லாக் டவுன் - கதை திரி

Status
Not open for further replies.

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,547
1,114
113
“எனக்குப் போதாது. எந்த முடிவுக்கும் வர முடியாமல் அந்தரத்தில் விட்டுட்டுப் போறேங்கிற?”


“சரி சரி சொல்ல வேண்டியதைச் சீக்கிரம் சொல்லி முடி. காலையிலே நேரத்தோட எழுந்திருக்கணும்.”


“எழுந்திருச்சிறலாம். அந்தக் கவலையைவிட்டுட்டு நான் பேசுறதை மட்டும் கேளு.”


“...”


“நீயே, உன் பதில் நெகடிவ்வா இருந்தான்னு கேட்காமல், இஃப் இட்’ஸ் நாட் பாஸிடிவ்ன்னு தானே கேட்டே? இதுவே எனக்குப் பாஸிடிவ் வைப்ஸ் தருது. ஐ வில் வெயிட்.”


“பதில் நீங்க நினைக்கிற மாதிரி இல்லைன்னா?”


தெளிவுப்படுத்திக்கொள்ளக் கேட்டாள். எந்தக் குழப்பமும் வரக்கூடாது. இனி எதையும் சங்கடப்படுத்திக்கொள்ள வேண்டாம் என்கிற கவனம்.


“எப்படி இருந்தாலும் ஏத்துக்கணும். பிடிக்காத வாழ்க்கையை உன்னை வாழச் சொல்லி வற்புறுத்த எனக்கு என்ன அதிகாரம் இருக்கு? ஆணோ பெண்ணோ படிப்பு; வேலை; மண வாழ்க்கை எல்லாமும் அவங்கவங்க செலெக்‌ஷனா இருக்கணும்.


பெரியவங்க பிரியம்னாலும் நம்ம மனசு அந்த முடிவை விரும்பணும். விருப்பமில்லாமல் ஒரு கல்யாணம். தினம் தினம் போராட்டம்னா சரி வராது. என் வேலை ஈஸியானது இல்லை. அந்தப் பொறுப்பும் பிரஷரும் ஆஃபீஸ்ல மட்டும் இருக்கிறதில்லை. எப்பவும் கவனமா செயல்படக் கூடிய மனநிலை எனக்கு அவசியம்.


வீடு, வைஃப், கிட்ஸ் மஸ்ட் ப்ரொவைட் பீஸ் அண்ட் லவ். வீட்டுக்கு வந்தா நிம்மதியா இருக்கணும்.


நீ என்னை லவ் பண்ணலை. லவ் பண்ணுவியான்னும் தெரியலை. நம்ம கல்யாணம் பண்ணிக்கிட்டா லவ் பண்ணுவ. உடனே இல்லைன்னாலும் மெதுவா நடக்கும். அது எப்போ நடக்குமோ நடக்கட்டும். ஐ கேன் வெயிட்.


உனக்கு உன் மேலே நம்பிக்கை இருக்கிறதைவிட, எனக்கு என் லவ் மேலே நம்பிக்கை இருக்குன்னு வசனமெல்லாம் பேசிக்க நானும் உன்னை லாங் டைம் லவ் பண்ணிடலை.


ஜஸ்ட் கொஞ்ச நாளாத்தான். பரிமளம் பாட்டியோட பேச்சினால் மெல்ல மெல்ல நீ… இந்த அழகி என்னை ஆக்கிரமிச்சு பிடிச்சு வச்சிட்டங்கிறது தான் உண்மை.”


வசந்த் பேசியதைக் கவனமாகக் கேட்டுக்கொண்டாள். தேவையில்லாமல் தான் குழம்ப வேண்டாம் என்பது தெளிவாகியது.


“அழகியா? யாரு நானா?”


“ஏன்? நீ அழகியில்லையா? என் கண்ணுக்கு இந்தச் சைந்தவி அழகியா தெரியுறா.”


“காதலுக்குக் கண்ணு இல்லையாம். கலெக்டர் காதலின் முதல் படிக்கு வந்ததும் ப்ளைண்ட் ஆகிட்டாரு போல. பார்த்துக் கலெக்டர் சர், டிஸ்ட்ரிக்ட்டும் மக்களும் பாவம்.”


“நக்கலாடி உனக்கு? அம்மே என்ன வாய் பேசுற கள்ளி!”


கன்னத்தைக் கிள்ள வந்தவனிடம் இருந்து அவசரமாகத் தள்ளி நின்றாள்.


“யூ லுக் ப்ரிட்டி சைந்தவி!”


மென்மையுடன் சொல்லிவிட்டு ரோஜா தொட்டிகளின் பக்கமாகச் சென்றான். நாளை மலரத் துடிக்கும் இளமஞ்சள் ரோஜா மொக்கைக் வலது கையில் பிடித்துக்கொண்டான்.


“திஸ் ப்ளவர் மஸ்ட் பி ஜெலஸ் அபௌட் யூ!”


சில வினாடிகள் அவனுடைய இரசனைக்குள்ளே நீச்சலடித்து, லப்டப்பை அதிகரித்த இதயத்தின் பிடியில் நின்றாள். இருவரும் தாங்கள் நினைக்காத வகையில் ஒருவருக்கொருவர் நெருங்கி வந்திருந்தார்கள்.


சைந்தவிக்கு வசந்தைத் தெரிந்துகொள்ள இந்த நேரம் உதவியது. வசந்த் சைந்தவியைக் கணித்து, அவளுடன் ஒரு நல்லுணர்வை வளர்த்திருந்தான்.


“உன்னை நேரில் பார்க்கும் முன்னாலேயே என் மனசுல உன்னை நினைச்சி நெகிழ்வு வந்திருக்கு.


போதாததுக்கு என் அம்மே, உன் ஃபோட்டோவைப் பார்த்ததும் கவுந்திட்டாங்க.”


சீரியஸாகப் பேசிக்கொண்டு வந்தவன், அவனுடைய அம்மாவைக் குறிப்பிட்டுப் பேசியதும் அழகாகச் சிரித்தான்.


“அம்மாட்ட ரொம்ப க்ளோஸா நீங்க?”


“அவங்க என்கிட்ட க்ளோஸ். நல்லா பழகுவாங்க. நீ அவங்களைப் பார்க்கும் போது புரிஞ்சிக்குவ.”


“ம்ம்.”


மௌன வினாடிகள் உருண்டன. நினைத்துக்கொண்டவளாகச் சைந்தவி சொன்னாள்...


“நீங்க சொன்ன மாதிரி தான் நானும் மனசைத் தேத்தி வச்சிருந்தேன் வசந்த். அவனைக் கடந்திடணும். நான் பிறந்ததுக்கு அர்த்தம் இருக்குன்னு முடிவுக்கு வந்திட்டேன். நீங்களும் கொஞ்சம் முன்னால் ஒவ்வொரு பிறப்புக்கும் அர்த்தமிருக்குன்னு சொன்னதும், ஐ ஃபெல்ட் வி கனெக்ட் வித் அவர் தாட்ஸ்.”


முறுவலில் நன்றியைக் கோடிட்டிருந்தாள். வசந்தின் கண்கள் ஒளிர்ந்தன.


“நம்ம எண்ணங்கள் சிலரை நம்ம பக்கத்தில் கொண்டு வந்து விடுமாம். குட்… குட்! அப்புறம் என்ன? உன் இந்த எண்ணம் மதி. கல்யாணம் செஞ்சிக்க என்ன தயக்கம்?”


“கல்யாணம் செஞ்சிக்கலாம். ஓகே. பட், காதல் செய்ய ஹார்ட் வேணுமே? கல்யாணத்தைப் பண்ணிட்டு மெக்கானிக்கலா ஒரு வாழ்க்கை வாழ என்னாலே முடியாது வசந்த்.”


“ஏன் உன் ஹார்ட் எங்க போச்சு? அவனுக்குத் தந்திட்டியா?”


“ஸ்டாப் இட் வசந்த்! எங்கேயும் போகலை. நான் யாருக்கும் தரலை. என்கிட்ட தான் இருக்கு. அதை வாங்கிக்கப் பிரியம் இல்லாதவங்களுக்கு எதுக்குத் தரப் போறேன்?”


அவனிடம் சுள்ளென்று விழுந்தாலும், புதைந்திருந்த வேதனை தொண்டையில் கரகரத்தது இருவருக்கும் புரிந்தது.


“ஸ்ஸ்… அப்பாடா! ரொம்ப நிம்மதியா போச்சு. எங்கே நீ, ‘என்னாலே உன்னைக் காதலிக்க முடியாது. ஏன்னா என் இதயம் என்கிட்ட இல்லை இல்லைன்னு அழுதிடுவியோன்னு நினைச்சிப் பயந்திட்டேன்.”


அவன் அவளை இலகுவாக்க நினைத்துக் கலாய்த்தான்.


“நக்கல்? ஒரு லவ் பிரபோஸ் பண்ணி, கல்யாணம் பண்ணிக்கக் கேட்கிற. கொஞ்சம் கூட அதுக்கு செட்டாகாம பேசிட்டு நக்கல் பண்ணிட்டு! நீ போ. என் டைமும் வேஸ்ட் ஆகுது உன்னாலே.”


“கோபம் ஏனோ பைங்கிளி…”


“ஏய் ஏய் இன்னொரு பாட்டைப் பாடித் தொலைக்காத!”


“சரி சரி நான் பாடலை. என் முதல் பாட்டுக்கே வர்றேன். உன்னை லவ் பண்ணுன்னு சொல்லிக் கேட்டேன். அதுக்கான பதிலைத் தான் இப்போ தந்து இருக்க.


உன் ஹார்ட் களவு போகலை. நீயும் யாருக்கும் தரலை. நைஸ்!


நான் பத்திரமா பார்த்துக்கறேன். அதை என்கிட்ட தந்திடேன்!”


விளையாட்டு போலக் கேட்டான்.


“வாட்!”


இவ்வளவு நேரம் யோசித்துச் சொல்லச் சொன்னவன் இப்படிப் பேசுவான் என்று எதிர்பாராத திகைப்பு.


“வாட்டும் இல்லை ஜின்னும் இல்லை. உன் ஹார்ட்… அதைத் தந்திடு எனக்கு.”


“என்னை லவ் பண்ணலைன்னு சொன்னவனுக்கு எதுக்குத் தரணும்?”


சைந்தவியும் வீம்பைப் பின்னினாள்.


“இதுவரைக்கும் தீவிரமா பண்ணலை. நீ ஓகே சொன்னா பண்ண ஆரம்பிக்கலாம்.”
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,547
1,114
113
“என்னத்த பண்ணப் போற?”


“லவ்! தென் எவ்ரிதிங் இன் லவ்!”


“அசிங்கமா பேசுற ச்சீ!”


“ஹேய் ஐ மீன் இட் சைந்தவி.


பெரியவங்க பார்த்து வச்சதா நம்ம கல்யாணம் நடக்கட்டும். உங்க அப்பத்தா என்கிட்ட கேட்டுக்கிட்டது உன் சந்தோஷத்தைத் தான்.


அவங்க பிரியம் இந்தக் கல்யாணம்னாலும், உனக்கு என்னைப் பிடிக்கலைன்னா, உன் சந்தோஷம் வேற எதிலையோ அதைத் தான் உனக்கு நான் ஏற்படுத்தித் தரப் போறேன். நீ விருப்பத்தோட சம்மதம்ன்னு சொன்னா நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம்.


இல்லைன்னா என்னைக்கும் நான் உன்னோட கார்டியன். வெல் விஷ்ஷர். உன் கல்யாணம் நீ யாரைக் கை காட்டுறையோ, அவன் ஜென்யூன் பெர்சனா இருக்கும் பட்சத்தில் அவன் கூட நடக்கும்.”


சீரியஸாகச் சொன்னான் வசந்த். அவனின் தீவிரம் புரிந்தது. தன் நலம்விரும்பியாகி எதிரே நிற்பவனை வெறித்தாள்.


“இவ்வளவு தூரம் பேசுனத்துக்கப்புறம் என்னால் வேற எதையும் பேச முடியலை. வசந்த், யூ ஆர் ஏ வெரி லவ்லி பெர்சன். ஐ விஷ் யூ குட் லக்!”


“விஷ் அஸ் குட் லக்! நமக்கு நல்லது நடக்கட்டும்.”


“...”


“தேங்க்ஸ்! உன் ரெண்டாவது பாராட்டுக்கு.”


“நானும் உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லணும். இந்தக் கணம் என் மனசு லேசா ஆகியிருக்கு. அது லேசானதுக்கு நீங்க எடுத்த முயற்சி தான் காரணம். இப்போ நம்ம செலவளிச்ச இந்த நேரம் எப்பவும் என் நினைவில் இருக்கும் வசந்த். தேங்க்ஸ்!”


“ஹேய் விட்டுடு. நோ நீட் டு தேங்க். எனக்கும் இந்த டைம் நல்லா போச்சு. நம்ம ஒருத்தருக்கொருத்தர் பேசிக்கிட்டது இனிய அனுபவம். மனசு ரிலாக்ஸ்டா இருக்கு.”


நெகிழ்ந்து போயிருந்தாள். அவனுமே அப்படித்தான் நின்றிருந்தான்.


“இன்னைக்கி நடந்தது தற்செயலா அசம்பாவிதமான்னு தெரியலை சைந்தவி. எதுவாக இருந்தாலும் முக்கியமான விசயத்தை இந்த நேரத்திலே பேச எனக்கு மனசில்லை என்பது தான் உண்மை. இன்னைக்கு முழுக்க வேலை மட்டுமில்லை. மனசும் லேசாயில்லை.”


“இப்படிவொரு சம்பவம் கலெக்டர் ஆஃபீஸ்ல தற்செயலா எப்படி நடக்கும் வசந்த்?”


“எங்க வளாகத்துக்குள்ளே நடக்கலையே சைந்தவி. பக்கத்திலே இருந்து இங்கே வந்து விழுந்திருக்கு.”


“இருந்தாலும் அசட்டையா நினைக்கத் தோணலை. நீங்க கவனமா இருக்கிறது நல்லது.”


அவளுடைய முகம் கவலையைக் காட்டியது. வசந்த் அதனைக் கவனித்துக் கேட்டான்...


“என் மேலே அக்கறையா சைவிம்… சைந்தவி?”


சைவிம்மாவைப் பாதியில் முழுங்கிவிட்டு இந்தச் சைந்தவி வந்ததைக் குறித்துக் கொண்டாள்.


“சக மனித உயிர் மேலே அக்கறையில்லைன்னா தான் நீங்க ஆச்சரியப்படணும் வசந்த்.”


நழுவலான பதில்.


“ஹ்ம்!”


பெருமூச்சு விட்டுக்கொண்டு நிதானமாக அவளைப் பார்த்துச் சொன்னான்…


“வெறும் சக மனிதன்னு சொல்லி என்னை ஒதுக்கி வைக்கப் பார்க்கிற?”


கேள்வியாக உயர்ந்த அவனுடைய புருவமும் கண் பார்வையின் கூர்மையும் சைந்தவியை இரண்டு மூன்று வினாடிகள் பேசவிடவில்லை. பின்னர்ச் சொன்னாள்…


“சக மனிதன் மட்டுமில்லை…”


அவனுடைய கண்கள் நிலவொளியிலும் பிரகாசிப்பதைக் காண முடிந்தது.


“எங்க மாவட்டக் கலெக்டர். என் மேலே அக்கறை வச்சிருக்கும் என் நலம் விரும்பி.”


“இவ்வளவு தானா இன்னும் அடுக்கப் போறியா?”


சட்டெனக் கோபப்பட்டான்.


அவனுடைய கோபம் சைந்தவியைப் பாதித்தது.


“நீ வந்த அந்த மழை நாள்…


எனக்கு மறக்க முடியாத ஒன்னு. பாட்டி இறந்தது ஒரு பக்கம் தாக்கத்தைக் கொடுத்திச்சின்னா, நீ வந்து அவங்க இறப்பை எப்படி எதிர்க்கொள்ளப் போறேங்கிற யோசனையும் கவலையும் என்னைச் சகஜமா நடமாடவிடலை.


நான் வொரி பண்ண மாதிரி, நீ வந்ததும் உன் ரியாக்‌ஷன்… இதோ இன்னும் என் கையில் அந்தக் கண்ணீரின் வலியை உணர முடியுது சைந்தவி.


நீ சொன்ன, ‘சக மனிதன்’... அவனைவிட ஐ’ம் மோர் ஃபார் சைந்தவி. ஐ ஷுட்!


நாலஞ்சு வாரம் தான் இருக்கும் கல்யாணம் பேசி வச்சது. பட், என்னமோ நீ எனக்கு ரொம்ப க்ளோஸ் ஃபீல் தர்ற சைந்தவி.”


அவளுக்குத் திகைப்பாக இருந்தது. யாரிவன்? இந்தளவு எப்படி? ஏன்?


“சா…”


“வேண்டாம் சொல்லாதே! சாரி தேங்க்ஸ் தேவையில்லை. ஜஸ்ட் லீவ் நௌ! வில் யூ?”


வீட்டைப் பார்த்துக் கை காட்டி, ‘போ’ சொன்னான்.


சைந்தவி நகராமல் சட்டமாகக் கை கட்டி நின்றாள். அவனை ஆழமாகப் பாரத்துக் கேட்டாள்...


“டைம் கேட்டு இருக்கேன் வசந்த். ஐ நீட் டு கெட் கம்ஃபர்டபிள் டு மூவ் ஆன்.”


“எடுத்துக்க… அது வேற சைந்தவி. நம்ம கம்ஃபர்டபிள் ஜோன்ல இல்லைன்னா இவ்வளவு டைம் ஒன்னா ஷேர் பண்ணியிருக்க மாட்டோம்.”


குறிப்புக் காட்டினான்.


சொல்லிவிட்டு நாற்காலிகளை உள்ளே எடுத்துச் சென்றான். செல்லும் போது, “இன்னும் மூனு நாள் இங்கே இருக்கிற மாதிரி பார்த்துக்கோ. உங்க பாட்டி சொல்லிட்டுப் போன வேற ஃபார்மாலிட்டீஸ் எல்லாம் முடிஞ்சதும் கிளம்பிப் போ.” பேசிவிட்டு விடுவிடுவென வீட்டிற்குள் போய்விட்டான்.


கடுப்பான சைந்தவி உள்ளே போன நேரம் எல்லாமும் நிசப்தமாகத் தெரிந்தது. நள்ளிரவில் தன்னுடைய உடைமைகளை எடுத்து அடுக்கிக்கொண்டாள். படுக்கையில் விழுந்தவள் தான் என்ன செய்ய வேண்டும் என்று வரிசைப்படுத்திக் கொண்டாள். பின்னரே தூக்கம் வந்தது.


வசந்திற்கு மனவுளைச்சல். அவளிடம் கடைசியில் கடுப்படித்திருக்க வேண்டாம் என்று நினைத்துக்கொண்டான்.


“பிசாசு! இங்க உட்கார்ந்திட்டுப் பிராண்டுறா.”


இடது பக்கம் சென்றது அவனுடைய கை. மார்பை நீவி விட்டுக்கொண்டான்.


அவளிடம் சொல்லிவிட்டாலும், அவனால் அவளை எளிதாக விட்டுக்கொடுக்க முடியாது என்பது தெளிவாகியது.


என்ன விலையழகே

சொன்ன விலைக்கு வாங்க வருவேன்

விலை உயிர் என்றாலும் தருவேன்

இந்த அழகைக்கண்டு வியந்து போகிறேன்...

 
  • Love
Reactions: Sudha
Status
Not open for further replies.