போட்டிக்கான திரி- நம்மை கவர்ந்த கதாபாத்திரங்கள்

Ramya Mani

Well-known member
#16
ஆமாம். இன்னும் நிறைய இருக்கு சுதா மேம். இப்பத் தான் என் முதல் பதிவசெய்திருக்கிறேன். இன்பா மேம், முத்துலட்சுமி ராகவன் மேம், ரமணிசந்திரன்,என்.சீதாலட்சுமி னு நிறைய எழுத்தாளர்களின் கதாபாத்திரங்களில் பிடித்தவற்றை முடிந்தவரை பதிவிடுகிறேன்.
 

sudharavi

Administrator
Staff member
#17
ஆமாம். இன்னும் நிறைய இருக்கு சுதா மேம். இப்பத் தான் என் முதல் பதிவசெய்திருக்கிறேன். இன்பா மேம், முத்துலட்சுமி ராகவன் மேம், ரமணிசந்திரன்,என்.சீதாலட்சுமி னு நிறைய எழுத்தாளர்களின் கதாபாத்திரங்களில் பிடித்தவற்றை முடிந்தவரை பதிவிடுகிறேன்.
வாங்க ரம்யா....நிறைய சொல்லுங்க அப்போ தான் நாங்களும்.படிக்காமல் விட்டதை செய்ததை படிப்போம்..
 

sudharavi

Administrator
Staff member
#18
நா ஆன்லைன்ல படிக்க வந்த போது எனக்கு முதலில் அறிமுகம் ஆன சைட் சில்சீ தான். அதுல விளக்கேற்றி வைக்கிறேன்னு ஒரு கதை. அதுல வர்ற ஹீரோ சசி ஹீரோயின் சிந்து ரெண்டு பேரையுமே அவ்வளவு பிடிக்கும்.

எதிர்பார்க்காம சிந்துவ சந்திக்கிற பக்கா கிராமத்து இளைஞன் சசி, அவளோட கல்யாணத்துக்கு போய், அங்க நடந்த பிரச்சனையால அவனோட கல்யாணம் பண்ணிப்பான். அவனோட குடும்பத்துக்கு கூட சொல்லாம... அதற்கு அப்புறம் அவனோட வீட்டுக்கு வந்து அவங்க கல்யாணத்தால ஏற்பட்ட சிக்கல தீர்க்கற வரை ரெண்டு பேரும் தனியா வாழ்ந்து, சசியோட தங்கச்சி வாழ்க்கையில இருக்கற சிக்கல சிந்து கண்டுபிடிச்சு அவளுக்கான நல்ல வாழ்க்கைய அமச்சு கொடுக்கறது ன்னு அழகா போகும் கதை.

சசி சிந்துவோட புரிதலும் காதலும் க்யூட் க்யூட் ரொமான்ஸ்ஸுன்னு போனாலும் அழகான ஒரு கிராமத்து மக்களுக்கிடையே வாழும் ஃபீல் கொடுக்கற கதை. சசியோட முரட்டு தனத்த பார்த்து சிந்து பட்டபேர் வைக்கறது, சிந்துவோட அப்பா இறந்த சமயத்துல ஒரு நல்ல கணவனா அவளுக்கு தோள் கொடுக்கறதுல சார் மாஸ்....
ரியா நானும் இந்தக் கதை படிச்சிருக்கேன்..நல்லா இருக்கும்..சசி கேரக்டர் எனக்கு பிடிக்கும்..
 

Ramya Mani

Well-known member
#19
ராஜேஷ்குமார் அவர்களின் கதைனாலே த்ரில் தான். அதிலயும் விவேக் வந்துட்டார்னா கதை செமயா போகும். நான் கூட யோசிப்பேன். ஒரு விஷயத்தை எப்படி இப்படி யோசிச்சு, சைன்டிபிக்கா அணுகமுடியும்னு. ஒவ்வொரு கதையிலும் நிறைய தெரிஞ்சுக்கலாம். எக்ஸ்ட்ராவா ரூபி@ ரூபலா விவேக்.. புருஷனுக்கு ஏத்த பொண்டாட்டி னு சொல்ற மாதிரி தான் விவேக் ரூபலாவின் பாத்திர வடிவமைப்பும் இருக்கும். நல்லா யோசிச்சு விவேக்குக்கே ஐடியா குடுக்கறவங்க.. வேலைக்குப் போறப்ப பஸ் ஸ்டாண்டில பாக்கெட் நாவல வாங்கி பயண நேரம் படிச்சாக்க எனக்கு அலுப்புத் தட்டாது. விவேக் விஷ்ணு ரூபலா வந்துட்டா இன்னும் புத்துணர்ச்சி யா இருக்கும்.
 

Ramya Mani

Well-known member
#20
என்.கணேசன் அவர்கள் எழுதிய அமானுஷ்யன் என்ற நாவலின் ஹீரோ அக்ஷய்.. தான் யாரென்றே தெரியா நிலையிலும் எதிரிகள் எல்லாருக்கும் பெப்பே காண்பித்தது முதல் கற்றுக் கொண்ட வித்தைகளை சரியான நேரம் பார்த்து உபயோகிப்பது வரை மாஸ் அக்ஷய் தான். இப்படி ஒரு கதையை , கதாபாத்திரத்தை அதுவரை நான் படித்ததில்லை. அமானுஷ்யனின் மர்மம் விலகிய பின்னரும் மீண்டும் மீண்டும் படிக்கத் தோன்றும்.