அனைவருக்குமான தளம்! விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்!

போட்டிக்கான அறிவிப்பு!

sudharavi

Administrator
Staff member
#1
வணக்கம் நட்புக்களே!

மறுபடியும் ஒரு கொண்டாட்டத்தோட வந்துட்டேன். கலைகள் எல்லாமே கடவுள் மனிதனுக்கு வழங்கிய பரிசு என்றே சொல்ல வேண்டும். அதிலும் எழுத்து என்பது மனிதனின் மனதோடு பயணிக்கும் ஒரு கலை. படிப்பவருக்கும் சரி, எழுதுபவருக்கும் சரி அந்த கதாபாத்திரங்களோடு ஒன்றி பயணித்த ஒரு அனுபவத்தை கொடுக்கும்.

எழுத்தாணியால் ஒரு நாட்டின் சரித்தரத்தை மாற்றி அமைத்த சம்பவங்களும் உண்டு. அப்படிப்பட்ட எழுத்திற்கு அங்கீகாரம் கொடுப்பது வாசகர்கள் தான். முன் போல் அல்லாமல் இன்று நமது திறமைகளை வெளிப்படுத்துவதற்கு ஏதுவான காலம் இது.

என்னடா இது சுத்தி வளைச்சு ஜாங்கிரி பிழிஞ்சிட்டு இருக்காளேன்னு திட்டாதீங்க. மேலும் புதிய திறமைகளை கண்டறிய மீண்டுமொரு கொண்டாட்டத்தோடு வந்திருக்கிறோம். Sudharavinovels தளத்தில் குறுநாவல்- களுக்கான போட்டி ஒன்றை அறிவிக்க இருக்கிறோம்.

“வாங்க எழுதலாம்”

ஜூலை பதினைந்தில் இருந்து போட்டி ஆரம்பம். ஒருவர் எத்தனை கதைகளை வேண்டுமானாலும் எழுதலாம். குறுநாவல் 10,000-இல் இருந்து 15000 வார்த்தைகள் மட்டுமே இருக்க வேண்டும்.

கதை எந்த ஜானரில் வேண்டுமானாலும் இருக்கலாம். அது எழுத்தாளரின் விருப்பம்.

ஏற்கனவே கதை எழுதியவர்கள் தான் எழுத வேண்டும் என்கிற விதியில்லை. புதியவர்களும் கலந்து கொள்ளலாம்.தளத்தில் ஒவ்வொரு அத்தியாயமாக பதிவிட வேண்டும்.

போட்டியில் கலந்து கொள்ள நினைப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தொடர்பு கொள்ளவும். போட்டிக்கு எழுத போகிற கதையின் டைட்டில், தங்களின் பெயர் மற்றும் விவரங்களுடன் தொடர்பு கொள்ளவும். “வாங்க எழுதலாம்” என்று பெயர் போட்டு மெயில் அனுப்பவும்.

Sudharavi0172@gmail.com

அக்டோபர் பதினைந்தாம் தேதி கதைகள் முடிவடைந்திருக்க வேண்டும். நவம்பர் ஒன்றாம் தேதி பரிசுகள் அறிவிக்கப்படும்.

முதல் பரிசு: 3000

இரெண்டாம் பரிசு: 2000

மூன்றாம் பரிசு : 1000

“வாங்க எழுதலாம்” இல் கலந்து கொண்டு தீபாவளி பரிசை வெல்லுங்கள்!!!
 

Latest