முக்கிய அறிவிப்பு

sudharavi

Administrator
Staff member
#1
தளத்தின் அனைத்து வாசகர்களுக்கும் வணக்கம்,

இன்று இத்தளத்தின் உறுப்பினர் ஒருவர் அனைத்து முடிந்து போன கதை திரிகளிலும் சென்று இங்கு ஏன் கதை திரி இருக்கிறது என்று கேட்டு பதிவிட்டிருந்தார். அதோடு அமேசானில் அனைத்தும் கிடைக்கிறது இங்கு ஏன் ஆளில்லா கடையில் டீ ஆத்துகுறீர்கள் என்று பதிவிட்டிருந்தார்.

அந்த உறுப்பினர் இங்கு உறுப்பினாரான தினத்தில் இருந்து இதையே தான் செய்து வருகிறார். எழுத்தாளர்களின் ஆன் கோயிங் கதைகளையோ, இல்லை தளத்தில் முடிந்து போன கதைகளின் லிங்க் இருக்கும் கதைகளின் பக்கமோ அவர் செல்வதில்லை.

இது போன்ற செயல்களை நாங்கள் ஊக்குவிப்பதில்லை. வாசகருக்கும், எழுத்தாளருக்கும் எளிதாக இருக்கும் படி தான் இத்தளம் அமைந்துள்ளது.

உங்களுக்கு விருப்பம் இல்லை எனில் வேண்டாத பதிவுகளை தவிர்த்து இங்கிருந்து விலகி செல்லுங்கள்...இது போன்ற பதிவுகளை நாங்கள் ஊக்குவிப்பதில்லை......