Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript மௌனம் பேசியதே - ரிலே ஸ்டோரி | SudhaRaviNovels

மௌனம் பேசியதே - ரிலே ஸ்டோரி

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
பிடித்தத்தையும் பிடித்தமின்மையையும் மௌனத்தில் கடந்துவிடுபவள் இன்று போனில் முதலில் பேச ஆரம்பித்ததும் தன்னுடைய எரிச்சலை அப்படியே வெளிக்காட்டிக்கொண்டதும் இப்போதும் கோபத்தை வார்த்தைகளால் வெளியிடுவதும் இவனுக்கு சிறியவயது மௌனியை கண்முன்னே கொண்டுவந்தது. காலையில் முதன்முதலில் கார்த்திக்கிடம் பேசும்போது கூட அவனுக்கும் இவளுக்கும் சரிவருமா... என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் இப்போது நிச்சயமாக அவனால் மட்டுமே மௌனியின் வருங்காலத்தை வார்த்தைகளால் நிரப்பமுடியும் என்ற நம்பிக்கை வந்தது.

கேட்டுமுடித்த பிறகே தான் கேட்டது எவ்வளவு வருத்தத்தை தீபக்கிற்கு அளித்திருக்கும் என்பது இவளுக்கு புரிந்தது. கார்த்திகை போல இவன் லொடலொட வாய் இல்லையென்றாலும் வார்த்தைக்கு வார்த்தை வாயாடாமல் விட்டதில்லை. ஆனால் இப்போது அவனின் மௌனம் இவளைக் கொன்றது.

“ஸாரி தீபக்! ஏதோ ஒரு கோபத்தில் அப்படி பேசிட்டேன். ஏன் அப்படி பேசினேன்னு எனக்கு புரியல. நானா இப்படி பேசினேன்னு என்னால நம்பவே முடியல ” தன்போக்கில் புலம்பிக்கொண்டிருந்தவளை,

“எனக்கும் நம்பவே முடியல மௌனி! ஆனா... இனி நீ இப்படி உன்னோட உணர்வுகளை வெளிப்படையா சொன்னா நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்!” என்ற தீபக்கின் ஆனந்த குரல் தடுத்து நிறுத்தியது.

“உனக்கு எது வேணும், யார் உன்கூட இருந்தா உன்னோட வருங்காலம் சந்தோஷமா இருக்கும்.. இதையெல்லாம் நல்லா யோசிச்சி முடிவெடு மௌனி.உன்னோட முடிவு என்னவாக இருந்தாலும் நானும் என்னோட அம்மாவும் உனக்கு பக்கபலமா இருப்போம்” என்றவன்,

“கார்த்தி உன்னோட லைஃப் பார்ட்னரா வந்தா உன்னோட லைஃப் லைவ்வா இருக்கும்ன்னு நான் நினைக்கிறேன். இது என்னோட ஒபினியன் மட்டும்தான்” என்றவன் இதற்க்கு மேல் ஏதாவது பேசினால் அது கார்த்திக்கிற்கு எதிர்மறையாக மாறக்கூடும் என்ற அச்சத்தில் அமைதியானான்.

கார்த்திக் சொன்ன இடத்திற்கு சொன்ன நேரத்திற்கு வந்தவள் அவன் தனக்கு முன்பாக அங்கே நிச்சயம் நின்றுக்கொண்டிருப்பான் என உறுதியாக எண்ணி அங்குமிங்கும் அவனை தேடத்தொடங்கினாள்.அவளின் தேடல்படலம் அரைமணிநேரம் நீண்ட போதும் அண்ணல் அங்கு இன்னும் ஆஜராகவில்லை.அவ்வளவுதான்... இனியும் காத்திருத்தல் முட்டாள்தனம் என நினைத்தவள் அமர்ந்திருந்த இடத்தில் இருந்து எழுந்து நிற்பதற்கும் அங்கே கார்த்திக் அடித்துபிடித்துக்கொண்டு ஓடிவந்து அவள்முன் காட்சியளிப்பதற்கும் சரியாக இருந்தது.

“ஒரு செலிபிரிட்டியா இருந்தா நினச்ச நேரத்தில் நினைச்ச இடத்திற்கு கிளம்ப முடியாது, பப்ளிக் ப்ளேசில் ஜாலியா சுத்தமுடியாது.இனிமே உனக்கும் இந்தமாதிரி வருங்காலத்தில் நிறைய தொல்லைகள் வரலாம். அதையெல்லாம் கொஞ்ச கொஞ்சமா நீ பழகிக்கனும்.இப்பவே நீ அதுக்கெல்லாம் டென்ஷனாக தேவையில்ல. இன்னைக்கு கூட அதனால தான் நம்மளோட மீட்டிங்கை ஆள் நடமாட்டம் அதிகமா இல்லாத இந்த லைப்ரரில வச்சது” என தன்போக்கில் சுயபுராணத்தை சுயமாய் சொல்லிக்கொண்டிருந்தவன் மௌனி நடக்கத்தொடங்கியதும் தான் லேட்டாக வந்ததற்கான காரணத்தை தான் இன்னும் அவளிடம் சொல்லவே இல்லை என்பதையரிந்துக்கொண்டான்.

“ஸாரி மௌனி! நான் கரைக்ட் டைமுக்கு கிளம்பிட்டேன்.அப்ப பார்த்து என்னோட ப்ரோக்ராமுக்கு ரெகுலரா கால் பண்ணும் ஒரு காலர் என்னை பார்க்க ரேடியோ ஸ்டேஷனுக்கு அவரோட பிரெண்ட்ஸோட வந்துட்டார்.என்னால ஒன்னும் பண்ணமுடியல. ரொம்ப ஸாரி- மா!” என்றவனை ‘எப்போதான்டா இந்த ஸீன் போடற பழக்கத்தை நிப்பாட்டுவ?’ என்று பார்வையால் கேட்டாள்.

“ஆமாம்... நான் கொஞ்சமே கொஞ்சம் ஸீன் போடுவேன்... ஆனா இப்ப சொன்னது செத்துப்போன எங்க ஆயா சத்தியமா உண்மை! உண்மையை தவிர வேறொன்றுமில்லை மௌனி!” அலறினான்.காதலனின் அடிப்படை தகுதியான ‘காதலியின் பார்வையை பார்த்து பொருளறிதல்...’ இது கார்த்திக்கிற்கு வந்துவிட்டது.

அவனின் அலறலில் இதுவரை இருந்த இறுக்க மனநிலை மறைய, “ஏன் செத்துப்போனவங்க மேலதான் சத்தியம் பண்ணுவீங்களா?” என இவள் குறும்பாக கேட்டாள்

“மத்தவங்க உயிரோட விளையாடற ரிஸ்க் எல்லாம் நான் எடுக்கமாட்டேன். எனக்கு ரிஸ்க் எடுக்கறது எல்லாம் ரஸ்க் சாப்பிடறது போல சுத்தமா பிடிக்காது! ஐ ஹேட் ரஸ்க்” என்று காஷுவலாக சொன்னவனை அனல் பார்வை பார்த்தாள் பாவை.

இவனைவிட்டா இன்னைக்கு நைட் முழுசுக்கும் பேசிட்டே இருப்பான் நினைத்தவள், “எதுக்கு என்னை வர சொன்னீங்க?” கேட்டாள்.

“நம்ம கல்யாணத்தை எங்க எப்போ எப்படி வச்சிக்கலாம்னு பேசிமுடிவெடுக்க தான் உன்னை வர சொன்னேன்!”

சத்தியமாக இதை மௌனி எதிர்பார்க்கவில்லை. என்னைக்கு தான் இவள் எதிர்பார்த்ததை பேசியிருக்கிறான் இவன்! வந்ததும் கொஞ்சம் வழிவான். அந்த வழிச்சலோடு காதலிப்பதாக சொல்வான். சொன்னதும் எனக்கு அப்படி எந்த எண்ணமும் இல்லை என கொஞ்சம் இவனை கடுப்படிக்கலாம் என எண்ணிக்கொண்டு இவள் வந்ததென்ன... ஆனால் இப்போது இங்கே நடப்பதென்ன?

“என்ன... ஸ்டேயிட்டா கல்யாணத்துக்கு போயிட்டீங்க?” அதிர்ச்சிக் குரலில் கேட்டவளை ஆழ்ந்துப் பார்த்தவன்,

“என்னை வேற என்ன பண்ண சொல்ற? நான் லவ் சொன்னதும் நீ என்ன மீ டூவா சொல்லபோற! எனக்கு அதிலெல்லாம் நம்பிக்கை இல்லன்னு என்னோட ஆசைக்கு ஆப்பு வைப்ப.அதான் கல்யாணம் முதல் காதல் வரைன்னு பின்னாடி இருந்து வரலாம்னு முடிவெடுத்துட்டேன்” சொன்னான்.

“என்ன தெரியும் என்னபத்தி உங்களுக்கு?”

“என்ன தெரியனும்?”

“என்னோட பாஸ்ட் உங்களுக்கு தெரிய வேணாமா?”

“நீ என்ன அம்னீஷியா பேஷன்டா? உன்னோட பாஸ்ட்ட தெரிஞ்சிவச்சிகிட்டு நான் ட்ரீட்மென்ட் பண்ண!”

“எனக்கு இந்த குடும்பம் குட்டி எல்லாம் செட்டாகாது!”

“பரவாயில்ல உனக்கு ஏத்தமாதிரி என்னை நான் ஆல்டர் பண்ணிக்கிறேன்!”

“எனக்கு இந்த மாதிரி என்கிட்டே பதிலுக்கு பதில் பேசினா பிடிக்கவே பிடிக்காது!”

“சேம் பின்ச்! எனக்கும் அப்படித்தான். நான் மட்டும்தான் அப்படி பேசனும்.மத்தவங்க என்கிட்ட பதிலுக்கு பதில் பேசினா பிடிக்கவே பிடிக்காது!”

இவனிடம் பேசி ஜெயிக்கமுடியாது என்பதை அனுபவப்பட்டு புரிந்துக்கொண்டவள்,“நீங்க வாயை திறந்தா அதை மூடனுமான்னு யோசிக்கற ஆளு.நானோ வாயை திறக்கனுமான்னு யோசிக்கிற ஆளு. உங்களுக்கும் எனக்கும் எப்படி ஒத்துபோகும்னு நினைக்கிறீங்க? மிக மெல்லியக் குரலில் அழுத்தமாய்க் கேட்டாள்.

“நமக்கு தான் சூப்பரா ஒத்துபோகும் மௌனி. எப்படின்னு கேட்கறியா? நான் வாய் ஓயாம பேசனும்னா நான் பேசறதை கேட்க எனக்கு ஒரு ஆளு வேணும். அதுவும் அமைதியான ஆள் வேணும். அப்போதான் என்னால தடங்கல் இல்லாம பேசமுடியும். நீ பேசமா அமைதியா இருக்கனும்ன்னா உனக்கு உன்சார்பா பேச என்னைபோல சாமார்த்தியசாலியான ஒரு ஆளு வேணும்.”

“ மேட் பார் ஈச் அதர்ன்னா... ஒத்த சிந்தனை எண்ணம் கொண்டவங்கன்றது மட்டும் மீனிங் இல்ல, உன்கிட்ட இல்லாததை நானும் என்கிட்டே இல்லாததை நீனும் சேர்ந்து ஷேர் பண்ணிக்கலாம்னு சொல்றதும் கூட அதனோட மீனிங்தான். இன்னும் சிம்பிளா தமிழ்ல சொல்லனும்ன்னா நிறை குறை இட்டு நிரப்பல்... ப்ளஸை மைனஸ் கொண்டும் மைனஸை ப்ளஸ் கொண்டும் மூடி மறைத்தல்!”

தன்னுடைய மொத்த அறிவையும் பயன்படுத்தி தான் ஆற்றிய உரை எந்த அளவிற்கு தன்னவளை பாதித்தது என சேதாரத்தை கணக்கிட மௌனியைப் பார்த்தவன் அவளின் சோர்ந்த முகத்தைப்பார்த்து பயந்துவிட்டான்.

“என்ன மௌனி! என்ன ஆச்சு? ஏன் திடீர்னு இப்படி ரொம்ப டல்லா ஆயிட்ட. ஏதாவது ஹெல்த் இஷுவா?”பதைபதைத்துப் போய் கேட்டவனை பரிதாபமாக பார்த்தவள்,

“என்னோட பல வருஷ காலேஜ் வாழ்க்கையில கூட இப்படி ஒரு லெக்சரை நான் கேட்டதில்ல. தலை ரொம்ப வலிக்குது. நிஜமா தாங்கவே முடியல” என்றாள்.

மானஸ்தனா இருந்தா இந்நேரம் தூக்கு போட்டு தொங்கியிருக்கனும். இவன்கிட்ட அதெல்லாம் எதிர்பார்க்க முடியுமா...

‘அச்சோ.. பாவம் என்னோட தொமூகா! இதுக்கு முன்னாடி இப்படி அறிவுபூர்வமான சொற்பொழிவை கேட்டு பழக்கமில்ல போல! புள்ள வாடிவதங்கி போச்சு.டோன்ட் வொரி மிசஸ்.கார்த்திக். இனிமே தினமும் உங்க மிஸ்டர் இதைபோல சில பல அறிய உரைகளை ஆற்றி உங்களை அவர் லெவலுக்கு அப்கிரேட் பண்ணிடுவார்!’ எண்ணியவன்,

“பழகிடும்டா! போக போக இதெல்லாம் பழகிடும்!” என்றான் ஒரு தெய்வீக சிரிப்பை சிந்தி.

ராஜேஸ்வரி சிவகுமார்
 
  • Love
Reactions: Chitra Balaji
Need a gift idea? How about a dinosaur night light?
Buy it!