Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript மௌனம் பேசியதே - ரிலே ஸ்டோரி | SudhaRaviNovels

மௌனம் பேசியதே - ரிலே ஸ்டோரி

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
அத்தியாயம் 7:



மாலை நான்கு மணிக்கு, அவர்கள் அலுவலகத்திற்கு வந்திருந்த ஏதோ ஒரு துறைச் சார்ந்த விருந்தினருடன் பேசி சிரித்து, கலாய்த்து, தானும் ப்ல்ப் வாங்கி, நிசப்தமான அந்த அறையையே கலகலப்பாக்கிக் கொண்டிருந்தவன், ஸ்டேஷன் ஹெட் கருணாகரன் உள்ளே வந்து நின்றதும் நிமிர்ந்துப் பார்த்து சைகையாலே என்னவென்று இயம்பினான்.

அவர் தலையசைத்து விரலை மட்டும் உயர்த்தினார். ஆனால் அவர் முகம் சரியில்லை என்பதைக் கண்டுக் கொண்டவன் அந்த நிகழ்ச்சி முடியும் வரை அமைதிக் காத்தான். பின் விருந்தினரின் கைக்குலுக்கி விடைப் பெற்றவன், அவசரமாக வெளியேற, அங்கே அடுத்த நிகழ்ச்சிக்காக காத்திருந்த ஓவியாவிடம்,

“ஹே ஓவியா!!! பேச்சுக்கு நடுவுல கொஞ்சம் மூச்சும் விட்டுக்கோ” என்க, மற்ற நேரமாக இருந்தால், அவனை தலையில் கொட்டியோ, திட்டி விட்டோ செல்பவள், அமைதியாகவே உள்ளே நுழைய, ஏதோ சரியில்லையே என்றபடியே வரவேற்பறையைப் பார்த்தவன், அங்கே ஒட்டு மொத்த அலுவலகத்தினரும் கூட்டமாக நிற்க, வேகமாக நடந்தான்.

பள்ளி சீருடையில் இருந்த மாணவி, கையில் கத்தியை வைத்து மிரட்டிக் கொண்டிருந்தாள். அவள் அருகே செல்லவே பயந்தபடி அனைவரும் நிற்க, கார்த்திக் கதவை திறக்கவும் அனைவரது பார்வையும் இவன் மேல் விழுந்தது.

கருணாகரன் தான் அவன் கையைப் பிடித்து தன்னருகே இழுத்து, அவன் காதில்,

“இந்த பொண்ணு டெய்லி உன் ப்ரோக்ராம் கேட்பாளாம். உன் வாய்ஸ் கேட்டே லவ் பண்றாளாம். உன்னைப் பார்க்க வந்துருக்கா” என்று இது வழக்கம் தான் என்பது போல் சர்வ சாதாரணமாகச் சொல்ல, கார்த்திக் தான் அதிர்ந்தான்

“வாட்?” என்று சொல்லி விட்டு, முன்னே செல்ல முற்பட, கையைப் பிடித்து

“இப்போ என்ன லவ் பண்ண போறியா? நல்ல வாய்ஸ்க்கு இதுப்போல் ஃபேன்ஸ் இருப்பது நம்ம சேனல்க்கு தான் பெருமை. எல்லார்க்கிட்டேயும் போய் நம்ம லெவல் விட்டு இறங்கி பேசிட்டு இருக்க முடியாது. ஆப்போசிட்ல இருக்க அப்பார்ட்மென்ட்ல டாக்டர்ஸ் யாராவது ஸ்டே பண்ணியிருந்தால் வர சொல்லியிருக்கேன். கவலைப் படாதே. ப்ரஸ் வர வரை கொஞ்சம் அமைதியா இரு” என்றும் சொன்னார். அவரைப் பார்த்து முறைத்தவன்,

“சின்னப் பொண்ணு சார்” என்று சொல்லி விட்டு, அவளை நோக்கி வந்தான்.

“பக்கத்தில் வராதீங்க. கையை கிழிச்சிடுவேன்” என்று கத்தியை நாடிக்கு நேராகப் பிடித்தப்படி அவள் நிற்க,

“உனக்கு என்னை தானே பார்க்கணும். நீ முதலில் கத்தியை கீழே போடு”

“எனக்கு ஆர்ஜே கார்த்திக்கை பார்க்கணும்”

“நான் தான் கார்த்திக்” என்றதும், அவள் முகத்தில் சின்னதாய் ஒரு ஏமாற்றம் பரவ, அதையே தனக்கு சாதகமாக எடுத்துக் கொண்டு, அவளருகே சென்று சட்டென்று அவள் கையில் இருக்கும் கத்தியைப் பறித்து நொடிக்குள் கத்தியை அடுத்த கைக்கு மாற்றி தூக்கிப் பிடிக்கும் போது, அது அப்போது தான் உள்ளே வந்த தீபக்கின் மேல் பட்டு விட,

“சாரி சாரி” என்றான் வினாடிக்குள் ஏற்பட்ட பதட்டத்தில்.

“நத்திங்” என்று சொன்ன தீபக், அமைதியாகக் கூட்டத்தைப் பார்த்தபடி நிற்க, ஆஃபீஸ் பாய் கருணாகரனிடம் சென்று,

“இவர் டாக்டர்” என்றான்.

“ஹோ” என்றவரிடம் தீபக்கிடம் வந்து, “சாரி டு டிஸ்டர்ப் யு. இந்த பொண்ணு இப்படி பண்ணவும் சேஃப்டிக்காக” என்றார்.

“நோ ப்ராப்ளம்” என்றவன், அந்த பெண்ணையும், கார்த்திக்கையும் பார்த்தான்.

அவளையும் சோஃபாவில் அமரவைத்து தானும் அமர்ந்தவன்,

“என்ன படிக்கிற” என்றான்.

“10த்” என்றதும், கோபம் தலைக்கேற, கருணாகரனை ஒரு பார்வைப் பார்க்க, பார்வையை புரிந்தவர், அங்கிருந்த அனைவரையும் சைகையாலே உள்ளே செல்ல சொன்னார். அனைவரும் திரும்பி திரும்பிப் பார்த்தப்படியே உள்ளே செல்ல, இப்போது தீபக், கருணாகரன் மட்டும் இருந்தனர்.

“பாப்பா 10த் படிக்கிறீங்க. நிறைய படிக்க இருக்குமே. எப்படி உங்களுக்கு டைம் கிடைக்குது”

“வீட்டில் தனியாதானே இருக்கேன்” என்றான் சட்டென.

“ஏன் அம்மா அப்பா?”

“இரண்டு பேரும் வொர்க்கிங். வீட்டுக்கு வரவே 10 ஆகும். 9 மணி வரை பக்கத்து வீட்டு ஃப்ரெண்ட்ஸ் இருப்பாங்க. அப்புறம் ரொம்ப பயமா இருக்கும். அப்போதான் டிவி, ரேடியோ கேட்க பழகினேன். அப்போதான் உங்க ப்ரோக்ராம் கேட்பேன். ஒரு வருஷமா கேட்காமல் தூங்க மாட்டேன். அப்படியே கேட்டு உங்களை எனக்கு பிடித்து போச்சு. ஒவ்வொரு பாட்டும் எப்போ முடியும்ன்னு காத்திருப்பேன். ஒவ்வொரு பாட்டுக்கு இடையிலும் நீங்கள் பேசும் வரிகள் மெஸ்மரைஸிங்” என்று அவள் உருகி பேச அமைதியாகவே இருந்தனர்.

“நிறைய தடவை கால் பண்ணினேன். யாரும் சரியா ரெஸ்பான்ஸ் பண்ணல. மூன்று தடவை ஸ்கூல் விட்டதும் இங்கே வந்து உங்களை பார்க்க ட்ரை பண்ணேன். அந்த அக்கா உள்ளே விட மாட்டாங்க” என்று ரிஷப்ஷினிஸ்டை சுட்டிக் காட்டியவள், “அதான் சாரி” என்று தெளிவாகச் சொல்லி கத்தியை பேக் ஜிப்பில் போட,

‘இவ்வளவு தெளிவா இருக்கிற பெண்ணை எப்படி கன்வீன்ஸ் செய்வது?’ என்று முற்றிலும் குழம்பினான் கார்த்திக்.

“ஓகே பாப்பா. இனிமேல் என்னைப் பார்க்கணும்ன்னா இங்கே வராதீங்க. வீட்டுக்கு வாங்க. நானும் வீட்டுக்கு வரேன். உங்க அம்மா அப்பா சன்டே வீட்டில் இருப்பாங்க தானே” என்றான். தன் மனதிற்கு பிடித்த ஆர்.ஜே தன் வீட்டிற்கு வருகிறாரா? என்ற ஆர்வத்தில், வேகமாக தலையசைத்தாள்.

“இது என் நம்பர். எப்பொழுது வேண்டுமானாலும் பேசுங்க” என்று தன் விசிட்டிங்க் கார்டை தந்தவன், அவளுடனே வந்து ஆட்டோவில் ஏற்றி விட்டான்.

பின்னால் இருந்து பார்த்தப்படியே வந்த தீபக், கார்த்திக் அருகே வந்ததும், “ஐ அம் தீபக்” என்று கைக்குலுக்க, கார்த்திக்கும் பதிலுக்கு கைக்குலுக்கி, தன்னை அறிமுகப்பட்டுத்திக் கொள்ள,

“ரொம்ப தெளிவான பொண்ணா இருக்கேங்க. எனக்கு தெரிந்த டாக்டரிடம் சஜெஸ்ட் பண்றேன். கவுன்சிலிங் வர சொல்றீங்களா” என்றான்.
 
  • Love
Reactions: Chitra Balaji

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
“இல்ல தீபக்!!! தெளிவான பொண்ணுங்களை எந்த கவுனுன்சிலிங்ம் ஒண்ணும் பண்ண முடியாது. அதே சமயம் டாக்டர்ட்ட கூட்டிட்டு போனால் நமக்கு ஏதோ பிரச்சனையோன்னு இன்னும் பலகீனம் தான் ஆகும். அந்த பொண்ணு படிப்பில் கான்சன்ட்ரேட் பண்ணினாலே சரியாகிடும். அதுவுமில்லாமல் இந்த வயதில் நம்ம பக்கத்தில் இல்லாத, பார்க்காத பொருள் மேல் இருக்கும் க்யூரியாசிட்டி அவ்ளோதான்” என்று சொல்ல, கடுப்பாகி விட்டான் தீபக்.”

‘டேய்!!! நான் டாக்டரா? நீயா?’ என்று மனதிற்குள்ளேயே திட்டியவன்,

“ஓகே கார்த்திக்” என்று சிரித்தமுகமாவே விடைப் பெற்றான் தீபக். இவனின் தோழி போலவே தீபக்கின் முதல் சந்திப்பும் இப்படியே இருக்க, வரும் நாட்களிலாவது தீபக் மனதில் நற்பெயரை அடைவானா கார்த்திக் என்று யார் அறிவார்?

அலுவலகத்தில் வரவேற்பறையில் நின்றிருந்த கருணாகரன், தீபக் எடுத்துக் கொடுத்ததாகச் சொல்லி ஐபாடை நீட்ட, அந்த பிரச்சனையில் கீழே விழுந்ததை கவனிக்காமல் விட்டதை எண்ணியப்படியே வாங்கும் போது, ரிசப்ஷினிஸ்ட் போனை நீட்டினாள்.

வாங்கி பேசியவன் முகம் அதிர்ச்சியில் உறைய, நிமிடத்தில், “பை சார். நைட் பார்ப்போம்” என்று வேக வேகமாக படியிறங்கி, வண்டியை உதைத்தான்.



“தொலைபேசியில் வந்த செய்தி இது தான். மாறன் மறுமுனையில்,

“கார்த்திக், அம்மாவும் நானும் உனக்காக வெயிட் பண்ணி பார்த்துட்டு, நாங்களே ஹாஸ்பிட்டல் வந்துட்டோம்” என்று சொல்ல, மௌனிகாவை காண கிடைத்த சந்தர்ப்பத்தை தவற விட விரும்பாமல் அடித்து பிடித்து கிளம்புகிறான்.

அன்று அரைமணி நேரம் காத்திருக்க வைத்த மௌனிகாவோ உடனே அழைத்து விட, கார்த்திக் அப்போது தான் இருக்கர வாகனத்தில் மருத்துவமனையை நோக்கி விரைந்துக் கொண்டிருந்தான்.

அவன் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்த போது, மாறன், காந்திமதி மௌனிகாவின் அறைக்கு வெளியே அமர்ந்திருந்தனர்.

“கன்சல்ட்டிங்க் ஓவரா” என்று படப்படப்புடன் கேட்டவனை, மாறன் புன்னகை முகமாகவும், காந்திமதி குழப்பத்துடனும் பார்த்தார்கள்.

“எல்லாம் கேட்டீங்களாப்பா” என்று அவளின் அறைக்குள் நுழைவதிலேயே குறியாக இருந்தவனைப் பார்த்து மாறனுக்கு சிரிப்பும் கூடவே சற்று கலக்கமும்.

“இப்படி மிஸ் ஆகிடுச்சே” என்று இவன் மெதுவாக புலம்பியது துல்லியமாக காந்திமதியின் காதில் விழ,

“என்ன மிஸ் ஆகிடுச்சு” என்றவருக்கு பதில் சொல்லாமல் எப்படி உள்ளே செல்வது தீவிரமாக யோசித்த போது, வெளியே வந்த ஒரு நர்ஸ், காந்திமதியின் பெயரை சொல்லிக் கூப்பிட்டு,

“டெஸ்ட் ரிப்போர்ட் வாங்கிட்டீங்களா?” என்றுக் கேட்டதும், தந்தையை முறைத்து விட்டு, அவர் கையில் இருந்த ஃபைலை வெடுக்கென்று பிடுங்கி, காந்திமதிக்கு முன்னால் உள்ளே சென்றான். அவன் உள்ளே நுழைந்த்தும், நீயா? என்பது போல் பார்வை செலுத்தியவள், உடனே பார்வையை விலக்கி தன் முன்னே இருந்த கம்ப்யூட்டரில் காந்திமதியின் பெயரை டைப் செய்தபடி அவன் முகத்தைப் பார்க்காமல் கையை மட்டும் நீட்டினாள், அவளிடம் கொடுத்து விட்டு, நன்றாக அவளைப் பார்த்தான். நீல நிற டாப்ஸில், அதே வண்ண துப்பட்டாவும் அணிந்து, காதில் தொங்கிக் கொண்டிருந்த காதணிகள், அவளுக்கு பதிலாக ஏதோ சொல்வது போலவே இருக்க, ரசித்துப் பார்த்தவன், அவள் டைப் செய்யும் அழகைப் பார்ப்பதற்காக கையைப் பார்க்க முற்பட்ட போது,

“உங்க காது சவ்வு வீக்கா இருக்கு. வேற ஒண்ணும் இல்ல. வொரி பண்ணிக்காதீங்க” என்றாள் காந்திமதியைப் பார்த்து.

“ஏன் அதை அன்னைக்கே சொல்லாமல் இப்போ சொல்றீங்க?” என்று இடையிட்டான் கார்த்திக்.

“உங்களை மாதிரி ஒருத்தர் கூட இருந்தால் இப்படி தான் இருக்கும்” என்று சொல்லிவிட்டு மீண்டும் காந்திமதியிடமே பேச ஆரம்பித்தாள்.

இதைத்தான் அவனுமே கேட்க நினைத்தான். ஆனால் அவளே சொல்லும் போது அதை ஒத்துக் கொள்ள மனமில்லாமல்,

“மேடம் நான் கேட்டதற்கு பதில்?”

“நீங்க பேஷண்டா?” என்றாள் முன் போலவே.

“ம்ம்க்கும் ஆனா ஊன்னா இதைக் கேட்டிர வேண்டியது. என் அம்மாவுக்காக நான் தான் பேச முடியும்”

அவள் அதற்கு மேல் ஒன்றும் பேசாமல், தன் பெயருக்கு ஏற்றார் போல் மௌனமாக அவனின் அன்னையைப் பார்த்தாள்.

‘எப்படி சமாளிக்கிறீங்க?’ என்பது போலும் இருந்த்து. ‘கொஞ்சம் வெளியே போக சொல்ல முடியுமா’ என்பது போலும் இருந்த்து. மனதிற்குள்ளேயே இங்கி பிங்கி போட்டவர், இரண்டாவதை செலக்ட் பண்ணி,

“கார்த்தி கொஞ்சம் வெளியே இருப்பா. அம்மா வரேன்” என்றார்.

“என்க்கிட்ட பேச மாட்டிங்க இல்ல” என்று கடுப்புடன் கேட்டான். இவள் அதே போஸில் மௌனமகாவே நிற்க,

“நீங்க பேச வேணாம். ஆனா நான் சொல்றதை மட்டும் கேளுங்க. ஐ லவ் யூ” என்று சொல்லிவிட்டு, எதிர்பார்த்தேன் என்பது போன்ற இவள் முறைப்பையும் அவன் அன்னையின் அதிர்வையும் பார்த்து சிரிப்புடன் வெளியேற போனவன், திரும்பவும் உள்ளே வந்து,

“அது எப்படிம்மா இது மட்டும் கேட்டுச்சு” என்று விட்டு அவளைப் பார்த்து கண்ணடித்து “சீ யூ டார்லிங்” என்று வெளியேறினான். அப்போது தான் மாலையில் அந்த பெண் நடந்துக் கொண்ட்து ஞாபகத்திற்கு வந்தது. ஏனோ தனக்கும் அந்த பெண்ணுக்கும் என்ன வித்தியாசம் என்பது போல் தோன்ற, சற்று குழம்பியவன், பின் ஒருவாறு தனக்கு சாதகமான விஷயங்களை மட்டும் யோசித்து, அவனே தெளிந்தான்.

  • கோகிலா
 
  • Love
Reactions: Chitra Balaji

Chitra Balaji

Active member
Feb 5, 2020
125
68
28
Namba ஆளு ku இப்படி இரு விசிறி யா ennada இது namba karthik ku வந்தா சோதனை.....தீபக் introduce aaitaan..... Ava kita love 😍 ah sollitaan... Super Super maa...
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
அத்தியாயம் -8

"டேய் கார்த்திக்.... எழுந்து உன்னோட மொபைலை அட்டென்ட் பண்ணு... ரொம்ப நேரமா அடிச்சுட்டு இருக்கு", என்ற நண்பனின் உலுக்கலில் திடுக்கிட்டு விழித்த கார்த்திக் அலறிக் கொண்டிருந்த தன்னுடைய மொபைலை எடுத்து அட்டென்ட் செய்தான்.

கார்த்திக் கால் அட்டென்ட் செய்ததும் மறுமுனையில் இருந்த மாறன் "இதை உன்கிட்ட எதிர்பார்க்கலை கார்த்தி....
உன்னாலே ஏற்கனவே உங்கம்மாவோட காதுக்கு பிரச்சினை வந்ததை விட அதுக்கடுத்து அவளுக்கு சரியாகனுமே அப்படிங்குற எண்ணமில்லாம இருக்குற பார்த்தியா... அதுதான் மனசை சாகடிக்குது.. அம்மாவோட அப்பாய்ண்ட்மென்ட்க்கு அரை மணி நேரத்துல வரேன்னு சொல்லிட்டு, அங்க நீ வருவேன்னு எதிர்பார்த்துட்டு இருந்த எங்க ரெண்டு பேரையும் நல்லாவே ஏமாத்திட்ட", என்று படபடவென பொரிந்துவிட்டு மகனுக்கு பதில் பேச நேரம் தராமலே வைத்துவிட்டார்.

போனை வைத்த பின்புதான் கார்த்திக்கிற்கு அரைமணி நேரம் தூங்கிவிட்டு ஹாஸ்பிடலுக்கு செல்லலாம் என்று ரெஸ்ட்ரூமினுள் வந்து தூங்கியதும், தான் கண்ட கனவில் தூக்கத்தை விட மனமில்லாமல் அதனை தொடர்ந்ததும் புத்திக்கு எட்டியது.

தன் தவறின் அளவு புரிந்ததில் நொந்து போன கார்த்திக்கை மேலும் நோகடிக்கும் விதமாக, அவன் விடாமல் விடுத்த அழைப்புகள் அனைத்தையும், மாறன் வேண்டாத அழைப்பாக வெட்டிக் கொண்டிருந்தார்.

" யாருங்க இப்படி விடாம கூப்பிடுறாங்க? எடுத்து பேசுங்களேன்", என்று காந்திமதி கூறிய பின்னர் அழைப்பை ஏற்றவர் "வீட்டுக்கு வா..
பிறகு பேசிக்கலாம்", என்றதுடன் வைத்துவிட்டார்.

யார் என்று பார்வையால் வினவிய மனைவிக்கு "எல்லாம் நாம பெத்து வச்சிருக்குற இம்சை தான்", என்று சலிப்புடன் பதில் கூறிய மாறனை காந்திமதி முடிந்த மட்டும் முறைத்தார்." அவனை ஏன் இப்ப கரிச்சு கொட்டுறீங்க? அப்பாய்ண்ட்மென்ட்க்கு கூட வாரேன் சொல்லிக்கிட்டு இருந்தவனுக்கு சொல்லாம ரெண்டு மணி நேரத்துக்கு முன்னாடி அப்பொய்ண்ட்மென்டை மாத்திட்டு கூட்டிட்டு வந்தது உங்க தப்புதானே!", என்று பொரிந்த மனைவியின் வாயை வேகமாக தன் கையால் மூடிய மாறனுக்கு முகம் வெளிறி விட்டது.

"காந்தி! இதை மட்டும் கார்த்திக் கிட்ட சொல்லமாட்டேன்னு சத்தியம் பண்ணுனாதான் நான் கையை எடுப்பேன்", என்ற மாறனை சந்தேகத்துடன் பார்த்த காந்திமதி வெறுமனே தலையை அசைத்து சம்மதித்ததும் தன்னுடைய கையை மாறன் நீக்கினார். இருப்பினும் காந்திமதியிடம் வீட்டிற்கு சென்றதும் கார்த்திக்கின் எண்ணத்தை தெரிவித்துவிடுவது என்றும் முடிவு செய்து கொண்டார்.


சென்னை ட்ராபிக்கில் நீந்தி கார்த்திக் வீட்டை அடைந்த பொழுது காந்திமதியிடம் பேச்சினை ஆரம்பித்த மாறன் மகனை பார்த்ததும் வாயை இறுக மூடிக் கொண்டார். ஏற்கனவே குற்ற உணர்வுடன் வந்தவனுக்கு தந்தையின் செயல் சிறிது மனவேதனையை தந்தது.

மாறனின் நடவடிக்கையில் ஏதோ ஒரு காரணமிருக்க வேண்டும் என்று ஊகித்த காந்திமதியும், மகனிடம் பேசாமல் அவனுக்கு காபி எடுத்துக் கொண்டு வர சமையலறைக்குள் நுழைந்துவிட்டார். இருவரின் முகபாவனையையும் கண்டவன் அப்படியே அமைதியாக இருந்துவிட்டால் சரித்திரம் சாக்கடையில் தள்ளிவிடுமே என்ற எண்ணத்தில்

"ஹாஸ்பிடல என்ன சொன்னாங்கப்பா? இன்னிக்கு ஏதாவது டெஸ்ட் எடுத்தாங்களா? அடுத்த அப்பொய்ன்ட்மென்ட் எப்ப?", என்று அடுக்கடுக்காக கேள்வி கேட்டவனை மாறன் சலனமற்ற பார்வை பார்த்தார்.

அவரின் பார்வையில் எரிச்சலானவன் "இப்ப என்ன பண்ணிட்டேன்னு இப்படி ரெண்டு பேரும் மூஞ்சை தூக்கி வைச்சுக்கிட்டு இருக்கீங்க? கிளம்புற நேரத்துல கொஞ்சம் அவசர வேலை வந்திடுச்சு..... அதனால வரமுடியலை... அடுத்த அப்பொய்ன்ட்மென்ட்க்கு நான் லீவ் போட்டுட்டு கூட்டிட்டு போறேன்", என்று ஏகத்திற்கும் கத்தியவனை காபி கொண்டு வந்த காந்திமதியின் முகபாவனை வாயடைக்க செய்தது.

ஏனென்றால் கார்த்திக் கத்தியதில் காந்திமதி அவனது முகத்தை உற்று நோக்கி என்ன கூறுகிறான் என்பதை புரிந்து கொள்ள முயன்று கொண்டிருந்தார். அதனை கண்டதும் வேகமாக அம்மாவின் அருகில் சென்றவன்

"சாரிம்மா.... ஹாஸ்பிடல் வர கிளம்புன நேரத்துல முக்கியமான வேலை.... என்ன சொன்னாங்கமா டாக்டர்?", என்று மிகவும் மெதுவாக கேட்டதில் மாறனை திரும்பி பார்த்த காந்திமதி "அளவுக்கதிகமான சத்தம் கேட்குறப்ப காது ஜவ்வுல ஏதோ பிரச்சினை வருமாம்... அதுதான் வேற ஒண்ணுமில்லை", என்று மட்டும் கூறியவர் காபியை மகனின் கையில் ஒப்படைத்து விட்டு தங்களின் அறைக்குள் சென்றுவிட்டார்.
 
  • Love
Reactions: Chitra Balaji

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
உள்ளே சென்ற அம்மாவையே பார்த்துக் கொண்டிருந்த கார்த்திக்கை தான் மாறன் கவனித்துக் கொண்டிருந்தார். மகனின் அலட்டல் அதிகமாக இருந்தாலும், பெற்றவர்களின் மேல் மிகுந்த பாசம் கொண்டவன் என்பதை அவரும் அறிவார்...

அதற்காக அவன் வைக்கும் அகல காலினை அனுமதிக்க முடியாமல்தான் இப்பொழுது தவிக்கின்றார். மாறனின் பார்வை தன்னையே ஊடுருவுவதை உணர்ந்த கார்த்திக் "சாரிப்பா", என்று அவரிடம் கூற ஆரம்பிக்கும் பொழுதே

"ஏன்பா ஏதோ முக்கியமான வேலைன்னு சொன்னியே! அது அந்த புதுசா சேர்ந்துருக்குற ஆர் ஜே பொண்ணு உனக்கு ஐ லவ் யூ சொல்லி, நீ அதை எல்லாம் தப்புன்னு அட்வைஸ் செஞ்ச வேலையா?", என்று நக்கல் நாவினில் நர்த்தனமாட கேட்டார்.

அதற்கு கார்த்திக் பதில் கூறும் முன்பே மாறனே "உனக்கு இந்த மாதிரி முக்கியமான வேலைதானே வரும்", என்றதுடன் "இனிமேலாவது கொஞ்சம் சத்தம் கம்மியா வைச்சு கேட்க ட்ரை பண்ணு.....வயசான காலத்துல எங்களை சங்கடப்படுத்தாம இருக்க முடிஞ்சா சொல்லு, இல்லைன்னா நானும், உங்கம்மாவும் முதியோர் இல்லத்துக்கு போய்டுறோம்", என்று அலுங்காமல், குலுங்காமல் ஒரு குண்டையும் போட்டுவிட்டு தங்களின் அறைக்குள் வேகமாக சென்றுவிட்டார்.


  • மாறன் பேசியதில் சில நொடிகளே திகைத்து நின்ற கார்த்திக் தன்னுடைய தலையை சிலுப்பிக் கொண்டு "இந்த அப்பா வர வர ரொம்பவும் ஓவரா பண்றார்.......எல்லாம் அந்த தொமுக கிட்ட போய்ட்டு வந்ததுல இருந்து தான்", என்று தன் போக்கில் புலம்பியவனின் மனசாட்சி

    "நீ ஏதோ அம்மா மேல இருக்குற பாசத்துலயா ஹாஸ்பிடலுக்கு போகணும்னு நினைச்ச? அந்த டாக்டரை பார்த்து ரூட் விடுறதுக்குத்தானே உங்க அம்மாவோட குறையை பயன்படுத்துற........ அம்மாவுக்கு சரி ஆயிடுச்சுன்னா அந்த டாக்டரை பார்க்க ரீசன் கிடைக்காதுன்னுதான் இன்னும் சத்தத்தை குறைக்காம பெத்தவங்களைக் கஷ்டப்படுத்துற", என்று கன்னத்தில் அறைவது போன்று எடுத்துரைத்ததில் நிஜமாகவே கதிகலங்கிப் போனான்.

    அவனால் இந்த கூற்றில் தான் ஒரு மிகப்பெரிய சுயநலவாதியோ என்ற எண்ணம் விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்துவிட்டது. இதை பற்றி சிந்திக்க வேண்டும் என்ற முடிவுடன் பெற்றோரின் அறையை ஒரு முறை திரும்பி பார்த்துவிட்டு தன்னுடைய அறைக்குள் நுழைந்த கார்த்திக் மனதளவில் சிறிது தளர்ந்து காணப்பட்டான்.
சிறிது நேரம் தலையை பிடித்து கொண்டு அமர்ந்திருந்த கார்த்திக் "இல்லை... அம்மா மேல இருக்குற பாசத்துலதான் நான் ஹாஸ்பிடலுக்கு போக நினைச்சேன்..... அதே டைம்ல என்னோட லவ்வையும் டெவெலப் பண்ணிக்கிறேன்.... ஒரே நேரத்துல ரெண்டு வேலையும் செய்ற நான் திறமைசாலி, நாட் சுயநலவாதி", என்று தன்னுடைய இயல்பிற்கு திரும்பியிருந்தான்.

இரவுணவின் பொழுது யாரும் எதுவும் பேசிக் கொள்ளாமலே உண்டு முடித்துவிட்டு தூங்க சென்றனர். படுத்த சிறிது நேரத்தில் தங்களின் அறைக்கதவு தட்டப்பட்டதில் எழுந்து சென்று கதவை திறந்த மாறனை தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்த கார்த்திக் கட்டிலில் அமர்ந்து கந்த சஷ்டி கவசம் கூறிக்கொண்டிருந்த காந்திமதியின் முன் மண்டியிட்டு அமர்ந்தான்.

" சாரிம்மா.... இனிமே சவுண்ட் கம்மியா வைக்குறேன்... குட் நைட்" என்றுக் கூறிவிட்டு விரைந்து வெளியேறிவிட்டான். அப்பொழுதும் காந்திமதி எதுவும் பேசவில்லை. மறுநாளைய விடியலில் அவ்வீட்டினில் இருந்த மூவரும் வெவ்வேறு மனநிலையில் விடியலை வரவேற்றிருந்தனர்.

" வேலைக்கு சென்று வந்ததும் அடுத்த அப்பாய்ன்ட்மென்ட் பற்றி அம்மாவிடம் கேட்டு நம்ம அம்மாஞ்சி அழகுராணியை அடுத்த தடவை பார்த்துடனும்" என்று எண்ணமிட்ட கார்த்திக் அப்பொழுது அறிந்திருக்கவில்லை, இனிமேல் தன்னுடைய அலப்பறைகள் அனைத்தும் அஞ்சறைப்பெட்டி அளவுக்கு கூட இல்லாமல் அம்மியில் அரைபடப்போவதை பற்றி...


கார்த்திக் வேலைக்கு சென்ற பின் தன்னுடைய வழக்கமாக மாறன் "காந்தி! என்ன என்ன காய் வாங்கிட்டு வரணும்னு சொல்லு.... நான் இப்ப போனாதான் ஓரளவுக்கு பிரெஷா கிடைக்கும்", என்றுக் கேட்டதற்கு காந்திமதி ஏற்கனவே எழுதி வைத்திருந்த பேப்பரை கொடுத்துவிட்டு மொட்டை மாடிக்கு துணி காய வைக்க சென்றுவிட்டார்.

மாறன் காய்கறி வாங்கி வந்து மதிய சமையல் முடியும் வரையிலும் காந்திமதியிடம் இருந்து ஒரு வார்த்தையும் வரவில்லையே என்பதை சாப்பிட அமர்ந்த பொழுதுதான் உணர்ந்தார். சாப்பிட்டதும் இதை பற்றி உடனே பேசிவிட வேண்டும் என வேகமாக உண்டவர் மனைவியின் கைகளை பிடித்து அருகில் அமர்த்தி கொண்டார்.

" காந்தி உன்னோட கோபம் எனக்கு புரியுது", என்று மாறன் ஆரம்பித்ததும் அவரை முறைத்த காந்திமதி "இது கோபமில்லை... வருத்தம்", என்று திருத்தினார்.

" இந்த முப்பது வருஷ வாழ்க்கையிலே இப்ப எனக்கு காது சரியா கேட்கலைன்னு என்னை ஒதுக்கி வச்சுட்டிங்களேன்னு ஒரு வருத்தம்", என்று கண்ணில் நீருடன் மனைவி கூறியதில் மாறனின் மனம் கனத்துவிட்டது.
 
  • Love
Reactions: Chitra Balaji