லாக் டவுன் - கதை திரி

Status
Not open for further replies.

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,489
1,086
113
அத்தியாயம் 09:

சென்னை விமான நிலையத்தின் வெளியே உட்கார்ந்து இருந்தார்கள் சைந்தவி, வினித் மற்றும் அலெக்ஸ். மூவரும் அன்றைய எதிர்பாராத அலைச்சலில் களைத்துப் போயிருந்தார்கள்.

“இப்படிப் பிளைட் டிலே ஆகும்ன்னு தெரிஞ்சிருந்தா சாப்பிட்டுட்டே வந்திருக்கலாம்.”

சோர்வாகச் சொன்னான் அலெக்ஸ்.

அலெக்ஸின் பசியை உணர்ந்த வினித், “வாடா, இங்க ஏதாவது சாப்பிட இருக்கும். பார்த்து வாங்கிட்டு வரலாம் வா.” சொல்லியபடி அவனைத் தன்னுடன் கூட்டிப் போனான்.

இரண்டு பேரும் அந்த இடத்திலிருந்து அகன்று செல்வதைப் பார்த்தபடி இருந்த சைந்தவியின் மனத்தில் ஓடியது, ‘நான் நினைச்சது என்ன… இப்போ நடந்துகிட்டு இருக்கிறது என்ன?’.

யாரோ இருவர் அவள் பக்கத்திலே நடந்து வர, தன்னுடைய டிராவல் பேக்கை நகர்த்தி வைத்துக் கொண்டவளுடைய சிந்தனையில் சில மணி நேரத்திற்கு முன்னர் நடந்தவை வலம் வந்தன.

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை...

இந்தப் பழைய பாடலை யாரும் மறுக்க முடியுமா? நினைத்துக்கொண்டாள்.

காலையில் திடீரென வந்து நின்ற வினித்தைப் பார்த்த உடனே அவளுடைய மனது அத்தனை சந்தோஷம் அடைந்திருந்தாலும், ஹாஸ்டல் வரை ஏன் தன்னைத் தேடி வந்திருக்கிறான் என்ற ஆராய்ச்சியும்; ஒருவிதமான எதிர்பார்ப்பும் அப்போது அவளுக்குள் கூடி இருந்தது.

பெண்கள் தங்கும் விடுதி என்பதாலும் தேவையில்லாமல் எதுக்கு விடுதி வரை வருவது… அப்படி என்ன அவசியம் என்று வினித் அங்கெல்லாம் வருவதே இல்லை.

அவளிடம் அந்த யோசனை சுழல, அவனோ பதட்டத்தைக் கொட்டினான்.

“உனக்கு என்ன ஆச்சோ ஏதோன்னு பதறிட்டுப் பரபரன்னு கிளம்பி, அலெக்ஸ்ஸையும் பிடிச்சு இழுத்திட்டு உன்னைத் தேடிட்டு வந்தா, நீ என்னடான்னா பளிச்சுன்னு வந்து நிக்கிற...”

“எதுக்குப் பரபரன்னு கிளம்பி வரணும்? ஏன்… என்னாச்சு வினித்?”

தான் வந்த காரணத்தை, ஒரு நிமிடம் கடந்து வினித் அமைதியும் ஆதுரமும் கலந்த குரலில் சொல்லி முடித்தான்.

அதைக் கேட்டவள் அந்த நேரம் எப்படி உணர்ந்தாள்… உண்மையில் கலவையான உணர்வுகள் அவளை வினாடிகளில் அழுத்தின.

அக்கலவையில் அவளைப் பெரிதும் தாக்கியது ஏமாற்றமே!

“வா போகலாம்…”

வினித் அவளை நகர்த்தியதும், எங்கே என்று கூடக் கேட்கத் தோன்றவில்லை அவளுக்கு. ஹாஸ்டலுக்கு வெளியே வந்திருந்தார்கள். அங்கே பைக்கருகே இவர்களுக்காகக் காத்திருந்தான் அலெக்ஸ்.

அருகே இருந்த ஏதோ ஓர் உணவகத்திற்குள்ளே அலெக்ஸ் நுழைய, “எங்களுக்குப் பசிக்குது சைவி. நீ சாப்பிட்டியா?” அவளை நோக்கிக் கேட்டான்.

“தெரியலை…”

“ஆமாம் இல்லைன்னு சொல்லுறதை விட்டுட்டு இதென்ன பதில்? சரி வா சாப்பிட்டுட்டே பேசலாம்.”

அவளுடைய மனநிலையைக் கணிக்க முயன்றபடி அலெக்ஸைப் பின் தொடர்ந்து, சைந்தவியை உணவகத்துக்கு உள்ளே அழைத்துச் சென்றான் வினித்.

அங்கே ஆண்கள் இருவரும் என்ன வரவழைத்தார்கள், தான் சாப்பிட்டது என்ன என்று எதையும் கவனிக்கும் நிலையில் அவளில்லை. அவளுடைய யோசனை ஓரிடத்தில். யோசனையுடனே உணவைத் தொண்டைக்குள் அடைத்தாள்.

வினித்திற்கு அவளுடைய எண்ணப்போக்கு தெரிய வாய்ப்பில்லை. அடுத்தடுத்துச் செய்ய வேண்டியதைப் பற்றி அவனும் அலெக்ஸும் பேசினர். அப்போது அவர்களின் பேச்சில் இடையிட்டு இருந்தாள் சைந்தவி.

“எனக்கு ஆஃபீஸ்ல வேலை இருக்கு. நான் போகணும்.”

“என்ன விளையாடறியா சைவி? இன்னைக்கும் சேர்த்து ஃபோன்லயே லீவ் சொல்லிடு. அங்க போயிட்டு பெர்மிஷன் போட்டுட்டு, அப்புறம் பிளைட் டைம்முக்கு ஏர்போர்ட் போகணும்னா ரிஸ்க். வீணா அலையணுமா ஜர்னி டைம்ல?”

அவனுக்கு அவள் ஏன் அப்போது அலுவலகத்திற்குப் போக நினைக்கிறாள் என்று புரியவில்லை. அவன் தெரிவித்த தகவல் அவளுக்கு எவ்வகைப் பாதிப்பைத் தரும் என்று ஊகிக்க முடியாத நிலையில் தான் அவளைத் தேடி வந்திருந்தான்.

ஆனாலும் தன்னுடைய தோழி பண்பட்டவள் என்று நம்பினான். அவள் இப்படிச் சொன்னதும் சற்றுக் குழப்பம் அடைந்திருந்தான்.

“எது எப்படி நடந்திருந்தாலும், நீ உன் கடமையை விட்டுத் தவற மாட்டேன்னு நினைச்சிட்டேன் சைவி. மனசு எல்லோருக்கும் விசாலமா தான் வச்சு விட்டுருக்காரு நம்ம பிரம்மா காட் (god). சிலரைப் போல நீயும் உன் குணத்தை மாத்திட்டு, அதைச் சுருக்கிக்காதே!”

கண்டிப்பான குரலில் சொன்னவனை வெறித்தாள் சைந்தவி. தனக்கு வேலை கிடைத்த விசயத்தை அப்போது அவனிடம் வெளியிட விருப்பம் இல்லாது போனது.

‘எந்தச் சந்தோஷத்தையும் முழுமையா அனுபவிக்கக் கொடுத்து வச்சிருக்கணும்.’

நினைத்துக்கொண்டாள் கசப்பாக.

“நீ நினைக்கிற மாதிரி இல்லை வினித். நான் நானாத்தான் இருக்கேன். இனியும் அப்படித்தான் இருக்கப் போறேன். நீ நல்லவள்னு நினைச்சு என்னைப் பிரண்டாக்கிக்கிட்டது எப்படி மாறும்? அதே நல்லவள் தான் டா நான்.”

அளவாகப் புன்னகைத்தவள் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை என்ற போதும், ஏதோ தீவிரச் சிந்தனையில் இருக்கிறாள் என்பதை வினித் யூகித்தான்.

“அப்போ நீ பிளான்படி கிளம்பிப் போகப் போறது உறுதி இல்லையா… அப்படின்னா உன் டிராவலுக்கு ரெடி ஆக வேண்டாமா? ஆஃபீஸ் போகணும்ங்கிற?”

கூர்மையான பார்வையுடன் கேட்டான். அவனுடைய குரலில் உள்ள சந்தேகத்தைத் துடைத்தாள், அவளுடைய பதிலால்.

“நீங்க எல்லாம் போட்ட பிளான்படியா?”

நக்கலாக அவள் கேட்க, “இந்தப் பிளானைப் போட்டது அருணா, நான், அலெக்ஸ் தான். இந்தச் சமயத்திலே உனக்கு வேற வித்தியாசமான எண்ணம் இருக்கா? சொல்லு என்னன்னு…”, அவளுடைய விருப்பத்தைக் கேட்டான்.

“இல்லை வினித். இது தான் பெஸ்ட் ஆப்ஷன்.”

“அப்புறம் என்ன… இப்படியே கிளம்பாம எதுக்கு ஆஃபீஸ் போகணும்ங்கிற சைவி?”

புரியாமல் கேள்வி கேட்டான்.

“வினித் ப்ளீஸ் லெட் மீ கோ நௌ! எனக்கு முதல்ல ஆஃபீஸ் போகணும். ஆஃபீஸ்ல இன்னைக்கே செய்ய வேண்டிய வேலை இது. தள்ளிப் போட முடியாது. நான் அங்க போயிட்டுத் திரும்ப வர்றது எப்போன்னு உறுதியா தெரியலைங்கிற போது, இந்த வேலையை முடிச்சிட்டே போயிடறேன்.”

தன்னுடைய சீனியரை நேரில் பார்த்து விசயத்தைச் சொல்லிவிட்டு, இன்றே மனிதவளப் பிரிவிலும் போய் உரியவரைச் சந்தித்துப் பேசிவிட்டால் தான் நல்லது. ஒரு மாதத்திற்குள்ளே ரிலீவிங் ஆர்டரைப் பெற வேண்டும்.
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,489
1,086
113
புதுப் பணியில் சேருவதைக் குறித்துச் சைந்தவி தீவிரமாக இருந்தாள். ஆனால் வினித்திடம் எதையும் சொல்லவில்லை. வேற நல்ல சந்தர்ப்பத்தில் சொல்லிக்கொள்ளலாம் என்கிற நினைப்பு.

அவளின் பிடிவாதத்தைப் பார்த்து வினித்தும் வாதாடவில்லை. தோண்டித் துருவ முயலவில்லை. முக்கியமான வேலை இருக்கும். விடுமுறையில் போவதால் அதற்கான ஏற்பாடுகளைப் பார்த்துவிட்டே போகட்டும். எப்படியோ அவள் கிளம்பினால் சரி தான் என்று அவளுடன் இசைந்தான்.

“சரி வா நானே கூப்பிட்டுப் போறேன். அங்க ரொம்ப லேட் பண்ணாதே!”

“முதல்ல ஹாஸ்டலுக்குப் போகணும். ரெண்டு மூனு செட் டிரஸ்ஸாவது தேவைப்படும்.”

“சரி… அலெக்ஸ் நீ உன் வேலையை முடிச்சிட்டு ஏர்போர்டுக்கு வந்திர்றியாடா?”

இவர்கள் இருவரும் பேசி முடியட்டும் என்று மொபைலிடம் தஞ்சம் அடைந்திருந்த அலெக்ஸ் வாயைத் திறந்தான்.

“நான் வந்திர்றேன் மச்சி. நீங்க கிளம்புங்க. இந்தா பைக் சாவி. நீ என் வண்டியையே எடுத்திட்டுப் போ.”

இருவரும் ஒரே வண்டியில் தான் சைந்தவியைப் பார்க்க வந்திருந்தனர்.

காலை உணவைச் சாப்பிட்டுவிட்டு, அப்படியே அலெக்ஸ் உணவகத்தில் இருந்து பிரிந்து செல்ல, வினித்துடன் சைந்தவி ஹாஸ்டலுக்குப் போனாள்.

மூன்று செட் உடைகளுடன் டிராவல் பேக்கை ரெடி செய்தவள், தான் அணிந்திருந்த அந்தப் புது உடையைக் களைந்து வேறு சாதாரணக் காட்டன் குர்தி லெக்கிங்ஸ்க்குள் பொருந்திக் கொண்டாள்.

“வேண்டியதை எடுத்திட்டியா? ஹாஸ்டல் வார்டன்கிட்டயும் தகவல் சொல்லிட்டு வா.”

சைவி அறையிலிருந்து வெளியேறும் போது மொபைலில் அழைத்து ஞாபகப்படுத்தினான் வினித்.

அவன், காலையிலேயே சத்தம் போட்டதை அடுத்து மியூட் மோடிலிருந்து நார்மல் ரிங்கர் மோடிற்கு வந்திருந்தது அவளுடைய மொபைல்.

“கிளம்பலாம் வினித்”.

அதிக நேரத்தை விரையம் செய்யாமல், சில நிமிடங்களிலேயே வந்து பைக்கில் ஏறிக்கொண்டாள்.

அவளை மெச்சியபடி வண்டியைக் கிளப்பினான். ரியர் வியூவில் கண் பதித்தவன் சொன்னான்…

“முதல்ல போட்டிருந்த அந்த வொயிட் டிரெஸ் உனக்கு ரொம்ப நல்லாப் பொருத்தமா இருந்தது சைவி. நம்ம சேர்ந்து போனப்ப ஷாப்பிங் செஞ்சது தானேமா?”

“தாங்க் யூ டா! ஆமாம், அதே டிரஸ் தான். பரவாயில்லையே! அதை இன்னும் ஞாபகத்தில் வச்சிருக்கே?”

“பிடிச்சி அடம் பண்ணி வாங்கினது. எப்படி மறக்கும்… யு லுக்ட் கார்ஜியஸ் இன் இட் சைவி!”

முகம் மலர, சிரித்துக்கொண்டே சொன்னான் வினித்.

அப்போது சைந்தவி கேட்டாள், “அதான் பார்த்த உடனேயே எனக்கு அறிவில்லைன்னு பட்டம் கொடுத்தியா? போடா… எதாவது இப்போ பதில் சொல்லிராதே! கடுப்பாகிடுவேன்.

ஏற்கெனவே மூட் அவுட்ல இருக்கேன். நான் இப்போ ஆஃபீஸ் போறது ரொம்ப முக்கியமான வேலைக்கு. இருக்கிற கொஞ்சநஞ்ச மைண்ட் செட்டும் கெடாம இருக்கட்டும். இன்னும் கொஞ்ச நேரத்துக்காவது.”.

அவள் சொன்னதைக் கேட்ட வினித்திற்கு மனது சங்கடப்பட்டது. அவளுடைய வார்த்தைகள் அவனுக்குள் வலியை உண்டாக்கிய போதும், அவளுக்காகத் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான். பதிலுக்குப் பேசாமல் அமைதியாகவே இருந்தான்.

இருவரும் அலுவலக வளாகத்தை அடையும் வரையில் பேசிக்கொள்ளவில்லை. தத்தம் யோசனையில் இருந்தார்கள்.

“உன் வேலை முடிஞ்சதும் கூப்பிடு சைவி. நானும் ஆஃபீஸ்ல தலையைக் காட்டிட்டு வர்றேன். அருணாவுக்கும் கால் பண்ணிடு. நான் உன்னைப் பார்த்ததும் மெசேஜ் பண்ணிட்டேன். பிஸியா இருந்ததிலே பேசலை.”

“அருணாகிட்ட ஈவ்னிங் பேசிக்கிறேன் வினித். இப்போ முடியாது. சரி நீ போ. நான் வேலையைச் சீக்கிரம் முடிச்சிட்டு, உனக்குக் கால் பண்றேன்.”

சைந்தவி அலுவலகத்திற்குள்ளே போன பிறகு வேற நினைப்போ சோர்வோ தன்னிரக்கமோ எதுவுமே அவளருகில் வரவில்லை. தான் பாட்டுக்கு வேலைகளைத் திட்டமிட்டபடி அதே வரிசையில் செய்தாள்.

மேலாளருடன் பேசினாள்.

“ஐ’ம் சாரி ஃபார் யுவர் லாஸ் சைந்தவி!”

முதலில் அவளுடைய இழப்புக்கு இரங்கலைத் தெரிவித்தார்.

“ஒன் ஆர் டூ டேஸ் மட்டும் லீவ் எடுத்துக்கங்க சைந்தவி. இல்லைன்னா நீங்க சொல்ற டேட்டுக்கு ரிலீவ் பண்ண மாட்டாங்க. பார்த்துக்கோங்க. முடிஞ்ச வரையில் உங்க அசைன்மெண்டை முடிச்சி அனுப்பிடுங்க. வொர்க் ஃப்ரம் ஹோம் மாதிரி பண்ணிட்டு ஒரு வாரத்திலே வந்துருங்க. நானும் ஹெச் ஆர் கிட்ட பேசறேன்.”

“சரி சார். கண்டிப்பா அங்க இருந்தே லாக் இன் பண்ணுறேன். தாங்க் யூ!”

“கங்கிராட்ஸ் ஆன் யுவர் நியூ ஜாப் சைந்தவி!”
(உங்க புதிய வேலைக்கு வாழ்த்துகள் சைந்தவி!)

சைந்தவி, அதன் பின்னர் மனிதவளப் பிரிவிலும் போய்ப் பேசினாள். அவள் பேசிவிட்டு வரும் போது நேரமாகிவிட்டது.

வினித் விரட்டிக்கொண்டு வந்ததால் நேரத்திற்கு விமான நிலையத்திற்கு வர முடிந்திருந்தது. வந்து பார்த்தால் பிளைட் டிலே. அப்போது அலெக்ஸும் அங்கு வந்து சேர்ந்திருந்தான்.

மதிய வெயில், வெப்பத்தைக் கொட்டி அனைவருக்கும் உடல் அலுப்பைத் தோற்றுவிக்க, ‘என்னைத் தொட்டுப் போ, தொட்டுப் போ’ என்று ஏங்கிய மனங்களை, ‘தெரியாத்தனமா நினைச்சிட்டேன்’ என்னும் அளவிற்குக் காற்றும் தொட்டும் உரசியும் பிசுபிசுப்பை உண்டாக்கியது.

சமோசாக்களையும் குளிர்பானங்களையும் வாங்கிக் கொண்டு வினித்தும் அலெக்ஸும் வந்து சேர, மூவரும் இருந்த பசிக்குச் சற்று நேரம் பேச்சே எழவில்லை.

இன்னும் விமானம் வந்து சேர்ந்ததற்கான அறிகுறியே தென்படவில்லை.

‘வார்த்தைகளை வட்டிக்கு விட்டிருக்கிறாளா என்ன?’

வினித் நினைத்துக்கொண்டே பக்கவாட்டில் தலை சாய்த்து, சைந்தவியைப் பார்த்தான். அவளுடைய உதடுகளை மட்டும் இறுகிக் கொள்ளவில்லை, முகமும் ஒரு மாதிரி தெரிந்தது.

“சைவி…”

மெல்லக் கூப்பிட்டுப் பார்த்தான். பதிலில்லை அவளிடம்.

தாயோடும் சிறு பிணக்குகள் இருக்கும்
தோழமையில் அது கிடையாதே
தாவி வந்து சில விருப்பங்கள் குதிக்கும்
தடுத்திடவே இங்கு வழி இல்லையே…

“சைவீ…”

இப்போது சற்றுக் குரலை உயர்த்தி அவளை அழுத்திக் கூப்பிட்டுப் பார்த்தான் வினித்.

“சைந்தவி, உன்னை வினித் கூப்பிடுறான் மா…”
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,489
1,086
113
அவனுடைய மொபைலை நோண்டியபடி, பக்கத்தில் சீன் போடுறவளைக் கண்டும் காணாததைப் போல் ஓரக் கண்ணால் பார்த்து வேண்டும் என்றே சொன்னான் அலெக்ஸ். அவளுடைய மனத்தில் என்னவோ அந்த இரண்டு ஆண்களுக்கும் புரியவில்லை.

“அப்படியா அலெக்ஸ்… சரி…”

பக்கத்தில் உட்கார்ந்திருந்த வினித்தைக் கடந்து, அவனுக்கு அடுத்த இருக்கையில் உட்கார்ந்திருந்த அலெக்ஸ்ஸிடம் பேசினாள்.

அலெக்ஸ் புன்னகையை அடக்கிக்கொள்ளச் சிரமப்பட்டான்.

“கொழுப்புடா இவளுக்கு… விட்டுடு!”

வினித் பல்லைக் கடித்துக்கொண்டு கோபப்படவும், “சும்மா இருடா… நீயும் சேர்ந்திட்டு” அலெக்ஸ் அவனை அடக்கி வைத்தான்.

“அறிவில்லையான்னு கேட்ட ஒரு வார்த்தை உன்னை ஹர்ட் பண்ணிடுச்சா என்ன? இல்லை உன் மனசு விசாலமா இல்லையான்னு டவுட் பண்ணதுக்கா இந்தக் கோபம்? சொல்லு சைவீ!”

வினித் சைந்தவியைக் கூர்ந்து பார்த்தபடி கேட்க, அலெக்ஸ், “மச்சி, கார் டிரைவர் நம்பர் வந்திருக்கு. கூப்பிட்டுப் பேசிட்டு வர்றேன்டா.” சொல்லிவிட்டு அந்த இடத்திலிருந்து தள்ளிப் போனான். சரி என்று நண்பனுக்குத் தலையசைத்துவிட்டு மீண்டும் சைந்தவியிடம் திரும்பினான்.

“எனக்குக் கோபமில்லை வினித். இப்போ எதுவும் பேசப் பிடிக்கலை. விட்டுடு.”

தன்னைப் பார்த்தபடி அமைதியாகச் சொன்னவளைப் பார்த்துப் பெருமூச்சை வெளியேற்றியபடி சொன்னான்...

“காலைல ஒரு பதினாலு பதினைஞ்சு தடவை உனக்குக் கால் பண்ணியிருப்பேன் சைவி. முதல்ல நீ கால் அட்டெண்ட் பண்ணலை. அப்புறமா சுவிட்ச்ட் ஆஃப்ன்னு சொல்லுது. நான் என்னன்னு நினைக்க… சொல்லு?

நைட்டு வேற ரெண்டு மூனு தடவை உன் கால் வந்திருக்கு. அந்த நேரத்திலே நான் நீலிமாட்ட பேசிட்டு இருந்ததால உன்கிட்ட பேச முடியாம போச்சு. அந்தக் கால் முடிஞ்சதும் டைம் பார்க்க, ரொம்ப லேட் ஆகியிருந்திச்சு.

ஏதாச்சும் அவசரம் இல்லை முக்கியம்னு இருந்திருந்தா உன் மெசேஜ் வந்திருக்கும். அப்படி எதுவும் நைட் வரலை. சரி நார்மல் கால் தானேன்னு நினைச்சு, காலைல பேசிக்கலாம்னு தூங்கப் போனேன்.”

“எதுக்கு இந்த விளக்கம் சொல்லிட்டு இருக்க? நீ நைட்டே கால் ரிடர்ன் பண்ணுவன்னு நானும் காத்திட்டே இருக்கலையே!”

“நான் சொல்ல வந்ததைச் சொல்லிடறேனே… காலைல எந்திரிச்சு முதல்ல உனக்குத்தான் கால் பண்ணினேன். ரெண்டு தடவை விட்டுவிட்டு அடிச்சேன். நீ எடுக்கலை. சரி நைட் நான் பேசாதது உனக்குக் கோபம் போலன்னு நினைச்சேன். ஆனாலும், அந்த மாதிரி இருக்காதுன்னும் தோணிச்சு.

ஏன்னா நமக்குள்ளே இந்த ஃபோன் கால்ஸ் பற்றி எப்பவும் பிரச்சனை வந்தது இல்லை. அப்படிக் கோபப்படுகிறவ கிடையாது நீ!

சமீபத்துல வந்த அந்த ஒரு நாளை தவிர்த்து, என்னுடைய மெசேஜ்ஜுக்கும் நீ ரிப்ளை பண்ணாம இருந்ததே இல்லை. எந்த ஃபோன் கால்ஸையும் நீ உதாசீனப்படுத்தியது இல்லை…”

அவனைப் பேசவிட்டுக் கேட்டுக் கொண்டிருந்தவளுக்கு அந்த நாள் எது என்று நன்றாகத் தெரிந்தது. அமைதியாகத் தலையசைத்துப் புரிதலை வெளிப்படுத்தினாள். அதே சமயம், அவன் குறிப்பிட்ட அந்த நீலிமா என்கிற பெயர் அவளை நிரடிக் கொண்டிருந்தது.

“நான் மட்டுமில்லை, உன் அப்பா, அருணான்னு யாரும் உன்னைத் தொடர்பு கொள்ள முடியலை. போதாததுக்கு இன்னைக்குப் பார்த்து உங்க ஹாஸ்டல் லேண்ட்லைன் வேற அவுட் ஆஃப் ஆர்டர்.

நல்லவேளை உங்க அப்பா அருணாவைக் கூப்பிட்டுச் சொல்லிட்டு ப்ளைட்டைப் பிடிக்கக் கிளம்பிட்டாரு. ஏற்கெனவே என்ன நிலையிலே வர்றாரோ… உன்னைப் பற்றிய குழப்பமும் பதட்டமும் அதோட சேராம உன் பிரெண்ட் அருணா பார்த்துக்கிட்டா.

என் நம்பரை அருணாகிட்ட எப்பவோ நீ சேர் பண்ணிக்கிட்டது நல்லதா போச்சு. இல்லைன்னா இன்னைக்கு அவள் பாடு தான் திண்டாட்டமா போயிருக்கும்.”

வினித் சற்று இடைவெளி விட, “நான் எங்க தந்தேன்? அருணா தான் ஒரு நாள் நாங்க பேசிட்டு இருக்கிறப்ப உன் நம்பரை சேர் பண்ணச் சொல்லிக் கேட்டு வாங்கினா.” சைந்தவி சொன்னாள்.

“உனக்கு நல்ல பிரண்ட்ஸ் சைவி. என்னையும் சேர்த்து! இல்லையா?”

பெருமையுடன் கேட்டுக் கண் சிமிட்டலுடன் புன்னகைத்தான்.

“ரொம்ப பெருமைப்பட்டுக்கிற மாதிரி தெரியுது. எனக்கு யாரு நல்ல பிரண்ட்ஸ்னு நான் சொல்லணும் வினித்…”

“நீ சொல்லாட்டி போகுது. நானே சொல்லிக்கிறேன் விடு!”

வினித் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்த சைவி, அவன் பேசி முடிக்கவும் கேட்டாள்…

“சொல்லிக்கோ போ போ… ஆமா நீ சொன்னியே நீலிமா… யாரு அது, அந்த நீலிமா?”

புருவங்களின் சுளிப்புடன் ஆராய்ச்சியாகக் கேள்வி கேட்டவளை முறைத்தபடி சொன்னான், “அதுவா இப்போ முக்கியம்?”.

தன்னை முறைத்தவனைக் கண்டுகொள்ளாமல் அவள் பேசினாள்.

“நீ இதுவரைக்கும் இந்தப் பேரைச் சொன்னதில்லையா. அதான் கேட்டேன். அதுவும் போக நான் உன்கிட்ட என்னைப் பற்றிச் சொன்ன அளவுக்கு உன்னைப் பற்றி நீ சொன்னதில்லை வினித்.”

தன்னைக் குற்றம் சாட்டிக் கேள்வி கேட்கிறவளைக் குறுகுறுவெனப் பார்த்தான்.

“நீ எப்பவாச்சும் என்னைப் பற்றிக் கேட்டு நான் அதுக்குப் பதில் சொல்லலையா சைவி?”

அந்தக் கேள்வி சைந்தவியைச் சிந்திக்கச் சொன்னது.

சிந்தனையுடன் உட்கார்ந்து இருந்தவளை வருத்தமாகப் பார்த்துவிட்டு, அவளை உணர்ந்தவனாக ஆழ்ந்து மெல்லிய குரலில் சொன்னான்…

“உனக்கு என்னைப் பற்றித் தெரியணும்னு நீ நினைச்சா, ஊருக்குப் போயிட்டு வந்து கேளு. சரியா? உனக்குத் தெரிய வேண்டியதை எல்லாம் சொல்றேன்.

இப்போ என்னைப் பற்றிய யோசனையை ஒதுக்கிட்டுக் கிளம்பு. பிளைட் வந்துருச்சு.”

“இது வரைக்கும் நான் ரியலைஸ் பண்ணலை வினித். வருத்தமா இருக்கு இப்போ. சாரி டா!”

தான் பிரியம் வைத்திருப்பவனைப் பற்றிச் சரியாகத் தெரிந்து கொள்ளவில்லை என்கிற குற்றவுணர்வு வந்து சூழ்ந்தது. அதனை உணர்ந்து, அவனிடம் தன் வருத்தத்தைக் காண்பித்தாள்.

“ஹே சைவி! என்ன நீ… சாரி எல்லாம் சொல்லிட்டு ம்ம். புதுப் பழக்கம் எதையும் நமக்கிடையே கொண்டு வராத. ஓகே? நம்ம விசயத்தை அப்புறம் பேசிக்கலாம்.”

நனையாத காலுக்கெல்லாம், கடலோடு உறவில்லை
நான் வேறு நீ வேறு என்றால் நட்பு என்று பெயரில்லை...

“ஐ ஃபீல் வெரி பேட் டா வினித்!”

“ஹே டோண்ட் யா! விடு… விட்டுடு! ப்ரண்ட்ஷிப் இஸ் பிரசியஸ்… அது நம்மள வருத்தப்பட வைக்காது. கூல் சைவி!

இப்போ, உங்க அப்பாவைப் பார்க்க ரெடியா இரு. லுக், இது உன் கோபத்தையும் முறைப்பையும் காட்டுற நேரமில்லை. பார்த்துக்கோ.”

“சரி…”

அவனுக்குத் தலையாட்டும் போது, தூரத்தில் தெரிந்தார் சரள்கண்ணன். அலெக்ஸ் அந்தப் பக்கம் நின்றிருக்க, அவனைக் கை தட்டி அழைத்த வினித், அவனுக்கு அவரை அடையாளம் காட்டினான். அசையாமல் நின்று கொண்டிருந்த சைந்தவியைக் கண்டு எரிச்சலானான்.

அவளுடைய தோளில் இரண்டு தட்டுத் தட்டி, அவளுடைய அப்பா வந்து கொண்டிருந்த திசையை நோக்கிக் கூப்பிட்டுப் போனான்.

எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது!
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,489
1,086
113
அத்தியாயம் 10 Teaser:

இப்படியும் இருப்பாங்களா அப்பாவும் மகளும் என்று வினித்தும் அலெக்ஸும் நினைக்கும் வண்ணம் அந்தச் சந்திப்பும் தொடங்கியது.

“எத்தனை மாசங் கழிச்சு பார்த்துக்கிறாங்க மச்சி ரெண்டு பேரும்?”

அலெக்ஸ், வினித்தின் காதைக் கடித்தான்.


*********@@@@@@@@@********


கையைக் கட்டிக்கொண்டு ஆழமாகப் பார்வை விரவ நின்றாள்.

“உன் வலியோ வேதனையோ தெரியாம இல்லை சைவி. அந்தத் தனிமை ஏக்கம் எல்லாத்தையும் உன்கிட்ட நான் பார்த்ததில்லையா? சொல்லேன்?”

தோழியை நிதானமாகப் பார்த்துக்கொண்டே கேட்டிருந்தான். அவனுடைய கனிவும்; ஆத்மார்த்தமான அன்பும்; ஆதுரமும் பின்னி வந்து, அவளைக் கட்டிப் போட்டிருந்தது. பேசாமலே நின்றிருந்தாள்.

அந்த நேர மௌனத்தைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு, வினித் மேலும் எடுத்துச் சொல்லியிருந்தான்.

“நம்ம பார்த்ததும் உணர்ந்து கொண்டதும் கம்மி. துக்கடா போல. நிறையப் பார்க்காததும் உணராததும் உலகத்தில் உண்டுமா. சில விசயங்களை நாம பார்க்கிறது என்ன… கேட்டுக் கூட இருக்க மாட்டோம்.

அதிலே சில விசயங்களைக் கேள்விபட்டு நம்ம தெரிஞ்சிக்கிற போது, அதிர்ச்சியா, நம்மால நம்பவே முடியாததா இருக்கும். நம்ம நம்ப முடியாததை, சிலர் வாழ்ந்திட்டு இருக்காங்க. அந்த வாழ்வு அவங்க சாய்ஸ்ஆ இருக்காது!

வேற வழிக் கிடையவே கிடையாதுன்னு, தங்களுக்கு இடப்பட்டது இது தான்ங்கிறதொரு உலகத்தில் வாழ்கிறவங்க அனுபவிக்கிறதை நீயும் நானும் அனுபவிக்கலை…”

வினித் கண்களை மூடிக்கொண்டு வினாடிகளைக் கடக்க… சைவி கேட்டிருந்தாள்...

“ஏன் வினித், எனக்கு விதிச்சது இது தான்னு நினைச்சு நான் வாழலை?”.

அமைதியாக நின்றிருந்தவன், அவள் சொன்னதைக் கேட்டதும் கடகடவென உரத்துச் சிரித்தான். பின்னர்க் கேட்டிருந்தான்…

“உனக்கு விதிக்கப்பட்டதுன்னு சொல்றே… ரைட்டு! அதை நீ ஏத்துக்கிட்டியா சைவிமா?”

அவனுடைய குரலும் கேள்வியும்… அந்தப் பார்வையும்…

ஹோவெனச் சூழ்ந்து அவளை முழுங்கி அடைத்துக் கொண்டிருந்தன.


*********@@@@@@@@@********


சைந்தவி உணர்வுகள் எதையும் வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. யாரோ ஒருவரைப் பார்க்க வந்ததைப் போல உதடுகளில் சோழி அளவில் புன்னகை. வந்ததும் மறைந்தும் இருந்தது.

“சவி ம்மா! எப்படி இருக்கடா?”

சரள்கண்ணன், மகளின் கழுத்தைச் சுற்றிக் கையைப் போட்டுக்கொண்டு தன் தோளோடு அணைத்துக்கொள்ள, சைந்தவி சட்டென விலகிவிட்டாள்.

வினாடியில் எதிர்பாராமல் அவள் தள்ளி நின்றதில் அப்பா சற்றுத் தடுமாற, அலெக்ஸ் அந்த வினாடியில் சுதாரித்தான். அங்கு நடந்த நிகழ்வைக் கண்ட மாதிரி காட்டிக் கொள்ளாமல், ஏதோ தட்டி அவர் தடுமாறிவிட்டதைப் போல, “பார்த்து நடங்க சார்” சொல்லி அவருடைய கையைப் பிடித்து விழாமல் நிறுத்தி இருந்தான்.

“சைவீ!” முணுமுணுத்தான் வினித் கடித்த பற்களின் நடுவே. கண்டனம் தெரிவித்தது அவனுடைய பார்வை. அவளுமே அப்பா தடுமாறி விழப் போவார் என்று எதிர்பார்க்கவில்லை.


*********@@@@@@@@@********
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,489
1,086
113
அத்தியாயம் 10:

இப்படியும் இருப்பாங்களா அப்பாவும் மகளும் என்று வினித்தும் அலெக்ஸும் நினைக்கும் வண்ணம் அந்தச் சந்திப்பும் தொடங்கியது.

“எத்தனை மாசங் கழிச்சு பார்த்துக்கிறாங்க மச்சி ரெண்டு பேரும்?”

அலெக்ஸ், வினித்தின் காதைக் கடித்தான்.

“ஒரு வருசத்துக்கும் மேலேன்னு நினைக்கிறேன். எனக்கு அவள் பழக்கமானதுக்கு அப்புறம் இவரு இங்க வந்த மாதிரி தெரியலை. வரலைன்னு தான் சொன்னாடா.”

சைந்தவியைப் பற்றி அலெக்ஸ்க்குத் தெரியும் என்றாலும், எல்லாமும் அப்படியே தெரியாது. அவளைப் பாதிக்கும் விசயங்களைச் சில சந்தர்ப்பத்தில் வினித் நண்பனிடம் மேலோட்டமாகச் சொல்லியிருந்தான்.

வினித் தான் அவளைப் பற்றி ஓரளவு நன்றாகத் தெரிந்தவன். அவளுடைய உறவுகளைப் பற்றிய உணர்வுகளைப் பற்றியும் அறிந்தவன்.

இப்போதும் நண்பனிடம் அவளைப் பற்றிய தகவல்களைச் சுருக்கமாகச் சொல்லி நிறுத்திக் கொண்டான். அலெக்ஸும் தோண்டித் துறுவவில்லை. பார்வையாளனாக நின்றிருந்தான்.

அவர்கள் இருவரும், இப்போது சரள்கண்ணன் ஏன் இந்தியாவிற்கு வருகிறார், அவருடைய அவசரம் அவசியம் உணர்ந்தவர்களாக, அவர் வந்து இறங்கியதும் தந்தையும் மகளும் கால தாமதமின்றி அவர்களுடைய சொந்த ஊருக்குச் செல்ல வேண்டிய ஏற்பாடுகளைத் தயாராக வைத்திருந்தனர்.

அவருக்கு இவர்களைத் தெரியாது. தங்களைப் பற்றிச் சைந்தவியாவது அவரிடம் சொல்லி இருப்பதாவது என்கிற எண்ணத்துடன் அவரை எதிர்கொள்ளத் தயாராக நின்றிருந்தனர்.

விமான நிலையத்தை விட்டு வெளியே வந்த அப்பாவையும் அவரைக் கண்ட மகளையும் நோட்டம் விட, சைந்தவியிடம் விலகல் தன்மை அப்பட்டமாகத் தெரிந்தது.

அலெக்ஸ் வியந்ததைப் போல, அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த வினித்திற்குமே இப்படிப்பட்ட காட்சி எல்லாம் புதிதாகத் தெரிந்தது.

தான் இருவரையும் சேர்ந்து முதல் முதலாகப் பார்ப்பதால் அப்படித் தெரிகிறதோ என்று நினைத்துக் கொண்டான்.

அவனுடைய உலகத்தில், அவன் அப்பா மடியில் படுத்துக் கொள்வதும்; அம்மாவைத் தோளோடு கட்டிக்கொள்வதும் சாதாரணம். நீண்ட நாட்களுக்குப் பின்னர் அவர்கள் பார்த்துக் கொள்கிறார்கள் என்றால், அந்தக் கணங்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.

என்ன தான் சைந்தவியைப் பற்றியும் அவளுடைய குடும்பத்தைப் பற்றியும் தெரிந்து வைத்திருந்தாலும், இப்படி நேரில் பார்க்கவும் வித்தியாசமாகத் தெரிந்தது.

அவனுடன் பழகும் சைந்தவி என்பவள் வேறு. இப்போது கண் முன்னால் இருப்பவள் வேறாகத் தெரிகிறாள்.

எத்தனை தடவை சொல்லி இருக்கிறான்… அப்படிச் சொல்லியிருந்தும் என்ன இப்படி என்கிற உணர்வில் ஆயாசமும் பிடித்தமின்மையும் உறுத்த, வினித்தின் ஞாபக அடுக்கில் பழைய கணங்களின் எழுச்சி!

“நடந்தது தப்பு இல்லை சைந்தவி. உனக்குச் சொல்லிப் புரிய வைக்காம அவர் நடத்திகிட்டது நிச்சயம் தப்பு தான். அதுக்காக இப்படியா? உன் கோபத்தையும் வீம்பையும் வருசக் கணக்கா பிடிச்சு வச்சுக்கிட்டு?”

ஒரு நாள் இருவரும் சந்தித்துக் கொண்ட போது, சைந்தவியின் அப்பாவைப் பற்றிய பேச்சு எழுந்திருந்தது. அப்போது வினித் அவளைக் கண்டித்தான்.

“வருசக் கணக்கா எனக்குத் தெரியாம இருந்தது எப்போ தெரிய வந்ததோ அப்போ இருந்து டா. இந்த வருசக் கணக்கு அவரைவிட குறைச்சல் தான்.”

கண்ணடித்துப் புன்னகைக்க முயன்றபடி இருந்தவளைக் கண்டனத்துடன் பார்த்துக்கொண்டே கேட்டிருந்தான்...

“இப்ப அந்தக் கணக்கை விட்டுடு சைவி. இன்னும் எவ்வளவு காலம் இப்படியே நீ இருக்கப் போறே? ஹ்ம்… நீயும் அதையே நினைச்சு நிம்மதியில்லாம தவிக்கிற. உங்க அப்பாவையும் சங்கடப்பட வச்சு தவிக்க விடற. ஆக மொத்தம் ரெண்டு பேரும் எங்கிருந்து உங்க வாழ்க்கையை நிம்மதியா வாழறது?”

ஆயாசத்துடன் தலையைக் கோதிக்கொண்டு தோழியுடன் பேசி, அவளுக்குப் புரிய வைக்க முனைந்து இருந்தான்.

அவனைப் பேசவிட்டு, பின்னர் அவளும் கேட்டிருந்தாள், “உன் இனத்துக்குச் சப்போர்டா?”. அவளுடைய பார்வையில் துயரமும் கோபமும் முட்டிக்கொள்ள… உதட்டில் இகழ்ச்சி முறுவல்!

“அவருக்கு நான் சப்போர்ட் பண்ணிப் பேசலை. சரி தப்புன்னு விவாதம் பண்ணி முடிவு எடுகிற காலம் கடந்து போச்சு. இனி என்ன மாறப் போகுது சொல்லு? நடந்ததை ரிவர்ஸ் எடுத்து; ரீடேக் எடுக்க இது என்ன ரோட் டிரிப்பா இல்லை மூவி மேக்கிங்ஆ?”

அவளுடைய நன்மை ஒன்றே அவனுக்குப் பிரதானமாய்!

தனி ஒருத்தியாய் நின்று சாதித்துக் கொள்ளத் துடிக்கும் அவளுடைய முயற்சியும் உழைப்பும் பாராட்டிற்குரியது. அதே சமயம், உலகில் நிலவும் பயங்கரங்களை எண்ணியே உறவற்று நின்று கொண்டிருக்கும் அவளை உறவுடன் இணைத்து வைக்க நினைத்து முயற்சி எடுத்திருந்தான்.

‘இவளைச் சமாதானப்படுத்தி, அப்புறம் இவ அப்பாகிட்ட பேசுவோம்’ நினைத்திருந்தான். நினைத்தது இன்றுவரை நடக்கவில்லை என்பது வேறு கதை.

“உனக்கென்னடா… சொல்லுறது ரொம்ப ஈஸியில்ல… அனுபவிச்ச வலி, வேதனை, தனிமை எல்லாம் எனக்குத் தானே? நான் பிடிவாதமா இருக்கேன். இல்லாம போறேன். நீ கண்டுக்காதே. விட்டுடு.”

அவள் தன்னை எடுத்தெறிந்து பேசுவது போலப்பட்டாலும், அவனாலும் அவனுடைய நிலையைப் புரிந்து கொள்ள முடிந்தது.

 
Status
Not open for further replies.