நான் பிந்து வினோத் அவர்களின் கனவுகள் மட்டும் எனதே என்று ஒரு கதை படித்தேன். ஆரம்பம் முதல் முடிவு வரை அப்படி ஒரு சுவாரஷ்யம். அமெரிக்காவில் படிப்பதற்காக செல்லும் நந்தினிக்கு விசா பிரச்சனை வர எஸ் என்று தன்னைத் தானே அழைத்துக் கொள்ளும் சதீஸ்குமார் தன் தங்கைக்காக அவளை திருமணம் செய்கிறான். அவள் நந்தினி மேல் காதல் கொள்வதும்,அதை மறைக்க போராடுவதும் அவள் இந்தியா செல்ல தானும் பின்னே செல்வதும்,அவள் குடும்பத்தினரை கவிழ்ப்பதும் என்று கதை அப்படி ஒரு வேகத்துடன் செல்லும்.பெற்றோர் வளர்ப்பு சரியில்லாமல் கெட்ட வழியில் சென்றாலும் நண்பர்கள் ஆதரவுடன் நல்லவனாகவே வாழ்கிறான்.அவனுடன் படித்த வள்ளி,சாந்தி இருவரும் நல்ல கதாபாத்திரங்கள். எனக்கு நந்தினி,எஸ் இருவரதும் காதல்,கண்ணாமூச்சி இரண்டுமே மிகவும் பிடித்தது. இப்படி கதைகள் எத்தனையோ படித்திருந்த போதும் இந்தக் கதை என்னை பலமுறை படிக்கத் தூண்டியது. நல்ல கதை