போட்டிக்கான திரி- நம்மை கவர்ந்த கதாபாத்திரங்கள்

#81
மல்லி சிஸ்ஸோட சத்தமின்றி முத்தமின்றி திரு துளசி கதாபாத்திரம் மறக்க {முடியாது எல்லோருடைய வாழ்க்கையிலும் சந்தித்து இருப்போம். துளசியின் அமைதியும் அருமை தன் பெண்ணிற்காக பொங்கி எழுவதும் அருமை
 

Anuya

Well-known member
#82
ஜேபி அவர்களின் காதலா?கர்வமா? . ஹர்ஷா கனியை பார்த்த முதல் பார்வையிலே காதல் கொண்டு அவளையும் காதலிக்க வச்சி ஒரு misunderstanding ல பிரிஞ்சி foreign போய் அவ உயிர்க்கு போராடும் போது தன்னோட கர்வத்தை எல்லாம் விட்டுட்டு அவ காதல்காக அவகிட்டையே வருவது ஒவ்வொரு இடத்துளையும் அவனோட காதலால் நம்மள மயக்குறான் . ஹர்ஷா & கனி:love:
 

Anuya

Well-known member
#83
வநிஷா அவர்களின் "இளமனசை தூண்டிவிட்டுப் போறவரே!!" ஹீரோ edward (துரைலிங்) அவனோட ப்ளாக்கி(சுப்பு) மேல அவன் வச்சி இருக்குற லவ் அவனோட caring எல்லாமே ரொம்ப பிடிக்கும் . எஸ்டேட் ல வேலை செய்றவங்க indians எல்லாருமே அடிமை இனம்னு நிறைக்குறவன் சுப்பு கிட்ட மட்டும் அவன் அடிமையா போகணும் தான் ஆசை படுறான் . அவளுக்கு ஒரு அம்மா மாதிரி இருந்து எது சரி எது தப்பு எப்படி நடந்துக்கணும் னு சொல்லி குடுக்குறதுல இருந்து அவளை ஒரு குழந்தை மாதிரி பாதுப்பான் ....நா உன்கூட சிரிச்சு பேசுறது யார் கிட்டையும் சொல்லக்கூடாது னு சொல்லும் போதுலாம் அவ்ளோ cute.
 
#84
பேசும் மொழியெல்லாம் ஹமீதா சிஸ் கதையின் ஹுரோ வெற்றி நயனி இருவரும் நடுத்தரவர்க்கத்தை சார்ந்தவர்கள் குடும்பத்தில் வரும் பிரச்சனைகளை இருவரும் தீர்க்கும் விதம் அருமை வெற்றி நயனியை திருமணம் செய்ய போடும் திட்டம் அருமை
 
#85
உஷாந்தியின் சஹி வெட்ஸ் சஞ்சு இந்த கதையில் இருவருக்கும் திருமணத்திற்கு பார்ப்பார்கள் வீட்டில். இருவருமே திருமணம் வேண்டாம் என்று கூறி இருகுடும்பத்திற்கிடையே பிரச்சனை ஆகிவிடும். சஹி வேலைக்கு செல்லும் போது சஞ்சு மேலதிகாராயாக இருப்பார் இருவரும் {காதலிப்பார்கள் சஞ்சு அலுவலகத்தில் பன்னும் சேட்டை திருமணம் செய்ய பன்னும் திட்டங்கள் எல்லாமே சூப்பர் சஞ்சு கதாபாத்திரம் சூப்பர்
 
#86
ஹமீதா சிஸ்ஸோட உந்தன் அலாதி அன்பினில் கதையில் வரும் தமிழ்செல்வன் நல்ல மகனாக நல்ல காதலனாக நல்ல சகோதரனாக இருப்பார் டீன்ஏஜ்ஜில் இருக்கும் சந்திக்கும் பிரச்சனைகளை அழகாக ஹேண்டில் செய்வார் மது தமிழை காதலித்தாலும் தோழியும் விரும்புவதால் சொல்ல தயஙகுவாள் தமிழ் மறுக்கமுடியாத படி காதலை சொல்லும் இடம் அருமை. கப்பலும் கடலும் மனதிலே நங்கூரமா பதிந்து விட்டது
 
#87
பர்வீன் சிஸ்ஸோட காணல் நீராய் என் காதல் கதையின் ஹுரோ சூர்யா ஹுரோயின் சக்திப்ரியா இரு கதாபாத்திரமும் அருமை.சூர்யா நட்புக்கு குடும்பத்திற்கு மதிப்பு கொடுக்கும் அன்பானவன்.சக்தி தனக்கு வரும் இடர்களை அழகாக எதிர்த்து உற்சாகமாக வலம் வரும் தைரியமான பெண். இருவரும் ஒருவர் மேல் ஓருவர் வைக்கும் காதல் அலாதியானது
 
#88
மோனிஷா சிஸ்ன்ஸோட உன் பாடல் நீ என் தேடல் கதையின் அன்புசெழியன் கதாபாத்திரம் அருமை. வாழ்க்கையில் எந்த விஷயத்தையும் விருப்பத்தோடு ரசித்து செய்யும் ரசிகன். நல்ல மகனாகாவும் நல்ல தந்தையாகவும் நல்ல கணவனாகவும் இருப்பவன். குழந்தையின் மனதில் நல்ல விஷயங்களை விதைப்பவன்
 
#89
எனக்கு பிடித்த ஒரு ஹீரோ கதாபாத்திரம் 'செம்பூவே உன் மேகம் நான்' கதையின் நாயகன் 'தமிழ் நிலவன்'. அவனின் அத்தை பெண் பூவினி தான் நாயகி.

அந்த குடும்பத்தின் இளைய தலைமுறையில் மூத்தவன் தான் நிலவன். அமைதியும் அழுத்தமும் பொறுப்புணர்வும் கொண்டவன்.

சிறு வயதில் இருந்தே பூவினியை ரொம்ப அன்பா அக்கறையா பார்த்துப்பான். பூவினிக்கு ஒவ்வாரு விஷயத்திலும் வழிகாட்டியா இருந்து வழிநடத்துறது, அவளுக்கு என்ன பிரச்சனைனாலும் முதல் ஆளா துணை நிற்கிறதுன்னு என்னை கவர்ந்த கதாபாத்திரம்.

ஒவ்வொரு நொடியும் பூவினிக்கு ஒரு நல்ல பாதுகாவலனா இருப்பான் நிலவன் . பூவினி மேல கொண்ட காதலை தன் குடும்பத்துக்காக மறைத்து கஷ்டபடறது, அவளை யாருக்கும் விட்டு கொடுக்க முடியாம தவிக்கிறதுன்னு கதை நல்லா போகும். அதே போல எனக்கு இந்த கதையில பிடிச்ச இன்னொறு கதாபாத்திரம் 'மித்திரன்'. பூவினியின் அத்தை பையன். பூவினிக்கும் இவனுக்கும் உள்ள நட்பு , பூவினியின் தங்கை தாரணியோட இவன் காதல் எல்லாம் நல்லா இருக்கும்.
 

Ramya Mani

Well-known member
#90
சமீபத்திய வாசிப்பு
ராதா க்ருஷ் அவர்களின் தாய்மடி சேர்ந்த மலர்
ஹீரோ கேசவ் சுப்பிரமணிய முரளி கிருஷ்ணன் .
பள்ளிப் பருவத்தில் இருந்தே ஹீரோயினை அதாவது தர்ஷினியை காதலிக்கும் கேரக்டர். பள்ளிப் பருவம், கல்லூரி பருவம், பிறகு வேலை என அனைத்திலும். தர்ஷினிக்கு வலது கரமாய் இருந்து கண்ணுக்கு இமை போல் தாங்கும் அன்பு நெஞ்சம். எதார்த்தத்தை உணர்ந்து அதற்கேற்ப செயல்படும் முரளி கதாபாத்திரம் தற்போது பிடித்ததாகிப்‌ போனது.
 
#91
சமீபத்தில் படித்த போற்றி பாரடி நம் காதலை ஹுரோ அதீப்ராகவ் கதாபாத்திரம் அருமை. தனக்கு தீங்கு இழைக்க வரும் சங்கவியை அவளின் தவறை உணர்த்தி நல்வாழ்க்கை அமைத்து கொடுத்து பிறகு காதல் கொள்வார். அவளின் தவறு வெளி உலகுக்கு தெரிய வராமல் தடுக்க தன் காதலியின் கவுரம் காக்கா தன் மேல் பழி ஏற்றுகொள்ளும் அரூமையான காதலன் சூப்பர்
 
#92
ஹமீதா சிஸ்ஸின் கலைந்து போன மேகங்கள் கதையில் வரும் நேஹா நரேன் சந்தீப் கதாபாத்திரங்கள் மிகவும் பிடிக்கும். நேஹா கிரிக்கெட் வீரர் சந்தீப்பின் தீவிர {விசிறி இருவரும் சந்தித்து நட்பாக இருப்பார் நட்பு அடுத்த நிலை தாண்டாமல் சுதாரித்து தன் காதல் கணவனுக்குதான் என்று இருக்கும் அருமையான கதாபாத்திரம் நரேன் காதல் மன்னன். நேஹாவின் குற்ற உணர்ச்சியை நீக்கி காதலிக்க வைக்கும் மாய கண்ணன் . சந்தீப் நேஹாவை தன் மனதில் உயர்ந்த இடத்தில் வைத்து இருப்பார்
 

dharani

Active member
#93
ரம்யா ராஜன் அனிதாவின் அப்பா.....எனக்கு ரொம்ப ரொம்ப நெருக்கமான ஸ்டோரி.....எப்ப தோணினாலும் எடுத்து படிக்கற கதை அப்படினா அதுல இதுவும் ஒன்னு..... ஹரிஹரன் மீனா ரெண்டு பெரும் அவுங்க லைப்யை எப்படி அழகாக மாத்திக்கிறாங்க அனிதாவுக்காக அப்படிகிறதை சொல்லி இருப்பாங்க..... குழந்தை செல்வம் சிலருக்கு வரம் சிலருக்கு அதோட அருமை தெரியாது ..... அந்த செல்வதை எப்படி பாதுகாக்கிறது அப்படினு ஹரி வாழ்ந்து காட்டி இருப்பார்.... சூப்பர் ஸ்டோரி.... ரம்யா ராஜனுக்கு இந்த ஸ்டோரி ஒரு மாஸ்டர் பீஸ் .....
 

dharani

Active member
#94
நிதனி பிரபுவின் நிலவே நீ என் சொந்தமடி ..... நிதா அக்கா கதை அப்படினா எனக்கு பைத்தியம்.... அவுளவு பிடிக்கும்.... அவுங்க தமிழ் தான் எனக்கு ரொம்பரொம்ப பிடிச்ச விஷயம்....அப்புறம் கதை சொல்லாம உணர்வை உணர வைப்பாங்க .....

செந்தூரன் கவி நிலா ..... படிப்பு மட்டும் தான் வாழ்கை உயர்த்து அபப்டினு இல்ல உழைப்பும் உயர்த்தும் ..... காதல் வளர்ச்சிக்கு இருக்கணுமே தவிர வீழ்ச்சிக்கு இல்லனு சொல்லி இருப்பாங்க.....தேத்தண்ணீ வித் செந்தூரன்..... இந்த ஒரு வரிக்கு அடிமை ..... அதை செந்தூரன் சொல்லும் போது எல்லாம் அப்படி ஒரு இதமா இருக்கும்....
 
#95
எனக்கு பிடித்த ஒரு ஹீரோயின் கதாபாத்திரம் சூர்யோதயா. சூர்யோதயா- ரொம்ப சுட்டி, துறுதுறு ஜாலியான பெண். அன்பான பெற்றவர்கள், பாசமான அண்ணன் என்று அழகிய குடும்பத்தில் பிறந்து வாழ்ந்து வரும் அவள் வாழ்க்கையில், அவள் பள்ளி பருவத்தில் எதிர்பாராது ஏற்படும் விபத்தால் அவள் வாழ்க்கையே மாறிவிடுகிறது. அதில் இருந்து அவள் படும் வேதனைகள் துயரங்கள் பல. அதன் பிறகு அவள் வாழ்க்கையில் 'வெற்றி' அவள் கணவனின் வருகை. அவன் வந்த பிறகு அவள் வாழ்க்கையில் இனி வெற்றியே என்று நினைத்தால், அதற்கு நேர்மாறாக இன்னும் அவள் நிலை மோசமாக . வெற்றி - பொறுப்பிள்ளாத , கோபாகார கணவன். அதிக அன்பு இருந்தும் அவன் குணத்தால் அவளை இன்னும் இன்னும் துயரத்தில் ஆழ்த்தி, அவளுக்கு மேலும் வேதனையை ஏற்படுத்துகிறான். இறுதியில் அவன் இறப்பிற்குப் பிறகே அவள் நிலை மாறுகிறது. தன்னம்பிக்கையுடன் தன் வாழ்க்கையை எதிர்கொள்ள ஒளி பெற்று சூர்யோதயமாக மேலெழும்பிகிறாள். அதுவே 'சூர்யோதயம்' என்னும் அழகிய கதை. ரொம்ப யதர்தமான கதை. சூர்யோதயா நம் எதிர் வீடு, பக்கத்து வீடு பெண்னை போன்று தோன்றும் கதாபாத்திரம். என்னை அதிகம் கவர்ந்தது அவள் தன்னம்பிக்கையும் தைரியமும்.
 
#96
எனக்கு பிடித்த ஒரு குழந்தை கதாபாத்திரம் சுஸ்பாப்பா. 'யாயும் ஞாயும் யாராகியாரோ' கதையில் வரும் சுஷ்மிதா. கதையில் வரும் அவளோடா மழலை மொழி ரொம்ப அழகு. எழுத்தாளர் குழந்தை பேசுவது போலவே மழலை மொழியில் அழகாக கொடுத்திருப்பாங்க. 'ம்மாவா அப்பின்னா' என்று கேக்கும் பொழுதும் தன்னை 'சுஸ் பாபா' என்றும் தன் தந்தையை 'சுஸ் பா' என்றும் சொல்லும் போது கொள்ளை அழகு.
தாயை இழந்து தன் தந்தையின் அன்பில் வாழும் குழந்தை சுஷ்மிதா. அவள் தந்தை தான் கதையின் நாயகன். அவர்கள் எதிர்வீட்டில் குடிவரும் நாயகி. மூவரையும் சுற்றி நகரும் கதை. அதில் சுஸ்பாப்பா கதாபாத்திரம் மனதை அள்ளும். அவளின் மழலை மொழிக்காகவே கதையை மீண்டும் மீண்டும் படிக்கலாம்.
 
#97
'இரு திசைப் பறவைகள்'-மேக்னா சுரேஷ் அவர்களின் கதையில் வரும் ஈஸ்வர் கதாபாத்திரம் என்னை மிகவும் கவர்ந்தவன். கணவனை இழந்து தன் இரு பிள்ளைகளுடன் வாழும் பிரித்வீகா. அவள் நண்பனின் மச்சானாக வரும் ஈஸ்வர். முதலில் வில்லன் போலவே வலம் வருபவன். பின்னர் தான் தெரியும் அவன் ரொம்ப நல்லவன் என்று. பிரித்வீகாவை மறுமணம் செய்பவன். முதலில் மிரட்டி தான் அவளை கல்யாணம் செய்வது போல் தெரியும். ஆனால் பிறகு தான் தெரிய வரும் அவள் மேல் அதிக காதல் கொண்டு அவளை கல்யாணம் செய்திருப்பான் என்று. ரொம்ப அருமையான கதாபாத்திரம். அவள் இரு பிள்ளைகளையும் அவ்வளவு அன்பாக அக்கறையாக பார்த்துக் கொள்வான். உண்மையில் மறுமணம் செய்யும் பெண்ணிற்கு இப்படி ஒரு கணவன் அமைந்தால் நிச்சயம் அவள் வாழ்க்கை சொர்க்கமே.
 
#98
மேக்னா சுரேஷ் அவர்களின் இன்னொரு கதை 'கலியுக குருஷேத்திரம்'. அதில் வரும் நண்பர்கள் கதாபாத்திரங்கள் அருமையோ அருமை. நண்பர்கள் ஐவரும் நட்புக்கு இலக்கணமாய். சக்ரவர்த்தினி இவள் தான் நாயகி இவள் நண்பர்கள் ஐவர்-கார்த்திக், சந்தோஷ், நந்தகோபால், உலகநாதன், தீபன் . அவள் கஷ்டத்தில் துணையாய், அவளுக்கு எப்பொழுதும் பாதுகாப்பாய் நட்பில் சிறந்து விளங்கும் நல்ல நண்பர்கள். 'நண்பன்டா' என்று பெருமையாக சொல்லிக் கொள்ளலாம். அடடா இப்படி ஒரு நண்பர்கள் பட்டாளம் கிடைத்தால் அருமையாக இருக்குமே என்று ஏங்க வைப்பார்கள். கதையின் நாயகன் நாயகி எல்லாமே ஆண் பெண் நட்பு தான். நட்புக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்த கதை. கதையில் காதலும் உண்டு. ஹீரோ ஹரிஷ். வில்லன் பாதி ஹீரோ பாதி. ஹரிஷ்-வர்த்தினியின் காதல் - மோதல், நண்பர்களின் அன்பு அக்கறை என்று இனிமையாக செல்லும் கதை.
 
#99
கண்ணுக்குள் பொத்திவைப்பேன்- சக்தி திருமலை. என்னோட பேவரைட் ஆன்டிஹீரோ நானி. அவன் ஒரு டாக்டர். முதலில் ரொம்ப நல்லவனாக தான் இருப்பான். ஆனால் சில கசப்பான சம்பவங்களால் கெட்டவனா மாறிடுவான். அவனுக்கு எல்லா கெட்ட பழக்கமும் அத்துபடி. தனக்கென்று ஒரு வித்தியாசமான கொள்கையோடு சுத்திட்டு இருப்பான். அவனை திருத்ததான் அவங்க அப்பா அவனை வெளிநாட்டில் இருந்து அவன் அண்ணன் கல்யாணத்தை சாக்காக வைத்து இந்தியா கூட்டிட்டு வருவார். அவன் அத்தைப் பெண் தான் ஹீரோயின் ஜானகி.நடக்க முடியுமா படுத்த படுக்கையாக இருப்பாள். வீட்டில் எல்லோரும் அவளை ஒதுக்கி வைத்திருப்பார்கள் அவள் அம்மாவை தவிர. அவளை பிடிக்காத அவள் அப்பா அவளை நானிக்கு கல்யாணம் பண்ணிவைக்க நினைப்பார்.ஜானகிக்கு அதில் விருப்பம் இல்லை. .ஏன்னா நானி பத்தி எல்லாமே அவன் வாயால் அவனே சொல்லி அவளுக்கு தெரியும். இதற்கிடையே ஜானு அம்மா அவளை குணப்படுத்த சொல்லி நானிகிட்ட கேப்பாங்க . அவனும் ஒத்துக்கிட்டு அவளுக்கு ட்ரீட்மெண்ட் கொடுப்பான். 'என்னை கல்யாணம் பண்ணிக்க வேண்டாம் என்றால் நீ எழுந்து நடந்து தான் ஆகணும்னு' மிரட்டியே ஜானுக்கு ட்ரீட்மெண்ட் கொடுத்து அவளை நடக்க வைச்சுடுவான். ஜானுவும் அவளுக்கு பிடித்த துறையில் வெற்றி பெற்று சாதித்துக் காண்பிப்பாள். இதுல நானி கொஞ்சம் வித்தியாசமான கேரக்டர். வேற லெவல். அவன் கிட்ட ஜானு மாட்டிட்டு முழிக்கிறது இருக்கே அய்யோ அய்யோ. எப்பவுமே ஹீரோ அன்பாலதான் ஹீரோயினை கஷ்டத்தில் இருந்து வெளிக்கொண்டுவரணும்மா என்ன? அடாவடியாலும் ஹிம்சையிலும் மாத்தமுடியுன்னு இந்தகதையில சொல்லியிருப்பாங்க. ஜானு நானி ரெண்டு பேருமே என் பேவரைட்.
 
நான் படித்த கதைகளில் எனக்கு பிடித்த நாயகர்கள் பெயர்களை லிஸ்ட்டாவே போட்டு கொண்டு வந்துட்டேன். எல்லாமே என் பேவரைட் ஹீரோஸ். எல்லார்கிட்டேயும் ஏதோ ஒரு விஷயம் பிடிக்கும். இதுவரை நான் படித்ததே சில கதைகள் தான், சோ அதில் நான் ரசிச்ச, என் நினைவில் இருக்கும் ஹீரோ லிஸ்ட் இது.

விஜய நளந்தன் - இருள் மறைத்த நிழல்
சுதாகர் - மயங்குகிறாள் ஒரு மாது
நானி - கண்ணுக்குள் பொத்திவைப்பேன்
மானவ் - வானவில் என் வாசலில்
தமிழ் நிலவன் - செம்பூவே உன் மேகம் நான்
ஆதர்ஷ் - இடம் தருவாயா மனசுக்குள்ளே
ஆதித்தியன் - சில்லென்று ஒரு காதல்
விக்ரம் - இது நீரோடு செல்கின்ற ஓடம்
சித்தார்த் - இதயம் விழித்தேன்
அர்ஜூனா - ஆழி அர்ஜூனா
எட்வர்ட் துரை - இளமனச தூண்டிவிட்டு போறவரே
ஷ்யாம் - வீணையடி நீ எனக்கு
குரு - சமுத்திரா
யு வான் லீ - உன்னை காணத்தான் கண்கள் கொண்டேனா
ஷிவேந்தர் - என் கருப்பழகி