மின்மினிப் பறவைகள்

Kripnythaa

Moderator
Mar 26, 2018
447
125
63
மின்மினிப் பறவைகள்சுதாமா மனதிற்கு நெருக்கமான மற்றொரு வாழ்வியலை கொடுத்தமைக்கு வாழ்த்துகள்!

பிள்ளை செல்வம் பெற்றுக் கொள்வதே அந்தஸ்திற்காக என பெற்றுக் கொண்டு பெற்ற பிள்ளைகளில் பேதம் கொண்ட பண பித்து பிடித்த பீடைகள் சுந்தரம் ,சுந்தரி சூன்யக்கார வம்சத்தில் வாழ கூட தகுதியற்றவர்கள்.

இவர்களின் மூத்த சீமந்தபுத்திரன் ராகவ் ரக ரகமாக உடன் பிறந்தவனை வதைத்து உயிரற்ற பணத்தால் உயர்ந்திட நினைத்து சீரழிந்த நிலை அருமை .ராகவின் மனைவி கிருத்திகாவும், விசாகனின் மனைவி ஆர்த்தியும் ஜெகன்மோகினி படத்தில் இரண்டு பிசாசுகள் சண்டையிடுவதை ஞாபகப்படுத்தினார்கள்.

விசாகன் விளக்கெண்ணெய் வியாபாரம் கூட செய்ய தகுதி இல்லாத நிலையிலும் விக்ரமை படுத்திய பாட்டில் இவனை போன்று விகாரமானவன் இல்லை என கூற வைத்துவிட்டான்.

நிலா கதையின் நாயகி என்பதை விட விக்ரமின் நிலை மாற காரணமான நிதர்சனம் இவள். நிழல் கதாநாயகன் கணவனாக வேண்டும் என கனவு கண்டிடும் கன்னிப்பெண்களிலே விக்ரமின் நிலையை ஏற்று அவனை கூட்டை விட்டு வெளிக்கொண்டு வந்ததும், விக்ரமிற்காக வாதாடிய நிலையிலும் உண்மையான நிலவின் உயரத்தை காட்டியவள்.

விக்ரமின் வேதனை வேற்று ஆட்களினால் ஏற்பட்டதை விட வீட்டு ஆட்களால் ஏற்பட்டதில் மனம் உடைந்தாலும், வீறு கொண்டு எழுந்ததில் சபாஷ்!

நோய்களும், மனக்குறைகளும் சகமனிதர்களால் மட்டுமே மட்டுப்படவும், மரண படுக்கைக்கு செல்லவும் முடியும் என்பதை அழுத்தமாக உணர்த்தியத்திற்கு வாழ்த்துக்கள்.

குத்துயிரான
குறைகளும்
குடமுழுக்கான
குறுகிய
கவிதை !
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,547
1,115
113
அருமையான, அழகான விமர்சனம் தீபி....மிகவும் நன்றி தீபி...........................
 

Nithyakasi

Moderator
Jun 24, 2018
44
1
18
Congrats sudhaka nice story...oru flim partha effect ah kuduthurukeenga..first time vunga full story ah padichiruken....Nila & Vikram katha pathiram, migavum arumai ...manathai negila vaithathu....last Thannampikkai kudukra mathiri song final touching ahh irunthathu super....ka...Totally very very very very good story... congrats... keep it up.Akka.?????????
 
  • Like
Reactions: sudharavi

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,547
1,115
113
Congrats sudhaka nice story...oru flim partha effect ah kuduthurukeenga..first time vunga full story ah padichiruken....Nila & Vikram katha pathiram, migavum arumai ...manathai negila vaithathu....last Thannampikkai kudukra mathiri song final touching ahh irunthathu super....ka...Totally very very very very good story... congrats... keep it up.Akka.?????????
நன்றி நித்யா..........உங்கள் கமென்ட் பார்த்து மிகவும் சந்தோஷமா இருக்கு...................