மனம் திருந்தினால் (ள்) - கதை திரி

sudharavi

Administrator
Staff member
#1
ஹாய் பிரெண்ட்ஸ்,

சித்து அவர்கள் "மனம் திருந்தினால் (ள்) என்கிற தலைப்போடு போட்டியில் இணைகிறார்.
 
#2
மனம் திருந்தினால்(ள்) - 1

கறுவானமாயினும் நட்சத்திர ஜொலிப்போடு தன்னை அலங்கரித்து வட்டநிலவை பொட்டாய் இட்டொரு இரவொன்றை சூடிக்கொண்டது,.... இரவில் வானும் ரசிக்கத்தகவை தான் பெண்ணாய் நீ வருணித்தால்.....

இரவு மணி பத்தாகிட,கண்ணாடி முன்னின்று தன்னை ஆராய்ந்து கொண்டிருந்தாள்.....தனது ஸ்ர்ட் சரியாக உள்ளதாக அதில் உள்ள பட்டன்களை போட்டவள் இடையின் கீழ்வரை இழுத்துவிட்டு கொண்டாள் தனது ஸ்ர்டை....கைகளை மடித்துவிட்டவள் தனது முடிகளை அள்ளி முடித்துக்கொண்டவள்...தன்னை மீண்டும் ஒருமுறை ஆராய்ந்தாள்....மிகவும் கட்சிதமாக இருக்க தனது பேக்கை எடுத்தாள் அதில் சிறு கத்தி,மிளகாய் பொடி ஹிட் ஸ்ப்ரே...இன்னும் பொருட்கள் தனக்கான பாதுகாப்பிற்காக எடுத்துவைத்தாள்....

இதையெல்லாம் பார்த்த அவளின் அன்னை கற்பகம் அவளருகில் வந்தார்...." இதெல்லாம் தேவையாடி உனக்கு ஏன் காலைல தான் வேலைப்பார்க்கிறீயே அது போதாதா...நைட்டும் வேலைக்கு போனுமா அதுவும் டேக்கிஸிக்கு ஓட்ட போனுமா..,உனக்கு ஒன்னுனா யாருடி இருக்கா எங்களுக்கு....இவ்வளவு உழைச்சுதான் வீட்ட காப்பாத்தனுமா.,," என்ற பயம் கலந்த அக்கறையில் கேட்டிட.

" என்ன பண்ண சொல்லுற நாம சொந்த வீட்டுல இருந்தாலும் வாடகை வீடு மாதிரி லோன் கட்டுறோம் அந்த பேங்க்காரனுங்களுக்கு....உன் புருசன் ஆடம்பரத்துக்கொண்டு பொறந்தவனாட்டம் காரு வீடுனு வாங்கினாலும் பாதுக்காக்க தெரிஞ்சா அந்த மனுசனுக்கு குடிச்சுகுடிச்சு பாதி அழிச்சுட்டு போயிட்டாரு....இதோ மீதி இருக்கிற இந்த காரையும் வீட்டையும் காப்பாத்தனும்ல பாப்பாவேற நல்ல படிக்க வைக்கனும் ல...அப்ப நான் உழைச்சுதான் ஆகனுமா..." என்றாள்

" அதுக்குனு நைட்டா டி உழைக்கனும் உனக்கு என்ன ஆகுமோனு ஏதாகுமோனு திக் திக் இருக்குடி நீ பத்திரமா இருக்கீயா இல்லை ஏதும் ஆபத்தா மடியில நெருப்பகட்டிட்டூ இருக்கேன்..."

" இரண்டு கார் இருக்கே அத**** டேக்ஸில விட்டு பணம் சம்பரிக்கலாம் நினைச்சுதான் நானும் விட்டேன்...அதுக்கு இரண்டு பேரையும் சம்பளத்துக்கு போட்டேன் ஆன அவனுங்களும் சரியில்ல குடிச்சுட்டு மட்டையாகி கார் ஓட்டுறதுமில்லை ஆன சம்பளத்த மட்டும் வாங்கிறானுங்க தேவையா இது அதுவேற தண்டத்துக்கு அதான் நானே ஓட்டலாம் மூடிவு பண்ணேன்...."

" இல்லடி காலம் கெட்டு கெடக்கு எவன் எப்படி வந்து கார்ல ஏறுவானு தெரியல பக் பக் இருக்குடி,,நீ பையனா இருந்தா பிரச்சனை இல்லை பத்திரமா எப்பையும் வந்திடுவ ஆன நீ பொண்ணா இருக்கிறது தானடி பிரச்சனையே உனக்கு இன்னும் கல்யாணம் கூடா ஆகல அதுக்குள்ள ஒன்னுகடக்க ஒன்னு ஆச்சுனா என்னடி பண்றது..."

" விதினு சொல்லிட்டு போயிட்டே இருக்க வேண்டியது தான்மா......" என்றாள் அமர்த்தலாக...

" என்னடி பேசுர விதினு சொல்லனுமா இங்க பாருடி என் நேரம் அந்த மனுசனோட பணத்த வீட்டப்பார்த்து அவரு எப்படி என்னாஏதுனு விசாரிக்காம எங்க அப்பா கட்டிவச்சுட்டாரு ஆன அவரு குடிக்கார இருந்துட்டு எல்லாத்தையும் அழைச்சுட்டு உங்க இரண்டு பேரையும் கொடுத்துட்டு போயிச்சேர்ந்துட்டாரு....இப்ப நீயும் நைட் வேலைக்கு போற அதுவும் கார் ஓட்டுற..உன்னையும் இழக்க முடியாதுடி பகல் வேலை பார்க்கிறத போதும் நேத்துமா,...இத விட்டுட்டு..அக்கம்பக்கதினரா நீ நைட்வேலைக்கு போறத தப்பா பேசுவாங்கடா...."

" அம்மா நைட் வேலைக்கு போற பொண்ணுங்க எல்லாம் தப்பானவங்க இல்லைமா....ஐடில ஆரம்பிச்சு இட்லிகடை போடுற வரைக்கு பெண்கள் நைட் வேலை பார்க்கத்தான் செய்றாங்க...அதெல்லாம் தப்பான வேலையா?..,இங்க பேசுரவங்க நம்ம அக்கறையில பேசல மா,அதே போல பேசரவங்க நம்ம கஷ்டத்த பங்கு போடுரவங்க இல்லைமா ...நமக்கு மேலும் கஷ்டத்த தரவங்கதான் மா....புரியுதா.." என்றவள்....தன் அன்னையிடம் வந்தவள்..

" எல்லாத்தையும் தெரிஞ்சுட்டு தான்மா இந்த முடிவ எடுத்துருக்கேன்.....தைரியமா நம்மல எதிர்நோக்கி வர பிரச்சனை நேரா நின்னுதான் தீர்க்கனும் பயந்துட்டு பதுங்குனோம் பிரச்சனை பூதம் மாதிரி பெரிசா நிக்கும்..உன் கடவுள நல்ல வேண்டிக்கோ....பாப்பா,தூங்கிற பார்த்துக்க.....வீட்ட நல்ல பூட்டிக்கோ பயப்பிடாம தூங்குமா நான் இரண்டு மணிக்கு வந்திடுவேன் " என்றாள் கார் கீயை தன் கையில் சுழற்றியவாரே....
தன் காரை ஏறி அமர்ந்தவள் ******டேக்ஸில் அப்பை லாகின் செய்தாள்...வண்டியையும் எடுத்தாள்.....

" கிளம்ப்பிடியா....,விஜி..." என்று கதவை தட்டிக்கொண்டே கேட்க.." சார் ஒரு பத்துநிமிசம் வெய்ட் பண்ணுங்க வந்திடுறேன்..." என்றவள் தன் கண்ணுக்கு மையிட்டவள் உதட்டில் லேசாய் உதட்டுசாயத்தை பூசியவள்...தலைவாரி மல்லிகை சரத்தை வைத்தவள்,,.தனது சேலை சரிசெய்தாள்....உறங்கிக்கொண்டிருக்கும் தன் மகனை தன் தோளில் போட்டவள் கதவை திறந்து வெளியே வந்தாள்....

" அவளை மேலிருந்து கீழ் வரை பார்த்தவர்.கையில் குழந்தை இருப்பதை பார்த்தவர் முகம் சுழித்தார்...." இவனையும் தூக்கிட்டு தான் திரியனுமா....இங்க விட்டு வரகூடாதா...." என்றார் கடுப்பில்...

" சார் குழந்தை..தனியா எப்படி விட்டுவர நடுவுல எழுந்துடானா,அழுவான் சார் யாருமில்லைனா,பயப்பிடுவான் சார்...அதான் நானே தூக்கிட்டு போறேன் சார்...." என்றாள் தயங்கி கூற..

" இவனால கஷ்டமருக்கு எதுக்கும் பாதிப்பு வரமா பார்த்துக்கோ இல்லைனா உன்னையும்உன் மகனை தோலை உறிச்சுருவேன்...." என்றவர் எச்சரிக்கை நகர அவரைபின் தொடர்ந்தவாரே தன் வாழ்க்கையை இப்படி ஆனதை கவலைகளோடு கண்ணீர் சுரந்து கொண்டது கனத்த இதயத்தோடே வந்தவள்


" விஜி, கஷ்டமர் இந்த ஏரியாதான்...பார்த்து நடந்துக்க....இப்ப உனக்காக டேக்ஸி வரும் அதுல போ திரும்பி அதுலையே வந்திடு..சரியா..." என்றுவிட்டு செல்ல அந்த கொட்ட கொட்ட இரவிலும் தன் மகனை சுமந்தவள் கலங்கி கொண்டிருந்த கண்ணை துடைத்தவாரே நின்றாள்,,.

அவள் டாக்ஸியும் வர ஏறி அமர்ந்தாள் முன்சீட்டில்...தனது அருகிலிருக்கும் டைவரை ஆராய முகத்தில் கைகுட்டையை கட்டி கேப் போட்டுகொண்டு கண்மட்டும் தெரியுமாறு இருக்க " விசத்திரமாக பார்த்தாள் விஜி...

" நேத்ரா தான், தான் ஒரு பெண் என்று தெரிய கூடாத நிலையில் முகத்தை கைகுட்டையாலும் கேப் தலையில் போட்டுக்கொள்வாள்....தனது பாதுகாப்பிற்காக....

இரவில் தொடங்கிய இவர்களது பயணம் எவ்வாறு இருக்குமோ...

மனம்திருந்தினால்(ள்)

வாசக மக்களே கதையை படித்து உங்கள் பெரும் ஆதரவை தர வேண்டும்.இந்த தளத்திற்கு புதியது ஆதரவு தாருங்கள் மக்களே.
 

Attachments

#3
மனம்திருந்தினால்(ள்)-2


நேந்தராவின் டாக்சியில் ஏறி அமர்ந்தாள் விஜி,..நேத்ராவே தன்னை பெண்ணென்று மறைக்க கைக்குட்டையால் தன்முகத்தை மறைத்து,தொப்பியை தலையில் அணிந்திருந்தாள்....வண்டி எடுத்தாள்..அப்பயணம் அமைதியே தர,.....நேத்திராவிற்கு இந்த அமைதி ஏறிச்சலை தர பாடலை ஒலிக்கச் செய்தாள் அதில்,,.


" நீ உன் ஆசை மட்டுமா உன் வேடம் மட்டுமா...." ஐரா பாடல் ஒலித்தது....


நேத்திராவிற்கு இசையென்றால் அதிக இஷ்டம் அதுவும் இரவின் பயணத்தின் போது கேட்பதென்றால் யாருக்கு தான் பிடிக்காது...அவள் என்றும் மெல்லிய இசை கேட்பதை விட நம்பிக்கை தூண்டும் இசையே அதிகம் கேட்க விரும்புவாள் அதுவும் இரவில் தனக்கொரு தைரியம் பிறக்க இவ்வாறு பாடலை தான் கேட்பாள்.....


பாடல் ஒலிக்க....." பிளிஸ் அதை ஆப் செய்றீங்களா தம்பி தூங்கிறான்..." என்றாள் விஜி.தனது கையை உயர்த்திக்காட்டியவள்,அதை ஆப் செய்தாள்..மீண்டும் அப்பயணம் அமைதி கொள்ள,இருவரது பார்வை சாலை வெறித்தது
இருவரது எண்ணம் வேறாக இருக்க வேறாக இருந்தது,...


'இரவில் வேலைக்கு செல்லும் பெண்கள் எல்லாரும் தவறானவர்களா.....பகலில் மட்டும் பெண்ணிற்கு பாதுகாப்பு கிடைத்திடுமா?....இரவில் இல்லாமல் போவதற்கு.....தனியே செல்ல கூடாது இரவில் செல்ல கூடாது...துணையின்றி வாழும் பெண்ணிற்கு யாரை துணையென்று அழைப்பாள்....அவளுக்காக யார் சம்பாரித்து வந்து கொடுப்பார்கள்,....தன் வாழ்க்கை வாழ நாம் தான் ஓடவேண்டும் அது இரவாக இருந்தா என்ன பகலாக இருந்தா என்ன.....தேவையென்றால் ஓடத்தான் வேண்டும் இரவும் பகலும் பாராமல்....இதையறிந்தும் அறியாத சில கூட்டம் இரவில் வேலைக்கு செல்லும் பெண்கள் தவறானவர்களாக பேசிக்கிறார்கள்.....பேசும் வாய் அதிகம் பேசதான் செய்யும் கேட்கும் நாம்தான் காதுகளை மூடிக்கொள்ளவேண்டும்...." என்று தன் அன்னை கூறியதற்கு தனக்குதானே விளக்கம் அளித்துக்கொண்டிருந்தாள்....


' இவ்வளவு அலங்காரம் என்னவனுக்காகவா இல்லை எவனுக்காக தான்....வயிற்றுக்கு பசியாற்ற படையலென ஆகி நிற்கிறேன்.....விதி என்று பெயரிடவா...உதட்டுகள் இருந்து உரிமைகளை பேச முடிவதில்லை போலும்...

பெற்றெடுத்தவர்களின் கையாளாகத்தனமா கட்டிணவனின் பணத்தாசையா என்நிலைமைக்கு காரணம்...குடும்பம் குழந்தை என்ற எனதாசை என்னோடு சேர்ந்து பிறரின் இச்சைக்கு இறையாகியது,...உடம்பை வைத்து உயிர்பிழைக்கும் நிலையில் நான்...' என்று வந்த கண்ணீரை துடைத்தாள்...


அவள் இறங்கவேண்டிய இடம் வர இறாங்கினாள்.." வெய்ட்டிங்ல தானே இருக்கீங்க..." என்று இறங்கினாள் விஜி...
வெறும் " ம் " என்று பதிலளித்தாள் நேத்ரா.


உள்ளே சென்ற விஜி அந்த வீட்டின் காலிங் பெல்லை அழுத்தினாள்...கதவி திறந்தார் ஒரு நாற்பது வயதவர்..." விஜியா?,."


" ம்"....என்றவளை உள்ளே அழைத்தார்,...உள்ளே வந்தவள் சுற்றி சுழல விட்டாள் கண்ணை,...அவர் ஓர் அறையை காட்டினார்,,.தூங்கும் தன் மகனை சோபாவில் படுக்க வைத்தாள்...


" இது உன் குழந்தையா?...."
" ஆமா சார் பார்த்துக்க ஆள் இல்லை அதான் மன்னிச்சிருங்க சார் தூங்கிட்டான் டிஸ்ர்ப் பண்ணமாட்டான் " என்றாள்.


" பரவாயில்லை மா உள்ள போர்வை இருக்கு போர்த்திவிடு...." என்று உள்ளே சென்றார்..அவளும் அவ்வாறு செய்துவிட்டு மகனின் தலையை வருடிவிட்டு நெற்றியில் முத்தமிட்டவள்....அறையினுள் நுழைந்தாள்...ஒரு மணிநேரம் கழித்து கதவை திறந்து வெளியே வந்தார்....தனது ஆடை சரிசெய்தவள் வெளியே வந்து குழந்தை தூக்கினாள்,....சொல்லிய பணத்தை விட அதிகமாகவே கொடுத்தார்...நன்றி கூறிவிட்டு வெளியே வந்தாள்..நேத்ரா சீட்டில் சாய்ந்தவள் ஹேட்செட்டை ஒருகாதில்,மாட்டியவாரே பாட்டு கேட்டாள்...விஜி வந்து கதவை தட்ட லாக்கை திறந்தாள் மீண்டும் ஏறி அமர காரை எடுத்தாள்.....ஏறிய இடத்திலே இறக்கிவிட்டவள்.....சென்றுவிடவிஜி வீடுவந்தவள் அவர் கொடுத்த பாதி பணத்தை கொடுத்து மீதியை வைக்க நினைத்தவளிடம் முழுபணத்தை பறித்தான்...." பிள்ளைக்கு ஸ்கூல் பீஸ் கட்டனும் ஐயா.."" இவன் ஸ்கூல் போகனும் யாரு அழுதா நாளைக்கு இதே போல வரட்டும் தரேன் என்று பணத்தை எண்ணியவாரே சென்றிட...தன் மகனை கட்டில் படுக்க வைத்தவள் அப்படி அமர்ந்து அழுதாள்......நேத்ரா,ஒரு பள்ளி ஆசிரியை....ஒரு பெரும்பள்ளியில் ஆசிரியராக இருக்கிறாள் மெட்டிரிக்குலேசன் பள்ளி என்பதால் சம்பளம் குறைவுதான்...குடித்து குடித்து உடலை அழித்து இறந்து போன கணவர் வாங்கிய கடன்களையும் வீட்டின் மேல் வாங்கிய லோன்னையும் அடைக்கவே நேத்ரா பகலில் பள்ளியும் இரவில் காரையும் ஓட்டி சம்பாதிக்கிறாள் போதாத குறைக்கு டியூசனும் வேறு தன் தங்கை மித்ராவுடன் எடுக்கிறாள்...மித்ராவின் படிப்பிற்கு வேற பணம் தேவை என்பதால்.....தன் உடல்நலத்தையும் நினைக்காது வேலை என்று சுற்றித்திரியும் இருபத்தைந்து வயது நிரம்பிய பெண்..மிகவும் துணிச்சல் நிறைந்த பெண் எதையும் எதிர்கொள்ள துணிந்து நிற்கும் பெண் நேத்ரா...விஜி, தனது பெற்றோர்களால் படிக்கவைத்தனர் பி,எஸ்.சி வரை பின் முடியாமல் போக திருமணம் செய்துவைத்தனர் சரியாக விசாரிக்காமல் திருமணம் முடித்துவைக்க பணத்தாசையால் அப்பெண்ணையே பேரம் பேசி விற்றான் தான் வாங்கிய கடனுக்காக...இவளை விட்டு ஓடிவிட்டான்,.பெற்றோர்களும் இறந்திட நாதியற்று இருந்தாள் தனது மகனோடு..

கடன்காரன்


இவளை அழைத்து தன்வீட்டிற்கு வேலைகாரியாக அழைத்துவர பகலில் தன் மனைவிக்கு வேலைகாரியாகவும் இரவில்இந்த வேலைக்காவும் அவளை அழைத்துவந்தான் அவளால்,காசை பார்க்க ஏண்ணி கடன் என்ற பெயரை சொல்லி அவ்வாறு அவளை வற்புறுத்த முதலில் மறுத்தாள் பின் சாக கூட துணிந்தவள் தன் மகனை எண்ணி கவலையுற்றாள்...வேறு வழியின்றி ஒத்துக்கொள்ள இவளை வைத்து பணத்தை சம்பாரித்தான்...இவளோ தன்மகனை படிக்கவைக்கமாறு உதவிகோர மனைவியும் இவளுக்காக பரிந்துபேச ஒத்துக்கொண்டார்...அவ்வீட்டில் இருக்கும் மிச்சம் மீதியே இருவரது வயிற்றை நிறைக்கும்.....எதிர்த்து பேசி வெளிய வர திறனற்றவள்.,.வாய் பேசும் ஊமை....தன் பிள்ளைக்காய் அனைத்தையும் பொறுத்துக்கொள்ளும் பேதை.....

இருள் சூழ்ந்த வி


ஜிக்கும் நேத்ராவிற்கும் விடியல் கிடைக்குமா
இருவரின் வாழ்க்கை பயணம் மாறுமா?...மனம்திருந்தினால்(ள்)....
 
#4
மனம் திருந்தினால்(ள்) - 3

விஜியை இறக்கிவிட்ட நேத்ராவிற்கு மேலும் இரண்டு சவாரிகள் வர அவர்களையும் அவர்கள் கூறி இடத்திற்கு இறக்கிவிட்டு வர மணி இரண்டானது....வீட்டிற்கு வந்து காரை நிறுத்தியவள் தனது இன்னோரு சாவியால் திறந்து உள்ளே நுழைந்தவள்....தனது உடையை மாற்றிக்கொண்டு படுத்துவிட்டாள்...

இங்கோ விஜி தன் இயலாமை நினைத்து அழுதவள் இரவில் குளியலறைக்கு சென்று குளித்து வந்தவள் அவ்விரவை வெறித்து நோக்கியவள் எப்போது உறக்கத்தை தழுவினாள் என்று அறியாமல் உறங்கினாள்.....

கறுந்திரையை கிளித்தெடுத்து கிழக்கில் கிளர்ந்த கதரவனின் வெளிச்சமே எங்கும் விடியலாய்....

விஜி எழுந்தவள் கீழே வந்து வாசலில் நீர் தெளித்து கோலமிட்டவள்...பாலையும் பேப்பரையும் எடுத்து தான் வசிக்கும் வீட்டின் உரிமையாளர் வீட்டினுள் நுழைந்தாள்,....விஜி..

" காலையில் காபி போட்டு வைத்தாள்...காலை உணவுகளை தயாரித்துவைத்து தன் மகனுக்கும் தனக்கு கொஞ்சமாக எடுத்து வந்தவள் தன் மகளை எழுப்பி அவனை குளிக்க வைத்து சீறுடை அணிந்து அவளை பள்ளிக்கு கிளம்பினாள்....பின் எடுத்து வந்த உணவை அவனுக்கு ஊட்டிவிட்டவள் அவனது பேக்கை மாட்டிவிட்டு அவனை பள்ளிக்கு அழைத்து செல்ல கீழே இறங்கியவளை பார்த்தவாரே நின்றிருத்தார் பர்வதம்.....

" ஹேய் விஜி சங்கருக்கு ஸ்கூல் பீஸ் கட்டிட்டியாடி...." என்றவர் கேட்க...
" இல்ல அக்கா இன்னும் கட்டல அண்ணே இன்னும் தரவில்லை ஸ்கூல் எதாவது சொல்லனும் அக்கா...." என்றவள் வருத்தப்பட....

" இங்க வாடி நான் தரேன் நீ போய் கட்டு டி..." என்றவர் மெல்லமாய் தனது கணவனுக்கு கேட்காத படி கூற,.

" அக்கா வேணா அண்ணணுக்கு தெரிஞ்சா என்னையும் சேர்த்து உங்களையும் தான் திட்டுவாரு...வேணாம் அக்கா...." என்றவள் பயந்து கூற..

" அவர் எப்ப கொடுக்கிறது நீ எப்ப பிள்ளைக்கு பீஸ் கட்டுறது இந்தாடி பிடி " என்று கையில் பணத்தை திணிக்க..
தயக்கத்தோடு வாங்கிகொண்டாள்....

" அண்ணண் கொடுத்ததும் கொடுத்திடுறேன் அக்கா..." என்றாள் விஜி......

" அதெல்லாம் கொடுக்க வேணாம் நீயே வச்சுக்க என்னக்கென்ன பிள்ளையா குட்டியா டி இந்த பணத்தை வச்சு நான் என்ன பண்ண போறேன்..உனக்கு அவர் கொடுக்கிறதே இந்த பீஸ் கட்டுறதுக்கும் உன் தேவைக்கு தான் அதுவுமே பத்தாது இதுல நீ வேற திருப்பிக்கொடுக்கீறீயா வேணாம் வேணாம் நீயே வச்சுக்கோ " என்றவர் சங்கரை கொஞ்சிவிட்டு உள்ளே செல்ல,.

' இப்படி ஒரு நல்ல உள்ளம் படைத்த இவருக்கு தான் இப்படி ஒரு புருசனா ' .....என்று நினைத்தவள் தன் ஐந்து வயது மகனை பள்ளி விட அழைத்துச்சென்றாள் விஜி.

எட்டு மணியளவில் எழுந்த நேத்ரா குளித்து முடித்து சேலை உடுத்தி தலைவாறியவள் அறையை விட்டு வெளியே வந்தாள்....அவள் அன்னை மித்ராவை கல்லூரிக்கு அனுப்பிவைத்தவர் இப்போது நேத்ராவை கவனிக்கலானார்...

சமையல் வீட்டுவேலை கற்பகமே பார்த்துக்கொள்வார் தன் மகள் இரவு பகலும் உழைப்பத்தாள்....அவளுக்காக இவர் வீட்டில் அவளை வேலை செய்ய விடாமல் இவரே செய்வார்...

அவளுக்கு தோசைவார்த்து மதியத்திற்கு உணவையும் டப்பாவில் அடைத்துகொடுத்துவிட்டார்...அவளும் பள்ளிக்கு கிளம்பினாள்....

பள்ளியில் தன் மகனை விட்டு வந்த விஜி....பர்வதம் ஞானராஜின் ஆடைகளை கையால் துவைத்து காயபோட்டு விட்டு கடைக்குச்சென்று மல்லிகை காய்கறி வாங்கிவந்து சமையல் செய்து தனக்கும் தன் மகனுக்கும் எடுத்துவைத்து அவர்களுக்கு பரிமாறிவிட்டு தன்மகனுக்கு எடுத்துக்கொண்டு நடந்தே செல்வாள் பள்ளிக்கு. பின் வந்து இவள் சாப்பிட்டு கொஞ்ச நேரம் கண்ணயர்வாள்..... மீண்டும் தன் மகனை அழைத்து வந்த மீண்டும் வாசலில் நீர் தெளித்து கோலமிட்டு அவர்களுக்கு காபி போட்டுகொடுத்துவிட்டு தனது மகனுக்கு பாடம் சொல்லிகொடுத்து இரவு உணவை சமைத்து கொடுத்து தன் மகனையும் உறங்கவைத்து பர்வதமும் உறங்கியே பின்ன ஞானராஜ் அவளை தயாராக சொல்லுவார் பின் அவளுக்கு அழைப்பு வந்தாள் அங்கே செல்வாள்....இதுவே அவளது வேலையானது நாட்களெல்லாம்....

பள்ளி முடிந்திட விஜி தனது மகனை அழைக்க பள்ளிக்குச்சென்றாள்....நேத்ரா பள்ளி முடிந்து நடந்து வந்துகொண்டிருந்தாள் வீட்டிற்கு.....

" டேய் மச்சி எத்தனை நாளைக்குடா நீ அவ பின்னாடி கெஞ்சிடே இருப்ப சரியான திமிரு பிடிச்சவடா அவ இத்தனை வருசமா காதலிக்கிறேன் பின்னாடியே சுத்துர....வீட்டுல போய் பொண்ணும் கேட்டுட ஆன அவ பிடியே கொடுக்கலைடா இந்நேரம் உன் அம்மா பார்த்த பொண்ண கட்டிருந்தேன்னா பிள்ளை குட்டின்னு சந்தோசமா இருந்திருப்ப.....அவ தான் வேணும் ஏன்டா நீயும் அவளை போல அடம்பிடிக்கிற அஜய்......" என்றான் கிஷோர்.

" டேய் நீ சொன்ன மாதிரி எங்க அம்மா பார்த்த பொண்ண கட்டிருந்தா பிள்ளைகுட்டி பெத்திருப்பேன் ஆன சந்தோசமா இருந்திருக்க மாட்டேன்.எனக்கு நேத்ரா தான் வேணும் அவ கூடத்தான் என் வாழ்க்கையே.....நான் மாத்திக்க போறதில்ல என்னோட மனச...." அஐய் தீர்க்கமாய் கூற.

" அவ இவன வேணானு அடம்பிடிக்கிற,இவன் அவதான் வேணும் அடம்பிடிக்கிறேன்..,,.கடைசில இரண்டும் சாமியாரா தான் போகபோது எந்த பொண்ணா இருந்த என்ன கட்டிட்டு வாழுவானா இவ தான் வேணும் அவ தான் வேணும் சாவடிக்கிறான்..." என்று கிஷோர் புலம்ப.,

" கிடைக்கிற எந்த பொண்ண வேணா கட்டிட்டு வாழ இதென்ன கடையில இது இல்லைன்னா அது இல்லை எது இருக்கோ அததாங்க வாங்கி அஜ்ஸ்ட் பண்ண பொருளா...,வாழ்க்கைடா பிடிச்சவங்களோ பிடிச்ச மாதிரி வாழனும் ஒருவாட்டி வாழ போற வாழ்க்கை இது நமக்கு பிடிச்சமாதிரி வாழ்க்கைய அமைக்கனும் டா....." என்றவன் கூற காதில் விழாதவாறே நின்றான் கிஷோர்.அவனை முறைத்தவன் நேத்ரா வழியில் வருகிறாளா என்று பார்த்தவனுக்கு காட்சியளித்தாள்......

" நேத்ராவை கண்டவனுக்கு மனமெங்கும் பட்டாம் பூச்சிதான் பறக்க காதலாய் அவளை கண்டவன் புன்முறுவலோடே அவளை எதிர்நோக்க அதற்கு நேர்மாறாய் அவளது முகம் அவனை கண்டதும் மாறியது.....

' இவனா ஐயோ எத்தனை முறைதான் இவன் கிட்ட சொல்லுறது கேட்கவே மாட்டான் போல....' என்று நினைத்தவள்...

அவனை பார்த்தும் பார்க்காதவாரே அவனை கடத்து செல்ல வேகமெடுக்க அவனோ வழி மறித்து நின்றான்....

" என்ன தாங்க வேண்டும் உங்களுக்கு ஒருமுறை இரண்டு முறை இல்லை பல முறை சொல்லிடேன் எனக்கு காதலிக்க நேரமும் இல்லை கல்யாணம் பண்ணிக்க ஆசையும் இல்லைன்னு ஏன் திரும்ப திரும்ப வந்து டார்ச்சர் பண்ணுறீங்க....இதுல வீட்டுல கல்யாணம் பேச பெண் பார்க்க வேற வரீங்க நான் இதுக்கு மேல தெளிவா எப்படிங்க சொல்லி புரியவைக்கனும் தெரியலங்க உங்ககிட்ட.பீளாஸ் என்னை விட்டுங்க எனக்கு என் வீட்டுச்சுமையே அதிகமாக இருக்கு இதுல இன்னோரு வீட்டுச் சுமையே ஏத்துக்க முடியாதுங்க...விட்டுடுங்க..." என்று கையெடுத்து கும்பிட்டாள் நேத்ரா...

" நேத்ரா நான் சொல்லுறத கேளு பீளிஸ் நாம கல்யாணம் பண்ணிக்கிட்டா கண்டிப்பா உன் சுமைய நான் பாதியா ஏத்துகிறேன் நான் உன்கூட கண்டிப்பா உறுதுணையா இருப்பேன்...வேணான்னு சொல்லதா நேத்ரா...நான் உன்னை ரொம்ப வருசமா காதலிக்கிறேன்..உன்கூட வாழனும் ஆசைபடுறேன் பீளிஸ் அண்டர்ஸ்டான்ட் நேத்ரா..." அஜய் கெஞ்ச....

" சாரிங்க என்னோட சுமைய நான் குறைக்கனும் இன்னோருதர் தலையில கட்டிட்டு என்னால சந்தோசமா இருக்க முடியாது எனக்கு என் குடும்பம் மட்டும் போதும் இன்னோரு குடும்பத்த ஏத்துகிட்டு என் குடும்பத்த கஷ்டத்துல விட முடியாது...இனியும் என் பின்னாடி வராதீங்க என்றவள் வேகவேகமாக அவன் அழைப்பதையும் மறுத்து சென்றுவிட்டாள்......

அஜய் பின்னந்தலையை கோதியாவாரே அவள் சென்ற திசையை நோக்கி நின்றான்,.,.," மச்சி ஹாஹா.....இது எத்தனாவது வருசத்தோடு எத்தனாவது மாசத்தோட எத்தனாவது நாளுடா இந்த நாளு....." என்றவன் கேட்க அவனை முறைத்தான்அஜய்.....

" கற்பகம் அக்கா இன்னைக்கு நம்ம பாப்பா அவ பள்ளிவிட்டு வரப்ப ஒரு பையன்கிட்ட நின்னு பேசிட்டு இருந்தாக்கா யாரு என்னான்னு தெரியாம இப்படி பேசுது பாப்பா...." என்று தான் கண்டதை நேத்ராவின் தாயிடம் பற்றவைத்துகொண்டிருந்தார் பக்கத்துவீட்டு பெண்..,கற்பகமோ ஆர்வமாக கேட்க....வீட்டிற்குள் நுழைந்த நேத்ரா கேட்டுவிட்டாள்..

" என் அக்கா வீட்டுல வேலை இல்லையோ....." என்றவள் கேட்டுகொண்டே வந்தாள் நேத்ரா..

" அதுக்கென்ன பாப்பா நிறைய கிடக்கு நான் தான் பார்க்கனும்.." என்று சலித்துகொள்ள..

" அப்ப அத பார்க்காம அடுத்தவங்க வீட்டுல என்ன நடக்குது எதிர்வீட்டுல என்ன நடக்குதுனு புரணிபேசுறதே வேலையா போச்சு உங்களுக்கு.நீங்க இவ்வளவு பேசுறீங்க எங்கமா முகத்துல எதாவது ரியாக்சன் மாறுச்சான்னு பார்த்தீங்களா இல்லையே..ஏன்னா அவங்களுக்கு நான் யார்கிட்ட பேசுறேன் தெரியும்..போங்க போங்க போய் வேலை பாருங்க...." என்றவள் தன்தாய் அழைத்து உள்ளே வர அவளோ வாயைபிழந்து நின்றார் அந்த பக்கத்துவீட்டு பெண்...

" ஏன்டி அந்த தம்பி பாவம் டி எத்தனை வருசமா உன் காதலிக்கிது.ஏன் வீட்டில் சொல்லிகூட பெண் பார்க்க வந்துச்சு,ஏன்டி வேணானு சொல்லுற....." கற்பகம்கேட்க...

" ம்ம் உன் புருசன் கொடுத்த பாரத்தையே கஷ்டபட்டு சுமந்த வாழுறேன் இதுல என் புருசன் சொல்லி இன்னோருதனோட பாரத்தை என்னால சுமக்க முடியாதுமா.,இனி இத பத்திபேசாத எனக்கு பசிக்கிது சாப்பாடு இருந்தா கொடு " என்றவள் தன்னறைக்கு சென்றாள்...

பின் டூசன் எடுத்தாள் இரவு எட்டரை வரைக்கும்...இரவு உணவை உண்டவள் தன் வண்டியை துடைத்தாள்......பின் வழமை போலவே சவாரிக்கு சென்றாள்....

அங்கே விஜியும் குழந்தையை உறங்க வைத்தவள் அவனை தூக்கி தோளில் போட்டுகொண்டாள்....

" விஜி பையன இங்க விட்டு போ நான் பார்த்துகிறேன்...தூங்கதானே செய்றான்..,இங்க தூங்கட்டும் நீ விட்டு போ...." என்றார் ஞானராஜ்

அவளோ சந்தேமாக பார்த்தவள் சரியென்று குழந்தைவிட்டவள் தனியாக நடந்தாள் அந்த ஸ்டாப்பிற்கு....

அவளை பிக் செய்ய நேத்ரா வந்தாள்...நேத்ரா வழமை போல கைகுட்டையை கட்டிக்கொண்டிருந்தாள்....
நேத்ராவின் கண்கள் விஜியை அளவெடுக்க விஜியோ சாலை வெறித்தாள்....,

இன்று வேறு இடமாக இருந்தது விஜி இறங்கும் இடம்.....பின் ஒருமணி நேரத்திற்கும் மேலாக நேத்ரா காத்திருக்க விஜி வந்தாள் அவளின் நிலையை கண்ட நேத்ரா அதிர்ச்சியாக பார்த்தாள்...

மனம் திருந்தினால்(ள்)....
 
#5
மனம் திருந்தினால்(ள்) -4

அன்றிரவு வழமை போலவே நேத்ரா சவாரிக்கு சென்றாள்...விஜியை ஏற்றிக்கொண்டு காரை ஓட்டினாள்...முகமூடி அணிந்திருப்பதாள் அவள் பெண் என்பதை அறியாவிடுனும் தினமும் அவளே அழைத்து ஏற்றிக்கொண்டும் பின் வீட்டில் இறக்கி விடுவதுவதால் விஜிக்கு அவளிடம் ஓர் நம்பிக்கையும் பாதுக்காப்பாய் உணர்ந்தாள்.....

அன்றிரவும் அதே போல் வேறொரு இடத்தில் இறக்கிவிட்டவள்...ஹேட்செட்டில் பாடலை கேட்டுக்கொண்டிருந்தாள்....விஜி வர ஒன்றை மணிநேரம் மேலானது....அவளுக்காக காத்திக்கொண்டிருந்தவள் மெல்லமாய் கண்ணயர்ந்தாள் நேத்ரா.....

வேகவேகமாய் இறங்கி பதறி வந்தவள் கதவை திறக்க முயன்றாள்....கதவு திறக்கும் அரவம் கேட்டு கண்விழித்த நேத்ரா லாக் எடுக்க உள்ளே அமர்ந்தவள் மூச்சு வாங்கினாள்......அவளை கண்ட நேத்ரா அதிர்ச்சியானாள்,...

சட்டை கிழிந்திருக்க, பூவற்ற நாராய் அவள்கலைந்த கேசத்தில் தொங்கிருக்க,.. ஆங்காங்கே கைகளில்,சிறு சிறு கீறல் வேறு. உதட்டின் ஓரத்தில் இரத்தம் வடிய அவளை காண வெறி பிடித்த நாய் அவளை கடித்ததை போல காயங்கங்களோடு வந்து சேர்ந்தாள் காருக்குள்.....

அவளின் கையை பற்றியவள் அவளது காயங்களை பார்க்க வெடுக்கென்று கையை எடுத்துக்கொண்டாள் அவளொரு ஆடவன் என்று......அவளின் இச்செயலில் திகைத்தவள் தனது கைக்குட்டை கழட்டினாள் நேத்ரா.....

" நீ.....நீ....நீ ஒரு பொண்ணா..." திக்கி திணறி வார்த்தைகள் வந்தது விஜியிடம்.......

" ஆமா நான் பொண்ணு தான்..." என்றவள் தன் காரினுள் இருக்கும் பர்ஸ்ட்ஏய்ட் பாக்ஸை எடுத்தவள் அதில் உள்ள டெட்டால் எடுத்து பஞ்சில் வைத்து ஒத்தடம் கொடுத்தாள்...

" ஸ்ஸ்,.,ஆ.." என கத்தினாள்..." சாரி " என்றவள் ஊதினாள் நேத்ரா..


" இந்த உடம்ப வித்து தான் வாழனும் என்ன அவசியம் இருக்கு...இப்படி ஒரு நிலமைக்கு நீங்க இருக்கீங்கன்னா,இந்த வாழ்க்கையே வேணான்னு செத்து போயிடாலாம்....இந்த பொழப்பு ஏன் சுகத்திற்காகவா இல்லை வறுமைக்காகவா...நாட்டுல இல்லாத வேலையா என்ன?... உடம்ப வைத்துதான் இந்த உடம்ப வளர்கனுமா....நீ ஒரு குழந்தைக்கு அம்மா.....நீங்க பண்ற இந்த காரியம் வளர்ந்ததுக்கு அப்பறமா தெரியவந்தா என்ன பண்ணுவீங்க....அவன நினைக்காம உங்கள் மட்டும் நினைச்சு ச்ச...சொல்லவே அறுவறுப்பா இருக்கு,...

நாட்டுல இருக்கிற,பெண்களுக்கு கஷ்டமிருக்கு தான் செய்து அதுக்காக யாரும் இப்படி இறங்கிறது இல்ல தன்மானத்திற்க்காகவும் தன்னோட மானத்தை காப்பாத்துறத்துக்காவும் தான் போராடுறாங்க...கூலி வேலை செஞ்சும் நாலுவீட்டுல பத்துபாத்திரம் தேய்த்து தன் பிள்ளைகளை படிக்க வைச்சு காப்பாத்திட்டு வராங்க...

கணவனை இழந்த பெண்கள் யாரும் இப்படி பண்றதில்லை ஒன்னும் மறுமணம் செய்றாங்க...இல்லைன்னா தனியா வாழுறாங்க.....

உங்கள மாதிரி பெண்கள் இருக்க போகத்தான்...தனித்து வாழும் பெண்களுக்கு அவ்வப்போது,அவமானங்களும் ஏக பேச்சுகளும் கிடைக்கிறது...நாட்டில் இல்லாத வேலையா இதைவிட்டால் வேலையே இல்லையா....ஏன் இந்த வேலை...இந்த வேலை என்ன கிட்டிவிட போகிறது உங்களுக்கு...இந்த வேலையால் தான் பெண்களுக்கு பல பெயர் சூட்டிக்கொண்டு திரிகிறார்கள்..." என்று அவளுக்கு மருந்து போட்டவாரே ஆதங்கத்தை வெளிப்படுத்தினாள் நேத்ரா....

" அதை கேட்டு மெல்லியதாய் சிரித்தாள் விஜி.....பெண்கள் சிலர் விரும்பி செய்கிறார்கள்...பலர் கட்டாயத்தின் பெயரில் செய்கிறார்கள்,.சிலர் வயிற்று பசிக்காக செய்கிறார்கள் இந்த வேலையை...." மனதார செய்யும் வேலை அல்ல எத்தனையோ பெண்கள் தன்மனசாட்சியை கொன்று இத்தொழிலை செய்கிறார்கள்.

எந்த பெண்ணும் இஷ்டபட்டு இதனை ஏற்பதில்லை,..இந்நிலைக்கு தள்ளவே படுகிறார்கள்....ஆண்களின் சுகத்திற்காக பெண்களை அடகுவைக்கிறார்கள்....இத்தொழில் இல்லாவிட்டால்...பெண்கள் யாரும் கற்புடன் வாழ்வது கடினம் தான்..சில ஆண்கள் வேடம் போட்ட மிருகங்கள் கொண்ட காமபசிக்கு ஒவ்வொருவரும் பெண்களும் இறையாகி தான் போவோம்..இத்தொழில் இருந்தும்...இன்றும் பெண்குழந்தைகளிலிருந்து முதியவர் வரை காமபசிக்கு பழிதான் ஆகிறார்கள்....

இத்தொழிலை செய்யும் ஒவ்வொருவரும் பெண்ணின் மனநிலையை யார் அறிவார்..அவர்களுக்கென பெயர்களையும் சூட்டிவிட்டு அவர்களை ஒதுக்கி வைத்துவிட்டு இத்தொழில் தவறென்று பேசுவதில் என்ன நியாயம் இருக்கிறது....இத்தொழில் செய்யும் பெண்கள் கெட்டவர்கள்.ஆனால்,இங்கு வந்து போகும் ஆண்கள் மட்டும் நல்லவர்களா...

இங்கு வந்து போகும் ஆண்களுக்கு ஆண்மகன் மட்டும் தான் பெயர்...ஆன இத்தொழிலை செய்யும் பெண்களுக்கு எத்தனை பெயர்....அவள் அப்படியே மனம் திருந்தி வேற வேலைக்கு செல்லவேண்டும் என்றாலும் அவளை ஆதரித்து யார் அவளுக்கு வேலை போட்டு கொடுப்பார்கள்....அவளை பேசும் ஊர்தான் அவள் திருந்தினாள் நல்லதொரு வழிகாட்டுவதில்லை....

அந்தகாலத்திலிருந்தே இத்தொழில் இருந்துகொண்டுதான் இருக்கிறது...இருப்பினும் பெண்கள் மட்டுமே சாடும் இந்த உலகம்.. கடவுளுக்கு படைத்துவிட்டு மனிதர்கள் உண்ணும் படையலாய்தான் பெண்ணை பார்த்தனர் ' தாசி ' என்றனர்....,அவையே தொடர்ந்து இன்று பல பெயர்களில் அவளை அழைக்க இருக்கின்றனர்,.ஆதரக்க இல்லை;சுவைக்க இருக்கின்றனர்;சுதந்திரம் அளிக்க இல்லை...

" என்னை அடகு வைத்தவரிடமிருந்து மீட்கவே என் உடம்பை அடகுவைத்தேன்....." என்றாள் உணர்ச்சி முற்றிலும் துடைத்துவிட்டது போன்ற முகத்தை வைத்து கூற நேத்ரா அமைதியாக காரை எடுத்தாள்..
அவளிடம் வர இறக்கிவிட்டாள்...இருவரும் அழுத்தமான பார்வையொன்றை பதித்து சென்றனர்...

அடுத்த சவாரி ஏற்க மனமில்லாமல் வீட்டை நோக்கி சென்றாள் நேத்ரா....
இங்கோ விஜி அடிப்பட்டா காயத்தோடே வந்தாள் ...
அவளை கண்ட ஞானராஜனுக்கு துளியும் கருணை இல்லை அவளின் காயங்கள் பார்த்தவன்....அவளை ஓர் அறைவிட...சாற்றை பிழிந்தெடுத்த பழத்தோலாய் கிடைக்க மேலும் இந்த அறையில் சுருண்டாள்...

" கஷ்டமர எப்படி டில் பண்ணணும் தெரியாத...போன் போட்டு கத்துறான் ..இந்த மாதிரி கம்பளைண்ட் வந்திச்சு தோல உரிச்சிடுவேன்..." என்று மீரட்டி சென்றார்...

வலியில் அமர தன் மகனின் தலையை வாருடினாள்.....முகத்தை முட்டினுள் மறைத்தவள் அழுது தீர்த்தாள்...சற்றுமுன் தான் ஒரு ஐம்பதுவயது மிக்க மிருகத்தின் பசியை ஆற்றிவந்ததை எண்ணி நொந்தாள்...,

மகளாய் பார்க்க வேண்டியவளை...மங்கையாய் கூடா நினைக்காமல் தனக்கு கிடைத்த இறையாய் தின்று தீர்த்தான்,,...அவனது பிடி நினைத்தவள் உடலெங்கும் கொதித்தது தீயாய் தன்னையே அதில் பொசுக்கிட நினைத்தாள்....இதிலிருந்து விடுதலை கிட்டுமோ என்பதே அவள் பெரும் கனவாயின...

நாட்கள் ஓடின வழமைபோல...விஜி தன் காரில் ஏறினாள் ஒரு சினேக புன்னகை புரிவாள்.அவளும் தான்....அவள் சென்று திரும்பும் போது அவளை அணைத்துக்கொள்வாள் நேத்ரா....அவளுக்கும் அந்த அணைப்பு தேவையாய் இருந்தது....நேத்ரா விஜியை பற்றி நினைக்காத நாளே இல்லை.அவளை மீட்க தன் எண்ணங்களோடு போராடிக்கொண்டிருந்தாள்.அவளை எப்படியாவது மீட்கவே...

அன்று ஞாயிறாக இருந்தது....
" மச்சி ஏன்டா சோகமாக இருக்க.." என்று கிஷோர் கேட்க..

" உனக்கு தெரியாத மாதிரியே கேட்கீறியே டா எல்லாம் நேத்ராவ நினைச்சு தான்டா ...கொஞ்சம் கூட பிடி கொடுக்க மாட்டிகிறா....ச்ச...நான் எவ்வளவு சொல்லியும் கேட்க மாட்டிகிறாள்...." என்றான் அஜய்.

" மச்சி நான் பல தடவ சொல்லிட்டேன் திரிஷா இல்லைனா திவ்யா மாதிரி...நேத்ரா இல்லைன்னா வேற யாரோனு போயிடே இரு மச்சி அவளையே நினைச்சு லைப்ப ஸ்பாயில் பண்ணிக்காதடா....." என்றான்.

" நான் மத்த ஆம்பளைங்க மாதிரி இல்லடா இவ இல்லைனா அவனு எனக்கு நேத்ராதான் வேணும் அவளுக்காக நான் காத்திட்டு இருப்பேன் டா கல்யாணம் பண்ணுவேண்டா...." என்றான்.

" நடந்தா சந்தோசம் தான் மச்சி ஆன நடக்கனுமே ,சரிசரி வா வந்த குடி மச்சி எல்லாம் சோகமும் பறந்து போயிடும் " அவன் முன் கிளாசை நீட்ட....

" இத குடிச்சா சோகம்போகும் யாருடா,சொன்னா ஏன்டா தேவையில்லாம குடிச்சு உடம்ப கெடுத்துகிற...உனக்கு இன்னும் கல்யாணம் ஆகல இப்பையே குடிச்சு உடம்ப கெடுத்துகிட்டா நாளைக்கு உனக்கும் உனக்கு வர போற,பெண்ணுக்கும்தான் டா கஷ்டம் குடிக்காதடா..." என்றான் அஜய்,.

" எனக்குன்னு யாருடா இருக்கா கல்யாணம் பண்ணிவைக்க அப்பாவா அம்மாவா இருக்காங்க எனக்கு யாருமில்லை எனக்கு நான் மட்டும் தான் இருக்கேன்.அதுனால நான் சந்தோசமாக இருக்க எனக்கு இது தேவை படுத்து அதான்டா எடுத்துகிறேன்..எனக்கு ஒருத்தி வந்தா பார்ப்போம் டா...அதுவரைக்கு நான் பீரி மேன் என்னைய கேட்க யாருமில்லை டா.... " என்றான் கிஷோர்..

" இதையே சொல்லு யாருமில்லை யாருமில்லைனு என்னமோ பண்ணு நான் கிளம்புறேன்..." என்று அஜய் எழும்ப

" டேய் மச்சி எங்க போற இன்னும் கொஞ்ச நேரம் இருடா..." என்றான்.." நீதான் எனக்குன்னு யாருமில்லைனு சொன்ன இப்ப நான் ஏன்டா இருக்கனும்...." என்று அஜய் கூற

" சும்மா சொன்னேன் மச்சி இரு " என்று இருக்க வைத்தான் கிஷோர்..

" இங்கோ நேத்ரா விஜியை இறக்கிவிட காரைநிறுத்தினாள்...விஜி இறங்க கதவை திறக்க.

" விஜி " என்றே அழைத்தாள்..
" சொல்லு நேத்ரா..." என்றவளை பார்த்து கேட்க...

" இல்லை இந்த வேலை வேணா விஜி நாம வேற,வேலை தேடிபாப்போமே.." என்றாள்
விஜி சிரிக்க " நேத்ரா எனக்கும் இந்த வேலை வேணாம் தான் இதுல இருந்து மீளனும் ஆசைதான் ஆன யாரு எனக்கு வேலை தருவா நான் ஒரு தப்பான பொண்ணு ஒதுங்க தான் செய்வாங்க ஒதுக்கி வைப்பாங்க வேலை தரமாட்டாங்க..." என்றவள் இறங்கி சென்றாள்...

அமைதியாக நேத்ரா இருந்தாள்...பாட்டு கேட்க கூட மனம் வரவில்லை....சென்ற பின் அறைமணி நேரத்திற்கு பின் அங்கிருந்து அஜய் வருவதை பார்த்தாள் நேத்ரா...விஜி சென்ற வீட்டிலிருந்து அஜய் வெளிவர ....அவனையும் சாராசரி ஆண்களைவிட கேவலமான ஆணாய் அவனை நினைத்தாள் நேத்ரா..

அங்கே நடந்தை அறியாமல்...

மனம்திருந்தினால்(ள்)..
 
#6
மனம் திருந்தினால்(ள்) -5

வழமை போலவே,விஜியை நேத்ரா இறக்கிவிட்டவள்.விஜியை அழைத்தாள்....

" விஜி இந்த வேலை வேணாம் விட்டிட்டு நாம வேற வேலை தேடுவோம்.." என்றாள்நேத்ரா...

" என்னை போன்றவளுக்கு யாரு வேலை கொடுப்பார்கள் ஒதுக்கி மட்டுமே வைப்பார்கள்...." என்றாள் விஜி... அமைதியாக இருந்தாள் நேத்ரா...

விஜி அக்கதவை தட்ட....அஜய்
' இந்நேரம் யார் இவனை தேடி வருகிறார்கள்..' என்று புரியாமல் பார்த்தான்....கிஷோரோ அவனை பார்த்து சிரித்தவன் கதவை திறந்திட அங்கே விஜி நின்றாள்...

" விஜி...." என்றவன் கேட்க," ஆம் " என்றாள்..." உள்ள வா ",என்று உள்ளே அழைக்க அவன் பின்னே வந்தாள்.

அஜய்,அவனையும் பார்க்க அவனோ விஜியை காமித்தான்...அஜய்யும் விஜியும் மாறி மாறி பார்த்தனர்...

" டேய் யாருடா இது. எதுக்கு இங்க வந்திருங்காக இவங்க,.." என்று அஜய் புரியாமல் கேட்க...

" மச்சி ஐட்டம் மச்சி நான்தான் புக் பண்ணி வர சொன்னேன்...." என்றான் அவளை பார்த்துகொண்டே சொல்ல.." அந்த ஐட்டம் " என்றவார்த்தையில் கொதித்து போனாள் இருந்தும் அதான் உண்மை,நாம் அப்பெயர் கேட்கும் நிலையில் தான் இருக்கின்றோம் என்று நினைத்தவள் தன்னை சமண் செய்தவள் இருவரையும் காணாது தலைகுனிந்து நின்றாள்.....

" ஆள் செமயா இருக்காள மச்சான்...." என்று அவளை அளவெடுக்க அவளோ தலை நிமிரவே இல்லை....." அவளை பார்த்த அஜய்க்கோ ஒன்று புரிந்து இஷ்டபட்டு இவள் இங்கு வரவில்லை என்று....

" மச்சி முதல் நீ ஆரம்பிக்கிறீயா இல்ல நானா...." என்றவனின் கன்னத்தில் ஐவிரலும் பதிய,..அறையின் அரவத்தில் அதிர்ந்தவள் அப்போது தான் தலையை நிமிர்த்தினாள்..

" மச்சி ஏன் டா அடிச்ச...." என்றவன் கண்ணத்தில் கைவைத்து கேட்டான் கிஷோர்....

" நீயெல்லாம் மனுசனாடா ச்ச....உன்னை போய் என் பிரண்டா வச்சிருக்கேன் பாரு கேவலாமா இருக்கு டா,...உனக்கு பெண் சுகம் வேணுமுன்னா ஒரு கல்யாணத்தை பண்ணிக்கோடா...அதுக்கேன் ஏன் இன்னோரு பொண்ணோட வாழ்க்கையில் விளையாடுற..." என்றவன் கேட்க..

" டேய் அவங்களே இந்த தொழிலை இஷ்டபட்டு செய்றாங்க.என்னமோ நான் வற்புறுத்தி அவங்கள வரவச்ச மாதிரில பேசுற....எனக்கு இந்த சுகம் தேவைபட்டது அதுனால நான் கூப்பிட்டேன் இவங்க இஷ்டபட்டு வந்திருக்காங்க,....இதுல என்ன இருக்குடா,...." என்றான் கிஷோர்..

" டேய் நாம மிருகம் இல்லடா...ஆறறிவு கொண்ட மனிதர்கள், பகுத்தறிவு கொண்ட மனுசங்கடா நாம...ஒருத்தருக்கு ஒருத்தின்னு வாழும் கலாச்சாரம் கொண்ட நாட்டுல வாழ்றோம் டா...உன்னை நம்பி வர பொண்ணுக்கு நீ பண்ற துரோகம் டா இது.....ச்ச இதே போல அவளும் யாருகூடையாவது இருந்துட்டு வந்தா ஏத்துபியா டா நீ....ச்ச...அவங்க இஷ்டபட்டு வராங்களாம்....உனக்கு தெரியுமாடா வாய் கூசாம அவங்கள ஐட்டம் சொல்லுறீயே , அத சொல்லுமுன் அவங்க ஒரு பொண்ணுதான் நினைத்து மதித்தா அப்படி ஒரு வார்த்தை வருமாடா உன் வாயில.....

" டேய் அவங்க ஐட்டம் தானே டா...என்னை விட எத்தனையோ பேருகிட்ட போயிட்டு வந்தவங்கதானே அவங்கள என்ன பத்தினினா அழைக்க சொல்லுற....." என்றவன் கேலி செய்ய..

" ஓ,..அப்ப அவங்க பலர்,பேருகிட்ட போயிட்டு வந்தா அவங்க பெயரு ஐட்டம்....சரி உன் சுகத்திற்காக இந்த மாதிரி கூப்பிடற உன்னையும் ஐட்டம் பெயரு வச்சு கூப்பிடலாமா....." அஜய் கேட்டிட..

" கோபத்தில் சட்டை பிடித்து நின்றான் கிஷோர்..." என்டா ஆண் எத்தனை பெண்களுடன் உறவு வச்சாலும் அவன் ஆண் தான்....ஆனால், பெண் பல பேருகிட்ட போயிட்டு வந்தா அவளுக்கு ஐட்டம்,இன்னும் இன்னும் நிறைய பெயர்..
அவங்க என்னடா பண்ணாங்க....நீ சொன்னியே இஷ்டபட்டு வாராங்கனு உனக்கு தெரியுமா அவங்க இஷ்டபட்டு தான் வராங்கனு,....
அவங்க ஒவ்வொருதருக்கிட்டையும் கேட்டாதான்டா தெரியும் அவங்களுக்குள்ள ஓளிஞ்சுருக்க வலியும் வேதனையும்...

நீ ஈஸியா உன் சுகத்திற்காக கூப்பிடுறீயா அவங்க அதனால எவ்வளவு உடல் வலியை அனுபவிக்கீறாங்க தெரியுமா...உடல் வலியோடு சேர்ந்து இந்த தொழிலுக்கு வந்துடோமே தினமும் நினைச்சு மனவலியோடு வாழுறாங்கடா....இதுல ஒருசிலர் தான் சுகத்திற்காக இந்த தொழில் இருக்காங்க..

எல்லாரும் நல்லவங்களும் இல்ல கெட்டவங்களும் இல்ல சூழ்நிலை தான்டா மாத்து சில பெண்கள் பண்ற தப்பால எல்லா பொண்ணுங்களும் அப்படிதான் நினைக்கிறது தப்புடா....

இதோ இவங்க உடம்ப பார்க்கிறீயே.அதுக்குள்ள இருக்க மனச பார்க்க முயற்சி செஞ்சுறீக்கீயா....உன்னோட பத்துநிமிட ஆசைக்காக அவங்க உடல அடகுவைக்கிறாங்க...ஒருசிலர் காசுக்கு ஆசை பட்டு வேணா இந்த தொழிலுக்க வந்திருக்கலாம் ஆன ஒருசிலர் வயித்து பிழைப்புக்காக குடும்பத்துக்காக வழிமாறி வந்தவங்க தான் அதிகம்...

" ஆன நாம அவங்கள சரியான வழிய காட்டுறதும் இல்லை சரியான வழியில அவங்கள போக விடுறதும் இல்லை,...இந்த மாதிரி வர பெண்களா தவறபேச ,பார்க்கிற நாம ஏன்டா அவங்கள திருத்த கூடாது...

இந்த ஆண் சமுகம் திருந்தினாலே.இந்த தொழிலும் இருக்காது இந்த தொழில் பெண்களும் இருக்க மாட்டாங்க..

" இல்ல இந்த நிலைமை உன் அம்மாவோ தங்கச்சியோ அக்காவோ இருந்தா,அவங்கள ஐட்டம் சொல்ல தோணுமாடா உனக்கு யாருமில்லைனா பாசம் அன்பு விடு மனிதநேயம் கூட உன் மனசுல இருக்காத...எவ்ளோதானே,காச கொடுத்த வர போறா,அதானே உன் எண்ணம்....

போதும் டா ஆண்யென்ற பெயருல மிருகமா வாழ்ந்தது நம்ம ஆண்மைய இதுல காமிச்சு நிருப்பிக்க கூடாது பெண்கள நடத்தும் கண்ணியத்துல தான் ஆண்மை காட்டனும்...என்றான்.
அஜய் பேசபேச...அவன் காலில் விழுந்தாள்..சற்று தள்ளி நின்றான்..

" எங்களுக்கு மனசு இருக்குன்னு நீங்களாவது ஒத்துகீறிங்களே....என் புருசன் காசுக்காக என்னை இன்னோருத்தர் கிட்ட அடகுவச்சுட்டு போயிட்டான் ....சாகுறத கூட அவன்கிட்ட கேட்டுதான் சாகவேண்டிய கட்டாயத்துல இருக்கேன்..என் பிள்ளைக்காக தான் அவன் சொல்லுறத எல்லாத்தையும் செய்யிறேன்...என் பிள்ளையாவது வாழ்க்கையில சரியாக இருக்கனும் தான் என்வாழ்க்கை தவறான,வழியில போயிட்டு இருக்கேன்..இஷ்டபட்டு வரல சார் இந்த தொழிக்கு கஷ்டம் தான் என்னை போன்றவர்கள இழுத்துட்டு வந்திருச்சு..என்று அழுதாள்..

அவளை தோளை தொட்டி தூக்கினான்...." பார்த்தியா டா நான் சொன்னேல என்னமோ பெருசா இஷ்டபட்டு வராங்கனு சொன்ன அவங்க எவ்வளவு கஷ்டத்த அனுபவிக்கீறிங்க பார்த்தியா..இதுக்கு மேலையும் உன் இஷ்டம் என்றவன் வெளியே சென்றான்.
அவன் வந்ததை தான் நேரில் பார்த்த நேத்ரா அவனை தப்பானவன் என்று நினைத்தாள்..

இங்கோ எதுவும் பேசாமல் சிலை போல் நின்றான் கிஷோர்...." சேலை கழட்டடுமா " என்று விஜி கேட்க.

அவள் காலடியில்விழுந்தான் " என்னை மன்னிச்சிருங்க விஜி இத்தனை கேட்டும் நான் உங்கள தொட்டா நான் மனுசனே இல்ல மிருகம் தான்....எனக்கு யாருமே இல்லை என்னை கண்டிக்க இதுபோன்று செய்யாதேன்னு..அதான் நான் அப்படியே வளர்ந்து என் தனிமைய போக்க எல்லா தப்பையும் செய்ய ஆரம்பிச்சுடேன்....பெத்தவங்க இருந்தால் கண்டிப்பா நானும் நல்ல பையனா இருந்திருப்பேன்..." என்றவனை பார்க்க பாவமாக இருந்தது விஜிக்கு..,

தன் சட்டைபையிலிருந்து காசை எடுத்து கொடுத்தான்...
" வேணா உழைக்காம எனக்கு காசுவேணா..." என்றாள்..

" இல்ல வச்சுகோங்க ....காசு,இல்லாம போன உங்கள அடிக்க போறாங்க..எதுக்கு வச்சுகோங்க..." என்றவன் கொடுக்க " இல்ல பரவாயில்லை இந்த காசு வேணாம் எனக்கு...." என்றவளை பார்த்தவன்..

நான் சொல்லுறத செஞ்சுட்டு காச எடுத்துட்டு போங்க என்றான்.." அவள் புரியாமல் பார்க்க..விஜியின் கைபற்றி மெத்தையில் அமரவைத்தவன் அவள் மடியில் படுத்தான்...நான் தூங்கினதுக்கு அப்புறமா காசை எடுத்துட்டு போங்க என்றான்.

முதலில் தயங்கியவன் தன்குழந்தையாய் நினைத்து தலையைகோதிவிட்டாள் சிறிதுநேரத்தில் உறங்கினான்..அவனது காசை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்...

காரின் கதவை தட்ட நினைவுலகத்தில் நேத்ரா வந்தாள்,லாக்கை எடுக்க உள்ளே அமர்ந்தாள்...எதுவும்பேசாது நேத்ரா காரை எடுத்தாள்....இருவரும் கண்ட காட்சியை நினைவாக அசை போட்டனர்...

அவளை இறக்கிவிட்டு வீடு வந்தவள் மெத்தையில் விழுந்தாள்...அஜயை அங்கிருந்து வருவதை கண்டவளுக்கு அவன் மேல் கோபமும் வெறுப்பும் வந்தது..

இங்கோ விஜி பணத்தை கொடுத்தவள்...தன் மகன அருகில் படுத்துக்கொண்டாள்..கிஷோர் சொன்னது போலே நல்ல பெற்றோர்கள் இல்லாத பிள்ளைகள் வாழ்க்கை தவறான பாதையில் தான் கொண்டு போய் விடும் என்று நினைத்தவள் தன் மகனின் வாழ்க்கை எண்ணி ஐயம் கொண்டாள்....

மனுநாள் வழக்கம் போலையே அவர்களுடைய நாளும் வேலையும் தொடங்கியது...பள்ளிமுடித்து வந்தகொண்டிருந்தாள் நேத்ரா...அவளைகாண அஜய் நின்றான்.
அவனை பார்த்த நேத்ராவிற்கு கோபமும் வர அவனைதாண்டி விறுவிறுவென நடந்தாள்..

" நேத்ரா நில்லு.." என்று அவன் கூற " என் பெயர சொல்ல கூட உனக்கு தகுதி இல்ல மிஸ்டர் அஜய் நீ சராசரி ஆம்பலைங்களவிட கேவலமானவன்.உன் சுகத்திற்காக பெண்களை கூப்பிடுறவன் தானே நீ...ச்ச இதுல காதல் பெயர சொல்லிட்டு என்னை பின்னாடி வேற அழையிற...நீ எல்லாம் மனுஷனே இல்லடா அந்த மிருகத்தவிட மோசமானவன்..உன்னை பார்த்தாளே அறுவறுப்பா இருக்கு இனி என் முன்னாடி வராத...என்று கூறி நகர்ந்தாள்.

அஜய்க்கு ஏதும் புரியவில்லை அவள் ஏதோ தன்னை தவறாக நினைத்திருக்கிறாள்....கிஷோர் அவனருகில் அவன் தோளை அழுத்த,அமைதியாக அவள் சென்ற திசை நோக்கி நின்றான் அஜய்..
 
#8
மனம் திருந்தினால்(ள்) -6

கிஷோரின் வீட்டிற்கு வந்த விஜியை கண்ட அஜய்...விஜியை எதற்க்காக அழைத்திருக்கிறான் என்று புலம்பட அவனிடம் கடுமையாக பேசிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டான்.அவன் அவ்வீட்டிலிருந்து வருவதை கண்ட நேத்ரா அஜயை தவறாக எண்ணிருந்தாள்.

அஜய்,சென்றுபின் கிஷோர் அவளிடம் மன்னிப்பை கோரினான்.அவளிடம் காசை கொடுக்க மறுத்துவிட்டாள்...பின் அவள் மடியில் தலையை வைத்தவன் இதற்காக அந்த காசை எடுத்துக்கொள்ளுமாறு கூறி உறங்கினான்..
அவளும் அவன் உறங்கிய பின்னரே காசை எடுத்துக்கொண்டு வந்தாள்...அந்த பயணம் அமைதியை தந்தது இருபெண்களுக்கும்...

மறுநாள் அஜய்யும் கிஷோரும் நேத்ராவிற்காக காத்திருக்க...அவனை கண்ட நேத்ரா எட்டி சென்றாள்." நேத்ரா " என்றழைக்க அவனை தவறாக புரிந்து திட்டிவிட்டு செல்ல...புரியாமல் பார்த்தான் அஜய்.

" என்னாட ஏதேதோ பேசிட்டுவிட்டு போறாங்க,என்னாச்சு இவங்களுக்கு நீ அப்படி என்னடா பண்ண..." கிஷோர் அவனிடம் வினவ.

" எனக்கு தெரியலடா,ஆன எதோ தவறா புரிந்துகொண்டிருக்கா...என்னான்னு தெரியல விடு பார்த்துக்கலாம் என்று அவள் சென்ற திசைப்பார்த்து நின்றான்.

" மச்சி,எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்குடா நான் வரேன் " என்றவன் கூற நேத்ரா கூறியதை எண்ணியவன் அவனிடம் என்ன ஏதென்று விசாரிக்காமல் அவனை போகவிட்டான்...

விஜி பள்ளியிலிருந்து சங்கரை அழைத்துக்கொண்டு வந்துகொண்டிருந்தாள்...

" விஜி " என்றழைக்க,யாரென்று திரும்பி பார்த்தாள் அங்கே கிஷோர் நின்றிருந்தான்...

அவனை பார்த்தவள் சுற்றும் முற்றும் பார்த்தாள்..." விஜி,இது தான் உங்க பையனா..." என்று சகஜமாக அவன் பேசினாலும் அவளால் சகஜமாக பேசமுடியவில்லை பதற்றமாகவே இருந்தாள்...

" ஹாய் செல்லம்,உங்க பெயர் என்ன? என்றவன் அவன் உயரத்திற்கு இறங்கி பேச..." என் பெயர் சங்கர்..." என்றான்.
" எந்த கிளாஸ் படிக்கிறீங்க? மீண்டும் கேட்க " பர்ஸ்ட் கிளாஸ் படிக்கிறேன் " என்றான்.
" சூப்பர் " என்றவன் அவனுக்கு சாக்லேட்டை கொடுக்க...அவனோ வாங்காமல் தன் அன்னை பார்த்தான்.அவளும் வாங்கிக்கோ என்றாள்..அவனும் வாங்கிகொண்டான்...

" விஜி,உங்ககிட்ட கொஞ்சம் பேசனும் பேசலாமா..." என்றவன் கேட்க.
" என்னை மன்னிச்சிருங்க கிஷோர் நாம இங்க பேசுறத பார்த்து யாரவது,அந்த ஆளுகிட்ட போட்டுகொடுத்துட்டா என்னைய அடிச்சே கொன்னுடுவான்...இந்த மாதிரி வந்து பேசாதீங்க பீளிஸ்..." என்றவள் அங்கிருந்து விறுவிறுவென்று நடந்தாள் தன் மகனை கூட்டிக்கொண்டு...

இங்கே வீடு வந்து சேர்ந்தும் அந்த பயம் தொடர்ந்து கொண்டே இருந்தது...எங்கே யாரெனும் அவனும் நானும் பேசுவதை போட்டுகொடுத்திடுவார்களோ,
ஞானராஜ்ஜிடம் என்னவென்று சொல்ல யாரென்று கேட்டால் என்னசெய்வதென்று குழம்பத்தோடு பயந்திருந்தாள் விஜி....

இரவும் வந்தது....வழமை போலவே விஜியை அன்றிரவு தன்னை அலங்கரித்துகொண்டு கிளம்பினாள்...நேத்ராவுடன் காரில் வர பெண்கள் இருவரும் புரட்சி பாடலாக கேட்டுக்கொண்டே வந்தனர்..

" இந்த வரிகளை கேட்டுக்கும் போதெல்லாம் உள்ளுக்குள் எதோ உணர்வுகள் தோன்றுகிறது,...நாமும் யாருக்கும் சலித்தவர்கள் இல்லை என்றெல்லாம் சிந்திக்க தோன்றுகிறது...இருந்தும் நம் நிலையறிந்த பின் நம்மால் முடியாதென்றே தோணுகிறது. " என்றாள் விஜி.

" ஹாஹா,உண்மை தான் விஜி நான் எதற்கு தெரியுமா இந்த மாதிரி பாடலை கேட்பேன்...பகலிலே பாதுகாப்பற்று இருக்கும் நம்நிலமை இரவில் மட்டும் மாறிடுமா...அதிகம் நமக்கு நடக்கும் அநீதி இரவில் இருளில் தான்...முடிந்தளவு நம் மனம் சோர்வுற்றாமல் ஆபத்தில் உடல் பலத்தோடு மனத்தை பலப்படுத்தவே இந்த மாதிரி பாடல்களை கேட்பேன்...." என்றவளை ஆச்சரியமாக பார்த்தாள் விஜி...

" விஜி,உனக்கு கார் ஓட்ட தெரியுமா ? " என்றவள் கேட்க..." தெரியும் நேத்ரா,காலேஜ் டேஸ்ல பழகி ஓட்டிருக்கேன் லைசன்ஸ் இருக்கு ஆன எக்ஸ்பீரி டேட் ஆயிருக்கும்..." என்றாள்..

" ஏன் கேட்கிற நேத்ரா ? " என்று விஜி கேட்க..." சும்மா தான் விஜி " என்றவள் பயணத்தை தொடங்கியவள் சரியான இடத்தில் நிறுத்த நெற்று கண்ட இடமென்று முகம் இறுக்கியது...இதையறியாத விஜி ' இது கிஷோர் வீடல்லவோ ' என்று சிந்திக்கொண்டே அங்கே சென்றவள் கதவை தட்டினாள்....

"வாங்க,விஜி.." என்று சிரித்துகொண்டெ வரவேற்க.அவனை புரியாமல் பார்த்தாள் விஜி..

" என்ன கிஷோர் இதெல்லாம் மறுபடியும் நீங்களே கூப்பிட்டிருக்கீங்க..." என்றவள் கேட்க

" முதல்ல உட்காருங்க விஜி " என்று அமர வைத்தவன். " என்ன சாப்பிடுறீங்க ஜூஷ் ஆர் காபி " என்று கேட்க..

" அவளோ திரு திரு வென முழிக்க அவளை பார்த்தவனுக்கு சிரிப்பு வந்தது....

" என்ன விஜி முழிக்கிறீங்க உங்ககிட்ட தான் கேட்கிறேன்..." என்று சிரித்துக்கொண்டே கேட்க..

" கிஷோர்,நீங்க ஏன் என்ன புக் பண்ணிங்க.எனக்கு புரியல இப்படி உட்கார்ந்து பேசவேற சொல்லுறீங்க...எனக்கு ஒன்னும் புரியல...." என்று அவள் கேட்டிட..,

" உங்க கிட்ட முக்கியமான விசயம் பேசனும் விஜி.அதான் நானே மறுபடியும் புக் செய்தேன்..." என்றான்

" என்ன பேசனும் ? கிஷோர் " என்று அவள் கேட்க..

" சாப்பிட்டிங்களா விஜி...." என்று அவன் கேட்க " ம்ம்..." என்றாள்.." எனக்கு பசிக்கிது எதாவது செய்து தர முடியுமா ?...." என்றவன் கேட்க..சரியென்றவள் சேலை சொருகினாள் அவனது சமையலறையை சுத்தி பார்த்தவளுக்கு ரவையே இருக்க " உங்களுக்கு உப்புமா பிடிக்குமா " என்று கேட்க உதட்டை சுழித்து பிடிக்காது என்றான்...பின் மாவு இருக்க அதில் ரவை போட்டு தோசை உற்றி அதற்கெற்றார் போல் சட்னியையும் அறைத்து கொடுக்க நன்கு சாப்பிட்டான்...

" ரொம்ப நாள் கழிச்சு நல்லசாப்பாடு சாப்பிடுறேன் விஜி... சூப்பரென்றே சாப்பிட்டான்..." பின் கைகழுவி வந்தவன் அவளிடம் வந்தவன்...அமரும் படி சொல்ல..
அவளும் அமர்ந்து அவன் பேசுவதே கவனிக்கலானாள்..

" விஜி, நீங்க பட்ட கடனை நானே அடைக்கீறேன்...சங்கர நான் படிக்க வைக்கிறேன்.நீங்க என்னைய கல்யாணம் பண்ணிக்கீறிங்களா...." உங்களுக்கு விரும்பம் இருந்தா நாம குழந்தை பெத்துகலாம் இல்லை சங்கர் போதுமென்றால் போதும்...என்னால உங்களை இந்த நிலமையில பார்க்க முடியல... அதற்கு இது,பரிதாபம் என்று நினைக்காதீங்க உங்களை எனக்கு பிடித்திருக்கு இது காதலா ? நட்பா ? தெரியாது இருவரும் ஒருவருக்கொருவர் ஆதரவா இருக்கலாம் நீங்க என்ன சொல்லுறீங்க...இப்பையே சொல்லனும் இல்லை நல்ல யோசித்து கூட சொல்லலாம்... உங்க முடிவு எதுவோ அதை நான் ஏற்றுக்கொள்கிறேன்...இதை தான் பேச வந்தேன்..ஆனால் என்னால் பேச முடியவில்லை அங்கே அதனால் தான் உங்களை புக் செய்து தனியாக புரியவைக்க இவ்வாறு செய்தேன் என்றான்...

" அவன் " கூறியது பெரும் அதிர்ச்சி தான் அது...இதுவரை கண்ட ஆட்களெல்லாம் பணத்திற்கு உடலை எடுத்தார்களே தவிற நீ முழுசம்மத்தோடுதான் இந்த தொழிலில் இருக்கிறாயா ஏன் இந்த தொழிலில் இருக்கிறாய் என்று கேட்டதேயில்லை...

" ஏன் நேற்று கூட இவன் இப்படி இல்லையே...இன்றென்னவோ இவ்வாறு கூறுகிறான்...

அவள் மனம் குழம்பிபோனாள்." எனக்கு தெரியும் விஜி,நேற்று வேற மாதிரி பேசினான் இன்னகி இப்படி பேசுறான் அதானே..."

" உண்மையா நானும் நல்லவன் தான் விஜி,ஆன தனிமையிலிருந்து தப்பிக்க தவறாக போயிட்டேன்...எனக்கு அம்மாவோ தங்கை,அக்காவோ இருந்திருந்தா கண்டிப்பா பெண்கள் படுற கஷ்டம் தெரிந்திருக்கும்...அஜய் பேசினதுல புரிந்துகொண்டே அதான் கேட்டேன்.." என்றான்..

மணியும் ஆகவே விடைப்பெற்றுக்கொண்டாள்..குழம்பிய மனநிலையிலே விஜி இருக்க அவளிடம் ஏதும் கேட்காது இறக்கிவிட்டாள்..

அன்றிரவு தூங்காது அவன் கூறியதே அவளை மொய்த்தது...பின் வழக்கம் போலவே நடக்க.இரவெல்லாம் அவனே அவளை புக் செய்வான் இருவரும் அந்த ஒரு மணிநேரத்தை சந்தோசமாக நட்பார் பேசி கழிப்பர்...

இந்த ஒருவாரத்தில் சுதந்திர பறவையாய் உணர்ந்தாள் உடல் தீண்டும் எந்த கைகளும் இல்லை தன்னை எச்சில் செய்யும் எந்த உதடும் இல்லை வலிதரும் எவ்வித உறுப்பும் இல்லை...வெறும் உதடை தீண்டும் சிரிப்பும் மனதை தொடும் வார்த்தைகள் மட்டுமே இருந்தது..

அவளை ஆராய தொடங்கினான் ஞானராஜ்...அவள் முகத்தில் ஒரு தேஜஸ்..என்னதான் அழகியல் கொண்டாலும் ஒளிமங்கிய முகமாய் இருக்கும் அவள் அழகியல் செய்யாமலே முகமலர்ந்திருந்தது....ஒரே ஆள் இவளை தினமும் அழைப்பதில் சந்தேகித்தவன்....மறுநாள் அவனது அழைப்பை நிராகரித்துவிட்டு வேறொருவன் புக்கிங்கை ஏற்று அங்கே அனுப்பினான்...

அவளிடம் புதிய கஷ்டமரின் அட்டரைஸை கொடுக்க அதிர்ந்தாள்...." ' இன்று ஏன் என்னை அவன் அழைக்கவில்லை வேறொருவன் அழைத்திருக்கிறான்...' அவளின் முகம் மாறியதோடு தோன்றிய சந்தோசம் வற்றியது....

அங்கே இறக்கி விட்டாள் நேத்ரா...ஆனால் விஜியோ உணர்விலந்த உடலாய் இறங்கினாள்....அவளை ஆராய்ந்தபடி அமர்ந்தாள்...

உள்ளே சென்ற விஜி....நாராய் தான் வந்தாள் பெலன் முழுதையும் உருஞ்சியெடுத்தவன் அவளைகாமபசிக்கு இறையாக்கி கழிவாய் தூக்கி ஏறிந்தது போல கால்கள் பிண்ணிக்கொண்டு நடக்க முடியாமல் கொஞ்ச நஞ்ச பெலனோடு காரில் அருகில் வந்து கதவை தட்ட..
விஜியின் நிலமை கண்ட நேத்ரா அதிர்ந்து போனாள் அவளை பின்னாடி படுக்கவைத்தவள் தலையை மடியில் வைத்தவள் அழுதீர்த்தாள்....

மனம் திருந்தினால்(ள்)
 
#9
மனம் திருந்தினால்(ள்) -7

அன்று கிஷோரின் அழைப்பை விடுத்து ஞானராஜ் வேறொருவரின் புக்கிங்கை ஏற்று,அங்கே அனுப்பிவைத்தான் விஜியை....முழுதாய் ஒருவாரம் நீடிக்காத அவளின் சந்தோசம் மொத்தமாய் அன்று வடிந்து போனது...

அங்கே சென்று திருப்பியவள் நாராய் வந்தாள்....அவளின் நிலையறிந்த நேத்ரா அவளை தன் மடியில் போட்டவாறே
அழுதாள்..

" விஜி,வேணாம் விஜி வா நான் உன்னை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போறேன்.இனி நீ இந்த தொழில் செய்ய வேணாம் நீ கஷ்டபடுறத பார்க்க முடியலடி வேற வேலை நிறையா இருக்கு விஜிமா இந்த வேலை வேணா..." கதறி அழுதாள்.

" என்னால அவன்கிட்ட இருந்து வர முடியுமான்னு,தெரியல நேத்ரா எனக்கும் இந்த வேலை பிடிக்கலை நான்...நான்...எல்லாரைபோலவும் சாதாரண பெண்ணா என் மகனுக்கு நல்ல தாயா தான் இருக்க ஆசைபடுறேன்...எனக்கு அந்த ஞானராஜ்ஜிடமிருந்து விடுதலை கிடைக்கும் நம்பிக்கை இல்லைநேத்ரா...இந்த நிமிசம் செத்து போகனும் தோணுது ஆன என் பிள்ளையை நினைக்கும் போது அழுகைதான் வருது யாராவது என்னை காப்பாற்ற மாட்டாங்களா மனமெங்குது நேத்ரா..." என்று அழுத்தாள்...

அவளுக்கு தண்ணீர் கொடுக்க மெதுவாய் அமர்ந்தவள் அதை பருகினாள்..." வா,ஹாஸ்பிட்டல் போலாம் விஜி..." என்றவள் அழைக்க..

" வேணாம் நேத்ரா...என்னை அவன் தேடுவான் லேட்டா வந்தா அதுக்கும் சேர்த்து அடிப்பான் நீ வண்டியை எடு நேத்ரா..." என்றாள்

வேறு வழியின்றி வண்டியை எடுத்து கொண்டு வழக்கம் போல் இறங்கும் இடத்தில்,காரை நிறுத்தினாள்..." நான் உன் கூட வரவா விஜி...." என்றவள் கேட்க..சிரித்தவள் " நான் போய்கிறேன் நேத்ரா " என்றவள் தள்ளாட்டி அந்த தெரு முனையிலிருந்து வீடு வந்து சேர்ந்தாள்..

" ஏன் டி இவ்வளவு லேட்... நான் தூங்க வேணாமா.." என்றவன் கேட்க அமைதியாக இருந்தாள்..." சரி சரி காச எடு..." என்றான்..அதை அவன் கையில் கொடுக்க அவளை பற்றி ஏதும் கேட்காது கீழே செல்ல அவள் குளியலறை சென்று பின் தான் தெரிந்தது மாதவிடாய் வந்தது என்று..."

வலி எடுத்தாலும் மனதில் ஒரு நிம்மதி தோன்றியது....பகலவன் தோன்ற காலையில் அவளால் எழ முடியவில்லை உடல் அவளுக்கு உதவிடவில்லை கண்ணை கூட விழிக்கவில்லை..." அம்மா எந்திரி அம்மா எந்திரி..." என்றவன் அழைப்புகூட காதில் விழுந்தாலும் அவளால் முடியவில்லை...

' என்ன இன்னும் வாசல் கூட்டாம இருக்கிறது..' யோசித்த பர்வதம் மாடியெறி வர அங்கே சங்கர் அழுக விஜி சுருண்டு கிடந்தாள்..

நெற்றியில் கைவைக்க கொதித்தது.." ஐயோ என்னடி இப்படி கொதிக்கிது ஒருவார்த்தை சொல்ல வேண்டியது தானே டி..." என்றவர் பேசுவதற்கு கூட அவளால் பதில் தந்திட முடியவில்லை...சங்கர் கூட்டி கீழே இறங்கியவள்....அவனுக்கு பாலையும் கொடுத்து குளிக்கவைத்து,சீறுடையிட்டு சாப்பாட்டும் கொடுத்து பள்ளிக்கு விட்டு வந்தவர்....

விஜியை அழைக்க அவளால எழ கூட முடியவில்லை...கவர்மெண்ட் மருத்துவமனையில் வேலைபார்க்கும் நர்ஸ் அருகாமையில் வீட்டில் இருக்க அவரை வீட்டிற்கு அழைத்து வந்து ஊசி போட்டுவிட்டு மாத்திரை மருந்தையும் கொடுத்துவிட்டு போனார்...பர்வதம் தான் அவளை பார்த்துகொண்டாள்..

ஞானராஜ் எவ்வளவு கூறியும் பர்வதம் கேட்காது அவளை பார்த்துவந்தாள்,..ஒருவாரம் அவளால்,முடியவில்லை கஷ்டபட்டே பாத்ரூம் சென்று நாப்கீனை மாற்றி வருவாள் அதிகமாகவே உதிரபோக்கு இருந்தது....அவளால்,அவ்வலியையும் காய்சலையும் ஒரு சேர தாங்கிக்க முடியவில்லை இருந்தும் பல்லை கடித்துக்கொண்டிருந்தாள்...

இந்த ஒருவாரம் அவளால் எதுவும் கிடைக்காததால் அவளை திட்டி தீர்த்தான்....அவள் தனியாக இருக்கும் போதெல்லாம் அடித்தான்..அதனாலே நிற்க வேண்டிய உதிர போக்கு கூட போய்கொண்டே இருந்தது....இந்த ஒருவாரம் அவளை பற்றி தகவல்,தெரியாமல் பதறிக்கொண்டிருந்தனர் நேத்ராவும் கிஷோரும்...பள்ளிக்கும் அவள் வருவதில்லை வேறு,யாரோ அவள் மகன் சங்கரை அழைத்து செல்வதை பார்க்க அவளுக்கு என்ன ஆயிற்று என்று கவலையுற்றான்....

ஒருநாள் மாலையாகிட
பர்வதம் ஞானராஜ் தவிற்க முடியாத சூழ்நிலையினால் வெளியே சென்றிட சங்கரை அழைக்க யாரும் வரவில்லை....சங்கரோ பள்ளியில் அழுதுகொண்டிருந்தான்.

அவன் அழுவதை பார்த்த நேத்ரா அவன் அருகில் வந்தாள்... " யாரு செல்லம் நீங்க ஏன் அழுகீறிங்க.." என்றவள் அவனருகில் அமர்ந்து,கேட்க..

" எங்க அம்மாக்கு உடம்புசரியில..அத்தையும் கூப்பிட வரலை பயமா இருக்கு..." என்று கண்ணைகசக்கி கொண்டு அழுத்தான்...

அவனை பார்க்க பாவமா இருக்க ..அவனது ஐடி கார்டில் உள்ள நம்பருக்கு அழைக்க யாரும் எடுக்கவில்லை அந்த அட்ரஸை பார்த்தவள் " வா,நானே உன்னை வீட்டுல விடுகிறேன் பயப்பிடாத.." என்று கண்ணீரை துடைத்துவிட்டாள்..

அவனை அழைத்துக்கொண்டு அந்த வீட்டிற்கு வர கீழே பூட்டிற்க.." என்ன தம்பி வீடு பூட்டிற்கு..." என்றவள் கேட்க..

மேலே என்று கையை காமித்தான் கதவை திறந்துகொண்டு மேலே ஏறினார்கள்...கதவை திறந்து கொண்டு உள்ளே வந்த நேத்ரா விஜியை காண விஜியோ சுருண்டு கிடந்தாள்...

" விஜி " என்று அருகில் வர அவளை எதிர்கொள்ள கூட அவளுக்கு தெம்பில்லை....

" வா விஜி, இனி ஒரு நிமிசம் கூட இங்க இருக்காத போதும் நீ கஷ்டபட்டது என்றவள் யாருக்கோ கால் பண்ண போனை எடுக்க அங்கே கிஷோரும் வந்தான்..

" விஜி " என்றே உள்ளே வர அவளை நிலையை பார்த்தவன் அவளருகே வந்தவள்..." என்னாச்சு,விஜி உனக்கு .." என்று கேட்க.

நேத்ரா புரியாமல் விழித்தாள் அவனோ போனில் கால்டேக்ஸியை அழைத்து அட்ரசை சொல்லி வரவழைத்தான்....

" நீங்க யாரு விஜிக்கு என்ன வேணும்.." என்று நேத்ரா கேட்க..

நேத்ராவை பார்த்து அவன் கேள்விக்கு பதிலளித்தான்.." விஜியோட பிரண்ட் அவள இதுல இருந்து காப்பதன்னும் நினைக்கிறேன் இன்னகி நீங்க சங்கர கூட்டி வரப்ப தான் பார்த்தேன் அப்போ கீழ வீடு பூட்டிற்க யாருமில்லைனு மேல வந்தேன்.இதான் சரியான நேரம் விஜியை காப்பாத்த பீளிஸ் ஹேல்ப் பண்ணுங்க " என்றான்.

சரியென்று தலையாட்ட விஜியோட ஆடையும் சங்கரின் ஆடை,புத்தகத்தையும் எல்லாம் எடுத்துவைத்தாள். டேக்ஸி வந்திட இருவரும் விஜியை அழைத்துக்கொண்டு புறப்பட்டனர்...

அவளை ஹாஸ்பிட்டலில் சேர்த்தனர்...
அவளுக்கு சிகிச்சை அளிக்க...சங்கர் பயத்தில் இருந்தான்.....தனது தங்கை போனில் அழைத்து ஹாஸ்பிட்டலுக்கு வர சொல்ல அவளும் வந்தாள்...

" அக்கா,என்னாச்சுகா ஏன் இங்க வர சொன்ன...." என்றவள் கேட்க..

" என் பிரண்ட் ஒருத்தவங்களுக்கு உடம்பு சரியில்லை சீரியஸ் மா அதுனால நான் இங்க இருக்கேன் நீ இந்தா பையன வீட்டுக்கு கூட்டிட்டு போறீயா....இவனுக்கு சாப்பாடு கொடுத்து பார்த்துக்கோ மா அக்கா வந்து எல்லாத்தையும் வந்து சொல்லுறேன் அம்மாகிட்ட சொல்லிடு சரியா " என்றாள்...


" சரி அக்கா " என்றாள் மித்ரா...சங்கரிடம் அவனுயர்த்திற்கு அமர்ந்தவள்...." உன் அம்மா திரும்பி வந்திடுவாங்க நீ இந்த அக்கா கூட பத்திரமா இருக்கனும் சரியா ...." என்றாள் அவனும் தலையாட்டி மித்ராவுன் சென்றாள்..

சீகிச்சை அளித்த டாக்டரும் வந்தார்....." டாக்டர் வந்திட அவரிடம் இருவரும் சென்றனர்.. " டாக்டர்,இப்ப அவங்களுக்கு எப்படி இருக்கு ? " என்றவள் கேட்க..

" மாதவிடாய்,பெண்கள் மாதம் மாதம் வருவதுதான் அந்த பிரச்சனை தான் அவங்களுக்கு உடலில் சத்து இல்லை அதிக உதிரபோக்கை அவர்களால் தாங்கிகொள்ள முடியவில்லை அதான் அவர்களுக்கு சிகிச்சை கொடுத்திருக்கோம் " என்றார்..


" டாக்டர்,கொஞ்சம் பேசனும் அவங்களை பத்தி...." என்றாள் நேத்ரா. " வாங்க " என்று தன்னறைக்கு அழைத்து சென்றார்.

" உட்காருங்க, இப்ப சொல்லுங்க என்ன விசயம் என்றிட....நேத்ராவும் அவளின் நிலையை கூற " ச்ச..இன்னும் எத்தனை நாய்களிடமிருந்து தான் பெண்களை காப்பாற்றுவது...அவளுக்கு சிகிச்சை அளிப்பது எனது பொறுப்பு அவளை நான் பார்த்துக்கொள்கிறேன் " என்றார்...


வெளியே வந்த இருவரும் அவளிருக்கும் அறைக்கு முன் போடப்பட்ட நாற்காலியில் அமர்ந்தார்...

" இவளுக்கு இந்த நிலமைக்கு காரணம் உங்க பிரண்ட போல காம பசிக்கொண்டவர்களால் தான் " என்றாள்.

கிஷோர் புரியாமல் பார்த்தவன், " யாரை கூறுகிறீர்கள் " என்று கிஷோர் கேட்க...

" உங்கள் நண்பன் அஜயை தான் " என்றாள்...அவனோ அதிர்ந்து அவளை கண்டான்....

மனம் திருந்தினால்(ள்)
 
#10
மனம் திருந்தினால்(ள்) - 8

விஜியை மருத்துவமனையில் சேர்ந்தனர் கிஷோரும் நேத்ராவும்....அவளது நிலமையை முழுதாய் அவரிடம் கூற அதற்கான சிகிச்சையும் எடுப்பதாக மருத்துவர் கூறினார்..

இருவரும் அவளின் அறையில் அருகே அமர்ந்திருந்தனர்...

" விஜியோட இந்த நிலமைக்கு காரணம் உங்க பிரண்ட போல சில காம பசிகொண்ட மிருகத்தினால் தான் " என்றாள் நேத்ரா..,.

அவள் கூறியது புரியாமல் இருக்க " நீங்க யாரை சொல்லுறீங்க " என்றவன் அவளை பார்த்து கேட்டான்...

" உங்க பிரண்ட்,அஜயை தான் கூறிகிறேன் அவரை போல சுகத்திற்கு அழையும் ஆட்கள் இருக்கும் வரை பெண்களுக்கு இன்னும் இந்த ஆவலம் நேரத்தான் செய்யும் என்றாள்.."

" நீங்க அஜய் பத்தி தப்பா புரிந்துவைத்திருக்கீங்க அவன் அப்படி-பட்ட ஆள் இல்லை..." என்றான்..

" ஓ அப்ப நான் பார்த்தது பொய்யா ? " என்றவள் கேட்க..

" என்ன பார்த்தீர்கள் ? " என்று மீண்டும் அவன் கேட்க...

அவள் அவனிடம் அன்று அவள் அஜய்யின் வருகையை கண்டதை கூறினாள்...." அவன் அங்கிருந்து வருவதை மட்டும் பார்த்த நீங்க அவன் தவறானவன் என்று எப்படி கூறுகிறீர்கள்...இதற்கு தான் கண்ணால் பார்ப்பதும் காதால் கேட்பதும் பொய் என்று உரைப்பது சரிதான் அவன் அங்கிருந்து வருவதை பார்த்து தவறென்று எண்ணுகிறீர்களே,அங்கு என்ன நடந்தது என்று விசாரித்தீர்களா.... "

" எல்லாம் ஆண்களும் தவறானவர்கள் அல்ல...கண்ணியவான்களும் இருக்கத்தான் செய்கீறார்கள்... என் நண்பனை போல உங்களை தவிர அவன் வேறு எந்த பொண்ணையும் சிந்தனை அளவில் கூட எண்ணியதில்லை...

ஏன் தவறாக நடக்க இருந்த என்னையும் மாற்றியது அவன் தான்...அன்று நான் தான் விஜியை அழைத்தேன் என் சுகத்திற்காக...அவனும் என்னோடு தான் இருந்தான் விஜி வந்ததும் விஜியை பார்த்தவன் என்னை முதலில் அறைந்தான் .பின் அன்று நடந்தை முழுமூச்சாக அவன் கூற உரைந்தாள் கண்களில் கண்ணீரோடு...

" இப்பொழுது கூறுங்கள் நீங்கள் பார்த்தது சரியா ?தவறா ? என்னை மாற்றியதும் என் நண்பன் தான். விஜியை காப்பாற்ற நினைப்பு வந்ததும் கூட அவன் கூறிய அறிவுரையில் தான் என் நண்பன் நல்லவன் சுத்தமானவன் உடலளவிலும் உள்ளத்திலும் " என்றான்,...

அங்கே அமைதி நிலவியது...தன் தவறை எண்ணி தனக்குள்ளே அவளை கண்டித்துக்கொண்டிருந்தாள்.
இதுவரை அஜய் போன்ற ஆண்மகனை காணாததால் அவனை அவள் இதுவரை பார்த்த ஆண்களோடு அவனையும் பத்தோடு பதினொன்னாக நினைத்தவள் முதல் முறையாக அவளின் நினைப்பு தவறென ஆனது....

சில ஆண்களின் பார்வையிலும் தெரிந்துவிடும் அவர் எண்ணமெதுவென சில ஆண்களின் பேச்சு சில ஆண்களின் தீண்டல் அவர்கள் எண்ணம் எதுவென்று பெண்கள் அறிந்தும் குடும்பம் வறுமை, வேலை பொறுப்பென வாழும் பெண்கள் இதையெல்லாம் சகித்து கொண்டுதான் வாழ்க்கிறார்கள் அவர்கள் மத்தியில்,சில நல்லவர்களை காண்பது அரிது தான்...யாரை நம்புவதென்றே குழம்பும் பெண்கள் கிடைக்கும் நல்ல நட்பையும் காதலையும் உதரிவிட்டு செல்ல தான் செய்கிறார்கள்...நேத்ரா மட்டும் விதிவிலக்கல்ல அஜய் நல்லவனென்று அறிய....

விஜி கண்விழித்தாள் என்று நர்ஸ் கூறிட இருவரும் பார்க்கச்சென்றனர்...
கண்கவிழித்தவள் எங்கிருக்கிறோம் என்று பார்க்க கிஷோரும் நேத்ராவும் இருக்க..

" நேத்ரா,கிஷோர், நான் எங்க இருக்கேன் " என்று அவள் கேட்க
" விஜி,நீ ஹாஸ்பிட்டலில் இருக்கிறாய்,.." என்று அவளின் கைப்பற்றினாள் நேத்ரா..

" சங்கர்...சங்கர்.. எங்க ? நேத்ரா " என்றவள் பதறி கேட்டாள்." பயப்பிடாத விஜி சங்கர் எங்க வீட்டுல பத்திரமா இருக்கான். இனி நீ எதற்கும் பயப்பிட கூடாது.இனி நீ கூண்டு பறவையல்ல சுதந்திர பறவை...உன்னை இனி யாரும் அடிமை படுத்த போவதில்லை நீ நீயாக வாழலாம் உன் மகனுக்காக நீ வாழலாம்..இனி நீ அந்த தொழில் செய்ய வேண்டியதில்லை விஜி. உன்னை மொத்தமாக அந்த வீட்டிலிருந்து அழைத்து வந்துவிட்டோம் " என்றாள் நேத்ரா...

" எப்படி நேத்ரா , அந்த ஞானராஜ் என்னை விட்டிருக்க மாட்டானே.எப்படி என்னை விட்டான் என்று அவள் கேட்க." அவனுக்கு நீ எங்க இருக்கேன்று கூட தெரியாது,இனி நீயும் அவன பத்தி நினைக்காத விஜி..." என்றவளை ஆறுதல் செய்ய.

" இல்ல நேத்ரா,அவன் வருவான் அந்த பத்திரத்தை காமித்து என்னை மீண்டும் சிறை பிடிக்க வருவான். என்னோடா ஆதார்கார்ட்,ரேசன் கார்ட்,குழந்தைகளோட பிர்த் சர்டிபிகேட் என்னோட சர்டிபிகேட் அவங்கிட்ட தான் இருக்கு அத வச்சே திரும்ப வருவான் நேத்ரா பயமா இருக்கு..." என்றாள்.

" நீங்க கவலை,படாதீங்க விஜி நாங்க போய் அத வாங்கிட்டு வரோம் எவ்வளவு கேட்டாலும் பரவாயில்லை உங்களை இனி அங்க விடுவதா இல்லை,நீங்கள் கஷ்டபட்டது போதும் இஷ்டமில்லாம வற்புறுத்தி எதையும் செய்ய வைக்கிறது சட்ட படி குற்றம் அதனால நீங்க எதைபத்தியும் கவலை கொள்ளாதீங்க..." என்றான் விஜியும் தலையாட்டினாள்.

" நேத்ரா,இவங்கள பார்த்துக்கோங்க நான் போய் அவன்கிட்ட எல்லாத்தையும் வாங்கிட்டுவந்திடுறேன் என்றான்."

" இல்ல,கிஷோர் நீங்க மட்டும் போனா உங்களையும் இவளையும் சேர்த்துப் பேசுவான். அதுனால நானும் உங்க கூட வந்தா எதுவும் பேச முடியாமது " என்றாள்.

" அப்ப விஜியை யார் பார்த்துப்பா ? " என்று யோசித்தவன் . தன் நண்பனை அழைத்தான்.

இங்கோ ஞானராஜ் அவளில்லாததை தெரிந்துகொண்டவன் தன்னை ஏமாற்றி சென்றுவிட்டதை எண்ணி அவளை ஏக பேச்சு பேசி கத்தினான்.தன் மனைவியை வேற திட்டியவன்,எல்லாரிடமும் அவள் எதையோதிருட்டி விட்டு சென்றுவிட்டாள் என்று கதைகட்டிக்கொண்டிருந்தான் அங்கே தெரு எங்கும் அவளை அசிங்க படுத்தினான்...பர்வதம் கூட விஜி அப்படி இல்லை என்று அவள் கூறினாலும் அவளை முறைத்தே அடக்கினான். அவளால் கிடைத்த லாபம் இல்லாமல் போக அந்த ஆத்திரத்தை இவ்வாறு காட்டினான்.விஜி,தனது கடனுக்கும் மேலாக அவனுக்கு உழைத்துகொட்டிருக்கிறாள்,அவளது கடன் அடைந்தாலும் அதனை அறியாத பேதை பெண் எதிர்த்து பேசாது அடிமை பட்டிருந்த பெண்ணை யார் மாற்றியது என்று யோசிக்கலானான்
 
#11
மனம் திருந்தினால்(ள்) - 9

அஜய்யும் மருத்துவமனைக்கு வந்திட அவனை பார்த்த நேத்ரா தலைகுனிந்தாள்.அவளை பார்த்தவன் எதுவும் பேசாது தன் நண்பன்அருகினில் வந்தான்...

" என்னாச்சு கிஷோர்,ஏன் கூப்பிட்ட என்னறவன் அப்போதுதான் விஜியையும் பார்த்தான்.." இவங்களுங்கு என்னாச்சுடா " என்ற கேட்க அனைத்தையும் கிஷோர் கூறினான். அவனால் கோபத்தை அடக்க முடியவில்லை " ச்ச அவனெல்லாம் சும்மா விடக்கூடாது டா போலிஸ் தான்அவனக்கெல்லாம் சரியாக வரும்...ச்ச பெண் என்று கூட பார்க்கமா இவ்வளவு கொடுமை செய்திருக்கானே..." ஆத்திரத்தில் கத்தினான்..

" அஜய்,நீயும் நேத்ராவும் போய் விஜியோட சர்பிக்கேட்டை,வாங்கிட்டு வரனும் டா அது போதும் டா பீளிஸ் இந்த ஹேல்ப் பண்ணுடா " என்றவனை பார்த்த அஐய் அவனை கட்டிகொண்டவன் உன்னை நினைத்தா ரொம்ப பெருமையா இருக்குடா,கண்டிப்பா என் தங்கச்சிக்கு ஒன்னுன்னா செய்ய மாட்டேனா போறான் டா " என்றான்.விஜியிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினார்கள் அஜய்யும் நேத்ராவும்..
இருவரும் ஏதும் பேசிக்கொள்ளவில்லை அவன்,தனது பைக்கை எடுக்க தயங்கினாள் நேத்ரா.ஒரு ஆட்டோவை,பிடித்து ஏறசொல்லியவன் பின்னாடியே வந்தான்.

அந்த வீட்டை அடைந்தனர் இருவரும்.அங்கே கூட்டமாக இருக்க உள்ளே நுழைந்தவர்கள் விஜியை தவறாக பேசுவதை கண்டவன் அவனை அடித்தான் புறட்டி புறட்டி போட்டு எடுத்தான் அஜய் ஞானராஜ்ஜை...

அவர் மனைவி தடுத்து பயணின்றி அவனை ஆத்திரம் தீர அடித்தான்..

" ஏன்,என் புருசன் அடிக்கிறீங்க நீங்க " என்று நடுவில் வந்தாள் பர்வதம்..." உன் புருசன் பண்ணின காரியதுக்கு கொஞ்சுவாங்களா அவன் என்ற பண்ணினா தெரியுமா என்று அனைத்தையும் கூற பர்வதம் அதிர்ந்தார்...

" இல்லை,பர்வதம் அவங்க பொய் சொல்லுறாங்க " என்றான் அவன் பிடியிலிருந்து..

" ஓ...அப்படியா அவ ஹாஸ்பிட்டல இருந்துடே கம்பளைண்ட் கொடுத்துடா வா நானே, உன்னை மகளீர் காவல் நிலைத்து கூட்டிட்டு போறேன் அங்க சொல்லுவா நீ பண்ணித,அஜய் அவன இழுத்துட்டுவாங்க அப்பறம் தெரியும் " என்றாள் நேத்ரா..

போலிஸ் என்றதும் அனைத்தையும் ஒத்துக்கொண்டான்.பர்வதம் அவனை போட்டு அடித்தாள்..

" பீளிஸ், நீங்களும் ஒரு பொண்ணுதானே அவ நிலைமை புருஞ்சுட்டு அவள விட்டுங்க சொல்லுறீங்க அவ இனி அவ வாழ்க்கை அவ பிள்ளைன்னு வாழட்டும் அவளோட முக்கியமான,சர்டிபிகிடேட் இருக்கு அத கொடுங்க...அவளால இன்னும் எவ்வளவு கடன் பாக்கி இருக்கோ நான் தரேன் அவளை விட்டுங்க " என்று கெஞ்சினாள் நேத்ரா.

" ஐயோ, நேத்ரா விஜி எனக்கு தங்கச்சி மாதிரி அவ இவ்வளவு கஷ்பட்டிருக்கானு தெரியாதுங்க தெரிஞ்சா விட்டிருக்க மாட்டேன் இருங்க என்று ஞானராஜை பார்க்க அவனோ விஜியின் அனைத்து சர்பிகேட்டையும் கொண்டுவந்து கொடுத்தான்...ஒரு பத்திரத்தில்,எழுதியும் வைங்கினர்..இனி,நான் விஜிக்கு தொந்தரவு வா இருக்க மாட்டேன் மேலும் சில விபரங்கள் எழுதி வாங்கியவர்கள் வெளியே வந்தனர்..மருத்தூவமனைக்கு திரும்பினர்.

இருவருக்கும் இடையில் இருக்கும் தயக்கத்தையும் மௌனத்தையும் நேத்ராதான் உடைத்தாள்...

" சாரி அஜய் " என்றாள்

" எதுக்கு " என்றவள் கேட்டிட.." இல்லை உங்கள நான் தப்பா நினைத்தற்கு,அன்னைக்கு நைட் நீங்க விஜி சென்ற வீட்டினில் இருந்து வருவதை பார்த்து தப்பாக நினைத்துவிட்டேன் அஜய் அதற்கு தான் மன்னிப்பு கேட்கிறேன். " என்றாள்.


" விடுங்க நேத்ரா, நாம பார்க்கிறது எல்லாம் சரியாக்கத்தான் என்றுஇருக்கும் சொல்லிட முடியாது. ஆராயமால் நாம எதையும் சரியென்றோனோ தவறென்றோ கணிக்கிறதுனால தான் மனிதர் மேல வெறுப்புகளுய் வஞ்சகமுரி அதிகமாகிறது. தவறு செய்வது மனித இயல்பு,தான் ஆன தன் தவறை உணர்ந்தாலே போதும் அதுவே உங்களுக்கு நீங்களே கொடுத்துகிற மன்னிப்பு தான்.விடுங்க ஆன நேத்ரா நீங்க எப்படி அந்நேரத்துல அங்க வந்தீங்க எப்படி நான்அங்கிருந்து வந்ததை பார்த்தீங்க " என்றவன் கேட்க..
" நான் நைட் டேக்ஸி ஓட்டுவேன் விஜியை தான் என் கஷ்டமரா தான் பார்த்தேன்...அவ போனவீட்டில இருந்து வந்ததை பார்த்து தான் என்று இழுத்தவள் மீண்டும் மன்னிப்பை கோரினாள்.

அவளை ஆச்சரியமாக பார்த்தவன்.உண்மையாகவே நீங்க கிரெட் நேத்ரா..தன் குடும்பத்துக்காக சுகத்துக்கத்தையும் மறைத்து வாழுவது பெண்கள் தான்...ஆண்கள் கூட புகைவிட்டோ மது அறிந்தியோ தனது,துக்கத்தை ஆற்றிவிடுக்கிறார்கள் மறக்கசெய்கிறார்கள்.ஆனால் நீங்களோ உழைத்து மறைக்கிறீர்கள் என்றும் பெண்களை நினைத்து நான் தலைவணங்குவேன்..." என்றவனை பார்த்து சிரித்தாள்..

பின் விஜியிடம் வந்தவர்கள்.கிஷோரும் விஜியும் பேசிக்கொண்டிருக்க உள்ளே நுழைந்தனர்....

" விஜியிடம்,அவளது சர்பிகேட்டை கொடுத்தனர். அதைவாங்கியவளுக்கு கண்கலங்கியது " உங்களுக்கு எப்படி நன்றி சொல்லுறதுன்னே தெரியல " என்றவள் மூவரைபார்த்து வணங்கினாள்..

" தெரியாததை ஏன் செய்றீங்க விடுங்க இனி நீங்களும் சுதந்திரமாய் தலைநிமிர்த்தி நானும் ஒரு பெண் என்று கர்வமாக நடக்கலாம் உங்களை பார்த்து யாரும் எதுவும் சொல்லமாட்டார்கள் உங்கள் விருப்பம் போல உங்க வாழ்க்கையை அமைத்துக்கொண்டு சந்தோசமா வாழுங்கள் " என்றான் அஜய்.

அவர்கள் மூவரையும் நன்றியாய் பார்த்தாள்...பின் வந்த நாட்களில் ஞானராஜ் விஜியிடம் மன்னிப்பு கோரினான்.அவளுடைய பணத்தையும் கொடுத்துவிட்டு சென்றான்..

தன் வீட்டு மாடியிலே விஜியை இருக்கச்சொன்னாள் நேத்ரா..அவள் எங்கும் செல்லாம கற்பகத்திற்கு உதவியாக இருந்தாள்...
முதல் கற்பகம் தயங்கினார் அவளை சேர்த்துக்கொள்ள " எனக்கு இவ்வாறு நேர்ந்திருந்தாள் என்ன செய்திருப்பாய் இதே போல் மனம் திருந்தி வந்தாலும் என்னை இவ்வாறு தான் ஏற்றுக்கொள்ள தயங்குவாயா " என்று கேட்க அவருக்கு ஏதோ போன்றிருக்க குற்ற உணர்வானது. பின் விஜியையும் தன் மகளை போல பார்த்துக்கொண்டார்...

வீட்டிலே இருப்பது அவளுக்கு எதோ எதோ செய்ய பழைய நினைவுகள் குற்றங்களாக தாக்கியது அதை அவளால் மறக்க முடியவில்லை நேத்ராவிடம் கூறி அழுதாள்....

இதற்கு மூடிவொன்றை வைக்க நினைத்த நேத்ரா...தான் வேலை பார்க்கும் பள்ளியிலே அவளது சர்பிகேட்டை காட்டி அவளுக்கு அலுவலக பணியினை வாங்கி கொடுத்தாள்..

விஜி கொஞ்சம் கொஞ்சமாக பழசை மறக்கலானாள்.வேலை, பிள்ளை என்று தனது நேரத்தை செலவழித்தாள்....இரவில் எந்த பாரமுமின்றி அவளுக்கு நித்திரை அமைந்தது...ஆனாலும் நேத்ரா இரவில் கார் ஓட்டுவதை கண்டவள். நேத்ராவிடமே கேட்டாள் தானும் இரவில் கார் ஓட்டுவதாக கூற நேத்ரா யோசிக்கலானாள்.வீட்டிலிருக்கும் இருகார்கலில் ஒரு கார் ஓடாமல் இருந்திட.அதையும் ரெட்டாக்ஸியில் கொடுத்தவள் விஜிக்கு லைன்ஸ்சன்ஸ் எடுத்து கொடுத்து இரவில்,அவளும் பயணக்கலானாள்....,
 
#12
மனம் திருந்தினால்(ள்) - 10

மீண்டும் கிஷோர், தனது ஆசைகளை கூற அங்கே அஜய், நேத்ரா கற்பகம், மித்ரா இருந்தனர்.

" என்னை மன்னிச்சிடுங்க கிஷோர்,எனக்கு இல்லற வாழ்க்கை வாழக்கை வாழ பிடிக்கல. என்னதான் நீங்க எல்லாத்தையும் மறந்து ஏத்துக்கிட்டாலும் எனக்கு குற்ற உணர்வாக தான் இருக்கும்...சங்கர் மட்டும் போதும் சொன்னாலும் நீங்க ஒரு ஆண் வாழ்க்கையில உங்களுக்கு எல்லாம் தான் முக்கியம் உங்களுக்கும் சுகதுக்கம் இருக்கத்தான் செய்யும் அத நீங்க அனுப்பவிச்சு தான் ஆகனும் ஆன அத என்னால உங்களுக்கு கொடுக்க முடியாது இரண்டு பேருக்கும் மனஸ்தாபம் தான் வரும்...அதுனால நாம நல்ல நண்பர்களாக இருப்போம்..

" உனக்கு வயசிருக்கு விஜிமா, உனக்கு ஒரு துணை அமைச்சிக்கிறதுல என்ன இருக்கு...துணையில்லாம இந்த காலத்தில வாழ முடியாதுமா..." என்று கற்பகம் கூற..
" யாருமா, சொன்னா துணையில்லைன்னு எனக்கு துணை இருக்கு என் சங்கரே எனக்கு பெரிய துணைமா...எனக்கு வயதிருந்தாலும் எனக்கு உடலில்லைமா அது,எப்பையோ சிதைந்து விட்டது. இப்ப என் சங்கர்க்காக தான் இந்த உயிர்,துடிச்சிட்டு இருக்கு...

" சாரி,கிஷோர் உங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்கும். மடி கொடுக்கிற தாரமா தான் இருக்கனும் இல்லையே தாயாவோ , தமக்கையாவோ , தங்கையாவோ இருக்கலாம் இந்த மூனுல நீங்க என்னை எதுவாக வேண்டுமென்றாலும் ஏத்துக்கலாம்..." என்றாள்.

அவள் சிரித்தவன் " இனி நான் எதுவும் சொல்ல போறதில்லை கோ ஹேட் விஜி சுதந்திரமா வாழுங்க " என்றான்..

" வாழ்த்துக்கள் மா, பெண்களுக்கு உடல் வலிமை விட மனவலிமை தான் அதிகம் சொல்லுவங்க.... மனவலிமை வைத்து பெண்கள் தனக்கெதிரான நடக்கிறவைகளை இருந்து போராடி முன்னேறாங்க.உன்னாலையும் முடியுமா...." என்று அஜய் கூறினான்.

இனி அவள் வாழ்க்கை அவள் நினைத்தது போலவே சிறக்கட்டும்.

சில நாட்கள்க கழித்து...

நேத்ராவும் விஜியும் பார்க்கில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்..விஜியின் தோளியில் யாரோ கை வைக்க..அவள் திடுக்கிட்டு பார்த்தாள்...

" நீ விஜி தானே...ஆமா உன்னை புக் பண்ண அந்த நம்பருக்கு கால் பண்ணா சுவிட்ச் ஆப்,வருது வேற நம்பர் மாத்திட்டியா,சரி நம்பர் கொடு கூப்பிட " என்றவன் கேட்க...

" நீங்க நினைக்கிற விஜி நானில்லை கிளம்புறீங்களா..." என்றவள் முகத்தை திருப்பிக்கொண்டு நகர அவள் கைகளைபிடித்தான்..." என்னடி நீ இல்ல,நீ அந்த தொழில் செய்ற ஐட்டம் தானே நீ என்னமோ பெரிய பத்னி மாதிரி பேசுற " என்றவன் கூறிய தாமதம் விஜியின் விரல்கள் அவன் கண்ணத்தில்,பதிய...

" நான் ஒரு டரைவர்...நீ சொல்லுற விஜி நானில்லை...நீயேல்லாம் மனுசன் தானா ஆண்கள் கிட்ட,போற பெண்கள் எல்லாரும் ஐட்டம்ன்னா பல பெண்கள் கிட்ட போற உங்களை என்னான்னு சொல்லி கூப்பிடலாய்...ஏன் அந்த தொழில் செய்தவங்க மனசு மாறி வேற வேலைக்கு போன விட மாட்டிங்களா,...அந்த வேலை செஞ்சா ஒதுக்கி வைப்பீங்க,வேலை வேணான்னு வேற வேலை பார்த்தா அங்கையும் வந்து பலவிதமா பேசுவீங்க...நான் ஒரு டரைவர் எனக்கு நானே முத்திரை குத்திக்கிட்டேன்.நீ வைக்கிற பெயருக்கெல்லாம் நான் விளக்கம் கொடுக்கிற போறதில்லை இது என் வாழ்க்கை நான் தேர்ந்தெடுத்த வாழ்க்கை நீ சொன்னா பழய படி மாருமா....உங்கள மாதிரி ஆட்கள் இருக்க வரைக்கும் மனம் மாறி வேற தொழில் செய்ய நினைக்கும் பெண்கள் கூட பயந்து வெளிய வர மாட்டிகிறாங்க நீ கூப்பிட்டா வர நான் ஒன்னும் உன் அடிமையா உனக்கு என்னை எழுதி வைக்கவில்லை இதே போல பெண்கள் கிட்ட நடந்துக்கன்னும் நினைச்சிடாத இந்த அடியை நியாபகம் வச்சுக்கோ...." என்று விஜி நேத்ராவை அழைத்து சென்றாள்...அங்கிருந்த எல்லாரும் அவனை புழுவாய் பார்த்து நகர்ந்தனர்..

" விஜி,நீ அங்க எங்க பயப்பிடுவியோனு நினைச்சேன் ஆன நீ மாறிட விஜி.நான் பார்த்த விஜியா இது ஒரு நிமிட யோசிக்க வைச்சுட்ட விஜிமா.ஹேட்ஸ் ஆப் உனக்கு " என்று தன் கையை நெற்றியில் வைத்து எடுத்தாள்.."

" ஐந்தறிவு ஜிவனே தனக்காக போராடும் போதும் ஆறறிவு ஜீவன் நான் எனக்காக போராட கூடாத நேத்ரா,..அதுமட்டுமில்ல இந்தமாதிரி ஆட்கள் இருக்கிற வரைக்கும் மனம் திருந்திவாழ நினைக்கும் பெண்கள் கூட அச்சப்பட் டு வெளியே வரமாட்டாங்க நேத்ரா திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது சொல்லுவாங்களே ஆன பாரு மனம் திருந்தி இந்த தொழிலை விட்டு வர பெண்களை இன்னும் இந்த சமூகம் எப்படி பார்க்கிறது...ஒரு வேசியாதான் பார்க்கிறாங்க பெண்ணாக அல்ல..நாம ஏன் விஜி பெண்கள் மறுவாழ்வு மையம் ஒன்னும் ஆரம்பிக்க கூடாது இதோ இந்த மாதிரி ஆட்கள் கிட்ட இருந்து அந்த தொழில் செய்து மனம் திருந்தும் பெண்களை ஆதரவு அளிக்க கூடாது...." என்று கேட்க.

" சூப்பரு ஐடியா விஜி கண்டிப்பா,கொண்டு வரலாம் எத்தனை பெண்கள் நமக்கு மறுவாழ்வு கிடைக்காத இந்த தொழில் வேண்டாம் என்று நினைக்கிறவங்களை ஆதரிக்க தான் யாருமில்லை...நாம ஆதரிப்போம் வேலை வாங்கி தருவோம் இல்லை அவர்களுக்கு எதை கற்று வைத்திருக்கீறார்களோ அதில் அவர்களை மேம்படுத்தலாய் மறுவாழ்வு மையம் ஆரம்பிக்கலாம் விஜி கண்டிப்பா " என்று அவள் கைகளை பற்றினாள் அவளும் தான்..

மனம் திருந்தினால்(ள்)

விலை மாதென்று முத்திரை
குத்த நீயாரடா....
விலைக்கு
உன்னை
விற்கும் நீயும்
விலைக்கு
போகும் ஆணடா...

எத்தனை பெயர்களை தான் அவளுக்கிட்டு அழைக்கிறீர்கள்,அத்தனையும் உடைத்தெறிந்து மனம் திருந்தும் மாதுவையும் வாழவிடாமல் வதைக்கிறீர்கள்..

உடலாய் பார்க்கும் ஒவ்வொரு பெண்ணிற்கும் அதில் உயிருண்டு என்று பார்ப்பத்தேயில்லை...கசக்கும் மார்பகத்தில் உன் சுகம் கூடுமோ நீ கசக்கும் மார்பகமும் உன் தாயிடத்திலும் உண்டென்று நினைக்காதிருப்பதேனோ,.

உடலை சிதைத்து விட்டு செல்லும் ஆடவரே உடல் சிதைந்தாலும் மனவலிமையில் வாழ்ந்திடுவோம் என்ற பயத்தில் தானோ உயிரையும் எடுத்துச்செல்கிறீர்கள்....

இதோ உடலளவில் வீழ்த்தினாலும் மனவலிமை கொண்டு நாங்கள் எங்களை மீட்போம்...வீழ்வோம் என்று நினைகாதீர்கள்...எழுவோம் எங்கள் மனவலிமையினால் என்றும்...

மனம் திருந்தினால்(ள்)