Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript மௌனம் பேசியதே - ரிலே ஸ்டோரி | SudhaRaviNovels

மௌனம் பேசியதே - ரிலே ஸ்டோரி

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
“ ஒரு வயசு பையன் இருக்கிற வீட்டில் ஒரு வயசு பொண்ணை தங்க வைப்பீங்களாம்... அதே வயசு பையன் தங்கியிருக்கிற வீட்டில் இன்னொரு வயசு பையனை வேணாம்பீங்களாம்! நல்லாதான் இருக்குடியம்மா காந்தி உன்னோட நியாயம்!” நூற்றுக்கிழவியை போல தாடையில் கை வைத்து அதிசயத்தவனிடம் என்ன சொல்வது எனத் தெரியாது திருதிருத்தார் காந்தி.

கோவிலில் இருந்து வந்த தாயும் மகளும் கார்த்திக்குடன் ஒரு புதியவன் இருக்கவே வரவேற்கும் முகமாக ஒரு புன்னகையை அனைவருக்கும் பொதுவாக சிந்த,அதுவே தன்னுடைய சொற்பொழிவை ஆற்ற அஜய்க்கு போதுமானதாக இருந்தது.

“ஹலோ அத்தை!” கேட்டதும் மீனாவின் அம்மா அதிர்ந்துபோய் “அத்தையா..?” எனக்கேட்க,

“எஸ்... அத்தைதான். ஆன்ட்டியோட தமிழாக்கம் அத்தைதானே? எல்லாம் உங்க மகளோட உபயம் தான்” என அஜய் பரவசமாக சொன்னதும் அவனை விட்டுவிட்டு, முகத்தை ஒரு திருப்புதிருப்பி, மகளை முறைத்தார்.

அவரின் முறைப்பு, திருப்பு எதையும் கண்டுக்கொள்ளாதவனோ, “ஹாய் மீனா! என் பெயர் அஜய். நான் உங்க தூரத்து உறவோட நெருக்கமான பிரெண்ட்.நீங்களும் ஆர்ஜே. நானும் ஆர்\ஜே. உங்களுக்கு பூனால நிறைய விசிறிகள். எனக்கு எங்க போனாலும் நிறைய விசிறிகள். எங்க பாமிலி கூட இந்த ஊரைவிட்டு போய் பல வருஷம் ஆச்சு. நான் மட்டும்தான் இங்க மான்ஷன்ல தங்கி வேலை பார்த்துக்கொண்டிருக்கேன்.நீங்க இந்த ஊருக்கு வந்திறங்கினதில் இருந்து இந்த ஊரு கிளைமேட் முதற்கொண்டு ஆட்டோகாரன் வரை உங்ககிட்ட தகராறு செய்ததா கேள்விப்பட்டேன்.கிளைமேட்ட நம்மால ஒன்னும் செய்யமுடியாது. அது தான் அப்பப்ப நம்மளை நல்லா வச்சி செய்யுது.இப்ப கூட பாருங்க, இன்னும் மார்ச் வரல. அதுக்குள்ள சன் அங்கிள் ஓவர்டைம் பார்க்க ஆரம்பிச்சிட்டார்.அவரை யாராலும் ஒன்னும் பண்ணமுடியாது. ஆனா மத்தபடியான தொல்லைகளில் இருந்து உங்களை சேவ் பண்ண என்னால முடியும். அதுக்காக ‘ட்வென்டி ஃபோர் இண்ட்டு செவன்’ நான் உங்க கூடவே இருப்பேன்” பேசிக்கொண்டே போனான்.

‘நானும் பேசுவேன் தான்... ஆனால் இப்படி கின்னஸ் சாதனைக்கு இடைவிடாது பேசுவதைப்போல பேசமுடியுமா என்னால்? சும்மா காந்திமதி ஆன்ட்டிக்காக கார்த்திக்கை கலாய்க்க காலையில் கொஞ்ச நேரம் விடாது பேசியதற்கே இரண்டுமணி நேரம் எனக்கு தாடை வலித்தது. இவன் என்னடாவென்றால்... இப்படி பேசறான்? இனி நான் டெய்லி இவன் பேசறதைக் கேட்டு அதுக்கு பதில் கொடுத்தா... என்னோட வாய் கோணி காதுகிட்ட போய், காது கேட்காம இல்ல ஆயிடும். எனக்கு தேவையா இதெல்லாம்?’ யோசனையோடு தாயை மீனா பார்க்க, அவரும் அதே எண்ணத்தோடு தான் இவளை பார்த்துக்கொண்டிருந்தார்.

தாய் மகள் பார்வை பரிமாற்றத்தை பார்த்து உஷாரான காந்தி, ”உனக்கு இருக்கிற வேலையே தலைக்கு மேல இருக்கும்னு கார்த்தி அடிக்கடி சொல்லுவான். இதுல எதுக்கு எக்ஸ்ட்ரா இந்த வேலையும் உனக்கு.அதெல்லாம் அவங்களே பார்த்துப்பாங்க” நைசாக அவனை கழட்டிவிடப்பார்த்தார்.

“என்னம்மா இபப்டி சொல்லிட்டீங்க? நமக்கு ஆயிரம் வேலை எப்போதும் இருக்க தான் செய்யும். அதுக்காக அத்தையை புது ஊரில் தனியா தவிக்க விடலாமா? அப்படி அவங்க கஷ்டப்பட்டா உங்க மனசுதான் தாங்குமா? இல்ல என் மனசு தான் தூங்குமா? இவங்க வந்த வேலை முடியற வரைக்கும் என்னோட ப்ரோக்ராம் எல்லாத்தையும் கார்த்தி பார்த்துக்கறேன்னு சொல்லிட்டான்-ம்மா. சோ... உங்க விருந்தாளியோட வேலைகளை வெற்றிகரமா முடித்து, அவர்களை பத்திரமா ஊருக்கு வண்டி ஏத்தி விடும்வரை என்னோட பொறுப்பில் விட்டுட்டு நீங்க நிம்மதியா இருங்க” என கூறி தான் கார்த்திக்கின் நண்பன் என்பதை நிருபித்தான்.

இதற்க்கு மேல் சொல்வதற்கு என்ன இருக்கிறது என்பதைப்போல் அங்கிருந்த பெண்கள் மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருந்தனர்.

“ம்மா!அதான் உங்க தூரத்து சொந்தக்காரங்களை அஜய் பொறுப்பில் விட்டாச்சு இல்ல? நாம நாளைக்கு ஹாஸ்பிடல் போகலாமா?அப்பாவை அப்பாயின்மென்ட் வாங்க சொல்லிடட்டுமா?” கார்த்திக் கேட்டதற்கு என்ன பத்தி சொல்வதென புரியாது காந்தி விழித்துக்கொண்டு நின்றார்.

“ப்ரோ! இது தான் சந்துல சிந்து பாடறதா?” அப்பாவியாய் கேட்டவனுக்கு முதலில் ஆணவமாய் ஒரு பார்வையை பரிசளித்து,

“எங்க திறமைக்கு நாங்க ஏன் சந்துல போய் சிந்து பாடனும்? மெயின் ரோட்ல... அதுவும் மவுண்ட் ரோட்லயே மெலடி பாடுவோம்டா!” என கெத்தாய் கார்த்திக் பதிலளித்தான்.

இப்போதைக்கு தங்கள் பூர்வீக சொத்தை விற்கும் ஐடியா இல்லை என சொல்லிக்கொண்டு இங்கு வந்த மூன்றாம் நாளே மீனாவின் தாய் தங்கள் ஊருக்கு சென்றுவிட்டார்.ஒரு மாதகாலம் தங்கியிருக்க வந்த மீனா அன்ட் கோவை மூன்றே நாட்களில் மூட்டையை கட்டவைத்த பெருமை அஜய்யையே சாரும். அதில் அவனுக்கு சதி ஆலோசனைகளை அள்ளிவீசிய கார்த்திக்கும் பங்குண்டு.

காலையில் கண் விழித்ததிலிருந்து ஒரு குரல் காதில் ஓயாது ஒலித்துக்கொண்டிருந்தால் எவ்வளவு நேரம் தான் பொறுமையாக இருக்கமுடியும்? கார்த்திக்கும் அஜய்யும் சேர்ந்துக்கொண்டு அம்மா மகள் இருவரையும் பேசி பேசியே ஒரு வழியாக்கிவிட்டார்கள்.இங்குதான் இந்த தொல்லை என எண்ணி வெளியே கிளம்பினாலோ பூனைப்படையை போல அஜய் அவர்களுக்கு முன் அங்கு நின்றுக்கொண்டிருந்தான். அவன் வந்ததிலிருந்து அவர்களை சுதந்திரமாக தனியே தங்களுக்குள் பேசக்கூட விடவில்லை. உறவிற்கு உதவி செய்வதிலும் ஒரு அளவு இருக்கிறது அல்லவா? காந்திக்கு உதவ போய் இவர்களுக்கு காதில் ஏதாவது பிரச்சனை வந்துவிட்டால் யார் இவர்களை கவனிப்பார்களாம்!

இப்போதே அந்த இருவரின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பதில் கொடுத்தே மீனாவிற்கு தொண்டை கட்டிக்கொண்டு பேச்சு சரியாக வரவில்லை. முன்பு மீனா அழகில்தான் மயிலுக்கு போட்டியாக இருந்தாள். இப்போது குரலும் மயிலுக்கு போட்டியாகிவிட்டது. காந்தியை ஹாஸ்பிடலுக்கு அழைத்து செல்ல கார்த்திக் பாய்ந்துக்கொண்டு வருவதைபோல இவளுக்கு யார் வருவார்களாம்? [ ஹாஸ்பிடலுக்கு செல்ல கார்த்திக் ஏன் இந்த பாய்ச்சல் பாய்கிறான் என்பது பாவம் இந்த அப்பாவிக்கு தெரியவில்லை]

தனக்கு கொடுத்த மிஷனை எப்படியெல்லாம் சிறப்பாக முடித்தான் என்பதை அஜய்ஒருமணி நேரமாக பெருமை பேசிக்கொண்டிருக்க, அதில் கடுப்பான கார்த்தி, ”டேய்! போதும் ஷட்டரை க்ளோஸ் பண்ணுடா. சும்மாவே உன் வாய் கொஞ்ச நேரம் ரெஸ்ட்ல இருக்காது. இப்ப ரெண்டு நாளா அந்த ஓட்ட வாய் கூட பேசி பேசியே இன்னும் ஓவரா ஆயிடிச்சு” என்றான்.

“கார்த்தி! யாரை யார்கூட கோத்துவிடற! யாரு... அந்த பொண்ணு எனக்கு இணையா! என் கூட அவளால அரைமணிநேரம் பேசமுடில. அவங்க அம்மாக்கு ஆக்ஷன் காட்டி அவங்களை என்கிட்டே மாட்டிவிட்டு அவ எஸ் ஆயிடறா. இந்த அழகுல அவ கூட பேசினதால தான் எனக்கு வாய் ஓவரா ஆயிடுச்சுன்னு நீ சொல்ற! டேய்... அந்த பொண்ணு பஞ்சத்துக்கு பரதேசி ஆனவ. நாமெல்லாம் பிறக்கும் போதே பரதேசியா பிறந்தவங்க. அவளால நம்ம கூட எல்லாம் போட்டி போடமுடியுமா?” சொல்லிக்கொண்டே காலரை தூக்கிவிட்டுக் கொண்டவனை,

“பரதேசி... ! எதுல தான் பெருமை பேசறதுன்னு ஒரு வரைமுறை இல்லாத பரதேசி!” வெளுத்து வாங்கிவிட்டான் கார்த்திக்.

தங்களின் பொறுமையின் அளவு மூன்று நாட்கள் தான் என சொல்லிக்கொண்டு மீனா குடும்பம் வீட்டைவிட்டு சென்றதும் தனக்களித்த பணியை செய்வனே முடித்துவைத்த அஜய்யும் அங்கிருந்து கிளம்பிவிட்டான்

மூன்றே நாட்களில் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிவிட்ட தங்களின் வீட்டில் தனித்திருந்த மாறனும் காந்தியும் மாலையில் தங்கள் மகன் வந்து என்னென்ன பேச்செல்லாம் பேசப்போகிறானோ என்ற பீதியில் இருந்தனர்.மீனா வீட்டிற்கு வந்த மாலையே கார்த்திக் அஜையுடன் வரும்போதே அவனுக்கு தன் தில்லாலங்கடி தெரிந்துவிட்டது என்பதை காந்தி புரிந்துக்கொண்டார். இத்தனை நாட்கள் அவன் அமைதியாக இருந்ததே வெளியாட்கள் வீட்டில் இருந்ததால் என்பதை மாறனும் அறிந்தே இருந்தார். எனவேதான் சாயங்காலம் வானவேடிக்கையுடன் கூடிய கொண்டாட்டத்தில் தங்கள் இல்லம் களைகட்ட போகிறது என காத்திருந்தனர்.

அவர்களின் நினைப்பிற்கு மாறாக கார்த்திக் எதையும் பேசாது அமைதியாக இருக்கவும் அவனை அடிக்கடி பார்த்துக்கொண்டிருந்தனர். அதை பார்த்தவனோ,

”என்ன... சும்மா சும்மா என்னை பார்க்கறீங்க? என்கிட்டே ஏதாவது சொல்லனுமா?” என தன தந்தையை பார்த்துக் கேட்டான்.

“இல்லப்பா... அம்மாவ ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறேன்னு சொன்னியே... அப்பாயின்ட்மென்ட் வாங்கிட்டியா? எப்போ கிளம்பனும்” என மாறன் தயங்கி தயங்கிக் கேட்டார்.

“வாங்கிட்டேன் ப்பா! நாளைக்கு காலையில் பத்து மணிக்கு அங்கயிருக்கனும். நான் என்னோட ப்ரோக்ராம் டைமிங் அதுக்கு ஏற்றார்போல மாத்திட்டேன். நானே அம்மாவை கூடிட்டு போறேன்” என்றவன் காந்தியிடம் ஏதும் பேசாது தன்னறைக்கு செல்ல திரும்பினான்.
 
  • Love
Reactions: Chitra Balaji

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
அதுவரை அப்பா மகன் பேசுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த காந்தி, வந்ததிலிருந்து மகன் தன்னுடன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்பதை மிகுந்த வலியுடன் உணர்ந்தவர், “அப்பு! என்ன பா! அம்மா மேல கோபமா? வந்ததுல இருந்து என்கிட்டே ஒன்னுமே பேசல. எப்பவும் என்னை எதையாவது சொல்லி கலாய்ப்பியே... அதை கூட இன்னைக்கு காணோமே ப்பா?” என்றார் சோகமாக.

தன அன்னையின் சோகக்குரலை கேட்டவன் ஒரு வினாடி அப்படியே நின்ற இடத்திலேயே தேங்கினான். பின் தன் அன்னையைப் பார்த்து, ”ஏன் காந்தி! நாம என்ன அப்படியா பழகினோம்? இந்த உலகத்தில் என்னோட பர்ஸ்ட் அன்ட் பெஸ்ட் கேர்ள் பிரெண்ட் என்னோட அம்மான்னு தானே நான் உங்களை என்னோட பிரெண்ட்ஸ் கிட்டல்லாம் சொல்வேன். அதை நீங்களும் கேட்டிருக்கீங்கல்ல ம்மா? அப்புறம் ஏன்ம்மா இப்படி நடந்தீங்க? என்கிட்டே எதையும் நேரடியா சொல்ல உங்களுக்கு உரிமை இல்லையா-ம்மா! என்னோட சில பழக்கங்கள் உங்களுக்கு பிடிக்கலைன்னா என் காதை பிடித்து முறுக்கி, டேய்... இப்படி நடந்துக்காதேன்னு உங்களால என்கிட்டே சொல்லமுடியாம போச்சில்ல. அந்த அளவுக்கு நாம க்ளோஸ் இல்லைன்னு இப்ப தான் ம்மா எனக்கு புரிந்தது. நான் என்னை ரொம்ப நல்லவன்னு சொல்லவரலை.ஆனா... அம்மா அப்பாவை கஷ்டப்படுத்தி சந்தோஷப்படற அளவுக்கு அரக்கன் இல்லைன்னு தைரியமா சொல்வேன் ம்மா. ஏன்னா என்னோட அம்மா வளர்ப்பு அப்படி” சொன்னதோடு தன் வேலை முடிந்தது என்று அவ்விடம் விட்டு சென்றுவிட்டான்.

மகன் பேசியதை கேட்ட தாய்க்கு உள்ளம் உருகிவிட்டது.எப்போதும் கூச்சலும் குதூகலமுமாய் இருக்கும் தங்கள் மகன் இப்படி வருத்தப்பட்டு பேசியதை கேட்ட காந்தி, எப்பாடு பட்டேனும் மகனுக்கு பிடித்த அந்த மௌனிக்காவை அவனுக்கு கிடைக்க வைத்துவிடவேண்டுமென முடிவெடுத்தார். அதற்க்கு தன்னால் என்னென்ன செய்யமுடியுமோ அவ்வளவையும் செய்ய துணிந்துவிட்டார்.

மகனின் மனம் போல் அவனுக்கு மணம் முடிந்தால் ஆறுபடை வீட்டிற்கு ஆண்டு தோறும் சென்று, அந்த ஆறுமுகனுக்கு தன் ஆத்துக்காரரின் முடியை காணிக்கையாக்குவதாக வேண்டுதலும் வைத்தார். [ ஆறுபடை வீடுன்னா... ஆறு கோவில்கள். ஆறு கோவிலுக்கும் எப்படி ஒரே நேரத்தில் முடியை காணிக்கையாக்க முடியும்? ஆறு வருஷம் ஒவ்வொரு வருஷமா ஆறு கோவிலுக்கு போய் அதை செய்வாங்களா...! ம்ம்ம்... இந்த கவலை எல்லாம் நமக்கு எதுக்கு? இதெல்லாம் அந்த கந்தசாமிக்கு தான் வரனும்]

தன்னுடைய மனக்குமுறல்களை கொட்டி தாயை தன் வசப்படுத்தியவன், மதியம் மௌனியிடம் போனில் பேசியபோது அவளை என்ன செய்தான்...?

போனில் மிளிர்ந்த அன்னோன் நம்பரை பார்த்து எடுப்பதா... வேண்டாமா... என்ற யோசனையில் இருந்த மௌனி இறுதியில் அதை எடுத்து,”ஹலோ!” என்றாள்.

“ஹலோ மிஸ்.தொமுக! நான் தான் உங்க கார்த்திக் பேசறேன். அம்மாக்கு நாளைக்கு அப்பாயின்ட்மென்ட் வேணுமே... எப்போ வரலாம்?”

‘குரலைக் கேட்டதும் தான் தெரிந்து போய்விட்டதே இது அந்த ஓட்டை வாய்ன்னு! அப்புறம் எதுக்கு ‘உங்கள் கார்த்திக்’ ஒரு வெட்டி இன்ட்ரோ? இவனைப் பார்த்தாலும் கடுப்பாகுது, குரலைக் கேட்டாலும் செம்ம எரிச்சலாகுது. நாளைக்கு இந்த ரெண்டையும் அனுபவிக்கனுமா நான்? ’ முடியாது சாமி! என எண்ணியவள்,

” அப்பாயின்ட்மென்ட்க்கு நீங்க ரிசெப்ஷனிஸ்ட் கிட்ட தான் பேசனும் சார். இதுவரைக்கும் பேஷன்ட் கூட ரெகுலரா யார் வந்தாங்களோ அவங்களே வந்தா எனக்கு கம்ஃபர்டபிளா இருக்கும். சோ...” என இழுத்தவளுக்கு,

“என்ன மிஸ்.தொமுக! எப்போதும் உங்க கம்ஃபர்டபிள் மட்டுமே பாக்கறீங்க. என்னோட கன்வீனியன்ட்டை எப்போ பார்க்க போறீங்க?” எனக் கேட்டான்.

“பார்டன்!” என அதிர்ந்தவளிடம்,

“ம்ம்ம்... அப்பாயின்ட்மென்ட்... அப்பாயின்ட்மென்ட் எப்போன்னு கேட்டேன்” என்றான்.

சரியான லூசு என மனதினுள் வைத்தவள் “ஹலோ... இதுக்கு தான் முதலிலேயே பதில் சொல்லிட்டேன்ல்ல!” என எரிந்து விழுந்தாள்.

“சொன்னீங்க... வெளியாளுங்க தான் உங்க ரிசெப்ஷனிஸ்ட் கிட்ட அப்பாயின்ட்மென்ட் வாங்கனும்.நான் கூட வா... அவங்ககிட்ட வாங்கனும்?” அந்த நானில் ஒரு அழுத்தத்தை கொடுத்து இவளின் ரத்த அழுத்தத்தை ஏகத்திற்கு ஏற்றிவிட்டான்.

இனியும் விட்டால் இவன் இரவு வரை பேசிக்கொண்டே இருப்பான் என்பதை புரிந்துக்கொண்டவளோ,”யாரா இருந்தாலும் அங்கதான் வாங்கனும்” என சொல்லி போனைக் கட் செய்தாள்.

‘யாருகிட்ட! நீங்க போனை கட்பண்ணிட்டா நாங்க அப்படியே வாய மூடிட்டு போயிடுவோமா? அப்படி போயிருந்தா எப்போவோ இந்த கார்த்திக்கை காக்கா இல்ல தூக்கிட்டு போயிருக்கும்!’ எகத்தாளமாய் எண்ணியவன், அதே எண்ணில் இருந்து அழைத்தால் அதை எடுக்காது, டீலில் விடும் சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதால் வேறொரு எண்ணில் இருந்து மௌனியை அழைத்தான்.அங்கே எடுத்ததும்,

“ஹலோ மேடம்! ரொம்ப தான் பிகு பண்றீங்க! நான் உங்களை போலெல்லாம் இல்லப்பா. ரொம்ப... டவுன் டு எர்த்! அதனாலதான் நானே வாலியண்டியரா வந்து உங்களுக்கு நாளை காலை பத்து மணிக்கு அப்பாயின்ட்மென்ட் தரேன். என்னை மீட் பண்ண ரெடியா இருங்க மிஸ். தொமுக!” என்றான் மிதப்பாக.

ராஜேஸ்வரி சிவகுமார்
 
  • Love
Reactions: Chitra Balaji

Chitra Balaji

Active member
Feb 5, 2020
125
68
28
இவன் அடங்க maatengiraane இவன enna panrathu.... மீனா vayum ava அம்மா vayum மூனே நாள் ah thurathitaan அவன் friend oda seththu..... Moniya oru vazhi பண்றான்.... Super Super maa.... Semma episode
 
  • Haha
Reactions: sudharavi

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
இவன் அடங்க maatengiraane இவன enna panrathu.... மீனா vayum ava அம்மா vayum மூனே நாள் ah thurathitaan அவன் friend oda seththu..... Moniya oru vazhi பண்றான்.... Super Super maa.... Semma episode
Thankyou Chitra.......................................
 
  • Love
Reactions: Chitra Balaji

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
அத்தியாயம் 11



சற்று நேரம் தன் பேசியின் திரையையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த மௌனிகாவிற்கு தலை வலிப்பதுப் போல் தோன்ற, தன் படுக்கையறை அருகில் இருந்த டேபிளில் இருந்து எதையோ தேடினாள்.

அந்த பென்டிரைவ் கிடைக்க, ப்ளேயரில் சொருகி ஆன் செய்து விட்டு, வெளியே பால்கனியில் இருந்த கூடை நாற்காலியில் கண்களை மூடி அமர்ந்தாள். இளையராஜாவின் திருவாசகம் ஹோம் தியேட்டர் சிஸ்டம் வழியாக காதையும் மனதையும் இனிமையாக நிறைத்தது.

தீபக்கிடம் கூட அடிக்கடி சொல்வாள். ‘மெடிட்டேஷன் பண்ற ஃபீல் கொடுக்கும் என்று’. அந்த ஐபாடை தொலைத்த்தை, அவள் கவலையோடு சொன்னப் போது, தீபக் தான்,

“ராஜா சார் டைஹார்ட் ஃபேன்ஸ் கூட கேட்க மாட்டாங்க. நீ எப்படி தான் இதெல்லாம் கேட்கிறியோ?” என்று, இந்த பென்டிரைவை கொடுத்தான்.

மூன்றாவது தளத்தில் கீழேப் பார்த்தால், சிறுவர் சிறுமியர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களின் கவலையற்ற வாழ்க்கையைப் பார்த்து சற்று பொறாமை உணர்வு தலை தூக்கியது என்னவோ உண்மை.

‘ஒருவேளை நானே விரும்பி, இது தான் வசதி என்று இந்த வட்டத்தை விட்டு வெளியே வராமல் இருக்கிறேனா? அந்த வட்டத்தை விட்டு வெளியே வந்துப் பார்த்தால் என் வாழ்வும் இனிமையாகலாமோ’

‘தீபக் மட்டும் என் வாழ்வில் வரவில்லையென்றால் என் நிலை என்னவாகியிருக்கும்’

மீண்டும் அலைபேசி அழைக்க, இப்போதும் ஏதோ புதிய நம்பரில் இருந்து அழைப்பு வர, கோபத்தின் உச்சத்திற்கே சென்று விட்டாள்.

“ஹலோ!!! உங்களுக்கு எத்தனை தடவை சொல்றது? சும்மா கால் பண்றீங்க? ரிஷப்ஷன்க்கு கால் பண்ணுங்க சொல்லிட்டேன் இல்ல. ஏதோ அங்கிள்க்கு தெரிஞ்சவங்கன்னு பார்த்தேன். இனிமேல் உங்க அம்மாவை வேற டாக்டர பார்த்துக்க சொல்லுங்க” என்று அவள் படபட வென பொறிந்து தள்ள,

“அம்மாடியோவ்!! என்ன ஆச்சு?” என்றான் மறுமுனையில் தீபக். இது தீபக் குரலாக இருக்கிறதே என்று யோசித்தவள், திரும்பவும் ஒருமுறை தன் பேசியை பார்க்க, அதன் திரை ஏதோ புது நம்பரை தான் காட்டியது.

“ஹே தீபக், நீ எப்படி புது நம்பர்ல?” என்றாள்.

“ஹ்ம்ம்.. நானும் ரொம்ப நேரம் ட்ரை பண்ணேன். ஒருவேளை என் ஃபோன் பிரச்சனையோனு என் ஃப்ரெண்ட்க்கிட்ட இருந்து வாங்கி பேசுறேன்”

“கனெக்ட் ஆனதும் பேச மாட்டியா?” என்று அவனிடமும் கோபமாகவே கேட்டாள்.

“எங்கே மேடம் பேச விட்டீங்க? என்ன! திரும்பவும் ஏதாவது பிரச்சனையா?” என்றான் தோழி மீதுள்ள அக்கறையுடன்.

“அது ஒரு லூசு. பேசி பேசியே கொல்லுது” என்றாள் சலிப்புடன்.

“லூசா? உன்னையே இவ்வளவு பேச வச்சிருக்கானா, அவன் யாருன்னு பார்த்தே ஆகணுமே” என்றான். ஏனென்றால் அவனுக்கு தெரியும். மௌனிகா தீபக்கை தவிர யாருடனும் இப்படி பேச மாட்டாள்.

கார்த்திக்கை முதல் நாள் சந்தித்ததிலிருந்து இன்று வரை நடந்ததை தீபக்கிற்க்கு மேலோட்டமாக சொல்லியவள்,

“இதுல வேற உங்கள் கார்த்திக்க் ன்னு சொல்வான் பாரு எரிச்சலாகும்” என்று நிறுத்தி விட்டு எதையோ யோசித்தவள்,

“அன்னைக்கு ஓலாவில் வரும்போது கூட, ஏதோ எஃப் எம்மில் வந்ததே அதே ஸ்டைல தான் பேசுறான்” என்று நாள் முதற்கொண்டு ஞாபகம் வைத்து மௌனிகா சொல்லவும், தீபக்கிற்கு சுத்தமாக ஞாபகத்திற்கு வரவில்லை. அன்று இருந்த பதட்டத்தில் இதையெல்லாம் கவனிக்க யாருக்கு நேரம் இருந்தது. ஆனால் இவள் இவ்வளவு துல்லியமாக சொல்கிறாள் என்றால், தீபக் மனம் வேகமாக கணக்கிட்டு, இதழில் ஒரு நிம்மதியான புன்னகையை அளித்தது.

“ஹோ! நீ பேசவே மாட்ட, அவன் பேசியே கொல்றான். நல்ல பொருத்தம் தான். ஆர்ஜே வா?” என்று கேட்கும் போதே அவனுக்கு ஹலோ எஃப் எம் ரேடியோ ஸ்டேஷனில் நடந்தது ஞாபகத்திற்கு வர,

“ஹலோ எஃப் எம்மா?” என்றான் சற்று பதட்டமாக. இவன் எதற்கு இவ்வளவு விளக்கம் கேட்கிறான் என்று எரிச்சலானவள்,

“அன்னைக்கு காரில் ஓடினது ஹலோ எஃப் எம் தான். ஆனா அவனான்னு தெரியாது” என்று மீண்டும் தன் மெமரியில் ஸ்டோர் ஆன தகவலை தீபக்கிடம் சொல்ல,

“ஹய்யோ!!! அவனா மட்டும் இருக்கக் கூடாது” என்று வாய் விட்டே சொல்லி விட, இவள் இங்கே அதைக் கேட்டு மேலும் கோபமடைந்தாள்.

“ஏன் தீபக் என்னால் தனியா இருக்க முடியாதா? எவன் தலையிலாவது கட்டி வச்சிரணும் ஏன் இப்படி கவலைப் படுற?” என்று அமைதியாகவே தன் கோபத்தை வெளிப்படுத்தி, அழைப்பை துண்டித்தாள்.

தோழியின் கோபத்தை அறிந்தவன், மேலும் அவளுக்கு அழைத்து வெறுப்பேத்தாமல் அமைதியாகவே இருந்தான். அவனுக்கு அந்த கார்த்திக் யார் என்று தெரிய வேண்டி இருந்தது. எந்நேரமும் தன் இயல்பை தொலைத்து இருப்பவளுக்கு, இந்த அளவுக்கு உரிமையாக சினமடைய வைப்பவன் தான் சரியாக இருப்பான் என்று தோன்றினாலும், ஏனோ ஹலோ எஃப் எம் கார்த்திக்கை மட்டும் அவனுக்கு பிடிக்கவில்லை.



மறுநாள் காலையில், மௌனிகா மருத்துவமனைக்கு வரும் நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே வந்து, தன் குடும்பத்தையே மருத்துவமனையில் காத்திருக்க வைத்த பெருமை எல்லாம் கார்த்திக்கையே சேரும்.

‘இவனோட அக்கப்போர்க்கு அளவில்லாமல் போச்சு’ என்று மாறன் சலித்துக் கொண்டாலும், தன் மனைவிக்காக வந்தார்.

மௌனிகா எப்பொழுதும் வரும் நேரத்தை விட சற்று நேரம் தாமதமாகவே வந்தாள். லிஃப்ட்டில் வந்துக் கொண்டிருந்த போதே, அவன் அங்குதான் இருக்கிறான் என்பதன் அடையாளமாக, அவனின் வழக்கமான ரிங்டோன் சத்தம், அவள் மனதிற்கு திகில் பட உணர்வை தந்தது என்னவோ உண்மை.

அதை அவள் முகத்திலும் வெளிப்படுத்திய தருணம், கார்த்திக் அலைபேசியை காதில் வைத்து ஏதோ பேசியப்படியே மௌனிகாவைப் பார்த்தான்.
 
  • Love
Reactions: Chitra Balaji