“அப்படிக் கண்டுக்காம போறது தானே நல்ல பிரண்ட்ஷிப் இல்லையா? போடி போ… எனக்குத் தெரியும் உன்னைப் பற்றி. உன் நல்லதுக்குன்னு நினைச்சி நான் சொல்லுறதைக் கொஞ்சம் காது கொடுத்துக் கேளு… இப்ப என்னை முழுசா பேச விடு!”
அவன் பிடியில் நின்று அவளுடைய மனத்தைக் கரைக்க முயன்று தொடர்ந்தான்.
“சரி சொல்லு.”
கையைக் கட்டிக்கொண்டு ஆழமாகப் பார்வை விரவ நின்றாள்.
“உன் வலியோ வேதனையோ தெரியாம இல்லை சைவி. நீ அனுபவிச்சிட்டு இருக்கிற அந்தத் தனிமை ஏக்கம் எல்லாத்தையும் உன்கிட்ட நான் பார்த்ததில்லையா? சொல்லேன்?”
தோழியை நிதானமாகப் பார்த்துக்கொண்டே கேட்டிருந்தான். அவனுடைய கனிவும்; ஆத்மார்த்தமான அன்பும்; ஆதுரமும் பின்னி வெளி வந்து, அவளைக் கட்டிப் போட்டிருந்தது. பேசாமலே நின்றிருந்தாள்.
அந்த நேர மௌனத்தைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு, வினித் மேலும் எடுத்துச் சொல்லியிருந்தான்.
“நம்ம பார்த்ததும் உணர்ந்து கொண்டதும் கம்மி. துக்கடா போல. நிறையப் பார்க்காததும் உணராததும் உலகத்தில் உண்டுமா. சில விசயங்களை நாம பார்க்கிறது என்ன… கேட்டுக் கூட இருக்க மாட்டோம்.
அதிலே சில விசயங்களைக் கேள்விபட்டு நம்ம தெரிஞ்சிக்கிற போது, அதிர்ச்சியா, நம்மால நம்பவே முடியாததா இருக்கும். நம்ம நம்ப முடியாததை, சிலர் வாழ்ந்திட்டு இருக்காங்க. அந்த வாழ்வு அவங்க சாய்ஸ்ஆ இருக்காது!
வேற வழிக் கிடையவே கிடையாதுன்னு, தங்களுக்கு இடப்பட்டது இது தான்ங்கிறதொரு உலகத்தில் வாழ்கிறவங்க அனுபவிக்கிறதை நீயும் நானும் அனுபவிக்கலை…”
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
இரவானால் பகல் ஒன்று வந்திடுமே…
வினித்தின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவ்வளவு தெளிவாய் வந்தன. அவன் சொன்ன விசயம் கேட்கிற யாரையும் சிந்திக்க வைக்க வல்லது.
வாழ்க்கை என்பது பல விதம். யாருக்கு என்ன அமைப்போ அப்படி… ஒருவரின் அமைப்பு மற்றவர்களுக்குக் கிடையாது. ஒரே வீட்டிலேயே ஒவ்வொருவருக்கும் வித்தியாசமான வாழ்க்கை அமைப்பு.
இதிலே சிலர் தங்களுக்கு வாய்த்திருக்கும் நல்வாழ்வை உணராமல் கோட்டை விடுகின்றார்கள்; அதனை வாழத் தெரியாமல் வாழ்ந்து அழித்துக் கொள்கிறார்கள். சிலருக்கு நல்ல வாழ்க்கை என்ன, சாதாரண வாழ்க்கை கூட அமைவதில்லை!
அனுபவமோ படிப்போ, வினித் உணர்ந்து தன்னுடைய தோழிக்கு விளக்கிச் சொல்லி இருந்தான்.
கண்களை மூடிக்கொண்டு வினாடிகளைக் கடக்க… சைவி கேட்டிருந்தாள்...
“ஏன் வினித், எனக்கு விதிச்சது இது தான்னு நினைச்சு நான் இதுவரை வாழலை?”.
அமைதியாக நின்றிருந்தவன், அவள் சொன்னதைக் கேட்டதும் கடகடவென உரத்துச் சிரித்தான். பின்னர்க் கேட்டிருந்தான்…
“உனக்கு விதிக்கப்பட்டதுன்னு சொல்றே… ரைட்டு! அதை நீ ஏத்துக்கிட்டியா சைவிமா?”
அவனுடைய குரலும் கேள்வியும்… அந்தப் பார்வையும்…
ஹோவெனச் சூழ்ந்து அவளை முழுங்கி அடைத்துக் கொண்டிருந்தன. வினாடிகளில் அதனை உடைத்து எறிந்தவளுடைய முகம் தணலாய்த் தகிக்க… வார்த்தைக் கங்குகள் புகைந்து ஜுவாலையாய் அவனுடன் மோதின.
“எப்படி ஏத்துக்க வினித் சொல்லு? எப்படிடா ஏத்துக்கறது? நான் அவருக்கு யாருடா? மகள் தானே?
என்னைப் பெத்தது அவரு… அருமை பெருமையா வளர்த்து விட்டதும் அவரு… அம்மா போனதுக்கு அப்புறம், அப்பான்னு அந்த உயிரை நினைச்சே பெரிய இழப்பில் இருந்து வெளியே வந்து, நான் வாழ ஆசைப்பட்டது.
அவரும் அப்படித்தானே? சவிம்மா சவிம்மான்னு உயிரா இருந்தாரு. அவரு மனசு வருத்தப்படக் கூடாதுன்னு, அப்பத்தா திட்டினாலும் என்ன மாதிரி நடத்தினாலும் பொறுத்துக்கிட்டுப் பதில் பேசாம அமைதியா போனேன்.
கெட்டது எதையுமே அவர் காதுக்குக் கொண்டு போகலை. மனசு வருத்தத்தையும் ஏக்கத்தையும் அவர்கிட்ட காட்டிக்க மாட்டேன்.”
கண்கள் ஞாபகங்களின் சுவடுகளைத் திருப்பிப் பார்த்த வேகத்தில் கலங்கிச் சிவந்திருந்தன. மெல்லிய கோடாகக் கன்னங்களைத் தொட்டிருந்த கண்ணீரை அலட்சியப்படுத்திவிட்டு உட்கார்ந்து இருந்தாள்.
அந்த நிலை… அவளுடைய கண்ணீர் எல்லாமும் வினித்தை வேதனைப்படுத்தி இருந்தது. ஆனாலும் தொடர்ந்து பேசி இருந்தான்.
“உன் அம்மா உங்களைவிட்டுப் போனப்ப உனக்கு ஒரு பன்னிரெண்டு வயசிருந்திருக்குமா?”
“...”
தொலைவில் வெறித்துக் கொண்டு இருந்தவளைப் பேச வைக்க முயன்றான்.
“சொல்லேன்?”
“ம்ம்…”
தலையாட்டினாள்.
“அந்த வயசுல நீ எவ்வளவு மெச்சூரிட்டியோட நடந்து இருக்கச் சைவிமா… கிரேட்!”
மென்மையுடன் உளமார்ந்து சொன்னான். அவளுடைய விரல் நுனிகளைப் பற்றியபடி கேட்டான், “அப்படி இருந்த சைவிக்கு இந்த, இருபத்தி மூனு இருபத்தி நாலுல புரிஞ்சிக்க முடியலையா?”.
நிதானமாக வந்த அந்தக் கேள்வியின் அர்த்தத்தை அவள் சரியாக உணர்ந்து கொள்வாள் என்று நினைத்தே கேட்டான்.
ஆனால்…
“என்… என்னை ஒரு பொருட்டா மதிக்காம… என்னைக் கேட்க வேண்டாம். ஆனா சொல்லணும்ல? சொல்லவே சொல்லாம அந்த வாழ்க்கைல சிக்கி இருக்காரு... எப்படி முடிஞ்சது அவருக்கு? நாள் கணக்கா மாசக் கணக்கா… எத்தனை வருசம்?
என்னை இப்படி முட்டாளாக்கி வாழ்ந்திட்டு இருந்திருக்காரு. இதிலே என்னத்தைப் புரிஞ்சுக்க முடியலையான்னு கேட்கிற?”
விலுக்கென்று திரும்பி அவனுடைய கண்களைக் கூர்ந்து பார்த்துக்கொண்டே கோபத்துடன் கேட்டாள்.
அவன் பொறுமையாகச் சொன்னான்…
“கூல் கூல் சைவி! உன் கோபம்; வேதனை; வருத்தம் எல்லாத்தையும் என்னாலே புரிஞ்சிக்க முடியுது. அதைத் தப்புன்னு நான் சொல்லலை. ரொம்ப காலமா பிடிச்சு வச்சிட்ட. விட்டுடு. விட்டுட்டு யூ மூவ் ஆன் மா.
யூ மூவ் ஆன். பீ மெச்சூர்ட். அவர்கிட்ட பேசு. உன் உணர்வுகளைக் கொட்டிடு. அவருக்கு உன் உணர்வுகளை அப்பப்போ தெரியப்படுத்து. உனக்குள்ளே வச்சிட்டு இருந்தா அவருக்கு எப்படித் தெரியும்?
சொல்லணும் நீ… சந்தோஷம் மட்டுமில்லை. கஷ்டத்தையும் சொல்லியிருக்கணும். இப்போ பழசைப் பேசி என்னவாகப் போகுது… உன்கிட்ட இதைச் சொன்னதும் நான் தான்.
இருந்தாலும் இதையும் உன்கிட்ட சொல்லத் தோணுது. சொல்றேன் கேட்டுக்கோ. கேட்டுட்டு சரியா யோசி. என்ன?
மகள் கஷ்டப்படுறான்னு தெரிஞ்சிருந்தா, ஒரு வேளை அவருக்கு மலேசியா போகும் எண்ணம் வந்து இருக்காது. உன்னை, உன் தாதிகிட்ட தனியா விட்டுட்டுப் போயிருக்க மாட்டார்.
நாம இப்படியும் யோசிக்கலாம் இல்ல?”
அவன் கேட்டுக் கொண்ட மாதிரி நிதானமாக எங்கே யோசித்தாள்?
பட்டென்று வெடித்தாள் அவனிடம்.
“வினித்! முட்டாள்தனமா அவருக்குச் சாதகமா பேசிட்டு இருக்கேடா.”
“சப்போர்ட்டும் இல்லை. முட்டாள்தனமும் இல்லை. ஒரு விசயம் விவாதிக்கப்பட்டா, அந்த விவாதமும் அதற்குரிய தீர்மானமும் எந்தப் பக்கமும் போகலாம். விவாதிக்கும் திறமையைப் பொருத்து மாறும்.
நான் கொஞ்சம் முன்னால சொன்னது இதை உனக்கு உணர்த்த ஒரு சாம்பிள். அவ்வளவு தான். இப்ப நம்ம பேசிக்கொண்டிருக்கும் டாபிக்குக்கு வர்றேன்.
‘எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. இனி நடக்கப் போவதும் சிறப்பாகவே நடக்கும்.’