 
#10
அத்தியாயம் - 7

காலையில் அதிசயத்திலும் அதிசயமாக மது சீக்கிரம் எழுந்து கிளம்பி தன் அக்காவின் அறைக்கு… 'அக்கா' என்று கத்திக்கொண்டே உள்ளே நுழைந்தாள்.

கீதாவோ இவ்வளவு சீக்கிரம் தங்கை எழுந்ததும் மட்டும் அல்லாமல், குளித்து தயாராகி வேறு வந்திருக்க… பயந்து போய் ஏன் டா? என்ன பிரச்சனை? என்ன ஆச்சு என்று படுத்து இருந்தவள் பதறி எழுந்தாள்.

ஒன்னு இல்ல கா… நீ ஏன் இவ்வளவு டென்ஷன் ஆகுற…
பின்ன நீ இவ்வளவு சீக்கிரம் எந்திரிச்சு கிளம்பி வரவும் நான் பயந்துட்டேன் என்று கூறி அப்பாடா என கீதா உட்கார்ந்தாள் ‌.

அது ஒன்னும் இல்ல கா, காலையில் ஒரு கான்ப்ரன்ஸ் கால் இருந்துச்சு, அதான் சீக்கிரம் எழுந்துட்டேன்… சரி உன் ஃப்ரெண்ட் பத்தி விசாரிப்போம் என்று வந்தேன்.

ஆமா,கா நீ ஏன் எழுந்திருக்காமல் இருக்கிற… ஆஃபிஸ்க்கு கிளம்பனும் தான என வினவ..

இதோ கிளம்பனும் மது… நைட் எல்லாம் தூக்கமே வரவில்லையா, இப்போ ஒரே டயர்டா இருக்கு.

வேண்டும் என்றால் இன்னைக்கு லீவு போடுக்கா என மதுக் கூற. கீதாவோ அவளை முறைத்துக் கொண்டே என்ன மதுமா அக்காவே கிண்டல் செய்யுறியா, நேற்று வேலைக்கு சேர்ந்துட்டு இன்னைக்கு லீவு கேட்டா? எந்த ஆஃபிஸலையும் லீவு தர மாட்டாங்க… நீ வீட்டுலே இரு மா..
ஆஃபிஸ்க்கு எல்லாம் வர வேண்டாம் என்று துரத்தி தான் விடுவாங்க என்றாள்.

சரி சரி விடுக்கா… சும்மா உன்னை வம்பு இழுத்தேன். நீ போய் ஃப்ரெஷ்ஷப் ஆகிட்டு வா… நான் போய் காஃபி போட்டு எடுத்துட்டு வரேன் என்று கூறி விட்டு சிட்டாக பறந்தாள் மது.
*****************
அருணுக்கு காஃபி கொடுத்து விட்டு கிச்சனுக்குள் நுழைந்த நந்தினி… கிச்சனுக்குள் இருந்த மதுவைப் பார்த்து ஆச்சிரியப்பட்டு மதுவிடம் " என்ன சின்னக்குட்டி இன்னைக்கு மழை வரப் போகுது, நீ இன்னைக்கு சீக்கிரம் எந்திரிச்சுட்ட.. அதுவும் இல்லாமல் குளிச்சு ரெடியாகிட்ட… அதுவுமில்லாமல் கிச்சனுக்குள் எல்லாம் நிக்கிற என கிண்டல் பண்ண".

அண்ணி… "அக்காவுக்கு தலைவலிக்குது சொன்னா… அதான் காஃபி போட்டு எடுத்துட்டு போகலாம் என்று வந்தேன்" என்றாள்.

நீ போட்ட காஃபியை குடித்தால் இன்னும் தலைவலி அதிகம் தான் ஆகும்.சரி நகரு நான் போட்டு தரேன்,என்றுக் கூறி இரு கோப்பைகளில் காஃபியை ஊற்றிக் கொடுத்தாள்.

அண்ணியை முறைக்க முடியாமல் கோபத்துடன் காப்பியை எடுத்துக் கொண்டு கீதாவின் ரூமிற்கு சென்றாள்.
கீதா முகத்தை துடைத்துக் கொண்டிருந்தவள்… மதுவின் முகத்தை பார்த்து ஏன் டா கோவமா இருக்கிற என கேட்டுக்கொண்டே மது நீட்டிய காஃபியை வாங்கி குடிக்க ஆரம்பித்தாள் …

மது கிச்சனில் நடந்ததைக் கூற..
கீதாவிற்கோ, சிரித்து காப்பி புரையேறியது. தங்கை முறைக்க சரி விடு அண்ணி உண்மையை தான சொன்னார்கள் என்றுக் கூற… அக்கா என மது சிணுங்க … சும்மா சொன்னேன் டா… ஆமாம் என்னுடன் படிச்சவங்களோட டீடெயில்ஸ் கிடைச்சிருக்கு மா மது என வினவ…

அய்யோ அக்கா, நீ இன்னும் பேஸ்புக் பார்க்கவில்லையா ? இன்னேரம் நிறைய புது ஃப்ரெண்ட்ஸ் ரெக்வஸ்ட் வந்திருக்கும் கா…

நீ ஏன் கா இவ்வளவு லேட் பிக்கப்பா இருக்கிற..
கொஞ்சம் அப்டேட்டா இருக்கா,சரி ஃபோனை கொண்டு வாக்கா நான் பார்க்கிறேன் என்று கூற... கீதா அவளுடைய போனை எடுத்துக் கொடுக்க… மது ஃபேஸ்புக்கை பார்க்க ஆரம்பித்தாள்.

கிட்டத்தட்ட கீதாவின் நெருங்கிய தோழிகள் அனைவரும் நட்பு அழைப்பு விடுத்து இருக்க... அது எல்லாவற்றிற்கும் அக்செப்ட் பண்ணிக் கொண்டிருந்தாள்.

பிறகு இன்பாக்ஸில் ரம்யா மற்றும் வானதியை பற்றி விசாரித்தாள். தெரிந்தவர்கள் விவரம் கூறுமாறு கேட்டுக் கொண்டாள்.

சரிக்கா நீங்க போய் ஆஃபீஸ்க்கு கிளம்புங்க... ஆஃபிஸ் போறதுக்குள்ள ரம்யா அக்காவை பத்தி ஏதாவது விவரம் வந்திருக்கும் என்று நம்பிக்கையோடு கூறினாள் மது.
கீதாவோ அப்பாவியாக அதுக்குள்ள தெரிஞ்சிடுமா மது மா என வினவ... அக்கா உலகமே நல்ல கம்யூனிகேஷன் இருக்கு கா. சீக்கிரம் நம்ம கண்டுபிடிச்சுடலாம் கவலைப்படாதே என்று கூறிவிட்டு தனது அறைக்குச் சென்று விட்டாள்.

******************

கீதா குளித்து தயாராகி வந்தவள், வெளியே சொல்லும் முன்பு ஃபோனை எடுத்துப் பார்க்க…
அவளுக்கு தேவையான தகவல் வந்திருக்க கண்களில் இருந்து நீர் வடிய முகத்தில் சொல்ல முடியாத சோகத்துடன் மது என கத்திக்கொண்டே அவளது அறைக்கு ஓடினாள்.

என்னாச்சு ஏன் கா ? இப்படி ஓடி வர்றீங்க என மது வினவ … இங்க பாரு என்று அழுது கொண்டே ஃபோனை நீட்ட… சரி கா நீ இப்படி உட்காரு என அவளை ஆசுவாசப்படுத்தி விட்டு போனை எடுத்துப் பார்த்தால் அதில் அவர்களுக்குத் தேவையான தகவல் வந்திருந்தது.
ரம்யாவை பற்றிய விவரம் தெரியவில்லை. ஆனால் வானதி கீழ்ப்பாக்கத்தில் உள்ள மனநல மருத்துவமனைக்கு அடிக்கடி வந்து செல்வதைஒரு தோழி பார்த்து இருக்கிறாள். ஆனால் அவளிடம் அந்த தோழி பேச முயல…" வானதியோ ஒதுங்கி போனாள்." என்று கூறினார்கள். இதை பார்த்துவிட்டு தான் கீதா கண்ணீர் விட்டு கதறி கொண்டிருந்தாள்.

அக்கா முதலில் அழுவதை நிறுத்து கா .இப்போ நாம அடுத்து என்ன செய்வதென்று பார்க்கணும் எனக்கு என்னமோ நிரஞ்சனத்தானை என்றுக் கூறி விட்டு... அக்காவின் அடிபட்ட பார்வையில் இல்லை கா உங்க பாஸிடம் சொல்லி விசாரிப்போம். நானும் வரேன் கா. ஆஃபிஸ்க்கு ஃபோன் போட்டு லீவு சொல்லிடுறேன். நீ போக்கா இதோ ஐந்து நிமிடத்தில் வந்துடுறேன்,என்றவள் கீதா சென்றவுடன் கண்களை மூடி அப்படியே மெத்தையில் அமர கண்களில் இருந்து கண்ணீர் வடிய பழைய நினைவுகளில் ஆழ்ந்தாள்.' நிரஞ்சன் இவள் மேல் எவ்வளவு பிரியமாக இருப்பார் தெரியுமா? மது மா எனக் கூறிக் கொண்டே இருப்பான். அவளோ அத்தான் என்று அவனையே சுத்தி வருவாள். இன்றோ அப்படி கூப்பிடும் உரிமை கிடையாது' என நினைத்தவள்… கண்களைத் துடைத்துக் கொண்டு தன்னை சரி செய்துக் கொண்டு வெளியே சென்றாள்.

சாப்பிடும் வரை இருவரும் ஒன்றும் பேசாமல் ஆஃபிஸ்க்கு கிளம்ப… கீதாவின் ஆஃபிஸ் வரவும் வண்டியை இருவரும் நிறுத்தி விட்டு உள்ளே நுழைய… பியூன் "கீதாமா" நீங்க வரவும் எம்.டி சார் உடனே வரச்சொன்னாங்க.

ஓ என்ற கீதா...மதுவைப் பார்க்க கண்களாலே ஆறுதல் படுத்த..
சரி மாரிண்ணா , இவங்க என் தங்கை மது… சாரைப் பார்க்க வந்திருக்கா… நாங்க பார்த்து விட்டு வந்துடுறோம் என்றவள் மதுவை அழைத்துக் கொண்டு நிரஞ்சன் அறையை நோக்கிச் சென்றாள்.

இங்கே பியூனோ என்ன நடக்குது ஒன்னுமே புரியல என புலம்பிக் கொண்டே அவன் வேலையை பார்க்க சென்று விட்டான்.

மதுவும் கீதாவும் நிரஞ்சனின் அறை கதவை தட்ட... ஒன்றும் பதில் இல்லாமல் போக... இருவரும் உள்ளே நுழைந்தனர். அங்கு அசோக்கும் நிரஞ்சனும் ஜன்னல் அருகே நின்று பேசிக்கொண்டிருந்தனர். அசோக்கிடம் நிரஞ்சன் நீ அப்பவே சொன்ன கீதா மேல் எந்த தப்பும் இருக்காது என்று ...நான் தான் புரிந்து கொள்ளவில்லை. அப்பா அம்மா தான் ஏதோ செய்திருக்க வேண்டும் ...ஆனால் என்ன என்று நான் தெரிந்து கொள்ள விரும்பவில்லை.

எதுவாக இருந்தாலும் கீதாவிற்கு வேறு வாழ்க்கை அமைந்துவிட்டது. என்னோட அவளுடைய பயணம் முடிந்துவிட்டது.முடிந்தத கதை முடிந்ததாகவே இருக்கட்டும். ரம்யாவைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் டா. அதனால் தான் அசோக் அண்ணன் மூலம் மூவ் பண்ணியிருக்கேன். உன் கிட்ட எந்த மூஞ்ச வச்சுக்கிட்டு பேசுறது. நீ சொல்லும் போதெல்லாம் உன்னை அவமானப் படுத்தி அனுப்பிட்டேன். சாரி அசோக் என…

டேய் நமக்குள்ள என்னடா சாரி எல்லாம், அதுவுமில்லாமல் கீதா எனக்கு தங்கை … அவளுக்காக எதுவும் செய்வேன் என்றான்.

கீதாவோ அழுகையை அடக்க முடியாமல் கேவ … அந்த சத்தத்தில் இருவரும் திரும்பி இவர்களைப் பார்க்க… மது கீதாவைப் பற்றி சொல்லப் போக, கீதா மதுவை கண்களால் எதுவும் கூறக் கூடாது என தடுத்து விட்டாள்.

நால்வரும் அடுத்து என்ன செய்வது என தெரியாமல் திகைத்து நின்றனர்.

பயணங்கள் தொடரும்…..
 
#11
அத்தியாயம் - 8

முதலில் சுதாரித்த மது நிரஞ்சனை நேருக்கு நேர் பார்க்காமல் அசோக்கைப் பார்த்து அண்ணா… நீங்க பேசிட்டு இருந்ததை கேட்டோம்.

நாங்க ஃப்ரண்ட்ஸ் சர்க்ளிலில் விசாரிச்சதுல ரம்யாக்காவைப் பற்றி தெரியவில்லை. ஆனால் வானதிக்காவை பற்றி தெரிந்தது என்று கூறும் போதே, நிரஞ்சன் பரபரத்தான் சொல்லு மது மா… வானதி எங்க இருக்காங்க என்று தெரியுமா? அந்த விவரம் தெரிந்தால் கூட ரம்யாவைப் பற்றி தெரிந்துக் கொள்ள சுலபமாக இருக்கும் என்று அசோக்கோட அண்ணன் சொன்னாங்க டா… என்றான்.

அது என்று இழுத்தாள்… எப்படி அவனை அழைப்பது எனத் தெரியாமல் … பிறகு பொதுவாகவே சொல்லத் தொடங்கினாள். அக்காவோட ஃப்ரெண்ட் ஒருத்தங்க கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் இரண்டு முறை வானதி அக்காவை பார்த்திருக்காங்க. வானதிக்கா அவங்களை அவாய்ட் பண்ணிட்டு போய்ட்டாங்க… அதனால் வேற தகவல் எதுவும் தெரியவில்லை.

இது போதும் மா, நான் அண்ணனுக்கு ஃபோன் பண்ணி தகவல் சொல்லிடுறேன். நானும் நிரஞ்சனும் அங்க போய் விசாரித்து விட்டு உங்களுக்கு சொல்லுறேன். உங்க ஃபோன் நம்பரை கொடுங்க என அசோக் கூற…

அதுவரை அமைதியாக நின்றுக் கொண்டிருந்த கீதா… மெல்லிய குரலில் அண்ணா நாங்களும் வரோம் என்றாள்.

அசோக், நிரஞ்சனைப் பார்க்க.‌.‌. அவனோ வரட்டும் என தலையசைத்து விட்டு கார் கீயை எடுத்துக் கொண்டு முன்னே செல்ல… இவர்கள் மூவரும் அவன் பின்னே சென்றனர்.

அறைக்கு வெளியேஅலுவலர்கள் எல்லோரும் அதுவரை கூட்டம் கூட்டமாக நின்று சலசலத்துக் கொண்டு இருந்தவர்கள், எம்.டியைப் பார்த்தவுடன் அமைதியாக இருந்தனர்‌.
எல்லாம் பியூன் உபயம். இதையெல்லாம் நிரஞ்சனும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. கீதாவும் கவனிக்கவில்லை. அவர்கள் அனைவரும் காரிலேறி புறப்பட்டு விட்டனர்.

இன்னும் வேலையை ஆரம்பிக்காமல், கதை அடித்துக் கொண்டு இருந்தவர்களை சுபத்ரா தான் திட்டி வேலையை பாருங்கள் என்றாள்.

நம்ம சாரைப் பற்றி உங்களுக்கு தெரியாதா? பெண்கள் விஷயத்தில் நெருப்பு மாதிரி… அவர்கள் சாருக்கு ஏற்கனவே தெரிந்தவர்களாக இருப்பாங்க… அது தவிர ஒரு கல்யாணம் ஆனப் பொண்ணை பத்தி தெரியாமல் எதுவும் பேசக்கூடாது என்றாள்

சாரி என எல்லோரும் கூற… சரி உங்க இடத்துக்கு போய் வேலையை பாருங்க என்ற சுபத்ரா தனது இடத்திற்கு சென்று வேலையை ஆரம்பித்தாள்.


************

கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனை ரிசப்ஷனில் அசோக்கும், நிரஞ்சனும் வானதியை பற்றி விசாரிக்க… ரிசப்ஷனில் இருந்தவர்களோ, சார் பேஷண்ட பத்தி வெளி ஆள் கிட்ட எல்லாம் எந்த விவரமும் சொல்ல மாட்டோம் … நீங்க படிச்சவங்க தானே போங்க சார் என திட்ட…

கீதா அவர்களிடம் மேம் …அவங்க பேஷண்ட் கிடையாது… அவங்க பேஷண்டோட அட்டெண்டர்.
ரொம்ப நாளா அவங்க எங்க இருக்காங்க என்று தெரியாமல் தேடிட்டு இருந்தோம். இப்போ தான் அவ இங்க இருக்கிறது தெரிய வந்தது. கொஞ்சம் தேடிப் பார்த்து சொல்லுங்க மேம், எனக் கெஞ்ச…

ஐயோ உங்களோட பெரிய தொந்தரவா இருக்கு … பொதுவாக எந்த நோயாளிகள் பற்றியும் நாங்க சொல்லமாட்டோம்… நீங்க போலீஸ்ல போய் கம்ப்ளையின்ட் பண்ணுங்க, எனக் கூற…

இவள் மீண்டும் ஏதோ கேட்கப் போக… நிரஞ்சன் அவளைத் தடுத்தான்… விடு கீதா, அசோக் அண்ணன் வந்துட்டு இருக்காங்க. அது வரைக்கும் வெயிட் பண்ணுவோம் என்றுக் கூறி அங்கிருந்த நாற்காலியில் அமர வைத்தான்.

அசோக் அண்ணனின் வருகைக்காக நொடிப் பொழுதுகளை நெட்டி தள்ளி காத்திருந்தனர்.

************************
சற்று நேரத்தில் அங்கு வந்த ராகவ் தன் தம்பி அசோக்கைப் பார்த்து அவன் அருகில் சென்றான்… நிரஞ்சனைப் பார்த்து, அவன் தோளில் தட்டி கவலைப்படாதே நிரஞ்சன், சீக்கிரம் உங்கள் தங்கையை கண்டு பிடித்து விடலாம்.

நிரஞ்சன் சரி எனக் கூற .. நீங்கள் எல்லோரும் இங்கேயே இருங்க நான் போய் விசாரித்து விட்டு வரேன் என்று கூறி விட்டு ராகவ் நகர…

இவர்கள் அனைவரும் டென்ஷனோடு காத்திருந்தனர்.


ரிசப்ஷனுக்கு சென்று ஐயாம் ராகவ்… சி.பி.ஐ ஆஃபிஸர், என்றுக் கூறி ஐ. டி ப்ருஃபை காண்பிக்க…

பிறகென்ன ராஜ மரியாதை தான். அரைமணி நேரத்தில் அனைத்து தகவல்களும் அவன் விரல் நுனிக்கு வந்து விட்டது.

வானதியின் வீட்டு முகவரி, அவள் வேலை செய்யும் இடம், அவளது ஃபோன் நம்பர் என அனைத்து தகவல்களையும் பெற்றுக்கொண்டு அங்கு அமர்ந்திருந்த மற்றவர்களிடம் வந்தார்.

வீட்டு அட்ரஸ் கிடைச்சிருச்சு இந்த ஏரியா தான் ஆனால் வானதி இப்போ வேலைக்கு போய் இருப்பாங்க.
அவங்க போன் நம்பர் இருக்கு வர சொல்லுவோம்.முதல்ல வீட்டுக்குப் போகலாம். மத்த விவரம் போகும்போது சொல்றேன் என்றவர் இவர்களின் வண்டியிலேயே ஏறிக்கொண்டார். சற்று நேரம் அமைதியாக இருந்தவர் பிறகு பேச ஆரம்பித்தார்.

வானதியோட, அண்ணனுக்கு தான் மனநிலை சரியில்லாமல் நான்கு வருடமாக இங்கு ட்ரீட்மெண்ட் க்கு வந்து கொண்டிருக்கிறார்கள் என்று கூற… மற்ற நால்வரும் அதிர்ந்து போய் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

வானதி, இல்ல அவங்க அப்பா அம்மா தான் வருவார்கள் .வேறு யாரும் அவரைக் கூட்டிக்கொண்டு வந்ததில்லை என்று இங்க வேலை பார்ப்பவர்கள் கூறுகிறார்கள். சோ... உங்க தங்கச்சி இவங்களோட இல்ல... ஆனா அவங்களுக்கு விவரம் தெரியலாம். நம்ம வானதியையும், அவங்க குடும்பத்தையும் விசாரிப்போம்.
நான் ஃபோன் பண்றேன் என்றுக் கூறி வானதிக்கு டயல் செய்து தான் ஒரு சைபர் கிரைம் ஆஃபிஸர். ஒரு விசாரணைக்காக வந்திருக்கேன்… உங்களை சந்திக்கனும்… எங்க இருக்கீங்க? நான் உங்க ஏரியாவில் தான் இருக்கிறேன் எனக் கூற…

அந்தப் பக்கம் வானதியோ, என்ன விஷயம் சார், யாரைப் பற்றி விசாரிக்கனும் சொல்லுங்க சார் என…

நேரில் தான் சொல்லணும். இல்லை உங்கள் ஆஃபிஸ்க்கு வரவா என ராகவ் வினவ…

வேண்டாம் சார் நான் வீட்டுக்கே வரேன். இன்னும் பத்து நிமிடத்தில் வீட்டில் இருப்பேன். அதற்கு பிறகு நீங்கள் வீட்டுக்கு வாங்க சார். தப்பா எடுத்துக்காதிங்க சார்… அவங்க கொஞ்சம் பயந்த சுபாவம்.

நோ ப்ராப்ளம் வானதி‌. நாங்க வெயிட் பண்ணுறோம், நீங்க வாங்க என்று கூறி விட்டு ஃபோனை வைத்தார்.

பத்து நிமிடத்தில் வந்துடுவாங்க, வெயிட் பண்ணுவோம் என்றார்.

அதற்கு பிறகு அந்த காரில் அமைதி மட்டுமே ஆட்சி செய்தது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு யோசனையில் இருக்க … சற்று நேரத்தில் ராகவின் ஃபோன் அடித்தது… அதை எடுத்து பேசியவர், இதோ வந்துட்டோம் மா, என்றார்.

சரி காரை எடுங்க நிரஞ்சன். அந்த ரைட் சைட் கார்னர் வீடு‌, தான் அங்க நிறுத்துங்க எனக் கூற…நிரஞ்சன் வண்டியை நிறுத்தினான்.

அனைவரும் இறங்கிச் செல்ல, கீதாவோ கால்கள் பின்ன… தயங்கிக் கொண்டே மதுவின் கை பலத்திலே நடந்து வந்தாள்.

உள்ளே நுழைந்த ராகவிடம், என்ன விஷயம் சார்? யாரைப் பற்றி விசாரிக்க வேண்டும் சொல்லுங்க என அவள் கேட்டுக் கொண்டிருக்கும் போதே…

எல்லோருக்கும் கடைசியாக வந்துக் கொண்டிருந்த கீதா எல்லோரையும் இடித்துக் கொண்டு ஓடி போய் வானதியைக் கட்டிக் கொண்டு அழ…

வானதியோ ஒரு நிமிடம் திகைத்து நின்றவள்.பின்பு அவளும் கதறி அழுதாள்.‌ சுற்றி நின்ற மற்றவர்களோ என்ன செய்வது என்று தெரியாமல் நிற்க…

மது தான் முதலில் சுதாரித்தாள். அங்கு ஓரமாக பயந்து போய் நின்ற வானதியின் அம்மாவிடம் சென்று ஆன்டி தண்ணீர் குடுங்க, என்று கேட்டு வாங்கிட்டு போய் இருவருக்கும் தண்ணீர் குடிக்க கொடுத்து அமைதிப்படுத்த… பிறகு ராகவ் விசாரிக்க ஆரம்பித்தார்.

இங்கு பாருங்கள் வானதி… உங்கள் அண்ணனும், நிரஞ்சனின் தங்கையையும் காதலித்து வீட்டை விட்டு வந்து விட்டார்களா? இப்போது உங்களுடன் தான் இருக்கிறார்களா? சொல்லுங்க … நிரஞ்சன் கம்ப்ளைண்ட் செய்திருக்கிறார் அவரது தங்கையை காணவில்லை என்று… சொல்லுங்க வானதி எனக் கூற…

அவர் கூற கூற வானதியோ அதிர்ச்சியில் உறைந்து போனாள். அருகிலிருந்த மதுவும், கீதாவும் அவளை அசைக்க.. மெல்ல சுயநினைவுக்கு வந்தவள்…

புயல் போல வந்து நிரஞ்சனின் சட்டையைப் பிடித்து ரம்யாவை கொண்ணுட்டிங்களா! ஐயோ! என் அண்ணன் அன்னைக்கே சொன்னானே விட்டுட்டு வந்தால் கொண்ணுடுவாங்கனு கதறுனானே ! எங்க இருந்தாலும் என் தோழி உயிரோடு இருந்தால் போதும் என்று விட்டுட்டு வந்தேனே நான் பாவி என்றுக் கூறி கீழே விழுந்து அழ…

கீதாவோ அவளை வாரி அனைத்துக் கொண்டு என்ன நடந்தது சொல்லுடி… எனக்கு பயமா இருக்குடி … ரஞ்சனுக்கு எதுவும் தெரியாது, அவர் வெளிநாட்டில் இருந்தார். இங்கு வந்த போதோ ரம்யா ஓடிப் போய் விட்டாள் என்று அவங்க அம்மாவும், அப்பாவும் சொல்லிருக்காங்க… அவளை தலைமுழுகியாச்சு தேட வேண்டாம் என்று சொன்னாங்க … அதற்குப் பிறகு அவரும் சென்னைக்கு வந்துட்டார்.

இப்போ நான் வேலைக்கு போகும் போது தான் அவரை சந்திச்சேன்.அதற்கு பிறகு நான் தான் ரம்யாவைப் பற்றி சொல்லித் தேட சொன்னேன். அன்னைக்கு என்ன தான் நடந்தது சொல்லுடி என
கீதா, வானதியை உலுக்க…

வானதியோ நான்கு வருடங்களுக்கு முன்பு நடந்தததை கூற ஆரம்பித்தாள்.


பயணங்கள் தொடரும்…..
 
#12
அத்தியாயம் 9

நான்கு வருடங்களுக்கு முன்பு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வானதி வெளிப்பிரகாரத்தில் அமர்ந்து இருக்க..‌

அங்கு கோவிலின் உள்ளே செழியன் ரம்யாவிடம் கெஞ்சிக் கொண்டிருந்தான். ப்ளீஸ் ரம்யா புரிஞ்சுக்கோ… நம்ம காதலிக்கிற விஷயம் உங்கள் வீட்டிற்கு தெரிந்து இருக்கிறது.அதனால் தான் உனக்கு இப்படி அவசரமா திருமண ஏற்பாடு செய்யுறாங்க புரிஞ்சுக்கோட என…

ரம்யாவோ செழியன் ட்ரை டூ அன்டர்ஸ்டான்ட் மீ.‌.. எங்க அப்பா,அம்மா,அண்ணன் எல்லோரும் என் மேல நம்பிக்கை வச்சுருக்காங்க. அவங்களை என்னால ஏமாற்ற முடியாது.
எங்க அண்ணன் வெளிநாட்டுக்கு போகவில்லை என்றால் அவரிடம் கூறியிருப்பேன். அவர் ஏற்கனவே மனசொடிந்து போயிருக்கிறார்.உங்களுக்குத் தான் தெரியுமே என் தோழி கீதாவை லவ் பண்ணி … எங்க அப்பா, அம்மாகிட்டே சொல்லி பர்மிஷன் எல்லாம் வாங்கி திருமணத்திற்கு ஏற்பாடு பண்ணும் போது அவ குடும்பத்தோட எங்கோ போயிட்டா...என் கிட்டக் கூட சொல்லாமல் போயிட்டா… என் அண்ணன் எப்படி மனசொடிஞ்சு போயிட்டான் தெரியுமா? நானும் அதே வலியை கொடுக்க மாட்டேன் எனக் கூறி அவள் கண்கலங்க …
சரி விடு வா இப்பவே போய் உங்கள் அப்பா, அம்மாவிடம் நம் காதலை கூறுவோம் என்றான்.

வெளியே வர வானதி என்னதான் ரெண்டு பேரும் இவ்வளவு நேரம் பேசுவீங்களோ. நான்மட்டும் இப்படித் தனியாக உட்கார்ந்து இருக்கிறேன் என திட்ட …
சரி சரி விடு அண்ணிகிட்ட இப்படி மரியாதை இல்லாம பேசக் கூடாது‌. முதல்ல மரியாதையா பேசு புரியுதா என ரம்யா வானதியை கிண்டல் பண்ண…
அடியே ரம்யா என்னைக்கு எங்க அண்ணனை கல்யாணம் பண்ணாலும் நீ எனக்கு என் தோழி ரம்யா தான்… அதுதான் முதலில் பிறகுதான் அண்ணி என்றுக் கூறி சிரித்து பேசிக்கொண்டே வெளியே வந்தனர்.
ரம்யா வானதியிடம் "உங்க அண்ணன் என் வீட்டிற்கு இப்பொழுது வந்து பெண் கேட்கப் போகிறார். நீ வீட்டுக்குப் போ" என்றுக் கூற வானதியோ இல்ல நானும் கூட வரேன்... எங்க அண்ணனை தனியாக எல்லாம் விட மாட்டேன் என்றுக் கூறி அவளும் வந்தாள்.

கீதா இந்த ஊரை விட்டே செல்லவும், இருவரும் ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருந்தனர்.

அடிக்கடி ஒருவர் மற்றவர் வீட்டிற்கு செல்ல... வானதியின் அண்ணனை பார்க்கும் வாய்ப்பும் ரம்யாவிற்கு வந்தது.
இருவரும் பழகி, விரும்ப ஆரம்பித்துவிட்டனர். இந்த இரண்டு வருட காலத்தில் இவர்களின் காதலும் நன்கு வளர்ந்தது.
மூவரும் அடிக்கடி வெளி இடத்தில் சந்திக்க ஆரம்பித்தார்கள்.
இந்த விஷயம் ரம்யாவின் வீட்டில் தெரியவந்தது. அவர்கள் ரம்யாவிற்கு அவசரமாக திருமண ஏற்பாடு செய்தனர். அதனால்தான் செழியன் கோவிலில் திருமணம் செய்யலாம் எனக் கூற ரம்யாவோ ஒத்துக்கொள்ளவில்லை. வீட்டில் வந்து பேச சொல்லி அழைத்துச் சென்றாள்.

இவர்கள் மூவரும் வீட்டிற்குள் செல்ல... அங்கு இருந்த அனைவரையும் ரம்யாவின் அப்பா வெளியே போகச் சொல்லிவிட்டு ரம்யாவோட அப்பா,அம்மா மற்றும் பெரியப்பா மகன் மட்டும் இருந்தார்கள்.
அவரிடம் செழியன் உங்கள் மகளை நான் விரும்புகிறேன்.கண்ணுக்குள் வைத்து பார்த்துக் கொள்வேன் அவளை திருமணம் செய்து தாருங்கள் என்றுக் கேட்க...அவரோ ஓங்கி ரம்யாவை அடித்தார். ரம்யாவோ தன் அப்பாவுடைய இன்னொரு முகத்தைப் பார்த்து பேச்சிழந்து நின்றாள்.

அடிக்காதிங்க என்ன வானதியும் செழியனும் கத்த மீண்டும் மீண்டும் அடித்தார். ரம்யாவின் அப்பாவும் அண்ணனும் நீங்கள் இருவரும் இப்பொழுது வெளியே செல்லவில்லை என்றால் இவளை அடித்தே கொன்று விடுவோம் எனக் கூற… செழியனும் நான் விடமாட்டேன் அவளை அழைத்துக் கொண்டு தான் போவேன் என்றுக் கூறியவன்.
பிறகு அவர் காலை பிடித்துக்கொண்டு கெஞ்சினான் எங்களை விட்டுங்க நாங்கள் எங்கேயாவது போய் விடுகிறோம்,எனக் கதற… அவரோ செழியனை உதைத்துத் தள்ளிவிட்டு நீ இங்க இருக்க இருக்க இவளுக்கு தான் அடி விழும் என்றுக் கூறி அந்த ஜாதி வெறி பிடித்த மிருகம் பெற்ற பெண் என்றும் பாராமல் அடித்தார்…

நீங்கள் இருவரும் ஊர்சுத்துவது அறிந்து தான் நான் அவசரமாக திருமணத்துக்கு ஏற்பாடு செய்தால் எவ்வளவு திமிர் இருந்தால் என்னிடமே வந்து நிற்பீர்கள்.

நீ இப்போ போகவில்லை என்றால் இவளை அடித்தே கொன்று விடுவேன் என்று மீண்டும் அடிக்க…. வானதி தான் அண்ணா இங்க இருந்த ரம்யாவை கொன்னுடுவாங்க வாங்கணா என இழுக்க... அவனோ நம்ம போனாலும் அவளை கொன்னுடுவாங்க நான் விட்டுட்டு வர மாட்டேன் என்று கதற …அவள் அண்ணனை விடவில்லை. அடிவாங்கி ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்தாள் ரம்யா .
அண்ணா நம்ம இருந்தா தான் அவளுக்கு ஆபத்து நம்ம போயிட்டா பொண்ண பாத்துப்பாங்கண்ணா. என்று கூறி அண்ணனை அழைத்துக் கொண்டு வெளியேற…. அந்த பெரிய மனிதர் இன்னும் ஒரு மணி நேரத்தில் இந்த ஊரில் இருந்து கிளம்பவில்லை என்றால் இவள் உயிர் இருக்காது எனக் கூற… வானதி தன் அண்ணனை அழைத்துக்கொண்டு புறப்பட… அவரோ இரண்டு பேரை இவர்களை கண்காணிக்க அனுப்பி வைத்தார்.

பழைய நினைவுகளில் இருந்து மீண்ட வானதி கதறி அழுதாள். என்னோட தப்பு தான் பெத்த பொண்ண பார்த்துபாங்க என்று என் தோழியை விட்டுவிட்டு வந்துவிட்டேன். போலிஸ்க்கு போவோம் என்று பார்த்தால் இருவரை எங்களை கவனிக்க அனுப்பி வைத்தார்.
அதுவும் இல்லாமல் அவர் தான் ஊரில் பெரிய ஆள்‌. நாம் எது சொன்னாலும் எடுபடாது… ரம்யாவை பார்த்துப்பாங்கனு என்று நினைத்து தான் நான் அந்த ஊர விட்டு கிளம்பினேன்.
அண்ணனோ புத்தி பேதலித்துப் போயிட்டாரு சொன்னதையே திரும்ப கூறிக் கொண்டே இருக்க…
ஒரு புறம் அம்மாவும் அப்பாவும் பயந்துபோய் இருந்தார்கள். நான் ஒரு ஆளாக வீட்டை காலி செய்து சென்னைக்கு புறப்பட்டு வந்து விட்டோம்.

அங்கு என் உறவினர் வீட்டிற்கு சென்றோம். அண்ணன் அப்படியே இருக்க என்ன செய்வது என்று எனக்கு புரியவே இல்லை.
பிறகு அண்ணனை ஆஸ்பத்திரியில் காண்பித்து அங்கேயே சேர்த்து ஒரு வருடம் வைத்திருந்தோம். நாங்கள் இந்த வீட்டிற்கு குடி வந்து நானும் வேறு வேலை தேடிக் கொண்டேன்.

எப்படியும் ரம்யா அங்கு தான் இருப்பாள் என்று நம்பினேனே! கடவுளிடம் கூட அவள் எங்கிருந்தாலும் நன்றாக இருக்க வேண்டும் என வேண்டிக் கொண்டே இருப்பேன். நீங்க என்னவென்றால், அவள் எங்கே என்று கேட்கிறீர்களே என கதறி அழுக...அவள் கூறியதை கேட்டு மற்றவர்களும் கலங்கிப்போய் இருக்க… கீதாவோ மயங்கி விழுந்து விட்டாள். மது அவளை தாங்கி… தண்ணீர் தெளித்து எழுப்பி அவளை அமர செய்துவிட்டு..‌ அடுத்து என்ன செய்வது என எல்லோரும் யோசிக்க…

நிரஞ்சனோ அம்மா, அப்பாவா இப்படி என்று வருத்தப்பட்டு… எனஅடுத்து என்ன செய்வது என தெரியாமல் ஓய்ந்து போய் அமர்ந்திருந்தான்.

ராகவ் தான் சூழ்நிலையை கையில் எடுத்துக்கொண்டார் … நிரஞ்சன் உங்க அண்ணன் போய் பார்த்து என்ன நடந்தது என்று கேட்கவேண்டும்.தப்பு செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும். நீங்கள் என்ன சொல்லுறீங்க என வினவ…

நிரஞ்சன் மெல்ல தன்னை சமாளித்துக் கொண்டு ரம்யாவிற்கு நியாயம் செய்ய வேண்டும். தப்பு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டனை வாங்கித் தருவேன் என்றுக் கூறி விட்டு… மதுரைக்கு அடுத்த பிளைட் எப்போது என்று விசாரிக்க ஆரம்பித்தான்.
வானதி தானும் வருவதாக கூற... மதுவும் கீதாவும் கூட வருவதாக கிளம்பினார்கள்.

பயணங்கள் தொடரும் …..
 
#13
அத்தியாயம் - 10

கீதா தன் அண்ணனுக்கு போன் செய்து நிரஞ்சனைப் பார்த்ததிலிருந்து அனைத்தையும் கூறியவள்...இப்பொழுது மதுவும்,அவளும் மதுரைக்குச் செல்வதற்கு அனுமதி வாங்க … அந்தப் பக்கம் அருணோ உனக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என்றுதானே ஆசைப்படுகிறேன். என்னிடம் ஏன் சொல்லவில்லை என கடிந்து கொண்டு சரி பார்த்து போயிட்டு வாங்க, என அனுமதி அளித்தான்‌.

இவள் அருணிடம் அனுமதி வாங்குவதைக் கேட்ட நிரஞ்சன், மதுவிடம் " ஏன் மது மா, அவங்க கனவரிடம் அனுமதி வாங்காமல் உங்கள் அண்ணனிடம் ஏன் கேட்கிறாள், ஏன் தோழியை தேடி போகிறாள் என சொன்னால் சந்தேகம் படுவாரா "என வினவ…
மதுவோ அவர் இப்பொழுது உயிரோடு இல்லை என அனைத்தையும் கூற… அவன் இன்னும் அதிகமாக கதற… கீதா வந்து தன் தங்கையைக் கடிந்து கொண்டாள்.
இது இப்பொழுது பேச வேண்டிய பேச்சா, ஏற்கனவே வருத்தத்தில் இருக்கும் போது இதெல்லாம் தேவையா மது என்று அவளை கண்டித்தாள்.
பிறகு நிரஞ்சனை சமாதானம் செய்து… அனைவரும் மதுரைக்குச் சென்று இறங்கினார்கள் ..

அங்கு நிரஞ்சனின் அண்ணன் மருதுவை பிடித்து போலீஸார் விசாரிக்க…. அனைத்து உண்மையை கூறி விட்டான்‌ என் சித்தப்பா தான் அவளை அடித்ததார். இவர்கள் வீட்டை விட்டு சென்ற உடன் அவளைப் போய் பார்த்தால் மூச்சு நின்றுவிட்டது.
சரி என்று வீட்டிற்கு பின்புறம் தோட்டத்தில் புதைத்து விட்டோம் .இவங்களோட ஓடிப்போயிட்டா என்று எல்லோரிடமும் கூறி நம்ப வைத்தோம்.

இதில் எனக்கு எந்த பங்கும் கிடையாது. நான் அவர்களுடன் இருந்தேனே தவிர நான் எந்த தவறும் செய்யவில்லை என அவன் கதற... நிரஞ்சன் அவனை புரட்டிப் போட்டு விட்டான்.

அண்ணா அண்ணா என்று உன்னையும் தானே சுற்றினாள். அவங்கதான் படிப்பறிவில்லாத ஜாதி வெறி புடிச்சவங்க..
உனக்கு எங்கே போச்சு அறிவு என்று கூறிவிட்டு ராகவிடம் இவனுக்கு என்ன தண்டனையோ அதை வாங்கிக் கொடுங்கள்… அப்பொழுதுதான் என் தங்கை ஆத்மா சாந்தி அடையும் என கதறியவன்
அப்புறம் அந்த கொலைகாரவங்களோட சொத்து எதுவும் எனக்கு வேண்டாம். எல்லாவற்றையும் ஒரு டிரஸ்ட் அமைத்து இது போல் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ போகிறேன்.
இந்த கிராமத்தில் உள்ள எல்லா குழந்தைகளின் படிப்பிற்கும் உதவ போகிறேன். கல்வியறிவாவது மாற்றத்தை தரும் என்று நம்புகிறேன், என்றவன் கீதாவைப் பார்த்து கீதா என்னுடைய இந்த பயணத்தில் நீயும் என்னுடன் வருவாயா! எனக்கு இன்னொரு வாய்ப்புக்குடு என மண்டியிட்டு கேட்க… கீதாவோ அவனை கட்டிப் பிடித்து தன் சம்மதத்தை தெரிவித்தாள்.எல்லோர் முகங்களிலும் புன்னகை எட்டிப் பார்த்தது. இனி இவர்கள் இருவரின் பயணமும் இனிமையாக தொடரும்.


முற்றும்.